மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! -1 (Post No.3164)

mother-teresa-indian-stamp

Written by S NAGARAJAN

Date: 18 September 2016

Time uploaded in London: 6-10 AM

Post No.3164

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்தக் கட்டுரையில் அடுத்து வரும் முதல் பாராவை கட்டுரை ஆரம்பத்திலும் முடிவிலும் படிக்க வேண்டும்! இது ஒரு அன்பு வேண்டுகோள்!

 

மதர் தெரஸாவைக் குறை சொல்வது நமது நோக்கமல்ல. ஏழைகளுக்கு உதவி செய்யும் ஒவ்வொருவரும் இறைவனின் சந்நிதானத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பவரே. ஹிந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவருக்கும் இதில் சிறிதளவும் ஐயமில்லை. இதை எழுதும் ஹிந்துவான எமக்கும் இதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

மீடியாக்கள் அடிக்கும் கூத்தைச் சற்று உற்று நோக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை!

ஆஹா, மதர் தெரஸா – நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா – கடைசி கடைசியாக புனிதர் ஆகி விட்டார்.

 

 

வாடிகனில் உள்ள போப் ‘மனமுவந்து” இதை அங்கீகாரம் செய்து அவரை ;லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் “புனிதராக” அறிவித்து விட்டார்!

மகிழ்ச்சி!

 

 

ஏழைகளுக்கு உதவி சிறிதளவே செய்தாலும் ஒருவர் போற்றப்பட வேண்டியவரே! அந்த வகையில் மகிழ்ச்ச்சி!!

ஆனால் உலகில் “ப்ரொஜெக்ட்” செய்யப்படும் விதத்தில் அவர் அந்த ப்ரொஜெக்ஷனுக்கு ஏற்புடையவரா?

இல்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஆய்வு இன்று எடுக்கப்பட்டதில்லை. 2013ஆம் ஆண்டு  மார்ச் மாதம் கனடிய பத்திரிக்கையான “Relegieuses”  என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒன்று.

பிரசுரமான போதே கடும் விமரிசனத்திற்கு உள்ளாகிய கட்டுரை இது.

 

theresa-1

அவரைப் பற்றி மூவர் ஆய்வை நடத்தினர். Sergi Larivee மற்றும் Genevieve Chenard றஆகிய  இருவர் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். சைக்கோஎஜுகேஷன் (Psychoeducation) பிரிவில் பணியாற்றுபவர்கள் இவர்கள். மூன்றாமவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் கல்விப் பிரிவில் வேலை பார்ப்பவர். பெயர் Carole Snechal.

 

சுருக்கமாக ஒரே வரியில் ஆய்வின் முடிவைச் சொல்ல வேண்டுமெனில் அன்னை தெரஸா “anything but a saint” – ‘புனிதரைத் த்விர வேறு என்ன வேண்டுமானாலும்” என்று சொல்லலாம்.

ஊடகங்களின் திட்டமிட்ட டியூனும் தீவிரமான பிரச்சாரமும் அவரை புனிதர் ஆக்கி விட்டன!(a creatuib if orchestrated and effective media campaign)

 

வாடிகன் அவரது மனிதப் பண்பு என்ற பக்கத்தை உன்னிப்பாகப் பார்க்கத் தவறி விட்டது என்கிறது ஆய்வு,

 

எல்லையிலாத் துன்பத்திற்கு ஆட்பட்டு அவரிடம் வந்த நோயாளிகளின் துன்பத்தை அவர் புகழ்வதிலேயே (gloryfying the suffering) குறியாக் இருந்தாரே தவிர அந்த நோயைப் போக்க அவர் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்கிறது ஆய்வு.

இந்த ஆய்வில் மூன்று ஆய்வாளர்களும் அன்னை தெரஸாவைப் பற்றி வெளிவந்த அனைத்து பிரசுரங்களையும் ஆவணங்களையும் முறையாக் ஆராய்ந்தனர் பின்னரே அவரது உள்ளீடற்ற சித்திரத்தை (Hallowed image) றஆய்வு மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தெரஸா மறைந்த போது 517 இல்லங்களை – ஆதரவற்று இறப்போருக்கான இல்லங்களைக் – (missions or homes for dying) கொண்டிருந்தார்!

 

 

இந்த மிஷன்களுக்கு வந்த பணத்திற்கோ குறைச்சல் இல்லை. கோடிக் கணக்கில் டாலர்கள் – உல்கெங்கிலுமிருந்து பணம், பணம், பணம்!

இந்த மிஷன்களுக்கு ஏராளமான டாக்டர்கள் வருகை புரிந்து வந்தனர்.

 

 

இவற்றில் பல கல்க்த்தாவில் அமைந்திருந்தன. இந்த இல்லங்கள் ஏழைகளையும் ஆதரவற்று இறக்க இருப்போரையும் “அன்புடன்” அறைகூவி வரவேற்றன!

– அடுத்த கட்டுரையுடன் முடியும். கட்டுரையின் முடிவில் முதல் பாராவைத் திருப்பிப் படிக்க வேண்டும்.

 

–subham–

மூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்! (Post No.3020)

constituition

Article Written S NAGARAJAN

Date: 30 July 2016

Post No. 3020

Time uploaded in London :– 9-18 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்!

 

எல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.

 

அவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில்  முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.

மூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

 sl constitution.jpg

ஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)

 

தங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது!

வாழ்க ஸ்ரீலங்கா!

 

அடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது!

வாழ்க அயர்லாந்து!

 

அடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்!

 

அங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு! புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ!

 

ஹிந்து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக!

 

வாழ்க நேபாளம்!

 nepal-constitution

ஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா …  ??

 

ஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.

ஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.

ஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா?

 

(More secular than the so called secular in real sense, is it not?)

 

மத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து  மதம் தான், இல்லையா!

 

சிந்திக்க வேண்டும்!

**********

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா?- 2 (Post No.3013)

Bishop-offers-cake

Article Written S NAGARAJAN
Date: 28 July 2016
Post No. 3013
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(First Part was published on 26th July 2016)

செகுலரிஸம் சரியா? -2
ச.நாகராஜன்
இந்திய சரித்திரத்தைச் சற்று ஆழ்ந்து படித்தால் ஒன்று தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
ஒரு நாளும் ஹிந்துக்கள் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை.
எந்த ஒரு தனி நபரையும் வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாற்றியதில்லை.
எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு ஸ்தலத்தையும் இடித்ததில்லை.
அடுத்த மதத்தினரின் இடங்களைப் பிடுங்கியதில்லை
அழித்ததில்லை. அதில் ஹிந்து கோவில்களைக் கட்டியதில்லை.

 
‘உங்கள் மதம் எதுவானாலும் அதை அப்படியே கடைப் பிடியுங்கள்’ என்பது தான் எந்த ஒரு ஹிந்து ஆசார்யரின் அன்புரையாக இருந்திருக்கிறது.
ஆனால் மாறாக வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷாரையோ அல்லது மதத்தைப் பரப்ப வந்த கிறிஸ்தவ பாதிரிகளையோ எடுத்துக் கொண்டால் கடைசியாக நமது சரித்திரம் இனம் காட்டும் அன்னை தெரஸா உட்பட அனைவருமே முதலில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள் என்பதை அறிய முடியும்.

 

vijyakanth_0
ஹிந்து பழக்க வழக்கங்களை ஒழித்தல், ஹிந்து ஆலயங்களை அழித்தல், ஒவ்வாத இதர மேலை நாட்டு பழக்க வழக்கங்களை வலுக் கட்டாயமாகத் திணித்தல் ஆகியவையே அவர்களின் வழி முறையாக இருந்தது.
கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் தைரியமாக ‘வருகின்ற ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் நல்ல அறுவடை செய்யலாம் செய்யுங்கள்’ என்று சொல்லக் கூடிய அளவு ஹிந்துக்கள் தாராள மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள் கூடவே வலி குன்றியும் ஒற்றுமை இன்றியும் இருக்கிறார்கள்.
முகமதிய கலாசாரத்தை எடுத்துக் கொண்டு இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சமே பிளந்து விடும்.
எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன.
எத்தனை விக்கிரஹங்கள் நொறுக்கப்பட்டன.
வாள் முனையில் மதமாற்றம்.
ஹிந்துவாக இருந்தால் ஜஸியா வரி
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 
ஆக இந்தப் பின்னணியில் நமது அரசியல் சட்டம் செகுலரிஸம் பேசாமல் சமத்துவம் என்ற கொள்கையை ஏன் முன் வைக்கவில்லை?
அனைவருக்கும் ஒரே சட்டம்! ஒரே இந்தியா! சமூகச் சட்டம் ஒன்றாக இருக்கட்டும்.
மதங்களின் வழிபாட்டு முறைகள் தனிப்பட்டவரின் விருப்பப்படி இருக்கட்டும்!
இது இல்லையே!
கிறிஸ்தவர்களுக்கு தனி போர்டு
முஸ்லீம்களுக்கு தனி போர்டு.
அவர்களின் நிலங்களை சொத்துக்களை அவர்களே தனிப்பட்ட முறையில் பராமரிக்க, செலவழிக்க, வசூல் செய்ய உரிமை.
ஆனால் ஹிந்து ஆலயங்கள் என்றாலோ அரசியல் வாதிகள் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிடியில்!

 
ஆலயங்களில் வரக்கூடிய பக்தர்களின் காணிக்கையை ஆலய பூஜைக்கன்றி இதர் ஆயிரம் வழிகளில் செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆலயங்களின் நிலங்கள் இடங்கள் மூலமாக பல லட்சம் வருமானம் வர வேண்டிய இடத்தில் ஒரு பைசாவும் வருவதில்லை அதை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து தங்கள் விருப்பப்படி ஆக்கிரமித்திருப்பதையும் பார்க்கிறோம்!

 

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் விருப்பப்படி தங்கள் வழிபாட்டு ஸ்தலத்தைப் பராமரிக்க உரிமை கொடுக்கும் சட்டம் ஹிந்து கோவில்களில் அதிக வருமானம் உள்ள கோவிலகளின் பணத்தை அந்தக் கோவில்களின் பராமரிப்புக்கும் சரியாகச் செலவழிப்பதில்லை; சற்று வருமானம் குறைந்த கோவில்களின் பூஜைகளுக்கு ஆகம விதிகளின் படி செய்வதற்கான பணத்தையும் தருவதில்லை.
ஆன்மீகக் கோவில்களின் பணம் அரசியல்வாதிகளின் மனம் போன படி செலவழிக்க அனுமதி!

 
திராவிட தீய சக்திகள் இதைத் தானே விரும்புகின்றன. என்ன ஒரு ஆனந்தம் அவர்களுக்கு – சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கத் துடிக்கும் ‘கண்மணிகள்’ அல்லவா அவர்கள்!
ஆக இந்த குறைபாடுகள் ஏன்?
ஒரே வரியில் சொல்லி விடலாம் – பிளவுபட்டுள்ளது ஹிந்து சமுதாயம் என்று!
இந்தப் பிளவு பட்ட சமுதாயத்தை ஒன்றாக்கி ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைக்கப்படும் போது இந்தியாவில் அரசியல்வாதிகளின் சதிராட்டங்கள் முடிந்து போகும்.

Christians
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தங்கள் தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்வர், ஒரு சட்டத்திற்குட்பட்டு!
ஹிந்துக்களின் ஆலயங்களும் சொத்துக்களும் அதற்கான வழியில் முறைப்படி கண்காணிப்புடன் பராமரிக்கப்படும்.
அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரே அரசியல் சாஸன சட்டம் அமையும்!
வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தில் ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகள் அறவே நீக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த ஹிந்துக்களை ஓரிழையில் இணைக்கும் பணியை யார் செய்வது?
அதற்கான அற்புதமான இயக்கமாக நமக்குத் தெரியும் ஒரே இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமே
இப்படி ஹிந்துக்களை இணைக்க, ‘ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்’ விடுவார்களா?
தடைகள், தடைகள், தடைகள்.
என்றாலும் இந்த சமுதாயம் ஒன்று சேர்ந்தே தீரும்.
சங்கம் வெற்றி பெற்றே தீரும்!
அப்போது அரசியல் சாஸனத்தின் செகுலரிஸம் உண்மையான சமத்துவத்தைக் கொண்டுள்ள வகையில் இருக்கும்!
இப்படி நம்பலாம்.
அதற்காக நம்மளவில் நாமும் ‘அணில் சேவை’ செய்வது போல சேவையைச் செய்யலாம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வலுப் பெறுவது ஒன்றே நாட்டின் சகல பீடைகளையும் ஒழிக்கும் ஒரே வழியாகும்!
********** முற்றும்

சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிக்கை ஆசிரியர்: எனது தந்தையார் (Post No.3009)

appa, amma picture

Article Written S NAGARAJAN
Date: 27 July 2016
Post No. 3009
Time uploaded in London :– 5-24 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் புத்திரர் தனது தந்தையாரைப் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்

வெ.சந்தானம்  தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

 

எனது தந்தையார்

————————

சந்தானம் நாகராஜன்

 

தேசப்பணி

எனது தந்தையார் திரு வெ.சந்தானம் தேசீயம் இலக்கியம் தெய்வீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு நல்லனவற்றை நாள் தோறும் பரப்பிய புண்ணியர் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறும் போது தான் அவரின் பெருமையை என்னால் உணர முடிந்தது. ஏனெனில் மிகவும் நெருக்கமாகப் பல ஆண்டுகள் கூடவெ வாழ்ந்த போதிலும் தன்னைப் பற்றியும் தான் ஆற்றிய பணியைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூடக் கூறியதே இல்லை.

 

 

அவர் ஏன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தாலும் அது பற்றி அவர் கூறியதே இல்லை. ஆனால் டி,வி.எஸ் ஸ்தாபனத்தார் வெளியிடும் ஹார்மனி இதழின் ஆசிரியராக புதுக்கோட்டை திரு வெங்கடராமன் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஒரு நல்ல நண்பர். அவர் என்னிடம் தந்தையாரின் சுதந்திரப் போராட்ட பங்கைப் பற்றி ஒரு கட்டுரை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதை முன் வைத்து என் தந்தையாரிடம் ஒரு கட்டுரை கேட்டேன். அதில் மலர்ந்தது ஒரு அற்புத கட்டுரை- அதில் அவரது பணி லேசாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி வெள்ளையனே வெளியேறு என்று அச்சிடப்பட்டிருந்த பிரசுரத்தை அவர் சென்னை கடற்கரையில் விநியோகம் செய்ததற்காக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார் என்று அந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிய வந்தது.

 

 

 

தாமிரப் பட்டயம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வழங்கப்பட்டபோது திரு வை.சங்கரன், திரு ராஜாராம் உள்ளிட்டோர் மதுரையிலேயே கலெக்டர் புருஷோத்தமதாஸிடமிருந்து பெற்றனர்.பழைய போர் வீரர்கள் ஒன்றாகக் குழுமிய காட்சியைக் கண்ட கலெக்டர் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு பட்டயம் வழங்க தனது நற்பேறை எண்ணி மகிழ்ந்தார்.

 

 

இலக்கியப் பணி

 

திரு பி.எஸ்,ராமையா மதுரையில் அவர் எழுதிய பிரஸிடெண்ட் பஞ்சாக்ஷரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன் ஆகிய நாடகங்களை நடத்தும் எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினருடன் வந்தார். எங்கள் வீட்டிற்கு நேரடியாக அவர் வந்தது வெங்கலக் கடையில் யானை நுழைந்தது போல இருந்தது. நீண்ட காலப் பழக்கம் ஆதலால் வாடா, போடா என்ற வசனங்களைக் கேட்ட எனக்கு அது புதிதாக இருந்தது, ஏனெனில் என் வீட்டிற்கு என் தந்தையாரைப் பார்க்க வருவோர் தினமணி பொறுப்பாசிரியர் என்ற முறையில் மிகுந்த மரியாதை தருவர்.

 

 

ஆகவே திரு பி.எஸ். ராமையா வீட்டில் அமர்ந்த போது அவரது பழைய கால நினைவுகளைக் கிண்டி விட்டேன். சரசரவென்று அவர் அந்த மணிக்கொடி காலத்தைப் பிட்டு வைத்தார். அவர் பேசுவதே ரஸமாக இருந்தது. ஐந்து ரூபாய் சந்தாவாக வந்தால் அன்று தீபாவளிக் கொண்டாட்டம் தானாம்! அனைவரும் நடந்தே சென்று ஒரு பெரிய ஹோட்டலில் விருந்து போல சாப்பிட்டு உற்சாகமாக வந்து அடுத்த இதழின் பணியைத் தொடங்குவார்களாம்.

 

 

 

பின்னால் தனது மணிக்கொடிக் காலம் என்ற நூலில் எனது தந்தையாரைப் பற்றி பி.எஸ்.ராமையா குறிப்பிட்டிருக்கிறார். அவரது மணி விழாவைப் பெரிய அளவில் நடத்துவது என இலக்கிய அன்பர்களால் தீர்மானிக்கப்பட, என் தந்தையாருடன் நானும் வத்தலகுண்டு சென்றேன்.

 

 

வத்தலகுண்டு ஒரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளத்துடன் திரு ராமையா அழைத்து வரப்பட்டார். திரு சி.சு.செல்லப்பா உற்சாகமாக ஆடி ஓடி அனைவரையும் வரவேற்றார். திரு ராமையாவின் முகம் மலர்ந்திருந்தது. வாழ்நாளிலேயே தன்னை கௌரவித்துவிட்டார்களே தமிழர்கள் என்று நினைத்தாரோ, என்னவோ!

 

 

கையில் காசு இல்லாமல் ஈஸி சேரை முறித்து விறகாகவும் அவர் ஆக்கியதுண்டு. பணம் ஆயிரக்கணக்கில் புரள லண்டனிலிருந்து,, “சந்தானம் உடனடியாக இங்கு வந்து விடு” என்று உற்சாகமாக அவர் என் தந்தைக்கு கடிதம் எழுதியதும் உண்டு. தமிழ் ஜீனியஸாக விளங்கிய அவர் மூலம் அவர்களது பழைய மணிக்கொடிக் காலத்தைப் பற்றியும் பாரதியார் பாடல்களைப் பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகளையும் உணர முடிந்தது.

 

 

‘வெடிபடு மண்டலத் திடிபடு தாளம் போட’ என்ற பாட்டை எனது தந்தையார் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய நேரத்தில் பாடும் போது காளி நேரில் நர்த்தனம் ஆடும் பிரமை எனக்கு உண்டாகும். அன்னை அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்ற வரிகளை உச்சஸ்தாயியிலும் அமைதியாக இறக்கமாகவும் பாடும் போது பாரதியின் சக்தி ஆவேசத்தை சுற்றி இருந்து கேட்கும் எங்களால் சுலபமாக உணர முடிந்தது.

 

 

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து அதில் கரீனினா என்பதை கரீனாவாக தமிழ் படுத்தியதன் காரணத்தையும் குறிப்பிட்டார். (தமிழில் கரீனினாவின், கரீரினாவை என்று வருவதைப் படிக்க வாசகர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் கரீனா என்ற மாற்றம் ஏற்பட்டது!)

 

 

தெய்வீகப் பணி

 

சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசத்தால் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என் தந்தையார். அச்சன்கோவிலுக்கு புஷ்பாஞ்சலிக்காக சென்றது, தர்மபுரம் திருவாவடுதுறை ஆதீனங்களில் நடத்தப்படும் திருமந்திர மற்றும் சைவ மகாநாடுகளில் பங்கேற்றது, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யசாயி பாபாவை தரிசித்தது, இளையாத்தங்குடியில் பெரியவாளை தரிசித்தது, சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் இல்லத்திற்கு வந்தது என ஏராளமான நிகழ்ச்சிகளை உணர்ச்சிபூர்வமாக அனுபவித்து இறையருளை அனுபவித்தோம். ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் எனது தந்தையார் அவர் மீது தான் இயற்றிய கீர்த்தனங்களை சமர்ப்பித்தபோது அது பாடியபோதே சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பதங்கள் நன்கு வந்துள்ளன என்றும் கூறியதைக் கேட்டு நான் அதிசயித்துப் போனேன்.பாபா அவரை ஆபட்ஸ்பரியில் நடந்த மகாநாட்டில் ஒரே மேடையில் தன்னுடன் பேசுமாறு அழைத்தார்,

இதே போல திரு முத்துராமலிங்க தேவரும் என் தந்தையாரை தலைமை தாங்க அழைத்து மதுரையில் தெய்வீகப் பணியைப் பரப்பி வந்தார்.

 

 

பத்திரிகைப் பணி

எமர்ஜென்ஸி காலத்தில் தினமணி தலையங்கப் பகுதியை வெற்றிடமாக வெளியிட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்தக் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னரும் திரு ராம .கோபாலன் உள்ளிட்டோர் எனது இல்லத்திற்கு அடிக்கடி வந்து ஜனநாயகம் தழைக்க வேண்டிய அவசியத்தைப் பகிர்ந்து கொள்வர். எமர்ஜென்ஸி நீக்கப்பட்ட போது ஜனநாயகம் புதிய பிறப்பை எடுத்தது. அந்த கால கட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒழுக்கம் உள்ள சீலர் என்று என் தந்தையாரைப் பாராட்டி தினமணி அவசர நிலையைக் கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களின் அதீத செய்கைகள் எதையும் செய்யவிடவில்லை.

 

 

பத்திரிக்கை பணி என்பதால் அதுவும் தினசரி என்பதால் அன்றாடம் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். இவற்றை சமூகப் பொறுப்புடன் அவர் கையாண்டு செய்திகளைப் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ராமேஸ்வரத்தில் கடல் பொங்கி ஊருக்குள் வந்து விட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே ஒரு சிறிய காரில் நேரடியாக என்ன நடந்தது என்பதைப் பார்க்கத் தந்தையார் கிளம்பினார். விவரத்தின் முழு தாக்கமும் தெரியாத சிறுவனான நானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டேன். மானாமதுரைக்கு முன்பாகவே கடல் சாலையை மூட சாலையைக் கண்டுபிடிக்க பல ஆட்கள் இறங்கி இரு பக்கமும் சாலையின் ஓரத்தில் இருந்து சாலையின் எல்லையைக் காண்பித்தவாறே கார்களை மெதுவாக வழி நடத்திச் சென்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராமையா அரசு வாகனங்களுடன் வந்தார்.

மானாமதுரையில் ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்தி  அனைவரையும் பின் தொடர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நிலைமையின் தீவிரம் அவருக்கும் ஏனையோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்பட ஆரம்பித்தது.ஒரு ரயிலையே காணோம் என்ற செய்தி வர ஆரம்பித்திருந்தது. உடனே என் தந்தையார் மதுரை திரும்பி அச்சில் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை நிறுத்தி நேரில் கண்ட நிலைமையை பிரசுரித்தார்.

 

 

ராமநாதபுர தினமணி நிருபர் திரு ஆதிநாராயணன் ஒரு தோணி மூலமாக ராமேஸ்வரத்திலிருந்து வந்து உலகத்திற்கு ராமேஸ்வரத்தின் நிலைமையை தினமணி மூலமாக அறிவித்தார். உடனே மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இது போல ஆபத்து அல்லது அவசர காலங்களில் செய்தித்தாளின் முழு பலத்தையும் மக்களின் நலனுக்காக பலமுறை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

 

 

 

செய்தித் தாள் என்பதே அன்றாட நிகழ்ச்சிகள் ஆயிரமாயிரத்தை எடிட் செய்து ஆறு அல்லது பத்துப் பக்கங்களில் கொடுப்பது தான். இதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த எடிட்டரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடிட் செய்து சுருக்குவது முடியாத காரியம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சமுதாய நலனுக்காக பத்திரிக்கை எப்படி பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தி வந்ததால் தான்!அவற்றில் முக்கியம் அல்லாதது எதுவும் இல்லை!!

 

 

தந்தயாரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் அவர் ஒரு மஹரிஷி போல என்று குறிப்பிட்டுப் புலம்பிக் கொண்டே இருந்தார்.

 

பணம், சொத்து, புகழ் இவற்றுக்கெல்லாம் ஏங்காமல் “என் கடன் சமுதாயம் நலன் பெற பணி செய்து கிடப்பதே” என்பது தான் மஹரிஷிக்கு இலக்கணம் என்றால் அவரும் ஒரு மஹரிஷி தான் என்று எனக்கும் தோன்றுகிறது.

 

**************

 

 

 

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா? (Post No 3006)

razan karunanidhi

 

Article Written S NAGARAJAN
Date: 26 July 2016
Post No. 3006
Time uploaded in London :– 7-59 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

செகுலரிஸம் சரியா?
ச.நாகராஜன்
இன்று கடைப்பிடிக்கும் வோட் பேங்க் அர்த்தத்தில் செகுலரிஸம் சரியா?
சற்று அலசிப் பார்ப்போம்.
செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தின் எந்த அம்சமும் ஒதுக்கப்பட வேண்டும், மற்ற மதங்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு தன்னுடைய தலையை வணங்கி விட்டுக் கொடுக்க வேண்டும், குனிந்து குனிந்து குட்டு வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அரசியல் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது – சிவ சேனா, ஹிந்து முன்னணி, பாரதீய ஜனதா பார்ட்டி போன்ற சில கட்சிகளைத் தவிர.
இது ஏன்?
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என்ற தீய ஆசை தான்!
நமது அரசியல் சட்டம் (Constitution) இப்படிச் சொல்கிறது:
‘We the people of India have resolved to constitute India into …. …a Secular Republic “
ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய மக்கள் இப்படியா சொன்னார்கள். ஒரு சில தலைவர்களே அரசியல் லாபத்திற்காக இப்படி அரசியல் சட்டத்தில் சொன்னார்கள்!
இன்று 120 கோடி மக்களிடம் இந்த வரியை ஓட்டிற்கு விட்டால் அந்த வாசகங்கள் உருப்படுமா? தேறுமா?
தேறாது.
அரசியல் சட்டத்தில் மைனாரிடிகளைப் பாதுகாக்க 29 மட்டும் 30 ஆகிய பிரிவுகள் இணைக்கப்பட்டன.
இவற்றை 25.2b யுடன் இணைத்துப் பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சும்?
ஏன், எப்படி?
இவற்றில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர் சொல்லப்பட்டனர்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் விடப்பட்டனர்.
ஏன்?
அவர்கள் தாம் மைனாரிட்டியாம்!
பாவம், பார்ஸிகளைக் காணவே காணோம்.
கப்பலில் வந்த பார்ஸி இனத்தினர் ஒரு தூதுவரை ஹிந்து அரசனிடம் அனுப்பினர். இங்கு வந்து தங்க அனுமதிக்க வேண்டும் என்ற தூதுவரின் கோரிக்கையைக் கேட்ட ஹிந்து அரசன் ஒரு கிண்ணத்தில் பாலை முழுவதுமாக தளும்பத் தளும்ப நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து கப்பலில் உள்ள உங்கள் தலைவனிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கள் என்றான்.
ஒன்றும் புரியாத தூதுவர் அந்தக் கிண்ணத்தை அப்படியே தலைவனிடம் சேர்ப்பித்து நடந்ததைச் சொன்னார்.
தலைவரோ அந்தக் கிண்ணத்தில் இருந்த பாலில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு அதை மீண்டும் சென்று மன்னனிடம் கொடுக்கச் சொன்னார்.
தூதுவர் நடந்ததை மன்னனிடம் சொல்ல சிரித்தவாறே அவன் அனைவரும் உள்ளே வாருங்கள் என்று அனுமதி கொடுத்தான்.
இதில் என்ன அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்பதை அறிய அவையில் அனைவரும் ஆர்வம் கொண்டனர்.
மன்னன் விளக்கினான்.
“எனது நாட்டில் கிண்ணத்தில் முழுவதுமாக உள்ள பால் போல மக்கள் நிரம்பியுள்ளார்கள், உங்களுக்கு இங்கு இடமில்லையே’ என்று சொல்லி அனுப்பினேன். இடமில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னதை பார்ஸி தலைவர் புரிந்து கொண்டு சர்க்கரையை அதில் அள்ளிப் போட்டார்.
உங்கள் மக்களுடன் மக்களாக பாலில் சர்க்கரை போலக் கலந்து விடுகிறோம் என்றார் அவர்.
எப்படிப்பட்ட பதில்!
அருமையான உணர்வுகளைக் கொண்ட பார்ஸிகளை அனுமதித்து உள்ளே வரச் சொன்னேன் என்றான் ஹிந்து அரசன்.
அன்று பார்ஸிகள் கொடுத்த வாக்கை இன்று வரை அவர்கள் காப்பாற்றி வருகின்றனர்.
ஒரு கலவரம், ஒரு மத மாற்றம், ஒரு கிளர்ச்சி – ஊஹூம், பார்ஸிகளிடமிருந்து இன்று வரை இந்தியாவில் ஒன்று கூட எழவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இனம் பார்ஸி இனம்.
கொடுத்த வாக்கை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றும் மக்கள் என்றால் அவர்கள் பார்ஸிகளே!
இந்தப் பார்ஸிகளை எந்த பட்டியலிலும் சேர்க்கவில்லை நமது அரசியல் சட்டம்.
புத்த மதத்தினர்
ஜைன மதத்தினர்
சீக்கியர் – இவர்கள் மைனாரிடி இல்லையாம்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் மைனாரிடியாம்?
எந்த அடிப்படையில்?

secular-4
எண்ணிக்கையிலா? அப்படியானால் மேலே சொன்னவர்கள்: எண்ணிக்கையும் குறைவு பட்டது தானே!
ஆக அரசியல் சுய லாபத்திற்காக ஒரு விஷ வித்து விதைக்கப்பட்டது.
அதன் பலனை இன்று சுதந்திர பாரதம் அனுபவித்து வருகிறது.
சமத்துவம் – Equality – என்பது போய் செகுலரிஸம் சமத்துவமற்ற ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டது.
இதனால் மதமாற்றம், தீவிரவாதிகளின் மிரட்டல்கள், குண்டுவெடித் தாக்குதல் என்று தேவையற்ற அனைத்து தீமைகளும் அணிவகுத்து பாரதத்திற்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன!
ஒரு பொது சிவில் சட்டம் அல்லவா இங்கு தேவை!
இந்திய அரசியல் சட்டம் ஹிந்துக்கள் மீது – அவர்கள் வாழ்க்கை முறை மீது, அவர்களின் மணச் சடங்கு, சுவீகாரம் உள்ளிட்டவற்றின் மீது – மட்டும் பாயும்.
ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால் ஓடும்!
இது என்ன செகுலரிஸம்?
அதிசய செகுலரிஸம்?!
சற்று இன்னும் யோசித்துப் பார்ப்போம்!

-தொடரும்

அனுமனைப் பிடித்தவரை ஆலோசகர் ஆக்குகிறோம்! (Post No 2651)

Quill_(PSF)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 21 March 2016

 

Post No. 2651

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

letter-writing-fountain-p-007

நையாண்டி மடல் 6

 

அனுமனைப் பிடித்தவரை ஆலோகர் ஆக்குகிறோம்!

 

ச.நாகராஜன்

 

என் இனிய முட்டாள்களே!

 

வாக்குக் கொடுத்தபடி இந்தக் கட்டுரையில் கட்டிங் பற்றிய இரகசியங்களை ஆரம்பிக்கிறோம்.

 

ஆனால் உள்ளபடியே ஒன்று சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் போதே உள்ளங்கை அரிக்கிறது.

 

 

தம்பீ! கழகக் கண்மணீ!!

 

இதற்கு டாக்டர் தேவையில்லை என்பதை நீயே நன்கு அறிவாய்.

உன் கை வைத்தியமே போதும். புரிந்து கொண்டிருப்பாய்.

‘இந்தியத் திருநாட்டில் ஆங்காங்கே கோலாகலம், குதூகலம். இவற்றில் பங்கேற்பீர்களா?’ என வடவர் சேனல்கள் நம்மை மடக்கிக் கேட்கின்றன.

 

பெருமிதத்துடன் கூறுகிறோம்- பங்கேற்க மாட்டோம் என்று!

என்னை?

 

தொன்னையில் நெய் வழியும் போது கையை ஏந்துபவன் கபோதி அல்லவோ! இந்தத் தத்துவத்திற்கு இணங்க பல மாநில கோலாகலங்களில் இந்த முட்டாள்கள் கழகம் பங்கு பெறாது என்பதைத் திட்டவட்ட்மாகத் தெளிவு படுத்துகிறேன்.

ஏன் இந்த முடிவு என்கிறாயா?

 

இங்கு தான் இருக்கிறது இரகசியம்!

நமது கொள்கைகளின் ஆணி வேரைச் சொல்ல வேண்டியது இங்கு என் தலையாய கடமை ஆகிறது.

 

மொத்தமும் சுருட்டு

 

letter-writing-day-fun

மொத்தமும் சுருட்டு; உனக்கு நீயே; நாளையும் நாமே என்ற மூன்று முத்தான கொள்கைகளின் அடிப்படையில் வளர்பவர்கள் நாம்!

 

மொத்தமும் சுருட்டு என்பதற்கான உள் அர்த்தம் உனக்கே தெரியும். வெளி அர்த்தத்தை மட்டும் இங்கு பகிர முடியும்!

பீடி குடிக்காதே, சிகரட் உடல் நலத்திற்குத் தீங்கு பயக்கும் என்று தான் விளம்பரங்கள் வருகின்றனவே தவிர சுருட்டு பிடிக்காதே என்று சேனலில் எதிலாவது பார்த்த்து உண்டா, நீ?!

 

 

ஆகவே நல்ல எண்ணத்தில் மொத்தமும் சுருட்டு என்கிறோம் நாம்!

 

 

உனக்கு நீயே என்ற கொள்கையின் படி எங்கும் நீ பதவிக்காக நிறக் வேண்டாம். தீட்டாக நாம் கருதும் ஓட்டுக்காக அலைய வேண்டாம். உனக்கு வேண்டிய பதவியை, உனக்கு வேண்டிய காலம் வரைக்கும் நீயே நிர்ணயித்துக் கொள்! இந்தப் பதவிக்குப் போட்டி போட்டு உன்னிடம் வருவோருக்கு நீ காண்பிக்க வேண்டிய அறிவிப்புப் பலகை நாளையும் நாமே என்பது தான்! மறந்து விடாதே. பலகையில் அன்றாடம் தேதியை மாற்ற மறக்காதே!

 

எவருக்கும் விலையுண்டு என்பதை விலையில்லாப் புத்தகம் கூட வாங்கிப் படிக்காத எனக்கா தெரியாது?

 

 

கஷடப்பட்டு ஆடி ஓடி அவலாகி நொந்து நூடில்ஸாகி வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அவர்களின் உள்ளங்கையைக் கொஞ்சம் உரசினால் போதும், நம் முட்டாள்கள் கழகத்தில் முன்னணி உறுப்பினர்களாக – கண்மணிகளைக் காப்பவர்களாகக்- களம் இறங்கி விடுவார்கள்.

 

 

இங்கு தான் நிற்கிறது, கட்டிங்!

 

இதை நான் கண்டுபிடித்த இரகசியத்தையும் அதைப் பரவலாக்கிய விதத்தையும் இதற்கு உதவும் அபாயகரமான ஆயுதத்தையும் பற்றி உன்னிடம் பகிர வருகிறேன், பகிரங்கமாக!

 

 

இதற்கிடையில் இன்று நாம் கேள்விப்பட்ட செய்தி இது! நமது மாண்புமிகு அதிகாரிகள் ஓடிக் கொண்டிருந்த காரில் ஆடிக் கொண்டிருந்த சில பேர்வழிகளைப் பிடிக்க அவர்கள் முழித்த முழியினாலும் உளறளினாலும் சந்தேகப்பட்டு காரை சோதனை செய்த போது யாரைப் பிடித்தார்கள் என்கிறாய்?

anjile ondru petran, hanuman

அனுமன் சிலையை பிடித்தோம்

 

அனுமாரை! ஆமாம்! அஞ்சிலே ஒன்றான வாயு பெற்றான், அஞ்சிலே ஒன்றான கடலைத் தாவி அஞ்சிலே ஒன்றான வான் வழியே சென்று அஞ்சிலே ஒன்று ஆன பூமியின் மகளைக் கண்டதாகக் கூறப்படுகிறதே, அவனைத் தான்!

 

 

அந்த அனுமன் சிலையை ஆவணம் இல்லாததால் பிடித்தோம் என்று சொல்ல , ஐயோ நாங்கள் பஜனையில் அல்லவா மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தோம், மெய்மறந்து ராம் ராம் என்று உருகிப் பாடிக் கொண்டிருந்தோம் என்று அவர்கள் கதற கோவிலில் நிறுவ வேண்டிய அனுமன் அரசு கருவூலத்தில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்துளான் தற்போது!

இந்த மாண்புமிகு அதிகாரிகளைக் கண்டு மனம் மிக மகிழ்கிறோம்!

 

இவர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவர்களை உயர் மட்ட கொள்கைப் பரப்பு ஆலோசகர்களாக உடனடியாக நியமிக்கிறோம்.

 

 

அத்தோடு ஐயன் வள்ளுவன சிலை உள்ளிட்ட ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரை குதூகலக் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டி தார்பாலின் போட்டு மூடி மறைத்த சிங்கங்களை -எங்கள் தங்கங்களையும் உயர் மட்ட ஆலோசகர் குழுவில் இணைக்கிறோம்.

 

 

திருக்கோயில் நகரில் ஒரு செய்தி. ஆயிரம் குடங்கள் ஒரு பெரிய கண்டெய்னரில் இருந்ததாம். இருக்கலாமா? நம் மேதகு உறுப்பினர்கள் அவற்றைக் கைப்பற்றி விட்டனர். அங்குள்ள பால்குடம் எடுக்கும் தாய்க்குலம், ‘நாங்கள் ஆர்டர் செய்ததை அள்ளிட்டுப் போறீங்க்ளேடா பாடையிலே போற பாவிங்களா’ என்று குய்யோ முறையோ என்று கத்த, சத்தம் போடாமல் அவை அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இதில் தீரத்துடன் செயல் பட்டவர்களையும் நாம் நம் கழகத்தில் இணைக்கிறோம்.

பால் குடத்தைக் கைப்பற்றினால் சட்டியினால் நம்மை அடிப்பார்கள், புலியை முறம் கொண்டு விரட்டிய போர்க்கள வீராங்கனைகள். ஆகவே அந்த இடத்திலிருந்து நைஸாக நகர்ந்து விட்டோம்.

 

 

இப்போது போகும் வேகத்தைப் பார்த்தால் உறுப்பினர்களை விட முட்டாள் கழக ஆலோசகர்கள் அதிகமாகி விடுவார்களோ என அச்சப்படுகிறோம். துச்சமாக நினைக்க, இது ஒரு சின்னச் செய்தி அல்ல் என்பதால் மிச்சம் மீதி இன்றி இது பற்றி விசாரித்து கழகக் கண்மணிகளை இலட்சம் இலட்சமாகச் சேர்க்க வழி வகுப்போம்; அதற்கு அணி அணியாக.

 

புறநானூற்றுப் போர் வாளே பொங்கி வா!

 

 

புறநானூற்றுப் போர் வாளே பொங்கி வா!

அகநானூற்று அட்டகாசமே. ஆர்ப்பாட்டத்துடன் வா!

கலிங்கத்துப் பரணியின் கட்டாரியே, கடகடவென்று சிரித்து வா, சீறி வா!

குறுந்தொகையின் குத்தீட்டியே குமுறி வா!

 

 

இனி கட்டிங்கிற்கு வருவோம்:

நான் பிறந்தது வளப்பமான ப்ழைய கால சில்லாவிலே ஒரு குக்கிராமத்திலே என்பதை வரலாற்று அறிஞர்கள் உனக்குத் தெளிவு படத் தினமும் கூறி வந்திருப்பார்கள்.

அந்தப் பழைய பொன்னான நாளிலே தான் ‘ப்ள்ளிக்கு வா பள்ளிக்கு வா’ என்று நச்சரித்தான் ஒரு பழைய கால ஜாலக்காரன். அ –அம்மா; ஆ-ஆடு என்று ஆரம்பிக்கும்  மோசக்காரன்

 

அவனிடமே என் எண்ணத்தை வெளிப்படையாக வெடுக்கென்று சொன்னேன்: உன்னிடமிருந்து ஓடப் போகிறேன். அதற்காக நான் திருட்டு பிளேன் ஏறப் போகிறேன் என்று!

 

 

அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.- ஹ ஹ ஹா என்று,

‘பிளேன் வருவதற்கு விமான நிலையம் வேண்டுமடா, ஓடு பாதை வேண்டுமடா ஆயிரம் ஏக்கர் அளவுக்கு, முழு முட்டாளே’ என்றான்.

 

 

உடனே ஓடினேன், ஓடினேன், கிராமத்தைச் சுற்றி ஓடினேன். இரண்டே நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கு வந்து விட்டேன். ஏனெனில் உனக்கே தெரியும் குக்கிராமம் அந்த அளவுக்கு மிகச் சிறியதென்று. அங்கு கபடி விளையாடக் கூட் கையளவு திடல் இல்லை!

 

 

மாற்று வழியை யோசித்து மாநகருக்கு வந்து விட்டேன்.

கையிலே இருந்ததோ நாலணா! நாளைக்கு என்ன செய்வது?

என் நிலை கேட்டு.. .. ..  நிலை கெட்டு .. .. .. ..

உன் கண்களில் பனிக்கும் நீரைப் பார்க்கிறேன். கலங்காதே!

 

அடுத்த மடலில் கட்டிங் பிறந்த வரலாறைத் தொடர்கிறேன்.

அதுவரை அன்பு நெஞ்சங்களே சற்று விடை கொடுங்கள்.

 

மு மு க தலைவர்

 

ஜம் ஜம் பங்கஜம்: நையாண்டி மடல் எண்-5 ( Post No.2645)

Rue de l'Étuve - Stoofstraat, Bruxelles - Brussel, België

Rue de l’Étuve – Stoofstraat, Bruxelles – Brussel, België

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 19 March 2016

 

Post No. 2645

 

Time uploaded in London :–  8-29 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

WARNING:  PICTURE SCANNED FOR  JUST THE JOBBRUSSELS:

Urinating boy statue in Brussels

 

நையாண்டி மடல் எண் 5

 

ஜம் ஜம் பங்கஜம் பங்கேற்கும் தலை நகர் சேனல் நிகழ்ச்சி!

.நாகராஜன்

 

என் அன்புக்குரிய முட்டாள்களே!

 

CUTTING  பற்றிய மடல் தயார்! அதை வெளியிடும் நேரத்தில் அவசரத் தொலைபேசி அழைப்பு என உதவியாளர் கூற யார் என்றேன்.

சொன்னார். என்னையா என்றேன்!

நமது அறிவுக் களஞ்சியங்கள் பணி புரியும் தலைநகரின் பல்கலைக் கழகம் என்றதும் உள்ளமெலாம் பூரித்தது. உடலெல்லாம் சிலிர்த்தது.

பேசினேன். வேறொன்றுமில்லை. ஆதரித்து ஒரு அறிக்கை வேண்டுமாம்.

 

 

தர வேண்டியதை நான் தந்தால், தர வேண்டியதை அவர்கள் தருவார்கள், இல்லையா? புரிந்து கொண்டாயா?

சரி விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

இதில் என்ன தப்பு இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. 31 வயதே ஆன பச்சிளம் பாலகன் ஒருவன் சோலை நிரம்பிய பல்கலைக்கழகத்தின் நட்ட நடுப் பகுதியில் அழகிய மாலை நேரத்தில் அவசரமாக இயற்கை உபாதையைக் கழித்தான்.

ஒன்னுக்குப் போனான் என்று சொல்லி விட்டால் முட்டாள்களாகிய உங்களுக்கு சுலபமாகப் புரியும்.

 

சொல்லுங்கள், இதில் என்ன தவறு இருக்கிறது முட்டாள்களே!

சாலையிலே சிறுநீர் கழித்தானாம், பாலகன்! இது ஒரு தப்பா? அதை ஒரு பெண் பார்த்தாளாம்! அவள் பருவ மங்கையா, பார்க்க சிறுமியா?

கேட்கிறேன் அர்த்தமுள்ள அபூர்வமான இந்த வினாவை. விடை தருவார்களா, வீணர்கள்?

அந்தரங்க உறுப்பைக் காண்பித்ததாக புகார் கூறிய பருவ மங்கை தன் கண்ணை மூடிக் கொண்டு போயிருக்கலாம். புகாராவது கொடுக்காமல் இருந்திருக்கலாம்.

 

 

அந்தப் பாலகனை ஆசிரியை அழைக்க அவர்கள் உல்லாசமே, சல்லாபமே என்ற படத்தை வீடியோவில் நெருங்கி இருந்து பார்த்தார். இதில் என்ன தவறு?                                              ஐயகோ! இதையெல்லாம் அரசியல் ஆக்க நினைக்கிறார்கள் கோணல் புத்தியுள்ள கொடுமதியாளர்கள்.

stalin urinating

 

stalin 2

 

stalin 3

Daily Mail pictures of urinating Stalin statue at Kiev, Capital of Ukraine. Anti Communist activists put it, but the authorities dismantled it later.

இதை கண்டித்து இன்றைய இரவு , “இந்தியா அறிய விரும்புகிறது” நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடைபெற உள்ளது, அல்லவா? அதற்கு நம் கழகத்தின் சார்பில் மகளிர் பேரணியின் மாண்புமிகு முட்டாள் ஆன ஜம் ஜம் பங்கஜம் அவர்கள் அனுப்பப்படுகிறார்.

அதென்ன அவர் பெயர் தாய்த் தமிழில் இல்லையே எனக் கலங்கல் வேண்டா. அலட்டல் வேண்டா.

 

 

அருமைத் தம்பீ! எம்பீ! நம்பீ!

வடவர்களின் ஆதிக்கத்தில் உள்ள சேனல்களில் அவர்கள் விரும்பும் பெயர் இருந்தால் தானே நாம் இடம் பெற முடியும்? உரிமையைப் பெற முடியும்? சிந்தி!

 

ஜம் ஜம் பங்கஜம், “மேலாடை நழுவி விழ, பூவாடை பூசி வர” பாடலுக்கு எத்தனை முறை மேலாடையை நழுவ விட்டுள்ளார் என்பதை எண்ணுவதற்காகவே எண்ணற்ற முறைகள் அந்தப் படத்தைப் பார்த்த கழகக் கண்மணிகளின் எண்ணிக்கையை யாவரே அறிவர்?!

 

 

அவர் இந்த விவாதம் நடக்கும் அரங்கத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் ஆடையை அடிக்கடி நழுவ விட அதை நான்கு காமராமேன்களும் படம் பிடிக்க மற்றவர்கள் பக்கம் காமராக்களும் திரும்புவதில்லை அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்ற உண்மையை உனக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளம் குளிர்கிறதா?

 

அங்கு கூலிக்காக வரவழைக்கப்பட்ட 90 பார்வையாளர்களும் எதிரி கட்சிக்கென வந்திரக்கும் சிறு நரிக் கூட்டத்தைச் சிதற அடித்து விட மாட்டார்களா? அவர்களுக்குப் பேச இடம் கொடுத்தால் தானே!

 

 

இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணி ஜம் ஜம் பங்கஜம் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் டி ஆர் பி ரேட் எகிறுகிறது என்பதற்குத் தானே காரணம் என நினைத்தாராம்.

குட்டிப் பெண்மணி! என் கண்மணி! அப்படி இல்லை அம்மணீ! அதற்கான காரணம் ஜம் ஜம் பங்கஜத்தின் லிப்ஸ்டிக்கும் தலையை அடிக்கடி கோதி விட்டுப் பார்க்கும் கொக்கரிக்கும் கண் சிமிட்டுப் பார்வையும் தான்! இதை சேனல் இயக்குநர் அந்தப் பெண்மணீயிடம் சொன்ன போது அவர் மருண்டார்; சுருண்டார்.

 

 

என்றாலும் அவருக்கு அடுத்த நாட்டிலிருந்து வரும் படியை எண்ணி, வரும்படியை எண்ணி, வாய் மூடி பணியைத் தொடர்கிறார்.

கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம் ஜம் ஜம் ஜாம் ஜாம் என்று அந்தச் சேனலையே முட்டாள்களுக்கு உரியதாக ஆக்கப் போகிறார், அன்பர்களே, நண்பர்களே!

“என்னையா, கன்னையா, என்னையா பார்க்கிறாய்?

 

 

சின்னையா, சீர் ஐயா, நீ சிரித்தால் நான் வேர்க்கிறேன்”

என்ற ஜம் ஜம்மின் நடனக் காட்சியை சின்ன உடையில் சின்னத் திரையில் அதே விவாதத்தின் போது ஒரு சின்ன ப்ரேக் என்று சொன்னவுடன் பார்க்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

தலை நகரின் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குப் பேராதரவு தர முட்டாள்கள் கழகம் முன்னே நிற்கும், இனி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இயற்கை உபாதைகளைக் கழிக்கலாம், ஆசிரியைகள் மாணவர்கள் பேதமின்றி நினைத்த இடத்தில் நினைத்த போது அந்தரங்கம் பேசலாம் என்ற என் கொள்கை முழக்கத்தை நீங்கள் வேண்டி விரும்பிக் கேட்டதற்கிணங்க இப்போது அறிவிக்கிறேன்.

 

அடுத்த மடல் கட்டிங் பற்றியே என்று அறுதியிட்டு உறுதி கூறி விடை பெறுகிறேன்.

 

மு மு கழகத் தலைவர்

 

–subham-

இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)

muslims and hindu swamijis

தீவிரவாதம் ஒழிய வழி

 

இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 March 2016

 

Post No. 2632

 

Time uploaded in London :–  7-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

muslim eating on banana leaves

அமெரிக்காவில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் நாவல்கள் லட்சக் கணக்கில்  விற்பனையாகின்றன.

 

இர்விங் வாலஸ், சிட்னி ஷெல்டன், ராபர்ட் லுட்லம் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்; இன்றைய எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்!

 

முன்பு ஹாலிவுட் திரைப்படங்களிலும் நாவல்களிலும் எதிரியாக சித்தரிக்கப்படுவது ஒரு கம்யூனிஸ்ட் தான். அந்த எதிரியிடமிருந்து கதாநாயகன் கதாநாயகி நாட்டை (அமெரிக்காவை) அல்லது உலகத்தையே காப்பாற்றுவர்.

ஆனால் கொள்கை அளவில் உள்ளீடே இல்லாத கம்யூனிஸ கொள்கையை அது பிறந்த ரஷியாவிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

 

75 ஆண்டுகளுக்குள்ளேயே தள்ளாட்டம் போட்ட கம்யூனிஸ கொள்கை உலக தொழிலாளர்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்; உள்ளூர் தொழிலாளர்களையே ஒன்று சேர்க்க முடியவில்லை.

 

சோவியத் யூனியன் சிதறுண்டு போனது; கம்யூனிஸம் காலாவதியானது.

 

அதன் மிரட்டல் கொள்கை, அடிதடி, வன்முறை, சர்வாதிகாரம் மட்டும் எஞ்சி உள்ளன.

 

அதை, கலக்கும் காம்ரேடுகள் முதலாக வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிழைப்பை ஓட்டுகின்றனர்.

செத்த  பிணத்திற்கு தினசரி பூஜை!

 

இப்போது அமெரிக்கர்களுக்கு உத்வேகமூட்டிய கலக்கல் காம்ரேடுகளைக் காணோம் என்பதால் ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் வேறு ஒரு களத்தைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வந்து சேம்ர்ந்தார் ஒஸாமா பின் லேடன்.

 

 

தவறான கம்யூனிஸ கொள்கையை விட மோசமான ஒரு கொள்கையை முன் வைத்து அருமையான ஒரு மதத்தையே காவு கொடுக்க முன் வந்த அவர் செய்த மாபெரும் தவறு இரட்டை கோபுரத் தாக்குதல் தான்!

 

 

இப்போது அமெரிக்க சீரியல்கள், ஹாலிவுட் படங்கள், நாவல்கள் அனைத்திலும் வரும் ஒரே வில்லன் தீவிரவாத முஸ்லீம் தான்!

24 என்ற பிரபலமான அமெரிக்க சீரியலில் நம் பாலிவுட் அனில் கபூரும் நடித்துக் கலக்கியுள்ளார்.

 

அதில் வரும் ஒரு வாக்கியம் இது! முஸ்லீம் தீவிரவாதி சொல்வது:

 

“நமக்கு எப்போதுமே முதல் எதிரி அமெரிக்கா தான்!”

இது தான் அமெரிக்காவின் தீம். இதற்குத் தக தீவிர வாத முஸ்லீம்கள் செயல்படுகின்றனர்.

ஒரு பெரும் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தயாராகிறது.

தீவிர வாதத்திற்கு எதிராக!

 

அதில் மேலை நாடுகள் அனைத்தும் – பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி,பிரான்ஸ், உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள்கின்றன! தீவிரவாத்தை விரும்பாத இதர உலக நாடுகள் அனைத்தும் இந்த் அணிக்கு முழு ஆதரவு தருகின்றன!

கம்யூனிஸம் தானாக அழிந்தது போல தீவிரவாதமும் தானாகவே அழியும் காலம் வந்து விட்டது.

 

ஆனால் இதற்கு இஸ்லாம் பலி ஆகி விடக் கூடாது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு உணர்ந்து தீவிரவாதிகளை தாமே அழிக்க முற்பட வேண்டும்.

 

இல்லாவிடில் 24 போன்ற ஏராளமான சீரியல்கள் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஆதரவு தரப்படும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் முன் வருவது காலத்தின் கட்டாயமாகி விடும்!.

 

இன்று உலக மக்களின் ஒட்டு மொத்த வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளே!

இஸ்லாம் இவர்களிலிருந்து விடுபட்டு முன்னேற இஸ்லாமியர்கள் தாம் உதவ வேண்டும்! செய்வார்களா?

காலம் பதில் சொல்லும்!

 

*******

 

கொள்கை என்ன என்று கேட்ட கோமாளிகள்! (Post No. 2622)

circus2

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 12 March 2016

 

Post No. 2622

 

Time uploaded in London :–  6-14 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நையாண்டி மடல் எண் 4

 

 

கொள்கை என்ன என்று கேட்ட கோமாளிகள்!

.நாகராஜன்

 circus 8

என் இனிய முட்டாள்களே!

நியாயமாக CUTTING  பற்றித் தான் இந்த மடலை உனக்கு வரைய வேண்டுமென்று விரும்பியிருந்தேன். ஆனால் நேற்று நடந்த ஒரு விஷயம் என் சிந்தனையைத் தூண்டியது; சிரிக்கவும் வைத்தது!

நமது முட்டாள்கள் கழகத்தைச் சேர்ந்த தீவிரத் தொண்டர்கள் மூன்று பேர் என்னை நோக்கி நமது கழகக் கொள்கைகள் என்ன என்று கேட்டு விட்டனர். கேள்விகளா? என்னிடமா? விழிகள் சிவக்கும் முன்னர் அவர்கள் இருந்த இடத்தின் போர்டு என்னைக் கவர்ந்தது.சிரித்தேன். சிலிர்த்தேன்

 

அது டாஸ்மாக் கடை! அங்கு வேறு என்ன தான் முட்டாள்களால் கேட்க முடியும்?!

சுருக்கமாக, நமது கொள்கை என்னெவென்றால் நமக்குக் கொள்கையே கிடையாது என்பது தான். மாறி வரும் உலகில், கொள்கை ஒன்றை நிரந்தரமாகக் கொள்வது பகுத்தறிவுக்கு உகந்ததா? ஒத்ததா? நீயே சிந்தி! சீரிய முடிவை எடு.

 

இருந்தாலும் கேட்பவர்க்கு என்ன பதில் சொல்வது என்று சில முட்டாள்கள் கேட்கலாம். அதற்காகவே இந்த மடல்.

மதுரை! சங்கம் வளர்த்த மதுரை!! தமிழ் வளர்த்த மதுரை!!! ஆறு கடந்தன்ன அகல் நெடும் தெருக்கள் இருந்த மதுரை! ஐயகோ! இன்று அங்கு அனுப்பானடி சாக்கடை ஒன்று மட்டுமே அகன்று இருக்கிறது!

இந்த இழிநிலை மாற வேண்டாமா? சாக்கடைகள் சடுதியில் மறைய வேண்டாமா?

 

 

ஆகவே கொண்டேன் கோபம்! கண்டேன் விடையை!! ‘மதுரையைத் துறைமுகமாக்கு’ என்ற கொள்கை முழக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

இது என்ன கிறுக்குத் தனமாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் வடவர்கள் என்று புரிந்து கொள்! நாம் வாழ்வதை விரும்பாத மடையர்கள் என்று தெரிந்து கொள்!

மதுரையைத் துறைமுகமாக்க கழகப் பொறியாளர்கள் விரிவான திட்டம் பல வைத்திருக்கின்றனர். அருகிலிருக்கும் கடலில் இருந்து ஒரு கால்வாயை வெட்டு; அதில் கடல் நீரைக் கொட்டு; பாராட்டாக, உன் முதுகில் ஒரு சொட்டு!

 

 

கால்வாய் அமைக்கிறேன் என்பதில் எனக்கு எவ்வளவு காசு பெயரும் தெரியுமா? அதில் உங்களது – கழகக் கண்மணிகளின் பங்கு பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

ஆண்டுகள் பல கழிந்தாலும் அமைக்க முடியாத திட்டம் என்று கோமாளிகள் கொக்கரித்தால் பதில் இதோ:- கடற்கரை அருகே உள்ள ஏதேனும் ஒரு நகரம் ஒன்றுக்கு மதுரை என்று பெயர் சூட்டி விட்டால் போயிற்று!

 

 

ஆக அடுத்த கொள்கை அமேஸான் நதியையும் அழகர் கோவில் ஆகாச கங்கையையும் இணை என்பது தான்!

ஆகாச கங்கை மறைந்தல்லவா உள்ளது என்று கேட்பவர்கள் காட்டுமிராண்டிகள்! அதைக் கண்டுபிடி; பிறகு அமேஸானை இணை என்கிறோம் நாம்,!

 

circus usa

அமேஸானை சந்திரனுக்கு குழாய் மூலம் அனுப்பி அதை அழகர்கோவிலுடன் இணைக்க பத்து லட்சம் கோடி அளவில் நமது திட்டம் தயார்!

சுரண்டல் திட்டம் என்கிறார்களா, சுயநலமிகள்? அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை அறிவேன் நான். சந்திரனிலிருந்து நாம் உழைத்துக் கொண்டு வரும் நீருக்குச் சந்திர தீர்த்தம் என்று பெயர் வைக்கத் தீர்மானிக்கிறார்கள் கொடூர சாணக்கியர்கள்.

 

 

அதை மதி நீர் என்றே அழைப்போம் என்பதை அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்து விடுகிறேன்.

அன்பர்களே! நண்பர்களே!! ‘கொண்டையிலே ரோஜாப்பூ, கூடையிலே தாழம்பூ; தாழம்பூவில் பாம்பூ’ என்ற அரிய தமிழ் படத்திற்கு நான் திரைக்கதை, பாடல், வசனம் எழுதியது உங்களுக்கே தெரியும். அது நமது தியேட்டரில் நூறு நாட்கள் ஓடுகிறது. ஆனால் குல்லுக பட்டர்கள் மற்ற அனைத்து தியேட்டர்களிலும் இதை ஒரே காட்சியுடன் நிறுத்தி விட்டனர்.

 

 

அவர்களுக்கு ஒன்று சொல்வேன்; அதுவும் நன்று சொல்வேன். அமெரிக்க ஆலிவுட்டிலிருந்து வந்த ஆங்கிலேய திரைக்கதை வசனகர்த்தா ஆர்னால்ட் எப்படி அரிய தமிழில் இப்படி ஒரு டைட்டிலை டைட்டாக வைத்தீர்கள் என்று கேட்டு வியந்தார்.

அதற்கு என் பதில் என்ன தெரியுமா? ஒரு புன்சிரிப்பூ!

ஆனால் இதில் நான் எழுதிய அரிய தமிழ்ப் பாடல்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்!

 

 

வஞ்சியின் நெஞ்சமே! கொஞ்சமாய் கொஞ்சுமே! – இனி

உன் மடி மஞ்சமே! நான் தஞ்சமே!!

ஙொய்யாலோ! கொய்யாலோ! டிகி டிகிப்பி டிங்காலோ

 

என்ற இந்த இலக்கணத்துடன் கூடிய பாடலுக்கு தமிழ் அறிஞர்களும் முனைவர்களும் எப்படி கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளலாம்; இதன் சிறப்பான பொருள் என்ன என்பது பற்றிச் சந்துக்குச் சந்து சிந்து பாடி பட்டி மன்றம் அமைத்துக் கொண்டாடி வருவதை நீங்களே அறிவீர்கள்.

 

ஒரு கழக முட்டாள் இதைத் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருப்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டு விட்டது என்றே கொள்ளலாம்; (இல்லாவிடில் என்ன நடக்கும் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை)

 

முனைவர்களைப் பற்றி மட்டுமே ஒரு தமிழ் மடல் எழுத என் கை துடிக்கிறது! அதையும் விரைவில் எழுதி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்!

 

circus 1

உலக ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசி துரோகிகளின் தூண்டுதலின் பேரில் என்னைப் பேட்டி காண வந்தது – இந்தப் படம் விஷயமாக!

அவர்களை வரவேற்றேன். அவர்களுக்கு வாகை மலர் சூடினேன். பேப்பரையும் கொடுத்தேன். என்ன இது என்றனர். நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் என்றேன்.மயங்கி விழுந்தனர் மாபெரும் பேட்டியாளர்கள்!

 

 

இப்படி நாங்கள் பார்த்ததே இல்லையே, நாங்கள் அல்லவா கேள்விகளைத் தயாரிக்க வேண்டும் என்று அவர்கள் திகைக்க இந்தக் கேள்விகளுக்கு துணைக் கேள்விகள் மட்டும் நீங்கள் கேட்கலாம்; ஆனால் நான் அதற்கு பதில் கூற மாட்டேன் என்றேன்.

அவர்கள் போன இடம் தெரியவில்லை; இனி வரமாட்டார்கள் என்பது என் கணிப்பூ! இவர்கள் நம்மைப் பற்றி ஆய்வு செய்து வருபவர்கள்! அது எனக்குத் தெரியாதா, அவர்களை என்னால் முறிக்க முடியாதா, என்ன?!

 

அடுத்த மடலில் கட்டிங் பற்றிச் சொல்ல விழைவேன். தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் வழக்கம் போல உரிய கட்டிங்கை கொடுத்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நண்பர்களையும் அன்பர்களையும் இப்படி நிறையக் கொடுக்க ஊக்குவியுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

முட்டாள்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்

 

–subham-

காந்திஜியும் பத்திரிகையாளர்களும் (Post No.2598)

gandhi-stamps-2

Picture of Stamps on Gandhi from other countries.

Written by S Nagarajan

 

Date: 5 March 2016

 

Post No. 2598

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டில்  மஹாத்மா காந்திஜியின் அணுகுமுறையே தனி.

 

1946ஆம் ஆண்டு.  முஸ்லீம் லீக் DIRECT ACTION DAY-ஐ அறிவித்திருந்தது. அப்போது கல்கத்தா நகரில் காந்திஜி இருந்தார். அவர் முக்கியமான பத்திரிகையாளர்களை அழைத்தார். நகரில் நடந்த கலகங்கள் பற்றிய ஒரு அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வேண்டினார். பெரிய அறிக்கை ஒன்றை அவ்ர்கள் தயார் செய்தனர்.

 

 

காந்திஜி நிர்மல்குமார் போஸை அழைத்தார். (இவர் அப்போது காந்திஜியுடன் சேவைக்காகத் தங்கி இருந்தார். பின்னாளில் ஷெட்யூல்ட் கேஸ்ட்ஸ் அண்ட் ட் ரைப்ஸ் கமிஷனராக டில்லியில் பதவி வகித்தார்)

 

 

அந்த அறிக்கையில் உண்மையானவற்றை மட்டும் சிவப்பு பென்சிலால் குறிக்கப் பணித்தார்.

அவர்களின் கருத்துக்களையும் ஊகங்களையும் விட்டு விடச் சொன்னார்.

 

இதை நிர்மல் குமார் போஸ் செய்தார். பின்னர் தான் அறிக்கையையே காந்திஜி கையில் எடுத்தார்.

முஸ்லீம் லீக் மந்திரிகளை அழைத்து தானே நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வருவதாகக் கூறினார்.

அது உடனே ஏற்கப்பட நகரின் பல பகுதிகளுக்கும்

காந்திஜி சென்று பார்த்தார்.

 

Gandhi-Stamps

Picture: Gandhi stamps from foreign countries

திரும்பி வந்ததும் தன்னிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் ஏராள்மான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

 

‘Razed to the ground’ – அடியோடு தரைமட்டமாக்கப்பட்டது என்று குறிக்கப்பட்ட குடிசைகளில் சுவர்கள் அப்படியே இருந்தன. சில ஜன்னல்களும், கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இதே போலத் தான் 1946இல் நவம்பர் மாதம் நவகாளிக்குச் சென்ற காந்திஜி உண்மையான அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வற்புறுத்தினார். பீஹாரிலும் இப்படியே சொன்னார். நவகாளி அறிக்கையை சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவர் தயார் செய்ய பீஹாரில் காங்கிரஸ் அரசே அறிக்கையைத் தயார் செய்தது.

 

 

‘உண்மையைத் தேடு’ என்பதை காந்திஜி ஒரு நாளும் விட்டுக் கொடுக்கவில்லை – முக்கியமாக பத்திரிகையாளர்களிடம்.

மனம் போன போக்கில் செய்திகளை மிகைப்படுத்தி தங்கள் ஊகங்களையும் கருத்துக்களையும் கலந்து பரபரப்புச் செய்திகளைத் தரும் போது அது சமுதாயத்திற்கு விஷத்தைத் தந்தது போல ஆகிறது!

 

 

இந்தப் போக்கை அவர் மென்மையாகக் கண்டித்தார்.

இன்று காந்திஜி நம்மிடையே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் இன்னும் மோசமாக ஆகி விஷக் கருத்துக்களையும் பொய்யையும் உண்மை போலத் தருகின்றனர்.கூடவே டி வி சானல்கள் தவறான செய்திகளை எப்போதோ எடுத்த லைப்ரரி ஷாட்டுகளை இடை இடையெ புகுத்தி மக்களைப் பயமுறுத்தி அவர்களைத் தவறான முடிவு எடுக்கத் தூண்டுகின்றன.

 

 

இப்போது இரு நாட்களாக ( மார்ச் 3,4, 2016 ) வரும் செய்திகள் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது நரேந்திர மோடியை எப்படியெல்லாம் இஷ்ரத் ஜஹான் கேஸில் ஃப்ரேம் செய்யப் பார்த்தார் என்ற திடுக்கிடும் செய்திகள் வருகின்றன.

அரசு அதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு, போலீஸ் இவற்றுடன் பத்திரிகையின் பல பிரிவினரும் இதற்குத் துணை போயிருக்கும் செய்திகளைப் பார்த்து திடுக்கிடுகிறோம்.

 

 

இனிமேல் காந்திஜி போல செய்தி அறிக்கைக்கு சிவப்பு பென்சிலால அடிக்கோடிட்டு அதில் இருக்கும் உண்மை செய்திகளை எடுக்க வேண்டியது தானோ!

 

ஆனால் நிர்ம்ல் குமார் போஸ் அல்லது அவரைப் போன்ற ஒருவர், இந்தப் பணியை இப்போது ஏற்க வந்தால், அதற்கு அவசியமே இல்லை. சிவப்பு பென்சிலே தேவை இல்லை. பல பத்திரிகைகளைக் குப்பையில் தூக்கிப் போட்டு விடலாம்’ என்று சொல்வார்.’

 

அதில் உண்மை ஏதேனும் இருந்தால் தானே சிவப்பு பென்சில் வேண்டும்!!

 

உண்மையை விரும்புவோ சிந்திக்க வேண்டும்.

அப்படிச் சிந்திப்பவர் ஏராள்மாகப் பெருகினால் சத்தியத்தைத் தேடிய அந்த மகானுக்கு உண்மையான அஞ்சலி செய்தவர்கள் ஆவோம்.

 

(குறிப்பு: நிர்மல் குமார் போஸ் எழுதிய Report for fact : A personal account என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.Univiersity of Mysore 1969ஆம் ஆண்டு வெளியிட்ட ”Gandhi and the West “ என்ற நூலின் முதல் கட்டுரை இது.)

 

******