காதல் நோய்க்கு களிம்பு! அவுரங்கசீப் மகிழ்ச்சி! (Post No..4721)

Date: 9 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-53

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4721

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் உள்ள பல சுவையான படங்களில்

மேலும் மூன்று படங்களைக் காண்போம். ஒரு படம் அவுரங்கசீப்பின் மகனின் காதல் பைத்தியத்தைத் தீர்க்க ஆலோசனை செய்யும் படமாகும். மொகலாயப் பேரரசின் அஸ்திவாரத்தை தன் மதவெறியால் பெயர்த்தெடுத்த அவுரங்கசீப்புக்கு புதிய பிரச்சனை ஒன்று தோன்றியது. அவரது மகன் பேரழகி, இளவரசி மல்லிகே மல்க் மீது காதல் கொண்டான். இந்தக் காதல் பைத்தியம் அளவுக்குப் போனவுடன், அவுரங்கசீப், யுனானி வைத்தியரை (ஹகீம்) அழைத்தார். அவர் (படத்தில் சிவப்பு வண்ண உடை) ஒரு யுனானி களிம்பை சிபாரிசு செய்தார். இந்தப் படம் பாரசீக எழுத்துக்களுடன் உள்ளது. அவுரங்கசீப் கவலையில் ஆழ்ந்திருக்க ஹகீம் களிம்பு பற்றிச் சொன்னவுடன் அவருக்கு கொஞ்சம் திருப்தி!

 

யுனானி மருத்துவம் என்ற சொல் கிரேக்க சொல்லான ஐயோனிய, யவன என்ற சொல்லில் இருந்து வருகிறது. கிரேக்க மருத்துவர்களான ஹிப்போக்ரடீஸ், காலன் (HIPPOCRATES AND GALEN) ஆகியோரின் சிகிச்சை முறைகளை அராபிரய அறிஞர்கள் இஸ்லாமிய முறைகளுடன் கலந்து தெற்காசிய, மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் பரப்பினார்கள். மொகலாயப் பேரரசில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

 

முதல் பெண் டாக்டர்

கண்காட்சியில் இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மா பாயின் படமும் உள்ளது. இவர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியில் படித்தபின்னர் பல நாடுகளுக்குச் சென்று பயின்றார். பின்னர் பம்பாய்க்குத் திரும்பி வந்து டாக்டராகப் பணி புரிந்தார். அவ்வகையில் இந்தியாவில் பணி யாற்றிய முதல் இந்தியப் பெண் டாக்டர் இவர்தான். ஆனால் இவருடைய திருமண வாழ்வு, சர்ச்சைக்குள்ளாகி, பின்னர் முறிந்தது. இவர் 11 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். பருவம் அடைந்தவுடன் சாந்தி முகூர்த்தத்துக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவரது கணவர் கோர்ட்டை அணுகி வெற்றியும் கண்டார். கோர்ட் அவரை, கணவருடன் வாழ உத்தரவிட்டது. அவர் மறுத்தார். பால கங்காதர திலகர் போன்றோர் கணவர் சொல்வதே இந்து தர்ம விதிகள் என்றனர். கோர்ட்டும் அதையே சொன்னது. ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார். இறுதியில் ருக்மா பாய், விக்டோரியா மஹாராணியை அணுகி கோர்ட் உத்தரவை ரத்து செய்தார். அந்தக் காலத்தில் மஹாராஷ்டிரத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட விஷயம் ஆகவிருந்தது.

 

யோகிகளும் அபினியும்

இந்து யோகிகள், குறிப்பாக இமயமலைப் பகுதியில் வசிக்கும் யோகிகள், அபினி (கஞ்சா) சாப்பிடுவதாகச் சொல்லுவர். யோகிகள் அபினி தயாரிக்கும் ஒரு படம் வெல்கம் சென்டர் ஆயுர்வேதக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அதில் சொல்லப்பட்ட விஷயமானது:

“தெற்காசிய மருத்துவ சிக்கிச்சையில் அபினி என்பது ஒரு விஷப் பொருள் அல்ல; அதை மருந்தாகவே கருதுகின்றனர். இது பழங்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் இல்லை என்றும் இஸ்லாமிய தொடர்பு மூலம் வந்தது என்றும் கருதப்படுகிறது. இது மிகவும் கெட்ட பெயர் எடுத்த போதைப் பொருள் என்றாலும், மேலை நாட்டு, கீழை நாட்டு மருத்துவத்தில், மலேரியா, காலரா, வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது

 

 

எனது கருத்து:

இந்த 200 ஆண்டுக்கு முந்தைய ஓவிய படத்தின் தலைப்பு சந்யாசிகள் அபினி தயரிப்பதாக சொல்கிறது. இது யோகிகளுக்குக் கடவுள் வைக்கும் ஒரு பரீட்சை. இங்கு லண்டனில் பெரிய இன்வெஸ்ட்மென்ட் வங்கியில்(Investment Bank) வேலை வேண்டுமானால், பல இன்டெர்வியூக்கள் இருக்கும்; பல்வேறு குழுக்கள் பல கோணங்களில் ஒரே ஆளை கேள்வி கேட்பர்; அத்தனை இன்டெரியூக்களிலும் பாஸ் செய்பவரே/ தேறுபவரே வேலையில் அமர்த்தப்படுவர். இதே போல விஸ்வாமித்ரர் கதையிலும் பல சோதனைகளில் அவர் தோற்று கடைசீயில் வெற்றி பெற்று வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அந்த வகையில் இந்த ஓபியம் Opium எனப்படும் அபினி/ கஞ்சாவும் கடவுள வைக்கும் ஒரு சோதனை. சமாதி நிலை அல்லது தியானத்துக்கு உதவும் அபினி என்று சில யோகிகள் எடுக்கத் தொடங்குவர். பெரும்பாலோர் அந்த நிலயில் இருந்து மீண்டு அபினி இல்லாமலேயே தியானம் செய்யப் போய்விடுவர்; சிலர் மட்டும் சேற்றில் அழுந்திய பன்றிகள் போல போதைப் பொருளுக்கு அடிமை ஆகிவிடுவர். ஆகவே அபினி என்பது கடவுள் வைக்கும் சோதனை; யோகிகள் எவரும் அபினி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுமில்லை; எழுதியதுமில்லை. ஆகவே அபினியுடன் யோகிகளை இணைத்துக் காண்பது அறியாமையே.

–சுபம்–

ஆயூர்வேத அதிசயங்கள் (Post No.4712)

Betel-nut cutter with Vishnu and Lakshmi; areca nut tooth paste

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-39 AM

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4712

 

PICTURES ARE TAKEN by London swaminathan

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய அதிசயச் செய்திகள், அபூர்வ படங்கள் இருக்கின்றன. எவ்வளவுதான் சொல்ல முடியும்? இது நாலாவது கட்டுரை. முடிந்தவரை சொல்கிறேன்.

 

ஜோதிட உடம்பு

ஒரு உடலில் 12 ராசிகளை வரைந்த படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாரசீக மொழிக் குறிப்புகள் உள்ளன. 1396 ஆம் ஆண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த (இப்போது இந்த நாட்டின் பெயர் ஈரான்) மன்சூர் இபின் முகமது என்பவர் ஒரு நூல் எழுதினார். அந்த மருத்துவ புஸ்தகத்துக்கு தஸ்ரிக் இ மன்சூரி என்று பெயர். அதில் உடலின் ஐந்து அம்சங்கள் விளக்கப்படுகின்றன: எலும்பு, நரம்பு, சதை, சுத்த ரத்தக் குழாய்கள், அசுத்த ரத்தக் குழாய்கள். அவர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மருத்துவ மேதை காலன் (GALEN, 130-210 CE) என்பவரைப் பின்பற்றி இந்த புஸ்தகத்தை எழுதினார். . இஸ்லாமிய நாடுகளில் இதுதான் முதல் வைத்திய கிரந்தம் என்று சொல்வதற்கிலை. ஆயினும் இந்தக் க்ரந்தத்தின் சிறப்பு யாதெனில் அழகிய வரைபடங்களுடன் வெளியானதே; இதற்கு முந்திய நூல்களில் உடற்கூறுகளின் படங்கள் இல்லை. இதே முறையில்தான் ராஸி மனிதன் படமும் அமைந்துள்ளது

 

உடலின் பல அங்கங்கள், நவக் க்ரஹங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். கண்ணுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், ஜனன உறுப்புகளுக்கு சுக்கிரன் என பல க்ரஹங்களுக்குப் பல பணிகள் உண்டு. இதன் அடிப்படையிலேயே பாரசீக 12 ராஸி மனிதன் வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.

மனிதனின் முதுகெலும்புக்கு அருகில் உள்ள தண்டுவடம் வழியாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். இத்தகைய ஆறு சக்கரங்களைக் காட்டும் பழைய ஓவியமும் இங்கே உள்ளது. இந்த தண்டு வடத்துக்குக் கீழே பாம்பு சுருண்டு கிடப்பதுபோல மஹத்தான ஒரு சக்தி உறக்க நிலையில் இருப்பதாகவும் அதை தியானம் மூலம் தட்டி எழுப்பி ஆறு சக்கரங்கள் வழியே வழிநடத்தும் வல்லமை உடையோர் ஆன்மீக விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்றும் அத்தோடு நில்லாமல் நெற்றிக் கண்  (மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண்) திறக்கப்பட்டு அற்புதங்களை செய்ய முடியும் என்றும் இந்துமத நூலகள் செப்பும். இக்கால விஞ்ஞானிகளுக்கோ, மாற்றுமதத்தினருக்கோ இந்த பிரம்மாண்ட ரஹஸியம் இன்று வரை தெரியாது; விளங்காது.

 

விநாயகர் அகவலில் அவ்வையார் கூறுவதை அறிந்தோருக்கு இதன் சிறப்பு புரியும்.

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

 

 

ஆயூர் வேதம் என்றால் ‘நீண்ட வாழ்க்கை வாழ்வதற்கான அறிவு’ என்று பொருள்படும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களின் அடிப்படையில் அமைந்த மருத்துவ முறை இது. இப்பொழுது இந்தியாவுக்கு வெளியிலும் பிரபலமாகிவிட்டது.

 

இந்தக் கண்காட்சிக்கு ‘ஆயுர்வேத மனிதன்’ என்று பெயர் சூட்டியமைக்குக் காரணம் ஒரு நேபாள ஓவியம் ஆகும். இது 200 ஆண்டுப் பழமையானது. நேபாள நாட்டிலிருந்து இந்தியா வழியாக லண்டன் வரை வந்ததிலிருந்தே இதன் சிறப்பு விளங்கும்.

 

இந்த வண்ண ஓவியத்தில் ஆயுர்வேத நூல் அடிப்படையில் உடல் உறுப்புகளும் ரத்த நாளங்களும் காட்டப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘பாவ ப்ரகாஸ’ என்ற சம்ஸ்க்ருத மருத்துவ நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் இந்த ஓவியத்தில் இருக்கின்றன. ஓவியத்தை வரைந்தவர் நல்லறிவு பெற்றிருந்தாலும் சம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதியவர் பிழைபட எழுதியுள்ளார். எழுத்துப் பிழைகளோடு கருத்துப் பிழைகளும் உள.

 

விஷ்ணு-லெட்சுமி உருவத்துடன் கூடிய பித்தளை பாக்குவெட்டியும் கொட்டைப் பாக்கில் இருந்து செய்யப்பட்ட பற்பசையும் காட்சியில் இடம்பெற்று உள்ளன. அந்தக் காலத்தில் மூலிகைகளை பெரிய வரைபடமாக வரைந்த மூலிகைப் புஸ்த்தகத்தையும் காணலாம். இவை எல்லாம் 200-ஆண்டுப் பழமையானவை.

 

பார்க்க அருமையானவை.

–SUBHAM–

லண்டனில் ஆயுர்வேதக் கண்காட்சி (Post No.4697)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-58 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4697

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

 

லண்டன் மாநகரில் யூஸ்டன் (Euston or Euston Square) ரயில் நிலையம் அருகில் வெல்கம் சென்டர் (Wellcome Centre) என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிலயம் உள்ளது. இந்தியாவின் ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் தொடர்பான ஏராளமான மருத்துவ பொக்கிஷங்களின் உறைவிடம் இது. இப்பொழுது ஒரு ஆயுர்வேத கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும். ஆனால் திங்கட்கிழமையில் கண்காட்சி மூடப்பட்டிருக்கும்.

 

 

இந்தக் கண்காட்சி பற்றியும் வெல்கம் என்பவர் யார் என்றும் சில செய்திகளைக் காண்போம்.

ஹென்றி வெல்கம் (1853-1936) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் லண்டனுக்கு ஒரு மருந்து விற்பனையாளராக வந்தார். பின்னர் ஒரு பெரிய மருத்துவ தொழில் நிறுவனத்தை அமைத்து வெற்றி கண்டார். அவருக்கு வரலாற்றில்– குறிப்பாக மருத்துவ வரலாற்றில்— பேரார்வம் இருந்தது. அவர் ஒரு தர்ம சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர், பழம்பொருள் சேகரிப்பாளர். ஆகையால் உலகம் முழுதும் குறிப்பாக இமய மலைப் பகுதி மூலிகைச் செல்வங்கள், ஆயுர்வேத நூல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். அவர் சேகரித்த நூல்களும், பொக்கிஷங்களும் உலகம் முழுதும் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. அவர் அமைத்த அறக்கொடை நிறுவனமான வெல்கம் ட்றஸ்ட் (Wellcome Trust) இன்று 70  நாடுகளில் ஆரய்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி செய்கிறது.

 

வெல்கம் சென்டரில் எப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் புதிதாக ஆயுர்வேத கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புத்தகக் கடை, காப்பிக் கடை, நூலகம் ஆகியன இந்த இடத்தின் சிறப்புகள்; எப்போதும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூடி இருப்பர்.

 

ஆயூர்வேதக் காட்சியில் நிறைய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருத பாரசீக, திபெத்திய மொழி நூல்களும் சுவடிகளும் இருக்கின்றன. ஒரு புறம் வீடியோவில் திபெத்திய மூலிகைச் செல்வம் பற்றிய ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மறுபுறம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன்  மருத்துவ செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்.

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அவதரித்த சுஸ்ருதர் என்ற மஹா மேதைதான் உலகில் அறுவைச் சிகிச்சையின் தந்தை (Father of Surgery)  என்ப போற்றப்படுகிறார். அவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய விஷயங்கள் உலகப் பிரசித்தமானவை.

 

சுஸ்ருதர் செயற்கை மூக்கு எப்படிச் செய்வது எப்படிப் பொருத்துவது (Rhinoplasty) என்று சொன்ன விஷயங்களும், அவர் வருணிக்கும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளும் (Surgical Instruments) உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த மருத்துவக் கருவிகள் நம்மிடையே இன்று இல்லாவிடினும், அதன் மாதிரிகளைத் (Replicas) தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

இந்தக் கண்காட்சிக்கு ஆயுர்வேத மனிதன் என்ற பெயர் சூட்டியதற்குக் காரணமாக அமைந்ததது ஒரு 18ஆவது நூற்றாண்டின் நேபாளி ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வண்ணம் ஒரு மனிதனின் உடலுறுப்புகள் ரத்த நாளங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம் இன்று இந்தியாவுக்கு அப்பாலும் பயிலப்படுகிறது.

கண்காட்சியிலுள்ள வேறு பல சுவையான விஷயங்களைத் தனியாகத் தருகிறேன்.

–Subham–

செரிங்கட்டி தரும் 6 விதிகள் (Post No.4687)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-03 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4687

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் மூன்றாவது உரை

 

  1. செரிங்கட்டி தரும் ஆறு   விதிகள்

ச.நாகராஜன்

 

ஆப்பிரிக்காவில் செரிங்கட்டி என்ற அற்புதமான வளம் வாய்ந்த பகுதியை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் முடிவில் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர். சுற்றுப்புறச் சூழலைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ள இந்த ஆறு விதிகள் உதவும்.

முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்படவில்லை.

எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.

இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.

 

செரிங்கட்டியின் நான்காவது விதி,  ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம் என்று கூறுகிறது.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

செரிங்கட்டியின் ஐந்தாவது விதி, மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது என்கிறது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது.

சிங்க்ளேர் என்ற விஞ்ஞானி இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது என்று கூறுகிறது செரிங்கட்டியின் ஆறாவது விதி.

 

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

செரிங்கட்டியில் உள்ள இயற்கைக் காட்டு வளம் தரும் சுவையான பல செய்திகளில், இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

XXXXXXXXXXXXXXX

செரிங்கட்டிவிதிகள் (Post No.4678)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-20 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4678

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை

 

  1. செரிங்கட்டிவிதிகள்

ச.நாகராஜன்

    இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.

உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.

1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது!

கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

 

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.

செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

மனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.

‘உயிர்களிடத்து அன்பு வேணும் என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்கு வளத்தையும் நல்கும்.

***


 

விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? (Post No.4656)

Written by London Swaminathan 

 

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London – 7-36 AM

 

Post No. 4656

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள்
ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? என்பதற்கு நேற்று ஒரு பேய்க்கதை சொன்னேன்; சொக்கா சொக்கா சோறுண்டோ சோழியன் வந்து கெடுத்தாண்டோ- என்ற பழமொழியின் பின்னாலுள்ள கதை அது.

 

நடேச சாஸ்திரியார் தொகுத்து 1886 ஆம் வெளியிட்ட ‘திராவிட பூர்வகால கதைகள்’ புத்தகத்தில் மேலும் ஒரு கதை உளது. பழந்தமிழில் உள்ள கதையை புதுக்கியும் சுருக்கியும்   வரைவது என் சித்தம்.

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணன் இருந்தான். அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. ஒரு தொண்டுக் கிழம் அவருடைய கடைசி பெண்ணை விவாஹம் செய்துவிட்டு உயிர்விடக் காத்திருந்தது. கல்யாணமும் சுகமே முடிந்தது. அன்றிரவு சாந்தி முகூர்த்தம்; மாப்பிள்ளை சுத்த வைதீகப் பிராஹ்மணன்; ஆகையால் மாலைச் சந்தியாவந்தனத்தை முடிக்க குளக்கரைக்குச் சென்றான். அந்த ஊரில் முதலைகள் அதிகம்; அது பற்றி புது மாப்பிள்ளையை யாரும் எச்சரிக்கவில்லை. அவர்கள் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

 

குளத்தில் இறங்கிய புது மாப்பிள்ளையின் காலை ஒரு முதலை கவ்வியது. மாப்பிள்ளைக்கு ஒரே நடுக்கம்; இருந்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு,

 

“முதலை மாமா! முதலை மாமா! ஒரே ஒரு விண்ணப்பம். நான் இப்போதுதான் கல்யாணம் கட்டி, சாந்தி முகூர்த்தத்துக்கு காத்திருக்கிறேன்; நீ என்னை சாப்பிடுவதானால் சாப்பிடலாம்; ஆனால் நான் போய் என் மனைவியுடன் படுத்துவிட்டு, விஷயத்தைப் புரியவைத்துவிட்டு, அனுமதி வாங்கி வந்து விடுகிறேன்; என்னை நம்பி ஒரு பெண்ணும், அவளது தந்தை ஒரு தொண்டுக் கிழமும் இருக்கின்றனர். நான் போகாவிடில் இருவரும் உயிர் விடுவர். நீ மூன்று உயிர்களைப் பறித்த பாவத்துக்கு ஆளாவாய். மேலும் பிராஹ்மணர்கள் ஸத்யம் தவறாதவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும்;நான் கட்டாயம் திரும்பி வருவேன். என்னை விடுவாயா?” என்று கேட்டனன்.

Karthik Raghavan’s picture from Kaladi; Adi Shankara story

முதலை சொன்னது:

“உன்னை இப்போது சாப்பிட்டாலும் நாளை சாப்பிட்டாலும் எனக்கு ஒன்றுதான்; போய் வா மகனே, போய் வா! இன்று போய் நாளை வா!”

 

அவன் மனைவியிடம் சென்றான்; சாந்தி முகூர்த்தம் தடபுடலாக நடந்தது. நள்ளிரவில் மனைவியிடம் எல்லா வற்றையும் சொன்னான். அவள் சொன்னாள்—“ நாளை வரை காத்திராதீர்கள் இப்போதே போங்கள்”.

 

அவனும் புறப்பட்டான்; இந்த மாதிரி கொலைகார மனைவியிடம் வாழ்வதைவிட ஒரு முதலையின் பசியைத் தீர்ப்பது சாலச் சிறந்தது. இரண்டு மணி நேரம் சுகம் அனுபவித்த பின், முதலையிடம் என்னைப் பலி கொடுக்கத் தயாராகி விட்டாளே! என்று மனதுக்குள் வசை பாடிக்கொண்டு குளத்துக்கு வந்தான்.

 

“முதலை மாமா! நீ நாளை வரை காத்திருக்க வேண்டாம்; என் மனைவியே என்னை அனுப்பி விட்டாள்; என்னைச் சாப்பிடு என்றான்.

முதலையும் தாவிப் பாய்ந்தது.

அப்போது ‘பளிச்’ என்று ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது; மீண்டும் இருள் சூழ்ந்தது.

 

முதலை சொன்னது,

“அடக் கடவுளே! சாப்பிட வந்த போது விளக்கு அணைந்துவிட்டதே. நான் உன்னைச் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு  அணைந்தாலும், விளக்கு இருந்தாலும் சாப்பிட மாட்டேன். நீ போகலாம்” என்று அனுப்பிவிட்டது.

 

திரும்பிப் பார்த்தான்; அவன் மனைவி ஒரு சட்டியில் அணைந்த  விளக்குடன் ஓடி வந்தாள். அவள் சொன்னாள்,

“என் பிராண நாதா! சுவாமி! நீங்கள் எந்த விக்கினமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்று உலகிள்ள எல்லா ஸ்வாமியையும் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனை பலித்தது” என்று சொல்லி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

விளக்கின் மஹிமை இத்தகையது. மிருகங்களும் ஸத்தியத்துக்குக் கட்டுப்படும். இதனால் மனிதர்கள் யாரும் விளக்கு ஏற்றாமலோ , விளக்கு அணைந்தாலோ சாப்பிட மாட்டார்கள்.

 

(மின்சார விளக்குகள் ஜகஜ்ஜோதியாக இருக்கும் லண்டனில் கூட என் வீட்டில் சாப்பிடும் போது ஒரு விளக்கையும் அனைக்கக் கூடாது என்பது என் மனைவியின் கட்டளை; நானும் எனது மகன்களும் இன்றும் அந்த சட்டத்துக்குக் கீழ்ப்படுகிறோம்)

 

-சுபம், சுபம்-

 

 

tags–விளக்கு, முதலை, பிராஹ்மணன், சாந்தி முஹூர்த்தம்

 

இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள் (Post No.4655)

Picture: Students celebrate Forest Day

 

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 5-54 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4655

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் முதலாவது உரை

 

 

  1. இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்

ச.நாகராஜன்

 

இயற்கை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வல்லமை படைத்தது. மனிதன் அதன் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருந்தாலே போதும். அது வளமான பூமியை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அளிக்கும்.

 

 

அமெரிக்க விஞ்ஞானக் கழகத் தலைவரான க்ரெசி மாரிசன் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று ஆராயப் புகுந்தார். தனது ஆய்வின் முடிவில் இறைவன் இருக்கிறான் என்பதற்கு அவர் ஏழு காரணங்களை உலகினர் முன் வைத்தார். அதில் ஒன்று இயற்கையின் ஒப்பற்ற சமன்பாட்டுத் தத்துவம்.

இயற்கையில் காணும் ஒப்பற்ற சிக்கன அமைப்பைச் சற்று உற்றுக் கவனித்தபோது அது எல்லயற்ற, பரந்த ஒரு பேரறிவினால் இயக்கப்படுவதையும் அதில் முன்யோசனையும் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் இருப்பதையும் அவர் கண்டார்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில் சப்பாத்திக் கள்ளி வெகு விரைவில் பரவி பயிர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் தந்தது. விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் தேடி சப்பாத்திக் கள்ளியை மட்டும் தின்று வாழும் ஒரு வகைப் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்து வந்து ஆஸ்திரேலியாவில் விட்டார்கள். அவை அந்த விரும்பத்தகாத செடியை அழித்தன. சிக்கலும் தீர்ந்தது.

 

Forest on fire in California, USA

இது போன்று தாவரம் மற்றும் விலங்குக் கூட்டங்களிடையே இயற்கைக் கட்டுப்பாடுகளும் தடைகளும் தானே அமைந்துள்ளன. வேகமாகப் பெருக்கமடையும் பூச்சிகள், பிராணிகள் இவற்றின் உடலிலேயே அவற்றின் உருவையோ அல்லது வலிமையையோ கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதால் தான் மனிதன் இன்றும் வாழ முடிகிறது.

 

 

ஆக இந்த இயற்கை விதியை மனதிலே பதித்துக் கொள்ளாமல் பல்வேறு காரணங்களுக்காக இயற்கை அன்னை பாதுகாத்து வரும் யானை, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதும், அரிய பறவை இனங்களை உணவுக்காகவும் இதர காரணங்களுக்காகவும் வேட்டையாடு சுற்றுப்புறச் சூழ்நிலையை அழித்து விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

இதை மனதில் கொண்டு வாழ்வோமாக!

***

பனங்காட்டு நரியும், பணம் காட்டும் நாயும் (Post No.4610)

Pictures are from newspapers

Written by London Swaminathan 

 

Date: 12 JANUARY 2018

 

Time uploaded in London  19-33

 

 

 

Post No. 4610

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

நரி முகத்தில் முழித்தால் அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அட! பனங்காட்டு நரி பணம் தருகிறதோ இல்லையோ நாய் பணம் தரும்; அதுவும் லண்டன் நாய் பணம் தரும்!

 

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையங்களில் ஒன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையம். அங்கு ஜெஸ்ஸி என்ற பெயருள்ள ஒரு நாயை கள்ளப் பணத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படுத்துகிறார்கள்; அதாவது பணம் அடிக்கப் பயன்படுத்தும் மையை (INK) முகர்ந்து பார்க்கும் சக்தி இதற்கு உண்டு. இதனால் யார் பணம் கடத்தி வந்தாலும் இது கண்டு பிடித்து வாலாட்டும். கடத்தல்காரர்களின் வாலை ஒட்ட நறுக்கிவிடும்.

 

ஹீத்ரோ விமான நிலையத்தில் ஐந்தே மாதங்களுக்குள் இது பத்து லட்சம் ஸ்டெர்லிங் பவுண்டு (Sterling Pounds) மதிப்புள்ள கரன்ஸி நோட்டுகளைக் கண்டு பிடித்துவிட்டது. இந்த நாயின் வயது — குட்டி நாயின்- வயது இரண்டுதான்!

 

ஒருமுறை சரக்குப் பிரிவில் அனுப்பப்பட்ட மூன்றரை லட்சம் பவுன்களைக் கண்டுபிடித்தது. யாரேனும் கைப் பைகளில் அதிகம் பணம் வைத்திருந்தால் கண்டு பிடித்துவிடும். அதற்கு நியாயமான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படும்.

இது தவிர வேறு வழிகளிலும் கள்ளக் கடத்தல் பணம் கண்டு பிடிக்கப்படுவதால் கடந்த ஓராண்டில் மட்டும் 80 லட்சம் பவுன்களை பார்டர் ஸெக்யூரிட்டி ஃபோர்ஸ் (Border Security Force) கண்டுபிடித்துள்ளது. ஒருவர் பெருந்தொகையைக் கைப் பையில் கொண்டு சென்றார்; ஜெஸ்ஸி பார்த்து விட்டது; அந்தப் பயணியிடம் விளக்கம் கேட்டபோது லாட்டரிப் பரிசு விழுந்தது என்றார். அது பொய் என்று தெரிந்தவுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

ஜெஸ்ஸியின் புகழ் பரவத் துவங்கிவிட்டது; லண்டன் பத்திரிக் கைகளின் முதல் பக்கத்தில் ஜெஸ்ஸிக்கு பிரதான இடம்;

நாய்க்கு அடித்தது யோகம்!

 

–சுபம்–

கடலிடம் கற்போம்! (Post No4587)

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 6-35 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4587

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை

கடலிடம் கற்போம்!

ச.நாகராஜன்

 

“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை! இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது!” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்

2017ஆம் ஆண்டு  முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த  நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும்! (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி;  ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.

இந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்!

அடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ்  (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன.  பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி! வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே!

அடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது.  நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை  மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.

அடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).

போகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்! கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம்! ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

london swaminathan in Greece

கடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.

2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள்  தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு  பிடித்துள்ளனர்.

கடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது!

கடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.

சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம் என்றார்.

க்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து  கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

உலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.

மக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.

 

****

 

சாணக்கிய நீதியில் பாம்பு!!! பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை (Post No.4581)  

சாணக்கிய நீதியில் பாம்பு!!! பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை (Post No.4581)

 

Written by London Swaminathan 

 

Date: 4 JANUARY 2018

 

Time uploaded in London- 8-16 am

 

 

 

Post No. 4581

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் இலக்கியத்தில் பாம்பு, மலைப் பாம்பு பற்றி வரும்  விஷயங்களையும், கம்பனும் காளி தாசனும் பயன்படுத்தும் பாம்பு உவமைகளையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தந்தேன். சாணக்கிய நீதியில் பாம்பு பற்றி வரும் சுவையான விஷயங்ளைக் காண்போம்

 

நிர்விஷேணாபி ஸர்பேன கர்தவ்யா மஹதீ பணாஹா

விஷமஸ்து ந சாப்யஸ்து பணாடோபோ பயங்கரஹ

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 10

விஷமே இல்லாத ஒரு பாம்பும் கூட அதன் தலையைத் தூக்கி படம் விரித்தாட வேண்டும் (படம் காட்ட வேண்டும்); விஷம் இருக்கிறதோ இல்லையோ பாம்பு படம் விரித்தாடுவது பயத்தை உண்டாக்கும்.

 

சாணக்கியனின் அருமையான போதனை இது. நல்லோர் எல்லோரும் வல்லவர்களாக இருக்க வேண்டும்; பலம் இல்லாதவர்கள் கூட பலம் இருப்பது போல நடித்தால்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதை அழகான ஒரு கதையாகக் கூறுகிறார். ஒரு ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. மிகவும் கொடிய பாம்பு; யார் வந்தாலும் கடித்து விஷத்தைப் பாய்ச்சிவிடும்; அவர்கள கதி ‘சகதி’தான். ஒருமுறை அந்தப் பக்கமாக ஒரு சாது சந்யாஸி வந்தார். அவரையும் பாம்பு துரத்தியது ஆனால் அருகில் வந்தவுடன் அந்த யோகியின் தவ வலிமையால் அது சாதுவாக நின்றது என்னைக் கடிக்க வேண்டுமா? கடி என்றார். ஆனால் அது பதிலே சொல்லவில்லை.

 

 

உடனே அந்த ஸாது சந்யாஸியும் அதன் மேல் கருணை கொண்டு நல்லுபதேசம் அளித்தார். “ பாம்பே! இனிமேல் யாரையும் கடிக்காதே- என்றார் அதுவும் தலையையசைத்து சம்மதம் சொன்னது.

 

நாளடைவில் இதன் மென்யை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். இது கிழட்டுப் பாம்பாகி விட்டது; விஷம் எல்லாம் தீரந்து போய்விட்டது என்று அதன் மீது கற்களை வீசினர். அப்போதும் அது ஸாதுவாக இருப்பதை அறிந்து அதன் வாலைப் பிடித்து தர தர என்று இழுத்தனர். அதற்கு உடம் முழுதும் காயம் ஏற்பட்டது.

 

சிறிது காலத்துக்குப் பின்னர் அதே ஸந்யாஸி அந்த வழியாகப் போக நேரிட்டது. பாம்பின் பரிதாப நிலையைக் கண்டார்; குசலம் விசாரித்தார்

 

 

பாம்பு தனக்கு ஏற்பட்ட அவல நிலையைச் சொல்லி, அவருடைய உபதேசத்தைப் பின்பற்றியதால் இந்தக் கதி என்றது.

 

 

ஸந்யாஸி சொன்னார்: “பாம்பே! நான் உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன்; சீறி பயமுறுத்தக் கூடாது என்று சொல்லவில்லையே!”

இதைச் சொன்ன பரமஹம்ஸர் மேலும் சொல்லுவார்:

பலரும் நீதி வாக்கியங்களை, உபதேசங்களைப் புரிந்து கொள்வதில்லை; அல்லது அரைகுறையாகப் புரிந்து கொள்கி றார்கள். இந்த உலகத்தில் வாழும் வரை மற்றவர்கள் உன்னை மரியாதையாக நடத்தும்படி பார்த்துக்கொள்; அவர்கள் உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்; மற்றவர்களைத் துன்புறுத்தாதே; மற்றவர்களைத் துன்புறுத்தவும் அனுமதியாதே.

 

இது நல்ல புத்திமதி. ஸாதுவான பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லித தர வேண்டிய அறிவுரை; பலரும் பள்ளி, கல்லூரிகளில்  கஷ்டப்படுவதைக் கேட்கிறோம்.

 

 

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்று பாரதி சொன்னதும் அதுவே

 

XXXX

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதரஸர்பவத்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 2

 

 

ஒருவருடைய ரஹஸ்யங்களை மற்றொருவனுக்குச் சொல்லுபவன் , பாம்புப் புற்றிலுள்ள பாம்பு போல அழிவான்

 

XXXX

 

 

துர்ஜனஸ்ய ச ஸர்பஸ்ய வரம் ஸர்போ ந துர்ஜனஹ

ஸர்போ தசதி காலேன துர்ஜனஸ்து பதே பதே

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 4

 

பொருள்

 

கெட்டவர்களையும் பாம்புகளையும் ஒப்பிடுங்கால், பாம்பு நல்லது ஆகிவிடும்; ஏனெனில் பாம்பு எப்போதாவது நம்மைக் கடிக்கிறது; கெட்டவர்களோ ஒவ்வொரு அடிக்கும் ஒரு முறை நம்மைக் கடிப்பார்கள்; துன்புறுத்துவார்கள்.

 

XXXX

 

 

சாணக்கியன் சொன்ன பாம்பும், கெட்டவர்களும் என்ற உவமை தமி ழ் இலக்கியத்திலும் உளது. எனது முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் காண்க.

 

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும் …

https://tamilandvedas.com/…/பாம்பு-மந்திரம்-அதர…

 

18 Oct 2016 – பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264). snake-nandhu-fb. Research Article by London Swaminathan. Date: 18 October 2016. Time uploaded in London: 14-59. Post No.3264. Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.) Contact swami_48@yahoo.com. snakes-banded-egyptian-cobra.

 

பாம்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாம்பு/

 

Written by London Swaminathan. Date: 22 October 2017. Time uploaded in London- 6-59 am. Post No. 4325. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய …

 

பாம்பு தலையில் பூமி! கம்பன் …

https://tamilandvedas.com/…/பாம்பு-தலையில்-ப…

 

7 Nov 2016 – இதில் நமக்கு வேண்டியது , பல்தலைப் பாந்தள் ஏந்திய மொய்நிலம், அதாவது பல தலைகளையுடையபாம்பின் தலையிலுள்ள பூமி! இன்னொரு பாடலில் … அரசனை சூரியன், வாயு பகவான் ஆகியோருடன் ஒப்பிடுவதும் தமிழ் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ளது. Atlas holding the earth in Greek …

 

மலைப் பாம்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மலைப்-பாம்பு/

 

கட்டுரை எண்:- 892 தேதி:– 7 மார்ச் 2014. சங்க இலக்கியத்தில்மலைப் பாம்புகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த தமிழ்ப் புலவர்கள், அவைகள் யானைகளை விழுங்கியது பற்றிப் பாடி வைத்திருக்கின்றனர். யானையை மலைப் பாம்புவிழுங்க முடியுமா? இதோ முதலில் சில உண்மைச் ………………..

 

–subham–