சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம் (Post No.4838)

Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 21-16

 

Post No. 4838

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

தமிழ்நாட்டில்  விழுப்புரம் அருகிலுள்ள திருவக்கரை– வக்ரகாளியம்மன் கோவிலாலும், பாடல் பெற்ற சிவன் கோவிலாலும் பக்தர்கள் இடையே பிரபலமான இடம். ஆனால் கோவிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு பெரிய இயற்கை அதிசயம் இருப்பது பலருக்கும் தெரியாது.

 

புவியியல் துறையினர் ஒரு போர்டா (board)வது வைத்து மக்களை ஈர்க்க வேண்டும்

என்ன அதிசயம்?

திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் பரப்புக்கு இந்தக் கல் மரங்கள் இருந்தாலும், சிறிய இடத்தை மட்டும் பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கியுள்ளனர். அனுமதி இலவசம். ஒர் காவற்காரர் மட்டும் அங்கேயிருந்து வருவோர் போவோரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குகிறார்; பாராட்ட வேண்டிய பணி.

 

கல் மரம் என்றால் என்ன?

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காடுகளில் இருந்த சில மரங்கள் மட்டும் காலப்போக்கில் கல் போல ஆகி விடுகின்றன. அதாவது மரத்தில் இருந்த செல் cell போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா silica எனப்படும் மணல் புகுந்து கற்கள் ஆகி விடுகின்றன. ஆனால் தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். இவ்வாறு 30 மீட்டர் நீளம் வரை மரங்கள் இருக்கின்றன. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டர்.

 

இந்த மரங்கள் பக்கத்திலுள்ள காடுகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.

 

அது எப்படித் தெரிந்தது?

இந்த மரங்களின் கிளைகள், இலைகள் இல்லாததால் இப்படி அடித்து வரப்பட்டிருக்கும் என்பது அவர்களின் துணிபு.

 

இந்த மரங்கள் பூக்கும் தாவரங்கள் (angiosperms), பூவாத் தாவரங்கள்(gymnosperms) ஆகிய இரண்டு வகையைச் சேர்ந்ததாகும்.

 

இவற்றைப் பாதுகாப்பதால் என்ன நன்மை?

உலகில் இப்படிப்பட்ட பல பூங்காக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரியலூர் அருகில்கூட ஒரு கல் மரப் பூங்கா உளது. கல்லாகிப் போன மரங்களில் கூட ஆண்டுதோறும் ஏற்படும் வளையங்கள் (annular rings) இருப்பதால் இவை எவ்வளவு பழமையான மரங்கள் என்பதும் அக்கால காலநிலை எப்படி இருந்தது என்பதும் தெரியும்.

இதை முதலில் 1781ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பியர் பார்த்து எழுதி வைத்துச் சென்றார். இப்பொழுது இது புவியியல் துறையின் (Geological Survey of India) கட்டுப்பட்டில் இருக்கிறது

மரங்கள் பற்றிய விவரங்கள், அவை எப்படித் தோன்றின என்ற விவரங்கள் அனைத்தும் பெரிய போர்டுகளில் இரு மொழிகளில் எழுதியும் வைத்துள்ளனர்.

 

சில பகுதிகளில், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, வறட்சி முதலியனவற்றை அறியக்கூட கல் மரங்கள் உதவுகின்றன.


(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

—சுபம்—

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2 (Post No.4832)

Date: MARCH 20, 2018

 

 

Time uploaded in London- 5-05 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4841

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

சூரியன் சொல்லத் தொடங்கினார்:

“இவர் அக்னி அல்லர். அசுரனும் அல்லர். உஞ்சவிருத்தி விரதத்தில் சித்தி பெற்ற இந்த முனிவர் சுவர்க்கத்தை அடைந்தார். கனிகளையும் ஜலத்தையும் காற்றை அருந்துபவருமான இவர் சமாதியில் இருந்தார்.

சுவர்க்கம் அடைவதற்குக் காரணமான ஈஸ்வரரை வேத சம்ஹிதைகளால் துதித்தார்.

இந்த வேதியர் ஆசையற்றவர். உஞ்ச சீலத்தை ஆகாரமாக உடைய இவர் அனைத்துப் பிராணிகளின் நலத்திலும் அக்கறை உள்ளவர்.

இப்படிப்பட்டவர்கள் அடையும் உத்தம கதியை அவர் அடைந்தார்.

 

இதைக் கேட்ட நாகன் தன்னிடம் வந்த பிராம்மணரிடம் தான் கண்டதைக் கூறியதோடு, “ஓ! அந்தணரே!அந்த சூரிய மண்டலத்தில் இவ்விதமாக இந்த ஆச்சரியம் என்னால் பார்க்கப்பட்டது. அவர் சூரியனோடு சேர்ந்து சூரியனுடன் சுற்றி வருகிறார்.” என்றான்.

 

இதைக் கேட்ட அந்தணர் நாகனிடம், “சந்தோஷம்! நான் போகிறேன். நான் எதை நினைத்து வந்தேனோ அதை உன்னால் அடைந்து விட்டேன். நான் உஞ்சவிருத்தி விரதத்தை அனுஷ்டிப்பேன். உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்.” என்று கூறிக் கிளம்பினார்.

அவர் உடனடியாக சியவன மஹரிஷியை அணுகினார்.

சியவனரால் ஜனக மன்னனின் இல்லத்தில் நாரதருக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டது.

நாரதர் இதை இந்திரனுக்குக் கூறினார்.

இந்திரன் அனைத்து வேதியர்களுக்கும் இதைக் கூறினான்.

 

இந்த வரலாற்றால் உந்தப்பட்ட நாகனைச் சந்தித்த அந்த அந்தணர் உஞ்சசீலத்தை ஆகாரமாக உடையவராகி வனத்தினுள் சென்றார்.

மிகச் சுருக்கமாக சூரியனைப் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றில் சூரியனுடைய ஆச்சரியங்களை நாம் காண்கிறோம்.

பல கோடி ஆண்டுகளாக பல கோடி ஜீவராசிகளுக்கு அனைத்தையும் நல்கும் சூரிய சக்தியை அறிவியல் வியக்கிறது.

அறிவியலில் சூரியனின் ஆற்றலைப் பல்லாயிரம் பக்கங்களில் விவரிக்கக் காணலாம்.

ஆனால் சூரிய கிரணங்களில் கிளைகளில் இருக்கும் பட்சிகள் போலச் சித்தர்கள் இருப்பதையும், சூரியனோடு சுற்றும் அந்தணரையும் நாம் அறிவியலில் படிக்க முடியாது.

அதற்கு மஹாபாரதமே துணை!

சூரியனைக் குறித்துப் பல நூறு துதிகள் உள்ளன. ஏன் என்பதற்கான காரணம் சூரியனின் அளவிலா ஆச்சரியங்களே காரணம்!

(ஆதாரம்: மஹாபாரதம், ம.வீ.இராமானுஜாசாரியாரால் பதிக்கப்பெற்றது)

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

***

 

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

Picture from Guruji Gopalavallidasar post.

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 am

 

Post No. 4827

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

உலக சைவ சித்தாந்த மஹாநாட்டில் கலந்துகொண்டு பேச வந்த அழைப்பினை ஏற்று மார்ச் 2018 முதல் வாரம் சென்னை சென்றேன். இடையிடையே எனது தம்பியுடன் க்ஷேத்ராடனம் செய்தேன்; பார்க்காத கோவில்களைப் பார்க்க ஆவல் கொண்டேன். சென்னைக்கு அருகில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். பல அதிசயங்களைக் கண்டேன். ஒரு அதிசயம் பற்றி இக்கட்டுரையில் கதைக்கிறேன்.

 

அழிஞ்சில் மரம் என்பது ஒரு அதிசய மரமாகக் கருதப்படுகிறது. இது பற்றி ஆதி சங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் இது காணப்படுகிறது. இந்த அதிசய மரத்தை சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மரை வலம் வரும் இடத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

 

மந்திரத்தால் மாமரம் வளருமா? என்பார்கள்; பெரியவாச்சான் பிள்ளை எழுதிய பேருரையில் இது பற்றி வியப்பான தகவலைத் தருகிறார்.

 

நாச்சியார் திருமொழி– நாலாம் திருமொழி– நாலாம் பாட்டு ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட’– என்று துவங்கும்.

இதன் உரையில் காணும் விஷயத்தின் சுருக்கம் இதோ:-

கடம்ப மரம், காளியன் எனும் பாம்பு கக்கிய விஷத்தில் எரிந்து கருகியது. கண்ணன் காலடி பட்டவுடன் பூத்துக் குலுங்கியது. இது எப்படி சாத்தியம்? அட, விஷ்ணுவின் பாதம் எப்போதும் அமிர்தம் சுரப்பதால் இது நடக்கvமுடியாதா? ராமன் கால் பட்டவுடன் கல்லாகக் இருந்த அஹல்யா, அழகிய பெண்மணியாக எழுந்திருக்கவில்லையா?

“அங்கோலத் தைலம் தடவப்பட்ட மாம்பழக் கொட்டையைத் தரையில் நட்டால், அப்போதே முளைத்துப் பெரிய மரமாய் சாய்த்துப் பழுக்கும் என்று சொல்லும்போது, விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அமுதம் வெள்ளமிடுகிறது — என்று வேதத்தால் சொல்லப்பட்ட பெருமானுடைய  திருவடி பட்டு பட்ட மரம் தளிர்க்கச் சொல்ல வேண்டுமோ?

 

 

அங்கோல மரம்= அழிஞ்சில் மரம்

 

அழிஞ்சில் மரத்தின் பழங்கள் அம்மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும்; வானில் மின்னல் மின்னினால், அக்கணத்திலேயே அப்பழம் மரத்திலே பழையபடி ஓட்டிக் கொள்ளும்; அக்கணத்தில் அப்பழத்தை எடுத்து வந்து தைலமாக்கி (எண்ணை ஆக்கி)  ஒரு மாங்கொட்டையில் தடவி தரையில் நட , அப்போதே முளைத்துப் பெரிய  செடியாகி காய்த்துப் பழுக்கும் என்பர்……………………”

 

இவ்வாறு உரைகாரர்கள் சொல்லுகின்றனர்.

 

ஆண்டாளுக்கும் முன்னர் அவதரித்த உலக மஹா தத்துவ ஞானி ஆதிசங்கரர் பக்த்திக்குச் சொல்லும் ஐந்து இலக்கணங்களில் அங்கோல மர விதைகளும் ஒன்று ஆகும்.

 

(ஆதி சங்கரர் கி.மு.வில் இருந்தவர் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்னதற்கு நான் தமிழ் இலக்கிய சான்றுகளை அளித்து ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளேன்; இதே பிளாக்கில் படித்து இன்புறுக)

சிவானந்த லஹரியின் 61-ஆவது ஸ்லோகம்

‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி’ —- என்று துவங்கும். இதன் பொருளாவது:

உண்மையான பக்த்தி என்பதற்கு ஐந்து உதாரணங்கள் உள்ளன; ஈஸ்வரனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு- அங்கோல மரமும் அதன் விதைகளும், காந்தமும் இரும்பு ஊசியும், கற்புக்கரசியும் அவளது கணவனும், மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும், ஆறுகளும் கடலும் போலும் இணைந்து இருக்கும்.

 

இதற்கு பாஷ்யம் எழுதியோர் அங்கோல/ அழிஞ்சில் மரத்தின் அற்புத குணத்தை விளக்கியுள்ளனர். அங்கோல மர விதைகள் கீழே விழுந்தவுடன், மரத்தின் மீது  ஏறிச் சென்று ஒட்டிக்கொள்ளும் என்று.

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த நம்பிக்கையை விஞ்ஞான முறையில் ஆராய்வது நலம் பயக்கும்..

சிங்கப் பெருமாள் கோவில் பிரஹாரத்தில் மரத்தை ஒட்டி சுவரில் எழுதப்பட்ட அறிவிப்பு– இந்த மரத்தின் மீது ஆடையிலிருந்து ஒரு நூலைப் போடுவோருக்கு அறிவு வளரும்; மணம் முடிக்காதவர்கள் விரைவில் கல்யாணம் செய்வர்; குழந்தை இல்லாதவர் விரைவில் குழந்தை பெறுவர் என்று செப்புகிறது.

 

மருத்துவ நூல்களோவெனில் இதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை முதலிய மருத்துவ குணங்களை வருணிக்கிறது.

எப்படியாகிலும் இது ஒரு அதிசய மரமே.

அடுத்த முறை சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நரசிம்மருடன் மரத்தையும் கண்டு களிக்க.

 

சிங்கப் பெருமாள் கோவிலின் நெற்றிக் கண் நரசிம்மர், சூடான மிளகு தோசை, நரசிம்மர் பூட்டு, சில் மாதங்களில் பெருமாள் மீது விழும் சூரிய ஒளி ஆகியன பற்றி அடுத்த கட்டுரையில் நுவல்கிறேன்.

இதுவரை இயம்பி யவற்றை நினைவிற் போற்றுக.

 

சுபம் சுபம்

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

சங்கப் புலவர்களும் சாணக்கியனும்! (Post No.4808)

Written by London Swaminathan 

 

Date: 4 MARCH 2018

 

Time uploaded in London – 7-36 am

 

Post No. 4808

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரத நாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றாக இருந்ததோடு அதன் பண்பாடும் நம்பிக்கைகளும் ஒன்றாகவே இருந்துள்ளது. இன்று நேற்றல்ல. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனையுடன் இருந்து வருவது சாணக்கிய நீதி நூல் மூலமாகத் தெரிகிறது. வெளிநாட்டார் வந்து நம்மை இமயம் முதல் குமரி வரை ஒன்றாக்கினர் என்பதெல்லாம் பொய் என்பதற்குப் பல சன்றுகளில் ஓரிரு விஷயங்களைக் காண்போம்.

 

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் என்னும் மஹா மேதை இயற்றியது சாணக்கிய நீதி. அதற்கு சுமார் 300 முதல் 500 ஆண்டுகளுக்குகள் தோன்றியது சங்கத் தமிழ் இலக்கியம்.

 

இதோ சாணக்கிய நீதி ஸ்லோகம்:-

தர்ச த்யான ஸம்ஸ்பர்ப்சைர்  மத்ஸீ கூர்மி ச பக்ஷிணீ

சிசும் பாலயதே நித்யம் ததா ஸஜ்ஜன ஸம்கதிஹி

-சாணக்கிய நீதி 4-3

 

மீன்கள், பார்வையின்  மூலமே எப்படித் தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ, ஆமைகள் எப்படி நினைப்பதன் மூலமே தன் குட்டிகளை வளர்க்கின்றனவோ, பறவைகள் எப்படித் தொடுவதன் முலமே தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ அப்படியே நல்லோர் சேர்க்கையின் மூலம் பலன் கிடைக்கும். அதாவது அவர்களுடைய நினைவும், பார்வையும் ஸ்பர்சமும் நமக்கு நற்பலன்களைத் தரும்.

ஆமைகளும், மீன்களும் தன் குஞ்சுகளை வளர்க்கும் இந்த விநோத நம்பிக்கை உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது.  மதுரை மீனாட்சி தேவிக்கு இதே போல அருள்புரியும் சக்தி உண்டு என்பதலேயே அவள் மீன்+ அக்ஷி என்று அழைக்கப்படுகிறாள்; தமிழில் அம் + கயல்/மீன் + கண்ணி= அங்கயற்கண்ணி  என்று அழைக்கப்படுகிறாள்; அதாவது மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் கண் பார்வையில் காப்பாற்றுகிறதோ அதே போலக் கடைகண் பார்வையாலே பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் என்பது இதன் பொருள். ஆக  சாணக்கியன் ஸ்லோகத்தில் கண்டதை சங்கம் வளர்த்த மதுரைக் கோவிலிலும் காண்கிறோம்.

 

ஆமைகள் தன் பார்வையில் குஞ்சுகளைக் காப்பது பற்றி சங்கப் புலவர்களும் பாடினர்; இதோ சில பாடல்கள்:

 

குறுந்தொகையில் (152) கிள்ளிமங்கலங்கிழார் பாடுகிறார்,

யாவதும் அறிகிலர், கழறுவோரே

தாய் இல் முட்டை போல, உட்கிடந்து

சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே

யாமைப் பார்ப்பின் அன்ன

காமம் காதலர் கையற் விடினே

பொருள்

தாய் முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஐங்குறு நூறு யின் பார்ப்பைப் போலத் தலைவரைக் காண்பதால் வளரும் தன்மையுடையது காமம். அந்தக் காமம், தலைவர் நம்மைப் பிரிந்து கைவிட்டதால் தயில்லாத ஆமை முட்டை மண்ணுக்குள் கிடந்து அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன பயனை உடையது? இடித்துரைப்போர் இதனைச் சிறிதும் அறிந்திலரே.

 

ஐங்குறு நூறு என்னும் இன்னொரு சங்க தமிழ் நூலில்,

யாமை இளம்பார்ப்புத்

தாய்முகம் நோக்கி வளந்தி சிணாங்கு (ஐங்குறு நூறு -44) என்று தாய் முகம் நோக்கி வளரும் ஆமை  பற்றிப் பாடுகிறார் புலவர் ஓரம்போகியார்.

 

பெண் ஆமை இட்ட முட்டையை ஆண் ஆமை பாதுகாப்பது பற்றி அகநானூற்றில் (160) நப்பசலையாரும் பாடியுள்ளார்.

இது போன்ற நம்பிக்கைகளும் நாகப்பாம்பின் தலையில் நாகரத்னம் இருக்கிறது என்பதும், தோற்றுப்போன மன்னனின் நிலத்தை கழுதை ஏர் பூட்டி உழுவது என்பதும், கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சந்திர சூரியனை விழுங்குவது என்பதும் ஸம்க்ருத நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது.

 

ஆக இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து!.

 

வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!

–சுபம்–

மயிர் நீப்பின் வாழாக் கவரி மான்! (Post No.4800)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 6-37 AM

 

Post No. 4800

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

வள்ளுவனும் சாணக்கியனும் ஒரே கருத்தை பல உவமைகளால் அழகுபட வர்ணிப்பது பாரதீய சிந்தனைப் போக்கு — தென் குமரி முதல் வட இமயம் வரை ஒன்றே — இன்றும் அன்றும் ஒன்றே– என்பதைக் காட்டி நிற்கிறது. இதோ மேலும் சில அரிய கருத்துக்கள்.

 

மானம் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்பதில் இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். தற்காலத்தில் தற்கொலைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் முக்காலத்தில் மானம் போனால் உயிர் போச்சு என்று கருதினர். கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் தண்ணீர் கொண்டுவர தாமதித்தவுடன், சிறைச்சாலையில் உயிர் நீத்த சம்பவத்தைக் கண்டோம்.

 

இதோ சாணக்கியன் கூற்று:-

 

வரம் ப்ராண பரித்யாகோ மானபங்கேன ஜீவனாத்

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம் மானபங்கே தினே தினே

சாணக்கிய நீதி 16-16

 

அவமானத்துடன் வாழ்வதை விட இறப்பதே மேல்; சாகும்போது அந்த நேரத்தில் மட்டுமே வலிக்கும்; அவமானத்துடன் வாழ்ந்தாலோ தினமும் துயரம்தான்.

 

இதோ வள்ளுவன் இயம்புவது:–

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா  அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின் (குறள் 969)

 

உடம்பில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், கவரி மான் உயிரிழந்து விடும்;

அதுபோல மானம் போகுமாயின், உயிரையே விட்டு விடுவர் (உயர்ந்தோர்).

 

xxxx

கனியிருப்பக் காய் கவர்வது ஏனோ?

 

இனிய சொற்களைச் சொன்னால் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது;

ஆகையால் ஒருவர் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்;

பின்னர் ஏன் இனிய சொற்களை இயம்புவதில் கருமித்தனம்?

 

ப்ரிய வாக்யப் ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவஹ

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

சாணக்கிய நீதி – 16-17

இதோ வள்ளுவன் செப்புவது:-

 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

 

இனிய சொற்கள் இன்பம் தருவதைக் கண்ணால் கண்ட  பின்னும், ஒருவன் கடுஞ் சொற்களைப் பயன்படுத்துவது ஏனோ!

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100)

 

நல்ல பழம் இருக்கும்போது யாராவது புளிச்சுக் கொட்டும் காய்களைத் தின்பார்களா?  இன்பம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் கடும் சொற்களைப் பயன் படுத்துவானா?

 

ப்ரஸ்தாவஸத்ருசம் வாக்யம் ப்ரபாவஸத்ருசம் ப்ரியம்

ஆத்மசக்திஸமம் கோபம் யோ ஜானாதி ஸ பண்டிதஹ

சாணக்கிய நீதி 14-15

ஒருவன்  தன் புகழுக்கேற்ற இனிய சொற்களையும், இடத்துக்கு ஏற்ற காலத்துக்கேற்ற சொற்களையும், தன் வலிமைக்கு ஏற்ற கோபத்தையும் கொண்டிருந்தால் அவன் புத்திசாலி

 

xxxx

யாகாவா ராயினும் நாகாக்க

 

யதீச்சஸி வசே கர்தும் ஜகத் ஏகேன கர்மணா

பராபவாதஸஸ்யேப்யோ காம் சரந்தீர் நிவாரய

சாணக்கிய நீதி 14-14

ஒரே செயல் மூலம் உலகை வெல்ல ஆசையா? மற்றவர்களைக் குறை சொல்லாதபடி நாக்கை அடக்குங்கள். ( உலகே உங்கள் வசமாகிவிடும்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சு)/ நாக்கை அடக்குங்கள்; அல்லது சொன்ன சொல்லே பெரும் துன்பத்த உண்டாக்கும்.

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (711)

அவைக்கு ஏற்ற சொற்களைச் சொல்லுக; அந்தச் சொற்களின் ஆழத்தையும் தாக்கத்தையும் அறிந்து பேசுக

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

 

சொல்ல வந்த விஷயங்களை  இனிதாக, அழகாகத் தொகுத்துக் கூறும் ஒருவனுடைய சொல்லைக் கேட்டு உலகமே அதன்படி உடனே செயல்படும்

 

xxx

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி 

 

யதா கனன் கனித்ரேண பூதலே நிந்ததி

ததா குருகதாம் வித்யாம் சுஸ்ருஷுர் அதி கச்சதி

சாணக்கிய நீதி   13-16

ஒருவன் நிலத்தடி நீரை எப்படி மண்வெட்டி, கோடரி மூலம் தோண்டி எடுக்கிறானோ, அதே போல ஆசிரியரிடம் உள்ள அரிய செல்வத்தை மாணவன் (கேள்விக் கணைகளால் தோண்டி) எடுத்துக் கொள்ளவேண்டும்

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு – குறள் 396

 

மணலைத் தோண்டி இறைக்க இறைக்க நீர் சுரந்து கொண்டே இருக்கும்; அதுபோல கற்கக் கற்க அறிவு வளரும்

 

 

xxxx

தலை விதி துரத்தி அடிக்கும்

யதா தேனுஸ்ஹஸ்ரேஷு வத்ஸோ கச்சதி மாதரம்

ததா யச்ச க்ருதம் கர்ம கர்தாரம் அனுகச்சதி

13-14

 

ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக்குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்ம வினை அவனிடம் வந்து சேரும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்   தான்முந்  துறும் (380)

 

விதியைவிட வலியது உண்டா? விதியை மாற்ற ஒரு வழி கண்டு பிடித்தாலும் அங்கும் அதுதான் முன்னே நிற்கும்

 

xxx

Rain water used in Thiruppullani; Facebook picture.

நீர் இன்றி

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் ஸுபாஷிதம்

மூடைஹி பாஷாணகண்டேஷு ரத்ன ஸம்க்ஞா விதீயதே

14-1

 

 

பூவுலகில் மூன்று ரத்தினங்கள் உள; தண்ணீர், உணவு, சான்றோரின் பொன்மொழிகள்; இதை அறியாத மூடர்கள் கற்களை ரத்தினம் என்று சொல்கின்றனர். (அதாவது உண்மையான ரத்னக் கற்களைவிட இவை மூன்றும் உயர்ந்தவை)

 

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

நீர் இல்லாமல் வாழ முடியாது; மழை இல்லாவிடில் தர்ம நியாம் இராது.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை (12)

உணவை உண்டாக்குவது மழை நீர்; உணவை உண்பார்க்குத் தானும் உணவு ஆவது மழை நீர்.

வள்ளுவன் வாழ்க! சாணக்கியன் வாழ்க!

 

–சுபம், சுபம்—

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

 

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —

கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர் (Post No.4761)

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-49 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4761

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஏழாவது உரை

 

  1. கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர் ச.நாகராஜன்

 

புதைபடிமங்கள் மூலம் கால நிர்ணயம் செய்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் லீகி (Richard Leakey),  எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது என்பதை நிரூபித்து, அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டவர். இப்போது அவருக்கு வயது 73.

 

 ஆப்பிரிக்காவில் பிறந்த லீகி பிரமாதமான கல்வி அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவரது நுணுகிய ஆய்வுத் திறனும் அர்ப்பணிப்பு மனோபாவமும் அவர் பெயரை ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு இல்லமும் கொண்டாடும் பெயராக ஆக்கியது.

 

   கோபி ஃபோரா என்ற இடத்தில் அவர் தனது ஆய்வுகளை ஆரம்பித்தார். இந்த ஆய்வு 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்த புதை படிமங்களைக் கண்டுபிடிக்க இவருக்கு உதவியது. பழங்காலத்திய 400 எலும்புகளை இவர் சேகரித்தார். இதன் மூலம் மனித குல வரலாற்றைப் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்தன.

 

     1974ஆம் ஆண்டு நேஷனல் ம்யூஸியம்ஸ் ஆஃப் கென்யாவின் டைரக்டராக அவர் நியமிக்கப்பட்டார்.

ஆப்பிரிக்காவில் தந்தத்திற்காக யானைகளைச் சுட்டுக் கொல்லும் நபர்கள் அதிகரிக்கவே யானைகளின் எண்ணிக்கை பாதியாக அதாவது ஆறு லட்சமாகக் குறைநதது.

‘கொல்ல வருபவரைக் கண்டவுடன் சுடு என்ற கடுமையான ஆணையைப் பிறப்பித்து யானைகளைக் காத்தார் லீகி.

1989இல் கென்யாவின் ஜனாதிபதி டேனியல் அராப் மொய் இவரை கென்யா வைல்ட்லைப் சர்வீஸின் தலைவராக ஆக்கினார்.

 

இந்தப் பதவியை அவர் ஏற்றுக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

 

ஏனெனில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த உடல் உபாதை எல்லாம் லீகியை ஒன்றும் செய்யவில்லை. சரியாக காலை 4 மணிக்கு எழுந்து தன் ஆய்வுப் பணியை ஆரம்பிப்பார். தனது விமானத்தைத் தானே ஓட்டிச் செல்வார்.

 

காட்டு வளத்தைச் சுரண்டுவதில் இருந்த ஊழலை அவர் ஒழித்துக் கட்டினார். வனத்துறை ஊழலில் ஈடுபட்டிருந்த சுமார் 1700 பேர்களைத் தைரியமாக அவர் களையெடுத்தார்.

1993ஆம் ஆண்டு ஒரு விமானத்தை லீகி ஓட்டுகையில் அது கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் அவர் கால்கள் இரண்டும் நசுங்கிப் போயின. இரண்டும் அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டன.

 

அவருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டன. மீண்டும் செயலாற்றலுடன் உழைக்க ஆரம்பித்தார்.

2013இல் அவருக்கு ஐஸக் அஸிமாவ் விஞ்ஞான விருது வழங்கப்பட்டது.

 

இன்று உலகில் வன வளத்தையும் வன விலங்குகளையும் காக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் செயல்படும் அனைவரும் ரிச்சர்ட் லீகியை உத்வேகமூட்டும் முன் மாதிரியாகக் கொண்டு இயங்குகின்றனர்.

இதுவே அவரது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

***

 

காகம் மீது சாணக்கியன் (வசை) பாடியது! (Post No.4734)

Date:12 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-26 am

 

Written by London swaminathan

 

Post No. 4734

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

Kaka Vahana from Tirunallaru Temple; Lalgudi Veda Picture

காகத்திடம் நல்ல குணங்களும் உண்டு; தீய வழக்கங்களும் உண்டு; அவரவர் பார்வையில் எது தென்படுகிறதோ அதை வைத்து அதனைப் பாராட்டவும் செய்வர்; இகழவும் செய்வர்; காகம் எல்லாரையும் அழைத்து உண்பதையும், மறைவாக செக்ஸ் செய்வதையும் தமிழ்ப்புலப்வர்கள் பாடினர். ஆனால் சாண்க்கியனோ அதிரடிட் தாக்குதலில் இறங்கிவிட்டார். இது 2300க்கு முந்தைய பாடல்; தமிழர்கள் பாடியதோ அவருக்கு பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர்!

 

எனது முந்தைய காகக் கட்டுரைகளில் நிறைய பாடல்கள் உள்ளன. அவற்றையும் காண்க.

 

சாணக்கியன் உரைப்பான்

 

நராணாம் நாபிதோ தூர்த்தஹ பக்ஷீணாம் சைவ வாயஸஹ

சதுஷ்பதாம் ஸ்ருகாலஸ்து ஸ்த்ர்ரீணாம் தூர்த்தா மாலினீ

 

ஸ்லோகம் 21, அத்யாயம் 5, சாணக்கிய நீதி

பொருள் என்ன?

மனிதர்களில் தந்திர சாலி நாவிதன்

பறவைகளில் தந்திர சாலி காகம்

மிருகக்ங்களில் தந்திர சாலி நரி

பெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி

 

XXXX

 

கெட்ட பறவை! சண்டாளன்!

இன்னொரு ஸ்லோகத்தில் காகத்தை சண்டாளன் என்று சாடுகிறான் சாணக்கியன்:

பக்ஷீணாம் காகஸ் சாண்டாளஹ பசூனாம் சைவ குக்குரஹ

கோபீ முனீனான் சாண்டாளஹ சர்வேஷாம் சைவ நிந்தகஹ

 

பொருள் என்ன?

பறவகளில் தாழ்ந்தது  காகம்

மிருகங்களில் தாழ்ந்தது நாய்

முனிவர்களில் தாழ்ந்தவர் கோபக்காரர்

மனிதர்களில் தாழ்ந்தவன் பிறரைத் தூற்றுபவன்

அத்யாயம் 6, ஸ்லோகம் 2

 

XXXX

கவிஞர்களும் காகமும்

கவயஹ கிம் ந பஸ்யந்தி கிம் ந குர்வதி யோஷிதஹ

மத்யபாஹா கிம் ந ஜல்பந்தி கிம் ந பக்ஷந்திவாயஸாஹா

அத்யாயம் 10, ஸ்லோகம் 4

 

பொருள்

கவிஞர்கள் கண்களுக்குப் புலப்படாதது ஏதேனும்  உண்டா?

பெண்கள் செய்யாதது ஏதேனும்  உண்டா?

 

குடிகாரர்கள் உள றாதது ஏதேனும்  உண்டா?

 

காகங்கள் சாப்பிடாதது ஏதேனும்  உண்டா?

 

xxxxx

 

காகம் கருடன் ஆகுமா?

 

க்ணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ

ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே

அத்யாயம் 16, ஸ்லோகம் 6

 

ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;

அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?

 

MY OLD ARTICLES

கா கா பராசக்தி பாடல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/கா-கா-பராசக்தி-பாட…

Translate this page

கா கா கா (பாராசக்தி திரைப்படப் பாடல்) !!!!!! காகம் பற்றிய பழமொழிகள்: நாங்கள் பட்டிக்காட்டு ஜனங்கள்தான் .எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆனால் நாங்கள் புழக்கத்தில் விடும் பழமொழிகள் நிறைய விஷயங்கள் உடைய பொக்கிஷம்.ஈதோ பாருங்கள்: காக்கைக்கும் தன் குஞ்சு பொன் …

 

 

காகம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/காகம்/

Translate this page

5 May 2017 – 5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை). 6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல். மாலை குளித்து மனை புகுதல் – சால.

 

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் …

https://tamilandvedas.com/…/பிரிட்டனில்-கா-கா-…

Translate this page

27 Feb 2015 – காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி …

 

 

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு …

https://tamilandvedas.com/…/காகத்திடம்-கற்க-வே…

Translate this page

5 May 2017 – எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் காகா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்). … பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது …


(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

–Subham —

 

பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’ (Post No.4729)

 

Date:11 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-49

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4729

 

PICTURES ARE TAKEN from various sources

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

வெற்றி வேற்கையில் வரும் இந்த வாசகத்தின் பொருள்:

சுழியா= சுழித்துக் கொண்டு

வரு புனல் = ஓடும் வெள்ளத்தில்

இழியாது = இறங்காது

ஒழிவது = நீங்க வேண்டும்.

 

 

தென்னாட்டில் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திம்மப்பனும், ராமப்பனும் அதை வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்.

ஆசை யாரை விட்டது?

 

ராமப்பன்: ஏய், ஏய் திம்மப்பா! அதோ பார், அதோ பார்; ஒரு பெரிய கம்பளி மூட்டை;அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருள் இருக்கலாம்; நீ போய் எடுத்து வா; பங்கு போட்டுக் கொள்ளலாம்—என்றான்.

திம்மப்பன்:– ஆமாம், அண்ணே! இன்று நாம் நரி முகத்தில் முழித்திருப்போம். நமக்கு இன்று அதிர்ஷ்டம்தான்; இதோ நான் நீந்திப் போய் அதை எடுத்து வருவேன்; 60 சதம் எனக்கு; மூட்டையில் 40 சதம் உனக்கு என்று சொல்லிக் குதித்தான் தண்ணீரில்!

 

உயிரையும் பொருட்படுத்தாது அந்த கறுப்பு மூட்டையைக் கைப்பற்றினான். ஆனால் அது கம்பளி மூட்டை அல்ல; வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கரடி! அதுவும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததால் திம்மப்பனை இறுகப் பிடித்துக் கொண்டது. திம்மப்பன் பலத்தை எல்லாம் பிரயோகித்து விடுவிக்க முயன்றான்; இயலவில்லை.

 

கரையில் இருந்த ராமப்பன் கத்தினான் – திம்மப்பா! மூட்டை ரொம்ப கனமாக இருந்தால் விட்டுவிடு; பரவாயில்லை;நீ ஜாக்கிரதையாக வா! என்றான்.

 

திம்மப்பன் சொன்னான்: நான் விட்டு விட்டேன்; அதுதான் என்னை விட மாட்டேன் என்கிறது!; இது ஒரு கரடி – என்றான்.

ராமப்பன் கரையில் திருதிருவென  முழிக்க கரடியும் திம்மப்பனும் நதி வழிப் பயணத்தைத் தொடந்தனர்.

 

ஆசைக்கு அளவே இல்லை; மேலும் ஆசை கண்களை மறைக்கும்;

 

ஆசையை ஒரு முறை நாம் பற்றிக் கொண்டால் அது நம்மை விடாது; அது நம்மைப் பற்றிக் கொண்டு அலைக்கழித்துவிடும்.

 

–சுபம்–

கடலோர நகரங்கள் அழியும் அபாயம் (Post No.4726)

DATE – 11 FEBRUARY 2018

Time uploaded in London- 6-16 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4726

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஆறாவது உரை

 

  1. கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழியும் அபாயம்! ச.நாகராஜன்

 

உலகில் உள்ள கடல் மட்டம் உயராமல் இருப்பதற்கான காரணம் அண்டார்டிகாவில் உள்ள பிரம்மாண்டமான பனிப்பாறைகளே.          இந்த பிரம்மாண்டமான ஐஸ்பாறைகள் உருகாமல்            இருப்பதாலேயே கடல் மட்டம் ஒருஅளவுக்குள் கட்டுப்பட்டு     இருக்கிறதுகடலோர நகரங்கள் கடல்நீர் மட்டம் உயர்ந்து நீரில் மூழ்காமல் இருக்க  இந்த அற்புதமான் ஐஸ்பாறைகளே காரணம்!

 

 இன்று விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் லார்ஸன் சி என்ற   இடத்தில் ஏற்படும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளின்       நிலையைக் கூர்ந்து கவனித்துவருகின்றனர்லார்ஸன் சி என்பதுஸ்காட்லாந்தை விட பரப்பளவில் சிறியதுஅங்குள்ள          பிரம்மாண்டமான பனிப் படலத்தில் ஒரு விரிசல் சிறிதாக      ஏற்பட்டது.

இன்று அது 70 மைல் நீள விரிசலாக ஆகியதோடு 300 அடி   அகலமாக ஆகி விட்டது

இது பெரிதானால் மிக பிரம்மாண்டமான  விளைவு ஏற்படும்முதலில் 2015இல் 20 மைல் நீளமே இருந்த விரிசல் 2016இல்  இன்னும் 15 மைல் அதிகமானது.         

 

இப்போதோ பிரம்மாண்டமான பிளவாக 70 மைல் நீளத்திற்கு  விரிந்து விட்டதுஇதனால் நீர் மட்டம் உயரும்.                அண்டார்டிகாவில் இப்படி ஒருபெரிய பரப்பு பிளந்து நீர் நீர் உருக ஆரம்பித்தால் உலகிற்கே வந்து  விடும் அபாயம்!

 

 

   மிக மோசமான நிலையில் 7 மீட்டர் அளவு கடலில் நீர் மட்டஅளவு உயரும்ஒரு மீட்டர் உயர்ந்தாலேயே ஏராளமான      நாடுகளில் கடல் ஓர நகரங்கள் மூழ்கி விடும் என்ற          விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை யாரும் மறந்திருக்க முடியாது.

     பத்து நாடுகள் முற்றிலுமாகவோ அல்லது அவற்றின் பல       முக்கியப் பகுதிகளோ அழியும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள்அஞ்சுகின்றனர்.

இந்தப் பத்து நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வீடியோ    வாயிலாக அனைவரும் பார்க்கும்படி கூறி விளக்குகின்றனர்.

 

பத்து நாடுகளின் பட்டியல் 1) சீனா 2) வியட்நாம் 3) இந்தியா 4) இந்தோனேஷியா 5) பங்களாதேஷ் 6) ஜப்பான் 7) அமெரிக்கா  8) எகிபது 9)பிரேஜில் 10) நெதர்லாந்து

அருமையான பல கடற்கரை நகரங்கள் அழியும் அபாயத்தைச்   சுட்டிக் காட்டும் வீடியோ ஒரு ஆறுதலான செய்தியையும்      தருகிறதுஇன்னும் நிலைமை மோசமாகவில்லைஉடனடியாக மேலேசொல்லப்பட்ட நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடு         புகையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து பூமி வெப்பமயமாதலைத் தடுத்தால் ஐஸ் படலம் உருகாமல்        பனிப்பாறையாகவே நிலைத்திருக்க வாய்ப்பு உண்டு, விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

அழிவதும் நீடித்து வாழ்வதும் நமது கையில் என்று முடிகிறது   வீடியோ.

    மக்கள் விழித்தெழ வேண்டும்தங்களால் இயன்ற வழியில்   எல்லாம் பூமியின் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் அனைத்து மாசையும் தடுக்க வேண்டும்இது ஒன்றே அழிவைத் தடுக்க வழி!

***