செய்தக்க அல்ல செயக்கெடும் –புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (Post 3899)

Written by London Swaminathan

 

Date: 11 May 2017

 

Time uploaded in London: 21-58

 

Post No. 3899

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

(முதல் பகுதி நேற்று வெளியாகியது)

 

செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க

செய்யாமை  யானும் கெடும் (குறள் 466)

பொருள்:

ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய் தாலும் கெட்டுப்போவான்; மற்றும் செய்ய  வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கெட்டழிவான்.

 

இதைத் தான், கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கும் சொன்னார். நீ க்ஷத்ரியன்; போர் செய்வது உன் தொழில். எழுந்திரு (உத்திஷ்ட) என்றார்.

 

புத்தனும் தம்மபதத்தில் (314) இதைச் சொல்கிறான்:

“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும்.  ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – இது புத்தன் வாக்கு.

கண்ணனும் பகவத் கீதையில் “ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40)-

“நல்லது செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான்” என்பது கண்ணன் வாக்கு.

 

ஒரு நீதிபதி இருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க வேண்டிய தருணத்தில் ஜீவகாருண்யம் பற்றிப் பேசிவிட்டு கடமையைச் செய்யமாட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவர் கொலை செய்தவராகக்  கருதப்பட மாட்டார்.

 

இது போல போர் வீரர் ஜாதியில் பிறந்த அர்ஜுனன் போர் செய்யாமல் தப்பிக்க முயன்றபோது கிருஷ்ணன் கண்டிக்கிறான்

 

ச்ரேயான் ஸ்வதர்மஹ– அவனவன் தொழிலே சிறந்தது (3-36)  என்றும் கண்ணன்  மொழிகிறான்.

 

to be continued………………………….

 

–Subham–

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்! (Post no.3880)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 6-16 am

 

Post No. 3880

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் அழகாகச் சொல்லுகின்றனர்:

 

1.காலை எழுந்திரு

 

2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்)

 

3.மாலையிலும் குளி

 

4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.

 

5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை)

 

6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

 

 

காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல் – சால

உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்

கற்றாயோ காக்கைக் குணம்

 

வள்ளுவனும் தமிழ் வேதமாகிய திருக்குறளில்  செப்பினான்:

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

 

பொருள்:-

 

பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் ஒரு கட்டுரையில் முன்னரே தந்து விட்டேன்

 

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள  (குறள் 527)

 

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும்

 

My articles on Crows

INDIAN CROW by Mark Twine ; 9 February 2013

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subahm–

வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள் (Post No.3873)

TIRUVALLUVAR STATUE AT LONDON UNIVERSITY

 

Written by S NAGARAJAN

 

Date: 3 May 2017

 

Time uploaded in London:-  5-45 am

 

 

Post No.3873

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

குறள் வேதம்

 

முக்கியக் குறிப்பு:

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற அழகிய நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்கள்.

அவ்வப்பொழுது அவர் அனுப்பும் மின் நூல்கள் அற்புதமானவை; பொருள் பொதிந்தவை. அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

 

வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலம் தொட்டே சம்ஸ்கிருதமும் தமிழும் ‘கொண்டு கொடுத்து’ உறவைச் செழுமைப் பயன்படுத்திக் கொண்ட மொழிகள்.

 

 

தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற வார்த்தைகள் ஏராளம். அதே போல சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த வார்த்தைகளும் ஏராளம்.

காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகை இன்றி தமிழ்ப் புலவர்களும் சம்ஸ்கிருத பண்டிதர்களும் தேவையான இடங்களில் நல்ல பதங்களை தங்கள் கவிதைகளிலும் காவியங்களிலும் நயம் படக் கையாண்டு வந்தனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் தம் திருக்குறளில் கையாண்ட வடமொழிச் சொற்களைக் கூறலாம்.

இதைப் பட்டியலிடும் அரும் பணியில் ஈடுபட்ட எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் வைஷ்ணவ பரிபாஷை என்ற தனது அரிய நூலில் கீழ்க்கண்ட பட்டியலைத் தந்துள்ளார். நூலின் பெருமையைப் பற்றி தனியே இனி எழுத இருக்கும் ஒரு கட்டுரையில் காணலாம்.

 

இப்போது குறள்களின் பட்டியல்:-

குறள் 1

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

குறள் 9

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை

குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

குறள் 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்

குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது

குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

குறள் 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

குறள் 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்

குறள் 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு

குறள் 261

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே

தவத்திற் குரு

குறள் 266

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல

குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்

குறள் 490

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து

குறள் 580

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து

குறள் 763

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

குறள் 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

குறள் 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு

குறள் 1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்ல்

குறள் 1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்

குறள் 1116

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்

குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாக்கொல் முன்கை இறைஇறவா நின்ற வளை

மேலே உள்ள குறள்களின் எண்ணிக்கை மொத்தம் 30

இவற்றில் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் தடித்து சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன.

சொற்களின் பட்டியல்:

ஆதி

பகவன்

குணம்

பூசனை

தானம்

தவம்

குணம்

கணம்

தெய்வம்

மங்கலம்

காலம்

வாணிகம் (இரு முறை)

நீர்

உரு

தவம்

கருமம்

ஆசை

பூதங்கள்

கோடி

காமம்

நாமம்

பருவம்

நாகரிகம்

மதி

அதி

அச்சாணி

தூது

முகம்

அணி

நாகம்

சூது

குலம்

குடும்பம்

தேவர்

புருவம்

மதி

பதி

வளை

சம்ஸ்கிருதச் சொற்களின் மொத்த எண்ணிக்கை 39.

இவற்றில் இரு முறை வந்த சொற்கள் :குணம், தவம், வாணிகம்,மதி ஆகியவை.

ஆக மொத்த எண்ணிக்கையில் ஆறைக் கழித்தால் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் 33.

 

சில அறிஞர்கள் இன்னும் சில சொற்களையும் கூட சம்ஸ்கிருதப் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால் எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் தந்துள்ள பட்டியலில் இடம் பெறுபவை இவை மட்டுமே.

வள்ளுவர் சொல்லின் மகிமையை அறியாதவ்ர் இல்லை.

அணுவைத் துளைத்து பொருளைத் தரும் அற்புதக் குறளின் வன்மையை அறியாதவர் யார்?

அவர் நினைத்திருந்தால் இவற்றைத் தவிர்த்திருக்கக் கூடும்.

ஆனால் எடுத்துக் கொண்ட பொருளின் தன்மை கருதி உரிய கருத்திற்கு உரிய இடத்தில் அவற்றைப் பயன் படுத்தி இருக்கிறார்.

குறள் தமிழ் மறை. இதற்கு மேலும் விவரிக்க வேண்டாமே!

இனி அடுத்த கட்டுரையில் தமிழ்த் தாய் வாழ்த்தில் இடம் பெறும் சம்ஸ்கிருதச் சொற்களைக் காண்போம்.

 

PLEASE READ THE OLD POSTS

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் | Tamil …

https://tamilandvedas.com/…/வள்ளுவன்-ஒரு-சம்…

5 Nov 2012 – Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரியசம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த …

 

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

 

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068); Date: 17th August 2016

–SUBHAM–

 

 

 

 

வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?(Post No.3868)

Written by London swaminathan

Date: 1 May 2017

Time uploaded in London: -7-00  am

Post No. 3868

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

வள்ளுவன் தொடாத, பாடாத விஷயமே இல்லை. அவன் பாடிய குறள்களுக்கு பழங்காலத்தில் அறிஞர்கள் எழுதிய உரைகளைப் படித்தால்தான் நமக்கே அதன் ஆழமும் அகலமும் தெரியும்.

 

வள்ளுவன் குறளுக்கு பத்துப் பேர் உரை எழுதினாலும் அத்தனையும் நமக்குக் கிடைக்கவில்லை;

 

வள்ளுவன் தரும் சங்கீதச் செய்திகள்:–

1.ராகமும் பாடலும் ஒன்றோடொன்று பொருந்த வேண்டும் (குறள் 573)

 

2.குழலும் யாழும் இனிமையான கருவிகள் (குறள் 66)

 

இதில் ஏன் புல்லாங்குழலை முதலில் சொன்னார் என்றால் முதலில் குழல் வாசித்தபின்னர், அதை யாழிலே வாசிப்பது மரபு.

எடுத்துக்காட்டு:–

குழல்வழி நின்றது யாழே (சிலப்பதிகாரம்)

 

3.ஒரு குறளில் தோல் வாத்தியங்கள் பற்றிச் சொல்கிறார்:

அறைபறை அன்னர் கயவர் (குறள் 1076)

அறைபறை கண்ணார் (குறள் 1180)

ஏதேனும் செய்தியை அறிவிக்க இப்படி பறையைக் கொட்டி அறிவிப்பர். இவ்வாறு அறைந்து வெளியிடுவதால் அதை அறைபறை என்பர்.

 

இறந்தபோது கொட்டும் சாப் பறையையும் ஒரு குறளில் குறிப்பிடுவார் (1115)

 

இவ்வளவு இடங்களில், அவர் குழல், யாழ், பறை (புல்லாங்குழல், வீணை, மிருதங்கம்) பற்றிச் சொல்லுவதால் அவருக்கு ராகம் தாளம் எல்லாம் அத்துபடி என்பது விளங்கும்.

 

 

ராகமும் கீர்த்தனையும்

பண் என்னாம் பாடற் கியைபின்றேல் கண் என்னாம்ப்

 

கண்னோட்டம் இல்லாத கண்– (குறள் 573)

 

பொருள்:-

 

பாட்டுக்குப்   பொருத்தமான ராகம் இல்லாவிடில் பயன் உண்டோ?

 

அருட் பார்வை இல்லாத கண் இருந்து என்ன பயன்?

 

இதில் பண் என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்திய காலத்தில் இதன் பொருள் என்ன என்று பரிமேல் அழகர் உரை செப்பும்:

பண்களாவன- பாலை யாழ் முதலிய 103.

பாடல் தொழில்களாவன — யாழின் கண் வார்தல் முதலிய எட்டும்,

(வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், எள்ளல், பட்டடை. இவற்றை இசைக் கரணம் என்பர்

“எட்டு வகையின் இசைக்கரணத்து சில- 7-15

xxxx

பண்ணல் முதலிய எட்டும்,

பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்பன; இவற்றைக் குறிக்கோள் என்பர் (சிலப்.7-5/7)

 

xxx

மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்துமிவை கிரியைகள் எனப்படும்.

எட்டில் முதலில் உள்ள ஐந்தாகக் காணப்படுகின்றன (சிலப் 3-26 உரை)

xxxx

 

பெரு வண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய  வண்ணங்கள் எழுபத் தாறுமாம்.

அதாவது பெரு வண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் என்ற மூன்றும் முறையே 6, 21, 49-ஆய் வரும் என்று சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை கூறும்.

 

இவை எல்லாம் இன்றுள்ள சங்கீத மேதைகளுக்குக் கூட புரியுமா என்பது சந்தேகமே. ஆயினும் இசைத் தமி ழில் இவ்வளவு நுட்பமான சொற்கள் இருப்பதே அக்காலத்தில் சங்கீதத்துறை எந்த அளவுக்கு விரிந்து கிடந்தது — கடல் போலப் பரந்து கிடந்தது– என்பதை நமக்குப் புரியவைக்கும்.

உதவிய நூல்:-

திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பு (பதிப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன்)

 

வாழ்க வள்ளுவன்; வளர்க தமிழ் இசை!!

 

‘பாரதிதாசன் பாடலுக்கு இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு!’ (Post No.3865)

Written by London swaminathan

Date: 30 APRIL 2017

Time uploaded in London:-6-51  am

Post No. 3865

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

 

ஒரு பாட்டின் பொருளுக்கேற்ற ராகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்கிறார். யார் ஒருவர் பாட்டு எழுதினாரோ, அவருக்கு சங்கீத ஞானம் இருந்தால் அவரே அந்த பாட்டுக்கு ராகமும் போட்டுவிடுவார். பாரதி பாடல்களுக்கு அவரே அமைத்த ராகங்களை பழைய பதிப்புகளில் காணலாம்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

 

பண் என்னாம் பாடற்கு

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

 

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

 

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்

 

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்
லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது — யாம்
அறிகி லாத போது — தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ
இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் — நல்
திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

xxx

 

 

திரு எம் எம் தண்டபாணி தேசிகரின் வெண்கல குரலில் அவர் இயற்றிய பிரபல பாடலை தேஷ் ராகத்தில் கேளுங்கள் இங்கே

https://www.4shared.com/…/o…/Thunbam_nergaiyil_Desh_MMD.html

 

–Subahm–

மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது! (Post No.3824)

Written by London swaminathan

 

Date: 16 APRIL 2017

 

Time uploaded in London:- 20-12

 

Post No. 3824

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

இனையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்

–வாலி வதைப்படலம், கம்ப ராமாயணம்

கம்பன் சொல்கிறான்:-

எந்தக் குலத்தில் தோன்றியவர்க்கும் உயர்வும் இழிவும் அவரவர் செய்த செயல்களாலேயே வரும். இதனை உணர்ந்து இருந்தும் பிறன் மனைவியின் கற்பினை அழித்தாய் – என்று மனு நீதி சாஸ்திரத்தில் சொன்னபடி நடக்கும் ராமன் (வாலியிடம்) கூறினான்

xxx

 

வள்ளுவர் சொன்னதும் அதுவே

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

 

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

xxx

கிருஷ்ணன் சொன்னதும் அதுவே

 

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரம வ்யயம்

பகவத் கீதை 4-13

 

பொருள்:-

என்னால் குணங்களுக்குத் தக்கபடி நான்கு ஜாதிகள் உண்டாக்கப்பட்டன. செய்யும் தொழில்கள் குணங்களுக்கு ஏற்ப நடக்கின்றன. இதை உருவாக்கியபோதும் என்னை மாறுபாடில்லாதவனாக அறிவாயாக.

xxx

 

அவ்வையார் சொன்னதும் அதுவே

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

எவர் ஒருவர் பிறருக்கு கொடுத்து உதவுகிறாரோ அவர் பெரியோர்; கொடாதோர் கீழோர் என்று ‘நல்வழி’யில் அவ்வையாரும் சொல்கிறார்.

xxx

வேத கால ரிஷி சொன்னதும் அதுவே

நாம் எல்லோரும் தாயின் கருவிலேயே சமத்துவம் கண்டோம்; இப்பொழுது சகோதரத்துவத்தை நிச்சயமாக உருவாக்குவோம்.– ரிக் வேதம் 8-83-8

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்த பேதமும் இல்லை.

 

ஜன்மனா ஜாயதே சூத்ரஹ

சம்ஸ்கராத் த்விஜ உச்யதே

வேத படனாத் பவேத் விப்ரஹ

பிரம்ம ஜானதி இதி பிராஹ்மணஹ

-சம்ஸ்கிருத ஸ்லோகம்

பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்கள்;

உபதேசம் பெற்று பூணூல் போடுவதால் இருபிறப்பாளன்;

வேத அத்யயனத்தால் அறிஞன்;

பிரம்மனை அறிவதால் பிராம்மணன் ஆகிறான்

 

–subham–

 

உலகம் எப்படி அழியும்? எப்போது அழியும்? வள்ளுவன் தகவல் (Post No.3355)

Written by London Swaminathan

 

Date: 15 November 2016

 

Time uploaded in London: 6-26 AM

 

Post No.3355

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

உலகம் எப்படி அழியும்?

பூகம்பத்தால் அழியும்.

எப்போது அழியும்?

பண்புடையவர்கள் இல்லாவிடில் அழியும்.

 

இப்படிக்கூறியது திருவள்ளுவர். பொய்யாமொழிப் புலவன் சொல்லுவது பொய்யாகுமா?

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996)

 

பொருள்:-

நல்ல பண்புகள் (குணங்கள்) உடையோர் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. சான்றோர் இல்லாவிடில் நிலநடுக்கம் (பூகம்பம்) உண்டாகி எல்லாம் மண்ணுக்குள் புதைந்துவிடும்.

 

அதாவது கலியுகம் முற்றிப்போய், நல்லவர்கள் குறைந்துவிட்டால், உலகம் அழிந்துவிடும். புராணங்களும், மஹாபாரதமும் சொன்ன அதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதில் வியப்பொன்றுமில்லை.

 

இதற்கு ஆறு குறள்களுக்கு முன், வள்ளுவன் அபாயச் சங்கு ஊதுகிறான்:-

 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை (குறள் 990)

 

பொருள்:-

வேலியே பயிரை மேய்ந்தால் பூமாதேவி பொறுக்கமாட்டாள். சான்றோரின் குணங்கள் நீங்குமானால் இந்தப் பெரிய நிலம் பாரத்தைத் நிச்சயமாகத் தாங்காது.

 

இதையே அவ்வையார் வேறுவிதமாக விளம்புவார்:-

நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று.

 

நல்லவர் இல்லாவிடில் மழை பெய்யாது.

 

அந்தக் காலத்தில் வறட்சி நிலவினால் உடனே ஊருக்குள் முனிவர்களையும், சாது சன்யாசிகளையும் அழைத்து வருவர் என்பதை ராமாயணம் மூலம் அறிவோம். ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக் கோட்டு முனிவர் வந்தபின்னர் மழை பெய்தது.

 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை – வாக்குண்டாம்

 

 

ஆயினும் வள்ளுவன் உறுதியாக் கூறுவது என்னவென்றால், எப்போதும் கொஞ்சம் நல்லவர்கள் மிச்சம் இருப்பார்கள்; உலகமே தலைகீழாகப் போனாலும் அவர்கள் நிலைபெயர மாட்டார்கள்!

 

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

 

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல், கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

 

வாழ்க வள்ளுவன்! வளர்க சான்றோர்!!

 

–subham–

 

 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3296)

img_8188

Written by S. NAGARAJAN

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 5-38 AM

 

Post No.3296

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 1

 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்  

இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : –                               எட்டுத் தொகை நூல்கள்,

பத்துப்பாட்டு  நூல்கள்,

பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்    

செந்தண்மை பூண்டொழுகலான்   (குறள் 30)

 

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.

இனிய நீர்மையும் கருணையும் கொண்டவர் ஆதலின் அந்தணர் அறவோர் ஆவர்.

ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது

அறவாழி அந்தணன் (குறள் 8)

இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.

 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்   (குறள் 134)

ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.

ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.

மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..

மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.

ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.

பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்    (குறள் 28)

 

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.

 

தவமும் தெய்வத்திருவருளும் அறிவும் உடையோரின் சொல்லே மந்திரம் ஆகிறது. அதையே மறைமொழி என்று இங்குக் காண்கிறோம்.

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    

நின்றது மன்னவன் கோல்         (குறள் 543)

அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல்.

ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          

பெருமிறை தானே தனக்கு        (குறள் 847)

 

அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.

இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               

ஆன்றாரோ டொப்பர் நிலத்து   (குறள் 413)

செவியுணவு என்பது கேள்வி.

வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு.  செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.

 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று  (குறள் 259)

இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.

ஆக, –

அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.

மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.

வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.

மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.

இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!

 

பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.

******

சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)

பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2 (Post No.3290)

pallakku-tiruvaiyaru

Written by S. NAGARAJAN

Date: 26 October 2016

Time uploaded in London: 4-54 AM

Post No.3290

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருக்குறள்  பெருமை

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! – 2

 

                       By ச.நாகராஜன்

 

 

               alum-pallaku-4                         

செகவீரபாண்டியனாரின் உரை தொடர்கிறது:

 

முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார்        

  பிற்பெரிய செல்வம் பெறுபவோ – வைப்போ                  

  டிகலிப் பொருள்செய்ய எண்ணியக்கால் என்னாம்                          

முதலிலார்க்கு ஊதியம் இல   (பழமொழி)

 

செய்தீவினை யிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்                 எயத வருமோ இருநிதியம்  – வையத்து                     அறும்பாவம் என்ன அறிந் தன்றிடார்க்கு                  வெறும்பானை பொங்குமோ மேல்   (நல்வழி 17)

 

அறம் செய்யாதவர் அல்லல் உறுவர் என இவை குறித்துள்ளன. உவமைகள் கூர்ந்து ஓர்ந்து உணர வுரியன.

 

செய்குவம் கொல்லோ நல்வினை எனவே                    

ஐயம் அறாஅர் கசடீண்டு  காட்சி                                

நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே                    

 யானை வேட்டுவன் யானையும் பெறுமே                        

 குறும்பூழ் வேட்டுவன்  வறுங்கையும் வருமே               

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோரே                

 செய்வினை  மருங்கின் எய்தல் உண்டெனின்                       

செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்                           

செய்யா உலகத்து நுகர்ச்சி இல் லெனின்                           

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்                            

மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்                                

 கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்                                    

 தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே (புறநானூறு  214)

 

நல்வினையால் எல்லா இன்ப நலங்களும் உளவாம்; அதனை எவ்வழியும் செவ்வையாச் செய்ய வேண்டும் என ஒரு சோழ மன்னன் இன்னவாறு அறத்தைப் புகழ்ந்து கூறியிருக்கிறான்.

 

செல்வ வளங்களை அடைந்து ஒருவன் சுகபோகமாய் வாழ்வது புண்ணியத்தினாலேயாம்;  அந்த இன்ப வகைகளுள் சிவிகை ஒன்று. ஆதலால் அது இங்கே நன்கு காண வந்தது.

 

சிவிகை = தண்டிகை, பல்லக்கு

 

மனிதனை மனிதர் சுமந்து  கொண்டு போவது உயர்வையும் இழிவையும் ஒருங்கே வரைந்து காட்டியது. ஒரு சிவிகையைச் சுமப்பவர் எண்மர் ஆதலால் பொறுத்தார் என்று பன்மையில் குறித்திருக்க வேண்டும். ஒருமையைக் கொண்டே அவருடைய சிறுமையைத் தனித் தனி நுனித்து உணர்ந்து  கொள்ள நின்றது.

 

பொறுத்தான் என்ற உரைக்குறிப்பால்  அல்லல்களைச் சகித்துக் கொண்டு சுமையைப் பொறுமையோடு தாங்கிப் போகும் பாங்கு தெரிய வ்ந்தது.

”நான் என்ன பாவம் செய்தேனோ இப்படிக் கழுதைப் பொதி சும்க்கிறேன்” என்று சுமையாளர் நெஞ்சு நொந்து பேசுவதையும்  உலகம் கேட்டு வருகிறது.

 

இன்ப நிலையில் ஒருவன் இனிது வீற்றிருக்கிறான்; துன்பம் தோய்ந்து ப்லர் அவனைச் சுமந்து போகின்றார். அதனை நேரே கண்ட தேவர் புண்ணியத்தின் பயனையும், அதனை இழந்து நின்றவர் பின்பு உழந்துபடும் துயரையும் நினைந்து வியந்து நெஞ்சம் வருந்தினார். அவ்வாறு உள்ளம் ப்ரிந்து இரங்கியபோது பாடிய பாட்டே அறத்தை ஈண்டு இவ்வாறு எடுத்துக் காட்டியது.

 

ஊர்ந்தான் இடை வேண்டா என்றது அங்கே அறத்தின் பெருமித இன்பத்தையும், மறத்தின் சிறுமையான துன்பத்தையும் நேரே காண்கின்ற நீங்களே நன்கு தெளிந்து கொள்ளலாம்;  வேறே நான் யாதும் கூற வேண்டியதில்லை என்று கூறாமல் கூறியருளினார். இது கூர்மையுற மொழிந்த படியாம்.

 

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                    

பொறுத்தானோ டூர்ந்தா னிடையை – ம்றுத்தார்சம்                       

பந்தன் சிவிகை பரித்தார் திரிகுவர்மற்                               

றுந்தும் சிவிகையினை யூர்ந்து   (நால்வர் நான்மணி மாலை, 33)

pallakkil-perumal

திருஞான சம்பந்தர் சமய போதனை செய்யச் சிவிகை யூர்ந்து சென்றார். அவர் முருகப் பெருமான் அவதாரம் ஆதலால் அவரது சிவிகையைத் தாங்கினவர் பின்பு அமரர் ஆய்ச் சிவிகையூர் நேர்ந்தார். அதனை வித்தக வினோதமாயச் சிவப்பிரகாசர் இப்படி விளக்கியிருக்கிறார். இந்த அருமைத் திருக்குறள் அந்தக் கவிஞர் உள்ளத்தைக் கவர்ந்துள்ள நிலையை இதனால் நாம் உணர்ந்து கொள்கிறோம். அறம் புரிபவன் தருமவானாய்ப் பெருமையுறுகிறான்.

 

தருமத்தை உரிமையாச் செய்து கொள்ளுங்கள்; அது உங்களுக்குப் பெருமகிமைகளை அருளும்; அதனை இழந்து நின்றால் இழிந்த துயரங்களை அடைய நேரும் என்று அறிவுறுத்தியுள்ளார். புண்ணியம் புரிந்து கண்ணியம் பெறுக.

 

உயர்ந்த நீதியும் சிறந்த அரச இன்பமும் அறத்தால் பெறலாம். இவ்வுண்மையை மூர்த்தி நாயனார் உணர்த்தி நின்றார்.

 

சரிதம்

இவர் பாண்டி நாட்டிலே மதுரையம்பதியில்  இருந்தவர். வணிகர் மரபினர். சிவபெருமான்பால் பேரன்புடையவர். நறும் சந்தனம் அரைத்து நாளும் சிவபூசைக்குக் கொடுத்து வருவது இவரிடம் வழக்காமாயிருந்தது. உல்கப் பாசம் இன்றிப் பிரம்ச்சாரியாய்த் துறவி நிலையில் இருந்த இவர் யாண்டும் அறவினையே ஆற்றி வந்தார். அவ்வாறு வருங்கால் கருநடன் என்னும் மறுபுலத்து அர்சன் இந்நாட்டின் மேல் படை எடுத்து வந்து அரசைக் கவர்ந்து கொண்டான். அவன் சமண சமயத்தவன் ஆதலால் இவருடைய சிவபூசைக்கு இடர்கள் பல செய்தான். இடையூறுகளைப் பொறுத்து வந்தார்; ஒருநாள் பொறுக்க முடியாமல் இறைவனை நினைந்து இவர் உருகி அழுதார்; மறுநாள் கருநடன் இறந்து போனான். அரசு இல்லையானால் நாடு கேடாம் என்று அமைச்சர் யாவரும் ஆலோசித்து முடிவில் பட்டத்து யானையை அலங்கரித்துக் கண்ணைக் கட்டி வெளியே விட்டார்.

“இந்த  மதயானை யாரை  மதித்து எடுத்து வருமோ அவரே அரசர்” என உறுதி செய்து உய்த்தார். வேழம் விரைந்து நடந்தது. கோவில் முகப்பில் இளம் துறவியாய் ஒதுங்கியிருந்த இவரை உவந்து எடுத்து முதுகில் வைத்துக் கொண்டு வீர கம்பீரமாய் மீண்டு வந்தது; வரவே யாவரும் இவரைத் தொழுது வணங்கி அரியணையில் அமர்த்தி அரசுமுடி சூட்டிப் பரசி நின்றனர்.

(இங்கு செகவீர பாண்டியனார் பெரிய புராணம் ,மூர்த்தி நாயனார் வரலாறில் உள்ள 35,36,37 செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார்)

 

இங்ஙனம் அரசன் ஆனபின் நீதிநெறியோடு நாட்டை இவர் பாதுகாத்து வந்தார். இவரது சிவிகையைக் கருநடனது உறவினரே தாங்கி வர நேர்ந்தனர். பல்லக்குப் போகிகள் என அவர்  ஒரு தொகையினராய்  அரசுக்கு ஊழியம் செய்து வந்தனர். அறம் புரிந்தவர் சிவிகை ஊர்வர்; அது புரியாதவர் குவிகையராய் ஊழியம் புரிவர் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து நின்றது.

 

ஆண்டவனாய் நின்றறவோன் ஆள்வான் அஃதில்லான்     பூண்டடிமை யாவன் புகுந்து

 

அறம் அரசன் ஆக்கும்.

 

என்று இவ்வாறு தன் உரையை முடிக்கிறார்.

 

pallakku-thuukki

என்ன ஒரு அற்புதமான உரை. இப்படி விளக்கத்தைப் படித்தால் திருக்குறளின் மாண்பு புரியும்.

ஆனால் நாத்திகரின் உரையைப் படித்தால் இருக்கும் நல்லதும் நம்மிடமிருந்து போய் விடும் அல்லவா!

செகவீரபாண்டியனாரின் புத்தகத்தை வாங்கிப் படித்தால் திருக்குறளின் உண்மைப் பொருள் விளங்கும். எப்பொருள் எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பது தானே அறிவு.

அதை விட்டு விட்டு பகுத்தறிவுச் சிங்கங்கள் எழுதும் பசப்பல் மொழிகளையும் பொய்யுரைகளையும் படிக்கக் கூடாது என்பதற்கு இந்த சிவிகைக் குறளே சீரிய உதாரணம் ஆகிறது!

********* ( இந்தக் கட்டுரைத் தொடர் முற்றும்)

 pallakku

குறிப்பு : (1-1-1957 இல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பு) திருக்குறட் குமரேச வெண்பா நூலிலிருந்து செகவீரபாண்டியனாரின் அருமையான விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1 (Post No.3286)

palanquin1

Written by S. NAGARAJAN

Date: 25 October 2016

Time uploaded in London: 5-51 AM

Post No.3286

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருக்குறள்  பெருமை

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1

 

                      ச.நாகராஜன்  

 pallaku-2

நல்லனவற்றைச் சிவிகையில் வைத்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று போற்றுவது நமது பழைய மரபு. அந்த வகையில் ஒவ்வொரு குறளுமே சிவிகைக் குறள் தான்! என்றாலும் சிவிகையைத் தன்னுள்ளே கொண்டுள்ள இந்தக் குறள் அறத்தின் மாண்பை சிறப்பாக எடுத்துக் கூறுவதால் இது அறக் குறள் ஆகிறது. அறம் வெல்லும். பாவம் தோற்கும். இது பாரதம் வாழ் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறக் கொள்கை.

குறளுக்கு வருவோம்.

 

 

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                                 பொறுத்தானோ டூர்ந்தா னிடை    (குறள் 37)

 

அறத்தின் பயன் இது போன்றது என்பதை காட்சி அளவையால் உணர்க.. பல்லக்கைச் சுமப்பவனோடு அதில் ஏறிச் செல்பவனின் காட்சி அளவையால் அது அறியப்படும்.

 

பரிமேலழகரின் இந்தத் தெளிவுரை காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.

 

(ஏப்ரல் 1968இல் வெளி வந்துள்ள திருக்குறள் உரைக் களஞ்சியம் நூலில்) வித்துவான் ஆர் கன்னியப்ப நாயக்கர் பரிமேலழகர் வழியே சென்று, இன்னும் தெளிவாக “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா.சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னுளே உணரப்படும்.” என்று விளக்கம் தருகிறார்.

 

ஆனால் நாத்திகவாதிகளுக்கு இந்தக் குறளை வழக்கம் போலத் திரித்தால் தானே மனம் ஆறுதல் அடையும்! சமுதாயத்தைத் திசை திருப்ப முடியும்.

 

ஆகவே சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் புதிய உரைகள் தோன்றலாயின.

 

பல்லக்கில் ஏறி பவனி வருபவனையும் அதைச் சுமந்து செல்பவனையும் பார்த்து அறத்தின் இயல்பு இது என்று விளம்ப வேண்டாம். பல்லக்கில் ஏறியவர் நல்வினை செய்தவர், அதைத் தூக்குபவர் தீவினை இயற்றியோர் என்று கூற வேண்டாம். இதைப் பார்த்து அறத்தின் இயல்பு இது என்று கூறுதல் வேண்டாம்.

 

இதுவே புதிய உரை.

pallaku4

ஆயிரக் கணக்கான சொற்களை இடம் பார்த்து ஆழ்ந்த பொருளுடன் தரும் வள்ளுவர் இப்படி ஒரு எடுத்துக்காட்டைக் காட்டி இதைப் பார்த்து அறத்தை எடை போடாதே என்று சொல்வாரா?

 

சரி, ஒரு குறளைத் தனியே பார்த்து இப்படிப் பொருள் சொல்லும் பகுத்தறிவுவாதிகள் குறளில் வரும் இரு வினை (குறள்

5),நல்வினை (குறள் 335), தீ வினை (குறள் 201,209,210, 319) போன்றவற்றிற்கு எப்படிப் பொருள் கொள்வார்கள்?

“தீவினை செய்தால் பிற்பகல் தாமே எப்படி வரும்? தீவினை ஏதாவது ஏஜன்ஸி ஒன்று வைத்திருக்கிறதா? பகுத்தறிவுக்கும் தர்க்கத்திற்கும் ஒத்ததாக இல்லையே!” என்றல்லவா பகுத்தறிவுச் செல்வங்கள் கூற வேண்டி வரும். அப்போது திருவள்ளுவரை அவர்கள் என்ன செய்வது? ஓரங்கட்டுவதா?

ஆகவே பகுத்தறிவு என்ற பெயரில் எவ்வளவு பசப்பினாலும் திருக்குறள் அவர்களின் ஏமாற்று  மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் குறள்களையும் ஒருசேரப் படித்தவுடன் இயைபு நன்கு புரியும்.

 

சரி ஒரு பக்கம் சற்றே தெளிவாக இல்லாத் மயங்க வைக்கும் பரிமேலழகர் உரை! (காட்சி அளவையான் என்று அவர் முடித்து விடுகிறார்), இன்னொரு பக்கம் கார் எஜமானரையும் அதை ஓட்டுபவரையும் பார்த்து அறத்தின் பயன் இது என்று சொல்லாதே என்று சொல்லும் நாத்திகச் செல்வங்கள்…

 

எப்படி இந்தக் குறளின் பொருளைத் தெளிவாக விளங்கிக் கொள்வது?

 

இங்கு தான் நமக்குக் கைகொடுத்து உதவுகிறார் கவிராஜ பண்டித செகவீரபாண்டியனார்.

 

மதுரையில் வாழ்ந்த முதுபெரும் புலவர். தமிழை ஆய்ந்து கற்று உணர்ந்தவர். இவ்ரது திருக்குறட் குமரேச வெண்பா திருக்குறளை நன்கு விளக்குவதோடு அதற்கு எடுத்துக்காட்டாக முதல் இரு அடிகளில் ஒரு வர்லாறையும் முன் வைக்கும்.

அதில் அவர் இப்படிக் கூறுகிறார்:

 

 

உற்ற மணிச்சிவிகை யூர்ந்தாரேன் மூர்த்தியார்      கொற்றவனேன் தாழ்ந்தான் குமரேசா – பற்றும்           அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                      பொறுத்தானோ டூர்ந்தா னிடை

 

குமரேசா! அறம் புரிந்த மூர்த்தி நாயனார் சிவிகையூர்ந்து சென்றார். அதனைத் துறந்து நின்ற அரசன் ஏன் தாழ்ந்தான்? எனின், அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

 

செகவீரபாண்டியனாரின் உரையில் சில முக்கியக் குறிப்புகளை மட்டும் கீழே காணலாம்:

palanquin_psf

பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் அதனைச் சுமந்து செல்ப்வனும் ஆகிய இந்த இருவரிடையே புண்ணிய பாவங்களின் பலனை முறையே தெளிவாகத் தெரிந்து கொள்ளுக என்பதாம்.

சிவிகையை ஊர்ந்து செல்பவன் அறம் செய்தவன்; அதனைச் சுமந்து போகின்றவன் பாவம் செய்தவன் என்பதை யூகமா உணர்ந்து கொள்கின்றோம். ஒத்த பிறப்பினையுடைய மக்களுள் ஒருவன் சுகமாய் உயர்ந்திருப்பதையும், மற்று ஒருவன் இளிவாய்த் தாழ்ந்து நிற்பதையும் உலகில் பல இடங்களில் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன? முன்னவன் ஏதோ நல்ல புண்ணியம் செய்துள்ளான்; பின்னவன் அவ்வாறு செய்யாமல் அயர்ந்து நின்றுள்ளான் என இன்னவாறு  அனுமானமாய் நாம் துணிந்து  கொள்கின்றோம். நேரே  கண்ட காட்சியிலிருந்து யூகமாகக் கருதிக் கொள்வது உறுதியான விவேகமாய் வந்தது. அனுமானம், ஆகமம், அருந்தாபத்தி முதலிய பிரமாணங்கள் எல்லாம் காட்சியளவைக்கு இன்மா மாட்சி புரிகின்றன.

 

உலகெலாம் காக்கும் ஒருவ்ன் ஒருவன்                    உலகெலாம் காலால் உழன்றும் – விலையுண்டாங்கு          ஆராது நல்கூரும் என்றால் அறம்பாவம்                 பாராதது என்னோஇப் பார்   (பாரதம்)

 

ஒருவன் தலைமையான அரசனாய் உலகம் முழுவதும் ஆளுகிறான்; ஒருவன் விலை அடிமையாய் உண்ண உணவும் இன்றி வருந்துகிறான். இந்த உயர்வு தாழ்வுகளை நேரே பார்த்திருந்தும் புண்ணிய பாவங்களின் பல்ன்களை உணர்ந்து கொள்ளாமல் விழி கண் குருடராய் மக்கள் இழிந்து உழலுகின்றார்களே! என்று பெருந்தேவனார் இங்ஙனம் பரிந்து இரங்கியிருக்கிறார்.

 

– அடுத்த பகுதியுடன் கட்டுரை முடியும்