மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி! (Post No.4002)

Written by S NAGARAJAN

 

Date: 15 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.4002

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 26-5-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!

 

by ச.நாகராஜன்

 

 

கர்வம் என்பது ஒரு ஆயுதம் – 2003ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெய்ஸ் ஆஃப் ஈவில் என்ற படத்தில் ஹிட்லர் கூறுவது

 

 

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் நடத்தப்பட்ட, ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரமான கொலைகளுக்கு ஒரு கணக்கே இல்லை,

இவற்றில் மிகவும் மோசமான கொலைகள் கருணைக் கொலை என்ற பெயரில் நடத்தப்பட்டவை தாம்!

 

உடல் ஊனம் அல்லது குறைபாடு ஹிட்லரைப் பொறுத்த மட்டில் ஒரு மருத்துவக் குறைபாடு அல்ல. அது இனத்தின் மரபணுவில் இருக்கும் ஒரு குறைபாடு என்று கருதப்பட்டது.

ஹிட்லர் “தனது ஆர்ய இனம்” என்பது உயரிய இனம் என்று கருதியதால் ஆயிரக்கணக்கான உடல் ஊனமுற்றோரைச் சிறை செய்து கருணக்கொலை செய்து அவற்றின் மூளைகளை ஆய்வு செய்யக் கட்டளையிட்டான். இந்த மூளைகள் இன்னும் இருக்கின்றன.

 

 

இவற்றை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தி இந்த மூளைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 

இந்த ஆயிரக்கணக்கான மூளைகள் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட சிலைடுகள் உள்ளிட்டவை அனைத்தும் மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிரது.

2017, ஜூன் மாதம் துவங்கி மூன்று ஆண்டு காலம் 15 லட்சம் யூரோ (ஒரு யூரோ என்பது சுமார் 70 ரூபாய்) செலவில் இந்த பிரம்மாண்டமான ஆய்வு தொடங்க உள்ளது

இந்த மூளை ஆய்வுத் திட்டத்திற்கு அகிடன் டி 4 (Akiton T4)  என்று பெயர்.

 

தனது உயரிய இனத்தைச் “சுத்தமாக” வைத்துக் கொள்ள ஹிட்லர் 1933இல் தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் இந்த மூளை ஆராய்ச்சியை மேற்கொண்டான். மனம் மற்றும் உடல் ரீதியிலான குறைகள் இனத்தை அசுத்தப்படுத்தும் குறைகள் என்பது அவனது கருத்து.

 

1940இல் டி4 திட்டம் தொடங்கப்பட்டவுடன் ஆயிரக்கணக்கில் உடல் ஊனமுற்றோர் சிறை பிடிக்கப்பட்டு மரணக் கிடங்கு என்று சொல்லப்பட்ட ஓரிடத்தில் இருந்த கருணைக்கொலைக்கான ‘மருத்துவ தொழிற்சாலை மையங்க’ளுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு மரண ஊசி போடப்பட்டது. பெரியவர்க்ள் கேஸ் சேம்பரில் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

 

 

இப்படி கொல்லப்பட்டோர் சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதியாயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஐந்து சதவிகிதம் பேரின் மூளைகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.

 

மூளைகள் அனைத்தும் பெர்லினில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பப்பட்ட்ன. இந்த நிறுவனம் ஏராளமான விஞ்ஞானிகள் நோபல் ப்ரிசு பெற வழி வகுத்த ஒரு அருமையான நிறுவனம்.

 

 

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இதை மாக்ஸ்பிளாங்க் சொஸைடி தன் வசம் எடுத்துக் கொண்டது. விஞ்ஞானிகள் தாஙகள் மேற்கொண்ட மூளை மற்றும் செல் ஆராய்ச்சிக்கு இங்கு வந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த மூளைகளைப் பயன்படுத்தலாயினர்.

 

1980ஆம் ஆண்டு ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இன்னும் ஏராளமான மூளைகளைக் “கண்டுபிடித்தனர்”.

மாக்ஸ் ப்ளாங்க் சொஸைடி 1933 முதல் 1945 முடிய ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டோரின் மூளைகளை மூனிச்சில் உள்ள ஒரு கல்லறையில் புதைத்து வைத்திருந்தது. இவை இப்போது எடுக்கப்பட்டு விட்டன.

 

எழுபது ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருக்கும் இந்த மூளை ஆராய்ச்சி மிக பிரம்மாண்டமானது.

 

இதில், கொல்லப்பட்டோரை அடையாளம் கண்டு பிடித்து அவர்கள் பெயருடன் உரிய விதத்தில் அந்த மூளைகளைப் புதைப்பதும் ஒரு பெரிய நினைவுச் சின்னத்தை எழுப்புவதும் இந்த ஆய்வின் முடிவில் செய்யப்படும்.

 

எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை விஞ்ஞானத்தின் பெயரால் செய்யக்கூடாது என்பதற்கும் வரலாற்றை முறைப்படுத்துவதற்குமான ஒரு ஆராய்ச்சியாக இது கருதப்படுகிறது.

 

உலகம் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வந்து விட்டது!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மர்யா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Sklodowska)  என்ற இயற் பெயருடைய பெண்மணி தான் பின்னால் நோப பரிசு பெற்று பிரபலமான விஞ்ஞானி மேடம் க்யூரி (1867-1934) ஆவார். இளமையில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் பின்னால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

 

 

சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம் செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.

 

படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன முட்டாள்தனமான் காரியம் செய்திருக்கிறாய் என்பது தான் அவரது ஒரே கமெண்ட்..

 

மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் 1891இல் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பாரிஸில் தான் தன் எதிர்காலக் கணவரான பால் அபெல்லை (Paul Appelll) அவர் சந்தித்தார். தனது பரிசாக அவர் இளம் பெண்மணியான கியூரிக்கு அவர் தந்தது எலக்ட்ரோ மாக்னெடிஸம் பற்றிய ஒரு கட்டுரை தான்!

 

க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன. ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை. லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்ப்ட்ட டேவி மெடலை தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள் விளையாடுவதற்காகத் தந்தனர். (ஐரீன் பின்னால் தன் கணவருடன் இணைந்து ஒரு நோபல் பரிசைப் பெற்றவர்). அதை ஐரீன் பிக் கோல்ட் பென்னி – பெரிய தஙகத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.

1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம் கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க விருப்பமா என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க விரும்பவில்லை.

 

தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த இந்த மேதை.

****

 

 

‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு! (Post No.3999)

Written by S NAGARAJAN

 

Date: 14 June 2017

 

Time uploaded in London:-  6-13  am

 

 

Post No.3999

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா 9-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங் யோஷிரோ நகாமட்சு!

ச.நாகராஜன்

 

      “கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு தாம்ஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார். – அறிவியல் தகவல்

     இன்றைய உலகில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான பேடண்டுகளை எடுத்து பேடண்ட் கிங் என்று பெயர் பெற்றிருப்பவர் யோஷிரோ நகாமட்சு (Yoshiko Nakamatsu) என்னும் ஜப்பானியர் தான்! 1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி பிறந்து இப்போது 89 வயதாகியுள்ள இவர் தான் ஃப்ளாப்பி டிஸ்கைக் கண்டுபிடித்தவர். தாமஸ் ஆல்வா எடிஸன் ஏராளமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்தது போல இவரும் லீஃப் ஸ்பிரிங்குகளுடன் கூடிய குதிக்கும் ஷூக்கள், காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனை அதிகமாக்கும் நாற்காலி, செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி(CD), மூளைத் திறனைக் கூட்டும் சிகரட் போன்ற சாதனம், கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும் படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி உள்ளிட்ட சுமார் 4000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.

    6000 பேடண்டுகள் எடுப்பதும் 144 ஆண்டுகள் வாழ்வதுமே தன் லட்சியம் என்கிறார். பிரபலமான டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றவர் இவர்.

   ‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்ஸ் என்று ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம்  இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது!

    2013ஆம் ஆண்டு இவருக்குப் கான்ஸர் நோய் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சையை மேற்கொண்டு வந்த இவரிடம் டாக்டர்கள் இன்னும் 15 நாள் தான் வாழ முடியும் என்றும் டிசம்பர் 31, 2015இல் இறுதி வந்து சேரும் என்று கூறினர். ஆனால் அதைப் பொய்யாக்கி தனது சிகிச்சையிலும் தானே புதுவழிகளை மேற்கொண்டு இவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.ஆலிவ் ஆயிலும் ஒய்னும் கலந்த கான்ஸரை எதிர்க்கும் தன்மை கொண்ட ஒரு கலவையைக் கண்டு பிடித்து தனது கான்ஸரைக் குணமாக்க அவர் முயன்று வருவது லேடஸ்ட் செய்தி!

   ஜப்பானிய டாக்ஷோக்களில் பிரபலமாகிய இவர் தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

   தான் எப்ப்டி இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிக்க முடிந்தது என்பதற்கு இவர் கூறும் காரணம் சற்று விசித்திரமானதுநீரில் மூழ்கி இருக்கும் போது மூச்சுத் திணறி ஆக்ஸிஜன் இல்லாமல் போகும் நிலையில் மூளையில் இவருக்கு ஐடியாக்கள் தோன்றுமாம். மூளை ஆக்ஸிஜன் இல்லாமல் அறவே செயல் இழந்து இறக்கும் நிலைக்கு வருவதற்கு அரை வினாடி முன்னால் அவருக்கு படைப்பாற்றல் திறன் கூடுமாம்.

   அத்துடன் அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை என்ற காம் ரூமும் (Calm Room) அவருக்கு உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

  வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான்  எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது என்கிறார்.

 

   சிறந்த கண்டுபிடிப்பாளரான நகாமட்சுக்கு அரசியல் ஆர்வமும் ஆசையும் நிறைய உண்டு. கண்டுபிடிப்பின் ஒரு அங்கம் தான் அரசிய்ல் என்பது இவரது கருத்து.

     டோக்கியோவின் கவர்னருக்கான தேர்தலில் பலமுறை போட்டியிட்டிருக்கிறார், வெற்றி தான் கிடைக்கவில்லை. ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

      2005ஆம் ஆண்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு அளிக்கப்படும் இக்நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது. எதற்காக இந்தப் பரிசு என்றால் சுமார் 34 ஆண்டுகள் தான் சாப்பிடுவதற்கு முன் தன் உணவை விடாமல் போட்டோ எடுத்ததற்காக! ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காக அவரால் எடுக்கப்பட்ட போட்டோக்களே இவை! இக்நோபல் பரிசை மகிழ்வுடன் ஏற்ற இவர் அந்த விழாவில் தனது மருத்துவ நிலை பற்றி ஒரு பாடலையும் பாடினார்!

  நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு வாழ்நாள் தீர்க்கதரிசன விருது ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது

இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர்லவ் ஜெட் என்ற இவரது படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. அந்தரங்க ஜனன உறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டிய அதிசய படைப்பு இது. ‘ப்யான் ப்யான் பூட் என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

  இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

   ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாகி இளைய தலைமுறையினருக்கு இவர் ஹீரோ என்றால் இன்னும் பல ஜப்பானியருக்கோ இவர் கடவுளே தான்! புதுக் கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை   வென்றிருக்கும் இந்த புது படைப்புக் கடவுளின் புராணம் பெரியது, மகத்தானதும் கூட!.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு படிப்பாலும் உழைப்பாலும் முன்னுக்கு வந்தவர். தனது இளமை நாட்களில் தன் குடும்பத்தின் வருமானத்திற்காக செய்தித்தாள்களை தினமும் விநியோகிப்பது அவரது வழக்கம்.

 

அவர் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணமும் கொண்ட்வர். 1979இல் நடந்த சம்பவம் இது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் அவர் திட்ட இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு சாடலைட்டை விண்வெளியில் அனுப்புவதற்கான தேதியும் நேரமும் குறிக்கப்பட்டது. ஆனால் சாடலைட் ஏவுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக  கம்ப்யூட்டர் ஏவுகணையைச் செலுத்துவதில் உள்ள ஒரு தவறைக் காட்டியது. ஆனால் அப்துல்கலாமோ அந்த எச்சரிக்கையை ஒதுக்கி விட்டு அதை விண்ணில் திட்டமிட்டபடி ஏவி விட்டார். இதைப்பற்றி நகைச்சுவையுடன் பின்னால் அவரே கூறியது: “மீடியாக்களுக்கு நான் மிகவும் பயந்தேன். அது விண்ணில் செல்வதற்கு பதிலாக வங்காள் விரிகுடாவில் விழுந்தது”

 

 

ஆனாலும் இஸ்ரோவின் தலைவரான சதீஷ் தவான் பத்திரிகையாளர் கூட்டத்தில், “இன்னும் ஒரு ஆண்டில் விண்ணில் சாடலைட்டைப் பறக்க் விட்டு வெற்றி பெறுவோம்” என்றார். அதன்படியே பின்னால் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்தது.

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்! (Post No.3996)

Written by S NAGARAJAN

 

Date: 13 June 2017

 

Time uploaded in London:-  5-56  am

 

 

Post No.3996

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜூன் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்!

ச.நாகராஜன்

மனிதனின் செயல்பாட்டை நிர்ணயிக்க வல்ல முக்கியமான உறுப்பு மூளை. இதை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் அதிக ஆற்றலுடனும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாளுக்கு நாள் முன்னேறி வரும் மூளையியல் ஆராய்ச்சிகள் பல உத்வேகமூட்டும் உதவிக் குறிப்புகளை நல்குகின்றன.

மூளை ஆரோக்கியத்திற்கென மையம் ஒன்றை நிறுவியவர் சான்ட்ரா பாண்ட் சாப்மேன். (Sandra Bond Chapman Ph.D.) டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தப் பெண்மணி ‘மேக் யுவர் ப்ரெய்ன் ஸ்மார்டர் (Make Your Brain Smarter)  என்ற நூலை எழுதியுள்ளார். மூளை ஆற்றலை மேம்படுத்த  அவர் கூறும்         வழிகளில் முக்கிய,மான சிலவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம் :

அறிவியலின் வேகமான முன்னேற்றத்தால் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய காலத்தை ஒப்பிடும்போது இது அதிகம். என்றாலும் கூட மூளை ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்பவர் மிகச் சிலரே. சிறிது ஆர்வம் இருந்தால் கூட போதும், ஒருவர் தன் மூளை ஆற்றலை வெகுவாக முன்னேற்றிக் கொள்ளலாம்.

புதிய் விஷயங்களில் ஆர்வம் காட்டுவது, மூளைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது, தனக்கென பிரத்யேகமான சில பொழுதுபோக்கு ஹாபிகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்றவற்றால் மூளை ஆற்றல் மேம்படும்., நினைவாற்றலும் கூடும்.

போட்டி மிகுந்த இன்றைய நாட்களில் மூளையை கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். சிறிது நேரம் வேலை பார்த்தாலேயே மூளை களைப்புற்று சோர்வை அடைவது இன்றைய நாட்களில் பலருடைய அனுபவமாக ஆகி விட்டது.. இதற்காக வெவ்வேறு சுற்றுலா தலங்களை நாடி புத்துணர்ச்சி பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆனால் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சியை அன்றாடம் எடுத்து வந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமே!

 

எனக்கு கூர்மையான மூளை இல்லையே என்று ஏங்குவோருக்கு ஆறுதலைத் தரும் ஆறு வழிகள் இதோ:-

  • பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதைத் தவிருங்கள்

இன்றைய அவசர யுகத்தில் பலரும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய முயல்கின்றனர். மல்டி டாஸ்கிங் யுகம் இது என்று பெருமையாக வேறு சொல்லிக்  கொள்கின்றனர். மல்டி டாஸ்கிங் ஒருவரது மனோ ஆற்றலைக் குறைக்கிறது. மூளையைச் சீக்கிரம் சோர்வடையச் செய்கிறது. மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது. மாறாக ஒரே ஒரு காரியத்தை எடுத்துக் கொள்வது அதை செவ்வனே திற்ம்படச் செய்வது என்ற வழி முறையை மேற்கொண்டால் வேலையும் சிறப்பாக முடியும்; மூளையும் சோர்வடையாது.

2)  தேவையான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை அன்றாடம் ஒவ்வொருவருக்கும் உறக்கம் தேவை. தூங்கும் நேரத்தில் தான் மூளை உள்ளார்ந்த ஆழ்நிலை மட்டத்தில் தகவல்களை ஒருங்கு சேர்த்து இணைத்துக் கொள்கிறது. இரவில் வெகு நேரம் முழித்திருந்து தூக்கத்தை தியாகம் செய்தால் மூளை ஆற்றலையும் செயல் திறனையும் தியாகம் செய்ததற்குச் சமம்

  1. உடல்பயிற்சி தேவை

ஒரு நாளைக்கு 30 நிமிட திறந்த வெளி உடற்பயிற்சி செய்வது உத்தமம்..  வாரத்திற்கு கும்றைந்த பட்சம் நான்கு முறையாவது இந்த 30 நிமிடப் பயிற்சியை அவசியம் செய்தல் வேண்டும். இது நினைவாற்றலைக் கூட்டுகிறது. கவனக் குவிப்பை மேமபடுத்துகிறது. மனதை ஒருமைப்படுத்துகிறது. மூளையில் உள்ள் நினைவாற்றலுக்கான பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது

  1. முக்கிய விஷயங்களைத் தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் படித்தவற்றில் முக்கியமானவற்றின் சுருக்கத்தை தனியே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கோர்ஸ் அல்லது கருத்தரங்கம் சென்றீர்களா, உங்களுக்குத் தேவையான முக்கியமானவற்றைத் தனியே எழுதுங்கள். நல்ல புத்தகம் படிக்கிறீர்களா, அதன் அடிப்படை செய்தியை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய ஐடியாக்கள் அல்லது யோசனைகள் தனியே குறிப்பது, நல்ல கவிதை அல்லது மேற்கோள்களுக்கான தனி நோட்புக்கைப் பயன்படுத்துவது ஆகியவை மூளையின் நீண்ட கால நினைவாற்றலைக் கூட்ட வழி வகுக்கிறது. இது உலகளாவிய அளவில் உள்ள நல்ல கருத்துக்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளவும், அடிப்படை உண்மைகளைத் திரும்பத் திரும்ப பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.

5. முக்கிய விஷயங்களில் கூர்மையான கவனக் குவிப்பு தேவை

தேவையற்ற விஷயங்கள் மற்றும் தகவல்களைத் தூக்கி எறியுங்கள். தேவையற்றதை படிக்காமல், பார்க்காமல் இருப்பது மூளை செயல்பாட்டைத் திறம்படச் செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியம் வேண்டுவோர் ‘இன் டேக் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் உள் கிரகிக்கும் விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது  என்பது பற்றிய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

  1. உத்வேகத்துடன் இருங்கள்

எப்போதும் உத்வேகமூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை வேகமாகவும் மிக்க வலுவுடனும் மூளையில் நியூரல் கனெக்‌ஷன்களை – மூளைத் தொடர்புகளைக் கொள்ண்டதாகவும் ஆகிறது. உங்களுக்கு விருப்பமான விஷயங்களை இனம் காணுங்கள். அதில் அக்கறை செலுத்தி அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்து பரவ்சப்படுங்கள்.

 

ஆறு மனமே ஆறு, மூளையை மேம்படுத்தும் வழிகள் ஆறு!

இவற்றைக் கடைப்பிடித்தால் கூர்மையுடனும் ஸ்மார்ட்டாகவும் ஆகி விடலாம்!

****

 

 

 

“ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன் (Post No.3993)

Written by S NAGARAJAN

 

Date: 12 June 2017

 

Time uploaded in London:-  6-59  am

 

 

Post No.3993

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாக்யாவில் வெளி வரும் அறிவியல் துளிகள் தொடரில் 19-5-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

“ஆற்றல் புரட்சி செய்யும் 13 வயதுச் சிறுவன்

ச.நாகராஜன்

“ மின்சாரம், நீர், ஏன், இசை நிகழ்ச்சி கூடத்தான் – இவை எல்லாவற்றையுமே நாம் எளிதில் கிடைப்பவையாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குக் கிடைத்த வரங்களை எண்ணிப் பாருங்கள் – டாமியன் மார்லே

 

    பதிமூன்றே வயதான ஒரு சிறுவன் உலகில் ஆற்றல் புரட்சியைச் செய்கிறான் என்றால் அது விழிகளை விரிய வைக்கும் ஆச்சரியச் செய்தி தானே

அதிசயம், ஆனால் உண்மை! அமெரிக்காவில் நெவேடா பகுதியைச் சேர்ந்த மாக்ஸ் லோகன் (Max Loughan)  என்ற சிறுவன் தான் பிறந்ததன் நோக்கமே உலகைபிரகாசப்படுத்தத் தான் என்று அடித்துச் சொல்கிறான்.

தந்தையின் பாய்லர் அறை தான் அவனது லாபரட்டரி. எப்போதும் ஒரு லாபரட்டரி கோட்டை அணிந்து வலம் வரும் இந்தச் சிறுவனுக்கு உத்வேகம் ஊட்டுவது ஐன்ஸ்டீனும் நிகோலா டெஸ்லாவும் தான்.

இன்றைய தேவை பவர் தான். இதை இலவசமாக எடுக்க முயன்றால் உலகின் சர்வ பிரச்சினைக்ளும் தீரும் என்று தீர்க்கமாகக் கூறும் லோகன் தனது இரட்டைபிறவியாகப் பிறந்த தம்பி ஜாக்கின் மீது வயர்களைச் சுற்றுகிறான்.

ஒரு காப்பி டின், கொஞ்சம் வயர்கள், இரண்டு காயில்கள், ஒரு ஸ்பூனை வைத்து அவன் உருவாக்கியது எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர்.

இந்தக் கருவியியை வைத்துக் கொண்டு வயர்களை வானத்தை நோக்கிக் காட்ட வானிலிருந்து ஹார்வெஸ்டர் மூலமாக ஆற்றலைப் பெறுகிறான். அதை .சி. மின்சாரத்திலிருந்து டி.சியாக மாற்ற தம்பியின் மீது சுற்றப்பட்ட வயரில் இணைக்கப்பட்ட எல்..டி.பல்புகள் பளிச்சென்று எரிகின்றன.

இந்தச் சிறிய கருவியை உருவாக்க ஆன செலவு வெறும் 14 டாலர்கள் தான். இதையே பெரிய அளவில் செய்தால் ஏராளமான மின்சக்தி கிடைக்கும்.

அதாவது படிம எரிபொருளான பெட்ரோல், டீஸல் போன்றவை இல்லாமல் விண்ணிலிருந்தே இலவசமாக ஆற்றலைப் பெற முடியும். படிம எரிபொருளைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் வாகனங்கள் கக்கும் புகை வளி மண்டலத்தை மாசு படுத்தாது. வளி மண்டலம் சுத்தமாக இருந்தால் உலகின் இன்றைய அபாயமானபூமி வெப்ப மயமாதல் என்பது நீங்கி விடும்.

ஆக, இலவசமாக ஆற்றலைப் பெகறுவது சாத்தியம் தான் என்பதை நிரூபித்துக் காட்டிய லோனை டி.விக்கள் மொய்க்கின்றன.

பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா 75 ஆண்டுகளுக்கு முன் வகுத்த கருத்தின் அடிப்படையில் அவர் செய்ய விழைந்த இலவச ஆற்றலைப் பெறும் உத்திக்கான கருவியை இப்போது செய்யும் லோகனைப் பாராட்டாதவரே இல்லை.

 

எலக்ட்ரோ மாக்னடிக் ஹார்வெஸ்டர் என்னும் கருவி எங்குமுள்ள எலக்ட்ரோ மாக்னெடிக் ஆற்றலைத் தன்னுள் பிடித்து சேமித்து வைத்துக் கொண்டு தேவையான இடத்தில் மின் சக்தியை வழங்கும்.

அபல்லோ 13 என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஒரு பரபரப்பான காட்சி வரும். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் ஒரு அறை முழுவதும் நிரம்பியிருக்கும் அதி புத்திசாலிகள் முடங்கி விட்ட விண்கலத்தை எப்படி மீண்டும் இயக்கி அதில் இருக்கும் மூன்று விண்வெளி வீரர்களை எவ்வாறு மீட்பது  என்பதைப் பற்றி தீவிரமாக விவாதிப்பர். அதில் ஒருவர், “நண்பர்களே, இது அனைத்துமே ஆற்றலைப் பற்றியது தான்! (Hey Fellows, It is all about Powr) என்று முத்தாய்ப்பாகக் கூறுவார். இந்த திரைப்படத்தின் பொருள் பொதிந்த இந்தக் கூற்று பிரபலமாகி விட்டது.

 ஆமாம், ஆற்றல் மயம் உலகம். ஆற்றல் இல்லையேல் உலகமே இயங்காது.

உலகின் மிகப் பெரிய விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா (Nicola Tesla – பிறப்பு 10-7-1856 மறைவு 7-1-1943)வயர்களே இல்லாமல் மின்சக்தியை உலகெங்கும் வழங்குவது குறித்து ஆழ்ந்து சிந்தித்து ஒரு காயிலை 1891ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அது நிகோலா காய்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் அவர் இந்த அரிய வயர்கள் இல்லாத மிவின்சக்தியைக் கண்டுபிடிக்கப் போகும் போது ஏற்பட்ட விபத்தினால் அதன் பயன்பாடு தடைப்பட்டது.

  அவரது டெஸ்லா காயிலை மேம்படுத்தி உருவாக்கிப் பயன்படுத்தும் முயற்சியில் உலகின் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

  இதில் வெற்றி பெற்றால் உலகின் வாழ்க்கை முறையே மாறிப் போகும்.  இந்த வகையில் 13 வயதுச் சிறுவன் லோகன் உத்வேகமூட்டும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துச் சாதித்திருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று தானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அனலாடிகல் ஜாமட்ரியின் தந்தை என்று கூறப்படும் பிரபல விஞ்ஞானியான ரெனே டெஸ்கார்டெஸ் (1596-1650) இளமையிலேயே மேதையாக விளங்கியவர். ஆனால் அவருக்கு காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் கிடையாது. தினமும் காலையில் 11 மணிக்கு முன்னதாக அவர் நிச்சயமாக எழுந்திருக்க மாட்டார். அவர் இராணுவத்தில் பணியாற்றியபோது கூட இந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. இராணுவத்தில் அவரது உயர் அதிகாரிகளோ அல்லது அவரது பள்ளியில் அவருக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களோ இதை மாற்ற முயற்சிக்கவில்லை. அவரது காலை பழக்கம் அப்படியே தொடர்ந்து வந்தது.

பின்னால் தனது இந்தப் பழக்கத்தைப் பற்றி அவர் கூறுகையில் தனது எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தத்துவ சிந்தனைகளும் காலையில் படுக்கையில் படுத்திருக்கும்போதே தோன்றின என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த சந்தோஷகரமான காலைத் தூக்கம் 1649ஆம் ஆண்டு ஒரு முடிவுக்கு வந்தது. ஸ்வீடனின் ராணியான கிறிஸ்டினா அவரைத் தனக்கு ஜாமட்ரி சொல்லித் தரும் பணியைத் தந்தார். ஆகவே அவர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு ராணிக்கோ காலை ஐந்து மணிக்குத் தான் கணிதம் கற்க நேரம் இருந்தது. ஆகவே டெஸ்கார்டெஸ் காலையில் எழுந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

 

காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற் அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அத்துடன் காலையில் இருளில் பனி படர்ந்த குளிர் காலத்தில் நடந்து ராணியின் அரண்மனைக்குத் தொடர்நது சென்று வந்ததால் அவருக்கு நிமோனியா ஜுரம் வந்தது. அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக ஆனது.

காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் ஒரு சின்ன கெட்ட பழக்கம் ஒரு விஞ்ஞானிக்கு எமனாக அமைந்தது துரதிர்ஷ்டமே!

***

 

 

 

 

மஹாபாரதம் உண்மையே; ஆண்களுக்கும் குழந்தை பிறக்கும் (Post No.3934)

Pregnant Man Chris

Research article written by London Swaminathan

 

Date: 23 May 2017

 

Time uploaded in London: 10-53 am

 

Post No. 3934

 

Pictures are taken from various sources such as Face book, google and SUN and MIRROR newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

மஹாபரதத்தில் நிறைய விஞ்ஞான விந்தைச் செய்திகள் உள்ளன. காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய இரட்டையர் (Siamese Twins) ஆபரேஷன், நமக்குத் தெரியாத அதிசயப் பறவைகள், அலிகளாகப் (Transgender) பிறந்தோர் ஆபரேசன் செய்து ‘செக்ஸ்’ மாறியது, யுக முடிவு, பிரம்மாஸ்திரம் என்னும் அணுஆயுத ஏவுகணை (Nuclear missile) – இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்; இவை பற்றி எல்லாம் நான் எழுதிய கட்டுரைகளை இந்த பிளாக்கில் படிக்கலாம்.

 

ஆண்கள் குழந்தை பெற முடியுமா? ஆமாம், பெற முடியும் என்று மஹாபாரதமும் விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது.

 

மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில் இது பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல. குழந்தை பிறப்பில் பெரிய புரட்சியே நடைபெறப் போகிறது. அதாவது இனிமேல் மலடி என்று எந்தப் பெண்ணும் இருக்க மாட்டாள்; ஏனெனில் எலிகளின் உடலில் செயற்கை கர்ப்பப் பைகளைப் பொருத்தி ஆராய்ந்ததில் அது இயற்கையான கருப்பை, என்ன என்ன ஹார்மோன்களைச் சுரந்து,  ‘வளரும் கரு’வைக் காப்பாற்றுமோ அத்தனையையும் இந்தச் செயற்கைக் கருப்பையும் செய்வதை அறிந்தனர். எதிர்காலத்தில் கருப்பை கோளாறுகளால் குழந்தை பெற முடியாதவர்கள் என்று எவரும் இரார். நிற்க.

 

மஹாபாரதத்தில் குறைந்தது இரண்டு கதைகளிலாவது ஆண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டது தெரிகிறது.

மாந்தாதா என்ற மன்னனை சோழர்களும்கூட தங்கள் முன்னோன் என்று சொல்லிக் கொள்வர்; அவருக்குத் தாய் கிடையாது. ஏனெனில் அவர் தந்தையிடமிருந்து பிறந்தார். பைபிளில் ஏவாள் என்ற பெண்மணியும்  ஆதாம் என்னும் ஆணிடமிருந்தே ‘பிறந்தாள்’. மாந்ததாவைப் பொருத்தமட்டில், அவர் யவநஸ்வா என்ற ஆணிடமிருந்து உருவானவர். யவநஸ்வாவின் மனைவியருக்காக ரிஷி முனிவர்கள் தயாரித்து வைத்திருந்த விஷேச திரவத்தை அவர் குடித்ததால் மாந்தாதா பிறந்தார் என்று இரண்டு பர்வங்களில் சொல்லப்பட்டுள்ளது. சூரிய குல மன்னர்களில் சிறப்பான ஆட்சிசெய்த மன்னர்களில் இவரும் ஒருவர்.

ஆண்களும் குழந்தை பெற்றதற்கு இது ஒரு சான்று.

 

இன்னொரு பர்வத்தில் பங்கஸ்வன என்ற மன்னனின் கதை சொல்லப்பட்டுள்ளது. இவன் ஆணாக இருந்து பல குழந்தைகளைப் பெற்றதாகவும் இதனால் கோபம் கொண்ட இந்திரன் அந்த மன்னனைப் பெண்ணாக மாற்றியதாகவும் அப்பொழுதும் அவன் பல குழந்தைகளைப் பெற்றதாகவும் 13- ஆவது பர்வத்தில் வருகிறது. ஆக அக்காலத்திலேயே இவைகளுக்கான உத்திகளை மருத்துவர்கள் கையாண்டனர். ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன.

Amy and Chris with their two children

பிரிட்டிஷ் பத்திரிக்கை செய்திகள்

 

ஆணோ பெண்ணோ இல்லாமல் அலியாகப் பிறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு குணத்தை தூண்டிவிட்டு குழந்தை பெற வைக்கின்றனர். இதோ சில செய்திகள்:-

 

வெள்ளைக்கார கணக்குப்படி உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண் தாமஸ் பீட்டி எனபவராவார்.அவருக்கு மூன்று குழந்தைகள். பெண்ணாகப் பிறந்த அவர் காலப்போக்கில் ஹார்மோன் சிகிச்சையால் ஆணாக மாறினார். ஆயினும் இனப்பெருக்க உறுப்புகள் அப்படியே இருந்தன. ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறந்தன. செயற்கை முறை யில் ஆணின் விந்துவை உடலில் செலுத்தி குழந்தை பெற்ற இவர் அமெரிக்காவின் அரிசோனா மாநில பீனிக்ஸ் நகரைச் சேர்ந்தவர். 46 வயதான இவருக்கு இப்படிக் குழந்தை பிறந்தது 2007 ஆம் ஆண்டில்.

 

ஆனால் மஹாபாரதத்திலோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது

கனடாவைச் சேர்ந்த ட்ரெவர் மக்டொனால்டு ஆண்கள் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டு தன் குழந்தைக்கு பால் கொடுத்த செய்தியை வெளியிட்டுள்ளார். 31 வயதான இவர், இரவு நேரத்தில் பிரசவ வேதனையுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது தாடியுடன் வந்த ஆணுக்கு இரவு நேரத்தில் பிரவ வார்டில் என்ன வேலை என்று சொல்லி ஆஸ்பத்திரி காவற்காரர் உள்ளே விட மறுத்துவிட்டார்.

 

பிரிட்டனில் முதல் “ஆண் அன்னை” (Male Mother) 2011ல் குழந்தையை ஈன்றார். அதே ஆண்டில் யுவல் டாப்பர் என்ற ஆண் இஸ்ரேலில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

Amy with her daughter

ஸ்பெயின் நாட்டில் ரூபன் என்ற ஆணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.

 

இந்த ஆண்டு பிரிட்டனில் இரண்டு ஆண்கள் கர்ப்பம் அடைந்ததை பத்திரிக்கைகள் ஏராளமான புகைப் படங்களுடன் செய்தியாக வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்தன.

 

இதற்கு முன் கிறிஸ் டூபின் என்பவருக்கு பெண் குழந்தை பிறந்த கதை சுவையானது. இவர் ஆண். ஆனால் பிறப்பில் கிறிஸ்டீனா என்ற பெண். பிற்காலத்தில் ஆணாக மாறியபின்னர். அமி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால அமீக்கு கர்ப்பப் பை கோளாறு காரணமாக ஐந்து ஆண்டுகளாக  குழந்தை இல்லை. அந்த நேரத்தில் கிறிஸ் தனது கர்ப்பப்பை அப்படியே இருப்பதால் தான் குழந்தை பெற்றுத்தர தயார் என்றார். செயற்கை முறையில் பெண்ணின் கரு முட்டையை உள்ளே செலுத்தி 2014ல் குழந்தையும் பெற்றார். மனைவிக்கு ஒரே பொறாமையும் வருத்தமும். மீண்டும் முயன்றார். அவருக்கு 2016ல் ஆண் குழந்தை பிறந்தது. பத்திரிகைகளுக்கு ஒரே கொண்டாட்டம். செய்திகளையும் படங்களையும் அள்ளித் தெளித்தன. இதைப் பார்த்த பல (Transgenders) அலிகள் இப்பொழுது துள்ளிக் குதித்த வண்ணமாக இருக்கின்றனர். பிரிட்டனில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடித்து கணவன்- மனைவி என்று அறிவிக்க சட்டம் வழி செய்துவிட்டதால் அவர்களுக்குக் கொண்டாட்டம். இனி மக்களுக்குத் தான் திண்டாட்டம்.

xxx

Pregnant Man Hayden Cross

பி பி சி தமிழோசை ஜோக்!

25 ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் பி.பி.சி ஸ்டூடியோவில் (BBC World Service in London) தமிழோசையில் செய்தி வாசிக்க உட்கார்ந்தேன். ஸ்டூடியோ மிஷின்களை இயக்க கண்ணாடி அறையின் மறு புறம் வேறு ஒரு உருவம் உட்கார்ந்தது .

. ஒலிபரப்புக்கு ரெட் லைட் RED LIGHT– சிவப்பு விளக்கு — வரும் வரை நான், சங்கர் அண்ணா,  ஆனந்தி சூர்யப்பிரகாசம் ஆகிய மூவரும் அரட்டை அடிப்பது வழக்கம். ஸ்டூடியோவின் அடுத்த பக்கம் உடகார்ந்த ஊழியர் ஆணா பெண்ணா என்று எங்களுக்குள் விவாதம். உடை மூலமோ, நடை மூலமோ, குரல் மூலமோ, பெயர் மூலமோ கண்டு பிடிக்க மூவரும் முயன்றோம்; பலனில்லை. எங்களுக்கு ஒரே ஏமாற்றம். வெட்கத்தை விட்டு, உலக இங்கித த்தை மறந்து அவரிடம் நீ ஆணா பெண்ணா என்று கேட்க மூவருக்கும் துணிச்சல் இல்லை. ஒலிபரப்பு முடிந்தவுடன் அவர் அறைக்குள் சென்று ஒரு நோட்டம் விட்டு ஒலிபரப்பு நாடாச் சுருளை (Recorded Tape) வாங்கிக்கொண்டு, எங்கள் அறைக்குத் திரும்பினோம். பிறகும் நீண்ட நேரத்துக்கு அந்த ஆண்-பெண் உருவத்தைப் பற்றி அடுத் த  அறை நேபாளி மொழி ஒலிபரப்பாளர்களுடன் விவாதித்தோம். ஒரே சிரிப்பு. சில அடல்ட்ஸ் ஒன்லி Adults Only ஜோக்குகள் வேறு! அவைகளை  இங்கே எழுத முடியாது!!!

 

===== subham======

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (Post No.3933)

Written by S NAGARAJAN

 

Date: 23 May 2017

 

Time uploaded in London:-  5-43 am

 

 

Post No.3933

 

 

Pictures are taken from different sources such as Wikipedia, Face book, google for non commercial use; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?

ச.நாகராஜன்

 

 

108இன் மகிமை

பாரத நாட்டில் 108 என்ற எண்ணுக்கு தனிப் பெருமை இருக்கிறது. இறைத் துதிகள் எல்லாமே பொதுவாக அஷ்டோத்திரங்களாக அதாவது 108 துதிகளாக அமைந்திருக்கின்றன! உபநிடதங்களுள் முக்கியமானவையாக 108 உபநிடதங்களே குறிப்பிடப்படுகின்றன!

வைணவ திவ்ய தேசங்கள் – திருப்பதிகள் – 108 தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் தான்!

நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108.

 

 

புத்தமதம் போற்றும் 108

புத்த மதத்திலும் 108 என்ற எண்ணுக்கு அதிக மதிப்பும்  மகிமையும் தரப்படுகின்றன. ஜப்பானில் உள்ள ஜென் ஆலயங்களில் புத்தாண்டின் வரவை 108 முறை மணியை ஒலித்து வரவேற்கின்றனர்.

புத்த ஆலயங்களை அடைய 108 படிக்கட்டுகள் உள்ளன. இவை மூன்று முப்பத்தாறு படிக்கட்டுகள் கொண்டவையாக அமைக்கப்படுகின்றன! புத்தரின் இடது பக்கத்தில் 108 புனிதக் குறிகள் அல்லது லட்சணங்கள் இருப்பதாக புத்த மத நூல்கள் கூறுகின்றன.

 

 

புத்தரின் உபதேசங்கள் அடங்கிய நூல்களின் தொகுப்பு திபெத்தில் புத்த பிரிவினரால் 108 பாகங்களாகத் தொகுத்து (Kanjur  எனப்படுகிறது) அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் 108 என்ற எண் இறைவனைக் குறிக்கிறது. சீக்கிய மதத்தில் 108 மணிகள் அடங்கிய மாலையே உபயோகிக்கப்படுகிறது.

 

பௌத்தர்களும் இந்துக்களும் 108 மணிகள் அல்லது ருத்ராக்ஷங்கள் கோர்க்கப்பட்ட மாலைகளையே ஜபத்திற்குப் பயன்படுத்துகின்றனர். டாவோ புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்

 

இந்த மாலையை சு-சு  (Su-Chu) என்று குறிப்பிடுவதோடு அதை மூன்று முப்பத்தாறு மணிகளாகக் கோர்த்து உபயோகிக்கின்றனர்.

ஜைன மதத்தில் ஐந்து விதமான புனித குண நலன்கள் முறையே 12, 8, 36,25,27 என்று குறிக்கப்பட்டு மொத்தம் 108 ஆகிறது.

 

இப்படி 108இன் உபயோகத்தை உரைக்கப் போனால் பெரும் நூலாக ஆகி விடும்! அப்படி இந்த எண்ணுக்கு என்ன மகிமை? ஏன் நூறாகவோ அல்லது வேறு ஒரு எண்ணாகவோ இவை அனைத்தும் இருக்கக்கூடாது?

 

நம் முன்னோர்கள் காரணத்தோடு தான் இந்த 108 என்ற அபூர்வ எண்ணை புனிதமான அனைத்துடனும் சம்பந்தப்படுத்தி இருக்கிறார்கள்!

 

வானவியல் காரணம்

சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவைப் போல 108 மடங்கு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளூடே சஞ்சரிக்கின்றன.பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கி வருவது 108. ஆகவே இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையா இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது.

ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. பகலில் 10800. இரவில் 10800. இதுவும் 108இன் மடங்கு தான்!

ஒரு நாள் என்பது 60 கதிகளைக் கொண்டது. ஒரு கதி என்பது 60 பலங்களைக் கொண்டது. ஒரு பலம் என்பது 60 விபலங்களைக் கொண்டது. ஆகவே ஒரு நாள் 21600 பகுதிகளையும் – பகல் இரவு 10800 பகுதிகளையும் -உடையதாக இருக்கிறது. ஆகவே இந்த 108 என்ற எண்ணிக்கை காலம் மற்றும் வெளியை ( Time and Space ) இயற்கையோடு இயைந்த லயத்தின் அடிப்படையில் இயங்க வழி வகுக்கிறது!

 

 

ஜீவனும் பரமனும்

ராமகிருஷ்ண ம்டத்தைச் சேர்ந்த சுவாமி ப்ரேமானந்தர் இன்னொரு அற்புதத் தொடர்பை  எடுத்துக் காட்டுகிறார்.

108 என்பது மந்திரங்களை உச்சரிக்க சரியான தெய்வீக எண்ணிக்கை என்பதை  வராஹ உபநிடதத்தை மேற்கோள் காட்டி அவர் விளக்குகிறார்.ஒவ்வொருவர் உடலும் அவரவர் விரலின் பருமனால் (கிடைமட்டமாக வைத்துப் பார்க்கும் போது) சரியாக 96 ம்டங்கு இருக்கிறது!

 

பரம்பொருள் என்னும் பரமாத்மன், ஒருவனின் நாபியிலிருந்து 12 விரல் அளவு மேலே இருக்கிறான். ஆக இந்த 96 மற்றும் 12 எண்களின் கூட்டுத்தொகையான 108 ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதைக் குறிக்கிறது. அதாவது 96 விரல் அளவு உள்ள மனிதன் 12 பாகங்கள் உள்ள பரமாத்மாவுடன் சேர்வதை 108 முறைப்படுத்துகிறது.

 

ஆகவே ஆன்மீகப் பெரியோர்கள் இறைவனின் நாமத்தை 108 முறை சொல்லும் போது அது படிப்படியாக உயர்நிலை பெற்று பரமாத்மாவுடன் ஒன்று படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தனர்!

 

இதை இன்னொரு முறையாலும் பார்க்க முடியும். சூரிய மண்டலத்தில் 12 ராசிகள் உள்ளன. அதாவது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சம் என்னும் பரமாத்மாவுடன் ஜீவாத்மா ஒன்று படுவதை 108 குறிப்பிடுகிறது.

 

பாபாவின் விளக்கம்

ஸ்ரீ சத்ய சாயி பாபா 108 என்ற எண்ணிக்கை காரணம் இல்லாமல் அமைக்கப்படவில்லி என்று கூறி விட்டு அதற்கான காரணத்தை விளக்குகிறார்.

 

மனிதன் ஒரு மணிக்கு 900 முறை சுவாசிக்கிறான். அதாவது பகலில் 10800 முறை சுவாசிக்கிறான். ஒவ்வொரு சுவாசத்தின் போதும் ‘ஸோஹம்’ (நான் அவரே) என்று சொல்ல வேண்டும். ஆகவே 216 என்ற எண்ணும் அதில் பாதியான 108 என்ற எண்ணும் மிக முக்கியத்துவம் உடையதாக ஆகிறது. மேலும் அது பனிரெண்டின் ஒன்பது மடங்கு. பனிரெண்டு சூரியனைக் குறிக்கிறது. ஒன்பது பிரம்மத்தைக் குறிக்கிறது.

அதோடு மட்டுமல்ல. ஒன்பதை எதனுடன் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத் தொகை) ஒன்பதாக்வே இருக்கிறது!

9 x 8 = 72;         7+2=9

9 x 7 = 63;          6+3= 9

இதே போல அனைத்தும் ஒன்பதாக ஆகிறது. கடவுளை எதனுடன் பெருக்கினாலும் (அதாவது இணைத்தாலும் ) அது கடவுளாகவே ஆகிறது!

ஆனால் மாயையின் எண் 8. இதோடு எதைப் பெருக்கினாலும் அது குறைகிறது.

2 x 8 = 16; 1=6=7 (எட்டிலிருந்து ஒன்று குறைந்து ஏழாகிறது)

3 x 8 = 24; 2+4 = 6;

4 x 8 = 32;  3+2 = 5

 

இம்மாதிரி மதிப்பில் குறைந்து கொண்டே போவது தான்  மாயையின் சின்னம்!

தேவர்கள் அமிரதம் எடுக்க பாற்கடலைக் கடைந்த காலம் ஏறக்குறைய 10800 நாட்கள் தாம்! (10478 நாட்கள் 12 மணி 18 நிமிடம்)

 

ஸ்ரீ யந்திரத்தில் உள்ள மூன்று கோடுகள் வெட்டுவதால் ஏற்படும் புள்ளிகளின் எண்ணிக்கை 54. இவை ஒவ்வொன்றும் ஆண், பெண் – அல்லது சிவம் மற்றும் சக்தியைக் குறிப்பிடும் போது 108 (2 x 54  = 108) ஆகிறது. எல்லையற்ற சக்தியை, அருளைத் தருகிறது. உடலில் உள்ள சக்கரங்கள் 108. உடலிலே உள்ள வர்மப் புள்ளிகள் 108. இவற்றால் இறைவன் உணரப்படுகிறான்.                                                     27 நட்சத்திரங்கள் நான்கு திசைகளினால் பெருக்கப்பட்டால் வருவது 108 என்றும், வானத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், தீ, காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்பதுத்தி வருவது 108 என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இது பூரணத்துவத்தைக் குறிப்பிடுகிறது

 

.கணிதம் காட்டும் மெய்ப்பொருள்

கணித இயலில் 108 ஒரு அபூர்வ எண்!

ஒன்றின் ஒரு ம்டங்கும், இரண்டின் இரு மடங்கும், மூன்றின் மும்மடங்கும் சேர்ந்தால் வருவது 108 ( 1x1x2xx2x3x3x3 = 1 x4 x27 = 108)

இதில் ஒன்று ஒரு பரிமாண உன்மையையும், இரண்டின் மடங்கு இரு பரிமாண உண்மையையும் மூன்றின் மடங்கு முப்பரிமாண உண்மைகளையும் காட்டுகிறது. அனைத்தும் இணையும் போது வருவதே எல்லாமாகிய மெய்ப்பொருள் ஆகும்!

இப்படி 108இன் மகிமையை உபநிடங்களும் வான்வியல் உண்மைகளும், கணித இயலும் வியந்து போற்றுகின்றன!

 

 

உணர்வதே உய்வதற்கான வழி

‘கரையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் கடலின் ஆழம் தெரியுமா என்ன’ என்று கேட்டு ஸ்ரீ சத்ய் சாயி பாபா, ‘ஆழ்ந்து மூழ்கத் தயங்கினால் உங்களால் முத்துக்களைப் பெற முடியாது’ என்கிறார்.

 

 

ஆகவே 108ன் பெருமையை உணர்ந்தால் மட்டும் போதாது. 108 முறையிலான ஜபமாலை உபயோகம், திவ தேச தரிசனம், சக்தி பீட யாத்திரை உள்ளிட்ட அனைத்தையும் அவரவருக்கு உகந்த முறையில் கடைப்பிடித்து மெய்ப்பொருளை அவரவரே உணர்வது தான் ஏற்றம் பெற்று உய்வதற்கான வழி!

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

Hindu’s Magic Numbers 18, 108, 1008

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930) | Tamil and …

https://tamilandvedas.com/…/சந்திர-எண்-1080-இன்-ம…

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930). Written by S NAGARAJAN. Date: 22 May 2017. Time uploaded in London:- 7-18 am. Post No.3930. Pictures are taken from different sources; thanks. contact: swami_48@yahoo.com.

 

 

–subham–

சந்திர எண் 1080-இன் மர்மம்! (Post No.3930)

Written by S NAGARAJAN

 

Date: 22 May 2017

 

Time uploaded in London:-  7-18 am

 

 

Post No.3930

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 1

சந்திர எண் 1080-இன் மர்மம்!

 

ச.நாகராஜன்

 

எண்களில் உள்ளது பிரபஞ்ச ரகசியம் என்றால் ஆச்சரியமாக இல்லை?

 

எந்த எண்ணை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு மர்மமான ரகசியம் இருக்கிறது.

 

இந்த இரகசியத்தை அறிந்தவர்கள் அதைப் பயன்படுத்தும் போது அவர்கள் வாழ்க்கை சிறக்கிறது.

 

நியூமராலஜி எனப்படும் எண் ஜோதிடத்தையும் தாண்டியது இந்த விஷயம்.

 

உலகின் பழம் பெரும் நாகரிகங்களான ஹிந்து நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், அஸிரிய நாகரிகம் என்று இப்படி எதை எடுத்துக்  கொண்டாலும் அந்த நாகரிகத்தின் மூத்த குடிகள் இந்த எண் ரகசியத்தை அறிந்திருந்தார்கள்!

ஹிந்து வேதங்கள், புராணங்கள், மஹாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட ஹிந்து நூல்களில் எண்கள் பற்றிய ரகசியத்தை விரிவாகக் காணலாம்.

 

எண்களைப் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் அபூர்வ விஷயங்களை இவை தெரிவிக்கின்றன.

பைபிள், யூத மத நூல்கள்,புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றில் உள்ள பழைய நூல்கள் எண்களின் மஹிமையை ஆங்காங்கே விளக்குகின்றன.

 

எடுத்துக்காட்டாக எண்கள் பற்றிய தொடரின் இந்த முதல் கட்டுரையில் சந்திர எண்ணைப் பற்றிப் பார்க்கலாம்.

1080 என்பது சந்திரனின் ஆரத்தில் உள்ள 1080 மைல்களைக் குறிக்கிறது. சுவர்க்கத்தின் வரைபடத்தில் சந்திரன் ஒரு முக்கியமான ‘புள்ளி.’

 

இது 108 என்ற எண்ணின் பத்து மடங்கு.

ஹிந்து மதத்திலும் புத்த மதத்திலும் 108 என்ற எண் அபாரமான பெருமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

 

எண் 108இன் மஹிமை என்ற இந்த கட்டுரை ஆசிரியரின் கட்டுரையை படித்தால் இதன் மஹிமையை விளங்கிக் கொள்ளலாம்.

 

 

10800 ரிக்குகள் உள்ளது ரிக் வேதம். இந்த ரிக் ஒவ்வொன்றிலும் 40 எழுத்துக்கள் அல்லது Syllables உள்ளன.

ஜொராட்ரிய fire-altar இல் உள்ள செங்கற்களின் எண்ணிக்கை 10800.

1080 என்ற எண்ணுக்கு ஒரு ரகசிய ஆற்றல் உண்டு.

ஆன்மீக ரீதியிலும் அதிமானுட ரீதியிலும் இது ஒரு சக்தி வாய்ந்த எண்.

 

இது யின் என்ற பெண்மை சக்தியைக் குறிக்கிறது.

அதாவது இயற்கையின் இரவு பக்கத்தைக் குறிக்கிறது.

கிறிஸ்துவ மதத்தில் 1080 பரிசுத்த ஆவியின் (Holy Spirit) எண்.

கற்பனா சக்தி, மறைபொருள் ஆற்றல், தீர்க்கதரிசனமாக எதையும் கூறுதல் இந்த எண்ணுக்குரிய விசேஷ அம்சங்கள்.

இது அமிர்தக் கடலான பாற்கடலைக் குறிக்கும் எண்.

ஞானத்தின் ஊற்றுக்கண்ணாக அமைவது இந்த எண்.

பூமாதேவியின் எண்ணும் இது தான்.

 

பிரபஞ்ச லயத்தைக் குறிக்க ஒரு எண் வேண்டுமா, அது இது தான்!                                            -தொடரும்

 

Hindu’s Magic Numbers 18, 108, 1008 | Tamil and Vedas

Hindu’s Magic Numbers 18, 108, 1008

26 Nov 2011 – In Hinduism numbers have a lot of significance. … But 108and 1008 are used for all the Gods in Ashtotharam (108) and Sahasranamam (1008) …

 

 

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/17/mysterious-number-17-in-the-veda…

 

 

4 days ago – Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the …

 

Mystery Number 7 | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/mystery-number-7/

“It may be incidentally pointed out that the number 7 which gives thenumber of time units in Misrajati appears to have fundamental importancein nature. In most …

 

MOST HATED NUMBERS 666 and 13 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/most-hated-numbers-666-and-1…

 

29 Jul 2012 – No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have …

 

 

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 | Tamil and Vedas

Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2

3 Sep 2014 – Numbers in the Rig VedaRig Veda Mystery-2. Vedas 9. Research Paper written by London Swaminathan Post No. 1265; Dated 3rd …

 

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3 | Tamil and Vedas

Oldest Riddle in the World! Rig Veda Mystery –3

6 Oct 2014 – Rig Veda is the oldest religious book in the world. Even if we … 30)Numbers in the Rig VedaRig Veda Mystery – 2 –posted on 3rd Sep.2014

 

–subham–

நோயைக் காட்டி தப்பிய மன்னர்கள்! (Post No.3892)

Written by London Swaminathan

 

Date: 9 May 2017

 

Time uploaded in London: 19-57

 

Post No. 3892

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எதிரிகளைச் சமாளிக்க சாம, தான, பேத ,தண்டம் என்ற பல வழிகளைக் கையாளலாம் என்று அரசியல் நூல்கள் பகர்கின்றன. இது தவிர ஒரு வழி உண்டு. எதிரி நியாயமற்ற முறைகளைக் கையாண்டால் நாமும் ஏமாற்றிச் சமாளிக்கலாம். நோய் என்பதைக் காட்டி தப்பிய மன்னர்களும் உண்டு.

 

காஷ்மீரின் வரலாற்றை எழுதிய கல்ஹணர் என்பவர் ஜெயபீடன் (கி.பி.750) என்ற மன்னன் தப்பிய வரலாற்றைச் சொல்கிறார். கல்ஹணர் எழுதிய நூலின் பெயர் ராஜ தரங்கிணி

 

 

கஷ்மீரில் லூடா (LUTA) என்ற விநோத வியாதி உண்டு. இது வந்தால் உடம்பில் கொப்புளம் வந்து ஆள் மரணம் அடைவது உறுதி.

 

ஒருவகை விஷ சிலந்திப் பூச்சி உடம்பில் ஊர்ந்து சென்றால் இந்த வியாதி வரும் என்றும், இது தொற்று வியாதி என்பதால் யாரும் பக்கத்தில் நெருங்க மாட்டார்கள் என்றும் மக்கள் நம்பினர். லூடா என்றால் சிலந்தி என்று அர்த்தம். தமிழில் சிலந்தி நோய் என்று ஒன்று உண்டு. அது வேறு. இந்த லூடாவின் வருணனையைக் கேட்டால் பிளேக் என்னும் கொள்ளை நோய்தான் நினைவுக்கு வரும்.

 

ஒரு முறை ஜெயபீடன் எதிரிகள் கையில் சிக்கினான். அவர்கள் இவனைக் காவலில் வைத்தனர். அந்தக் காலத்தில் காஷ்மீரில் லூடா நோய் பரவி பெரும் பீதி ஏற்பட்டது. ஜெயபீடன் ஒரு தந்திரம் செய்தான். உடம்பில் தற்காலிக கொப்புளம் ஏற்பட எருக்கம் செடியின் பாலை தோல் மீது பூசிக்கொண் டான். கொப்புளம் வந்தால் அதைச் சமாளிக்க மாற்று மருந்துகளையும் வரவழைத்து தயாராக வைத்துக்கொண்டான். கொப்புளம் வந்தவுடன் உளவாளிகள் மூலம் எதிரி  அரசனுக்கு தகவல் போனது. அவன் உடனே பயந்து கொண்டு ஜெயபீடனை விடுவித்தான். ஜெயபீடன் தன்னுடைய நாட்டிற்குப் போய் பெரும்படையுடன் வந்து எதிரியை வென்றான்.

 

இது ராஜ தரங்கிணியின் நாலாவது தரங்கத்தில் உள்ள செய்தி. மற்றொரு இடத்தில் க்ஷேமகுப்தன் என்பவன், லூடா நோயால் இறக்கவே அவன் மகன் அபிமன்யுவைச் சிறு வயதிலேயே சிம்மாசனத்தில் அமர வைத்தனர் என்ற செய்தியையும் தருகிறான்.

அஷ்டாங்க ஹிருதய என்ற நூலில் இந்நோய் பற்றியும் சிகிச்சை முறைபற்றியும் உள்ளதாம்.

தமிழ்நாட்டிலும் வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் இப்படி நடந்ததுண்டு. அம்மை நோய் என்றால் பிரிட்டிஷ் காரர்களுக்கு பயம். அந்த

இடத்தை நெருங்கவே மாட்டார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள் எங்காவது ஒளிந்து கொண்டால், அவர்களைக் காப்பாற்ற, ஊர்க்காரர்கள் வீட்டு வாசல்களில் வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடுவராம். அம்மை நோய் பரவாமல் இருக்க இப்படிச் செய்வது வழக்கம். மேலும் இப்படி வேப்பிலை தொங்கும் வீடுகளில் நெருங்கிய உறவினர் தவிர யாரும் போகவும் மாட்டார்கள்.

 

பிரிட்டிஷாரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டபோது அவனை வெள்ளைக்காரர்கள் தூக்கிலிட்டனர். அப்பொழுது பாஞ்சாலக் குறிச்சி கோட்டையிலிருந்து தப்பிய ஊமைத்துரை முதலிய தலைவர்களும் இப்படி வேப்பிலை தந்திரம் செய்ததாகச் சொல்லுவர்.

 

ராணுவத்திலும் அலுவலகங்களிலும் இப்பொழுதும் யாருக்கோ உடம்பு சரியில்லை என்று சொல்லி லீவு  போட்டு வீட்டில் வேறு வேலை செய்வதில்லையா?அதுபோலத்தான் இதுவும்!

 

–Subahm–

உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!! (Post No.3848)

Written by S NAGARAJAN

 

Date:25 April 2017

 

Time uploaded in London:-  5-14 am

 

 

Post No.3848

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பாக்யா 28-4-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள் !!

 

 

ச.நாகராஜன்

 

“சர்கேடியன் ரிதத்திற்கு ஒத்திருக்காத வாழ்வை வாழ்வதே மனச்சோர்வை அடைவதற்கான காரணமாகத் தோன்றுகிறது” – வில்லியம் ஸ்டைரன்    

      

        மனித உடல் பிரமிக்கத் தக்க விதத்தில் அற்புதமான லயத்துடன் இயங்குகிறது. இதற்கு சர்கேடியன் ரிதம் அல்லது சர்கேடியன் இசைவு என்று பெயர்.

 

 

      உடலின் இந்த லயத்தை நன்கு அறிந்து  கொண்டு அதற்கு இசைந்து ஒருவர் வாழ்ந்தால் அவரது ஆற்றல் பன்மடங்கு கூடும்.

 

அதாவது 24 மணி நேரத்தில் ஒரு மனிதர் பெறும் ஆற்றலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் ஆற்றலைப் பெறலாம். இதன் படி பார்த்தால் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திற்கு பதிலாக 26 மணி நேரத்தை நமக்கு நாமே பெற்றுக் கொள்ளலாம். அதாவது 72 வயது உள்ள ஒருவரின் ஆயுள் ஆற்றலைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆற்றலின் ஆயுளில் ஆறு வருடம் நீட்டிக்கப்படுகிறது

  

     உடலின் அனைத்து திசுக்களும் கூட ஒரு கடிகார நேரத்தின் லயத்துடனேயே இயங்குகின்றன. பயலாஜிகல் க்ளாக் அல்லது உயிரியல் கடிகாரம் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உடலில் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதற்குத் தக வாழ்க்கையை அமைத்துக் கொள்பவரே வாழத் தெரிந்தவ்ர்கள்.

 

 

    ‘சர்கா’ என்ற லத்தீன் வார்த்தைக்கு சுமாராக என்று பொருள். ‘டியம்’ என்றால் நாள் என்று பொருள். ஆக சர்கேடியன் என்ற வார்த்தைக்கு சுமாராக ஒரு நாள் என்று பொருள். இது 24 நான்கு மணி நேரத்தைக் கொண்டுள்ளது.

 

மிருகங்கள், தாவரங்கள், மனிதர்கள் இந்த 24 மணி நேர லயத்தைக் கொண்டிருப்பது ஒரு அதிசயமே! சர்கேடியன் இசைவும் உயிரியல் கடிகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உயிரியல் கடிகாரமே சர்கேடியன் லயத்தைக் கட்டுப்ப்டுத்துகிறது.

 

 

மூளையில் உள்ள 20000 நரம்பு திசுக்களை இது தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது.

  சூரிய ஒளிக்கும் சர்கேடியன் இசைவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆகவே தூங்குவது விழிப்பது ஆகியவற்றிற்கும் இந்த இசைவுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. எவர் ஒருவர் இந்த லயத்தை நன்கு அறிந்து பயன்படுத்துகிறாரோ அவருக்கு தூக்கம் சம்பந்தமான எந்த வியாதியும் வருவதில்லை. ஆகவே அவரது இயல்பான ஆற்றல் கூடிக் கொண்டே இருக்கும்.   ஆரோக்கியத்துடன் அவர் திடமாக வாழ்வார்.

 

 

    இந்த சர்கேடியன் இசைவு பற்றிய் ஆய்வுகள் தரும் இரகசியங்கள் பல. அவற்றின் அடிப்படையிலான சில ஆலோசனைகள் இதோ:-

 

   நமது குறுகிய கால நினைவுத் திறன், தர்க்கரீதியிலான சிந்தனை, கவனக்குவிப்பு ஆகியவை காலையில் உச்சகட்டத் திறனுடன் இருப்பதால் வேலை செய்ய உகந்த நேரம் காலை நேரம் தான்.

 

    மதிய நேரத்தில் நமது உடல் உறுப்புகள் நெகிழ்வுடன் இருப்பதால் அது யோகா செய்வதற்கு உகந்த நேரம். பிற்பகலின் பிற்பகுதியில் உடல் உஷ்ணநிலை உச்சநிலையை அடைவதால் அது உடல்பயிற்சி செய்ய உகந்த நேரம்.

 

 

    நமது ஜீரணமண்டல அமைப்பும் கல்லீரலும் சிறப்பாகச் செயல் படும் நேரம் மாலை ஏழு மணி.

தோலின் உணர்ச்சித் திறன் அதிகமாக உள்ள நேரம் இரவு 9.30 மணி.

 

      மேலே கண்டவை லாங் ஐலேண்டின் ஜீயூ மெடிகல் செண்டரில் நடந்த ஆய்வு தரும் ஆலோசனைகள்!.

 

   ‘தி ரிதம்ஸ் ஆஃப் லைஃப்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள ரஸ்ஸல் ஃபாஸ்டர் மற்றும் லியான் க்ரெய்ட்ஸ்மேன் உடல் மிகவும் நுட்பமான ஒன்று என்று கூறுவதோடு அதன் லயத்தை அறிந்து வாழ்ந்தால் வியாதிகளைக் கூடச் சீக்கிரமாகக் குணப்படுத்தலாம் என்கின்றனர்.

 

 

   ஆஸ்த்மா நோயினால் அவதிப்படுபவர்கள் பிற்பகலில் மருந்தை உட்கொண்டால் அது அவர்களுக்குப் பெரிய பலனை அளிக்கும் என்பதையும் ஆய்வு முடிவு சுட்டிக் காட்டுகிறது.

 

    மிகப் பெரிய வெற்றி பெறும் விளையாட்டு வீரர்கள் மாலை நேரப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதை முன்னின்று நடத்திய க்ரெக் அட்கின்ஸன் என்பவர் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழ்கத்தில் பணியாற்றும் விஞ்ஞானி.

 

 

    இவர், “உடல் உஷ்ணநிலை 0.8 முதல் 1 டிகிரி வரை மாலை நேரத்தில் மாறுகிறது. மிகச் சிறிய மாறுதலாகத் தோன்றும் இது மிகப் பெரும் வித்தியாசத்தைத் தருகிறது. விளையாட்டு வீரர்களின் ஆற்றல் கூடுவதற்கு இதுவே காரணம்” என்கிறார்.

 

    ஒலிம்பிக் ரிகார்டுகளை எடுத்துப் பார்த்தால் மாலை நேர நிகழ்ச்சிகளே முந்தைய ரிகார்டை முறியடிக்கும் நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

    .

      உடலைக் கட்டுப்படுத்தும் நேர அமைப்பானது மரபணுவிலேயே உள்ளது என்கிறார் ரஸ்ஸல் ஃபாஸ்டர். 12 முதல் 14 ஜீன்கள் இதற்குக் காரணம் என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார்.

 

 

    ஆகவே இயல்பாகவே நமக்கு எந்த நேரத்தில் ஆற்றலும் உற்சாகமும் செய்திறனும் அதிகம் இருக்கிறது என்பதை சில நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தால் நமது ‘பாடி க்ளாக்’ மற்றும் சர்கேடியன் ரிதம் பற்றிய உண்மையை நாமே கண்டு பிடித்து விடலாம்.

 

    அப்போது இரவு பதினோரு மணி வரை தொலைக்காட்சி பார்த்து விட்டு காலை ஏழு மணிக்கு எழுந்திருக்கும் வாழ்வு சோம்பலைக் கூட்டும் என்பதை அறிந்து ஒன்பது மணிக்கு உறங்கச் சென்று காலை ஐந்து மணிக்கு எழுந்து ஆற்றலை அதிகப்படுத்தும் வாழ்வை வாழ ஆரம்பிப்போம்

 

     சர்கேடியன் ரிதம் பற்றி நிறைய அறிவது ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான முதல் படி என்பதில் ஐயமில்லை!

  

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

பிரப்ல விஞ்ஞானியும் கட்டிடக் கலை நிபுணருமான பக்மின்ஸ்டர் ஃபுல்லர் (Bcckminster Fuller) ஜியோடேஸிக் டோம். டைமாக்ஸியன் என்ற கார், எதிர்கால அறிவியல் நகரங்களின் அமைப்பு ஆகியவற்றை வடிவமைத்து உலகத்தையே  அசத்தியவர். ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் புகழேணியில் உச்சத்தில் அவர் இருந்தார்.

 

 

    ஆனால் மனிதர் கொஞ்சம் எக்ஸெண்ட்ரிக் – சற்று கிறுக்குத்தனமான விஞ்ஞானி. உலகம் முழுவதும் சுற்றிப் பறந்து கொண்டே இருந்ததால் வெவ்வேறு நகரங்களில்  மணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவர் எப்போதும் மூன்று கடிகாரங்களை அணிந்து கொண்டே இருப்பார். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே உறங்குவார். டைமாக்ஸியன் ஸ்லீப் என்று தனது உறக்கத்திற்கு அவர் பெயர் கொடுத்திருந்தார். ஆனால் அவரது சகாக்கள் இவர் போலவே இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவது என்று இவருக்கு ஈடு கொடுத்து இருக்க முடியவில்லை. ஆகவே தனது பழக்கத்தை அவர் விட வேண்டியதாயிற்று!

 

 

     அவரது இன்னொரு விசித்திரப் பழக்கம் தன் வாழ்க்கை நிகழ்வுகளை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்தது தான். 1915லிருந்து 1983இல் தான் இறக்கும் வரை ஒவ்வொரு பதினைந்து நிமிடமும் என்ன நடந்தது என்பதை பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை எழுதி வந்தார்.

 

     இது டைமாக்ஸியன் க்ரோனோபைல்ஸ் என்ற பெயரில் பிரபலமானது. இவர் எழுதிய கோப்புகளை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்  270 அடி உயரம் வரை அடுக்கி  வைத்தனர்!

 

சாகும் வரை இப்படித் துல்லியமாக டயரி எழுதிய ஒரே மனிதர் இவர் தான்!!

***

 

 

விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்! (Post No.3842)

Written by S NAGARAJAN

 

Date:23 April 2017

 

Time uploaded in London:-  6-17 am

 

 

Post No.3842

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 21-4-2017 இதழில் வெளியான கட்டுரை                                                                

இயற்பியல் விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்!

 

 

ச.நாகராஜன்

 

“ஃபெய்ன்மேன் பன்முக வண்ணம் கொண்ட வர்ணமயமான மனிதர்!” – ஜான் க்ரிப்பின்

 

 

     சிறந்த இயற்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் பிலிப்ஸ் ஃபெய்ன்மேன் (Richard Phillips Feynman) பன்முகம் கொண்ட ஒரு பெரிய மேதை. சொற்பொழிவாற்றுவதில் அனைவரையும் கவரும் நிபுணர் என்பதோடு கதை சொல்லும் கதாசிரியராகவும் அவர் திகழ்ந்தார்  சித்திரங்கள் வரைவது அவரது பொழுது போக்கு. பாங்கோ டிரம்களை வாசிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். இத்துடன் கூட  இரகசிய எண்களைக் கொண்டு யாராலும் திறக்கவே முடியாது என்று சொல்லப்படும் சிக்கலான பூட்டுகளை ஒரு நொடியில் திறந்து காண்பித்து அனைவரையும் அசத்துவது அவருக்குக் கை வந்த கலை.

 

 

    நியூயார்க்கில் 1918ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி பிறந்த பெய்ன்மேன் இளமையிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார்.

 

   அணுகுண்டைத் தயாரிக்கும் பிரம்மாண்டமான திட்டமான மேன்ஹாட்டன் ப்ராஜக்டில் முக்கியமான விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.

 

     அவர் பெயரில் “ஃபெய்ன்மேன் டயாகிராம்ஸ்” என்று சிறப்பிக்கப்படும் கொள்கை உருவானது. இதில் குவாண்டம் தியரியில் எலக்ட்ரான்கள் பற்றிய பல கொள்கைகளுக்கு விளக்கம் தந்தார் அவர்.

 

 

1965ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை மற்ற இரு விஞ்ஞானிகளுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

லாஸ் அலாமாஸில் அணுகுண்டு திட்டத்தில் அவர் தீவிரமாகப் பணியாற்றிய போது பொழுதுபோக்காக அவர் ஈடுபட்டது பூட்டைத் திறப்பதில் தான்!

 

அப்போது எல்லோரும் தங்களது இரகசியமான ஆய்வுப் பேப்பர்களை ஒரு பைல் காபினட்டில் வைத்துப் பூட்டுவது வழக்கம். அதில் இருந்த டம்ளர் பூட்டுகளை ஒரு நொடியில் அவர் திறந்து விடுவார்.

 

 

பின்னர் காம்பினேஷன் லாக் என்று சொல்லப்படும் சிக்கலான இரகசிய எண்களைக் கொண்டு மட்டுமே திறக்கப்படும் பூட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தன.

 

இதை ரகசிய கோட் தெரியாத யாராலும் திறக்க முடியாது என்று அனைவரும் நம்பினர். ஃபெய்ன்மேனுக்கு இந்த சிக்கலான பூட்டுகளின் மீது ஆர்வம் பிறந்தது. ஒரு நாள் தனது அலுவலகத்தில் தனக்குத் கொடுக்கப்பட பூட்டைப் பிரித்து அது எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்ந்தார். மூன்று தட்டுகள் உள்ள பூட்டில் அதைச் சுலப்மாகத் திறக்க முடியாத விதத்தில் ஒரு லட்சம் சிக்கலான காம்பினேஷன்  இணைப்புகள் இருப்பதை அவர் எளிதில் உணர்ந்தார்,

 

 

   தீவிர ஆராய்ச்சி செய்து பூட்டுக்கான இரகசிய கோட் கண்டுபிடிக்க இரண்டு நம்பர்களை டயல் செய்வதன் மூலம் ஒரு லட்சம் காம்பினேஷன் இணைப்புகளை எட்டாயிரமாகக் குறைக்கலாம் என்று கண்டு பிடித்தார்.

 

 

இந்த எட்டாயிரத்தில் எந்த காம்பினேஷனை ஒரு பூட்டு கொண்டிருக்கும்? அதை எப்படிக் கண்டு பிடிப்பது? இடைவிடாத ஆராய்ச்சியின் மூலமாக டயலைத் திருகும் போது இலேசான அழுத்தத்தை ஹாண்டிலில் கொடுத்துப் பார்த்தால் கடைசி இரு எண்களைக் கண்டு பிடிக்கலாம் என்பதை உணர்ந்தார்.

 

 

பிறகென்ன? தெரியாத ஒரே நம்பர் முதலில் இருக்கும் நம்பர் தான். இதைக் கண்டு பிடிக்க இருபதே இருபது வழிகள் மட்டுமே இருக்கும்! அவ்வளவு தான்!

எந்த  சிக்கலான பூட்டையும் அவர் திறக்க ஆரம்பித்தார்.

நண்பர்களின் லாக்கர்களை லேசாக அழுத்தி டயலைச் சுழற்றும் அவர் பழக்கத்தைப் பார்த்து ஏதோ விளையாட்டாக அவர் சுழற்றுகிறார் என்று நண்பர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் சீக்கிரமே அவர் ‘எந்த பூட்டையும் திறக்க வல்ல கில்லாடி’ என்று அலுவலகம் முழுவதும் செய்தி பரவி விட்டது.

 

 

    யாரேனும் ஒருவர் விடுமுறையில் சென்றிருக்கும் போது மிகவும் அவசரமாக ஒரு பைலை எடுத்துப் பார்க்க வேண்டும் என்றால் அனைவரும் ஃபெய்ன்மேனிடம் ஓடி வருவர்.

 

   உடனே ஃபெய்ன்மேன் சிக்கலான பெரிய டூல் பெட்டியை எடுத்து வந்து அவர்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியில் போகச் சொல்வார். ஓரிரு நிமிடங்களில் லாக்கை சுலபமாகத் திறந்து விட்டு அங்கேயே அமரந்து விடுவார். சில நிமிடங்கள் கழித்து மிகவும் கஷ்டப்பட்டு திறக்க வேண்டியதாய் இருந்தது என்று சொல்லியவாறே அறையை விட்டு தனது கருவிகளுடன் வெளியே வருவார்.

நாளடைவில் பூட்டுகளைப் பற்றிய ஏராளமான புத்தகங்களைப் ப்டித்தார். அனைவரும் இரகசிய எண்களாக தங்களது பிறந்த நாள் அல்லது இதர நாள்களையே வைப்பதைக் கண்டும் அதை அவர்கள் டெஸ்கின் ஓரத்தில் கிறுக்கி வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருபப்தையும் கண்டு அவர் நொந்து போனார். 

 

 

     ஒரு சனிக்கிழமையன்று நூலகத்தில் இரகசிய ஆவணங்கள் சிலவற்றை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் நூலகமோ மூடி இருந்தது. அவருக்கு தனது உதவியாளராகப் பணியாற்றிய பெண்மணி அந்த ஆவணங்களின் ஜெராக்ஸ் நகலை தனது இரகசிய லாக்கரில் ஒன்பது பைல் கேபினெட்டுகளில் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று பார்த்த போது அவரது வழக்கமான உத்தி மூலம் கடைசி இரு எண்களை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

 

 

இப்போது தான அவர் நொந்து கொண்டிருந்த மனித இயல்பு அவருக்கு நினவுக்கு வந்தது. அந்தப் பெண்மணி பை என்ற கணித எண்ணான 3.14159 என்பதை மேஜையின் ஒரு ஓரத்தில் கிறுக்கி வைத்திருந்தார்.

 

 ஐந்து இலக்கங்களுடன் பை குறியீட்டை ஏன் அந்தப் பெண்மணி எழுத வேண்டும்? ஃபெய்ன்மேன் யோசித்தார். உடனே அவருக்கு ஒன்பது கேபினட்டுகளின் ரகசிய எண் குறியீடு கிடைத்து விட்டது! 

 

 

திங்கட்கிழமையன்று அலுவலகம் வந்த உதவியாளருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பைல்களில் ஃபெய்ன்மேன் ஏராளமான குறிப்புகளை எழுதியிருந்தார். கூடவே ஒரு எச்சரிக்கையும் இருந்தது. இனிமேல் தேசத்தின் மிக முக்கியமான இரக்சியங்கள் அடங்கிய பைல்கள் உள்ள இரகசிய லாக்கரின் குறியீட்டை மிகுந்த கவனத்துடன் ‘செட்-அப்’ செய்யுமாறு ஒரு ‘அன்புடன் சொல்லப்படும் அறிவுரையும்’ இருந்தது.

 

இது அனைவருக்கும் தெரியவே அனைவரும் ஃபெய்ன்மேனின் திறமையைப் பாராட்டினர்.

இது போல இன்னும் அணுகுண்டு ரகசியங்கள் அடங்கிய லாக்கரை அவர் திறந்த சம்பவங்களும் உண்டு.

ஆனால் அவர் மணவாழ்க்கை தான் சிறப்பாக இல்லை. முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்தார். இரண்டாவது மனைவிக்கோ இயற்பியல் என்றாலே கசப்பு. மூன்றாவதாக தன்னை விட் 16 வயது குறைந்த ஒரு மங்கையை அவர் மணம் புரிந்தார். அந்த உறவு இறுதி வரை தொடர்ந்தது.

கேன்ஸரால் பீடிக்கப்பட்ட ஃபெய்ன்மேன் 1988ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி மரணமடைந்தார். உலகம் ஒரு அபாரமான மேதையை இழந்தது.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்..

 

      உலகின் மிகப் பெரிய் அறிவியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிக மிக எளிமையான மனிதர். ஒரு முறை பாரிஸில் உள்ள சார்போன் பல்கலைக் கழகம் அவருக்கு ஒரு விருதை வழங்கிச் சிறப்பித்தது. இதற்காக ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்யப்படவே விழா நடந்த பெரிய அரங்கமே உலகின் பிரப்ல அறிஞர்களின் வருகையால் நிரம்பியது.

 

 

    மறு நாள் ஐன்ஸ்டீன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவருடைய உறவினர் ஒருவரிடமிருந்து ஒரு போன் வந்தது. அவர் தங்கியிருந்ததோ பிரபலமில்லாத ஒரு சிறிய ஹோட்டல். “புரபஸர் ஐன்ஸ்டீன் இருக்கிறாரா? அவர் அறைக்குக் கொஞ்சம் கனெக் ஷன் கொடுங்கள்” என்றார் அவர்

 

 

“புரபஸர் ஐன்ஸ்டீன் என்று இங்கு யாரும் கிடையாது” என்று பதில் வந்தது.

 

“என்ன.நேற்று இரவு நான் தானே அவரை விழா முடிந்த பிறகு உங்கள் ஹோட்டலில் கொண்டு வந்து விட்டேன்” என்றார் போனில் பேசிய அவரது உறவினர்.

“நீங்கள் உலகின் மிகப் பெரிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றியா விசாரிக்கிறீர்கள்?” என்று வியப்புடன் கேட்டார் ஹோட்டலில் இருந்த ரிஸப்ஷன் போனை எடுத்த ஹோட்டல் மேனேஜர்..

 

“எங்கள் ரெஜிஸ்டரில் ஏ. ஐன்ஸ்டீன் என்று பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு அறையைக் கொடுத்திருக்கிறோம். ஆனால அவரைப் பார்த்தால் ஒரு சேல்ஸ்மேன் போல அல்லவா இருக்கிறது. டிராவிலிங் சேல்ஸ் மென் என்றல்லவா அவரை நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று வியப்புடன் கூறிய அந்த ஹோட்டல் மேனேஜர் பிரமித்துப் போனார்.

அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் புகழை விரும்பாத ஒரு எளிமை விரும்பி!

****