அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  13-37 (British Summer Time)

Post No. 5099

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,அப்துல் காதருக்கும் அமாவாஸைக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,ராம நவமிக்கும் ரஹீமுக்கும்  தொடர்பு உண்டோ இல்லையோ, அமெரிக்கப் பாம்புக்கும் கம்பன் சொன்ன ராமாயண வானரப் படைக்கும் கட்டாயம் தொடர்பு உண்டு!

 

ஞாயிற்றுக் கிழமை தோறும் நாங்கள் லண்டன் நேரம் காலை 7-30 முதல் 9 மணி வரை ஸ்கைப்பில் (Skype) நடத்தும் கம்பராமாயண வகுப்பில் பல விஷயங்களை அலசுவோம். இந்த வாரம் கம்பராமாயணப் பாடலில் இரண்டு சுவையான விஷயங்கள் விவாதத்துக்கு வந்தன.

 

கம்பன் சொல்கிறான்:

ஒளிவீசும் தீப்பொறி கக்கும் விழிகளை உடைய குரங்குப் படைகள் கையில் எடுத்த மரங்கள் அரக்கப் படை வீசிய அம்புகளால் துண்டாயின. அரக்கர்கள் வீசிய அம்புகள், வானரங்களின் நெஞ்சில் ஊடுருவ அவை இறந்து விழுந்தன; அந்த நிலையிலும் அரக்கர்களை கடித்து அவர்களைக் கொன்று தாமும் இறந்தன (அதாவது செத்தும் கடித்தன அல்லது சாவதும் கடிப்பதும் ஒருங்கே நிகழ்ந்தன).

 

இதோ யுத்த காண்ட நாகபாசப் படலப் பாடல்:-

 

சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன

அடர்த்து அலை நெடும் மரம் அற்ற கையன்

உடர்த்தலை வைரவேல் உருவ உற்றவர்

மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

 

 

இதே போல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகானத்தில் கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற Corpus Christi, Texas, USA) ஊருக்கு அருகில் ஒரு   பெண்மணி  வீட்டிற்குப் பின்புறமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது கிலுகிலுப்பைப் பாம்பு (Rattle Snake) ஒன்று தலைப்பட்டது.

 

சாரைப் பாம்பு போன்ற இத்தகைய பாம்பு வாலை ஆட்டு போது கிலுகிலுப்பை ஒலி உண்டாகும்.

 

அந்தப் பெண்மணி ‘பாம்பு, பாம்பு’ என்று அலறிய உடன், கணவர் ஓடோடி வந்து அருகிலுள்ள மண்வெட்டியால் பாம்பின்  தலையில் ஒரு போட்டு போட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியது. அவர் பெயர் மியோ சட்க்லிப். அவருக்கு பெருமை தாங்கவில்லை. பாம்பின் தலையருகே போனார். துண்டாகிக் கடந்த தலை அவர் மீது பாய்ந்து கடிக்கவே அவர் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்தார். உடனே விமான ஆம்புலன்ஸ் வந்து அவ ரைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உ யிர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கம்பன் பாடலில் சாகும் அல்லது செத்த குரங்குகள் கடித்து, அதுவும் இறந்தது;  கடிபட்ட அரக்கனும் இறந்தான் என்று சொன்னது மெய்யே; அவன் கண்ணால் கண்டதை எழுதுகிறான்.; காட்டு வழியாகப் போகும் போது இத்தகைய காட்சிகளைப் பார்த்து இருப்பான் போலும்!

 

கரடி தின்ன Sweet Dinner ‘ஸ்வீட் டின்னர்

 

இன்னொரு பாட்டில் யானைகளின் மூளைகளை   கரடிகள் தின்னதாகச் சொல்லி அது அவைகளுக்கு இனிய உணவாக/ விருந்தாக அமைந்தது என்கிறான். கரடிகள் பெரும்பாலும் மீன், புழுப்பூச்சிகளை த் தின்னும். ஆனால யானை போன்றவற்றின் மூளைகளைத் தின்னுவதாக கம்பன் சொல்லும் காட்சியையும் அவன் கண்ணால் கண்டான் போலும்.

 

கம்பராமாயண,  யுத்த காண்ட, நாக பாஸப் படலத்தில் சொல்கிறான்:

 

போர் புரியும் கரடிகள், மலைகளைத் தாக்கி அழிக்கும் இடிகள் போலத் தொடர்ந்து சென்று, மதம் பொழியும் யானைகளின் தலைகளைப் பிளந்தன. அதனால் வெளிப்பட்ட மூளைகளை இனிமையாகத் தின்று பசி என்னும் தீயை அனைத்தன.

 

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்

 

தொடர்ந்தன மழை பொழி தும்பிக் கும்பங்கள்

 

இடந்தன மூளைகள் இனிதின் உண்டன

 

கடந்தன பசித் தழல் கரடி காதுவ

 

இப்படிப் போகிற போக்கில் வன விலங்குகள் பற்றியும் கம்பன் சொல்லுவது ராமாயணச் சுவையைக் கூட்டுகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!!

 

–சுபம், சுபம்—

 

நரேந்திர மோடி 20 மணி நேர உழைப்பு ரகசியம்! (Post No.5097)

Written by S NAGARAJAN

 

Date: 11 JUNE 2018

 

Time uploaded in London –  7-15 am  (British Summer Time)

 

Post No. 5097

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நரேந்திர மோடி நாளுக்கு 20 மணி நேரம் உழைப்பதன் ரகசியம்!

 

ச.நாகராஜன்

 

ரிபப்ளிக் டி.வியில் ஆர்னாப் கோஸ்வாமி வெள்ளியன்று (8-6-18) பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாவோயிஸ்டுகள் கொல்லச் சதி தீட்டும் கடிதத்தை வெளியிட்ட போது நாடே திடுக்கிட்டது.

 

பல கோடி ரூபாய் இதற்குத் தேவைப்படுகிறது என்றும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களையும் கட்சிகளையும் இதற்கு உதவி கோரி நாடலாம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாக்கியத்தைக் காண்பித்து அந்த நிறுவனங்களும் கட்சிகளும் எவை எவை என்று கேட்டார் ஆர்னாப்.

நாடே அறியத் துடிக்கும் விஷயம் இது.

 

 

மாவோயிஸ்டுகளை இரக்கமின்றி நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று அவர் கூறிய போது தேசமே ஆமாம் ஆமாம் என்று ஒரே குரலில் கூறியது.

ஹ்யூமன் ரைட்ஸ் என்ற பெயரில் அந்த இயக்கத்தில் இந்த வம்பு கோஷ்டிகள் புகுந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றின் பெயரிலும் பெண்ணியக்கம் பெயரிலும் மனித உரிமைகள் பெயரிலும் உள்ளே நுழைந்து தேசத்தைத் துண்டாட நினைக்கும் தேசத் துரோகிகள் கடையில் ராஜீவ் காந்தி ஸ்டைலில் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

 

 

அருண் ஜேட்லியின் நான்கு விதமான தேசத் துரோகிகளின் பட்டியலையும் இந்த டி.வி.நிகழ்ச்சி அறிமுகப் படுத்தியது.

சரி, நரேந்திர மோடி என்ன ‘பாவம்’ செய்தார் – இந்த தேசத் துரோகிகளின் பார்வையில் விழுவதற்கு.

பதிலை அனைவரும் அறிவோம்.

நாட்டிற்காக நாளுக்கு இருபது மணி நேரம் உழைக்கிறார் என்பது தான் பதில்.

 

அதாவது இருபத்து நான்கு மணி நேரத்தில் 83.88 சதவிகிதம் அவர் உழைக்கிறார்.

 

நாடு ஒன்றுபட்டு முன்னேறி விட்டால் நாசகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாதே.

 

2

நரேந்திர மோடி லண்டனில் 18, ஏப்ரல், 2018 அன்று வெஸ்ட்மினிஸ்டர் சென்ட்ரல் ஹாலில் ‘பாரத் கி பாத் சப்கே சாத்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவர் மோடி அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி:

 

 

“ நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இதற்கான சக்தியும் உந்துதலும் கிடைக்கிறது?!”

 

அதற்கு உடனே மோடி அவர்கள் நகைச்சுவையாக பதில் அளித்தார்:” நான் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிலோ வரை திட்டலையும் ஏசலையும் ஜீரணிப்பதால்!”

பின்னர் அவர் கேள்விக்கான பதிலைக் கூறலானார்:

‘அவன் ஒரு பாரமல்ல; அவன் எனது சகோதரன்’ என்ற கதையை முதலில் கூறினார்.

 

 

ஒரு இளம் பெண் அவளது சின்னத் தம்பியை தூக்கி வைத்துக் கொண்டு மலையின் மீது தினமும் ஏறிக் கொண்டிருந்தாள். ஒரு சந்யாசி அவளைப் பார்த்து,” அவனைத் தூக்கிக் கொண்டு மலை மீது ஏறுகிறாயே, உனக்குக் களைப்பாக இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்த இளம் பெண் பதில் சொன்னாள்: “அவன் எனது தம்பி.”

 

சந்யாசி கேட்டார்:”அது எனக்குத் தெரியும். ஆனால் தினந்தோறும் அவனைச் சுமந்து மலை மீது ஏறுவது சிரமமாகத் தோன்றவில்லையா?”

 

ஒவ்வொரு முறை சந்யாசி இப்படிக் கேட்கும் போதும் அந்த இளம் பெண் கூறிய பதில்: “அவன் எனது தம்பி.”

கடைசியாக ஒரு நாள் முத்தாய்ப்பாக அவள் சந்யாசியிடம் கூறினாள் : “எனது தம்பியைத் தூக்கிக் கொண்டு போவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சுமையாகத் தோன்றவில்லை.”

மோடி கதையைக் கூறி விட்டுத் தொடர்ந்தார் : “அந்தப் பெண் போல தேசத்திற்காகவும் எனது சகோதர சகோதரிகளான 125 கோடி பேருக்காகவும்  உழைக்கும் போது எனக்கு களைப்பே தோன்றவில்லை.”

 

 

உண்மையான அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய ஒரு சிறந்த தேசத் தொண்டனின் பதில் இது.

இப்படிப்பட்ட தேசபக்தனை மாவோயிஸ்டுகளும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களும் கட்சிகளும் விரும்பவில்லை; விரும்பாது என்பது நிதர்சனமான உண்மை.

 

ராஜீவ் காந்தி ஸ்டைலில் என்றால் தற்கொலைப் படையை தயார் செய்ய வேண்டும் அதற்காக பல கோடி ரூபாய்களும் ஏராளமான ஆயுத தளவாடங்களும் தேவை என்று கடிதம் குறிப்பிடுவதில் ஆச்சரியம் இல்லை.

 

தேசம் இந்த துரோகிகளால் ஒரு இளம் பிரதமரை இழந்தது போதும்.

இவர்களை இனம் கண்டு, கண்டு பிடித்து உடனடியாக நாடு கடத்த வேண்டும்.

 

ஜனநாயகத்தின் பெயரால் இந்த தேசத் துரோகிகள் தேசத்தைப் பிரிக்கும் எதை வேண்டுமானாலும் கூறிக் கொண்டு திரியலாம் என்று நினைத்தால் அதற்கு இந்திய மக்களின் பதில்”

“அது நடக்காது, ‘தோழா’! அதற்கு முன் உன் பாவச் சுமையால் நீயே அழிவாய்!” என்பது தான்!

 

ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டிய தருணம் இந்திய வரலாற்றில் இதுவே தான்!

 

சேர்வோம்; வெல்வோம்!

***

புல்வெளியில் நடப்பதால் ஏற்படும் பலன்கள்! (Post No.5094)

Written by S NAGARAJAN

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  7-14 am  (British Summer Time)

 

Post No. 5094

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர் இதழ். இதில் ஜூன் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!

ச.நாகராஜன்

 

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பது மிகப் பெரும் நற்பலன்களைத் தரும். இப்படி நடப்பதை ‘எர்த்திங்’ ( Earthing) என்று சொல்கின்றனர்.

ஆரோக்கிய மேம்பாட்டைத் தரும் இந்த நடைப் பயிற்சி செலவில்லாதது; எல்லோரும் எளிதில் செய்யக் கூடியது!

பூமியானது பல அரிய ஆற்றல்களைக் கொண்டது. இத்துடன் கால் மூலம் நம்மை இணைத்துத் தொடர்பு கொண்டால் மனம், உடல், ஆன்மா ஆகிய அனைத்தும் அளப்பரிய பயனைப் பெறும்.

மனதை ஒருமுகப்படுத்தும்!

வெறும் காலுடன் நடப்பது கீழ்க்கண்ட பலன்களைத் தரும்:

வெறும் காலுடன் அதிகாலை நேரத்தில் புல்வெளி மீது நடக்கும் போது நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டி வரும். கூழாங்கற்கள், முள், கூரிய கற்கள் இல்லாத பகுதியாக நீங்கள் செல்ல வேண்டி வரும்.

அப்போது உங்கள் கவனமும் ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும். உள்மனதுடன் இடைவிடாது நடத்தும் போர்களும், அனாவசிய அரட்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். மனம் அமைதி பெறும். மனதிற்கு – அது ஏங்கும் – நல்ல ஓய்வைத் தரும். கவன சக்தி அதிகரிக்கும்!

நடைப்பயிற்சி யோகம்

வெறுங் காலுடன் நடக்கும் போது தசைகள், தசை நாண், வடம், கணுக்கால் மற்றும் இதர காலின் ஆதாரப் பகுதிகள் (the muscles, ligaments and tendons in the feet, ankles and calves stretch and get strengthened)  ஆகியவை நீட்சிக்கு உட்படுகின்றன. அத்துடன் உங்கள் தோற்ற அமைவை –posture ஐ – அது நிலைப்படுத்தும்.

வர்மப்புள்ளிகள் தரும் சக்தி (Reflexology)

உடலில் அநேக வர்மப் புள்ளிகள் (reflexology points) உண்டு. புல்வெளியில் நடப்பதை தினசரிப் பழக்கமாக ஆக்கிக் கொண்டால் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணர முடியும். ஒரு 30 நிமிட நடையிலேயே ஆரோக்கிய மேம்பாட்டை அறியமுடியும் என்பது அனுபவஸ்தர்களின் கூற்று.

மன அழுத்தம் போகும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் சுத்தமான தூய காற்றை சுவாசத்தில் உள்ளிழுக்கிறீர்கள். சுற்றி வர பறவைகள் இருக்க, செடி கொடிகள் மலர்கள் சூழ்ந்திருக்க ஒரு அமைதியான சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க முடியும். மன அழுத்தம், மன இறுக்கம் எல்லாம் போக இது வழி வகுக்கும். இன்றையப் பொழுதில் வாழ்வது (living in the present moment) என்ற அரிய பழக்கம் வரும்.

கவலையைக் குறைக்கும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் கவலைகள் 62 சதவிகிதம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நல்ல ஹார்மோன்கள் உடலில் இருப்பதை உணர்த்துகின்றன. எண்டார்பின்களின் அளவும் அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தைத் தரும்

வெறும் காலுடன் புல்வெளியில் நடப்பதானது இன்சோம்னியா மற்றும் தூக்க வியாதிகளைப் போக்கி நல்ல தூக்கத்தைத் தருவதை சிகிச்சை நிலைய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

  • இயற்கையுடன் இணைவீ ர்கள்

நீங்கள் இயற்கை அன்னையுடன் உங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது. குளுமையான பனித்துளி நிறைந்த புல்லை ஸ்பரிசிப்பதன் மூலமும் மலர்களின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலமும் புலர்காலைப் பொழுதில் எழும் உதய சூரியனின் இனிய கிரணங்களை உடலில் படவைப்பதன் மூலமும் மரங்களினூடே வரும் காற்றை அனுபவிப்பதன் மூலமும் இயற்கையை நன்கு அனுபவித்து ஆனந்திக்க முடிகிறது; அமைதியைப் பெற முடிகிறது.

பூமியின் சக்தியுடன் இணைப்பு

பூமி அபாரமான காந்த புலத்தைக் கொண்டுள்ளது. இத்துடன் வெறுங்காலுடன் நடப்பதால் நீங்கள் இணைக்கப்படுகிறீர்கள். இது  காந்த மற்றும் மின் புலங்களுடன் நீங்கள் இணைக்கப்பட ஏதுவாகிறது. உடலிலிருந்து பூமிக்கும் பூமியிலிருந்து உடலுக்குமான ஆற்றல் பரிமாற்றம் பல்வேறு நலன்களைப் பெற உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நெகடிவ் எனர்ஜியை நீக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.

கண் பார்வை கூர்மை பெறும்

புல்வெளியில் வெறுங்காலுடன் நடக்கும் போது உங்கள் கண் பார்வை மேம்படுகிறது. கால் உடலின் அனைத்துப் பாகங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. இது உங்கள் கண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடக்கும் போது உங்கள் முன்காலில் முதல் இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் அழுத்தம் தரும் போது இந்த ரெஃபெளக்ஸோலொஜி புள்ளிகளால் கண் பார்வை கூரியதாகிறது; தீர்க்கமாகிறது. இந்தப் புள்ளிகள் மசாஜ் செய்யப்படுவதால் கண்கள் நலம் பெறுகின்றன.

ஆக இப்போது உங்கள் அருகிலுள்ள புல்வெளியை நாடி நல்ல பயன்களைப் பெறலாம் இல்லையா?!

***

‘இந்துக்களுக்கு கடல் ஒரு கால்வாய்- பூமி ஒரு முற்றம்’ (Post No.5087)

Written by london swaminathan

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  8-597am  (British Summer Time)

 

Post No. 5087

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷ சரிதம் இயற்றிய பாணன் என்ற ஸம்ஸ்க்ருத கவிஞன் செப்புகிறான்–  “எங்கள் நாட்டு மக்களுக்கு கடல் என்பது ஒரு கால்வாய் போல; பூமி என்பது முற்றத்தில் கிடக்கும் கல் மேடை போல” என்று. அதாவது கடற் பயணத்தில் வல்லவர்கள் இந்துக்கள் என்பது இதன் கருத்து.

“அங்கணவேடி வஸுதா குல்யா ஜலாப்திஹி” – ஹர்ஷ சரித

ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இதற்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளில் புகழ் கொடி நாட்டியதை நாம் அறிவோம். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களும், கலிங்கர்களும் கடலாதிக்கம் செலுத்தினர். கீழைக் கடலிலும் மேலைக் கடலிலும்  குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

 

‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ்ப் பழமொழி; இதை பாணனும் பாடுகிறான்:

‘அப்ரமனேன ஸ்ரீ சமாகர்ஷனே’ – ‘லக்ஷ்மியானவள் கடல் பயணத்தின் மூலம் வருகிறாள்’ என்பான்.

 

சூத்ரகன் என்ற சம்ஸ்க்ருத நாடக ஆசிரியன் 1800 ஆண்டுகளுக்கு முன்பு ‘மிருச்ச கடிகம்’ என்ற நாடகத்தை எழுதினான். இதை பண்டித கதிரேசன் செட்டியார் ‘மண்ணியல் சிறுதேர்’ என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் வசந்த சேனை என்ற விலைமாதரின் வீட்டில் சாருதத்தன் என்னும் கதாநாயகன் நகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு விதூஷகனை (நகைச் சுவை நடிகன்) அனுப்புகிறான்.

அவன் அவளது எட்டு அடுக்கு வீட்டைப் பார்த்து– அரண்மனையைப் பார்த்து– மூக்கில் விரல் வைத்து, வசந்த சேனையின் தோழியிடம் வியக்கிறான்—‘அம்மையே! என்ன கடல் வாணிபம் செய்வதில் வல்லவரோ நீவீர்! இவ்வளவு செல்வம் எங்கிருந்து வந்ததோ!’

‘பவதி கிம் யுஸ்மாகம் யானபாத்ராணி வஹந்தி!’

 

ஆக அக்காலத்தில் யாரிடமாவது செல்வம் அளவுக்கு மீறி இருந்தால் அது கடல் வர்த்தகம் மூலம் சம்பாதித்ததாகப் பேசுவர்.

 

மஹாபாரதம் சபா பர்வத்தில் அனந்ததாகி (துருக்கி நாட்டு அண்டியோக்), ரோமா ( இதாலி நாட்டு ரோம்), யவனபுரி ( எகிப்திலுள்ள அலெக்ஸான்ட்ரியா) முதலிய துறைமுகங்கள் குறிப்பிடப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை ஒரு மஹா நாயகன் – கப்பல் வணிகன் (மாநாய்க்கன்); கோவலனின் தந்தை நில வணிகன் (மஹா சார்த்தவாஹ) மாசாத்தன்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய குறிப்புகள் நிறைய உள. சுங்க வரி விதித்து புலி முத்திரை குத்தியது வரை சுவையான செய்திகள் கிடைக்கின்றன.

 

மஹா பாரதத்தில் யக்ஷப் ப்ரஸ்னம் ( பேயின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் கொடுத்த பதில்கள்) பகுதியில் ஏரியைப் பாதுகாக்கும் பிராஹ்மணப் பேய் (பிரம்ம ராக்ஷஸ்) பல கேள்விகளைக் கேட்கிறது. அதில் ஒரு கேள்வி

யார் நண்பன்?

அதற்கு தர்மனின் (யுதிஷ்டிரன்) பதில்:-

‘பயணம் செய்வோனுக்கு வண்டி நண்பன்; வீட்டில் உள்ளோருக்கு மனைவி நண்பன்’– என்று விடை பகர்வான்.

 

இது வியாபாரி ஒருவனை மனதில் கொண்டு தர்மன் அளித்த பதில் என்பது ஸம்ஸ்க்ருத சொற்றொடரைக் காண்கையில் ‘உள்ளங்கை நெல்லிக் கனி’ என விளங்கும்

‘சார்தஹ ப்ரவசதோ மித்ரம் பார்யா மித்ரம் க்ரிஹசதஹ’ (ஆரண்யக பர்வம்).

துலுக்கர் கையில் சிக்கிய குதிரை வியாபாரம்

 

முதலில் இந்துக்கள் கைகளில் இருந்த குதிரை வர்த்தகம் மெதுவாக அராபியர் கைகளுக்கு மாறியது. குதிரைகளுக்கான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் அராபிய மயமாயின. கி.மு 1400ல் துரக (குதிரை) ஸ்தானத்தில் ஸம்ஸ்க்ருத்த்தில் குதிரைகளைப் பழக்கிய தகவல்கள் மிகவும் பிரஸித்தம்- துரக ஸ்தானம் என்பது துலுக்கர் கைகளில் சிக்கியவுடன் ‘துருக்கி’ ஆனது. துருக்கன் என்பது ‘துலுக்கன்’ ஆனது.

 

ஆயினும் அராபியர்கள் அவ்வளவு எளிதில் இந்திய வணிகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம்   முழுதும் துலுக்கர்கள் படை சென்றபோது அந்த நாடுகள் அட்டைப் பெட்டிகள் சரிந்து போவது போல சரிந்து மடிந்தன. ஆனால் இந்தியாவில் துலுக்கர் படைகள் காஸி நகரை அடைய 450 ஆண்டுகள் ஆயின. ஸோமநாதபுரத்தைக் கொள்ளையடிக்க கஜினி முகமது என்னும் அயோக்கிய அரசன் 17 முறை படை எடுக்க வேண்டி இருந்தது அப்படியும் கூட ப்ருத்விராஜ், சுந்தர பாண்டியன் போன்றோர் காட்டிக் கொடுத்ததாலேயே ஒரு கோரி முகமதுவும், ஒரு மாலிக்காபூரும் நுழைய முடிந்தது. ஆக 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த இந்து வணிகம் சிறுகச் சிறுக அராபியர் கைகளில் வீழ்ந்தன. அவர்கள் மலேஸியா, இந்தோ நேஷியா போன்ற நாடுகளை துலுக்க நாடுகளாக மாற்றினர். வணிகர்களாக வந்த ஆங்கிலேயரும் துலுக்கர்களும் மத த்தையும் பரப்பினர். இந்துக்கள் அதைச் செய்யத் தவறினர்.

 

–சுபம், சுபம்–

காலத்தை உறைய வைக்கும் அதிசய புகைப்பட நிபுணர்! –1(Post.5086)

Written by S NAGARAJAN

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  8-35 am  (British Summer Time)

 

Post No. 5086

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

பாக்யா 8-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதிநான்காம்) கட்டுரை

காலத்தை உறைய வைக்கும் அதிசய அறிவியல் புகைப்பட நிபுணர்! – 1

.நாகராஜன்

 

ஆடம் மக்யார் (Adam Magyar) என்பவர் ஒரு கம்ப்யூட்டர் நிபுணர். கல்லூரியிலிருந்து பாதிப் படிப்பில் வெளிவந்தவர். தனக்குத் தானே புகைப்படக் கலையைக் கற்பித்துக் கொண்டவர். உலகெங்கும் சுற்றிக் கொண்டே இருக்கும் நிரந்தரப் பயணி. பெரிய புகைப்படக் கலைஞர். உலகமெங்கும் பெரும் புகழ் பெற்று வருபவர்.

அவரது தீவிரமான புகைப்படக் கலை ஆர்வத்தால் தீவிரவாதி என்று கூட அவரை போலீஸ் சந்தேகப்பட்டது.

விஷயம் என்ன என்பதைப் பார்ப்போம். நியூயார்க்கில் யூனியன் ஸ்குயர் சப் வே ஸ்டேஷன் என்று ஒரு ஸ்டேஷன் இருக்கிறது. எப்போதும் கூட்டமாக இருக்கும் ரயில் நிலையம் அது. அங்கு ஒரு நாள் காலை நேரத்தில் மக்யார் தீவிரவாதி என்ற சந்தேகத்தால் பிடிக்கப்பட்டார்.

அந்தச் சமயத்தில் ஸ்டெயின்லெஸ் என்ற தனது ஒரு அதிசயமான திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். ஹை ரெஸொல்யூஷன் இமேஜஸ் எனப்படும் அதி நவீன போட்டோ தொழில்நுட்பம் மூலம் மிக வேகமாகப் போகும் ரயில்களையும் அதில் ஏறி இறங்கும் பயணிகளையும் அவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஸ்டெயின்லெஸ் திட்டத்திற்காகப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இந்த போட்டோ கலைக்காக கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருளை அவரே கண்டுபிடித்திருந்தார். அதற்கான ஹார்ட்வேரையும் அவரே தயாரித்துக் கொண்டார். இதன் மூலம் ஒரு படத்தை ஆயிரக்கணக்கான துண்டுகளாக ஆக்கிப் பின்னர் ஒன்று சேர்த்து முழுப் படமாக ஆக்குவார்.

சப்வேயில் குகைப்பாதையில் செல்லும் பயணிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே படம் பிடிப்பார். அந்தப் படங்களை சாதாரண கேமரா எதுவும் நிச்சயமாகப் பிடிக்க முடியாது.

தனது சாதனங்களை அவர் பிளாட்பாரத்தில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். கேமரா, ஸ்கேனர், வோல்டேஜ் மீட்டர்,பேட்டரி பேக், நீல மற்றும் கறுப்பு நிற கேபிள்கள், முக்காலி, லேப் டாப் என்று அனைத்து சாதனங்களையும் ஒழுங்கு படுத்தியவர் ட்ரெயினின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

நியூயார்க் நகர மக்களோ இப்போது விவரமானவர்களாக ஆகி விட்டார்கள். 9/11 இரட்டை கோபுர தாக்குதல் என்ற கோர நிகழ்ச்சிக்குப் பின்னர் சந்தேகமான ஆளோ சாதனங்களோ தென்பட்டால் உடனடியாக அவர்கள் போலீஸாரை உஷார் படுத்துவர்.

நீண்ட சடைமுடியுடன் சந்தேகாஸ்பதமான சாதனங்களுடன் ஒருவர் ப்ளாட்பாரத்தில் இருப்பதைப் பார்த்த பலரும் நேரடியாக போலீஸாரை நாடி அவர்களை உஷார்படுத்தினர்.

உடனடியாக போலீஸ் படை விரைந்தது.

“யார் நீ?என்ன செய்கிறாய்?” போலீஸின் அதிரடி விசாரணை மக்யாரிடம் துவங்கியது.

“நான் ட்ரெயினை ஸ்கேன் செய்து கொண்டிருக்கிறேன்.”

“எங்களுடன் வா” என்று அவரை போலீஸார் விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றனர். துப்பறியும் போலீஸாரின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் அவரை விசாரிக்க ஆரம்பித்தனர்.

“யாருக்காக வேலை செய்கிறாய்? என்ன வேலை செய்கிறாய்?”

நிலைமையை நன்கு உணர்ந்து கொண்ட மக்யார் தான் யாரென்பதை விளக்க ஆரம்பித்தார்.நல்ல வேளையாக கணினியில் அவர் எடுத்த நூற்றுக்கணக்கான நல்ல புகைப்படங்கள் இருந்ததால் அவர் பிழைத்தார்.

அவர் ஒரு புகைப்படக் கலைஞர் தான், தீவிரவாதி அல்ல என்பது நிரூபணமானது. அவரது இணையதளத்தையும் போலீஸ் பார்வையிட்டது.கடைசியாக 25 டாலர் அபராதத்தை மட்டும் விதித்து அவரை ஸ்டேஷனை விட்டு அப்புறப்படுத்தியது.

25 டாலர் அபராதம் ஏன்? முக்காலி ஸ்டேண்டை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பயன்படுத்திய தவறுக்காக!  ஆனால் இது போன்ற ஏராளமான சங்கடமான தருணங்களை அவர் அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

ஹங்கேரியில் 1972ஆம் ஆண்டில் பிறந்தவர் மக்யார். தனது 20ஆம் வயதில் ஆசிய நாடுகளில் அவர் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். இந்தியா என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். இமயமலைப் பகுதிகள், இந்தியாவில் இருக்கும் சந்யாசிகள், ஆங்காங்கே உள்ள நகரங்களில் தெருக்களில் பல பொருள்களை விற்கும் தெரு வியாபாரிகள் என அவர் தனக்குப் பிடித்த விஷயங்களைப் புகைப்படமாகப் பிடிக்க ஆரம்பித்தார்.

சம்பிரதாயமாக எடுக்கும் புகைப்படங்களிலிருந்து அவரது வழி மாறி வித்தியாசமான ஒன்றாக ஆகியது! டிஜிடல் தொழில்நுட்பத்தில் அவருக்கு ஈடுபாடு வந்தது.

அதிலும் அவர் ஒரு புரட்சியைச் செய்தார். தனக்கான விசேஷ மென்பொருளை அவரே தயாரிக்க ஆரம்பித்தார். போட்டோக்களில் சாதாரணமாக ஏற்படும் சிதைவுகளையும் ஒழுங்கீனங்களையும் அவர் அறவே நீக்க முயன்றார். ‘நாய்ஸ்’ எனப்படும் புள்ளிவிவர டேட்டா ஒழுங்கீனத்தையும் அவர் களைந்தார்.

இதன் விளைவாக ஒவ்வொரு புகைப்படமும் அபாரமாக துல்லியமாக வர ஆரம்பித்தது. போட்டோ கலையில் காலத்துடன் அவர் “விளையாட” ஆரம்பித்தார்.

ஆம், மில்லி செகண்டுகளை நிமிடங்களாக நீட்டினார். சில கணங்களை அப்படியே உறைய வைத்தார். இப்படி உறைய வைக்கப்பட்ட தருணங்களில் வரும் சித்திரங்கள் – போட்டோக்கள்- சாதாரணக் கண்ணினால் பார்க்கவே முடியாதவை.

ஐன்ஸ்டீன், ஜென் புத்தமதம் என பல விஷயங்களிலும் அவரது நிபுணத்வம் விளையாடவே அதிசயமான போட்டோக்கள் உருவாக ஆரம்பித்தன. கண்டதையெல்லாம் கேமராவில் பிடித்தால் அது போட்டோ அல்ல என்கிறார் மாக்யார்.

ஒவ்வொரு கணத்தையும் அதன் ஜீவனை போட்டோவில் பிடித்து அதை உயிருள்ளதாக ஆக்க வேண்டும் என்பதே அவர் சித்தாந்தம். இதற்கு தொழில்நுட்பத்தையும் கலையையும் கலவையாக ஆக்கி அவர் ஒரு புதுவழியைக் காண்பிக்கிறார். “இயக்கத்திற்கும் இயக்கம் இல்லாமல் இருப்பதற்கும் நடுவில்  ஒரு ஸ்பேஸ் – வெளி இருக்கிறது. அங்கு காலம் வளைகிறது. ஆனால் அது இயற்பியல் விதிகளின் படி இருக்காது.” என்கிறார் அவர்.

தொழில்நுட்பம் கணித விதிகளைக் கொண்டது. கலையோ உணர்வுபூர்வமாக நுட்பமானது. இவை இரண்டும் சாதாரணமாக ஒன்றோடு ஒன்று இழைவதில்லை. ஆனால் இரண்டையும் தன் சாமர்த்தியத்தால் இழைய வைத்துள்ளார் மாக்யார்.

இவரது போட்டோக்களைப் பார்த்து மக்கள் வியக்கின்றனர்; மயங்குகின்றனர்.  அவரது சாதனைகளை இன்னும் சற்றும் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

இத்தாலியைச் சேர்ந்த பெண்மணியான மரியா அக்னேசி (Maria Agnesi 1718-1799) சிறந்த கணித மேதை.

நமது கணித மேதை ராமானுஜனைப் போலவே கணிதத்தில் கடவுளைக் கண்டார் அவர். பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்ணான அவருக்கு வீட்டிலேயே நல்ல கல்வி கிடைத்தது.  பிரெஞ்சு, இத்தாலி, கிரேக்கம்,ஹிப்ரூ, ஸ்பானிஷ், ஜெர்மானிய மொழி, லத்தீன் என பல மொழிகளிலும் 11 வயதிலேயே விற்பன்னரானார் அவர்.

ஒன்பதாம் வயதில் லத்தீனில் பெண்களின் உரிமை பற்றியும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தையும் பற்றி ஒரு ம்ணி நேர உரை ஒன்றை அவர் எழுதினார். கணிதத்தில் அவர் பெயரால் ‘தி விட்ச் ஆஃப் அக்னேசி’ என்று ஒரு curve இருக்கிறது.

கணிதத்தில் தீவிர கவனம் செலுத்துவதே ஆன்மாவிற்கான பிரார்த்தனை என்று நம்பிய அவர் ஏழைகளின் உயர்வுக்காகப் பாடுபட்டுத் தொண்டாற்றினார். தேவாலய பணிகளில் ஈடுபட்டார்.

81 வயது வரை வாழ்ந்த அவர் ஒரு சிறிய மருத்துவ மனையில்

இறுதி வரை தொண்டாற்றி வந்தார்.

தூக்கத்தில் எழுந்து நடக்கும் வியாதியால் அவர் பாதிக்கப்பட்டவர். ஆகவே நள்ளிரவில் எழுந்து சிக்கலான கணிதத்திற்கு விடை காண முயலுவார்- தூக்க கலக்கத்துடன். தூக்கம் வந்தவுடன் தூங்கி விடுவார்.

தூங்கி எழுந்தவுடன் காலையில் அவருக்கு அதற்கான விடை கிடைத்து விடும்.

கணிதத்தையும் கடவுளையும் இணைத்ததால் அவர் கணித வரலாற்றில் தனி ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

***

 

செல்வம் சேர வாஸ்து வழி ! Clutter-ஐ ஒழியுங்கள்! (Post No.5083)

Written by S NAGARAJAN

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  8-39 am  (British Summer Time)

 

Post No. 5083

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

செல்வம் சேர வாஸ்து வழி

Clutter-ஐ ஒழியுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

காசு மேலே காசு வரும் கட்டுரையைப் படித்தீர்களா? நீரை வடகிழக்கு மூலையில் வைத்தவர்களுக்கு செல்வம் சேருவதற்கான  நல்ல அறிகுறி வரும் என்று எழுதியிருந்தேன். அதில் சற்று கங்கா ஜலம் அல்லது பன்னீருடன் சில மலர்களையும் தூவலாம். தினம்தோறும் புதிய ஜலத்தை நிரப்புமாறும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால் காரண்டியாக காசு வரும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

 

சார், ஒண்ணும் பலிக்கலை சார் என்று சொல்பவர்கள் இருந்தால் அவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

அன்பர்களுக்கு உத்வேகமூட்ட ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன்.

 

நெருங்கிய சொந்தம். நல்ல கூர்மையான புத்திசாலி. நல்ல உழைப்பாளி. ஆனால் உழைப்புக்கும் தீர்க்கமான புத்திக்கும் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்ட போது

 

Clutter-ஐ ஒழிக்குமாறு ஆலோசனை கூறினேன்.

குறிப்பாக விபத்தில் சிக்கியிருந்த ஒரு ஸ்கூட்டர் பல காலமாக வீட்டு வாசலின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு கூறினேன்.

சில மாதம் கழித்து மீண்டும் ஆலோசனையைக் கேட்டார்.

ஸ்கூட்டர் வெளியேற்றப்படவில்லை என்பதை அறிந்த நான் கண்டிப்பாக அதை அகற்றுமாறு கூறியதோடு அதை எடுத்துச் செல்பவர்களுக்கு சற்று பணம் கூடக் கொடுக்கலாம் என்று சொன்னேன்.

 

உடனடியாக ஸ்கூட்டர் அகற்றப்பட்டது.

 

மறு நாள் இந்தியாவின் தலை சிறந்த பெரிய வங்கியிலிருந்து அவருக்கு பிரமாதமான வேலை நல்ல சம்பளத்துடன் கிடைத்தது.

மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். வருடங்கள் உருண்டோடின. மிக நல்ல அந்தஸ்து. நல்ல செல்வம் சேர்ந்தது.

சென்ற வாரம் கூட இதைப் பற்றி அவர் குடும்பம் கூறி மகிழ்ந்தது.

 

இது போல ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

உங்கள் வீட்டு நிகழ்வும் அதில் சேர வேண்டுமானால் Clutter-ஐ அகற்றுங்கள்.

 

2

எது சார் குப்பை என்று கேட்டால் சுலபமான பதில் எது உங்களுக்குத் தேவையில்லையோ அதெல்லாம் குப்பை தான் என்று சொல்லலாம்.

 

வீட்டில் சுவர் ஓரத்தில் தொங்கும் ஒட்டடை, பேனில் படிந்து கிடக்கும் தூசி, ஆங்காங்கு பயன்படுத்தாமல் இருக்கும் டேபிள், சேர் உள்ளிட்ட பல பொருள்களின் மீதுள்ள தூசி எல்லாமே குப்பைகூளம் தான்.

 

ஓடாத கடிகாரம் : கடிகாரம் இருக்கும்; ஆனால் அது ஓடவில்லை.

 

உடனடியாக அதை ஓடும் கண்டிஷனில் ரிப்பேர் செய்யுங்கள்; அல்லது அதை வீட்டை விட்டு அகற்றி விடுங்கள்.

இதே போல பல காலம் பயன்படுத்தாத உடைந்து போன பொருள்களை சற்று கூட தாக்ஷண்யம் இன்றி வெளியில் அகற்றி விடலாம்.

 

மலர் செடிகள் வைப்பது நல்லது தான்; ஆனால் நீர் ஊற்றாமல் அது வாடி வதங்கி  இருப்பது தான் தவறு.

பழுத்துப்போன காகிதங்கள், உபயோகமற்ற டயரிகள், தேவையற்ற பாத்திரங்கள், காலி பாட்டில்கள், முக்கியமாக பால் கவர்கள், பழைய பேப்பர்கள் .. அடடா. லிஸ்ட் முடிவில்லாத ஒன்று.

இவற்றை சிறிது பணம் கிடைக்கும் என்பதற்காக சேர்த்து வைத்து வர வேண்டிய பெரிய செல்வத்தை இழக்காமல் – அது வரும் வழியைத் தடை செய்ய விடாமல் – அகற்றி விடுங்கள்.

சரி, முக்கியமான ஆவணங்கள், வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவை பழையதாகத் தானே இருக்கும் அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.

 

மிக முக்கியமான ஆவணங்களை அழகான ஃபோல்டரில், அல்லது பையில் அல்லது பைலில் வைத்து அதைச் சுற்றி ஒரு தங்க நிற ரிப்பனைக் கட்டி விடுங்கள். போதும்.

கம்ப்யூட்டரில் கூட ஈ மெயிலில் தேவையற்ற அஞ்சல்களை அழித்து விடுங்கள்.

இது வாழ்முறைப் பழக்கமாக ஆகும் போது செல்வம் சேர விடாமல் இருக்கும் தடைகள் அகலும்.

வீட்டைச் சுற்றிலும் கூட தோட்டம் உள்ளிட்டவற்றில் குப்பைகளைச் சேர்க்கக் கூடாது.

 

தோட்டத்திலிருந்து பழைய சாமான்களை அகற்றிய பிரபலமான ஒருவர் மிக உச்சத்திற்குச் சென்ற சம்பவம் கூட உண்டு.

ஆக வடகிழக்கில் நீர் வைத்தேன்; வடக்கில் காஷ் பாக்ஸை வைத்தேன் பலனில்லை என்று வருத்தப்பட்டால் உங்கள் வீட்டில் உள்ள clutter மீது கவனம் செலுத்துங்கள். அது தான் தடை!

 

3

Cleanliness is next to Godliness என்று சும்மா சொல்லவில்லை. சுக கந்த மால்ய சோபே என்று லக்ஷ்மியை போற்றுவதற்குக் காரணம் சுத்தமான நறுமணம் கமழும் இடத்தில் இருப்பவள் அவள் என்ற உண்மையை உள்ளத்தில் இருத்தியே!

ஆக அழுக்கை அகற்ற முயற்சி செய்யும் போது நல்ல அறிகுறிகளைக் காணலாம்.

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை இது.

***

வேத காலத்தில் வாணிபம் (Post No.5076)

Written by London Swaminathan 

 

 

Date: 4 JUNE 2018

 

 

Time uploaded in London – 18-28

 

Post No. 5076

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

வேத காலம் முதல் நாம் கடல் வணிகம் செய்து வருகிறோம். வேதத்தில் இரு புறமுள்ள கடல்கள் என்ற சொற்றொடர் வருவதால் மேலைக் கடற்கரையையும் கீழைக் கடற்கரையையும் அவர்கள் ஒருங்கே ஆண்டது தெரிகிறது.

சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் மகன் கோவலன் என்றும் மாநாய்க்கன் மகள் கண்ணகி என்றும் நாம் பயில்கிறோம். இது அவர்களுடைய பெயர்கள் அன்று. அவை பட்டங்கள் ஆகும். அதாவது தலா ய்லாமா, போப்பாண்டவர், சங்கராச்சார்யார் போன்ற பட்டங்கள். அல்லது டாக்டர், வக்கீல் என்பது போலத் தொழில் பட்டங்கள் எனலாம். இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

 

சார்த்தவாஹன என்றால் வணிகர் தலைவன். அதாவது வணிகர்கள் ஒரு கூட்டமைப்பு வைத்து அதில் ஒருவரைத் தலைவர் ஆக்குவர். அவர் மஹா சார்த்தவாஹனன் ; தமிழில் மாசாத்துவான். கப்பல் வணிகர்கள்  மஹா நாயக்கன் என்பவரைத் தலவராகக் கொள்வர். அவர் மாநாய்க்கன். ஆக கோவலன், கண்ணகி ஆகியோரின் தந்தை பெயரை நாம் அறியோம் ஆனால் அவர்கள் பட்டங்க ளையே அறிவோம். அக்காலத்தில் ஜாதி முறைக் கல்யாணம் இருந்ததால் வணிகர் குலத்துக்குள் அத்திருமணம் முடிந்தது.

 

சார்த்தவாஹன என்பதற்கு அமரகோஷம் போன்ற ஸம்ஸ்க்ருத நிகண்டுகள் பொருள் தருகையில் “ஒரே/ சம அளவு முதலீடு செய்த வணிகர் குழு” என்று சொல்லும்; அவர்கள் ஊர் விட்டு ஊர் போய் அல்லது நாடு விட்டு நாட்டுக்குப் போய் வியாபாரம் செய்வர்.

 

வேதத்தில் இந்தச் சொல் இல்லாவிடினும் ‘பாணி’ என்ற சொல் உள்ளது. அது வணிகரைக் குறிக்கும்; பிற்காலத்தில் ‘பனியா’ என்ற சொல் வணிகரைக் குறித்தது.

 

வேத காலத்தை அடுத்து வந்த பாணினி என்ற உலகப் புகழ்பெற்ற இலக்கண வித்தகர் (கி.மு. ஏழாம் நூற்றாண்டு) போகிற போக்கில் ஒரு எடுத்துக் காட்டாக ‘உத்தரபத’ (வட பெரும் வழி) என்று சொல்கிறார். அப்படியானால் ‘தென் பெரும் வழி’ ஒன்றும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

அதர்வண வேதத்தில் ப்ருத்வி சூக்தத்தில் (பூமி) பல வழிகளில் செல்லும் வணிகர் பற்றிய குறிப்புகள் உள. ஆக வேத காலம் முதல் வணிகம் நடந்தது தெளிவு. அது மட்டுமல்ல; அதே துதியில் பல மொழி பேசும் மக்கள் பற்றிய குறிப்பும் உளது. ஆகவே அக்காலத்திலேயே மக்கள் பல்வேறு மொழி பேசும் பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ சென்றதும் தெரிகிறது.

 

மக்கள் பயணிக்க பல வழிகள் உளது;

ரதங்களும் மாட்டு வண்டிகளும் செல்ல அவை உள்ளன;

நல்லோரும் தீயோரும் அவற்றில் செல்லலாம்;

அவைகள் எங்கள் கட்டுப்பாட்டில் வரட்டும்;

வழிப்பறி கொள்ளையர்களையும் எதிரிகளையும் விரட்டுவோம்.”

அதர்வ வேதம் 12-47

 

வற்றாது பால் சுரக்கும் பசுக்கள் போல

இந்த பூமியும் எங்களுக்கு ஆயிரம் நதிகள் (வழி) மூலம் வளம் சுரக்கட்டும்;

பல்வேறு மொழிகளையும் சமய வழிகளையும்,

வாழும் இடங்களுக்கு ஏற்ப

பின்பற்றும் பூமி இது

அதர்வ வேதம் 12-45

 

இந்தத் துதியிலிருந்து தெரிவதென்ன?

பூமியில் பல சாலைகள்/ பயண வழிகள் இருந்தன

மக்கள் தொடர்புக்கு இவைகளே சிறந்த வழிகள்

ரதங்களும் வண்டிகளும் அதில் ஓடின;

எல்லோரும் அதில் பயணிக்க முடியும்;

ஆயினும் வழிப்பறி திருடர்கள் உண்டு;

பாதுகாக்கப்பட்ட வழிகள் இன்பம் தரும் பாதைகள் ஆகும்.

அரசனும் அதிகாரிகளும் அவைகளைப் பாதுகாப்பர்.

 

அகஸ்தியர் கடல் குடித்த வரலாறு, விந்திய  மலையை கர்வ பங்கம் செய்த வரலாறு முதலியன மறை பொருளில் வரலாறு உணர்த்தும் நூல்களாகும். கடலைக் குடித்தார் என்றால் அகஸ்தியர்தான் முதலில் வணிகர் குழுவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்பது பொருள்.  அவர் விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் என்றால், விந்திய மலையின் தலையைத் தட்டி, சாலை அமைத்தார் என்பது பொருள். ஆக அகஸ்தியர் காலத்தில் இருந்து இந்தப் பயணம் துவங்கிவிட்டது. அதை நமது புராணங்கள் விளக்குகின்றன.

அந்தக் காலத்தில் வடக்கில் பூபாரம்/ ஜனத்தொகை அதிகரித்தவுடன் சிவபெருமானே அகஸ்தியரை அழைத்து தென் பகுதிக்கு அனுப்பியது ஆளே இல்லாத தென் பகுதிக்கு ஆட்களை குடியேற்றியது தெரிகிறது. அகஸ்தியர் தலைமையில் 18 குடிகள் வந்தனர். இவை இல்லாம் கி.மு.800 முதல் 1000 வரை நடந்ததால் அந்தக் காலத்திலேயே மக்களின் பெரும்பயணம் துவங்கியதை நாம் அறிகிறோம். அதற்கு முன்னதாக ராமன் காலத்தில் கடலோர போக்குவரத்து நடந்தது. காடுகள் வழியே போகச் சாலைகளோ முறையான பாதைகளோ இல்லை அந்தப் பெருமை அகஸ்தியர் என்னும் முனிவரையே /இஞ்சினீயரையே சாரும்!!!

 

–சுபம்–

 

TRADE AND COMMERCE IN VEDIC DAYS (Post No.5075)

Written by London Swaminathan 

 

 

Date: 4 JUNE 2018

 

 

Time uploaded in London – 14-31

 

Post No. 5075

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Tamil epic Silappadikaram have two Sanskrit words Maha Nayaka (maanaaykkan in Tamil) and Maha Saarthavaaha (maasaaththuvaan in Tamil) as the names of the fathers of hero and heroine (Kannaki and Kovalan) of the poem. These are common nouns and not proper nouns.

 

The roots of these Sanskrit words are in ancient Sanskrit literature. Though the word Saarthavaaha (Leader of the Merchants) did not find a place in the Vedas they used the word ‘Pani’ for the businessmen.

The word Saarthavaaha is in Amarakosa. The commentator explains it- ‘one who is the leader of the travelling merchants who invested their own capital’. Saartha is defined as the group of travellers. They invest equal amount of money and travel to other market places in groups. Like the Hindu devotees go in groups under some Gurus, they have caravan leaders.

 

Atharva Veda (12-1-47 etc) speaks about trade routes. The Prithvi Sukta (Earth Hymn) says about Panthas or routes of our great land.

Now the salient features of Earth Hymn in connection with the Trade and Commerce:-

Thy many pathways for men to travel on

the roads for chariots, and for wagons to pass through

on which walk together both good and evil men,

may we be masters of those, and drive out the thief and foe. (12-47)

 

May the earth with people who speak various tongues

and those who have various rites

according to their places of abode

pour for me treasure in a thousand streams

like a constant cow that never fails (12-45)

 

(Vedic people visited several countries speaking different language)

 

Earth in which are cities, the work of Devas

and fields where men are variously employed;

Earth that bears all things kin her womb

may the Lord of Life make her graceful for us from every side (AV 12- 43)

 

 

The following points are considered important in the hymn:

1.This land has many routes

2.Thesee routes were the principal means of communication of the people.

3.On these routes the chariots plied.

4.They were routes for Bullock carts as well.

  1. Everyone had the right to use the routes.
  2. However it was necessary for the king to ensure the safety of merchants. He had to protect them from wild animals and robbers.

7.Well guarded and safe routes symbolised the happiness of the earth.

 

Ancient Tamil and Sanskrit literature have several verses about the robbers who waylaid merchants and  snatched their goods or even goods of the public.

 

Panini, the grammarian of Seventh century BCE, says about Uttarapatha (Grand Route in North India). When he says ‘Uttara’, we may assume there was also Dakshina patha (Grand Route to/in South India).

Agastya laid a grand road route to South India between 800 and 1000 BCE. While Rama and others used coastal route before, Agastya for the first time laid a land route via the Vindhya mountains.

 

Following is from my very old post:

Did Agastya drink ocean?

 

Agastya was one of the greatest travellers of ancient India. He was mentioned in the Rig Veda and the Ramayana. He slowly moved southward and established an ashram at the western ghats- Pothya malai. There are lot of myths about him. All this can be explained scientifically. He did divert the river Cauvery to the present Chola mandala like Baghiratha diverted Ganga. But in thousands of years it became a myth and we read a crow tilted the ‘kamandalam’ (pot) of Agastya and thus came River Cauvery.

 

Another story told about Agastya is that he travelled to the south at the behest of Lord Siva. It is true that either Siva or a Saivite saint requested him to go to the south to disperse the population. The story of Siva’s (Meenakshi wedding) Tirulkalyanam makes it clear by  saying the overcrowding of the earth tilted the balance and Siva requested Agastya to go southward (with a big group). Our fore fathers were such a great planners that they did what we are doing today-building satellite cities! This story is in Tiruvilayadal puranam and other books.

Did Agastya drink the ocean? Agastya was the first person to cross the Indian ocean for the first time to establish a great Hindu empire in South East Asia.  We now knew that there was a flourishing Hindu colony in Laos, Vietnam, Cambodia (Angkor Wat temple), Thailand, Malaysia, Singapore and Indonesia (Borobudur Stupi) for 1500 years. Now they are all converted as Muslims. Like Columbus and Magellan, he crossed the ocean- that is he ‘drank’ the ocean! It is a symbolic story. Agastya’s statues are displayed through out South East Asian countries even today.

 

One another myth about Agastya is that he made the Vindhya Hill not to grow again. This is another symbolic story to say that he crossed the Vindhyas for the first time through the ‘land route’. Before him North and South Indians used coastal sea routes. Tamil literature also makes it very clear in several places that Agastya came to the south with 18 groups of people and he was the one who codified a grammar for Tamil. A massive exodus from the North followed Agastya.

This is explained in the Puranas as Agastya ‘belittling’ the Vindhyas in the Puranas/mythology. Agastya was the first one to find a sea route to South East Asia around 1000 BCE which the Puranas .

 

 

The Dasakumara Charita of Dandi mentioned the name Raameshu (Hindu name) as Captain of a Ship. It is a typical Hindu name. Even today we can find names Ramesh, Rama Seshan, Ramesan in South Indian and North Indian telephone directories. Old authors guessed it as Rama jesus. It is wrong. It is like saying I am selling ‘Hot Ice Cream’.

–SUBHAM–

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது! (Post No.5064)

Written by London Swaminathan 

 

Date: 31 May 2018

 

Time uploaded in London – 20-46

 

Post No. 5064

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த  போது! (Post No.5064)

பழங்கால இந்தியாவில் கடல் வாணிபம் எப்படி நடந்தது என்ற சுவையான தகவல்களை பழைய நூல்கள் தருகின்றன. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டிய இளவரசி மீனாட்சியையும் சூர சேனப் பெண்மணி காஞ்சன மாலையையும் தொடர்பு

படுத்திப் பேசுவதைக் காணலாம்; சூரசேனர் என்பது வட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்கள். துவாரகை (குஜராத்) முதல்- மதுரா வரை ( உத்தரப் பிரதேசம்) ஆண்ட இனம்.  இதை புராணம் என்று ஒதுக்கிவிடலாம். பிற்கால நூல்களிலும் இத்தகைய தொடர்பு நீடித்து வந்தது  சமண மத நூல்களில் காணக்கிடக்கிறது.

(தெற்கிலிருந்து வடக்கே போன பிராமணர்களை அந்தந்த தேசத்தின் பெயர் சொல்லி அழைப்பர்; திராவிட தேசத்திலிருந்து சென்ற பிராஹ்மணர்களை திரவிட் (கிரிக்கெட் வீரரின் பெயர் த்ரவிட்) என்றும் பாண்டிய தேசத்திலிருந்து போன பிராஹ்மணர்களை பாண்டே, பாண்ட்யா (குஜராத்தி பிராஹ்மணர்) என்றும், தெலுங்க தேச பிராஹ்மணர்களை ‘தில்லான்’ (த்ரிலிங்க=தெலுங்க தேச) என்றும் அழைப்பர்.

 

ஆவஸ்யகா சூர்ணி என்ற சமண மத நூல் சில சுவையான விஷயங்களைச் சொல்கிறது:-

மதுரை நகரிலிருந்து சௌராஷ்டிரத்துக்கு  வழக்கமான கப்பல் போக்குவரத்து உண்டு; மதுரை மன்னன் பாண்டுசேனனின் (பாண்டிய மன்னன்) இரண்டு மகள்கள் அந்தக் கப்பலில் சௌராஷ்டிரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இடையிலே புயல் வீசி கப்பல் கவிழத் துவங்கியது. உடனே கப்பலைக் காப்பாற்ற எல்லோரும் கந்தனையும் ருத்ரனையும் (சிவன்) பிராத்தித்தார்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது.

 

 

இப்போதைய மதுரையில் கடல் கிடையாது; 60,70 மைல்களுக்கு அப்பால்தான் கடல் உண்டு. கிருஷ்ணர் இருந்த மதுராவிலும் கடல் கிடையாது. ஆக இவர்கள் சொல்லுவது கடல் கொண்ட, இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாகவே இருக்க வேண்டும்; பாண்டு சேனன் என்பது பாண்டிய மன்னனின் திரிபே; மேலும் அவர்கள் முருகனையும் (கந்த) சிவனையும் (ருத்ர) கும்பிட்டது தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்குப் புறநானூற்றில் நக்கீரர் பாடிய பாடலே சான்று; ஒரே புற நானூற்றுப் பாடலில் சிவன், முருகன் எல்லோரையும் போற்றுகிறார் நக்கீரர்.

 

இந்த நூல் 16 வகை கடற்காற்றுகளைப் பற்றி பேசுகிறது. அவையாவன

 

1.ப்ராசீன வாத (கீழைக் காற்று)

2.உதீசீன வாத (வாடைக் காற்று)

3.தக்ஷினாத்ய வாத (தென்றல் காற்று)

4.உத்தர பௌரஸ்த்ய ( எதிர்க்காற்று)

5.சத்வசுக (எல்லாத் திசைகளிலும் வீசும் காற்று)

6.தட்சிண பூர்வ துங்கார (தென்கிழக்கில் வீசும் புயல்)

7.அபர தக்ஷிண பீஜாபா (தெ. மே. திசைக் காற்று)

8.அபர பீஜாப (மேலைக் காற்று)

9.அபரோத்தர கர்ஜப (வ.மே. திசைக் காற்று)

10.உத்தர சத்வசுக

11.தக்ஷிண சத்வசுக

12.பூர்வ துங்கார

13.தக்ஷிண பீஜாப

14.பஸ்சிம பீஜாப

  1. பஸ்சிம கர்ஜப
  2. உத்தர கர்ஜப

 

இவ்வளவு வகையான பிரிவினைகள் இருப்பதால் இந்துக்கள் அல்லது பொதுவில் இந்தியர்கள் கடல் வாணிபத்திலும் கப்பல் போக்குவரத்திலும் வேறு எவரையும் சார்ந்து இருக்கவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். பதினாறு வகைக் காற்றுகளுக்கு தனிதனி ஸம்ஸ்க்ருதப் பெயர்களைத் தந்துள்ளனர்.

 

இந்தியா ஒரு விவசாய நாடு; பருவக் காற்று மழை நாடு; அதனால்தான் உலக மஹா கவி காளிதாசன் ஆறு பருவ காலங்கள் பற்றி ‘ருது சம்ஹாரம்’ எனும் நூலை இயற்றினான. மேக தூதம் என்னும் காவியத்தில் மத்தியப் பிரதேச உஜ்ஜைனி நகரிலிருந்து இமயமலை வரை பருவக் காற்று அடித்துச் செல்லும் மேகத்தின் காட்சிகளைப் பாடுகிறான். மேலும் சாகுந்தல நாடகத்தில் ஏழு வகை மேகங்கள் பற்றியும் பாடுகிறான்

காளிதாசன் சாகுந்தல நாடகத்தில் வானத்திலுள்ள ஏழு வகைக் காற்று மண்டலங்கள் பற்றியும் பேசுகிறான்.

மனைவியைக் கொன்ற பிராஹ்மணன்!

 

‘குவலய மாலா’ என்னும் நூலில் ஒரு சுவையான சம்பவம் வருகிறது.

குவலய மாலா நூலை உத்யோதண என்பவர் கி.பி.779ல் இயற்றினார்.

ஒரு ஏழைப் பிராஹ்மணன் பிழைப்பு தேடி ஒரு கழைக் கூத்தாடி, பாணர்கள் கூட்டத்தைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் அவன் மனைவி, மகன்களும் வருகின்றனர். ஒரு கிராமத்தில் கழைக் கூத்தாடிகள் கூடாரம் அடித்துத் தங்கி வித்தைகளைச் செய்து காட்டினர். அவன் மனைவியும் ஆசையோடு அதைப் பார்க்க வந்தாள். அவன் ஆத்திர ப்பட்டு அவளைத் தவறாக நினைத்து கொன்று விடுகிறான். பின்னர் ஆத்திரத்தில் அறிவு கெட்டுப் போய்விட்டேனே என்று அழுது புரண்டு தானும் மனைவியின் சிதைத் தீயில் பாய்கிறான்.

 

எல்லோரும் அவனை எரியும் நெருப்பிலிருந்து மீட்டு பண்டிதர் சபைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவன் பாவ  மன்னிப்புப் பரிகாரம் என்ன என்று கேட்ட போது எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி புண்ய தலங்களுக்க்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; அதோடு அவனிடமுள்ள கொஞ்ச நஞ்சத்தையும் தானம் செய் வேண்டும் என்றனர். (அவனும் அவ்வாறே செய்தான்)

 

இது போன்று கழைக் கூத்தாடிகள் கிராம ,கிராமமாகச் சென்று வியாபாரம் செய்தது முதலிய பல செய்திகள் அக்காலத்தின் போக்குவரத்து வசதிகளைக் காட்டுகின்றது.

 

சுபம்—

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3 (Post No.5062)

Written by S NAGARAJAN

 

Date: 31 MAY 2018

 

Time uploaded in London –  7-52 am  (British Summer Time)

 

Post No. 5062

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 1-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதிமூன்றாம்) கட்டுரை

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3

.நாகராஜன்

திருஷ்டியைப் பற்றி அறிவியல் முத்தாய்ப்பாக என்ன சொல்கிறது என்பதைக் காண்பதற்கு முன்னர் தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.

 

கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.

சில பொல்லாத கண்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

 

மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம்.

 

தொன்று தொட்டு இருந்து வரும் இந்த தமிழர்களின் பழக்கம் பல இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

எடுத்துக் காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும், சமீப கால இலக்கியத்திலிருந்து இங்கு சுட்டிக் காட்டலாம்.

திருஅருட்பாவை அருளிய அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பா, ஆறாம் திருமுறையில் 4225ஆம் பாடல் இந்த கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

 

 

“கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்”

என்ற வரிகள் கற்பூரத்தைப் பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டுவதைக் காணலாம்.

 

இதன் பொருள் : என் கணவராகிய சிவபிரான் என்னிடம் வந்தருளுவாராயின் அவருக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) கழிக்கும் பொருட்டுக் கற்பூரம் கொண்டு வந்து வைப்பீராக என என் செவிலியரிடம் சொன்னேன். அவரது திருவடியின் கீழ்நிலை ஒளியுடைய பூத தத்துவங்களின் நிலையாகும் என்று சொன்னேன். அதனாலோ, வேறு யாது காரணத்தாலோ அவர் வந்திலர்.

 

இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணிவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள் மணிகள் அணிவது ஆகியவற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர்; வருகின்றனர்.

 

கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.

 

பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் அணிந்த தாயத்துகளையும் அவர்கள் அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.

 

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.

இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.

 

ஒவ்வொரு நாகரிக மக்களின் தாயத்துக்களை எழுதப் புகுந்தால் அது பெரிய அளவு நூலாக மலரும்.

இனி அறிவியலுக்கு வருவோம்.

உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவர் ராபர்ட் ஓப்பன்ஹீமர். அணுகுண்டைக் கண்டு பிடித்த அவர் அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படுகிறார். அது வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர்.

 

ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் சுலோகம் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

 

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனத்தை கீதையின் 11வது அத்தியாயம் விளக்குகிறது. அதில் 12வது ஸ்லோகம் “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்று கூறுகிறது. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்று மலைத்துக் கூறினார் ஓப்பன்ஹீமர்.

 

ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர் அவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

 

அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.

ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.

அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.

“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.

அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.”

லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

 

ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.

 

திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் இதைப் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கினால், உங்கள் வீட்டார் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டி வரும்.

என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

சமீபத்தில் மறைந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங்கின் கடைசி பேப்பர் (ஆய்வுத் தாள்) வெளியாகியுள்ளது. அதில் அவர் மிகவும் சிக்கலான விஷயமான மல்டி வர்ஸ் (Multi Verse) எனப்படும் பல் பிரபஞ்சக் கொள்கையைப் பற்றி எழுதியுள்ளார்.

பிரபஞ்சம் என்பது ஒரு பிரபஞ்சம் மட்டும் அல்ல; ஒவ்வொரு பிரபஞ்சத்தின் மேலாகவும் அடுக்கடுக்காக பிரபஞ்சங்கள் உள்ளன என்பது பல் பிரபஞ்சக் கொள்கையின் தத்துவம்.

 

முதலில் எள்ளி நகையாடப்பட்ட இந்தக் கொள்கைக்கு சமீப காலமாக மதிப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இதை ஆதரித்தவர்களுள் முக்கியமானவர் ஸ்டீபன் ஹாகிங்.இவருடன் இணைந்து இதை ஆராய்ந்த ஹெர்டாக் (Hertog) என்ற விஞ்ஞானி பல பிரபஞ்சங்கள் உள்ளன என்பதை ஹோலோகிராபி என்ற உத்தி மூலம் கண்டோம் என்கிறார்.

டபிள்யூ.டன் என்பவர் நத்திங் டைஸ்  (Nothing Dies) என்ற நூலில் அனைவரும் “எங்கேயோ இருந்து கொண்டே இருக்கிறோம்” என்கிறார். அதாவது யாரும் சாவதில்லை; ஒவ்வொரு கண வாழ்க்கையையும் இன்னொரு பிரபஞ்சத்தில் பதிவாகியுள்ளது அப்படியே இருக்கும்!

 

நவீன விஞ்ஞானம் கூறும் இப்போதைய பல் பிரபஞ்சக் கொள்கைப்படி நாம் அனைவருமே வாழும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற இந்தக் கொள்கையைக் கூட ஆதரிப்பதாக ஆகி விடும்.

சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வுப் பேப்பரின் கொள்கையை மறுத்து ஹாகிங் செய்தது ஒரு டாய் மாடல் (Toy Model) தான், தீர்க்கமாக இது பற்றி இன்னும் ஆராய வேண்டும் என்று சொல்கின்றனர்.

 

ஆக தனது கடைசி ஆய்வுத் தாளினாலும் கூட மிகவும் பேசப்படுபவராக ஆகி விட்டார் ஸ்டீபன் ஹாகிங்!

***