தகைமாதொடு வருவன்! (Post No.5657)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 13 November 2018

Time uploaded in London – 5-21 AM (GMT)

Post No. 5657

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நவம்பர் 13, 2018 ஸ்கந்த ஷஷ்டி

தகைமாதொடு வருவன்!

ச.நாகராஜன்

நெஞ்சேயினி செஞ்சேவடி

                நிலையாமெனப் பணிய

அஞ்சேலென அருள்நோக்குடன்

                நெடுவேலொடு குமரன்

தஞ்சேவலங் கொடியோடொரு

                ஜகமேவிய மயிலில்

தஞ்சேயிடைத் துயரோடிட

               தகைமாதொடு வருவன்!

(தம் சேவல் அம் கொடியோடு ஒரு ஜகம் மேவிய மயிலில்

தம் சேயிடைத் துயர் ஓடிட தகை மாதொடு வருவன்)

குறிப்பு : – 7-11-1967 அன்று இயற்றியது.

***

சூழும் துன்பத் தளைபோக்கி

     சுழலும் மனதைச் சீராக்கி

வாழும் படிக்கு வைத்திடுமோர்

     வடிவேல் முருகன் பாதமவை

தாழுஞ் சென்னி தன்னோடும்

     தளரா பக்தி யதனோடும்

பாழும் கலியை மறந்திட்டுப்

     பணிவாய் நாளும் வணங்கிடுவோம்!

***

வாடி வதங்குதடி நெஞ்சம்!

ஏடி! கதிர்வேலன் என்னை யினியின்று

நாடி வருவானோ நல்வரம்தான் தருவானோ

வாடி வதங்குதடி நெஞ்சம்

சேடி!  உளமெல்லாம் தேர்ந்திட்ட வேலனின்னும்

நாடி வரக்காணேன் உளங்குளிர வருவானோ

வாடி வதங்குதடி மஞ்சம்!

பாடி மகிழ்ந்ததையும் பக்கென்று மறந்தானோ

ஆடி யதுமறந்தான் அத்திறம்நீ கேட்டுவுடன்

வாடி, வதங்குதடி நெஞ்சம்!

****

 

அழகுமயில் மீதேறி மோகனமாய்

     அழகுக்கும் அழகன் வந்தான்

அழகுமயில் அலங்காரம் அதிசயித்து

     அழகுக்கும் அழகெ தென்றேன்

அழகுநகை சிந்தியபின் அழகனவன்

    அழகுக்கும் அழகு கோடி

அழகு சிந்து புவனமென்றான்

–SUBHAM–

கணபதியின் 16 நாமாக்கள் (பெயர்கள்) WORD SEARCH (Post No.5653)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 11 November 2018

GMT Time uploaded in London –20-44
Post No. 5653

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

16 NAMES OF LORD GANESH IN TAMIL WORD SEARCH

 

இந்தக் கட்டத்தில் மஹா கணபதியின் 16 நாமாக்கள் இருக்கின்றன. எந்த பூஜையைத் துவங்கும் முன்னரும் மஞ்சள் பொடியால் பிள்ளையார் போல குவித்து வைத்து இந்தப் பதினாறு பெயர்களையும் சொல்லி மஞ்சள் பிள்ளையாரை அர்ச்சித்து வழிபாட்டடினைத் துவங்குவர். நீங்களும் கட்டத்தில் கண்டு பிடியுங்கள். விடையும் கீழே உளது தினமும் படித்துப் புண்ணியம் பெறலாம்.

ஸு மு ன் பி
வி XXXXXXXXX XXXXXXXX
க் து ணா
  ன கே போ த் ர்
ந் ரா ம் ஜா
  ஜ தூ க்ஷ ன்
ன் வி நா
தி ந் பா
ம் க் து ண்
16 நா மா க் ள்
ஹே ஸூ ர் ர்
வஜ ர் பூ ந் ஸ்

 

 

Answer

1.ஸுமுகன், 2.ஏக தந்தன், 3.கபிலன், 4.கஜகர்ணன், 5.ஹேரம்பன

6.லம்போதரன், 7.தூமகேது, 8.கஜானன், 9.வக்ரதுண்டன்

10.ஸ்கந்த பூர்வஜன்,11.விகடன், 12.விக்னராஜன், 13.கணாத்யக்ஷன்

14.பாலசந்திரன், 15.விநாயகன், 16.ஸூர்ப்பகர்ணன்

-subham-

இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!(Post No.5642)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 November 2018

Time uploaded in London – 6-56 AM (GMT)

Post No. 5642

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

தடை இல்லாமல் வாழ்க்கை சீராகச் செல்ல?

விநாயகரை வணங்கு.

அனைத்திலும் வெற்றி பெற?

முருகா, துணை

படைப்பாற்றலுக்கு?

பிரம்மா

காத்து வளர்ச்சியுறச் செய்ய?

விஷ்ணு

நலம் தந்து வளம் பெறச் செய்து தீமைகளை ஒழித்து அருள் பாலிக்க

சிவமே துணை

அஷ்ட ஐஸ்வர்யமும் அஷ்ட சித்தியையும் பெற?

மஹாலக்ஷ்மியே சரணம்

வாக்குக்கும், அறிவிற்கும், ஞானத்திற்கும்?

சரஸ்வதி துதி

மொழிக்குத் துணை?

முருகா என்னும் நாமம்!

நெஞ்சத்தின் பயன்?

அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சம்

 

Navagraha picture posted by Lalgudi Veda

ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் ?

ஆதித்யன். சூரியன்

Picture posted by Lalgudi Veda

மனத்திற்கு?

சந்திரன்

வணிக வெற்றிக்கு?

புதன்

ஆசிரியத் தலைமைக்கு?

குரு

ஆயுளுக்கு?

காப்பதற்கும் வளர்ப்பதற்கும் சனி

வீரத்திற்கு?

செவ்வாய்

பகை கெட?

ராகு

முக்திக்கு

கேது

பொறுமைக்கும் நிலை பெறவும் பெறவும்?

பூமி

மூச்சிற்கு?

வாயு

நீடித்து வாழ?

அக்னி

எங்கும் பரந்த நிலை பெற?

ஆகாயம்

உயிர் வாழ?

நீர்

புற இருள் போக?

அக இருள், புற இருள் போக கண்

ஜீவனைத் தங்க வைக்க?

நாசி

உயிரை வளர்க்க?

உடம்பை வளர்த்தால் உயிர் வளரும்

செல்வத்துள் தலையாய செல்வம் பெற?

செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்

சுவை பட வாழ்வதற்கு?

நாக்கு

 

வெளிச்சம் தருவது?

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

நமசிவாய என்னும் நாமம்

அதைத் தருவது?

பன்னிரு திருமுறைகள்

நலம் தரும் ஒரு சொல்.

நாராயணா என்னும் சொல்.

அதைத் தருவது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

வாழ்க்கை தத்துவம் அறிய?

பகவத் கீதை

அரக்க சக்தியை வெற்றி பெற?

ஆதித்ய ஹ்ருதயம்

என்றும் மாறாதது?

வேதங்கள்

மாறுவது?

ஸ்மிருதிகள்

வலிமையுள்ளது?

காலம்

அனைத்தையும் அழிப்பது?

காலம்

அனைத்தையும் காப்பது?

காலம்

நினைக்க வேண்டிய ஒன்று?

எப்போதும் நினைக்க வேண்டியது மேலே சொன்ன அனைத்திற்கும் காரணமான ஆதி சக்தி!

இவை அனைத்தையும் தருவது எது?

ஹிந்துத்வம். இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை மகனே!

Tags–இல்லாதது ,இல்லை

***

இந்து மத இடி தாங்கி அர்ஜுனன்! (Post No.5636)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 7 November 2018

GMT Time uploaded in London –15-59

Post No. 5636

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் அர்ஜுனனின் குறைந்தது 16 பெயர்கள் உள்ளன. கண்டு பிடித்து இடி , மின்னல் பயம் அகற்றுங்கள். விடை கீழே உளது.

அர்ஜுனனின் பத்து பெயர்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லப்படும். இடி இடிக்கும்போது குழந்தைகளைத் தாய்மார்கள் ‘அர்ஜுனப்பத்து’ என்று சொல்லச் செய்வர். அர்ஜுனன், இந்திரனின் மகன்; அதாவது இந்திரனின் அம்சத்தை உடையவன். இந்திரன்   இடி,மின்னலுக்கு அதிபதி. ஆகையால் இடி மின்னலால் பயம் ஏற்பட்கூடாதென்பதற்காக அர்ஜுனனின் பத்து பெயர்களையும் சொல்ல வேண்டும். அப்படி பத்து பேரும் நினைவு இல்லாவிடில் அர்ஜுனப் பத்து என்று சொன்னாலே போதும்.

கட்டிடங்கள், இடியினால் பாதிக்கப்படாமல் இருக்க, இடி தாங்கி அவசியம்.

இளம் சிறார்கள் இடி,மின்னலைக் கண்டு அஞ்சாமலிருக்க அர்ஜுனப்பத்து அவசியம்.

நூறு சதவிகித நம்பிக்கை உடையவர்களுக்கு இடி மின்னலில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.

அர்ஜுனனின் பத்துப் பெயர்கள்

அர்ஜுனன், பல்குனன் (பங்குனி நக்ஷத்திரத்தில் பிறந்தவன்), பார்த்தன்,கிரீடி, ஸ்வேதவாஹனன் (வெள்ளைக் குதிரைகள் கட்டிய தேரை உடையவன்), பீபத்சு (எதிரிகளை வெறுப்படையச் செய்பவன்) , கிருட்டினன் (அஞ்ஞானத்தை அகற்றுவோன்), சவ்யசாசி, தனஞ்சயன், விஜயன் (வெற்றி வீரன்)

xxx

விடை

சவ்யசாசி

அர்ஜுன

பீபத்சு

தனஞ்சய

பல்குண

ஸ்வேதவாஹன

பார்த்த

கிரீடி

கிருஷ்ண

விஜய

பாரத

பரந்தப

குருநந்தன

குடாகேச (ன்)

கபித்வஜ

அனகன்

பாண்டவ

xxxx

 

அர்ஜுனனுக்கு கீதையில் அமைந்துள்ள 13 பெயர்கள்:

அர்ஜுனன் = தூய இயல்பு உடையவன், வெள்ளை நிறம் கொண்டவன்
பாண்டவன் = பாண்டுவுக்கு மைந்தன்; பாண்டவர்களில் தலை சிறந்த வீரன்; வில்லுக்கு விஜயன்.
தனஞ்ஜயன் =  யுதிஷ்டிரரின் ராஜசூய யக்ஞத்தின் போது உத்தரகுரு வரை சென்று செல்வத்தைக் கொணர்ந்தவன் , அடைபட்டுக் கிடக்கும் செல்வத்தைச் சேகரிப்பவன்
கபித்வஜன் =அர்ஜுனன் கொடியில் அனுமன் இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டது,  குரங்குக் கொடியுடையவன்
குடாகேசன் = தூக்கத்தை வென்றவன்
பார்த்தன் = பிரிதாவின் மைந்தன்; ப்ருதா என்பது குந்தியின் மற்றொரு பெயர்
அனகன் = பாபமற்றவன்
பரந்தபன் = எதிரிகளை வாட்டுபவன்
கௌந்தேயன் = குந்தியின் மைந்தன்
பாரதன் = பரத குலத்தில் உதித்தவன்
கிரீடி =  இந்திரனால் கிரீடம் சூட்டப்பட்டவன்;  கிரீடம் தரித்தவன்
குருநந்தனன் = குருகுலத்தின் தோன்றல்
ஸவ்யஸாசின் = எல்லோரும் வலதுகையால் அம்புவிடுவர். அர்ஜுனன், இடது கையாலும் எய்ய வல்லவன். இடது கையால் அம்பு எய்பவன்.

 

TAGS–தனஞ்ஜயன், அர்ஜுனன், பத்துப் பெயர்கள்

–சுபம்-

தெய்வம் பலப்பல சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்! (Post No.5634)

WRITTEN BY S NAGARAJAN

Date: 7 November 2018

Time uploaded in London – 5-42 AM (GMT)

Post No. 5634

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

1

ஒரு குளம்.பல் வேறு படித்துறைகள். அதில் ஒன்றில் இறங்கியவர் குளத்தில் இருக்கும் நீரைப் பார்த்து தண்ணீர் என்கிறார். இன்னொரு படித்துறையில் இறங்கியவர் ஜலம் என்கிறார். இன்னொருவர் water என்கிறார். இன்னொருவரோ பானி என்கிறார்.

அனைவரும் குறிப்பிடுவது ஒரே நீரையே. அவரவர் உணர்ந்த படி சொல்கிறார்.

அதே போலவே இறைவன் ஒருவனே. அவரவர் உணர்ந்தபடி அவனைப் போற்றி வணங்குகின்றனர்.

ஹிந்து மதம் கூறுவது இதுவே. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எளிமையாக இப்படி உதாரணத்துடன் கூறி விளக்கினார்.

2

ஆகாஸாத் பதிதம் தோயம்

யதா கச்சதி ஸாகரம்

சர்வ தேவ நமஸ்கார:

கேசவம் ப்ரதி கச்சதி

ஆகாயத்திலிருந்து விழுகின்ற மழைத் துளிகள் எப்படி சமுத்திரத்தைச் சென்று அடைகிறதோ அது போலவே எல்லா கடவுள்களுக்கும் செய்யும் இறைவணக்கம் கேசவனைச் சென்று அடைகிறது.

இப்படி ஹிந்து மத வேதம் கூறுகிறது.

இதையே தான் ஸ்வாமி விவேகானந்தர் பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜன்ஸில் – சர்வ மத மாநாட்டில் – சிகாகோவில் முழங்கினார். ஹிந்து மதப் பெருமையை நிலை நாட்டினார்.

 

அவரது உரையில் முக்கியமான இந்தப் பகுதி இது:

I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings:

As the different streams having there sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee.

3

ஏகம் ஸத். விப்ரா: பஹுதா வதந்தி |

உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதைப் பலவாறாகச் சொல்கின்றனர்.

இது தான் வேதம் கூறும் உண்மை.

மஹாகவி பாரதியார் இதை இப்படிக் கூறுகிறார்:

நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று

நான்மறை கூறிடுமே-ஆங்கோர்

நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்

நான்மறை கண்டிலதே.

4

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், – நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்,

கோவிற் சிலுவையின் முன்னே – நின்று

கும்பிடும் யேசு மதத்தார்.

யாரும் பணிந்திடும் தெய்வம் – பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்,

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; – இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம்

என்றும்,

பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!

புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம்,

நல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.

என்றும் மகாகவி பாரதியார் மிகத் தெளிவாக பல மதங்கள் உரைக்கும் தெய்வம் ஒன்றே என்று உண்மையை விளக்குகிறார்.

5

தாயுமானவ ஸ்வாமிகள் என் தெய்வம் உன் தெய்வம் என்று கூறி சண்டையிடுவோரை நோக்கி உங்கள் விவரத்திணத்திற்கும் அப்பாற்பட்ட ‘பொருள்’ ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் இப்படி:

அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி,

அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குள்ளே

அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும்படிக்கு இச்சைவைத்து, உயிர்க்குயிராய்

தழைத்தது எது? மனவாக்கினில்

தட்டாமல் நின்றது எது? சமயகோடிகள் எலாம்

தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடவும் நின்றதுஎது?

எங்கணும் பெருவழக்காய்,

யாதினும் வல்ல ஒரு சித்து ஆகி, இன்பமாய்

என்றைக்கும் உள்ளது எது? மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லைஉளது எது? அது

கருத்திற்கு இசைந்தது அதுவே;

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

சமயகோடிகள் மன வாக்கினில் எட்டாமல் நின்ற ஒன்றை என் தெய்வம் உன் தெய்வம் என்று எதிர் வழக்கு செய்ய, அதற்கும் அப்பாற்பட்டதாய் உள்ள ஒரு வஸ்துவை வணங்கி அஞ்சலி செய்வோம் என்பது அவர் வாக்கு.

6

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் திருமூலர்.

7

ஒரே பரம்பொருளை விளக்கிக் கூறும் பாரதியாரின் பாடல்கள் பல:

உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி

ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,

கொள்ளற் கரிய பிரமமென் றேமறை

கூவுதல் கேளீரோ?

ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்

உணர்வெனும் வேதமெலாம்-என்றும்

ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்

உணர்வெனக் கொள்வாயே.

”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:

சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;

தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;

பூமியிலே நீகடவு ளில்லை யென்று

புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்

சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!”

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளீரோ?

சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;

சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

அறிவே தெய்வம்; அன்பே தெய்வம்; உண்மையே தெய்வம்!

8

முத்தாய்ப்பாக பாரதியார் தெளிவாக பல்வேறு மதங்களைச் சொல்லி பகைத் தீயை மூட்டுபவரைச் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:

தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று

இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து

வெறுங் கதைகள் சேர்த்துப்-பல

கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை

காட்டவும் வல்லீரோ

9

இதில் முக்கிய விஷயம் அனைத்து மதங்களையும்,தேவர்களையும் அவரவர் வழி வழி நின்ற தன்மையை உரைப்பது ஹிந்து  மதம் ஒன்று  மட்டுமே.

மதம் மாற்றுவது கிடையாது;

மற்ற தெய்வங்களைப் பழிப்பது கிடையாது!

இந்த ஒன்றின் அடிப்படையிலேயே இது எதிர்காலத்தில் அனைவருக்குமான வாழ்க்கை முறையாக ஆகும். ஆர்னால்ட் டாய்ன்பி உலக சரித்திரத்தைப் பல தொகுதிகளாக எழுதியவர். அவர் ஹிந்துத்வத்தைப் பார்த்து வியந்து எதிர்கால வழி இது ஒன்றே தான் என்று வியந்து கூறுகிறார்.

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

நலம் தரும் சொல்லை கண்டு கொண்டேன் – நாராயணா என்னும் நாமம்!

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நான் அறி வித்தை!

மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம்

விண்ணும் மண்ணும் தனி ஆளும்

வீரை சக்தி நினதருளே!

****

நெஞ்சில் கண்ணன் வருவான்! (Post No.5630)

WRITTEN BY S NAGARAJAN

Date: 6 November 2018

Time uploaded in London – 4-56 AM (GMT)

Post No. 5630

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நெஞ்சில் கண்ணன் வருவான்!

ச.நாகராஜன்

1

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளியை குடும்பத்துடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் கொண்டாடுவோமாக!

அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதே உலக அங்கீகாரம் பெற்ற பண்டிகையாக இது இருப்பதைக் காட்டுகிறது.

ஹிந்து மதத்தின் முக்கிய கொள்கையான அறம் வெல்லும்; மறம் மடியும் என்பதைச் சொல்லும் பண்டிகை இது.

நரகாசுரனை மாய்த்து அறம் காத்த கண்ணனை நினைவு கூரும் பண்டிகை இது.

அறம் செழிக்கட்டும்; மறம் அழியட்டும்!

இந்த நேரத்தில் இவாஞ்சலிஸ்ட் தொலைக்காட்சி சேனல்கள் தீபாவளி கொண்டாடப்பட வேண்டுமா என்பன போன்ற தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியதையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு இவர்களை இனம் காண வேண்டும்.

இது போல கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் தானா, மொஹரம், பக்ரீத் தேவையா என்று ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?

சிந்திப்போம்!

2

நெஞ்சில் கண்ணன் வருவான்!

நெஞ்சம் நிறைந்திட சஞ்சலங் குறைந்திட

    நெஞ்சில் கண்ணன் வருவான் – களி

    மிஞ்சக் கொஞ்சிக் குழைவான்

வண்ணம் கண்டிட வார்த்தை மறந்திட

    எண்ணமும் எங்கோ ஓடும் – கனி

    கண்ணனைப் பின்னும் நாடும்

கன்னம் குழைந்திட வன்மை இசைந்திட

     மோகனக் குழலை இசைப்பான் – பல   

     வாவன ராக மழை தான்!

குறிப்பு :29-10-1967 இல் இயற்றிய பாடல்!

****

இறைவன் பற்றிய இரகசியங்கள்! (Post No.5626)

WRITTEN BY S NAGARAJAN

Date: 5 November 2018

Time uploaded in London – 6-17 AM (GMT)

Post No. 5626

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இறைவன் பற்றிய இரகசியங்கள்!

ச.நாகராஜன்

1

இறைவனை எப்படிக் கண்டறிவது? அவன் எங்கு உள்ளான், எப்படி உள்ளான் என்பதை மகான்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உரைத்து வைத்திருப்பதைத் தொகுத்துப் படித்தால் பல உண்மைகள் தெளிவாகப் புலப்படும். சிலவற்றை இங்கே தொகுத்துப் பார்க்கலாம்.

2

திருமூலர் கடவுளை நடமாடும் கோயில் நம்பனில் காண்கிறார்.

கோயிலில் உறைந்திருக்கும் பகவானுக்கு ஒன்று நைவேத்யமாகத் தந்தாய் எனில் அது நிச்சயமாக பசியினால் வாடி வதங்கும் ஏழைக்குச் சென்று சேராது; சில சமயம் சேரலாம். அல்லது நைவேத்யம் செய்தவரே வீட்டிற்குக் கொண்டு செல்லக் கூடும். ஆனால் நடமாடும் கோயிலாக இருக்கும் நம்பர்க்கு ஒன்று கொடுத்தால் அதில் இரட்டைப் பலன். அவனுக்கும் அது சேரும், அத்துடன் அது தானாகவே இறைவனையும் சேரும் என்கிறார் அவர். அற்புதமான இந்தக் கருத்து பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. இல்லாதவனுக்கு ஒன்று ஈயில், அதுவும் உண்ணுவதற்கு ஒன்று கொடுத்தால் அதில் மகிழ்வான் இறைவன், அது அவனைச் சேரும் என்பது தான் அது. வள்ளலார் அனைவருக்கும் அன்ன தானம் செய்யச் சொன்னதன் முழு ரகசியமும் இப்போது புரியும்.

 

திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பார்ப்போம்:

படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவர்க்கு ஆது ஆமே!

3

அவன் அணோர் அணீயான், மஹதோ மஹீயான் என்று அறைகின்றது வேதம்.

அணுவிற்கும் அணுவானவன். பிரம்மாண்டத்திற்கும் பெரிதான மஹத்துக்கும் மஹத்தானவன்! பெரிதுக்கும் பெரிது. சிறிதுக்கும் சிறிது!

அணுவில் அசைவாய் என்றார் (அடாமிக் தியரி தெரிந்த) அருணகிரிநாதர்.

அணுவாய் இருப்பவனும் அவனே; அணுவிற்குள் அசைவாய் இருந்து உலகத்தை இயக்குபவனும் அவனே!

என்ன அற்புதமான கருத்து!

4

திருமந்திரப் பாடல் இன்னொன்று இறைவனின் இயல்பை விளக்குகிறது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே    (திருமந்திரம் பாடல் 270)

இறைவன் எண்குணத்தான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.

குணம் பற்றியதான இந்த விளக்கமும் அற்புதமான விளக்கம் தான்.

அன்பே சிவம்; தூய அன்பின் திருவுரு கடவுள்!

GOD IS LOVE!

பக்திக்கு இலக்கணமாய் விளங்கும் நாரதர் இறைவனை, ‘அவன் உன்னுள்ளே பரம ப்ரேம ரூபமாய் இருக்கிறான்’ என்கிறார்.

ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (நாரத பக்தி சூத்ரம் – 2)

Sa tvasmin Parama-prema-rupa (Narda Bhakthi Sutra -2)

5

GOD IS NO WHERE  என்றான் ஒரு நாத்திகன்.

அதைக் கேட்ட ஞானி சிரித்தார். நீ சொன்ன சொல்லிலேயே உள்ளானே; இதோ பார் W NOவுடன் சேர்த்துப் படி

GOD IS NOW HERE என்று ஆகி விட்டதே! என்றார் அவர்.

6

இரணியன் நாத்திகர்க்குத் தலைவன்.

அவன் உன் கடவுள் இந்தத் தூணில் இருக்கிறானா? என்று தன் மகனை நோக்கிக் கேட்ட போது, பிரகலாதன், “அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்கிறான்.

கம்பர் சித்தரிக்கும் காட்சியோ அற்புதக் காட்சி.

கம்பரின் பாடல் இது:

சாணிலும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட

கோணினும் உளன், மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற

தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றான்; நன்று எனக் கனகன் நக்கான்!

அடேய்! எங்கிருக்கிறான் உன் இறைவன்?

அவன் சாணிலும் இருப்பான்; அணுவை நூறு துகள்களாகச் செய்த போது வருமே அந்தக் கோணிலும் இருப்பான்; நீ எங்கே இருக்கிறான் என்று கேட்டாயே, அந்தச் சொல்லிலும் இருப்பான்.

அருமையான இந்தச் சொற்களில் வாக்கில் இருப்பவன் அவனே; வாக்கைத் தருவபவனும் அவனே; அனைத்திலும் பரந்திருந்து உறையும் சர்வ வியாபியும் அவனே என்பதைப் புலப்படுத்துகிறான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்!

7

சரி, அவனை எப்படி அறிவது? வழி சொல்கிறார் அப்பர்:

அவன்,

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

இரகசியத்தைப் பிட்டுப் பிட்டு வைத்து விடுகிறார் அப்பர். நாவுக்கு அரசர் ஆயிற்றே! அவர் சொற்களில் உண்மை நர்த்தனமாடுகிறது!

விறகில் தீ இருப்பது போல, பாலில் உள்ளே நெய் மறைந்திருப்பது போல மாமணி ஜோதி மறைந்திருக்கிறான்.

உறவு கோலை நடு

உணர்வுக் கயிறை எடு

முறுக வாங்கிக் கடை

மேலே வந்து உன் முன்னே மிதப்பான்.

8

‘உள்ளத்தில் உள்ளான் என்கின்றனர் சமயக் குரவர்கள். ஆனால் கள்ளர்க்குப் புலப்படான்; மெய்யன்பர்க்குப் புலப்படுவான் என்கின்றனர் அவர்கள்! இறைவன் ஒரு இரகசியம்! அவனை முழுதுமாக அறிய முடியாது.

அநிர்வசனீயம் – பேச்சுக்கு அப்பாற்பட்டவன்.

Egoless, Everlasting, Eternal, Omnipotent, Omniscient என்று இப்படி வர்ணித்துக் கொண்டே போகலாம்!

9

ஆதி பகவன்

வாலறிவன்

மலர்மிசை ஏகினான்

வேண்டுதல் வேண்டாமை இலான்

எண்குணத்தான்

பொறிவாயில் ஐந்தவித்தான்

அறவாழி அந்தணன்

என்று இறைவனை ‘தனக்கு உவமை இல்லாதான் என்று கூறும் வள்ளுவர்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது என்று சுருக்கமாகக் கூறி விடுகிறார்.

ஓர் நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்!

***

ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை; 100 அறிஞர்கள் வேண்டுகோள்! (Post.5618)

WRITTEN BY S NAGARAJAN

Date: 3 November 2018

Time uploaded in London – 8-10 AM (GMT)

Post No. 5618

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை; நூறு அறிஞர்களின் வேண்டுகோள்!

ச.நாகராஜன்

1

  1. 2018, செப்டம்பர் 22ஆம் தேதியன்று புதுடில்லியில் ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்மீக தலைவர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், டாக்டர்கள், எஞ்ஜினியர்கள், பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட நூறு பேர் ஒன்று கூடி ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநியாயத்தை நீக்குவதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1)   நமது நாட்டில்  அனைவருக்கும் சமமாக ஹிந்துக்களையும் நடத்த வேண்டும். இதற்கென லோக்சபாவில் நிலுவையில் உள்ள பில் நம்பர் 226-2016 உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன்படி ஹிந்து கல்வி நிறுவனங்களை சுயேச்சையாக நடத்த அனுமதிக்க வேண்டும்.

2)   ஹிந்து ஆலயங்கள் சுயேச்சையாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

3)   ஹிந்து சம்பிரதாயங்கள், பண்பாடு ஆகியவை பேணிக் காக்கப்பட வேண்டும்.

4)

  1. வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பணம் நமது நாட்டிற்கு வருகிறது.இந்தப் பணம் தேசப் பிரிவினைக்காகவும், இங்கு சண்டையை மூட்டவும் சுயநலமிகளால் செலவழிக்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,
  2. ஹிந்து மதத்தின் பண்பாடு, சம்பிரதாயம், சடங்கு உள்ளிட்டவை அரசின் தலையீடின்றி நடத்தப்பட வேண்டும். இதற்கென மத்திய அரசுFreedom of Religion Actஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
  1. காஷ்மீரில் ஹிந்துக்கள் இனப்படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட ஆவன செய்ய வேண்டும்.
  2. 2017-18இல் 14 லட்சம் டன்கள் மாமிசம்- பசு மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் விலையேற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் இந்த ஏற்றுமதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  1. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.இவற்றை புனருத்தாரணம் செய்ய வேண்டும். வேத பாடசாலைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். நாட்டுப்புறக்கலைகள், சிற்பம், இலக்கியம் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். இவற்றில் ஈடுபட்டுள்ளோருக்கு வாழ்க்கையை உரிய விதத்தில் நடத்தத் தேவையான பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்க வேண்டும்.
  1. இதர நாடுகளிலிருந்து மத அடிப்படையில் துரத்தப்படும் ஹிந்துக்களுக்கு உரிய விதத்தில் அகதி மற்றும் இந்திய குடியுரிமை அளிக்கப்பட வேண்டும். இதற்காக இப்போதுள்ள சட்ட குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும்.
  2. அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டு சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். மொழிகளின் அடிப்படையில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் களையப்பட வேண்டும். 80 கோடி ஹிந்துக்களுக்கு சம உரிமை, நீதி ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

***

 

நியாயமான இந்தக் கோரிக்கைகளைச் சொல்லவே சற்று சங்கடமாக இருக்கிறது – 70 ஆண்டுகள் ஆகியும் ஹிந்துக்களின் சொந்த மண்ணில் இவை இல்லை என்பதை எண்ணி இன்று வலியுறுத்த வேண்டிய நிலைமையில் இருக்கும் போது.

ஹிந்துக்களுக்கு இல்லாத உரிமைகள், விசேஷ சலுகைகள், விசேஷ சட்டங்கள் மைனாரிட்டிகளான முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு உள்ளன. ஆனால் ஹிந்துக்களுக்கோ …

ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

இணைவோம்; வெல்வோம்!

நன்றி  : 5-10-2018  Truth  தொகுதி 86~ இதழ் 25

2

அறிஞர்களின் கூட்டம் பற்றிய முழு விவரங்களை ஆங்கில மூலத்தில் கீழே படிக்கலாம் :

 

IndiaFacts Staff @indiafactsorg writes under the caption– “Concerned Hindus demand– end of institutionalized discrimination against Hindus” on 24-09-2018 as follows:

[Editor’s Note: A group of Hindu thinkers and activists met in Delhi on 22nd of September, 2018 to discuss about issues affecting Hindu society. After deliberations they have released a charter of demands which they expect the central government to fulfil. Here is a copy of their press release.]

A group of around one hundred Hindus, including spiritual leaders, academics, authors, doctors, engineers, journalists, public intellectuals and concerned citizens from all walks of life, across the country, deeply disturbed by the systemic and institutionalized discrimination against the Hindu society, gathered in New Delhi on 22nd of September, 2018 to deliberate on various constitutional, legal and public policy issues affecting the Hindu society.

During the deliberations, it was acknowledged that as the inheritor, custodian and trustee of the Indic civilization based on the ethos of Sanatana Dharma the Indian State has bounden civilizational responsibility to protect, preserve and promote the Indic civilization.

A Charter of key Hindu Demands Rights (Discrimination & Appeasement) was debated and drafted, to be presented to the Government of India and the public.

The Charter demands:

  1. End of legal and institutionalised discrimination against Hindus by the Indian State, which is against the spirit of the equality of citizens irrespective of religious identity.

To this effect, the group demands that Dr Satyapal Singh’s Private Member’s Bill No. 226 of 2016 pending in Lok Sabha for amending Articles 26 to 30 of the Constitution should be passed forthwith in the forthcoming Parliament Session, to ensure equal rights to Hindus on par with others in the matters of :

  1. Running educational institutions without undue interference of State;
  2. Removal of Govt control of Hindu temples and places of worship by restoring their management to Hindu society;
  3. Preserving and promoting Hindu heritage and culture; The group recalled that late Syed Shahabuddin, having understood the problem of the Constitutionally imposed disabilities on majority Hindus, had introduced a Private Member’s Bill No. 36 of 1995 in Lok Sabha to widen the scope of Article 30 of the Constitution by suitable amendment to include all communities and sections of citizens bysubstituting the word ‘minorities’ with “all sections of citizens” therein.
  1. A large amount of money comes to Indian entities from abroad, a lot of which is from institutions with ties to foreign governments and their agencies. This money often drives the vested interests of these agencies in India and often ends up subverting Indian society and fuelling conflict and separatism. The following official data indicates that irrespective of political colour of the Central Govt. and despite best efforts of the present Central Govt. to tighten and enforce the law, the quantum of foreign contributions continues to rise leading to ever increasing undue foreign interference in our internal affairs. We rightly refuse foreign aid even in natural disasters not only on grounds of national pride but also because we are capable of generating enough money internally. As there is no free lunch and India is not a beggar Nation, the group urges the Central Government to completely ban all sorts of foreign contributions except those by OCIs in their personal capacity (in recognition of their emotional connect with India) by repealing the existing FCRA and enacting a new Foreign Contributions (Prohibition) Act immediately.
  1. In order to protect and preserve the Hindu native cultural and religious traditions, practices and symbols from unwarranted interference not only by the State and its agencies but also from others, the group urges enactment of Freedom of Religion Act by the Central Government immediately.
  2. In order to prevent repeat of genocide and religious persecution as suffered by the Kashmiri Hindus, the group demands immediate;
  3. Tripartite division of J&K into 3 States of Kashmir, Ladakh and Jammu; b. Abrogation of Article 370 which is the problem of Kashmir, along with repeal of the Constitution (Application to J&K) Order, 1954 issued there under, so that the changes made to the Constitution with respect to J&K, such as the discriminatory Article 35A, also get repealed.
  1. With about 14 lakh tons of meat/beef exported during 2017-18, India has achieved the shameful distinction of the largest meat/beef exporter in the world, quite contrary to Article 48 of the Constitution. This has not only skyrocketed the prices of meat/beef but has also led to growth of meat/beef mafia. The group urges immediate complete ban on export of all types of meat/beef to lower its prices by increasing its availability in domestic market while reducing the adverse impact on the environment and eliminating social friction and law & order issues.
  1. Thousands of temples and sacred places of Hindus are in desecrated, destroyed or ruinous condition. Further, Veda Pathasalas, traditional and folk art forms, literature, dance, music, painting, sculpture, architecture etc which are our intangible heritage and the vehicles for sustenance and transmission of Sanatana Dharma and our age old culture, are all dying for want of patronage and regular livelihood for their practitioners. Therefore, the group while reminding the Indian State of its civilisational responsibility, urges the Central Govt. to immediately establish a Central Public Sector Undertaking to be styled as Haindava Samskruti Jeernoddhaarana Nigam (Hindu Culture Restoration Corporation) with an initial seed capital of not less than Rs. 10,000 crores and an annual grant of similar amount for undertaking reconstruction and restoration of all damaged, desecrated, abandoned and dilapidated Hindu temples and sacred places; revival, nurturing, patronising and promotion of Veda Pathasalas, various traditional and folk art forms, dance, music, sculpture, architecture, painting etc.
  1. Expediency in granting refuge and citizenship to peoples of Indic faiths fleeing religious persecution from any country. The Central Govt. introduced in Lok Sabha a Bill in 2016 to amend the Citizenship Act, which having been referred to a Select Committee, is pending. The Bill in its current form suffers certain difficulties including its doubtful constitutional validity. There are also some genuine concerns expressed by certain people of North Eastern States which needs to be addressed. The group therefore urges the Central Govt for immediate:
  1. Withdrawal of the pending Citizenship (Amendment) Bill,
  2. Amendment of the Constitution by inserting an enabling Article 11-A in the Constitution;
  3. Thereafter amend the Citizenship Act, 1955 by introducing a new Citizenship (Amendment) Bill, 2018 in the forthcoming session of the current Parliament itself.
  1. The creation of an equal opportunity environment for all Indian languages, ending the institutionalized discrimination that exists today. This will fuel both an economic and cultural renaissance, since a large part of India’s population is currently excluded from development and justice due to linguistic discrimination by the State. The Charter as drafted by prominent citizens of India, will include specific demands and policy suggestions to assist the Government and the legislature in ensuring the rights of 800 million Hindus on par with other sections are upheld, as the principles of equality, justice and liberty are essential for the health and vitality of our cherished democracy and for enabling growth of a truly secular and religion-neutral legal, governance and public policy regime and polity as envisaged by Dr. Ambedkar and other founding fathers of our Constitution. (India Facts– Truth be told).

Dr. Eeshankur Saikia For and on behalf of the Group.

Courtesy :  5-10-2018 dated Truth – Volume 86~Issue 25

***

 

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?! (Post No.5607)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 31 October 2018

Time uploaded in London – 7-13 AM (British Summer Time)

Post No. 5607

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

குருவுக்கா, கோவிந்தனுக்கா, யாருக்கு முதல் நமஸ்காரம்?!

ச.நாகராஜன்

1

கபீர்தாஸருக்கு ஒரு குழப்பம் வந்து விட்டது.

திடீரென்று அவர் முன்னர் குருவும் கோவிந்தனும் ஒரே சமயத்தில் வந்து தோன்றி விட்டனர்.

இப்போது இந்த இருவரில் யாரை முதலில் நமஸ்கரிப்பது?

குருவையா?

அல்லது கோவிந்தனையா?

ஒரு நிமிடம் யோசித்த கபீர்தாஸர் கோவிந்தனை விடுத்து முதலில் குருவை நமஸ்கரித்தார்.

அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார் இப்படி:

“குரு கோவிந்த் தோனோ கடே காகே லாகௌ பாய் |

பலிஹாரி குரு ஆப்னே கோவிந்த் தியோ பஹாய் ||”

இந்த தோஹாவின் பொருள் :

குரு கோவிந்தர் இருவரும் என் வாசலில் வந்து நின்றால் யாரை வணங்குவது?

முதலில் குருவைத் தான் வணங்க வேண்டும். ஏனெனில் அவரில்லாமல் கோவிந்தரை எப்படி என்னால் அறிய முடியும்?

கோவிந்தனைக் காட்டி அருளிய குருவுக்கே எனது முதல் நமஸ்காரம் என்பது கபீரின் முடிவு.

Guru Govind dono khade kake lagu paay

Balihari Guru aapki Govind diyo batay.

Kabir wrote this verse to sing the glory of Guru, without whose help, one cannot cross this ocean of worldly life. He asks, “If both, Guru and God in form of Govind were to appear at the door, whose feet will I worship first?” He answers, “It has to be the Guru’s feet first, because without him, how would I have recognized (known) God?”

2

 

எம்பார் ஒரு சமயம் ஓரிடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ஏராளமான கூட்டம்.

யார் முதலில் ஆன்ம குருவாக இருக்கிறார் என்பதைப் பற்றி பிரசங்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

கூட்டத்தில் ஒருவர், “சாஸ்திரங்களை குருவே உபதேசித்து அருள்கிறார். ஆகவே அவரே முக்கியம்” என்றார்.

இன்னொருவரோ, “ பெரிய மகான் தான் நம்மை ஆன்ம குருவைக் காண்பிக்கிறார்” என்றார்.

எம்பார் அவர்களை நிறுத்தினார்: “அது அப்படியில்லை” என்று கூறிய அவர் தொடர்ந்து சொன்னார்: “நம் உள்ளத்தில் உறைகிறானே, பரமன், நம் கண்ணுக்குத் தெரியாத அவன் தான் நல்ல விஷயங்களைத் தடை செய்து தடுத்து விடாமல் கண்ணுக்குத் தெரியும்படி நேரடியாக வந்து அருளும் குருமார்களையும், சேவைக்குத் தூண்டும் உதவியாளர்களையும் அவர்கள் சொல்வதை ஏற்றுச் செயல்படும்படி அருள்கிறான்.” என்றார்.

ஆக உள்ளத்தில் உறைந்து அனைத்து நல்ல காரியங்களையும் தூண்டி அருளும் நாராயணனை எப்போதும் தியானிக்க வேண்டும் என்பது அவரது அருளுரையாயிற்று.

இறைவன் தானே எப்போதும் நேரில் வருவதில்லை.

பெரியவர்கள், மகான்கள், குரு இப்படி பல ரூபத்தில் தக்க சமயத்தில் வந்து உதவுபவனே இறைவன்.

ஆதாரம் பகவத் விஷயம்

God-the Guru in the heart.

In the lecture-assembly of Embar, the subject of who is the first Spiritual Preceptor for the soul came to be discussed.

” The Guru imparts to us the Scriptures,” some said. Others opined : ” The first is that godly man who helps to take us to the spiritual Preceptor for acceptance.”

” Not so,” said Embar, ” the First Preceptor is that Universal Lord who is seated in our hearts, and who unseen, gives us the impulse not to resist, but to yield to the proposals for good services offered by the visible Preceptors or Helpers.”

[Bhagavat Vishayam : Bk. II. p. 720-1. “Ottar” 11-3-2]

****

தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)

தவம் பற்றிய முப்பது பொன் மொழிகள் (Post No.5606)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 30 October 2018

GMT Time uploaded in London – 20-27

Post No. 5606

நவம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

இந்த மாத காலண்டரில் தவம் பற்றிய முப்பது பொன்மொழிகள் இடம் பெறுகின்றன.

பண்டிகை தினங்கள்–

தீபாவளி- நவம்பர் 6 (தமிழ்நாடு), 7 (வட இந்தியா); 8 கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்; 13-கந்த சஷ்டி  சூரசம்ஹரம்; 14-குழந்தைகள் தினம்; 23- திருக் கார்த்திகை

அமாவாஸை- 7; பௌர்ணமி-22; ஏகாதஸி விரதம்-3, 19

முஹூர்த்த தினங்கள்-4,5,9,11,14,28

நவம்பர் 1 வியாழக்கிழமை

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு-261

தவம் என்பது தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருத்தல் ஆகும்

நவம்பர் 2 வெள்ளிக் கிழமை

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது-262

மன வலிமை உடையார்க்கே தவம்; பிறர் முயற்சிப்பது வீண்

நவம்பர் 3 சனிக் கிழமை

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்-263

 
உணவு,உறைவிடம்,உடை ஆகியவற்றை சந்யாசிகளுக்குக் கொடுப்பதற்குத்தான் பல இல்லறத்தார்கள் சந்யாஸி ஆகவில்லை!

நவம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

 
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்- குறள் 264

பகைவரை அழித்தல், நண்பர்களைக் காத்தல்- இரண்டும் தவத்தால் எளிதில் முடியும்

நவம்பர் 5 திங்கட் கிழமை

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப்படும் – குறள் 265

தவம் செய்தால் விரும்பியன கிடைக்கும்; உடனே தவம் செய்க.

நவம்பர் 6 செவ்வாய்க் கிழமை

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு—266

பற்று இல்லாதவர் செய்வது தவம்; ஏனையோர் செய்வது வீண் முயற்சி

நவம்பர் 7 புதன் கிழமை

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு—267

புடம் இடும் தங்கம் மேலும் மேலும் ஒளிவீசும்; தவம் செய்யச் செய்ய தேஜஸ் பிறக்கும்

 
நவம்பர் 8 வியாழக்கிழமை
 
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்-268

268
நான் என்ற செருக்கு அழிந்தால் எல்லோரும் அவனைத் தொழுவர்

நவம்பர் 9 வெள்ளிக் கிழமை

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு—269

தவ வலிமையால் எமனையும் /மரணத்தையும் வெல்ல முடியும்

நவம்பர் 10 சனிக் கிழமை

269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்—270

 

பணமில்லாதவர் உலகில் அதிகம்; பணம் படைத்தவர் குறைவு; ஏன்?  தவம் செய்யாதவர் அதிகம்.தவம் செய்தவர் குறைவு.அதனாலதான்!

நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

     வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்-271
 
    பொய்யான ஒழுக்கம் உடையவனைக் கண்டு (போலி சாமியார்)

அவனுள் இருக்கும் பஞ்ச பூதங்களும் சிரிக்கும்

 

நவம்பர் 12 திங்கட் கிழமை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று–274

மன வலிமை இல்லாதவன் தவம் செய்வது புதருக்குப் பின்னே

 
   நின்று பறவைகளை வேட்டையாடுவதைப் போன்றதே

நவம்பர் 13 செவ்வாய்க் கிழமை

தவ சீலர்களிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்-      காளிதாஸனின் சாகுந்தல நாடகம்

நவம்பர் 14 புதன் கிழமை

முனிவர்களின் சாபத்தை யாராலும் மாற்ற முடியாது

-பாஷா எழுதிய ப்ரதிமா நாடகம்

நவம்பர் 15 வியாழக்கிழமை

தவம் மூலம் சக்தி பெறலாம்- பாரத மஞ்சரி

   நவம்பர் 16 வெள்ளிக் கிழமை

தவம் மூலம் கிடைக்கும் ஆனந்தமே நல்லது; ஏனையவை        நிலையற்றவை- வால்மீகி ராமாயணம் 7-84-9

நவம்பர் 17 சனிக் கிழமை

பாதுகாப்பு இல்லாததால் முனிவர்கள் தங்கள் தபோ சக்தியைப்      பயன்படுத்தி சாபம் என்னும் ஆயுதங்களைப் பயன் படுத்துகிறார்கள்;      அவர்களுடைய ஆன்மீக சக்தியை விரயம் செய்கிறார்கள் –  ரகுவம்ஸம் 15-3

நவம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

முனிவர்களின் சொற்கள் வீணாவதில்லை- நைஷதீய சரித்ர

நவம்பர் 19 திங்கட் கிழமை

தவத்துக்கு இடையூறுகளும் தடைகளும் அதிகம்-  வால்மீகி   ராமாயணம் 3-10-14

நவம்பர் 20 செவ்வாய்க் கிழமை

தபோவனங்களுக்குள் செல்கையில் எளிமையான ஆடைகளை     அணிந்து செல்லுங்கள்– சாகுந்தலம்

  நவம்பர் 21 புதன் கிழமை

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின்–272

தெரிந்தும் தவறு செய்பவனுக்கு தவக் கோலம் ஒருபயனும் தராது

நவம்பர் 22 வியாழக்கிழமை

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று- 273

 
   போலி சாமியார்களின் வேஷம், ஒரு பசு, புலித்தோலைப்    போர்த்திக்கொண்டு மேய்வதற்குச் சமம்

நவம்பர் 23 வெள்ளிக் கிழமை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்- 279

அம்பு நேராக இருக்கும்; யாழ் கோணலாக இருக்கும்;ஆனால் அம்பு    கொடிய செயல் செய்யும்; யாழ் இனிமை தரும்; தோற்றத்தைக்   கண்டு மயங்காமல் (சாமியார்களை) செயலால் எடை போடு

   நவம்பர் 24 சனிக் கிழமை

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்-280

தவசீலர்களுக்கு மொட்டையும் தேவை இல்லை; நீண்ட    முடியும் தேவை இல்லை; உலகத்தார் தவிர்த்து ஒதுக்கிய தீய    ஒழுக்கங்களைக் கைவிட்டால் போதும்.

நவம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :

காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :

பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:

ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”

—பஜகோவிந்தம் பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான்.    மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன்    ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி    உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.

280

நவம்பர் 26 திங்கட் கிழமை

சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு- தமிழ்ப் பழமொழி

நவம்பர் 27 செவ்வாய்க் கிழமை

ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்- வெற்றிவேற்கை

நவம்பர் 28 புதன் கிழமை

தவசே அணிகலன், தாழ்மையே மேன்மை-  தமிழ்ப் பழமொழி

நவம்பர் 29 வியாழக்கிழமை

தவத்துக்கொருவர்,  கல்விக்கிருவர்–  தமிழ்ப் பழமொழி

நவம்பர் 30 வெள்ளிக் கிழமை

தவத்திலிருந்தால் தலைவனைக் காணலாம்–

தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்– தமிழ்ப் பழமொழி

 

–subaham-