காஷ்மீரில் முகமது நபியின் முடி தரிசனம் (Post No.5258)

Mohammed’s hair in Moscow

 

Written by London swaminathan

Date: 26 JULY 2018

 

Time uploaded in London – 7-07 am  (British Summer Time)

 

Post No. 5258

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காஷ்மீரில் இந்துக்கள் கும்பிடும் அதிசயம் அமர்நாத் குகையில் உள்ள ஐஸ் லிங்கம். ஒரு குகையின் மேல்பகுதி ஓட்டை வழியாக தண்ணீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டி பிரமாண்டமான பனிக்கட்டி (ஐஸ் ICE) லிங்கத்தை உருவாக்குகிறது. பின்னர் ஐஸ் லிங்கம் கரைந்து விடும்.

 

இது போல முஸ்லீம்களுக்கும் ஒரு அதிசய வழிபடு பொருள் காஷ்மீரில் உளது. அது இஸ்லாம் மத ஸ்தாபகரான முகமது நபியின் முடி.

 

காஷ்மீரில் முகமது நபியின் முடி பாது காத்து வைக்கப்பட்டுள்ளது. முகமது நபியின் தலை மயிர் எப்படி காஷ்மீருக்கு வந்தது என்பதே சுவையான கதை. அதை வைத்து முஸ்லீம்கள் செய்த கலாட்டா, அதைவிட பெரிய கதை. ஆண்டுதோறும் இந்த முடியை தரிசிக்க ஏராளமானோர் கூடுகின்றனர்.

 

காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் (DAL lAKE) ஏரிக்கரையில் ஹஸரத்பால் மசூதி (HAZERATBAL SHRINE) உளது. இங்குதான் மகமது நபியின் தலை முடி பாதுகாத்து வைக்கப்பட்டுளது. 1963 ஆண்டில் இது காணாமற்போனவுடன் பல்லாயிரம் முஸ்லீம்கள் தெருக்களுக்கு வந்து கிளர்ச்சி செய்தனர். அவர்களை சமாதானப்படுத்த முஸ்லீம் மக்களுக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றினார்.

 

1963ல் காணாமற் போன முடி 1964ல் கிடைத்தது. முடியைத் தற்காலிகமாகக் களவாடியது தீவிரவாதிகள்!

சையது அப்துல்லா என்பவர் முகமது நபியின் உறவினர் வழி வந்தவர் என்றும் அவர் இந்த முடியை பீஜப்புருக்குக் கொண்டு வந்தததாகவும் அவர் இறந்தவுடன் அவருடைய மகன் அதை காஷ்மீர் வணிகர் க்வாஜா முகைதீனுக்கு விற்றதகவும் கதை. முடியை அவர் கொண்டுவந்ததது 1635ல்.

 

அக்காலத்தில் ஆட்சி புரிந்த அவுரங்கசீப், முதலில் க்வாஜா முகைதீனை சிறையில் அடைத்துவிட்டு பின்னர் அவரை விடுதலை செய்தார்.

முதலில் அவுரங்கசீப், அந்த முடியைக் கைப்பற்றி ஆஜ்மீருக்கு அனுப்பினார். பின்னர் தன் தவற்றை உணர்ந்து காஷ்மீருக்கு முடியை எடுத்து செல்லவும் அனுமதித்தார்.

 

இப்பொழுது அவரது வழிவந்தோர் அந்த  முடிக்குப் பொறுப்பாக உளர்.

 

மயிர் பற்றிய வேறு ஒரு கதை

இரண்டு கனவுகளும் முகமது முடியும்!

 

இமயமலை அதிசயங்கள் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் கூடுதல் விஷயங்கள் உள்ளன.

சையது அப்துல்லா இதை மெடினாவிலிருந்து பீஜப்பூருக்குக் கொண்டு வந்தார். அவர் 23 ஆண்டுகளுக்குப்  பின்னர் இறந்தார். முகமது முடி, அவரது மகன் சையது ஹமீது கைக்கு வந்தது. அந்த நேரத்தில் 1693-94ல் அவுரங்க சீப் பீஜப்பூரைக் கைப்பற்றினார். முகமது முடியும் டில்லிக்குச் சென்றது;  அதை வாதாடிப் பெற ஹமீது டில்லிக்கு வந்தார்; பெரும் பொருட் செலவினால் கடனில் விழுந்தார். நூருதீன் அஸ்வாரி என்ற வர்த்தகர் அதை விலைக்கு வாங்க முன் வந்தும் அதைக்கொடுக்க ஹமீது தயங்கினார். முகமது அவர் கனவில் தோன்றி அதை விற்கலாம் என்று சொன்னவுடன் அந்த முடி விற்கப்பட்டது.

 

அந்த வியாபாரி அதை ஸ்ரீநகருக்குக் கொண்டு போகும்போது அதை அவுரங்க சீப் கைப்பற்றி சோதனைக்கு        உள்ளாக்கினார். உண்மையிலேயே முகமது முடிதான் என்று தெரிந்தவுடன் அஸ்வாரியிடம் அதைக் கேட்டார். அவர் கொடுக்க மறுத்தவுடன் அடாவடித்தனமாகப் பறித்தார். அந்த  அதிர்ச்சியில் வணிகர் அஸ்வாரி இறந்தார். அப்பொழுது அவுரங்கசீப் கனவில் முகமது தோன்றி அதை ஸ்ரீநகருக்கு அனுப்பும் படி சொன்னார். உடனே அஸ்வாரியின் சடலத்துடன் அந்த முடியையும் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைத்தார். இது முகமது தோன்றிய இரண்டு கனவுகள் பாற்றிய தகவல்; ஆங்கிலப் புத்தகத்தில் உள்ளது

 

Dubai Museum from You Tube

உலகம் முழுதும் முகமது முடி!

 

மாஸ்கோவிலும் முகமது நபியின் முடி ஒரு மசூதியில் காட்சிக்கு வைக்கப்படுள்ளது. மாஸ்கோவில் கதீட்றல் மாஸ்க் என்ற மிகப்பெரிய மசூதி கட்டப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் முகத்தான் முஸ்லீம்கள் நிறைந்த செஷ்னியா குடியரசின் தலைவர் ரமஜான் கடிரோவ் 2015ல் இதை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

 

முகமது நபியின் தாடி முடி, அவர் பயன்படுத்திய கலயங்கள் முதலியனவும் துபாய், அபுதாபி முதலிய இடங்களில் மியூஸியங்களில் உள்ளன. இவைகளை முஸ்லீம்கள் மிக பயபக்தியுடன் பார்க்க வருகின்றனர்.

 

பொதுவாக முஸ்லீகளுக்கு மெக்கா தவிர வேறு எங்குமே உருவ வழிபாடு கிடையாது. ஆனாலும் அவர்களும் கூட குரான் நூல், தகட்டில் எழுதிய எண் 786, பிறைச் சந்திரன், முகமது நபியின் முடி இவைகளை வழிபடு பொருளாகப் போற்றுகின்றனர். அவைகளுக்கு அவமதிப்பு நிகழ்ந்தால் கிளர்ச்சி செய்வார்கள்.

 

‘முகமது சந்திர பிம்பமே’ என்று பெண்களின் முகத்தைப் பாராட்டி (சந்திரன் போன்றது) என்று ஒரு பாடல் வந்தது. அந்தத்  தமிழ்த் திரைப்படப் பாடலைக் கூட எதிர்த்து கிளர்ச்சி செய்தனர்!

 

–சுபம்–

 

 

ராமனின் அதிசயப் பயணம்-2 (Post.5255)

Written by London swaminathan

Date: 25 JULY 2018

 

Time uploaded in London – 7-24 am  (British Summer Time)

 

Post No. 5255

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராம பிரான் 14 ஆண்டுகள் அயோத்திக்கு வெளியே இருந்தார். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து கால் நடையாக இலங்கை வரை வந்தார். புராண கால மனிதர்களில் அதிக தூரம் நடந்து, சாதனைப் புஸ்தகத்தில் முதலிடம் பெற்றார். அவரைப் போல கால் நடையாக நடந்த மனிதர் எவரையும் நாம் அறியோம் . சுமார் 5113 நாட்கள் நாட்டை வலம் வந்தார். அவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதிசங்கரர் இப்படிப் பலமுறை வலம் வந்தார்

 

இதோ ராமனின் பயணம் தொடர்கிறது: (முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிப்பது சாலச் சிறந்தது)

 

20.ஸீதா பஹரி- ரிஷியான் ஜங்கல்

ஸீதையும் ராமரும் இங்கே ஓய்வு எடுத்தனர்

 

21.ஹனுமன் மந்திர் (முர்கா)

ராமருக்குத் துணையாக அனுப்பப்பட்ட

பரத்வாஜ ரிஷியின் மாணவர்கள் விடை பெற்றுச் சென்றனர்.

 

22.குமார் த்வய (ராம நகர்)

ராமரும் லக்ஷ்மணனும் குளித்துவிட்டு சிவனை வழிபட்ட இடம்

 

23.வால்மீகி ஆஸ்ரமம்- லாலாபூர்

மகரிஷி வால்மீகியுடன் சந்திப்பு

 

24.காமத் கிரி – சித்ர கூடம்- மந்தாகினி நதி

ராமபிரான் இங்கே நீண்ட காலம் தங்கினார்.

 

25.மாண்டவ்ய ஆஸ்ரமம்

பரதன் புகழ் பாடும் இடம்

 

26.பரத் கூப் – பரத்பூர்

அத்ரி மஹரிஷியின் உத்தரவின் பேரில், அண்ணனின் பட்டாபிஷேகத்துக்காக தம்பி பரதன், எல்லாப் புனித நீர் நிலைகளிலிருந்தும் ஜலத்தை எடுத்து இங்குள்ள கூவத்தில் ( கிணறு) சேமித்து வைத்தான்.

 

27.ஸ்படிக சிலா- சித்திரகூடம்

இந்திரனின் மகனான ஜயந்த், காகத்தின் வடிவத்தில்

ஸீதையைத் தாக்கினான்

 

28.குப்த கோதாவரி -சித்திரகூடம்

ஸீதையின் துணிமணிகளைத் திருடிய மாயாங்கனை, லக்ஷ்மணன் தண்டித்தான்

 

29.ததி காட்

மந்தாகினி நதி வட்ட வடிவில் ஓடும் அழகிய இடம் (ராமன், ஒரு இயற்கை அன்பன்; அவன் ரஸித்த இயற்கைக் காட்சிகளை வால்மீகியும் ரஸித்து எழுதி இருக்கிறார்)

 

30.அத்ரி – அனுசுயா ஆஸ்ரமம்

அத்ரி முனிவரையும் அனுசுயையையும் ராமன் சந்தித்த இடம்

 

31.ஆம்ரவதி

விராடன் என்ற அசுரன் ராம லக்ஷ்மணர்களைத் தாக்கினான்

 

  1. விராட்குண்டம் – ஜமுனிஹை

 

ராம லக்ஷ்மணர்கள், இங்கே விராடனைக் கொன்று புதைத்தனர்.

 

33.புஷ்கரணி — டிகாரியா

விராடனைக் கொன்ற ரத்தக் கறை படிந்த

ஆயுதங்களையும் துணிமணிகளையும்  கழுவிய புஷ்கரணி

34.மார்கண்டேய ஆஸ்ரமம்- மார்க்கண்டி

சிவனை வழிபட்ட இடம்

 

சதானா மாவட்டத்தில்  நுழைகின்றனர்

 

35.சித்த பஹார்-  சதேஹ சாதனா

ரிஷி முனிவர்களின் எலும்புக் குவியல்களில் இருந்து உருவான மேட்டுப் பகுதிகள்

 

(எனது கருத்து– இது போன்ற இடங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்தால் ராமாயண கால, அதற்கு முந்திய கால முனிவர்களின் காலத்தை துல்லியமாக மதிப்பிடலாம்)

 

36.சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமர், சுதீக்ஷண முனிவரைச் சந்தித்த இடம்

 

37.சரபங்க ஆஸ்ரமம்- சர்பங்கா

சர பங்க முனிவர் ராம, லக்ஷ்மணர்களைச் சந்தித்தபின்னர், வாழ்க்கையின் பயன் நிறைவேறியது என்று கூறி யோக அக்னியில் புகுந்து ஜோதிமயமான இடம்

 

38.ஸீதா ரஸோய்

 

இங்கு ஸீதை அறு சுவை உணவு சமைத்த பின்னர், வனவாஸி சஹோதரர்களை ராமன் சந்தித்து நலம் விசாரித்தான்.

 

பன்னா மாவட்டத்தில் நுழைகின்றனர் (மத்தியப் பிரதேச மாநிலம்)

 

  1. தேவ பஹர் (அஜய் கர்)

ராமனுக்காக சிவன் கோவிலும். வசதியான குகைகளும் எழுப்பப்பட்ட இடம் ( ஏற்கனவே இருந்த குகைகளைச் சுத்தம் செய்து, காற்றோட்டம் உண்டாக்கி, இலை தழை மெத்தைப் படுக்கை உண்டாக்கினர் என்பதே பொருத்தம்- எனது கருத்து)

 

40.வ்ரிஹஸ்பதி- பஹரி கேரா

தேவ குரு பிருஹஸ்பதி உருவாக்கிய இந்த ஆஸ்ரமத்தில் ராமன், பல ரிஷிகளைச் சந்திக்கிறான். ரிஷிகள் மஹா நாடு என்றும் சொல்லலாம்!

 

126 மைல் கற்களில் 40 மைல் கற்களைக் கண்டோம். இன்னும் 86 மைல் கற்களையும் காண்போம்

–தொடரும்

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி! – 2 (Post No.5238)

Written by S NAGARAJAN

 

Date: 20 JULY 2018

 

Time uploaded in London –   7-09  AM (British Summer Time)

 

Post No. 5238

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி! – 2

 

.நாகராஜன்

 

1

ஒரே கால கட்டத்தில் வாழ்ந்த இரு பரமாசார்யர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள். இருவரது ஜீவிதமும் உணர்த்தும் பாடங்கள் உன்னதமானவை; சுவாரசியமானவை.

காஞ்சிபீடத்தை அலங்கரித்தவர்  ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்.

சிருங்கேரி பீடத்தை அலங்கரித்தவர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி!

கீதையைப் பற்றிய சுவாரசியமான ஒரு சம்பவத்தை இங்கு பார்ப்போம்.

2

காஞ்சி பெரியவாளிடம் காசியிலிருந்து ஒரு பண்டிதர் தரிசனத்திற்காக வந்தார். அவர் ஏராளமான விருதுகளைப் பெற்றவர். மஹா பெரியவாளை சந்தேகம் கேட்டு திணற அடிக்க வேண்டும் என்பது அவர் மனதிற்குள் போட்ட திட்டம்.

மெதுவாக பெரியவாளிடம் ஆரம்பித்தார்: “எனக்கு பகவத் கீதையில் ஒரு சந்தேகம்..” என்று வார்த்தையை முடிக்காமல் இழுத்தார்.

அதாவது அதை பெரியவாள் தீர்த்து வைக்க முடியுமோ முடியாதோ என்ற ஐயம் தொனிக்கும் வகையில் இருந்தது அவர் தொனி.

பெரியவாளுக்கா தெரியாது ஒருவர் மனதில் ஓடும் எண்ணங்கள்.

பெரியவாள் அவரை அருகில் அமரச் சொன்னார்.

அருகில் இருந்த அனைத்துத் தொண்டர்களையும் பார்த்து உத்தரவிட்டார் : “எல்லோரும் இவரை மூணு பிரதக்ஷிணம் பண்ணுங்கோ”

பண்டிதருக்கு எதிர்பாராத இந்த மரியாதை திகைப்பைத் தந்தது. பயந்து போனார் அவர்.

“பெரியவா..” என்று வார்த்தைகள் வராமல் குழம்பிப் போனார் அவர்.

பெரியவாள் தொடர்ந்தார்: “பகவத் கீதையில் பதத்துக்குப் பதம் எனக்கு ஆயிரம் சந்தேகங்கள். ஆனால், அடடா, உங்களுக்கோ ஒரே ஒரு சந்தேகம் தான்! என்ன ஒரு பாண்டித்யம்! அதனால் தான் அனைவரையும் உங்களை பிரதக்ஷிணம் பண்ணச் சொன்னேன்.”

பண்டிதரின் கர்வம் பொடிப்பொடியானது. நெகிழ்ந்து போனார் அவர்.

அட,எப்படிப்பட்ட ஒரு மஹான் எதிரில் இருக்கிறார்.

“உன் சந்தேகத்தைக் கேள், சொல்கிறேன்”

பவ்யமாக தனது சந்தேகத்தை பண்டிதர் கேட்க அருமையான விளக்கத்தை அளித்தார் பரமாசார்யாள். சொக்கிப் போன பண்டிதர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

அனைவரும் மகிழ்ந்தனர். அவருக்கு உரிய சன்மானத்தையும் தந்து கௌரவித்தார் பரமாசார்யாள்.

 

3

கீதையில் பாண்டித்யம் பெற்ற ஒரு பிரபல பண்டிதர் அதனால் பெரும் புகழையும் நல்ல வருமானத்தையும் பெற்றார். ஏராளமானோர் அவரது உபந்யாசத்தைக் கேட்க வருவதால் ஏற்படும் இயல்பான கர்வம் அவருக்கு இருந்தது.

அவர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார்.

அவரை வரவேற்றார் ஸ்வாமிகள்.

ஸ்வாமிகள் : நீங்கள் கீதா உபந்யாசத்தை நல்ல முறையில் செய்து வருவதாக கேள்விப்படுகிறோம். அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

பண்டிதர் : ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்தால் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி வருகிறேன்.

ஸ்வாமிகள் : நீங்கள் 18வது அத்தியாயத்தில் உள்ள ஒரு ஸ்லோகத்திற்கு எந்த வித முக்கியத்துவத்தையும் தருவதில்லை என்பதையும் கேள்விப் படுகிறோம்.

பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆசார்யாள் எதைச் சுட்டிக் காட்டுகிறார்?

அவருக்கு உடனே தெரிந்து விட்டது அவர் எந்த ஸ்லோகத்தை மனதில் வைத்துக்கொண்டு இப்படிச் சொல்கிறார் என்று.

பதினெட்டாம அத்தியாயத்தில் 67வது ஸ்லோகம் மிக முக்கியமான ஸ்லோகம்.

இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசன |

சாஸுஸ்ருஷவே வாச்யம் மாம் யோப்யஸூயதி ||

இதன் பொருள் : இந்த உண்மையை தவமில்லாதவனுக்கும் பக்தியில்லாதவனுக்கும், கேட்க வேண்டுமென்ற ஆசையில்லாதவனுக்கும் ஒருபொழுதும் சொல்லாதே.தவிர என்னை வெறுப்பவனுக்கும் சொல்லாதே.

அர்ஜுனனிடம் கண்ணபிரான் இப்படித் தகுதியில்லாதவர்களுக்கு கீதையைக் கூறக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

பண்டிதரோ சகட்டுமேனிக்கு அனைவருக்கும் தராதரம் பார்க்காமல் சொல்லி வருவதோடு அதனால் சற்று கர்வமும் கொண்டிருக்கிறார்!

ஆசார்யாள் எண்ணியதை உணர்ந்து கொண்ட பண்டிதர் தலை கவிழ்ந்தார்.

நமஸ்கரித்தார். அவர் கர்வம் போயே போனது.

 

4

இன்னும் பல சுவையான சம்பவங்கள் இருவரின் மீது நாம் கொண்ட பக்தியை அதிகரிக்க வைக்கும் படி உள்ளன.

இந்த சம்பவங்களை அறிந்தால் அவர்களின் மஹிமையை நன்கு உணர முடியும். அடுத்து சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

***

ஆதாரம் : 1. பரமாசார்யாளுடனான பக்தரின் அனுபவங்கள் (மகாப் பெரியவாள் தரிசன அனுபவங்கள்)

  1. The Saint of Sringeri by Sri Jnanananda Bharati – formerly Sri R. Krishnaswami Ayyar of Tirunelveli)

 

 

சக்தியும் சிவனும் ஒன்று; சக்தியின்றேல் சிவன் இல்லை! (Post No.5235)

Written by S NAGARAJAN

 

Date: 19 JULY 2018

 

Time uploaded in London –   7-06  AM (British Summer Time)

 

Post No. 5235

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சக்தியும் சிவனும் ஒன்று; சக்தியின்றேல் சிவன்  இல்லை!

 

.நாகராஜன்

 

ஹிந்து மதம் விளக்கும் தத்துவங்களுள் மிக முக்கியமான தத்துவம் சிவனும் சக்தியும் ஒன்றே; சக்தியின்றேல் சிவன் இல்லை என்பது தான்பெண்மைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தலையாய சிறந்த மதம் ஹிந்து மதமே.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த தத்துவத்தை அறியாதவர்கள் (மேலை நாட்டோரும் நம் நாட்டு செகுலரிஸ்டுகளும்) ஏராளம்.

இந்த சக்திசிவன் தத்துவத்தை விளக்கும் தலம் திருச்செங்கோடு.

திருச்செங்கோடு பழைய கால கொங்கு மண்டலப் பிரிவில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. தற்காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.

 

இந்தத் தலத்தின் பெருமையை விளக்கும் பாடல் கொங்கு மண்டலச் சதகத்தில் 13வது பாடலாக அமைந்துள்ளது.

 

பாடல் வருமாறு:-

நெடுவா ரிதிபுடை சூழுல கத்தி னிமலியுமை

யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்

நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ

வடிவான துந்திருச்செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே

 

பாடலின் பொருள் : –  கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உமா தேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக ஒரு வடிவமாக திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே.

 

பாடல் விளக்கும் புராண வரலாறு மஹிமை வாய்ந்த ஒன்று.

கைலாயத்தில் சிவபெருமானை தரிசிக்க பிருங்கி முனிவர் வந்தார். பரம்சிவனைத் தவிர ஏனைய அனைத்துமே அழியும் தன்மையுள்ளன என்று அவர் நினைத்ததால் அவர் சிவ பெருமானை மட்டுமே வணங்குவார். ஆகவே அவர் உமையை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கிச் சென்றார். இன்னொரு நாள்  சிவபெருமானும் உமையும் ஒரே ஆசனத்தில் திருமேனி பிரிவு தோன்றாமல் இறுக அணைத்து அமர்ந்திருந்ததைக் கண்ணுற்றார். என்ன செய்வது என்று எண்ணிய பிருங்கி முனிவர் ஒரு வண்டின் வடிவத்தை எடுத்தார்.

 

கழுத்துச் சந்தின் வழியே சென்று சிவபெருமானை மட்டும் வலம் செய்தார். உமாதேவி சினந்து, ‘என்னை அவமதித்தாய்;ஆகவே  என் கூறு ஆன பொருளை நீக்கி விடு என்று கூறினார்.உடனே ஊன் முதலியன பிருங்கி முனிவரின் சரீரத்தை விட்டு நீங்கவே, அவர் மயங்கி விழுந்தார்.

 

கிரணம் இன்றி சூரியன் இல்லை; சூடின்றி நெருப்பில்லை; ஆதலின் சக்தி இன்றி சிவம் இல்லை; இந்த உண்மையை உணராது மயங்கி இருந்தாய் என்று அருளி பிருங்கியை சிவபிரான் எழுப்பினார்.

உண்மை உணர்ந்த பிருங்கி முனிவர் சிவபெருமானையும் பார்வதியையும் வணங்கி மகிழ்ந்தார்.

 

சிவம் வேறு; நாம் வேறாக இருப்பதால் அன்றோ இந்த முனிவன் நம்மை வணங்காமல் சென்றான் என்று எண்ணிய உமை, கேதாரம், காசி, காஞ்சி,திருவண்ணாமலை முதலிய தலங்களில் தவம் புரிந்து திருச்செங்கோட்டுத் தலத்தில் எழுந்தருளி கேதார விரதம் இயற்றினார். சிவ பரஞ்சுடரின் இடப்பாகத்தைப் பெற்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரராக விளங்கினார்.

 

திருச்செங்கோட்டு தலத்தின் இறைவன் பெயர் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்.

இறைவியின் பெயர் பாகம்பிரியாள்.

இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு இங்கு தனி சந்நிதி உண்டு. ஏராளமான சிறப்புகளைப் பெற்றது இந்தத் தலம் (விக்கி பீடியாவில் பட்டியலிடப்பட்ட இதன் சிறப்புகளைக் காணலாம்)

 

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களின் ஒன்றைக் கீழே காணலாம்:

வெந்தவெண் ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல              

பந்தணவும் விரவா ளொரு பாக மமர்ந்தருளிக்                   

கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர் ன்ற  

அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே

திருச்செங்கோட்டுப் புராணத்தில் வரும் ஒரு பாடல் இது:

 

பணிமலையி லெழுந்தருளிப் பரைக்கொருபா கங்கொடுத்த பரிசின் றோற்றம்

அணிமணித்தண் டூச்சியின்மூன் றங்குலியை வளைத்தமைத்த வனப்புக் கொப்பா

மணிவரைமா துமையிடத்து வைத்தணைத்து மகரகுழை வலத்தே நாலத்

தணிவிலொளி தயங்கியதண் டரளமணிந் தோடிரூபா லாகித்தானே.

தென்னாடுடைய சிவனே போற்றி |

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ||

***

 

 

 

அமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு (Post No.5233)

 

Srardha during Amavasya in Ganges, Kolkata

WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 15-23 (British Summer Time)

 

Post No. 5233

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 22

 

WRITTEN by London swaminathan

 

Date: 18 JULY 2018

 

Time uploaded in London – 14-39 (British Summer Time)

 

Post No. 5233

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மநு ஸ்ம்ருதியின் மூன்றாம் அத்யாயத்தைத் தொடர்ந்து காண்போம்.

 

இதிலுள்ள சுவையான விஷயங்கள்:

 

யார் யாரை அமாவாஸை சிரார்த்தத்துக்குச் சாப்பிடக் கூப்பிடக் கூடாது என்ற நீண்ட பட்டியலில் டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்கள், சோமலதை (ஆட்டாங்கொடி) விற்போர் உள்ளனர்

 

மநு காலத்தில் சோம லதை கொடி விற்போர் பற்றி அடிக்கடி வருவதால் இவரை வேத காலத்தை ஒட்டியவர் என்றே கருத வேண்டியுள்ளது.

 

 

பணக்காரனாக இருந்தாலும் ஐந்து பேருக்கு மேல் சிரார்த்தச் சாப்பாடு போடக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.

 

நண்பர்களை, சலுகைகளை உத்தேசித்து சாப்பிட அழைப்பது பாவம் என்றும் மநு சொல்கிறார்.

 

மநு ஏழு தலைமுறை பற்றிப் பேசுகிறார் (இது பற்றி நேற்று தனிக் கட்டுரை எழுதிவிட்டேன்)

மநு பயன்படுத்தும் உவமைகள் மிகவும் சுவையானவை

1.ரத்தத்தை ரத்தத்தால் கழுவ முடியாது

 

இது சேக்ஸ்பியரின் மாக்பெத் (MACBETH) நாடக வசனத்தை நினைவுபடுத்து; “கொலைகாரி மாக்பெத்தின் கைகளில் படிந்த ரத்தக் கறையை அரேபியாவில் உள்ள அத்தனை சென்ட்டும் கூட போக்க முடியாது” என்று மாக்பெத் வசனத்தில் வருகிறது.

2.இன்னொரு உவமை- குருட்டு மாடு

3.தண்ணீரில் போட்ட சுடப்படாத களிமண் கலம் (இது குறளிலும் கையாளப்படும் உவமை)

 

4.காய்ந்த புல் எரிவது போல

5.ஆறிய சாம்பலில் அவிஸைப் போடுவது போல

7.கொழுந்துவிட்டு எரியும் இரும்பு குண்டுகளை விழுங்குவது போல

 

8.களர் நிலத்தில் விதைப்பது போல

XXXXX

வேதம் படித்த ஒருவனுக்கு சாப்பாடு போடுவது ஒரு லட்சம் பேருக்குப் போடுவதை விட சிறந்தது என்கிறார் மநு.

 

பெண்களும் மாலைநேரத்தில் மந்திரம் இல்லாமல் வைஸ்வதேவ யக்ஞம் செய்ய வேண்டும் என்பார்.

 

அண்ணன் இருக்கும் போது தம்பி கல்யாணம் முடிப்பது தகாது என்கிறார்

 

குண்டன், கோளகன் என்னும் இருவகை பு த ல்வர்கள் பற்றியும் பேசுகிறார்

 

நான்கு வகை பிராஹ்மணர்கள் (3-144) பற்றியும் விளக்குகிறரர்.

விதியை மீறுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.

 

இதோ ஸ்லோகம் வாரியான மொழி பெயர்ப்பு:-

 

3-121 பகலில் தானும் மாலையில் மனைவி மந்திரம் இல்லாமலும் வைஸ்வதேவம் எனும் உஅணவு படைக்கும் சடங்கை இயற்றல் வேண்டும்

 

3-122 மாதம் தோறும் அமாவாசையன்று பிண்டம் மூலம் முன்னோர்களுக்கு பலி கொடுத்த பின்னர் சிரார்த்தம் செய்ய வேண்டும்

 

3-123 இதற்கு அன்வஹார்யம் என்று பெயர்; இதற்கான விசேஷ உண்வுடன் படைக்க வேண்டும்

 

3-124  என்ன உணவு, எத்தனை பேரை அழைப்பது, யாரை அழைக்கக்கூடாது என்று விள்ம்புவேன்.

3-125 விஸ்வேதேவர்க்கு இரண்டு பிராஹ்மணர்க ள்:, பிதுர்களுக்கு (இறந்து போன முன்னோர்) மூன்று பிராஹ்மணர்கள் வீதம் சாப்பாடு போட வேண்டும். இயலாவிட்டால் ஒவ்வொருவர் வீதம் போதும்; பணக்காரன் ஆனாலும் ஐந்து பேருக்கு மேல் கூடாது.

 

3-126 ஏன் தெரியுமா? 5 காரணங்கள் உள: நல்ல உபசாரம், தகுந்த நேரம், தகுந்த இடம் தேவை, சுத்தம் இருக்க வேண்டும், சாப்பிட வருவோர் இடையே நல்லிணக்கம் நிலவுதல் அவசியம்

 

3-127 இது மிகவும் பிரபலமானது. இதனால் பிதுரர்களுக்கு மறுமையில் பலனும் நமக்கு இம்மையில் சந்ததியும் செல்வமும் கிடைக்கும்.

 

3-128 வேதம் மனப்பாடமாகத் தெரிந்தவர்க்கே சாப்பாடு போடுக; இது நல்ல பலன் தரும்

3-129 வேதம் ஓதாத ஆளுக்கு அளிப்பதை விட வேதம் தெரிந்த ஒவ்வொருவருக்கு — இரு சடங்குகளிலும் — சாப்பாடு போட்டால் போதும்

 

3-130 இதற்காக முன்கூட்டியே பிராஹ்மணர்களைத் தேடி வைத்துக் கொள்; சொந்த கிராமத்தான் ஆனாலும் அவன் விருந்தினனே.

 

3-131 ஆயிரம் ஆயிரம் பேர சாப்பிட்டாலும் ரிக் வேதம் தெரிந்த ஒருவன் சாப்பிடுவதும் திருப்தி அடைவதும் நல்ல புண்ணியம் தரும்

 

3-132 அதிக ஞானம் உடையவனுக்கே முன்னோர்களுக்கான, தெய்வங்களுக்கான உணவை அளிக்க வேண்டும் ரத்தக் கறை படிந்தவன் கைகளை ரத்தம் கொண்டு கழுவ முடியாதல்லவா!

 

 

ஞானமில்லாதவனுக்குக் கொடுப்பது பலனற்றது; பாவகரமானது

 

3-133 வேதம் ஓதாதவன் எவ்வளவு கவளம் உண்கிறானோ அவ்வளவுக்கு இறந்து போன முன்னோர்கள் கொதிக்கும் இரும்புக் குண்டுகளையும், முள் நிறைந்த கம்பிகளையும்      ஈட்டிகளையும் உண்ண நேரிடும்

 

3-134 சிலருக்கு ஞானம் அதிகம்; சிலருக்கு தவ வலிமை அதிகம்; இன்னும் சிலருக்கு வேத அறிவும் தபோ பலமும் சேர்ந்து இருக்கும்; நாலாவது வகையினர் சடங்களைச் செய்விப்பதில் வல்லவராக இருப்பர்.

 

3-135 முன்னோர்களுக்காக கொடுப்பதை ஞானத்தில் மிகுந்தவனுக்குக் கொடு; தெய்வ த்துக்காக கொடுப்பதை நால்வரில் எவருக்கேனும் அளி

 

3-136 ஒரு புதல்வனின் தந்தை வேத வித்து- ஆனால் புதல்வனுகுக்கு வேதம் தெரியாது; மற்றொரு தந்தைக்கு வேதம் தெரியாது ஆனால் புதல்வன் வேதம் ஓதியவன் என்று வைத்துக் கொள் (யாரைக் கவனிப்பாய்?)

 

3-137 இவ்விருவரில் வேதம் அறிந்தவனுடைய பிள்ளையே சிறந்தவன்; மற்றொரு புதல்வன், வேதம் படித்தமைக்காக தக்க மரியாதை கொடு.

 

3-138 சிரார்த்தத்தில் நண்பர்களை சாப்பிட அழைக்காதே; அவர்களை நீ எப்படியும் வெல்லலாம்; நண்பனும் அல்ல, எதிரியும் அல்ல என்பவரையே அழை

3-139 நண்பர்களைத் திருப்தி செய்யும் சிரார்த்தம் பலன் தரா.

3-140 அறியாமையால் இப்படிச் செய்பவன் தேவலோகம் சென்றாலும் கீழே விழுந்து விடுவான்

 

3-141 மூன்று வருணத்தாரும் இப்படி நண்பர்களைத் திருப்தி செய்ய முயன்றால் அது இருளில் திரியும் குருட்டு மாடு போன்றதாகும் பலன் தராது

3-142 களர் நிலத்தில் விதைப்பவனுக்கு அறுவடை இல்லை; ரிக் வேதம் தெரியாதவனுக்குக் கொடுப்பவனுக்கும் பலன் இல்லை.

 

3-143 வேதம் அறிந்த பார்ப்பானுக்குக் கொடுப்பது இருவர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் பலன் தரும்.

 

 

 

3-144 வேதம் அறிந்த பார்ப்பான் கிடைக்காவிடில் நண்பனையும் அழைக்கலாம்; எதிரி ஞானவானாக இருந்தாலும் அவனுக்கு உணவு போடுவது பலனற்றதே

 

3-145 ரிக், யஜுர், சாம வேதம் ஓதியவர்களை அழை

 

3-146 இவர்களில் ஒருவருக்கு கொடுக்கும் உணவும் இறந்து போன ஏழு தலைமுறையினரை கடைத்தேற்றும்

 

3-147 இதுதான் முக்கிய விதி; சில துணை விதிகளும் உள

 

3-148 தாய்ப்பாட்டன், அம்மான், மருமான், மாமனார், ஆச்சார்யன், பெண்ணின் வயிற்றில் பிறந்தோன், மாப்பிள்ளை, சித்தி, பெரியம்மா, இவர்களின் பிள்ளைகள், சிஷ்யன், ரிக் வேதம் அறிந்தோன் ஆகிய வகையினரும் புசிக்க அருகதை ஆனவர்களே.

 

3-149 தேவ காரியங்களில் சாப்பிட வரும் அந்தணர் பற்றி அதிகம் கேட்கத் தேவை இல்லை; பிதுர் காரியங்களில் சாப்பிட வரும் பார்ப்பனர்களின் ஞானம், மூதாதையர் பற்றி சோதித்து அழை.

 

தொடரும்………..

அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் (Post No.5222)

Written by S NAGARAJAN

 

Date: 16 JULY 2018

 

Time uploaded in London –   7-14 AM (British Summer Time)

 

Post No. 5222

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

 

ச.நாகராஜன்

 

பிறப்பால் மேலை நாட்டில் பிறந்தாலும் சிலர் ஹிந்து மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஹிந்து மத ஆசார்யர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆகி மதித்துப் போற்றப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர் வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

 

ரொனால்ட் ஹென்றி நிக்ஸன் இங்கிலாந்தில் செல்டன்ஹாம் என்ற இடத்தில் பிறந்தார். (தோற்றம் 10-5-1898 மறைவு 14-11-1965).

18ஆம் வயதில் முதல் மகா யுத்தத்தில் அவர் பிரிட்டிஷ் ஃபைட்டர் பைலட்டாக பணியாற்றினார். மரணத்தின் விளிம்பிலிருந்து ஏதோ ஒரு அற்புத சக்தியால் தப்பினார். போர் முடிந்த பிறகு கேம்பிரிட்ஜில் கிங்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். அத்துடன் பல்வேறு மதங்கள் பற்றியும் அறிந்து கொண்டார். பாலி,சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல பாஷைகளில் வல்லுநர் ஆனார். 1921இல் இந்தியா வந்த நிக்ஸன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.

 

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஞானேந்திர சக்ரவர்த்தி ஒரு ஆன்மீகவாதி. அவரது மனைவி மோனிகா தேவி உலக வாழ்வைத் துறந்து வைஷ்ணவத்தில் பற்று கொண்டு அதைப் பின்பற்றலானார். அவரது பெயர் யசோதா மாயி ஆயிற்று. அவரைக் குருவாக ஏற்றார் நிக்ஸன்.

 

நாளடைவில் அவரும் உலக வாழ்வைத் துறந்தார்; கிருஷ்ண ப்ரேம் என்ற பெயருடன் புகழ் பெற்றார். 1930இல் அல்மோரா அருகில் மிர்டோலா என்ற இடத்தில் யசோதா மாயியும் சிஷ்யர் கிருஷ்ண ப்ரேமும் ஒரு ஆசிரமத்தைத் துவங்கினர். ஏராளமான சிஷ்யர்கள் அவர்களைப் பின்பற்றலாயினர்.

 

தனது ஆசிரமத்திலேயே பெரும்பாலும் கிருஷ்ண ப்ரேம் தங்கினாலும் ஒரு முறை அவர் தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டார்.

 

ரமண மஹரிஷியைத் திருவண்ணாமலையில் தரிசித்தார். அவரைப் பற்றி ரமணர்,”கிருஷ்ணப்ரேம் ஞானியும் பக்தனும் இணைந்து சேர்ந்த ஒரு அபூர்வமானவர்” என்று கூறினார்.

ரமணர் ஹாலில் தனது இருக்கையில் அமர்ந்திருக்க உள்ளே நுழைந்த  கிருஷ்ணப்ரேம் மௌனமாக அமர்ந்தார். நீ யார் என்ற கேள்வி அவரைக் குடைய ஆரம்பித்தது. எல்லோரிடமும் உறைந்திருக்கும் கிருஷ்ணரின் பணியாளன் என்று மனதிற்குள் சொன்னார். ஆனால் அந்தக் கேள்வி அவரைத் தொடர்ந்து கொண்டே இருக்க ஹாலை விட்டு வெளியேறினார்.

மறு நாள் காலை மௌனமாக உள்ளே வந்து அமர்ந்த அவர் ரமணரைப் பார்த்து மனதிற்குள்ளாகவே, “ நீங்கள் யார் என்று நான் கேட்கலாமா?” என்றார். அடுத்த கணம் கண்ணைத் திறந்து அவர் பார்த்த போது ரமணரின் இருக்கை காலியாக இருந்தது. காற்றில் கலந்தது போல அவரைக் காணோம். அடுத்த கணம் அவர் மீண்டும் இருக்கையைப் பார்த்த போது அவர் இருக்கையில் இருந்தார். அவரின் உதட்டோரத்தில் ஒரு சிரிப்பு தவழ்ந்தது. அவர் உண்மையின் சொரூபம், பாடலுக்கு அப்பாற்பட்ட மோனம் என்பதை கிருஷ்ண ப்ரேம் உணர்ந்தார்.

 

பாண்டிச்சேரி சென்ற கிருஷ்ண ப்ரேம் மஹரிஷி அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார்.

 

மஹரிஷி அரவிந்தர் கிருஷ்ணப்ரேமைப் பற்றிக் கூறும் போது “அவரிடம் ‘seening intellect’ இருப்பதாகத் தெரிவித்தார்.

அரவிந்தர் திலிப்குமார் ராய்க்கு எழுதிய கடிதத்தில் கிருஷ்ண ப்ரேமின் கடிதங்களில் உண்மையின் ஆதாரம் தெரிவதாக எழுதினார்.

 

(“It is a great refreshment to read the letters of Krishna Prem; one feels here a stream from the direct sources of Truth that one does not meet so often as one could desire. Here is a mind that cannot only think, but see—and not merely see the surface of things with which most intellectual thought goes on wrestling, without end or definite issue, and as if there were nothing else.” –Sri Aurobindo)

 

இந்தியாவைப் பற்றி கிருஷ்ண ப்ரேம் கூறுகையில், “Often while  meditating  I catch myself praying to Krishna that He may never let India’s immemorial soul be swamped by the rational robustious, scientific agnosticism of the blatant West, blurring over a thousand loud speakers : ‘Religion is the opium of the mind’. May He always shower  His blessing on India, whose very dust heaves with latent godliness in whose tiniest crannies mystic faith flowers like green grass-blades through chinks in rocks – India, whose people have only to anoint wayside stones with vermillion to endow them with sanctity. May these remain custodians of the precious heritage of faith in Jagat-pranam as the Bhagavat puts it.”

(Dilip kumar Roy’s quote in his book ‘Yogi Krishnaprem – page 80)

 

 

1965 நவம்பர் 14ஆம் தேதி காலையில் கிருஷ்ண ப்ரேம் தன் உடலை உகுத்தார். தண்டேஷ்வர் என்னுமிடத்தில் இருக்கும் ஒரு சிறு  கோவிலின் அருகில் உள்ள நீரோடை அருகே  அவரது குருவின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது. கிராமவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ண ப்ரேம் பல அரிய நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றை திலிப் குமார் ராய் எழுதியுள்ளார்.

 

கௌடிய சம்பிரதாய வைஷ்ணவராக வாழ்ந்த கிருஷ்ணப்ரேம் இறுதியாக கூறிய வார்த்தைகள், “My Ship is sailing”.

***

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர் (Post No.5219)

Written by S NAGARAJAN

 

Date: 15 JULY 2018

 

Time uploaded in London –   8-33 AM (British Summer Time)

 

Post No. 5219

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

புத்த தரிசனம்

எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்

ச.நாகராஜன்

அற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.

இங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.

அங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.

ஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.

அமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.

அங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா! ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று கர்ஜித்தான்.

அமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.

அச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.

அந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.

பத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய்! சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.

 

ஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்?

அங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”

உண்மை! அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.

ஆம்ரபாலி என்று பெரும்பாலோரால் அறியப்படும் அம்பாபாலிகா வைசாலி நாட்டின் பேரழகி. சம்ஸ்கிருதத்தில் ஆம்ரம் என்றால் மாமரத்தைக் குறிக்கும். பாலி இலையைக் குறிக்கும். அவள் அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்குப் பெயர் ஆம்ரபாலி ஆயிற்று.

அவளை அடைய பெரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரும்பினர். இதை விரும்பாத வைசாலி மன்னன் இதைத் தடுக்க ஒரே வழி அவளை அரசவை நடனமங்கை ஆக்குவது தான் என்ற முடிவுக்கு வந்து அவளை அரசவை நடன மங்கை ஆக்கினான். ஆனால் அடுத்த நாட்டு அரசனான பிம்பசாரன் அவளுக்கு இணையான இன்னொரு அழகியைத் தனது நாட்டில் அரசவை நடனமங்கையாக அறிவிக்க முடியாமல் தவித்தான். ஆகவே போரை மேற்கொண்டு வைசாலியை ஜெயித்து அவளை மணந்தான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

ஒருமுறை ஆம்ரபாலி புத்தருக்கு பிக்ஷை அளிக்க விரும்பினாள். அதே தினத்தில் லிச்சாவி மன்னனும் புத்தரை விருந்துக்கு – பிக்ஷைக்கு – அழைத்தான்.

ஆனால் மன்னனின் கோபத்தையும் மீறி ஆம்ரபாலி இல்லத்திற்கு புத்தர் விருந்தை ஏற்க ஏகினார். அங்கு அவளுக்கு புத்த தர்மத்தை உபதேசித்தார்.

எல்லையற்ற கருணைவெள்ளமான புத்த தரிசனத்தை அம்பாபாலிகா பெற்றாள். உடனே மாறினாள். அவளும் அவளது மகன் விமல் கொண்டனனும் புத்தமதம் தழுவினர்.

ஒருமுறை அங்குட்டராபா பட்டிணத்தில் ஆபனா நகருக்கு புத்தர் தன் 1250 சீடர்களுடன் விஜயம் செய்தார். 1250 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் புத்தரின் பின் சென்றதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். வீதி வழியே அவர்கள் செல்ல மக்கள் வீதியின் இருபுறமும் திரளாக நின்று அவர்களை வரவேற்று வணங்கினர்.

கேனியா என்று ஒரு பிராமணர் புத்தரின் அருகில் சென்று அவரை வணங்கி அவரிடம் தனது இல்லம் வந்து பிக்ஷையை ஏற்குமாறு கூறினார்.புத்தர் மறுத்து விட்டார்.

 

“பெரிய குழுவுடன் நான் வந்திருக்கிறேன். அனைவருக்கும் உணவு சமைப்பது என்றால் அது பெருத்த சிரமத்தை உருவாக்கும். வர இயலாது” என்றார் புத்தர்.

கேனியா மூன்று முறை அழைத்தார். அதற்குப் பின்னர் புத்தர் அவர் அழைப்பை ஏற்றார்.

1250 பேருக்கு உணவைச் சமைப்பதில் ஏற்படும் கஷ்டமும், அவர்களுக்குப் பரிமாறுவதில் உள்ள சிரமத்தையும் உலகாயத ரீதியாக அறிந்ததால் புத்தர் அதை மறுத்தார். மூன்று முறை அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் தகுந்த குழுக்களை அமைத்து 1250 பேருக்கும் கேனியா விருந்தளித்தார்.

விருந்துக்குப் பின்னர் புத்தர் தர்மோபதேசத்தைச் செய்தார்.

அனைவரும் பயனடைந்தனர்.

புத்தர் போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்த பின்னர், முதலாவதாக தான் மதித்து கௌரவிக்க வேண்டிய குரு யாராவது தனக்கு இருக்கிறாரா என்பதைத்தான் கண்டுபிடிக்க முயன்றார். தனக்கு இணையான ஒரு நபரையே அவரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆகவே குருவைக் கண்டு பிடிக்கும் பிரச்சினை இன்னும் சிக்கலானது. அப்படி ஒரு குரு இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

ந மே ஆசார்ய அத்தி சதிஸா மேன நவீஜ்ஜா இதி (எனக்கு ஒரு குரு இல்லை; என்னை ஒத்த இன்னொருவரும் இல்லை)

ஆகவே தான் புத்தர் தனது தர்மத்தையே  தனது குருவாகக் கொண்டார்.

அந்த தர்மத்தை அஹிம்சா வழியில் அனைவருக்கும் உபதேசித்தார்.

அவரது கருணைவெள்ளம் கரை புரண்டு ஓட அதில் நனைந்து மக்கள் மகிழ்ந்தனர்.

 

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

 

***

 

 

நள தமயந்தி – சுவையான காதல் கதை! (Post No.5215)

Written by S NAGARAJAN

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London –   6-49 AM (British Summer Time)

 

Post No. 5215

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நள தமயந்தி – சுவையான காதல் கதை!

 

ச.நாகராஜன்

ஹிந்து வேதத்தில் வரும் கதை நள-தமயந்தி கதை.

மஹாபாரதம் அதை விரிவாகச் சொல்கிறது.

நளன் பேரழகன். தமயந்தி பேரழகி.

அழகு என்றால் விண்ணவர் வியக்கும் அழகு.

இந்தக் கதையைப் பல கவிஞர்களும் பாடியுள்ளனர்.

நைஷதம் அழகிய வடமொழிக் காவியம்.

அதைத் தமிழில் தந்தார் அதிவீரராம பாண்டியன்.

இவர் இருந்து அரசாண்ட நகர் கொற்கை.

இவருக்கு வல்லபதேவன், பிள்ளைப்பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, தமிழ் வளர்த்த தென்னவன் எனப் பல பெயர்கள் உண்டு.

சற்று – சற்று என்ன – அதிகமாகவே சிற்றின்பப் பிரியர்.

ஆகவே தான் கொக்கோக முனிவர் வடமொழியில் எழுதிய கொக்கோக நூலைத் தமிழ்ப் படுத்தினார்.

கந்தபுராணத்தில் வரும் இந்திரபுரிப் படலத்தில் கூறப்பட்ட மதனாகமவியல்களைத் தமிழ்ப் படுத்தி மதனக் கோவை என்ற நூலை இயற்றினார்.

ஒவ்வொரு பாடலும் சிருங்காரச் சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட பாடல்.

பெண்களின் அங்கங்களை வர்ணனை செய்வதில் இவருக்கு ஈடு இணை கிடையாது.

நளனும் தமயந்தியும் ஒருவர் பால் மற்றொருவர் கொண்ட காதலுக்கு ஈடு இணை கிடையாது.

தமயந்தி நளனையே நினைத்து உருகினாள். நளனோ தமயந்தியையே நினைத்து உருகினான்.

இரண்டே இரண்டு பாடல்களை இங்கு பார்ப்போம்:

தமயந்திக்கு ஒரு பொழுது போக்கு. நளன் எப்படி இருப்பான் என்பதை நினைத்து நினைத்துப் பார்ப்பது தான் அது.

ஒரு நாள் ஓவியத்தில் வல்லவனான ஒருவனை அழைத்தாள். ‘அழகில் சிறந்த பேரழகன் ஒருவன் சித்திரத்தையும் அவனுக்கு இணையான பேரழகியான கன்னி ஒருத்தி படத்தையும் வரைக’ என்று ஆணையிட்டாள்.

ஓவியன் தன் திறமை அனைத்தையும் காட்டி இரு சிறந்த அங்க லாவண்யங்கள் கொண்ட அழகனையும் அழகியையும் வரைந்து காட்டினான்.

அதைப் பார்த்த தமயந்தி ஓவியனை அனுப்பி விட்டு அந்தப் படத்தை எடுத்துக் கொண்டாள். அந்தப் படத்தில் இருந்த அழகனும் அழகியும் நளனுக்கும் தமயந்திக்கும் அழகில் சற்றும் ஈடு கொடுக்க முடியாது என்ற போதிலும் அதை நள தமயந்தியாகப் பாவித்து மெய் சிலிர்த்தாள்.

இதை அதிவீரராம பாண்டியன் கூறுகிறார் இப்படி:

 

ஓவியத் துறைகை போய வொருவனை யுருவின் மிக்க

காவல னொருவன் மற்றோர் கன்னிநீ தீட்டு கென்னத்

தாவரு மெழிலிற் கோட்டத் தானுமந் நளனுமாக

மேவர வினிது நோக்கி மெய்ம்மயிர் பொடிக்கு மன்றே.

(அன்னத்தைக் கண்ணுற்ற படலம், பாடல் 75)

 

 

வெறும் சித்திரத்தைக் கண்டு மெய்ம்மயிர் பொடிக்கும் அளவில் அவள் ஆனந்தப் பட்டாள்.

தங்கள் தலைவி தமயந்தியின் காதலை அனைத்து தோழிகளும் நன்கு அறிவர். அவர்கள் அவளைக் கிண்டல் செய்து  சீண்டி விளையாடுவது வழக்கம்.

அவள் இல்லாதபோதும் நள தமயந்தி காதல் அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு விளையாட்டானது.

தோழிகளில் ஒருத்தி தமயந்தியாகவும் இன்னொருத்தி நளனாகவும் ஆகி இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி மகிழ்வர்.

இந்த ஆலிங்கனத்தோடு கலகலவென்று சிரிப்பொலி எழும்.

இதையும் அதிவீரராமபாண்டியன் அழகுறச் சித்தரிக்கிறார்.

நளனோ மஹா அழகன். அவன் அழகின் வர்ணனையைக் கேட்ட தேவலோக இந்திராணியின் முலை சிலிர்த்ததாம்.

இந்திரனோ தமயந்தியின் அழகை நாரதர் வாயிலாகக் கேட்டு நேரடியாக சுயம்வரத்திற்கே வருகிறான்.

நளன்  அன்னம் வாயிலாக தமயந்தியின் அழகு வர்ணனையைக் கேட்கிறான்.

தமயந்தியிடம் அன்னம் வந்து சொல்கிறது இப்படி:

 

“வேற்படையை உடைய நள மஹாராஜன், ஓவியர்களால் எழுதற்கு அரிய உனது அழகிய வடிவத்தை, தன்னால் சம்பாதிக்கப்பட்ட பலவகையான மணிகளைப் பதித்து எழுதுகிறவன். உன் கனதனங்களை உள்ளதை உள்ளபடியே எழுதுவதற்கு இப்படத்தில் அகலம் போதவில்லை என்றும், பூங்கொடி போன்ற உனது அழகிய இடையைத் தீட்ட தூரிகைக் கோலின் நுனியானது கூர்மை இல்லை என்றும் எண்ணித் திகைக்கிறான். ஆகையால் உன்னை விரும்பி மனத்தில் எண்ணி அவனது நெடிய அழகிய கண்களானவை இமைக்காமல் உன் உருவத்தைப் பார்க்க அதனால் மனம் வருந்துகிறான்.

நைடதம் கூறும் பாடலைப் பார்ப்போம்:

சித்திரக் காட்சி

 

ஈட்டு மணிகள் பலதெளிந்துன் னெழுதற் கரிய திருவுருவம்

கோட்டுங் கிழிதான் முலைகோட்டப் பரப்பின் றென்னுங் கொடிமருங்குல்

தீட்ட வனைகோ நுதிநுண்மை யிலதென் றெண்ணித் திகைக்குமுளம்

வேட்டு நெடுங்கண் ணிமையாம னோக்கித் தளரும் வேல்வேந்தே”

(அன்னத்தைத் தூது விட்ட படலம் பாடல் 254)

 

நளன் பற்றிய வர்ணனையும் தமயந்தி பற்றிய வர்ணனையும் படிப்போரை வியக்கச் செய்யும் வண்ணம் உள்ளன.

தமயந்தியின் கூந்தலிலிருந்து பாதம் வரை உள்ள வர்ணனை சிருங்காரப் பிரியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.

 

நைடதம் புலவர்க்கு ஔடதம்.

சிருங்காரப் பிரியர்களுக்கோ தேவாமிர்தம்!

***

 

காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–

அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி (Post No.5209)

Written by S NAGARAJAN

 

Date: 12 JULY 2018

 

Time uploaded in London –   6-31 AM (British Summer Time)

 

Post No. 5209

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி! -1

 

.நாகராஜன்

1

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் அற்புதமான மஹான்களை ஆசார்யர்களாக ஹிந்து தேசத்திற்குத் தந்துள்ளது. ஒவ்வொரு மஹானும் ஒவ்வொரு விதத்தில் அதிசயிக்கத்தக்கவர்கள். அனைவரும் ஸ்ரீ சாரதாம்பிகையை பிரத்யக்ஷமாகத் தரிசித்தவர்கள். உண்மையான பக்தர்களுக்கு உயரிய நிலையை அனுக்ரஹித்து அருள் பாலித்தவர்கள். ஒரு பெரிய என்சைக்ளோபீடியா அளவில் இவர்களின் புனித சரித்திரம் எழுதப்பட்டாலும், கடல் நீரை மையாக வைத்து உலகப் பரப்பைத் தாளாக வைத்து பல நூறு ஆண்டுகள் எழுதினாலும் இவர்களின் மஹிமையைப்  துளிக் கூட எழுதியதாக ஆகாது.

அப்படிப்பட்ட பிரம்மாண்டமான பீடமாகிய ஸ்ரீ சாரதா பீடத்தில் 34வது ஆசார்யராக இருந்து அருள் பாலித்தவர் அதிசய மஹாபுருஹர் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி!

இவரது சரித்திரம் திவ்ய சரித்திரம். அனைத்து ஹிந்துக்களும் ஆன்மீக ஹிந்து தத்துவத்தில் ஆர்வம் கொண்ட அனைத்து மதத்தினரும் அறிந்து கொள்ள வேண்டிய திவ்ய சரித்திரம் இந்த மஹானுடையது.

அதில் ஒரு திவலையை இங்கு தருகிறோம். இன்னும் பல துளிகளை சந்தர்ப்பம் நேரும் போது அடுத்தடுத்துக் காணலாம்.

 

2

ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த தேதி 1892ஆம் வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அவர் சந்யாசம் ஏற்ற தேதி  1912ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி. அதற்கு அடுத்த நாள் அவர் சிருங்கேரி பீடத்தில் 34வது ஆசார்யராக ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிஜியாக ஆனார். அவர் தன் உடலை உகுத்த நாள் 1954ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி. ஞாயிற்றுக்கிழமை.

இவரது வரலாறு மஹிமை பொருந்திய ஒன்று.

3

1939-40ஆம் ஆண்டுகளில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிஜி திருவாங்கூர் ராஜ்யத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். காலடியில் சில மாதங்கள் அவர் தங்கியிருந்தார். திருவாங்கூர் அரசு அவருக்கு உரிய சகல மரியாதைகளையும் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதிப் படுத்தியது. விசேஷ போலீஸ் அதிகாரிகள் அங்கு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் போலீஸ் உடை அணியாமல் சாதாரண உடையை அணிந்து அந்தப் பணிகளை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸாக அப்போது பதவி வகித்தவர் அப்துல் கரீம் என்பவர். அவர் பஞ்சாபில் பதவி வகித்தவர். மிகுந்த நேர்மையான, திறமையான, உறுதியான அதிகாரி என்று அனைவரிடமும் நற்பெயர் பெற்றவர். திருவாங்கூர் சமஸ்தானத்தால் விசேஷமாக அவர் அங்கு வரவழைக்கப்பட்டார் – சில தீய சக்திகளை ஒடுக்குவதற்காக!

அப்துல்கரீம் மஹாஸ்வாமிஜியின் பெருமைகளைப் பற்றி நன்கு கேள்விப்பட்டிருந்தார்.

ஒரு நாள் மாலை மடத்திற்கு வருவதாக அவர் கடிதம் மூலம் தெரிவித்தார்.

மடத்தில் முகாமிட்டிருந்து சகல ஏற்பாடுகளையும் கவனித்து வந்த ஸ்ரீ ஸ்ரீகண்ட சாஸ்திரி திருநெல்வேலியைச் சேர்ந்த ஸ்ரீ ஆர் கிருஷ்ணசாமி ஐயரை அழைத்து, வருபவர் ஒரு முஸ்லீம் என்றும் அவர் பஞ்சாபிலிருந்து வருவதால் அவருக்குத் தமிழோ மலையாளமோ தெரிய வாய்ப்பில்லை என்றும் ஆகவே அவரை வரவேற்று மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்துல்கரீம் வந்தார். அவரை கிருஷ்ணசாமி ஐயர் உரிய முறைப்படி வரவேற்றார்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் கிருஷ்ணசாமி ஐயரிடம்,

“ஸ்வாமிஜியின் பெருமைகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு இங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய சம்பிரதாயங்கள் எதுவும் தெரியாது. ஆகவே அவற்றை எனக்குத் தெரியப்படுத்தினால் அதன் படி நடப்பேன்” என்றார்.

ஐயரோ, “ அப்படி ஒன்றும் குறிப்பிடத்தகுந்த சம்பிரதாயங்கள் இங்கு இல்லை. நீங்கள் உங்களது மதத்தில் உள்ள பெரியவரை எப்படி அணுகுவீர்களோ அப்படி அணுகினால் அதுவே போதுமானது” என்றார்.

உடனே அவர் தனது ஷீக்களைக் கழட்டி விட்டு சாக்ஸுடன் வந்தார்.

மஹாஸ்வாமிகளைச் சந்தித்து முழங்கால் மண்டியிட்டார். அவரை புன்முறுவலுடன்  வரவேற்ற ஸ்வாமிகள், “இங்கிருக்கும் போலீஸார் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து இவர்களது அதிகாரி ஒரு பெரிய கனவானாகவும் பக்திமானாகவும் இருக்க வேண்டும் என்று யாம் எண்ணினோம்” என்றார்.

அதை மொழியாக்கம் செய்ய கிருஷ்ணசாமி ஐயர் முயலுவதற்கு முன்பேயே கரீம் சுத்தமான தமிழில், “மஹாஸ்வாமிகளின் பெருந்தன்மையான குணமே அப்படிப்பட்ட கருத்தை கொள்வதற்கான காரணம். உண்மையில் சொல்லப் போனால்  நான் ஒரு கடுமையான ஆபீசர் என்று பெயர் வாங்கியவன்” என்றார்.

மொழிபெயர்ப்பிற்கு அங்கு வேலை இல்லை என்பதை உணர்ந்த ஐயர் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றார். ஆனால் ஸ்வாமிஜி அவரை அங்கேயே இருக்கும்படி பணித்தார்.

ஸ்வாமிஜி : நீங்கள் தமிழில் நன்கு பேசுகிறீர்கள். நீங்கள் பஞ்சாபிலிருந்து வருவதாக நாம் அறிகிறோம்.

அப்துல்கரீம் : பஞ்சாபில் நெடுங்காலம் நான் பணியாற்றினேன். ஆனால் எனது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள கொடியாலம் தான். சொல்லப்போனால் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரும் எனது தந்தையாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் வெளியூர் செல்ல வேண்டிய சமயத்தில் எல்லாம் எனது தந்தையாரிடம் அவர் நிர்வகித்து வந்த அங்குள்ள கோவில்களைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்வார். ஆகவே சர்வீஸ் என்னை நெடுந்தூரம் அனுப்பினாலும் உண்மையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்.

ஸ்வாமிஜி: அப்படியா? இன்னும் சர்வீஸ் எத்தனை காலம் இருக்கிறது?

அப்துல்கரீம் : ஒரு வருடத்திற்கு மேல் இல்லை.

ஸ்வாமிஜி: உங்கள் மதத்தைப் பற்றி ஆழ்ந்து அறிந்து கொண்டீர்களா?

அப்துல்கரீம் : இல்லை. அதன் அடிப்படை கொள்கைகளை உணர்ந்ததாகவோ  அல்லது அதன் நெறிகளை சரியாகக் கடைப்பிடிப்பதாகவோ கூடக் கூற முடியாது.இளமைக் காலத்திலிருந்தே கடவுள் இருக்கிறார் என்று தீவிர நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். இறைவன் மிகப் பெரியவன். அவனன்றி ஒன்றும் நடக்காது என்று நம்புபவன்.இந்த நம்பிக்கை தொடர்ந்து என் வாழ்க்கை முழுவதும் இருந்து வருகிறது; நன்னெறியிலிருந்து பிறழாமல் என்னைக் காத்து வருகிறது.

ஸ்வாமிஜி:  எல்லா மதங்களும் அதற்காகத் தான் உள்ளன. மதத்தின் நுணுக்கங்களைக் கற்க வேண்டும் என்ற அவசியமில்லை. எங்கும் இருக்கும் ஒருவனை, எல்லாம் வல்ல கடவுளை, எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருவனை, எப்போதும் நமக்கு வழிகாட்டி உதவ இருக்கும் ஒருவனை நினைத்து – அவன் மீது  நம்பிகை கொண்டிருந்தால் அதுவே போதுமானது.

அப்துல்கரீம் : இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்காக உங்களுக்கு மிகுந்த நன்றி. ஆனால் மத சம்பந்தமாகப் பயில  நான் நேரத்தைக் கழிக்கவில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

ஸ்வாமிஜி : அப்படிப்பட்ட படிப்பு வேண்டுமெனில் நீங்கள் ஓய்வு பெற்றவுடன் நிறைய நேரம் கிடைக்கும். கற்பதில் எப்போதுமே தாமதம் என்பது கிடையாது. புதிதாகப் பயில்வதை விட முதிய வயதானது ஏற்கனவே கற்றதை நடைமுறையில் கொண்டு வர சிறந்தது எனத் தோன்றுகிறது.

அப்துல்கரீம் :  அதுவே தான் எனது கருத்தும். வாழ்க்கையின் பெரும் பகுதியை சர்வீஸில் கழித்து விட்ட நான், இனி படிக்கும் பழக்கத்தைக் கொள்வது இயலாது என்றே நினைக்கிறேன்.

ஸ்வாமிஜி : ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்வது என்பதைப் பற்றி நீங்கள் சிந்த்திருப்பீர்கள் என நம்புகிறோம். மற்றவர்களுக்குப் பயன்படாமல் நேரத்தை வீணே கழிப்பது என்பது இயலாத காரியம்.

அப்துல்கரீம் : ஒரு நாள் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தேன். என் ஓய்வு காலத்தில் பயனுள்ள வழியில் கழிக்க நான் விரும்புகிறேன். பயனுள்ளது என்பதை சாதாரண அர்த்தத்தில் நான் சொல்ல்வில்லை. கடவுள் மிகவும் ஏற்கக் கூடிய ஒன்றாக அது இருக்க வேண்டும். மனித குலம் சேவை செய்யத் தயங்கும் ஒரு பிரிவிடம் நான் சேவை செய்வேன் எனில் கடவுள் நான் சாதாரண தர்ம காரியங்களைச் செய்வதை விட மிக அதிகமாக சந்தோஷப்படுவார். ஆகவே இந்த எண்ணம் என்னை வெகுவாக ஆட்கொண்டதால் தொழுநோயாளிகளுக்கான காப்பகம் ஒன்றைத் திறந்து அவர்களை நானே கவனிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன். இதை நிறைவேற்ற கடவுள் எனக்கு ஆயுளையும் ஆற்றலையும் தருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்வாமிஜி : அப்படிப்பட்ட மிகவும் கொடுமையான துன்பத்தைக் கொண்டிருப்போருக்கு சேவை செய்வது கடவுளுக்கு உகந்த ஒன்று என்பதை நீங்களே உணர்ந்திருக்கிறீர்கள். இந்தக் கருத்து மிகவும் உயர்ந்தது; கடவுள் நிச்சயம் இதை நிறைவேற்ற உங்களுக்கு உதவுவார். உங்களின் எளிமையினால் நீங்கள் இதை ஏற்க மறுத்தாலும் கூட நீங்கள் ஒரு உயர்ந்த பக்தியுடைய ஆத்மா என்ற எனது கருத்து வலுவாகிறது.

அப்துல்கரீம் :  கடவுள் என்னை ஏற்குமாறு செய்ய உங்களின் ஆசீர்வாதங்களுக்காக உங்களை நான் வேண்டுகிறேன். உங்களது அருமையான நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டேன் என நினைக்கிறேன்.

ஸ்வாமிஜி: உங்களைச் சந்தித்ததில் மிகவும் சந்தோஷம்.

அப்துல்கரீம் : கடவுள் அனுக்ரஹித்தால், இன்னும் ஓய்வான நேரத்தில் உங்களை இன்னும் ஒரு முறை தரிசிக்க விரும்புகிறேன். நான் ஒரு முஸ்லீம். ஒரு ஹிந்து மடாதிபதியைச் சந்திப்பதைப் பற்றி தயங்கிக் கொண்டிருந்தேன். ஆகவே தான் இங்கிருக்கும் நேரத்தைச் சற்று குறைத்துக் கொண்டேன். அடுத்த முறை இங்கு வரும் போது உங்களுடன் அதிக நேரம் கழிக்க விரும்புகிறேன். உங்களது சுலபமான அணுகுமுறையும் அளப்பரிய கருணையும் என்னை மிகவும் இயல்பாக இருக்கச் செய்துவிட்டது.

ஸ்வாமிஜி : அப்படியே ஆகட்டும்.

அப்துல்கரீம் : நான் வரும் போது என் மனைவியையும் என்னுடன் அழைத்து வரலாமா?

ஸ்வாமிஜி : அவர் கோஷாவில் இருப்பவர் அல்லவா?

அப்துல்கரீம் : ஆமாம். ஆனால் உங்களுக்கு எதிரில் இல்லை.

ஸ்வாமிஜி: ஆம், அவரை நீங்கள் அழைத்து வரலாம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

(இந்த கனவான் ஓய்வு பெற்ற பின்னர் தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.)

ஆதாரம் : The Saint of Sringeri by Sri Jnanananda Bharati – formerly Sri R. Krishnaswami Ayyar of Tirunelveli)

***