அத்ரி மஹரிஷி (Post No.7331)

WRITTEN BY  S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 12 DECEMBER 2019

 Time in London – 7-34 AM

Post No. 7331

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அத்ரி மஹரிஷி

ச.நாகராஜன்

பாரத நாட்டில் அத்ரி மஹரிஷி, அவரது பத்னி அநசூயை ஆகியோர் பற்றிக் கேள்விப்படாதவரே இருக்க முடியாது.

பிரம்மாவின் ஏழு புத்திரர்களுள் ஒருவர் அத்ரி.

மரீசி, ஆங்கிரஸ், அத்ரி, புலஸ்த்யர், புலஹர், க்ரது, வசிஷ்டர் ஆகியோரே பிரம்மாவின் ஏழு புதல்வர்கள்.

அத்ரி சப்த ரிஷிகளுள் ஒருவர்.

அத்ரியின் பத்தினி அநசூயை தக்ஷ ப்ரஜாபதியின் மகள்.

பிரபஞ்சத்தின் ஆதி மூலத்தை – முதல்வனைப் பற்றி அறிய ஆர்வம் கொண்ட அத்ரி அதற்காகக் கடுந் தவத்தை மேற்கொண்டார்.

நீண்ட நெடுந் தவத்தின் முடிவில் அவர் முன் மூவர் தோன்றினர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரே அவர்கள்.

அவர்களை நோக்கிய அத்ரி, “உங்கள் மூவரில் முதல்வர் யார்? பிரபஞ்சத்தின் ஆதி முதல்வனை அறிவதற்காகவே நான் தவம் புரிந்தேன். அவரிடமிருந்து ஒரு நல்ல புதல்வனைப் பெறுவதற்கான வரத்தைப் பெற விரும்புகிறேன் என்றார்.

மூவரும் ஆதி காரணனின் அம்சங்களே தாங்கள் மூவரும் என்று பதில் கூறினர்.

அவர்கள் மூவரும் அவருக்கு வரம் அளித்து தாங்கள் மூவருமே அவருக்கு மகனாகப் பிறப்பதாகக் கூறினர்.

அவருக்கு விஷ்ணுவின் அம்சமாக தத்தாத்ரேயர் பிறந்தார்.

சிவனின்  அம்சமாக துர்வாஸர் பிறந்தார்.

பிரம்மாவின் அம்சமாக சந்திரன் பிறந்தார்.

அத்ரி மஹரிஷியைப் பற்றிய ஏராளமான அதிசய வரலாறுகள் புராண, இதிஹாஸங்களில் காணப்படுகின்றன.

வால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் வரும் சம்பவம் இது. ராமரும், சீதையும், லக்ஷ்மணனனும் அத்ரி மஹரிஷி ஆசிரமத்திற்குச் சென்று அவரது ஆசியைப் பெற்றனர்.

அத்ரி அநசூயைப் பற்றிக் கூறி அவர் கடும் தவம் புரிந்திருப்பதையும் எடுத்துரைத்தார்.

சீதையும் ராமரும் அநசூயையை வணங்க மிகுந்த பிரியத்துடன் அநசூயை சீதைக்கு நல்ல ரத்ன ஆபரணங்களை ஆசி கூறி அளித்தார்.

அவற்றை அணிந்து கொண்ட சீதை திவ்யாலங்காரபூஷிதையாக ஆகி தேவதை போலத் தோன்றினார்.

ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்து அயோத்தி வந்து மகுடம் சூட்டும் போது அத்ரி அங்கு வந்து ராமரை ஆசீர்வதித்தார்.

மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 156ஆம் அத்தியாயம் கூறும் செய்தி இது : ஒரு முறை அசுரர்கள் சூரியனையும் சந்திரனையும் தோற்கடிக்கவே அத்ரி தானே சூரியன் மற்றும் சந்திரனாக ஆகி தனது கிரணங்களால் அனைத்து அசுரர்களையும் எரித்தார்.

இன்னொரு சம்பவம் இது:

காமதம் என்ற வனத்தில் அத்ரி – அநசூயை தவம் செய்து கொண்டிருந்த போது கொடிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. அநசூயை கங்கையை வேண்ட கங்காதேவி அவர் முன் தோன்றினார். ‘இதோ இங்கே ஒரு துவாரம் இருக்கிறது. இதன் வழியாக வெள்ளமென நீர் வரும் என்று கங்கா தேவி கூற தூய நீர் பெருகி எல்லா இடங்களிலும் பாய்ந்தது. பஞ்சம் பறந்து போனது.

கங்கையை ஒரு மாதம் தங்கி இருக்குமாறு அநசூயை வேண்ட அதற்கு இணங்கிய கங்கா தேவி, இதற்கென அநசூயை அத்ரி மஹரிஷியிடம் வைத்திருக்கும் அன்பிற்கும் சேவைக்கும் உரிய புண்யத்தில் (தபஸ் சக்தியில்) ஒரு வருட புண்யத்தைத் தானமாக அளிக்கக் கோர, அநசூயையையும் அதற்கு இணங்கி அளித்தார். கங்கையின் அருளால் நாடே செழிப்புற்றது.

மஹாபாரதத்தில் சல்லிய பர்வத்தில் 43ஆம் அத்தியாயம் தரும் தகவல் இது.

கௌரவ – பாண்டவர் போரை எப்படியேனும் தவிர்க்க வேண்டும் என்று பல மஹரிஷிகள் விரும்பினர். அவர்களுள் அத்ரி மஹரிஷியும் ஒருவர். துரோணரிடம் சென்ற அவர் போரை நிறுத்துமாறு அறிவுரை கூறினார்.

இன்னொரு சமயம் சோமா என்ற பெயருடைய ஒரு அரசன் ராஜசூய யாகம் ஒன்றைச் செய்தான். அத்ரி மஹரிஷி தான் தலைமைப் புரோகிதராக இருந்து யாகத்தை நடத்தி வைத்தார்.

பரசுராமர் கடும் தவத்தை மேற்கொண்ட போது அவரது தவத்தைப் பார்க்கச் சென்ற மஹரிஷிகளுள் அத்ரியும் ஒருவர். இது பிரம்மாண்ட புராணம் தரும் தகவல். (அத்தியாயம் 64)

அத்ரி மஹரிஷி பற்றி இன்னும் ஏராளமான அதிசயச் செய்திகள் உண்டு. பழம் பெரும் வேதமான ரிக் வேதம் இந்தச் செய்திகளைத் தருகிறது. இன்னும் அக்னி புராணம் உள்ளிட்ட புராணங்களும் பல செய்திகளைத் தருகிறது.

அவற்றை பிறிதொரு சமயம் பார்ப்போம்.

***

வைணவத்தில் எண்-12, சைவத்தில் எண்-12 (Post No.7329)

WRITTEN BY  LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 11 DECEMBER 2019

 Time in London – 10-06 AM

Post No. 7329

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

எண்.12ன் சிறப்போ சிறப்பு! (Post No.7319)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 9 DECEMBER 2019

 Time in London – 13-41

Post No. 7319

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

to be continued………………….

–subham–

திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்! (Post No.7313)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 8 DECEMBER 2019

 Time in London – 8-18 AM

Post No. 7313

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

மாலைமலர் நாளிதழில் 7-12-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!

ச.நாகராஜன்

கடன் தொல்லை, தாங்க முடியாத தரித்திரம்,  வியாபார நஷ்டம், தீராத வறுமை, அளவில்லாச் செலவு என்று இப்படி அல்லல் படுவோருக்கு நமது அறநூல்களும் மகான்களும் காட்டும் ஒரு நல்ல வழி திருவிளக்கைத் தினமும் வீட்டில் ஏற்றுவது தான்!

வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை மகாலெட்சுமியாகக் கருதுகிறது நமது பண்பாடு.  வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்வது ஒரு அர்த்தமுள்ள பழக்கம்.

ஏனெனில் தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் தரித்திரம் தொலைவதோடு இனி ஆரம்பிக்க இருக்கும் வாழ்க்கை செல்வ வளம், உடல் ஆரோக்கியம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது என்பதை ஆன்றோர் அனுபவத்தால் கண்டு அதை மரபாகக் கடைப்பிடித்தனர்.

மஹாலட்சுமி வசிக்கும் இடங்களில் முக்கியமானது

மஹாலட்சுமி வாசம் புரியும் இடங்களில் முக்கியமானதாகத் திகழ்வது விளக்கு. தினமும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வழிபடுவது வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.

மாலையில் சூரிய அஸ்தமன சமயம் வாயிலின் இரு புறங்களிலும் அகல் விளக்கு ஏற்றி வருவோர் ஒரு நாளும் வறுமை என்ற கொடிய பிணியை அடைய மாட்டார்கள்.

பழைய காலத்தில் மாட விளக்கு என்று திண்ணையின் இரு புறங்களிலும் உள்ள பிறை மாடங்களில் விளக்கை ஏற்றி வைப்பர். அவர்கள் நிம்மதியாகவும் தரித்திரம் இன்றியும் வாழ்ந்து வந்தனர். (இன்று நவீன வாழ்க்கை முறையில் மாடத்தைக் காணோம்!)

சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களில் விளக்கை ஏற்றி வைப்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா’ என்று விளக்கு அணைந்தால் அது தீய சகுனமாகக் கருதப்பட்டதை புறநானூறு (பாடல் 280) குறிப்பிடுகிறது.

ஆயிரக்கணக்கான பாடல்கள் தீபம் பற்றிக் குறிப்பிடுகின்றன.

விளக்கின் வகைகள்

விளக்கில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அனைத்துமே நலம் பயம் பயப்பவை தான்.

களிமண்ணால் ஆன அகல் விளக்கு எளியோரும் ஏற்றி முன்னேற வழி வகுப்பது.

குத்து விளக்கு பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கும் ஒன்று. இன்றைய காலத்தில் எல்லோர் வீட்டிலும் இடம் பெறும் ஒன்று.

தூங்கா விளக்கு இடைவிடாது இறைவன் சந்நிதியில் எரியும் விளக்கு.

காமாட்சி விளக்கு மணப்பெண்ணின் சீதனமாக  வரும் விளக்கு.

தொங்கு விளக்கு கோவில்களில் தொங்கும் விளக்கு.

இன்னும் நந்தா விளக்கு, யானை விளக்கு, கிளி விளக்கு,பாவை விளக்கு, வாசமாலை விளக்கு, சரவிளக்கு, அன்ன விளக்கு, தூண்டாமணி விளக்கு என இப்படி பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு அம்சம், வரலாறு உண்டு.

விளக்கை ஏற்றும் திசைகள்

விளக்கை கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து ஏற்றலாம். தெற்கு திசையைப் பார்த்து மட்டும் ஏற்றுதல் கூடாது.

இதன் அரிய பலன்கள்:

துன்பம் விலகும்.

கடன் தொல்லை போகும்

மங்களம் உண்டாகும்

திருமணத் தடை நீங்கும்

பல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர்.

விளக்கின் முகங்கள்

விளக்கில் ஒரு முகத்திலிருந்து பல முகங்கள் வரை உண்டு.

ஒரு முகம் மட்டும் உள்ள விளக்கு நோய்களை நீக்கும்.

இரண்டு  முகம் உள்ள விளக்கு குடும்ப ஒற்றுமையை நிலைப்படுத்தும்.

மூன்று முகம் உள்ள விளக்கு சகோதர சகோதரிகளிடையே நல்லுறைவை மேம்படுத்தும். புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.

நான்கு முகம் வாகன சுகம், வியாபார வளத்தைத் தரும்.

ஐந்து முகம் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்களைத் தரும். சகல சௌபாக்கியத்தையும் தரும்.

ஆறு முகம் சத்ருக்களை வெல்லும். ரோகம் நீக்கும்.

ஏழு முகம் : திருமணத்தை நடைபெற வைக்கும்.

இப்படி ஒவ்வொரு விளக்கும் நற்பயன்களையே தரும். அனைத்திற்கும் அடிநாதமாக இருக்கும் செல்வம் பெருகும். மங்களம் தங்கும்.

எண்ணெயும் திரியும்

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நல்லெண்ணெய் சௌபாக்கியத்தைத் தரும்.

பசு நெய் மகாலட்சுமியை வரவேற்று தங்கச் செய்யும்.

கடலை எண்ணெய் மட்டும் கூடாது. அது தீய பலன்களைத் தரும்.

திரிகளிலும் பருத்திப் பஞ்சு, தாமரைத் தண்டு, வெள்ளெருக்கு எனப் பல வகைகள் உண்டு.

பருத்திப் பஞ்சினால் உள்ள திரி சௌபாக்கியத்தையும், தாமரைத் தண்டைத் திரியாக இடுவது குழந்தைச் செல்வத்தையும் வெள்ளெருக்குப் பட்டை செல்வ வளத்தையும் ஏற்படுத்தும்.

குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளைக் குறிப்பதாக ஆகிறது. மும்மூர்த்திகளையும் போற்றி வணங்குவதாக ஆகிறது!

குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கமாக மாவிளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு போன்றவற்றை ஏற்றுவதால் குடும்பத்தினருக்கு சகல நலன்களும் கிட்டும்; இவற்றை அந்தந்தக் குடும்பப் பெரியோர்கள் விடாது செய்யும்படி இளைய தலைமுறையினரை அறிவுறுத்துவர்; இதனால் இது பரம்பரை பரம்பரையாக்த் தொடர்கிறது.

தீப மங்கள ஜோதி நமோ நம

திருவிளக்கு உலகியல் வாழ்க்கைக்கான செல்வ வளத்தையும் சௌபாக்கியத்தையும் மட்டும் தரும் ஒன்றல்ல.

ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து பெறுதற்கு அரிதான முக்திக்கும் வழிவகை  செய்யும் ஒரு அரிய சாதனம்.

இறைவன் ஜோதி வடிவம் என்பதை நமது அருளாளர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடி வலியுறுத்தியுள்ளனர்.

தமஸோ மா ஜோதிர் கமய: – இருளிலிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்க என்பதே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேத பிரார்த்தனை!

திருவண்ணாமலை அக்னி தலம். அங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை அன்று தீபத் திருவிழா உலகம் கண்டிராத அரிய திருவிழாவாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

ஜோதி வடிவாகச் சிவன் எழும்ப, முடியையும் அடியையும் பிரமனும் விஷ்ணுவும் காண முடியாத நிலையை இத் திருவிழா புலப்படுத்துகிறது.

திருவண்ணாமலை மஹா தீபத்தில் ஏழு அடி உயரமுள்ள தாமிர விளக்கு பயன்படுத்தப்படுகிறது. தீபம் எரிய 3000 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திரியாக 3000 அடி நீளத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் இடை விடாமல் பதினோரு நாட்கள் எரிய பயன்படுத்தப்படுகிறது.

முக்திக்கு வழி காட்டும் இந்த ஜோதியைத் தான் தீப மங்கள ஜோதி நமோ நம என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஜோதியைக் கும்பிடுவதே சிவ வாழ்வாகும். ‘ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோஹமது தந்து எனை ஆள்வாய்’ எனப் பெரிய மந்திர ரகசியத்தை அருணகிரிநாதர் (வாதினை யடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்) விளக்குகிறார். (சோஹம் = ஸ + அஹம் = அவனே நான் என்று பொருள் – சிவனே நான்!)

அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோர் ‘மாசற்ற ஜோதியை’ வர்ணித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர்; நம்மையும் அடையச் செய்கின்றனர்!

அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை

சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலார் ‘அருட் பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற தாரக மந்திரத்தை அருளியதோடு ஜோதியின் பெருமையை அருட்பெருஞ்சோதி அகவலில் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறார்.

சாகாக் கலையை ஜோதி வழிபாடு கற்பிக்கிறது என்பது அவரது அருளுரை.

‘மடல் எல்லாம் மூளை மலர்ந்திட

அமுதம் உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பி’

என்று இப்படி மனித உடலானது ஜோதி உடலாகப் படிப்படியாக மாறும் விதத்தை அவர் உலகினர் முன் வைக்கிறார்.

அவரது பாடல்களை ஊன்றிக் கற்போர் அறிவது : ‘ஜோதி வழிபாட்டால் சிவ அருள் சித்திக்கும்; நீடித்த நோயற்ற வாழ்வும் பெரும் பேறும் கிடைக்கும் என்பதையே!

வள்ளலார் கூறும் இன்னொரு முக்கியமான அறிவுரை – இரவில் விளக்கில்லாமல் இருக்கும் அறையில் படுத்து உறங்கக் கூடாது என்பது தான். விளக்கு எரியும் அறையில் படுப்பது ஆயுளை நீட்டிக்கும் என அவர் வலியுறுத்துகிறார்.

உலக மக்கள் இன்புற ஆழ்வார்கள் ஏற்றும் அற்புத விளக்கு!

ஆழ்வார்களோவெனில் உலகம் முழுவதுற்குமான நன்மைக்கு விளக்கை ஏற்றி வைக்கின்றனர்.

வையமே அகல்; வார் கடலே நெய். சூரியனே விளக்கு; துன்பமாகிய கடல் என்னும் இடர் ஆழி நீங்க, சுடர் ஆழி வண்ணனுக்கு பாமாலை சூட்டித் தீபம் ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.

பூதத்தாழ்வாரோ அன்பை அகலாகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக ஊற்றி இன்புருகு சிந்தையை திரியாக ஆக்கி ஞானத் தமிழால் நாராயணனுக்கு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா போதிக்கும் தீப தியானம்

முக்திக்கு வழி கோலும் ஒரு அடிப்படையை யோக வழிமுறையாக தீப தியானம் அருளாளர்களால் பண்டைக் காலம் தொட்டே பரிந்துரைக்கப்பட்டு வந்திருக்கிறது.

நவீன காலத்தில் கணினி தொழில்நுட்பம், தொழிற்சாலைகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மன இறுக்கத்திற்கும், மன உளைச்சலுக்கும் இது ஒரு அருமருந்து. இந்த தியானம் உலகியல் பலன்களை முதலில் தந்து பின்னர் ஆன்மீக சிகரத்தில் ஏற்றி விடும்.

ஸ்ரீ சத்யசாயி பாபா இந்த தியானத்தை மிகவும் வற்புறுத்துகிறார்.

அவர் தனது அருளுரையில், “மனிதன் தெய்வீகமானவன். அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள தியானம் இன்றியமையாதது. நான் உங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தியான முறையைத் தருகிறேன்” என்று கூறி தீப தியான முறையை விளக்குகிறார் இப்படி:- (Sathya Sai Speaks Volume 6 உரை எண் 50)

“தினந்தோறும் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். நீங்கள் அமைதியை உணரும் போது பின்னர் நிச்சயமாக இதற்கென அதிக நேரத்தை ஒதுக்குவீர்கள். உதயத்திற்கு முன்னர் இதைச் செய்யுங்கள். ஏனெனில் உடலானது தூக்கத்தினால் புத்துணர்ச்சி பெறுகிறது. பகல் நேரத்திலோ பல்வேறு செயல்களினால் உடல் மற்றும் மன ஆற்றல் சிதறுபடுகிறது.

ஒரு விளக்கைச் சிறிய நேராக எரியும் சுடருடன் உங்கள் முன்னர் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை தீபங்களை அந்தத் தீபம் ஏற்றினாலும் கூட அது தன் சுய ஒளியில் சிறிதும் குறைந்து போவதில்லை. ஆகவே சுடர் என்றுமுள்ள நிரந்தரப் பொருளுக்கான பொருத்தமான அடையாளம். அதன் முன்னர் பத்மாசனம் அல்லது உங்களுக்கு சௌகரியமானபடி அமர்ந்து கொள்ளுங்கள். சுடரை நேராகப் பாருங்கள். பின்னர் கண்களை மூடிக் கொண்டு அதை உங்கள் அகத்தில் இரு கண்களின் புருவங்களுக்கிடையே உணர முயலுங்கள்.

அதிலிருந்து அது உங்கள் இதயத் தாமரைக்கு செல்லும் பாதையெல்லாம் ஒளி பெறச் செய்தவாறே இறங்கட்டும். மார்பில் உள்ள இதயத்தின் நடுவே அது செல்லும் போது தாமரை மலரின் இதழ்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரிவது போலக் கற்பனை செய்யுங்கள். அது ஒவ்வொரு எண்ணத்தையும், உணர்ச்சியையும், உணர்வையும் ஒளியில் குளிப்பாட்டி இருளை அகற்றுவது போல எண்ணுங்கள்.

இப்போது ஒளியின் முன்னர் இருளுக்கு இடம் இல்லை. சுடரை பெரிதாக, அகலமாக இன்னும் அதிக பிரகாசமாக ஆக்குங்க்ள். அது உங்கள் அங்கமெல்லாம் பரவட்டும். அதை நீங்கள் நன்கு உணர்கிறீர்கள். அதுவே அன்பின் ஒளியாக ஆகட்டும்.  அது உங்கள், நாக்கு, கண்கள், காதுகள் உள்ளிட்ட இடங்களை அடையட்டும். அனைத்து உலகையும் அந்த ஒளி அன்பால் அணைக்கட்டும்.

இதை தினந்தோறும் விடாமல் செய்யுங்கள். நீங்கள் தெய்வீகமாக, சுத்தமானவராக, அமைதி உள்ளவராக ஆகி விடுவீர்கள்.”

ஏற்றம் பெற திருவிளக்கு ஏற்ற வேண்டும்

ஆக திருவிளக்கு ஏற்றுதலும் அதன் வழிபாடும் உலக வாழ்வில் சகல நலன்களையும் அருள்வதோடு அதற்கப்பாலும் உள்ள முக்தியை அடையவும் வழி வகுக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

திரு விளக்கு தினமும் ஏற்றுவோம்; செல்வச் சிகரத்தில் ஏறுவோம் ; தெய்வீக உணர்வை அடைந்து உயர்வோம்!

tags – கார்த்திகை , விளக்கு, தீபம், அகல் , சட்டி

***

மசூதிக்கு பொன்தகடு வேய்ந்த கதை (Post No.7303)

Written by london Saminathan

swami_48@yahoo.com

Date: 5 DECEMBER 2019

 Time in London – 11-05 am

Post No. 7303

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

வேலூர் அருகிலுள்ள ஸ்ரீ புரம் கோவில், அமிர்தசரஸ் பொற்கோவில் போல ஜெரூசலத்திலுள்ள மசூதிக்கும் பொன் தகடு வேய்ந்த கதை இது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிதம்பரம் முதலிய கோவில்களில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் இப்பணியைச் செய்தனர். 1992 வாக்கில் ஜெரூசேலத்தில் நடந்தது இது.

நான் இக்கட்டுரையை எழுதியது 11-10-1992-ல்.

இறைவனிடம் அன்பு! (Post No7292)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 3 DECEMBER 2019

 Time in London – 8-19 am

Post No. 7292

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இறப்பதற்கு முன்னர் ஸ்டீவ்ஸ் கூவ்ஸின் அற்புத அறிவுரை!

மொழியாக்கம் : ச.நாகராஜன்

இறைவனிடம் அன்பு!

ஸ்டீவ் கூவ்ஸ் ஒரு கோடீஸ்வரராக மறைந்தார். 56ஆம் வயதில் கணைய கான்ஸரினால் பீடிக்கப்பட்டு இறந்த போது, அவர் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு 700 கோடி டாலராகும்!

அவரது கடைசி வார்த்தைகளில் சில இதோ:-

“மற்றவர்களின் கண்களுக்கு எனது வாழ்க்கை வெற்றிகரமான ஒன்று. ஆனால் வேலை என்பதை விட்டு விட்டுப் பார்த்தால் எனக்கு சந்தோஷம் குறைவு தான். கடைசி கடைசியாக, என்னிடம் இருந்த பணம் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம் தான்.

நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்திருக்கும் இந்தத் தருணத்தில், எனது வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கும் போது என்னை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் மரணத்தின் முன்னர் என்னைப் பற்றிய பாராட்டுகளும் எனது செல்வமும் அர்த்தமில்லாத ஒன்று என்பதை உணர்கிறேன்.

உங்களுக்காகப் பணம் சம்பாதிக்க ஒருவரை அமர்த்தலாம், உங்களை ஓரிடத்திற்குக் கூட்டிச் செல்ல ஒரு காரை நீங்கள் வாடகைக்கு அமர்த்தலாம். ஆனால் உங்கள் நோயை வாங்கிக் கொள்ள ஒருவரை வாடகைக்கு அமர்த்த முடியாது.

உலகியல் செல்வங்களை யார் வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் ஒன்றே ஒன்றை இழந்து விட்ட போது மட்டும் அதைத் திருப்பிப் பெறவே முடியாது – அது தான் வாழ்க்கை!

உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள், அது போலவே அனைவரையும் நன்கு நடத்துங்கள்.

வயதாக ஆக நாம் திறம்பட வாழ்கிறோம். 30 டாலர் விலையுள்ள வாட்சாக இருந்தாலும் சரி 300 டாலர் வாட்சாக இருந்தாலும் சரி, அது காட்டுவது ஒரே நேரத்தைத் தான் என்பதை மெதுவாக உணர்கிறோம்.

30 டாலர் மதிப்புள்ள பர்ஸாக இருந்தாலும் சரி, 300 டாலர் மதிப்புள்ள பர்ஸாக இருந்தாலும் சரி, அதில் உள்ளே வைத்துக் கொண்டு போகும் பணத்தின் மதிப்பு ஒன்றே தான்.

1,50,000 டாலர் விலையுள்ள காராக இருந்தாலும் சரி, 30,000 டாலர் விலையுள்ள காராக இருந்தாலும் சரி, அதை ஓட்டும் போது ஓட்டுகின்ற சாலையும்,கடக்கின்ற தூரமும் ஒன்றே தான், சேர வேண்டிய அதே இடத்தைத் தான் அறிகிறோம்.

 300 டாலர் மதிப்புள்ள ஒய்னாக இருந்தாலும் சரி அல்லது 10 டாலர் மதிப்புள்ள ஒய்னாக இருந்தாலும் சரி அதை ஏந்திக் கொண்டு செல்லும் நமது நடை ஒன்றே தான்!

நாம் வாழும் நமது வீடு 300 சதுர மீட்டரோ அல்லது 3000 சதுர மீட்டரோ- நமது தனிமை ஒன்றே தான்.

உங்களது உண்மையான சந்தோஷம் இந்த உலகின் உலகியல் பொருள்களிலிருந்து வருவதில்லை. நீங்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்தாலும் சரி, எகானமி வகுப்பில் பயணித்தாலும் சரி, விமானம் நொறுங்கி விழுந்தால் நீங்கள் அதனுடன் விழுந்து நொறுங்க வேண்டியது தான்.

ஆகவே, நண்பர்களைக் கொண்டிருக்கும் போது அல்லது யாரோ ஒருவரிடம் பேசும் போது அது தான் உண்மையான சந்தோஷம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

மறுக்க முடியாத ஐந்து உண்மைகள் :-

  1. பணக்காரராக ஆகும் படி உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தராதீர்கள். அதனால், வளர்ந்து பெரியவர்களாக ஆகும் போது அவர்கள் அனைத்திற்கும் மதிப்பை மட்டுமே பார்ப்பர், அதன் விலையைப் பார்க்க மாட்டார்கள்.
  2. உங்கள் உணவை மருந்து போல உண்ணுங்கள். இல்லையேல்  மருந்தையே நீங்கள் உணவாக உண்ணுவீர்கள்.
  3. உங்களை நேசிக்கும் எந்த ஒருவரானாலும் சரி, அவர் உங்களை விட்டுப் போக மாட்டார் – உங்களை விட்டு விலக 100 காரணங்கள் அவளுக்கு இருந்தாலும் சரி, அவள் போக மாட்டாள். உங்களுடனேயே இருக்க ஒரே ஒரு காரணத்தை மட்டுமே எப்போதுமே பார்ப்பாள்.
  4. மனிதத்தன்மையுடன் இருப்பதற்கும் மனிதனாக இருப்பதற்கும் இடையே ஏராளமான வித்தியாசம் உள்ளது.
  5. நீங்கள் வேகமாகப் போக வேண்டுமெனில் – தனியே செல்லுங்கள். மிக அதிக தூரம் போக வேண்டுமெனில் மற்றவர்களுடன் இணைந்து செல்லுங்கள்!
  6.  

ஆக, முடிவாக நான் சொல்வதெல்லாம் இது தான்:

உலகின் ஆறு சிறந்த டாக்டர்கள் இதோ:

1. சூரிய வெளிச்சம்

2. ஓய்வு

3. உடல் பயிற்சி

4. திட்டமிட்ட உணவு

5. தன்னம்பிக்கை

6. நண்பர்கள்

உங்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இவர்களைக் கொண்டிருங்கள், ஆரோக்கியமான வாழ்வை அனுபவியுங்கள்.

கடவுள் உங்களிடம் அனுப்பி இருப்பவர்களை நேசியுங்கள், ஒரு நாள் அவருக்கு அவர்கள் திருப்பித் தேவைப்படுவர்.

***

உருக்கமான இந்த அற்புதமான அறிவுரை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான அறிவுரை தானே! இதை ஆங்கில மூலத்தில் படிக்க விரும்புவர் கீழே அதைப் படிக்கலாம்.

நன்றி : Truth Weekly 22-11-2019 issue (Vol  87 No 30)

சமூக ஊடகங்களிலிருந்து … படித்ததில் பிடித்தது!

xxxx

Snippets from Social Media 

Love for God

Steve Gouves dies a billionaire, with a fortune of $7 billion, at the age of 56 from pancreatic cancer, and here are some of his last words: 

In other eyes, my life is the essence of success, but aside from work, I have a little joy, and in the end wealth is just a fact of life to which I am accustomed. 

At this moment, lying on the bed, sick and remembering all my life, I realize that all my recognition and wealth that I have is meaningless in the face of imminent death. You can hire someone to drive a car for you, make money for you – but you cannot rent someone to carry the disease for you. One can find material things, but there is one thing that cannot be found when it is lost – “life”. 

Treat yourself well, and cherish others. As we get older we are smarter, and we slowly realize that the watch is worth $30 or $300 – both of which show the same time. 

Whether we carry a purse, worth $30 or $300 – the amount of money in the wallets are the same. Whether we drive a car worth $150,000, or a car worth $30,000 – the road and distance are the same, we reach the same destination. 

If we drink a bottle worth $300 or wine worth $10 – the “stroller” will be the same. 

If the house we live in is 300 square meters, or 3000 square meters – the loneliness is the same.

Your true inner happiness does not come from the material things of this world. Whether you’re flying first class, or economy class – if the plane crashes, you crash with it. 

So, I hope you understand that when you have friends or someone to talk to – this is true happiness! 

Five Undeniable Facts –

1. Do not educate your children to be rich. Educate them to be happy. – So when they grow up they will know the value of things, not the price. 

2. Eat your food as medicine, otherwise you will need to eat your medicine as food. 

3. Whoever loves you will never leave you, even if she has 100 reasons to give up. She will always find one reason to hold on. 

4. There is a big difference between being human and human being. 

5. If you want to go fast – go alone! But if you want to go far – go together! 

And in conclusion, The six best doctors in the world.

1. Sunlight

2. Rest

3. Exercise

4. Diet

5. Self-confidence

6. Friends

Keep them in all stages of life and enjoy a healthy life. 

“Love the people God sent you, one day he’ll need them back.” 

***

Source :

Truth Weekly 22-11-2019 issue Vol 87 No 30

******

மஹாபாரத நடிகர் சிகரெட் குடிக்கலாமா? (Post No.7274)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 NOVEMBER 2019

Time  in London – 17-08

Post No. 7274

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பிரிட்டனில் மஹாபாரதம் நடந்தபோது ஆகஸ்ட் 16, 1992-ல் நான் தினமணியில் எழுதிய செய்தி. பழைய செய்தியானாலும் சுவை குன்றுவதில்லை

written by london swaminathan in Dinamani dated 16th August 1992.

ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள் (Post No.7272)

SHOMYO IN JAPAN
SAMA VEDA CONFERENCE

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 NOVEMBER 2019

Time  in London – 10-03 AM

Post No. 7272

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நேர்மையாக `அர்த்தம் விளங்கவில்லை` (MEANING IS OBSCURE, UNCERTAIN) என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

–SUBHAM–

TAGS -சாமவேதம், ஜப்பான், வேத கால, இசைக் கருவிகள்

SAMA VEDA PARAYANA

தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6 (Post No.7267)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 27 NOVEMBER 2019

Time  in London – 5-49 AM

Post No. 7267

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019; இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019; மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019; நான்காம் பகுதி கட்டுரை எண் : 7258 வெளியான தேதி : 25-11-19; ஐந்தாம் பகுதி : வெளியான தேதி  ; பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6

ச.நாகராஜன்

மாணவர்களே!

உங்களது கல்வியை இங்கு தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு ஸ்வாமியின் உபதேசங்களைக் கேட்டிருப்பதால் இலட்சிய மனிதராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தெய்வீகத் திருவுருவின் முன்னர் எப்போதும் வாழ்கின்ற புனிதமான வாய்ப்பு உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு போதும் கடும் சொல்லைப் பேசாதீர்கள். ஒரு போதும் பொய் பேசாதீர்கள். சில சமயம் உண்மையைச் சொல்வதானது ஆபத்தில் கொண்டு போய் விடும். அப்படிப்பட்ட நிலையில் பொய்யும் பேச வேண்டாம்; உண்மையும் பேச வேண்டாம், மௌனமாக இருந்து விடுங்கள்.

பொய்க்கும் மெய்க்கும் அப்பாற்பட்டு அந்த இரண்டையும் நீங்கள் கடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்தில் இருப்பதால், இதுவே புனிதமான பாதையில் செல்வதற்கான நல்ல தருணம். சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள், பத்திரமாகச் சேருங்கள்.

 எனக்கு எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. பக்தர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். ஆனால் நான் அவர்களை அனுமதிக்கவில்லை. நீங்கள் ஏராளமான பேர்கள் இங்கு குழுமி விட்டதால் இந்தக் கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இல்லையெனில் இந்தக் கூட்டத்திலும் கூட எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு ஒவ்வொரு நாளும் திருநாள் தான். நான் எப்போதும் ஆனந்தமயம். நான் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுருவம். எந்த மாதிரியான ஆனந்தம்?  மற்றவர்கள் கொடுக்கின்றது போன்ற ஆனந்தம் அல்ல அது.  மற்றவர்கள் எனக்கு ஆனந்தத்தைத் தருவதற்காக நான் காத்திருப்பதில்லை. எனது ஆனந்தம் உள்ளிருந்து உருவாகிறது.

நித்யானந்தம், பரம சுகதம், கேவலம் ஞான மூர்த்திம், த்வந்வாதீயம், ககன சத்ருஷம், தத்வமஸ்யாதி லக்ஷ்யம், ஏகம், நித்யம், விமலம், அசலம், சர்வாதிசாக்ஷிபூதம், பாவாதீதம், திரிகுணரஹிதம் (கடவுள் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுரு. அவன் ஞானத்தின் மொத்த உரு, இரண்டு அற்ற ஏகன், ஒன்றுக்கொன்று எதிர்மறையாக உள்ளவற்றிற்கு அப்பாற்பட்டவன், ஆகாயம் போலப் பரந்தவன், அனைத்தையும் ஊடுருவி எங்கு நிறைந்திருப்பவன், தத்வமஸி என்ற மஹாவாக்யம் கூறியுள்ள லக்ஷியம், நித்யமானவன், விமலன், மாறுதலற்றவன், அறிவின் அனைத்துச் செயல்களுக்கும் சாக்ஷியானவன், அனைத்து மனநிலைகளுக்கும் அப்பாற்பட்டவன், சத்வம், ரஜஸ், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்).

 நான் அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். நம்பினால் நம்புங்கள், நான் ஆனந்தத்தின் திருவுருவமாக அமைந்தவன். நீங்கள் வேறு விதமாக நினைத்தால் தவறு உங்களிடம் இருக்கிறது. நான் எதைச் செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே, உங்களின் வளத்திற்காகவே, உங்களின் சந்தோஷத்திற்காகவே. ஆனந்தமயமான, கறைபடாத வாழ்க்கையை வாழுங்கள். அதுவே உங்களிடம் நான் விரும்புவது. ஒரு காலத்திலும் நான் கவலைப்பட்டதில்லை; துன்பப்பட்டதில்லை. என்னிடம் எல்லாமே இருக்கும் போது எதற்காக நான் கவலைப்பட வேண்டும்? எனக்கு எந்த வித ஆசைகளும் இல்லை. நான் சொல்வதெல்லாம், நான் செய்வதெல்லாம் உங்களுக்குத் தான் நன்மை, எனக்கு அல்ல. நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகவே என்னை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புனிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நான் எப்போதுமே தயார் தான். தெய்வீகமான வாழ்க்கை வாழுங்கள். சில சமயம் நான் உங்களுடன் பேசுவதில்லை. “நாம் ஏதோ தவறு இழைத்திருக்கிறோம்” அதனால் தான் ஸ்வாமி நம்முடன் பேசவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், மற்றவர்களிடம் குறைகளைப் பார்ப்பது எனது இயற்கையல்ல. எனது காட்சி மிகவும் புனிதமானது. நான் எப்போதுமே உங்களிடம் நல்லதையே பார்க்கிறேன். கெட்டதைப் பார்ப்பதானது உங்களது சொந்தக் கற்பனையே. ஏனெனில் உங்களிடம் கெட்டது இருக்கிறது, ஆகவே மற்றவர்களிடமும் அதையே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எனக்கோ கெட்டதும் கூட நல்லதாகத் தான் தெரிகிறது. ஆகவே ஸ்வாமியைப் பற்றி எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். சம்ஸ்யாத்மா வினஸ்யதி! (யார் சந்தேகப்படுகிறானோ அவன் அழிகிறான்) திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.

அன்புத் திருவுருவங்களே!

உங்கள் விருந்தாளிகளை வரவேற்று  மரியாதை செய்யுங்கள். உங்கள் அன்பை அனைவருக்கும் கொடுங்கள். பசித்தோருக்கு உணவு கொடுங்கள். அப்போது மட்டுமே உங்களுக்கு மன அமைதி கிட்டும். உங்கள் எண்ண்ம், சொல், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து லயப்படுத்துங்கள். இதை விடப் பெரிய ஞானம் வேறொன்றும் கிடையாது. ரிதமை பயிற்சி செய்யுங்கள்.  இதுவே தாரகத்திற்கான (முக்திக்கான) வழி. நீங்கள் அவ்வப்பொழுது அலைபாய்ந்து கொண்ட மனதுடன் இருந்தால் நீங்கள் தான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. அங்குமிங்கும் அலைபாய்வது குரங்கின் மனதிற்கான இயற்கைக் குணம். நீங்கள் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள். மனிதனாகப் பிறந்து நீங்கள் உறுதியான மனத்தைக் கொள்ள வேண்டும். மனிதகுலம் தாரகத்திற்கான அடையாளம். குரங்கு மனம் மாரகத்தைக் குறிப்பிடுவதாகும் (தளை).

அன்புத் திருவுருவங்களே!

இந்தப் பிறந்த நாளில் நீங்கள் மிக முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றுப் பேச்சில் வீணாக நேரத்தைக் கழிக்க வேண்டாம். ஒரு முறை தொலைத்து விட்ட நேரத்தைத் திரும்பிப் பெற முடியாது. ஸத்தியத்தைக் கடவுள் எனக் கொள்ளுங்கள்.

ஸத்யம் நாஸ்தி பரோ தர்ம:

(ஸத்யத்தைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு பெரிய தர்மம் ஒன்றும் இல்லை.)

ஆகவே ஸத்தியத்தின் வழியைப் பின்பற்றுங்கள்; தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.

***

பாபாவின் உரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.

23-11-2002இல் பிரசாந்தி நிலையத்தில் பாபா ஆற்றிய உரை.

ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோர் Sathya Sai Speaks – Vol 35, உரை எண் 23ஐப் பார்க்கவும்.

தூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! – 5 (Post No.7262)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 26 NOVEMBER 2019

Time  in London – 6-10 am

Post No. 7262

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 நான்காம் பகுதி:     வெளியான தேதி : 25-11-19 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 5

ச.நாகராஜன்

அன்புத் திருவுருவங்களே!

உணவு உட்கொள்ளும் முன்னர் புனித மந்திரத்தை ஓதுங்கள். பிறகு எந்த புனிதமற்ற விஷயமும் உங்கள் இதயத்தில் நுழையாது.

அன்னம் ப்ரஹ்மா; ரஸோ விஷ்ணு: போக்தா மஹேஸ்வர:

இந்த மூன்றும் உடல் மனம் செயல் ஆகியவற்றை முறையே தொடர்பு கொண்டதாகும். தூய்மையான எண்ணம்,சொல், செயல் ஆகியவையே உண்மையான ஞானம். நீங்கள் வெறு எந்தவிதமான ஆன்மீகப் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். மக்கள் வெவ்வேறு விதமான சாதனாவை (ஆன்மீகப் பயிற்சி) மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தற்காலிகமான திருப்தியே கிட்டுகிறது. ஆனால் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை கொள்ளும் போது நீங்கள் என்றும் நிலையாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

அன்புத் திருவுருவங்களே!

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் எது மாறாதிருக்கிறதோ அது தான் ரிதம். அதுவே உண்மையான ஞானம். எது மாறுதலுக்கு உட்படுகிறதோ அது மாரகம். எது மாறாதிருக்கிறதோ அது தாரகம்.

“சத்குருவின் அருளால் தாரகத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ளுங்கள். தற்காலிகத்திற்கும் நிலைத்திருப்பதற்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடியுங்கள். ஜீவாத்மாவானது ஜாக்ரதம் (விழிப்பு) ஸ்வப்னம் (கனவு) சுஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) ஆகிய மூன்று நிலைகளிலும் எதை இடைவெளியின்றித் திருப்பித் திருப்பிச் (சோஹம்) சொல்கிறதோ அந்த தாரகத்தின் (சோஹம்) இரகசியத்தை அறியுங்கள்.”

  • தெலுங்குப் பாடல் முடிகிறது

நீங்கள் எந்த மதத்தையும் சமூகத்தையும் சார்ந்தவராக இருக்கலாம், ஆயின் நீங்கள் இந்த தாரக மந்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும். இன்று மக்கள் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைச் சொல்லிக் கொள்வதற்கிணங்க அவர்களது செயல்கள் இருப்பதில்லை. அவர்களது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவை பொய், அதர்மம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவர்களது அன்பு சுயநலத்தினாலும் தங்களது சுய தேவையினாலும் கறை பட்டுள்ளது.

அவர்கள் பக்தர்கள் எனச் சொல்லிக் கொள்கின்றனர், உலகம் முழுவதும் சுற்றுகின்றனர், எல்லா தீய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வெளிப்படையாக அவர்கள் பக்தியுடன் காணப்படுகின்றனர், ஆனால் அகத்திலேயோவெனில் தீயவற்றின் மீது நாட்டம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பணத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர். நீங்கள் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் முகத்தைப் பார்ப்பதும் கூட பாவம்.

சில பக்தர்கள் சொன்னார்கள் : “ஸ்வாமி, நாங்கள் உங்களது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் உடல்நலமில்லை என்று சொல்லி மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டு வருகிறோம்.”

அவர்களிடம் நான் சொன்னேன் :” அது சரியான வழியல்ல. நீங்கள் வரமுடியாதது என்பது ஒரு பொருட்டே இல்லை, ஆனால் பொய்யைச் சொல்லாதீர்கள்.”

சத்ய வ்ரதத்தை கடைப்பிடியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் சர்வேஸ்வரனின் தரிசனத்தைப் பெறுவீர்கள்.

நீங்கள் பிரார்த்தனையால் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். பிரார்த்தனையின் மூலமாக உங்களிடம் ஞானம் உதிக்கும்.  அந்த பிரார்த்தனை : அன்னம் ப்ரஹ்மம்; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: வேறு எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை.

ஆன்மீக சாதகர்களுக்கு ஒன்பது விதமான பக்தி சொல்லப்பட்டிருக்கிறது.

அவை : ஸ்ரவணம் (கேட்டல்)

கீர்த்தனம் ( பாடுதல்)

விஷ்ணுஸ்மரணம் ( விஷ்ணுவை தியானித்தல்)

பாத ஸேவனம் ( அவரது பாதத்தில் சேவை புரிதல்)

வந்தனம் (வணங்குதல்)

அர்ச்சனம் (அர்ச்சித்தல்)

தாஸ்யம் (சேவை புரிதல்)

ஸ்நேஹம் (நட்பு பாராட்டல்)

ஆத்ம நிவேதனம் ( ஆத்ம சமர்ப்பணம்)

 நீங்கள் இறைவனுடன் நட்பு கொள்ள வேண்டும். இறைவன் உங்கள் நண்பன் என்றால்  உலகம் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் இன்று  இறைவனுடனான நட்பை துரதிர்ஷ்டசாலிகள் இழந்து வருகின்றனர். இறைவனுடன் நட்புக் கொள்வது என்பது சுலபமல்ல. ஆனால் இதற்கென நீங்கள் சாத்தியமான அனைத்து முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இறைவனுடன் நட்பைக் கொண்டு விட்டால் அதன் அனைத்து ஆதாயங்களையும் சாதனா (ஆன்மீகப் பயிற்சி) மூலம் நீங்கள் பெற வேண்டும். வெற்றுப் பேச்சில் காலத்தை வீணாக்க வேண்டாம்.

அன்புத் திருவுருவங்களே!

எப்போதும் உண்மையே பேசுங்கள். அது தான் இன்றைக்கு நீங்கள் கற்க வேண்டிய விஷயம். ஸத்தியமே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. ஸத்தியமே கடவுள். ஆகவே ஸத்திய வழியிலிருந்து ஒரு போதும் விலக வேண்டாம்.

***

அடுத்த பகுதியுடன் பாபாவின் உரை நிறைவுறும்