யார், யார், யார் அவர் யாரோ? தமிழ் இலக்கிய க்விஸ்/QUIZ (Post No.4536)

Written by London Swaminathan 

 

Date: 23 DECEMBER 2017 

 

Time uploaded in London- 16-24

 

 

Post No. 4536

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

யார் சொன்னார்? எதில் சொன்னார்?

1.கோபத்திலே நாடியிலே அதிர்ச்சியுண்டாம்

அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்துபோகும்

கவலையால்  நாடியெல்லாம் தழலாய் வேகும்

2.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே

3.கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக

4.ஆணெல்லாம் காதலை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?

5.மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

 

6.சொல்லிலும் இலாபம் கொள்வர்

7.வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

8.என்று நீ அன்று நான் உன்னடிமை

  1. குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரன்
  2. தன்னைச் சிவமென்றறிந்தவனே அறிந்தான்; தூயதாகிய

நெஞ்சுடையவர்க்குத்தாமே சிவமாய்த்தோன்றுமன்றே

11.வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை, உல்கமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

  1. இம்மென்னுமுன்னே எழுநூறும் எண்ணூறும்

அம்மெனவே ஆயிரம் பாட்டாகாதோ

  1. கவலயற்றிருத்தலே முத்தி
  2. முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

  1. பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்

திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை

16.எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்

  1. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

  1. பேசுவது மானம் இடைபேணுவது காமம்
  2. தேவர் குறளும் திருநான்மறைமுடிவும்

மூவர் தமிழும்  திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகமென்றுணர்

  1. திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்

 

ANSWERS

1சுப்ரமண்ய பாரதி, 2. தாயுமானவர், 3. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 4. சுப்ரமண்ய பாரதி, 5. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 6. சிவஞான முனிவர் (காஞ்சிபுராணம்- வணிகர்), 7. திரிகூட ராசப்ப கவிராயர், திருக்குற்றாலக் குறவஞ்சி, 8.தாயுமானவர், 9.குமரகுருபர சுவாமிகள், 10.சிவப்பிரகாச சுவாமிகள், 11.பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், 12.காளமேகப் புலவர், 13. சுப்ரமண்ய பாரதி,14.திருப்புகழ், அருணகிரி நாதர், 15.வரந்தருவார், வில்லிபாரதம், 16.சேக்கிழார், பெரியபுராணம், 17. மூதுரை, அவ்வையார், 18.கம்பன், கிட்கிந்தா காண்டம், 19. மூதுரை, அவ்வையார், 20. கந்த புராணம், கச்சியப்ப சிவாசாரியார்

 

–SUBHAM–

 

 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்- சாணக்கியன்! (Post No.4535)

Written by London Swaminathan 

 

Date: 23 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-16 am

 

 

Post No. 4535

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

எல்லோருக்கும் தெரிந்த பழமொழி- ஆயினும்

நாம் அளவோடு சாப்பிடுகிறோமா? இல்லை;

அளவோடு பேசுகிறோமா? இல்லை

அளவோடு செலவழிக்கிறோமா? இல்லை;

அளவோடு FACEBOOK முகநூல், TV டெலிவிஷன், WHATSUP வாட்ஸப்பில் இருக்கிறோமா? இல்லை

 

அந்தக் காலத்திலேயே அளவு பற்றி அழகாகச் சொன்னான் சாணக்கியன்! அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்துதான்.

 

 

அதிரூபேண வை ஸீதா ஹ்யதிகர்வேன ராவணஹ

அதிதானம் பலிர்தத்வா சர்வத்ர வர்ஜயேத்

–சாணக்ய நீதி, அத்தீயாயம் 3, ஸ்லோகம் 12

 

 

பொருள்

சீதைக்கு அதிக அழகினால் ஆபத்து நேரிட்டது;

ராவணனுக்கு அதிக கர்வத்தால் ஆபத்து நேரிட்டது;

பலிச் சக்ரவர்த்திக்கு அதிக கொடையால் ஆபத்து நேரிட்டது.

 

ஷேக்ஸ்பியரும் AS YOU LIKE IT ஆஸ் யூ லைக் இட் என்ற நாடகத்தில் அழகு பற்றி எச்சரிக்கிறான்:

 

ROSALIND

Alas, what danger will it be to us,

Maids as we are, to travel forth so far?

Beauty provoketh thieves sooner than gold.

 

அழகு என்பது தங்கத்தை விட விரைவில் திருடர்களைக் கவர்ந்திழுக்கக்கூடியது- ரோஸாலிண்ட்

 

இதனால்தான் பெரியோர்கள் சொன்னார்கள்: அளவோடு நில்.

வள்ளுவனும் சொல்கிறான்:

மயில் தோகை எவ்வளவு மென்மையானது? அதை, வண்டியில் ஏற்றினாலும் அதற்கும் ஒரு அளவு உண்டு. உச்ச கட்ட பாரத்துக்கும் மேலாக ஒரு மயில் தோகையை ஏற்றினாலும் வண்டியின் அச்சு முறிந்து விடுமாம்! என்ன அற்புதமான உண்மை!

 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின் (குறள் 475)

 

 

பலிச் சக்ரவர்த்தி அதிக தானம் கொடுத்து அழிந்த கதையை நினைவிற்கொண்டு வள்ளுவனும் பாடுகிறான்:

 

உளவரை தூக்காத ஒப்புரவாண்மை

வளவரை வல்லைக் கெடும் (480)

பொருள்

ஒருவனிடம் உள்ள பொருளின் அளவைக் கணக்கிடாதபடி அவன் அதிக தானம் செய்தால்– உபகாரம் செய்தால்- அவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் தேய்ந்து போகும்;

 

( பலிச் சக்ரவர்த்தி நாட்டையும் மன்னர் பதவியையும் இழந்தான்)

இன்னும் ஒரு குறளில் மேலும் தெளிவாக உரைக்கிறார்:

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள் 479)

 

பொருள்:

ஒருவனின் வருமானத்துக்கு ஏற்ப வாழாதவன் வாழ்க்கை , முதலில் பகட்டான காட்சியைத் தரும் பின்னர் ஒன்றுமில்லாமற் (புஸ்வாணம்) ஆகிவிடும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்!

 

யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? புலவரின் சவால்! (Post No.4525)

Date: 21  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-54 am

 

Wriien by S NAGARAJAN

 

Post No. 4525

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

தமிழ் இன்பம்

அரிகண்டம் ஏறிப் பாடத் தயாரா? யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? அதிசயத் தமிழ்ப் புலவரின் சவால்!

 

ச.நாகராஜன்

 

1

தமிழ் மொழியின் ஆற்றல் எல்லையற்றது என்றால் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து அந்த ஆற்றலின் மூழு வீச்சையும் தம் கவிதைகளிலே காட்டிய புலவர்களின் பெருமையும் எல்லையற்றது தான்.

 

அவ்வப்பொழுது காலத்திற்கேற்றவாறு தமிழன்னை கண்ட புதல்வர்கள் ஏராளம். அவர்கள் கவிதைகளின் அருமை ஒரு புறம் இருக்க, அதை அவர்கள் எப்படிப்பட்ட அபாயத்தையும் எதிர்கொண்டு பாட அஞ்சவில்லை என்பது உளத்தை உருக்க வைக்கும்; பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

 

 

இப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில் உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும் ஒரு கவிஞர் தன் திறமையைக் காட்டியிருக்காரா என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்.

 

 

கவி காளமேகம் என்று மிகவும் பிரபலம் அடைந்திருந்த புலவரைப் பற்றிய செய்திகளும், அவரது கவிதைகளும் நம்மை பிரமிக்க வைப்பவை.

 

 

கவி காளமேகப் புலவரின் 160 பாடல்கள் என் தொகுப்பில் உள்ளன. சுவை மிகுந்த பாடல்கள். புத்தி கூர்மையையும், தனக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் அந்த புத்தி சாதுரியத்தை இலக்கண வழு இல்லாமல், அனைவரும் வியக்கும் படி காட்டியும் அமைக்கப்பட்ட பாடல்கள்.

 

 

தமிழின் மேன்மைக்கும் தமிழ்ப் புலவர்களின் புத்தி கூர்மைக்கும் இன்னும் ஒரு சான்று அரிகண்டப் பாடல் பாடுவீரா என்று கேட்கப் போய் யமகண்டப் பாடல்களையே பாடுவேனே என்று கூறிப் பாடிய கவி காளமேகம் என்னும் அற்புதக் கவிஞர்!

 

2

அதிமதுரக் கவிராயர் என்பவர் 64 தண்டிகைகாரர்கள் புடைசூழ திருமலைராயன் பட்டிணத்தில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புடன் கவி அரசோச்சி வந்தார்.

 

காளமேகம் என்னும் ஒரு மாபெரும் கவி அவரையும் விஞ்சும் ஆற்றல் படைத்தவர் என்பதை அறிந்து அவருக்கு அதிர்ச்சி உண்டானது.

காளமேகம் அதிமதுரக் கவிராயருக்கு பராக்கு கூறுகின்றவனை நோக்கி, “ நீ கட்டியம் கூறுகிறாயே, அது முறையா? இவனை அதிமதுரம் என்று கூறுகின்றாயே, அப்படி என்ன புதுமை இவனிடம் இருக்கிறது? காட்டில் உண்டாகும் சரக்கு, காரமில்லாத சரக்கு. தனியே பிரயோகிக்க முடியாமல் வேறு சரக்குடனே கூட்டிப் பிரயோகிக்கும் சரக்காகிய மலைக்குன்றிமணி வேரை உலகத்தார் ஆதிகாலம் தொட்டு அதிமதுரம் என்று வழங்கி வருவது சகஜம். ஆகவே நீ கட்டியம் கூறுவது முறையல்ல” என்று கூறியவர் அதை ஒரு பாடலாகவும் அமைத்தார்.

 

 

‘அதி மதுரமென்றே யகிலமறியத்

துதி மதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன

காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு”

என்ற பாடலை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

 

அதைக் கண்ட அதிமதுரக் கவி இந்த பகிரங்க சவாலைக் கண்டு அயர்ந்து போனார்.

 

காளமேகம் யார் என்பதை விசாரிக்க ஒருவனை அனுப்பினார்.

அவனைக் கண்ட காளமேகம் தான் யார் என்பதை ஒரு பாடலாகவே தந்து அனுப்பி விட்டார்.

 

தூதைந்து நாழிகையி லாறுநாழிகைதனிற் சொற்சந்தமாலை சொல்லத் துகளிலா வந்தாதி யேழு நாழிகைதனிற் றொகைபட

விரித்துரைக்கப்,

 

பாதஞ்செய் மடல்கோவை பத்துநாழிகைதனிற் பரணியொரு நாண்முழுதுமே  பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடி கட்டினேன்,

 

சீதஞ்செயுந் திங்கண்மரபினோ னீடுபுகழ்  செய்ய திருமலைராயன் முன் சீறுமாறாகவே தாறுமாறுகளசொல் திருட்டுக் கவிப்புலவரைக்,

காதறுத்துச் செருப்பிட்டடித்து கதுயபிற்புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமிட்டேறு கவிகாளமேக நானே!”

 

இந்தப் பாடலைக் கண்ட அதிமதுர கவிராயர் திகைத்துப் போனார்.

“ஐந்து நாழிகையில் தூது பாட வல்லவன். (இரண்டரை நாழிகை ஒரு முகூர்த்தம் அதாவது ஒரு மணி நேரம். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஐந்து நாழிகை என்றால் இரண்டு மணி நேரத்தில் ஒரு தூது நூல் முழுவதும் இயற்ற வல்லவன்!)

ஆறு நாழிகையில் சொற் சந்த மாலை ( அதாவது ஆறு x 24 நிமிடங்களில் சொற் சந்த மாலை ரெடி!)

 

அந்தாதி வேண்டுமா? ஏழு நாழிகையில் ரெடி!

மடல், கோவை பத்து நாழிகையில் ரெடி ஆகும்!

பரணி பாட தேவை ஒரு நாள் தான்!

பார காவியம் இயற்ற ஓரிரு நாள் போதும்.

 

திருமலைராயனை ஏமாற்றித் திருட்டுக் கவி புனைவோர் கவனிக்கவும்,

இதை எழுதுவது கவி காளமேகமாகிய நான் தான்!”

அதிமதுரகவி தனது 64 தண்டிகைகாரரையும் நோக்கி அந்தக் காளமேகம் இங்கு வந்தாலும் வரலாம். அவரை அரசனை நெருங்க வழி விடாதபடி சுற்றி அரண் அமைத்து அமருங்கள் என்று கட்டளையிட்டார்.

 

திருமலைராயன் அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் புயலென காளமேகம் அங்கு வந்தார்.

தன்னை அரசனிடம் போக விடாதபடி செய்யப்பட்ட சூழ்ச்சியைக் கண்டார்.

 

ஒரு எலுமிச்சம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை மன்னனுக்கு நேரே நீட்டி  ஸ்வஸ்தி சுலோகம் ஒன்றைக் கூறலானார்.

 

பிராமணர் ஒருவர் வாழ்த்திக் கூறும் ஸ்லோகத்தையும் அவர் தரும் எலுமிச்சையும் ஒரு மன்னன் நிச்சயம் வாங்க வேண்டும் என்ற விதிமுறையால் மன்னன் தானே வந்து அதை வாங்கிக் கொண்டான்.

 

ஆனால் கவிஞரை அமரச் சொல்லவில்லை.

நேராக மனதிற்குள்ளாகவே அகிலாண்டேஸ்வரி விமானத்தை தரிசித்து அன்னை சாரதை தேவியை மனக் கண்ணில் ஏற்றி, அவர் பாடினார்:

 

“வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றி ருப்பாள் – வெள்ளை

அரியாசனத்தி னரசரோடென்னைச்,

சரியாசனத்து வைத்த தாய்”

 

இந்தப் பாடலைக் கூறியவுடன் அன்னை மனம் கனிந்தாள். அரசனது அரியாசனம் ஒரு பக்கமாக வளைந்து இடம் கொடுத்தது.

 

அதில் அமர்ந்தார் கவி காளமேகம்.

 

3

அங்கிருந்த அதிமதுரக் கவிராயர் திகைக்க காளமேகம் அவரை நோக்கி, “நீங்கள் யார்?” என்றார்.

‘நானா! என்னையா கேட்கிறாய்? நான் கவிராஜன்” என்று கர்வத்துடன் பதில் கூறினார் அதிமதுரக்கவிராயர்.

காளமேகம் கவி என்பதற்கு குரங்கு என்று பொருள் கொண்டு அவரைக் கிண்டலடித்தார்.

 

“கவி ராஜன் என்கிறாயே! உனது வால் எங்கே? நாலு கால் எங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே” என்ற பொருள்பட பாடல் ஒன்றைப் பாடினார்:

 

“வாலெங்கே, நீண்டெழுந்த வல்லுயிரெங்கே நாலு

காலெங்கே யூன் வடிந்த கண்ணெங்கே – சால

புவிராயர் போற்றும் புலவீர்கா னீங்கள்

கவிராய ரென்றிருந்தக் கால்”

 

 

கோபம் கொண்ட அதிமதுரக் கவிராயர், “ நீர் கவி காளமேகம் என்றால், அரிகண்டம் பாடுவீரா?” என்று கேட்டார்.

“அரிகண்டம் என்றால் என்ன?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் காளமேகம்.

 

“கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும். எதிரி கொடுக்கும் சமிசைக்கு இணங்க உடனடியாகப் பாடவேண்டும். அப்படிப் பாடுவது தான அரிகண்டம். உன்னால் முடியுமா? பாடத் தயாரா?” என்றார் அதிமதுரக் கவி.

 

பயந்து ஓடி ஒளிவார் காளமேகம் என்று எதிர்பார்த்த அதிமதுரக் கவிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

 

“பூ! இவ்வளவு தானா! நான் யமகண்டமே பாடுவேன். நீங்கள் பாடத் தயாரா?”

 

யமகண்டம் என்றால் என்ன என்று தெரியாத அதிமதுரகவி யமகண்டம் என்றால் என்ன என்று கேட்டார்.

 

காளமேகம் யமகண்டத்தை விளக்கினார் இப்படி:

 

பூமியில் பதினாறு அடி நீளம், பதினாறு அடி அகலம், பதினாறு அடி ஆழம் கொண்ட ஒரு குழியை வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறு அடி இரும்புக் கம்பங்களை நாட்ட வேண்டும். கம்பத்தின் மேல் நான்கு பக்கத்திலும் இரும்பினால் செய்த நான்கு சட்டங்களை அமைக்க வேண்டும். அதன் நடுவிலே ஒரு சட்டம் பொருத்த வேண்டும். நடுச் சட்டத்தில் உறி கட்ட வேண்டும். குழிக்குள்ளே பருத்த புளியங்கொட்டைகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பு மூட்ட வேண்டும். அது கனன்று எழுந்து ஜுவாலையுடன் எரியும் போது, அந்த நெருப்பில் ஒரு ஆள் உயரமுள்ள இரும்புக் கொப்பரை ஒன்றை வைக்க வேண்டும். கொப்பரையை எண்ணெயால் நிரப்ப வேண்டும். அதில் அரக்கு, மெழுகு, குங்கிலியம், கந்தகம், சாம்பிராணி ஆகியவற்றை இட்டு நிரப்பி அவை நன்றாகக் காயும்படி செய்ய வேண்டும், அவை காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க, அப்போது,

 

நான்கு யானைகளை பாகர்கள் மதம் ஏற்ற வேண்டும். அவற்றை கம்பத்திற்கு ஒன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைத்திருக்க, பின்புறத்தில் வளையம் வைத்து , வளையத்தில் சங்கிலி கோர்த்து,  எஃகினால் கூர்மையாக சமைக்கப்பட்ட பளபளவென்று மின்னும் படி சாணை பிடிக்கப்பட்ட எட்டுக் கத்திகளை, கழுத்தில் நான்கும், அரையில் நான்குமாகக் கட்டிக் கொண்டு , கத்திகளின் புறத்தில் உள்ள சங்கிலிகளை நான்கு யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைத்து, தான் கொப்பரைக்கு நேராகத் தொங்குகின்ற உறி நடுவில் ஏறி, எவரெவர் என்னென்ன சமிசை கொடுத்தாலும் அவற்றை அரை நொடிக்குள் தடையின்றி கேட்டவர் குறித்த கருத்து வரும்படி பாட வேண்டும், அப்படிப் பாடும்போது வழு ஏற்படுமானால், சமிசை கொடுத்தவர்கள் யானை மேலிருக்கும் பாகர்களுக்கு கண் சைகை காட்ட, அவர்கள் யானைகளின் மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்ட,  அவைகள் தமது தும்பிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை விசையுடன் வேகமாக இழுக்க, அப்படி இழுத்தவுடன் புலவன் கழுத்தும், அரையும் கத்திகளால் துண்டிக்கப்பட்டு தலை ஒரு துண்டமாகவும், அரை முதல் கால் வரை ஒரு துண்டமுமாகி கொதிக்கின்ற எண்ணெய் கொப்ப்ரையில் விழும். இப்படி விழுந்து மாண்டு போவது தான் யமகண்டம்.

 

 

கோரமான இந்த யமகண்டத்தைக் கேட்ட அதிமதுரக் கவிராயரும், 64 தண்டிகைகாரர்களும், திருமலைராயனும், கூடியிருந்த மக்களும் திகைத்துப் போயினர்.

 

திடுக்குற்ற அதிமதுரக் கவி, “இதைச் சொன்ன நீரே செய்து காண்பியும்” என்று சவால் விட சவாலை ஏற்ற கவி காளமேகம் மேகமென கேட்ட கேள்விக்கெல்லாம் கவி மழையாகப் பதில் அளித்தார். கடினமாகக் கொடுக்கப்பட்ட கவிதைப் புதிர்களை எதிர் கொண்டார்.

 

64 தண்டிகைகாரர்களும் அயர்ந்து போக, மன்னன் பிரமிக்க, அதிமதுரக் கவி திகைக்க காளமேகம் பாடிய பாடல்கள் ஒரு தனி வரலாறையே படைத்தன.

 

 

4

சற்று எண்ணிப் பார்ப்போம். கற்பனைக்காகக் கூட உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு புலவர் பாடியதாக கற்பனை கதை கூடக் கிடையாது.

 

ஆனால் நம்மிடமோ கவி காளமேகத்தின் அற்புதமான பாடல்கள அனைத்தும் உள்ளன.

 

கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்.

இன்றளவும் அவை நிலைத்து நிற்கின்றன!

காளமேகம் யமகண்டம் பாடி அரங்கேறிய கவிதைகள் காலத்தை வென்றவை; அவை கவிஞரின் புகழை மட்டும் நிலை நிறுத்தவில்லை;

தண்டமிழின் பெருமையையும் உயரத்தில் ஏற்றிக் காத்து வருகின்றன, இன்றளவும்.

 

 

5

என்னிடம் இருக்கும் பழைய பிரதி ஒன்றில் உள்ள யமகண்டம் பற்றிய விளக்கத்தையும் காளமேகம் பற்றிய செய்தியையும் இன்றைய நாளுக்கு  ஏற்றபடி எளிய தமிழில் தந்துள்ளேன்.

பாடல்களைத் தனியே பார்க்கலாம்.

 

இவை கால வெள்ளத்தில் அறியப்படாமலேயே போய்விடக் கூடாதென்று தான் இந்தக் கட்டுரையை அளிக்க முற்பட்டேன்.

இதே போல் தமிழகத்திற்கே தனிப்பட்டதான ‘விச்சுளி வித்தை’ பற்றி பாக்யா இதழில் எழுதி, அது www.tamilandvedas.com இல் வெளிவந்ததையும் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்.

 

இன்னும் இப்படி பல தமிழ் நாட்டிற்கென்றே உரித்தான பல விஷயங்கள் உள்ளன.

 

அவற்றை அறிந்து போற்றுவது இன்றைய தமிழரின்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த புத்தகங்கள் (POST NO.4496)

Date: 15  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-10 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4496

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

திருநெல்வேலியிலிருந்து ஆர்.சி.ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஆரோக்கிய மேம்பாட்டு மாத இதழ் ஹெல்த்கேர். அதில் டிசம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 2017ஆம் ஆண்டின் மிகச் சிறந்த புத்தகங்கள்

 

ச.நாகராஜன்

Eat well, move better and feel awesome

 

ஜான் சாப்மேன் மற்றும் லிஎஆன் புஷின்  (John Chapman & Leon Bushin) ஆகிய இந்த இருவர் எழுதியுள்ள ந்ன்றாகச் சாப்பிடுங்கள், நன்கு இயங்குங்கள், பிரமாதமாக உணருங்கள் என்ற புத்தகம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ள ஒர் புத்தகம்.இவர்கள் உடல்பயிற்சி ஆரோக்கியம் பற்றிய பயிற்சியாளர்கள்.

அவர்கள் தங்களுக்குப் பிடித்த உடல்நலம் தரும் வழிகளையும் கருவிகளையும் இதில் சுட்டிக் காட்டுகிறார்கள். யூ டியூபில் இவர்களது பதிவுகள் நிறைய உள்ள்ன. அன்பர்கள் அதைப் பார்த்துப் பயன் பெறலாம்.

நிறைய உதவிக் குறிப்புகளைத் தருவதோடு, எளிய பயிற்சிகளையும் தருகின்றனர் இவர்கள்.

THE FAT LOSS PRESCRIPTION

 

டாக்டர் ஸ்பென்சர் நடொல்ஸ்கி குடும்ப மருத்துவ மருத்துவர். பெயர் பெற்றவர். கொழுப்பைக் குறைக்கும் இன்றைய மருத்துவத்தில் நிபுணர்

‘ஃபேட் லாஸ்’ என்ற இவரது புத்தகம் உடலில் உள்ள கூடுதல் எடைக் குறைப்பைப் பற்றியது.

உடலில் அனாவசியமாகச் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் குறைக்க உங்களாலான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் செய்து, ஒன்றும் உதவவில்லையா என்று கேட்கிறார் அவர். நீங்கள் எடுக்கும் சில மருந்துகளே உங்கள் எடையைக் குறைப்பதைத் தடுக்கிறது என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா என்ற ஒரு கேள்வியையும் நம் முன் அவர் வைக்கிறார்.

அவர் கொடுக்கும் உடல் கொழுப்பை – கூடுதல் எடையைக் – குறைக்கும் அறிவுரையில் உணவுத் திட்டமும் உடல் பயிற்சியும் உள்ளது. அத்தோடு இந்த முயற்சியில் தடையை ஏற்படுத்தும் மருந்துகள் பற்றிய குறிப்புக்களையும் அவர் தருகிறார்

SLIM BY DESIGN

I

‘ஸ்லிம் டிசைன்’ என்ற இந்தப் புத்ஹக்த்தை எழுதியுள்ளவர் ப்ரையான் வான்சிங்க் (Brian Wanskink) என்பவர். இவர் உணவு உளவியலாளர். இவரது செல்லப் பெயர் உணவின் ஷெர்லாக்ஹோம்ஸ். உணவு பற்றி அவ்வள்வு துப்பறிந்து வைத்துள்ளார்.

மனித இயற்கைக்கு உகந்தபடி வேலை செய்தால் அது தான் சுலபமாகவும் சீக்கிரமாகவும் உடலை மெலிதாக ஆக்கும் வழி என்கிறார் இவர். இயற்கைகு எதிராக என்ன செய்தாலும் பயனில்லை என்பது இவரது முடிவு.

எப்படி குறைந்த செலவில், சுலபமாக, எளிய முறையில் வாழ்ந்தால் அது கொழுப்பற்ற இல்லங்களை உருவாக்கும் என்பதற்கு வழி கூறுகிறார் இவர்.

அன்றாடச் சூழ்நிலைக்குத் தக்கபடி பிராக்டிகலாக இருக்கும் இவரது அறிவுரைகள் நீடித்த பயனை நல்கும். இவரது நூலில் உள்ள அறிவுரைகள் சின்னச் சின்ன மாறுதல்களைக் கூறுபவை; ஆனால் பெரிய பலனை அளிக்க வல்லவை..

THE WOW BOOK: 52 WAYS TO MOTIVATE YOUR MIND, INSPIRE YOUR SOUL & CREATE WOW IN YOUR LIFE

 

‘தி வௌ புக்’ என்ற இந்த நூலை எழுதியவர் டாட் டர்கின். (Todd Durkin). எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர், ஊக்கமூட்டும் வாழ்க்கைக்கான பயிற்சிகளைத் தரும் பயிற்சியாளர் – இப்படிப் பன்முக பரிமாணம் இவருக்கு உண்டு.

அவரது உடல் பயிற்சிக் கூடம் விருது பெற்ற ஒன்று. சான் டியாகோ (அமெரிக்கா) வில் உள்ள அவரது உடற்பயிற்சிக் கூடம் அமெரிக்காவில் ஆண்களுக்காக உள்ள மிகச் சிறந்த பத்து உடற்பயிற்சிக் கூடங்களில் ஒன்று.

இந்த “வௌ” நூலில் 52 கதைகளை டாட் தருகிறார்.  நம்மை ஊக்குவிக்கவும், மனதைச் சரியாக்கவும் நமது நோக்கத்தைக் கண்டு பிடிக்கவும், உறுதியுடன் வாழவும் ஆகிய இவற்றை அடைவதற்கான ஒரு  மையக் கருத்தை ஒவ்வொரு கதையும் கொண்டுள்ளது.

பாட்காஸ்டில் இவரது 78 எபிசோடுகள் உள்ளன.

நல்ல புத்தகங்களை சுட்டிக் காட்டி விட்டோம்.

இனி என்ன, படித்து, மகிழ்ந்து பயன் பெற வேண்டியது தானே!

****

 

ஹிந்து பாரதி! (Post No.4478)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-45 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4478

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி இயல்

டிசம்பர் 11 : பாரதி பிறந்த தினம்; அதையொட்டிய சிறப்புக் கட்டுரை

 

ஹிந்து பாரதி!

 

.நாகராஜன்

1

மஹாகவியை கடந்த எண்பது ஆண்டுகளில் ‘எங்களில் ஒருவர்’ ஆக்க பலர் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்; தொடரும் முயற்சிகள் பற்றியும் எல்லோருக்கும் புரியும்.

முதலில் சிலர் பாரதியை ஒதுக்கிப் பார்த்தார்கள். அவனோ விசுவ ரூபம் எடுத்தான்.

பின்னர் சிலர் வெறுத்துப் பார்த்தார்கள். வெறுத்தவர்கள் வெறுக்கப்பட்டதால் மிரண்டு போனார்கள்.

இறுதியாக இருந்த ஒரே வழி புகழ்வது தான்.. அதிலும் அவர் எங்களில் ஒருவர் என்று சொல்லி விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது இல்லையா?

‘ஆஹா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என்ற வரியைக் கையிலே ஏந்திக் களமிறங்கினர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மதத்தைப் பற்றியும், சிவன், முருகன், கண்ணன், அம்பிகை உள்ளிட்ட தெய்வங்களை அவன் மனமுருகித் தொழுததற்கு விபரீத வியாக்யானங்களைத் தந்தனர். ஏனென்றால் மதம் என்பது அபின் இல்லையா அவர்களுக்கு! என்றாலும் எடுபடவில்லை!!

திராவிடப் பிசாசுகளுக்கு பாரதி என்றாலே பாகற்காய். கம்பனைப் புகழ்ந்த வம்பன் அல்லவா அவன்! ஆனால் பாரதிக்குக் கிடைத்த பாரதிரும் புகழ் கண்டு பயந்தவர்கள் ‘பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே’ என்ற வரியைக் கையில் எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினர். ஆனால் இவர்களின் இரட்டை வேடத்தைக் காலம் தோலுரித்துக் காட்டியது. கர்த்தரின் ஏஜண்டுகளுடன் எடுத்துக் கொள்ளும் போட்டோக்களும், தலையில் முக்காடிட்டு நோன்பில் பங்கு கொள்வதும் ஒரு புறம் அவர்களைப் ‘பக்திப் பரவசத்தில்’ ஏற்ற, இன்னொரு புறமோ ராமனையும், கிருஷ்ணனையும் ஏசி, அம்பாள் எந்தக் காலத்திலடா அருள் பாலித்தாள் என்று வீர வசனம் பேசினர். மக்கள் இந்த ஜகஜாலப் புரட்டைக் காலம் கடந்தேனும் புரிந்து கொண்டனர். ஆக அவர்களும் வலுக்கட்டாயமாக பாரதி விழாக்களிலும் கவியரங்கங்களிலும் பங்கேற்க வேண்டி வந்து விட்டது.

சுயநல மதவாதிகளுக்கோ பாரதி கூறிய ஏசு, அல்லா உதவிக்கு வந்தது.

ஆக, பாரதியை ஒரு குழப்பு குழப்பி விட்டு ஒரு பெரிய உண்மையை எல்லோருமாகச் சேர்ந்து மறைக்க முயன்றார்கள்.

என்ன உண்மை அது?

ஹிந்து பாரதி! பாரதி ஹிந்துவாக வாழ்ந்தான்; ஹிந்துத்வத்திற்கு ஏற்றம் தந்தான். அது வாழ்ந்தால் உலகம் வாழும் என்று நம்பினான். அந்த ஹிந்து பாரதியைத் தங்கள் குப்பைக் கொள்கைகளாலும் வீர தீரப் பேச்சுக்களாலும் மூடி மறைத்தார்கள்!

மலையை, சிறு கை மறைக்க முடியுமா?

ஆதவன் ஒளியை, அறை இருட்டு எதிர் கொள்ளுமா?முடியாது.

ஹிந்துத்துவத்தின் அடிப்படையான அன்பால் (அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்!) அனைவரையும் கட்டுப் படுத்தலாம் என்று பாரதி ஹிந்து சிந்தனையோடு ஏராளம், ஏராளம் எழுதினான்.

ஹிந்து பாரதி பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால், அவனது எழுத்தைக் கொண்டே எழுதுவதாக இருந்தால், பல நூறு பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும்.

இந்தச் சிறு கட்டுரையில் சில கருத்துக்களைப் பார்க்கலாம்.

ஒரு பானைச் சோற்றில் இவை சில பருக்கைகளே. ஆனால் அனைத்தும் உண்மையில் வெந்த பருக்கைகள்!

சுவையுங்கள். ஹிந்து பாரதியை அனைவருக்கும் சொல்லி ஆனந்தம் அடையுங்கள்.

2

உமையே பாரத தேவி

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!

கமலமெல் லிதழ்களில் களித்திடும் கமலை நீ!

வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவி நீ   – வந்தே மாதரம்!

(பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கீதத்தில் பாரதி எப்படி மனதைப் பறி கொடுத்தான், வந்தேமாதரம் பற்றி எப்படியெல்லாம் பாடியுள்ளான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை)

 

ஆரிய மென்ற பெரும்பெயர் கொண்ட எம் அன்னை …

பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடு மந்திரமும்,

பாதகர் ஓதினும் மேதகவுற்றிடும் பண்புயர் மந்திரமும்…

மாணுயர் தேவி விரும்பிடும் வந்தேமாதரமே.

 

உபநிடதப் புகழ்

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே

பார்மிசை ஏதொரு நூலிது போலே

 

 

வேத பூமி

நாரத கான நலந்திகழ் நாடு

உன்னத ஆரிய நாடெங்கள் நாடே!

 

உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே!

 

நாவில் வேதம் உடையவள் கையில்

நலந்திகழ் வாளுடையாள் – தனை

மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை

வீட்டிடு தோளுடையாள்

 

ஹிந்து பாரம்பரியமே தேச பாரம்பரியம்!

முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில்?

எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்!

 

இப்படி வேத பாரதியின் வரிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையெல்லாம் படித்தும் கூட ஹிந்து பாரதியைப் புரிந்து கொள்ள முடியாதா என்ன!

ஹிந்துப் பண்பாட்டை, ஹிந்து அடித்தளத்தை வைத்தே சுதந்திரத்தை அடைய எழுச்சியை ஊட்டியவன் ஹிந்து பாரதி!

3

தாய் பிறன் கைப்படச் சகிப்பவன் நாயே!

இனி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சிவாஜியின் வாய்ச் சொற்களாக கம்பீரமான வார்த்தைகளில்  அவன் தரும் சில கருத்துக்கள்:

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

தாய்த்திரு நாட்டைத்  தறுகண் மிலேச்சர்

பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வண்மையும்

ஞானமும் அறியா நவைபடு துருக்கர்

வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்

இந்நாட் படைகொணர்ந் தின்னல்செய் கின்றார்

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்

பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்.

தாய் பிறன் கைப்படச் சகிப்பவ னாகி

நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?!

காளியும் கனக நல்நாட்டு தேவியும் ஒன்றே!

அடுத்து குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் என்ற கவிதையை எடுத்துக் கொள்வோம்.

வ.வே.சு. ஐயர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு  எழுந்தது இந்தக் கவிதை.

காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!

 

நீர் அனைவரும் தரும, கடவுள், சத்தியம், சுதந்திரம்

என்பவை போற்ற எழுந்திடும் வீரச்

சாதி ஒன்றனையே சார்ந்தோர் ஆவீ ர்.

 

 

ஹிந்து பாரதியின் மனம் இன்னுமா புரியவில்லை?

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் அறிந்திலார் என்று பாரதி கேலி செய்வானே, அந்தக் கூட்டத்தில் நாமும் சேர்ந்து விடக் கூடாது.

செகுலரிஸ்டுகளும்  கம்யூனிஸ்டுகளும் போலி மதவாதிகளும் மேலே கூறியது போன்ற பாரதியின் நூற்றுக் கணக்கான வரிகளை எங்குமே மறந்தும் கூடச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே பாரதியை நாமே தான், நேரடியாகக் கற்க வேண்டும்.

4

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். முடிவே இருக்காது.

இறுதியாக ஒரு கட்டுரைப் பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

“ஆதி முதல் அந்தம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டு பண்ணி அவர்களில் தேசத் துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய  வீரத் தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோஹங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறே தான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம்.”

 

“ஆகாயத்தினின்று விழும் எல்லா ஜலங்களும் எப்படிக் கடலையே போய்ச் சேருமோ அவ்வண்ணம் எல்லா மதஸ்தர்கள் செய்யும் ஆராதனைகளும் ஒரே ப்ரஹ்மத்தைத் தான் சேரும் என்னும் வேதாந்த சமரஸ புத்தியை அடைந்து இனியாகிலும் ஒத்து வாழ வேண்டும்.”

 

மேற்கண்ட கட்டுரைப் பகுதிகள், “ இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.

இந்தக் கட்டுரை புதுவை சூரியோதயம் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரை.

இந்தக் கட்டுரை பாரதியின் கட்டுரை அல்ல என்று அபிப்ராயப்படுகிறார் சீனி.விசுவநாதன். அதற்கு அவர் கூறும் காரணங்கள் இரண்டு. 1) நூலில் எங்கும் பாரதியின் பெயர் இல்லை. 2) நூலின் நடையும் பாரதியினுடையதாகத் தோன்றவில்லை.

 

அதாவது இந்தக் கட்டுரை ஒரு சிறு நூலாக வெளியிடப்பட்டது. அது பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை.

ஆனால் ‘பாரதிக்குத் தடை’ என்ற நூலை எழுதியுள்ள வி.வெங்கட் ராமன் தனது நூலில் இது பாரதி எழுதியது தான் என்று ஆய்ந்து நிறுவியிருக்கிறார்.

சூரியோதயத்தில் பாரதியின் பணி குறிப்பிடத்தகுந்தது. ஆகவே இந்தக் கட்டுரையின் கருத்துகள் அவர் எழுதினாரோ இல்லையோ அவரது குழுவினரின் ஏகோபித்த கருத்து என்பதில் ஐயமில்லை.

“பிற தேச எதிரிகளுடைய வஞ்சக வேலையென்று முன்னமே தெரிவித்திருக்கிறோம்” என்ற கட்டுரை வரியை வைத்து இதர பாரதியின், “முன்னமே தெரிவித்திருக்கிற” பெயரிடப்பட்ட கட்டுரைகளை ஒப்பிட்டால் இது அவர் எழுதியதே என்ற முடிவுக்கு வர முடியும்.

5

 

பாரதிக்குச் சங்கடங்கள் ஏராளம். வெள்ளையரால் மட்டுமல்ல; நம்மவராலும் கூடத் தான். அவரைத் தன் மனதிற்கு ஏற்றபடி எல்லாம் ஒவ்வொருவரும் டிசைன் செய்யப் பார்ப்பதால் அவர் படும் அல்லல் ஏராளம்.

அவர் வாயில், தனக்குக் கெட்டது என்று தோன்றும் “கெட்ட வார்த்தைகள்” (செகுலர் அல்லாத என்று கொள்க) எதையும்  வந்து விட்டதாகச் சொல்லி விடக் கூடாது என்ற “பாரதியின் மீது கொண்ட கருணையால்” அந்த வார்த்தைகளை சென்ஸார் செய்த அறிஞர்களும் உண்டு.

சின்னச் சின்ன மாற்றங்களை – வார்த்தைகளை மாற்றி – சில்மிஷம் செய்த அறிஞர்களும் உண்டு.

ஆய்வுப் பதிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலோ, அவர்கள் அரசுக்குப் பயந்து இப்படியும் இருக்கலாம்; அப்படியும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம் என்ற பாணியில் பதிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆக மஹாகவிக்கு வாழ்ந்த நாளிலும் சங்கடம்; மறைந்த பிறகும் சங்கடம்.

இந்த சுயநலமிகளின் பதிப்புப் பணியில் ஹிந்து பாரதி மறைந்து விட்டார்.

நண்பர்களே, தேடிக் கண்டு பிடியுங்கள். உண்மை பாரதி தோன்றுவார்.

அப்படித் தோன்றும் பாரதி, ‘ஹிந்து பாரதி’ என்பதை அறிந்து மகிழலாம்.

***

ஹிந்து வரலாற்று அதிசயம்: 28வது வியாஸர்! (Post No.4469)

Date: 7 DECEMBER 2017

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4469

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஹிந்து வரலாற்று அதிசயம்

28வது வியாஸர்!

 

ச.நாகராஜன்

 

1

ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று வேதத்தை நான்காகப் பகுத்தவர் வியாஸ்ர் என்பதை நாம் அறிகிறோம்.

வியாஸர் என்பது ஒரு பதவியின் பெயர்.

வேதத்தைப் பகுப்பவர் வியாஸர்.

கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களில் வேதம் ஒன்றாகவே இருக்கும்.

கலி யுகத்திலோ மனித ஆயுள் குறைவு. புத்தி சக்தி குறைவு. ஒன்றாக உள்ள வேதத்திலிருந்து ம்ந்திரம், பிரம்மாணம், சாமம் ஆகியவற்றைப் பிரித்தெடுக்க மனிதர்களுக்கு சக்தி இருக்காது.

ஆகவே பிரம்மாண்டமான புத்தி உடைய ஒருவர் (வியாஸோ விசால புத்தே) மனித குலத்திற்கு உதவி செய்வதர்காக இப்படி வேதங்களை எளிது படுத்தி வகைப் படுத்தித் தருகிறார்.

கலியுகத்தில் தர்மம் ஒற்றைக் காலில் நிற்கிறது.வேதோகிலோ தர்ம மூலம்.

தர்மத்தின் அடிப்படை வேதமே.

ஆகவே வேதத்தைப் பாதுகாத்தால் தர்மத்தைப் பாதுகாத்தவர்கள் ஆகிறோம்.

பாரத பூமிக்கு ஹிந்து ராஷட்ரம் என்று பெயர் சூட்ட வேண்டியது இயல்பான ஒன்று. ஆனால் இன்று இந்தியா என்கிறோம்.

செகுலரிஸ்டுகளுக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ!

ஹிந்து ராஷட்ரம் என்று சொல்ல வேண்டாமென்றால் தர்ம ராஷ்ட்ரம் என்று சொல்லலாம். தர்ம ராஷ்ட்ரம் என்றால் வேத ராஷ்ட்ரம் என்று பொருள்.

வேதம் உடையதிந்த நாடு என்றார் பாரதியார்.

அது தான் நமக்குப் பெருமை!

அது ஒன்றே தான் நமக்கு அடிப்படைப் பெருமை.

இதர நாடுகளுக்கு இல்லாத அஸ்திவாரம் நம்மிடம் தான் இருக்கிறது.

இதை யுகம் யுகமாகக் காப்பாற்றுவதற்கென்றே வேத வியாஸர் அவதரிக்கிறார்.

இப்போது 28வது கலியுகம் நடக்கிறது.

இதற்கு முன் நடந்த 27 சதுர்யுகங்களிலும் 27 வியாஸர்கள் இருந்திருக்கின்றனர்.

அருள் புரிந்திருக்கின்றனர்.

 

2

28 வேத வியாஸர்களின் பட்டியல் இதோ:

 

ஸ்வாயம்புவ மனு (த்வாபரத்தில் அவதரித்தார்.) அவரே முதல் வியாஸர்.

ப்ரஜாபதி இரண்டாவது வியாஸர்

உசநஸ் மூன்றாவது வியாஸர்

பிருஹஸ்பதி நான்காவது வியாஸர்

சூரியன் ஐந்தாவது வியாஸர்

ம்ருத்யு ஆறாவது வியாஸர்.

இந்திரன் ஏழாவது வியாஸர்.

வஸிஷ்டர் எட்டாவது வியாஸர்

ஸாரஸ்வதர் ஒன்பதாவது வியாஸர்

திரிதாமா பத்தாவது வியாஸர்

திரிவிருஷர் பதினொன்றாவது வியாஸர்

பரத்வாஜர் பன்னிரெண்டாவது வியாஸர்

அந்தரிக்ஷர் பதிமூன்றாவது வியாஸர்

தர்மர் பதிநான்காவது வியாஸர்

த்ரய்யாருணி பதினைன்ந்தாவது வியாஸர்

தனஞ்சயர் பதிறாவது வியாஸர்

மேதாதிதி பதினேழாவது வியாஸர்

விரதி பதினெட்டாவது வியாஸர்

அத்ரி பத்தொன்பாவது வியாஸர்

கௌதமர் இருபதாவது வியாஸர்

ஹர்யாத்மா இருபத்தொன்றாவது வியாஸர்

வாஜச்ரவஸ் இருபத்தியிரண்டாவது வியாஸர்

ஸோம ஆமுஷ்யாயணர் இருபத்திமூன்றாவது வியாஸர்

த்ரிணபந்து இருபத்திநான்காவது வியாஸர்

பார்க்கவர் இருபத்திஐந்தாவது வியாஸர்

சக்தி இருபத்தியாறாவது வியாஸர்

ஜாதுகர்ண்யர் இருபத்தியேழாவது வியாஸர்

இப்போதுள்ள கலியுகத்தில் இருபத்தெட்டாவது வியாஸராக நாராயணனே அம்சாவதரமாக அவதரித்துள்ளார்.

வேத வியாஸரின் மஹிமை பற்றி மஹாபாரதத்தில் காணலாம்.

அடுத்த வியாஸராக – இருபத்தொன்பதாவது சதுர்யுகத்தில் த்வாபர யுகத்தில் – வரப்போவது அஸ்வத்தாமா.

 

3

ஹிந்துக்களுக்கு வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. வரலாறுத் தொகுப்பையே நாம் தான் கற்றுத் தந்திருக்கிறோம் என்று பல மேலை நாட்டு அறிஞர்கள் பெருமிதமாகக் கூறுவது வழக்கம்.அதை அப்படியே எழுதியுள்ளனர்.

ஆனால் 28 சதுர் யுக சரிதத்தையும் விளக்கியுள்ள ஒரே மதம் ஹிந்து மதம் தான்.

வேறு எந்த ஒரு மதமும், நாகரிகமும் இப்படி ஒரு காலக் கணக்கைத் துல்லியமாகத் தந்ததில்லை.

ஆகவே தான் காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர் தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலக மதங்களையெல்லாம், உலக நாகரிகங்களையெல்லாம் முற்றிலுமாக ஆராய்ந்து விட்டு பிரபஞ்ச தோற்றத்தை அறிவியல் ரீதியிலாகக் கணக்கிட்டுச் சொல்லும் அதே கால அளவை ஹிந்து மதம் ஒன்று மட்டுமே தருகிறது என்று கூறி தன் தொடரின் முதல் காட்சியில் சிதம்பரம் நடராஜரைக் காட்டினார்.

அத்துடன் அவர் சிதம்பரத்திற்கு வருகை புரிந்து நடராஜரைத் தரிசித்தார்.

ஆக பிரபஞ்ச வரலாறையே தந்துள்ள ஹிந்து மதம், முகலாய, பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் தன் இயல்புத் தன்மையில் ஒரு பங்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது உண்மை.

பழைய இயல்பான நிலைக்குத் திரும்ப நாம் ஓவொருவரும் முயற்சி எடுத்தால் பொற்காலம் தோன்றும்.

 

4

நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்த போது “ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

“என்ன விஷயம்”, என்றேன்.

“நம் மதத்தை எடுத்துக் கொண்டால் பல விவரங்கள் குழப்பமாக உள்ளன. இதோ பாருங்கள், சப்த  ரிஷிகள் என்று இரண்டு பட்டியல் உள்ளன. இதில் எது உண்மை?” என்று அவர் கேட்டார்.

அதை வாங்கிப் பார்த்த நான், “இரண்டுமே உண்மை” என்றேன்.

“என்ன, இன்னும் அதிகமாகக் குழப்புகிறீர்கள்?” என்றார் அவர்.

“ஒரு குழப்பமும் இல்லை. பல லட்சம் ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்டுள்ளோம் நாம். சப்தரிஷி பட்டியலைப் பார்க்கும் போது இது எந்த சதுர்யுகத்திற்கானது, எந்த மன்வந்தரத்திற்கானது என்று கேட்டால் விடை சுலபமாக வந்து விடும்.

27 மன்வந்தரம் கடந்தவர்கள் நாம். ஆக இந்த இரண்டு பட்டியலுமே உண்மை. வெவ்வேறு மன்வந்தரத்திற்கு உரிய சப்த ரிஷிகள் இவர்கள்” என்றேன்.

“அடடா, இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! இதைச் சொல்வதற்கு ஆள் இல்லையே” என்றார் அவர்.

 

5

புராண, இதிஹாஸம் மிகவும் பரந்தது. சுலபமாக அதைக் கற்றுக் கரை சேர முடியாது.

ஆகவே தான் சமீப காலம் வரை மண்டபங்களிலும் கோவில்களிலும் பிரவசனகர்த்தாக்கள், இதிலேயே ஊறி அனைத்தையும் அறிந்த நிபுணர்கள் – பல்வேறு விஷயங்களை மால நேரத்தில் கூறுவார்கள்.

ஆனால் இந்தக் காலத்தில்..

நாமே குழுவை அமைத்து இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

படித்தும் தெரிந்து கொள்ளலாம் – தமிழ் அண்ட் வேதாஸ் டாட் காம் (www.tamilandvedas.com) கட்டுரைகளைப் படிக்கலாம்; பயன் அடையலாம்.

****

 

 

 

 

யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-36 am

 

 

 

Post No. 4439

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கிய இன்பம்

யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

யமகவந்தாதியின் பட்டியல்!

ச.நாகராஜன்

1

தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.

நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல.

ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.

சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.

 

 

2

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.

சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.

முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.

அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.

நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.

“முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”

ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”

“எப்ப வருவார்?”

“என்ன விஷயங்க?”

“அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”

“ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”

ஒரு சின்ன மௌனம்.

அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.

என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

போன் உரையாடல் முடிந்தது.

சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.

முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!

 

 

3

தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.

அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.

4

இதோ பட்டியல்:

மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் – அகர வரிசை

1) அழகர் யமகவந்தாதி –

2) இரத்தினகிரியமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

3) கடம்பர் யமகவந்தாதி – பேரம்பலப் புலவர் – (19)

4) கணபதி யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

5) கந்தர் யமகவந்தாதி – அருணகிரிநாதர் – (15)

6) கல்வளை யமகவந்தாதி – சின்னத்தம்பிப் புலவர் – (19)

7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)

8) சித்திர யமகவந்தாதி – தொழுவூர் வேலாயுத முதலியார் – (19)

9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)

10) தன்னை யமகவந்தாதி – கார்த்திகேயப் புலவர்- (19)

11) தன்னை யமகவந்தாதி – திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)

12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)

13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)

14) திருக்கடவூர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

 

15) திருக்குருகூர் யமகவந்தாதி – வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)

16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)

17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி – செய்குத்தம்பி பாவலர் – (20)

18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)

19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி – நல்லூர்த்தியாகன்

20) திருச்செந்தில் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)

22) திருச்செந்தில் யமகவந்தாதி – இராமசாமி ஐயர்-(19)

23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி – அருணாசலப் பிள்ளை-(19)

 

24) திருத்தணிகை யமகவந்தாதி – சொக்கலிங்க தேசிகர்-(19)

25) திருத்தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

27) திருநெல்வேலி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

28) திருப்போரூர் யமகவந்தாதி – புரசை சபாபதி முதலியார்-(19)

29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி – மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் – (17)

30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி – அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)

31) திருமதீனத்து யமகவந்தாதி – (19)

32) திருமயிலை யமகவந்தாதி – தாண்டவராயக் கவிராயர்

33) திருமயிலை யமகவந்தாதி – நெல்லையப்பக் கவிராச பண்டிதர்

34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

 

35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி –

36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)

37) திருவாமாத்தூர் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

38) திருவாலவாய் யமகவந்தாதி – சொக்கலிங்கச் செட்டியார்-(20)

39) திருவானைக்கா யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

40) திருவானைக்கா யமகவந்தாதி – சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்

41) திருவேகம்பர் யமகவந்தாதி – சிவஞான முனிவர்

42) திருவேரகம் யமகவந்தாதி – வேலையர் (20)

43) திருவேரக யமகவந்தாதி – சிவச்சம்புப் புலவர்-(19)

44) திருவேரக யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி – சிதம்பரம் செட்டியார்-(19)

46) தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

 

47) துறைசை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)

49) நெல்லை யமகவந்தாதி –

50) பட்டீச்சுர யமகவந்தாதி – அப்பாப்பிள்ளை-(19)

51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)

52) பழநி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

53) பழநி யமகவந்தாதி – பாலசுப்பிரமணியன்

54) புலியூர் யமகவந்தாதி – மயில்வாகனப் புலவர்-(18)

55) புலியூர் யமகவந்தாதி – கணபதி ஐயர், இலங்கை

56) புல்லை யமகவந்தாதி – ரா.இராகவையங்கார்-(20)

57) மதுரை யமகவந்தாதி – இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் – (19-20)

58) மதுரை யமகவந்தாதி – சொக்கநாதக் கவிராயர்-(17)

59) மதுரை யமகவந்தாதி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

60) மதுரை  யமகவந்தாதி – ஆறுமுகம் பிள்ளை-(19)

 

61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள்-(19)

62) மருதூர் யமகவந்தாதி – தலைமலைக் கண்ட தேவர்-(19)

63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)

64) யமகவந்தாதி – மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)

65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி – சிவப்பிரகாச சுவாமிகள்

66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

 

5

எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.

இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.

யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.

***

பெண் சிரித்தாள்! படை எடுத்தான் பாண்டியன்!! (Post No.4404)

Written by London Swaminathan 

 

Date: 17 NOVEMBER 2017

 

Time uploaded in London- 17-43

 

 

Post No. 4404

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்கள் சிரித்தால் போர் மூளும் என்பது மஹா பாரத காலத்திலும் உண்மை; 500 ஆண்டுகளுக்கும் முன்னரும் உண்மை!

மயன் கட்டிய மாளிகையில்,  சலவைக் கல் தரை, கண்ணாடி போல, பளபளத்தது. அதைத் தண்ணீர் என்று நினைத்த துரியோதனன், தன் பட்டாடை  நனைந்து விடப் போகிறதே என்று தூக்க, அதை மேலே மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திரவுபதி அம்மாள் நகைக்க, துரியோதணனுக்குக் கோபம் வர, தீராப் பகை ஏற்பட்டு போராய் முடிந்ததை நாம் மஹாபாரதத்தில் படித்துள்ளோம்.

 

 

இதே போல 500 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாட்டிலும் நடந்தது. ஆனால் மாபாரதப் போர் போல அழிவு ஏற்படுத்தாமல் ஒரு நூல் உதிக்கக் காரணமாய் அமைந்தது!

பாண்டியர் பரம்பரையில் வரதுங்க பாண்டியன்,  அதி வீரராம பாண்டியன் என்று இரு சஹோதரர்கள் இருந்தனர். மூத்தவனான வரதுங்கன் தன் மனைவியுடன், தவம் மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்தான். அவன் திருக்கருவை நல்லூரில் வசித்தபோது, இளையவனான அதிவீரராம பாண்டியன், தென்காசியில் இருந்துகொண்டு அரசோச்சி வந்தான். அவன் சைவ புராணங்களின் சாரமான பிரம்மோத்தர காண்டம் என்னும் அரிய நூலை மொழி பெயர்த்தான். திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமான் மீது வெண்பா அந்தாதி,  கலித்துறை அந்தாதி ஆகியன பாடி சிவநேசச் செல்வனாய் வாழ்ந்து வந்தான்.

 

அவன் நள சரிதத்தையும் கவிதை வடிவில் யாத்தனன். பாதி நூல் வரைந்த காலையில், அதனை வரதுங்கனிடம் காட்டினன். இதென்ன அரனைத் துதிக்காமல் அரசன் துதி பாடுகிறாயே (அரன்= சிவன்; அரசன்= நள மஹாராஜா) என்று வருத்தப்பட்டனன். அண்ணன் இப்படிச் சொன்னதால், உப்பு சப்பில்லாமல் அதை ஒருவாறு பாடி முடித்தான். அதனால் அதன் பின்பகுதி சுவையற்றதாயிற்று.

 

அத்தோடு நில்லாமல், அதைத் தமையன் மனைவியிடம் போய்க் காட்டினான். அண்ணியாவது பாராட்டுவாளோ என்ற ஒரு நப்பாசை. அவளோ  கற்றுணர்ந்த பேரரசி; தமிழரசி; புன் சிரிப்புடன் அதைத் திருப்பிக் கொடுத்தாள். எதற்காக்ச் சிரிக்கிறீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டான் அதிவீரராமன்.

 

அவள் சொன்னாள்: “வேட்டை நாய், வேட்டைக்குப் போகும்போது, வேகமாகச் செல்லும்; வேட்டை முடிந்து திரும்பும்போது ஏங்கி இளைத்து வருமன்றோ! அது போலத் தான் உமது காவியம்” என்று சொல்லி சிரித்தாள்.

இது அவன் செவியில் நாராசம் பாய்ச்சியது போல இருந்தது; கோபத்துடன் வெளியே சென்றான். நால்வகைப் படைகளைத் திரட்டிக்கொண்டு படை எடுத்து வந்தான். அண்ணனுக்குத் தூதும் அனுப்பினான். அந்த தூதன் கொண்டுவந்த செய்தியைப் பார்த்த வரதுங்கன்  , “நீ மார்த்தாண்டன் மைந்தனையும், விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல், பரத-ராகவருடைய அன்பை எண்ணுவாயாக” என்ற கருத்துப் பட ஒரு வெண்பாப் பாடலை எழுதி அனுப்பினன்.

அதைப் பார்த்தவுடன், சினம் தணிந்து, வெட்கம் மேலிட, அண்ணன் காலில் விழுந்து, வணங்கி, என் வாழ்வுக்கு வழிகாட்டுவாயாக என்று வேண்டினான் அதி வீர ராம பாண்டியன்.

உடனே அண்ணனான வரதுங்கன், “தம்பி, காசி காண்டத்தைத் தமிழில் மொழி பெயர்; உன் குற்றம் எல்லாம் மறையும்” என்றான். அதற்குப் பின்னர் அண்ணியார் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்று சம்ஸ்கிருதத்தில் உள்ள காசிக் காண்டத்தைத் தமிழில் வடித்தான். நறுந்தொகை என்னும் நீதி நூலையும் இயற்றினான். அதன் மூலம் அவன் புகழ் தமிழ் கூறும் நல்லுலம் முழுதும் பரவிற்று. அதற்குப் பின்னர் கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதியும் பாடினன். முப்பது பாடலடங்கிய அம்பிகை மாலை, இலிங்க புராண தமிழ் மொழி பெயர்ப்பு என்று மேலும் பல நூல்களும் அவருடைய எழுதுகோல் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்தது.

–Subham—

ரிக் வேதம் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடித்தன! (Post No.4401)

Written by London Swaminathan 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-29

 

 

Post No. 4401

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக் வேதம் இப்போதுள்ள வடிவில் உருவாக  பல நூற்றாண்டுகள் ஆனது அதிலுள்ள பல துதிகள் மூலம் தெரிகின்றன. முதல் மண்டலத்திலும் கடைசி மண்டலத்திலும் உள்ள பெரும்பாலான துதிகள் காலத்தால் பிந்தியவை என்றும் இடையிலுள்ள ஆறு மண்டலங்கள் காலத்தால் முந்தியவை என்பதும் பொதுவாக உள்ள கருத்து. 500 ஆண்டுக் காலத்தில் தோன்றிய  பாடல்கள் இருக்கலாம் என்பது பலர் கருத்து.

 

ரிக்வேதம் என்பது கவிகளால் இயற்றப்பட்டது அன்று; வானத்தில் எப்போதுமுள்ள ஒலிகளை ரிஷிகள் கண்டு (மந்த்ர த்ருஷ்டா:) அளித்தனர் என்பது இந்துக்கள் ஏற்கும் கொள்கை; ஆயினும் அதை அவர்கள் வெவ்வேறு காலங்களில் கேட்டு அல்லது கண்டு அளித்தனர் என்பதை வேதத்தில் உள்ள குறிப்புகளாலும் இலக்கண அமைப்புகளாலும் அறிய முடியும்; இதை ஒப்புக்கொள்வதால் வேதத்தில் புதியதும் பழையதும் உண்டு என்று அறிந்து அவைகளில் எது எது புதியது என்று சொல்ல முடியும்; அதற்குச் சில உத்திகள் உள்ளன.

இதனால் வேதம் பற்றிய நம்பிக்கை பாதிக்கப்பட மாட்டாது என்றே நான் கருதுகிறேன். “உண்மையே உலகில் வெல்லும் – சத்யம் ஏவ ஜயதே” – என்பதை யார் எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் , புதிய இலக்கணத்துடன் சொன்னாலும் பழைய இலக்கண விதிகளின்படி சொன்னாலும், வெவ்வேறு மொழிகளில் சொன்னாலும் அந்த மந்திரத்தின் பொருள் மாறாது. இதனால்தான் வேதம் அனாதியானது; என்றுமுளது என்று நாம் சொல்கிறோம். அதாவது அழியாத தர்மங்கள், கொள்கைகள், பண்புகள் அதிலுள்ளன.

 

ரிக்வேதத்திலுள்ள பத்து மண்டலங்களில் 2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு மண்டலங்கள் குடும்ப மண்டலங்கள் (2- க்ருத்சமடர்  3-விஸ்வாமித்ரர், 4- வாமதேவர், 5- அத்ரி, 6-பரத்வாஜர், 7-வசிஷ்டர்) எனப்படும்; அதாவது ஒரு ரிஷி பரம்பரையில் வந்த தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பவர்கள் கண்டு (கேட்டு) நமக்கு அளித்தது. வேதத்தில் “மிகப் பழங்காலத்தில்”, “முன்னோர்கள் சொன்னது” என்றெலாம் வாக்கியங்கள் வருகின்றன. அப்படியானால் அந்த ரிஷிகளுக்கு முன்னதாகப் பல தலைமுறைகள் இருந்தன என்பதை நாம் அறிகிறோம்.

சுமார் 450 புலவர்கள் இயற்றிய சுமார் 2500 பாடல்களை உடைய சங்கத் தமிழ் இலக்கையமும் 300, 400 ஆண்டுகளில் உருவானவையே என்பர் அறிஞர் பெருமக்கள். ஏனெனில் கடை எழு வள்ளல்களைத் தனித் தனியாக பாடிய புலவர்களை நாம் புற நானூறு முதலிய நூல்கள் மூலம் அறி வோம். மலைபடுகடாம் போன்ற நூல்களில் அவர்களை “கடை எழு வள்ளல்கள்” என்று படிக்கும்போது , அவ்வாறு அவர்களை ஒரு அணி சேர்த்துப் பாடுவதற்கு சில நூற்றாண்டுக் காலமாவது ஆகியிருக்கும்; தற்காலம் போலத் தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்களை ஒரு தொகையில் சேர்த்து “கடை எழு” என்று சொல்லுவதால் இதுதான் காலத்தால் பிந்தியது என்று நாம் கருதுகிறோம்.

 

இது போலவே ரிக் வேதத்திலும் சில குறிப்புகள் உள்ளன.

இது பற்றி உரையாற்றிய  டாக்டர் கடே என்பார் சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்; அவைகளைத் தொட்டுக் காட்டுவன்:-

 

எட்டாவது மண்டலத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள 11 துதிகள் வாலகில்ய துதிகள் என்று அழைக்கப்படும். இது பொருந்தாத ஒரு இடத்தில் இருப்பதாலும், இதற்கு சாயனர் உரை (பாஷ்யம்) எழுதாததாலும் இதை பிற்சேர்க்கை எனக் கருதுவாரும் உளர். ஆயினும்  காத்யாயனர் தனது அனுக்ரமணியில் (Index) இவைகளைக் குறிப்பிடுவதால் இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னையது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

 

 

மேலும் தைத்ரீய ஆரண்யகத்திலேயே (1-23) வாலகில்யர் பற்றிய விஷயங்கள் காணப்படுகின்றன.

 

ஆப்ரி துதிகள்

 

ஆப்ரி துதிகள் என்பனவும் பல கேள்விக ளை எழுப்பும் விநோதத் துதிகள் ஆகும்.

சாம வேதம், யஜூர் வேதம் ஆகியவற்றில் இருக்கும் துதிகள் போலுள்ளதால் இவைகளும் யாக நோக்கங்களுக்காக இயற்றப்பட்டதாக இருக்கலாம். பத்து மண்டலங்களிலும் பத்து துதிகள் விரவிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் 11 மந்திரங்கள்/ பாடல்கள் இருக்கும். 11 கடவுளரை நோக்கி, ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் மந்திரங்கள் இருக்கும். அவையாவன: 1.அக்னி, 2. தனூனபாத் அல்லது நராம்சச (இவை அக்னியின் இரு வேறு அம்சங்கள்), 3. ஈலா (தானம்), 4.பர்ஹி: (யாகத்துக்கான புல்), 5. தேவீ: த்வார: 6.உஷசானகௌ 7.தைவ்யௌ ஹோதாரௌ (அக்னி, ஆதித்யன் முதலானோர்), 8.ஸரஸ்வதீ, ஈளா, பாரதீ , 9.த்வஷ்ட (படைப்போன்), 10. வனஸ்பதி 11.ஸ்வாஹாக்ருதி

ரிக் வேதத்தின் துதிகள் இரு வடிவங்களில் கிடைக்கின்றன: 1. சந்தி பிரிக்காமல், இலக்கணப்படி உள்ள சம்ஹிதை, 2.பத பாடம். பத பாடம் என்பதில் சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

ஆறு துதிகளுக்குப் பத பாடம் இல்லை: 7-59-12; 10-20-1; 10-121-10; 10-190-1/3. இவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிஞர் பெருமக்கள் கணிப்பர்.

 

புதியது, பழையது பற்றி  துதிகளிலேயே சில சான்றுகள் கிடைக்கின்றன; ஒரு மண்டலத்தில் மட்டும் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்:

 

7-18-1

த்வே ஹ யத்பிதர ஸ்ரவன்ன இந்த்ர விஸ்வா வாமா ஜரிதாரோ அசன்வன்

 

7-22-9

யே ச பூர்வே ருஷய; யே ச நூத்னா: ப்ரஹ்மாணி ஜனயந்த விப்ரா:

7-29-1

உதோ கா தே புருஷ்யா இதாசன் யேஷாம் பூர்வேஷாம் ச்ருணோர் ருஷீணாம்

7-53-1

தே சித்தி பூர்வே கவயோ க்ருணந்த:

7-76-4

த இத் தேவானாம் சதமாத  ஆசன் க்ருதாவான: கவய: பூர்வ்யாச:

7-91-4

புரா தேவா அனவத்யாச ஆசன்

இவைகளில் புரா (முன்பு), பூர்வ கவய: (முன்னாள் கவிஞர்கள்) என்ற சொற்றொடர்கள் வருவதைக் ‘கொஞ்சம்’ சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் கண்டுபிடித்துவிடலாம்.

 

புதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் 7-56-23, 7-15-4, 7-59-4, 7-61-6, 7-98-1 ஆகியவற்றில் காணலாம். இதில் நவ (புதிய) என்ற சொல் வருகிறது. வேதங்களை நன்கு அறிந்தவர்கள் கண்டுபிடித்தவை இவை.

இலக்கணமும் , சில சொற்றொடர்களும் கூட புதிய செய்யுட்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பெயர் சொற்கள், வேற்றுமை உருபுகள், வினைச் சொற்களை ஆராய்ந்தோர் குறைந்தது 16 வேறுபாடுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

 

சொற்களைப் பொருத்தமட்டில் ‘அக்து’, அத்ய (வேகம்), அம்பிஷ்டி (உதவி)க்ஷிதி (இருப்பிடம்) சன: (ஆனந்தம்) முதலிய பழைய சொற்கள் ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே காணப்படும்.

 

மாயாஜாலம், நோய்கள், சடங்குகள், தத்துவம், தொழில்நுட்பச் சொற்கள் முதலியன புதிய துதிகளிலும், அதர்வ வேதத்திலும் மட்டுமே காணப்படும்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் கையாளப்பட்ட பல சொற்களை மத்திய கால இலக்கியத்தில் காணமுடியாது. சங்க காலத்தில் நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம் என்ற மூன்று காலங்கள் கிடையா. பல உவமை உருபுகள் தொல்காப்பியப் பட்டியலில் உள்ளன. ஆனால் சங்க காலத்தில் கூட 2500 பாடல்களில் அவை இல்லை! இதை ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். உலகில் எல்லா மொழிகளும் மாற்றத்துக்குட்பட்டவை. சந்தி இலக்கணமும் வேத காலத்திலும் பாணினி காலத்திலும் வேறு வேறு.

 

யாபிலக்கணமும் வேதத்தில் மாறிக்கொண்டே வருகிறது. உஷ்ணிக், ககுப, ப்ருஹதி, சதீப்ருஹதீ ஆகியன ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

 

அதர்வ வேதத்தில் காணப்படும் ரிக்வேதப் பாடல்களும் புதியவை.

 

இன்னொரு பொதுவான வித்தியாசம்:- பழைய துதிகள், இறைவனை மட்டும் துதித்தன. பிற்காலத்தில் சடங்குகள், சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் முதலியன விவாதிக்கப்பட்டன.

தான துதிகளும் பெரும் சடங்குகளுக்குப் பின்னரே, பெரிய யாகங்களுக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.

சமபாஷணை/ உரையாடல் உள்ள துதிகளும் பிற்காலத்தியவை; எடுத்துக்காட்டுகள்

புரூருவஸ் — ஊர்வசி உரையாடல்

யமா- யமீ உரையாடல்

அகஸ்தியர் – லோபாமுத்ரா உரையாடல்

முதலியன.

எனது கருத்து:

 

இவை எல்லாம் வெள்ளைக்காரர் வாதங்கள்; அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இந்திய வேத பண்டிதர்களும் பேசிய உரை இது; நாம் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை; பல பழைய கொள்கைகளை புதிய ஆராய்ச்சி உத்திகள் பொய்யாக்கிவிட்டன. மேலும் மொழி வேறு பாடு என்பதும் மொழிக்கு மொழி வெவ்வேறு வேகத்தில் நடைபெறக்கூடும்.

 

ஆக இவை எல்லாம் ஆராய்சிக்கு ‘வித்து’ என்று வைத்துக்கொண்டு மற்ற பழங்கால மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்று மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வைத்துக்கொண்டு ரிக் வேதத்துக்கு காலம் கற்பித்தார். ஆனால் உலகில் வேறு எந்த மொழிக்கும் இப்படிக் காலம் நிர்ணயித்ததாகத் தெரியவில்லை.

 

இந்தியப் பண்பாட்டில் ஊறித் திளைத்த பால கங்காதர திலகர்,  அரவிந்தர் போன்றோரின் வேதக் கொள்கைகளை நாம் பின்பற்றுவது நல்லது.

 

சுபம்–

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-01

 

 

Post No. 4390

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நியூகினி என்னும் தீவு உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. இது ஒரு தனி நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோநேஷியாவுக்கும் இடையே, பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ளது. இங்கு சுமார் 750 மொழிகள் பேசப்படுகின்றன. இது ஏன் என்பதை, மொமழி ஆராய்ச்சியாளர்களாலும் விளக்க முடியவில்லை. சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பழைய மொழிகளை உடைய பாரதத்துக்கு இது பல செய்திகளை அளிக்கும்.

 

தமிழ் என்னும் மொழி ஏன் உடைந்து போய் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளாக உருவாயின? சம்ஸ்கிருதம் என்னும் மொழி உடைந்து குஜராத்தி, மராத்தி, இந்தி என்று ஏன் பல மொழிகள் உருவாயின? பலமொழிகளைப் பேசியோர் வந்து குடியேறினரா? அல்லது பிற மொழிக் கலப்பால் இப்படி உருவாயிற்றா? அப்படிப் பல மொழி கலந்தால் அது ஒரு புறம் தெலுங்காகவும் இன்னொரு புறம் கன்னடமாகவும் மற்றொரு புறம் மலையாளமாகவும் இன்னும் துளு என்றெல்லாம் ஏன் பிரிந்தன? இப்படி ஒருமொழி உடைய எவ்வளவு காலம் பிடிக்கும்? — இவ்வறெல்லாம் கேள்விகள் கேட்டால் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினாலும் அவைகளை எல்லாம் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக்கடிக்கும்’ சில எடுத்துக் காட்டுகளும் கிடைக்கும்!

 

 

நான் நீண்ட காலமாக முன்வைத்துவரும் கொள்கை: உலகில் தமிழும் சம்ஸ்கிருதமும் மிகப் பழைய மொழிகள். ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த மொழிகள்; வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைவிட இவ்விரு மொழிகளுக்கு இடையே தான் ஒற்றுமை அதிகம். சந்தி இலக்கணமும் வேற்றுமை உருபுகளும் இரண்டு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டும் முக்கிய அம்சங்கள். மேலும் தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம் காண ஒரே வழி– தமிழ் -சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள்தான் உலகிலுள்ள பெரும்பாலான சொற்களுக்கு வேர் என்று ஒப்புக் கொள்வதாகும். அது எனது கொள்கை.

 

பழைய மொழிகளில் உள்ள பெரும்பாலான சொற்களை இவ்விரு மொழிகளில் காட்டலாம். ஆகவே தமிழ் ஒரு தனி மொழி- அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதெல்லாம் பிதற்றல்; உண்மை என்ன என்றால் பாரத மண்ணில் வாழ்ந்த மக்கள் வடக்கு, தெற்கு எனப் பிரிந்து நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததால் இரண்டும் தனித் தனி — ஆனால் சஹோதர மொழிகள் ஆயின. இந்த விஷயங்களைப் பல முறை எழுதி ஆதாரங்களும் கொடுத்துள்ளேன். தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் உள்ளன. இவைகளை எல்லாம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பச் சொற்கள் என்று வெளிநாட்டினர் கூறுவர்; அது தவறு; பாரத நாட்டின் மூல மொழியிலிருந்து ஆங்கு குடியேறிய புராதன இந்தியர்கள் பரப்பிய சொற்கள் அவை. ஆகையால் அவைகளைத் தமிழ் சொற்களாகவும் கருதலாம் என்றேன்

நியுகினி மொழிகளின் வரலாறு எனது கொள்கைகளுக்குத் துணையாக வருகிறது.

 

 

முதலில் நியூகினி பற்றிய புள்ளி விவரங்களைக் காண்போம்:

 

நியூகினியில் 750-க்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. அவை ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளுடன் தொடர்பு அற்றவை. இவர்களுடன் தொடர்பில்லாத மொழி பேசும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். இந்த மக்களின் முன்னோர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்; ஒருவர் பேசும் மொழி மற்றவர்களுக்குத் தெரியாது; புரியாது!

 

வெளி நாட்டினர் படை எடுத்ததில்லை; வணிகத் தொடர்பும் பிற நாட்டினருடன் இல்லை; எல்லோரும் மேலனேசியக் (Melanesia; Mela= mala= black) கருப்பர்கள்; ஏன் 750 மொழிகள்? இவைகளைப் பார்க்கும்போது ஆரிய-திராவிட மொழிக் கொள்கைகள் அடிபட்டுப் போகும்; அதா வது ஒருவர் வந்து குடியேறியதால் பல மொழிகள் உருவாயின என்பது தவறு. யாருமே வராத நியூகினி காட்டுக்குள் 750 மொழிகள்; ஆஸ்திரேலியப் பழங்குடி இடையே மேலும் 250    மொழிகள்!

இதில் இன்னும் ஒரு விந்தை என்ன வென்றால் அந்த மொழிகளுக்குள், சில கொஞ்சமும் மற்ற மொழிகளுடன் தொடர்பிலாத- தனிப்பெரும் மொழியாக நிற்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பாஸ்க் (Basque) மொழி போல! இதுவும் மொழியியல் வல்லுநர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அலை அலையாக மக்கள் குடி ஏறியிருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்திலிருந்தா வந்தார்கள்? ஆக மொழிகள் உருவாக வெளி அம்சங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.

 

 

இன்னும் ஒரு பெரிய விந்தை பாபுவா நியூகினி (Papua New Guinea)  மொழிகள் தமிழ் சம்ஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளைப் போல எழுவாய்- செயப்படுபொருள் – வினைச் சொற்கள் (subject, object, verb= SOV) வரிசையில் அமைந்துள்ளன. ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள ஆஸ்திரேலிய மொழிகள் எஸ். வி. ஓ (Subject, Verb, Object) வரிசையில் உள்ளன. அதாவது ஆங்கிலம் போல.

நான் இட்லி சாப்பிட்டேன் என்பது இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு; நான் சாப்பிட்டேன் இட்லி என்பது ஆங்கில மொழி அமைப்பு; ரஷியன் போன்ற மொழிகளில் எதை எங்கு வேண்டுமானாலும் போடலாம்: இட்லி நான் சாப்பிட்டேன்; சாப்பிட்டேன் நான் இட்லி;  நான் சாப்பிட்டேன் இட்லி.

 

 

மேற்கு பாபுவாவின் வளைகுடா மாகணத்தில் (Gulf Province of West Papua) ஆயிரம் பேர் மட்டுமே பேசும் போரோம் (Porome) மொழி மலையாளம் போல மூக்கொலி (nasal sound) அதிகம் உடையது; ஆனால் உலகிலுள்ள எந்த மொழிக்கும் தொ டர்புடையதல்ல; இது

மொழியியலாளருக்கு சவால் விடும் மர்ம மொழி; பாஸ்க் (Basque)  மொழி போல!

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக சில மொழிகளைக் கற்று எளியதொரு அகராதியைத் தொகுத்தனர். இதனால் சில் புதிய சொற்கள் தோன்றின.

ஒவ் வொரு மொழி பேசுவோரும் சில ஆயிரம் மட்டுமே இருந்ததால் கல்யாணத்துக்கு மற்ற  மொழிக்குடும்பத்தை நாட வேண்டி இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு மொழி பேசும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பேரன் எனப் பெருகினர். இதனால் கலப்பின (Pidgin) மொழிகள் உருவாயின. ஆயினும் ஆதியில் எப்படி 750 வெவ்வேறு மொழி பேசுவோர் இங்கு வந்தனர்  என்பது  மொழியியல் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடுகின்றன.

 

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் உடைய பபுவா நியுகினி உலக மொழிகளில் ஆறில் ஒரு பங்கு மொழிகளை உடைத்தாயிருப்பது அதிசயமே.

  

இந்தியர்களைப் போலவே நெருங்கிய உறவினர்களின் பெயர்களையோ, இறந்தோரின் பெயரையோ சொல்ல மாட்டார்கள். பழங்காலத்தில் கணவர் பெயரைச் சொல்ல மாட்டாத தமிழ்ப் பெண்கள், ‘அவர்’ ‘வீட்டுக்காரர்’ ‘ஆத்துக்காரர்’, ‘இந்த ஊர் கோவிலில் உள்ளவரின் பெயர்’ என்றெல்லாம் சுற்றி வளைத்து கணவர் பெயரைச் சொல்லியது ;போல அங்கும் புதுப்புது சொற்களை உருவாக்கும் தேவை ஏற்பட்டது.

 

வேடிக்கை என்னவென்றால் மிக அ திகம் பேர் பேசுவது எங்கா ENGA மொழி; அதை சுமார் இரண்டு லட்சம் பேர் பேசுகின்றனர். அவர்களோவெனில் நாட்டின் நடுப்பகுதியில் யாரும் அணுகமுடியாத மலைப்பகுதியில் வசிப்பவர்கள்!

 

டான் லேகாக் (Late Don Laycock) என்பவர் வாழ்நாள் முழுதும் இந்தத் தீவின் மொழிகளை ஆராய்ந்தார்; அவர் சொல்கிறார்: இந்தத் தீவில் எப்படி இவ்வளவு மொழிகள் வந்தன? என்று கேட்காதீர்கள். உலகில் பெரிய நாடுகளில் ஏன் ஒரு சில மொழிகள் மட்டுமே உள்ளன? என்று கேள்வியை மாற்றிப்

போடுங்கள்; விடை கிடைத்துவிடும். ஏனேனில் அங்கெல்லாம் நாடு முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட மன்னர் இருந்தனர்; ஒரே எழுத்து முறை இருந்தது; நீண்ட கால இலக்கியம் இருந்தது; போக்குவரத்து வசதிகள்– அதன் மூலம் வணிகத் தொடர்புகள் இருந்தன; இவை எதுவும் பபுவா நியூகினி நாட்டில் இல்லாததால் பல மொழிகள் உலா வந்தன என்பார்.

 

எது எவ்வாறாயினும் உலகில் இவ்வள வு மொழிகள் வேறு எங்கும் இல்லை; அதுவும்கூட ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மொழிகள்!

750 மொழிகளை ஒரு சில தலைப்புகளில் சேர்த்து வகைப் படுத்தினாலும் மொழிகளில் உள்ள இலக்கண வேறுபாடுகள் பெரிய புதிர்களாக விளங்குகின்றன.

 

இந்தத் தீவின் மொழிகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. காலனியாதிக்க காலத்திலேயே பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகியன பல பகுதிகளைப் பிடித்து ஆண்டன. ன்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் வந்தது; ஒரு பகுதி – இரியன் ஜயா- என்பது இந்தோநேசியாவின் ஆட்சிக்குட்ப்பட்டது. சுசுவாமி என்னும் மொழி பேசுவோர் 50 பேர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில மொழிகளை 500 பேர் மட்டுமே பேசினர். ஆங்கிலக் கல்வி முதலியவற்றால் 750 மொழிகளில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன அல்லது அழிந்துவிட்டன என்றே சொல்லலாம்.

 

மொத்தத்தில் மொழிக் கொள்கையாளர் சொன்ன பல விதிகளைப் பொய் என்று காட்டுகிறது பபுவா நியூகினி நாடு.

TAGS:– நியூகினி, மொழிகள் கொள்கை