இடாய்-இடாய் நோய் தெரியுமா? காட்மியம் ஆபத்து!! (Post No.5886)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 JANUARY 2019
GMT Time uploaded in London 10-29 am
Post No. 5886
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.


T ags- இடாய்-இடாய், காட்மியம்

புதிய சேனலில் 37 முதல் 48 முடிய உள்ள காணொளிக் காட்சி (Post No.5881)

Written by S Nagarajan


Date: 4 JANUARY 2019


GMT Time uploaded in London – 8-53 am


Post No. 5881

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

புதிய சேனலில் 37 முதல் 48 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 31

https://www.youtube.com/watch?v=oWQXGfrnla4&t=14s

லுட்விக் மாண்ட் உருவாக்கிய இரண்டு தலை பென்னி நாணயம்!

விஞ்ஞானி லுட்விக் மாண்டின் மகன் ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு கடைக்காரரிடம் விலை கேட்க, அவர் சைக்கிளின் விலை ஒரு பென்னி தான் என்றார். ஆனால் அந்த நாணயத்தின் இரு புறமும் ராஜா தலை இருக்க வேண்டும் என்றார். பின்னர் நடந்தது என்ன?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 54 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 32

https://www.youtube.com/watch?v=FOJ7bn0fcfg

ஆராய்ச்சி நினைப்பில் மறக்கும் மேதைகள்!

முட்டை வேக எவ்வளவு நேரம் ஆகும் என்பதைக் கணக்கிடச் சென்ற நியூட்டனின் கடிகாரத்திற்கு என்ன நேர்ந்தது? கூழாங்கல்லை ஆராயப் போன ஆம்பியர் லெக்சருக்கு தாமதமாகப் போகிறோமே என்று நினைத்து என்ன செய்தார்? மறதியால் வந்த விளைவுகளை இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 33

https://www.youtube.com/watch?v=XTJGc3MWz60

ஐன்ஸ்டீன் எந்த நாடு தன்னை ஏன் ஏற்கும் என்பது குறித்துப் பேசிய பேச்சு!

ரிலேடிவிடி கொள்கை வெற்றி பெற்றால் தன்னை பிரான்ஸும் ஜெர்மனியும் என்ன சொல்லும் , வெற்றி பெறாவிட்டால் அவை என்ன சொல்லும் என்பதை நகைச்சுவையுடன் ஐன்ஸ்டீன் எப்படி விளக்கினார்?

இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 5 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 34

https://www.youtube.com/watch?v=9QYNRxZXxes

வெடி மருந்தின் மீது உட்கார்ந்த பாரடே

பிரிட்டனில் நடந்த ஒரு சுரங்க வெடி விபத்தை ஆராய கமிஷன் ஒன்றை அமைத்த பிரிட்டிஷ் அரசு மைக்கேல் பாரடேயை விசாரணையை நடத்தப் பணித்தது. அங்கு சென்ற பாரடே தனதுகேள்விக்குக் கிடைத்த பதிலால் அலறி ஓடினார். என்ன நடந்தது?

இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 59 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 35

https://www.youtube.com/watch?v=FRh935P8bHg

டார்வினை ஏமாற்ற வந்த சிறுவர்களிடம் டார்வின் கூறிய பதில்!

பிரபல விஞ்ஞானி டார்வினை ஏமாற்றத் திட்டமிட்ட சிறுவர்கள் நான்கு பூச்சிகளின் பாகங்களை வெட்டி ஒரு புதிய பூச்சியைக் கொண்டு வந்து டார்வினிடம் காட்டினர். டார்வின் ஏமாந்தாரா? அவர்கள் கேட்ட கேள்விக்கு டார்வின் சொன்ன பதில் என்ன?

இந்தக் காணொலிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 39 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 36

https://www.youtube.com/watch?v=OCeKC0RXTtk

கிரஹாம் பெல்லும் பிரேஜில் மன்னரும்

டெலிபோனைக் கண்டுபிடித்த இளைஞரான கிரஹாம்பெல் கண்காட்சியில் அதைக் காட்சிக்காக வைத்திருக்க அதை யாருமே கண்டுகொள்ளவில்லை. பிரேஜில் மன்னர் அதைப் பார்த்தவுடன் அனைவரும் டெலிபோனைப் பார்க்க வந்தனர். பிறகு நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 51 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 37

அந்தக் காலத்திலும் துணுக்குச் செய்திகள் உண்டு!

கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்த மோர்ஸ் பற்றியும், லூயி பாஸ்டர் பற்றியும் பத்திரிகைகள் என்ன துணுக்குச் செய்தியை வெளியிட்டன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 3 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 38

எடிஸன் சிகார் ஸ்டோரி

பிரசித்தி பெற்ற எடிஸன் சிகார் ஸ்டோரி தாமஸ் ஆல்வா எடிஸனைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம். அவர் தனக்கென பிரத்யேகமாக வைத்திருந்த சிகார்கள் அவர் மேஜையிலிருந்து காணாமல் போயின. உடனடியாக அவர் எடுத்த நடவடிக்கை என்ன? பின்னர் என்ன நடந்தது.இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 16 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 39

மறதி மேதை நார்பர்ட் வெய்னர்

வெய்னர் ஒரு முறை வீட்டை மாற்றினார். அவரோ மறதி மேதை. ஆகவே அவர் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் புதிய வீட்டின் முகவரியை எழுதித் தர அதை அவர் பையில் போட்டுக் கொண்டார். துண்டுச் சீட்டிற்கு என்ன கதி நேர்ந்தது? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 42 விநாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 40

ஜார்ஜஸ் லெமைடர் ஒரு கத்தோலிக்க பாதிரி. விஞ்ஞானி. அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்றார். ஒரு  மாணவர் பைபிள் பூமியின் வயது 5800 ஆண்டுகள் என்று சொல்கிறதே என்று கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில் என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 8 விநாடிகள்

***

ENGLISH EPISODES :-

 

HOW TO INVITE WEALTH THE HINDU WAY ( PART ONE)

ENG EPISODE 7

 The various types of rudraksha, different classifications which bestow wealth, health and other worldly pleasures are explained in this episode. Single face to ten faces : What are the  benefits? This video gives you the answer.

Time 1 Min 55 Sec

HOW TO INVITE WEALTH THE HINDU WAY ( PART TWO )

ENG EPISODE 8

ENGLISH

There is one great secret to invite the wealth. If you keep water in a small bowl in the north-east corner, it will remove all negative vibration. For more details please this video.

Time 1 Min 39 Sec

***

­அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

**

மரணமடைந்த பின் மீண்டவர்கள்-2(Post No.5875)

Written by S Nagarajan


Date: 3 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-23 am


Post No. 5875

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பாக்யா வார இதழில் வாரந்தோறும் இடம் பெறும் அறிவியல் துளிகள் தொடரில் அத்தியாயம் 407

(எட்டாம் ஆண்டு நாற்பத்தி மூன்றாம் கட்டுரை)

மரணமடைந்த பின் மீண்டவர்கள் பற்றிய அறிவியல் ஆய்வுகள்! – 2

ச.நாகராஜன்

மரணமடைந்த பின்னர் மீண்டும் உயிருடன் திரும்பியோர் பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவெனில், அவர்கள் தாம் வாழ்ந்த கலாசாரத்திற்குத் தக்கபடி தங்கள் அனுபவங்களைக் கூறுகின்றனர் என்பது தான் அது.

அமெரிக்காவில் இப்படிப்பட்ட அனுபவங்களை விவரிப்போர், “பிரக்ஞை இன்றி, நான் இறந்தவுடன்  ஒரு இடத்திற்குச் சென்றேன். அங்கு வெண்ணிற ஆடை அணிந்த குழந்தைகளும் பெரியவர்களும் இருந்தனர். அவர்கள் எந்த இனத்தவர் என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். என்னைக் கண்டவுடன் அவர்கள் பாடியதை நிறுத்தி விட்டு, ‘உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லையே’ என்றனர். உடனே நான் வேகமாகத் திரும்பி விட்டேன்.” இது மோர்ஸ் (Morse-1992) தனது ஆய்வில் தரும் தகவல்.

பஸ்ரிசா மற்றும் ஸ்டீவன்ஸன் (Pasricha and Stevenson – 1986) மரணத்திலிருந்து மீண்ட 16 இந்தியர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறுவது பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தது. “நான்கு கறுப்பு நிறத் தூதர்கள் என்னை வந்து பிடித்துக் கொண்டனர். என்னை எங்கே கொண்டு போகிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் என்னை ஒரு தேவதையிடம் அழைத்துச் சென்றனர். எனது உடல் மிகவும் சுருங்கி இருந்தது.அந்த தேவதைக்கு முன்னர் பெரிய புத்தகங்கள் இருந்தன.அவர் கையில் ஒரு பேனா இருந்தது. அவர் அருகில் பல உதவியாளர்கள் இருந்தனர். அந்த தேவதை, ‘சாஜூ பனியா(வணிகர்) நமக்குத் தேவையில்லை. நாம் கேட்டது சாஜு கும்ஹாரைத் தான் (குயவர்). இவரை அனுப்பி விடுங்கள். அந்த இன்னொருவரைக் கொண்டு வாருங்கள்’ என்றது.

       

நான் பூமிக்குத் திரும்பி வர விரும்பவில்லை. அந்த உதவியாளர்களிடம் ஏதேனும் ஒரு வேலை தருமாறு வேண்டினேன்.என்னைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்றேன். உயர்ந்த ஆசனத்தில் வெள்ளை தாடியுடன் மஞ்சள் உடையுடன் அங்கே அமர்ந்திருந்த யமராஜர், ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று என்னைக் கேட்டார். நான் அங்கேயே தங்க வேண்டும் என்றேன். அவர் என் கையை நீட்டச் சொன்னார். பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் இருந்த இடத்திற்கு வந்து உயிர் பிழைத்து விட்டேன்”

இந்தியர்களின் அனுபவம் அமெரிக்கர்களின் அனுபவத்தை ஒத்ததாக உள்ளது. அதில் மதம் அதிகப் பங்கு வகிக்கிறது.

16 பேர்களை ஆய்வு செய்ததில் 13 இந்தியர்கள் இதே அனுபவத்தைக் கூறினர்.

தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் பற்றிய ஆய்வை மர்பி (2001இல்) நடத்தினார். அதில் அவர் யமராஜனைப் பார்த்ததாகவும் ஒரு பெரிய ஹாலுக்குள் அவர் யமதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார். ‘யமராஜன் என்னைப் பார்த்து இவர் தவறாக இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார் என்று சொல்லி திருப்பி அனுப்பும் படி சொல்லவே நான் மீண்டு வந்தேன்’ என்றார் அவர்!

க்ரிசென் (Greyson -1983) தனது ஆய்வில் இப்படி சாவிலிருந்து மீண்டவர்களில் பலர் சைக்கிக் எனப்படும் அமானுஷ்ய சக்தியைப் பெறுகின்றனர் என்கிறார். ஆவிகளைக் காண்பது, மனிதர்களைச் சுற்றியுள்ள அவுரா (Aura) எனப்படும் ஒளிவட்டத்தைக் காண்பது, ஆவிகளுடன் பேசுவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

மோர்ஸ் (1992) தனது ஆய்வில் இப்படிப்பட்டவர்கள் மீண்டும் உயிருடன் வந்தவுடன் இவர்களில் பலருக்கு மின்சாரம் மற்றும் காந்த சக்தி ஆகியவற்றில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறுகிறார். அவர்கள் கையில் கட்டியிருக்கும் கடிகாரங்கள் வேலை செய்வதில்லை. மின் பல்புகள் உள்ளிட்ட மின் சாதனங்கள் பல அவர்களுக்கு வேலை செய்வதில்லை!

இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படுவதற்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் உண்டா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வுக்குள் கொண்டு வந்தனர். போதை மருந்துகள், வலிப்பு,ஆக்ஸிஜன் பற்றாக்குறை, புலன் உணர்வு குறைதல், தோற்ற மயக்கம் (hallucination) ஆகிய இவற்றால் அப்படி ஒரு அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்களோ என்ற விவாதமும் நடைபெறுகிறது.

ரிங் (1980) தனது ஆய்வில், ‘இறந்தவுடன் இறந்தவரின் பிரக்ஞை அடுத்த ஒரு மேலான மட்டத்திற்குச் செல்கிறது. இதை நான் நான்காவது பரிமாணம் என்கிறேன். இறந்தவர் தனது இன்னொரு ‘உயரிய நபரைப்’ பார்க்கிறார். அந்த இன்னொருவர் தான் அவருக்கு ‘ஒளி உருவமாகத்’ தெரிகிறார்” என்கிறார்.

     குக் (1998) எனும் விஞ்ஞானி தனது ஆய்வில் மனம் பற்றியும் இதில் ஆராய வேண்டும் என்கிறார். ‘இறந்தவரின் மனம் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் இயங்குகிறதோ, அதனால் தான் அவரால் இப்படி ஒரு அனுபவத்தைச் சொல்கிறாரோ எனப் பார்க்க வேண்டும்’ என்பது அவரது முடிவு.

விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் பல நாடுகளிலும் உள்ள பலரும் இப்படிச் சொல்வது அதிசய ஒற்றுமை அல்லவா, ஆகவே இதில் உண்மை இருக்கிறது என்கின்றனர்.

இன்னும் சிலரோ போதுமான சான்றுகள் பெரிய எண்ணிக்கையில் கிடைக்கவில்லை; என்றாலும் கூட இது ஆராயப்பட வெண்டிய மர்மமான ஒரு விஷயம் தான் என்கின்றனர்.

இது பற்றி சுமார் 450 பெரிய புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் என்பதிலிருந்தே இது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதைப் புலப்படுத்துகிறது.

ஆயிரக்கணக்கான கேஸ்கள்! பொய் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லாத பலரும் இதைச் சொல்கின்றனர்.

ஆகவே மரணத்திற்குப் பின் மறுவாழ்வு உண்டா?

மரணமடைந்து மீளாதவர்களும் சொல்ல முடியாது; உயிரோடிருப்பவர்களும் சொல்ல முடியாது. மரணமடைந்து மீண்டவர்கள் மட்டுமே இதைச் சொல்லமுடியும்.

நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம் என்பது தான் இன்றைய அறிவியல் நிலை!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபலமான இந்திய விஞ்ஞானிகளில் ஒருவரான சர் ஜகதீஷ் சந்திர போஸ் (பிறப்பு 30-11-1858 மறைவு 23-11-1937) பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தவர். அவரது அபாரமான கண்டுபிடிப்புகள் லேசில் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் தனது ஆய்வுக் கட்டுரையை இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பிய போது அது நிராகரிக்கப்பட்டது.

பின்னால் அவர் இங்கிலாந்து சென்று தனக்கென ஒரு சிறிய லாபரட்டரியை அமைத்த போது ராயல் சொஸைடியின் உறுப்பினர் ஒருவர் அங்கு வந்து அதைப் பார்த்தார். போஸின் ஆராய்ச்சியைக் கண்டு வியந்து போன அவர் போஸிடம்,


“ உங்களது கட்டுரை ஒரு வோட்டால் நிராகரிக்கப்பட்டது. அந்த ஒரு வோட்டைப் போட்டவன் நான் தான்” என்று மிக வருத்தப்பட்டுக் கூறினார்.

தாவரத்திற்கும் வலி தெரியும் என்று போஸ் கூறியதில் பல விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையே இல்லை. ஆகவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு 1901ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி ராயல் சொஸைடியின் பிரதான ஹாலில் தன் சோதனையை அவர் நிகழ்த்திக் காட்டினார். ஹால் முழுவதும் விஞ்ஞானிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

போஸ் மிகுந்த கவனத்துடன் ஒரு செடியின் வேர் பாகத்தை அதன் தண்டுடன் சேர்த்து, தான் தயாரித்து வைத்திருந்த ப்ரோமைட் கரைசலில் அமிழ்த்தினார். உடன் என்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் திரையில் அதன் அசைவுகளை அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். கரைசலில் அமிழ்த்தப்பட்ட செடியின் பாகம் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து ஆட ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே அது வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. பின்னர் உயிர்த்துடிப்பு நின்றது போல நின்றது. விஷம் கொடுக்கப்பட்ட எலி எப்படித் துடிதுடித்துச் சாகுமோ அது போல அந்த நிகழ்வும் இருந்ததை அனைத்து விஞ்ஞானிகளும் பார்த்துப் பிரமித்தனர். அவர்களின் கரகோஷம் ஹாலையே பிளந்தது.

ப்ரோமைட் விஷத்தின் பாதிப்பால் செடி துடிதுடித்து இறந்ததை உலகம் அறிந்த போது தான் போஸின் அறிவியல் ஆய்வின் திறன் தெரிய வந்தது. 1917இல் அவருக்கு க்னைட் பட்டம் தரப்பட்டது. 1920இல் அவர் ராயல் சொஸைடியின் ஃபெலோ என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

***

புதிய சேனலில் 25 முதல் 36 முடிய உள்ள காணொளிக் காட்சி

Written by S Nagarajan


Date: 1 JANUARY 2019


GMT Time uploaded in London – 6-54 am


Post No. 5866

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

புதிய சேனலில் 25 முதல் 36 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 21

https://www.youtube.com/watch?v=rWz7eMYgMSo

கணித மேதைக்கு புரட்சிக்காரன் கொடுத்த ஒரு கணக்கு!

இகார் டாம் என்ற பெரிய கணித மேதையிடம் புரட்சிக்காரன் துப்பாக்கியுடன் வந்தான். நீ யார் என்றான். நான் கணித புரபஸர் என்றார் அவர். உடனே ஒரு கணிதத்தைக் கொடுத்து அதற்கு தீர்வு காணச் சொன்னான். பிறகு என்ன நடந்தது?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 29 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 22

https://www.youtube.com/watch?v=0I0P5orNO0o

மன்னனின் இதயத்தையே சாப்பிட்டு விட்ட ஒரு விஞ்ஞானி!

வில்லியம் பக்லேண்ட் என்ற விஞ்ஞானி எதைக் கண்டாலும் சாப்பிட்டு விடுவார். ஒரு நாள் பதினான்காம் லூயி மன்னரின் பதப்படுத்தப்பட்ட இதயம் அவரிடம் காண்பிக்கப்பட்டது. அவர் என்ன செய்தார்? இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 21 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 23

https://www.youtube.com/watch?v=BaghxNdgSxE

வெப்பச் சமன்பாட்டை எங்கும் எதிலும் எதிர்பார்த்த விஞ்ஞானி!

வால்தெர் நெஸ்ட் என்ற விஞ்ஞானி வெப்பச் சமன்பாட்டை எங்கும் எதிர்பார்த்தார். அவரது பசுமாட்டுத் தொழுவத்திற்கு ஒரு முறை சென்றார். அது வெப்பமாக இருந்தது. பின்னர் என்ன நடந்தது? இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 33 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 24

https://www.youtube.com/watch?v=QxfdHdSVy7Y

ப்ளாக்போர்டைத் துரத்தி ஓடிய விஞ்ஞானி!

ஆம்பியருக்குத் திடீரென ஒரு யோசனை உதித்தது. எதிரில் இருந்த வண்டியின் பின்புறத்தில் எழுத ஆரம்பித்தார் – அதை ப்ளாக்போர்ட் போல நினைத்து. திடீரென்று ப்ளாக்போர்ட் நகர ஆரம்பித்தது. சுவையான இந்த நிகழ்வை இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 41 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 25

https://www.youtube.com/watch?v=rmyYqKSGY-4

இறுதி மூச்சு வரை ஆராய்ச்சியே மூச்சு!

 பிரபல விஞ்ஞானி இஸிடார் ரபி மரணப்படுக்கையில் இருந்தார். நண்பரும் அவசரம் அவசரமாக வந்தார். அவரிடம் ரபி என்ன பேசினார்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 33 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 26

https://www.youtube.com/watch?v=Yv2FQSErawI

துரத்திய காண்டாமிருகத்தைப் படம் பிடித்தவர்!

கோடக் காமராவைக் கண்டுபிடித்த ஈஸ்ட்மேன் ஆப்பிரிக்காவிற்குச் சென்ற போது ஒரு காட்டில் ஒரு காண்டாமிருகத்தைப் படம் பிடிக்க ஆரம்பித்தார். அது அவரைத் துரத்தியது. பிறகு என்ன நடந்தது?

 இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 17 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 27

https://www.youtube.com/watch?v=iSllFZTrPGA

ரெஸொனென்ஸ் பற்றி நீல்ஸ் போர் நிகழ்த்திய ஒரு விஞ்ஞான விளையாட்டு!

பிரபல விஞ்ஞானி நீல்ஸ் போர் ஒரு முறை நண்பர் காஸிமிர் என்பவருடன் ஒரு நீர்நிலையில் கட்டப்பட்ட பாலம் அருகே சென்றார். சங்கிலியை ஆட்டினார். பின்னர் ரெஸொனென்ஸ் பற்றிச் சொன்னார். நண்பர் அதைப் பிரமாதம் என்று சொல்ல நீல்ஸ் போரோ சிரித்தார். ஏன்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 25 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 28

https://www.youtube.com/watch?v=xwtd9ZQoOn0

போர்களைப் பற்றிய ஐன்ஸ்டீனின் கவலை!

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தான் காப்பாற்றிய ஒரு போட்டோகிராபருக்கு முன் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது அவரிடம் உலகில் மூளும் போர்களைப் பற்றிப் பேசினார். என்ன பேசினார்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 49 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 29

 https://www.youtube.com/watch?v=j9-Dl5y_JJM

புற்று நோய் தீர்க்க முடியாத ஒரு வியாதி அல்ல; ஐயான் காலர்  உதவி நிறுவனம் தொடங்கியது ஏன்?

   டாக்டர் ஐயான் காலர் புற்று நோயால் பீடிக்கப்பட்டார். டாக்டர்கள் அவர் பிழைப்பது அரிது என்றனர். அவர் என்ன செய்தார்? எப்படி உயிர் பிழைத்தார்? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 4 வினாடிகள்

****

ariviyal aringar vazhvil ep 30

https://www.youtube.com/watch?v=Ys4EnYaXeBA

பழுக்கக் காய்ச்சிய இரும்பும் அதீத குளிர் நிலையில் உள்ள உறை பனிக்கட்டியும்!

வேதியல் விஞ்ஞானி லுட்விக் மாண்ட் சமையலறைக்குள் நுழைந்து ஐஸ் கட்டியை சமையல்காரியின் கழுத்தில் வைத்தார். சமையல்காரி அலறினாள். ஏன்? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 16 வினாடிகள்

***

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes  In English

 

POWER OF RUDRAKSHA BEADS ( PART ONE )

ENG EPISODE 5

ENGLISH

 

Rudrakshas (Elaco Carpus seeds) are power beads. Wearing rudraksha controls heart beat and ensures a positive effect on blood pressure, stress, anxiety, depression, palpitations and lack of concentration. A research scholar D. Subhas Roy, a professor of Banares, India, gives supporting scientific evidence for the good effects of rudraksha on human body. The power of Rudraksha is explained in this episode.

Time 2 Min 45 Sec

***

POWER OF RUDRAKSHA BEADS ( PART TWO )

ENG EPISODE 6

ENGLISH

 The various types of rudraksha, different classifications which bestow wealth, health and other worldly pleasures are explained in this episode. Single face to ten faces : What are the  benefits? This video gives you the answer.

Time 2 Min 24 Sec

***

 

­அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

**

புதிய சேனலில் அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம் (post No.5851)

Written by S Nagarajan


Date: 29 DECEMBER 2018


GMT Time uploaded in London – 14-49


Post No. 5851

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

புதிய சேனலில் இன்னும் பல காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!

(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)

ச.நாகராஜன்

டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

22-12-18 முதல் 28-12-18 முடிய இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.

அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் இதோ:

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes

In Tamil

ariviyal aringar vazhvil ep 11

https://www.youtube.com/watch?v=j_OXBfq25U0

பொறியியல் அதிசயம் பனாமா கால்வாய் எப்படி உருவானது. 9500 மைல் பயணத்தைத் தவிர்க்க வைத்த இந்தக் கால்வாயை பிரான்ஸ் கை விட்டது. வில்லியம் கோர்காஸ் 1904இல் அமெரிக்காவின் சார்பில் இதை அமைப்பதில் ஈடுபட்டார்; வெற்றி பெற்றார்! எப்படி? இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 5 வினாடிகள்

 

***

ariviyal aringar vazhvil ep 12

https://www.youtube.com/watch?v=eZW0z0qJNnU

ஞாபக மறதிப் பேராசிரியர்

டேவிட் ஹில்பர்ட் பெரிய கணித மேதை. ஒரு முறை பார்ட்டிக்கு அனைவரையும் அழைத்திருந்தார். அனைவரும் வந்தனர். அவரைக் காணோம். எங்கே போனார்?இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.

 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 16 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 13

https://www.youtube.com/watch?v=ttwZLcxbpOk

அறிவியல் ஆய்வில் தன் இன்னுயிரை ஈந்த அறிஞர் ப்ளினி

ப்ளினி ஒரு முறை புயல் காற்றில் சிக்கிக் கொண்டார். அவரது ஆராய்ச்சி மனப்பான்மை அவரைத் தொடர்ந்து அதில் ஈடுபடத் தூண்டியது. பிறகு என்ன நடந்தது?இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.  

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 56 வினாடிகள்

***

***

ariviyal aringar vazhvil ep 14

https://www.youtube.com/watch?v=qCq37UlbPcY

தான் மரணமடையப் போகும் நேரத்தைச் சரியாகச் சொன்ன விஞ்ஞானி!

ஆப்ரஹாம் டி மொய்வர் பிரபலமான ̀ விஞ்ஞானி. அவர் தான் இறக்கப்போகும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னார். அதன் படியே அதே நேரத்தில் மரணமடைந்தார். எப்படி? என்ன நடந்தது?இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 30 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 15

https://www.youtube.com/watch?v=IUsQwWDUsCg

பிரபல விஞ்ஞானி ருதர் போர்ட் ஹீலியம் 3ஐக் கண்டு பிடித்தவர். இரவு மூன்று மணிக்கு ஒலிபண்ட் என்ற தனது  உதவியாளரைக் கூப்பிட்டார். ஹீலியம் கண்டுபிடித்ததைச் சொன்னார்! எப்படி அவர் கண்டுபிடித்தார்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 2 நிமிடம் 2 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 16

https://www.youtube.com/watch?v=DGdcb1MMajE

நோபல் பரிசு உருவானது எப்படி?

நோபல் டைனமைட்டைக் கண்டு பிடித்தார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மரணமடைந்ததாக செய்தி ஒன்றை பிரெஞ்சு பத்திரிகை ஒன்று வெளியிட்டது. மனம் நொந்த நோபல் என்ன செய்தார்? இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 50 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 17

https://www.youtube.com/watch?v=GPvmFxa9YKI

 

ஆராய்ச்சி வெறி கொண்ட விஞ்ஞானிகள்

ஆராய்ச்சி வெற்றி ஒன்றே குறியாக இருந்த தன் நண்பர் ஹார்டியைப் பற்றி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியது என்ன? வில்லியம் டொனால்ட் ஹாமில்டன் என்ற விஞ்ஞானி காட்டில் உள்ள பொந்துகளைத் தட்டிப் பார்ப்பார். ஒரு நாள் கில்லர் தேனி அவரை விரட்டியது.ஆப்பிரிக்க காட்டில் ஆய்வுக்காகச் சென்றார். எப்படி அவர் இறந்தார்?

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 33 வினாடிகள்

***

ariviyal aringar vazhvil ep 18

https://www.youtube.com/watch?v=dpHX2XvJdNg

செயற்கை இனிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

சாக்கரீன் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது. கான்ஸ்டண்டைன் ஃபால்பெர்க் கண்டுபிடித்தது எப்படி? சைக்ளமேட் ஸ்வீட்னர் யாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அசிசல்பேட் கே எப்படி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் காணொளி காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 52 வினாடிகள்

***

 

ariviyal aringar vazhvil ep 19

 https://www.youtube.com/watch?v=zaXCtaSDTS4

 Isidor Rabi என்ற நோபல் பரிசு பெற்ற மேதை ஐன்ஸ்டீனுடன் ஒரு உரையைப் படித்துக் கொண்டிருந்த போது வந்தார் Schwinger என்ற இளம் வயது மாணவர். அங்கு நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 48 வினாடிகள்

****

ariviyal aringar vazhvil ep 20

https://www.youtube.com/watch?v=IocvIwu9DKc

அறிவியலிலும் ஆணாதிக்கம் இருப்பதை எண்ணி வருந்திய மேடம் க்யூரி

மேடம் க்யூரி நொபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் அவர். அவர் அறிவியல் அகாடமியில் சேரக் கூடாது என்று தோற்கடிக்கப்பட்டார். அவர் வருந்தினார். நிகழ்ந்தது என்ன?

இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம். 

நிகழ்ச்சி நேரம் : 1 நிமிடம் 57 வினாடிகள்

***

www.youtube.com  —- ASacredSecret   –  Episodes  In English

 

POWER OF GAYATRI MANTRA ENG EPISODE 3

ENGLISH

Nadir Sha was defeated in the battle field. How? By the power of Gayatri Mantra. This episode explains the power of Gayatri mantra.

Time 2Min 58 Sec

***

POWER OF 24 SYLLABLES OF GAYATRI MANTRA ENG EPISODE 4

ENGLISH

The power of 24 syllables is explained in this episode. Each syllable and corresponding benefit like wealth, strength, energy etc.

Time 3 Min 19 Sec

***

 

அன்புடையீர்,

மேலே கண்டுள்ள காட்சிகளைக் கண்டு உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஒவ்வொரு எபிசோடிலும் உள்ள comment -பகுதியிலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

அல்லது ariviyalaanmeegam@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நண்பர்களுக்கும் இது பற்றிச் சொல்லி அவர்களையும் subscribe செய்யச் சொல்லுங்கள். நன்றி!

**

ஒபிஸிடி கோட் – 2 (Post No.5812)

Written by S Nagarajan

Date: 22 DECEMBER 2018


GMT Time uploaded in London –8 -38 am


Post No. 5812

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிவியல் துளிகள் அத்தியாயம் 404

(எட்டாம் ஆண்டு நாற்பதாம் கட்டுரை)

ஒபிஸிடி கோட் – 2

ச.நாகராஜன்

முதலில் ஒபிஸிடி கோட் முறையை யார் பின்பற்றலாம் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். கர்ப்பிணிகளும், டயபடீஸ் 2 மற்றும் நீடித்த நோயுள்ளவர்கள் இதைப் பின்பற்றுதல் கூடாது. நல்ல ஆரோக்கியமாய் இருந்து ஆனால் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் மட்டுமே இதைப் பின்பற்றலாம். குடும்ப டாக்டரைக் கலந்தாலோசித்த பின்னரே ஏனையோர் உபவாச முறையைப் பின்பற்றலாம்.

காலையில் எழுந்தவுடன் ஒரு கப் (240 மில்லி லிட்டர்) நீர் அருந்துதல் வேண்டும்.

உபவாசத்தின் போது சோர்ந்து படுத்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

காப்பி குடிக்கலாம்.க்ரீன் டீ விரும்புவோர் அதையும் பருகலாம்.

பசி எடுப்பது போல இருந்தால் நீர் அருந்தலாம் அல்லது காப்பி குடிக்கலாம்.

        யாரிடமும் சாப்பிடாமல் இருப்பதைச் சொல்ல வேண்டாம். உடனே அவர்கள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற உபதேசத்தை ஆரம்பித்து விடுவர்.

        ஒரு மாத கால அவகாசத்திற்குப் பின்னரே பலன் தெரிய ஆரம்பிக்கும்.ஆகவே பொறுமை தேவை.

       உபவாசம் இல்லாத தினங்களில் நல்ல சத்துள்ள உணவாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

       முதலில் வாரம் ஒரு முறை ஆரம்பிக்கலாம். பிறகு உடல் தகுதிக்கும் மனப் பக்குவத்திற்கும் தேவைக்கும் தக இதை வாரம் இரு முறை ஆக்கலாம்.

12-12 என்ற முறையை ஆரம்பத்தில் பின் பற்றலாம். அதாவது இரவு 7 மணிக்குச் சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் அடுத்த நாள் காலை 7 மணிக்கே காலை உணவைச் சாப்பிட வேண்டும். 12 மணி நேர உபவாசம், பின்னர் அடுத்த 12 மணி நேரத்திற்குள் உடலுக்குத் தேவையான உணவு என்பது இந்த முறை. இது எளிய முறை.

   இன்னும் அதிகமாக உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்

16 – 8 மணி நேர உபவாசம் என்ற முறையை மேற்கொள்ள வேண்டும்.

 அதாவது இரவு 8 மணிக்கு சாப்பாட்டை முடித்து விட்ட பின்னர் அடுத்த நாள் காலை உணவை விட்டு விட்டு 12 மணிக்குத் தான் உணவை ஏற்க வேண்டும்.  ஆக 16 -8 என்ற மணி நேரப்படி இந்த முறை அமையும்.

உடலின் இயக்கத்தினால் ஏற்படும் கலோரி இழப்பு போக உடல் பயிற்சியினால்  சுமார் 5 சதவிகிதம் மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. 95 சதவிகிதம் உணவுத் திட்டத்தினால் மட்டுமே உடல் எடை குறையும் என்கிறார் டாக்டர் பங். ஆகவே இந்த 95 சதவிகித உணவுத்திட்டத்தின் மீது உங்கள் அக்கறையைச் செலுத்துங்கள் என்பது அவரது அறிவுரை.

       ஆகவே உடலில் எடையைக் கூட்டும் இன்சுலின் பற்றியும் அதை ஊக்குவிக்கும் உணவுகளின் மீதும் நமது பார்வை பதிய வேண்டும். குறைந்த பட்ச இன்சுலினுடன் உடல் நெடு நேரம் இருந்தால் போதும். இன்சுலினால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

     இதற்கான நல்ல வழி 16 மணி நேர உபவாசம் தான். உடலுக்கு இன்சுலின் ப்ரேக் தர வேண்டும். அது உடல் எடை கூடுவதைத் தடுக்கும்.

        “எதை உண்ணுவது என்பதும் முக்கியம். பதப்படுத்தப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அனைத்து உணவு வகைகளும் விலக்கப்பட வேண்டும். சர்க்கரைச் சத்து, மாவுச் சத்து பொருள்களைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி உண்பதை விட்டு விட்டு குறைந்த தடவைகளே உண்ணுதல் வேண்டும். நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்தல் இன்றியமையாதது. பாட்டி கால வைத்தியம் என்று இதற்குப் பெயர். ஆனால் அது தான் சிறந்த உணவுப் பழக்கம்.

          உடல் மிகவும் பருமனாக இருந்தால் காலை உணவு நேரத்தை மாற்ற வேண்டும். குறைந்த அளவு உணவை காலை 8 மணிக்கு பதிலாக 12 மணிக்கு எடுத்துக் கொள்ளலாம். 12  மணி நேர உபவாசத்திற்கு பதில் 16 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் உபவாசத்தைத் தொடரலாம். இதைத் தான் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்கிறேன்” என்கிறார் டாக்டர் பங்.

        இந்தப் பழைய காலப் பழக்கத்திற்கு யாரும் இன்று  மதிப்புக் கொடுப்பதில்லை. ஆனால் இன்றைய தேவை அது தான்.

தரைக்கு மேல் வளரும் செடிகளிலிருந்து கிடைக்கும் கறிகாய்கள், சோயா, பருப்பு வகைகள், ஆப்பிள், பெர்ரி போன்ற பழ வகைகள், புரோட்டீன் உள்ள அசைவ உணவு வகைகள் முதலியவற்றை நமது உணவுத் திட்டமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட புதிய வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் பருமன் குறைந்து ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உங்கள் உடல் பொலிவு கூடும். ஆயுள் நீளும். ஆரோக்கியம் நிலைப்படும்.

உலக நாடுகளில் இன்று இந்தியா தான் இளைஞர்கள் அதிகமாக இருக்கக் கூடிய நாடாகத் திகழ்கிறது. சீனாவில் ஜனத்தொகை கூடுதலாக இருந்தாலும் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் காரணமாக இன்று அதிக வயதானவர்கள் அங்கு இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் இளைஞர்களின் நாடாகத் திகழும் நம் நாட்டில் இளைஞர்கள் தொப்பை இல்லாதவர்களாக ஆரோக்கியமான உடல் அழகுடன்  திகழ இன்றைய தேவை: ஒபிஸிடி கோட்.

அறிவியல் அறிஞர் வாழ்வில்  ..

அமெரிக்க டி.வி. சீரியலான ஸ்ட்ரேஞ்ஜ்  ஏஞ்சல் (Strange Angel) 2018 ஜுனில் ஆரம்பித்து மக்களைக் கவர்ந்த ஒரு சீரியல். இது ராக்கெட் விஞ்ஞானியான ஜாக் பார்ஸன்ஸின் (Jack Parsons) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர்.

அமெரிக்கரான ஜாக் பார்ஸன்ஸ் (பிறப்பு 2-10-1904 மறைவு 17-6-1952) கலிபோர்னியாவில் உள்ள பாஸடோனாவில் வாழ்ந்து வந்தார். அவருக்கு எப்படியாவது சந்திரனுக்குச் செல்ல வேண்டுமென்று ஆசை. அது மட்டுமல்ல, இன்னும் தொலைதூரத்தில் உள்ள கிரகங்களுக்கும் செல்ல அவர் ஆசைப்பட்டார்.

தனது இல்லத்தின் பின்புறத்திலேயே அவர் ராக்கெட்டைக் கட்ட ஆரம்பித்தார். பாஸடோனாவில் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி ஒன்றையும் அவர் ஆரம்பித்தார். ஆனால் விஞ்ஞானிகளோ இதெல்லாம் சாத்தியமான காரியம் இல்லை என்று சொல்லி வந்தனர். அது மட்டுமன்றி அல்தாஸ் க்ரோலி (Althaus Crowley) என்பவர் ஆரம்பித்த தெலேமா என்ற தத்துவம் கொண்ட அமானுஷ்யம் சம்பந்தமான (அக்கல்டிஸம்)  சங்கத்தில் சேர்ந்தார்.

பகலில் ராக்கெட்டைக் கட்டுவது, இரவில் அமானுஷ்ய சக்திகள் பற்றிய ஆராய்ச்சி என்று வாழ்க்கையைத் தொடரலானார். எஃப்.பி. ஐ இவரைக் கண்காணிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் வீட்டில் இருந்த லாபரட்டரியில் திடீரென்று ஒரு வெடி விபத்து ஏற்பட்டது.

ஒரு இரசாயனக் கரைசலை அவர் கலக்க முயன்ற போது அது கீழே சிந்தவே வெடி விபத்து ஏற்பட்டதாகப் பின்னர் தெரிய வந்தது. பெரிய காயங்களுக்குள்ளான அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் விபத்தின் காரணமாக சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவ மனை டாக்டர்கள் அறிவித்தனர்.

தொலைக்காட்சித் தொடரில் ஜாக் பார்ஸன்ஸாக ஜாக் ரெய்னர் நடித்துக் கலக்கியுள்ளார். 37 ஆண்டுகளே வாழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை ஜார்ஜ் பெண்ட்லி எழுதியுள்ளார்.  விண்ணில் பறக்க விரும்பிய இந்த விஞ்ஞானி இளம் வயதிலேயே மண்ணில் விபத்திற்குள்ளானது மகத்தான சோகம்!

*

கம்பனும் காளிதாசனும் கடலில் கண்ட திமிங்கிலம்! (Post No.5788)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 December 2018
GMT Time uploaded in London – 11-43
Post No. 5788


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கம்ப ராமாயணத்தைப் பக்திசுவைக்காகப் படித்து அதில் முத்து எடுப்போர் பலர்.

கம்பனை இலக்கிய நயத்துக்காகப் படித்து பவளம் எடுப்போர் பலர்.

ஆனால் கம்பனை விஞ்ஞானியாக, உயிரியல் விஞ்ஞானியாகப்– பார்த்து ரஸிப்போர் சிலரே.

கம்பன் போகிறபோக்கில் கப்பல், கடல் வாழ் பிரணிகளைப் பற்றிச் சொல்லுவ தால்,  அந்தக் காலத்தில் தமிழர்களுக்குக் கடல் பற்றி எவ்வளவு தெரிந்திருந்தது என்பது நமக்குத் தெரிகிறது.

சோழ சாம்ராஜ்யம், ‘சிங்களம் புட்பகம், சாவகம் எனத் தீவு பலவினும் குடியேறி’ -நல்லாட்சி தந்த காலம் அது.

மாபூப்பாளம், மாநக்கவாரம், மாயிருடிங்கம் எனப் பல்வேறு தீவுகளில் சோழனின் புலிக்கொடி பறந்த காலம் அது.

இதே போல காளிதாசனும் கடல் பற்றிச் சொல்லுவது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரத நாடு கடல் வணிகத்திலும், கடல் ஆதிக்கத்திலும் சிறந்து விளங்கியதைக் காட்டும்.

ரகு வம்ஸ மன்னர்களின் சிறப்பு பற்றி ஒரு பட்டியல் தருகையில் ‘இரு கடலையும் தொடும் நிலப்பரப்பையும் தன்னகத்தே கொண்டனர்’ என்பான்.; கடலில் கப்பல் மூழ்கினால் அவற்றில் சென்றோரின் சொத்து யாருக்குச் சொந்தம் என்றும் விவாதிப்பான். அந்த அளவுக்குப் பாரதக் கொடி பட்டொளி வீசிப் பறந்த காலம் அது

.

கடல்வாழ் பிராணிகளை உவமையாகப் போகிற போக்கில் கம்பனும் காளிதாசனும் சொல்லுவது இரண்டு உணமைகளைக் காட்டும்

1.அந்தக் காலத்தில் இந்தியக் கடற்பரப்பிலும் திமிங்கிலங்கள் வாழ்ந்தன. (இப்போது கிடையாது).

2. மக்களுக்குத் திமிங்கிலம், சுறாமீன் போன்ற கடல் வாழ் பிராணிகள் பற்றி நன்கு தெரிந்து இருந்தது. ஏனெனில் உவமையாகக் கையாளப்படும் விஷயம் பலரும் அறிந்ததாக இருக்க வேண்டும் என்பது கவிகளின் மரபு இலக்கணம்.

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில், வானரர் களம் காண் படலத்தில், ராமன் விட்ட அம்புகளால் என்ன நிகழ்ந்தது என்பதை விளக்கும் பாடல் இதோ:-

ஒழுகிப்பாயும் மும்மத வேழம் உயிரோடும்

எழுகிற்கில்லாச் செம்புனல் வெள்ளத்திடை இற்ற

பழகிற்கில்லா பல்திரை தூங்கும் படர் வேலை

முழுகித் தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர்

பொருள்

முதல் பாட்டில் ராமன் செலுத்திய அம்பால் வீழ்ந்தவர்களின் முகம் ரத்த வெள்ளதில் மிதந்தது; தாமரைக்குளம் போல இருந்தது என்றான்.

இந்தப் பாட்டில்,

ஒழுகிப் பாய்கின்ற மூன்று மத நீர்களையுடைய யானைகள்  இன்னும் சாகவில்லை. அவைகள் ரத்த வெள்ளத்தில் இருந்து தலைகளைத் தூக்கி எழுந்திருக்க முயலும்; மீண்டும் விழும். இது எப்படி இருக்கிறது என்றால், பழகிய,  அலை வீசும் கடலில் திமிங்கிலங்கள் கடலுக்குள் முழுகுவதும் எழுவதுமாக இருப்பதுப் போலக் காட்சி தந்தது.

இங்கே கடல் வாழ் பிராணிகளில் மிகப் பெரியதான திமிங்கிலத்தை ‘’மீன் அரசு என்பான். மீனவர்களும் அப்படித்தான் நினைப்பர். ஆனால் திமிங்கிலமோ மீன் வகையை சேர்ந்தது அல்ல. குட்டி போட்டு பாலூட்டும் (mammal) பிராணிகளை சேர்ந்தது. அது சுவாசிப்பதற்காக ஒவ்வொரு முறையும் வெளியே வரும். அப்படிச் சுவாசிக்கையில் அதன் அருகிலுள நீர் மேலே பீச்சி அடிக்கும். ஆனாலும் மீன் போலவே வடிவம்!

ஆகையால் மீன் அரசு என்று கம்பன் சொல்லுவதை ஏற்போமாக.

காளிதாசனும் இக்காட்சியை, கம்பனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே செப்பிவிட்டான். இதோ அந்தப் பாடல்…………………… (please follow the link given below)

கம்பன் கிட்கிந்தாக் காண்டத்திலும் திமிங்கிலம் பற்றிப் பேசுகிறான். எனது முந்தைய கட்டுரைகளில் சங்கப் பாடல்கள், காளிதாச ஸ்லோகம், கம்பன் பாடல்கள் உள. கண்டு களிக்கவும்.

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் …



https://tamilandvedas.com/…/திமிங்கிலம்-பற்றிக…

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426). Research Article Written by London swaminathan. Date: 7 December 2016. Time uploaded …

https://swamiindology.blogspot.com/2016/12/post-no3426.html

tags–கம்பனும் காளிதாசனும் , திமிங்கிலம்

–subham–

அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)

Written by London Swaminathan


swami_48@yahoo.com



Date: 15 December 2018


GMT Time uploaded in London – 8-20 am

Post No. 5783


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அதிசய க்யூரியம்அதிசய அமெரிஷியம்குழந்தைகள் கூட்டத்தில் அறிவிப்பு! (Post No.5783)

நம் வீடுகளை செங்கற்காளால் கட்டுகிறோம். இந்தப் பிரபஞ்சமானது 118 மூலகம் (தனிமம்) என்னும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் பகர்வர். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் முதல், பெண்கள் அணியும் தங்கம் வரை அனைத்தும் 118ல் அடக்கம். க்யூரியம் (Curium) என்ற உலோகமும் அமெரிஷியம் (Americium) என்ற உலோகமும் ரஹஸியமாகத் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது உலக மஹா யுத்த காலத்தில் அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் இவை உருவானது. இதை அமெரிக்கா பரம ரஹஸியமாக வைத்திருந்தது. அதில் ஈடுபட்ட ஒரு விஞ்ஞானி குழந்தைகள் ரேடியோ   நிகழ்ச்சியில் இந்தக் கண்டு பிடிப்பை வெளியிட்டார். அவர் சொன்னது குழந்தைகளுக்கு விளங்கி இருக்காது! அடுத்த சில தினங்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர் வேதியியல் உலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதோ சில சுவையான மூலகக் கதைகள்!

1945 நவம்பர் 11ம் தேதி க்விஸ் கிட்ஸ் (Quiz Kids- Radio Show) என்ற ரேடியோ நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக க்ளென் டி. ஸீபோர்க் (Glen T Seaborg) என்பவரை அழைத்திருந்தனர். அவர் எங்கள் ஆராய்ச்சியில் புதிய மூலகம் (தனிமம்) இரண்டு கிடைத்தன என்றார். இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்துவிட்டதால் அமெரிக்காவின் ரஹஸிய அணு ஆயுத ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டன. இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது அமெரிக்கா.

இதற்கு ஓராண்டுக்குப் பின்னர், அந்த மூலகத்துக்கு அமெரிஷியம் என்ற பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்படி ஒரு நாமகரணம்!

மற்ற மொழிகளில் அமெரிஷிய என்றாலும் ஆங்கிலத்தில் அமெரிஷம் என்பர்.

ரேடியத்தைக் கண்டுபிடித்து கதிரியக்கத்தினால் புற்று நோய் ஏற்பட்டு இறந்த மேரி க்யூரி, பியர் (பீட்டர்) க்யூரி என்ற பிரெஞ்சு விஞ்ஞானிகளின் நாமம் க்யூரியம் என்ற மூலகத்துக்கு சூட்டப்பட்டது. ரேடியம் கதையை இன்னொரு நாள் சொல்லுகிறேன்.

அமெரிஷம் பற்றி சில சுவையான செய்திகள்.

எங்கள் லண்டனில் எல்லோருடைய வீட்டிலும் ஸ்மோக் அலார்ம் (Smoke Detector)  உண்டு. வீட்டை வாடகைக்கு விடுவதாக இருந்தால் இது கம்பல்ஸரி (கட்டாயம்).

வீட்டிலெங்கேனும் புகை அதிகமானால் உடனே இது ‘கியா, கியா’ என்று கத்த ஆரம்பித்துவிடும். சில நேரங்களில் தோசை வார்க்கும் போதோ சுவையான கறி செய்யும்போதோ கொஞ்சம் புகை வந்துவிட்டால் புகை அபாய அறிவிப்பு அலறும்; ஓடிப்போய் அதை அணைத்துவிட்டுப் பின்னர் ‘ஆன்’ (Switch On)  செய்வோம். வீடுகளுக்கு ஐயர்களை  பூஜைக்கு அழைத்தால் அவர் போடும் முதல் கட்டளை.

“ஆத்தில் (அகத்தில்) ஏதேனும் ஸ்மோக் அலார்ம் இருந்தால் அணைச்சுட்டு வாங்கோ” என்பார். அல்லது அவர் விளக்கையும் ஊதுபத்தியையும் ஏற்றிய அடுத்த நிமிஷத்தில் அபஸகுன அலார்ம் (எச்சரிக்கை ஒலி) வந்து விடும். இவ்வளவு பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா?

வீட்டுக்கு மிகவும் பயன் தரும் உயிர் காக்கும் தோழனான– ஸ்மோக் அலார்மில், அமெரிஷம் அல்லது அமெரிசியம் உளது. ஆனால் இதிலிருந்து வரும் கதிரியக்கம் உடலைப் பாதிக்கும் அளவு கிடையாது. ஆயினும் இதைப் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் கதிரியக்கம் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உண்டு.

இதிலிருந்து வரும் கதிரியக்கம் எலும்புகளைத் தாக்கி அதன் மஜ்ஜையில் உருவாகும் இரத்த சிவப்பு அணுக்களை அழித்துவிடும்..

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஸீபோர்க் உள்பட 4 விஞ்ஞானிகள் 1944ம் ஆண்டில் இதை உண்டாக்கினர். ப்ளூட்டோனியம் என்னும் மூலகத்தின் மீது, ஒரு அணு உலையில், நியூட் ரான்-களைக் கொண்டு தாக்கினால் க்யூரியமும் அமெரிஷமும் கிடைக்கும்.

ப்ளூடோனியம்-239 இலிருந்து அமெரிஷம் 243 கிடைக்கும் (ஐஸடோப்). இது நிலைத்து நிற்கக்கூடிய வகையறா; ஏனையவை குறுகிய காலத்தில் அழிந்து விடும். இது பாதியாகக் குறைய (Half Life) 7370 ஆண்டுகள் ஆகும். எல்லா கதிரியக்க மூலகங்களுக்கும் இப்படி அரை வாழ்வு (Half life) கணக்கு உண்டு. பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஈயத்தில் வாழ்வு முடிந்து விடும்.

ஸ்மோக் டிடெக்டரில் பயன்படுவது அமெரிஷம்-241. ஒவ்வொரு ஸ்மோக் அலார்மிலும் 150 மைக்ரோக்ராம் அளவுதான் இது வைக்கப்படும். அந்தக் கருவியில்  மின்சார ஓட்டம் புகை காரணமாக தடைப்படுகையில் அதனுடன் இணைந்த எச்சரிக்கை மணி அடிக்கத் துவங்கும்.  5000 கருவிகள் செய்வதற்கு ஒரு கிராம் உலோகம் போதுமானது. ஆனால் அமெரிஷம் ஆக்ஸைட் ஒரு கிராமின் விலை 1500 டாலர்களுக்கு மேல்!

இதன் வேதியியல் குறியீடு- Am

அணு எண் -95

உருகு நிலை- 994 டிகிரி C

பூமியில் இது இயற்கையில் கிடைக்கக்கூடும். ஆனால் கோடிக்கணக்கான ஆண்டுகளில் அழிந்திருக்கலாம்.

பலவகை அமெரிஷம் காம்பவுண்டுகளை (உப்பு) செய்து, வெவ்வேறு கலர் ஊட்டுவர். எடுத்துக் காட்டாக அமெரிஷம் க்ளோரைட் இளஞ்சிவப்பு (ரோஜா) நிறத்தில் இருக்கும்.

இது வெள்ளி போன்று பளபளக்கும் ஒரு உலோகம்.

இனி க்யூரியத்தின் கதையைக் காண்போம்.

ஒரு பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட பெருமை இதற்கு உண்டு. அவர்தான் மேரி க்யூரி.

முன்னர் சொன்ன ஆராய்ச்சியில் கிடைத்ததுதான் க்யூரியமும். இந்தக் கதிரியக்கமும் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். ஆனால் இதையும் மிக   குறைந்த அளவில் பயன்படுத்தினால் ‘உயிர்  காக்கும் தோழன் ஆவான்.

ப்ளூட்டோனியத்தை நியூட் ரான் கொண்டு அடிக்கும் அடியில், க்யூரியம் கதறிக்கொண்டு வெளியே வரும். ஒவ்வொரு கிராம் உலோகத்தைக் கொண்டு, மூன்று வாட் (3 Watt) மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதன் காரணமாக இதை செயற்கை இருதயக் கருவிகள் (Pace makers), விண்கலங்கள், கடலில் மிதக்கும் வழிகாட்டி (Navigational buoys) மிதவைகள் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். இது வெளியிடும் ஆல்பா (alpha rays) கிரணங்களை எளிதில் தடுக்க இயலுமாதலால் பாதுகாப்புப் பெட்டகத்தில் அடக்கிவைத்து, மின்சாரத்தைப் பெறுவர்.

இதன் வேதியியல் குறியீடு- Cm

அணு எண் -96

உருகு நிலை- 1340 டிகிரி C

இதுவும் செயற்கை மூலகம்; உலோகம். வெள்ளி  நிறம் உடையது. இதற்கு 14 அவதாரங்கள் (ஸடோப்புகள் ) உண்டு. க்யூரியம்-242 என்ற ஐஸடோப் 163 நாட்களில் அழிந்துவிடும். ஆனால் க்யூரியம்-247ன் அரை வாழ்வு 16 மில்லியன் ஆண்டுகள் (ஒரு மில்லியன் = பத்து லக்ஷம்).

இது இயற்கையில் கிடைப்பதல்ல. ஆனால் மனிதர்கள் நடத்திய அணு ஆய்த சோதனைகளால் காற்று மண்டலத்தில் கொஞ்சம் இருக்கக்கூடும்.

அமெரிஷத்தால் தீவிபத்து உயிரிழப்புகளைத் தடுக்க முடிகிறது; க்யூரியத்தால் செயற்கை இருதயக் கருவிகளை உருவாக்க முடிகிறது.

இயற்கையில் தீய கதிரியக்க மூலகங்கள்!!! ஆனால் மனிதனின் புத்திசாலித்தனம் இரண்டையும் உயிர் காப்பான் தோழன்’ என்ற வகையில் சேர்த்துவிட்டது அரக்கர்களைப் பயன்படுத்தி தேவர்கள் அமிர்தத்தைப் பெறவில்லையா? ஆகவே நம்மூர் முரடர்களையும் கூட, நுகத்தடியில் காளைகளைப் பூட்டி வேலை வாங்குவது போல வேலை வாங்கலாம்.

வாழ்க க்யூரியம்! வாழ்க அமெரிஷம்/ அமெரிஷியம்!!

TAGS– க்யூரியம், அமெரிஷியம்,  ஸ்மோக் அலார்ம், செயற்கை இருதயக் கருவி

–சுபம்–

8 லட்சம் ஆண்டு இல்லாத அளவு கார்பன் டை ஆக்ஸைடின் அளவு (Post No. 5687. )

Written by S Nagarajan

Date: 22 November 2018

GMT Time uploaded in London –7-08 am
Post No. 5687

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி எட்டாம் கட்டுரை)!                                              அத்தியாயம் 402

ஜாக்கிரதை! எட்டு லட்சம் ஆண்டுகள் இல்லாத அளவு பூமியில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு!!

ச.நாகராஜன்

மனித குலத்திற்கே வருத்தமூட்டும் ஒரு செய்தியை விஞ்ஞானிகளின் ஆகஸ்ட் 2018 அறிக்கை தருகிறது. எட்டு லட்சம் ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்தபட்ச கார்பன் டை ஆக்ஸைடு அளவை பூமி கொண்டிருக்கிறது என்பது தான் அது!

அண்டார்டிகாவில் கிரீன்லாந்தில் பனியின் உள்ளீட்டைக் (Icecore) குடைந்து பார்த்து பூமியின் வளிமண்டலம் கடந்த எட்டு லட்சம் ஆண்டுகளில் எப்படி மாறி இருக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதில் வந்த ஷாக்கிங் நியூஸ் தான் இது!

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஸ்டேட் கிளைமேட் ரிபோர்ட் 2017இன் படி கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு  பத்துலட்சத்திற்கு 450 என்ற அளவில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இதை அமெரிக்க காலநிலை கழகம் தெரிவித்திருக்கிறது. 38 ஆண்டுகளில் வருடாவருடம் பனியின் உள்ளீடு பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. அதில் உச்சபட்சமாக 2017இன் அளவு இருக்கிறது.

எப்படி உலகம் மாறி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டும்  இது, ஆய்வின் ஒரு எச்சரிக்கை தான்.

ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் எழுதி வரும் எலிஸபத் கமில்லோ 65 நாடுகளில் உள்ள 524 விஞ்ஞானிகள் இணைந்து செய்த ஆய்வின் அறிக்கையை சமீபத்திய (2018) இதழில் தந்துள்ளார். ஆயிரத்தி எண்ணூறுகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் அளவுகளில் 2017ஆம் ஆண்டின் ரிகார்டுகளை அறிவியல் ரீதியாகப் பார்க்கும் போது, அது இரண்டாவது உஷ்ணம் மிகுந்த ஆண்டாக விளங்குகிறது.

உண்மையில் சொல்லப்போனால் 2017ஆம் ஆண்டு ஒரு எல் நினோ ஆண்டு. அதாவது பூமியில் சிறிது குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆண்டு. அந்த ஆண்டிலேயே இப்படி ஒரு அதிக வெப்பம் என்றால் நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

பூமியின் எதிர்கால நிலை என்ன தான் ஆகும்?

இதே போல விஷ வாயுத் தன்மை கொண்ட க்ரீன் ஹவுஸ் கேஸ் எனப்படும் பசுமை இல்லா வாயுக்களான மீதேன், நைட் ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றின் அளவுகளும் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ளன.

1993 ஆண்டு முதல் எடுத்துக் கொண்டால் கடல் மட்ட நீரின் அளவு மூன்று அங்குலம் உயர்ந்துள்ளது. கடல்நீரில் மேல் மட்டத்தில் உள்ள 2300 அடிகள் அதிக அளவு உஷ்ணநிலையை இப்போது காட்டுகிறது. எல் நினோ ஆண்டு என்று அழைக்கப்படும் 2016ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவாக இது உள்ளது.

அண்டார்டிகாவின் பனிப்படலத்தின் பரப்பு கூட 8,11,000 சதுர மைல்களாக மார்ச் 2017இல் ஆகி கடந்த 38 ஆண்டுகளாக இந்தப் பனிப்பரப்பு சுருங்கிக் கொண்டே வருவதை உறுதி செய்கிறது.  இதை வைத்து விஞ்ஞானிகள் கூறுவது 1980இலிருந்து 72 அடி அளவிற்கு மேல் மட்டத்திலிருந்து பனிப்படலம் குறைந்து விட்டது என்பது தான்!

இதன் விளைவாக  1900ஆம் ஆண்டிலிருந்து எடுத்துக் கொண்டு பார்த்தால் ரஷியா இரண்டாவது கடுங் குளிரான ஆண்டாக 2017ஐக் கொண்டிருக்கிறது. வெனிஜுலா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகப் பெரிய அளவில் மழை பொழிந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி வழக்கத்திற்கு மாறான அதிக பட்ச உஷ்ணத்தால் காட்டுத் தீ பெரும் அளவில் உலகின் பல பகுதிகளில் மூண்டது. அமெரிக்காவில் 40 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை காட்டுத் தீ அழித்தது. அமேஸான் பகுதியில் 2,72,000 காட்டுத் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன!

பவளப்பாறைகள் ஆங்காங்கு பாதிக்குப் பாதியாக அழிவு பட்டு வருகின்றன!

இதை உலகம் தாங்காது; இனியும் பசுமை வாயுக்கள் அதிகரிக்காது என்று வைத்துக் கொண்டாலும் கூட பூமியின் வளி மண்டல வெப்பம் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு அதிகரித்துக் கொண்டே போகும்.

இதன் விளைவுகள் பிரம்மாண்டமானதாக இருக்கும்.

பூமியின் வெப்பம் தாங்காது மனித குலம் படாத பாடு படும். கடலோர நகரங்கள் அழிந்து போகும். கடல் வாழ் உயிரினங்கள் மறையும். தாவரங்கள் செழிக்காது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த 2018 ஆம் ஆண்டு நான்காவது அதிக வெப்பமுடைய ஆண்டாக உருவாகி வருகிறது என்ற எச்சரிக்கையையும் விஞ்ஞானிகள் தருகின்றனர்.

ஆகவே வீட்டிற்குள் சுனாமி அலை வந்து விட்டது போல இந்த அபாயத்தை நினைத்து உலக நாடுகளின் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் அறிவுரை.

அரசு எடுக்கும் முடிவுகளுக்கு உலக மக்கள் ஆதரவு தந்தே ஆக வேண்டும்; இல்லையேல் அரசுகளும் இருக்காது; அவர்கள் ஆள மக்கள் கூட்டமும் இருக்காது!

முதலில் வாகனப் புகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் இறங்க வேண்டும். இது தான் முதல் படி!

மனித குலம் காக்கப்படும் வழி இங்கே தான் ஆரம்பிக்கிறது!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்காவில் பொதுவாக மலரும் நினைவுகளாக எழுதப்படும் புத்தகங்கள் ஏராளம். இந்தியாவிலோ குறைவு; அதுவும் விண்வெளி இயல் பற்றி வரும் புத்தகங்களோ மிகக் குறைவு. இந்தக் குறை போக்கும் விதமாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ.எஸ்.ஆர். ஓவில் பணி புரிந்த வேத பிரகாஷ் சண்ட்லாஸ் ‘தி லீப்ஃப்ராக்கர்ஸ்’ (The Leapfroggers) என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னாள் பாரத ராஷ்ட்ரபதியும் பிரபல விண்வெளி விஞ்ஞானியுமான அப்துல்கலாம் பற்றிய ஒரு சுவையான சம்பவத்தை அவர் தருகிறார்.

அப்துல்கலாம் அவர்களுக்கு அலுவலகத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே செல்ல வேண்டும்  என்பதெல்லாம் கிடையாது. இரவு பகல் பாராது உழைப்பது அவர் இயல்பு. அதே போல அவருடன் இணைந்து பணியாற்றியவர்களும் கூட அப்படியே நேரத்தைப் பாராது பணி புரிந்தனர்.

இதன் விளைவாகத்தான் எஸ் எல் வி – 3 ராக்கெட் 1980 ஜூலையில் முதன் முதலாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட்டைத் தயாரிக்கும் பணியில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் போது ஒரு நாள் நள்ளிரவில் அப்துல்கலாம் எஸ் எல் வி – 3 ராக்கெட்டின் பணிகளின் முன்னேற்றம் பற்றி சண்ட்லாஸிடம் விசாரித்தார்.

உடனடி பதிலாக,”எந்த விதக் குழப்பமும் இன்றி, ஒரு பிரச்சினையும் இன்றி பணிகள் சீராகப் போய்க் கொண்டிருக்கின்றன” என்று கூறப்பட்ட போது, அப்துல்கலாம், “அப்படியா, அப்போது சில பிரச்சினைகளை உருவாக்குவோம்” என்று பதில் அளித்தார். அங்கு பணி புரிந்தோரிடம் ஏராளமான சிக்கலான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

நிர்வாக இயலின் புது உத்தி இது! வேண்டுமென்றே பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லி அதற்கான சிறந்த தீர்வைக் காண வேண்டும் என்பதே அந்த உத்தி.

கலாம் அவர்கள் கிளப்பிய பிரச்சினைகளால் உந்தப்பட்ட விஞ்ஞானிகள் அவற்றை மனதில் கொண்டு அதற்கான தீர்வைக் காண முற்பட்டனர். எதிர்பார்த்த காலத்தை விடச் சற்றுக் கூடுதலான காலத்தை அவர்கள் எடுத்துக் கொண்டாலும் கூட, ராக்கெட்டின் வடிவமைப்பும் செயல்பாடும் சிறப்பாக அமைந்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தன.

இப்படி, அப்துல்கலாம் அவர்களின் சிந்தனையும் செயல்பாடும் ஒப்பற்றதாய் அமைந்திருந்ததைப் சண்ட்லாஸ் விளக்கியுள்ளார்.

***

ச.நாகராஜன் எழுதிய நூற்றியெட்டு நூல்களின் பட்டியல்! (Post No.5684)

 

Written by S Nagarajan

Date: 21 November 2018

GMT Time uploaded in London –7-48 am
Post No. 5684

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ச.நாகராஜன் எழுதிய நூற்றியெட்டு நூல்களின் பட்டியல்!

நண்பர்களுக்கு நன்றி! எனது புத்தகங்கள் பற்றி அவ்வப்பொழுது ஆர்வத்துடன் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு கோடி நன்றிகள்!! இவை பற்றிய விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.

இவற்றில் 52 நூல்களை டிஜிடல் வடிவிலும் 18 நூல்களை அச்சுப்பதிப்பாகவும் உடனே பெற முடியும். ஏனைய நூல்களில் சில தயாரிப்பில் உள்ளன; மற்றையவை பற்றி, இனி தான் வெளியிடப்படும் முயற்சியையே ஆரம்பிக்க வேண்டும்.

 

தமிழகத்தில், பதிப்புத் தொழிலில் இப்போது ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தகுந்த பதிப்பாளர்கள் கிடைத்தால் வெளியிடப்பட வேண்டிய நூல்களை விரைவில் வெளியிட முடியும்.

இங்கு 108 நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 3000 கட்டுரைகள் உள்ளன. சுமார் பதினைந்து லட்சம் சொற்களைக் கொண்ட இந்த நூல்களில் ஆன்மீகம், யந்திரங்கள், மந்திரங்களின் மகிமை, ஹிந்து மதச் சிறப்பு, புத்த மதச் சிறப்பு, அறிவியல், அறிவியல் கேள்வி- பதில்கள், அறிவியல் அறிஞர்கள், விண்வெளியில் மனித சாதனைகள், சுய முன்னேற்றம், அதீத உளவியல், திரைப்பட நடிகர், நடிகைகள், ஆங்கில, தமிழ் திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், உலக நாடுகள், உலகின் முக்கிய இடங்கள், கணிதப் புதிர்கள், ஜோதிடம், ஜோதிட அறிஞர்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், பெண்கள் முன்னேற்றம், பறக்கும் தட்டுகள், இந்தியாவின் தேசீயத் தலைவர்கள், உலகத் தலைவர்கள், சின்னத்திரை சீரியல்கள், விலங்கு உலகம், ஆங்கில விந்தைகள், தமிழ் விந்தைகள், சம்ஸ்கிருத விந்தைகள், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள், சிறந்த நூல்கள், தமிழ், ஆங்கில, ஹிந்தி, சம்ஸ்கிருத இலக்கியம், பெங் சுயி, வாஸ்து சாஸ்திரம், எண் கணிதம், ஆரோக்கியம் பெறுவதற்கான வழிகள்,சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் , வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், சரித்திர நாவல்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. சுமார் 18 தின, மாத, வார இதழ்களிலும், http://www.nilacharal.com, http://www.tamilandvedas.com, http://www.ezinearticles.com உள்ளிட்ட இணையதளங்களிலும் கடந்த 48 (1971-2018) ஆண்டுகளில் வெளியானவை இவற்றில் அடங்கும்.

*

கீழ்க்கண்ட 52 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் National Library Board, Singapore- சிங்கப்பூர் தேசீய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல்கள் பற்றிய விவரங்களை http://www.nilacharal.com இணையதளத்திலிருந்து பெறலாம்.

 

ஆங்கில நூல்

1) Breakthrough to Success

தமிழ் நூல்கள்

சுய முன்னேற்றம்

2) வெற்றிக்கலை

ஜோதிடம்

3) ஜோதிடம் உண்மையா?

4) ஜோதிட மேதைகளின் வரலாறு!

5) நவகிரகங்கள்

6) நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

திரைப்படம்

7) திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

8) அதிரடி மன்னன் ஜாக்கிசான்

9) ஹா! ஹா!! ஹாலிவுட்!!!

உலகம்

10) உலகின் அதிசய இடங்கள்

அதீத புலனாற்றல்

11) அறிவுக்கும் அப்பால்

12) பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

13) அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

14) பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

15) விந்தை மனிதர்கள்

16) மாயாலோகம்! (பாகம் 1)

17) மாயாலோகம்! (பாகம் 2)

18) மாயாலோகம்! (பாகம் 3)

வாழ்க்கை வரலாறு

19) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

20) டயானாவின் கதை

சரித்திர நாவல்

21) நாக நங்கை

22) விஜயதீபம்

அறிவியல் கேள்வி-பதில்

23) ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்)

விலங்கியல்

24) விலங்கு உலகப் புதுமைகள்!

தொலைக்காட்சி

25) உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

ஆன்மீகம்

26) சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?)

27) அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

28) திறன் கூட்டும் தியானம்

29) ஆன்மீக ரகசியங்கள்!

30) அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

31) அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்

32) சிறுவர் புராணக் கதைகள்

33) புராணத் துளிகள்!

34) விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

 

அறிவியல்

35) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1)

36) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2)

37) விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3)

38) அறிவியல் துளிகள்! (பாகம் 1)

39) அறிவியல் துளிகள்! (பாகம் 2)

40) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

41) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

42) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)

43) அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

வானொலி உரைகள்

44) ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

45) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1)

46) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

47) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3)

வானொலி நாடகங்கள்

48) வருவார் காந்திஜி!

புதிர்கள்

49) மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

மொழி

50) ஆங்கிலம் அறிவோமா?

ஆரோக்கியம்

51) அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 1)

52) அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 2)

*

குறிப்பு:- மேற்கண்ட 52 நூல்களில் 17 நூல்கள் விநாயகா பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை, உரிமையாளர், திரு சுவாமிநாதன் அவர்களால் அச்சிடப்பட்டு அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Vinayaka pathippakam

old no 29 new no 71

muthu street

royapetta chennai – 14

Contact : Mr Swaminathan  9941352785

9380712132

அச்சுப் பதிப்பு நூல்கள்

வெற்றிக்கலை

நவகிரகங்கள்

நாக நங்கை

விஜயதீபம்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்

உலகின் அதிசய இடங்கள

அறிவுக்கும் அப்பால்

பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

ஆங்கிலம் அறிவோமா?

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

விந்தை மனிதர்கள்

திறன் கூட்டும் தியானம்

ஆன்மீக ரகசியங்கள்!

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

விஞ்ஞானப் புதுமைகள் 100

சிறுவர் புராணக் கதைகள்

கீழ்க்கண்ட ஒரு நூலை அச்சுப் பதிப்பாக, மணிவாசகர் பதிப்பகம் , சென்னை வெளியிட்டுள்ளது:

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

*

கீழ்க்கண்ட 15 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்படத் தயாராக உள்ளன.

 

அறிவியல்

  1. அறிவியல் துளிகள்! (பாகம் 3)
  2. அறிவியல் துளிகள்! (பாகம் 4)
  3. அறிவியல் துளிகள்! (பாகம் 5)
  4. அறிவியல் துளிகள்! (பாகம் 6)

பெண்ணியம்

  1. ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்
  2. மாறி வரும் பெண்கள் உலகம்

ஆன்மீகம்

  1. அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
  2. புராணத் துளிகள் பாகம் 2
  3. சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 1

(சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பு)

  1. ராமாயண வழிகாட்டி பாகம் 1
  2. ஸ்வர்ண லோகம் பாகம் 1
  3. பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!

ஆரோக்கியம்

  1. அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

வானொலி உரைகள்

  1. சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

உலகம்

67.இன்றைய பார்வையில் சில உலக நாடுகள்

கீழ்க்கண்ட 41 நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு நூல்களாக ஆக்கம் செய்யப்படத் தயாராக உள்ளன.

  1. அறிவியல் துளிகள்! (பாகம் 7)
  2. அறிவியல் துளிகள்! (பாகம் 8)
  1. சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 2

(நியாயங்கள் பற்றிய தொகுப்பு)

  1. தமிழ் என்னும் விந்தை பாகம் 1
  1. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

(சுய முன்னேற்ற நூல் – ஆங்கில நூலின் தமிழாக்கம்)

73) வெற்றிக்கலை – இரண்டாம் பாகம்

74) அறிவியல் துளிகள்! (பாகம் 9)

75) 120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸூ யுன்! (Empty Cloud தமிழாக்கம்)

76) அறிவியல் துளிகள்! (பாகம் 10)

77) அறிவியல் துளிகள்! (பாகம் 11)

78) அறிவியல் துளிகள்! (பாகம் 12)

79) அறிவியல் துளிகள்! (பாகம் 13)

80) அறிவியல் துளிகள்! (பாகம் 14)

81) அறிவியல் துளிகள்! (பாகம் 15)

82) அறிவியல் துளிகள்! (பாகம் 16)

83) சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் – பாகம் 5

84) மாக்ஸ்முல்லர் மர்மம்

85) இது தான் இந்தியா!

86) கம்பன் இன் கவித் திரட்டு மற்றும் கட்டுரைகள்

87) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – பாகம் 1

88) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – பாகம் 2

89) பாரதி போற்றி ஆயிரம்

90) அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 4

91) ஸ்வர்ண லோகம் (புத்த மதக் கட்டுரைகள்) (பாகம் 2)

92) தேவாரக் கட்டுரைகள் (பாகம் 1)

93) தேவாரக் கட்டுரைகள் (பாகம் 2)

94) கொங்கு மண்டல சதகம் – வரலாற்றுக் கட்டுரைகள்

95) ஹிந்து ராஷ்டிரம் தேவையா?

96) சம்ஸ்கிருதச் செல்வம் (பாகம் 3)

97) மஹாபாரத மர்மங்கள்

98) கண்ணதாசனின் காலம் வென்ற படைப்புகள்

99) மஹரிஷி ரமணர்

100) வாஸ்து சாஸ்திரமும் பெங் சுயி நன்மைகளும்

101) அதிசய கவிஞர் பாரதியார்

102) மதம் மாற்றும் பாதிரிகளும் இங்கர்சாலும்

103) வள்ளுவரிடம் வாழ்க்கை இரகசியங்களை கேட்போம்

104) உலகின் ஒப்பற்ற மேதைகள் – லிங்கன், நெப்போலியன், வால்டேர், மொஜார்ட்

105) அதீத உளவியல் ஆற்றல் மர்மங்கள்!

106) அருமையான ஹிந்தி, ஆங்கில, தமிழ் திரைப்படங்கள்

107) கிருஷ்ண தியானம் ஏன்? மேலை நாட்டு அறிஞர் வியக்கும் ஹிந்து மதம்

108) அதிசய மஹாபுருஷர்கள் வாழ்க்கையில் .. ..

—-  SUBHAM  —