‘மலைவையாவூரில்………..’. என்று துவங்கும் பாடல் வரிகளைக் கேட்டது
(SPB?) முதல்
அந்தத் தலத்துக்குச் சென்று பெருமாளைத் (விஷ்ணு) தரிசிக்க வேண்டும் என்ற ஆசை
எழுந்தது. ஆகையால் லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்ற அடுத்த நாள்
மலைவையாவூருக்குச் சென்றோம். சிறிய மலைதான். அதன் உச்சியில் வெங்கடேசப் பெருமாள்
எழுந்தருளி இருக்கிறார். அருகில் அலர்மேல் மங்கை சந்நிதி.
மலைக்குச்
செல்ல ரோடும், படிகளும் உள்ளன. நடந்து சென்றால்
அடிவாரத்திலிருந்து உச்சிக்குச் செல்ல சுமார் 500 படிகள். காரில் சென்றால் கோவிலுக்கு
மிக அருகில் காரை நிறுத்தலாம். மிகவும் சிறிய சந்நிதி.
இது
சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள்
புகலிடத்துக்கு அருகில் உள்ளது. ஆகையால் வேடந்தாங்கல் செல்வோர் பெருமாளையும்
தரிசிப்பது வழக்கமாக உளது.
கோவிலை
ராமாயண ஹனுமானுடன் தொடர்பு படுத்தும் பல கதைகள் உண்டு. ஆயினும் அவை
தெரியாவிட்டாலும் மலையின் ரம்யமான சூழ்நிலையும், பெருமாளின் அருள் சுரக்கும் முகமும்
எவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
மழைக்காலம்
முடிந்து பல நாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகையில் இந்த இடம்
இன்னும் அழகாகக் காட்சி தரும் என்று ஊகிக்க (மார்ச் மாத வெயிலில்) முடிந்தது.
நான்
24-3-2019 எடுத்த புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு
காரியம் செய்யப்போய் இரண்டாவது காரியமும் இனிதே நிறைவேறினாலோ ஒன்றை
எதிர்பார்த்துப் போய் மற்றொன்றும் கிடைத்தாலோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று
சொல்லுவது தமிழ் வழக்கு.
காஞ்சிபுரம்
சென்றால் ஒரே கல்லில் 4 மாங்காய் அடிக்கலாம். அதாவது ஒரு
கோவிலுக்குள் நுழைந்தால் 4
திவ்ய தேச தலங்களைத் தரிசிக்கலாம்.
காஞ்சிபுரத்தை வலம் வந்தாலோ 14 திவ்ய
தேசங்களைத் தரிசித்துவிடலாம்.
பெரிய
காஞ்சிபுரம், பகுதியில் உலகலந்த பெருமாள் கோவில்
உள்ளது. அதில் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் என்ற 4 பாடல் பெற்ற தலங்கள் அடக்கம்.
1.திருநீரகம்
மூலவர்
இல்லை. உத்சவர்- ஜகதீஸ்வரர்; நின்ற
திருக்கோலம்.
தாயார்-
நிலமங்கைவல்லி
இருப்பிடம்-
உலகளந்தப்பெருமாள் கோவிலின் வடபுறத்துப் பிரகாரம்.
இரண்டாவது
பிரகாரத்தில் அழகான 16 கால் மண்டபத்துக்குப் பின்னால் இருப்பது நீரகம் என்னும் தலம்.
2.திரு ஊரகம்
பெரிய
காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது.
மூலவர்-
த்ரிவிக்ரமன் – உலகளந்த பெருமாள்; நின்ற திருக்கோலம்.
உத்சவர்-
பேரகத்தான்
தாயார்-
அமுதவல்லி
பாடியவர்
– திருமழிசை ஆழ்வார்
வாமன
உருவம் த்ரிவிக்ரமனாக வளர்ந்து ஓங்கி உலகளந்தபோது, மஹாபலிச் சக்ரவர்த்தி, விஷ்ணுவின்
காலடியில் கிடந்ததால் தரிசிக்க முடியவில்லை. அவரது வேண்டுகோளின்படி இறைவன்
உலகளந்தவனாகக் காட்சிகொடுத்ததே இக்கோவில்.
உலகளந்த
பெருமாளின் உயரம் 35 அடி. முழு அழகையும் காண அருகில் செல்ல வேண்டும். அர்ச்சகரும்
விளக்கொளி மூலம் நமக்குக் காட்டி விளக்கமும் தருகிறார்.
3. திருக்காரகம்
மூன்றாவது
பிரகாரத்தில் காரகம் என்னும் தலம் உளது
பெருமாளின்
பெயர்- கருணாகரப் பெருமாள்;
நின்ற திருக்கோலம்
திருமதி
மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியையாகக் கொண்டு சென்னையிலிருந்து வெளி வரும் ஆன்மீக மாத
இதழ் ஞான ஆலயம். அதில் மார்ச் 2019 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை:
ஸவ்யஸாசியே எழுந்திரு!
ச.நாகராஜன்
கீதோபதேசத்தில் ஒரு அற்புதமான கட்டம்!
மனித குலத்திற்கான செய்தியை கிருஷ்ணர் தரும் கட்டம் அது!
ஒவ்வொரு மனிதனுக்குமான தெய்வ செய்தி அது!
தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ
ஜித்வா சத்ருத் புங்க்ஷ்வ்
ராஜ்யம் ஸம்ருத்தம் |
மயைவைதே நிஹதா பூர்வமேவ
நிமித்த மாத்ரம்
பவ ஸவ்யஸாசிந் ||
ஹே, ஸவ்யஸாசியே! ஆகவே, நீ எழுந்திரு (தஸ்மாத் த்வம் உத்திஷ்ட)!
எதிரிகளை வென்று புகழை அடைவாயாக (யசோ லபஸ்வ)! செல்வம் நிறைந்த ராஜ்யத்தை அனுபவி!இவர்கள்
எல்லாம் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டார்கள். நீ நிமித்தம் என்ற ஒரு கருவியாக இரு.
(அத்தியாயம் 11, ஸ்லோகம் 33)
மஹாவீரனான அர்ஜுனனுக்கு ஸாங்க்ய யோகம், கர்ம யோகம் உள்ளிட்ட
அனைத்தையும் உபதேசித்து முடித்து விட்ட பின்னர் கிருஷ்ணர் அர்ஜுனனை எழுந்து செயல் புரி
என்று உத்வேகம் ஊட்டுகின்ற காட்சி இது.
அவனை அவர் ஸவ்யஸாசி என இங்கு அழைக்கிறார்.
ஸவ்யஸாசி யார்? பொதுவாக ஒரு போரில் வீரர்கள் வில்லை இடது கையில்
பிடித்து பாணங்களை வலது கையால் விடுவார்கள். ஆனால் வில்வித்தையில் தேர்ந்த மஹாவீரர்களோ
இரு கைகளிலும் வில்லைப் பிடிக்கும் வல்லமை படைத்தவர்கள். எவர் ஒருவர் வில்லை வலது கையில்
பிடித்து இடது கையால் பாணத்தை விடுகிறாரோ அவரே ஸவ்யஸாசி. அர்ஜுனன் ஒரு ஸவ்யஸாசி. இதே
போல இன்னொரு ஸவ்யஸாசி மன்மதன் தான்!
இப்படிப்பட்ட மஹாவீரன் நீ என கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு நினைவுபடுத்தவே
இப்படி அழைக்கிறார்.
எதைப் பொறுத்தாலும் பொறுப்பான் அர்ஜுனன், ஆனால் அவனது காண்டீவத்தை
இகழ்ந்தவர்களைப் பொறுக்கவே மாட்டான்.
கர்ண பர்வத்தில் வரும் காட்சி இது (71,72, 73 அத்தியாயங்கள்).
தர்மர் கர்ணனை அர்ஜுனன் கொல்லவில்லை என்ற கோபத்தால் அவனை இகழ்கிறார்.
“ஸ்வர்ணத்தினால் விசித்திரமான கட்டுக்கள் உள்ளதும், பனை அளவு உள்ளதுமான காண்டீவம் என்ற
சிறந்த வில் உன்னிடமிருந்து பிரயோஜனம் என்ன? அதை கிருஷ்ணரிடம் கொடுத்து அவருக்கு சாரதியாக
ஆகி விடு. அப்போது அவர் கர்ணனை வதம் செய்வார்” என்ற தர்மரின் வார்த்தையைக் கேட்ட அர்ஜுனன்
தன் கத்தியை உருவி தர்மரைக் கொலை செய்யப் போகிறான். உடனே கிருஷ்ணர் அவனைத் தடுத்து
நிறுத்தி, ‘எதற்காக இந்தத் தகாத காரியத்தைச் செய்கிறாய்’ எனக் கேட்கிறார். ‘எவர் ஒருவர்
என் காண்டீவத்தை இகழ்ந்து அதை இன்னொருவரிடம் கொடு என்று சொல்கிறாரோ அவரைக் கொல்வேன்’
என்பது என் ரகசிய விரதம். ஆகவே அவரைக் கொல்லப் போகிறேன் என்கிறான் அர்ஜுனன். கிருஷ்ணர்,
‘குருவான தர்மரை நீ என்று சொல். அதுவே அவரைக் கொன்றதற்குச் சமம்’ என்கிறார். அதன்படி
‘நீ’ என்று பலமுறை இகழ்ந்து அர்ஜுனன் கூறித் தன் கோபம் தணிகிறான். ஆனால் அவன் மீண்டும்
கத்தியை உருவவே கிருஷ்ணர் ‘எதற்காகத் திருப்பியும் கத்தியை எடுக்கிறாய்’ எனக் கேட்கிறார்.
‘மஹா சிரேஷ்டரும் என் குருவுமான தர்மரை இப்படி நீ என இகழ்ந்த நான் உயிர் வாழத் தக்கவன்
அல்ல; என்னை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்’, என்கிறான் அர்ஜுனன். உடனே கிருஷ்ணர், ‘உன்
புகழை நீயே கொஞ்சம் சொல்; அப்போது உருவம் அழிந்தவனாகி விடுவாய்’ என்கிறார். அர்ஜுனன்.
‘சிவனை ஒத்தவன் நான்; என்னை வெல்வார் எவரும் இல்லை’ என்று ஆரம்பித்துத் தன் பெருமையைக்
கூறி நாணித் தலை குனிகிறான். (வியவற்க எஞ்ஞான்றும் தன்னை – குறள்)
ஆக காண்டீவத்தின் பெருமையையும் அதன் மீது ஸவ்யஸாசியான அர்ஜுனன்
கொண்டிருந்த மரியாதையையும் பேரன்பையும் இங்குக் காண்கிறோம்.
மஹாபாரதத்தில், விராட பர்வத்தில் வரும் இன்னொரு காட்சி காண்டீவத்தின்
பெருமையை விளக்குகிறது.(அத்தியாயம் 42). போர் செய்ய பயப்படும் உத்தரனை ஊக்குவிக்கும்
விதமாக அர்ஜுனன் பாண்டவரின் ஆயுதங்களைக் காட்டி அதன் பெருமைகளை விளக்கும் காட்சி இது.
இதில் அர்ஜுனன் தானே தனது காண்டீவத்தைப் பற்றி மூன்றாம் மனிதன்
சொல்வது போல அமைக்கப்பட்ட காட்சி இது. அதில் உத்தரனிடம் அர்ஜுனன் கூறுவது இது: “ எதிரி
சேனைகளின் அங்கங்களை அடிக்கின்றதும் தேவ சம்பந்தம் பெற்றதும் காண்டீவம் என்று பிரசித்தி
பெற்றதுமான இந்த வில் பார்த்தனுடையது. பிளக்க முடியாததும், அச்சமற்றதும், ஒளியுள்ளதும்,
ஆச்சர்யகரமானதும், முறிக்க முடியாததும், வெடிப்பில்லாததும்,எல்லா ஆயுதங்களுள்ளும் சிறந்ததும்
பொன்மயமானதும் நாடுகளைப் பெருகச் செய்கின்றதும் அநேக வருடகாலமாகத் தேவர்களாலும், அசுரர்களாலும்,
கந்தர்வர்களாலும் பூஜிக்கப்பட்டிருக்கின்றதுமான இந்த வில்லானது லட்சம் ஆயுதங்களுக்கு
ஒப்பானது.இதை முற்காலத்தில் பிரம்மதேவர் ஆயிரம் வருட காலம் வைத்திருந்தார்; உமாபதியானவர்
அறுபத்துநான்கு வருடம் வைத்திருந்தார். இந்திரன் எண்பத்தைந்து வருடம் தாங்கி இருந்தான். சந்திரன் ஐந்தாயிரம் வருடம்
தரித்திருந்தான். வருணன் நூறு வருடம் தரித்திருந்தான். வருணனிடமிருந்து அதைப் பெற்ற
அக்னி தான் தரித்து வந்தான். அதை பார்த்தனுக்குத் தந்தான். இதை அர்ஜுனன் அறுபத்தைந்து
வருடம் தரிக்கப் போகிறான்”.
ஆக இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த வில்லை இரு கைகளினாலும் இயக்க
வல்லவன் ஸவ்யசாசி.
அவன் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட கண்ணன் அவனை அதிலிருந்து
விடுவிக்கிறான். எழுக; எதிரிகளை வெல்க; புகழை அடைக என உபதேசிக்கிறான்.
அர்ஜுனன் குழப்பத்தில் தவிப்பது போல பூவுலகில் ஒவ்வொருவனும்
அவ்வப்பொழுது குழப்பத்தில் தவிப்பது கண் கூடு.
அர்ஜுனன் போல அவ்வளவு வீரனாக இல்லாத சாமான்யர்கள் முதலில் அவன்
போல ஸவ்யஸாசி ஆக வேண்டும். பின்னர் குழப்பம் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும்.
எந்த நிலையிலும் கர்மம் செய்வதைத் தவிர்க்காதே; ஏற்கனவே மஹாசக்தியினால்
எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்ற போதிலும் “நீ கர்மத்தைச் செய்ய வேண்டும். தஸ்மாத்
உத்திஷ்ட! ஆகவே எழுந்திரு; யசோ லபஸ்வ; புகழை அடை.”
இது தான் கிருஷ்ணர் ஒவ்வொரு மனிதனுக்கும் தரும் செய்தி.
கிருஷ்ணர் அழைக்கும் ஸவ்ய ஸாசி என்ற ஒரு சொல்லே ஏராளமான அதிசயச்
செய்திகளை தந்து நமக்கு உத்வேகத்தையும் ஊட்டுகிறது.
ஸவ்யஸாசி ஆவோம்; இரு கரங்களாலும் பணி ஆற்றுவோம்; தர்ம வழியில்
கர்மம் புரிவோம்; கிருஷ்ணரின் கீதை காட்டும் பாதை வழி நின்று அவரது அனுக்ரஹம் பெறுவோம்.
31 Jul 2016 – (for old articles
go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ஆகஸ்ட் … 5 -ஆடிப்பூரம்; 7- நாக பஞ்சமி; 12-வரலட்சுமி விரதம்; 15-சுதந்திர தினம். 18-ஆவணி …
வில்லிப்புத்தூரார் தனது திறமை அனைத்தையும் காட்டி அமைத்தது
பாரதம். ஒரு பாடலில் பல்வேறு நுட்பமான விஷயங்களை அமைப்பது அவரது இயல்பு.
முந்தைய மன்னர் காலத்தில் சதிகள் எப்படி நடக்கும், ஒரு புத்திகூர்மையுள்ள
மன்னன் அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும், அன்றாட வாழ்க்கையிலும் கூட அவன் எவ்வளவு
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் வியாஸ பாரதம் விளக்குகிறது.
அதையெல்லாம் உள்வாங்கி தன் கவித்துவத்தால் மெருகேற்றி, ஒரே பாடலில்
பல அணிகளைப் புகுத்துவது, பல கதைகளைச் சொல்வது, பல நுட்பமான விஷயங்களைத் தெரியப்படுத்துவது
போன்ற இவற்றையெல்லாம் தனது தனி நடையாக்கி, ஒரு புதிய பாணியை வில்லிப்புத்தூரார் உருவாக்கி
வில்லி பாரதத்தைப் படைத்துள்ளார்.
ஆதிபருவத்தில் வாரணாவதச் சருக்கத்தில் வரும் பாடல்கள் அவரது
கவிதா சக்தியையும் தமிழின் பால் அவருக்கிருந்த அபார ஈடுபாட்டையும் காண்பிப்பவை.
திருதராஷ்டிரன் எப்படியும் பாண்டவர்களை ஒழித்துக் கட்டுவது என்ற
சதியாலோசனைக்கு உடன்பட்டு தனது கோணல் புத்தியுள்ள அமைச்சன் புரோசனனைத் தன் தீய செயலை
நிறைவேற்ற ஆணையிடுகிறான். எப்படி?
(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 113, வை.மு.கோ பதிப்பு)
பாடலின் பொருள் :
புகன்ற கேள்வி புரோசனன் தன்னை – சிறப்பித்துச் சொல்லப்பட்ட நூல்
கேள்வியை உடைய புரோசனனை நோக்கி
நீ – இ – மகன் தனக்கு மந்திரி ஆகியே – நீ இந்த தருமபுத்திரனுக்கு மந்திரி ஆகி
இகன்றவர் செற்று – இவரது பகைவரை அழித்து
இனியோர்க்கு இனிமை செய்து – இவரது நண்பர்களுக்கு நன்மை செய்து
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் – பரந்த நிலவுலகத்தை இவனுக்கு
உரித்தாக்குவாயாக!
அருமையான ஆணை போலத் தோன்றுகிறதல்லவா!
புரோசனனுக்கு மட்டும் புரியும் படி அவன் கூறிய ஆணை என்ன தெரியுமா?
இகன்றவர் செற்று – நம் துரியோதனாதியர்க்குப் பகைவர்களான இந்தப்
பாண்டவர்களை அழித்து
இனியோர்க்கு இனிமை செய்து – வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு
நன்மை செய்து
அகன்ற ஞாலம் – பரந்த ராஜ்யத்தை
இவன் வழி ஆக்குவாய் – இந்த துரியோதனனுக்கு உரித்தாகும் படி செய்வாயாக!
அரசன் கூறியதன் உட்பொருளை நன்கு புரிந்து கொண்ட புரோசனன் வாரணாவதத்திற்கு
பாண்டவர்களை அழைத்துச் செல்கிறான்.
உற்சாகமான வரவேற்பு.
அருமையான அரண்மனை. கிருகப் பிரவேசம் செய்தாகி விட்டது. அரண்மனையை
உற்றுக் கவனிக்கின்றனர் பாண்டவர்கள்.
அவர் தம் புத்தி கூர்மை லேசுப்பட்டதா என்ன? மெழுகினால் அரண்மனை
அமைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கின்றனர்.
மெழுகினானமக் காலயம் வகுத்ததும் விரகே
ஒழுகுகின்ற தன் னொழுக்கமும் வஞ்சனை யொழுக்கே
எழுகடற்படை யாவையுமிவன் வழியனவே
தொழுதகையுளும் படையுள சூழ்ச்சியும் பெரிதால்
(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 119, வை.மு.கோ பதிப்பு)
பாடலின் பொருள் :
மெழுகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகு ஏ – (இந்த புரோசனன்)
நமக்கு மெழுகினால் அரண்மனை அமைத்திருப்பதும்
வஞ்சனையே
ஒழுகுகின்ற தன் ஒழுக்கமும் வஞ்சனை ஒழுக்கே – இனியவன் போல நடந்து
கொள்ளும் இவனது நடத்தையும் கூட வஞ்சனையான நடத்தையே
எழுகடல்படை யாவையும் இவன் வழியனவே – ஏழு சமுத்த்திரம் போன்ற
சேனை எல்லாம் இவனது வசத்தில் உள்ளனவே
தொழுத கையுளும் படை உள – (பகைவர்கள்) அஞ்சலி செய்யும் விதமாக
குவிக்கின்ற கைகளினுள்ளும் ஆயுதங்கள் இருக்குமல்லவா?
சூழ்ச்சியும் பெரிது – அவர்களுடைய சதியாலோசனையும் கூட மிகப்
பெரியது தான்!
இங்கு வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் விளக்கவுரையில் வில்லிப்புத்தூராரின்
தமிழறிவைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடைசி அடியில் வள்ளுவரின் குறள் இருக்கிறது.
தொழுத கையுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுத கண்ணீரு மனைத்து (குறள் 834)
ஒன்னார் – பகைவர் கண்ணீர் சிந்தினால் அது அடுத்தவரைக் கெடுக்கத்
தான்; அவர்கள் கை கூப்பி வணங்கினால் அதற்குள் கொல்வதற்கான ஆயுதம் இருக்கும்.
பரிமேலழகர் தனது உரையில், “பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும்
, அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க வென்பதாம்” என்று சுட்டிக்
காட்டுகிறார்.
“தொழுத தங்கையினுள்ளுந் துறுமுடியகத்துஞ் சோர
அழுத கண்ணீ ரினுள்ளு மணிகலத்தகத்தும் ஆய்ந்து
பழுது கண் ணரிந்து கொல்லும் படையுடனொடுங்கும் பற்றா
தொழிக யார் கண்ணுந் தேற்றந் தெளிருற்றார் விளிருற்றாரே”
என்று இப்படி சீவக சிந்தாமணிப் பாடலும் இதையே சுட்டிக் காட்டுகிறது.
இப்படி புரோசனனின் சூழ்ச்சியைக் கண்டு பிடித்த பாண்டவர்கள் என்ன
முடிவு செய்தார்கள்? பாடலைப் பார்ப்போம் :
சங்கையுண்டினியுண்டியுஞ் சாந்தமும் பூணும்
பொங்கு நுண்ணிழைத்துகிலுமந் தாமமும் பூவும்
இங்கிவன் பரிந்தியற்றிய கோடலமென்றார்
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழன நாடுடையார்
(வாரணாவதச் சருக்கம் பாடல் எண் 120, வை.மு.கோ பதிப்பு)
பாடலின் பொருள்
சங்கை உண்டு – இவனிடத்து நமக்குச் சந்தேகம் உள்ளது
இனி – இனிமேல்
இங்கு இவன் பரிந்து இயற்றிய -இந்த இடத்தில் இவன் நம் பக்கம்
அன்புடையவன் போல நடிக்கிறான். (ஆகவே இவன் தரும்)
உண்டியும் – உணவுகளையும்
சாந்தமும் – சந்தனத்தையும்
பூணும் – அணிகின்ற ஆபரணங்களையும்
பொங்கு நுண் இழை துகிலும் – சிறந்து விளங்குகின்ற நுண்ணிய நூலினால்
ஆகிய ஆடைகளையும்
அம் தாமமும் – அழகிய மாலைகளையும்
பூவும் – பூக்களையும்
கோடலம் – ஆராயாது கொள்ள மாட்டோம்
என்றார் – என்று தமக்குள் நிச்சயித்துக் கொண்டார்கள்
கங்கை நீர் தவழ் கழனி சூழ் பழனம் நாடு உடையார் – இப்படி நிச்சயித்தது
யார் எனில் கங்கா நதியின் நீர் பாய்கின்ற கழனிகள் சூழ்ந்த மருத நிலத்தை உடைய குரு நாட்டுக்கு
உரியவர்களாகிய பாண்டவர்கள்
இங்கு அக்கால அரசரின் வாழ்க்கை முறை சித்தரிக்கப்படுகிறது.
உணவு, நீர் முதலிய உண்ணப்படும் பொருள்களினால் தீங்கு வராமல்
அரசரைக் காப்பாற்றுவதற்கு முதலில் அவற்றைக் கருங்குரங்கிற்கு இட வேண்டும்.
சந்தனம் முதலியவற்றை அரண்மனையில் உள்ள அரச அன்னப் பறவையின் கண்ணிலும்
சக்கரவாகப் பறவையின் முதுகிலும் முதலில் தடவிப் பார்க்க வேண்டும்.
ஒருவேளை உணவில் விஷம் கலந்திருந்தால் அதைக் குரங்கு உண்ணாது.
அதற்கு விஷ உணவு நன்கு தெரியும்.
அன்னமோ தவறான சந்தனத்தைக் கண்ணில் இட்டு விட்டால் கண்களிலிருந்து
ரத்தத்தைச் சொரியும்.
சக்கரவாகமோ முகத்தைக் கடுக்கும்.
இப்படிப்பட்ட நுட்பமான விஷயங்கள் மூலம் அரசனை ஒவ்வொரு கணமும்
காப்பாற்ற வேண்டியது மந்திரி மற்றும் மெய்காப்பாளரின் பொறுப்பு.
இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் முந்தைய தமிழ் நூல்களில் அழகுற
விரித்து உரைக்கப்பட்டுள்ளன.
சிந்தாமணியில் வரும் ஒரு செய்யுளைப் பார்ப்போம்:
பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம்
ஆய்ந்தளந் தியற்றப்பட்டவடிசில் நீரின்ன வெல்லாம்
மாந்தரின் மடங்க லாற்றற் புதுமுகன் காக்கவென்றாங்
கேந்து பூண் மார்பனேவ
வின்னண மியற்றினானே.
இப்படி ஒரு பாடலின் மூன்றே வரிகளில் பஞ்ச பாண்டவர்களின் மதி
நுட்பத்தை வில்லிப்புத்தூரார் விளக்குகிறார்.
திருதராஷ்டிரன் பூடகமாக இரு பொருள் தரும் படி பேசுவதை இரு வரிகளில்
விளக்குகிறார்.
வில்லி பாரதம் படிப்பவர்க்குச் சுவை பயக்கும் ஒரு நூல் மட்டுமன்றி
பல நுட்பமான விஷயங்களையும் விளக்கும் நூலும் கூட!
Please click here
for the article. உலக மகா
தியாகி பீஷ்மர் நினைவு தினம் · Following a special Puja to Lord Surya seated on
a sandalwood Ratha at the Yagashala in. Picture shows Sri Sringeri
Shankaracharya …