97 முதல் 108 முடிய 12 வீடியோக்கள் (Post No.5979)

Written by S Nagarajan


Date: 24 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-09 am


Post No. 5979

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

புதிய சேனலில் 97 முதல் 108 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது. 96 காட்சிகளைத் தொடர்ந்து  புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep78 edison Sl no 81

https://www.youtube.com/watch?v=u0O0Qti6bxU

 எடிஸன் ஆவிகளுடன் பேசும் டயல் போனைக் கண்டுபிடித்த கதை!

எடிஸன் ஆவிகளுடன் பேச ஒரு போனைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். டயல் செய்தால் போதும், நினைத்த ஆவிகளுடன் பேசலாம் என்றார். பின்னர் நடந்தது என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 21 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 79 morsely Sl no 82

https://www.youtube.com/watch?v=BwZQwWgFFx4

போர்க்களத்தில் மரணமடைந்த விஞ்ஞானி!

ஜெஃப்ரிஸ் மோர்ஸ்லி ராணுவத்தில் சேர்ந்து போர்க்களம் சென்றார். அங்கு நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 80 Beringer Sl no 83

https://www.youtube.com/watch?v=I7VwxKcwFGU

படிமப்பாறை ஆராய்ச்சியில் திளைத்த பெரிஞ்ஜர்

பெரிஞ்ஜரின் படிமப் பாறை ஆராய்ச்சி வெறியைக் கண்ட மாணவர்கள் ஆங்காங்கே தாங்களாகவே படிமப் பாறைகளைப் புதைக்க ஆரம்பித்தனர்.பின்னர் நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 07 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 81 Shockley Sl no 84

https://www.youtube.com/watch?v=OyIQQdfLYa0

தன்னை எதிர்த்து கோஷம் போட்டவர்களுக்கு உதவிய விஞ்ஞானி

ஷாக்லி கறுப்பர்களின் அறிவுக் கூர்மையைப் பற்றி விமரிசித்து வந்தார். அவரை எதிர்த்து கோஷம் போட்டவர்களின் மைக் வேலை செய்யவில்லை. பிறகு என்ன நடந்தது?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகள்

***

tamil literature episode 2 kamban kan uyar Sl no 85

https://www.youtube.com/watch?v=6CUGpAGKPKY

இலக்கியம் நுகர்வோம்! – கம்ப ராமாயணம்

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்!

கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் வரும் ஒரு அழகிய பாடல். கம்பனின் நயத்தை விளக்கும் பாடல். இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன் யார்?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 4 நிமிடம் 29 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 82 Kathleen Sl no 86

https://www.youtube.com/watch?v=ri3XBd-zMAE

போரை விரும்பாத பெண் விஞ்ஞானி

காத்லீன் ஒரு க்வேக்கர். அஹிம்ஸாவாதி. அவரை அரசு சிறையில் அடைத்தது. ஏன்? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 27 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 83 Svante August Sl no 87

https://www.youtube.com/watch?v=sfY46RhGFLM

பூமி வெப்பமயமாதல் பற்றி முதலில் கூறிய விஞ்ஞானி

ஸ்வாண்டி அகஸ்ட் அர்ஹேனியஸ் பூமி வெப்பமயமாதல் பற்றி முதலில் கூறிய போது பலரும் நம்பவில்லை.பின்னர் என்ன நடந்தது?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 38 விநாடிகள்

***

aanmgam arivom ep 2 Yoga Vasishtam Sl no 88

https://www.youtube.com/watch?v=u_2Cqwgc2UI

உலகின் அரிய நூல் யோக வாசிஷ்டம்

யோக வாசிஷ்டம் பற்றிய ஒரு அறிமுகம். அதில் என்னவெல்லாம் உள்ளது? ஏன் அது ஒரு அரிய நூல் எனப்படுகிறது? யார்?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 46 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 84 Ivan Pavlov Sl no 89

https://www.youtube.com/watch?v=qQLq2DMLkLM

 தான் இறக்கும் போதும் நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி!

இறக்கும் போது கூட நோட்ஸ் கொடுத்த விஞ்ஞானி ஐவான் பாவ்லாவ் ஒரு உழைப்பாளி. அறுவை வைத்திய நிபுணர்! அவர் என்னவெல்லாம் செய்தார்?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 85  Pascal Sl no 90

https://www.youtube.com/watch?v=PzbdZBxvNWo

 மறதி மன்னர் பாஸ்கல்!

தன் வீட்டிற்கே வந்து பாஸ்கலைப் பார்க்க வந்ததாகச் சொன்ன விஞ்ஞானி பாஸ்கலுக்கு என்ன நடந்தது? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 7 விநாடிகள்

***

ENGLISH EPISODE 17

What is Memory and how to increase your Memory Power – Part I

What is Memory? Three R’s! Details about Vedas, Xerxes are all narrated in this video. More details in this video.

Time : 1 Min 54 sec

Full article may be viewed in : http://ezinearticles.com/?What-is-Memory-and-How-You-Can-Increase-Your-Memory-Power—Part-I&id=124758

***

ENGLISH EPISODE 18

What is Memory and how to increase your Memory Power – Part I I

How to increase  Memory power? Mnemonics is explained in this video. How to remember Pi more than four digits? More details in this video.

Time : 1 Min 54 sec

Full article may be viewed in : http://ezinearticles.com/?What-is-Memory-and-How-You-Can-Increase-Your-Memory-Power—Part-I&id=124758

***

அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா? (Post No.5971)

Written by S Nagarajan


Date: 22 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-11 am


Post No. 5971

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஆறாம்) கட்டுரை – அத்தியாயம் 410

ஒவ்வொருவருக்கும் இரு உடல்கள் உண்டா?

ச.நாகராஜன்

 ஒவ்வொரு மனிதருக்கும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி பௌதிக அல்லது ஸ்தூல சரீரம் – அதாவது – வாழ்ந்து கொண்டு செயல் புரியும் உடல் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாமல் சூக்ஷ்ம சரீரம் என்று ஒன்றும் உண்டா?

ஹிந்து மத அறநூல்கள் இரு உடல்களைப் பற்றியும் மனித உடலைச் சூழ்ந்திருக்கும் ஒளி வட்டம் பற்றியும் கூறுகின்றன.

இந்த இரு உடல்களையும் காண வல்ல ஏராளமானோரை மனித வரலாறு குறிப்பிடுகிறது.

மனித உடம்பில் உள்ள சக்கரங்கள் மர்மமாக செயல்படுகின்றன. இந்த சக்கரங்களை அறிந்து முயற்சி செய்து மேல் நிலையை அடைந்து விட்டால் போதும், சர்வ சித்திகளும் உண்டாகும் என்பது ஹிந்து யோகா சொல்லும் நெறிமுறை.

மனித உடலின் அளப்பரிய ஆற்றலை வைத்து ‘ப்ராணிக் ஹீலிங்’ என்னும் சிகிச்சை முறையை வெற்றிகரமாக உலகில் பலரும் அளித்து வருகின்றனர்.

இவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் திகழ்ந்தார் ஓல்கா வோரல் என்னும் அமெரிக்கப் பெண்மணி. (Olga Worrall –  1906-1985) இவரது கணவர் அம்ப்ரோஸ் வோரலும் (Ambrose Worrall) ஒரு ஹீலர்(healer) தான்; அவர் ஒரு விஞ்ஞானியும் கூட. ஆகவே தனக்கு எப்படி இந்த சக்தி ஏற்படுகிறது, எப்படி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க முடிகிறது என்பதையெல்லாம் அறிவியல் பூர்வமாக தன்னை ஆராய அவர் விஞ்ஞானிகளுடன் ஒத்துழைத்தார். தனக்கு மீறிய ஒரு சக்தி தன்னிடம் செயல்படுகிறது என்பதைத் தான் அவரால் சொல்ல முடிந்தது.

 டாக்டர் டேனியல் பெனார் (Dr Daniel Benor) என்பவர் பிரிட்டிஷ் அரசுக்கு மாற்று மருத்துவம் பற்றிச் சொல்லும் ஆலோசகர். அவர் இப்படிப்பட்ட சிகிச்சையாளர்களை ஆராய்ந்து, சிகிச்சையாளரின் எண்ண சக்தியே அடுத்தவரை நோயிலிருந்து விடுபடச் செய்கிறது என்றார்.

சூக்ஷ்மமாக உடலில் இருக்கும் பல ஆதாரங்களைத் தூண்டி இப்படிச் செயல் பட முடிகிறதா என டாக்டர் வில்லியம் டில்லர் (Dr William Tiller) ஆராய்ந்தார்.

அவர் ஒவ்வொருவர் உடலிலிருந்து வெளிப்படும் கதிரியக்கக் களமானது மிக நுண்மையானது. இது உலகின் அனைத்து எலக்ட்ரோ மாக்னடிக் துகள்கள் மற்றும் அலைகளுடன் தொடர்பு கொண்டு விரிவுபடுத்திக் கொள்கிறது. தனது தகுதிக்கேற்ப எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அது செயல்படுகிறது என்கிறார்.

உடல் ஆற்றலைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மேலும் மூன்று பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் பர்,(Burr), பெக்கர் (Becker), மற்றும் ஷெல்ட் ரேக் (Sheldrake) ஆவர். தங்கள் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இவர்கள் பொதுவாக ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை – ‘மனித ஆற்றல் களங்கள் உண்மையிலேயே உள்ளன; அவை வளர்ச்சிக்கும் தம்மைக் குணப்படுத்திக் கொள்ளவும் தகவல்களைக் கொண்டு செல்ல வல்லவை;இப்படி தகவல்களை ஏந்திச் செல்வதால் அவை மனித நடத்தையில் ஒரு மாறுதலையும் ஏற்படுத்தக் கூடியவை’ என்பது தான்.

ஆக ஸ்தூல உடல் நோய்வாய்ப்பட்டால் அதை சூக்ஷ்ம உடலின் மூலமாக சரி செய்யலாம் என்பது உண்மையாகிறது.

இதை அடுத்த மட்ட ஆராய்ச்சிக் கொண்டு சென்றவர் டாக்டர் லாரி டோஸி.(Dr Larry Dossey 1940இல்  பிறந்தவர்;இப்போது வயது 78).இவர் வியட்நாம் போரில் சர்ஜனாகப் பணியாற்றியவர்.

ஒரு இடத்திலிருந்து ஒருவரால் செய்யப்படும் பிரார்த்தனை இன்னொருவரை அவர் எத்தனை மைல்கள் தள்ளி இருந்தாலும் கூட குணப்படுத்தும் என்கிறார் அவர். இவரது இந்தக் கூற்றை ஆராய முன் வந்த வில்லியம் ப்ராட் மற்றும் மரிலின் ஷில்ட்ஸ் (William Braud and Marilyn Schlitz) ஆகிய ஆய்வாளர்கள் 13 சோதனைகளை மேற்கொண்டனர்; 62 பேர்கள் இதில் கலந்து கொண்டனர்; இவர்கள் 271 பேர்களை தங்களின் ஆற்றல் வட்டத்துக்குள் கொண்டுவர  முயன்றனர்.

இதன் மூலம், ‘தீவிர நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனை பலன் அளிக்க வல்லது’, என்று தான் முடிவைக் கண்டதாக லாரி டோஸி கூறுகிறார். அவரது ‘ஹீலிங் வோர்ட்ஸ்: தி பவர் ஆஃப் ப்ரேயர்’, ‘ப்ரேயர் இஸ் குட் மெடிசின், ‘ஒன் மைண்ட் : ஹௌ அவர் இண்டிவிஜுவல் இஸ் பார்ட் ஆஃப் எ க்ரேடர் கான்ஷியஸ்னெஸ் அண்ட் ஒய் இட் மேட்டர்ஸ்’(Healing Words: The power of prayer, Prayer is good medicine, One Mind: How Our individual is Part of a Greater Consciousness and Why it Matters) உள்ளிட்ட புத்தகங்கள் உலகெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.

 இரு உடல்களைப் பற்றி விஞ்ஞான உலகம் ஆய்ந்து என்ன முடிவைத் தருகிறது என்பதை உலகினர் அனைவரும் பெரிதும் எதிர்பார்ப்பதால் இந்த அறிவியல் சோதனைகள் இன்றைய வேக யுகத்தில் மனித வாழ்க்கைக்கு முக்கியமானதாக அமைகின்றன. நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் அறிவியல் சோதனைகளைப் பற்றிக் கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன! சூக்ஷ்ம உடலை சரிப்படுத்தி நடைமுறை உடலைச் சரியாக்கும் சிகிச்சை முறை உலகில் பிரபலமாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

ஆண்டனி வான் லீவென்ஹோக் (Antonie Van Leeuwenhoek 24-10-1632-1723) டச் குடியரசில்  டெல்ஃப்ட் (Delft) என்ற ஒரு சிறிய நகரில் பிறந்தவர். மைக்ரோஸ்கோப்பை முதலில் கண்டு பிடித்ததோடு பாக்டீரியாவையும் அவரே முதலில் கண்டுபிடித்தார். ஆகவே  மைக்ரோ பயாலஜியின் தந்தை என்று அவர் அழைக்கப்படுகிறார்.

துணி வியாபாரத்தில் அவர் கொடி கட்டிப் பறந்தார். நெசவு நூல்களின் தரத்தை லென்ஸ் மூலம் ஆராய்ந்து பார்த்து வாங்குவது அந்தக் காலப் பழக்கமாதலால் அவர் லென்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மிக நுண்மையான லென்ஸ்களை அவரே தயாரிக்க ஆரம்பித்தார். ஒரு மிலிமீட்டர் குறுக்களவு உள்ள பொருளை முன்னூறு மடங்கு பெரிதாக்கிப் பார்த்தார்.நாற்பது மடங்கு கூட பெரிதாக்க முடியாத அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட லென்ஸின் தயாரிப்பு ஒரு அசாதாரணமான வியப்பூட்டும் காரியம்!

1672ஆம் ஆண்டு ஒரு நாள் தண்ணீரில் இந்த லென்ஸை வைத்துப் பார்த்த போது தான் அவரால் பாக்டீரியாக்களைக் கண்டு பிடிக்க முடிந்தது.இப்படி பத்தாயிரம் பாக்டீரியாக்களைச் சேர்த்தால் தான் ஒரு மணல் துகள் அளவு ஆகும் என்பதை அறிந்த போது அவருக்கே வியப்பு மேலிட்டது. ஒரே ஒரு  செல்லை உடைய தாவர, விலங்கினத்தை இதன் மூலம் பார்க்க முடிந்தது. இரத்தச் சிவப்பணுக்களைப் பெரிது படுத்திப் பார்க்கவும் இது உதவியது.

ஒருவர் அவரிடம் வந்து லென்ஸ் தயாரிக்கும் முறையைக் கேட்டார்.” அதுவா, கண்ணாடியை நன்றாக அரைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நல்ல லென்ஸ் உருவாகிவிடும்” என்றார். ஆனால் உண்மையில் அந்த ரகசியத்தை அவர் யாருக்கும் இறக்கும் வரையில் வெளியிடவே இல்லை.

இப்படி 600 மைக்ரோஸ்கோப்புகளைத் தன் வாழ்நாளில் அவர் தயாரித்தார்.

இப்படி ஒரு மைக்ரோஸ்கோப்பை இன்னொரு விஞ்ஞானி தயாரிக்க இவருக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் ஆயிற்று.அறிவியல் லென்ஸை வைத்து இவர் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் ஏராளமான சுவையான தகவல்கள் தெரிய வரும்!!

****

புதிய சேனலில் 85 முதல் 96 முடிய வீடியோக்கள் (POST N0.5961)

Written by S Nagarajan


Date: 20 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-23 am


Post No. 5961

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

புதிய சேனலில் 85 முதல் 96 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன. இந்தக் காட்சிகளில் திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் போவோம் – தொடர் ஆரம்பமாகிறது.

அத்துடன் தமிழ் இலக்கியம் நுகர்வோம் பகுதி ஆரம்பமாகியுள்ளது.

காட்சிகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 71

https://www.youtube.com/watch?v=qTxchWGk2iM

கிரஹாம் பெல் வடிவமைத்த பட்டம் போன்ற விமானம்!

கிரஹாம் பெல் வடிவமைத்த விமானம் பறந்ததா? என்ன ஆனது?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 47 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 72

பிபனோசி போட்ட கணிதப் புதிர்

இத்தாலிய மேதை பிபனோசி போட்ட புதிர் என்ன? ஆப்பிள் தோட்டத்தில் பறித்த ஆப்பிள்களைப் பற்றிய கணிதப் புதிரையும் விடையையும்  இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 51 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 73

ஒரு கையை இழந்த விஞ்ஞானி சம்னெர்

விஞ்ஞானி சம்னெர் இரசாயன இயலில் எப்படி என்ன சாதித்தார்? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 74

https://www.youtube.com/watch?v=cA01oC1etRQ

ஒரு காலை இழந்தாலும் உற்சாகம் இழக்காத விமான வடிவமைப்பாளர்!

செவர்ஸ்கி தனது ஒரு காலை இழந்தாலும் உற்சாகம் இழக்காத வீரர். அவர் மற்றவருக்கு உற்சாகமூட்ட மருத்துவ மனைக்குச் சென்ற போது என்ன நடந்தது?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 37 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 75

https://www.youtube.com/watch?v=SW62y1eqbQo

கத்திச் சண்டையில் உயிரை இழந்த இளவயதுக் கணித மேதை!

இவாரிஸ் கலோயிஸ் 21ஆம் வயதிலேயே டியூயலில் கத்திச் சண்டை போட்டு தன் இன்னுயிரை இழந்தார்? அவருக்கு என்ன நேர்ந்தது? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 12 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 76

தனது பழைய பள்ளி ரிகார்டைப் பார்த்த நோபல் பரிசு விஞ்ஞானி!

ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் நோபல் பரிசு பெற்றவுடன் தான் படித்த பழைய பள்ளிக்குச் சென்று தனது பழைய பள்ளி ரிகார்டைப் பார்த்தார். அப்போது அங்கு என்ன நடந்தது? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 13 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 77

ஏழ்மை நிலையில் இருட்டில் வாழ்ந்த விஞ்ஞானி!

ஆலிவர் ஹெவிசைட் முகமூடி அணிந்து வாழ்ந்த பிரபல விஞ்ஞானி. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த அவர் ஏன்  முகமூடி அணிந்தார்? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 48 விநாடிகள்

***

Tamil Literature ep 1 Sl no 78

https://www.youtube.com/watch?v=GyEKWYQ_tzo

இலக்கியம் நுகர்வோம்

தமிழ் இலக்கியம்

கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!

பேரழகியின் கண்களை வர்ணிப்பது எப்படி?

புலவர் பாடிய சொல்லழகுப் பாடல்!

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 17 விநாடிகள்

***

thiraippada padal ep 1 – sl no 79

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – பாடல்கள் பல விதம்! முதல் அத்தியாயம்

புதிய பகுதி!

தமிழ் சினிமாவின் பாடல்களை இனம் பிரித்துக் காட்டுகிறது இந்த அத்தியாயம். எத்தனை விதமாகத் திரைப்படப் பாடல்களைப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டுப் பாடல்கள் எவை?இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 4 நிமிடம் 44 விநாடிகள்

***

thiraippada padal ep 2 – sl no 80

புதிய பகுதி!

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – சின்னப் பெண்ணான போதிலே! இரண்டாம்  அத்தியாயம்

பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் அழகிய பாடல். ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் படத்தில் டோரிஸ் டே பாடிய பாடல் எது?   இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 40 விநாடிகள்

***

ENG EPISODE 15

ENGLISH

The Divine Saint Vadalur Vallalar – Part I

Thozuvur Velayuda mudaliyar wanted to test Vallalar. He composed 100 verses and showed them to Vallalar. What happened then? This video gives the details.

Full article may be viewed in : http://ezinearticles.com/?Wonderful-Divine-Saint-Vadalur-Vallalar-and-Some-of-His-Miracles&id=9649809

Time :  1 Min 48 sec

***

ENGLISH EPISODE 16

The Divine Saint Vadalur Vallalar – Part I I

On seeing Vallalar’s body parts, one disciple screamed. This interesting event is explained in this video. Madam H.P. Blavatsky prophesised about Vallalar. More details in this video.

Time : 2 Min 15 sec

Full article may be viewed in : http://ezinearticles.com/?Wonderful-Divine-Saint-Vadalur-Vallalar-and-Some-of-His-Miracles&id=9649809

***

அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2 (Post No.5954)

Written by S Nagarajan


Date: 19 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-16 am


Post No. 5954

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் வெளியாகும் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள அத்தியாயம் 409       

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி ஐந்தாம் கட்டுரை)

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

ச.நாகராஜன்

 புனர் ஜென்மம் எடுத்த ஒருவர் தனது இப்போதைய பிறப்பில் தனக்குத் தெரியாத ஒரு மொழியில் பேசுவது புரியாத புதிராக அமைகிறது. இதற்கு முன்னர் அந்த மொழியைப் பற்றி அறியாமலும், அதைப் பேசும் பகுதியில் வாழாமலும் அந்த மொழியைச் சரளமாகப் பேசும் போது மற்றவர்களுக்குத் திகைப்பு தான் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட இந்த நிகழ்வு ஜெனோக்ளாஸி (Xenoglossy) என அழைக்கப்படுகிறது. அப்படி ஒரு அன்னிய மொழியை அவரால் எழுதவும் முடிகிறது என்றால் அது ஜெனோகிராபி (Xenography) என கூறப்படுகிறது.

அந்த அன்னிய மொழியை அவரால் பேச மட்டும் முடிகிறது என்றால் அது Recitative Xenoglossy எனப்படும். அந்த மொழியை அவரால் நன்கு அறிந்து கொள்ளவும் முடிகிறது என்றால் அது Responsive Xenoglossy எனப்படும்.

     1982இல் ஆய்வு நடத்திய விஞ்ஞானியான் கட்ஸ் (Kautz 1982) என்பவர் புழக்கத்தில் இல்லாமல் மறைந்து போன எகிப்திய மொழியை ஒருவர் பேசிய போது திகைத்து பிரமித்துப் போனார்.

     ஸ்டீவன்ஸன் (1976இல்) ஒரு அமெரிக்கப் பாதிரியாரைச் சந்தித்த போது அவர் கூறியது:” ஹிப்னாடிஸம் கற்றுக் கொண்ட போது எனது ஹிப்நாடிஸத்தால் என் மனைவியைப் பேச வைத்தேன். அவள் சரளமாக ஜெர்மன் மொழியில் பேசிய போது நான் திகைத்துப் போனேன்”!

        இதைக் கேட்ட ஸ்டீவன்ஸன் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். பாதிரியாரின் மனைவிக்கு ஜெர்மானிய மொழி பேசும் யாரையேனும் தெரியுமா, அந்த மொழி பேசும் பகுதிகளுக்கு அவர் எப்போதாவது சென்றிருக்கிறாரா உள்ளிட்ட ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். நிச்சயமாக இல்லை என்று தெரிந்த போது அவர் வியப்பின் எல்லைக்கே சென்றார்.

இது போன்ற 3000 கேஸ்களை ஆராய்ந்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவரது  முடிந்த முடிபாகச் சொன்ன ‘புனர் ஜென்மம் உண்டு’ என்பதை உலகம் ஒத்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகப்பேர்வழிகள் அவரது ஆய்வைக் குறைக் கூறிக் கொண்டே இருந்தனர் என்பதும் உண்மை தான்!

       ஸ்டீவன்ஸன் 2007 முடிய தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியைச் செய்து வந்தார்; அவர் வழியில் இப்போது இதைத் தொடர்ந்து செய்து வருபவர் அமெரிக்க உளவியலாளரான ஜிம் பி. டக்கர் (Jim B.Tucker).இவர் இப்போது யுனிவர்ஸிடி ஆஃப் வர்ஜீனியா ஸ்கூல் ஆஃப் மெடிசினில் சைக்கியாட்ரி துறையில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவை மட்டுமே தன் ஆய்வுக் களமாகக் கொண்டுள்ள இவர் ‘லைஃப் பிஃபோர் லைஃப் : எ ஸயின்டிபிக் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் சில்டர்ன்ஸ் மெமரீஸ் ஆஃப் ப்ரீவியஸ் லைவ்ஸ்’ (Life Before Life : A Scientific Investigation of Children’s Memories of Previous Lives) என்ற நூலை எழுதியுள்ளார். ஊடகங்களில் தன் ஆய்வு பற்றி இவர் விரிவாக விளக்கியும் வருகிறார்.

     இவர் கூறும் சுவையான சம்பவம் ஒன்று 4 வயது சிறுவனைப் பற்றியது. ரையான் ஹாமன்ஸ் என்ற அந்தச் சிறுவன் அடிக்கடி சினிமா படங்களை எடுப்பது போல ‘ஆக்‌ஷன்’, ‘கட்’ என்று சொல்லி வந்தான். இது அவனது பெற்றோர்களுக்கு மிக்க கவலையைத் தந்தது. ஹாலிவுட்டில் இருந்த போது ஒரு நாள் நள்ளிரவில் அவன் தனது மார்பை பிடித்துக் கொண்டு அது வெடிக்கப் போவதாகக் கனவு கண்டு அலறினான். ஒரு நாள் தாயார் சிண்டியின் கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா! நான் வேறொரு ஆளாக இருந்ததை உணர்கிறேன்” என்றான். பெரிய வெள்ளை வீட்டில் ஒரு நீச்சல் குளத்தில் தான் இருந்ததாகவும் தனக்கு மூன்று மகன்கள் உண்டு என்றும் அது ஹாலிவுட்டில் இருக்கிறது என்றும் அவன் கூறினான்.

சிண்டி ஒரு நாள் ஹாலிவுட் சம்பந்தமான ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் போது அதில் ‘நைட் ஆஃபர் நைட் ‘என்ற 1930ஆம் வருடத்திய திரைப்படத்தைப் பற்றிய விவரம் இருந்தது. அதில்  இருந்த ஒரு புகைப்படத்தில் இருவர் ஒருவரை ஒருவர் முறைக்க இன்னும் நான்கு பேர் அவர்களைச் சுற்றி இருந்தனர். அதில் ஒருவரைச் சுட்டிக் காட்டிய ஹாமன்ஸ், “அம்மா, அது ஜார்ஜ். நாங்கள் அனைவரும் சேர்ந்து தான் அந்தப் படத்தை எடுத்தோம்” என்றான். அருகில் இருந்த இன்னொருவரைக் காட்டிய ஹாமன்ஸ், “அம்மா! அது நான் தான்!!” என்றான்.

டக்கர் இதை ஆராய்ந்த போது வியந்து போனார். இப்படிப்பட்ட மறுக்க முடியாத புனர்ஜென்மம் பற்றிய ஆய்வு முடிவுகள் நாம் பிரக்ஞையைப் பற்றி இதுவரை அறியாத ஒரு உண்மையைக் காட்டுகின்றன. க்வாண்டம் பிஸிக்ஸ் கூறும் இன்னொரு பிரக்ஞை மட்டத்தை வைத்து இது உண்மை எனக் கூற முடியும் என்று அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

அவர் கூறும் ஒரு எளிய உதாரணம் இது:

 எலக்ட்ரான்கள் மற்றும் ப்ரோடான்கள் போன்றவை அவற்றை உற்றுக் கவனிக்கும் போது தான் அவைகள் நிகழ்வுகளை நிகழ்த்துவதை அறிய முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் உணர்கின்றனர்.

ஒரு லைட்டை எடுத்துக் கொண்டு ஒரு திரையை இரண்டு இடங்களில் வெட்டி அதன் மீது ஒளி படும் படி பாய்ச்சுங்கள். திரைக்குப் பின்னால் ஒரு போட்டோகிராபிக் தகடை வையுங்கள். அது ஒளியைப் பதிவு செய்வதாக ஆக்குங்கள். ஒளியை உற்றுக் கவனிக்காமல் இருக்கும் போது அந்த ஒளியானது திரையில் உள்ள இரண்டு வெட்டுகளின் ஊடேயும் போவது போல இருக்கிறது. ஆனால் அந்த ஒளியை உற்றுக் கவனிக்கும் போது என்ன பார்க்கிறோம்? ஒளித் துகள்கள் ஒரு வெட்டின் வழியே மட்டும் செல்வதைப் பார்க்கிறோம்.

  ஒளியின் நடத்தை மாறுவது தெரிவது எப்போது? – அதை உற்றுக் கவனிக்கும் போது தான்! இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது என்று இன்று வரை விஞ்ஞானிகள் விவாதித்து விவாதித்துக் களைத்து விட்டனர். க்வாண்டம் பிஸிக்ஸின் தந்தையான மாக்ஸ் ப்ளாங்க், ‘நாம் வாழும் இந்த பௌதிக உலகானது, பிரக்ஞை சம்பந்தப்பட்ட இன்னொரு உலகுடன் தொடர்பு கொள்வதால் அதனால் பாதிக்கப்படுகிறது’என்கிறார்.

இந்த அறிவியல் பூர்வமான விளக்கத்தை புனர்ஜென்மத்துடன் பொருத்திப் பார்க்கையில் அனைத்து உண்மையும் விளங்கும்.  பிரக்ஞை என்பது 1200 முதல் 1400 கிராம் வரை எடை உள்ள மூளைக்குள் அடங்காத ஒன்று. அந்த மூளை செயலற்றுப் போனாலும் அதையும் தாண்டி பிரக்ஞை இருக்கும்’ என்று  அவர் கூறுகிறார்.

இது பொருள் பொதிந்த ஒரு உண்மை அல்லவா என்கிறார் டக்கர்!

15 வருடங்களாக புனர்ஜென்ம ஆய்வைத் தொடர்ந்து செய்து வரும் டக்கரின் அலுவலகத்தில் 2500 ஆய்வு கேஸ்கள் உள்ளன.

இந்த ஆய்வுகள் புனர் ஜென்மம் உண்மையே என்பதைச் சொல்லும் போது உலகம் வியக்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிஸ்ஸா (Pizza) சாப்பிடப் பிடிக்காதவர் யார் தான் உலகில் உண்டு? இத்தாலிய விண்வெளி வீரரான பாலோ நெஸ்போலிக்கு (Paolo Nespoli) வயது 60. விண்வெளியில் சென்ற அவருக்கு பிஸ்ஸா ஆசை விடவில்லை. விண்வெளியில் தனக்கு பிஸ்ஸா கிடைக்கவில்லையே என்று அவர் வருத்தப்பட நாஸா அதை கனிவுடன் கூர்ந்து கவனித்து பரிசீலித்தது. பூமியிலிருந்து பிஸ்ஸா தயாரிப்பதற்கான சீஸ், சாஸ் உள்ளிட்ட அனைத்தையும் அங்கு அனுப்பியது. எக்ஸ்பெடிஷன் 53 என்ற குழுவில் இருந்த விண்வெளி வீரர்கள் ஆறு பேருக்கும் ஒரே உற்சாகம். அவர்கள் தாங்களே புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் பிஸ்ஸா தயாரிக்க ஆரம்பித்தனர். பிஸ்ஸா பறக்க அதை அவர்கள் பிடிக்க ஒரே கும்மாளம் தான். பிஸ்ஸா துண்டு ஒன்று பறக்க அதற்கு எதிராகத் தன் திறந்த வாயைக் காண்பிக்க பிஸ்ஸா துண்டு தானாக வாய்க்குள் விழுந்த போது விண்வெளி வீரர் ஒருவருக்கு ஒரே ஆனந்தம்! ஒருவர் ஒரு பிஸ்ஸாவை இன்னொருவருக்குத் தூக்கி எறிய பிஸ்ஸாவின் மேல் தூவப்பட்டிருக்கும் எதையும் கீழே விழுந்து விடாமல் அதை கேட்ச் செய்து இன்னொரு வீரர் பிடித்துச் சாப்பிடுகிறார். காணொளியாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சி 2017இல் டிசம்பர் 4ஆம் தேதி பூமியில் காண்பிக்கப்பட உலகினர் அனைவரும் கண்டு களித்தனர். பறக்கும் பிஸ்ஸாவைப் பார்ப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. (இன்றும் இந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்து மகிழலாம்)!

***

மூளை! மூளை!! அதிசய மூளை! (Post No.5945)

Written by S Nagarajan


Date: 17 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-47 am


Post No. 5945

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

புதிய சேனலில் 73 முதல் 84 முடிய வீடியோக்கள் (Post No.5941)

Written by S Nagarajan


Date: 16 JANUARY 2019


GMT Time uploaded in London – 6–08 am


Post No. 5941

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

புதிய சேனலில் 73 முதல் 84 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 61

https://www.youtube.com/watch?v=1N_raHQZUgk

பாலிஸி பிரின்ஸ்பிள் என்ற சொற்றொடர் எப்படி வந்தது?

எனாமலைக் கண்டுபிடிக்க விஞ்ஞானி பாலிஸி தன் சொத்துக்களை விற்றார். இறுதியில் என்ன நடந்தது?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 59 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 62

இன்ஃப்ரா ரெட் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

யதேச்சையாக வில்லியம் ஹெர்ஷல் கண்டுபிடித்தது தான் இன்ஃப்ரா ரெட். எப்படி?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 63

சைக்கிள் வடிவமைப்பில் மாற்றம் செய்த ஜேம்ஸ் ஸ்டார்லி

ஸ்டார்லியின் மகனுக்கு பெடல்களை சரியான படி இயக்க முடியவில்லை. ஸ்டார்லி என்ன செய்தார்.

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 35 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 64

https://www.youtube.com/watch?v=QJRDg1OQo4A

விண்வெளி வீரரின் வானளாவிய உயர்ந்த பணி

விண்வெளி வீரர் எட் லூ பணி ஓய்வு பெற்றவுடன் என்ன செய்தார்? பூமியைப் பாதுகாக்க அவருடைய திட்டம் என்ன?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 43 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 65

https://www.youtube.com/watch?v=2dKQcO1bePI

பன்முறை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட விண்வெளி வீரர்

ஸ்டோரி மஸ்க்ரேவ் 5 ஸ்பேஸ் ஷட்டிலில் பறந்த வீரர்.எளிமையான அவர் பிரக்ஞையில் மாற்றம் ஏற்படுவதைப் பற்றி என்ன கூறினார்?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 57 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 66

ஸ்டீபன் ஹாகிங்கின் ஃபேஸ்புக் நகைச்சுவை

13 லட்சம் லைக் கிடைத்தது ஸ்டீபன் ஹாகிங்கின் ஃபேஸ்புக் பதிவிற்கு. அவர் நகைச்சுவைப் பதிவுகள் என்ன?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 55 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 67

மறதி மன்னர் வெய்னர் ஓட்டிய கார்!

மறதி மன்னர் வெய்னருக்கு கண் பார்வை சரியாக தெரியாது. நண்பருடன் காரில் சென்றார். என்ன நடந்தது?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 32 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 68

https://www.youtube.com/watch?v=FWzL0JxkKYo

42 அடி நீளமுள்ள டெலஸ்கோப் குழாயில் சிலந்திகள் பின்னிய வலை

சிலந்திகள் நீளமான குழாயில் வலை பின்னி விட்டன. அதை எப்படி அகற்றுவது? விஞ்ஞானி உட் ஒரு புதிய வழியைக் கண்டார். அது என்ன?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 52 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 69

கடைசி உருளைக் கிழங்கை தூக்கி எறிந்த விஞ்ஞானி

ருதர்போர்டுக்கு தோட்ட வேலை என்றாலே பிடிக்காது. உருளைக்கிழங்கை வெட்டி எடுத்த அவர் ஏன் கடைசி உருளைக் கிழங்கு இது என்று கூவினார்?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 4 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 70

ஒரு விஞ்ஞானியின் விசேஷ ஆசை!

வில்லியம்  ப்ராக்கிற்கு ஒரு ஆசை. அதை அவர் செய்த போது என்ன நடந்தது?

 இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 57 விநாடிகள்

***

ENG EPISODE 13

ENGLISH

The Mysterious Parallel Universe :

Sir James Jeans wonders about the universe. A galaxy contains hundreds of billions of stars and each star system contains dozens of planets! For each human on Earth there are 200 galaxies. We are not living in one Universe; according to Hugh Everett, we are in multiverse. Max Tegmark explains four levels of consciousness. Pl view this video for more details.

Full article may be viewed in http://EzineArticles.com/9632034

Time : 3 Min 23 sec

***

ENGLISH EPISODE 14

The Secret of Karma Yoga : An event in Bhagavan Ramana maharishi’s life

An interesting event in the life of Bhagana Ramana maharishi is explained in this video. He revelaed the secret of Karma Yoga to a Telugu pandit. Gita sloka on karma yoga is explained.

Time : 2 Min 37 sec

Full article may be viewed in :

***

அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

****

நல்ல தூக்கத்திற்கான டிப்ஸ் (Post No.5932)

Written by S Nagarajan


Date: 14 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-13 am


Post No. 5932

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம்!

———————————————————-

.நாகராஜன்

ஆரோக்கிய வாழ்வு

நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம் ஆரோக்கியமான வாழ்வே. இந்த ஆரோக்கியத்திற்கான அடிப்படை ரகசியம் நல்ல தரமான தூக்கமே! நவீன இயந்திர யுகத்தில், கடந்த பல ஆண்டுகளில் வாழ்க்கை முறை மாற்றத்தால் தரமான தூக்கத்தை மனித குலம் இழந்து வருகிறது என்பது துயரமான செய்தி தான்! உலகெங்கும் இப்போது தூக்க மாத்திரைகள் சாப்பிடுவோரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது.

தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகள் ஏழு மணி நேரம் கூடத் தூங்காமல் மிகக் குறைந்த நேரம் தூங்கும் பழக்கம் அடிப்படை ஆதாரமான உடல் நலத்தைக் கெடுக்கிறது என்பதை பலரும் அறியாதிருப்பது வேதனை தரும் விஷயம்! ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் பிரபல மருத்துவர் பிலிஸ் ஜீ  தூக்கத்தை இழப்பவர்களிடம் உயர் அளவில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் இருப்பதையும் அது வீக்கத்தை அதிகரிப்பதால் நோயைத் தடுக்கும் ஆற்றலைக் குறைப்பதையும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளார். தூக்கம் குறையக் குறைய ரத்த அழுத்த அளவு அதிகமாகிறது. ஏனெனில் தூக்கத்தின் போது தான் ரத்த அழுத்த அளவும் இதயத் துடிப்பு அளவும் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. ஏராளமான ஆய்வுகள் நோய் தடுக்கும் ஆற்றலை தூக்கமின்மை குறைத்து விடுவதால் தூங்காமல் இருப்பவர்  அதிக நோய்களால் பாதிக்கப்பட்டு நோயாளியாக மாறும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றன.

பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் இதழில் ஜேன்.பி.. ப்ராடி,” யாருமே நல்ல தூக்கத்தின் மேன்மையை இதுவரை குறை சொன்னதில்லை! உடல் ரீதியாக 6 மணி நேரமோ அல்லது 8 மணி நேரமோ எவ்வளவு நேரம் தூங்கினால் நீங்கள் திறம்பட வேலை செய்ய முடியுமோ அவ்வளவு அடிப்படை தேவையான தூக்கத்தைக் கொள்ளுவது நலம். இந்த அளவு தூக்கத்தை நீங்கள் இழக்கும் போது ஞாபக மறதி, கற்பதில் குறைபாடு, பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைபாடு, உடல் ஆரோக்கியக் குறைபாடு, உணர்ச்சி பூர்வமான விஷயங்களில் கோளாறு, இதய சம்பந்தமான கோளாறுகள், உடல் எடை கூடுதல் உள்ளிட்ட ஏராளமான கோளாறுகள் வந்து விடும்! சரியான தூக்கமின்மை நாளடைவில் எரிச்சலையும் கோபத்தையும் தூண்டிவிடும். அடிக்கடி மூட் எனப்படும் நிலை மாற்றம் ஏற்படும். பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் சீரழிந்து அதிக அளவு சாப்பிடத் தூண்டி அதிக எடையில் கொண்டு விடும். பகலில் உறக்கத்தை ஏற்படுத்தி விபத்துக்களில் கொண்டு போய் விடும்” என்று எச்சரிக்கிறார்!

.தலைவலி, வயிற்றுக் கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம்,ஹார்மோன் குறைபாடுகள், சீரற்ற உடல்வளர்ச்சி, அதிக வீக்கம் ஆகியவை தூக்கமின்மையால் ஏற்படும் வியாதிகளில் சில.

டாக்டர் ஜி.ஹெச்.

வளர்ச்சியைத் தரும் க்ரோத் ஹார்மோன்கள்  (growth hormones) வயது ஆக ஆக தசைகளையும் தோலையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.இதுவே இளமையான தோற்றத்தை நீட்டிக்கும். இந்த ஹார்மோன்களை நல்ல விதத்தில் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் முதல் தேவை சரியான தூக்கம் தான்! #

சரியான தூக்கம் இல்லை என்றால் நீங்கள் பொலிவுடன் இருக்க மாட்டீர்கள். பொலிவுடன் இல்லையென்றால் கவர்ச்சி இருக்காது. செக்ஸ் உறவுகள் உள்ளிட்ட அனைத்திலும் தகராறு ஏற்பட்டால் உறவுகள் கெடும்!

இந்த க்ரோத் ஹார்மோனை டாக்டர் மைக்கேல் ப்ரெஸ் தனது ப்யூடி ஸ்லீப் என்ற புத்தகத்தில் டாக்டர் ஜி.ஹெச். எனக் குறிப்பிடுகிறார்! ஏனெனில் இது ஒரு காஸ்மடிக் சர்ஜன் செய்ய வேண்டிய வேலையைச் சிறிதும் செலவின்றி அன்றாடம் உங்களுக்குச் செய்து வருகிறது! ஏராளமான அழகு சாதனங்கள், பணத்தைக் கொட்டி வாங்கும் விட்டமின் நிறைந்த உணவு வகைகள், மஸாஜ் , லோஷன்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி செலவில்லாத பெரும் நன்மையைத் தரும் இந்த டாக்டர் ஜி.ஹெச் (Growth Harmone) என்னும் க்ரோத் ஹார்மோனைப் பெற நல்ல தூக்கம் தூங்கினால் போதும்!

நல்ல உறக்கம் மூளை செயல் திறனைக் கூட்டுகிறது.

எடையைக் குறைக்கிறது.

நோய் வந்தால் அதை சீக்கிரம் குணப்படுத்துகிறது.

நோய் வராமல் தடுக்கும் இயற்கை ஆற்றலை உடலில் ஏற்படுத்துகிறது.

அதிக எனர்ஜியை_ ஆற்றலை தருகிறது.

பொறுமையைக் கூட்டுகிறது.

வேலை இடங்களில் விபத்துக்களைத் தவிர்க்கிறது.

ஆக நல்ல தூக்கம் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படையான ரகசியம் என்பதைப் புரிந்து கொண்டு தரமான தூக்கத்தை அடையப் பழகவேண்டும்

.

நல்ல தூக்கத்திற்கான டிப்ஸ்

தூக்கம் வரவில்லையே என்ன செய்வது என்பவர்க்கு சில டிப்ஸ்:

ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள்;ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழகுங்கள்

மது அருந்துவதை நிறுத்துங்கள்,.உறங்கச் செல்லுமுன் காப்பி, டீ அருந்தாதீர்கள்

தூக்க நேரத்திற்கு மூன்று மணி நேரம் முன்பாக உணவை இரவு உணவை முடித்து விடுங்கள்.

தேகப்பயிற்சி மிகவும் அவசியம். தூங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாகவே இப்படிப் பட்ட பயிற்சிகளைச் செய்து முடித்து விட வேண்டும்,

பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். பவர் நேப் (Power Nap) என்றால் அது இருபது நிமிடத் தூக்கம் மட்டுமே என்பதை நினைவிலிறுத்தி இருபது நிமிடங்களுக்குக் குறைவாகவே தூங்குங்கள்.

கம்ப்யூட்டர்,டி,வி, போன்றவற்றை படுக்கை அறையில் வைத்திருக்காதீர்கள்

படுக்கை அறையை சுத்தமாகவும் குளுமையாகவும் கூடிய வரையில் வைத்திருங்கள்.

நல்ல படுக்கை, மென்மையான தலையணை ஆகியவற்றை உபயோகப்படுத்துங்கள்.

படுக்கையை தூக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.

படுப்பதற்கு முன் நல்ல மனதுக்கு இதமான மெல்லிய இசையைக் கேட்கலாம். அல்லது நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்.

கடிகாரத்தைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது கவலையையும் டென்ஷனையுமே தரும்.

 ‘நாளை செய்யவேண்டியவற்றை’ எண்ணிக் குழம்பாதீர்கள்.அவற்றை ஒரு பேப்பரில் எழுதி வைத்து விடுங்கள்.நிம்மதியாக உறக்கம் வரும்

ஆற்றலை அதிகரிக்கும் பவர் நேப் (Powere nap) என்பது மதியம் ஓய்வு நேரத்தில் 15 நிமிடம் முதல் இருபது நிமிடம் வரை அயர்ந்து தூங்குவது தான். இது நல்ல ஆற்றலைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

அத்தோடு நன்கு வயிறு குலுங்க பத்து நிமிடம் சிரித்து விட்டுத் தூங்கினால் அது இரண்டு மணி நேர வலியற்ற நிம்மதியான தூக்கத்தை நோயாளிகளுக்குக் கூடத் தரும் என்ற உண்மையை உணர்ந்து நல்ல ஜோக்குகளைப் படித்து மகிழுங்கள்; காமடி படங்களைப் பார்த்துச் சிரியுங்கள்.

சீரான தூக்கம் சீரான வாழ்க்கைக்கு இன்றியமையாத அஸ்திவாரம்!

                                               *****************************

புதிய சேனலில் 61 முதல் 72 முடிய வீடியோக்கள் (POST No.5920)

Written by S Nagarajan


Date: 12 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-01 am


Post No. 5920

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

புதிய சேனலில் 61 முதல் 72 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 51

https://www.youtube.com/watch?v=4GKI9284nYQ

இசைக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பைக் கண்ட பிதகோரஸ்!

      கொல்லன் உலைக்களத்திற்கு சென்ற பிதகோரஸ் இசை ஸ்வரங்களுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பைக் கண்டார்! எப்படி?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 49 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 52

கைகளைச் சுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்ட விஞ்ஞானி

     விஞ்ஞானி செம்மல்வியஸ் இளம் தாய்மார்கள் பிரசவ விடுதியில் ஜுரத்தால் பீடிக்கப்பட்டு இறப்பதைக் கண்டு திடுக்கிட்டார். காரணத்தை ஆராய்ந்து கண்டுபிடித்தார். அவர் அனைவருக்கும் இட்ட கட்டளை ‘கைகளைச் சுத்தம் செய்யுங்கள்!’ ஏன்? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 11 விநாடிகள்

***

aanmeegam arivom ep 1 – puranas – 1- ep 53

https://www.youtube.com/watch?v=vLS7SOA5hkw

‘ஆன்மீகம் அறிவோம்’ என்ற இந்தப் புதிய தொடரில் ஆன்மீக விஷயங்கள் இடம் பெறும்.

முதல் நிகழ்ச்சியில் புராணங்கள் எத்தனை, உப புராணங்கள் எத்தனை, அவை யாவை உள்ளிட்ட விவரங்கள் வினா- விடைத் தொடராக அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளிக் காட்சியில் ஆன்மீக விவரங்களை அறிந்து மகிழலாம்.

நிகழ்ச்சி நேரம் 3 நிமிடம் 11 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 54

அதிர்ஷ்டம் பற்றிய நீல்ஸ் போரின் லாஜிக்

குதிரை லாடத்தை சுவரில் மாட்டி வைத்திருந்த நீல்ஸ் போரைப் பார்த்து வியந்தார் ஒரு விஞ்ஞானி நண்பர். இப்படி மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் என்ன?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 21 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 55

https://www.youtube.com/watch?v=0AxpVStyxGw

ஐன்ஸ்டீன் உயிரோடிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக கடிதம் எழுதிய சிறுமி!

டிஃபானி வில்லியம்ஸ் என்ற சிறுமி ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இன்னும் உயிரோடிருப்பது ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கிறது என்று எழுதி இருந்தாள். ஐன்ஸ்டீன் அந்த சிறுமிக்கு எழுதிய பதில் என்ன?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 10 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 56

https://www.youtube.com/watch?v=tasysMbuKhU

மின் அதிர்ச்சி மூலம் இன்ப அதிர்ச்சி தந்த விஞ்ஞானி

பென் ஃப்ராங்க்ளின் மின்சாரத்தை பிலடெல்பியாவில் அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்க்க ஊரார் அவர் வீட்டின் முன் வந்து குழுமினர்.அவர்களுக்கு மின் அதிர்ச்சி மூலம் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அவர். விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 28 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 57

https://www.youtube.com/watch?v=_IVa4IllApM

கடவுள் இருப்பதை நிரூபிக்குமாறு கட்டளையிட்ட விஞ்ஞானி

மஹாரானி காதரீனிடம் டெனிஸ் டிடெராட் என்ற விஞ்ஞானி கடவுள் இல்லை என்று சொல்லவே அவர் கடும் கோபம் கொண்டார். அவர் கணித மேதை யூலரிடம் கடவுள் இருப்பதை நிரூபிக்குமாறு கட்டளை இட்டார். பிறகு நடந்தது என்ன?  God’s Equation பிறந்தது எப்படி?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 44 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep58

https://www.youtube.com/watch?v=iTidCfvWnVU

ஈ மூலம் உருவான கோ-ஆர்டினேட் ஜாமெட்ரி !

ரெனி டெஸ்கார்டெஸ் கூரையில் ஈ ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு யோசிக்க ஆரம்பித்தார். விளைவு என்ன?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 21 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep59

https://www.youtube.com/watch?v=W9B7XjteXso

ஐன்ஸ்டீன் மனைவிக்கு விதித்த நிபந்தனைகள்!   

 ஐன்ஸ்டீன், மிலெவா மரிக் (MIleva Maric) என்ற தன் மனைவியை மணந்து 14 ஆண்டுகள் கழிந்திருந்தன.மணவாழ்க்கை கசப்படைந்தது. அதையொட்டி, சேர்ந்து வாழ மனைவிக்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அவை என்ன?

இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 46 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep60

https://www.youtube.com/watch?v=QNjS7tNamfY

கணினி இயலில் BUG  என்ற சொல் வந்த கதை

க்ரேஸ் ஹாப்பர் என்ற பெண்மணி மார்க் II கம்ப்யூட்டரை இயக்கிய சமயம் பூச்சி ஒன்றைக் கண்டார். அதில் பிறந்தது ஒரு புதிய சொல். அது பற்றிய விவரங்களை இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 15 விநாடிகள்

***

ENG EPISODE 11

ENGLISH

Formula 13 for Success – Franklin Way

Ben Franklin formulated a formula for success. He identified thirteen virtues.

You may get all the details in this video.

Time 2 Min 49 Sec

***

ENG EPISODE 12

ENGLISH

Formula 13 for Success – Part II

Frank Bettger formulated 13 principles for his own success inspired by Franklin.

This video also gives 50 virtues to choose. You  may formulate your own Success Forumula.

Time 3 Min 07 Sec

***

­அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

***

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1 (Post No.5910)

Written by S Nagarajan


Date: 10 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-09 am


Post No. 5910

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு நாற்பத்தி நான்காம் கட்டுரை) அத்தியாயம் 408

புனர் ஜென்மம் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 1

ச.நாகராஜன்

மரணமடைந்த பின்னர் மீண்டும் ஒரு ஆத்மா மறு பிறவி எடுக்கிறதா? அறிவியல் விஞ்ஞானிகளில் ஏராளமானோர் இது பற்றிய ஆய்வில் கடந்த நூறு ஆண்டுகளாகத் தீவிரமாக இறங்கி ஆராய்ந்துள்ளனர்.

இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் அமெரிக்க உளவியலாளரான யன் ஸ்டீவன்ஸன்.(Ian Pretyman Stevenson பிறப்பு : 31-10-1918 மறைவு 8-2-2007) தன் நாள் முழுவதும் இந்த ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய இவர் புனர் ஜென்மம் பற்றிய மலைக்க வைக்கும் எண்ணிக்கையான 3000 கேஸ்களை ஆராய்ந்தார். புனர் ஜென்மம் உண்டு என்பதை ஆதார பூர்வமாக நிரூபித்தார். இவரது புத்தகங்கள் பிரபலமானவை.

ந்தியா, ஸ்ரீ லங்கா, பர்மா, தாய்லாந்து,துருக்கி, லெபனான், சிரியா, வடமேற்கு பசிபிக்கில் உள்ள அமெரிக்க பூர்வகுடிகளின் வசிப்பிடம் உள்ளிட்டவை இவர் ஆய்வு நடத்திய நாடுகளாகும்.

இது தவிர பார்கர்ரும் பஸ்ரிசாவும் (Barker and Pasricha 1979) இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் 91 பேரின் புனர்ஜென்மம் பற்றி ஆய்வு நடத்தியதும் குறிப்பிடத் தகுந்த ஒரு ஆய்வாகும்.

இந்த ஆய்வில் பெரும்பாலானோர் குழந்தைகளே! அவர்கள் ஒன்றுமறியா இளம் வயதில் தங்கள் பூர்வ ஜென்ம விவரங்களைக் குறிப்பிட்டது மாபெரும் அதிசயமே.

ஆனால் மேலை நாடுகளில் பல இடங்களில் இப்படிக் குழந்தைகள் தங்கள் முன் ஜென்ம விவரங்களைச் சொன்னபோது அவர்களின் பெற்றோர்கள் பயந்து போனார்கள். அவர்களைப் பேச விடாமல் தடுத்து விட்டனர்.

1956இல் ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானி க்ளைன் (Kline 1956) இள வயதுக் குழந்தை அந்தப் பகுதியிலேயே யாருக்கும் புரியாத மொழியைப் பேசியதைக் குறிப்பிடுகிறார்.இது க்ரிப்டோம்னீஷியா (Cryptmnesia) என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.மேற்கு இத்தாலியில் லத்தீன் மொழி புழக்கத்திலிருந்து அகன்ற பின்னர் புழக்கத்திற்கு வந்த ஆஸ்கன் என்ற மொழியை ஒரு குழந்தை பேசிய போது அனைவரும் அயர்ந்து போனார்கள்.

இதே போல கம்ப்மேன் மற்றும் ஹிர்வெனோஜா (Kampman and Hirvenoja 1978) நடத்திய ஆய்வு ஒன்றில் 12 வயதான பின்லாந்தைச் சேர்ந்த ஒரு சிறுமி ஹிப்நாடிஸம் செய்யப்பட்ட போது தனது முந்தைய எட்டுப் பிறவிகள் பற்றிக் கடகடவென்று கூறிக் கொண்டே போனாள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் டோராதி என்ற பெயருடன் பிறந்திருந்ததாகக் கூறிய அவள் மிடில் ஏஜஸ் எனக் கூறப்படும் இடைக்காலத்தில் இருந்து வந்த ஒரு பாட்டையும் பாடி அனைவரையும் அயர வைத்தாள்.

பார்கர் (1979) தனது ஆய்வில் ஸ்டீவன்ஸன் சேகரித்த 113 கேஸ்களை மறு ஆய்வு செய்ததில் மூன்று வயதே ஆன இந்தியக் குழந்தைகள் துல்லியமான விவரங்களைக் கூறியதைக் கண்டார்.

நைஜீரியா துருக்கி ஆகிய நாடுகளில் இப்படி மறு ஜென்மம் பற்றிக் கூறியவர்கள் பலர். துருக்கியில் முந்தைய ஜென்மத்தில் வன்முறையாக மரணத்தை எய்தியோர் அந்த வன்முறைக்கான அடையாளத்தோடு மறு ஜென்மத்தில் உடலை அடைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.முந்தைய ஜென்மத்தில் காயப்பட்டு இறந்து போன அதே இடத்தில் மறு ஜென்மத்தில் ஒரு மச்சமோ வடுவோ இருந்ததைக் கண்ட ஸ்டீவன்ஸன் குழந்தையின் பெற்றோரைக் கேட்ட போது அது இந்த ஜென்மத்தில் ஏற்பட்டதில்லை என உறுதி படக் கூறினர்!

ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த 3000 கேஸ்களையும் பார்க்க இங்கு இட்டமில்லாவிட்டாலும் இரண்டு சுவையான அவரது அனுபவங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1972ஆம் ஆண்டு பர்மாவில் மா டின் அங் ம்யோ என்ற 19 வயது இளம் பெண்ணை அவர் சந்தித்தார்.அவளைக் கர்ப்பத்தில் சுமந்த போது அவளது அம்மா ஒரு ஜப்பானிய போர்வீரனை அடிக்கடித் தன் கனவில் கண்டு வந்தார். மா டின் வளர்ந்து வந்த போது தான் ஒரு ஜப்பானிய போர் வீரன் என்றும் விமானத் தாக்குதலில் இன்னொரு விமானத்தால் தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி வந்தார். ஜப்பானின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த தனக்கு மணம் ஆகி குழந்தைகளும் இருந்ததாக அவள் கூறியதோடு விமானம் பறப்பதைக் கண்டாலே அஞ்சி அழ ஆரம்பிப்பாள். மேகமூட்டத்தைக் கண்டாலும் அவள் பயப்படுவாள். பர்மிய சீதோஷ்ண நிலை அவளுக்குப் பிடிக்காத ஒன்று. ஆண்கள் அணியும் உடையைத் தான் அவள் அணிவாள்.அவள் இந்த ஜென்மத்தில் தன்னால் ஒரு ஆணை மணம் புரிய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாள்.

ஸ்டீவன்ஸனுக்கு அவள் கூறிய ஆதாரங்களை ஜப்பானுக்குச் சென்று எங்கு சரி பார்ப்பது என்பது புலப்படவில்லை. தான் சந்தித்த கேஸ்களில் புரியாத புதிராக இருந்த கேஸ்களில் இதுவும் ஒன்று என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ லங்காவில் 1988இல் அவர் ஆராய்ந்த 3 கேஸ்கள் அவருக்கு பிரமிப்பை ஊட்டின. அவற்றில் ஒன்று இரங்கா என்ற பெண்மணி பற்றியது. அவள் 15 கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு தான் முந்தைய ஜென்மத்தில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டாள். அவள் கூறிய நுணுக்கமான 43 விஷயங்களை ஸ்டீவன்ஸன் தானே அவள் வாழ்ந்த முந்தைய ஜென்ம இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். அவற்றில் 38 விஷயங்கள் மிகச் சரியாக இருந்தன!

விஞ்ஞானிகள் தான் இப்படி பல சுவையான உண்மைச் சம்பவங்களைக் கூறி இருக்கிறார்கள் என்பதில்லை; பிரபல ஹாலிவுட் நடிகையான ஷர்லி மக்லீன் (பிறப்பு 24-4-1934 இப்போது வயது 84) தனது முந்தைய ஜென்மங்களைப் பற்றி ஐ ஆம் ஓவர் ஆல் தட்  (I’m Over All That) என்ற நூலில் எழுதியுள்ளார். 2011ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் புத்தகத்தில் அவர் மறுஜென்மம் உண்டு என்பதையும் தனது  முந்தைய ஜென்மங்களைப் பற்றியும் சுவைபட விவரிக்கிறார். பேரழகியும் பெரும் நடிகையுமான அவர், “இந்தியாவிற்கு நான் சென்ற போது பல கோவில்களை நான் முன்னரே பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்படக் காரணம் என்ன, பிரேஜிலுக்கு நான் சென்ற போது போர்த்துக்கீசிய மொழியில் என்னால் எப்படிப்பேச முடிந்தது? என்று அவர் கேட்ட போது உலகமே வியந்தது.

84 வயதான அவர் 15க்கும் மேற்பட்ட சுவையான நூல்களை எழுதியுள்ளார். பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்ட நூல்கள் இவை!

எட்கர் கேஸ் ஆயிரக்கணக்கான கேஸ்களை ஆராய்ந்தவர்; நூற்றுக்கணக்கானோருக்கு அவர்களது முந்தைய ஜென்மம் பற்றிக் கூறியவர். அவை வெவ்வேறு நாடுகளில் சரி பார்க்கப்பட்டவை. அவர் பற்றி ஏற்கனவே  பாக்யாவில் விந்தை மனிதர்கள் தொடரில் எழுதி இருப்பதால் அதை இங்கு திருப்பிக் கூறவில்லை.

இன்னும் சில விஷயங்களை அடுத்துப் பார்ப்போம்  

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஜகதீஷ் சந்திர போஸ் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷாரின் இன பேதக் கொள்கையால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி. கல்கத்தாவில் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்த போது மற்ற ஆங்கிலேயருக்கு இணையான சம்பளம் அவருக்குத் தரப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் கல்வி சம்பந்தமான அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு இனபேதக் கொள்கையால் அவரை மட்டம் தட்டவே முயற்சித்தது. அவரது ஆய்வுப் பேப்பர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் செய்யப்பட்டது. 24 சதுர அடி கொண்ட ஒரு மிகச் சிறிய அறையே அவரது லாபரட்டரி! அதில் அவரது சாதனங்களை வைக்கவே அவர் மிகவும் கஷ்டப்பட்டார். இதையும் மீறி ரேடியோ விஞ்ஞானத்தில் அவர் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை அடைந்தார். மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிக்கு முன்னரே அவர் அதைக் கண்டு பிடித்து விட்டாலும் தாவரம் பற்றிய ஆய்வையே அவர் முக்கியமானதாக எடுத்துக் கொண்டார். பின்னாளில் அவர் மார்கோனியை நேரில் சந்தித்தும் இருக்கிறார். வயர்லெஸ் தொடர்பில் ஆரம்ப காலக் கண்டுபிடிப்புகளையும் அவரே கண்டுபிடித்தார்.

1997இல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் எஞ்சினியர்ஸ் அவரை ரேடியோ ஸயின்ஸின் தந்தை என்று அறிவித்தது.

அவரைக் கௌரவிக்கும் விதமாக சந்திரனில் உள்ள பெரும் பள்ளம் ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பாபா பள்ளத்திற்கும் அட்லர் பள்ளத்திற்கும் அருகில் உள்ள போஸ் பள்ளத்தின் குறுக்களவு 91 கிலோமீட்டர். வயர்லெஸ் டெலிகம்யூனிகேஷனில் அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளே சாடலைட் தகவல் தொடர்புக்கு வழி வகுத்தது என்பதால் இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர் ஜகதீஷ் சந்திர போஸ்!

****

புதிய சேனல் AsacredSecret :-

ariviyal aringar vazhvil ep 41

மதுவைத் தொடாத மாபெரும் விஞ்ஞானி

ஸ்டாக்ஹோம் சென்ற சர் சி.வி. ராமனுக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது.அவர் மதுவைத் தொடவில்லை. அவர் காலையில் ஆல்கஹாலை வைத்து ஒரு சோதனையைக் காண்பித்திருந்தார். அதை வைத்து ஒருவர் ஜோக் அடித்தார். அது என்ன?இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 18 விநாடிகள்

***

49 முதல் 60 முடிய உள்ள காணொளிக் காட்சிகள் (Post No.5895)

Written by S Nagarajan


Date: 7 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-12 am


Post No. 5895

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

புதிய சேனலில் 49 முதல் 60 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 41

https://www.youtube.com/watch?v=tJOlCNoitH8

மது அருந்தாத மாபெரும் விஞ்ஞானி சி.வி.ராமன்!

பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன் ஆல்கஹாலைப் பயன்படுத்தி ஒரு சோதனையைச் செய்து காண்பித்தார். அன்று மாலை நடந்த விருந்தில் அவர் மதுவைத் தொடவில்லை. இதை வைத்து அங்கு நடந்த ஜோக் என்ன?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 18 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 42

https://www.youtube.com/watch?v=Jo0dCi23fZ0

தன்னையே சோதனைக்கு உட்படுத்திக் கொண்ட ஜகதீஷ் சந்திர போஸ்

பிரபல இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சோதனையைக் காட்டும் போது விஷ ஊசியை தாவரத்தின் மீது போட்ட போது அது வேலை செய்யவில்லை. பின்னர் என்ன நடந்தது?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 37 வினாடிகள்

***

 

ariviyal aringar vazhvil ep 43

https://www.youtube.com/watch?v=JvQ_YAiCw7Q

தொலைபேசியில் நட்பை வளர்த்துக் கொண்ட கணித மேதை

பால் எர்டோஸ் பெரிய கணித மேதை. அனைவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்தவர். ஒரு நாள் புதிதாக ஒருவரைச் சந்தித்த போது அவர் எங்கிருந்து வருகிறார் எனக் கேட்ட பின்னர் அவர் இடத்தில் வசிக்கும்  தனது நண்பரான எலியட் மெண்டல்ஸனைத் தெரியுமா எனக் கேட்டார். பின்னர் என்ன நடந்தது?இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 9 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 44

அலுமினிய ஆராய்ச்சியில் ஒரே சமயத்தில் வெற்றி பெற்ற இரு விஞ்ஞானிகள்.

நெப்போலியன் காலத்தில் அலுமினியம் விலை உயர்ந்த பொருள். அதை சார்லஸ் மார்டின் மிக மலிவான உலோகமாக ஆக்கினார். இன்னொரு விஞ்ஞானியும் அதே சமயம் அலுமினிய ஆராய்ச்சியில் வெற்றி பெற்றார். அவர் யார்? இருவருக்கும் இருந்த அதிசய ஒற்றுமை என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 42 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 45

https://www.youtube.com/watch?v=9C8QZ-j55OA

நைலான் கண்டுபிடிக்கப்பட்ட விதம்.

1935ஆம் ஆண்டு வாலஸ் ஹ்யூம் நைலானைக் கண்டுபிடித்தார். உடனே என்ன நடந்தது? நைலான் எனப் பெயர் வரக் காரணம் என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 46

தென் துருவத்தின் முதல் கொலை கேஸ்

வான்பௌதிக இயலாளரான ரோட்னி  மார்க்ஸ் (astro physicist – Rodney Marks) என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.அண்டார்டிகாவிற்கு ஆய்வுப் பணிக்காகச் சென்றவர் 2000ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று திடீரென்று மரணமடைந்தார். ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.கொலையா? விசாரணை நடந்தது. முடிவு என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 40 விநாடிகள் 

***

ariviyal aringar vazhvil ep 47

https://www.youtube.com/watch?v=UNgkkjNNTco

நியூட்டனின் வாழ்வில் சுவையான சம்பவங்கள்

மடக்கும் டார்ச் லைட், சூரிய டயல் – இவை எல்லாம் நியூட்டன் இள வயதில் கண்டு பிடித்தவை. கள்ள நாணயத்தை ஒழிக்கவும் அவர் தனது அறிவை உபயோகப்படுத்தினார். அவை பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 46 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 48

மூளையின் வலது பக்க இடது பக்க பாகங்கள் பற்றி முதலில் உலகத்திற்கு அறிவித்தவர் மைக்கேல் கஜானிகா. அவர் எப்படி இதைக் கண்டுபிடித்தார்?

அதைப் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 33 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 49

https://www.youtube.com/watch?v=bXQ4C6yP2pg

கடவுளை ஏமாற்ற நாத்திக விஞ்ஞானி ஹார்டியின் தந்திரங்கள்

நாத்திக விஞ்ஞானி ஹார்டி கடவுளை ஏமாற்றச் செய்த தந்திரங்கள் என்ன? அதைப் பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 22 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 50

https://www.youtube.com/watch?v=fz4McADyWbQ

மின்னல் வேக மூளை கொண்ட விஞ்ஞானி!

பிரபல விஞ்ஞானி ரிச்சர்ட் பெய்ன்மேன் (1918-1988) பற்றி ஏராளமான குட்டிச் சம்பவங்கள் உண்டு.பிரேஜிலில் அவரை ஒரு ஜப்பானியர் கணிதப் போட்டிக்கு சவால் விட்டார். அங்கு நடந்தது என்ன? சுவையான சம்பவத்தை இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 50 விநாடிகள்

***

ENGLISH EPISODES :-

ENG EPISODE 9

https://www.youtube.com/watch?v=MmQAcNBQeU8

 

God has never broken any promise ever spoken.

You Call Me Way, but Walk Me not – so says an inscription in Germany.

In Gita Lord Krishna says: surrender! I will protect. This video gives more details on this

Time 2 Min 15 Sec

***

ENG EPISODE 10

ENGLISH

Narada Reveals the Power of Prayer

Narada Bhakthi sutra reveals the secret of Prayer. What are they? This video explains the secret.

Time 2 Min 46 Sec

***

­அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

**