‘கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல் (Post No.3846)

e28ad-seven-layers-of-the-aura

Written by London swaminathan

Date: 24 APRIL 2017

Time uploaded in London:- 7-59 am

Post No. 3846

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உலகத்தில் வேறு எந்த நூல்களிலும் காண முடியாத ஒரு கருத்து காணப்படும். அதாவது,  மனம், மொழி, மெய் (உடல்) மூன்றிலும் தூய்மையுடன் இருத்தல். சம்ஸ்கிருதத்தில் இதை மனோ, வாக், காயம் என்பர். திரிகரண சுத்தி என்றும் சொல்லுவர். ஒருவருக்கு இது இருக்குமாகில் அவர் அபூர்வ சக்தி பெறுவார். மாய மந்திரங்களைச் செய்ய முடியும். இந்த மூன்று உறுப்புகளிலும், கோபம், காமம், லோபம் (பேராசை) இவைகள் இல்லாவிட்டால் அபூர்வ சக்திகள் தானாகவே வரும்; விலங்குகளும் அவருக்குக் கட்டுப்படும். இதைப் பல அடியார்களின் வாழ்வில் காண்கிறோம்.

 

இதைப் பட்டினத்தார் அழகாகப் பாடுகிறார்:

 

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்

பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்

மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

1df6f-shiva2bbronze2bcolor

பட்டினத்தடிகள் இப்படிப் பாடினாலும் இது நம்மைப் போன்ற சாதாரண மக்களின் நிலையைக் குறிப்பதேயன்றி அவர் அப்படி திரிகரண சுத்தி இல்லாமல் இருந்துவிட்டதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அது  அவரது முன் பகுதி வாழ்க்கையில் நடந்திருக்கலாம்..

 

பிற்கால வாழ்வில் அவர் மெய்யுணர்வு பெற்றவரானதாலேதான் இப்படிப்பட்ட அற்புதமான பாக்கள் வெளிவந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,  இன்றும் நாம் படிக்கிறோம்.

 

 

இதே கருத்தை நீதி வெண்பா பாடலிலும் காணலாம்:-

 

மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு

வினை வேறு பட்டவர்பால் மேவும் — அனமே

மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே

கனமொன்று மேலவர் தங் கண்

 

–நீதி வெண்பா

 

பொருள்:-

அனமே= அன்னம் போன்ற நடையுடைய அழகியே! கேள்!

வினை வேறுபட்டவர்பால்= நல்ல செய்கை இல்லாத கீழோரிடத்தில்

மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும் = மனமும் சொல்லும் செயலும் வேறு வேறுபட்டதாய் இருக்கும்

கனம் ஒன்று மேலவர் தங்கண் = பெருமை மிக்க பெரியோரிடத்தில்

மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே = மனமும், சொல்லும், செயலும் ஒன்றேயாம்.

 

தமிழில் இதற்கு அழகான மூன்று சொற்கள் உண்டு:

வாய்மை = வாயினால் தீமை செய்யாதிருத்தல்

உண்மை = உள்ளதாற் பொய்யாதொழுகுதல்

மெய்மை = உடலினால் தீங்கு செய்யாதிருத்தல்.

 

–சுபம்–

அருணாசல மலை சிவனே தான்! (Post No.3839)

Written by S NAGARAJAN

 

Date:22 April 2017

 

Time uploaded in London:-  6-29 am

 

 

Post No.3839

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ரமண சாரல்

அருணாசல மலை சாக்ஷாத் சிவனே தான்!

ச.நாகராஜன்

 

 

பகவான் ரமணர் வாழ்ந்த காலத்தில் ஆசிரமத்தின் அதிகாரபூர்வமான போட்டோகிராபராக இருந்தவர் டாக்டர் டி.என்.கிருஷ்ணஸ்வாமி. பகவானின் அருளுபதேசங்களை விட அவரைப் பல விதமாக போட்டோ எடுப்பதையே தன் விருப்பத்திற்குரிய ‘தொழிலாக’ அவர் கொண்டிருந்தார். பகவான் மறைந்த பிறகு தான் அவரது அருள் தன் மீது எப்படியெல்லாம் பொழிந்திருக்கிறது என்பதை அறிந்து அவர் உபதேசங்களின் மீது அவர் நாட்டம் கொண்டார்.

 

 

டாக்டர் கிருஷ்ணஸ்வாமி எடுத்த புகைப்ப்டங்கள் அரிய புகைப்படங்கள். பகவான் நிற்கும் போதும், நடக்கும்போதும், உண்ணும்போதும், அமரும்போதும், ஏன் சமாதி நிலையில் இருக்கும் போதும் பல நிலைகளில் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இன்று அரிய பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன.

அவர் கூறியுள்ள சம்பவம் இது.

 

 

ஒரு நாள் அருணாசலத்தில் அவர் மஹரிஷியுடன் நடந்து கொண்டிருந்த போது மஹரிஷி வழியில் இருந்த ஒரு சிறு கல்லை எடுத்துக் கொண்டார்.

 

 

டாக்டரைப் பார்த்து அவர், “வெளிநாட்டிலிருந்து ஒருவர் இந்த மலையின் புனிதமான பகுதியிலிருந்து ஒரு கல்லை எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மலை முழுவதுமே புனிதமானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இது சாக்ஷாத் சிவனே தான்! நாம் எப்படி நமது உடலுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு காண்பிக்கிறோமோ அதே போல இந்த மலையுடன் சிவன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அருணாசலம் மலை வடிவில் இருக்கும் சுத்த அறிவு. (PURE AWARENESS) அவரைக் காண விரும்புவோருக்கு வெளிப்படையாக கண்களில் காணும் படியாகத்  அவர் இந்த மலை வடிவாகக் காண இதைத் தன் கருணையினால்அவர் தேர்ந்தெடுத்துள்ளார். சாதகர்கள் இந்த மலை அருகில் இருப்பதன் மூலமாக வழிகாட்டுதலையும் ஆறுதலையும் பெறுவர்,” என்றார்.

 

 

ரமணரைப் புகைப்படம் மூலமாக தரிசித்து பக்தர்கள் இன்று ஆறுதலையும் வழிகாட்டுதலையும் பெறுகின்றனர். அந்த போட்டோக்களை நமக்குத் தந்தவர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி. அவரிடமே, எப்படி ஒரு பௌதிக பொருள் தெய்வீகமாக ஆகி அதன் மூலமாக ஆறுதலையும் வழிகாட்டுதலையும் பெறலாம் என்று பகவான் ரமண மஹரிஷி கூறியது பொருள் பொதிந்த ஒன்றாக அல்லவா அமைகிறது!

 

 

எல்லையற்ற, வடிவமே இல்லாத, பிரம்மாண்டமான பேரருள் சக்தியை இனம் காண உருவ வழிபாடு ஒரு உதவும் சாதனமாக அமைகிறது.

 

 

அதை அருணாசலேஸ்வர் மலையாக அமைந்து நமக்கு உபதேசிப்பது உய்வதற்கான வழி அல்லவா!

 

அந்த அருள் இரகசியத்தை ஆசிரமத்தின் அதிகாரபூர்வமான போட்டோகிராபரிடம் பகவான் “போட்டு உடைத்தது” அவரது அருள் லீலைகளில் ஒன்று போலும்!

*

பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை! (Post No.3830)

Written by S NAGARAJAN

 

Date:19 April 2017

 

Time uploaded in London:-  5-49 am

 

 

Post No.3830

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!

ச.நாகராஜன்

 

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கை வரலாற்றையும் உபதேசங்களையும் படிக்கும் பக்தர்கள் பொதுவாகவே அவர் தீவிர சிந்தனையிலும் இறை உணர்விலும் இருப்பதை உணர்வர். ஆனால் உலகியல் வாழ்க்கைக்கு ஏற்ப அவர் நகைச்சுவை உணர்வுடன் இருந்து பக்தர்களின் பதிலை ஏற்றுக் கொண்டதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு.

 

 

இதை எடுத்துக் காட்டும் விதத்தில் பகவானின் அணுக்க பக்தரான குஞ்சு சுவாமிகள் பல சம்பவங்களைக் கூறியதுண்டு.அவற்றில் சில:

 

 

பகவானுடன் கிரி வலம் வரும் பக்தர்கள் பொதுவாக தெய்வீகப் பாடல்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடிக் கொண்டே செல்வது வழக்கம். ஆனால் ஒரு பையன் மட்டும் மௌனமாக பகவானுடன் வருவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அனைவரும் ஆளுக்கு ஒரு பாடலைப் பாடி முடித்த போது பகவான் அந்தப் பையனைப் பார்த்து, “எல்லோரும் பாடி விட்டார்களே! நீ ஒன்றைப் பாடக் கூடாதா?” என்றார். அதற்கு உடனே அந்தப் பையன், “ஜீவன் முக்தர்கள் எங்காவது பாடுவார்களா?” என்றான்.

 

இதைக் கேட்ட பகவான் விழுந்து விழுந்து சிரித்தார்.

 

சத் தரிசன பாஷ்யம் என்ற நூலை எழுதிய கபாலி சாஸ்திரியார் பகவானின் அணுக்க பக்தர். வேத ரகசியங்களை நூல்களாக எழுதியவர். பின்னாளில் இவர் அரவிந்த ஆசிரமத்திலும் தங்கி இருந்தவ்ர். அவருக்கு திருமணத்தில் அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் அவர் வீட்டிலோ அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வைக்க முயன்றனர். ஒரு நாள் அவர் பகவானிடம் வந்து, “ நான் நாளை ஆசிரமத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திக்குருக்கிறேன்: என்றார்.

 

ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வது என்றால் பொதுவாக சந்யாச் ஆசிரமத்தை ஏற்றுக் கொள்வதாகத் தான் அர்த்தம்,.

பகவான் ஆச்சரியத்துடன், “அப்படியா! கபாலி! அதற்கு வீட்டில் அனுமதி வாங்கியாகி விட்டதா?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “நான் இரண்டாவது ஆசிரமத்தைச் சொன்னேன். பிரமசர்யத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் போக முடிவு செய்து விட்டேன்” என்றார்.

 

பகவான் இதைக் கேட்டுச் சிரித்தார்.

 

முதலியார் பாட்டி என்று அழைக்கப்பட்ட மூதாட்டி பகவானுக்கு அன்டன் தான் சமைத்த உணவைக் கொண்டு வந்து தருவது வழக்கம். பகவான் அதிகமாகச் சாப்பிடாமல் மிகவும் குறைந்த அளவே சாப்பிடுவதாக அவர் எண்ணி வருத்தப்பட்டார். அதனால் சாதத்தை அமுக்கி அமுக்கி சிறிய உருண்டையாக ஆக்கி அதை பகவானுக்குப் படைத்தார். இந்த ட் ரிக்கைக் கண்ட பகவான் பாட்டியைப் பற்றி, “பாட்டியின் ட் ரிக் எனக்குத் தெரியாதா என்ன, அமுக்கி அமுக்கி நிறைய சாதத்தை இப்படிச் செய்கிறாள்” என்று கையால் சாதத்தை உருண்டையாக் அமுக்கிக் காட்டினார்.

 

 

இதற்கு பாட்டியிடமிருந்து உடனே பதில் வந்தது ரமணரின் பாணியிலேயே!

 

பகவான் கையால் அமுக்கி காட்டிய சைகையை அப்படியே திருபபிச் செய்து, “எது அதிகம், எது குறைச்சல்? எது பெரிது, எது சிறிது? எல்லாம் நம் பாவனையில் தான் இருக்கிறது.” என்றார் பாட்டி.

 

 

தன் கூறும் சொற்களாலேயே தன்னை பாட்டி மடக்குவதைக் கண்ட ரமணர் சந்தோஷத்துடன், “ பார், பார்! நான் சொன்னதையே எனக்குத் திருப்பிச் சொல்கிறாள்” என்று கூறினார்

 

இது போன்ற ஏராளமான சம்பவங்கள் பகவானின் வாழ்வில் அவ்வப்பொழுது இடம் பெறுவது உண்டு. பகவானும் இவற்றை வெகுவாக ரசிப்பார். நகைச்சுவை உணர்வுடன் அவர் பக்தர்களின் சொற்களையும் செய்கைகளையும் ஏற்றுக் கொள்வார்.

இதில் பக்தர்களுக்கும் ஆனந்தம்; பகவானுக்கும் ஆனந்தம்!

***

நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல! (Post No.3828)

Written by S NAGARAJAN

 

Date:18 April 2017

 

Time uploaded in London:-  5-29 am

 

 

Post No.3828

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

by ச.நாகராஜன்

 

பகவான் ரமணரைப் பார்க்க வந்த பக்தர் ஒருவர், “எனது வியாபாரத்தை விட்டு விட்டு, வேதாந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார்.

 

 

அதற்கு ரமண மஹரிஷி,” உன்னை விட்டு வெளியே தான் பொருள்கள் இருக்கிறதென்றால் அவற்றை விட்டு நீ போய் விடலாம். ஆனால் அவை உன்னை விட்டு வெளியே இல்லை. உனக்குள்ளே தான் இருக்கிறது. உனது எண்ணங்களாக! ஆகவே அவற்றை விட்டு உன்னால் எப்படி வெளியே போக முடியும்?

வேதாந்த புத்தகங்களைப் படிக்க ஆரம்பிப்பது என்றால் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் கூடப் படிக்கலாம். ஆனால் அவை சொல்வது என்ன?

 

உனக்குள்ளிருக்கும் ஆத்மாவை அறி என்றே அவை அனைத்தும் சொல்கின்றன. ஆத்மன் உனக்குள்ளே தான் இருக்கிறது. அதை உன்னால் தான் அறிய முடியும். உனக்குள் தான் அது இருக்கிறது” என்று பதில் கூறினார்.

 

16-3-1945 அன்று காலையில் இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஆனால் இது பற்றியே அன்று மாலை மீண்டும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

 

 

அதற்கு பகவான் இப்படி பதில் சொன்னார்:” உலக விஷயங்களை விட்டு உன்னால் எப்படிப் பறந்தோட முடியும்? அவை மனிதனின் நிழல் போன்றவை. நிழலை விட்டு மனிதன் போக முடியாததைப் போல கூடவே இருப்பவை அவை. ஒரு வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு மனிதன் தன் நிழலைப் புதைக்க விரும்பினான். ஆழமான குழி ஒன்றை அவன் தோண்டினான். தனது நிழலைக் குழியின் அடியில் பார்த்து மகிழ்ந்த அவன் மண்ணை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் குழியை மூடினான். ஆனால் குழி முழுவதும் நிரப்பப்பட்ட பின்னர் குழியின் மேலே அவன் நிழல் தெரிந்தது. இதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டு ஏமாற்றமடைந்தான்.

 

அதைப் போலவே தான் பொருள் களும்அல்லது விஷயங்களைப் பற்றிய எண்ணங்களும். ஆத்மாவை அறியும் வரை உனக்குள்ளே உன்னுடனே தான் அவை இருக்கும்!”

 

 

இதற்குத் தான் மிக எளிமையான வழியாக அவர் “நான் யார்?” என்பதை நினைத்துக் கொண்டே இரு. அது உனக்கு வழி காட்டி சரியான இடத்தை அடைய வைக்கும் என்றார்.

மிக எளிமையான வழியை அநுபூதி கண்ட மஹரிஷி மிக எளிமையாக விளக்கி விட்டார்.

 

அந்த வழியை மேற்கொள்ள அவரது அநுக்கிரஹம் வேண்டித் தான் அவரை நாம் வழிபடுகிறோம்.

ரமணரின் வழி எளிய வழி; அந்த வழியில் இட்டுச் செல்ல அவரது அருள் வேண்டும் என்பதால் அவரைப் பணிவோம்; உயர்வோம்!

***

Source : Day by Day with Bhagawan by Sri A.Devaraja mudaliyar

 

சங்க இலக்கியத்தில் வேளாப் பார்ப்பான் (Post No.3826)

Written by London swaminathan

 

Date: 17 APRIL 2017

 

Time uploaded in London:- 16-50

 

Post No. 3826

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

பிராமணர்களை ஆறு தொழில்கள் செய்வோர் என்று சங்கத் தமிழ் நூல்களும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் (560) போற்றுகின்றன. அது என்ன ஆறு தொழில்கள்?

1.வேட்டல் (வேள்விகளை/யாக யக்ஞங்களை செய்தல்)

2.வேட்பித்தல் (செய்துவைத்தல்)

3.ஓதல் (வேத அத்யயனம் செய்தல்)

4.ஓதுவித்தல் (ஏனையோருக்கு சொல்லிக்கொடுத்தல்)

5.ஈதல் (தானம் கொடுத்தல்)

6.ஏற்றல் (தானம் வாங்குதல்)

 

இதை சம்ஸ்கிருதத்தில் யஜன, யாஜன, அத்யயன, அத்யாபன, தான, பிரதிக்ரகம் என்பர்.

கிருத யுகத்தில், பிராமணர்கள், ஆறு தொழில்களை மட்டும் செய்துவந்தனர்.அதற்குப் பின்னர் வந்த யுகங்களில் அமைச்சர் தொழில், போர்த் தொழில் முதலிய பல தொழில்களைச் செய்ததை நாம் மஹாபாரதம் மூலம் அறிகிறோம். கலியுகத்திலோ அவர்கள் செய்யாத தொழில் இல்லை!

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பிராமணர்கள் தூது போகும் தொழிலைச் செய்ததையும் சங்க இலக்கியத்தின் மூலமும், தொல்காப்பியத்தின் மூலமும், அறிகிறோம். அகநானூற்றில் வரும் செய்தி புதுமையானது. வேள்வி (யாக, யக்ஞங்கள்) செய்யாத பார்ப்பன ஜாதி சங்குகளை அறுத்து வளையல் செய்த விஷயத்தை அது சொல்கிறது.

 

வேளாப் பார்ப்பான் வாளரந்துமித்த

வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,

தளை பிணி அவிழா, கரி முகப் பகன்றை

………………………………..”

–அகநானூறு 24, ஆவூர் மூலங்கிழார்

பொருள்:–

“வேள்வியைச் செய்யாத பார்ப்பான் கூரிய அரத்தால் அறுத்தெடுத்த வளைகள் போக, மிஞ்சிய சங்கின் தலையைப் போன்ற கட்டமைந்த பிணிப்பு அவிழாத வலப்பக்கம் சுரிதலையுடையன பகன்றையின் அரும்புகள். அவை மலரும் காலமான…………….”

 

சிவபெருமானையே உனக்கு குலம் கோத்திரம் ஏதேனும் உண்டா? என்று கேள்வி கேட்ட நக்கீரனார் ஒரு வேளாப் பார்ப்பார் என்பர்.

சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்.
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
என்று சொன்னதாக வரலாறு.

 

காயத்ரீ சொல்லாதவர் விராத்யர்கள்

பிராமணர்கள் 5 வயதிலும் க்ஷத்ரியர்கள் 6 வயதிலும் , வைஸ்யர்கள் 8 வயதிலும் பூணூல் போட்டுக்கொண்டு காயத்ரீ மந்திரத்தை உபதேசம் பெற வேண்டும். அப்படித் தவறினால் முறையே 16, 22, 24 வயது வரை அவர்கள் உபதேசம் பெறலாம். அப்படிச் செய்யாவிடில் அவர்கள் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லும் உரிமையை  இழந்து விடுவார்கள் அவர்கள் விராத்யர்கள் என்று அழைக்கப்படுவர்-(மனு ஸ்ம்ருதி 2-37/40)

பிராமண, ஷத்ரிய, வைஸ்ய மக்கள் அவர்கள் ஜாதிப் பெண்களையே மணந்து கொண்டு பெற்ற பிள்ளைகள் சமயச் சடங்குகளைக் கைவிட்டு, காயத்ரீ சொல்லாமல் இருந்தால் அவர்கள் விராத்யர்கள் என்று அழைக்கப்படுவர் (மனு 10-20).

 

நாடோடியாகச் சுற்றும்யோகிகள், சித்தர்களையும் வேத நூல்கள் விராத்யர்கள் என்று அழைத்தன (குறிப்பாக அதர்வ வேதம்). அவர்கள் இப்படி வழித வறிப்போனாலும் அவர்கள் தாய் மதத்துக்குத் திரும்பி வர வேத நூல்களில் வழி செய்யப்பட்டுள்ளன. ஆகையால் இவர்கள் சமய அல்லது இன விரோதிகள் அல்ல. வழிதவறி வேறு சம்பிரதாயத்துக்கு சென்றவர்களே.

 

மாட்டு வண்டியில் இசைக் கலைஞர்களுடனும் காமக் கிழத்திகளுடனும் செல்லும் விராத்யர்கள் பற்றி அதர்வண வேதம் செப்பும்.

 

தமிழ் சித்தர்கள், பைராகிகள் முதலியோரும் எந்த விதி முறைகளையும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

My old article on the same subject:–

Who are Vratyas (outlaws)? Research Article No. 1794; 11th  April 2015

 

—Subham–

சிரியா நாட்டில் நயன்தாரா கோவில்! (Post No.3800)

f6325-ain_dara_crop

Research Article Written by London swaminathan

 

Date: 8 APRIL 2017

 

Time uploaded in London:- 17-59

 

Post No. 3800

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சிரியா, துருக்கி ஆகிய இரண்டும் முஸ்லீம் நாடுகள். ஆனால் இரண்டு நாடுகளும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு காஸைட்ஸ், ஹிட்டைட்ஸ், மிடன்னி என்று (Kassites, Hittites, Mitanni) மூன்று வம்சங்களின் கீழ், இந்துக்களின் ஆட்சியில் இருந்தன.

 

இப்பொழுது ஹிட்டைட்ஸ் (HITTITES) பற்றி நிறைய விவரங்கள் அடங்கிய பெரிய புத்தகம் (துருக்கி, ஆங்கில மொழிகளில்) வெளியாகியுள்ளது. அதில் மூன்று இந்து தெய்வங்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இதோ எனது ஆராய்ச்சி முடிவுகள்:–

e15c6-800px-syrie_295

1.நயந்தாரா கோவில்

2.துவாதச ஆதித்யர்/ 12 ஆதித்யர்கள்

3.வருணன்

 

நயனதாரா:–

சிரியாவின் அலெப்போ (Aleppo, Syria) நகருக்கு அருகில் அயன தாரா (Ayn Dara) என்று உலகின் பழமையான கோவில் ஒன்றைக் கண்டுபிடித்துள் ளனர். இது பழைய செய்தி. ஆனால் இங்கிருந்த தெய்வம் யார் என்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவில்லை. வெறும் ஊகங்கள் மட்டுமே உள்ளன. எனது ஆராய்ச்சி யில் இது நயனதாரா என்ற தேவியின் கோவில் என்று தெரிகிறது. எப்படி?

 

1.மொழியியல் ரீதியில் சில சொற்களின் முதல் எழுத்து கீழே உதிரும் என்பது ஆராய்ச்சியாளர் அறிந்ததே.  சிரியாவில் அவர்கள் சொல்லும் அய்ன் தாரா (Ayn Dara) என்பது நயன தாராவின் சிதைந்த வடிவமே.

2.முதல் முதலில் இந்தக் கோவில் இருக்கும் இடமே, ஒரு மிகப் பெரிய சிங்கத்தின் சிலை கிடைத்ததால் தெரிய வந்தது. சிங்கம் என்பது, துர்கை முதலிய தேவியர்களின் வாஹனம் ஆகும்.

  1. நயனதாரா என்றால் கண்ணின் கருமணி, கண்மணி (Star of Eye, Iris) என்று பொருள். இதே போல கண்ணை வழிபடும் கோவில் ஹிமாசல பிரதேசத்தில் நைனா தேவி (Nainadevi) என்ற பெயரில் உள்ளது. அதன் பெயர் நயன தேவி. அங்கே நயனம் (கண்) வழிபாட்டிலுள்ளது. 51 சக்தித் தலங்களில் இதுவும் ஒன்று. இதே போலத்தான் நயன தேவி கோவில் சிரியாவிலும் இருந்திருக்க வேண்டும்.

4.நயனதாரா என்ற தேவியின் வடிவம் நேபாளம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் , காச்மீர் முதலிய பிரதேசங்களில் வழிபடும் தேவியின் உருவம்; இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு காஷ்மீரிப் ப்ராமணன். அவருடைய தங்கை விஜயலெட்சுமி பண்டிட்டின் மகள் பெயர் நயந்தாரா சஹல்; சர்ச்சைக்குரிய, புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியை.

 

  1. நாம் எப்படி 51 சக்திக் கேந்திரங்களில் துர்க்கைக்கு பல பெயர் சொல்லி, ஊர் தோறும் புதுக் கதைகள் சொல்லி ஒரே தேவியை வழிபடுகிறோமோ அதே போல மத்தியக் கிழக்கு நாடுகளில் அஷ்டார்த்தி, இஷ்டார், அஷ்டோரத் என்று பல பெயர்களில் தேவியரை வணங்கி வந்தனர். அங்கே 3000 தெய்வங்கள் வழிபட்டது பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் அதில் விவரம் காண்க

be35c-img_2212

  1. மேலும் அய்ன் தாரா கோவிலுக்கு முன்னர் மர்மமான இரண்டு காலடிச் சுவடுகள் (Massive Foot Prints) உள்ளன. அதைத் தவிர வலது கால் ஒன்று கோவிலின் படிக்கட்டில் உள்ளது. இது ஆரய்ச்சியளர்களைத் திகைப்படையச் செய்யும் விஷயம். ஆனால் இந்துக்களுக்கு இதில் புதுமை இல்லை. மணமகளே, மணமகளே வா வா, உன் வலது காலை எடுதுவைத்து வா என்று நாம் பாடுகிறோம். அதே போல அங்கே வலது கால் கோவிலின் படிக்கட்டில் இருக்கிறது. மேலும் இபோதும் நாம் க்ருஷ்ணன் பிறந்த நாளன்று வாசலிலிருந்து பூஜை அறை வரை க்ருஷ்ணரில் கால்களை வரைந்து கோலம் போடுகிறோம். அதாவது க்ருஷ்ணனை வீட்டிற்குள் அழைக்கிறோம். இதுபோல நயனதாரா கோவிலிலும் செய்திருப்பார்கள். இப்பொழுதும் சிரியாவில் பெரிய காலடிச் சுவடுகள் உள்ளன. காலடிச் சுவடுகள், பாத வழிபாடு பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இலங்கையின் சிவனொளி பாத மலை முதல் விஷ்ணு கோவில்களில் தலையில் வைக்கும் சடாரி வரையுள்ள காலடிச் சுவடுகள் பற்றி எழுதியுள்ளேன்.

 

7.நாம் சஹஸ்ரநாமம் என்று சொல்வது போல ஹிட்டைட்ஸ் மக்களும் “கடவுளின் ஆயிரம் நாமங்கள்” என்று சொல்வர். நம்முடைய விஷ்ணு, லலிதா, சிவ சஹஸ்ரநாமங்கள் போல அங்கும் தேவிக்கு சஹஸ்ரநாமம் இருந்திருக்க வேண்டும்

  1. இதைவிட இந்தக் கோவில் உள்ள நாடு சிரியா என்பதே சூர்ய என்ற (SYRIA=SURYA) சொல்லிலிருந்து வந்ததே. அதற்குச் சான்றாக அங்கு சூரிய வழிபாடு முதன்மையில் இருந்ததை புதிய புத்தகமும் விளக்குகிறது.

27909-shri-naina-devi-temple_1414660449

Nainadevi Temple, Himachal Pradesh, India

9.சிரியா–துருக்கி பகுதியில்தான் உலகின் மிகப்பழைய சம்ஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதாவது கி.மு.1350 ஆம் ஆண்டுக்குரிய க்யூனிபார்ம் களிமண் பலகைக் கல்வெட்டில் ரிக்வேத தெய்வங்களின் பெயரைச் சொல்லி உடன்படிக்கை செய்துள்ளனர். கிக்குலி என்பவரின் குதிரைப் பயிற்சி நூல் வடமொழி எண்களுடன் கிடைத்துள்ளது. இது துருக்கி- சிரியா பகுதியில் கிடைத்தது. ஆக அதே கி.மு1300-ம் ஆண்டுக்குரிய அய்ன் தார கோவில் இந்துக் கோவில் என்பதும் பொருத்தமே.

 

 

12 துவாதச ஆதித்யர்

சிரியா எல்லையில் துருக்கி நாட்டிற்குள் எழிலிகாயா (Yazikaya) என்னும் இடத்தில் 12 பெரிய உருவங்கள் பாறை

மீது பொறிக்கப்பட்டுள்ளன. இவர்களும் ஹிட்டைட்ஸ் தொடர்புடையனவே. வேதத்தில் 12 ஆதித்யர்கள் என்று சூரியனின் வடிவங்கள் போற்றப்படுகின்றன. இது சூரியனின் பாதையிலுள்ள 12 மாதங்கள், 12 ராசிகள் என்று பொருள்படும். இதைச் சிறப்பிக்கும் வகையில் அங்கே 12 பெரிய உருவங்கள் உள்ளன. நாட்டின் பெயரே சூர்ய (சிரியா) என்று இருக்கும்போது இதில் வியப்பொன்றும் இல்லை.

ee544-1024px-yazilikaya_b_12ergruppe

வருணன் வழிபாடு

 

சிரியாவின் மிக முக்கிய தெய்வம் தருணாஸ் (Tarhunas) என்று புதிய புத்தகம் கூறுகிறது. நூற்றுக் கணக்கான களிமண் கல்வெட்டுகளைப் படிக்கப் படிக்க புதுப் புது விஷயங்கள் வெளியாகி வருகின்றன. தருணாஸ் (Tarhunas) என்பது வருணன் என்பதன் சிதைந்த வடிவம். இதை புயல், இடி, மின்னலின் தெய்வம் என்று ஹிட்டைட்ஸ் அறிஞர்கள் (Hittitologists) வருணிக்கின்றனர். நாம் இந்திர, வருணன் பற்றிச் சொல்லும் விஷயங்கள் இவை. மழைக்குக் கூட நாம் இந்திர ஜபம் செய்வதில்லை; வருண ஜபம்தான் செய்கிறோம். ஆகவே இடி, மழை தெய்வமான தாருணாஸ்– வாருண –என்பதன் மறு வடிவமே.

 

ஹிட்டைட்ஸ் பேசிய மொழி சம்ஸ்கிருதத் தொடர்புடைய மொழி (Indo-European) என்பது எல்லா ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்வதே. அவர்களை அடுத்துவந்த மிடன்னி மன்னர்களின் பெயர்கள் தசரத, பிரதர்தன என்று இருப்பதால் இதில் வியப்படையத் தேவை இல்லை.

 

மேலும் காசைட்ஸ் நாகரீகம் பற்றி அதிகம் தெரியவில்லை. இவர்களைப் பற்றிய விஷயங்கள் வெளி வருகையில் மேலும் பல புதுமைகள் வெளியாகலாம்.

e0cb8-img_2228

வேதத்தின் காலம் பற்றி மாக்ஸ்முல்லர் முதலியோர் சொன்னதெல்லாம் தவறு என்பது தெளிவாகி வருகிறது. துருக்கியிலேயே ரிக்வேத மந்திர தெய்வங்கள் பெயரில் கி.மு.1350 வாக்கில் உடன்பாடு கையெழுத்தானதும், ரிக்வேதத்தில் கங்கை யமுனை நதிகள் வரை குறிப்பிடப்பட்டதும் உலகின் பிரம்மாண்டமான நிலப்பரப்பில் வேத முழக்கம் ஒலித்ததை உறுதி செய்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய பல நாடுகள் ஒரே காலத்தில் — அதாவது கி.மு.1600க்-கு முன்னரே- வேத தெய்வங்களைப் போற்றுவோர் கையில் இருந்ததைக் காட்டுகிறது.

–subham–

அதிதி தேவோ பவ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (POST NO.3796)

Written by London swaminathan

 

Date: 7 APRIL 2017

 

Time uploaded in London:- 14-55

 

Post No. 3796

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

விருந்தோம்பல் என்னும் பண்பை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியம் வலியுறுத்துவது போல உலகில் வேறு எங்கும் காணமுடியாது.

காளிதாசனும், சங்க இலக்கியப் புலவர்களும் இந்தப் பண்பை எப்படி வலியுறுத்துகின்றனர் என்று ஒரு சில எடுத்துக்காட்டுகளின் மூலம் காண்போம்.

 

ஆரிய-திரவிடப் பிரிவினைகள் பொய்மையானவை என்பதும்  இந்திய கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கலாசாரம்தான் என்பதும் இந்த ஒரு பண்பில் — விருந்தோம்பல் — என்னும் பண்பில் தெரிந்துவிட்டது. விருந்தினர்களைக் கவனிக்க முடியாத நிலை வந்துவிட்டதே என்று சீதையும் கண்ணகியும் வருத்தப்பட்டதை நமது இலக்கியங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதிலிருந்தே நமது பண்பாடு ஒன்று என்பது விளங்கும். அதுமட்டுமல்ல தைத்ரீய உபநிஷத் (1-20) காலத்திலிருந்து இதற்காக பல மந்திரங்களும் பாடல்களும் இருப்பது போல உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் காணமுடியாது. வள்ளுவர் எழுதிய திருக்குறள் போன்ற நீதி நூல்களில் இதற்கென்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கியதிலிருந்தும் இது விளங்கும்.

 

அதிதி தேவோ பவ விருந்தினரைக் கடவுளாகக் கருதுக – தைத்ரீய உபநிஷத் (1-20)

காளிதாசரின் ரகுவம்சத்தில்

 

“காட்டில் விளையும், ஆரோக்கியத்தைத் தரும் ‘செந்தினை’ எனும் தானியத்தில் ஒரு பகுதி விருந்தினர்களுக்காக ஒதுக்கப்படுகிறதா? அவைகளை மாடுகள் முதலியன மேய்ந்து சேதமாக்காமல் இருக்கின்றனவா? “(ரகுவம்சம் 5-9)

 

“கருணையுள்ள உமது குரு, உங்களை இல்லற வாழ்வுக்குச் செல்ல அனுமதித்தாரா? ஏனெனில் எல்லா ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் உதவுவது இல்லற தர்மம்தான்” (ரகு.5-10)

 

नीवारपाकादि कडंगरीयैरामृश्यते जानपदैर्न कच्चित्|
कालोपपन्नातिथिकल्प्यभागं वन्यं शरीरस्थितिसाधनं वः॥ ५-९

nīvārapākādi kaḍaṁgarīyairāmṛśyate jānapadairna kaccit
kālopapannātithikalpyabhāgaṁ vanyaṁ śarīrasthitisādhanaṁ vaḥ || 5-9

 

 

अपि प्रसन्नेन महर्षिणा त्वं सम्यग्विनीयानुमतो गृहाय|
कालो ह्ययं संक्रमितुं द्वितीयं सर्वोपकारक्षममाश्रमं ते॥ ५-१०

api prasannena maharṣiṇā tvaṁ samyagvinīyānumato gṛhāya
kālo hyayaṁ saṁkramituṁ dvitīyaṁ sarvopakārakṣamamāśramaṁ te || 5-10

 

இதே கருத்து திருக்குறளிலும் உள்ளது:—

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

பொருள்: இல்லறம் நடத்துபவன் மற்ற மூவர்க்கும் ( பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி) ஒரு துணையாவான்.

 

இன்னொரு இடத்தில், “ரகுவம்சத்தில் பிறந்தவர்கள் உயிரையே கேட்டாலும் கொடுப்பார்கள். ஆகவே விஸ்வாமித்ரர் கேட்டபடி ராமரையும் லெட்சுமணரையும் அவருடன் அனுப்பிவைத் தார் தசரதர்”(11-2) காளிதாசன் சொல்கிறான்.

 

இந்தக் கருத்து புறநானூற்றிலும் வருவது குறிப்பிடத்தக்கது:-

 

……… இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்

–புறம் 182, க.மா.இளம்பெருவழுதி

 

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் பற்றி வரும் இடங்கள் கணக்கிலடங்கா; இதோ ஒரு சில எடுத்துக் காட்டுகள்;-

புறம்.173-ல் சிறுகுடி கிழான் பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான்.

புறம்.18-ல் பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; என்ற வரியைப் பாடுகிறார்; இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது.

கோவூர்க்கிழார் பாடிய பாடலில் (புறம்.46), விருந் தின் சிறப்பு தி காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்- தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து; இது குறளிலும் வரும் (322).

 

புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி)-ல் மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல்,மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது.

 

அகம்.203, புறம்.177 முதலிய பாடல்களில் வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காக காத்திருக்கும் செய்தி வருகிறது!

மணிமேகலையில் சீழ்தலைச் சாத்த்னார் சொல்லுவது:

 

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

 

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

 

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

 

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

 

xxxx

FROM MY OLD POST:–

 

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்:–

 

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

 

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

 

மாஸோபாவாசீச பதிவ்ரதா ச

 

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

 

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.

 

–subham–

உள்ளம் பெருங் கோயில்–‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’ (Post No.3792)

Written by London swaminathan

 

Date: 6 APRIL 2017

 

Time uploaded in London:-9-57 am

 

Post No. 3792

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே

 

திருமந்திரம், பாடல் எண் 1823

 

பொருள்:-

 

மனமே இறைவன் இருக்கும் கருவறை/கோயில். கோபுர வாசல் நம்முடைய வாய். இதற்குள் குடி கொண்டிருக்கும் கடவுள் நமக்கு அருட் கருணைஅயை வாரி வழங்கும் கள்ளல்- கருணைக் கடல். சமய நூல்களைக் கற்றுத் தெளிந்தோர்க்கு ஆத்மாவே சிவலிங்கம். இந்தக் கோவிலில் எரியும் ஐந்து விளக்குகள் நம்முடைய ஐம்புலன்களாகும் எளிதில் தீய வழிகளில் செல்லக்கூடியவை என்பதால் கள்ளப் புலன்கள் என்றார் திருமூலர்.

 

“ஆத்மலிங்கம் பஜரே, அதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை நினைத்தே.

 

சுவரை வைத்துத்தான் சித்திரம் என்று தமிழில் ஒரு பழமொழி உள்லளது. ஆரோக்கியமான உடலின்றி மனிதன் ஆன்மீக முன்னேற்றம் அடைய முடியது. பலவீனமான உடலினால் ஆத்ம முன்னேற்றம் அடைய முடியாது என்பதால்தான், பகவத் கீதையைப் படிப்பதைவிட காலபந்து விளையாடுவது மேல் என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

அப்பர்  பெருமான் அருளுரை

 

அப்பரும் தேவாரத் திருப்பதிகத்தில் இந்தக் கருத்தை வலியுறுத்துவார்:

 

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்

பூசனை ஈசனார்க்குப்  போற்றவிக் காட்டினோமே

-நாலாம் திருமுறை, தேவாரம்

 

பொருள்:

இவ்வுடம்பைக் கோயிலாகவும்,  நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனதிற்குள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, அன்பை நெய்யும் பாலாய் நிறைய வைத்துப் பூசித்து, இறைவனைப் போற்றினேன்.

 

இந்தப் பாடல்களுக்கு பலவகையில் பொருள் கொள்ளமுடியும்:

 

1.இறைவன் எல்லோரிடமும் உள்ளான். ஆகவே எல்லோரையும்

நல்ல ஆத்மாவாகக் காண வேண்டும்

2.நாமே இறைவன்; அஹம் பிரம்மாஸ்மி– என்னும் உபநிஷத் கருத்து. எல்லோரிடமும் இறைவன் இருக்கிறான். அவனைக் காணும் பக்குவம்நமக்கு வேண்டும்.

3.மூன்றாவது பொருள்- இறைவனைத் தேடி ஆறு, கடல், கோயில், குளம், மலை, காடு என்று யாத்திரை போக வேண்டிய அவசியமில்லை அவனை உள்ளத்தில் பார்க்கத் தெரிந்து கொண்டால்.

  1. நாலாவது பொருள் — இறைவனை உணர வேண்டுமானால், உடலைச் சரிவரப் பாதுகாக்கவேண்டும். பலவீனனால் ஆத்மாவை உண்ர முடியாதென்று உபநிஷத் கூறும்.

‘சரீரமாத்யம் கலு தர்மசாதனம்’

 

காளிதாசனும் உடலைப் பராமரிக்கவேண்டியதன் அவசியத்தை ஒரு பொன்மொழியால் உணர்த்துகிறான்.

சரீரமாத்யம் கலு தர்மசாதனம்– குமார சம்பவம் 5-3

 

சிவனை அடைய தவமியற்றும் பார்வதியை ஒரு யோகி சந்த்தித்துச் சொல்கிறார்: உன் உடலின் சக்திக்கேற்ற தவத்தை மேற்கொண்டிருக்கிறாயா? ஏனெனில் தர்ம காரியங்களைச் செய்வதற்கு மூல நம்முடைய உடல்தான் ;அதாவ்து உடலை வருத்தி தவம் இயற்றுதல் அவசியமன்று.

 

உடலில் உயிர் துடிப்பு இருக்கும்வரை எந்தப் புருஷார்த்தத்தைத்தான் அடைய முடியாது? என்று கதாசரித் சாகரம் சொல்லும் (நான்கு புருஷார்த்தம்: அறம், பொருள், இன்பம், வீடு

சரீரே சதிகோ நாம புருஷார்த்தோ ந சித்யதி

 

நாமும் உடலை ஆலயமாகக் கருதி உள்ளத்தே ஆண்டவனைக் காண முயற்சியும் பயிற்சியும் செய்வோம்.

 

சுபம்–

பேயை விரட்ட எலியே போதும்! ஹிட்டைட்ஸ் கண்டுபிடிப்பு! (Post No.3785)

62cc8-img_2184

Written by London swaminathan

 

Date: 3 APRIL 2017

 

Time uploaded in London:- 20-56

 

Post No. 3785

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

19b62-img_2187

பேயை விரட்ட ஒவ்வொரு பண்பாட்டிலும் பலவகை மாய மருந்துகள், மந்திர, தந்திரங்கள் உள்ளன.

ஆனால் 3500 ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி, சிரியா முதலிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தை ஆட்சி செய்த ஹிட்டைட்ஸ் HITTITES மக்கள் எலியைக் கொண்டே பேய்களையும் செய்வினகளையும் விரட்டும் மந்திரங்களைப் பிரயோகித்தனர். இது பற்றிய விவரத்தைச் சொல்லுவதற்கு முன்னதாக ஹிட்டைட்ஸ் என்பவர்கள் யார் என்று காண்போம்.

இவர்கள் சம்ஸ்கிருத்துடன் தொடர்புள்ள ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசினர். ஆகையால் ஒரு காலத்தில், இந்தியாவிலிருந்து துருக்கி-சிரியாவுக்குக் குடியேறி இருக்கலாம். இவர்களுடைய ஆட்சி 450 ஆண்டுகளுக்குச் சிறப்பாக நடந்தது.

 

உலகில் முதல் முதலில் சர்வதேச (INTERNATIONAL TREATY) உடன்படிக்கையை, எழுத்து மூலம் செய்தவர்கள் தாங்களே என்று இவர்கள் பெருமை பேசுவர். ஹிட்டைட்ஸ் ஆண்ட பகுதியின் தலை நகர் ஹட்டுசா (Hattusa) . இதன் தற்போதைய பெயர் (Bogazkoy) பொகாஸ்கோய். இது துருக்கியில் உள்ளது. இங்கு 1920-களில் நூற்றுக் கணக்கான களிமண் பலகைக் கல்வெட்டுகள் கிடைத்தன. அதில் இந்த உடன்படிக்கை பொறிக்கப்பட்டுள்ளது.

 

(பொகாஸ்கோயில்தான் கி.மு.1380 ஆம் ஆண்டு சம்ஸ்க்ருதச் சொற்களுடைய கியுனிபார்ம் லிபி கல்வெட்டும் கிடைத்தது. இதில் ரிக் வேத தெய்வங்கள், வேத மந்திரத்திலுள்ள அதே வரிசைக் கிரமத்தில் உள்ளதால், அப்போதே ரிக்வேதம் துருக்கி வரை சென்றதற்கான சான்றுகள் கிடைத்தன. இதன் பிறகு குதிரைப் பயிற்சிப் புத்தகம் சம்ஸ்கிருத எண்களுடன் கிடைத்தது).

 

ஹிட்டைட்ஸ் சர்வதேச உடன்படிக்கை சத்சீலி என்ற மன்னனுக்கும் எகிப்திய மன்னன் இரண்டாம் ராமசெஸ்ஸுக்கும் இடையே கையெழுத்தானது. ஒருவர் படைவீரர்களை ஒருவர் துன்புறுத்தக் கூடாது; மனைவி மக்களைப் பழிவாங்கக் கூடாது;  அவரவர் போர்க்கைதிகளை மரியாதையுடன் பரிமாறிக்கொள்வோம் என்று அந்த உடன்படிக்கை கூறுகிறது. தற்காலத்தில் உள்ள எல்லா  உடன்படிக்கை களுக்கும் இது மூல உடன்படிக்கையாகச் செயல்படுகிறது.

 

( நான் முன்னர் எழுதிய கட்டுரையில் நச்சினார்க்கினியர் சொல்லும் ஒரு அதிசய விஷயத்தை குறிப்பிட்டிருந்தேன். பாண்டிய மன்னனுக்கும் ராவணனுக்கும் இடையேயுள்ள சமதான உடன்படிக்கை பற்றி நச்சி. அதில் கூறியிருக்கிறார். மஹாபாரத, ராமாயண இதிஹாச நூல்களிலும் உடன்படிக்கை பற்றி வருகிறது ராமனுக்கும்- சுக்ரீவனுக்கும்  இடையே அக்னி சாட்சியாக ஏற்பட்ட உடன்படிக்கையில் உனது நண்பன் எனது நண்பன்; உனது எதிரி எனது எதிரி என்று ராமன் சொல்கிறான். இப்போதுள்ள நாட்டோ (NATO) ராணுவ ஒப்பந்தங்களுக்கெல்லாம் மூல உடனபாடு நம்முடையது. ஆனால் பெரிய வித்தியாசம்; இன்று கல்வெட்டு வடிவில் நமக்குச் சான்றுகள் இல்லை; ஹிட்டைட்ஸ்களிடம் இருக்கிறது!)

இன்னொரு சுவையான விஷயமும் களிமண் கல்வெட்டில் உளது; ஒரு மன்னன் தன் மகன் பற்றிப் புகார் செய்யும் கல்வெட்டு அது. அவன் நடத்தை சரியில்லாதவன் என்று சொல்லி, மகனுக்குப் பட்டம் கட்டாமல் வேறு ஒருவனுக்கு அரசன் பட்டம் கட்டிவிட்டு அவனுக்கு மக்களிடம் இரக்கத்துடன், கருணையுடன் நடந்துகொள் என்று உத்தரவிடும் கல்வெட்டு அது.

(இதுவும் இந்துக்களிடம் இருந்து சென்ற கோட்பாடே. வேனன் என்ற புராண கால அரசனை மக்களே தூக்கி எறிந்தனர். விஜயபாஹு என்ற கலிங்க மன்னனை, அவனது தந்தையே நாடு கடத்வே அவன் இலங் கையில் புதிய வம்சத்தை நிறுவினான். மனுநீதிச் சோழனோ தவறிழைத்த மகனையே தேர் சக்கரத்தில் நசுக்கினான்.)

 

அரசனைத் தேர்ந்தெடுக்கும் சபையைக் கலந்தாலோசியுக்கள் என்று இன்னும் ஒரு கல்வெட்டு சொல்லும்; இதுவும் இந்தியாவில் சென்ற கருத்தே; வேதகாலத்தில் சபா, சமிதி இருந்ததை வேதமே சொல்கிறது அதற்கடுத்த காலத்தில் எண்பேராயம், ஐம்பெருங்குழு  இருந்ததை சங்கத் தமிழ் இலக்கியமும் சம்ஸ்கிருத இலக்கியமும் செப்புகின்றன

 

உலகிலுள்ள எல்லா கலாசாரங்களைப் போல ஹிட்டைட்ஸ் மக்களிடமும், பேய், பிசாசு, செய்வினை, தீட்டு, அபசாரம், கடவுளின் கோபம், இறந்தோரின் கோபம், நோயைக் கொடுக்கும் தீய சக்திகள் என்றெல்லாம் பல நம்பிக்கைகள் இருந்தன. அதை நீக்குவதற்கு ஆண்களில் குறி சொல்லுவோரும், மூத்த பெண் சோதிடரும்/ குறி சொல்வோரும் இருந்தனர். செய்வினை, தீவினை, முன்வினைகளை ஏதாவது ஒரு பொம்மை, உருவம், அல்லது பிராணிகளின் மீது ஏற்றி அதை விரட்டிவிடுவது அல்லது புதைப்பது வழக்கமாக இருந்தது. இந்தச் சடங்கு , பாதிக்கப்பட்ட ஆளின் வீட்டில் நடக்கும்.

இந்த மந்திர தந்திரங்களில் கைகள் மூலம் பலவிதமான சைகைகள், சமிக்ஞைகளையும் பயன்படுத்துவர்

8d7e5-img_2191

எலியை விரட்டு!

பதிக்கப்பட்ட ஒருவரின் வலது காலிலும் கையிலும் கயிற்றைக் கொண்டு ஒரு  தகரத்தைக் கட்டிவிடுவர். பின்னர் மந்திரங்கள் சொல்லிவிட்டு, அந்தத் தகரத்தை ஒரு எலியின் மீது கட்டிவிட்டு கீழ்கண்ட மந்திரத்தை பேய் விரட்டும் மந்திரவாதி சொல்லுவார்:

“நான் இந்த ஆளிடம் இருந்த தீய சக்தியை எடுத்து எலியின் மீது சுற்றிவிட்டேன்; இந்த எலியானது காடு, மலை, கிராமம், பள்ளத்தாக்கு என்று ஓடட்டும். ஏ! ஜார்னிஜா, ஏ தார்படஸ்ஸா எடுத்துக்கொள்” — என்று இவ்வாறு இரண்டு துஷ்ட தேவதைகளின் பெயர்களைச் சொல்லி எலியை விரட்டிவிடுவர்.

பேயும் அதனுடன் போய்விடும் என்று நம்புவோமாக!.

 

–சுபம்–

ஆத்ம தரிசனம்- ஆன்மீக மின்னணு இதழ் (Post No3771)

Written by S NAGARAJAN

 

Date: 30 March 2017

 

Time uploaded in London:-  5-59 am

 

 

Post No.3771

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

ஆன்மீக இதழ் அறிமுகம்

 

ஆத்ம தரிசனம்

ஆன்மீக மின்னணு இதழ்

 

‘ஆன்மீக பொக்கிஷம்’ என்றும் ‘நமது பாரத தேசத்தின் ஆன்மீகம், கலை, கலாசாரம், பண்பாடு, சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இவைகளை நம் ஆன்மா உணர்ந்து கொள்ள ஆத்ம தரிசனம்’ என்றும் முதல் பக்க பீடிகையோடு சென்னையிலிருந்து வெளி வரும் பத்திரிகை ஆத்ம தரிசனம்

 

மார்ச் 2017 இதழில் சத்தியவான் சாவித்திரி பற்றிய கதையைக் காண்கிறோம்.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் வாழ்க்கை வ்ரலாறு அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ள கட்டுரை இந்த இதழுக்குப் பெருமை சேர்க்கிறது

 

மஹாபாரதத்தில் அர்ஜுனனின் தேர் எதனால் எரிந்தது என்ற கதையை அடுத்துக் காண்கிறோம்.

 

வேதத்தில் பெண்மை என்ற கட்டுரையில் வேதம் பெண்களை இழிவு படுத்தியிருக்கிறதா என்பது அலசி ஆராயப்பட்டிருக்கிறது. அப்படி சில ஸ்லோகங்கள் இருப்பின் அவை இடைச்செருகல் என்பதை கட்டுரை ஆசிரியர் கூறுவதோடு நாம் பிறந்த பூமியை தாய் நாடு பாரத மாதா என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுவதிலிருந்தே வேதம் பெண்மையை எப்படிப் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறது என்பதை அறியலாம் என முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

 

இந்த இதழ் பெண்மைச் சிறப்பிதழ் என்பதால் இந்தக் கட்டுரை பெண்மையின் சிறப்பைப் போற்றும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், காரடை செய்யும் விதம்,ஹோலி பண்டிகை தோன்றிய வரலாறு போன்ற கட்டுரைகளுடன் பிள்ளையார் தலங்கள் சிலவற்றைப் பற்றிய பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரையும் இதழுக்கு அழகு சேர்க்கிறது.

 

நமது வைதீக கலாசாரத்தைப் பாதுகாக்க புராண பிரவ்சனம். பெரியோர்களின் அணுக்க தீட்சை, மகான்களின் தரிசனம், ஆலய வழிபாடு, குல தர்மப்படியான சடங்குகள், வழிபாடுகள், மக்களுடன் இணைந்து ஒரு தாய் மக்களாக கொண்டாடப்படும் பண்டிகைகள், இசை, நாடகம் வழியே பரம்பரைக் கதைகளை உணரும் அனுபவம் போன்ற ஏராளமான வழிகள் உள்ளன. இவற்றுடன் பத்திரிகையும் ஒரு வழியாக இணைந்தது.

 

 

காலத்திற்கேற்றவாறு சென்ற தலைமுறைகளில் வைதிக மார்க்கத்தின் பெருமைக்கு பெரும் அணியாக தர்ம பத்திரிகைகள் புதிய பொலிவுடன் மக்களைக் கவரும் வண்ணம் வெளி வர ஆரம்பித்தன. ஆனால் காலப் போக்கில் இவற்றில் பல வணிக நோக்குள்ள்வையாக காலத்தின் கட்டாயத்தால் மாற்றப்படவே உண்மையான அற உணர்வுகளை ஆதாரத்துடன் கூறும் பத்திரிகைகள் குறைந்தே போயின்.

 

 

ஸ்ரீ வத்ஸ சோமதேவ சர்மாவின் வைதீக தர்மவர்த்தனி உள்ளிட்ட சில குறிப்பிடத்தகுந்த பத்திரிகைகள் கடந்த காலத்தில் உலவி வந்தன..

 

இந்த வகையில் பழைய பாரம்ப்ரிய வழியில் ஆத்ம் தரிசனம் வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நல்ல செய்தி!

அதுவும் காலத்திற்கேற்றபடி டிஜிடல் முறையில் அதி நவீன தொழில்நுட்பத்தையும் தன்னுள் கிரகித்து உலகளாவிய விதத்தில் ஒரு நொடியில் ஆன்மீக உணர்வு அனைவரையும் சேரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பான செய்தி.

ஆசிரியர் குழுவைப் பற்றிய செய்தி நம்மை நம்பிக்கை கொள்ள வவக்கிறது.

 

 

இதன் ஆசிரியர் சிம்மம் ரகு. இந்திய தொலைக் காட்சிக்கு பல வருடங்கள் நிகழ்ச்சிகள் தயாரித்த பெரிய பின்புலமே இவரது பலம்.

முனைவர் இராகவேந்திர ஷர்மா  மீமாம்ஸ சாஸ்திர நிபுணர் இந்த இதழில் வேதமும் பெண்மையும் பற்றிய கட்டுரை இவருடையதே.

 

 

திரு ஹரிகேசநல்லூரி வெங்கட்ராமன், திருமதி இராஜேஸ்வர், திருமதி ஐஸ்வர்யா நிதேஷ் ஆகியோரும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

 

34 பக்கங்கள் கொண்ட இதழின் விலை ரூ 15/

குட்டையும் ஷொட்டையும் சுட்டிக் காட்டச் சொல்கிறது ஆசிரியர் குழு.

 

ஷொட்டுகளே அதிகம்.

 

வடமொழி மூலத்துடன் தமிழ் உரை கொண்ட பல கட்டுரைகள் வெளியிடப்பட்டால் இப்போது வெளியிடப்பட்டு வரும் ஆன்மிக இதழ்களிடமிருந்து மாறுபட்டு இந்த இதழ் தனித்து விளங்கும். இதைச் செய்வதற்கான இதன் பலம் இதன் டிஜிடல் வடிவமே!

 

முதல் பாராவில் நாம் பார்த்த பத்திரிகையின் பீடிகையை உண்மையாக்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஆத்ம தரிசனம் வெற்றியுடன் தர்ம பவனி வர வாழ்த்துக்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

 

ஆத்ம தரிசனம்

எண் 1, மீனாட்சி பிளாட்ஸ்.

135, பாலகிருஷ்ணன் (நா) தெரு,

மேற்கு மாம்பலம், சென்னை- 600033

கைபேசி எண்கள் 9841263010, 9445692485

மின்னஞ்சல் : athmadarshan@yahoo.com

***