காலம் என்னும் மர்மம்! – 3

Written  by S NAGARAJAN

Date: 2 November 2015

Post No:2293

Time uploaded in London :–  5-13 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 3

.நாகராஜன்

8

தேவர் உலக கால அளவுகள்

தேவர் உலகில் உத்தராயணம் அதாவது 6 மாதம் ஒரு பகலாகவும், தக்ஷிணாயனம், அதாவது இன்னொரு 6 மாதம் இரவாகவும் ஆகிறது. அதாவது மனித மாதங்கள் பன்னிரெண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகிறது.

பிரம்மாவின் ஆயுள்

அதிகமான ஆயுளுடன் இருப்பவர் பிரம்மா.

தேவர் கால அளவில் தேவர்களின் ஒரு நாள் என்பது மனிதர்களி  360 நாள் என்று பார்த்தோம்.

12,000 தேவ வருடங்கள் ஒரு சதுர் யுகம் எனப்படுகிறது.

ஒரு சதுர் யுகத்தில் கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம் என நான்கு யுகங்கள் உள்ளன.

கிருத யுகம் 4000 தேவ வருடங்களையும் திரேதா யுகம் 3000 தேவ வருடங்களையும் த்வாபர யுகம் 2000 தேவ வருடங்களையும் கலியுகம் 1000 தேவ வருடங்களையும் கொண்டிருக்கிறது.

இந்த வருடங்கள் யுகத்தின் சரியான காலமாகும்.

என்றாலும் யுக ஆரம்பத்திற்கு முன் ‘சந்தி’ என்ற காலமும் யுகத்திற்குப் பின் ‘சந்தி அம்சம்’ என ஒரு கால அளவும் உள்ளது.

இதன் படி கிருத யுகத்திற்கு சந்தி அளவு 400 தேவ வருடமும் சந்தி அம்சம் 400 தேவ வருடமும் ஆகிறது.

இதே போல திரேதா யுகத்திற்கு சந்தி அளவு 300 தேவ வருடமும் சந்தி அம்சம் 300 தேவ வருடமும் ஆகிறது.

ஆக, திரேதா யுகத்தின்  மொத்த வருடம் 3600. இதே போல த்வாபர யுகத்தின் மொத்த வருடம் 2400. கலி யுகத்தின் மொத்த வருடம் 1200.

ஆக சதுர் யுகங்களின் – நான்கு யுகங்களின் மொத்த காலம் 12000 தேவ வருடம். அதாவது 43,20,000 மனித வருடம்.

கலியுகம், 1200 x 360 = 4,32,000 மனித வருடம்.

த்வாபர யுகம் கலி யுகத்தைப் போல இரு மடங்கு. அதாவது 8,64,000 மனித வருடம்.

திரேதா யுகம் 12,96,000 மனித வருடம். கிருத யுகம் 17,28,000 மனித வருடம்.

ஆக மொத்தம் ஒரு சதுர் யுகத்தின் கால அளவு 43,20,000  மனித வருடம்.

இது போன்ற ஆயிரம் சதுர் யுகங்கள் – அதாவது 432 கோடி மனித வருடமே பிரம்மாவிற்கு ஒரு பகலாகும்.

இந்த பிரம்மாவின் ஒரு பகலே ‘கல்ப’ம் எனப்படுகிறது.

பிரம்மாவின் இரவுக்கு இன்னொரு இன்னொரு 432 கோடி மனித வருடம்.

ஆக, பிரம்மாவின் ஒரு பகலும் இரவும் சேர்ந்தால் 864 கோடி மனித வருடங்களுக்குச் சமமாகும்.

பிரம்மாவின் ஆயுள் 100 வருடமாகும். அவருக்கும் ஒரு முடிவு. உண்டு. அவர் ஆயுளுக்கும் எல்லை இப்படி இருக்கிறது என்பது தெளிவு.

பிரம்மாவின் முழு ஆயுளைக் கணக்கிட்டால் 31.54 x 10 to the power 13  மனித வருடங்களாகிறது!

இதே போன்ற பிரம்மாக்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பர்.

இது தான் காலத்தின் எல்லையற்ற எல்லை!

மனக் கற்பனைக்கு அப்பாற்பட்ட உண்மை!!

மனித ஆயுளை இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை சிறிது! ‘காய கல்பம்’ என ஆயுளை நீடிக்க வைக்கும் வித்தையைச் சொல்கிறார்கள்.

ஒரு கல்பம் அளவு – பிரம்மாவின் ஒரு நாள் அளவு – அதாவது 432 கோடி மனித வருடம் வாழ்கின்ற சித்தராகவே நீங்கள் இருந்தாலும் எல்லயற்ற கால வெள்ளத்தில் நீங்கள் ஒரு சிறு துளி தான்!

ஆயுள் ‘குறைவாக’ உள்ள மற்ற தேவர்களும் இருக்கிறார்கள்.

“தெய்வீக நிர்வாகத்தில்” அவரவர்க்கு உரிய பணியைச் செய்யும் இந்திரன், அக்னி, சூரியன், வருணன் ஆகிய தேவர்களின் ஆயுள் மனிதரின் கால அளவை விட மிகப் பெரியது. என்றாலும் பிரம்மாவின் ஆயுளுடன் ஒப்பிடும் போது அது மிகக் குறைவே!

Konark_Sun_Temple_Wheel

SUN TEMPLE, KONARK, ORISSA

9

ஆன்மீக உயர் நிலையை எட்டி மேலே சொன்ன தேவ நிலையை மனிதர்கள் அடையலாம்.

கடோபநிஷத்தில் – யமன் – இறப்பிறகு அதிபதி – இதை விளக்குகிறார்.

தவத்தின் மூலம் பிரம்ம நிலையை எய்துதற்கு முடியும். என்றாலும் அவன் இந்த நிலைக்கு மட்டுமே வர முடிந்தது என விவரிக்கிறான்.

பிரம்ம நிலையை எய்துவதே மனிதனின் இலட்சியம்.

தைத்ரியோபநிஷத் பேரின்ப நிலைகளை வரிசையாகக் குறிப்பிடும் போது (இன்பமான, லட்சிய) மனித இன்பம், கந்தர்வர், பிதிர், தேவர், இந்திரன், பிரஹஸ்பதி, பிரஜாபதி, பிரம்மா எனக் குறிப்பிடுகிறது.

ஆயுளும் இதே வரிசையில் கூடுகிறது.

சில ரிஷிகள் – முனிவர்கள் – ஒரு கல்ப காலம் ஆயுளை உடையவர்களாக இருக்கின்றனர். மற்ற சிலரோ ஒரு மன்வந்தரமே ஆயுள் உடையவர்களாக இருக்கின்றனர்.

பெரும் தவ சிரேஷ்டர்கள் பிரம்மாவின் ஆயுள் எல்லையையும் தாண்டி வாழ்கின்றனர்!

மன்வந்தரம் என்பது கல்பத்தில் ஒரு பகுதி. 14 மன்வந்தரம் கொண்டது ஒரு கல்பம். ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு உண்டு.

நாம் இப்போது இருக்கும் கல்பத்தின் பெயர் ஸ்வேத வராஹ கல்பம்.

நாம் இப்போது இருக்கும் மன்வந்தரத்தின் பெயர் வைவஸ்வத மன்வந்தரம். வைவஸ்வத மனு என்பவரின் பெயரைக் கொண்டது இது!

அதாவது ஒரு மன்வந்தரம் சுமார் 31 கோடி மனித வருடங்களைக் கொண்டது. ((துல்லியமாக வேண்டுமெனில் கல்பத்தை 14ஆல் வகுத்துச் சரியாகவும் கணக்கிட்டுக் கொள்ளலாம்)

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இந்திரன், அக்னி, சில ரிஷிகள் மாறலாம். ஆனால் அவர்களின் பணிகள் புதிய பெயரிலேயே நடந்து கொண்டே தான் இருக்கும்.

சப்த ரிஷிகளின் பெயர்கள் பல்வேறு விதமாகக் கூறப்படுவதால் குழப்பம் அடைவதாகப் பலரும் சொல்வர்.

அனைத்துப் பெயர்களும் சரியே! எந்த மன்வந்தரத்து சப்த ரிஷிகள் என்று கேட்டால் குழப்பம் நீங்கி விடும்!

நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கும் துல்லியமான கால அளவுகளைப் போல உலகின் வேறு எந்த மதமும், நாகரிகமும் வகுத்து வைத்திருக்கவில்லை.

அதனால் தான் காஸ்மாஸ் தொடரை தொலைக்காட்சி சீரியலாக தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலகின் எந்த மதம் அல்லது நாகரிகம் எல்லையற்ற கால அளவைச் சரியாகச் சொல்லி இருக்கிறது என ஆராய ஆரம்பித்தார்.

ஹிந்து மதத்தின் இந்த கால அளவுகளைக் கண்டு அவர் பிரமித்தார். உடனே இந்தியாவிற்கு வந்து சிதம்பரம் சென்றார்.

அவர், தன் தொடரில் நடராஜரை முதலில் காட்டியது இதனால் தான்!

நமது அறிவுத் திறனுக்கும் மூளை ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட காலம் பற்றிய சரியான விவரணம் தருவது –

ஹிந்து மதமே!

  • தொடரும்

குறிப்பு: காலம் பற்றிய இந்த தொடர் எழுதப்பட்ட நாள் 14-7-1996. பழைய கைப்பிரதிகளை கிழிக்க முற்பட்ட போது இது என் கையில் அகப்பட்டது. ஆஹா, எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இதை முழுத் தொடராக்குகிறேன்.

 

காலம் என்னும் மர்மம்! – 2

mayan-calendar

Mayan Calendar

Written  by S NAGARAJAN

Date: 1 November 2015

Post No:2291

Time uploaded in London :–  14- 40

(Thanks  for the pictures) 

 

 

ஹிந்து தத்துவ விளக்கம்

காலம் என்னும் மர்மம்! – 2

.நாகராஜன்

4

தன் வலிமையால் பெரிதான காலமானது அதிகம் படிப்புள்ளவனானாலும், அல்பப் படிப்புள்ளவனானாலும், பலசாலி ஆனாலும், பலவீனன் ஆனாலும், அழகுள்ளவனானாலும், குரூபி ஆனாலும், நல்லவனானாலும், கெட்டவனானாலும் எல்லோரையும் தன் வசமாக்கிக் கொள்கிறது.

மனிதன் முதலில் எரிக்கப்பட்டதையே பிறகு எரிக்கிறான். அடிக்கப்பட்டதையே பிறகு அடிக்கிறான்.

நாசமடைந்ததே நசிகிறது. அடைய வேண்டியதையே அடைகிறான்.

 

ஆச்சரியமான விதியைச் சிந்தித்தால், காலமாகிற இந்தக் கடலுக்குத் தீவு இல்லை!

அக்கரை ஏது? இக்கரையும் காணப்படுகிறதில்லை. இதன் முடிவை நான் காணேன்.

காலம் யாவற்றையும் எடுத்துக் கொள்ளுகிறது. காலம் யாவற்றையும் கொடுக்கிறது.

யாவும் காலத்தால் செய்யப் படுகின்றன.

 

 

காலம் எல்லாவற்றையும் நிலை பெறச் செய்கிறது.காலம் எல்லாவற்றையும் பழுக்கச் செய்கிறது.

வேதமறிந்த ஜனங்கள் கால ரூபியான பிரம்மத்தை, மாதத்தையும், பட்சத்தையும் வீடாகக் கொண்டதும், இரவாலும், பகலாலும் மூடப்பட்டதும், ருதுக்களைத் துவாரமாகக் கொண்டதும், பிராண வாயுவை முகமாகக் கொண்டதுமாகக் கூறுகிறார்கள்.

 

ஐந்து விதமான இந்திரியங்கள் யாவும் எதைத் தொடர்ந்து அறிகிறதில்லையோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்.

இவ்வுலகம் அனைத்தும் அதன் வசம் இருக்கிறது.

 

பூஜ்யமான காலமானது பூதங்களுக்குள்ள வேற்றுமையைச் செய்கிறதென்று இவ்வளவைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாது.

காலத்தைக் காட்டிலும் இவ்வித சக்தியுள்ள வேறு பதார்த்தம் இல்லாததாலும் எல்லாப் பிராணிகளும் அடையத்தக்க அக்காலத்தை அடையாமல் எங்கு போக முடியும்?

 

ஓடுகிறவனானாலும் அக்காலத்தைத் தள்ள முடியாது. நின்றாலும் அதிலிருந்து விலக மாட்டாது.

ஐந்து விதமான இந்திரியங்களும் யாவும் அதைக் காண்பதில்லை.

சிலர் இக்காலத்தை அக்னி என்று சொல்கிறார்கள். சிலர் பிரம்மா என்று சொல்கிறார்கள்.

argos clock 3

5

 

காலத்தைப் பற்றி ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் கூறுவது:-

सहस्रयुगपर्यन्तमहर्यद्ब्रह्मणो विदुः ।

रात्रिं युगसहस्रान्तां तेऽहोरात्रविदो जनाः ॥८- १७॥

ஸஹஸ்ர யுக பர்யந்தமஹர்யத் ப்ராஹ்மனோ விது:  I                        

ராத்ரிம் யுக சஹஸ்ராந்தாம் தேஹோராத்ரி விதோ ஜனா: II (கீதை 8 – 17)

 

இதன் பொருள்: அநுபூதியினால் பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் மகாயுகங்களையும், அவரது இரவு மற்றும் ஆயிரம் மகாயுகங்களையும் கொண்டிருக்கிறது என்று எந்த யோகிகள் உணர்கிறார்களோ அவர்களே காலத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள்.

இவ்வாறு பகவத் கீதையில் ஶ்ரீ கிருஷ்ணர் காலத்தைப் பற்றி விரிவாக அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.

இது எவ்வளவு பொருள் பொதிந்தது என்பதை பிரம்மாவின் ஆயுள் பற்றி அடுத்து விவரிக்கும் போது அறியலாம்.

 

 argos clock

6

இனி கால அளவுகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாம் வாழும் பூமியில் நம்மால் உணரப்படும், அளக்கப்படும் நேரம் வேறு.

சூரிய மண்டலத்திற்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் எப்படி கால அளவு இருக்கிறது என்று பார்த்தோமானால் வருவது வேறு அளவு. இந்த அளவைக் கொண்டு பிரம்மாவின் ஆயுளைக் கணக்கிட்டால் பிரமித்துத் திகைப்போம்!

 

மனித அளவில் உள்ள கால அளவுகள் இதோ:

18 இமைப் பொழுது                     1 கஷ்டை

18 கஷ்டை                               1 கலை

30 கலை                                  1 க்ஷணம்

12 க்ஷணம்                                1 முகூர்த்தம்

30 முகூர்த்தம்                             24 மணி அல்லது ஒரு நாள்

15 நாள்                                    1 பக்ஷம்

2 பக்ஷம்                                    1 மாதம்

2 மாதம்                                    1 ருது

6 ருது                                       1 வருடம்

ஒரு வருடம் இரண்டு அயனமாகப் பிரிக்கப்படுகிறது.

உத்தராயணம்             – 6 மாதம்

தக்ஷிணாயணம்           – 6 மாதம்

 

 

7

இனி இறந்தவர்களின் உலகில் கால அளவுகளைப் பார்ப்போம்.

தேவ நிலையை எய்தாமல் இறந்தவர் இருக்கும் உலகின் கால அளவுகள் வேறு. ‘பிதிர்லோகம் எனக் குறிப்பிடப்படும் இந்த உலகில் மனித உலகின் ஒரு பக்ஷம் அதாவது 15 நாட்கள் ஒரு பகலாகவும் இன்னொரு பக்ஷம், அதாவது அடுத்த 15 நாட்கள் இரவாகவும் இருக்கிறது. அதாவது மனித தினத்தின் 30 மடங்கு ஒரு பிதிர் தினமாகும்.

 

இறந்தவருக்கு அவர் இறந்த வருடம் மாதத்திற்கு ஒரு முறைபடையல்உணவு அளிக்கும் வழக்கத்தை நினைத்துப் பார்த்தால் புரியும்அவர்களது கணக்குப்படி தினமும் நாம் உணவு அளிக்கிறோம் என்று.

இனி தேவர் உலக கால அளவுகளை அடுத்து பார்ப்போம்.

to be continued………………………………..

காலம் என்னும் மர்மம்! – 1

apple-kitchen-wall-clocks

ஹிந்து தத்துவ விளக்கம்                                          புதிய தொடர்

காலம் என்னும் மர்மம்! – 1

Written  by S NAGARAJAN

Date: 31 October 2015.

Post No:2288

Time uploaded in London :–  7-16 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

1

வியாசர் சுகருக்கு விளக்கியது        

காலம் என்னும் மர்மத்தை இந்திய நூல்கள் விளக்கியுள்ளது போல உலகின் வேறு எந்த நூல்களும் விளக்கவில்லை.

விஞ்ஞானிகளில் கார்ல் சகன் உள்ளிட்டோர் ஹிந்து மதத்தில் காலம் விளக்கப் பட்டுள்ள விதத்தை வியந்து பாராட்டி உள்ளனர். அதன் மீதுள்ள மதிப்பின் காரணத்தால் கால நடனத்தைஆடும் நடராஜரையும் தங்கள் காஸ்மாஸ் (Cosmos) தொடரில் பயன்படுத்தி உள்ளனர்.

 

 

மஹாபாரதத்தில் காலம் பற்றிய விவரம் ஏராளமான இடங்களில் பல்வேறு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாந்தி பர்வம் 244வது அத்தியாயத்தில் வருவது இது.

வியாச முனிவர் சுக முனிவருக்கு காலத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார்:-

காலமானது நானாவிதமாக ஏற்பட்டிருக்கிறது. என்னால் உனக்கு முன்னே சொல்லப்பட்டதும், மக்களை உண்டு பண்ணுகிறதும், அழிப்பதுமான (பரமாத்ம ரூபமான) காலமானது ஆதி, அந்தம் இல்லாதது.

 

 

பூதங்களுடைய உற்பத்தியையும், பாலனத்தையும், அழிவையும் செய்யும் ஆகிய இவற்றின் விளக்கமாக அமைகிறது காலம்.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக படைக்கப்பட்ட பூதங்கள் தமது இயல்புடன் கூட அப்படிப்பட்ட காலத்தில் இருக்கின்றன.

காலமே சிருஷ்டி. காலமே துஷ்டி.

காலமே வேதம். காலமே கர்த்தா.

காலமே காரியம். காலமே கர்மத்தின் பலன்.

argos clock 2

 

2

இந்திரனுக்கும் பலிக்கும் நடந்த சம்வாதம்

இந்திரனுக்கும் விரோசனன் மகனான பலிக்கும் இடையில் நடந்த சம்வாதம் – (அர்த்தமுள்ள உரையாடல்) – காலத்தின் வன்மையை நன்கு விளக்குகிறது.

பாழடைந்த வீட்டில் கழுதை வேஷத்தில் இருந்த பலியைப் பார்த்த இந்திரன், “அசுர வேந்தனே! உன் பெரிய குடை எங்கே? பொன் பாத்திரம் எங்கே? பிரம்மதேவர் உனக்கு அளித்த மாலை எங்கே?” என்று கேட்டான்.

பலி இந்திரனை நோக்கி நகைத்து, “அவற்றையா கேட்கிறாய்? யாவும் காலத்தால் வரும்! .நல்ல காலத்தில் போகாது.

 

 

இவ்வுலகத்தில் யாவும் காலத்தின் மாறுதலில் எல்லாமே நிலையற்றனவாயிருப்பதைக் கண்டு நான் சோகப்படாமல் இருக்கிறேன்.

இவ்வுலகம் அனைத்தும் முடிவுள்ளதாக இருக்கிறது.

கொன்ற பின்னும் வென்ற பின்னும் புருஷ வீரம் உள்ளவன் போல் இருக்கின்ற மனிதன் உண்மையில் கர்த்தாவே அல்ல. கர்த்தாவாய் இருப்பது தான் அதைச் செய்கிறது.

மற்றும் சிலர் ஒன்றாய் இருக்கும் காலத்தை வருடங்கள் என்றும், மாதங்கள் என்றும், பட்சங்கள் என்றும், தினங்கள் என்றும், க்ஷணங்கள் என்றும், காலை என்றும், மாலை என்றும், நடுப்பகல் என்றும், முகூர்த்தம் என்றும் பல விதமாகக் கூறுகிறார்கள்.

 

 

இவ்வுலகம் யாவும் எதன் வசத்தில் இருக்கிறதோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்!

இந்திரனே! உன்னைப் போல் வன்மையும் பராக்ரமும் பொருந்திய பல்லாயிரம் இந்திரர்கள் காலம் சென்றார்கள். உனக்கு கர்வம் வேண்டாம். வருங்காலத்தில் உள்ள கதியை எவன் கண்டான்?”

 

காலத்தின் வன்மையையும், தன்மையையும் பலி, இந்திரனுக்கு இப்படி விளக்கினான். (மஹாபாரதம் சாந்தி பர்வம் 234வது அத்தியாயத்தில் ஒரு சிறு பகுதி சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது)

 

antique-kitchen-wall-clocks

3

பிருஹஸ்பதியிடம் மனு கூறியது

பிருஹஸ்பதியிடம் மனு காலத்தைப் பற்றி விவரிக்கிறார் :-

பூமியின் உருவத்தை விட ஜலத்தின் உருவம் பெரியது.                            

ஜலத்தை விட தேஜஸ் பெரியது.                                                  

தேஜஸை விட வாயு பெரியது.                                                        

வாயுவை விட ஆகாயம் பெரியது.                                                          

ஆகாயத்தை விட மனம் மிகப் பெரியது.                                      

மனத்தை விட புத்தி பெரியது.                                                          

புத்தியை விடக் காலம் பெரியது, என்று இப்படிச் சொல்லப்படுகிறது.

 

இந்த உலகமெல்லாம் எந்த விஷ்ணுவின் உருவமோ அந்த விஷ்ணு காலத்தை விடப் பெரியவர்!

மிக அழகாக ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு எது எதை விடப் பெரியது என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவது ஹிந்து இலக்கியம் ஒன்று மட்டுமே! இப்படி எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்பதே மற்ற பழைய நாகரிகத்தினர்க்குத் தெரியுமா என்பது ஐயப்பாடே! எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றைப் படிப்படியாக நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.

(சாந்தி பர்வம் 204வது அத்தியாயம்

 

மஹாபாரதம் இன்னும் பல்வேறு இடங்களில் காலம் பற்றி விரிவாக விளக்குகிறது! காலத்தைப் பற்றி மிக விளக்கமாக அறிந்து கொள்வதால் ஏற்படும் முதல் பலன் எல்லையற்ற கால வெள்ளத்தில் நாம் சிறுதுளியினும் சிறுதுளியே என்பதை அறிவதன் மூலம் நம் அகங்காரம் அகலும். அத்துடன் கூட  ‘நிலையாமைஎன்பது நன்கு புரியப் புரிய மன அமைதி தானே உருவாகும்!

***********         (தொடரும்)

ஷீனா ஐயங்காரின் JAM STUDY ஜாம் ஸ்டடி!

 sheena 1

Sheena Iyengar with her husband Garud

டைரக்டர் பாக்யராஜை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழான பாக்யாவில் அறிவியல் துளிகள் தொடர் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வருகிறது. அதில் 23-10-2015 தேதியிட்ட இதழில் வெளி வந்த 244வது அத்தியாயம்.

ஷீனா ஐயங்காரின் JAM STUDY  ஜாம் ஸ்டடி!

 

Written by S NAGARAJAN

Post No.2266

Date: 23 October 2015

Time uploaded in London:10-11 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் இருந்தாலே குழப்பம் தான்! அது முடிவெடுப்பதை முடக்கி விடும். மகிழ்ச்சியைப் போக்கி விடும்”.   

                                 –      உளவியல் மேதை பேரி ஷ்வார்ட்ஸ்

 jam

உளவியல் துறையில் இன்று பிரசித்தி பெற்று இருப்பவர் ஷீனா ஐயங்கார் என்ற இந்தியப் பெண்மணி. ஷீனா பஞ்சாபியப் பெண். சீக்கியர். கனடாவில் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். அவர் ஒரு ஐயங்காரை மணந்த பின்னர் ஷீனா ஐயங்கார் ஆகி விட்டார். அவரைப் பற்றிய வருத்தகரமான ஒரு செய்தி அவர் கண்பார்வை இல்லாதவர். சிறு வயதிலேயே விழித்திரையில் ஏற்பட்ட கோளாறால் அவரால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் படிப்பில் எல்லோரையும் அசத்தி விட்டார். இன்று கொலம்பிய பிஸினஸ் ஸ்கூலில் வணிகத் துறையில் பேராசிரியர். உளவியல் வேறு அவருக்கு அத்துபடி என்பதால் அந்தத் துறையையும் அவர் கவனித்துக் கொள்கிறார். ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபார்சூன், டைம் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் இவர் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவார். இவரது புத்தகமான ‘தி ஆர்ட் ஆஃப் சூஸிங்; விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

சீக்கியப் பெண்மணியான இவர் தனது ஆராய்ச்சிக்காக பல்வேறு மதங்களில் சம்பிரதாயமான பிரிவுகளி உள்ள கடும் ஆசாரத்தைப் பின்பற்றுவோர் மன விரக்தி அடையாமல் இருக்கின்றனரா அல்லது சற்று தாராளமான கொள்கைகளைக் கொண்டோர் மனவிரக்தி அடையாமல் இருக்கின்றனரா என அறிவியல் ரீதியாக ஆராய ஆரம்பித்தார். ஆய்வின் முடிவு இவருக்கே வியப்பைத் தந்தது.

சம்பிரதாயமான குடும்பங்களில் ஆசாரமாக வாழ்பவர்களே சந்தோஷமாக வாழ்க்கையை அணுக முடிகிறது என்பதை இவர் உறுதி செய்தார். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு சரியான கட்டுப்பாடும், தேர்ந்தெடுக்க சில விருப்பத் தேர்வுகளே இருப்பதும் இதன் காரணிகளாக அமைகின்றன.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும் இருப்பதால் அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக ஆகிறது.

இவரது ஜாம் ஸ்டடி (Jam Study) என்ற சுவையான ஆய்வு ஒன்று இவரைப் புகழேணியில் ஏற்றி வைத்தது.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி மாணவியாக அவர் இருந்த போது அங்குள்ள மளிகைக் கடை ஒன்றுக்கு அடிக்கடி செல்வது அவரது வழக்கம். பிரம்மாண்டமான அந்த ஸ்டோரின் பெயர் டையாஜெர். அங்கு கடுகு மற்றும் சுவைச்சாறுகளில் மட்டும் 250 வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்குமாம். கறிகாய்கள், பழங்களிலோ 500 வகைகள் உண்டு. எதை வாங்குவது என்று தெரியாமல் அனைவரும் மலைத்துப் போவார்கள். ஏராளமாகக் குவிந்திருக்கும் காய்கறி, பழ வகைகளைப் பார்த்ததும் பரவசம் அடைவர் அனைவரும்.

ஒரு நாள் கடையின் மானேஜரைப் பார்த்த ஷீனா, “உங்கள் கடையில் எதை வாங்குவது என்று தெரியாமல் எல்லோரும் முழிக்கிறார்களே!” என்றார்.

இதைக் கேட்டு வியப்படைந்த மானேஜர், பஸ்களில் கூட்டம் கூட்டமாக அல்லவா மக்கள் இங்கு வருகிறார்கள், விற்பனை அமோகம் எனக்கு, என்று கூறினார். ஷீனாவோ மக்கள் வாங்குவதில் சிரமப்படுகிறார்களே என்றார்.

ஒரு சின்ன ஆய்வுக்கு மானேஜர் சம்மதித்தார். சோதனை அறை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் ஆறு விதமான சுவையுடைய ஜாம்கள் வைக்கப்பட்டன. இன்னொரு முறை 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்டன. 24 வகையான ஜாம் வைக்கப்பட்டபோது 60 சதவிகிதம் பேர் அந்த அறைக்கு வந்தனர். 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 40 சதவிகிதம் பேரே அங்கு வந்தனர்.

ஆனால் விற்பனை என்று எடுத்துக் கொண்டால் விளைவு நேர் எதிர்மாறாக இருந்தது. 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 30 சதவிகிதம் பேர் அவற்றை வாங்கினர். ஆனால் 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்ட போதோ வாங்கியவர்கள் 3 சதவிகிதம் பேர்களே!

18home-3-popup

Dr Iyengar with her son Ishan

இதையொட்டிய ஷீனா ஐயங்காரின் கண்டுபிடிப்பு வணிக விற்பனையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது. இந்த பிரபலமான ஆய்வு ஜாம் ஸ்டடி என்று அழைக்கப்பட்டது. சிலர் இதை ஜாம் ப்ராப்ளம் என்றும் கூறுவர்.

இதைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்கள் பணத்தை எப்படி கையாள விரும்புகின்றனர் என்பதில் அவர் பார்வை திரும்பியது. நிறைய விருப்பத்தேர்வுகள் இருக்கும் போது அவர்கள் திணறுகின்றனர்.

இது வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் ஏன் திருமணத்தில் பார்ட்னரைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் பிரதிபலிக்கிறது.

செஸ் விளையாட்டில் ஒரு காயை நகர்த்த விரும்புவோருக்கு ஏராளமான விதங்கள் இருந்தாலும் தேவைக்கேற்ப அந்த சூழ்நிலையில் தேவையற்ற ‘மூவ்’களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பார்.

அதே போல எண்ணற்ற விருப்பத் தேர்வுகள் இருந்தாலும் நமது நோக்கம் என்ன என்பதை மனதில் உறுதி செய்து கொண்டால் தேர்ந்தெடுப்பது சுலபமாகும் என்கிறார் ஷீனா ஐயங்கார். அமெரிக்க வாழ்க்கை முறையில் சுதந்திரமும் தாராளமும் அதிகம். ஆகவே அங்கு சரியான நோக்கம் கொண்டவர்கள் ஜெயிப்பார்கள். அது இல்லாமல் இருப்பவர்கள் விரக்தி அடைவர்.

வாழ்க்கையில் அணுகுமுறை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. உலகின் பிரபல உளவியல் நிபுணரான ரொபர்டோ அஸாகியோலி சர்வாதிகாரி முஸோலினியால் சிறையில் தள்ளப்பட்டார். அவர் சிறைவாசத்தை சித்திரவதையாகவே எண்ணவில்லை. மாறாக தனித்து தியானம் செய்ய அருமையான இடம் என்று சொல்லியவாறே சிறைக்குள் சென்றார்.பின்னால் சைக்கோசிந்தஸிஸ் என்ற முறைக்கான பள்ளியையே அவர் ஸ்தாபித்தார்.

ஆகவே ஒரு நிலையை எப்படி நாம் மனதளவில் ‘ஃப்ரேம்’ செய்து கொள்கிறோம் என்பது முக்கியம் என்கிறார் ஷீனா. தினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விருப்பத்தேர்வுகள் நம் முன் வருகின்றன. நமது இலட்சியத்திற்கு அவை உதவுமா என்ற அணுகுமுறையுடன் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மொத்த வாழ்க்கைக்கும் உதவிகரமாக அமையும் என்கிறார் அவர்.

தான் பார்வையற்று இருந்தாலும், மற்றவர்களின் பார்வையைச் செம்மையாக்க உதவும் ஷீனா ஐயங்காரை வணிக விற்பன்னர்கள், பொருளாதார மேதைகள், ஊடகங்கள் மட்டும் மதிக்கவில்லை; சாமான்ய மக்கள் பெரிதாக மதிக்கின்றனர். எல்லாம் ஜாம் ஸ்டடியினால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

gustavus3

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ஸ்வீடன் நாட்டின் அரசரான மூன்றாம் குஸ்டாவஸ் (Gustavus III) பாரிஸுக்கு ஒரு முறை விஜயம் செய்தார். அங்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எல்லோரும் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அப்போது அவர்கள் மன்னரைப் பார்த்து மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீலே (Scheele) அவர் நாட்டைச் சேர்ந்த அவரது குடிமகன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் இப்படிப்பட்ட சிறந்த விஞ்ஞானியைக் கொண்டுள்ள மன்னரைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

மன்னருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது. விஞ்ஞானத்தை வளர்க்கத் தான் ஒன்றுமே செய்யவில்லையே, ஷீலே என்பது யார் என்றே தெரியவில்லையே என்று அவர் வேதனைப்பட்டார்.

உடனே தூதுவன் மூலமாக ஒரு அவசரச் செய்தியை தனது நாட்டின் பிரதம மந்திரிக்கு அனுப்பினார்: “உடனடியாக ஷீலேக்கு கவுண்ட் (Count)) அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கவும்.”

பிரதம மந்திரிக்குச் செய்தி கிடைத்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இந்த ஷீலே என்று. ஆனாலும் மன்னரின் ஆணையை நிறைவேற்ற அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஷீலேயைக் கண்டுபிடிக்கவும் என்று.

மந்திரிசபையின் செக்ரட்டரி – செயலாளர்- அவசரப் பணியை மேற்கொண்டார். பின்னர், முழுத்தகவலுடன் மந்திரி சபைக்கு வந்தார். “ஷீலே ஒரு நல்ல ஆள். அவர் ராணுவத்தில் லெப்டினண்டாக இருக்கிறார். பில்லியர்ட்ஸ் விளையாடுவதில் நிபுணர்”

மறுநாள் லெப்டினண்ட் ஷீலே, கவுண்ட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லெப்டினண்ட் ஷீலேயோ தனக்கு திடீரென்று கிடைத்த இந்த புதிய அந்தஸ்தைக் கண்டு பிரமித்து அதற்குக் காரணம் புரியாமல் விழித்தார்.

உண்மையான விஞ்ஞானி ஷீலேயைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவரைப் பற்றி யாருக்குமே தெரியவும் இல்லை!

அரசர்கள் இட்ட ஆணை சரியாக நிறைவேறுவது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பொறுத்தது. அன்றிலிருந்து இன்று வரை இது தான் உண்மை!

*********** நன்றி : பாக்யா

(Written by my brother S Nagarajan for Bhagya magazine;swami)

ஆகாயத்தில் மிதந்த மர்மக் கோட்டை:சீனர்கள் வியப்பு!

CHINA

Compiled by London swaminathan

Post No.2263

Date: 21 October 2015

Time uploaded in London: 20-00

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

வானத்தில் தொங்கிய கோட்டைகளை அழித்து அசுரரை வென்று சுவர்க்கத்தைக் காத்த தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் (சோழன்) கதையை மணிமேகலை காவியத்தின் வாயிலாக அறிவோம். முப்புரம் எரித்த சிவன் கதையை அறிவோம். இப்படி ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டைகள், தங்கம், வெள்ளி, இரும்புக் கோட்டை பற்றிய புராணக் கதைகள் எல்லாம் கற்பனையோ என்று கருதியோருக்கு ஒரு வியப்பான செய்தி!

china_buildings-800x450

லண்டனிலுள்ள எல்லா பத்திரிக்கைகளும் புகைப்படங்களுடன் வெளியிட்ட செய்தி, யூ ட்யூபில் பல லட்சம் பேர் காண்ட காட்சி இது. தென் சீனாவில் ஆகாயத்தில் பெரிய கட்டிடங்களின் மாயத்தோற்றத்தைக் கண்டு மக்கள் வியந்தனர். அதைப் புகைப்படம், வீடியோ படமும் எடுத்து டெலிவிஷன், யூ ட்யூப் ஆகியவற்றில் பகிர்ந்தனர்.

விஞ்ஞானிகள் எப்பொழுதுமே அதிசயங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகவே அவர்கள் இது பருவநிலை காரணமாக நடக்கும் ஒரு அபூர்வ நிகழ்ழ்சி என்கிறார்கள். அதாவது நிலத்தின் மீதோ, நீர் நிலையின் மீதோ காற்றுமண்டலம் வெப்பமானால் தூரத்திலுள்ள கட்டிடங்களை இப்படிப் பிரதிபலிக்கும் என்றும் இந்த அபூர்வ தோற்றத்துக்கு Fata Morgana Fஏடா மோர்கனா என்று பெயர் என்றும் சொல்லுகிறார்கள். ஜியாங்சி, போஷான் ஆகிய  Jiangxi and Foshan,  இரண்டு தென் சீன நகரங்களின் மக்கள் இந்த மாயத் தோற்றத்தைக் கண்டனர். வானளாவிய கட்டிடங்கள் ஆகாயத்தில் இருப்பது போல அவர்கள் பார்த்தனர்.

நாம் வாழும் காலத்திலுள்ள வீடியோ, டெலிவிஷன், பேஸ் புக், யூ ட்யூப் ஆகியவற்றை மறந்து விட்டு இது இல்லாத யுகத்தில் இப்படி நடந்திருந்தால், மக்கள் இப்படி நடந்ததைக்கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏதோ பைத்தியம் உளறுகிறதென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். இப்பொழுது வீடியோ காமெரா முதலியவற்றின் மூலம் உலகிற்குக் காட்ட முடிகிறது.

விஞ்ஞானிகள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், இன்னும் ஐயப்பாடு இருக்கத் தான் செய்யும். அடிக்கடி இப்படி நிகழ்ந்தால் அவர்கள் சொல்லுவதை மக்கள் ஏற்பர். ஏதோ அதிசயமாக இப்படி நடந்தால் பல விதமான கொள்கைகள் உருவாகும் சிலர் இது அமெரிக்கா செய்த வேலை என்றும் அவர்களுடைய Project Blue Beam,”ப்ராஜெக்ட் ப்ளூ பீம் என்பதன் ஒரு சதி வேலை இது என்றும் கருதுவர். மற்றும் சிலர் இது சீனாவே, அவர்களுடைய ஹோலோக்ராபிக் (Holograpgic) டெக்னாலஜி பற்றி மக்களின்  கருத்தை அறிய இப்படி செய்து பார்த்தது என்பர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் எல்லோரும் ஏற்கும் விளக்கம் கிடைக்கவில்லை.

aliencraft

லண்டனில் பறக்கும் தட்டு! விழுந்து நொறுங்கியது!!

இப்படி சீனச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய அதே நேரத்தில் லண்டன் தெரு ஒன்றில் மர்ம வாஹனம் ஒன்று வந்து விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கிங்ஸ்டன் என்னும் பகுதியில் இரவில் இனம் தெரியாத எந்திரம் போன்ற ஒர் பொருள் பெரிய சப்தத்துடன் விழுந்தது. உடனே மக்கள், போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் டெலிபோன் செய்யவே அவர்கள் பறந்தோடி வந்தனர். அதைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் ஒரு பறக்கும்தட்டு விழுந்து நொறுங்கியது போல இருக்கிறது என்று வருணித்தவுடன் பலருக்கும் மேலும் வியப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கே வெளி உலக மனிதர்கள் எவரும் இல்லை.

alienshipkingston

வேறு சிலர் இது பீட்ஸா கடை அடுப்பு போல இருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுவரை சரியான விளக்கம் இல்லை. சில நேரங்களில் ராணுவம் தொடர்பான சோதனைகள் போன்றவற்றைப் போலீசார் தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். போலீசாரும் குழம்பிப் போயிருப்பதாக லண்டன் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

kingstonpolice

-சுபம்-

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

cuba-5

Compiled by S NAGARAJAN

Post No.2247

 

Date: 16 October 2015

Time uploaded in London: 7-48 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 9-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 242ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 2

First Part of this article was published yesterday in this blog.

.நாகராஜன்

, வருணரே! எங்களைப் பேரிடரிலிருந்து காப்பீராக!

                                          –  அதர்வண வேத பிரார்த்தனை

 

napoleon

நெப்போலியனின் ரஷியப் படையெடுப்பு

1812ஆம் ஆண்டு. நெப்போலியனின்  படை ஆறு லட்சம் போர் வீரர்களைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப் பெரும் படையாக உருவாகி இருந்தது. எதற்கும் அஞ்சாத போர் வீரர்கள்! ரஷியாவிற்குள் அஞ்சாமல் சென்றான் நெப்போலியன். குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் நெப்போலியனுக்குக் அது ஒரு கவலைப் படக் கூடிய விஷயமா, என்ன! அவனது தளரா நம்பிக்கைக்கு முன்னர் எதுவும் துச்சம் தான்! மாஸ்கோவைப் பிடிக்கும் ஆவலில் படை முன்னேறியது. நகர் சூறையாடப்பட்டது. போர்வீரர்கள் தம் மனைவிமாருக்குக் கொடுப்பதற்காக ஏராளமான நகைகளைக் கொள்ளை அடித்திருந்தனர். ஆனால் நெப்போலியன் அறியாத ஒரு சின்ன உண்மை, ரஷியாவின் குளிர் பயங்கரமான ஒன்று என்பது தான்! ரஷியாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் படை வெளியேறிய போது குளிர் மைனஸ் நாற்பது டிகிரி செல்ஸியஸ் என்ற உறைகுளிர் நிலையை அடைந்து விட்டது.மைனஸ் நாற்பது என்பது ஒரு அபூர்வமான உஷ்ணநிலை. மைனஸ் நாற்பது செல்ஸியஸும் மைனஸ் நாற்பது ஃபாரன்ஹீட்டும் ஒரே அளவு என்ற விசித்திர நிலை மைனஸ் நாற்பது டிகிரியில் ஏற்படுகிறது. வீரர்கள் பொத் பொத்தென்று விழுந்தனர்; இறந்தனர். ஒரு நாளில் மட்டும் 50000 வீரர்கள் இறந்தனர். ரஷியாவை நோக்கிச் சென்ற ஆறு லட்சம் படைவீரரில் மீண்டு வந்தவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தான்! மகத்தான இழப்பு!! வந்தவர்களும் நொண்டி நொண்டி வந்தனர். மாபெரும் தளகர்த்தனான நெப்போலியனின் வீழ்ச்சி ரஷியப் படையெடுப்பில் ஆரம்பித்தது. ரஷிய நாடானது அப்பொழுதிலிருந்து ஐரோப்பாவின் சக்தி மிகுந்த நாடாக வளர ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம் குளிர் தான்!

 

 Greek-Persian_duel

கிரேக்கர்பெர்ஸியர் போர்

பெர்ஸியா வலிமை வாய்ந்த நாடாக இருந்த சமயம். கிரீஸின் மீது அது தன் பார்வையைப் பதித்ததுஆனால் கிரேக்க படை தளகர்த்தனான தெமிஸ்டோக்ளஸ் ஒரு அபூர்வமான கால நிலை வல்லுநன். அவனுக்குக் கடல் காற்றின் வலிமை, அது எந்த திசையில் எப்படி அடிக்கும் என்பதெல்லாம் அத்துபடிகி.மு 480இல் போர் ஆரம்பித்தது. சலாமிஸ் என்ற இடத்தில் நடந்த கடும் போரில் காற்றைப் பற்றிய தன் அறிவால் அவன் வென்றான். கிரேக்க கலாசாரம் பிழைத்தது!

 

ஜப்பானை நோக்கிய குப்ளாய்கான்

13ஆம் நூற்றாண்டு. மங்கோலிய அரசனான குப்ளாய்கானின் பார்வை ஜப்பானின் மீது திரும்பியது. ஜப்பானின் மீது படையெடுத்துச் சென்ற அவன் தோல்வியுற்றான். காரணம் ஜப்பானில் அப்போது வீசிய புயல் காற்றோடு கூடிய பருவ மழையால்! இன்னொரு முறை படையெடுத்தான். அப்போதும் தோல்வி. அப்போதும் காரணம் புயல் காற்றுடன் வந்த பருவ மழை தான்ஜப்பானிய ஷிண்டோ குருமார்களுக்கோ ஒரே சந்தோஷம். அவர்களின் தீவிரமான பிரார்த்தனைக்கு வருணன் செவி சாய்த்து வெற்றி அருளி விட்டான் என்று. அந்தப் புயல் மழையை அவர்கள் காமிகேஸ் என்று அழைத்துக் கொண்டாடினர். காமிகேஸ் என்றால் தெய்வீகக் காற்று என்று பொருள்!

 kublai good

அடிமைகளின் புரட்சி தோல்வியில் முடிந்தது

1800ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி. ரிச்மாண்ட் என்ற இடத்தில் இருந்த ஆயிரக்கணக்கான அடிமைகள் தங்கள் எஜமானர்களை எதிர்த்து தீவிரமான புரட்சி ஒன்று நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அது மட்டும் நடந்திருந்தால் ஏராளமானோர் பலியாகி, வரலாறே மாறி இருக்கும். ஆனால் அடிமைகளின் துரதிர்ஷ்டம்அன்று ஒரு பெரும் மழையுடன் கூடிய புயல் வந்தது. புரட்சி தோல்வியுற்றது!

 

 

ஹிட்லரின் ரஷியயெடுப்பு

அசராத அசுரனான ஹிட்லரின் மின்னல் வேகப் படையெடுப்புக்கு சடசடவென நாடுகள் சுருண்டு வீழ்ந்தன. ராட்சஸனின் கண்கள் ரஷியா மீது பதிந்தன. 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷிய படையெடுப்புக்கு நாள் குறித்தான் அவன். அந்தப் படையெடுப்பின் பெயர் ஆபரேஷன் டைபூன். ரஷியாவை அவன் படைகள் தாக்கின. படையெடுப்பில் வெற்றியோ நிச்சயம். ஆகவே ஜெர்மானிய வீரர்கள் ரஷிய ரெட் ஸ்குயரில் வெற்றி அணிவகுப்பின் போது அணிய வேண்டிய வெற்றி யூனிஃபார்மையும் எடுத்துச் சென்றனர். அவ்வளவு நம்பிக்கை. ஆனால் அது ரஷியாவின் கடுங் குளிர் காலம்வெற்றி சீருடையை மறக்காமல் எடுத்துச் சென்ற ஜெர்மனி வீரர்கள் மறந்தது குளிர்காலத்தில் போட வேண்டிய ஆடைகளைத் தான்! விளைவுமாஸ்கோவின் வெளிப்புறத்திலும் ஸ்டாலின்கிராடிலும் வீரர்கள் சுருண்டு செத்தனர். படையெடுப்பு பெரும் தோல்வியைத் தழுவியது. ஸ்டாலினும் ரஷிய மக்களும் மகிழ்ந்தனர். ரஷியாவின் குளிர் வரலாற்றைப் பல முறை மாற்றிய தெய்வீகக் குளிர்!

 hitler

மாயன் நாகரிக அழிவின் மர்மம்

மாயன் நாகரீகம் எப்படித் திடீரென மறைந்தது என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரே திகைப்பு. ஆனால் அதை ஆராய்ந்த கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லாமண்ட் டோஹெர்டி ஆப்ஸர்வேடரி அண்ட் தி நாஸா காடண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் ஸ்டடீஸில், உலக காலநிலை மாதிரிகளை அமைத்து ஆராயும் பேராசிரியர் பெஞ்சமின் குக் என்பவர் மாயன் நாகரிகம் அழிவதற்குக் காரணம் அவர்களே எனத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கிறார்.

திடீரென ஏற்பட்ட பஞ்சத்தால் லட்சக்கணக்கில் மக்கள் அழிந்து பட்டனர். ஆனால் இந்த திடீர் பஞ்சம் இயற்கையினால் ஏற்பட்ட சாபம் அல்ல; அவர்கள் காடுகளை அபரிமிதமாக அழித்ததினாலேயே பஞ்சம் ஏற்பட்டது என்கிறார்.

ஆக காலநிலை மாறுதல்களால் உலகின் வரலாறும் வரைபடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. போர்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வீரமும் புத்திசாலித்தனமும் மட்டுமல்ல. காலநிலையும் கூட என்பதை வரலாறு தெரிவிக்கிறது.

இயற்கையான காலநிலை மாறுபாடுடன் மனிதன் இன்றைய உலகில் எல்லா நாடுகளிலும் காடுகளை வெகு வேகமாக அழித்து வருகிறான்.

மக்களுக்கு காடுகளின் முக்கியத்துவம் தெரியவே இல்லை என்பது விஞ்ஞானிகளின் புலம்பலாக மாறி விட்டது.

தன்னைத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளலாமா என விஞ்ஞானிகளில் பலர் வெளிப்படையாக மனித குல அழிவு பற்றி வேதனை தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

காலநிலை மாறுதல்கள் பற்றிய செய்திகளை அறிந்தால் இயற்கையை இன்னும் அருமையாகப் பாதுகாக்க மனம் வரும், இல்லையா!

 Mayan-Calendar

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரபல விஞ்ஞானி. தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு.

நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒருமுறை அவர் கூறினார்.

விவரத்தையும் அவரே கூறினார் இப்படி: முதலில் ஒரு ஆபீஸில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த மெஷினிடம் எனக்கு மிகவும் ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால், வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான், என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.

எடிஸன் சிரித்தவாறே தொடர்ந்தார்:—“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய கால கட்டிடம் அது. எங்கு பார்த்தாலும் எலிகள். அவற்றின் அட்டகாசம் என்னால் பொறுக்க முடியாத அளவிற்குப் போனது. ஈக்களை அடித்துக் கொல்வது போல எலிகளைக் கொல்ல ஒரு சாதனத்தைக் கண்டு பிடித்தேன்.

edison

அவ்வளவு தான், அறை முழுவதும் கொலையுண்ட எலிகளின் துண்டுகள் சிதறிக் கிடந்தன. அறையைப் பார்த்தவர்கள் உடனே என்னை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

எப்போதும், எதனாலும் மனம் தளராதவர் எடிஸன்!

***************

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

here on arth

Compiled by S NAGARAJAN

Post No.2245

 

Date: 15 October 2015

Time uploaded in London: காலை 8-54

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

அறிவியல் துளிகள்

பாக்யா 2-10-2015 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 241ஆம் அத்தியாயமாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை

உலக சரித்திரத்தை மாற்றி அமைத்த கால நிலை – 1

.நாகராஜன்

எல்லோரும் சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டாலும் கூட இரண்டு விஷயங்களைப் பற்றித் தான் நிச்சயமாக எதையும் சொல்ல முடியவில்லை. காதலும், காலநிலையும் தான் அந்த இரண்டு விஷயங்கள்!  

 

 –  ஆலிஸ் ஹாஃப்மேன் (பிரபல பெண் எழுத்தாளர் ‘Here on Earth’ என்ற நாவலில்)

காலநிலை மாறுபாடு என்பது சாதாரண விஷயமில்லை. மனிதகுல வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும் புயல்கள், சுனாமி, தீவிரமான பருவமழை போன்றவை பல நாடுகளின் சரித்திரப் போக்கையே அதிரடியாக மாற்றியுள்ளன. ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தது முதல் நெப்போலியனின் குதிரைப்படை அழிந்தது வரை பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பித்தது முதல் ஜார்ஜ் வாஷிங்டன் அதிர்ஷ்டவசமாக தோல்வி அடையாமல் இருந்தது வரை காலநிலையை மட்டுமே வரலாறு காரணமாகக் குறிப்பிடுகிறது.

காலநிலை மாறுபாடு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறும் சரித்திரப் போக்கின் மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பார்க்கலாம்.

 

பன்னிரெண்டாம் சார்லஸின் ரஷ்யப் படையெடுப்பு  

1709ஆம் ஆண்டில் பன்னிரெண்டாம் சார்லஸ் ரஷியாவின் மீது படையெடுத்தார். ஐரோப்பாவிலிருந்து ரஷியா மீது படையெடுத்த முதல் ஆள் இவர் தான்! அதுவும் ரஷியாவின் கடுங்குளிர் காலத்தில் தன் படைவீரர்களை மரணத்தை நோக்கி நடை போட வைத்தார் இவர். ஸ்வீடன் தேசத்துப் படைகளுக்கு ரஷிய குளிர் என்றால் என்ன என்று புரிந்தது. ஏராளமானோர் மடிந்து விழ  ரஷிய மன்னர் முதலாம் ஜார் பீட்டர் வெற்றி வாகை சூடினார்.

 wasshingtom

ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில் ஒரு அதிசயம்!

அமெரிக்க ராணுவத்திற்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அவரது படைவீரர்களுக்கு யூனிஃபார்மே கிடையாது. அவர்களிடம் ஆயுதமும் கிடையாது. தன்னார்வத் தொண்டர்கள் அவர்கள். ஆனால் அவர்களை எதிர்த்த பிரிட்டிஷ் ராணுவமோ அசுர பலம் பொருந்திய ஒன்று. ஏராளமான ஆயுதங்கள். அவர்களை ஜெயிப்பது நிச்சயமாக முடியாத ஒன்று. 1776ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி லாங் ஐலேண்டில் பிரம்மாண்டமான போர் ஒன்று நடக்க இருந்தது. போர் மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்குமானால் அமெரிக்கா மண்ணைக் கவ்வுவது நிச்சயம். ஆனால் என்ன ஆச்சரியம். திடீரென்று கடும் பனிப் போர்வை ஒன்று தோன்றியது. பிரிட்டிஷ் வீரர்கள் திகைத்தனர். எதுவுமே கண்ணுக்குத் தெரியாத நிலையில் யாருடன் எங்கு சண்டை போடுவது. அவர்கள் பின் வாங்கிச் சென்றனர். சரித்திரம் காலநிலை மாறுபாடு காரணமாக அமெரிக்காவை வாழ வைத்தது. அந்தப் பனியை திடீரென்று உருவாக்கியவர் யார்?இயற்கையா, கடவுளா?

 11-old-french-postage-stamp-howard-hershon

பிரெஞ்சு புரட்சி எப்படி உருவானது?

பிரான்ஸ் நாட்டில் பொருளாதாரம் பயங்கரமான வீழ்ச்சியைக் கண்ட காலம் அது! அமெரிக்கர்கள் பிரிட்டிஷாருடன் போர் புரிந்த சமயமும் அது தான்! ஏகப்பட்ட கடன் சுமை! பிரான்ஸில் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்தது. கடைசி மரண அடியாக ஒரு பெரும் புயல் வந்தது. நாடு முழுவதும் இருந்த பயிர்களை அது நாசப் படுத்தியது. கொஞ்ச நஞ்சமிருந்த பயிர்களும் காலி; அவர்களின் நம்பிக்கையும் காலி! ஒட்டு மொத்த ஜனங்களும் கிளர்ந்தெழுந்தனர். வெடித்தது பிரெஞ்சுப் புரட்சி. இதைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட மாறுதல்களை அனைவரும் அறிவர். அந்த கடைசிப் புயலை உருவாக்கி உலகத்தையே மாறுதலை அடையச் செய்தது எது? காலசக்தியா???!!!

 nuclear stamp

ஹிரோஷிமா மீது விழுந்த அணுகுண்டு!

நல்ல கோடைக்காலம். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரம் வழக்கம்போல இயல்பான வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. காலை மணி 7.09 

ஹிரோஷிமா மீது பறந்த விமானம் ஒன்று செய்தி ஒன்றை பரிபாஷையில் அனுப்பியது. அதன் உண்மையான அர்த்தம் இது தான்:- பத்தில் மூன்று பகுதிக்கும் குறைவாகத் தான் மேகம் இருக்கிறது. குண்டைப் போட்டு விடலாம்!

அதாவது குண்டு போட சரியான காலநிலை உள்ளது. போட்டு விடலாமா என உத்தரவு கேட்கப்பட்டது. போடலாம் என்று பதில் வந்தவுடன் ஹிரோஷிமாவின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. அதன் மீது அணுகுண்டு போடப்பட்டு உலக வரலாற்றின் ஒரு கோரமான நாடகம் அரங்கேற்றப்பட்டது. அடுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி. கோகுரா என்ற ஜப்பானிய நகர் மீது குண்டு போட அமெரிக்க விமானம் பறந்தது.ஆனால் அந்த நகரின் மீது குண்டு போட முடியாதபடி மேகமூட்டம் இலக்கை மறைத்து விட்டிருந்தது. விமானம் மாற்று இலக்கான நாகசாகி நோக்கி பறந்தது. காலநிலையால் கோகுரா பிழைத்தது!

இன்னும் சில மாறுதல்களை அடுத்த வாரம் பார்க்கலாம்!

kelvin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

லார்ட் கெல்வின் பெரிய விஞ்ஞானி. அவர் பெயரால் தெர்மாமீட்டரில் கெல்வின் என்ற உஷ்ணநிலை அளவீடே குறிக்கப்படுகிறது.

ஒரு நாள் அவர் ஒரு மின் உற்பத்தி நிலையத்திற்கு திடீரெனச் சென்றார். தன்னை யார் என்று அவர் சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு ஃபோர்மன் அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்த நிலையம் முழுவதும் சுற்றிக் காண்பித்தார். ஒவ்வொரு இடமாக நன்கு விளக்கியதோடு மின்சாரம் பற்றிய அனைத்தையும் எடுத்துரைத்தார்.

மின் நிலையம் முழுவதும் சுற்றிப் பார்த்து விட்ட நிலையில் விடை பெறும் நிலையில் இருந்த கெல்வின் ஃபோர்மனை இறுதியாக ஒரு கேள்வி கேட்டார்: அது சரி, அப்படியானால் மின்சாரம் என்றால் என்ன?”

இது வரை விளக்கி வந்த ஃபோர்மன் வாயடைத்துத் திகைத்துப் போய் நின்றார்.

அன்புடன் அவரை நோக்கிய கெல்வின், “பரவாயில்லை, அந்த ஒன்று தான் உங்களுக்கும் எனக்கும் தெரியாது!” என்று சொல்லியவாறே அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர் தான் ஃபோர்மனுக்கு வந்தவர் லார்ட் கெல்வின் என்பது தெரிய வந்தது.

************

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் !!

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

Research Article  by S NAGARAJAN

Post No.2240

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-34

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

ரிஷிகள் சரித்திரம்

 

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

.நாகராஜன்

 

ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இதிஹாஸங்களும் நமது புராணங்களும் ஏராளமான ரிஷிகளின் சரித்திரத்தைக் குறிப்பிடுகின்றன.

மஹாபாரதத்தில் ஆதி பர்வம் மற்றும் சல்ய பர்வத்தில் வரும் இரு ரிஷிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

 

 

அக்னிவேசர்

இவர் அக்னியிலிருந்து ஜனித்தவர். இவர் தவ சக்தியுள்ள ஒரு ரிஷி. பரத்வாஜருடைய சிஷ்யர். இவர் சூத்திரம் இயற்றியவரில் ஒருவர்.

பரத்வாஜரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட ஆக்னேயாஸ்திர மந்திரத்தை பரத்வாஜருடைய புத்திரரும், தம்முடைய சீடருமான துரோணாசாரியாருக்கு இவர் உபதேசம் செய்தார்.

அதே போல, சாதாரண மனிதர்கள் மேல் பிரயோக்கிக்கக் கூடாததும், உலகையெல்லாம் அழிக்கக் கூடியதும், எப்போது பிரயோகித்தாலும் வீண் போகாததுமான “பிரம்மசிரஸ்” என்ற அபூர்வமான தேவாஸ்திரத்தையும் துரோணருக்குக் கொடுத்தார்.

Agni-II_missile

அதை துரோணர் அர்ஜுனனுக்குக் கொடுத்தார்.

அர்ஜுனனுக்கு மட்டும் துரோணர் இதை ஏன் கொடுக்க வேண்டும்? அதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

ஒரு நாள் அனைத்து சிஷ்யர்களுடனும் கங்கையில் குளிப்பதற்காக துரோணாசாரியர் சென்றார். குளிக்கும் போது, பலமான முதலை ஒன்று அவரது கணுக்காலைப் பிடித்தது. தன்னை விடுவித்துக் கொள்ளும் சக்தி அவருக்கு உண்டு என்றாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. “முதலை என்னைப் பிடித்து விட்டது. காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரலிட்டார். மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். அர்ஜுனனோ ஐந்து அம்புகளை வீசி நீருக்குள் இருந்த முதலையைக் கொன்று துரோணரை விடுவித்தான்.

இதனால் துரோணர் மகிழ்ந்தார்.

அர்ஜுனனுடைய திறமையை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணிய துரோணர், அனைத்து சிஷ்யர்களையும் அழைத்தார்.

துரியோதனன், சித்திரஸேனன், துச்சாஸனன்,விவிம்சதி, அர்ஜுனன், அஸ்வத்தாமா ஆகியோரை முன்னே வரச் சொல்லி, மண்ணால் ஒரு குழந்தையைச் செய்து அதை  சிஷ்யர்கள் பார்க்கும் போதே கங்கையில் போட்டார். அனைவரின் கண்களையும் துணிகளால் கட்டி, வில்லைக் கொடுத்தார். “கண் கட்டியிருக்கும்படியே ஜலத்தில் இருக்கும் பொம்மைக் குழந்தையை அடியுங்கள்” என்றார்.

மற்றவர்கள் பேசாமல் இருக்க, அர்ஜுனன் மட்டும் 15 பாணங்களினால் நீருக்குள் மூழ்கி இருந்த அந்த பொம்மையை அடித்தான்.

அனைவரிலும் அர்ஜுனனே திறமைசாலி என்ற முடிவுக்கு வந்த துரோணர் ‘பிரம்ம சிரஸ்’ என்ற அஸ்திரத்தை உபதேசித்தார். அஸ்திரம் விடுவது, திருப்பி வாங்குவது, அதன் சொரூப நிர்ணயம் ஆகிய மூன்றையும் விதிப்படி அர்ஜுனன் கற்றுக் கொண்டான். அர்ஜுனனிடம், “மனிதர்கள், அற்ப சக்தியுள்ளவர்கள் மேல் இதை பிரயோகிக்காதே! மனிதரல்லாத தேவர் முதலியோர் உன்னை வருத்துவாரானால் இதை நீ பிரயோகிக்கலாம்” என்றார் துரோணர். “உலகில் உன்னைப் போன்ற ஒரு வில்லாளி இன்னொருவன் இனிமேல் இல்லை” என்று புகழாரமும் சூட்டினார். (சல்ய பர்வம் 143வது அத்தியாயம்)

(மஹா பாரதம், ஆதி பர்வம், 140வது, 143வது அத்தியாயம்)

saras2

அரிஷ்டஸேனர் அல்லது ஆர்ஷ்டிஸேனர்

முன்னொரு காலத்தில் பிரம்மா தமது சக்தியால் “லோகாலோகம்” என்ற பர்வதத்தைப் படைத்து அருளினார். அங்கே ஒரு சிறந்த புண்ணீய தீர்த்தம் இருக்கிறது.

அந்த இடத்தில் அரிஷ்டஸேனர் என்னும் பெரும் முனிவர் கடுமையான தவம் செய்து பிராமணர் என்னும் உயர் பதவியை அடைந்தார்.

இவரைப் பற்றிய இன்னொரு செய்தி மஹாபாரதம் சல்ய பர்வத்தில் நாற்பத்தோராவது அத்தியாயத்தில் வருகிறது:

ஆதி காலத்தில் கிருத யுகத்தில் அரிஷ்டஸேனர் என்ற ஒருவர் இருந்தார். அவர் தனது குருவின் வீட்டில் இருந்து கொண்டு கல்வி கற்று வந்தார்.

அவ்வாறு வெகு காலம் கற்றும், குருகுலத்தில் இருந்தும், அவரது வித்தை ஒரு முடிவுக்கு வரவில்லை. வேதங்களும் முடிவு பெறவில்லை. பிறகு கவலையுடன் அவர் பெரும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் மூலம் வேதங்களை அறிந்தார்.

அவ்வாறு சிறந்த கல்வியையும், வேத ஞானத்தையும் அடைந்து மேலே சொன்ன தீர்த்தத்தில் இருந்து கொண்டு பெரும் பயனைப் பெற்றார்.

அவர் பிறகு அந்தப் புண்ணிய தீர்த்தத்திற்கு மூன்று வரங்களை அளித்தார்.

இன்று  முதல் சரஸ்வதி நதியினுடைய இந்த தீர்த்தத்தில் குளிப்பவன் அசுவமேத யாகம் செய்த பெரும் பயனை அடைவான்.

இன்று முதல் இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு பாம்புகளாலும், காட்டு மிருகங்களாலும் எவ்வித அபாயமும் நேரிடாது.

சிறிய முயற்சிகளைச் செய்பவனும் கூட இவ்விடத்தில் பெரும் பயனை அடைவான்.”

 

இந்த மூன்று வரங்களையும் கொடுத்து விட்டு அரிஷ்ட ஸேனர் சுவர்க்கத்தை அடைந்தார்.

 

                            (மகா பாரதம், சல்ய பர்வம் அத்தியாயம் 41)

 

சுபம்–

***

டாக்டருக்கும் யமனுக்கும் வேறுபாடு என்ன?

cartoon-doctor-8

Compiled by London swaminathan

Post No.2227

Date: 9  October 2015

Time uploaded in London: 9-03 காலை

Thanks for the pictures.

ஒரு அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்.

இது, பல்லாயிரக் கணக்கான சம்ஸ்கிருதப் பாடல்கள் நிறைந்த புத்தகமான சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் நூலில் இருக்கிறது. அதாவது சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டு நூலில் ஒரு பாடல். அதில் டாக்டர்களைப் பற்றிக் கூறுவது உலகில் எல்லா மொழிகளிலும் ‘ஜோக்’-குகளாக உள்ளன.

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர!!

யமஸ்து ஹரதே ப்ராணான், வைத்ய: ப்ராணான் தனானி ச!

“ஹே, டாக்டர்! யமரஜனின் சகோதரனே!! உனக்கு வணக்கங்கள்!

யமன் என்பவன் உயிரை (மட்டும்) கொண்டுபோகிறான். டாக்டர்களோ உயரையும் பணத்தையும் சேர்த்துக் கொண்டுபோகிறார்கள்!!!”

இதே கருத்து உலகம் முழுவதிலும் டாக்டர்கள் பற்றிய “ஜோக்”–குகளில் இருப்பதை முன்னரே ஆங்கிலத்தில் நிறைய சம்பவங்கள் மூலம் கொடுத்துள்ளேன்.

டாக்டர்களின் அனுபவமின்மை பற்றியும் பல பொன்மொழிகள் உள. தமிழில் சொல்லுவோம்:

“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” – என்று! இதுவும் சம்ஸ்கிருதத்தில் காணப்படுகிறது!

ஹத்வா ந்ருணாம் சஹஸ்ரம், பஸ்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரின் கதையை முடித்தவுடன்தான், ஒரு டாக்டர் பெரிய டாக்டர் ஆகிறார்.

xxx

doctor

யாருக்கு முதல் மரியாதை என்று ஒரு டாக்டருக்கும் வழக்கறிஞருக்கும் வாக்கு வாதம் வரவே டயொஜெனிஸ் (கி.மு.412) என்ற கிரேக்க நாட்டு தத்துவ அறிஞரிடம் சென்றனர். அவர் சொன்னார்:

திருடன் முதலில் போகட்டும்; மரணதண்டனை நிறைவேற்றுபவன் அவன் பின்னால் செல்லட்டும்!

Xxx

அலெக்ஸாண்டர் துமா என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். மார்செய் நகரத்தின் பிரபல டாக்டர் ஜிஸ்டால், அவரை விருந்துக்கு அழைத்தார். விருந்து எல்லாம் சுகமாக முடிந்தவுடன் தன்னுடைய ஆல்பத்தைக் காட்டினார் டாக்டர்.

“ஓய், நாவலாசிரியரே! நீரோ எழுத்துச் சித்தர்! எழுத்துத் தச்சர்! எங்கே பார்க்கலாம், உமது கை வல்லமையை? என் ஆல்பத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்க்கலாம்”– என்றார் டாக்டர் ஜிஸ்டால்.

நாவலாசிரியர் துமா, பேனாவை எடுத்தார், எழுதினார்:

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

—இதை எழுதிக் கொண்டிருக்கையில் டாக்டர் குறுக்கிட்டார். “எழுத்தாளரே உமது புத்தியைக்காட்டிவிட்டீரே! உங்கள் வர்க்கமே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்னுமினம். நான் விருந்து கொடுத்தவுடன், என்னை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளுகிறீர்களே!”

நாவாலசிரியர் சொன்னார்; “அட! ஏன் அவசரப்படுகிறீர்கள்; நான் இன்னும் எழுதியே முடிக்கவில்லையே”- என்று சொல்லிக் கொண்டே கடைசி வரியை எழுதி முத்தாய்ப்பு (முத்தான ஆப்பு) வைத்தார்:

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

 

முழுக்கவிதையையும் படியுங்கள்:—-

 

“டாக்டர் ஜிஸ்டால் ஊருக்கு வந்தார்

நோய்களை ஒழிக்க மிகவும் முயன்றார்;

மருத்துவ மனைகளுக்கு வேலையே இல்லை!!

“ஊரின் இடு(சுடு)காடு பெரிதாகிவிட்டது!”

–சுபம்–

கனவில் கண்ட உலக சரித்திரம்!

toynbee book

Research article written by S NAGARAJAN

Post No.2207

Date: 2nd  October 2015

Time uploaded in London: 5-52 am

 

 

(My elder brother S NAGARAJAN is a regular contributor to Bhagya, Jnanalayam, Nilacharal, Ezine and several other magazines and blogs: swaminathan)

தற்பொழுது விற்பனையாகி வரும் ஞானஆலயம்அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை.

பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று இளைஞர்களை ஊக்குவித்தார். கனவு காண எப்படி வேண்டுதல் புரிய வேண்டும் என்ற மந்திரத்தோடு அபூர்வமான விஷயங்களைப் போதிக்கிறது நம் அக்னிபுராணம்!

கனவில் கண்ட உலக சரித்திரம்!

அக்னி புராணமும் ஆர்னால்ட் டாய்ன்பியும்!!

.நாகராஜன்

 

toynbee

துஸ்ஸ்வப்ன நாசன:

நல்ல கனவுகளைக் காணுங்கள் என்பதே ஹிந்து சாஸ்திரங்கள் தரும் உபதேசம்! துஸ்ஸ்வப்ன நாசன: (தீய கனவுகளை நாசம் செய்பவன் நாமம் 926) என்றே விஷ்ணுசஹஸ்ரநாமம் விஷ்ணுவைத் துதிக்கிறது. அசோகவனத்தில் திரிஜடா, சீதையிடம் தான் கண்ட நல்ல கனவைத் தெரிவிக்க, அதன் பின்னர் அனுமன் சீதையை தரிசிக்க அதுவே ராமாயணத்தின் முக்கிய திருப்புமுனைக் கட்டமாக அமைகிறது!

 

அக்னிபுராணம் தரும் அறிவுரை

கனவுகளைப் பற்றி அக்னி புராணம் பிரமிக்கத் தக்க விஷயங்களை அள்ளித் தருகிறது. பல்வேறு கனவின் பலன்கள், எந்த ஜாமத்தில் கண்டவை பலிக்கும் என்பன போன்றவை அதில் துல்லியமாக விளக்கப்பட்டுள்ளன. ஒரு நல்ல கனவை முதலில் கண்டு விட்டுப் பின்னர் கெட்ட கனவைக் கண்டால் கெட்ட கனவே பலிக்கும். ஆகவே நல்ல கனவைக் கண்ட பின்னர் உறங்காதே என்ற ஆலோசனையையும் அது அன்புடன் வழங்குகிறது. ஆகவே தான் நம் முன்னோர்கள் நல்ல கனவைக் கண்டவுடன் மகிழ்ச்சியுடன் எழுந்து அனைவரிடமும் அது பற்றிக் கூறி மகிழ்வர்; நல்லதை எதிர்நோக்கிக் காத்திருப்பர்.

ஹஸ்டன் ஸ்மித் என்ற அறிஞர் இந்து மதத்தில் மதமே கலை; கலையே மதம் என்று பொருத்தமுறக் கூறுகிறார்.

நமது கோவில் சிற்பங்கள், அங்குள்ள நாட்டியங்கள், இசை, அலங்காரம் என்று அனைத்தையும் அலசி ஆராய்ந்தால் நமது மதமே நமது கலை; நமது கலையே நமது வாழ்க்கை முறை என்பது விளங்கும்.

ஆனந்த குமாரஸ்வாமி (1877-1947) ஒரு பெரும் கலைஞர். இந்து மதச் சிறப்புகளை கலைஞனுக்கே உரித்த வகையில் நுணுக்கமாக உலகினருக்கு விவரித்தவர். அவர் அக்னி புராணத்திலிருந்து ஒரு அழகிய மந்திரத்தை எடுத்துக் காட்டி ஒரு கலைஞன் பெரிய காரியத்தைத் தொடங்கும் முன்னர் முதல் நாள் இரவில் கனவில் அதை நிறைவேற்றுவதற்கான வழிகளைக் காண்பிக்குமாறு வேண்டுதல் புரியும் மந்திரத்தைக் கூற வேண்டும் என்கிறார். கலை என்பது ஒரு யோகம் என்கிறார் அவர். கனவுக்கும் பெரிய திட்டத்தை நனவாக்கும் செயலுக்கும் உள்ள நெருக்கத்தை நல்ல முறையில் அடைய அக்னி புராணம் கூறும் முறையில் பிரார்த்தித்துச் செய்தால் அது பிரம்மாண்டமான வெற்றியைப் பெறும் என்கிறார் அவர். Visualization என்னும் காட்சிப்படுத்தல் பற்றி ஆதிசங்கரரும் அற்புதமாக விளக்கியுள்ளார்.

கனவுப் படைப்பாளிகளுக்கு நவீன வரலாற்றில் பஞ்சமே இல்லை. நூற்றுக்கணக்கான பேர்களில் மாதிரிக்கு 14 பேரை அட்டவணையில் தனியே காணலாம்!

gra0168sh_einstein

ஐன்ஸ்டீனின் மனச்சித்திரம்

உலகின் அதிசயமான கண்டுபிடிப்புகள் எல்லாம் விசுவலைசேஷன் என்ற காட்சிகள் மூலமாகவே பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐன்ஸ்டீனும் விதி விலக்கல்ல. ஒளியின் வேகத்தின் மீதேறிச் செல்வது போன்ற காட்சியே உலகின் பிரம்மாண்டமான கண்டுபிடிப்பான தியரி ஆஃப் ரிலேடிவிடியயைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. அதனால் தான் அடிக்கடி அவர் மனச்சித்திரத்தை வற்புறுத்தி வந்தார் வாழ்நாள் முழுவதும்.

ஆர்னால்ட் டாய்ன்பியின் உலக சரித்திரம்

உலகின் சரித்திரத்தை எழுதிய ஆர்னால்ட் டாய்ன்பி (1889-1975) ஒரு அற்புதப் படைப்பாளி. ‘A STUDAY OF HISTORY’’ என்ற அவரது படைப்பு 30 லட்சம் சொற்கள் அடங்கியது. 26 நாகரிகங்களைப் பற்றி 12 தொகுதிகளில் அவர் விளக்கியுள்ளார். ஒரு மனிதனால் இப்படி துல்லியமாக சரித்திரக் காட்சிகளை எழுதி விட முடியுமா என்ன/

இதை எப்படி எழுத முடிந்தது என்பதை அவரே விளக்கியுள்ளார். படுத்தவுடன் கனவில் பக்கம் பக்கமாகச் சொற்கள் அடங்கிய காட்சிகள் விரியுமாம். எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி விடுவாராம். கனவில் அகக் கண்ணில் விரிந்த காட்சிகள் படலம் படலமாக வர உலக சரித்திரம் மிளிர்ந்தது. அக்னி புராணம் கூறும் கனவுக் காட்சிகளுக்கு அவரே சரியான சான்று. கனவின் மூலமாக உத்வேகம் பெற்ற அறிஞர் அவர்.

toynbee book3

பற்றிக் கொள்; காத்திரு

கடவுளைப் பற்றியும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் விளக்கப் புகுந்த அவர் இதற்கு விடையாகத் தனது கனவு ஒன்றையே விவரிக்கிறார்!

இந்தக் கனவில் சிலுவையின் அடிப்பாகத்தைப் பிடித்துக் கொண்டு தான் இருப்பதை அவர் கண்டார். யார்க்‌ஷைரில் ஆம்பிள்ஃபோர்த் அப்பேயில் (Abbey of Ampleforth) பெனிடிக்‌ஷன் பீடத்தின் மேல் உள்ள சிலுவையையே அவர் கண்டார்.

பிறகு தெளிவான லத்தீனில் கம்பீரமான ஒரு அசரீரி ஒலித்தது!

“ஆம்ப்ளெக்ஸஸ் எக்ஸ்பெக்டா”

இதன் பொருள்? “பற்றிக் கொள்; காத்திரு” (CLING AND WAIT என்பதாகும்.

(ஷீர்டி சாயி அன்பர்களுக்கு அவர் கூறும் ச்ரத்தை; பொறுமை என்ற இதே அர்த்தம் தொனிக்கும் இரு வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா!)

சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான அவரது கனவு நமது உள்ளத்தில் சிலிர்ப்பூட்டும் இறை நினைப்பை ஊட்டுகிறதல்லவா?

ஆரம்பத்தில் கிறிஸ்தவத்தில் அபார பற்று உடையவராக அவர் இருந்தார். 1944ஆம் ஆண்டு அவர் மனைவி ரோஸலிண்ட் மர்ரேயை விவாகரத்து செய்ய வேண்டி இருந்தது. தன் மனைவி தன்னை விட்டுப் பிரிய கிறிஸ்தவ மதத்தின் வறண்ட ஒரு கொள்கையே காரணம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். கிறிஸ்தவ மதத்தின் மீதான பிடிப்பு தளரவே புத்த மதம் அவரை ஈர்த்தது.

சமரஸ மத நோக்கு கொண்ட மகாத்மா காந்திஜியை அவர் பெரிதும் போற்றினார். “சமுதாயத்தைக் காக்க வந்த நவீன மீட்பர்” (Modern savior of Society) என்று அவர் காந்திஜியைக் கொண்டாடினார்.

அவரது விரிந்த பார்வை ஹிந்து மதத்தின் பால் திரும்பியது. ஹிந்து மதம் காட்டும் உண்மைகளை உணர்ந்து பெரிதும் அதிசயித்தார் அவர்.

உலக சரித்திரத்தை எழுதியவர் உலகின் எதிர்காலமே இனி ஹிந்து மத நோக்கில் சென்றாலேயே செழிக்கும் என்று முத்தாய்ப்பாக இறுதியில் எழுதி தனது பத்தாவது பாகத்தை முடித்தார்.

கனவில் அவர் கண்ட காட்சி எதிர்காலத்தை ஆளும் ஹிந்து மதக் காட்சி என்றால் அது சரியான காட்சி தானே! தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் உரியவன் அல்லவா!

அவர் கூறுவதை அப்படியே காண்போம்: – “The indian religions are not exclusive minded. They are ready to allow that there may be alternative   approaches to the mystery. I feel sure that in this they are right and that this catholic minded Indian religions spirit is the way of salvation for human beings of all religions in an age in which we have to learn to live as a single family if we are not to destroy ourselves.”

guinea-bissau-science-stamp-2003

“இந்திய மதங்கள் மற்ற எதையும் ஒத்துக்கொள்ளாத மனப்பான்மை கொண்டவை அல்ல. இறைமர்மத்திற்கு விடை காண இன்னும் வேறு பல அணுகுமுறைகளும் உண்டு என்பதை அவர்கள் அனுமதிக்கத் தயார்! இதில் அவர்கள் கூறுவது சரியே என்பதில் நான் உறுதி கொள்கிறேன். நம்மை நாமே அழித்துக் கொள்ளாது, ஒரே குடும்பமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஒரு யுகத்தில் வசிக்கும் எல்லா மதங்களையும் சார்ந்துள்ள மனிதர்களுக்கு இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மையுள்ள இந்திய மதங்களின் உணர்வே உய்வதற்கான வழியாகும்.”

பெரிய மேதை தன் கனவில் கண்ட அகக்காட்சியில் உலகம் உய்வதற்கும் அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் அற்புதமான பரந்த மனப்பான்மை இந்து மதத்தில் உள்ளது, அதை ஏற்போம் என்று கூறுவது இன்றைய நிலையில் எவ்வளவு பொருத்தமாக உள்ளது!

********************

sleep

கனவுப் படைப்பாளிகள்

———————————————————————————————————————————————-

எண்           கண்டவர் பெயர்               படைப்பு

————————————————————————————————————————————————

01               ஐன்ஸ்டீன்                    தியரி ஆஃப் ரிலேடிவிடி

02               ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன்   1892இல் எழுதிய Across the Plains

03               ஆர்னால்ட் டாய்ன்பி          உலக சரித்திரம்

04             சாமுவேல் டெய்லர் கூல்ட்ரிட்ஜ்   குப்ளாகான் (கவிதை)

05             ராமானுஜன்                    கணிதக் கண்டுபிடிப்புகள்

06             கெக்குலே                 பென்ஸீனில் கார்பன் அணுக்கள் அமைப்பு

07        பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்            பல கணிதத் தீர்வுகள்

08        ஜேம்ஸ் காமரான்         ஹாலிவுட் படம் – தி டெர்மினேடர்

09        ரெனி டெஸ்கார்டெஸ்     அறிவியல் அணுகுமுறை மற்றும் கார்டீஸியன்

கோ ஆர்டினேட் சிஸ்டம்

10        மேரி ஷெல்லி           உலகின் முதல் அறிவியல் நாவலான

“ப்ராங்கென்ஸ்டீன்”

11        பால் மக்கார்ட்னி            பிரசித்தி பெற்ற இசைப்பாடல் “Yesterday”

12        நீல்ஸ் போர்                 அணுவின் அமைப்பு

13    ஃப்ரெடெரிக் பாண்டிங்     (நோபல் பரிசு பெற்றவர்) பெனிசிலின் இஞ்ஜெக்‌ஷன்

14    எலியாஸ் ஹோ            தையல் மெஷின்

sleep2

————————————————————————————————————————————————————