டேய் நில்லடா! சொல்லடா! கம்பனின் ஏகவசனம்! (Post No.5106)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  15-53  (British Summer Time)

 

Post No. 5106

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

டேய் நில்லடா! சொல்லடா! கம்பனின் ஏகவசனம்! (Post No.5106)

 

வாடா, போடா, ஏண்டா– என்பதெல்லாம் ஏக வசனப் பேச்சு; மரியாதைக் குறைவான பேச்சு. ஆயினும் கம்பன் அதை அழகாகக் கையாளுகிறான். இதன் மூலம் இராவணாதியர்களின் தரமும் ராம லஷ்மாணாதியர்களின் உயர்வும் தெள்ளிதின் விளங்கும்.

 

கம்பராமாயமண, யுத்த காண்டம், நாகபாசப் படலத்தில் இந்திரஜித் சொல்கிறான் அனுமனைப் பார்த்து:-

“அடேய் நில்லடா! சிறிது நேரம் நில்லடா! உன்னுடன் சண்டை போடத்தான் வந்துள்ளேன்; வெறும் பேச்சோடு போய்விடாதே. உனது வீரத்தைப் புகழ்ந்து கொண்டு இங்கு வந்திருக்கிறாயே; நீ உயிருடன் விளையாடுகிறாய். நீ எறியும் கற்களும் மரங்களும் என் வலிமையைக் கடந்து போகுமாடா! அடேய், சொல்லடா என்று ;போரிலே புகழ் வாய்ந்த இந்திரஜித் புகன்றான். உடனே அனுமன் மறு மொழி பகர்ந்தான்.

 

இந்திரஜித் சொன்னது:-

 

நில் அடா சிறிது உனை

நினைந்து வந்தேன் முனைக்கு நான்

வில் எடாமை நினது ஆண்மை பேசி உயி

ரோடு நின்று விளையாடினாய்

கல் அடா நெடு மரங்களோ வரு

கருத்தினேன் வலி கடப்பவோ

சொல் அடா என இயம்பினான்  இகல்

அரக்கன் ஐயன் இவை சொல்லினான்

 

அனுமன் பதில்

“டேய் மாப்ளே! நான் சொல்றதைக் கேளு!” என்று அனுமன் உரைத்தான்

 

“ஏய்! நாங்கள் எல்லாரும் கல், மரப் படை என்று நினைத்தயோ! எங்களிடம் வில் வீரர்களும் உண்டு; வில்லும் எடுப்போம், கல்லும் எடுப்போம். அதை இன்றோ நாளையோ காணப்போகிறாய். இந்திரன் முதலியோர் உன்னிடம் தோற்றுப் போய் புல்லைக் கவ்வியிருக்கலாம். இதுவரை காணாத புது வகைப்  போர்களை காணப் போகிறாய்

 

(இந்தப் பாடலுக்கு உரை எழுதியோர் போரில் தோற்றவர்கள் புல்லைக் கவ்வுதல் மரபு என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளனர். அதாவது பழங்காலத்தில் போரில் தோற்ற பின் அவர்கள் குனிந்து புல்லைக் கவ்வினால் பின்னர் யாரும் தாக்க மாட்டார்கள் போலும்!)

 

அனுமன் சொன்னது:

வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில

வீரர் இங்கும் உளர், மெல்லியோய்!

கல் எடுக்க உரியானும் நின்றனன்

அது இன்று நாளையிடை காணலாம்

எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு

இடைந்து உயிர்கொடு ஏகுவார்

புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில

போர் எடுத்து எதிர் புகுந்துளோம்

இத்தோடு அனுமன் சில கேள்விகளையும் கேட்கிறான்:

நீ என்னோடு போர் புரிகிறாயா ? அல்லது

இலக்குவனுடன் போர் புரிகிறாயா?

அல்லது உன் தலையை அறுத்து எறியப் போகின்ற ராமனுடன் போர் புரிகிறாயா?

 

இப்படி அழகாக அனுமன் பேசுகிறான்.

பாடல் தோறும் புதுப் புது செய்தியைக் கொடுப்பதாலும் போர்க் க ளத்தின் பல முனைகளுக்கு கம்பன் காமெராவைத் திருப்பி ராமாயணத் திரைப்படத்ததை நன்கு காட்டுவதாலும் சுவை அதிகரிக்கிறது

–சுபம்–

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  13-37 (British Summer Time)

Post No. 5099

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,அப்துல் காதருக்கும் அமாவாஸைக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,ராம நவமிக்கும் ரஹீமுக்கும்  தொடர்பு உண்டோ இல்லையோ, அமெரிக்கப் பாம்புக்கும் கம்பன் சொன்ன ராமாயண வானரப் படைக்கும் கட்டாயம் தொடர்பு உண்டு!

 

ஞாயிற்றுக் கிழமை தோறும் நாங்கள் லண்டன் நேரம் காலை 7-30 முதல் 9 மணி வரை ஸ்கைப்பில் (Skype) நடத்தும் கம்பராமாயண வகுப்பில் பல விஷயங்களை அலசுவோம். இந்த வாரம் கம்பராமாயணப் பாடலில் இரண்டு சுவையான விஷயங்கள் விவாதத்துக்கு வந்தன.

 

கம்பன் சொல்கிறான்:

ஒளிவீசும் தீப்பொறி கக்கும் விழிகளை உடைய குரங்குப் படைகள் கையில் எடுத்த மரங்கள் அரக்கப் படை வீசிய அம்புகளால் துண்டாயின. அரக்கர்கள் வீசிய அம்புகள், வானரங்களின் நெஞ்சில் ஊடுருவ அவை இறந்து விழுந்தன; அந்த நிலையிலும் அரக்கர்களை கடித்து அவர்களைக் கொன்று தாமும் இறந்தன (அதாவது செத்தும் கடித்தன அல்லது சாவதும் கடிப்பதும் ஒருங்கே நிகழ்ந்தன).

 

இதோ யுத்த காண்ட நாகபாசப் படலப் பாடல்:-

 

சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன

அடர்த்து அலை நெடும் மரம் அற்ற கையன்

உடர்த்தலை வைரவேல் உருவ உற்றவர்

மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

 

 

இதே போல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகானத்தில் கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற Corpus Christi, Texas, USA) ஊருக்கு அருகில் ஒரு   பெண்மணி  வீட்டிற்குப் பின்புறமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது கிலுகிலுப்பைப் பாம்பு (Rattle Snake) ஒன்று தலைப்பட்டது.

 

சாரைப் பாம்பு போன்ற இத்தகைய பாம்பு வாலை ஆட்டு போது கிலுகிலுப்பை ஒலி உண்டாகும்.

 

அந்தப் பெண்மணி ‘பாம்பு, பாம்பு’ என்று அலறிய உடன், கணவர் ஓடோடி வந்து அருகிலுள்ள மண்வெட்டியால் பாம்பின்  தலையில் ஒரு போட்டு போட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியது. அவர் பெயர் மியோ சட்க்லிப். அவருக்கு பெருமை தாங்கவில்லை. பாம்பின் தலையருகே போனார். துண்டாகிக் கடந்த தலை அவர் மீது பாய்ந்து கடிக்கவே அவர் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்தார். உடனே விமான ஆம்புலன்ஸ் வந்து அவ ரைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உ யிர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கம்பன் பாடலில் சாகும் அல்லது செத்த குரங்குகள் கடித்து, அதுவும் இறந்தது;  கடிபட்ட அரக்கனும் இறந்தான் என்று சொன்னது மெய்யே; அவன் கண்ணால் கண்டதை எழுதுகிறான்.; காட்டு வழியாகப் போகும் போது இத்தகைய காட்சிகளைப் பார்த்து இருப்பான் போலும்!

 

கரடி தின்ன Sweet Dinner ‘ஸ்வீட் டின்னர்

 

இன்னொரு பாட்டில் யானைகளின் மூளைகளை   கரடிகள் தின்னதாகச் சொல்லி அது அவைகளுக்கு இனிய உணவாக/ விருந்தாக அமைந்தது என்கிறான். கரடிகள் பெரும்பாலும் மீன், புழுப்பூச்சிகளை த் தின்னும். ஆனால யானை போன்றவற்றின் மூளைகளைத் தின்னுவதாக கம்பன் சொல்லும் காட்சியையும் அவன் கண்ணால் கண்டான் போலும்.

 

கம்பராமாயண,  யுத்த காண்ட, நாக பாஸப் படலத்தில் சொல்கிறான்:

 

போர் புரியும் கரடிகள், மலைகளைத் தாக்கி அழிக்கும் இடிகள் போலத் தொடர்ந்து சென்று, மதம் பொழியும் யானைகளின் தலைகளைப் பிளந்தன. அதனால் வெளிப்பட்ட மூளைகளை இனிமையாகத் தின்று பசி என்னும் தீயை அனைத்தன.

 

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்

 

தொடர்ந்தன மழை பொழி தும்பிக் கும்பங்கள்

 

இடந்தன மூளைகள் இனிதின் உண்டன

 

கடந்தன பசித் தழல் கரடி காதுவ

 

இப்படிப் போகிற போக்கில் வன விலங்குகள் பற்றியும் கம்பன் சொல்லுவது ராமாயணச் சுவையைக் கூட்டுகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!!

 

–சுபம், சுபம்—

 

கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்’ (Post No.5090)

Written by S NAGARAJAN

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  7-32 am  (British Summer Time)

 

Post No. 5090

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 50

க.கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்

 

ச.நாகராஜன்

 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் பாரதியியலில் பெரும் ஆர்வம் கொண்டவர். பாரதியியல் என்ற வார்த்தையையே அவர் தான் முதலில் பயன்படுத்தினார் என்று பாரதி ஆய்வுகள் என்ற அவரது இந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் குறிப்பிடுகின்றனர்.

 

இந்த நூலில் 1955 முதல் 1982 முடிய 27 வருடங்களில் அவர் எழுதிய 22 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஆய்வுக் கட்டுரையே.

 

.கைலாசபதி மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் (நவம்பர் 1982) சிதம்பர ரகுநாதன் அவர்கள் எழுதியபாரதிசில பார்வைகள் என்ற நூலுக்கு அளித்த மதிப்புரையில் அவர் பாரதியின் வாழ்க்கையையும் உலக நோக்கையும் முழுமையான் ஆய்வுக்குரியனவாகக் கருதிச் செயல்பட்டு வந்திருப்பவர்கள் சிலரே என்று குறிப்பிடுகிறார்.

உண்மை.

 

 

பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் பாரதி  ஆய்வுகள் என்ற ஒரு நூலை எழுதத் திட்டமிட்டிருந்த கைலாசபதி அதைத் தொடங்காமலேயே மறைந்து விட்டார்அவரது கட்டுரைகளைத் தொகுத்து அவர் மனைவி சர்வமங்களம் கைலாசபதி இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை முதல் பதிப்பை மார்ச் 1984-லிலும் இரண்டாம் பதிப்பை அக்டோபர் 1987-லும் வெளியிட்டுள்ளது.292 பக்கங்கள் கொண்டது இந்நூல்.

 

 

2

இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தலைப்பையும் பார்த்தாலேயே ஆய்வுக் களத்தின் அகலமும் நீளமும் ஆழமும் தெரிய வரும்.

 

கட்டுரைகளின் தலைப்புகள் வருமாறு:

  • பாரதியார்பழமையும் புதுமையும் 2) பாரதியும் யுகமாற்றமும் 3) சிந்துக்குத் தந்தை 4) பாரதியும் சுந்தரம்பிள்ளையும் 5) பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் 6) பாரதி வகுத்த தனிப்பாதை 7) பாரதிக்கு முன் … 8) பாரதியும் வேதமரபும் 9) பாரதியாரின் கண்ணன் பாட்டும் 10) பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும்சில குறிப்புகள் 11) பாரதி நூற்றாண்டை நோக்கிசெய்ய வேண்டியவைசெய்யக் கூடியவை 12) பாரதி ஆய்வுகள்வளர்ச்சியும் வக்கிரங்களும் 13) பாரதி நூல் பதிப்புகள் 14) பாரதியார் கவிதையும் தமிழ்ப் புலமையும் 15) பாரதியின் சமகாலத்தவரும் பாரதி பரம்பரையினரும் 16) இலங்கை கண்ட பாரதி 17) ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம் (சில குறிப்புகள்) 18) சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வுகள் 19) பாரதியின் புரட்சி 20)முற்போக்காளரின் பாரதி ஆய்வுகள் 21) பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு 22) பாரதி கண்ட இயக்கவியல்

 

 

3

புத்தகம் முழுவதும் ஏராளமான ஆய்வுக் கருத்துக்களால் நிரம்பி இருப்பதால் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது.

 

என்றாலும் நூலாசிரியரின் சில முக்கியக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

 

 

  • முதல் கட்டுரை: பாரதியின் கவிதா வளர்ச்சியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார் கைலாசபதி. 1) தனி மனித நாட்டத்தினால் பாடப்பட்ட பாடல்கள் 2) பாரதி நெஞ்சிலே இருந்த பழமைபுதுமை போராட்டம் காரணமாக உருவான கவிதைகள். பழமை கனிந்த மனோநிலை ஏற்பட்ட காலத்தில் இந்த இரண்டாம் காலப் பகுதி முடிவடைகிறது. 3) வேதாந்தம் நன்கு முகிழ்ந்த வேதாந்த காலப் பகுதி.

 

  • மூன்றாம் கட்டுரை: இது பாரதியின் கவிதை வளத்தை அலசுகிறது!

“நவநவமான தத்துவத்தை எல்லாம் சொல்லில் வடித்தவன் பாரதி. இசை வளத்தை அளவுடன் நிறுத்திக் கொண்டு பொருள் வளமும்  சேர்த்தான்; முன்னோரை மிஞ்சினான்.

உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள நுண்ணிய பிணைப்பையறிந்து கொள்ளப் பாரதியை விட வேறு சிறந்த உதாரணக் கவிஞன் வேண்டுமோ?” என்கிறார் நூலாசிரியர்.

 

  • ஐந்தாம் கட்டுரை : இதில் ஆசிரியர் தரும் கருத்துக்கள் : “குடியாட்சி, ஆண் பெண் சமத்துவம், விடுதலை ஆகிய பண்புகளை விட்மனிடம் கண்டு போற்றியுள்ளார் பாரதியார். விட்மனுக்கும் பாரதிக்கும் “உள்ளக் கலப்பு” ஏற்படுவதற்குக் காரணங்கள் பல…”

பாரதியாரின் காதல் கவிதைகள் சிலவற்றிலும் ஆங்காங்கே ஷெல்லியின் சாயலைக் காணமுடிகிறது.

04) எட்டாம் கட்டுரை : இந்தியத் தத்துவ ஞானமரபின் பல்வேறு கூறுகளைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் பாரதியாருக்கு நிரம்ப இருந்தது என்கிறார் கைலாசபதி இந்தக் கட்டுரையில்.

 

 

05) பத்தாம் கட்டுரை: “பாரதியாரின் கவிதைகளிலே பாடபேதங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவர் வாழ்நாளிலும் அவர் மறைந்த பின்னும் அவரது நூல்கள் சில வெளியிடப்பட்ட விதமாகும். அவர் இறந்த பின்னரே அவரது கவிதைகள் பெரு நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. இதனால் கவிஞரே அவற்றைச் சீராக வெளியிடும் வாய்ப்பிருக்கவில்லை.” என்று கூறும் ஆசிரியர்  பாரதியாரின் பாடல்களின் சுத்தமான வடிவம் நமக்குத் தெரிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

06) பன்னிரெண்டாம் கட்டுரை : இதில் சீனி விசுவநாதன் தொகுத்த மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை (ஏப்ரல் 1981) நூலைக் குறிப்பிட்டு பாராட்டுகிறார் நூலாசிரியர். 370 நூல்கள், 145 எழுத்தாளர்கள்,162 பதிப்பாளர்கள் சம்பந்தமான தகவல்களைத் தருகிறது சீனி விசுவநாதனின் தொகுப்பு நூல்.

 

இப்படி நல்லா ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் வளர்கையில் வக்கிர புத்தி உடையவர்களும் பாரதியை விட்டு விடவில்லை.

 

எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை நம் முன் வைக்கிறார் கைலாசபதி.

 

“நடுநிலையாய்வு, விஞ்ஞானப் பார்வை என்பன பாரதியாராய்ச்சிகளை வளப்படுத்தும் வேளையில் வக்கிர நோக்குடன் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது. ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ (மே 1981) என்னும் நூல், இதன் ஆசிரியர் வெற்றிமணி…. இந்நூல் காலங்கடந்த – பாமரத்தனமான – பார்ப்பனீய எதிர்ப்புடன் எழுதப்பட்டிருக்கின்றது.”

 

4

நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே பாரதி ஆர்வலர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உறுதி. பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு விதமாக பாரதியை ஆய்வு செய்தவர்கள் – செய்பவர்களை – சுட்டிக் காட்டுகின்ற கட்டுரைகளும், பாரதி பாடல்களில் உள்ள பாட பேதங்களை நுணுகி ஆராய்ந்து நல்ல ஒரு பதிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் பாராட்டப்பட வேண்டியவை.

 

பாரதி ஆர்வலர்களின் பாரதி இயல் நூலகத் தொகுப்பில் இருக்க வேண்டிய நூல் இது.

***

 

 

 

 

கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)

கம்பன் காலத்தில் கமாண்டோ COMMANDO படை இருந்ததா? (Post No.5051)

 

Written by London Swaminathan 

 

Date: 27 May 2018

 

Time uploaded in London – 17–35

 

Post No. 5051

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

கம்பனுக்குக் கணக்குத் தெரியாது. கம்ப ராமாயணத்தில் ஆயிரம் கோடி, நூறு கோடி என்றெல்லாம் படைகளின் எண்ணிக்கைக்குப் பயன்படுத்துவார். அந்தக் காலத்தில்– ராமாயண காலத்தில்– அல்லது அதற்குச்  சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த கம்பன் காலத்தில் ஜனத் தொகை மிகவும் குறைவு. ஆயினும் கவிஞர்கள் எதுகை மோனைக்காக இஷ்டப்பட்ட எண்களைப் பயன் படுத்துவர். ரிக் வேதம் முழுதும் இந்திரன் அழித்த அசுர படை எண்ணிக்கை ஆயிரக் கணக்கிலேயே இருக்கும்; அக்காலத்திலும் அவ்வளவு ஜனத்தொகை கிடையாது. ஆனால் கவிஞர்களுக்கே உரித்தான  உரிமை அது. புத்த மத நூல்களில் 500 அல்லது ஆயிரம் என்ற எண்ணை சர்வ சாதாரணமாகப் பிரயோகிப்பர். இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் கம்பன் சில பாடல்களில் பேய்கள் பற்றிச் சொல்லும் போதும் ஆயிரம் பேய்கள் பற்றிப் பேசுகிறான்!

 

 

 

பல பாடல்களில் ராவணன் படையில் இருந்த பேய்கள் பற்றிப் பாடுகிறான். இதோ ஒரு பாடல்

 

பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினைப் பழித்த தோளான்

வெய்யன் என்று உரக்க சாலத் திண்ணியான்  வில்லின் செல்வன்

பெய்கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழப் பிறக்கு பல் பேய்

ஐ இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலாம்

யுத்த காண்டம்

 

பொருள்:

 

“வயமத்தன் என்ற ஆள் பொய்யைக் காட்டிலும் பெரிய உடலைக் கொண்டவன்; மலையினை விடப் பெரிய தோள்கள் உடையவன்;  கொடியவன் என்று சொல்லத்தக்க தோற்றம் கொண்டவன்;  வில் வீரன்;  வீரக் கழல் அணிந்த ராவணன் சேனை ஆரவாரம் செய்து கிளம்புமாறு ஆயிரம் பேய்கள் பூட்டிய பல சக்கரத் தேரில் வருபவன்.”

இதில் பேய்கள் என்பது நாம் சாதரணமகப் பயன்படுத்தும் பேய்=பூத= பிசாசு என்னும் பொருளுடைத்தா அல்லது வேறா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். இந்தப் பாட்டுக்குப் பொருள் எழுதிய பழைய உரைகாரர்   களும் பேய்களை அப்படியே ‘பேய்’ என்று எழுதிவிட்டுப் போய் விட்டனர்.

 

 

நாமோ ஒரு பேய்க்கே மக்கள் பயந்து ஓடுவர் என்று கதைகளில் படிக்கையில் 1000 பேய்கள் தேரில் பூட்டப்பட்டது என்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்திரஜித்தின் கொடி பேய்க் கொடி என்பதைப் பின்னொரு பாடலில் கம்பன் பகர்வான்.

 

பேய்கள் என்பது வேடம் அணிந்த விசேஷப் படை என்று நான் ஊகிக்கிறேன். தற்காலத்தில் பெருந்  தலைவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க ‘கருஞ் சிறுத்தைகள்’ (BLACK PANTHERS) ‘கருப்புப் பூனைகள்’ (BLACK CATS) என்ற கமாண்டோகளைப் பயன் படுத்துகிறோம். காலப்போக்கில் இவர்களின் பெயர்கள் மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம். 100 ஆண்டுகளுக்குப் பிறகு, செய்திப் பத்திரிக்கைகளைப் படிப்போருக்கு நாம் விளக்கம் சொன்னால்தான் அவர்களுக்கு அர்த்தம் புரியும். ஆனால் கம்ப  ராமாயண உரைகாரர்கள் விளக்கமே சொல்லாமல் போய்விட்டனர்.

 

இப்பொது நாம் Commando கமாண்டோ படைகள் என்று சொல்லும் சிறப்புப் படையினர் போல அக்காலத்திலும் இந்திரஜித் மற்றும் ராவணன் படையில் கருப்பு உடை அணிந்த  வீரர்கள் இருந்திருப்பர். அவர்கள் தேரை இழுக்காமல் தேருக்கு இரு புறமும் பாதுகாப்புக்காக  வந்திருப்பர்!!!

–SUBHAM–

 

ராமாயணத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (Post No.5049)

Written by London Swaminathan 

 

Date: 26 May 2018

 

Time uploaded in London – 18–17

 

Post No. 5049

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் பாடிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடலும் “வசுதைவ குடும்பகம்” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகமும் மிகவும் பிரஸித்தமானவை. சுருக்கமான கருத்து– உலகமே ஒரே குடும்பம்.

 

“எல்லாம் நம்ம ஊருதான்; எல்லாரும் நம்மாளுங்கதான்” என்று சொல்லலாம். ஆனால் அதை நிஜ வாழ்வில் கடைப் பிடிப்பவர் சிலரே. இது எப்படித் தெரியும்?

 

பத்திரிக்கைகளில் நாள்தோறும் வரும் அடிதடிச் செய்திகளைப் பார்க்கையில், ஜாதி, இன, மொழி, அரசியல் மோதல்களைப் பார்க்கையில், உண்மையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது கடினம் என்று தெரிகிறது. உதட்டளவிலேயே உண்மை.

 

ராமன் வாழ்வில் இதை நேரிடையாக காண்கிறோம். சரணடைந்தவர்கள் ராக்ஷஸர்களாலும் ராமன் மன்னித்து அருளினான். ராவணனுக்கும் கூட வாய்ப்பு கொடுத்தான். சீதையை விடுவித்தால் தப்பிக்கலாம் என்றான்.

ராமனுக்கு ஆறு சஹோதரர்கள்!

 

குகன் என்ற வேடனைச் சந்தித்த ராமன் முதலில் அவனை ஐந்தாவது சஹோதரன் என்கிறான்; பின்னர் குரங்கினத் தலைவன் சுக்ரீவனைச் சந்தித்து அவனை ஆறாவதாக சேர்த்துக் கொள்கிறான். பின்னர் விபீஷணனை ஏழாவது சஹோதரன் என்கிறான். இது கம்ப ராமாயணத்தில் மிகவும் புகழ் பெற்ற பாடல்:-

 

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின்வந்த

அகம் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொ லிந்தான் நுந்தை

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

 

பொருள்

அன்பின் காரணமாக எம்முடன் வந்து சேர்ந்தவனே! நாங்கள் பிறப்பால் நான்கு சகோதரர்கள்; கங்கைக் கரையில் குகனுடன் நட்புக் கொண்டு ஐவர் ஆனோம்; பின்னர் கிட்கிந்தையில், மேருவை வலம் வரும் சூரியனின் புதல்வனான, சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்; இன்று உன்னுடன் நட்பு பூண்டு எழுவர் ஆகிவிட்டோம் . என் தந்தை எனக்கு காட்டை அளித்ததால் நிறைய பிள்ளைகள் ஏற்பட்ட மன நிறைவு அவனுக்கு கிடைத்துவிட்டது.- என்று ராமன் சொன்னான்

 

 

என்ன அற்புதமான பாடல்! இதுதான் உண்மையான ‘யாதும் ஊரே, யாவரும் சுற்றத்தார் (கேளிர்)’.

உலகின் முதல் வெளிநாட்டு தற்காலிக அரசு!

Government in Exile

 

பல சுதந்திர  இயக்ககங்கள்  சொந்த நாட்டை பிறர் ஆள்வதால் வெளிநாட்டில்     அரசு  ஒன்றை (Exile Government)  நிறுவி பிரகடனம் செய்வர். அந்த நாட்டின் அரசும் அதை ஆதரிக்கும். இப்படிப்பட்ட முதல் அரசை அமைத்தவன்

 

ராமன் என்றே தோன்றுகிறது. ஏனெனில் விபீஷணனை  இந்தியாவில் சந்தித்த போதே அவனை இலங்கை அரசின் மன்னன் என்று முடிசூட்டி விடுகிறான் ராமன். அதாவது பின்னர் நடக்கப் போவதை உணர்ந்து இப்படி செய்தான் என்று சொல்லலாம். ஒருவேளை ராவணன் கொல்லப்படாமல் இருந்திருந்தால் கதையே மாறி இருக்கும்

 

ஆனால் அறம் பிழைத்த ராவணன் கட்டாயம் இறப்பான் என்பது உறுதியாகிவிட்டதால் ராமன் இப்படிச் செய்கிறான்.

இதோ அந்தப் பாடல்

 

உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற

அஞ்சன மேனியானை யழகனும் அருளின் நோக்கி

தஞ்சநல் துணைவன் ஆன தவறு இலாப் புகழான் தன்னை

துஞ்சல் இல் நயனத்துஐய சூட்டுதி மகுடம் என்றான்

—-வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்

அழகிய மேனியை உடைய ராமனும் , அடியேன் பிழைத்டேன் தேன் என்று வணங்கி நின்ற மை போல கருத்த நிறமுடைய விபீஷணனக் கருணையோடு பார்த்தான்.  பின்னர் லெட்சுமணனைப் பர்த்து, உறங்குதல் இல்லாத கண்களை உடையவனே! நம்மை அடைக் கலம் புகுந்த சிறந்தவனாகிய விபிஷணனுக்கு இலங்கை அரசன் என்று தெரிவிக்கும் மகுடத்தைச்  சூட்டுவாயாக என்றான் ராமன்.

 

ஆக உலகில்  உண்டான முதல் வெளிநாட்டு அரசு இதுதான்!

 

பல்வேறு இன மக்களையும் அன்பினால் பிணைத்த இராமன் உலகத்தார் உள்ளதுள்  எலாம் உளன் என்றால் மிகை இல்லை!

-சுபம்-

கம்பன் பொன்மொழிகள்–ஜூன் 2018 காலண்டர் (Post No.5045)

COMPILED by London Swaminathan 

 

Date: 25 May 2018

 

Time uploaded in London –  13-01

 

Post No. 5045

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சென்ற மாதக் காலண்டரில் 31 யுத்த காண்டப் பொன்மொழிகளைக் கண்டோம்; இந்த மாதம் கம்ப ராமாயண யுத்த காண்டத்தில் இருந்து மேலும் முப்பது பொன் மொழிகளைக் காண்போம்

 

 

( 2018 வைகாசி மாத நற்சிந்தனை காலண்டர்; விளம்பி வருஷம் )

 

முக்கிய விழாக்கள் – 20 ஆனித் திருமஞ்சனம் ; 15- ரமதான்/ரம்ஜான்

 

 

பௌர்ணமி– –27 ; அமாவாசை– – 13; ஏகாதஸி விரதம்—10, 24

சுப முகூர்த்த தினங்கள்:- 3, 4, 17

 

 

ஜூன் 1 வெள்ளிக் கிழமை

 

சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட

கோணினும் உளன் மாமேருக் குன்றினுமுளன் இந்நின்ற

தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத்தனமை

காணுதி விரைவின் என்றான் நன்று எனக் கனகன் சொன்னான்

–இரணியன் வதைப் படலம்

 

ஜூன் 2 சனிக் கிழமை

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து  இவ்வுலகு எங்கும் பரந்துளானை

கம்பத்தின் வழியே காட்டுதி (இரணியன் சொன்னது)

 

ஜூன் 3 ஞாயிற்றுக் கிழமை

இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்

திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது அச்செங்கண் சீயம்

 

ஜூன் 4 திங்கட் கிழமை

ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செங்கை

சூடினான் தொழுதான் ஓடி உலகு எலாம் துகைத்தான் துள்ளி (பிரஹலாதன் மகிழ்ச்சி)

 

ஜூன் 5 செவ்வாய்க் கிழமை

ஆரடா சிரித்தாய் சொன்ன அரிகொலோ அஞ்சிப்புக்க

நீரடா போதாது என்று நெடுந்ததறி தேடினாயோ (இரணியன் கிண்டல்)

 

ஜூன் 6 புதன் கிழமை

பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை

வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதலமற்றும் (நரசிங்கம் தோன்றல்)

 

ஜூன் 7 வியாழக் கிழமை

பத்து நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த

அத்தனை கடலும் மாளத் தனித்தனி அள்ளிக் கொண்ட (கடல் போன்ற படகளைக் கபளீகரம் செய்தது நரசிங்கம்)

ஜூன் 8 வெள்ளிக் கிழமை

தீ எனக் கனலும் செங்கண் சிரம்தொறும் மூன்றும் தெய்வ

வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் (மும்மூர்த்தி வடிவிலான சிங்கத்தின் வாயில் 7 கடல், 7 மலை)

 

ஜூன் 9 சனிக் கிழமை

பூவில் திருவை அழகின் புனை கலத்தை

யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை

ஆவித் துணையை அமுதின் பிறந்தாளை

தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பாற்சொல்ல (லக்ஷ்மியின் தோற்றம்)

 

ஜூன் 10 ஞாயிற்றுக் கிழமை

செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்

நந்தா விளக்கை நறுந்தாள் இளங்கொழுந்து ((லக்ஷ்மியின் தோற்றம்)

 

ஜூன் 11 திங்கட் கிழமை

தீதிலா உலகு ஈன்ற தெய்வம் (லக்ஷ்மி)

ஜூன் 12 செவ்வாய்க் கிழமை

முக்கணான் எண்கணானும் முளரி ஆயிரம் கணானும் ( சிவன், பிரம்மா, இந்திரன்)

 

ஜூன் 13 புதன் கிழமை

நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு (நல்லது செய்தோருக்கு கெடுதி வராது)

 

ஜூன் 14 வியாழக்கிழமை

வாந்தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்

ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் (இரணியன் மார்பு பிளந்தது)

 

ஜூன் 15 வெள்ளிக் கிழமை

Hindu Discovery: Universe is globular, circular

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டைக் கூட்டில் (தமிழர் அறிவியல்- அண்டம் என்பது கோள வடிவில் இருக்கும்)

 

ஜூன் 16 சனிக் கிழமை

Hindu Discovery: Concept of Time

அயிரா இமைப்பினை ஓராயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி

உயிர்நேடுவேம்போல் உடல் அளைய கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்கு என் இனி யாம் செய்கேம்

 

ஜூன் 17 ஞாயிற்றுக் கிழமை

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை

பின்பு பெறும் பேறும் உண்டோ பெற்குவெனேல்

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் (பிரஹலாதன் வேண்டுதல்)

 

ஜூன் 18 திங்கட் கிழமை

நல்லறமும் மெய்மையும் நான்மறையும் நல் அருளும்

எல்லை இலா ஞானமும் ஈறு இல எப்பொருளும்

தொல்லை சால் எண்குணனும் நின் சொல் தொழி செய்ய

மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ (பிரஹலாதனுக்கு இறைவன் ஆசி- உன் சொல் படி எல்லாம் கேட்கும்/நடக்கும்)

 

ஜூன் 19 செவ்வாய்க் கிழமை

மாட்சியின் அமைந்தது வேறு மற்றிலை

தாட்சியில் பொருள் தரும தரும மூர்த்தியைக்

காட்சியே இனிக் கடன் (தரும மூர்த்தியான ராமனைக் காண்பதே கடமை-விபீஷணன் முடிவு)

 

ஜூன் 20 புதன் கிழமை

முன்புறக் கண்டிலென் கேள்வி முன்பு இலென்

அன்புறக் காரணம் அறியகிற்றிலேன் (ராமனை முன்பு அறியேன்; அப்படியும் அன்பு ஊற்றெடுக்கிறதே- விபீஷணன் வியப்பு)

 

ஜூன் 21 வியாழக் கிழமை

அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் (அனுமனுக்கு ஐந்திர இலக்கணம் தெரியும்

 

ஜூன் 22 வெள்ளிக் கிழமை

சுடுதியைத் துகிலிடை பொதிந்து துன் மதி

இடுதியே சிறையிடை இறைவன் தேவியை விடுதி (தீயை ஆடையில் போட்டுக்கொண்டது போல சீதையை சிறை வைத்துள்ள கெட்டவனே, அவளை விடு- ராவணனுக்கு அறிவுரை)

 

ஜூன் 23 சனிக் கிழமை

பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்து அடைந்த பேதை வேடனுக்குதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டி

பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள்

வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ (வேடனின் பசி தீர்க்க ஆண்புறா செய்த தியாகம் தெரிந்ததே)

 

ஜூன் 24 ஞாயிற்றுக் கிழமை

இடந்தவர்க்கு அபாயம் யாம் என்று இரந்தவர்க் கெறி நீர்வேலை

கடந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ (சிவபெருமான், தேவர்க்காக விஷம் உண்டதை அறியவில்லையா)

 

ஜூன் 25 திங்கட் கிழமை

Kamaban’s  To be or Not to be

கைப்புகற் பாலனோ கழியற்பாலனோ

ஒப்புற நோக்கி நும் முணர்வினால் என்றான் ( விபீஷணனை ஏற்கலாமா, கழித்துக் கட்டலாமா? நண்பர்களிடம் ராமன் கேள்வி)

 

 

ஜூன் 26 செவ்வாய்க் கிழமை

கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது

ஒவ்வாதோ கொற்ற வேந்தே ( கடல் நீரை கிணற்று நீர் அடித்துச் செல்ல முடியுமா)

 

ஜூன் 27 புதன் கிழமை

விண்டுழி ஒரு நிலை நிற்பர் மெய்ம் முகம்

கண்டுழி ஒரு நிலை நிற்பர் கைப்பொருள்

கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன்

உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் (உறவினர் எப்போதும் மேல் நிலையில் நிற்பர்)

 

ஜூன் 28 வியாழக் கிழமை

சிற்றினத் தவரொடும் செறிதல் சீரிதோ (கீழ்மக்களுடன்சேரக்கூடாது)

 

ஜூன் 29 வெள்ளிக் கிழமை

Face is the Index of the Mind

உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற

மெள்ளத் தம் முகங்களே விளம்பும் (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்- விபீஷணன் பற்றி அனுமன் கருத்து)

 

ஜூன் 30 சனிக் கிழமை

பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி

மறந்த நாள் உண்டோ (புறாவுக்காக தராசுத் தட்டில் ஏறிய சிபிச் சக்ரவர்த்தியை மறப்போமா)

 

—Subham —

 

வள்ளுவப் பைத்தியம் தேர்வு செய்த முறை! (Post No.5044)

Written by S NAGARAJAN

 

Date: 25 MAY 2018

 

Time uploaded in London –  12-39   (British Summer Time)

 

Post No. 5044

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம் : மேலாண்மை நகைச்சுவை

 

 

வள்ளுவப் பைத்தியம் ஹெச்.ஆர்.டி அதிகாரியாகி தேர்வு செய்த முறை!

 

.நாகராஜன்

 

வள்ளுவரின் குறளின் பால் தீவிர ஈடுபாடு கொண்ட ‘வள்ளுவப் பைத்தியம்’ ஒருவர் ஹ்யூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் – (HUMAN RESOURCE DEVELOPMENT) மனித வள மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

குறளின் வழி செல்லும் அவர் தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் வரும் இரு குறள் காட்டும் வழியின் படி செயல் பட முயன்றார்.

 

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல் (குறள் 516)

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத் தகுந்த காலத்தோடு பொருந்திச் செயலைச் செய்ய வேண்டும்.

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்    (குறள் 517)

 

இந்தப் பணியை இப்படிப்பட்ட கருவிகளாலும் வழிமுறைகளாலும் இவன் முடிக்கக் கூடியவன் என்பதனை நன்கு ஆராய்ந்து அந்தப் பணியை அவனிடம் தருதல் வேண்டும்.

 

அவர் பணியாற்றிய பெரிய நிறுவனத்தில் பல் வேறு பிரிவுகளுக்கும் ஆட்கள் தேவை.

 

நமது அதிகாரி புதிதாக வேலைக்கு வருபவர்களைத் தேர்ந்தெடுத்த விதத்தைப் பார்ப்போம்.

 

  1. 400 செங்கல்களை ஒரு அறையில் வைத்து மூடினார்.
  2. வேலை கேட்டு வந்தவர்களை அந்த அறைக்குள் அனுப்பினார். கதவைத் தாழிட்டார்.
  3. பின்னர் ஆறு மணி நேரம் கழித்துத் திரும்பினார்.
  4. அவர்கள் செங்கற்களை எண்ணிக் கொண்டிருந்தால், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு அவர்களை அனுப்பினார்.
  5. அவர்கள் செங்கற்களை மறு எண்ணிக்கை செய்து கொண்டிருந்தால் அவர்களை ஆடிடிங் பிரிவுக்கு அனுப்பினார்.
  6. எல்லாச் செங்கல்களையும் கன்னாபின்னாவென்று குளறுபடி செய்திருந்தால் அவர்களை எஞ்சினியரிங் பிரிவுக்கு அனுப்பினார்.

 

  1. அவர்கள் செங்கல்களை விசித்திரமான முறையில் அடுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை பிளானிங் பிரிவுக்கு அனுப்பினார்.
  2. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் செங்கல்லை வீசி எறிந்து கொண்டிருந்தால் அவர்களை ஆபரேஷன்ஸ் பிரிவுக்கு அனுப்பினார்.
  3. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை செக்யூரிடி பிரிவுக்கு அனுப்பினார்.
  4. அவர்கள் செங்கல்களை உடைத்துத் துண்டு துண்டாய் ஆக்கிக் கொண்டிருந்தால் அவர்களை இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு அனுப்பினார்.
  5. அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் அவர்களை ஹ்யூமன் ரிசோர்ஸஸ் டெவலப்மெண்ட் பிரிவுக்கு அனுப்பினார்.

  1. அவர்கள் செங்கற்களை வைத்து வெவ்வேறு விதமாக அழகு பார்த்து, இன்னும் செங்கற்கள் கிடைக்குமா என்று பார்த்தவாறு இருந்து, ஒரு செங்கல்லையும் நகர்த்தாவிடில் அவர்களை விற்பனைப் பிரிவுக்கு அனுப்பினார்.
  2. அவர்கள் ஏற்கனவே இடத்தைக் காலி செய்து அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தால் அவர்களை மானேஜ்மெண்ட் பிரிவுக்கு அனுப்பினார்.
  3. அவர்கள் அறையின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை ‘ ஸ்ட்ராடஜிக் ப்ளானிங்’ பிரிவுக்கு அனுப்பினார்.
  4. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்து ஒரு செங்கல்லையும் தொடாமலோ நகர்த்தாமலோ இருந்தால் அவர்களை டாப் மேனேஜ்மெண்ட் பிரிவுக்கு – உயரிய மேலாளர் பதவிப் பிரிவுக்கு – அனுப்பினார்.

 

 

அவரை யார் தான் பாராட்டாமல் இருப்பார்கள்? இதனை இதனால் இவன் முடிக்கும் என்பதனை நன்கு கண்டு பிடித்தவர் அல்லவா அவர்!

குறள் வழி எப்போதுமே சிறந்த வழி தானே!

 

ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர்க்கு இதோ ஆங்கில மூலம்:

 

A suggestion from a Human Resources Manager:

HOW TO PROPERLY PLACE NEW EMPLOYEES . . .

1. Put 400 bricks in a closed room.
2. Put your new hires in the room and close the door.
3. Leave them alone and come back after 6 hours.
4. Then analyze the situation:
If they are counting the bricks, put them in the Accounting Department.
b. If they are recounting them, put them in Auditing.
c. If they have messed up the whole place with the bricks, put them in Engineering.
d. If they are arranging the bricks in some strange order, put them in Planning.
e. If they are throwing the bricks at each other, put them in Operations.
f. If they are sleeping, put them in Security.
g. If they have broken the bricks into pieces, put them in Information Technology.
h. If they are sitting idle, put them in Human Resources.
i. If they say they have tried different combinations, they are looking for more, yet not a brick has been moved, put them in Sales.
j. If they have already left for the day, put them in Management.
k. If they are staring out of the window, put them in Strategic Planning.
l. If they are talking to each other, and not a single brick has been moved, congratulate them and put them in Top Management.

****

 

பாரதியார் பற்றிய நூல்கள் – 49 (Post No.5037)

Written by S NAGARAJAN

 

Date: 23 MAY 2018

 

Time uploaded in London –  5-43 AM   (British Summer Time)

 

Post No. 5037

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 49

க.கைலாசபதி அவர்களின் ‘இரு மகா கவிகள்

 

ச.நாகராஜன்

pictures from Taitini Das are used;thanks. 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் மகாகவி பாரதியாரையும் வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பற்றியும் ஒப்பிட்டு எழுதியுள்ள நூல் இது. 114 பக்கங்கள் கொண்ட இந்த நூல் என்சிபிஎச் பிரைவேட் லிமிடெட், சென்னை -2 பதிப்பகத்தாரால் செப்டம்பர் 1962ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகாகவும், தெளிவாகவும் இரு கவிஞர்களைப் பற்றிய முக்கிய விஷயங்களை பத்து அத்தியாயங்களில் தருகிறார் நூலாசிரியர்.

 

Taitinidas Dance Troupe

2

இரவீந்திரநாத் தாகூரைப் பற்றி மகாகவி பாரதியார் எழுதியுள்ள இந்தக் குறிப்புடன் நூல் ஆரம்பிக்கிறது:

கீர்த்தியடைந்தால் மஹான் ரவீந்திரரைப் போலே அடைய வேண்டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுமையுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ் பூமண்டல முழுமையும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ வங்க பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புகளைத்தான் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத் தான் இந்தக் கீர்த்தி.

தாகூர் இறப்பதற்கு இருபது ஆண்டுகள் முன்னதாகவே இறந்தவர் பாரதியார். அவரை விட இருபத்தோரு ஆண்டுகள் இளையவர்.

இருவரது கவிதைகளின் ஆழத்தையும், கவிஞர்களின் பார்வையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளையும் அலசி ஆராய்கிறது இந்த நூல்.

3

ஒரு முக்கிய நிகழ்ச்சியை இந்த நூல் இரண்டாம் அத்தியாயத்தில் பதிவு செய்கிறது. அது வருமாறு:

மகாகவி பாரதியாருடைய சரிதையைத் தமிழில் எழுதியவர்களில் ஒருவரான சுத்தானந்த பாரதியாரும், ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் பி.மகாதேவனும்  ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளனர். பாரதியார் இரவீந்திரநாத் தாகூருடன் கவிதைப் போட்டி நடத்த விரும்பினார் என்பதைக் காட்டும் அந்தச் சம்பவத்தைச் சுத்தானந்தர் பின்வருமாறு எழுதியுள்ளார்.

பாரதி : அப்பா! இப்போது டாகூர் எங்கிருக்கிறார்?

சிஷ்யன் : மதுரையில்.

பாரதி : உடனே புறப்படு. சலோ மதுரை.அவனை ஒரு கை பார்க்கிறேன்.

சிஷ்யன் : நாம் போவதற்குள் டாகூர் சென்று விட்டால்..?

பாரதி : அட அபசகுனமே! நமது தமிழ்நாட்டுக்கு டாகூர் வந்து நம்மைக் காணாமல் செல்லுவதா?

சிஷ்யன் : விலாசம் தெரியாதே!

பாரதி : அட சீ! “டாகூர் மதுரை என்றால் தந்தி பறக்கும் ஐயா!

சிஷ்யன் : சரி, என்ன செய்தி அறிவிக்க?

பாரதி : ‘தமிழ்நாட்டுக் கவியரசர் பாரதி, உம்மைக் கண்டு பேச வருகிறார் என்று உடனே தந்தி அடியும்.

சிஷ்யன் : அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்?

பாரதி : ஓய் ஓய், நாம் டாகூருக்கு ஒன்று சொல்லுவோம்.நீர் வங்கக் கவி; நாம் தமிழ்க் கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம்.நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு ‘அப்ளாஸ் கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்.

Dancer Taitini Das in Tagore Celebrations

சிஷ்யன் : அதெப்படி? அவர் வங்காளத்தில் பாடுவார். நீர் தமிழில் பாடுவீர். வங்காளத்திற்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?

பாரதி : அட, அட ஜெயமே! சர்வேசுவரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசு லாயக்கில்லையோ?

சிஷ்யன் : மன்னிக்க வேண்டும். தமிழ் வங்கத்திற்குத் தாழ்ந்ததில்லை. ஆனாலும் அவர் உலக மகாகவி, உலகப் புகழ் பெற்றவர்.

பாரதி : நாம் உலகப் புகழ் பெற முடியாதோ? அட தரித்திர மனிதா! அந்த இழவுக்குத் தான் நோபல் வெகுமதியை டாகூரிடமிருந்து வெல்ல வேண்டும் என்கிறோம்!

இந்த மாதிரியே பேசிக் கொண்டு பாரதியார் இரவில் எட்டையபுரம் வந்தார். (1919) பிறகு நன்றாகச் சாப்பிட்டுத் தலையைச் சாய்த்தார்; மறுநாள் காலையில் தான் எழுந்தார். நோபல் வெகுமதி விஷயம் மறந்தே போயிற்று.

         

இது யோகி சுத்தானந்த பாரதியார் தீட்டிய சித்திரம். 1918-ல் பாரதியார் புதுச்சேரி வாழ்க்கை அலுத்துப் போய்த் தமது மனைவியின் ஊரான கடயத்திற்குச் சென்றார். கடயத்தில் ஈராண்டு வாழ்க்கை; அப்பொழுதுதான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

நூலாசிரியர் ரவீந்திரரைப் பாரதியார் பாராட்டி எழுதியதையும் அவரது சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்திருப்பதையும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ ரவீந்திர திக் விஜயம் என்னும் கட்டுரையை 1921 ஆகஸ்டு 25ல் சுதேசமித்திரனிலே பாரதியார் எழுதினார்.அதற்கடுத்த மாதம் செப்டம்பர் 11ம் தேதி பாரதி அமரராகிறார்.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் (1908-1918) தாகூர் சிறுகதைகளில் எட்டைப் பாரதியார் மொழி பெயர்த்தார்.

தாகூருடைய ஐந்து கட்டுரைகளை பாரதியார் மொழி பெயர்த்திருக்கிறார். 1917-ல் ‘மாடர்ன் ரிவியூசஞ்சிகையில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன.

        

4

மூன்றாம் அத்தியாயத்தில் தாகூர் உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததையும் பாரதியார் இந்தியாவில் முகிழ்ந்த மறுமலர்ச்சியானது இந்து மதத்தின் அடிப்படையில் இருந்ததை ஏற்றுக் கொண்டதையும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

மகாத்மா காந்தியை எமது தலைவர் என்று தாகூர் பாராட்டினாலும் அவர் ஆரம்பித்த வெகு ஜன இயக்கத்தைக் கண்டித்தார். ஆனால் பாரதியாரோ, “ஸ்ரீ காந்தியின் நெறியையும் திடசித்தத்தையும் பார்த்தால் இப்படிப்பட தெய்வீக குணங்களமைந்த புருஷனும் உலகத்திலிருக்கிறானாவென்று யோசிக்க வேண்டியதாயிருக்கிறது” என்று மகாத்மாவை வெகுவாகப் பாராட்டினார்.

      

5

இந்தியா முழுவதையும் கவர்ந்த சக்தி வழிபாட்டை ஏறத்தாழ தாகூர் நிராகரித்தார் என்றே சொல்ல வேண்டும் என்று ஆறாம் அத்தியாயத்தில் விவரிக்கும் நூலாசிரியர் பாரதியார் சிவாஜி உற்சவம் கோலாகலமாக நடைபெற வேண்டும் என்று ‘இந்தியா பத்திரிகையில் வேண்டுகோள் விடுத்ததையும் சக்தி வழிபாட்டை பாரதியார் மேற்கொண்டதையும் விவரிக்கிறார்.இருவருக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளக்கப்பட்டிருக்கிறது.

 

6

ஏழாம் அத்தியாயம் தாகூர் இயந்திரங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் அவை சிருஷ்டிக்கு முரணானவை என்று கருத்துக் கொண்டிருந்த போது பாரதியாரோ அதற்கு நேர் முரணான கருத்தைக் கொண்டிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது.

7

மகாகவிகள் இருவரும் தமது எழுத்துக்களில் கவிதையே நித்தியத்துவத்தைப் பெறும் என்பதை உணர்ந்திருந்தனர்.இருவரும் மேலான இசை உணர்வு கொண்டவர்கள். இது இருவருக்கும் உள்ள ஒற்றுமை.

 

இது போன்ற ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டும் நூல் அரவிந்தருடனான பாரதியாரின் தொடர்பை விரிவாக இறுதி அத்தியாயங்களில் சுட்டிக் காட்டுகிறது.

 

    

 

நூலாசிரியர் இலங்கையின் பிரபலமான எழுத்தாளர். இலங்கை சர்வகலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்த சிறந்த ஆய்வு நூலை எழுதியுள்ளதன் மூலம் இரு கவிஞர்களைப் பற்றிய சிறந்த ஒப்பீடு நமக்குக் கிடைக்கிறது.

பாரதி ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூலாக இது அமைகிறது.

****

‘சீதைக்கு ராமன் சித்தப்பா’! தாய்லாந்து ராமாயணம்-1 (Post No.5019)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 May 2018

 

Time uploaded in London – 9-00 AM (British Summer Time)

 

Post No. 5019

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

விடிய விடிய ராமாயணம் கேட்டானாம்; என்னடா கதை? என்று கேட்டபொழுது சொன்னானாம் ‘சீதைக்கு ராமன் சித்தப்பா’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது தாய்லாந்தைப் பொறுத்த மட்டில் மிக மிக உண்மை. ராமாயணத்தைத் தலை கீழாக மாற்றிவிட்டார்கள்.

கேட்கக் கேட்க வேடிக்கையாக இருக்கும்; ராமபக்தர்களுக்கோ அபச்சாரமாகத் தோன்றும்; நீண்ட கட்டுரை; ஆகையால் முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டுகளில் (in Bullet Points) தருகிறேன்.

1.சீதாதேவி, ராவணனின் மகள்; வேறு ஒரு இடத்தில் வளர்ந்ததால், தெரியாமல் தூக்கி வந்து விட்டார்.

 

2.அனுமனுக்கு குறைந்தது இரண்டு மனைவிகள்; இரண்டு மகன்கள்! அவர் குரங்கு மனம், குரங்கு புத்தி உடையவர். பிரம்மச்சாரி அல்ல.

 

3.ராமாயணத்தில் பலப்பல புதுக்கதைகள்; இந்தியாவில் அந்தப் பெயர்களையே கேள்விப்பட்டதில்லை; கம்பனும் வால்மீகியும் சொல்லாத கதைகள்.

4.ராமன் பெயர், சீதை பெயர், அனுமன் பெயர் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் கண்டபடி மாற்றம். ராமாயணம் படிக்காதவர்கள் பார்த்தால், இது ஏதோ வேறு ஒரு கதை என்று மலைப்பர்.

5.இந்தியாவில் உள்ள ராமாயணம் பற்றியோ அதை எழுதிய வால்மீகி பற்றியோ தெரியாது.

6.ராவணனையும் விடப் பெரிய ராக்ஷஸன் உண்டு. அவனுக்கு ஆயிரம் தலைகள்!

7.ராமாயணம் என்பது தாய்லாந்தில் நடந்தது!

ஏன் இத்தனை கோளாறுகள்?

 

தாய்லாந்து மக்களின் வாழ்வில், கலையில், பண்பாட்டில், வரலாற்றில் ராமாயணம் இரண்டறக் கலந்துவிட்டது. ஆகையால் அது வெளி நாட்டில் நடந்ததாகச் சொன்னால் மக்கள் மனம் ஏற்காது. மேலும் தாய்லாந்தின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப ராமாயணம் திரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ‘’தாய்’’ மக்கள் அது இங்கேதான் நடந்தது என்று நம்புகின்றனர் என்று தாய்லாந்து மொழி ராமாயணமான ‘ராம்கியன்’ அறிஞர் மனீக் (மாணிக்க) ஜும்சாய் கூறுகிறார்.

உண்மை என்ன?

 

தாய்லாந்தில் இருந்த தாய்லாந்து மொழி ராமாயணத்தின் பெயர் ராம்கீயன் ( ராம க்யான அல்லது ராம கீர்த்தி).இது 200 ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் அழிந்து விட்டது. பின்னர் முதலாவது ராமா, இரண்டாவது ராமா என்ற மன்னர்களும் தக்ஷின் என்ற கவிஞர் முதலியோரும் புதிய ராமாயணத்தை யாத்தனர். அதில் பல கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டனர். மக்களுக்கு ரசனையாக தாய்லாந்து மக்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புகுத்தினர். ஆனால் ராமனையோ சீதையையோ பழிக்க வில்லை போற்றித் துதி பாடினர்.

 

 

இதைத் தமிழ்நாட்டிலுள்ள கோயில் தல புராணங்களுக்கு ஒப்பிடலாம். நமக்குத் தெரிந்த புராணக்  கதைகளை, இதிஹாசக் கதைகளை உள்ளூரில் நடந்ததாகக் கூறி அந்த ஊர் சாமியின் புகழை ஏத்தி விடுகிறோம்.

 

மேலும் வேத காலத்தில் இதிஹாச காலத்தில் வாழ்ந்த ரிஷி முனிவர்களை அங்கு வந்து சாப விமோசனம் பெற்றதாகக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் கடவுளையோ அந்த சாது சந்யாசிகளையோ பழிக்காமல் அவர்கள் புகழை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்.

 

மேலும் பல உள்ளூர்க் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழையதுடன் கலந்து சுவைபடக்  கூறுகிறோம். நேற்று தோன்றிய முஸ்லீம், கிறிஸ்தர்களைக் கூட இணத்து சில புதிய கதைகளை உண்டாக்குகிறோம்; உண்மையில் அவர்கள் அண்மைக்  காலத்தில் வாழ்ந்த பக்தர்கள். அவ்வளவுதான்.

 

இப்படி நமது நாட்டிலேயே நடக்குமானால் சில ஆயிரம் மைல்கள் தள்ளியுள்ள தாய்லாந்தில் கதைப்போக்கு மாறுவதில் வியப்பொன்றுமில்லை. அது மட்டுமல்ல அங்கு இப்பொழுது மூன்று      வேறு வேறு பாட பேதங்கள் உள்ளன. கோவில் சிலைகளில் வேறு புதிய கதைகள்!

சிலைகள், ஓவியங்கள் முதலியன அவரவர் கற்பனைக்கேற்ப புனையப்பட்டுள்ளன.

இதோ தாறுமாறாக திரிக்கப்பட்ட ராமாயண கதாபாத்திரஙகள்:-

குச்சி= கூனி மந்தரை (குப்ஜ/கூன் முதுகு;ஸம்ஸ்க்ருதம்)

ஸ்வாஹா= அஞ்சனா

கல்லாசனா= அஹல்யா (கல் என்ற தமிழ் சொல்)

காகனாசுரா= தாடகா

கூகன்= வேடன் குகன்

மங்குட்= லவன் (ராமன் புதல்வன்)

வஜ்ம்ருகா = வால்மீகி

சத்ருட் = சத்ருக்னன்

க்ருட்= கருடன்

லக்= லக்ஷ்மணன்/ இலக்குவன்

லாஸ்டியன்= புலஸ்த்ய

பிபெக்= விபீஷணன்

 

நங் மோண்டோ= மண்டோதரி

தத்சகன்= தச கண்டன்/ ராவணன்

பாலி= வாலி

சுக்ரீப்= சுக்ரீவன்

நங் சீடா = சீதா தேவி

ப்ரம் ராம் = ராமன்

கும்பகன் = கும்ப கர்ணன்

இந்ததரசிட்= இந்திரஜித்

புதிய பெயர்கள்

 

பெஞ்சகாய்= வஞ்சகி???

மைராப் = மயில் ராவணன்??

மாலிவக்க ப்ரஹ்மா= பிரம்மா

சுவண்ணமச்சா= ஸ்வர்ண மத்ஸ்ய= தங்க மீன்

மச்சானு= மத்ஸ்யன் (மீனன்)

மஹாபால் = மஹீபாலன்??? (மன்னன்)

தேபாஸுரா = தேவாசுர (தேவர்கள்+ அஸுரர்கள்

உன்ராஜ் = ஊன ராஜன் ( நொண்டி ராஜா?)

 

இனி அனுமனின் இரண்டு மனைவி, மயில் ராவணன் , மாண்டோதரி மகள் சீதை முதலிய கதைகளைக் காண்போம்.

 

தொடரும்…………………………….

 

–சுபம்–

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

தமிழா விடை தா! செப்புடா, செப்பு! Quiz (Post No.5009)

Compiled by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 6-37 am (British Summer Time)

 

Post No. 5009

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழேயுள்ள புகழ் மிகு, அருள் மிகு, கவின் மிகு, திரு மிகு சொற்றொடர்களை நுவன்றோர் யாவர் என்று செப்புக!

 

1.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

xxxx

 

2.உள்ளம் பெருங்கோயில்

ஊன் உடம்பு ஆலயம்

xxxx

 

3.ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்

 

xxx

4.தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்து உயிர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

xxxx

 

5.தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

xxx


6.மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே

xxxx

7.நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்

 

xxx

8.ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமுமம்

அரச குமரரும், பரத குமரரும்

xxx

9.திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

xxxx

10.அன்பின் வழியது உயிர்நிலை

xxx

11.தமிழ்நாடெங்கும் தடபுடல்! அமளி!

பணமே எங்கணும் பறக்குது விரைவில்

குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!

xxx

12.புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

 

xxxx

ANSWERS

1.பாரதி, பாரதியார் பாடல்கள், 2.திருமூலர் எழுதிய திருமந்திரம், 3. மாணிக்கவாசகர், திருவாசகம், 4.தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம், 5.குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை, 6.பட்டினத்தார் பாடல், 7. கம்பன், கம்ப ராமாயணம், 8.இளங்கோ, சிலப்பதிகாரம், 9.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் பாடல்கள், 12.நம்மாழ்வார் திருவாய்மொழி

 

–SUBHAM–