வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)

Written by London Swaminathan 

 

Date: 29 May 2018

 

Time uploaded in London – 14-35

 

Post No. 5058

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)

தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் அறிந்ததே:

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுன்ண்ணலாம்;

வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

 

அற்புதங்களின் ப்ட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவதுஅதை விடக் கடினம் என்கிறார்.

 

இந்த மாதிரி அற்புதங்களை தமிழ் சித்தர்கள் சர்வ சாதாரணமாகச் செய்து வந்தனர். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல! இறைவனின் அற்புதங்களை சொல்லும் தமிழ் மொழி நூல்களும் அதை திரு ‘விளையாடல்’ என்றே செப்பும். ஸம்ஸ்க்ருதத்தில் அதை லீலா விநோதங்கள் அல்லது விபூதி என்பர்.

இதற்கெல்லாம் மிக மிக முந்தைய அற்புத துதிகள் உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் உள்ளன.

 

ரிக் வேதம் 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுவரை பழமையுடைத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு. அதில் பத்தாவது மண்டலத்தில் ஜடை தரித்த (கேசீ) முனிவர்களைப் பற்றியும் அந்த முனிவர்களின் சக்தி குறித்தும் வருகிறது

 

ஏழு ரிஷிகள் சூரியனை முனிவனாக உருவகித்து பாடிய பாடல் அது.

அதில் வரும் சில வரிகளைக் காண்போம்:

கேசீ பூமியையும் சோதியையும் தாங்குகிறான்

 

முனிவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். காற்று போலச் செல்கிறார்கள்.

நாங்கள் காற்றின் மேலே ஏறினோம்; மானுடர்களே; நீங்கள் தூல தேகத்தையே பார்க்கிறீர்கள்

 

காற்றின் குதிரையும் வாயுவின் நண்பனுமான முனி, தேவனால் ஊக்கம் அடைந்து, கிழக்கு மேற்கிலுள்ள இரு கடல்களுக்கும் செல்கிறான்.

 

அப்சரஸ், கந்தர்வர்கள் செல்லும் இடங்களிலும் வனவிலங்குகள் செல்லும் இடங்களிலும் ( வானம், காடு)  முனிவன் சஞ்சரிக்கிறான்.

 

கேசீ ஜடையுள்ளவன். அவன் ருத்திரன் விஷத்தை அருந்தினான்.

 

இந்தப் பாடலில் வரும் விஷம் அருந்தும் வரிகள் நமக்கு விஷம் உண்டு பெயர் பெற்ற திரு நீலகண்டன் (சிவ பெருமான்) கதையை நினைவு படுத்துகிறது.

 

இந்தத் துதியின் அடிக்குறிப்பில் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் கூறுவதாவது:-

முனிவர்கள் தங்கள் நேர்மையான வாழ்க்கை நடைமுறைகளால் வாயு, ருத்திரன் போன்ற தேவர்களின் தன்மையை அடிய முடியும்.  அவர்களைப் போல சிறந்த சக்திகளையும் பெற முடியும். எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்; நீண்ட அழகான முடியுடைய முனிவர்கள் தவத்தின் போது மழிப்பதில்லை. தீ ஜோதி, பூமி ஆகியவற்றைத் துதிப்பார்கள்.

 

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீக நிகாயம்’ என்ற பௌத்த மத நூலும் ஆறு அதி மானுட சக்திகளை விவரிக்கிறது. ரிக் வேதம் காலத்தினால் பழமையானதால் அவர்கள் மறை பொருளில் பேசுவர். ஆனால் பிற்காலத்தில் எழுந்த பௌத்த, சமண சமய நூல்கள் நமக்குப் புரியும் நடையில் எல்லாவற்றையும் நுவல்வர்.

 

இதோ புத்த மத நூல் இயம்புவன:

 

“ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; பலர் ஒன்றாகலாம்.

மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்

தண்ணீருக்குள் முங்கு நீச்சல் அடிப்பது போல பூமிக்குள் மூழ்கி எழுந்திருக்கலாம்.

தண்ணீர் மீது நடந்து செல்லல்லாம்

யாருக்கும் தெரியாமல் மாயமாய் உலவலாம்

காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்.

 

நிலவையும் கதிரவனையும் தொடலாம்;

பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.”

 

 

இவை அனைத்தும் சாதாரண மனிதனால் செய்ய இயலாது.

சமண மத நூல்களும் இதையே சொல்லும்.

 

அஷ்டமா சித்திகள்

 

 

ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு:

 

“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.

மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்

காற்றை விட லேஸாகலாம்.

இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம்.

 

பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம்

 

நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் பு குந்து எழலாம்

பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.

உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.”

 

ஆக ரிக் வேதம், பழங்கால மொழியில் பகன்றதை பிற்கால நூல்கள் எளிய மொழியில் செப்பின என்றால் மிகை இல்லை.

அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.

அஷ்டமா சித்திகள் என்பதில் மேற் சொன்ன அற்புதங்கள் எல்லாம் அடக்கம். ஆனால் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை எண்வகைச் சித்திகளில் மட்டுமே காணப்படுகிறது. இது பர காயப் பிரவேசம் ஆகும். அதாவது ஒருவர் உடலில் உள்ள உயிர் வேறு ஒருவரின் உடலுக்குள் புகலாம். இதைத் திருமூலர் கதையில் விளக்கியுள்ளேன்

 

–சுபம்–

 

செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை (Post No.5048)

 

Written by London Swaminathan 

 

Date: 26 May 2018

 

Time uploaded in London –  7-23 am

 

Post No. 5048

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 17

செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை (Post No.5048)

 

இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி…..

 

இன்றைய கட்டுரையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்-

 

செக்ஸ் துஷ்பிரயோகம் (பாலியல் தொல்லைகள் Sex Abuse) நடைபெறாதபடி

தடுக்க மநு சில அழகான யோசனைகளைச் சொல்கிறார்.


1.வயதான குருவுக்குக் கைகால் பிடித்துவிட்டு, கால்கழுவி வழிபடுவது எல்லாம் சரி. ஆனால் குருவின் மகன் ஒரு நாள் பாடம் நடத்தினால் குருவுக்கு உரிய மரியதைகளைக் கொடு. ஆனால் தொட்டுப் பழகாதே. குரு வீட்டிலுள்ள குழந்தைகளே ஆனாலும், குளிப்பாட்டுவது சோப்புப்  போடுவது ஆகியவற்றைச் செய் யாதே 2-209

 

2.பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. அம்மாவேயானாலும், சஹோதரிகளே ஆனாலும் தனியாக பெண்களுடன் இராதே. ஏன் எனில் மனத்தின் சக்தி மிகவும் அபாயகரமானது.

வேத காலத்தில் இருந்த மனுவே இப்படிச் சொல்கிறாரே! அப்படியானால் அப்போதும் செக்ஸ் Sex Abuse சில்மிஷங்கள் நடந்தனவோ என்று நாம் எண்ணுவோம். கோடிப் பேரில்  ஒன்று இப்படி நடக்கலாம். அல்லது எதிர்காலத்தில் இப்படி நடக்கப் போவதை முன் உணர்வால் அறிந்து சொல்லி இருக்கலாம் 2-215

 

 

ஆனால் மநு ஒரு மாபெரும் உளவியல் நிபுணன் (Great psychologist). மநுவே சொல்லி விட்டார் நான் தொட்டால் என்ன என்று எவரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக அழகாகப் பீடிகை போடுகிறார்.

  1. மாணவர்களின் சிகை அலங்காரம் பற்றிப் பேசுகிறார் 2-219
  2. மாணவர்கள் என்ன , எவ்வளவு, எப்போது குரு தட்சிணை தரவேண்டும் என்றும் விளம்புகிறார்.

 

  1. வேதம் பயிலும் மாணவர்கள் ஆபத்துக் காலத்தில் பிராமணர் அல்லாதோரிடமும் வேதம் கற்கலாம் என்பார். அப்படியானால் வேதத்தைக் கற்பிக்கும் அளவுக்கு மற்ற ஜாதியினரும் முன்னேறியிருந்ததை மநு ஸ்ம்ரூதி காட்டுகிறது— 2-241

6.பிராமணர் அல்லாத பெண்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பகர்கிறார். 2-210

 

7.மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் பெரும் மரியாதைக்கு உரியவர்கள். அவர்கள் பிராமணர் வீடுகளில் யாக குண்டங்களில் எரியும் முத்தீக்குச் சமம் ஆனவர்கள் என்று உரைக்கிறார் 2-225

  1. மனைவி, நவ மணிகள் நன்னடத்தை கல்வி அறம் முதலியவற்றை எவரிடமும் பெறலாம் (ஜாதி வேறுபாடு இல்லை)- 2-240

இனி எஞ்சியுள்ள ஸ்லோகங்களை மிகச் சுருக்கமாகக் காண்போம்:

 

2-206 கல்வி கொடுத்த ஆசிரியர், சடங்கு செய்விக்கும் உபாத்யாயர், பெரியப்பா, மற்றும் தன்னை நல்வழிப்படுத்தியவர் (God father) ஆகியோரை குரு போல மதிக்க வேண்டும்.

2-207 கல்வியிலும் தவத்திலும் மேன்மையுடையோர், ஒரே வருணத்தில் பிறந்தோர், குருவின் புத்திரர்கள், தாயத்தார் ஆகியோரிடம் மாணவன் மரியாதை காட்ட வேண்டும்

2-208 வேதம் முழுதும் அத்யயனம் செய்த ஒருவன் சிறியவனாயினும், ஒரே வயதுடைய வனாயினும், பழைய மாணவன் ஆனாலும் அவனுக்கும் மரியாதை செலுத்தல் அவசியம்.

NO   SEX  ABUSE

 

2-209 குருவின் மகனுக்கு குருவைப் போல மதிப்பு தரலாம்; ஆயினும் அவன் காலைக் கழுவுதல், உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டுதல், எண்ணய் தேய்த்தல், குழந்தை விட்டுச் சென்ற எச்சிலை உண்ணுதல் கூடாது.

2-210 குரு பத்னியானவள் ஒரே ஜாதியானால் குருவுக்குரிய அளித்து மரியாதைகளையும் செய்க; வேறு ஜாதியானால் எழுந்து நின்று வணக்கம் செய்க

2-211 குருவின் மனைவிக்கு எண்ணை தேய்த்து விடுதல், தலை வாறுதல் முதலியன செய்தல் கூடாது.

2-212 மாணவன் இளைஞனாக இருப்பின், குருவின் மனைவி யுவதியாக இருப்பின் கால்களைத் தொட்டு வணங்காதே

2-213 பெண்கள் அலங்காரப் பிரியர்கள்; அதன் மூலம் மற்றவர்களைக் கவர்வர்; ஆகையால் கவனக் குறைவு சிறிதும் ஆகாது.

2-214 புலன் அடக்கம் உள்ளோரையும் இல்லாதோரையும் கவர்ந்து இழுக்கும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது.

2-215 தாய், சகோதரி, மகள் ஆகிய எந்தப் பெண்ணாயினும்      அவர்களுடன் தனிமையில் இருக்கக் கூடாது. புலன்களின் சேட்டை மகத்தானது. பெரிய ஆட்களையும் விழுத்தாட்டிவிடும்.

 

2-216 குருவின் மனைவியும் தானும் இளமைப் பருவத்தில் இருந்தால் உடலில் படாமல், கால்களைத் தொடாமல் வணங்க வேண்டும்

2-217 ஊரில் இருக்கையில், வெளியூர் சென்று திரும்புகையில் குருவின் மனைவி காலில் விழுந்து ஆசி பெறுக

2-218 மண்ணை வெட்ட வெட்ட ஊற்று நீர் பெருகும்; குருவைப் போற்றி  வணங்க, வணங்க  அறிவு பெருகும் ( திருக்குறளிலிலும் உளது)

 

STUDENTS’ HAIR STYLE

2-219 பிரம்மச்சாரி மாணவன் சடை வைத்துக் கொள்ளலாம்; குடுமி வைத்துக் கொள்ளலாம்; மொட்டை அடித்துச் சில இடங்களில் அரை வட்டாக சிரைத்து, சடை வைத்துக் கொள்ளலாம். சூரியன் உதிக்கும், மறையும் சந்தியா காலங்களில் தூங்கக் கூடாது.

 

2-220 ஒருவன் சூரிய உதயத்துக்குப் பிறகு தூங்கினால் பகலிலும் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால் தூங்கினால் இரவிலும் காயத்ரி மந்திரம் ஜபித்து உண்ணாவிரதம் இருப்பதே பரிகாரம்.

2-221 பரிகாரம் செய்யாவிடில் நரகத்தில் வீழ்வர்.

2-222 அந்தி வேளைகளில் உறங்காமல் ஆசமனம் செய்து ஜபம் செய்ய வேண்டும்

ANY CASTE IS OK

2-223 நல்ல காரியங்களை நாலாம் வருணத்தார் செய்தாலும், பெண்கள் செய்தாலும் தருமத்துக்கு எதிராக இல்லாதவரைக்கும் ஏற்கலாம்

2-224 அறம் பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) இவைகளில் இதைவிட அது பெரிதா, இது பெரிதா என்பர் ; நான் சொல்கிறேன் ஒன்றுக்கு ஒன்று முரண்படாதவாறு மூன்றுமே முக்கியம்

2-225 ஞானம் தரும் குரு=கடவுள், பிறவி தந்த தந்தை= பிரம்மா; தன்னைத் தாங்கிய தாய் = பூமிதேவி,  அண்ணன் = தனது மறு உரு என்று அறிக

 

2-226 தான் துன்பம் அடைந்தாலும் குரு, தாய், தந்தை, மூத்தோன் ஆகியோரை அவமதிக்கக் கூடாது.

 

RESPECT THE GREAT THREE

2-227 மாதா, பிதா, குரு ஆகிய மூவருக்கும் எத்தனை பிறவி எடுத்தாலும் நன்றிக் கடனைச் செலுத்த முடியாது

2-228 தாயார், தந்தை, குரு ஆகிய மூவரின் விருப்பப்படியே அனைத்தையும் செய்க; அல்லது அவை பலிக்காது

2-229 மூவரையும் வழிபடுவதே சிறந்த தருமம். அவர்கள் அனுமதியுடனே தரும காரியங்களைச் செய்க

 

2-230 அந்த மூவரும் முத்தீயாக, மூன்று ஆசிரமங்களாக, மூன்று வேதங்களாக, மூன்று உலகங்களாக சிறந்து விளங்குகிறார்கள்

2-231 தந்தை கார்கபத்னி தீயாகவும், தாய் தட்சிணாக்னி தீயாகவும், குரு ஆஹவனீய தீயாகவும், முத்தீயாக ஒளி வீசுவர்

2-232 மூவரிடம் பக்தியுடையோன் மூன்று உலகங்களையும் வென்று சூர்யாதி தேவர்கள் போல ஒளி வீசுவான்.

 

2-233 தாயின் பக்தியால் இம்மை இன்பமும் தந்தையின் மீதான பக்தியால் மறுமை இன்பமும், குருவின் மீதுள்ள பக்தியால் பிரம்மலோகமும் கிடைக்கும்.

 

2-234 மூவரையும் ஆதரிப்பவர்கள் செய்வதெல்லாம் உருப்பெறும்/ பலிக்கும். மூவரையும்  ஆதரிக்காதோர் செய்வன பலிக்காது

 

2-235 மூவரும் உயிர் வாழ்கையில் வேறு எல்லா தர்மங்களையும் விட அவர்களுக்குப் பணிவிடை செய்வதே மேலானது

 

2-236 அவர்களுடைய அனுமதியுடன் மறுமை இன்பத்துக்குரிய விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்; முடிந்தவுடன் அவர்களிடம் சொல்லவும்.

 

2-237  இவர்களுடைய பணிவிடையே மேலானது; ஏனையவை இரண்டாம் தரமானவை

SHUDRAS AND LOW CASTE GIRLS OK

2-238 உயர்ந்த அறிவை சூத்திரனிடமும், மோக்ஷ மார்கத்தைச் சண்டாளனிடமும், குணமுள்ள பெண்ணை தாழ்ந்த குலத்தில் இருந்தும் கூட ஏற்கலாம்

2-239 விஷத்திலிருந்து அமுதத்தைதைப் பெறலாம்;

சிறுவனிடமிருந்தும் நல்ல கருத்தைக் கற்கலாம்;

பகைவனிடமிருந்து நல்லொழுக்கத்தையும் கற்கலாம்;

அழுக்கான பொருளிடமிருந்து தங்கத்தை எடுக்கலாம்.

2-240 பெண்கள், நவ ரத்தினங்கள், கல்வி, அறம் ஒழுக்கம், நல்ல உபதேசம், கலைகள் ஆகியவற்றை எவரிடமிருந்தும் எடுத்துக் கொள்க.

 

ஏனைய வருணத்தாரிடம் கற்றல்

 

2-241 பிராமணர் இல்லாதபோது ஏனைய இரு வர்ணத்தாரிடம் வேதம் கற்கலாம்; படிப்பு முடியும் வரை பிராமண குருவுக்குள்ள அத்தனை மரியாதையும் தருக.

 

2-242 மோக்ஷம் விரும்பும் மாணவன் க்ஷத்ரிய, வைஸ்ய குருவுடனோ, அனுஷ்டானம் இல்லாத பிராமண குருவுடனோ வசிக்கக் கூடாது.

2-243 இல்லற இன்பம் வேண்டாதோன் வாழ்நாள் முழுதும் குருவுக்குச் சேவை செய்து நைஷ்டிக பிரம்மச்சாரியாக காலம் தள்ளலாம்

2-244 இறக்கும் வரை இப்படி குருவுக்கு மரியாதை செய்பவன் மறுமை இன்பம் அடைவான்

 

குரு தட்சிணை

 

2-245 வேதம் பயிலும் முன், குருதட்சிணை கொடுக்காதே; பட்டமளிப்பு விழாவின்போது- அதாவது படிப்பு நிறைவாகி வீடு திரும்பும் போது, சக்திக்கேற்ப குரு தட்சிணை கொடு

 

2-246 குருவுக்கு ஏற்ற தட்சிணை- நிலம், பொன், பசு, குதிரை ஆசனம், தானியம், உணவு, ஆடைகள், குடை, செருப்பு

 

2-247 குரு இறந்து விட்டால் அவரது மகனிடம் அல்லது தாயத்தாரிடம் பணிவிடை செய்க

 

2-248 இவர்கள் யாரும் இல்லை என்றால் குரு செய்த ஹோம குண்டத்தில் வாழ்நாள் முழுதும் ஹோமம் செய்க

 

2-249 இதுவரை சொன்ன நோன்புகளைக் கடைப்பிடிக்கும் மாணவன் இக, பர சௌபாக்யம் அடைவான். அவனுக்கு மறுபிறவி கிடையாது.

இரண்டாவது அத்தியாயம் இத்துடன் முடிகிறது.

–SUBHAM–

இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)

இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)


WRITTEN by London Swaminathan 

Date: 24 May 2018

Time uploaded in London – 6-26 am (British Summer Time)

Post No. 5042


PICTURES ARE FROM BHARAT  KALYAN; THANKS
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தாய்லாந்தில் இந்துக் கடவுள்கள்- 1

 

தாய்லாந்தில்  ஏராளமான இந்துக் கடவுளரின் சிலைகளும் ஓவியங்களும் உள. பிள்ளையார், பிரம்மா முதல் குபேரன், காலா வரை உண்டு. குறிப்பாக காலத்தால் அழியாத காவிய நாயகன் ராமனுக்குப் பல சிலைகள், ஓவியங்கள்! எண்ணிலடங்கா விக்ரஹங்கள், சித்திரங்கள்!!

தாய்லாந்திய கலைச் செல்வங்களைக் கண்டு ரஸிக்க அந்த நாட்டின் ஏழு வரலாற்றுக் காலங்களை அறிதல் இன்றியமையாதது; அவையாவன:–

 

 

த்வாராவதி காலம் – 6 முதல் 11 நூற்றாண்டு வரை

 

ஸ்ரீ விஜய காலம் – 8 முதல் 13 நூற்றாண்டு வரை

 

லோப் புரி காலம் (லவ புரி) –11 முதல் 13 நூற்றாண்டு வரை

 

சுகோதையா காலம் –13 முதல் 14 நூற்றாண்டு வரை

 

அயுத்தயா காலம் (அயோத்யா)- 17 முதல் 18 நூற்றாண்டு வரை

 

தோன்புரி (தன புரி) காலம்- 1767 முதல் 1782 வரை

பாங்காக் காலம் (அண்மைச் செல்வங்கள்)- 1782 முதல் இன்று வரை.

 

ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் கலை வளர்ச்சி நடந்தது. குறிப்பாக கம்பபோடியாவிலுள்ள க்மேர் (KHMER) இந்து அரசர்களின் செல்வாக்குப் பெருகப் பெருக இந்துக் கலை வளர்ச்சி பெற்றது.

ராமாயண சிற்பங்கள் உள்ள கோவில்கள்:

 

1.ப்ரஸாத் பனம் ரங் கோவில்

2.பிமை கோவில்

3.வாட் ப்ரா கியவோ (மரகத புத்தர் கோவில்)

  1. வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்
  2. வட் நங் பியாக விஹார

 

இவைகளில் கடைசி இரண்டு ( வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்,

வட் நங் பியாக விஹார)  கோவில்களில் 152+ 152= 304 சிற்பங்கள் ராமாயணக் காட்சிகளைச் சித்தரிப்பதாக அங்கு இரண்டு  ஆண்டுக் காலம் தங்கி ஆராய்ந்த தில்லிப் பலகலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் ஸத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார்.

 

ஒரு கோவிலில் சலவைக் கற் சிற்பங்கள் அது தவிர மரச் சிறபங்கள். மற்றொரு கோவிலில் கற் சிலைகள். இவை அனைத்தும் கோவிலைச் சுற்றி செதுக்கப்பட்டுள்ளன அல்லது வரையப் பட்டுள்ளன.

 

பர்மா செய்த அட்டூழியம்

1767 ஆம் ஆண்டில் பர்மியர்கள் புகுந்து கிடைத்த நூலகங்கள், கோவில்கள் எல்லாவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினர். அதனால் பழைய செல்வங்கள் அழிந்தன. அவர்கள கைப்படாத இடங்களில் உள்ள கலைப் பொக்கிஷங்கள் தப்பிப் பிழைத்தன.

பெரும்பாலும் 300 ஆண்டுப் பழமை உடைத்து. ஏனைய பழைய சிற்பங்களை பர்மியர்கள் தீக்கிரையாக்கிவிட்டனர். அசுர சக்தியின் ஆவிர்பாகங்கள்; நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீக்கிரையாக்கிய துலுக்கப் படைகள் போன்ற தீய சக்திகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் தேசீய மியூசியம் உளது. அந்த அருங் காட்சியகத்தில் இந்திரஜித், ராவணன் முதல் இராமன் வரை பல கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘தாய்’ மக்களின் இதய கீதம் இராமாயணம். பௌத்த மத நாடானானும் ஏதோ ராமாயணம் தமது நாட்டிலேயே நடந்ததாக நினைக்கின்றனர். வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரியாத புதிய ராமாயண கதா பாத்திரங்களையும் படைத்துள்ளனர். அனுமானின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி மீன் தேவதை; அவர்களுக்குப் பிறந்த பிள்ளையும் உடல் மனித முகத்துடனும் வால் (கால் பகுதி) மீனின் துடுப்புகளாகவும் காட்டப்பட்டுள்ளன. வர்ண ஜாலம் ஜொலிக்கும் ராமர், லெட்சுமணர், அனுமார் ஓவியங்களைப் பார்க்க விநோதமாக இருக்கும்.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் வேத கால இந்திரன், யமன், குபேரன் வருணன், பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் பற்றிக் காண்போம்.

 

இத்துடன் இணத்துள்ள  ஆங்கிலப் பக்கங்களைப் படியுங்கள்; ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் எப்படித் திரிக்கப்பட்டுள்ளன என்பது விளங்கும்

 

 

தொடரும்……….

சுபம்

புத்த மத அதிசயம்! தண்ணீர் மீது நடந்தான் அரசன்!! (Post No.5039)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 17-28 (British Summer Time)

Post No. 5039

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
 

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘அங்குத்த நிகாய’ என்ற புத்த மத நூலுக்கு புத்தகோஷர் எழுதிய பாஷ்யத்தில் பின்வரும் சம்பவத்தை விவரிக்கிறார்:

 

கப்பினா என்ற அரசன் 1000 மந்திரிகளுடன் கங்கைக் கரைக்குச் சென்றான்.

 

(இந்துக்கள் 60,000 என்பதை பயன்படுத்துவது போல பௌத்தர்கள் 500 அல்லது 1000 என்ற எண்ணைப் பயன்படுத்துவர். பொருள்= அதிகமான)

 

கங்கை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மன்னன் சொல்கிறான்: படகுகள் செய்ய நம்மிடம் அடிமை வேலை ஆட்களோ நம்முடைய சேவகர்களோ இல்லை. ஆனால் வானம் முதல் பூமி வரை புகழும், அருளும் பரப்பிய நம்  குருநாதர் உண்மையிலேயே ஞானம் பெற்ற புத்தராக இருப்பாரானால் என்னுடைய குதிரைகளின் குளம்புகளில் கூடத் தண்ணீர் படாமல் இருக்கட்டும். இதைச் சொல்லிவிட்டு மன்னன், தனது குதிரைகளை ஆற்றின் மீது நடக்கவிட்டான். குதிரைகளின் காலில் ஒரு துளி கூடத் தண்ணீர் படவில்லை மறு கரைக்குச் சென்றனர்.

 

நெடுந்தொலைவு சென்றனர். மீண்டும் ஒரு ஆறு வந்தது. அதுவோ ஆழமான நதி. ஆயினும் முன்னர் சொன்ன ஒரு சொல்லை வைத்துக் கொண்டே துணிச்ச்சலாக குதிரைகளை விட்டனர். அவை நனையாமல் ஆற்றின் மீது நடந்து சென்றன. கடைசியாக சந்திரபாகா என்ற பெரிய நதியை அடைந்தனர். அங்கும் புத்தர் பெயர் சொல்லி எளிதில் நதி மீது நடந்தனர். இறுதியில் மன்னன்   புத்தர் காலடியில் சரண் புகுந்தான்.

அவனது மஹாராணி அநோஜாவும் இச்செய்தியைக் கேட்டாள். அவள் 1000 ரதங்களுடன் புறப்பட்டாள். கங்கை நதிப் பிரவாஹத்தைக் கண்டவுடன் தன் கணவன் செய்தது போலவே புத்தர் உண்மையான குருவானால் எனக்கும் வழி திறக்கட்டும் என்றாள். அப்படியே நிகழ்ந்தது.

 

ஆக ரிக் வேதத்தில் துவங்கி பைபிளின் புதிய ஏற்பாடான பீட்டர் சம்பவம் வரை இந்து, சமண, பௌத்தர்கள் ‘நீரின் மேல் நடந்த அற்புதம்’ உள்ளது (விவரங்களை முதல் இரண்டு கட்டுரைகளில் காண்க)

 

இன்னொரு அற்புதமும் புத்தர் கதையில் இணைக்கப்பட்டுள்ளது. மன்னன் கப்பினாவும், மஹா ராணி அநோஜாவும் புத்தர் பக்கத்தில் வந்து நின்ற போது ஒருவரை ஒருவர் காண முடியாதபடி புத்தர் செய்துவிட்டாராம். ஏனெனில்

காதல் மலர்ந்து விடும்; காமம் பரவிவிடும் என்று.

 

இருவரும் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னர் அந்த மாயத் திரையை புத்தர் விலக்கி விட்டாரம். அதாவது ஒருவரை ஒருவர் கண்டனர். ஆனால் காமம் மலரவில்லை.

 

இதே போல மஹாவம்ச பாஷ்யத்திலும் உளது. இவை எல்லாம் ரிக்வேத துதியின் எதிரொலி என்றால் மிகை ஆகாது.

 

திலீபன் என்ற ரகுகுல மன்னன் நீரின் மீது சென்ற போது அவன் தேர் தண்ணீரில் மூழ்கவிலை என்று மஹாபாரதம் பகரும்.

 

 

 

இதே போல யசா என்பவர் புத்தரிடம் ஓடிச் சென்றவுடன் அவனுடைய அம்மாவுக்கு வருத்தமாம; கணவனை விரட்டி மகனக்கூட்டி வர அனுப்பினாள் புத்தரிடம் அவர் போனார். என் மகன் இங்கே வந்தானா? என்று கேட்டதற்கு புத்தர் ஈரெட்டாக,  மழுப்பலாகப் பதில் தந்தார்; யசனை கண்ணுக்குத் தெரியாதபடி மறையச் செய்து விடுகிறார்.

 

 

அவனது அப்பாவுக்கு ஞான உபதேசம் செய்து மதம் மாற்றிய பின்னர் கண்ணுக்குத் தெரியாமல் வைத்திருந்த யசனக் காட்டுகிறார். யசனைத் தாயின் துயரத்தைத் துடைக்க த்நதை அனுப்பிய காலையில் புத்தரும் அவஓடு சென்று யசனின் தாயார், மனைவி மகள் ஆகியோரையும் மதம் மாற்றுகிறார்.

 

இப்படிப் பல கதைகள் பௌத்த நூல்களில்!! புத்தரே நீரின் மீது நடந்ததாகவும் கடலின் மீது பறந்து இலங்கைக்கு வந்ததாகவும் சில கதைகள் உண்டு. ஏசு பற்றியும் இப்படிப் பல கதைகள் உண்டு.

–சுபம்–

ரமணரின் கருணை மழை! (Post No.5031)

Written by S NAGARAJAN

 

Date: 21 MAY 2018

 

Time uploaded in London –  6-33 AM   (British Summer Time)

 

Post No. 5031

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ரமண தரிசனம்

அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!

 

ச.நாகராஜன்

1

பகவான் ரமண மஹரிஷியிடம் பக்தர் ஒருவர் வந்தார்.

அவர் கேட்டார்: கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் தானே!

ரமணர் : ஆமாம்.

பக்தர் : அவரது கருணையும் அனைவருக்கும் பொதுவானது தானே!

ரமணர் : ஆமாம்

பக்தர் : அப்படியானால் அவர் எனக்கு மட்டும் ஏன் கருணை காட்ட மாட்டேன் என்கிறார்.எப்பொழுதும் துன்பம் தானே எனக்கு வருகிறது.

ரமணர் : நீ பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருக்கிறாயே. அதை நிமிர்த்தி வைத்தால் தானே கருணை மழை பொங்கித் ததும்பும்!

 

பக்தர் புரிந்து கொண்டார். இறைவன் அனைவருக்கும் சமமான கருணையைத் தான் பொழிகிறார். அதை ஏற்க நாம் தயாராக – பாத்திரத்தைத் திறந்து வைத்து – இருக்க வேண்டும்.

மனதைத் தூய்மையாக, ஏற்கக்கூடிய பக்குவ நிலையில் வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரம் சிறிய அளவா, அண்டாவா அல்லது மிகப் பெரியதா என்பதையும் நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறைவனின் கருணை மழையைப் போலவே பகவான் ரமணரின் கருணை மழையும் அனைவருக்கும் பொதுவானது.

 

2

பகவானிடம் அருளாசி பெற பாரதத்தின் முதல் ராஷ்ட்ரபதி பாபு ராஜேந்திர பிரசாத் வந்தார். அருளாசி பெற்றார்.

ராஜாஜி வந்தார். மகாகவி பாரதியார் வந்தார். ஏராளமான துறவிகள், பேராசிரியர்கள் வந்தனர். ரமண தரிசனத்தால் பெரும் பேறு பெற்றனர்.

அனைவர் மீதும் அவரது கருணை மழை சமமாக இருந்தது.

உயர்தட்டில் இருந்தவர்களுக்குத் தான் அவரது கருணை என்பது இல்லை; ஏழையாக, சாமானியராக, எழுத்தறிவில்லாதவராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் அவர் பொது தான்; அவர்கள் மீதும் அவரது கருணை அளப்பரியதாக இருந்தது.

ஒரு சம்பவம்.

பூவன் என்ற ஆட்டிடையனின் ஆடு தொலைந்து விட்டது. ஒரே கவலை. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. ஆடு கர்ப்பமாக வேறு இருந்தது. அவனுக்கு நம்பிக்கையே போய் விட்டது. காட்டு மிருகங்கள் அதை அடித்துத் தின்று விட்டதோ!

ஒரு நாள் ஆசிரமம் வழியே சென்று கொண்டிருந்த அவன் பகவானைப் பார்க்க, அவர் அவனை எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். பூவன் தனது ஆடு தொலைந்த விஷயத்தைச் சொன்னான். பகவான் வழக்கம் போலப் பேசாமல் இருந்தார். பிறகு அவனிடம் சில கற்களைத் தூக்கத் தனக்கு உதவுமாறு கேட்டார். அவனும் சந்தோஷமாக அந்த வேலையைச் செய்தான். அந்தப் பணி முடிந்ததும் பகவான், “இந்தப் பக்கமாகப் போ” என்று ஒரு வழியைச் சுட்டிக் காட்டினார். “அங்கு உன் ஆட்டை வழியில் காண்பாய்” என்றார் அவர். அதே மாதிரி தனது ஆட்டை இரண்டு குட்டிகளுடன் அவன் கண்டான்!

பூவன், “என்ன அற்புதமான பகவான் இவர்! அவரது வார்த்தைகளின் சக்தியைப் பாருங்கள். என்னப் போன்ற ஒரு ஏழையைக் கூட அவர் மறக்கமாட்டார். எனது பையன் மாணிக்கத்தைக் கூட அவர் அன்புடன் நினைவு வைத்துக் கேட்கிறார். பெரியவர்கள் எப்போதுமே அப்படித்தான்.  கோடையில் பசுக்களைப் பார்க்கும் சிறு பணியை அவருக்காகச் செய்வதில் எனக்கு சந்தோஷம்.” என்றான்.

 

முனகல வெங்கடராமையா தொகுத்திருக்கும் அற்புத நூலான

Talks with Sri Ramana Maharshi  என்ற நூலில் 16 டிசம்பர் 1936 தேதியிட்ட பதிவு இது: (ஆங்கில மூலத்தை அப்படியே கீழே காணலாம்.)

 

Poovan, a shepherd, says that he knows Sri Bhagavan since thirty

years ago, the days of Virupakshi cave. He used at times to supply

milk to the visitors in those days.

Some six years ago he had lost a sheep, for which he was searching

for three days. The sheep was pregnant and he had lost all hopes of

recovering her, because he thought that she had been set upon by

wild animals. He was one day passing by the Asramam, when Sri

Bhagavan saw him and enquired how he was. The man replied that

he was looking out for a lost sheep. Sri Bhagavan kept quiet, as is

usual with Him. Then He told the shepherd to help in lifting some

stones, which he did with great pleasure. After the work was finished,

Sri Bhagavan told him: “Go this way”, pointing the footpath towards

the town. “You will find the stray sheep on the way”. So he did and

found the lost sheep with two little lambs.

 

He now says, “What a Bhagavan is this! Look at the force of his

words! He is great! He never forgets even a poor man like me. He

remembers my son Manikkam also with kindness. Such are the great

ones! I am happy when I do any little work for Him, such as looking

to the cows when they are in heat.

 

3

இதே போல பகவானுக்கு பௌர்ணமி தோறும் க்ஷவரம் செய்ய வரும் நடேசனும் அவர் பால் அதீத பக்தி கொண்டவர். பகவானுக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் தான் அவர் தன் வேலையைத் தொடங்குவார். ஒரு நாள் மலையில் வழியில் பார்த்த பகவானை அவர் நமஸ்காரம் செய்ய, “இங்கு எதற்கு? என்றார்.

என்ன அற்புதமான குறிப்பு!

பௌர்ணமி தோறும் கோசாலையில் க்ஷவரம் செய்ய வரும் போது செய்யும் நமஸ்காரமே போதுமே என்று கருணையுடன் குறிப்பால் உணர்த்த அவர் கூறிய அன்புச் சொற்கள் அது.

இன்னொரு முறை நடேசன் அவசரமாக செல்ல வேண்டிய ஒரு தருணத்தில், அவன் போக வேண்டும்; ஆனால் சாப்பிட்டிருக்க மாட்டானே என்றார் பகவான்.

குறிப்பறிந்த தொண்டர் உடனடியாக சமையலறைக்குச் சென்று நடேசனுக்கு உணவு கொண்டு வந்தார்.

தழுதழுத்த குரலில் சொன்னார் நடேசன்: “பகவானுக்கு அனைவருமே சமம் தான். பொதுவாக அனைவரும் உண்ட பின்னரே நாங்கள் உண்பது வழக்கம். இன்று பாருங்கள், பகவானின் கருணையை! என்றார்.

எந்த வித பேதமுமின்றி பொழிவதே இறைவனின் கருணை.

அந்த அவதாரமாக வந்த பகவானுக்கும் அதே கருணை இருப்பது இயல்பு தானே!

***

சதி – சதியா, சரியா? (Post No.5012)

Written by S NAGARAJAN

 

Date: 15 MAY 2018

 

Time uploaded in London –  5-58 AM   (British Summer Time)

 

Post No. 5012

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சதி  – சதியா, சரியா?

 

ச.நாகராஜன்

1

சமீபத்தில் வந்த நீதி மன்றத் தீர்ப்பு வயதுக்கு வந்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை என்று கூறுகிறது.

மணமாகாமல் சேர்ந்து வாழலாம்; பின்னர் பிரியலாம்!

கண்டதும் காமம்; தினவு தீர்ந்ததும் பிரிவு!

நினைத்தாலே சற்று திகைப்பாக இருக்கிறது. இது எதில் கொண்டு போய் விடுமோ என்று!

நீதிமன்றத் தீர்ப்பை விமரிக்கக் கூடாது. மூச்!

2

 

கணவன் இறந்தவுடன் உயிர் வாழ விரும்பாமல் உடன்கட்டை ஏறி சதியாக விரும்பியோர் நமது சரித்திரத்தில் ஏராளம் பேர் உண்டு.

இதைத் தீய பழக்கம் என்று ஆங்கில அரசு தடை செய்தது.

சதி ஒரு பெரிய சதி. தேவையற்றோர் அதைப் பயன்படுத்தி கணவன் இறந்து விட்டால் அனைத்து விதவைகளையும் – கொலை செய்கிறார்கள் என்பது அவர்களின் வாதம். இப்படிச் செய்யப்பட்டால் அது கொலை தான்! ஆனால் அப்படி நடக்கவில்லை!

உண்மையில் கணவன் இறந்த பின்னர் கைம்மை நோன்பு என்பதையே பெண்களில் பெரும்பாலானோர் அனுஷ்டித்து வந்தனர்.

இதைத் தமிழில் சங்க இலக்கியம் பல பாடல்களில் விரிவாகக் கூறுகிறது.

உடன்கட்டை ஏறுதலைப் பற்றி ஒரு பாடலும் கைம்மை நோன்பைப் பற்றிப் பல பாடல்களும் தெரிவிக்கின்றன.

இதே போல பாரதத்தின் இதர மொழி இலக்கியங்களும் விரிவாகக் கைம்மை நோன்பைப் பற்றி விவரிக்கின்றன.

ஆகவே சதி என்பது ஒரு சதி இல்லை.

“பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட

யானோ அரசன்? யானே கள்வன்

மன்பதைக் காக்கும் தென்புலம் காவல்

என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

என்று வருந்தி உரைத்து, பாண்டியன் உயரமான சிம்மாசனத்திலிருந்து விழுந்து உயிர் துறந்ததை சிலப்பதிகாரம் விளக்குகிறது. உடனடியாக பாண்டிமாதேவியும் அந்தக் கணமே

உயிர் துறந்ததை

“கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று

இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி”

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

தலையாய கற்பு என்று இது போற்றப்படுகிறது.

 

 

3

சங்க இலக்கியத்தில் அகநானூறு காதலைப் பற்றி மிக அருமையாக விளக்குகிறது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்பதால் இரு மனம் ஒன்றி சாகும் வரை சேர்ந்து வாழ்வதே உண்மைக் காதல் என்பதை அறிகிறோம்.

1923ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அகநானூறு (மூலமும் பழைய உரையும் ) என்ற நூலை ஆராய்ந்து அதைச் சரிவர பிரசுரிக்க உதவி செய்து அதற்கு முன்னுரையும் வழங்கியவர் ஸேது சமஸ்தான வித்வானான ரா.இராகவையங்கார் ஆவார்.

அவர் அந்த நூலில் தனது முன்னுரையில் கூறுவதில் ஒரு பகுதி இது:

“இந்நூலில் கூறப்படும் அகத்திணையொழுக்கம் நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துச் சிலர் வதுவை போலாது எப்படியானுந் தணப்பரியதோர் கூட்டம் என்பது

“யாக்கைக், குயிரிடத் தன்ன நட்பி னவ்வுயிர்

வாழ்தலன்ன காதல்

சாத லன்ன பிரிவரி யோனே” (பாடல் 334)

எனவும்,

“பிரிவின் றியைந்த துவரா நட்பி

னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே” (பாடல் 12)

எனவும் வருமிடங்கள் நோக்கி உய்த்துணர்ந்து கொள்ளலாம்.”

 

முன்னுரையில் இன்னொரு பகுதி இது:

“இன்னும் ஆண் பெண் இருவரும் இல்வாழ்க்கை நடாத்தற்கண் ஒத்த பண்பு இன்றியமையாதென்பது இந்நூலுள்,

“அன்பு மடனுஞ் சாயலு மியல்பு

மென்பு நெகிழ்க்குங் கிளவிய பிறவு

மொன்றுபடு கொள்கையோ டோராங்கு முயங்கி” (பாடல் 225)

என வருதலால் அறியப்படும். ஈண்டு அன்பு என்பது ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. மடன் என்பது ஒருவர் குற்றம் ஒருவர் தெரியாமை. சாயல் என்பது மென்மைத் தன்மை. இயல்பு என்பது ஒருவரை ஒருவர் ஒளித்தொழுகாமை. என்பு நெகிழ்க்குங் கிளவி என்பது உடலின் வலிதாகிய என்பையும் நெகிழ்விக்கும் ஆர்வ மொழி. இவையும் பிறவும் இருவர்க்கும் ஒரு தன்மைப்பட்ட கொள்கையுடன் இருவரும் ஒருவராகவே சேர்ந்திருத்தலைக் கூறுதலான் பண்டைக் காலத்து இல்வாழ்க்கை இயல்பு ஒருவாறு தெரியப்படும்.”

 

அருமையான மேற்கண்ட உரையால் பண்டைக் காலத்தில் தமிழகத்தில் காதல் எப்படி உணரப்பட்டது, இல்லறம் எப்படி நடத்தப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

உடல் மட்டும் இரண்டு; உயிர் ஒன்று என்ற நிலையில் ஒரு உடல் போய் விட்ட நிலையில் இன்னொரு உடலும் தன் விருப்பத்தால் போக அனுமதிப்பதே சதி.

இது கொச்சைப்படுத்தப் பட வேண்டிய ஒரு விஷயமல்ல.

ஆங்கிலேயரின் கல்யாண ஒழுக்கம், “நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணவும் இக்காலத்துக்” கல்யாண ஒழுக்கம்! இது காதல் அல்ல; கீழ்த்தரக் காமம். இதன் படி ஒருவனுக்குப் பல பெண்களும் ஒருத்திக்குப் பல கணவன்களும் இருக்கலாம்! இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் வளர்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப இருக்கும்.

ஆக சதி பற்றிய ஆங்கிலேயரின் நோக்கு கோணல் நோக்கு!

4

ஒருவன் கொலை செய்கிறான். அவனை விசாரித்த நீதிபதி அவன் கொலை செய்தது உறுதி என்பதை அறிந்து கொண்ட பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.

அவனும் ஒரு உயிரைப் பறித்தான்.

நீதிபதியும் ஒரு உயிரைப் பறிக்கிறார்.

செயல் ஒன்று தான்.

ஆனால் கொலைகாரனைப் பழிக்கிறோம்; நீதிபதியைப் புகழ்கிறோம்.

போர் நடக்கிறது. நமது படைவீரன் ஒருவன் எதிரியால் கொலை செய்யப்பட்டு விட்டான்.

அவனுக்கு உரிய மரியாதை தரப்படுகிறது. நாடே துக்கத்தில் பங்கு கொள்கிறது.

அதே சமயம் நமது வீரர்கள் எதிரிகளைக் கொல்கின்றனர். உயிர் பறிக்கும் அந்தச் செயலை போற்றிக் கொண்டாடுகிறோம். எதிரிகளை வெட்டி வீழ்த்தியவர்களை வீராதி வீரர்கள் என்று கொண்டாடுகிறோம்.

செயல் ஒன்று தான் என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு செயலை இனம் காண்கிறோம்.

சதியில் ஒரு உயிர் போகிறது என்றாலும் நோக்கத்தின் அடிப்படையில் அது  ஹிந்து சரித்திரத்தில் புகழிடம் பெற்றது.

அலாவுதீன் கில்ஜியின் அந்தப்புர அழகியாகத் திகழ்வதை விட -அளப்பரிய செல்வத்துடன் ஆசைநாயகியாகத் வாழ்வதை விட -தீக்குளித்து உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முடிவெடுத்த சித்தூர் ராணி பத்மினி மங்கையரில் மாண்புமிக்க திலகம் அல்லவா?

பாரத நாட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் அந்தக் கற்புக்கரசியைக் கொண்டாடுவது சரி தானே!

அந்த மங்கையர் திலகத்தை கொச்சைப்படுத்தும் ஒரு திரைப்படத்தைக் கண்டிப்பது சரி தானே!

5

சதியைப் பற்றி அலசி ஆராய்ந்து, ஆங்கில வார இதழான Truth தனது 20-4-2018 (தொகுதி 86 இதழ் 1) இதழில், சில கேள்விகளை முன் வைக்கிறது.

அதை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு தருகிறோம்:

“If Sati is savage, barbaric and inhuman what about war? Is it not infinitely more so? Why not the whole army, with its generals and officers incarcerated for an attempt  of  suicide? Why are not expeditions for climbing the Himalayas and for Poles penalized? What about abortion, medical and non medical? What about wholesale and universal slaughter to fill the belly? Is it savage or human? What is hunger-strike? What is fast unto death? What is the  onslaughts through Satyagraha? What is birth – control? What is family – planning, a fine euphemy for diabolical foeticide? Is it because these are sinner’s paradise and Sati is not?”

 

இந்தக் கேள்விகளுக்கு ஹிந்து மதப் பழக்கங்களை மட்டும் எள்ளி நகையாடி எதிர்க்கும் பகுத்தறிவுச் செல்வங்கள் பதில் சொல்வார்களா?

“திராவிடத் தம்பிகள்” தவறான கொள்கைகளுக்காகவும் தங்களின் முக்கியத்துவம் குன்றி விடக் கூடாது என்பதற்காகவும் அவ்வப்பொழுது போராட்டங்கள் நடத்தி அப்பாவிகளைத் தூண்டி விட்டு உணர்ச்சி வசப்பட வைத்து தீக்குளிக்க வைத்து, அவர்களைத் தியாகிகளாகச் சித்தரிக்கும் கேவலத்தையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்!

சிந்தித்தால் ஒன்றுபட்டு இருக்கும் பாரத சமுதாயத்தைப் பல பிளவுகளாக்கி அதைச் சிதைப்பதே இவர்களின் தீய நோக்கம் என்பது தெரிய வரும்!

இந்தத் தீய நோக்கம் நிறைவேறாது என்பதைக் காலம் உணர்த்தும்.

 

***

 

 

 

 

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)

Written by London Swaminathan 

 

Date: 12 May 2018

 

Time uploaded in London – 8-43 am (British Summer Time)

 

Post No. 5003

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

தாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.

 

தாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.

 

இங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.

 

ஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.

 

ராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.

மன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.

‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’

 

1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.

முதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.

 

இதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.

 

சிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.

 

ஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.

இதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.

 

இதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.

ஏர் உழும் பணி

அந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.

 

Thai Rajaguru with Kanchi Shankaracharya

பணி

 

அந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில்  இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.

ராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.

 

ஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.

ஏழு பொருள் சோதனை!

ஏர்  உழுதல்  முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எதன் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

 

காளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.

இது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.

–சுபம்–

 

 

தாய்லாந்தில் ஒரு அதிசயக் கோவில் (Post No.4999)

Written by London Swaminathan 

 

Date: 11 May 2018

 

Time uploaded in London – 13-40 am (British Summer Time)

 

Post No. 4999

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

முதலிலேயே ஒரு உண்மையச் சொல்லி விடுகிறேன். போகாத இடம் பற்றி நான் எழுதுவதில்லை. ‘கண்ணால் கான்பதே மெய், காதால் கேட்பதெல்லாம் பொய்’- என்ற கொள்கை உடையவன் நான். ஆயினும் இப்பொழுது தாய்லாந்து பற்றி ஸத்ய வ்ரத சாஸ்திரி எழுதிய புஸ்தகத்தைப் படிக்கையில்தான் இப்படி ஒரு இடம் இருப்பதே தெரிந்தது. ஆகையால் அதை தமிழ் கூறு நல்லுலகத்துக்கும் செப்புவோமே என்ற நல்லெண்ணத்தில் எழுதுகிறேன். ஏனெனில் இது அதிசயங்கள் நிறைந்த கோவில்.

 

எங்கே உள்ளது?

தாய்லாந்தில் பூரிராம் (ராம புரி) மாகாணத்தில் உளது.

இடத்தின் பெயர் பனம் ரங். இது க்மேர் (கம்போடிய) கட்டிட பாணியில் அமைந்த கோவில். இந்து சிலைகளும், சின்னங்களும் உள

எவ்வளவு பழமையானது?

பத்தாம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி இருக்கலாம்.

 

அது எப்படித் தெரிந்தது?

கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் முதலிய ஆலயங்களின் தாக்கம் இதில் இருப்பதாலும் சில கல்வெட்டுகளாலும் தெரிகிறது,

இதன் சிறப்பு ஏன் அங்கோர்வட் (கம்போடியா), போரோ புதூர் (ஜாவ, இந்தோநேஷியா போலத் தெரியவில்லை?

இப்பொழுதுதான் யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் இதைப் பாரம்பர்ய சின்னமாக அறிவிக்க அணுகியுள்ளனர்

தாய்லாந்து அரசும்

தபால்தலைகள் முதலியன வெளியிட்டு இதன் அருமை, பெருமைகளை உலகிற்குப் பறையறிவித்து வருகின்றது.

 

இளம் சிவப்பு மணற்கற்களைக் கொண்டு ஒரு குன்றின் மேல் கோவிலைக் கட்டி இருக்கின்றனர். இது சிவ பெருமான் குடிகொண்டுள்ள கயிலை மலையைச் சிறப்பிப்பதாகும்

அதிசயங்கள் என்ன?

1.ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 13, 14) இந்தக் கோவிலின் 15 வாயில்களையும் சூரிய ஒளி தொட்டுச் செல்லும். அன்றைய தினம் முதல் பனம் ரங் விழா துவங்கும்.

அப்பொழுது சுவாமி திரு வீதி உலா நடக்கும்; நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கும். பழந்தமிழ் நாட்டில் நடந்த இந்திர விழாக் காட்சிகளை நினைவு படுத்தும்

 

  1. கோவிலுக்குச் செல்வதற்கான பாதை 600 அடிக்கும் மேல் நீளமானது. போகும் வழியில் ஒரு மண்டபம் உண்டு; அங்குதான் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் அமர்ந்து அலங்காரம் செய்து கொள்வார். கிட்டத்தட்ட ராஜ ராஜ சோழன் ஆண்ட காலம்.

 

 

இந்த நீண்ட பாதையைக் கடந்தவுடன் இரண்டு நாகர் பாலங்கள் இருக்கும். அவைகள் மேலுலகத்துக்குச் செல்லும் வழிகளாகும். நாக லோகம் என்பது மேலுலக வழிகளைக் குறிக்கும்.

இதற்குப் பின்னரே உட்புறக் கோவில்.

 

அங்கே சிவன், விஷ்ணு சிலைகளைக் காணலாம். உயரமான அமைப்பு மேரு மலை என்றும் சொல்லுவர். சிவலிங்கமும் அங்கே உளது.

  1. இங்கு ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள ராமாயணச் சிற்பங்களைக் காண்கையில் ஆதிகாலத்தில் மஹாபாரதத்தைவிட ராமாயணமே மக்களை அதிகம் கவர்ந்தது என்று சொல்லலாம்.

 

  1. ஒரு கையிலிருந்து இரண்டு ஐந்து தலை நாகங்கள் இருப்பதால் இது க்மேர் சிலைகளின் பாணியைப் பின்பற்றுவது தெரிகிறது. ஆகை யால் இந்த அமைப்பு பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

 

4.ஒரு கோபுரத்தில் நடராஜர், புன்னகை புரியும் ரிஷி , ஜடாயு, சீதையைக் கடத்தும் காட்சி, மாரீசன் வதை, சீதா ஸ்வயம்வரக் காட்சி, வில்லை முறிக்கும் காட்சி என்பன இருக்கின்றன.

 

இன்னொரு காட்சியில் ராமர் குதிரை மீது பவனி வருகிறார்; இசைக் கலைஞர்கள் முன்னே செல்கின்றனர்.

மண்டோதரி கையில் இந்திரஜித்தின் தயைக் கொடுக்கும் காட்சி, ராவணனுடன் ராமனும் லெட்சுமணனும் சண்டை போடும் காட்சி, ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் காட்சிகளும் காணப்படும்.

 

ரிஷிகள் ஜப மாலையுடன் அமர்ந்த காட்சிகளும் தத்ரூபமானவை.

 

நரேந்திர ஆதித்யன் என்பவன் சிவன் கோவிலைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

 

5.இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால் திசைத் தெய்வங்களின் உருவங்கள் தனித் தனியே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் மரத் தூண்களில் பொருத்தப்பட்டு  கால வெள்ளத்தில் மரங்கள் உளுத்து உதிர்ந்து போய் இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

 

ஒரே தலை உடைய ஐராவதம் மீது இந்திரன் பவனி வரும் காட்சி ஒரு காலத்தில் கிழக்குப் பக்கம் இருந்திருக்க வேண்டும் (சில கோவில்களில் 4 தலைகளுடைய யானை மீது இந்திர உருவம் இருக்கும்)

 

தென் கிழக்கு திக்கிற்கு அதிபதியான அக்னி தேவன் காண்டா மிருகம் மீது பவனி வருவது அதிசயமே; இந்தியாவில் அக்னியின் வாஹனம்– ஆடு.

மேற்குத் திக்கிற்கு அதிபதியான —- வருணன் நாகத்தின் மீது காணப்படுகி             றார். இந்தியாவில் முதலை அல்லது ஹம்ச வாஹனத்தில் வருணன் பவனி வருவார்.

 

குபேரன் சிஙத்தின் மீது இருப்பதும் தென் கிழக்காசிய மக்களின் நூதனக் கற்பனையைக் காட்டுகிறது. இந்தியாவில் அவரை யக்ஷன் மீது காணலாம். அவர் வட திசை அதிபதி.

 

வட மேற்கு திசைக்கு அதி தேவதையான ஈஸானன், சிவன் போல் காளை வாஹனத்தில் த்ரி சூலத்துடன் தோன்றுகிறார்.

 

மேல் திசைக்குரிய பிரஹ்மா நான்கு தலைகளுடன் மூன்று ஹம்ஸங்களுடன் (அன்னம்) வருகிறர். வேறு சிலைகள் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு சிலையிலும் பறவைகள், குரங்குகள், பூக்கள், மூர்த்திகளின் மீதுள்ள ஆடை ஆபரணங்கள் ஆகியவை (KHMER) ‘க்மேர்’ பாணியில் இருப்பது, அங்கோர் வாட்டின்- கம்போடியாவின்— தாக்கத்தைக் காட்டும்.

கோவிலைச் சுற்றி பல குளங்கள் கட்டப்பட்டிருப்பது இமயமலை கயிலையை நினைவு படுத்தும்.

6.இது ஒரு அவிந்துபோன எரிமலைக் குன்றின் மீது அமைக்கப்பட்டிருப்பதும் அதிசயமே.

இது தாய்லாந்தின் புனரமைப்புடன் இப்பொழுது சுற்றுலாப் பயணிகளுக்கான பூங்காவாக நுழைவுக் கட்டணத்துடன் திகழ்கிறது. இவ்வளவு காலமாக வெளி உலகம் இதை அறியவில்லை. உட்புற மூர்த்திகளின் உருவங்களின் புகைப் படங்கள் இன்னும் பிரபலமாகவில்லை.

 

 

 

 

 

 

சுபம்–

வெள்ளையன் ஹாலிடே வியந்த ‘சதி’! (Post No.4998)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 11 MAY 2018

 

Time uploaded in London –  7-37 AM   (British Summer Time)

 

Post No. 4998

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்துக்களை கேலி செய்வதும் அவர்கள் வரலாறைக் கொச்சைப் படுத்துவதும் ஹிந்து துரோகிகளுக்கு ஒரு வாடிக்கையான பழக்கம்.

 

சமீபத்தில் சித்தூர் ராணி பத்மினியை அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்து எடுக்கப்பட்ட படம் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.

 

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த பத்மாவதி படம் அக்ரமான வழியில் சரித்திரத்தைச் சிதைத்து மாற்றி எடுக்கப்பட்ட படம்.

மஹா தியாகியான சதி பத்மினியை கொச்சைப் படுத்தியதை எந்த ஒரு ஹிந்துவாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சதியில் உடன்கட்டை ஏறியவர்களை ஹிந்துக்கள் தெய்வமாக மதித்தனர்.

 

அனைவரும் சதியாக வேண்டும் என்று ஹிந்து மதம் ஒரு நாளும் சொல்லியதில்லை. ஆனால் ஈருடல் ஓருயிராக இருந்தோர் கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினால் அதைத் தடை செய்யவும் இல்லை.

 

இந்த சதி பற்றிய நிஜ வரலாறு கூறும் ஆச்சரியமான விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

 

சதி என்பது அநாகரிகமான ஒரு பழக்கம் என்று தீர்மானித்த கார்ன்வாலிஸ் அதி 1805ஆம் ஆண்டு தடை செய்தான். அப்படி சதியாக விரும்பினால் மாஜிஸ்ட் ரேட்டின் அனுமதி பெற வேண்டும் என்று அவன் சட்டம் இயற்றினான். ஆனால் 1829இல் வந்த லார்ட் பெண்டிங் அதை இன்னும் கடுமையாக ஆக்கி சதி என்பது தற்கொலை என்று சட்டம் இயற்றினான்.

 

In 1805 Marquis of Cornwallis passed a regulation by which no one could become a Sati without the permission of the Magistrate. The law was made stricter in 1829 by Lord William Bentick who enacted Sati as a suicide and all who encouraged Sati in any way were made guilty of culpable homicide.

 

Halliday’s Testimony, 1829 – Buckland in his “Bengal under the Lieutenant Governors” writes: –

 

In 1829 just before the penalizing of Sati, Sir Fredierick Halliday, the first Lieutenant Governor of Bengal was the District Magistrate of Hoogly, on the bank of Ganges, where Sati, was frequent occurrence. The last case of Sati lawfully celebrated in Bengal is thus narrated by him :- “We tried our best to dissuade her, but all to no purpose ….. Seated close to me she looked up at my face with scorn and said,

 

BRING A LAMP”. THE LAMP WAS LIGHTED AND WITH SCORN AND DEFLANCE IN HER EYES, SHE PUT HER FINGER INTO THE FLAME. THE FINGER SCORCHED, BLISTERED AND BLACKENED AND FINALLY TWISTED UP. SHE REMAINED UNMOVED, NOT A MUSCLE TWITCHED AND NOT A SOUND ESCAPED.

 

 

“Are you satisfied?” she asked.

 

“Quite,quite satisfied,” was the reply. She asked my permission and I assented.

 

Cooly and calmly she mounted the funeral pyre and laid herself down beside a part of her husband’s clothing. The husband had died far away. She was covered with light brushwood and fire was set to the funeral pyre.”

 

The following true incident is given in Tavernier’s “Travels” (published in 1677) :-

 

The Raja of Vellore was killed in a battle with the King of Visapur. Eleven of his wives resolved to become Sati. The General of the Visapur army coming to know of it, imprisoned all of them together. They told the keeper at the time, “Imprisonment is futile, we shall die in three hours.”

 

After three hours all of them lay stretched on the floor dead, and were gone with their husband, without any mark of violence on their bodies.

 

ஆக சதியாக விரும்பினோர் உடல் மனம் ஆன்மாவினால் கணவனுடன் ஒன்று பட்டவர்கள்.

 

கண்டவுடன் காதல்; காமம் முடிந்தவுடன் டைவர்ஸ் என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி எதுவும் புரியாது என்பது தான் உண்மை!

 

ஆதாரம் : Truth, weekly Magazine Volume 86 Issue 1 dated 20-4-2018

நன்றி : ட்ரூத் வார இதழ்

*****

காஞ்சி பரமாசார்யார் ஆயுள் கண்டுபிடித்த ‘டெக்னிக்’ (Post No.4982)

Written by London Swaminathan 

 

Date: 6 May 2018

 

Time uploaded in London – 6-58 am (British Summer Time)

 

Post No. 4982

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருச்சி அருகிலுள்ள கூத்தனூரைச் சேர்ந்தவர் ஸ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள். வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையைப் படித்து காஞ்சிபரமாசார்ய ஸ்வாமிகளிடம் தங்க நாணயம், பசு மாடு, சால்வை பெற்றவர். பெரிய அறிஞர்–மஹா பண்டிதர். அவரிடம் ஒருவர் , இறந்து போனவரின் ஜாதகத்தைக் கொடுத்து அவரைச் சோதித்த போது அவருக்கு ஷாக் அடித்தது போல உடம்பு தூக்கிவாரிப் போட்ட நிகழ்ச்சியை முன்னரே எழுதினேன்.

 

அவரை மதுரை டி.வி.எஸ். நிறுவனத்தார் உபந்யாசம் செய்வதற்காக ஆண்டுதோறும் அழைத்தார்கள். அப்பொழுது அந்தக் கம்பெனி அனுப்பும் காரில் நானும் அவருடன் சென்று நோட்ஸ் (NOTES) எடுத்து அதை தினமணி பத்திரிகைக்கு செய்தியாகத் தருவேன். அவர் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை வேதத்தில் இருந்து மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார். இதனால், விஷயம் அறிந்தவர்கள், அவருடைய சொற்பொழிவைத் தவறாமல் கேட்பர். அவர் உபந்யாசத்தைத் துவங்கும்போது ‘உத்தமோத்தமர்களே” என்று துவங்குவார். என் அருகில் உடகார்ந்து இருப்பவர் உடனே காமெண்ட் (COMMENT) அடிப்பார். இங்கு இருப்பவர்களில் யார் உத்தமர்? என் உள்பட எவனும் உத்தமர் இல்லையே! என்பார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால் ‘வெளுத்ததெல்லாம் பால்’ என்று எண்ணும் அளவுக்குக் குழந்தை மனம் படைத்தவர் சாஸ்திரிகள்.

 

என்னிடம் சொல்லுவார்: சாமிநாதா, நீ எங்கள் திருச்சி பஜாருக்கு வந்து பார்க்க வேண்டும். முனிவர்கள், சந்யாசிகளும் கூட மனம் தடுமாறிவிடும் அளவுக்கு பெண்கள் ஆடை அலங்காரம் இருக்கும் என்பார்.

நான் உடனே மாமா, எங்கள் மதுரையிலும் அப்படித்தான்.

நீங்கள் எங்கள் டவுன்ஹால் ரோடு (TOWN HALL ROAD) அல்லது, பணக்காரத் திருமணங்களுக்கு வந்து பாருங்கள்’ என்று சொல்லுவேன்.

 

இதை எழுதும்போது இன்னும் ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. தொல்பொருட் துறை அறிஞர், வரலாற்று ஆசிரியரான டாக்டர் இரா.நாகசாமியும் பேச்சு வாக்கில் சொன்னார்; ‘பெரிய ஞானிகளையும் நிலை தடுமாறச் செய்து மனத்தை மாயையில் ஈடுபடுத்தும் சர்வ வல்லமை துர்கா தேவிக்கு உண்டு’ என்று சொல்லி ‘ஞானினாம் அபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி’ என்ற துர்கா சப்தஸ்லோகீ வரிகளைக் கூறினார்

 

ॐ ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा।

बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति॥१॥

 

விஸ்வாமித்ரர், புத்தர் ஏசு முதலியோரையும் இறைவன் இப்படிச் சோதித்ததாக நாம் படித்து இருக்கிறோம்.

காஞ்சி பரமாசார்யார் வயதைச் சொன்ன சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்!!!!

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளுக்கு (காஞ்சி சங்கராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர இந்திர சரஸ்வதி 1894-1994) இன்னும் எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருப்போம் என்று அறிய திடீரென ஆவல் ஏற்பட்டது. அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து 1994ல் சமாதி அடைந்ததை நாம் அறிவோம்.

 

ஒரு முறை அவர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகளை யாரும் இல்லாத போது அழைத்து, தன் கையில் அக்ஷதையைப் போடும்படி சொன்னாராம். சாஸ்திரிகளுக்கு ஒரே வியப்பு. ஆயினும் அவர் சொன்ன படியே செய்தார். அட்சதையைப் போட்டபின்னர் ஸ்வாமிகள் அதை எண்ணிப்  பார்த்துவிட்டு ‘ஓஹோ, நான் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்பேன்’ என்றாராம். அது எத்தனை ஆண்டுகள் என்று சாஸ்த்ரிகள் சொல்ல மறுத்து விட்டார்.

 

மறைகளைக் காப்பவர்களே நான் மறையாளர் அல்லவா? (இரஹஸியம்=   மறை) இறுதிவரை சாஸ்திரிகள் எங்களிடம் சொல்லவில்லை.

இவை அனைத்தும் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!!!!

 

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxx