இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2 (Post No.4746)

Date: 15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-56 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4746

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2

 

ச.நாகராஜன்

 

5

சுபாஷித ஸ்லோகம் ஒன்று இருந்தும் இறந்தவர் யார் என்பதைச் சொல்கிறது :

 

ஜீவந்தோபி ம்ருத பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே! |

தரித்ரோ வ்யாதிதோ மூர்க: ப்ரவாஸி நித்யஸேவக: ||

ஸ்லோகத்தின் பொருள் : இருந்தாலும் இறந்தவர் தாம், இந்த ஐந்து பேர்கள்!

ஏழை, வியாதியுள்ளவன், முட்டாள், அன்ய தேசத்தில் வாசம் புரிபவன், எப்போதும் பிறருக்கு ஊழியம் செய்பவன் இந்த ஐந்து பேரும் ஜீவித்திருந்தாலும் கூட செத்ததற்கு ஒப்பானவர்கள்!

 

 

நீண்டகாலமாக தரித்ரனாக உள்ளவன், நீண்ட காலம் தீராத வியாதி உள்ளவன், அறிவே இல்லாத நிரந்தர முட்டாள், நீண்ட காலம் பிற தேசத்தில் வாழ்பவன், வாழ்நாள் முழுவதும் பிறருக்கு ஊழியம் செய்து கொண்டே இருப்பவன் ஆகிய இந்த ஐவரை எப்படி உயிருடன் இருப்பதாகச் சொல்ல முடியும்?!

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

6

அம்பலவாணக் கவிராயர் என்ற புலவர் அறப்பளீசுர சதகம் என்ற நூலில் நூறு செய்யுள்களை இயற்றித் தந்துள்ளார். வாழ்வாங்கு வாழும் போது அறிய வேண்டிய அற்புத நெறிமுறைகளைத் தரும் நூல் இது.

 

அதில் எண்பதாவது பாடலில் பயனில்லாதவை எவை என்று ஒரு பட்டியலைத் தருகிறார்; அதில் ஒரு வரி:

 

சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?

என்று கேள்வி கேட்கிறார்.

மரண காலத்தில் உதவி செய்யாத புதல்வன் இருந்து தான் என்ன பயன்? அவன் இருந்தும் இறந்தவனே தான்!

 

 

7

 

 

 

மகாகவி பாரதியார் சிவசக்தியை நோக்கிப் பாடும் பாடல் உளத்தை உருக வைக்கும் ஒரு பாடல்!

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

என்று ஆரம்பிப்பவர்,

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

வல்லமை தாராயோ – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி சிவசக்தி! – நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

என்கிறார்.

சுடர் மிகும் அறிவு எதற்குப் பயன்பட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மாநிலம் பயனுற வாழச் செய்யும் வல்லமை மூலம் அனைவரும் பயனுற வாழ வழி வகுக்கும் சுடர் மிகும் அறிவுடையவனே உண்மையில் வாழ்பவன். அதில்லையேல் அவன் நிலச் சுமையென வாழ்பவனே. அதாவது இருந்தும் இல்லாதவனே!

 

8

மொத்தத்தில் குடும்பத்திற்கும் பிறருக்கும் நல்ல முறையில் உதவி அவர்களை உயரத்தில் ஏற்றுபவனே வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் ‘வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’.

 

 

சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் கடலில் மாண்ட பாண்டிய மன்னனான இளம்பெருவழுதி பாடியது. அதில் நல்ல தமிழன் ஒருவனின் இலக்கணத்தைப் பாண்டிய மன்னன் சொல்வது நம்மை பிரமிக்க வைக்கும். பாடல் இது தான் :

 

 

உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்

அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்

தமியருண்டலு மிலரே முனிவிலர்

துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி

உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுந ருண்மையானே (பாடல் 182)

 

 

பாடலின் பொருள்:

இந்த உலகம் இருப்பதன் காரணம் இது தான்!

இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாலும் கூட அதைத் தனியே தான் ஒருவனே உண்ணமாட்டார். யாருடனும் வெறுப்பில்லாதவர்.பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி அது தீர்தல் பொருட்டு மடிந்திருத்தலும் இலர். புகழ் கிடைப்பதாக இருந்தால் தம்முடைய உயிரையும் கொடுப்பர். பழி வருவதாக இருந்தாலோ உலகம் முழுவதும் கிடைப்பதாக இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்; அயர்வே இல்லாதவர். இவ்வளவு பெற்றி உடையவராக தமக்கென்று முயலாமல் பிறர் பொருட்டென முயல்வார்.

அப்படிப்பட்டவர் இருப்பதால் அல்லவா இந்த உலகம் நிலை பெற்றிருக்கிறது!

பாண்டியனின் கூற்றின் சாரம் பிறர்க்கென வாழ்பவரால் அல்லவா உலகம் நிலை பெற்று இன்னும் இருக்கிறது!

 

 

9

 

இருந்தும் இறந்தவர் யார் என்று பல பெரியோர்கள் கூறியதை ஆராயப் புகின் நாம் பெறுவது பல உண்மைகளை!

ஆரோக்கியமான வாழ்வைக் கொண்டு, அற வழியில் பொருள் ஈட்டி, மன நிம்மதியுடன் மற்றவர்களுக்கு உதவி புரிந்து நீடு வாழ வேண்டும் என்பது தான் சாரம்!

***

96 தத்துவங்கள் எவை? (Post No.4737)

Date:13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-41 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4737

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

1915 ஆம் ஆண்டில் வெளியான தாயுமான சுவாமி பாடல் புத்தகத்தில் 96 தத்துவங்களின் பட்டியல் உளது; அதைக் கீழே காண்க:-

 

–subham–

சிவாகமங்கள்- என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?! (Post No.4736)

Date:13 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-15 am

 

WRITTEN by S Nagarajan

 

Post No. 4736

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

இணையிலா இந்து மதம்

சிவாகமங்கள் 28; என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?!

ச.நாகராஜன்

1

சிவாகமங்கள் 28. சிவ வழிபாட்டை நியமத்திற்குத் தகவும், ஆங்காங்குள்ள தொன்மத்திற்குத் தகவும் உரியவர்கள் இதைக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான ஆலயங்களில் நடத்தி வருகிறார்கள்.

விக்கிபீடியா மற்றும் இதர சைவ இணைய தளங்களில் இவற்றைப் பற்றி முழுவதுமாக அறியலாம்.

28 சைவ ஆகமங்களின் பட்டியல் இது:

The Sivabheda Agamas

1) Kamika, 2) Yogaja, 3) Chintya, 4) Karana, 5) Ajita, 6) Dipta, 7) Sukshma, 8) Sahasraka, 9) Amshumat and 10) Suprabheda.

The Rudrabheda Agamas

(1) Vijaya, 2) Nihshvasa, 3) Svayambhuva, 4) Anala, 5) Vira (Bhadra), 6) Raurava, 7) Makuta, 8) Vimala, 9) Chandrajnana (or Chandrahasa), 10) Mukhabimba (or Bimba), 11) Prodgita (or Udgita), 12) Lalita, 13) Siddha, 14) Santana, 15) Sarvokta (Narasimha), 16) Parameshvara, 17) Kirana and 18) Vatula (or Parahita).

 

இதில் பகுத்தறிவுவாதிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை.

 

2

எல்லா பிராமணர்களும் பூஜையைச் செய்து விட முடியாது.அலங்காரங்களைச் செய்ய முடியாது. தெய்வ உருவங்களைத் தொட்டு விட முடியாது.சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்,சிவாலயங்களில் உரிய சிவாசாரியார் என்று ஒரு வரைமுறை உண்டு.

அவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

சில ஆலயங்களில் பிராமணர்கள் பூஜை செய்ய முடியாது.

பாரம்பரியத்திற்குத் தக்கபடி யார் பூஜை செய்ய வேண்டுமோ அவர்களே செய்வார்கள்.

ஆக இது தான் உண்மை.

3

இந்தச் சடங்கைச் செய்யக் கூடாது, அந்தச் சடங்கை செய்யக் கூடாது என்று முழங்கும் பகுத்தறிவுவாதிகள் தாங்களே சடங்குகளில் எப்படிக் கட்டுண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்.

இவர்களின் தலைவர் சமாதிக்கு எதற்கு ஊதுபத்தி? செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும்?கொடி எதற்காக?

சீருடை எதற்காக?

பகுத்தறிவுக்கு ஒத்ததா இது?

ஆஸ்பத்திரிகளில் சர்ஜன்கள் ஏன் பச்சை உடை அணிய வேண்டும்?

ஏதோ நினைத்த சட்டையை ஏன் போடக் கூடாது?

வக்கீல்களுக்கு எதற்குக் கறுப்பு கோட்டு.

நீதிபதிகளுக்கு (அயல்நாட்டில்) எதற்கு விக்?

இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.

 

4

பகுத்தறிவுச் செல்வங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

பள்ளி மாணவன் கூட சற்று யோசித்தால் இவர்களின் கலாட்டா நோக்கத்தைப் புரிந்து கொள்வான்.

திருஞானசம்பந்தரை இழிவு படுத்து. சிறிது நாள் ஆனால் ஆண்டாளை இழிவுபடுத்து.

இதன் மூலம் தாங்கள் பொதுவாழ்க்கையில் பரபரப்பாக இருப்பதை உறுதி செய்வது தான் இவர்களின் நோக்கம்!

ஆமாம், இதே அளவு சடங்குகள், ஏன் இன்னும் அதிகமாகக் கூட சடங்குள் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும்  உள்ளனவே.

பகுத்தறிகவு மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது தானா,அல்லது ஹிந்து  மதம், கோவில்களுக்கும் மட்டுமான ஒன்றா?!

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியரிடம் கொஞ்சம் பகுத்தறிவை இவர்கள் சொல்லட்டுமே. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது இவர்கள் அவர்களைச் சீண்டவில்லையே!

இந்த போலி பகுத்தறிவுவாதிகளை ஒவ்வொருவரும் சமயம் கிடைத்த போதெல்லாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

அது ஒன்றே நல்ல வழி!

***

 

அபிராமி அந்தாதி- கண்ணதாசன் விளக்கவுரை! (Post No.4732)

Date:12 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-21 am

 

WRITTEN by S Nagarajan

 

Post No. 4732

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

அருமையான அந்தாதி

அபிராமி அந்தாதியும் கண்ணதாசனின் விளக்கவுரையும்!

 

ச.நாகராஜன்

1

அபிராமி பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதியை பல்லாயிரக் கணக்கானோர் தினமும் சொல்லி வழிபடுவது கண்கூடு.

தேர்ந்தெடுத்த தெய்வீ கச் சொற்களால் அன்னையைப் போற்றும் இந்த அந்தாதி நூறு பாடல்களைக் கொண்டது.

அபிராமி பட்டரை அன்னை ஆட்கொண்ட திருவிளையாடல் அனைவரும் அறிந்ததே!

சோழ நாட்டில் புகழ்பெற்ற தலமான திருக்கடையூரில்  அபிராமி பட்டர் என்னும் ஒரு அந்தணர் வாழ்ந்து வந்தார்.

திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டுள்ள அன்னை அபிராமவல்லியை அவர் வழிபட்டு வந்தார்.

பித்தன் போன்ற அவரது உயரிய நிலையை ஏனையோரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது பெருமையை உலகினர் அறியச் செய்ய அன்னை திருவுளங் கொண்டாள்.

அந்தக் காலத்தில் முதலாம் சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்டு வந்தார். (கி.பி.1675-1728).

ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராடி விட்டு திருக்கடையூர் வந்த மன்னர் அபிராமி பட்டரை பித்தன் என்ற நிலையில் கண்டு, ‘இவர் யார்’ எனக் கேட்டார்.

‘இவர் ஒரு தேவி பக்தர்.பித்தர்’ என பதில் கிடைக்க அவர் அபிராமி பட்டரின் நிலையை அறிய வேண்டி, அவரிடம், “இன்று என்ன திதி?” என்று கேட்க அவரோ, ‘இன்று பௌர்ணமி’ என்றார்.

அந்தப் பதிலைக் கேட்ட அரசர் அங்கிருந்து சென்றார்.

தன் நிலைக்கு வந்த பட்டர் அரசன் வந்ததையும் தான் கூறியதையும் அறிந்து மனம் மிக நொந்தார்.

அம்பிகை முன் ஒரு குழியை வெட்டி அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளால் ஆன உறியைக் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டு, “அம்பிகை எனக்கு நேர்ந்த இந்தப் பழியை நீக்கி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு அபிராமி அந்தாதியைப் பாடலானார்.

ஒரு பாடலுக்கு ஒரு கயிறு வீதம் அறுத்துக் கொண்டே வந்த அவர் 79ஆம் பாடலைப் பாடத் தொடங்கினார்.

‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலைப் பாடத் தொடங்கியவுடன் மனமிரங்கிய அன்னை அபிராமி அவருக்குக் காட்சி அளித்து தன் தாடங்கத்தை வானில் காட்ட அது ஜொலித்து பௌர்ணமி நிலவெனக் காட்சி அளித்தது.

நடந்ததை அறிந்த மன்னர் பட்டரின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றினார்.

‘உதிக்கின்ற’ என்று ஆரம்பித்த அந்தாதி அதே வார்த்தையான ‘உதிக்கின்ற’ என்ற வார்த்தையுடன் முடிவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

 

2

வழிவழியாக அன்பர்கள் இந்த அந்தாதியை ஓதி அன்னையின் அருளைப் பெற்று வருகின்றனர்.

இந்த அந்தாதிக்குக் கண்ணதாசன் ஒரு மிக எளிய உரையை இனிய தமிழில் வழங்கியுள்ளார்.

சில பாடல்களையும் அவரது உரையையும் கீழே பார்க்கலாம்:

பாடல் 1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்

பாடல் 7

ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!

பாடல்கள் 10,11,12,13

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். – எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்துநான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!

பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.

 

 

பாடல் 24

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.

பாடல் 28

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.

தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.

 

 

பாடல் 36

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.

குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.

பாடல் 37

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!

 

பாடல் 56

 ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்றன், நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.

 

பாடல் 61

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.–
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!

 

பாடல் 69

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,

ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.

பாடல் 79

விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?

அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).

 

பாடல் 86

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும், சூடகக் கையையும், கொண்டுகதித்த கப்பு
வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

, அபிராமி! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே! இயமன் கோபித்துப் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என்மீது செலுத்தும்போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு நீ என் முன்னே காட்சி தந்தருள வேண்டும்.

பாடல் 87

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், என்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,–விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

, அபிராமி! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவபெருமானின் அழியாத யோக விரதத்தை எவ்வுலகத்தவரும் பழிக்குமாறு அவனது இடப்பக்கத்தில் இடம்கொண்டு ஆள்பவளே! எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே! (ஈதென்ன வியப்போ!)

பாடல் 94

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

அபிராமி அம்மையைப் பக்தியோடு விரும்பித்தொழும் அடியவர்களின் கண்களில் நீரானது பெருகி, மெய்சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, அறிவு மறந்து, வண்டைப் போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச்சிறந்ததாகும்.

 

நூற்பயன்

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்

3

அமிர்தமாக வர்ஷிக்கும் அபிராமி அந்தாதியில் 18 பாடல்களைப் பார்த்தோம்.

அதற்கு அருமையான உரையை அன்னையின் அருளால் கண்ணதாசன் தந்த பாங்கினையும் மேலே பார்த்தோம்.

நூறு பாடல்களுக்குமான அவரது உரையைப் படிக்கும் போது சிந்தை தெளிவுடன் பக்தி மேலோங்கும் என்பதில் ஐயமில்லை.

 

முழு நூலையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பும் அன்பர்கள் www.projectmadurai.org  என்ற இணையதளத்தை நாடலாம்.

இந்தத் தளம் தமிழுக்கும் தெய்வீகத்திற்கும் ஆற்றி வரும் தொண்டு மிகவும் போற்றற்குரியது.

நன்றி: www.projectmadurai.org   

***

டெலிபோனுக்கு முஸ்லீம்கள் கடும் எதிர்ப்பு (Post No.4724)

Date: 10 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-11 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4724

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

எந்த ஒரு புதுத் திட்டம் வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கும்பல் இருக்கும்; அதற்குப் பின்னுள்ள காரணம் என்னவென்றால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்திருக்கும்.

 

சவூதி அரேபியாவில் டெலிபோன் அமைப்பது, ‘சாத்தான் வேலை’ என்று குரல் கொடுத்த முஸ்லீம் மதத் தலைவர்களை அந்த நாட்டு மன்னர் எப்படிச் சமாளித்தார் என்ற சுவையான சம்பவம் ஒரு பழைய ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது.

 

அச்சுக்கூடங்களை கூடன்பர்க் நிறுவியவுடன் கிறிஸ்தவப் பாதிரிகள், இது ‘சாத்தான் வேலை’ என்று பயங்கரக் கூச்சல் போட்டார்கள். ஏனெனில் அதுவரை பைபிள் கையினால் எழுதப்பட்டு விற்கப்பட்டது. அதில் பாதிரிகளுக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்கள் அனுமதி இல்லாமல் பைபிளை யாரும் வாங்கவும் முடியாது; வைத்துக்கொள்ளவும் முடியாது — ஒரு போப்பாண்டவர் பைபிள் எந்த வீட்டிலும் இருக்கக்கூடாது. அது சர்ச்சில் மட்டுமே இருக்கலாம என்று தடையும் விதித்து இருந்தார்!

 

மதுரையில் நான் தினமணியில் வேலை பார்த்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறை கம்யூனிஸ்ட் ( மார்கஸீய மூடர்கள்) யூனியன்கள் வங்கி (BANK) வாசலில், எல்.ஐ.சி (L.I.C) அலுவலக வாசலில் கூச்சல் போடுவார்கள்– கம்யூட்டர்களை எதிர்த்து! ——அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை லண்டனில் உள்ள அவர்களுடைய மகன்கள் (COMPUTER PERSONNEL) இப்போதும் சொல்கிறார்கள்.

சவூதி அரேபிய மன்னர் அரண்மனையில் புதிய டெலிபோன் அமைப்பு வேலைகள் துவங்கியவுடன் செய்தி காட்டுத் தீ போல பரவியது. உடனே முஸ்லீம் மதத் தலைவர்கள் ‘’ஹராம் ஹராம்! அபச்சாரம், அபச்சாரம்’’: சாத்தான்களை அரண்மனக்குள் நுழையவிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்பினர். மன்னரும் யோசித்தார்; இந்த மூடர்களுக்கு எப்படி அறிவு புகட்டுவது என்று ஆலோசித்தார். எல்லா மதத்திலும் சாணக்கியர் போன்ற அறிவாளிகள் உண்டு அல்லவா?

 

நல்ல யோஜனை பிறந்தது! மதத் தலைவர்களை சவூதி மன்னர் அழைத்தார். “அன்பர்களே! நண்பர்களே! தோழர்களே; காம்ரேட்களே!

ஒரு மௌல்வி டெலிபோனின் ஒரு புறத்தில் இருந்து குரானை ஓதட்டும். டெலிபோனின் மறு புறம் மற்றொரு மௌல்வி காது வைத்துக் குரானைக் கேட்கட்டும். அப்படியே பிழை இன்றிக் கேட்டால், புனித குரான் வந்த டெலிபோன் சாத்தானின் வேலையாக இருக்காதல்லவா?” என்றார். மௌல்விகள் பலமாக தலையை ஆட்டினர். அவ்வாறே குரானும் ஓதப்பட்டது; அது மறுபுறமும் ஒலித்தது. எல்லோருக்கும் பரம திருப்தி; பஹு சந்தோஷம்.

 

XXXXX

பேய்கள் இருக்கிறதா?

ஆங்கிலக் கவிஞர், தத்துவ வித்தகர், இலக்கிய விமர்சகர் காலரிட்ஜ் (SAMUEL TAYLOR COLERIDGE).

 

அவரிடம் ஒரு பெண்மணி வந்தார்.

“ஐயா, பேய்கள் இருக்கிறதா? உங்களுக்குப் பேய்கள் மீது நம்பிக்கை உண்டா?”

 

காலரிட்ஜ் செப்பினார்_

“அம்மணி! அதை ஏன் கேட்கிறீர்கள்; எங்கு  பார்த்தாலும், ஏராளமான பேய்களைப் பார்ப்பதால் எப்படி நம்புவது என்றே புரியவில்லை!”

 

xxxxxx

 

ஏசு கிறிஸ்து சக்தி வாய்ந்தவரா?

லூயிஸ் நெப்போலியன் (LOUIS LITTLE NAPOLEON)  சிறுவனாக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இவர் நெப்போலியன் போனபர்ட்டின் வாரிசு. பிரான்ஸில் தேர்தலில் வெற்றி பெற்று முதல் ஜனாதிபதியாக இருந்தார்- அதுவும் மிகவும் இளம் வயதிலேயே!

 

பள்ளிக்கூடடத்தில் பாடம் நடந்தது. வாத்தியார் மிகவும் உருக்கமாக ஏசு கிறிஸ்துவின் துயரங்களை வருணித்தார். மக்களுக்காக உயிர் நீத்த மஹான் அவர் என்றார். அவர் பட்ட துன்பம் கொஞ்சமா, நஞ்சமா என்றார். அவர் ஏசு பிரானின் கஷ்டங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும் சொன்னபோது எல்லா மாணவர் முகத்திலும் சோகமே ததும்பியது; சிலர் கண்களில் கண்ணீரும் உருண்டோடியது.

 

 

லூயிஸ் நெப்போலியனின் முகத்தை ஆசிரியர் கவனித்தார்; அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் இல்லை; அன்றலர்ந்த தாமரைபோல அவர் முகம் பிரஸன்ன வதனமாய் இருந்தது. என்ன லூயிஸ், நான் சொன்னதை கேட்டாயா? உனக்குக் கொஞ்சமும் வருத்தமே இல்லையா?

 

லூயிஸ் சொன்னான்:

அதானே கேட்டேன்! நீங்கள் சொல்லுவது போல ஏசு பிரான் சக்தி வாய்ந்தவராக இருந்தால், அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை?

 

வாத்தியார் ஐயா வாயடைத்துப் போனார். ‘’அம்மாடி! நாய் வாலை நிமிர்த்த முடியாது’’ என்று எண்ணினார்!

 

XXXXX

 

நாத்தீகம் பற்றிக் கதைப்போமா?

பிரபல பிரெஞ்சு எழுத்தாளர், தத்துவ ஞானி அறையில் அறிஞர்கள் குழுமி இருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக விவாதம், நாத்திகத்தை நோக்கித் திரும்பியது.

 

‘’சரி, நாத்திகம் பற்றி இப்போது கதைப்போம்’’ என்றனர்.

 

இதைக் கேட்டுக்கொண்டிருந்த வால்டேர் திடீரெனப் பாய்ந்தார்; எல்லார் காதிலும் கிசுகிசுத்தார்.

 

‘’ஐயா வாயை மூடுங்கள்; என் வேலைக் காரர்கள் எல்லாம் முதலில் வெளியே போகட்டும்ம். அவர்கள் இந்தப் பேச்சைக் கேட்டால், உங்களை இங்கே அனுமதித்ததற்காக இன்றிரவு நான் தூங்கும் போது என் குரல்வளையை நெறித்து விடுவார்கள்! — என்று.

 

 

(பிரான்ஸில் அவ்வளவு மத நம்பிக்கை இருந்த காலம் அது!)

 

(இது ஆங்கிலத்திலும் பதிவு இடப்பட்டுள்ளது)

 

-சுபம்–

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை! (Post No.4719)

DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-49 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4719

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இது தான் இந்தியா!

 

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!

ச.நாகராஜன்

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

1

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்பதும் ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெற்று இங்கிலாந்திற்குத் திரும்புவதும் வழக்கம்.

 

அந்தக் காலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது!

சம்பவத்தைப் பார்ப்போம்.

 

2

(பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில்) இந்திய அரசின் உயர் அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ரைட்டர்ஸ் பில்டிங்(Writers’ Building) சென்று தனது பணி ஒய்வு சம்பந்தமான பேப்பர்களைத் தருவதற்காக சாரட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 

பௌ பஜார் (கல்கத்தாவில் உள்ளது) ஒரே டிராபிக். வண்டி நின்றது.

என்ன செய்வது? காத்திருக்கத் தான் வேண்டும், வண்டியை டிரைவர் நகர்த்தும் வரை.

 

சிகார் ஒன்றைப் பற்ற வைத்தார் அவர்.

 

திடீரென்று கோச்சின் வலது பக்கக் கதவு திறந்தது. ஜடாமுடியுடன் கூடிய ஒருவர் எட்டிப் பார்த்தார்.

சாதாரண ஆளாக இருந்திருந்தால் பயந்து திகைத்துப் போயிருப்பார்.

 

ஆனால் அவரோ போலீஸ் ஆபீஸர் ஆயிற்றே! இதற்கெல்லாம் பயப்படுவாரா என்ன? 25 ஆண்டுகளில் இது போல எத்தனை

பேரைப் பார்த்திருப்பார்!

 

“ஹுசூர், இவ்வளவு காலம் அரிய சேவை செய்த பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது கஷ்டமான விஷயமாகத் தான் இருக்கும்! ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்று தானே! வயது வரம்பும் எல்லோருக்கும் ஒன்று தானே”

சர்வ சகஜமாகப் பேச ஆரம்பித்த அந்த ஜடாமுடி சாது இப்படிக் கூறினார் ஆபீஸரிடம்.

 

அவர் அயர்ந்து போனார்.

 

அந்த சாதுவை நோக்கினார்: “ ஓ, சாது ஜி, நான் ரிடயர் ஆகப் போகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

அவர் பதில் கூறினார்: “இப்படிப்பட்ட  விஷயங்கள் ஜன சந்தடி உள்ள இந்த இடத்தில் விவரிக்கத் தக்கதல்ல! உங்களை இந்தக் கூட்டத்தில் கண்டுபிடித்து விட்டேன்.அது போதும். சாதுக்களே பெறும் அரிய சித்தியான ஞானத்தின் மூலம் நீங்கள் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் எனக்குத் தெரியும். என்ன பிரமிக்கிறீர்களா? பிரமிக்க வேண்டாம்! நீங்கள் உங்கள் கீழே பணி புரிந்த பலருக்கும் நல்லதைச் செய்திருக்கிறீர்கள். அத்துடன் மட்டுமின்றி கத்தியுடன் கூடிய காளியும் சிவனும் குடி கொண்ட பல தலங்களுக்கு நல்லதைச் செய்துள்ளீர்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே இந்த ராஜ்யத்தில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். அந்தக் கத்திகள் வெறும் இரும்பு அல்ல; உண்மையான உயர் ரக  எஃகால் செய்யப்பட்டவை. இன்னும் நீங்கள் செய்துள்ள பல காரியங்களும் புண்ய கர்மங்கள்! ஆகவே வெகு விரைவில் நீங்கள் அளப்பரிய செல்வத்தை அடையப் போகிறீர்கள்! அதை புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். இதோ இந்த ருத்ராக்ஷ மாலையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரிகி ராமனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இதோ வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டன. சாஹப், நான் போகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது சில சமயம் என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்”

 

சாது போய் விட்டார். வண்டிகள் நகரத் தொடங்கின.

தன் வலது கரத்தில் இருந்த ஏழு முகமுள்ள ருத்ராக்ஷங்கள் கொண்ட மாலையை போலீஸ் அதிகாரி வியப்புடன் பார்த்தார்.அந்த வகை ருத்ராக்ஷம் அடர்ந்த ஹிமாலய  மலையின் உட்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை ருத்ராக்ஷங்கள்!

 

“என்ன ஆச்சரியம்” என்று கூவினார் போலீஸ் அதிகாரி.

விஷயத்தை அத்துடன் அவர் மறந்து விட்டார்.

 

பணி ஓய்வு பெற்ற அவர் இங்கிலாந்தின் தென் பக்கம் உள்ள ஒரு ஊரில் குடியேறி விட்டார்.

 

பிரச்சினை ஏதும் இல்லாத வசதியான வாழ்க்கை.

ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் நிர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். சிகார் பிடிக்கும் வேளையில் அவருக்கு ஒரு தந்தி வந்தது.

கையெழுத்திட்டு அதை வாங்கிய அவர் தந்தியைப் பிரித்தார்.

அவரது ஒரே சகோதரன் இறந்து விட்டார். அவரோ கல்யாணமாகாத பிரம்மச்சாரி.

 

அவரது திரண்ட செல்வம் எல்லாம் சகோதரரான அவருக்கு வந்து சேர்ந்தது.

 

அமைதியாக அவர் உட்கார்ந்து விட்டார்.

அப்போது ஒரே ஒரு க்ஷண நேரத்தில் அவர் முன் ரிக்கி ராமன் தோன்றினார். பின்பு  மறைந்து விட்டார்.

உட்கார்ந்திருந்த அதிகாரி பரபரப்பாக எழுந்து வீட்டினுள் ஓடினார்.

அங்கு ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த ஏழு முக ருத்ராக்ஷ மாலையைப் பார்த்தார்.

 

மிகுந்த சோகம் ததும்பிய குரலில்,” ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகி விட்டதே! சாது ஜீ! அதற்கு இப்படி ஒரு விலையா?” என்று கூவினார்!

 

***

1935ஆம் ஆண்டு வெளியான TRUTH ஆங்கில வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. மீண்டும் 3-11-2000 இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : ட்ரூத்

ஆங்கிலத்திலிருந்து தமிழ் வடிவம்: ச.நாகராஜன்

 

வள்ளலாரின் தமிழ்! (Post No.4711)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-51 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4711

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அருட்பா இரகசியம்

வள்ளலாரின் தமிழ்!

ச.நாகராஜன்

 

 

1

 

சமீப கால சரித்திரம் கண்ட ஒரு மாபெரும் மகான் வடலூர் வள்ளலார்.

தமிழை எனிய இனிய சொற்களால் எளிமைப் படுத்தி பழகும் தமிழில் ஞான தத்துவங்களையும் சாகாக் கலையையும், அனைவரும் உளமுருகத் துதிக்க வைக்கும் தோத்திரப் பாடல்களையும் அளித்து ஆச்சரியப்படுத்திய தமிழ்ச் சித்தர் அவர்!

முருகன் அவரை ஆட்கொண்டதால் அவன் அளித்த தமிழைக் கொண்ட தமிழாகரன் அவர்!

 

(உண்மையில் தமிழாகரன் என்ற பெயரை உடைய ஞானசம்பந்தரைத் தன் ஞான குருவாகக் கொண்டவர் ஆயிற்றே. அதனால் இவரும் தமிழாகரனைக் குருவாகக் கொண்ட தமிழாகரன் ஆகிவிட்டாரோ!)

 

அதாவது தமிழை உடலாகக் கொண்டவர்; உயிராகக் கொண்டவர்.

வள்ளலார்.

 

 

2

வள்ளலாரின் பாடல்களைத் தத்துவத்திற்காகவும், இனிமைக்காகவும், ஓசை நயத்திற்காகவும், வெவ்வெறு அணிகளுக்காகவும், பல உவமைகளுக்காகவும், பல ரகசியார்த்தங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும், வாழ்முறை நெறிகளுக்காகவும், தமிழுக்காகவும் ஏன் சாகாக் கலையை அறியவும் பலமுறை படிக்கலாம்; படிக்க வேண்டும்.

அவரது வார்த்தை விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை.

அதற்காகவும் ஒரு முறை படிக்கலாம்.

உதாரணத்திற்குச் சில பாடல்கள் இங்கே பார்க்கலாம்.

 

வெம்பு முயிருக் கோருறவாய்

வேளை நமனும் வருவானேல்

தம்பி தமையன் துணையாமோ

தனையர் மனைவி வருவாரோ

உம்பர் பரவுந் திருத்தணிகை

உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்

தும்பக் குடலை யெடுக்காமல்

துக்க வுடலை எடுத்தேனே!

 

தொல்லைக் குடும்பத் துய்ரதனில்

தொலைத்தே னந்தோ காலமெலாம்

அல்ல லகற்றிப் பெரியோரை

யடுத்து மறியேன் அரும்பாவி

செல்வத் தணிகைத் திருமலை வாழ்

தேவா வுன்றன் சந்நிதிக்கு

வில்வக் குடலை யெடுக்காமல்

வீணுக் குடலை யெடுத்தேனே

 

அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப் படுவ தின்றிசிவ

கனியைச் சேரக் கருதுகிலேன்

திவலை யொழிக்குந் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை யெடுக்காமல்

கொழுத்த வுடலை யெடுத்தேனே.

 

 

பாடலின் பொருள் நயம், ஓசை நயம், உருக வைக்கும் பக்தி நயம் பற்றி விளக்க உரையே வேண்டாம்,

வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை – வீணுக் குடலை எடுத்தேனே என்பதில் உள்ள நயம் அவர் தம் தமிழைக் காட்டும் இடம். தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே; குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே என்பதில் நாம் காணுவது வள்ளலாரை அல்ல; நம்மை நாமே காணும் இடமாக அமைகிறது.

 

3

இனி அவரது வார்த்தை விளையாட்டுக்கு இரு பாடல்களைப் பார்ப்போம்!

பகுதி தகுதி விகுதியெனும் பாட்டில்

இகலி லிடையே யிரட்டித் – தகவின்

அருச்சித் தான் முன்னா மதுகடையாங் கண்டீர்

திருச்சிற் சபையானைத் தேர்ந்து.

 

பாடலில் என்ன புரிகிறது? – திருச்சிற்சபையான் மட்டும் புரிகிறது.

மற்ற சீர்கள் சொல்லும் சிறப்பான செய்தி என்ன?

உதவிக்கு நாட வேண்டியவர் கிருபானந்தவாரியார் தான்!

அவரது உரை விளக்கம் படித்தால் உளமும் விளக்கம் அடைகிறது.

 

பகுதி, தகுதி, விகுதி

இந்த மூன்று வார்த்தைகளில் இடையெழுத்து – அதாவது நடுவில் வரும் எழுத்து எது? ‘கு’ ஆகும்.

இதை இரட்டியுங்கள் என்கிறார் அருளாளர்.

இரட்டித்தால் – அதாவது இருமுறை எழுதினால் வருவது

குகு, குகு, குகு!

அதாவது ஆறுமுறை ‘கு’ வருகிறது. அதாவது அறுகு (ஆறுமுறை ‘கு’வை அறுகு என்று தானே கூற வேண்டும். அதாவது அறுகம்புல்!)

 

முதலெழுத்துக்களைக் கூட்டினால் வருவது ப, த, வி.

பத முத்தி ஆகும்.

கடை எழுத்துக்களைக் கூட்டினால் தி, தி, தி. அதாவது மூன்று முறை ‘தி’ வருகிறது. முத்தி.

திருச்சிற்சபையானை அறுகம்புல்லால் அர்ச்சித்தால் பத முத்தியும் ஐக்கிய முத்தியும் சித்திக்கும் என்ற அரிய இரகசியத்தை இந்த புதிர்ப் பாடலில் அருளுகிறார் வள்ளலார்.

 

 

4

இன்னொரு பாடல்:

தாதாதா தாதாதா தாக் குறைக்கென் செய்குதும்யாந்

தாதாதா வென்றுலகிற் றானலைந்தோம் – போதாதா

நந்தா மணியே நமச்சிவா யபொருளே

யெந்தா யெனப் புகழவே.

 

என்ன பொருள், புரியவில்லையே!

கிருபானந்தவாரியார் சுவாமிகளை நாடுகிறோம்; பொருள் விளங்குகிறது.

ஏழு முறை தா வருகிறது; எழு முறை தா! அதாவது எழுதா!

எழுதாக் குறைக்கு என் செய்குதும்? தலையில் எழுதாக் குறைக்கு என்ன செய்வது?

 

தாதா – தாதா என்றால் தெரியுமே; ஆம் வள்ளல்!

மூன்று தா வருகிறது இரண்டாம் அடியில்!

தாதா, தா! வள்ளலே தா என்று அலைந்தோம். இப்படி அலைந்தது போதாதா?

இனியேனும் நந்தா மணியே, நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழுங்கள்; வழிபடுங்கள்; வாழ்க்கையைச் சிறக்க அமையுங்கள்!

 

5

நமக்காகக் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பாடல்களை அருளியுள்ளார் வள்ளலார் பிரான் – அரிய இரகசியங்களை அடக்கி, இனிய தமிழில்!

 

கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்; அருட்பாவை ஓதுவோம்!.

என்னென்ன பயன்களைப் பெற முடியும் அருட்பாவைப் படித்தால்.

வாரியார் சுவாமிகளின் திருவருட்பா தொகுதி (1) -யைப் படித்தால் முதல் பக்கத்தில் முதல் பாடலிலேயே பதில் வருகிறது!

 

 

பத்தி வரும் பழவினைகள் பற்ந்தோடும்

மூல மலப் பகுதி மாயும்

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும்

ஆனந்தம் பொங்குஞ் சாந்த

முத்தி வரும் அழியாநன் மோக்கமுறு

முதுகடல்சூ ழுலகி லெல்லாச்

சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்

அருட்பாவைச் சிந்திப்போர்க்கே.

 

அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை!

***

 

இந்து மத உரையாடல்கள்- சம்வாதங்களின் சுருக்கம் (POST.4707)

Krishna in Rangoli, picture posted by A K R Srinivasan

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-53 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4707

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பிப்ரவரி 2018 இதழில் வெளியான எந்தக் கேள்விக்கும் இதோ விடை என்ற கட்டுரையில் சம்வாதங்களைப் பற்றிப் படித்தோம். சில சம்வாதங்களைப் பற்றிய கட்டுரை இது.

 

 

சில சம்வாதங்களின் சுருக்கம்

ச.நாகராஜன்

Garuda Vahana

1

சம்வாதம் என்றால் என்ன என்பதை அறிய மாதிரிக்காக சில சம்வாதங்களின் சுருக்கம் கீழே தரப்படுகிறது. உரிய நூல்களில் மூல ஸ்லோகங்களைப் படித்தால் அபூர்வ உண்மைகள் தெரிய வரும். படிக்கும் போது நிதானத்துடனும் பொறுமையுடனும் சற்று ஆழ்ந்த விசாரத்தின் அடிப்படையில் படித்தால் நிறைய பலன் கிடைக்கும்.

 

 

பாகவதத்தில் வரும் ஒரு சம்வாதத்தின் சுருக்கம்:

நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கிடையே நடந்த அற்புதமான உரையாடல் இது.

 

 

1) ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த, அதற்கு மேம்பட்ட ஒன்றில்லாத நன்மை எது?

 

மிகச் சிறந்த மேம்பட்ட நன்மை ஒவ்வொருவருக்கும் இது தான்:

எப்போதும் இறைவனின் மீது தூய அன்பைக் கொண்டிருப்பது தான்.

 

 

எப்போதும் தொடர்ந்து இறைவனின் புகழைக் கேட்பது (பிரவசனம், கதா உபந்யாசம் , அறவோர் உரை கேட்பது), இறைவனைத் தொடர்ந்து ஞாபகத்தில் இருத்தி வைத்துக் கொள்வது. அவனைத் தொழுவது ஆகியவையே இந்த தூய அன்பிற்கான வழிகள்!

 

 

2) சாஸ்திரங்களின் சாரம் என்ன?

தனது ஒவ்வொரு செயலாலும் கிருஷ்ண பகவானை மகிழச் செய்வது என்பது தான் அனைத்து சாஸ்திரங்களின் சாரம்.

 

 

3) ஏன் பகவான், தானே ஸ்ரீ கிருஷ்ணராக பூவுலகில் அவதரித்தார்?

 

உயிர் வாழ்கின்ற அனைவருக்கும் தன் உண்மையான ஸ்வரூபத்தைக் காட்டியும். லீலைகளை நிகழ்த்தியும் அவர்களைக் கவர்ந்து தன் பக்கம் இழுத்து அவர்கள் அனைவரையும் தனது சொந்த இருப்பிடமான கோலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தான் அவரே நேரில் வந்தார்.

 

 

4) கிருஷ்ண லீலைகள் யாவை?

தேவகியின் மகனாகப் பிறந்தார். நந்தனின் வீட்டில் வளர்ந்தார். பூதனா, கம்ஸன் உள்ளிட்ட பல தீயோரை அழித்தார். நல்லவர்களான பாண்டவருக்கு சகாயமாக அவர்கள் பக்கம் உறுதுணையாக இருந்தார்.மஹாபாரதப் போரில் அறத்தை நிலைநிறுத்தி துஷ்டர்களை அழித்து அவர்களுக்கு உதவினார். இவையும் இன்னும் பலவும் கிருஷ்ணனின் லீலைகள்!

Krishna Bhajan (post by Cuddalore Gopi Bhagavathar)

 

5) இறைவனின்ப் பத்து அவதாரங்களின் நோக்கம் என்ன?

  1. வேதங்களைக் காக்க மச்சாவதாரம்
  2. மந்தார மலையை நிலை நிறுத்த கூர்மாவதாரம்
  3. உலகைத் தூக்கி நிறுத்த வராஹ அவதாரம்
  4. ஹிரண்யகசிபுவை வதம் செய்ய நரசிங்க அவதாரம்
  5. பலி மஹராஜனுக்கு அருள் புரிய வாமன அவதாரம்
  6. தீய மன்னர்களை அழிக்க பரசுராம அவதாரம்
  7. இராவணனை வதம் செய்ய ராமாவதாரம்
  8. அசுரர்களை அழிக்க பலராம அவதாரம்
  9. மிருக பலியைத் தடுக்க புத்தாவதாரம்
  10. கொள்ளையடிப்போரை ஒழிக்க கல்கி அவதாரம்

இவையே அவதார நோக்கங்கள்.

 

 

 

6) ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு தர்மம் யாரைத் தஞ்சம் புகுந்தது?

தர்மம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் புகுந்து தஞ்சம் அடைந்தது.

 

 

குறிப்பு: – ரிஷிகளின் பெரும்பாலான உரையாடல்கள் நைமிசாரண்யத்தில் ஏன் இடம் பெற்றன. நைமிசாரண்யத்தையே தவம் புரியத் தக்க இடமாக பல ரிஷிகள் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை அறிய இந்தக் கட்டுரையாசிரியர் டிசம்பர் 2012 ஞான ஆலயம் இதழில் எழுதியுள்ள ‘கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள்’ என்ற கட்டுரையைப் படிக்கவும். (ஞான ஆலயம் இதழ்களை பைண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.)

 

2

யோக வாசிஷ்டம் ராமருக்கும் வசிஷ்டருக்கும் இடையே நடந்த அற்புதமான உரையாடல். உலகின் வெகு சில நூல்கள் மட்டுமே இதற்கு இணையாக இருக்க முடியும்.

32000 ஸ்லோகங்கள்! உலகின் தற்கால அறிஞர்கள் 158 பேர்கள் கூறிய அனைத்து அபூர்வ விஷயங்களையும் வெகு காலத்திற்கு முன்பேயே இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நூலில் வரும் அற்புத விஷயங்களில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ சில ஸ்லோகங்களின் கருத்துக்கள்.

 

நீண்ட காலம் வியாதியின்றி ஜீவிப்பதற்கான வழியைச் சுட்டிக் காட்டும் ஸ்லோகங்கள் இவை:-

 

உடலைப் பாதிக்கும் வியாதிகள், மற்றவர்கள் இடும் சாபங்கள், மற்றவர்களின் தீய திருஷ்டிகள் ஆகிய அனைத்தும் தாமரை மலர் எப்படி  ஒரு பாறாங்கல்லை மோதி உடைக்க முடியாதோ அது போல மனத்தைப் பக்குவப்படுத்திய ஒருவனுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க முடியாது.

 

 

நான் விரும்பும் அல்லது விரும்பாத வஸ்துக்களினால் ஏற்படும் கவலைகளைப் பற்றிய விசாரத்தில் ஈடுபட்டு அவற்றை விடுத்து என்னை ஆத்மாவிலேயே நிலை நிறுத்துகிறேன். அதனால் நான நீண்ட காலம் வியாதி இல்லாமல் ஜீவிக்கிறேன்.

 

“இது இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த அழகிய வஸ்து வேண்டும்” என்பன போன்ற சிந்தனைகள் எனக்கு இல்லை. அதனால் தான் நான் நீண்ட காலம் வியாதி இல்லாமல் ஜீவிக்கிறேன்.

 

 

அலை பாயாமல் என் மனம் ஒருமுனைப்பட்டு இருக்கிறது. துன்பம் இல்லாமல் ஆன்மாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

Rama Pattabishekam, Kalakshetra, Chennai

 

இன்று எனக்கு என்ன நடந்தது? நாளை என்ன நடக்கப் போகிறது? இப்படிப்பட்ட கவலைகள் எனக்கு இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

முதுமை பற்றியும் சாவு பற்றியும் எனக்கு பயமில்லை. ஒரு பெரிய சாம்ராஜ்யமே கிடைத்தாலும் எனக்கு சந்தோஷம் இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

இவர் எனக்கு உறவினர். அவன் எனக்கு அந்நியன். இது என்னுடையது. அது அவனுடையது என்று இப்படி நான் உணர்வதில்லை.ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

 

எடுப்பது, வைப்பது, எழுந்திருப்பது, மூச்சு விடுவது, தூங்குவது  ஆகியவற்றைச் செய்யும் இந்த உடல் என்று என்னை நான் உணர்வதில்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

அலைபாயாத மனோ சக்தியுடன் அழகிய அன்பான களங்கமற்ற பார்வையுடன் எல்லாவற்றையும் நேர்பட நான் காண்கிறேன்.ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

மிகவும் சக்தி வாய்ந்தவனாக நான் இருந்தாலும் கூட வலிமையை எங்கும் பிரயோகிப்பதில்லை. எந்த மனச்சோர்வும் எனக்கு இல்லை. ஏழையாக இருந்தாலும் எனக்கு ஆசை இல்லை.

 

 

அழிகின்ற, உடைந்த, தளர்ந்திருக்கின்ற, சக்தியற்ற, குழம்பியிருக்கின்ற, நசுக்கப்பட்டிருக்கின்ற எதையும் நான் புதியதாகவே பார்க்கிறேன். ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

எனக்கு ஒத்துப்போகின்றவையுடன் எனக்கு சந்தோஷம்.  ஒரு மனிதன் கஷ்டப்படும்போது நான் வருத்தமுறுகிறேன். அனைவருக்கும் நான் நண்பன். ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

 

துரதிர்ஷ்டம் பீடித்திருக்கும் காலத்தில் நான் தைரியத்துடனும் அயராமலும் இருக்கிறேன். அதிர்ஷ்டம் கூடியிருக்கும் வளமான காலத்திலோ எல்லோருக்கும் நான் நண்பன். நான் இருப்பதும் இல்லை; இல்லாமல் போவதும் இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

மேலே கண்ட ஸ்லோகங்களுக்குப் பொருந்துகின்ற வகையில் யாராவது வாழ முடியுமா?

முடியும்.

 

நமது காலத்திலேயே இதற்கு இலக்கணமாகவும் இதற்கு மேலும் ஜீவன்முக்தராக வாழ்ந்ததற்கு இலக்கணமாகவும் திகழ்ந்தவர் ரமண மஹரிஷி!

 

Ramana Maharishi

 

3

ச்ரேயஸ் எனப்படும் உன்னதமான  மேலாம் நிலையை அடைவது எப்படி என்று நாரத மஹரிஷி காலவரைக் கேட்க அவர் ச்ரேயஸுக்கான காரணங்களை விவரிக்கிறார்.

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் வரும் இந்த சம்வாதத்தின்

சுருக்கம்:

 

 

பாவ கர்மங்களை விலக்குவது, எப்போதும் புண்ய கர்மங்களைச் செய்து கொண்டிருப்பது, நல்லோர்களுடைய சகவாசம் ஆகியவை ச்ரேயஸ் அடைவதற்கான காரணம்.

 

எல்லா பிராணிகளிடத்திலும் மிருதுவாக இருத்தல், உலக விவகாரங்களில் நேர்மையாக இருத்தல், இனிமையான சொல் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி ச்ரேயஸை அடைய வைக்கும்.

 

தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பதும், வேலைக்காரர்களைக் கை விடாமல் இருப்பதும் ச்ரேயஸுக்கான காரணங்கள்.

 

 

 

சத்தியத்தைச் சொல்வது ச்ரேயஸ்.

 

அகங்காரத்தைத்  தள்ளுவதும், அஜாக்கிரதையை விலக்குவதும்,  சந்தோஷமாக இருப்பதும், ஒரே விதமாக நடப்பதும் ச்ரேயஸுக்கான காரணங்கள்.

 

 

இரவில் சஞ்சரிப்பது கூடாது.பகலில் தூங்கக் கூடாது.

 

சோம்பலையும், புறங் கூறுவதையும்,மதத்தையும் விடுதல் வேண்டும். உணவு உட்கொள்வதில் மிதமாக இருத்தல் வேண்டும்.

 

பிறரை தூஷித்து நமக்கு மேன்மையைத் தேடிக் கொள்ளக் கூடாது. தனது சொந்த குணங்களினாலேயே விசேஷமான மேன்மையைத் தேட வேண்டும்.

 

புத்திமானானாவன் தெரிந்தவன் தான் என்றாலும் ஒருவனுக்கு அவன் கேளாமல் எதையும் சொல்லக் கூடாது. நியாய விரோதமாய்க் கேட்கிறவனுக்கும் சொல்லக் கூடாது.

 

 

கர்மத்தை தினமும் செய்பவர்கள்,நல்லவர்கள்,பிறருக்குக் கொடுப்பவர்கள், தங்களது தர்மங்களில் பற்றுள்ளவர்கள் ஆகியோரது சேர்க்கையை விரும்ப வேண்டும்.

 

எந்த ராஜ்யத்தில் துஷ்டர்களுக்கு தண்டனையும் நல்லவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறதோ அங்கு வசிக்க வேண்டும்.

இவை அனைத்தும் ச்ரேயஸ் அடைவதற்கான காரணங்களாகும்.

 

 

தேவரிஷியான நாரதருக்கும் காலவருக்கும் இடையே நடந்த இந்த அர்த்தமுள்ள உரையாடல் எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது!

***

Draupadi, Picture by Lalgudi Veda

 

4

சத்யபாமாவும் திரௌபதியும் நடத்திய சம்வாதம் பற்றி இந்தக் கட்டுரையாசிரியர் 2007 ஜூலை ஞான ஆலயம் இதழில் ‘பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்’ என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். ஆகவே அதைப் படித்தால் இந்த சம்வாதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

 

ஏராளமான சம்வாதங்களைத் தனியே எடுத்துப் படித்தால் யாருமே சுலபத்தில் அறிய முடியாத பல இரகசிய விஷயங்களை நாம் அறியலாம்!

*****

 

 

காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்! (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-44 am

 

Written by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

மநு நீதி நூல்- Part 12

 

SLOKA 175, SECOND CHAPTER CONTINUED………………….

2-58. வலது கையில் ஜலம் எடுத்து ஆசமனம் செய்வதில் 4 வகைகள் உண்டு. உள்ளங்கையில் பிரம்ம தீர்த்தம், காய தீர்த்தம், தேவ தீர்த்தம், பித்ரு தீர்த்தம் விடுவதற்காக 4 பகுதிகள் இருக்கின்றன. பிராமணர் ஆசமனத்துக்கு, முதல் மூன்றையே பயன்படுத்த வேண்டும் (175)

 

2-59. பெரு விரலின் நடுக்கணுவால் விடுவது பிரம்ம தீர்த்தம்; சுண்டு விரலின் அடிக்கணுவால் விடுவது காய தீர்த்தம்; விரல்களின் நுனிப்பகுதியால் விடுதல் தேவ தீர்த்தம்; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையிலுள்ள பகுதியால் விடுதல் பித்ரு தீர்த்தம்.

 

2-60. ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மா ர்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைப்பதாகும்.

 

2-61. தர்ம விதிகளை அறிந்தவன், சூடு இல்லாத நுரை இல்லாத தெளிந்த நீரால் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பார்த்து, நின்றவாறு ஆசமனம் செய்வது சிறந்தது.

 

2-62. ஆசமன ஜலத்தை உட்கொள்கையில், பிராமணன் மார்பு வரையிலும் க்ஷத்ரியன் கழுத்து வரையிலும், வைஸ்யன் உள்நாக்கு வரையிலும், ஏனையோர் (சூத்திரர்) நாவிலும் உதட்டிலும் ஜலம் படும்படியாக்ச் செய்யவேண்டும்

 

2-63. பூணூல் அல்லது மேலாடை இடது தோளில் இருந்து புறப்பட்டு கால் வரை செல்ல வேண்டும். இது உபவீதம் எனப்படும். இடது தோளில் மாற்றிப் போட்டால் அது பிராசீனா விதி எனப்படும். மாலையாகப் போடுதல் நிவிதம் என்றும் சொல்லப்படும். (180)

2-64. இவ்வாறு மூன்று வர்ணத்தார் அணியும் பூணூல், தோல், தண்டம், மேலாடை ஆகியன சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ பழையனவற்றை நீரில் போட்டுவிட்டு, புதியது தரிக்க வெண்டும்.

Brahmin boys; picture by P Swaminathan

 

2-65. இந்த மூன்று வருணத்தாரும் முறையே 16, 22, 24 வயதில் முடியிறக்க வேண்டும்

2-66. இத்தகைய சடங்குகள் ஏல்லாம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் மந்திரம் இல்லாமல் வெறும் சடங்காக செய்தால் போதும்.

 

2-67. பெண்களுக்கு கல்யாணம்தான் உபநயனம் ; அதாவது பூணூல் போடுவது போல; கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுல வாசம்; இல்லறம் நடத்துவதே சமிதாதானம் ஆகும்.

 

கற்றுணர்ந்து செயல்படல்

 

2-68. இவ்வாறு உபநயனம் முதலியன மூலம் இரண்டாவது பிறப்பு எடுத்து புனித மார்கத்தில் செல்லுதலைக் கூறினேன். இனி அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுவேன். (185)

 

2-69. குரு தனது சீடனுக்கும், தந்தை தனது மகனுக்கும் தூய்மையாக இருத்தல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தீ வளர்த்து ஹோமம் செய்தல் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலை ஆகிய சந்தி நேரங்களில் செய்யவேண்டிய வழிபாடுகளையும் சொல்லித் தர வேண்டும்.

 

2-70. வேதம் ஓதும் மாணவன் முதலில் ஆசமனம் செய்துவிட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புலன் அடக்கத்துடன் வேதம் ஓத வேண்டும்

 

2-71. வேதம் கற்பதற்கு முன்னரும் பின்னரும் குரு வணக்கம் செய்தலும் கைகட்டிக் கொண்டு வேதம் படித்தலும் பிரம்மாஞ்சலி எனப்படும்

 

2-72.குருவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வலது கையால் அவரது வலது பாதத்தையும் இடது கையால் இடப் பாதத்தையும் தொட்டு வணங்க வேண்டும் (190)

 

2-73. உபதேசிக்கும் குருவும் சோம்பலில்லாமல் மாணவர்களுக்கு ‘’துவங்குக’’ என்றும் ‘’நிறுத்துக’’ என்றும் கட்டளை இட வேண்டும்

 

பிரணவ மந்திரத்தின் பெருமை

2-74. வேதம் கற்கும்போது துவக்கத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சொல்லித் துவங்க வேண்டும்; இதே போல முடிக்கையிலும் ஓம் சொல்ல வேண்டும்; துவங்கும் போது ஓம் சொல்லாவிடில் வேதம் மனதில் பதியாது; இறுதியில் ஓம் சொல்லி முடிக்காவிடில் கற்ற வேதம் நினைவிற் நிற்காது.

 

2-75..பிரணவ (ஓம்) மந்திரத்தை உச்சரிக்கும் முன் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறை பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தல் வேண்டும்; பின்னரே பாடம் கற்கலாம்.

 

2-76. பிரம்மா, மூன்று வேத சாரங்களான அகார, உகார, மகார, சப்தங்களினால் பிரணவத்தை உண்டாக்கினார். அவரே பூர், புவர், சுவர் ஆகிய புனித மந்திரங்களையும் உண்டாக்கினார்.

 

2-77. மேலும் ‘’தத்’’ என்ற துவக்கத்தை உடைய மூன்று அடி காயத்ரியையும் மூன்று வேதங்களில் இருந்தே உண்டாக்கினார். (195)

2-78. இந்த பிரணவத்தையும் ‘’பூர் புவர் சுவர்’’ மற்றும் காயத்ரியையும் சந்தியா காலங்களில் ஓதும் பிராமணன் மூன்று வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

 

2-79. இந்த காயத்ரீ மந்திரத்தை ஊருக்கு வெளியே காடு, மலை, நதி தீரத்தில் தினமும் ஆயிரம் முறை ஜபிப்பவன் ஒரு மாதம் ஜபித்தால் மஹா பாதகத்தில் இருந்து விடுபடுவான். பாம்பு அதன் தோலில் இருந்து எப்படி விடுபடுகிறதோ அது போல பாவங்கள் நீங்கும்.

 

2-80. இந்த ஜபம்- உபநயனம் ஆகிய இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் நிந்திக்கப்படுவார்கள்

 

 

2-81. காயத்ரீயை மோட்சத்துக்கான வழியாகச் சொல்லுகிறார்கள்.

 

2-82. எவன் மூன்று வருடத்துக்குச் சோம்பல் இல்லாமல், தினமும் இடைவிடாது காயத்ரீயை ஜபிக்கிறானோ, அவன் வாயுவைப் போல ஆகாயத்தில் , தன் இஷ்டப்படி உருவம் எடுத்து  சஞ்சரிக்கிறான். இறைவனுடன் ஒன்றிவிடுகிறான் (200)

2-83. பிரணவம் பரப்பிரம்மம் ஆகவும், பிராணாயாமம், சாந்திராயனம் முதலியவற்றைக் காட்டிலும் மேலானதாகவும் சொல்லப்படுகிறது; காயத்ரீயைச் ஜபிப் பவனுக்குப் பாபம் இல்லை. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை. அவன் சத்தியத்தையே சொல்லுவதால் இதைச் செய்பவனுக்கு மௌன விரதம் தேவை இல்லை.

 

2-84. வேதத்தில் உள்ள யாக யக்ஞாதி கருமங்கள் அழியக்கூடிய பலத்தையே தரும்; ஆனால் பிரணவம், பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டி மோட்சத்தைக் கொடுக்கிறபடியால், அதற்கு அழிவற்றது (அக்ஷரம் = அழியாதது)  என்றும் பிரம்மனால் (by Bahma) சொல்லப்பட்டிருக்கிறது

 

2-85. ஒரு பிராமணன் ‘’ஓம்’’ உடன் காயத்ரீயைச் சொன்னால் இந்த ஜப யக்ஞமாவது அமாவாசை, பௌர்ணமியில் செய்யும் யாகங்களைவிட பத்து படங்கு பலன் தரக்கூடியது. அதை யார் காதிலும் விழாமல் ரஹசியமாகச்  செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். மனதில் அதன் பொருளை அறிந்து சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர்.(203)

 

2-86. பஞ்ச மஹா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் ஒன்றைத்தவிர மற்ற நான்கும் காயத்ரீயை விட மதிப்புக் குறைந்தவையே. காயத்ரீயின் மஹிமையில் பதினாறில் ஒரு பங்கு கூட அவைகளுக்கு இல்லை.

 

2-87. காயத்ரீ ஜபத்தால் பிராஹ்மணன் நிச்சயமாக மோட்சத்தை அடைகிறான். அவன் வேறு எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் வரிகள்); அவன் எல்லோருடைய நண்பன் ஆகிறான்.

 

2-88. தேரை ஓட்டும் சாரதி குதிரைகளை கடிவாளம் போட்டு அடக்குவது போல, அறிவுடையார்,  மனம் என்னும் குதிரைகளை அடக்க வேண்டும். புலன் இன்பங்களை நாடி ஓடும் மனது, கட்டுக்கடங்காத குதிரைகளுக்கு உவமை.(206)

 

எனது கருத்து:-

 

பூணூல், தண்டம், மேலாடை, குருகுல வாசம், பிக்ஷை  எடுத்தல் முதலியவற்றை மூன்று வருணத்தாருக்கும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இப்போது பிராமணர் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்ற அரசியல் பிரசாரத்தால் மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். ஆளும் அரசியல்வாதிகள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள் முதலியோரும் பூணூல் அணிந்து வேதம் கற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் இதை நடத்திக் கொடுக்கும் பணிக்கு பிராஹ்மணர் தலைமை வகித்தனர்.

 

மேலும் பெண்களுக்கும் மந்திரம் இல்லாமல் எல்லாச் சடங்குகளையும் செய்க என்று மநு கூறுவதிலிருந்து அவர் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. ஏனெனில் கதைகளில் கூட மூன்று வருணத்தார் இவற்றைச் செய்ததாகப் படிப்பதில்லை. ஆகவே அவர் ஸரஸ்வதி நதி பாய்ந்த காலத்தில் இதை எழுதினார் என்பது தெளிவாகிறது. பிற்காலத்தில் இடைச் செருகல்கள், குறிப்பாக சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தற்காலத்தில் வேதம் படிப்பதையும், காயத்ரீ சொல்லுவதையும் எல்லோருக்கும் பொதுவாக்கினார் சத்ய சாய் பாபா போன்ற மஹான்கள். இது ஜனகர் காலத்திலும் அவருக்கு முந்தியும் இருந்ததை நாம் உபநிஷத்து மூலம் அறிகிறோம். அப்பொழுது கார்க்கி போன்ற பெண்கள் பெரிய சபைகளில் வாதம் செய்ததைப் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். ஆகவே பெண்களும் , மற்ற ஜாதியினரும் வேதம் அறிந்தவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

 

 

‘’ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் மிக உச்சாணிக் கொம்பில் வைக்கிறார் மநு. பிராஹ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தைப் பிடித்துக் கொண்டால் போதும்,  வேறு யாக யக்ஞங்கள் இல்லாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை என்று அடித்துக் கூறுகிறார் மநு.

 

மேலும், மாநசீகமாகச் செய்யும் (மனதுக்குள்) காயத்ரீக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று மநு செப்புவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

குருவுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என்று மநு கூறுவதும், குருவானவர் இப்போது ‘சொல்’, இப்போது ‘நிறுத்து’ என்று சொல்ல வேண்டும் என்று மநு கட்டளையிடுவது நோக்கற்பாலது. ஆசிரியர் என்பவர், மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு மற்ற அலுவல்களைச் செய்ய முடியாது; முழுக் கவனமும் மாணவர் மீது இருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

மநு  தனது நூல் முழுதும்— துவக்கம் முதல், இறுதி வரை — புலன் அடக்கத்தையும் ஸத்தியத்தையும் வலியுறுத்துவதை நன்கு கவனிக்கவும். இவை இரண்டும் இருக்கும் எல்லோரும் பிராஹ்மணர்களே;  வேதம், காயத்ரீ எல்லாம் இதற்குப் பின்னரே. அதனால்தான் வள்ளுவனும் மநு சொன்னதை அப்படியே சொன்னான்—

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (134)

 

மநு சொன்ன முதல் 200 ஸ்லோகங்களிலேயே பல அதிசய விஷயங்களைக் கண்டு வருகிறோம்; இன்னும் 2400 ஸ்லோகங்களில் பல அதிசயங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………………….

 

சத்ய சாயி லீலை- சோகத்தால் அழுத நான்கு புடவைகள்! (POST. 4688)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4688

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

சோகத்தால் அழுத நான்கு புடவைகள்!

 

ச.நாகராஜன்

 

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அவதாரத்தில் ஆயிரக்கணக்கான லீலைகள் உண்டு.

 

ஒவ்வொரு லீலையும் ஆனந்தத்தைத் தருவதோடு அல்லாமல் ஒரு அற்புதமான பாடத்தையும் கூடவே தரும்.

பம்பாயில் தர்மக்ஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சி இது. ஆண்டு 1968.

அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பெண்மணிகள் நூறு பேருக்கு அருளாசியுடன் புடவைகள் தர ஸ்வாமி எண்ணி, நூறு புடவைகளைக் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

ஒரு கார்ட் போர்ட் பெட்டியில் நூறு சேலைகள் வந்தன.

அவற்றில் 96ஐ ஸ்வாமி தேர்ந்தெடுத்தார். நான்கு புடவைகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

 

பின்னர் நடந்தது தான் அதிசயம்.

அணுக்க பக்தரான ஹிஸ்லாப், அவர் மனைவி, இன்னும் பல பக்த்ர்கள் குழுமி இருந்த அறையில் ஹிஸ்லாப் புடவைகளை நோட்டம் விட்டார்.

 

அவற்றில் நான்கு ஈரமாக இருந்தன.

 

உடனே அவர் இதை பாபாவிடம் சுட்டிக் காட்டினார்.

இந்த அறையில் ஈரம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நூறில் நான்கில் மட்டும் எப்படி ஈரம் வர முடியும்? பெட்டியோ டேபிளின் மீது இருந்தது! ஸ்வாமியோ ஒவ்வொன்றையும் செக் செய்து ‘அப்ரூவ்’ செய்து கொண்டிருந்தார்.

 

ஆக புடவைகள் ஈரமானது எப்படி?

ஸ்வாமி கூறினார்: ஸ்வாமி அவற்றை வேண்டாம் எனச் சொல்லி விட்டதால் அவை அழுகின்றன!

இதைக் கேட்ட ஹிஸ்லாப் திடுக்கிட்டார்.

 

ஹிஸ்லாப்: அது எப்படி? உயிரற்ற ஜடங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவை கூட அழும் என்றா ஸ்வாமி சொல்கிறார்?

பாபா: உயிரற்ற ஜடங்களுக்கு கூட உணர்ச்சிகள் உண்டு. அவை கூட துக்கத்துடன் அழும்.

 

இலங்கைக்கு சேது பாலம் கட்டப்பட்ட போது குரங்குகள் பாறைகளைக் கொண்டு வந்து பாலம் கட்ட உதவின. பாலம் கட்டி முடியப் போகும் தருணத்தில் ஒரு பெரிய மலை அந்தப் பாலத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் பாலமோ முடிந்து விட்டது; இனி அந்த மலை தேவை இல்லை. கொஞ்சம் தாமதமாக அங்கு அந்த மலை வந்து விட்டது.

 

அந்தத் தருணத்தில் தன்னை வேண்டாம் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டவுடன் துக்கம் தாளாமல் அந்த மலை அழ ஆரம்பித்தது.

 

உடனடியாக் இந்தச் செய்தியை ராமனுக்கு அறிவித்தனர்.

கருணையின் திரு உருவான ராமன் மனம் நெகிழ்ந்தார்.

உடனடியாக அந்த மலைக்கு ஒரு செய்தியை அனுப்பினார்- அந்த மலை கவலைப்பட வேண்டாம் என்று!

அந்த மலை இனி வரும் அவதாரம் ஒன்றில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதி மொழியையும் சொல்லச் சொன்னார்.

மலை துக்கம் தீர்ந்து மகிழ்ந்தது!

கிருஷ்ணாவதாரத்தில் அது தான் கோவர்த்தன கிரியாக இருந்தது! தன் ஒரு விரலால் அந்த  மலையைத் தான் கிருஷ்ணர் தூக்கி தன் லீலையைச் செய்தார். மலையும் பரவசம் அடைந்தது!

கோகுலத்தில் இந்திரன் மழை பெய்து வருத்திய காலத்தில் இடையர்களை மழையிலிருந்து காப்பாற்றியது அந்த மலையே!

 

 

பாபாவின் இந்த அருளுரையைக் கேட்ட ஹிஸ்லாப் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் ஆச்சரியத்துடன் பரவசமாயினர்.

 

ஹிஸ்லாப்: ஸ்வாமி! அந்த பெரிய நாடகம் இன்று எங்கள் கண் முன்னாலேயே திருப்பியும் இப்போது அரங்கேறி விட்டதே!

‘இங்கு வந்த புடவைகளில் நா பயன்படுத்தப்படப் போவதில்லை என்று அழுதனன்குவே. அவை ஸ்வாமியின் கருணையால் கொண்டுவரப்பட்ட காரணத்திற்காக இல்லாவிட்டாலும், ஸ்வாமியால் இன்னொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டு விட்டனவே’ என்று கூறி மகிழ்ந்தார்.

 

ஆம், அந்த நான்கு புடவைகளையும் ஹிஸ்லாப்பின் மனைவி, இன்னும் அங்கிருந்த இதர மூன்று பெண்மணிகளுக்கு அருளாசியுடன் பாபா வழங்கினார்.

 

அதைத் தான் அதிசயமாக ஹிஸ்லாப் குறிப்பிட்டார்!

ஸ்வாமி: ஆம்! நீங்கள் கூறியது சரியே! எவர் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தாரோ அவரே தான் இப்போது இங்கு உங்கள் முன் இருக்கிறார்!

 

அவதார மஹிமையைச் சொல்லவும் வேண்டுமோ!

இதைப் படிக்கும் போதே ஆனந்தம் அடையும் போது அதை நேரில் அனுபவித்தவர்களின் ஆனந்தத்திற்கு ஒரு எல்லை உண்டோ!

லீலையின் வாயிலாக உயிரற்ற ஜடங்களுக்கும் கூட உணர்ச்சிகள் உண்டு என்ற பாடத்தையும் கூட அல்லவா அறிய முடிகிறது!!

***

ஆதாரம் : Conversations with Bhagavan Sri Sathya Sai Baba by John S. Hislop

p 31; Sri Sathya Sai Books And Publications Trust வெளியீடு

1968 ஜனவரியில் நடந்த டேப் செய்யப்பட்ட உரையாடல்கள்

நன்றி : ஹிஸ்லாப்; நன்றி : Sri Sathya Sai Books And Publications Trust

***