வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு, சிவப்பு! (Post No.4063)

Written by London Swaminathan
Date: 8 July 2017
Time uploaded in London- 22-29
Post No. 4063

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். சம்ஸ்கிருதத்தில் இதை த்வந்த்வம் (இருமை) என்பர். பிறப்பு, இறப்பு, சீத, உஷ்ணம் பகல், இருள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

Image of Varuna (sea)

வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.

மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.

 

சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

 

அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.

 

ஆண் முதலில் தோன்றினானா? பெண் முதலில் தோன்றினாளா? என்ற கேள்விக்கு விடை காண முடியாது; ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இதை உணர்த்துவதே வேதங்களில் வரும் மித்ர- வருண ஜோடி.

 

என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும்.

Image of Mitra (sun)

பொய்கை ஆழ்வார் முதல் மூவரில் ஒருவர். அவரும் இதே கருப்பு-சிவப்பு தத்துவத்தைப் பாடுகிறார்:-

 

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;

உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்

கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி

உருவம் எரி கார்மேனி ஒன்று

 

நாமம்/பெயர்– சிவன், நாராயணன்

 

வாகனம் – ரிஷபம், கருடன்

நூல்கள் – ஆகமம், வேதம்

வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்)

தொழில்/கருமம் – அழித்தல், காத்தல்

ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம்

உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு

ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம் மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

 

விஞ்ஞான உண்மைகளை நாம் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும் அவை என்றும் இருக்கும் அழியாது— நியூடனும் ஐன்ஸ்டைனும் இல்லாவிட்டாலும் அந்த உண்மைகள் இயங்கிக் கொண்டே இருக்கும். வேதகால ரிஷிகள் தன் அருட் பார்வையால் மித்ர– வருணனை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தனர். அவர்கள் கண்டுபிடிக்காவிடிலும் வேத உண்மைகள் வானில் முழங்கிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் வேதங்கள் சத்திய மானவை; நித்தியமானவை.

 

—சுபம்–

 

பெரியவாளின் “ஆரோக்கியம்”! (Post No.4058)

Written by S NAGARAJAN

 

Date: 7 July 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.4058

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

காஞ்சி மஹா பெரியவாள்

பெரியவாளின் “ஆரோக்கியம்!

 

ச.நாகராஜன்

 

டாக்டர் ஒருவர் பெரியவாள் தரிசனத்திற்கு வந்திருந்தார்.

ஷோலாப்பூரில் பெரியவாள் முகாமிட்டிருந்தார்.

சாப்பாட்டிற்குப் பின்னர் மதிய நேரத்தில் டாக்டரை பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.

ஏற்கனவே பெரியவாளுக்குக் க்ழுத்து வலி. அத்துடன் அதிகமான ஜுரம் வேறு சேர்ந்து கொண்டது. டாக்டரிடம் இதைச் சொன்னார்கள்.

முதலில் டாக்டர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பெரியவாள் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டார்.

 

டாக்டர் சொன்னார்: “என்னிடம் களினிக்கில் சிகிச்சை பெற வரும் ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னரும் பெரியவாளுக்கு மனதால் நமஸ்காரம் செய்து அவர்கள் பூரண் குணமாக வேண்டிக்  கொள்வேன். இப்போது பெரியவாளே ‘பேஷண்டாக’ இருக்கும் போது பெரியவாள் நன்கு குணமாக, பெரியவாளைத் தவிர வேறு யாரை நான் வணங்க முடியும்?”

பெரியவாளைச் சோதித்த டாக்டர் திடுக்கிட்டார். அவரது டெம்ப்ரச்சர் 105 டிகிரியாக இருந்தது.

தயக்கத்துடன் டாக்டர் பெரியவாளைப் பார்த்துச் சொன்னார்,” ஜுரம் மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு நாட்கள் பச்சைத் தண்ணீரில் குளிக்காமல் இருக்க முடியுமா?”

பெரியவாள், “ அது எப்படி முடியும்?நேற்று சந்திர கிரகணம். ஆகவே நேற்று இரவு கிரகண ஸ்நானம் செய்தேன் – இதே ஜுரத்துடன் தான்” என்றார்.

டாக்டர்: “ஈஸ்வரா!பெரியவாளின் உடம்பு அதைத் தாங்கித்தா?”

மஹா பெரியவாள்: “உனக்கு கிரகண ஸ்நானம் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியுமா?”

டாக்டர் : எனக்குத் தெரியாது.

பெரியவாள் : மூக்கைப் பிடித்துக் கொண்டு நதியில் தலை முழுவதையும் அமுக்கிக் குளிக்க வேண்டும்.”

இதைக் கேட்டு டாக்டர் அயர்ந்து போனார்.

பெரியவாள் தொடர்ந்தார்: “ ஒரு முறை அல்ல; இப்படி நூற்றி எட்டு தரம் செய்ய வேண்டும்.”

டாக்டர் பிரமித்தார். “உங்களுக்கு நான் என்ன ட் ரீட்மெண்ட் தர முடியும்? சிவ பெருமானின் அவதாரமாகவே இருக்கும் உங்களை   105 டிகிரி ஜுரம் இருக்கும் போது நூற்றி எட்டு தரம் இப்படி நதியில் ஸ்நானம் செய்த போதும் உங்களை சிவனே தான் காப்பாற்றுகிறான்.என்னைப் போன்ற சாதாரணமானவன் உங்களுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் தர முடியும்.  உங்களை எங்களுக்காக வேண்டி பல்லாண்டுகள் வாழ சிவன் தான் அருள் புரிய வேண்டும்”.

டாக்டர் நெகிழ்ந்த மனதுடன் பெரியவாளை நமஸ்கரித்தார்.

 

***

உண்மை நிகழ்ச்சி : ஆதாரம் திலிப் அக்டோபர்/டிசம்ர் 2016 இத்ழ்

மொழியாக்கம் ; ச்.நாகரா

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்! (Post No.4047)

Written by S NAGARAJAN

 

Date: 3 July 2017

 

Time uploaded in London:-  6-40 am

 

 

Post No.4047

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை

 

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை : தெய்வ தேசத்தின் கலாசாரம்!

 

ச.நாகராஜன்

இப்போது உலகெங்கும் நடைபெற்று வரும் நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன, திகைக்க வைக்கின்றன!

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்லாம் மதத்தைக் கண்டு பயப்பட்டு தங்கள் மதத்தையும் நாட்டையும் காப்பாற்ற முனைப்போடு ஈடுபட உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கும் காட்சியைக் காண்கிறோம்.

 

 

ஆஸ்திரேலியாவிலோ, எங்கள் தேசத்தின் அரசியல் சாஸனம் மற்றும் பண்பாட்டுக்குத் தக வாழ முடியுமானால் இங்கு வாழுங்கள்; இல்லையேல் நடையைக் கட்டுங்கள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் முஸ்லீம்களை நோக்கி எச்சரிக்கை கலந்த அறிவுரையை சில தினங்களுக்கு முன்னர் வழங்கியதையும் காண்கிறோம்.

 

 

மியான்மரிலோ 969 இயக்கம் முஸ்லீம்களை ஒதுக்கி வைத்து புத்த மதத்தினரின் கடைகளிலேயே அனைத்தையும் வாங்குங்கள் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

 

 

அமெரிக்காவிலோ முன்னர் ரஷியாவை எதிரியாகச் சித்தரித்து வரும் நாவல்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களை அறவே காணோம். அதற்குப் பதிலாக இஸ்லாமிய தீவிரவாதிகளை பயங்கரமாகச் சித்தரித்து அமெரிக்காவைக் காப்பாற்ற விழைவதற்கான அறைகூவல் கொண்ட நாவல்களும் சீரியல்களும் ஏராளமாக வருவதைக் காண்கிறோம்.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

 

;பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியரும் ஹிந்துக்களும் ஹிந்து நாட்டில் இணைந்து வாழ்வதை இப்போதைய உலக நோக்கில் கண்டு பிரமிக்க வேண்டியிருக்கிறது.

 

பாபரிலிருந்து ஆரம்பித்து ஔரங்கசீப் வரை பற்பல ஆண்டுகள் முஸ்லீம்களே ஹிந்து நாடான பாரதத்தை ஆண்டனர். ஆனாலும், தீவிரமான மதமாற்ற முயற்சியை அவர்கள் மேற்கொண்ட போதிலும், ஹிந்துக்களைப் பெருவாரியாக மாற்ற முடியவில்லை.

 

 

அதே சமயம் அவர்களை அப்படியே ஜீரணித்ததோடு தங்களின் அற்புதமான கலாசாரத்தை அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் ஹிந்து மதம் சுட்டிக் காட்டி மதமாற்றம் தேவையில்லை என்ற நோக்கையும் எடுத்து வைத்து வந்திருக்கிறது.

 

வரலாற்று ரீதியாக் ஒரு சில உண்மைகளை இங்கு காண்போம்.

அக்பர் முதன் முதலாக ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து அன்யோன்யமாக வாழ வேண்டும் என்று முயற்சித்தார்.தீன் இலாஹி உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொண்டார்.

 

 

அடுத்து ஜிஹாங்கீர் இந்த முய்றசியை மேற்கொண்டு வளர்த்தார்.

அக்பரின் பேரனான தாரா ஷிகு இன்னும் அதிக முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமாயணம், உபநிடதங்கள், கீதை ஆகிய அரிய இதிஹாஸ வேத நூல்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இந்திய சிந்தனை பெர்சியாவில் ஊடுருவியது.

அடுத்து முகம்மது கஜினியில் சமகாலத்தவரான,

அல்பெரூனி இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பொது அற்புதமான் இந்த தேசத்தைக் கண்டு வியந்தார், பிரமித்தார்.

ஹிந்து மற்றும் புத்த மத நூல்கள் பலவற்றை ஆராய்ந்தார், மொழி பெயர்த்தார். புராணங்களின் மீது அவர் பெருமதிப்பைக் கொண்டிருந்தார்.

 

 

இருபத்தி இரண்டு சம்ஸ்கிருத ஆதார நூல்களை ஆராய்ந்து தனது வானவியல், ஜோதிடம், பூகோள நூலை உருவாக்கினார்.

இதை விட ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை இன்னும் ஒரு படி மேலே சென்றது.

 

குரு- சிஷ்ய பரம்பரை ஒன்று உருவானது

முஸ்லீம் மகான்கள் அல்லது குருமார்கள் ஹிந்து சீடர்களைப் பெற்றனர். ஹிந்து யோகிகள், ம்கான்கள் முஸ்லீம் சீடர்களைப் பெற்றனர்.

 

எங்கும் கலகமோ சச்சரவோ கருத்து வேறுபாடோ ஏற்படவில்லை.

 

பஞ்சாபில் இரு கல்லறைகள் உள்ளன. ஒன்று,  முஸ்லீமான ஜ்மாலி சுல்தானுடையது. இன்னொன்று ஹிந்து மகானான தியால் பவானி அவர்களுடையது. இருவரும் மிக நெருங்கிப் பழகிய நண்பர்கள். அந்த நட்புக்கு அடையாளமாக் இருவரின் கல்லறைகளும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் உள்ளன. இருவரின் சீடர்களும் மிகவும் ஒற்றுமையாக இருவரையும் போற்றி வழிபடுகின்றனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முஸ்லீம் மகானான பாவா ஃபல்டு. அவர் எதிர்காலத்தை அப்படியே கூற வல்லவர்.

 

இந்த அபூர்வமான சக்தி அவருக்கு ஒரு ஹிந்து யோகியிடமிருந்தே கிடைத்தது.

பாபல் ஸஹானா என்பவர் ஹிந்து மஹான். அவர் ஒரு  முஸ்லீம் பகீருடைய சீடர். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

 

இது ஒரு புற்மிருக்க எட்டாம் நூற்றாண்டில் அராபியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பார்ஸீக்கள் குஜராத்தில அடைக்கலம் புகுந்தது தனி வரலாறு. அவர்களையும் ஹிந்து மதம் அரவணைத்து ஏற்று அவர்களின் தனித்தன்மையையும் வழிபாட்டையும் மதித்து அவர்களை அவர்கள் வாழ்க்கை முறைப்படி வாழ வழிவகை செய்து உதவியது.

ச்மீப காலத்திய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தோமானால் கபீர் ஒரு பெரிய யோகியாகத் திகழ்ந்தார். அவருக்கு ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் சீடர்களாக இருந்தனர்.

 

 

அடுத்து மிக சமீப காலத்தில் ஷீர்டி சாயிபாபா முஸ்லீம் மகானாக இருந்தாலும் கூட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏராளமான அளவில் அவருக்கு சீடர்களாக இருந்தனர்.

. இன்றும் கூட ஆயிரக்கணக்கில் ஷீர்டியில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.

 

 

கடைசி கடைசியாக மஹாத்மா காந்தி ஹிந்துக்களையும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க அரும்பாடு பட்டார்.

 

ரகுபதி ராகவ ராஜாராம் பதிதபாவன சீதாராம்

ஈஸ்வர் அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்

என்று ‘’அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்று; அனைவருக்கும் நல்ல புத்திமதியைத் தா’’ என்று மனமுருக வேண்டினார்.

அதையே நவீன பிரார்த்தனை மந்திரமாக ஆக்கி தன் மாலை நேர வழிபாட்டில் அனைவரையும் பாட வைத்தார்.

இப்படி ஒரு பிரம்மாண்டமான மத நல்லிணக்கத் தொடர் முயற்சியை இதர நாடுகளில் வேறு ஒரு நாட்டிலும் காண முடியாது.

 

விரலை மடக்கினால் ஒரே ஒரு தேசம் மட்டுமே நமக்குத் தெரிகிறது.

 

அது தெயவ தேசம். பாரதம் தான். பாரதம் மட்டுமே தான்.

ஹிந்துக்களுக்கு அனைத்து மதங்களும் சம்மதமே!

அதே மனப்பான்மை மற்ற மதத்தினருக்கும் வரும் போது நமது பூமி தெய்வ பூமியாக மாறும்!

 

அதற்கும் ஹிந்து மதம் ஒரு மந்திரத்தைத் தந்திருக்கிறது.

லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து!

 

***

 

 

வெளி உலகவாசிகள் பற்றி தாண்ட்ய பிராமணம் (Post No.4046)

Compiled by London Swaminathan
Date: 2 July 2017
Time uploaded in London-17-21
Post No. 4046

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்பன அவை. அதில் நேற்று சுவையான சில கதைகளைத்  தந்தேன். இன்று மேலும் சில தகவல்களைக் காண்போம்

 

தாண்ட்ய மஹா  பிராமணம் தரும் தகவல்:-

 

உயிரினங்களைப் படைத்த பிரஜாபதி, தேவர்களின் நன்மைக்காக  தன்னையே, யாகத்தில் ஆஹுதியாக அளித்தார். முன்னர் மரணம் அடைந்து கொண்டிருந்த தேவர்கள், இதன் காரணமாக இப்பொழுது தெய்வீக நிலையைப் பெற்றனர் (தேவர்களாயினர்)

 

இது பற்றி ஆபஸ்தம்பர் (2-7-16) தரும் வியக்கியானம் சுவையானது:-

முன் காலத்தில் இவ்வுலகத்தில் தேவர்களும் மனிதர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். பின்னர் யாக யக்ஞங்கள் செய்தவர்கள், அதன் பலனாக, தேவ லோகம் சென்றனர். மனிதர்களோவெனில் உலகிலேயே தங்க நேரிட்டது தேவர்களைப் போல யாக யக்ஞங்களைச் செய்பவர்கள் மரணத்துக்குப் பின்னர், தேவ லோகத்தில் பிரம்மாவுடன் வசிப்பர்..

தேவ லோகவாசிகள் பற்றி இந்துமத புராணங்கள் தரும் தகவல் வேறு எங்கும் இல்லை. ஆக,  நாமே இத்துறையில் மிகவும் முன்னேறி உள்ளோம்; எதிர்காலத்தில் வெளி கிரஹ வாசிகளைக் கண்டுபிடிக்கையில் நாம் அன்றே சொன்னோம் என்று சொல்லலாம்:-

1.தேவலோக வாசிகள் கண் இமைக்காது

2.கால்கள் நிலத்தில் பதியாது

3.அவர்கள் போட்டிருக்கும் மாலைகள் வாடாது

4.அவர்கள் இன்பமாக இருப்பர்; ஆனால் செக்ஸ் (SEX) செய்ய முடியாது

5.அவர்கள் மானசீகமாக எங்கும் பயணம் செய்யலாம்.

6.தாண்ட்ய பிராமண விளக்கத்தின்படி பார்த்த்,,,,,,,,,,,ல், அவர்கள் பூமியிருந்து பிற கிரகங்களுக்குச் சென்றவர்களே

 

ஆனால் வெள்ளைக்காரர் களோவெனில் வெளி உலக வாசிகள் தான்  இங்கு வந்து, பூமியில் உயிரினங்களை உண்டாக்கினர் என்பர்

தசரதர் போன்றோர் இறந்த பின்னரும் பூமிக்கு வந்து காட்சி தந்தனர்.  அர்ஜுனன் போன்றோர் இந்திர லோகம் வரை சென்று வந்ததை மஹாபாரதம் கூறுகிறது.

 

ஐதரேய பிராமணக் கதை

 

வேதங்களுக்கு உரை எழுதிய சாயனர் சொல்லும் கதை இது. பழங்கால ரிஷிகளில் ஒருவருக்கு பல மனைவியர் உண்டு. ஒரு மனைவியின் பெயர் இதரா. அவருக்கு மஹிதாச ஐதரேய என்ற ஒரு மகன் இருந்தான். ஆனால் அவர் அந்த மகனைத் தவிர மற்ற மனைவியர் மூலம் பிறந்த எல்லோர் இடத்திலும் அன்பு காட்டினார். அவனைத் தவிர மற்ற எல்லோரையும் மடியில் உட்கார வைத்துக் கொஞ்சுவார். மஹிதாசனுடைய அம்மாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன்னுடைய குல தெய்வத்திடம் வேண்டினாள்.

மஹிதாசன் எல்லோரையும் விட அறிவில் சிறந்தவனாக இருந்ததால் எல்லோர் முன்னிலையிலும் தேவி தோன்றி அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். ஐதரேய பிராமணம் அவர் முன்னிலையில் தோன்றியது –ஆரண்யகமும் அவர் முன்னிலையில் தோன்றியது

 

பிராமண நூலும் ஆரண்யக நூலும் அவர் முன்னிலையில் “தோன்றியது” என்பதன் பொருள், அவர் அருள் பெற்றபோது பொங்கி எழுந்த விஷயங்களே இவ்விரு நூல்களும் என்பதாகும்.

 

–Subham–

இந்துமதத்தைக் குழப்புகிறார்கள்! (Post No.4032)

Written by London Swaminathan
Date: 28 June 2017
Time uploaded in London- 8-39 am
Post No. 4032
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

 

 

போர்ச்சுகல்லின் தலைநகரான லிஸ்பன் மாநகரில் ஐரோப்பிய ஹிந்து போரம் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் 23-06-2017ல் நடந்தேறியது. அதில் லண்டனிலிருந்து சென்ற அறுவர் குழுவில் நானும் இடம் பெற்றேன்.

(சாப்பாடு மட்டும் இலவசம்; மற்ற எல்லா செலவுகளும் எங்களுடையது. ஹரே க்ருஷ்ணா இயக்கத்தினர் அவர்களுடைய உணவு விடுதியில் எங்களுக்கு நல்ல சாத்வீக உணவு கொடுத்தனர். போர்ச்சுகல்லில் தங்கிய 4 நாட்களில் மசாலா, வெங்காயம், பூண்டு வாசனையே கிடையாது; வாழ்க ஹரே கிருஷ்ணா இயக்கம்))

 

 

பெல்ஜியம் நாட்டிலிருந்து வந்த பிரதிநிதி மஹாப்ரபுதாச, பொதுச்செயலர் என்ற முறையில் நல்ல செயல் திட்டங்களை முன் மொழிந்தார். வழக்கம் போல இந்த ஆண்டும் ஐரோப்பிய பார்லிமெண்டில் தீபாவளி விருந்து உண்டு என்று சொல்லி, அதற்காக தேதியைக் கொடுத்தார். கூட்டத்தின் இறுதியில் அடுத்த ஆண்டு இதாலியில் உள்ள ப்ளாரன்ஸ் நகரில் கூட்டம் நடத்தவும் இசைவு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள்:

 

இந்துமதம் பற்றிப் பல நாடுகளில் பலவகையாக எழுதப்பட்ட பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும் பிழைகளும் உள்ளன. பிழைகளைத் திருத்தி சரியான, ஒரே மாதிரியான பாடப் புத்தகம் கொண்டுவருவது நம் கடமை.

 

வங்க தேசம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் போன்ற பல நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக ஏராளமான கொடுமைகள் நடக்கின்றன. இவைகளை யாரும் வெளியிடுவதே இல்லை. அவர்களைக் காப்பாற்றுவது நம் கடமை.

இதைவிட முக்கியமானது– இந்துக்களே இந்து மதத்தைக் குழப்புவதாகும். மற்ற மதத்தில் உள்ள உப பிரிவுகளைவிட (sub sects, movements, cults) நம் மதத்தில் பிரிவுகள் அதிகம்; தற்காலத்தில் ஏராளமான சங்கங்கள், இயக்கங்கள், அமைப்புகள் வேறு தோன்றிவிட்டன.  கிறிஸ்தவர்கள் பேசும்போது நான் கத்தோலிக்க அமைப்பைச் சேர்ந்தவன்; எங்கள் கொள்கையின்படி……….. என்று துவங்குவார். ப்ராடெஸ்டெண்ட் மதபோதகர் பேசுகையில் தன்னை சரியாக அறிமுகப் படுத்திக்கொண்டு, எங்கள் கருத்துப்படி…………….. என்று பேசுவார். ஆனால் இந்துக்கள் மட்டும் தான் சேர்ந்த அமைப்பின் கருத்து என்று சொல்லாது, தாந்தான் இந்துமதத்தின் பிரதிநிதி போலப் பேசுவதால், அதைக் கேட்கும் இந்து அல்லாத வெளிநாட்டினர் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போகிறார்கள். நமது , குழந்தைகளுக்கோ பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

 

அவர்களுக்கு நம் மதம் — மேலும் புரியாத புதிராக விடுகிறது! ஆகையால் யார் பேச எழுந்தாலும், எங்கு சென்று பேசினாலும், அவர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டு தங்களுடைய அணுகுமுறை இது– பார்வை இது —என்பதைச் சொல்ல வேண்டும்.

 

இதை மஹாப்ரபுதாச சொன்னபோது எல்லோரும் ஆதரவு தெரிவித்தனர்.

 

இது பற்றி நான் பேசியதாவது:

“இந்துமத்தின் மிகப்பெரிய பலம் — பலவகையான அமைப்புகள், இயக்கங்கள் இருப்பது (Biggest strength of Hinduism is Diversity).

 

இந்துமத்தின் மிகப்பெரிய பலவீனமும் அதே — பலவகையான அமைப்புகள், இயக்கங்கள் இருப்பது. (Biggest weakness of Hinduism is Diversity).

நமக்குள் ஒற்றுமைதான் அதிகம்; ஆனால் நாம் பின்பற்றும் மேம்போக்கான வழிமுறைகள், சடங்குகள் நம் குழந்தைகளை மிகவும் குழப்பும்; வெளிநாட்டினரை மிகவும் குழப்பும். ஆகையால் நாம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர், நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று விளக்கிப் பேசுவது நல்லது என்றேன். சற்று முன்னர் நாம் யோகம், ஆசனம் ஆகியவற்றைப் போதிக்கும் இயக்கங்கள் பற்றி விவாதித்தோம். அதில் கூட நமக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. நம்க்குள்ளேயே இவ்வளவு என்றால் , விஷயமே தெரியாதவர்கள் குழம்ப்பிப் போவார்களே!! என்றேன்.

 

கூட்டத்திற்கு வந்த மற்றவர்கள் சொன்ன கருத்துகள்:

 

சிவ லிங்க வழிபாடு — அருவ வழிபாட்டின் சிறப்பை விளக்க வந்த வழிபாடு— என்பதை அறியாமல் அது பற்றி வெளிநாட்டுப் புத்தகங்களில் ஆபாசமாக எழுதப்பட்டதை ஒருவர் எடுத்துக் காட்டினார் ( நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசுகையில் இது பற்றி காஞ்சி சுவாமிகள் சொன்ன அற்புதமான விளக்கத்தை என் பிளாக் கட்டுரையில் போட்டிருப்பது பற்றிச் சொன்னேன்).

 

வெளிநாடுகளில் மக்கட் தொகை கணக்கெடுப்பின்போது, படிப்பறிவில்லாத பலர் தான் சேர்ந்த இயக்கத்தின் பெயரைச் சொல்லி விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு ஐட்டம் (item) அந்த லிஸ்டில்(list) இல்லாததால், அவர்களை  இந்து என்று குறிக்காமல், எந்த மதமும் சாராத பட்டியலில் சேர்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள். இதனால் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாகக் காட்டப்படுகிறது!!

 

இது விசயமாக நாங்கள் (Hindu Forum of Britain)  பிரிட்டனில் புதிய யோசனைகளை அரசுக்குத் தெரிவித்து வருகிறோம்.

ஹரே க்ருஷ்ணா இயக்கம், சுவாமிநாராயண் இயக்கம் போன்ற பெயர்களை எழுதி அடைப்புக் குறிக்குள் “இந்து” என்று எழுதுவது ஒரு யோசனை. ஆனால் முதலில் இதை அந்த இயக்கங்களும் ஏனையோரும் ஒப்புக்கொள்ளவேண்டும். ஆகையால் இந்த யோசனைகளை அனுப்பி இதைவிட வேறு என்ன முறைகள் உள்ளன என்றும் கேட்டு வருகிறோம்.

 

ஆக நமக்குள்ள பிரச்சனைகளை நாம் ஆக்க பூர்வமாக அணுகி நம் குழந்தைகளுக்கும், நம்மை அணுகும் வெளிநாட்டினருக்கும் தெளிவு பிறக்கச் செய்வது நம்முடைய தலையாய கடமை.

 

-சுபம்–

 

 

லண்டனில் நான் கற்ற பாடம் Post No.4022)

Written by London Swaminathan
Date: 21 June 2017
Time uploaded in London- 15-12
Post No. 4022
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

1987 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி லண்டனில் தரை இறங்கினேன். பி.பி.சி. ( B B C Wold Service) தமிழோசை ஒலிபரப்புக்காக பிரிட்டிஷ் அரசு என்னை அழைத்தது (உலக சேவை அரசின் நேரடி பார்வையில் உடையது. சாதரண பி.பி.சி.(BBC One, BBC Two) மக்கள் தரும் லைசென்ஸ் பணத்தில் ஓடும் அமைப்பு).

 

இந்தியாவில் 25 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். முதலிய அமைப்புகளில் இருந்தும்கூட லண்டனில், — புதிய நாடு, புதிய தட்ப வெப்ப நிலை, புதிய சூழ்நிலை காரணமாக — ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது போல தடுக்கி விழுந்தால் தமிழர்களைக் காணும் காலம் அல்ல அது. தமிழர்களும், வெஜிட்டேரியன் உணவும் தேடிக் கண்டு பிடித்த காலம் அது. இப்பொழுது தோழான், துருத்தி அகதி, சகதி எல்லோரும் வரலாம்.

 

 

1993 முதல்தான் நிறைய பொதுப் பணிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நாலு சங்கங் களில் பொறுப்பு வகித்து சுமார் பத்து அமைப்புகளுக்கு இரண்டு லட்சம் பவுன்களுக்கு மேலாக நிதி சேகரித்து அளித்தேன். அதில் ஒரு அனுபவம்:—

 

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்; நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்; இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.

 

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம், எவ்வளவு நேரம் பேச வேண்டும், என்ன வயதுக்கார ர்கள்? எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.

“தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந், தால் போதும்; அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.

“அதுவா, நம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.

 

எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்? பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளே, அவர் பெரிய அறிஞர். வேதங்கள், உபநிஷத்துகள், கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.

அவரோ நிதானமாக ,

“தம்பி; நீங்கள் அவர் ஒரு நல்ல , உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத்  திரைப்படங்களில் வரும் நடிப்பு சந்யாசிகளைத் தான் பார்த்திருக்கிறார்கள்; நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்; ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.

என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால், ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.

சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.

 

இதை நான் சென்ற சனிக்கிழமை லண்டன் மித்ர சேவா அமைப்பில் பேசியபோது சொன்னேன்; எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்தும் இருக்கிறேன்.

 

ஆக நமக்கு வேண்டியது எல்லாம் உதாரண புருஷர்களே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ரமண மகரிஷி போன்று ஏழைக் குடிசையில், ரிஷி முனிவர் போல, வாழ்பவர்கள் காலில் உலகமே விழும்; சரண் அடையும்.

 

(( இப்பொழுது என் மனதில் ஓடும் எண்ணங்களையும் எழுதுகிறேன்:

நடிகர்கள் என்பவர்கள் வெறும் நடிகர்களே; சுய வாழ்வில் யோக்கியர்கள் அல்ல. நடிப்புக்கு பணம் வாங்குதலிருந்து எல்லாமே திரை மறைவு வேலைகள்தான். அவர்கள் உலகிற்குப் பாடம் கற்பிக்க முடியாது. இதே போல திருக்குறளை மேடையில் முழக்கி நாம் எல்லோரும் தமிழர்கள் என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை நூறு முறை சொல்லி ஏமாற்றும் மேடைப் பேச்சாளர்களையும் நாம் அறிவோம்.

இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. எங்கு சத்தியம் இல்லையோ அது அழிந்தே தீரும் இது நானோ ஒரு சந்யாசியோ போடும் சாபம் அல்ல. இயற்கை நியதி. பாரதியார் பாஞ்சாலி சபதத்தின் இறுதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்”.

–SUBHAM–

பசு வதை செய்யாதே! (Post No.4017)

Written by S NAGARAJAN

 

Date: 20 June 2017

 

Time uploaded in London:-  5-17  am

 

 

Post No.4017

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

 

by ச.நாகராஜன்

 

 

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.

எந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.

 

 

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.

பசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.

 

 

இதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்!

கோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.

கோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.

 

பசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல முறைகள் கூறுகிறது.

 

அதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்!

 

சம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.

 

அதனால் வந்தது கோளாறு பெரிது!

 

பசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:

மூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.

 

 

உக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.

இந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.

 

ஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.

 

பெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்?!

எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?!

 

 

மேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வாயு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட  அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா?

 

செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.

 

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது!

 

 

பசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

நன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.

 

தாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.

 

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.

 

மறுபடி தர்மமே வெல்லும்!

****

 

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே – பாரதி (Post No.4012)

Written by London Swaminathan
Date: 18 June 2017
Time uploaded in London- 8-19
Post No. 4012
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் பழமறையைப் பாடுவோம்- பாரதி

 

வெற்றி எட்டு திக்கும் எட்டக் கொட்டு முரசே

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே-பாரதி

 

என்றெல்லாம் பாரதி ஏன் பாடினான்?

 

தமிழில் தெய்வீகப் பாடல்களைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாங்கள் வேதத்தைத் தமிழில் தருகிறோம் என்று ஏன் சொன்னார்கள்?

 

திருக்குறளைப் பாடிய பல புலவர்கள் வடமொழியில் வேதம் இருந்தது தமிழ் மொழியில் அது இல்லாத குறையைத் திருக்குறள் போக்கிவிட்டது என்று பாடி திருக்குறளைத் தமிழ் வேதம், தமிழ் மறை என்று ஏன் அழைத்தார்கள்?

 

இதற்கெல்லாம் ஒரே விடை— வேதத்தில் உலகமே போற்றும் அடிப்படை உண்மைகள் இருப்பதே.

அது என்ன அடிப்படை உண்மைகள்?

சத்யம் வத = உண்மையே பேசு

தர்மம் சர = அறப்பணிகளை செய்

மாதா பிதா குரு தெய்வம் = அம்மா, அப்பா, ஆசிரியர் கடவுள்

அதிதி தேவோ பவ = விருந்தினரைக் கடவுளாகப் போற்று.

சர்வேஷாம் சாந்திர் பவது= எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும்.

சர்வேஷாம் மங்களம் பவது = பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

 

— இப்படி ஏராளமான அடிப்படை உண்மைகள் வேதத்தில் பொதிந்துள்ளன.

 

இதை எல்லாம் ஏழு வயதில் ஆசிரியர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கற்பித்தனர். இது அவர்கள் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும்.

இது உலகிலுள்ள எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடியதே.

 

உண்மை என்பது அடிப்படையாக இல்லாவிடில் குடும்பத்தில் அமைதி நிலவாது; ஒருவரை ஒருவர் சந்தேகிப்பர்; ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவர்.

 

உலகில் பல்லாயிரக் கணக்காண ஆண்டுகளாக வாய்மொழி மூலம் மட்டுமே பாதுகாக்கப்பட்டுவரும் பிரமாண்ட நூல் வேதம் ஒன்றுதான். இன்றுள்ள வேதம் பழங்காலத்தில் இருந்ததில் ஒரு சிறு பகுதிதான். ஆயினும் வேதத்தில் உள்ள முக்கியக் கருத்துகள் திருக்குறள், கீதை முதலான நூல்களில் அப்படியே இருப்பதால் நாம் வேதம் கரைந்து விட்டதே என்று கவலைப் பட வேண்டியதில்லை.

 

இப்போதுள்ள வேதங்களே பிரம்மாண்ட அளவுடையவை; பழங்கால உலகில் இப்படி ஒரு புத்தகம் வேறு எந்த மொழியிலும், வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை; வேதங்கள், சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.

 

ரிக்வேதம்

இது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 1028 துதிகள் உள்ளன. அவைகளில் 10,552 மந்திரங்கள் இருக்கின்றன.

யஜூர் வேதம்

இது வாஜசநேயி சம்ஹிதை, மத்யந்தின என்று பிரிக்கப்பட்டுள்ளது; இதில் 40 அத்தி யாயங்கள் இருக்கின்றன 1975 சிறு பிரிவுகளும் உரைநடைப் பகுதிகளும் காணப்படுகின்றன.

 

சாம வேதம்

இரண்டு பிரிவுகளாக உள்ளது; ஆயினும் பெரும்பாலும் ரிக் வேத மந்திரங்களே இடம்பெற்றூள்ளன. மொத்தம் 1875 சிறு பிரிவுகள்.

 

அதர்வ(ண) வேதம்

இது 20 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது ; 730 துதிகள் 5987 மந்திரங்களாகவும் இன்னும் சில உரைநடைப் பகுதியாகவும் இருக்கின்றன.

வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்து நான்கு சீடர்களிடம் கொடுத்து அதைப் பரவச் செய்தார்.

ரிக் வேதத்தில் உள்ள பல துதிகளை, மற்ற மூன்று வேதங்களும் திருப்பிச் சொல்கின்றன (சில மாறுதல்களுடன்); அவைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் மொத்தம் 16,000 மந்திரங்கள் கிடைக்கின்றன. இது அரும் பொக்கிஷம். மனித இனத்தின் முதல் புத்தகம். அழியாத உண்மைகள் அடங்கிய நூல்.

 

பல விஷயங்களையும் ரகசிய மொழியில் கூறுவதால் தமிழர்கள் இவைகளை நான் மறை என்றும் அவற்றை ஓதுவோரை நான் மறையாளர் என்றும் சொல்கின்றன. சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வேதமும் வேள்வியும் திரும்பத் திரும்ப வருவதால் குறைந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இவை தமிழகத்தில் வழங்கிய அறிய செய்தி  கிடைக்கிறது.

 

வேதத்தை 3 ஸ்வரங்களில் உயர்த்தியும் தாழ்த்தியும்,  இழுத்தும் சொல்லுவர்.

 

உதாத்த- ஏற்றி

ஸ்வரித-

அனுதாத்த- இறக்கி

 

வேதத்தில் ஒரே சொல் , இந்த ஏற்ற இறக்கத்தினால் பொருள் மாறுபடும்.

 

வெளிநாட்டினர், வேதங்களை இந்துக்களின் ஆதிகால வரலாறாகப் பார்ப்பர். ஆனால் இந்துக்களுக்கு அது மந்திரங்கள். அதன் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. ஏனெனில் அவைகள் ரஹசிய பொருளுடையவை ஆகையால் சப்தம்தான் முக்கியம் என்பர்.

 

வேதங்கள் என்றுமுள்ளவை ; ரேடியோ அலைகளை நாம் ரேடியோப் பெட்டி மூலம் கேட்பது போல ரிஷி முனிவர்கள் கேட்டு நமக்குச் சொன்னார்கள்; மனிதர்கள் இயற்றவில்லை என்பது இந்துக்களின் நம்பிக்கை.

 

ஆனால் வெளிநாட்டினரோ இது கவிஞர்களால் இயற்றப்பட்டவை என்பர். எப்படியாகிலும் 400- க்கும் மேலான கவிஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடியதும் அதை வாய் மொழியாகவே இது வரை எழுத்து பிசகாமல் ஸ்வரம் தப்பாமல் பாதுகாத்ததும் உலகில் வேறெங்கும் இல்லாத அதிசயம் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வர்.

 

 

இன்றுளா உலக சமாதானம், மனிதர்கள் எல்லோரும் வளமாக, நலமாக 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்பது வேதத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொ ல்லப்பட்டதோ அதைவிட மிகப் பெரிய அதிசயம். உலகில் வேறெந்த பழங்கால நாகரீகத்திலும் காணக்கிடக்காத அபூர்வ விஷயம்.

 

தனித் தனி கட்டுரைகளின் வாயிலாக வேத அதிசயங்களை விளக்குகிறேன்.

 

சுபம்-

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

Thank you for reading our 4000 posts!

‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’- ஞான சம்பந்தர் உறுதி மொழி (Post No.4000)

 

Written by London Swaminathan
Date: 14 June 2017
Time uploaded in London- 11-02 am
Post No. 4000
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

நம்முடைய முன்னோர்கள், தெய்வத்தின் மூலமாக, பெரிய நம்பிக்கை உணர்வை ஊட்டினர். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பது நாம் அறிந்ததே; கோடீஸ்வர்களுக்கும் மனத்துயரம் உண்டு; பயம் உண்டு; உடல் உபாதைகளும் உண்டு; சாலையில் வசிக்கும் ஏழைகளுக்கும் இன்பம் உண்டு. எல்லோரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று உறுதிபடக் கூறுகிறார் திருஞான சம்பந்தர். இதை அவர் சொன்னபோது அவருக்கு 16 வயத்துக்கும் குறைவு. இறைவனின் உரையை தனதுரையாக வழங்கியவர் சம்பந்தர். ஆகையால்தான் அதை நாம் வேத வாக்கியம் என்கிறோம்; தமிழ் மறை என்கிறோம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
 

 

சமயச் சொற்பொழிவாற்றுவோர் எல்லோரும் “லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து” என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி முடிப்பர். நல்ல மழை பெய்யட்டும்; நாடு செழிக்கட்டும்;

Thank you for supporting my two blogs

உயிரினங்கள் எல்லாம் சுகமாக வாழட்டும்; அரசர்கள் நன்முறையில் ஆட்சி செய்யட்டும்; உலகம் முழுதும் — மக்கள் யாவரும் – வாழ்க வளமுடன்! – என்று சொல்லி முடிப்பர். என்ன அருமையான சிந்தனை.

 

 

உலகில் காக்கை, குருவி, பசு, நாய் போன்ற ஏனைய உயிரினங்களுக்கும் சேர்ந்து பிரார்த்தனை செய்வர் இந்துக்கள்!

மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல்

முறைசெயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்மை

இறையவனிராமன்   வாழி இக்கதை கேட்போர் வாழி

அறைபுகழ்ச் சடையன் வாழி அரும்புகழ் ராமன் வாழி

–யுத்தகாண்டம், விடைகொடுத்த வாழ்த்து

 

இந்து மதம் விஞ்ஞான முறையில் அமைந்த மதம்; பாம்புகளும், வாழ்ந்தால்தான் எலிகள் குறையும்; அறுவடை பெருகும் என்ற அறிவியல் உண்மை அவர்களுக்குத் தெரியும் ஆதலால் அதற்கு நாக பூஜையும் செய்வர்; அதையும் தினமும் வாழ்த்துவர்.

கம்பன் ஆறு காண்டங்களிலும் இக்கருத்தைப் பல முறை பாடியிருப்பதால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இதற்கு முன்னரே சம்பந்தர் (வாழ்க அந்தணர்

…), அதற்கும் முன்னரே இளங்கோ (சில ப்பதிகாரம்), ஓரம் போகியார் (ஐங்குறு நூறு) ஆகியோர் இவ்வாறு பாடியுள்ளனர்.

 

இதைத்தான் கம்பனும் சொல்லி வைத்தான்; இது பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை, கம்ப ராமாயண ஏட்டுப் பிரதிகளில் இருக்கிது; ஆனால் அச்சுப்பதிப்பில் இல்லை என்று காட்டிய பாடல் (காண்க- தமிழ் சுடர் மணிகள்)

Thank you all for your four million hits!

தொல்காப்பியர் அவரவர் குலதெய்வம் காப்பாற்றும் வாழ்த்து ஒன்றைத் தொல்காப்பிய பொருளாதிகாரத்தில் பாடுவார்:

 

‘வழிபடு தெய்வம் நின் புறங்காப்பப்
பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து,
பொலிமின்’ என்னும் புறநிலை வாழ்த்தே;
கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ

-1367, பொருள் அதிகாரம்

 

“வழிபடும் தெய்வம் உன்னைக்  காப்பாற்றட்டும்;  நிறைய செல்வத்துடன் இன்பமாக வாழ்வாயாக! – என்பது இதன் பொருள்.

 

‘ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என்பது வள்ளலாரின் வேண்டு கோள்.

 

“நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”- என்பது திருமூலரின் ஆசை.

 

‘இன்பம் இடயறாது ஈண்டும்’ (குறள் 369)

‘மன்னுயிர்க்கெல்லாம் இனிது’ (குறள் 68) என்பது வள்ளுவன் வாழ்த்து. எல்லா உயிர்களும் என்பது இந்து சிந்தனை; வேறு எங்கும் காண முடியாது.

 

“இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்” என்பது பாரதியின் உறுதி.

 

“இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”  என்பது அப்பர் பெருமான் அடித்துக் கூறும் உண்மை.

 

இப்படி எங்கு நோக்கினும் “எல்லோரும் வாழ்க, இனிதாக வாழ்க” என்று தினமும் பிரார்த்தனை செய்கிறோம்.

 

 

உங்கள் ஆதரவினால்  4000 கட்டுரைகளை இந்த பிளாக்குகளில் ஏற்ற முடிந்தது! அனைவருக்கும் நன்றி.

எல்லோரும் வாழ்க; இனிதே வாழ்க!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! நன்றி.

 

–Subham–

பேயை விரட்ட, நோயை விரட்ட அதர்வண வேதம்- பகுதி 2 (Post No.3976)

Written by London Swaminathan

 

Date: 6 June 2017

 

Time uploaded in London- 16-13

 

Post No. 3976

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அதர்வண வேதத்திலுள்ள 20 காண்டங்களில் என்ன இருக்கிறது என்பதை அறிய நேற்று முதல் பத்து காண்டங்களின் பொருள் அடக்கத்தினைக் கொடுத்தேன். இன்று மேலும் பத்துக் காண்டங்களில் எது சம்பந்தமான மந்திரங்கள் இருக்கின்றன என்பதைக் காண்போம்.

 

11 ஆம் காண்டம்

பதினோராம் காண்டத்தில் 10 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 31 மந்திரங்கள் இருக்கும்.

 

மூன்றாவது துதி உரைநடையில் இருக்கிறது. பாலில் சோறு பொங்கும் விஷயம் இது. எட்டாவது துதி, பல கடவுளரின் தோற்றம் பற்றியும் மனிதனின் படைப்பு பற்றியும் பாடுகிறது.

எதிரிகளை அழிப்பதற்கான மந்திர உச்சாடனங்கள், கடைசி இரண்டு துதிகளில் இடம்பெறும்.

 

ருத்ரனைப் பற்றிய நீண்ட துதி இருக்கிறது.

பிரம்மசர்யத்தின் சிறப்பு

உணவு தானியம் பற்றிய பிரார்த்தனை

பிரம்மனைப் பற்றிய மந்திரங்கள்

இந்தக் காண்டத்தின் சிறப்பு

12 ஆம் காண்டம்

 

தாய்நாடு பற்றிய அருமையான நீண்ட கவிதை

காச நோயைத் தடுக்கும் மந்திரம்- இந்தக் காண்டத்தின் சிறப்பு

 

பன்னிரெண்டாம் காண்டத்தில் 5 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 60 மந்திரங்கள் இருக்கும்

 

இரண்டாவது துதி அந்திம யாத்திரை பற்றியது. இதன் பாதிப் பகுதி ரிக்வேதத்தில் (10-18) இருந்து எடுக்கப்பட்டது. ஒரு பிராமணனிடமிருந்து பசுவைத் திருடினால் என்ன பாவம் வரும் என்பதை 4, 5 துதிகளில் காணலாம்.

 

13 ஆம் காண்டம்

பதிமூன்றாம் காண்டத்தில் 4 துதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் சராசரியாக 47 மந்திரங்கள் இருக்கும்

 

சிவப்பு (ரோஹித) வர்ணத்தைப் போற்றும் துதிகள் இதில் அடங்கும். சிவப்பு வர்ணம் என்பது சூரியனையும் அக்னியையும் குறிக்கும்.

அந்திமக் கிரியை பற்றிய மந்திரங்களைக் கொண்ட காண்டம்

 

14 ஆம் காண்டம்

 

இரண்டே துதிகள்; ஆனால் மொத்தம் 139 மந்திரங்கள். கல்யாணம், சாந்தி முகூர்த்தம் தொடர்பான விஷயங்கள் உள; ரிக் வேத துதி 10-85 சில மாறுதல்களுடன் காணப்படும்.

 

15 ஆம் காண்டம்

இதில் 18 துதிகள் உள. உரைநடையில் உளது. புரியவில்லை என்று வெள்ளைக்காரர்கள் எழுதியுள்ளனர். இதில் விராத்தியர்கள் எனப்படும் நாடோடிப் பிராமணர்கள் பற்றி உளது. அவர்கள் யாக யக்ஞாதிகளைச் செய்யாதவர்கள்; சித்தர்கள் போல!

பரமாத்மனைப் போற்றும் மந்திரங்களும் உண்டு

 

16 ஆம் காண்டம்

இதில் 9 துதிகள் உள. பெரும்பாலும் உரைநடை. தாயத்துகள், குளிகைகள் பற்றிய அதிசய விஷயங்கள் நிறைய உள்ளன.

 

17 ஆம் காண்டம்

ஒரே துதி! ஆனால் 30 மந்திரங்கள். இந்திரனைக் குறித்த துதியில் விஷ்ணு, சூரியன் ஆகியோருடன் அவரை ஒப்பிடுவர். மனிதர்கள், மிருகங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் நலன் வேண்டும் துதி!

வெற்றிக்கான பிராத்தனை மந்திரங்கள்.

 

18 ஆம் காண்டம்

 

நாலே துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 70; அந்திமக் கிரியைகள், திதி முதலியன இதில் அடக்கம். பல துதிகள் ரிக் வேத துதிகள்- சில மாறுதல்களுடன்.

முதல் துதி யமா-யமி உரையாடல்.

 

19 ஆம் காண்டம்

72 துதிகள்; ஒவ்வொன்றிலும் சராசரி மந்திரங்கள் 8. பல இடைச் செருகல் இருப்பதாக வெள்ளையர் கணிப்பர். தாயத்துகள், குளிகைகள் பற்றிய பகுதிகளும் உள. ரிக்வேத புருஷ சூக்தம் 10-90 கொஞ்சம் மாறுதல்களுடன் காணப்படும்.

 

நதிகள், தண்ணீர், பரமாத்மன் பற்றிய மந்திரங்கள்

28 நட்சத்திரங்கள் பற்றிய மந்திரங்கள்

அமைதி, சமாதான மந்திரங்கள்

இதன் சிறப்பு அம்சங்கள்

 

20 ஆம் காண்டம்

 

இருபதாம் காண்டம்தான் கடைசி காண்டம்; இதில் 143 துதிகள் உண்டு. பெரும்பாலும் இந்திரனைப் பற்றிய ரிக் வேத துதிகள்; குண்டபா பிரிவு (127-136) மிகவும் வியப்பான மந்திரம்- வயிற்றைச் சுற்றியுள்ள 20 உறுப்புக  ள், நாளங்கள், சுரப்பிகள் பற்றீயன. பல பாடல்கள் விடுகதை போன்றவை. அசுரர்களை விடுகதை போட்டே தோற்கடித்தனர் கடவுளர்.

 

இது போன்ற சிந்தனைகள் இந்த வேதம்— அறிவாளிகளின் வேதம்— என்பதைக் காட்டும். முதல் துதி வாக் (பேச்சு) பற்றி துவங்கியது. இப்படிப்பட்ட அறிவு தொடர்பான செய்திகளை சுமேரிய, எகிப்திய துதிகளில் காணமுடியாது. விருந்தினரைப் போற்றும் உயரிய பண்புகள், சத்தியத்தைப் போற்றும் கொள்கைகள் இவைகள் வெளிநாட்டுச் துதிகளில் இல்லை. இவை எல்லாம் பாரதீய   சிந்தனையின் முன்னேற்றமடைந்த நிலையைக்  காட்டும்.

 

—சுபம்–