தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது! (Post No.9969)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9969

Date uploaded in London –  13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் தினமும் காலையில் ஒலிபரப்பா காலைமலரில் சூழல் சிந்தனைகள் பகுதியில் சமீபத்தில் ஒலிபரப்பான உரை இது. உரை எண் 8.

தேனீக்கள் இல்லாத உலகில் வாழ முடியாது!                                

  ச.நாகராஜன்

அருகி வரும் இனமான தேனீக்கள் பற்றிய ஒரு ஆச்சரியமான ஆனால் மிகவும் முக்கியமான செய்தி ஒன்று உண்டு. தேனீக்கள் இல்லையேல் மனித குலம் வாழ முடியாது.  

                                                                     உலகில் தேனீக்கள் முழுவதுமாக மறைந்து விட்டால் அடுத்த நான்கு வருடங்களில் மனித குலம் மறைந்து விடும் என்று உலகின் மிகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது உண்மை தான் என்பதை தொடர்ந்து செய்யப்படும் அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகின் மிக முக்கியமான 87 பயிர் வகைகளில் 28 தவிர மற்ற அனைத்து முக்கியப் பயிர்களுக்கும் தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. தேனீக்கள் இல்லையேல் இந்தப் பயிர்கள் அனைத்தும் வளராது. இதை உணவுக்கென நம்பி இருக்கும் மனித குலமும் பிழைக்காது. தேனீக்கள் இல்லையேல் பாதாம் பருப்பு விளையவே விளையாது. காப்பி செடியின் பூக்கள் மூன்று நாட்களுக்கு மட்டுமே மகரந்த சேர்க்கைக்காக திறந்திருக்கும். தேனீக்கள் இல்லையேல்  மனித குலத்திற்கு காப்பியே கிடைக்காது. ஆப்பிள், வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பழம் மற்றும் காய்கறிகள் தேனீக்களாலேயே வளர்கின்றன; மனித குலத்திற்குப் பயன் தருகின்றன. உலகெங்குமுள்ள விவசாயிகள் பெரிதும் நம்பும் விவசாயத்தைக் காக்கும் தேனீக்கள் ஏன் அழிகின்றன?

இதற்கான காரணம் விளைநிலங்களில் போடப்படும் தவறான உரங்களே. நிகோடின் என்ற நச்சுப் பொருளுக்குச் சமமான நியோனிகோடினாய்ட்ஸ் (Neonicotinoids) என்ற உரம்தேனீக்களைக் கொல்லும் ஆற்றல் படைத்தது. இவை விளைநிலங்களிலும் தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் போது தேனீக்கள் அழிகின்றன.                                   மலர்கள் இல்லையேல் தேனீக்கள் இல்லை; அது போலவே தேனீக்கள் இல்லையேல் மலர்கள் இல்லை.    

                                                      அன்றாடம் பல்லாயிரக்கணக்கானோர் தேனீரை அருந்தி விட்டுத் தூக்கி எறியும் பேப்பர் கப்களில் ஒட்டிக் கொள்ளும் தேனீக்கள் கொல்லப்படுகின்றன. இப்படிப் பல்வேறு காரணங்களால் அருகி வரும் தேனீ இனத்தைக் காக்க தீவிரமான ஒரு இயக்கம் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய ஒரு செய்தியாகும். நம்மை வாழ வைக்கும் தேனியை வாழ வைக்க வேண்டியது நமது கடமை அல்லவா?     அனைவருக்கும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு இந்தச் செய்தியைச் சொல்லி மலர்களைக் காக்கும் தேனீக்களை வாழ வைப்போம்.  

–SUBHAM–

 tags – தேனீக்கள், தேனீ

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

தேனீக்கள் ஏன் காலை உதறுகின்றன? புலவர்கள் கண்டுபிடிப்பு (Post No.4781)

 

Date: 24 FEBRUARY 2018

Time uploaded in London- 18-09

Written by London swaminathan

Post No. 4781

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

செல்வத்தைச் சேர்த்து வைத்து, தானும் அனுபவிக்காமல், பிறர்க்கும் கொடுக்காமல் இருப்பவர்களை தேனீக்களுக்கு ஒப்பிடுவது புலவர்கள் கையாளும் உவமை. நாலடியார் நூலைத் தொகுத்த பதுமனார் நவில்வதும், நீதி சாஸ்திரம் பாடிய சாணக்கியன் உரைப்பதும் இஃதே.

 

ஆனால் சாணக்கியன், எல்லோருக்கும் ஒரு படி மேலே சென்று தேனீ க்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்ததால், இன்னும் அழகாகச் சொல்கிறான்:

தேயம்  போஜ்யதனம் ஸதா ஸுக்ருதிர்பினா ஸஞ்சிதவ்யம் ஸதா

ஸ்ரீகர்ணஸ்ய பலேஸ்ச விக்ரமபதேரத்யாபி கீர்த்திஹி ஸ்திதா

அஸ்மாகம் மது தான போக ரஹிதம் நஷ்டம் சிராத் ஸஞ்சிதம்

நிர்வாணாதிதி பாணிபாதயுகலே கர்ஷந்த்யஹோ மக்ஷிகாஹா

-சாணக்கிய நீதி 11-18

 

பொருள்

தெய்வபக்தி உள்ள மனிதர்கள் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்; அவைகளைச் சேர்த்து வைக்கக் கூடாது; கர்ணன், பலி, விக்ரமாதித்தன் ஆகியோரின் புகழ் இன்றும் நீடித்து நிற்கிறது; தேனீக்களைப் பாருங்கள்; எப்போது பார்த்தாலும் கைகளையும் கால்களையும் உரசிக் கொண்டும் உதறிக்கொண்டும் கதறுகின்றன. ஏன் தெரியமா? அவை சேகரித்த தேனை மற்றவர்கள் கொண்டு போவதால்தான்!

தேனீக்களை உற்று நோக்கினால் அவை எப்போதும் கால், கைகளை தேய்த்துக் கொண்டு இருப்பதைக் காணலாம்; இயற்கையில் இதற்கு வேறு காரணம் உண்டு; ஆனால் புலவர்கள் தன் கருத்தைப் புகுத்த இப்படிச் செய்வதைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்.

நல்ல உவமை!

 

 

நாலடியார் பாடிய பதுமனார்

உடாஅது முண்ணாதுந்தம் முடம்பு செற்றும்

கெடாஅத நல்லறமுஞ் செய்யார் – கொடாஅது

வத்தீட்டி நாரிழப்பர் வான்றோய் மலைநாட

உய்த்தீட்டுந் தேனீக்கரி

 

பொருள்:

தேனீயானது பல பூக்களில் இருந்து கொண்டு வந்து தேனைச் சேகரித்து வைக்க, அதை வேறு யாரோ எடுத்துக் கொண்டு போவது போல, தனக்கும் பிறர்க்கும் பயன்படாமல் சேர்த்து வைப்போரின் செல்வத்தை கள்ளர் முதலானோர் கொண்டு செல்லுவர்.

 

 

வான் தோய் மலை நாட= ஆகாயத்தை அளாவும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டு மன்னவனே!

உடாஅதும்= தான் உடுக்காமலும்

உண்ணாது = தான் சாப்பிடாமலும்

தம் உடம்பு செற்றும்= தமது உடலை வாட வைத்தும்

கெடாத நல்லறமும் செய்யார் = அழியாத நல்ல தருமங்களையும்  செய்யாராகி

கொடாது = வறியவர்களுக்குக் கொடுக்காமல்

ஈட்டினார்= சேர்த்து வைத்தவர்கள்

இழப்பர் =அந்த செல்வத்தை இழந்து விடுவர்

உய்த்து= பல மலர்களில் இருந்து கொண்டு வந்து

ஈட்டும் = சேர்த்து வைக்கிற

தேன் ஈ = தேனீயானது

கரி = இதற்குச் சான்று.

 


(
நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

–Subham —

தேனீக்களை அழிக்கும் பேப்பர் ‘கப்’புகள்!

Paper-Cups

Radio Talk written by S NAGARAJAN

Date: 7 November 2015

Post No:2307

Time uploaded in London :– 6-03  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

  

By ச.நாகராஜன்

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

((Part 1 was published yesterday))

flower and bee, IE

இயற்கை படைத்த அரிய உயிரினத்தில் ஒன்றான தேனீக்கள் அழிந்து வருகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மையான செய்தி! இதற்குக் காரணம் மனிதர்களாகிய நமது அஜாக்கிரதையான செயல் தான் என்பது இன்னும் அதிகத் துன்பமூட்டும் உண்மையாகிறது.

அன்றாடம் பேப்பர் ‘கப்’களில் (Paper Cups) அதாவது பேப்பரினால் செய்யப்பட்ட கோப்பைகளில் காப்பியையும் டீயையும் ஏந்திக் குடித்து அவற்றை வீசி எறிகிறோம். இந்த கப்களில் உள்ள காப்பி மற்றும் டீயின் எஞ்சிய இனிப்பை அருந்த வரும் தேனீக்கள் மீண்டும் பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.

ஆலைகள் பெருகி வரும் இந்த நாட்களில் இயற்கையான மரங்களும் மரம் சார்ந்த சூழ்நிலையும் இல்லாததால் ஆங்காங்கே தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தேனீக்கள் தள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் காப்பி மற்றும் டீயை விற்கும் விற்பனை நிலையங்களில் தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக  ஒரு நாளுக்கு 1225 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இவற்றில் அன்றாடம் சுமார் 680 தேனீக்கள் சராசரியாக இறந்து கிடப்பதை ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.

இயற்கையான சூழ்நிலையில் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி அவற்றை சேகரிக்கும் தேனீக்கள், இப்போது மலர்கள் அடங்கிய தோட்டங்கள் இல்லாத சூழ்நிலையில் தமது உணவுக்காக கழிவாகக் கிடக்கும் கப்களுக்கு வருகின்றன. இப்படி தேனீக்கள் இறப்பதற்கு காலனி கொலாப்ஸ் டிசீஸ் (Colony collapse disease) என்று பெயர்.இந்த தேனீக்களை அழிக்கும் நோய் பல நாடுகளிலும் பரவி தேனீக்களின் இனத்தையே அழித்து வருவது வருத்தமூட்டும் செய்தி.

இத்துடன் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொலைத் தொடர்புக்கான கோபுரங்களிலிருந்து வரும் மின் அலைகளாலும் தேனீக்கள் அல்லல்பட்டு அழிகின்றன.

honey bee

சுறுசுறுப்புக்கே உதாரணமாக விளங்கும் அற்புத தேனீக்களை அழிக்க நாம் ஒரு போதும் காரணமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இனி பேப்பர் கோப்பைகளில் காப்பி  மற்றும் டீ அருந்துவதில்லை என்ற நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்; அனைவருக்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அவர்களையும் பேப்பர் கோப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடச் செய்வோம்!

***************