எழுதினால் மனோவியாதி போகும்! (Post No.5363)

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 August 2018

 

Time uploaded in London – 5-01 AM (British Summer Time)

 

Post No. 5363

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 24-8-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஐந்தாம்) கட்டுரை

எழுதினால் மனோவியாதி போகும்!

 

ச.நாகராஜன்

 

துயரமான சம்பவங்களுக்கு ஆட்பட்டு நிம்மதி இழந்தவர்களுக்கும், அடிக்கடி துயரங்களைச் சந்தித்து தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும் அறிவியல் தரும் ஒரு ஆறுதலான செய்தி – எழுதுங்கள், உங்கள் மனோ வியாதி போகும் என்பது தான்!

பிரபல உளவியல் அறிஞரான டாக்டர் ஜேம்ஸ் பென்னேபேகர் (Dr James Pennebaker – பிறப்பு 2-3-1950) ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழக பேராசிரியர். அவரும் அவரது மாணாக்கர்களும் உணர்ச்சிகரமான அனுபவங்களுக்கும் இயல்பான மொழிக்கும் உள்ள தொடர்பையும், இதனால் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.

 

30 ஆண்டுகளுக்கு முன் அவரது ஆய்வு ஒன்றின் மூலமாக இரகசியங்களை மனதிற்குள் போட்டுப் புதைத்து வைத்துக் கொள்வதன் மூலம் ஒருவருக்கு நோய் உருவாகும் என்பதை அவர் கண்டார். இதன் தொடர்ச்சியாக தங்களது ஆழ்ந்த இரகசியங்களை ஒருவர் எழுதுவதன் மூலமாக உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நலம் பெறுவார் என்பதையும் கண்டுபிடித்தார். இந்த எழுதுதல் பணிக்கு அவர் தந்த பெயர் எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் (Expressive Writing).

 

வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பிரபல உளவியலாளர் இப்போது கண்டுபிடித்திருப்பது அன்றாடம் நாம் பேசும், எழுதும் மொழியானது நம்மை வெளிப்படுத்துகிறது என்பதைத் தான்!

 

இவரது புத்தகமான ‘ஓபனிங் அப் : தி ஹீலிங் பவர் ஆஃப் எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் டு ஹீல்’ (Opening up : The Healing Power of Expressing Emotion and Writing to Heal) பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. பத்து புத்தகங்களையும் 300 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள அவர் 1986இல் தன் ஆய்வைத் தொடங்கினார்.

 

ஆய்வுக்கென மாணவர்களை அழைத்து அவர்களிடம்  தங்களது வாழ்வில் நடந்த துயரமான சம்பவங்களை 15 நிமிடங்கள் அவர் எழுதச் சொன்னார். ஒரு துயரமான சம்பவமும் இல்லை என்றால் அவர்கள் கஷ்டமாக உணர்ந்த தருணத்தைப் பற்றி எழுதச் சொன்னார். இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியமாக வைத்திருக்கும் விஷயத்தை அவர்கள் எழுத வேண்டும். நான்கு நாட்கள் இந்த சோதனை தொடர்ந்தது. அவர்களில் இருபது பேருக்கு ஒருவர், எழுதும் போது ஓவென்று அழுதனர். ஆனால் அவர்கள் எழுதுவதை நிறுத்தவில்லை. பின்னர் அவர் ஆறு மாதங்கள் அந்த மாணவர்கள் எப்போதெல்லாம் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்றனர் என்பதைக் கண்காணிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அவருக்கு ஆச்சரியகரமான முடிவு தெரிந்தது. வெளியில் காரில் காத்திருந்த நண்பரிடம் வந்து ஒரு பெரிய விஷயத்தைத் தான் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். எந்தெந்த மாணவர்கள் தங்களது இரகசிய விஷயங்களை எழுதினார்களோ அவர்களெல்லாம் சிகிச்சை நிலையங்களுக்கு குறைந்த அளவே சென்றிருந்தனர்!

அன்று பிறந்தது சைக்கோ நியூரோ இம்யூனாலஜி! (Psychoneuroimmunology). எளிமையாக  எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் என்று இது இப்போது சொல்லப்படுகிறது. ஆஸ்த்மாவிலிருந்து ஆர்திரிடிஸ் வரை மார்பகப் புற்று நோயிலிருந்து மைக்ரேன் தலைவலி வரை இப்படி எழுதுவதால் குறைந்த அளவே டாக்டர்களைப் பார்க்க வேண்டிய அவசியம் அப்படி பாதிப்புள்ளானவர்களுக்கு ஏற்பட்டது என்பதை அவர் கண்டுபிடித்தார். காயங்கள் மிகவும் சீக்கிரமாக ஆறுவதைக் கண்டபோது அவரே ஆச்சரியப்பட்டார்.

 

ஆனால் ஜோயன் ஃப்ராடாரோலி என்ற கலிபோர்னியா ஆய்வாளர் இப்படி எழுதுவதால் கான்ஸர் போன்றவை முற்றிலும் குணமாகி விடுவதில்லை என்பதைக் கண்டார். என்றாலும் கூட சிறிய அளவு முன்னேற்றம் இருப்பதால் இலவசமாக செய்யக்கூடிய இந்த எக்ஸ்பிரஸிவ் ரைட்டிங் பயனுள்ளது தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

 

 

மென்மேலும் இத்துறையில் ஆராய்ச்சி செய்த பென்னேபேகர் வார்த்தைகளை வைத்து ஒருவர் பொய் சொல்கிறாரா இல்லையா, ஒருவர் ஆணா பெண்ணா, பணக்காரரா, ஏழையா என்பன போன்றவற்றைச் சொல்லி விட முடியும் என்பதைக் கண்டார். இதற்கென ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமைத் தயார் செய்து ஒருவர் பேசுவதை எல்லாம் அதில் பதிவு செய்தார். அதன் மூலம் வார்த்தைகள் இருவருக்கிடையே ஒத்திருக்கும் போது அவர்கள் ஒருவர்பால் இன்னொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என்கிறார். ‘நான்’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது என்பது அவரது அறிவுரை.

 

 

இப்போது பென்னேபேகர் ப்ராஜக்ட் 2021 என்ற ஒரு புதிய ஆய்வுக்கு செயல் இயக்குநராக இருக்கிறார். இந்தத் திட்டம் 2016, ஜனவரி 19ஆம் தேதி துவங்கப்பட்டது. ‘ஏராளமான நவீன தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்தில் பழைய கால கல்விமுறை கற்பவர்களுக்குச் சரி வராது. மற்றவர்களுடன் அவர்கள் பழகும் விதம், ஆய்வுப் பேப்பர்களை எழுதும் விதம், ஆய்வு செய்யும் விதம் ஆகியவற்றில் ஒரு புதிய செயல்முறை வேண்டும்’ என்று கருதும் பென்னேபேகர் தனது பல்லாண்டு ஆய்வை வைத்து ஒரு புதிய செயல்முறையை மாணவர்களுக்கென அறிமுகப்படுத்தவிருக்கிறார். இது செயல்படும் போது புதிய தலைமுறை உருவாகும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

 

வார்த்தைகளின் மூலம் ஒருவரை நன்கு அறிந்து கொள்ளலாம் என்று சொல்லும் போதே வார்த்தைகளை மாற்றிப் பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்தை நோயற்றதாக, வளமுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம் என்பது நல்ல செய்தி தானே! இதை அவரது பத்துப் புத்தகங்களும் விளக்குகின்றன!

விரைவில் முடியவிருக்கும் ப்ராஜெக்ட் 2021 பல புதிய தகவல்களைத் தரும் என்பது உறுதி!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ….

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான பால் டிராக் (Paul Dirac தோற்றம் 8-8-1902 மறைவு 20-̀10-1984) அன்றாட பிரச்சினைகளுக்கு விஞ்ஞானத் தீர்வுகளைத் தருவதில் அதிக விருப்பமுள்ளவர்.

 

ஒரு முறை கோப்பன்ஹேகனில் அவர் ஒரு புதிய கொள்கையை விவரித்தார். அதாவது ஒரு பெண்ணின் முகம் அழகாகத் தோன்ற அவளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையை அவர் கூட்டத்தினரின் முன் வைத்தார். அவர் இதைப் பற்றி விளக்கிப் பேசுகையில், “ஒரு பெண்ணை வெகு தூரத்திலிருந்து பார்ப்பதாக வைத்துக் கொள்வோம்; பார்ப்பவருக்கு ஒன்றுமே தெரியாது அல்லவா? அதே பெண்ணை மிக மிக அருகில் வைத்துப் பார்த்தால் வட்டமான முகம் மனிதக் கண்ணின் சிறிய அளவினால் சிதைந்து தோன்றும். சின்னச் சின்ன சுருக்கங்கள் கூட பெரிதாகத் தோற்றமளிக்கும். ஆகவே ஒரு பெண்ணின் முகத்தை அழகாகப் பார்க்க ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தான் நிற்க வேண்டும்.”

 

கூட்டத்தினர் ஆரவாரித்தனர். கூட்டத்தில் இருந்த கமாவ் (Gamow)

என்பவர், “பால், எவ்வளவு அருகிலிருந்து ஒரு பெண்ணை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

தன் இரு கைகளையும் இரண்டு அடி தூரத்தில் வைத்துக் கொண்ட பால், “இவ்வளவு அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்” என்றார்.

அனைவரும் சிரித்தனர்!

***

சூரிய ஆற்றலின் நன்மைகள்! (Post No.5356)

India’s solar energy train.

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 5-35 AM (British Summer Time)

 

Post No. 5356

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சூரிய ஆற்றலின் நன்மைகள்!

சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசைத் தவிர்க்க சூரிய ஆற்றல் பெரிதும் உதவியாக இருக்கும்.

படிம எரிபொருள் என்று கூறப்படும் ஃபாஸில் ஃப்யூயல்களைத் தவிர்த்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை முதலில் தவிர்க்கப்படும். கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தை நச்சு மண்டலம் ஆக்காமல் தடுப்பதையும் உலகம் வெப்பமயமாதலிலிருந்து தவிர்ப்பதையும் இந்த சூரிய ஆற்றல் செய்கிறது.

அமெரிக்காவில் இன்று நிறுவப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மட்டுமே ஆண்டுக்கு 168 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடைத் தவிர்க்கிறது என்றால் உலகெங்கும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்டால் எவ்வளவு நச்சு வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

Solar Energy station in Rajasthan

இதர அனைத்து உற்பத்தி முறைகளுக்கும் நீர் இன்றியமையாதது. ஆனால் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் போட்டோவொல்டைக் செல்களுக்கு  நீர் தேவையில்லை. ஆக அரிதான நீர் பெருமளவு சேகரிக்கப்படும். தெர்மல் பவர் நிலையங்களுக்கு அவற்றின் சாதனங்களைக் குளிர்விக்கவும் நீர் தேவை. ஆனால் சூரிய ஆற்றலின் உற்பத்திக்கோ இப்படிப்பட்ட நீரின் தேவை இருக்காது. சூரிய ஆற்றலின் மிகப் பெரும் ஆதாயம் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசே ஏற்படாது என்பது தான்!

 

அடுத்து சூரிய ஆற்றல் மறுசுழற்சிக்கு உள்ளாகக் கூடியது. உலகின் மிகப் பெரும் ஆற்றல் சக்தியாக இருப்பது சூரியன். 1,73,000 Terawattsஒரு லட்சத்து எழுபத்திமூன்றாயிரம் டெராவாட்ஸ் என்ற அளவிற்கு அது சூரிய ஆற்றலை ஒவ்வொரு விநாடியும் தருகிறது. இது உலகின் மொத்த தேவையான ஆற்றலைப் போல பத்தாயிரம் மடங்காகும்! அது மட்டுமல்ல, இந்த சூரிய ஆற்றலை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், ஆனால் படிம எரிபொருளை ஒரு முறையே பயன்படுத்த முடியும் , அதன் நச்சு விளைவுகளுடன் கூட!

 

சூரிய ஆற்றல் இன்னும் பல கோடி ஆண்டுகளுக்குக் குறையாது, அழியாது. ஆனால் பெட்ரோல், டீஸல் ஆகிய எரிபொருள்கள் இனி கிடைப்பது அரிதாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எடுத்து சுத்திகரிக்க ஆகும் செலவு கூடிக் கொண்டே போகிறது. ஆனால் இவற்றை ஒப்பிடும்போது சூரிய ஆற்றலின் செலவு மிக மிகக் குறைவானது என்பதும் ஒரு நல்ல செய்தி!

 

Solar energy is used by Indian Railways.

ஆக சூரிய ஆற்றலின் பயன்பாடு செலவைக் குறைக்கும்.பல கோடி ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும், சுற்றுப்புறச் சூழலின் மாசை அறவே தடுக்கும்.

***

 

ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்! (Post No.5353)

WRITTEN BY S NAGARAJAN

Date: 23 August 2018

 

Time uploaded in London – 5-39 AM (British Summer Time)

 

Post No. 5353

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் அலை வரிசையில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற எட்டாவது உரை.

 

தன்னார்வத் தொண்டைச் செய்யும் ஆச்சரியப்பட வைக்கும் சில  இளம் பெண்கள்!

 

சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதில் இன்றைய உலகில் இளம் பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இளம் மங்கையர்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயல்களைச் செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக சில இளம் பெண்களைப் பற்றிச் சொல்லலாம்.

 

கனடாவைச் சேர்ந்த பதினெட்டே வயதான ஆன் மகோசின்ஸ்கி (Ann Makosinski) என்ற இளம் பெண் இரண்டு புது விதக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். ஹாலோ ஃப்ளாஷ் லைட் (Hallow Flash light) என்ற இந்த விளக்கு உடலில் உள்ள வெப்பத்தால் எரியக்கூடிய ஒன்று. அவரது இன்னொரு கண்டுபிடிப்பு இ- ட் ரிங்க் (e-drink) என்பதாகும். இது ஐ- போனை சார்ஜ் செய்யும் ஒரு கோப்பையாகும். அதிலிருக்கும் பொருளின் அதிக வெப்பமானது மின்சாரமாக மாறும். இப்படி நாம் அறியாமல் நம்மைச் சுற்றியுள்ள ஆற்றலைப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதே இவரது பொழுது போக்கு. இவரது கண்டுபிடிப்புகளை கண்டு வியப்போர் இவரை ஆங்காங்கே அழைப்பதால் உலகெங்கும் சுற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் Times 30 Under 30 World Changers- அதாவது 30 வயதுக்குக் கீழேயுள்ள 30 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பிரபல டைம்ஸ் பத்திரிகை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

 

 

சிகாகோவைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஜெண்டயி ஜோன்ஸ் (Jendayi Jones) இளமையிலிருந்தே சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவர். மறு சுழற்சி, நல்ல உரங்களை உருவாக்கல், ஆற்றலைச் சேமிக்கும் பல்புகளின் பயன்பாடு, கழிவுகளைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட இவர் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கினார். இவரால் ஏராளமானோர் உத்வேகம் பெற்று சுற்றுப்புறச் சூழலைக் காப்பதில் இவருடன் இணைந்து தன்னார்வத் தொண்டைச் செய்து வருகின்றனர்.


இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்ணான பதினேழே வயதான தீபிகா குருப் (Deepika kurup) தனது கோடைக்கால பயணங்களில் ஆங்காங்கே குழந்தைகள் அழுக்கு நீரைக் குடிப்பதைக் கண்டு மனம் நொந்தார். உடனடியாக சூரிய சக்தியால் நீரை அசுத்தமாக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் ஒரு புது வழியைக் கண்டு பிடித்தார். இது ஏழைக் குழந்தைகளுக்கு சுத்த நீரைத் தரும் வரபிரசாதமான கண்டுபிடிப்பாக அமைந்து விட்டது.

 

இருபத்தேழே வயதான இளம் மங்கை ஷானா மஹாஜன் (Shauna Mahajan) சிறுவயதிலிருந்தே உலகம் எப்படி இயங்குகிறது என்று அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆகவே விஞ்ஞானத்தை தனது பாடமாக எடுத்துக் கொண்டு இயற்கையுடன் மனிதர்கள் பழகும் விதத்தை ஆராயலானார். பார்படோஸில் உள்ள பவழப் பாறைகளை ஆராய்ந்தார்.கென்யாவில் உள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்க்கை முறையையும் தெற்கு க்யூபெக்கில் விவசாயம் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார். தனது நீண்ட ஆய்வுகளின் முடிவில் இவர் கண்டுபிடித்தது இயற்கையுடன் மனிதன் நன்கு லயத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதைத் தான். இதன் மூலமாக சுற்றுப்புறச் சூழல் வெகுவாக மேம்படும் என்பதை பிரசாரம் செய்து வருகிறார்.

 

Shauna Mahajan

இவர்களைப் போல அனைத்துப் பெண்களும் முனைந்து நின்றால் பூலோகம் சொர்க்கமாகி விடும் இல்லையா?!

***

 

மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும் (Post No.5349)

WRITTEN BY S NAGARAJAN

Date: 22 August 2018

 

Time uploaded in London – 6-57 AM (British Summer Time)

 

Post No. 5349

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஏழாவது உரை

 

மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும்

 

ச.நாகராஜன்

 

ஒவ்வொருவரும் தான் வாழும் பகுதியில் உள்ள சமுதாயத்திற்கு இணங்கவும், தங்களது பொருளாதார வருமானத்திற்கு ஏற்றபடியும் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். சுற்றுப்புறத்தில் இருக்கும் இயற்கை ஆதார வளங்களைப் பயன்படுத்தி அவற்றைச் சேதப்படுத்தாமல் வாழ வேண்டும் என்ற அக்கறை நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது. வரவேற்கத்தக்க நல்ல ஒரு மாறுதல் இது.

நீடித்த வாழ்வைத் தமக்கும் தமது சந்ததியினருக்கும் வழங்கும் இந்த வாழ்க்கைமுறையில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்

 

மூன்று ஆர் கொள்கைகள் (3 R’s Principle – Reduce, Reuse, Recycle) எனப்படும் குறை, திருப்பிப் பயன்படுத்து, மறு சுழற்சி செய் என்ற மூன்று கொள்கைகள் பிரதானமானவை.

 

வாழ்கின்ற இடத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த மூன்று ஆர் கொள்கை முக்கியமானது.

 

இயற்கை ஆதாரங்களைப் பயன்படுத்துவதில் நமது தேவைகளை எவ்வளவு குறைந்த பட்ச தேவையோ அதற்குத் தக அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வாழ்வில் பல பொருள்கள், தயாரிப்புகள் திரும்பப் பயன்படுத்துவதற்கு உகந்தவை. மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடிபவை. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் மறுசுழற்சி செய்வதன் மூலமும் சுற்றுப்புறச் சூழல் மேம்படும்.

இன்னொரு அற்புதமான நடைமுறை நகரத்தில் பயிரிடுதல் (Urban Farming) என்பதாகும். மெட்ரோ நகரங்கள் எனப்படும் பெரு நகர்களில் இது இப்போது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தங்கள் வீட்டு மாடிகளில் தோட்டத்தை அமைப்பது, சிறு குழுவாகச் சேர்ந்து சமுதாய அளவில் ஒரு பண்ணையை அமைத்துப் பயிரிடுவது ஆகியவை வரவேற்கத்தக்க இன்றைய நவீன வாழ்க்கைமுறையாக மாறி வருகிறது. இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவையாக அமைகின்றன. இப்படி வீட்டு மாடிகளில் தோட்டங்களை அமைப்பதானது விளைநிலங்களின் தேவையை கிராமப்புறத்தில் குறைக்கவும் செய்கிறது.

 

மும்பை போன்ற பெரு நகரங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் மாடித் தோட்டங்களில் கறிகாய்களைப் பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்வது சுவையான ஒரு செய்தியாகும். இதனால் உத்வேகம் பெறும் இதர பெரு நகர சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு ஆர்வலர்கள் தாங்களும் வீட்டுத் தோட்டங்களை அமைக்கத் துவங்கி விட்டனர். இவற்றில் பல அரிய வகை மூலிகைகளும் வளர்க்கப்படுகின்றன. இதில் கிடைத்த வெற்றியால் இவர்கள் இதைப் பற்றிய கருத்தரங்கத்தையும், பயிற்சி முகாமையும் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதைப் பற்றி நன்கு அறிந்து நமது பகுதியில் நாமும் நகரில் பயிரிடுதல் என்னும் நல்ல திட்டத்தை ஆரம்பிக்கலாமே!

***

அபாயகரமான ஆயுதங்கள் – 2 (Post No.5318)

Picture of Invisible Cloak

Written by S Nagarajan

Date: 14 August 2018

 

Time uploaded in London – 7-55 AM  (British Summer Time)

 

Post No. 5318

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

17-8-2018 தேதியிட்டபாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திநான்காம்) கட்டுரை

விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 2

ச.நாகராஜன்

மனித குலத்தைப் பதைபதைக்க வைக்கும் ஆயுதங்களின் பட்டியலுக்கு முடிவே இல்லை. இன்னும் சில தயாரிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

மனத்தை பேதலிக்க வைக்கும் BZ குண்டு 

மனிதர்களைக் காயப்படுத்துவது தான் ஆயுதம் என்பதில்லை. மனதைப் பேதலிக்க வைக்கும் ஆயுதங்களும் உண்டு. இப்படிப்பட்ட ஒன்றை ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சி ஐ ஏ கண்டுபிடித்தது. இதன் பெயர் BZ குண்டு. இது ஹாலுசினோஜென் 3 என்ற மனதை பேதலிக்கும் பொருளாலானது. இதைச் சோதித்து பார்த்த ஒரு ராணுவ வீரர் பயங்கரமான கனவுகள் வருவதாகத் தெரிவித்தார். தாங்க முடியாத தலைவலியும் ஓய்வற்ற தன்மையும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த பி இஸட் குண்டு தயாரிக்கப்படவில்லை. ஏனெனில் இதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

 

ஐஸ்பெர்க் ஏந்தும் விமானம்

இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பிரிட்டன், ஐஸின் குளிர் தன்மையைக் கொலைகார ஆயுதமாக மாற்ற நினைத்தது. பிரம்மாண்டமான ஐஸ்கட்டியை – பனிப்பாறையை ஏந்திச் செல்லும் விமான வடிவமைப்பை ப்ராஜக்ட் ஹபாக்குக் (Project Habakkuk) என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தது. பனிப்பாறையை மரத்தூளுடன் கலந்து உடைக்கமுடியாதபடி ஆக்கி விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. வின்ஸ்டன் சர்ச்சில் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தார். ஆனால் அவ்வளவு பெரிய விமானத்தை உருவாக்குவது என்பது எளிதாக இல்லை. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டத்தில் முனைப்பாக இருந்த கனடிய விஞ்ஞானி சார்லஸ் ஃப்ரெடெரிக் குடேவ் பின்னால் இதை வெளிப்படுத்தினார்.

 

பிக் பாபிலோன்

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் தனது கண்டுபிடிப்பான பிரம்மாண்டமான ராட்சஸ துப்பாக்கி பற்றித் தெரிவித்தார். அந்த சூப்பர் கன் 512 அடி நீளமுடையது. அதன் பெயர் பிக் பாபிலோன். ஏனெனில் அதை விண்வெளியிலிருந்து பாபிலோனைப் பார்க்க முடிவது போலப் பார்க்க முடிவதால் அதற்கு அந்தப் பெயர் தரப்பட்டது. ஆனால் இதன் தயாரிப்பில் பிரிட்டன் அவ்வளவாக ஆர்வம் காட்டாததால் இதன் வடிவமைப்பாளரான கனடாவைச் சேர்ந்த ஜெரால்ட் புல் இதை இரானின் சர்வாதிகாரியான சதாம் ஹுசைனுக்குத் தர முன் வந்தார். 1988இல் ‘மாதிரி சூப்பர் கன் உருவாக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு பிரம்மாண்ட ஆயுதத்தை யுத்த களத்தில் நகர்த்திக் கொண்டு செல்வது கடினம் என்பதால் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை.

 

பார்க்க முடியாத மேலாடை

2016இல் ராணுவம் உபயோகிக்கத்தக்க யாருமே பார்க்க முடியாத சீருடையைத் தயாரிக்க முடியுமா என்று அமெரிக்கா ஆராய ஆரம்பித்தது. மலைகள், சமவெளிப்பகுதிகள் போல அனைத்துப் பகுதிகளிலும் இதை ராணுவத்தினர் அணியும் போது அதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்க வேண்டும்! 2006இல் ஒளியை வளைத்து இப்படி ஒரு வடிவமைப்புடன் கூடிய மேலாடையை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். இதை உருவாக்க முயலும் பொருள்களுக்கு மெடாமெடிரீயல் (metamaterials) என்று பெயர். 2015இல் ஒரு விஞ்ஞானி மிக மிக மெலிதான செராமிக் பொருள் வெவ்வேறு அலைநீளங்களில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது என்றார். ஆனால் இப்படிப்பட்ட மாயாஜால உடை இப்போதே புழக்கத்தில் இருக்கிறது. அணு ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை ஏந்திச் செல்லும் பி 2 விமானங்களில் உள்ளோர் அணியும் ஆடையில் மேலே ஒரு பூச்சு பூச்சப்படுகிறது. இதனால் அவர்கள் ஆடை கண்ணுக்குத் தெரியாது. அதாவது அதை அணிந்தோர் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்.

 

வலி கொடுக்கும் கதிர்கள்

அமெரிக்க ராணுவத்தின் அதிரடித் தயாரிப்புகளில் ஒன்று ‘ஆக்டிவ் டினையல் சிஸ்டம் என்னும் ஆயுதம். அதாவது வலி கொடுக்கும் கதிர்கள் என்று இதற்கு அர்த்தம். இதை பிரயோகப்படுத்தினால், இது மனிதர்களின் மீது பாய்ந்து அவர்களின் உடல் வெப்பத்தை அதிகரித்து தாங்க முடியாத வலியைத் தரும். சந்தேகத்திற்கு இடமாக ராணுவ முகாம்கள், தளங்களில் நடமாடும் ஒற்றர்களைக் கொல்லாமல் அவர்களை வலியினால் துடிதுடிக்க வைத்து விரட்டி விடுவதே இதன் நோக்கம். லாஸ் ஏஞ்சலிஸில் இது கைதிகள் தப்பி ஓடி விடாதபடி செய்யப் பயன்படுத்த முடியுமா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டதாம். தேவையற்ற கிளர்ச்சியாளர்களையும் இது விரட்டிவிடும்.

 

பக்கிள் கன்

உலகின் முதல் அபாயகரமான ஆயுதத்தை 1718இல் ஜேம்ஸ் பக்கிள் என்பவர் கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த துப்பாக்கி குண்டுகள் நாம் இன்று காண்பது போல வட்டமாக இருக்காது. மாறாக சதுரமாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு ஒன்பது குண்டுகள் பாயும். சதுர குண்டுகள் அதிகமான வலியைத் தரும் என்பதால் இதை இப்படி உருவாக்கினார் பக்கிள். இது தான் உலகின் முதல் மெஷின் கன். ஆனால் இதைச் சுடுவது நம்பகத்தன்மை இல்லாததாக இருந்ததால் இது புழக்கத்திற்கு வரவே இல்லை.

ஆக இப்படி நூற்றுக் கணக்கில் அபாயகரமான ஆயுதங்கள் உலகில் தயாரிக்கப்பட்டன; தயாரிக்கப்படுகின்றன.

இரகசியமாக இவை இருப்பதால் நமக்கு எத்தனை ஆயுதங்கள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பது தெரியாது. அவை என்ன செய்யும் என்பது தெரியாது. பலவிதமாக நமக்குத் தெரிந்தவற்றுள் சிலவற்றைத் தான் மேலே பார்த்தோம்.இன்னும் கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி சரிவரத் தெரியவில்லை. இந்த இரசாயன ஆயுதங்கள் நச்சைப் பாய்ச்சும் ஆயுதங்கள் என்பதால் நினைக்கவே பதைபதைக்க வைக்கும்.

உலகை இப்படிப்பட்ட ஆயுதங்களிலிருந்து காப்பாற்ற மனிதரின் மனதில் தான் மாற்றம் வரவேண்டும். அதுவரை நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

 

இன்று வாழ்ந்து  கொண்டிருக்கும் கணினி விஞ்ஞானிகளில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்க விஞ்ஞானியான டொனால்ட் க்னுத்.(Donald Knuth பிறப்பு 10-1-1938). சிறந்த கணிதமேதையான அவர் தனது முதல் விஞ்ஞான கட்டுரையை பள்ளி பத்திரிகை ஒன்றில் 1957இல் எழுதினார். கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் பற்றிய அவரது மிகப் பிரபலமான புத்தகம் ‘தி ஆர்ட் ஆஃப் கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங் (The Art of Computer Programming) என்பதாகும். ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் கூட இதில் இருக்கும் விஷயங்கள் இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பது வியப்பை அளிப்பதாகும். அதுவே இதன் சிறப்பு.

ப்ரொக்ராமிங் பற்றி அறிய விரும்புவோர் தவறாது நாடுவது இந்தப் பல பாகங்கள் கொண்ட நூலையே!

மனிதர் மிகவும் நகைச்சுவையாளர். தனது புத்தகத்தில் தவறைக் கண்டுபிடிப்போருக்கு ‘கண்டுபிடிப்பு பரிசு ஒன்றை அவர் அறிவித்தார். அதன் படி ஒரு தவறைக் கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டினால் அப்படிக் காட்டியவருகு இரண்டு டாலர் 56 சென்டை பரிசாக அளித்தார். இவரது செக்கைப் பெறுவது ஒரு பெறுதற்கரிய ஒரு பெரிய விருதாக கம்ப்யூட்டர் உலகில் கருதப்படுகிறது.

இவரது புகழ் பெற்ற மேற்கோள் வாசகம் ஒன்று இவரது மேதைத்தன்மையைப் புலப்படுத்துகிறது. “ஒரு உணவு விடுதிக்குச் சென்று அங்கு உணவு வகைகளை என்னால் ஆர்டர் செய்ய முடியாது. ஏனெனில் மெனுவில் உள்ள எழுத்து வடிவங்களைத் தான் நான் பார்க்கிறேன். ஐந்து நிமிடம் கழித்துத் தான் அது ஒரு உணவு வகையைப் பற்றியும் கூறுகிறது என்பதை நான் உணர்கிறேன். (I can’t go to a restaurant and order food because I keep looking at the fonts on the menu. Five minutes later I realize that it is also talking about food.”)

***

 

 

நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்! (Post No.5312)

Written by S Nagarajan

Date: 12 August 2018

 

Time uploaded in London – 6-28 AM  (British Summer Time)

 

Post No. 5312

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

திருநெல்வேலியிலிருந்து ஆர் சி ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் ஆரோக்கிய தமிழ் மாத இதழ் ஹெல்த்கேர். இதில் ஆகஸ்ட் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்!

ச.நாகராஜன்

 

நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு கார்போஹைட்ரேட் இன்றியமையாதது. அது இனிப்பு, ஸ்டார்ச், ஃபைபர் ஆகிய மூன்றை உடலுக்கு வழங்குகிறது.

கார்போஹைட்ரேட்டை கடந்த பல ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் தவறான தகவல்களைத் தந்து நிந்திக்கிறார்கள்.

டயபடீஸை தரும் வில்லனாக அது சித்தரிக்கப்படுகிறது.

தேவைக்கு அதிகமாக அதை உண்டால் அது வில்லன் தான். இன்றைய நவீன உணவுப் பழக்கங்கள் கார்போஹைட்ரேட்டை அதிகமாக உடலில் சேர்க்கிறது என்பதும் உண்மை தான். ஆகவே அளவோடு அதைச் சேர்த்தால் வளமோடு வாழலாம்.

கார்போஹைட்ரேட் தரும் மூன்று சக்திகளைப் பார்க்கலாம்:-

இனிப்பு : இயற்கையாகக் கிடைக்கும் இனிப்பு உடலுக்கு மிகவும் நல்லது. கரும்பிலிருந்து கிடைக்கும் இனிப்பு ஆற்றலைத் தரும். பால், பழங்களிலும் இனிப்பு உண்டு. இது உடலில் எளிதில் ஜீரணமாகக்கூடியது. அளவோடு இனிப்பைச் சேர்க்க வேண்டும்.

 

ஸ்டார்ச் : மாவு, ரொட்டி, உருளைக்கிழங்கு, கிழங்கு வகைகள், அரிசி, பீன்ஸ் உள்ளிட்டவற்ற்றில் ஸ்டார்ச் கிடைக்கிறது. உடலுக்கு சக்தியைத் தரும் முக்கியமான ஒன்று ஸ்டார்ச். நீண்டகாலம் நிலைத்திருக்கும் சக்தியையும், உடல் வலிமையையும் ஸ்டார்ச் தருகிறது. உடலில் ஸ்டார்ச் மெதுவாகத் தான் ஜீரணிக்கப்படும். ஜீரணிக்கப்பட்டவுடன் இது க்ளுகோஸ் என்று அழைக்கப்படும் இனிப்பாக மாறுகிறது. அரிசியில் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆனால் கார்போஹைட் ரேட் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. அரிசியில் புரோட்டின் குறைவு; பருப்பு வகைகள் தரும் நன்மையும் இதில் குறைவாகத் தான் கிடைக்கும். ஃபைபர், தாதுக்கள், விடமின் பி இதில் உள்ளது.

ஃபைபர் : பழங்கள், பருப்பு வகைகள், கறிகாய்கள் ஆகியவற்றிலிருந்து கிடைப்பது ஃபைபர். மிருகங்கள் ஃபைபரை எளிதில் ஜீரணித்து விடும். ஆனால் மனிதர்களோ ஃபைபரை எளிதில் ஜீரணிக்க முடியாது. ஆனால் உடலின் சக்திக்காக இதை நாம் சேர்த்துத் தான் ஆக வேண்டும். இது தேவையற்றவற்றைக் கழிவாக உடலிலிருந்து வெளியேற்றுவதால் இன்றியமையாததாக ஆகிறது.

கிழே உள்ள அட்டவணையில் வெவ்வேறு உணவு வகைகளில் உள்ள கார்போஹைட்ரேட் அளவைக் காணலாம்.

 

கார்போஹைட்ரேட் அளவு

நூறு கிராமில் உள்ள இனிப்பு மற்றும் ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் அளவை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

உணவு (100 கிராமில்)    இனிப்பு (கிராம்)   (ஸ்டார்ச் கிராம்)

வாழைப்பழம்               16                9

சாக்லேட்                  43               24

சோளம்                     7               78

தேன்                      76                0

ஐஸ்கிரீம்                  19                1

மாமிசம்                    0                0

பால்                       4                 0

ஆரஞ்சு                    26                0

உருளைக்கிழங்கு (வெந்தது)  1                17

அரிசி                       –                31

ஜீனி                      100                 0

தக்காளி கெட்ச்-அப்         23                 1

ஒய்ட் ப்ரட்                  3                46

கார்போஹைட்ரேட் தரும் நன்மைகளைக் கீழே காணலாம்:

மனநிலையைச் சீராக்குகிறது :-

பசி அதிகமாக இருக்கும் போது எரிச்சல் எரிச்சலாக வருகிறது, இல்லையா?காரணம் என்ன? உடலுக்கு கார்போஹைட்ரேட் தேவைப்படுவதால் தான்! இரத்தத்தில் இனிப்பு அளவு குறையும் போதும் எரிச்சல் வரும். மூட்  – மனநிலை மாறும். குறைந்த கார்போஹைட்ரேட் மனச்சோர்வைத் தரும். கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொண்டவுடன் மனநிலை சீராகும்.

எடை கூடுதலைத் தவிர்க்கும்:-

ஃபைபர் மிக மெதுவாகவே ஜீரணிக்கப்படும். ஆகவே பைபர் வகை உணவுகளைச் சாப்பிடுவோர் சீரான உடல் எடையைக் கொண்டிருப்பர். சிலரது எடை குறையக் கூடச் செய்யும்.

இதய ஆரோக்கியம் மேம்படும்: –

கார்போஹைட்ரேட் இதயத்தை மேம்படுத்தும் அல்லது மோசமாக்கும். எந்த வித கார்போஹைட்ரேட் உணவை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. சோடாவில் இருக்கும் கார்போஹைட்ரேட் மோசமான விளைவைத் தரும். ஓட்ஸோ வலிமையைத் தரும்.

மூளை ஆற்றலைக் கூட்டுவிக்கும் :-

கார்போஹைட் மனத்தின் ஆற்றலைக் கூர்மையாக்கும். குறைந்த கார்போஹைட் உணவு மூளை ஆற்றலை மேம்படுத்தும்.

கான்ஸர் அபாயம் குறையும் :-

சரியான கார்போஹைட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கான்ஸர் வரும் அபாயம் குறையும். கார்போஹைட்ரேட் என்றவுடன் உருளைக்கிழங்கை மட்டுமே அனைவரும் நினைப்பர். ஆனால் வெங்காயம், தக்காளி போன்ற நூற்றுக்கணக்கான கறிகாய்களில் நல்ல கார்போஹைட்ரேட் உள்ளது. அது கான்ஸர் அபாயத்தைத் தடுக்கும். ஆன்டி ஆக்ஸிடெண்ட் இவற்றில் இருப்பதால் நன்மை ஏற்படும். ஃபைபரை அதிகம் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அபாயமும் நீங்கும்.

நல்ல உறக்கம் வரும் :-

மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட் உணவு வகைகள் மன நிலையைச் சீராக்கும். நல்ல ஓய்வைத் தரும். அருமையான தூக்கத்தைத் தரும்.

ஜீரணம் நன்கு ஆவதால் ஆரோக்கியம் மேம்படும் :-

ஃபைபர் உணவு வகைகள் குடலின் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும். கழிவுகளை உடலில் எங்கும் தேங்க விடாது உடனடியாக அப்புறப்படுத்தும். மலச்சிக்கல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும், கோலன் கான்ஸரை ஏற்படவிடாமல் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

 

Metabolism எனப்படும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் :-

பசி எடுக்காமல் இருக்கும் போது உடல் நன்கு இயங்கும். கார்போஹட்ரேட் சரியான தைராட்ய்ட் ஹார்மோனுக்கு உதவியாக இருக்கும். உடல் முழுவதிலுமான மெடபாலிஸத்தைச் சீராக இருக்க வைக்கும்.

 

விளையாட்டில் மேம்பட்ட செயல்திறன் வரும் :-

கார்போஹைட்ரேட் விளையாட்டில் ஈடுபடுவோருக்கு அதிக செயல்திறனைத் தரும். ஏனெனில் விளையாட்டின் போது உடலின் அதிக பட்ச ஆற்றலைக் காண்பிக்க வேண்டியிருப்பதால் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. கொழுப்பு  சக்தி உதவும் என்றாலும் கூட கார்போஹைட்ரேட் தரும் சக்தி கொழுப்பு தருவதை விஞ்சும்.

 

சக்தியை அதிக அளவில் தரும் :

கார்போஹைட்ரேட், ‘எனர்ஜி கரன்ஸி எனப்படும் ஏடிபி ATP-யைத் தரும் க்ளூகோஸை உற்பத்தி செய்வதால் உடலின் சக்தி மேம்படும். சோம்பேறித்தனமாக இருப்பதாகத் தோன்றினால் தரமான கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பு தேடி வரும்.

 

தசை பொருள்திணிவை மேம்படுத்தும்

Muscle Mass என்பது க்ளைகோஜன் உள்ள தரமான புரோட்டினை உட்கொள்வதால் வரும். ஆக இதற்கும் கார்போஹைட்ரேட்

 இன்றியமையாததாக ஆகிறது.

 

ஆயுளை நீட்டிக்கும் :-  இரண்டு அனபாலிக் ஹார்மோன்களை கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவு வகைகள் ஊக்குவிக்கின்றன. இன்சுலின் மற்றும் இன்சுலின் லைக் க்ரோத் ஃபேக்டர் எனப்படும் IGF-1 ஆகிய இரண்டை கார்போஹைட்ரேட்

 ஊக்குவிப்பதால் செல்களின் ஆயுள் நீடிக்கிறது.

 

திருப்தியைத் தரும் :-

செரோடோனினின் இயக்கங்களாலும் கேஸ்ட்ரிக் என்ஜைம்களாலும் கார்போஹைட்ரேட் உணவு வகைகள் உங்களுக்கு நல்ல உணவை உண்ட திருப்தியை ஏற்படுத்தும்.

 

ஆகவே கார்போஹைட்ரேட் உணவுவகைகளைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அதை நமது உடல் ஆற்றலையும் ஆயுளை யும் கூட்டுவதற்காக முறையாப் பயன்படுத்திக் கொண்டால் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழலாம்!

***

 

 

சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 2 (Post No.5305)

Plastic Pollution in Delhi, Deccan Herald picture

Date: 10 August 2018

Written by S Nagarajan

Time uploaded in London – 6-19 AM  (British Summer Time)

 

Post No. 5305

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை

 

சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 2

 

அலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.

புதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளால் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.

அலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.

மறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வாழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.

மாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.

பேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.

Rubbish Pollution in Mumbai, Deccan Herald newspaper picture

பயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.

***

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! (Post No.5300)

Written by London swaminathan

Date: 8 August 2018

 

Time uploaded in London – 11-48 AM (British Summer Time)

 

Post No. 5300

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் 
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க 

திரைப்படம்: எங்க ஊர் ராஜா 
இயற்றியவர்: கவிஞர் கண்தாசன் 

 

குருட்டுக் கவிஞர் மில்டனும் செவிட்டு அறிஞர் எடிசனும் சமாளித்த விதம்!

 

உலகப் புகழ்பெற்ற கவிஞர்களில் பலர் கண்பார்வையற்றவர்கள். உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் அருமையான கவிகளைப் பொழிந்தவர் தீர்க்கதமஸ் (நீண்ட இருள்). கண்பார்வையற்றதால் ஏற்பட்ட காரணப் பெயர் இது. கிரேக்க மொழியில் முதல் காவியத்தை இயற்றிய ஹோமரும் அந்தகரே. ஆங்கில மொழியில் புகழ்பெற்ற பாரடைஸ் லாஸ்ட் காவியத்தை உருவாக்கிய மில்டனும் கண்பார்வை இழந்தவரே. தமிழ் கூறு நல்லுலகில் அந்தகக் கவி வீர ராகவ முதலியார், இரட்டைப் புலவரில் ஒருவர் இப்படிப் பலர் அந்தகர்களே! கிருஷ்ண பக்தர் சூர்தாஸும் அந்தகரே! கண்ணில்லை; ஆனால் புகழ் கொடி கட்டிப் பறந்தனர்.

 

 

மில்டனை குருட்டுக் கவிஞர் என்று அவருடைய இலக்கிய எதிரிகள் குறைகூறினர். அதற்கு மில்டன் அளித்த பதில் மிகவும் உருக்கமானது:

மில்டன் சொன்னார்

“உங்களுடைய குருட்டுத் தன்மையை விட என் குருட்டுத்தனம் எவ்வளவோ மேலானது. எனக்கு கண்கள் மட்டுமே குருடு; உங்களுக்கோ எல்லா புலன்களுக்கும் அடியில் ஆழமாகச் சென்று உங்கள் மனதையும் குருட்டாக்கி விட்டது. இதனால் உருப்படியான விஷயங்களை உங்களால் காண  முடியாது;  நான் ஒரு பொருளின் வர்ணத்தையும் உருவத்தையும்தான் காண முடியாது. ஆனால் அவைகளின் உண்மைப் பொருளையும் நிலைத்த தன்மையையும் ஊடுருவிப்பார்க்க முடியும். அது கிடக்கட்டும்.

 

நான் பார்க்காத பொருள்கள் எவ்வளவு; நான் வருத்தப் படாமல் பார்க்கும் பொருள்கள்தான் எவ்வளவு? அப்படி வருந்தாமல் பார்க்கக்கூடிய, விட்டுப் போன பொருள்கள் குறைவே;

 

தீய மனிதர்களே! என்னைப் பார்த்து கேலியா செய்கிறீர்கள்? மனிதர்கள் ஏற்படுத்தக்கூடிய காயங்களில் இருந்து அந்தகர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. சொல்லப்போனால் நாங்கள் (தீயவைகளைப் பார்க்காததால்) புனிதர்கள் ஆக்கப்பட்டுவிட்டோம்”

 

(இது ஒரு நல்ல பாடம்; நாமதிகமான தீமைகளையும் தீய செயல்களைச் செய்வோரையுமே காண்கிறோம்; அவர்களைக் காணாததும் அது பற்றி சிந்திக்காததும் அந்தகர்களை ரிஷி முனிவர் போல ஆக்கி விடுகிறது!

 

மில்டன் யார்?

ஆங்கில மொழியில் தலை சிறந்த புலவர்களில் ஒருவர். ஹோமர், வர்ஜில் போல காலத்தால் அழியாத காவிய த் தைப் படைக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாளைய அவா; அதன் காரணமாக PARADISE LOST சொர்க்க இழப்பு, சொர்க மீட்சி PARADISE REGAINED என்ற இரண்டு காவியங்களைப் படைத்தார்.

 

பிறந்த ஆண்டு 9-12- 1608

 

 

இறந்த ஆண்டு 8-11-1674

 

இறக்கும்போது வயது- 65

 

கல்லூரியில் படிக்கும்போது கவிதை யாத்தார். 29 வயதில் அவர் எழுதிய லிஸிடாஸ் LYCIDAS  என்ற கவிதை மிகச் சிறந்த கவிதை ஆகும்.

 

இங்கிலாந்தில் உளநாட்டுப் போர் ஆரம்பமானது.

 

ஆலிவர் க்ராம்வெல் OLIVER CROMWELL என்பவர், முடியாட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, அவருக்கு ஆதரவாக அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் முனைப்பு காட்டினார். பின்னர் முடியாட்சி மீண்டும் ஏற்பட்டது. இதற்குள் அவர் முழுக் குருடு ஆகிவிட்டார். அவர் பிறவிக்குருடர் அல்ல.

 

பாரடைஸ் லாஸ்ட் என்பதை எழுத இவர் மனைவியும் மகளகளும் உதவினர். மில்டன் சொல்லச் சொல்ல அவர்கள் எழுதினர். 55 வயதில் அது வெளிவந்தது. சாத்தானை சொர்க்கத்தில் இருந்து பூமிக்குத் தள்ளியப்போது அது எப்படி ஆதாமையும் ஏவாளையும் மனதளவில் கெடுத்தது என்பதே சொர்க்க இழப்பு கதையின் சாரம். இது வெளியானவுடன் இவர் புகழ் உச்சாணிக் கொம்புக்கு ஏறியது!

 

xxxx

 

செவிடாக இருப்பதே மேல்!

தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்காவின் புகழ் பெற்ற விஞ்ஞானி; கண்டு பிடிப்பாளர். ஆயிரத்துக்கும் மேலான பொருள்களுக்கு அமெரிக்காவில் பேடன்ட் வாங்கி வைத்தவர். பல்பு முதலிய பலபொருட்களைக் கண்டுபிடித்தவர்.

அவர் வாழ்ந்த காலம்-

11-2-1847   to

18-10- 1931

 

தாமஸ் ஆல்வா எடிசனுக்குக் காது கேட்காது. ஆனால் அவர் காதில் கோளாறு இல்லை; மனதிலேயே கோளாறு என்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நண்பர்கள் ஒரு டாக்டரை அழைத்து வந்தனர். அவர் பெரிய சிகிச்சை திட்டம் ஒன்றை வகுத்து  எடிசனிடம் காட்டினார். நீங்கள் ஒப்புக் கொண்டால் நாங்கள் உடனே தயார் என்றார்.

 

எடிஸன் சொன்னார்

“இதோ பாருங்கள்; உங்கள் திட்டம் கட்டாயம் வெற்றி பெறும்; எனக்கு ஐயப்பாடே இல்லை. நான் என்ன என்ன வெல்லாம் கேட்க வேண்டி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அவற்றில் எவை எவை கேட்கத்  தகாதவை என்பதையும் சிந்தியுங்கள். கொஞ்சம் காது கேளாமை இருப்பது நல்லதே. நானே எவை எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ அவைகளை மட்டுமே கேட்கிறேன். என்னை இப்படியே விட்டு விடுங்கள்” நீங்கள் எந்த அளவுக்கு காது  கேட்க முடியாதவர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது எவ்வளவு நல்லது!

–சுபம்–

விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1 (Post No.5298)

Written by S NAGARAJAN

Date: 8 August 2018

 

Time uploaded in London – 7-28 AM  (British Summer Time)

 

Post No. 5298

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பாக்யா 10-8-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திமூன்றாம்) கட்டுரை

விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1

ச.நாகராஜன்

 

மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சண்டை சச்சரவுகளும்   தோன்றி விட்டன. மண்ணாசை, பெண்ணாசை, அதிகார ஆசை, தான் சரி என்பதை அடுத்தவர்கள் மீது திணிக்கும் ஆசை என்று இப்படிப் பல காரணங்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வழி வகுத்ததோடு பெரிய போர்களுக்கும் காரணமாக ஆகி விட்டன.

கற்களை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, கடைசியில் அணுகுண்டைப் போடுவது வரை சண்டைகளில் பயன்படுத்தப்பட்ட பயங்கரமான ஆயுதங்களை உலக வரலாறு பார்த்து விட்டது.

வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில் பல வித பயங்கரமான  ஆயுதங்களை உருவாக்க பல நாடுகளும் முயன்றன; முயல்கின்றன! இது பற்றி சாமான்யர்கள் யாருக்கும் தெரியாது. ரகசியமான இந்த ஆயுதங்கள் அபாயகரமானவை. இவை பற்றி அறிந்தால் குலை பதறும். எந்தெந்த மாதிரியான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன, உருவாக்கப்படுகின்றன என்பதை அறிய ஒரு சிறிய பட்டியலை மாதிரிக்காகப் பார்க்கலாம்:

ரொபாட் நாய்

 யுத்தங்களில்  குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க நாய்களின் மோப்ப சக்தி உதவும் என்பதால் அவை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் போஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் ‘பிக் டாக்’ என்ற ஒரு சாதனத்தைத் தயார் செய்தது. சாதாரணமாக மனிதர்கள் ஏற கஷ்டப்பட்டும் கரடுமுரடான பாதைகள், மலைப் பகுதிகள் ஆகியவற்றில் இந்த ரொபாட் நாய் அனாயாசமாக பெரிய பாரத்தை முதுகில் சுமந்து கொண்டு வேகமாக ஏறும். இது இப்போது ஆப்கானிஸ்தானத்தில் சோதனை செய்யப்படுகிறது. தேனீக்களின் ரீங்காரத் தொனியோடு குலுக்கல் நடையோடு இந்த சடைநாய் மெதுவாக முன்னேறும். 109 கிலோகிராம் எடையை இது சுமக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 45 கிலோகிராம் எடையை தூக்கிச் சென்றது.ஆகவே ராணுவ வீரர்கள் இந்த அளவு எடையைத் தூக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இது போடும் சப்தம் ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இதை மேம்படுத்துவதற்கான சோதனைகள் தொடர்கின்றன.

கண்ணைக் குருடாக்கும் துப்பாக்கி

இந்தத் துப்பாக்கி ஆளைக் கொல்லாது. இது கண்களைக் குறி வைக்கும். இதன் லேஸர்கள் ஒரு ஆளின் கண்களைச் சிறிது நேரத்திற்குக் குருடாக்கும். கிரிமினல்களைச் செயலிழக்க வைத்து கைது செய்ய இது பயன்படும். போரிலும் எதிரிகளைத் தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய இது பயன்படும். ஆனால் 1995ஆம் ஆண்டில் ஐநா கண்களைக் குருடாக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தத்தின் படி அறிவித்திருக்கிறது. இதன் முழுப் பெயர் PHASR. (Personal halting and stimulation response rifle) என்பதாகும்.

புறாக் குண்டுகள்

ப்ராஜக்ட் பீஜன் என்ற இந்த திட்டம் 1944இல் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டது. பின்னர் மீண்டு 1948இல் ப்ராஜக்ட் ஆர்கான் என்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போது மின்னணு சாதனங்கள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் புதிய அளவில் புறாக் குண்டுகள் என்ற இந்த பயங்கரமான திட்டம் உருவாகி விட்டது. இதன்படி புறாக்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்படும். ஒரு திரையின் எதிரில் புறாக்கள் உட்கார்த்தி வைக்கப்படும். அந்தத் திரையில் குண்டு போட வேண்டிய இடம் நன்கு காண்பிக்கப்படும். பின்னர் புறாக்கள் குண்டுடன் பறக்க விடப்படும். தான் திரையில் பார்த்த இடத்தை அடைந்தவுடன் அதைக் கண்டு கொள்ளும் புறாக்கள் குண்டை அங்கு போடும். விளைவு தெரிந்தது தானே!

சோவியத்தின் ‘தாக்கும் டால்பின்கள்’

மிருகங்களைப் போரில் ஈடுபடுத்துவதில் சோவியத் யூனியனும் சளைக்கவில்லை. போர் புரியும் டால்பின்களை அது பயிற்சிக்குத் தயாராக்கியது. இந்தத் திட்டத்த்தை அது ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் ஆரம்பித்தது. நீரில் மூழ்கி போர் புரியும் திட்டம் இது. இதே போல இந்த உத்தியை அமெரிக்காவும் ஆராய ஆரம்பித்தது. ஆனால் இவற்றை குண்டு ஏந்திக் கொண்டு செல்ல பயிற்றுவிக்க முடியாது. ஏனெனில் டால்பின்களுக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்பதை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது.

கோழி அணுகுண்டுகள்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஒரு புது ஆயுதம் உருவாக்கப்பட்டது. 8 டன் எடை கொண்ட இந்த அணு ஆயுதத்தின் பெயர் ‘ப்ளூ பீகாக்’ – நீல மயில் என்பதாகும். பிரிட்டனின் திட்டத்தின் படி, ஜெர்மனியில் இது புதைத்து வைக்கப்படும். சோவியத் கிழக்கிலிருந்து படையெடுத்து வந்தால் இது பயன்படுத்தப்படும். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருந்தது. குளிர்காலம் என்பது மிக மிகக் கடுங்குளிரை உருவாக்குவதால் சுரங்கக் குண்டுகள் வெடிக்கவே வெடிக்காது. ஆகவே கோழிகளை இந்த குண்டுகளுக்கு வெப்பமூட்டத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு கூண்டில் கோழிக்கான ஒரு வாரத் தீனி போடப்படும். உணவு, நீர் ஆகியவற்றுடன் கோழிக் குண்டுகள் இருப்பதால் சுரங்கக் குண்டுகள் ஒரு வாரம் வரை நன்கு செயல்படும். ஆனால் இந்தத் திட்டம் அணு ஆயுதத்தின் எதிர் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் கைவிடப்பட்டது..

 

 

அடுத்து இன்னும் சில பயங்கர ஆயுதங்களைப் பார்ப்போம்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .

.

மிஹைல் கலஷ்னிகோவ் ஒரு ரஷிய விஞ்ஞானி.(பிறப்பு 10-11-1919 மறைவு 23-12-2013).தாய்நாட்டைக் காப்பதற்காக ரஷிய ராணுவத்தில் சேர்ந்தார் அவர். அவரது தோழர்கள் அபாயகரமான துப்பாக்கிகளுக்குப் பதிலாக எளிதாக இயக்கக் கூடிய துப்பாக்கி வேண்டும் என்று அவரிடம் சொன்னதால் புதிய ரக துப்பாக்கி ஒன்றை அவர் கண்டு பிடித்தார். அது அவர் பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. அவ்டோமெட் கலஷ்னிகோவ் மாடல் 1947 (Avtomat Kalashnikove Model 1947) என்பதைனச் சுருக்கி இன்று ஏகே47 என்று அது அழைக்கப்படுகிறது. உலகில் இன்றைய மிகத் திறன் வாய்ந்த துப்பாக்கி அது தான். எடை குறைவு. உயிருள்ள ஒரு கோழிக் குஞ்சின் விலையை விட அதன் விலை குறைவு. எந்த சீதோஷ்ண நிலை இருந்தாலும் அதை எளிதில் இயக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பால் அவர் ரஷியாவின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படுகிறார். ஆனால் இந்த துப்பாக்கியை தீவிரவாதிகள் தங்களது ஆயுதமாகக் கையாளுவதைக் கண்ட அவர் மிகவும் நொந்து போனார். கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ எனது கண்டுபிடிப்பால் நான் கர்வப்படுகிறேன். ஆனால் இதைத் தீவிரவாதிகள் பயன்படுத்துவதைக் கண்டு மனம் நொந்து போகிறேன். இதற்கு பதில் விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய  அறுவடை மெஷினைக் கண்டுபிடித்திருப்பதையே நான் விரும்புகிறேன்” என்றார்.

2009ஆம் ஆண்டு வரை 10 கோடி ஏகே 47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதி போலியானவை. இதனால் இன்னும் நொந்து போன கலஷ்னிகோவ் ரஷிய ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு கடிதம் எழுதினார். “93 வயதான மிஹைல் கலஷ்னிகோவ் என்னும் விவசாயியின் மகனான நான் எனது துப்பாக்கி பலரது உயிரை இழக்கச் செய்திருப்பதால் ஆன்மீக ரீதியான எனது வலி பொறுக்கமுடியாததாக இருப்பதால் மன்னிப்புக் கேட்கிறேன்”

சர்ச் அவருக்கு மன்னிப்பு வழங்கியது. அதன் பின்னர் ஆறு மாதம் கழித்து அவர் காலமானார்.

***

 

இந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன்? விஞ்ஞான விளக்கம் (Post No.5293)

Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 9-51 AM  (British Summer Time)

 

Post No. 5293

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.

நாக பஞ்சமி என்றால் என்ன?

எப்போது?

ஏன் பாம்புகளை வழிபட வேண்டும்?

இது பற்றிய இரண்டு கதைகள் என்ன?

கொஞ்சம் ஆராய்சி செய்வோமா?

 

சில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.

 

நாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்?

பாம்புகளை வழிபடுவார்கள்;

 

பாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்

 

பாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.

 

பருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.

 

மானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்

 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது

 

இது பற்றி இரண்டு கதைகள் உண்டு

ஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இரண்டாவது சம்பவம்

 

சந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

அந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.

 

ஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.

 

இப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.

 

நாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல;  தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.

 

150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;

 

காளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்

பெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்

மரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்

 

இப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;

 

இவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.

 

ஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.

 

உலகில்  அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.

உழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

உழவர்களே  தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.

 

விவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.

எலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .

 

ஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.

வயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும்! (பாம்புகளுக்கு காதுகள் உண்டா? அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் காண்க)

ஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது?

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared)  இந்துக்கள் தயார்படுத்த்தினர்.

பாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.

 

பாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.

 

வாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)!!!

–subham–