ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை! (Post No.7568)

TIRUVANNAMALAI ARUNACHALESWAR TEMPLE

WRITTEN BY S NAGARAJAN

Post No.7568

Date uploaded in London – 13 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை!

ச.நாகராஜன்

ஸ்ரீ ரமண பகவான் இயற்றி அருளிய மாலை ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை.

திருவாரூரில் பிறக்க முக்தி. தில்லையில் தரிசனம் செய்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலேயே முக்தி.

அருணாசலத்தைத் துதிக்க பெருமை வாய்ந்த ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலையை அருளியிருக்கிறார் பகவான் ரமணர்.

இது பிறந்த கதையே சுவையான ஒன்று.

ரமணர் விரூபாக்ஷ குகையில் தங்கி இருந்த காலத்தில் உடன் இருந்த பக்தர்கள் பிக்ஷை எடுக்கச் செல்லும் போது பாடிக் கொண்டு செல்வதற்காக ஏதாவது ஒரு துதியை இயற்றி அருளுமாறு அவரை வேண்டினர்.

ஆனால் பகவானோ ஏராளமான துதிகள் ஏற்கனவே உள்ளனவே. தேவாரம், திருவாசகம் போன்றவை இருக்கின்றனவே. புதிதாக ஒன்று எதற்கு என்று வாளாவிருந்தார்.

ரமண பக்தர்கள் என்ற அடையாளத்திற்காகவாவது ஒரு தனி துதி தேவை என்பது பல பக்தர்களுடைய ஆசையாக இருந்தது.

ஒரு நாள் பகவான் கிரி வலத்திற்காகக் கிளம்பினார். அப்போது கூட இருந்த அன்பர் ஒருவர் பகவான் திருவாய் மலர்ந்தருளினால் அதை எழுதிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் காகிதத்தையும் பென்சிலையும் கையில் எடுத்துக் கொண்டார்.

SRI RAMANA MAHARISHI

அன்று அருணாசல மகிமையைச் சொல்லத் திருவுள்ளம் கொண்டார் போலும் ரமணர்.

அருணாசல என்ற நாமத்துடனேயே துதியை ஆரம்பித்தார்.

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசில அருணாசலா !

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசில அருணாசலா !

அருணா சலமென வகமே நினைப்பவ

ரகத்தையே ரறுப்பா யருணாசலா

பொருள் :- அருணாசலம் என்று தனது உள்ளத்தில் தியானிக்கும் அன்பர்களின் ஜீவ போதமாகிய அகங்காரத்தை வேருடன் அறுத்து நாசமாக்கி விடு அருணாசலா!

இப்படி ஆரம்பிக்கப்பட்டு, பாடல்கள் மளமளவென்று கிரி பிரதக்ஷிணத்தில் வர ஆரம்பித்தன. ஆங்காங்கு அமர்ந்தபோது மலர்ந்த பாடல்கள் உடனுக்குடன் எழுதப்பட்டன.

நூற்றெட்டு மந்திரங்கள் அடங்கிய அருணாசல அக்ஷரமணமாலை உதயமாயிற்று.

மாலை யளித்தரு ணாசல ரமண வென்

மால யணிந்தரு ளருணாசலா

என 108ஆம் பாடல் முடிந்தது.

பக்தர்களால் இன்றும் ஓதப்படும் மந்திர நூல் ஆகியது அருணாசல அக்ஷரமண மாலை.

பாடல்களைக் கூறும் போது பக்திப் பரவசத்தால் ரமணரின் கண்களில் நீர் பெருக்கெடுத்து காகிதத்தை நனைத்தது. நன்றாகப் பார்த்து எழுத முடியாமல் பார்வையை கண்ணீர் மறைத்தது.

பாடலின் பொருளை விளக்குமாறு பக்தர்கள் அவரை வேண்டிய போது “அதற்கு அர்த்தம் அதைப் பாராயணம் செய்வது தான் என்று ரமணர் கூறி அருளினார்.

அக்ஷரங்களின் கோர்வையினால் அர்த்தம் ஏற்படுகிறது. ஆழ்ந்த அர்த்தம் தரும் போது அக்ஷரங்களுக்கு மணம் ஏற்படுகிறது.

அருணாசலம் என்ற வார்த்தையாலேயே அக்ஷரங்களுக்கு மணமும் பொருளும் ஏற்பட்டு விடுவதால் மணம் மிகுந்த மாலையாக இன்றும் என்றும் விளங்கும் அக்ஷரமண மாலை.

நூல் மலர்ந்தது: இதற்குப் பின்னால் பாயிரம் பாடினார் முகவைக் கண்ண முருகனார்.

அந்தப் பாயிரம் இது:

தருணா குணமணி கிரணா வலிநிகர்

  தரும க்ஷரமண மகிழ்மாலை

தெருணாடியதிரு வடியார் தெருமரல்

  தெளியப் பரவுதல் பொருளாக

கருணா சுரமுனி ரமணா ரியனுவ

  கையினாற் சொலியது கதியாக

வருணா சலமென வகமே யறிவொடு

   வாழ்வார் சிவனுல காள்வாரே

பொருள் : அப்போது தான் உதித்த இளம் சூரியனின் கிரணங்களின் வரிசையைப் போன்று ஒளி வீசும் அக்ஷரங்கள் என்னும் மலர்களால் தொடுக்கப்பட்ட மகிழ்மாலையானது மெய்யுணர்வை நாடி நிற்கும் அடியார்களின் மன மயக்கம் தெளிவதற்கு போற்றி வழிபடும் பொருட்டாக க்ருணைக் கடலான முனிவரனாகிய ரமண ஆசாரியன் தன் உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தினால் கூறியதையே கதியாக நம்பி அருணாசலமே எமக்கு உற்ற துணை என்று இதயத்தில் உணர்வோடு ஆழ்ந்து கொள்ளும் அன்பர் சிவபிரானின் அருளால் சிவானுபவம் பெறுவார்; சிவலோகம் ஆள்வார்!

மகிழ்மாலை என்று இதில் குறிப்பிடப்படும்போது இந்த க்ஷேத்திரத்தின் ஸ்தல விருட்சமாக மகிழ மரம் அமைந்திருப்பதையும் நினைவில் கொண்டால் அது மணம் பரப்பும் மகிழ மரத்தின் மலர்களால் அமைந்த மாலையாகவும் கொள்ள முடிகிறது.

நொந்திடா துன்றனைத் தந்தெனைக் கொண்டிலை

யந்தக நீயெனக் கருணாசலா என்கிறார் 62ஆம் பாடலில் ரமணர்.

பொருள் : நான் அரிய தவம் எதுவும் செய்யவில்லை. சரீரம் வருந்தவில்லை. உன்னை எனக்களித்து விட்டாய். அதற்கு மாற்றுப் பொருளாக என்னை நீ எடுத்துக் கொண்டாய். எனக்கு நீ ஒரு அந்தகனாக – கொடிய யமனாக ஆனாய் அருணாசலா.

அருணாசலம் மதிப்பில்லாத தன்னை ஏற்று விலை மதிக்கவே முடியாத தன்னைக் கொடுத்து விட்டதால் அவன் ஒரு குருடனோ என்று வியக்கிறார் ரமணர்.

தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை; யார் கொலோ சதுரர் என்று மணிவாசகர் வியந்து கூறுவதை இங்கு ஒப்பு நோக்கத் தோன்றுகிறது.

அருணாசல சிவனை நினைக்கவே முக்தி. அருணாசலனைப் போற்றுவோர்க்கு அருளும் பொருளும் நிறையும்; நிலைக்கும்.

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசில அருணாசலா !

அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசில அருணாசலா !

****

விபூதியின் மஹிமை! – 3 (Post No.7560)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7560

Date uploaded in London – 11 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதி மஹிமை பற்றிய குறுந்தொடரில் கடைசிக் கட்டுரை இது

விபூதியின் மஹிமை! – 3

ச.நாகராஜன்

 மதுரையில் உள்ள திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தில் 291-வது குருமகா சந்நிதானமாகப் புகழுடன் திகழ்ந்தவர் திருவருள் தவயோக               ஸ்ரீஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும் என்ற சிறிய நூலை எழுதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் 20 காசு விலையில் வெளியிட்டார். (இரண்டாம் பதிப்பு 1973 ஜூலையில் வெளி வந்தது – 28 பக்கங்கள்)

(இவருடனான நேரடி பரிசயம் எனக்கு மிகவும் உண்டு. என்னை ‘நாடி ஜோதிடம் பார்க்குமாறு பணித்து அதற்கு ஏற்பாடு செய்தவர் இவரே. இவரை அடிக்கடி சந்தித்து 1968ஆம் ஆண்டு ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் கமிட்டி சம்பந்தமாக பல அறிவுரைகளைப் பெறுவதுண்டு. சேலத்தில் நடந்த அந்த பெரிய மாநாட்டை வெற்றிகரமாக ஆக்கியவர்களுள் ஒருவர் இவர். இப்போதுள்ள ஆதீனகர்த்தர் இல்லை இவர். அதற்கு முந்தியவர்.)

அதில் அவர் கூறுவதன் சுருக்கம் இது:

‘திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்

  1. உடல் நாற்றத்தைப் போக்கும்
  2. தொத்துநோய்க் கிருமிகளைக் கொல்லும்
  3. தீட்டுக் கழிக்கும்
  4. உடலைச் சுத்தம் செய்யும்
  5. வியாதிகளைப் போக்கும்
  6. பில்லி, சூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்
  7. முகத்திற்கு அழகைத் தரும்
  8. ஞாபகசக்தியை உண்டாக்கும்
  9. புத்திகூர்மையைத் தரும்
  10. ஞானத்தை உண்டாக்கும்
  11. பாவத்தைப் போக்கும்
  12. பரகதியைத் தரும்

மிகச் சுருக்கமாக வேதங்கள், புராண இதிஹாஸங்கள் தரும் நன்மைகளை இப்படிப் பட்டியலிட்டதோடு அவற்றின் விளக்கத்தையும் இந்த நூலில் ஆதீனகர்த்தர் தந்துள்ளார்.

திருநீறு தயாரிக்க மூலப்பொருளாக அமைவது பசுஞ்சாணம். சாணத்திற்குப் பிற நாற்றங்களைப் போக்க வல்ல சக்தி உள்ளதால் விபூதி உடல் நாற்றத்தைப் போக்கும்.

சாணியும் சாணியை பஸ்மம் செய்த சாம்பலும் சிறந்த கிருமி நாசினிகள். ஆகவே விபூதி தொத்துநோய்க் கிருமிகளைக் கொல்லும்.

தீட்டு என்பது தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களிடமும் அல்லது தொற்று நோய் உண்டாகக் கூடிய இடங்களிலும் உள்ள அசுத்தமாகும். ஆக, விபூதி தொற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதால் தீட்டைப் போக்கும்.

 மேலே கண்ட மூன்று வழிகளில் திருநீறு நாற்றத்தைப் போக்கி தொற்றுநோயைப் போக்குவதால் விபூதி சுத்தம் செய்யும். ஆகவே தான் தேவாரத்தில், ‘துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு என்று சம்பந்தப் பெருமான் பாடியருளியிருக்கிறார்.

திருநீற்றைப் பூசி கூன்பாண்டியனின் கடும் சுரத்தைப் போக்கினார் ஞானசம்பந்தர். பல இடங்களிலும் பெரியோர் அளித்த விபூதி பல வியாதிகளைக் குணமாக்குவது கண்கூடு. ஆகவே விபூதி வியாதிகளைப் போக்கும்.

சிவபிரான் விபூதியைத் தரித்திருப்பதாலும் அது புருவ மத்தியை மூடிக் கொள்வதாலும் விபூதி பில்லி சூனியம் கண்ணேறு ஆகியவற்றிலிருந்து அணிபவரைப் பாதுகாக்கும்.

டால்கம் பவுடரை விட விபூதி உடல் நாற்றத்தைப் போக்கி அழகுக்கு மெருகூட்டுகிறது. நீறில்லா நெற்றி பாழ், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்று ஔவை பிராட்டியும் விபூதி அழகைத் தருவதைக் கூறி இருக்கிறார். சம்பந்தரோ, ‘காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு என்று பாடி அருளியிருக்கிறார். (கவின் என்றால் அழகு)

நெற்றியில் ஞாபகசக்தி இருப்பதால் அங்கு விபூதி பூசுவது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

ஞாபகசக்தியோடு புத்திகூர்மையைத் தருவதும் விபூதியே. ஞானசம்பந்தர், ‘மாணம் தகைவது நீறு, மதியைத் தருவது நீறு என்று பாடி அருளியிருக்கிறார்.

திருநீறைக் கையில் எடுக்கும் போதே ஆடி அடங்கிய  பின் பிடி சாம்பலாகப் போவோம் என்ற பேருண்மை புலப்பட்டுக் கொண்டே இருக்கும். ஞானசம்பந்தர், ‘பராவணம் ஆவது நீறு, பாவம் அறுப்பது நீறு என்று கூறியிருப்பதால் புண்ணியம் தந்து ஞானத்தையும் தருவது விபூதியாகும்.

திருமூலர்,

‘கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வாரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்கார மான திருவடி சேர்வரே

என்று திருமந்திரத்தில் கூறி இருப்பதால் வினைகள் அனைத்தும் போய், சிவகதி வரை அனைத்துப் பேறும் தரவல்லது திருநீறே என்பது பெறப்படுகிறது.

கடைசியாக, திருநீற்றுப் பதிகத்தைத் திருநீறு பூசி தினமும் ஓதி அதன் நன்மைகளை மனதிலிருத்துவது பெரும் பேறாகும்.

திருநீற்றுப் பதிகம் கீழே தரப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்



மந்திர மாவது நீறு   வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு   துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு   சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன்   திருஆல வாயான் திருநீறே.  1



வேதத்தி லுள்ளது நீறு   வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு   புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு   உண்மையி லுள்ளது நீறு

சீதப் புனல்வயல் சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே.  2



முத்தி தருவது நீறு   முனிவ ரணிவது நீறு

சத்திய மாவது நீறு   தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு   பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே.  3



காண இனியது நீறு   கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க் கெல்லாம்   பெருமை கொடுப்பது நீறு

மாணந் தகைவது நீறு   மதியைத் தருவது நீறு

சேணந் தருவது நீறு   திருஆல வாயான் திருநீறே.  4



பூச இனியது நீறு   புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு   பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு   வந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு   திருஆல வாயான் திருநீறே.  5



அருத்தம தாவது நீறு   அவலம் அறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு   வானம் அளிப்பது நீறு

பொருத்தம தாவது நீறு   புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த   திருஆல வாயான் திருநீறே.  6



எயிலது வட்டது நீறு   விருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு   பாக்கிய மாவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு   சுத்தம தாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்   தாலவா யான் திருநீறே.  7



இராவணன் மேலது நீறு   எண்ணத் தகுவது நீறு

பராவண மாவது நீறு   பாவ மறுப்பது நீறு

தராவண மாவது நீறு   தத்துவ மாவது நீறு

அராவணங் குந்திரு மேனி   ஆலவா யான்திரு நீறே.  8



மாலொ டயனறி யாத   வண்ணமு முள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள்    மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும்   இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றெம்   மாலவா யான்திரு நீறே.  9



குண்டிகைக் கையர்க ளோடு   சாக்கியர் கூட்டமுங்கூட

கண்டிகைப் பிப்பது நீறு   கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார்   ஏத்துந் தகையது நீறு

அண்டத்த வர்பணிந் தேத்தும்   ஆலவா யான்திரு நீறே.  10



ஆற்றல் அடல்விடை யேறும்   ஆலவா யான்திரு

நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும்   பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்னனுடலுற்ற   தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும்   வல்லவர் நல்லவர் தாமே.  11

  
திருநீறு பூசுவோம்; வல்லவர் ஆவோம்; நல்லவர் ஆவோம். வினைகள் ஒழிந்து, சிவகதி பேறைப் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

***

இந்தக் கட்டுரைத் தொடர் நிறைவுறுகிறது

நன்றி : திருஞானசம்பந்தர் மடம், மதுரை

tags- விபூதி, மஹிமை

திருமூலர் தரும் ரகசியம் : 134 ஆசனங்கள் பட்டியல்! (Post No.7556)

Yoga in Sarasvati- Indus Valley Civilization 

Written by S Nagarajan

Post No.7556

Date uploaded in London – 10 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

திருமூலர் தரும் ரகசியம் : ஆசனங்கள் 134 : அவை யாவை? இதோ பட்டியல்! (Post No.7556)

ச.நாகராஜன்

ஹிந்து தர்மம் உள்ளத்தையும் உடலையும் பண்படுத்தத் தரும் அருமையான ஒரு வழி ஆசனம்.

ஆசனம், தியானம் என்பதெல்லாம் உலகில் இன்று ஏராளமான நாடுகளில் சகஜமாகி விட்டன.

ஆசனம் என்றால் என்ன? (இதை ஆதனம் என்றும் சொல்வதுண்டு)

ஆசனேன ரஜோ ஹந்தி என்று யோக சூடாமணி  விளக்கம் தருகிறது. ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி,

யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு

அலட்சியம்

வைராக்கியம் இல்லாமை

திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல்

கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பாதஞ்சல யோக சூத்திரம் கூறுகிறது.

ஆசனங்கள் எண்ணற்றவை. அனைத்தும் பயன் தருபவை.

அவற்றில் தலையாய ஆசனங்கள் எட்டு. அதைத் தொடர்ந்து சிறப்பாகக் கூறப்படும் ஆசனங்கள் மொத்தம் 126.

A B C D ………………….. X Y Z IN YOGA ASANAS

ஆக மொத்தம் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 134.

இவற்றில் தலையாய ஆசனங்களாவன:

சுவத்திகம்

பத்திரம்

கோமுகம்

பங்கயம்

கேசரி

சொத்திரம் (சோத்திரம், சோத்திகம் என்றும் சொல்லப்படுவதுண்டு)

வீரம்

சுகாசனம் ஆக முக்கியமான ஆசனங்கள் மொத்தம் 8

திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் நான்காம் அத்தியாயமான ஆதனம் என்னும் அத்தியாயத்தில் ஆசனம் பற்றிய அற்புதமான ரகசிய விளக்கங்களைக் கூறி அருளுகிறார்.

3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம் திருமூலரால் அருளப்பட்ட அதி ரகசிய நூல்.

இதில் பாடல் 563 இது:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள் பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம்.

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126. மொத்த ஆசனங்கள் 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை? இதோ இருக்கிறது பட்டியல்:

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  11. சவாசனம்
  12. மச்சேந்திர சித்தாசனம்
  13. சித்தாசனம்
  14. வச்சிராசனம்
  15. பதுமாசனம்
  16. மச்சேந்திர பதுமாசனம்
  17. முக்த பதுமாசனம்
  18. சிம்மாசனம்
  19. பத்திராசனம்
  20. வல்லரியாசனம்
  21. விருச்சிகாசனம்
  22. குப்சிகாசனம்
  23. பாரிசுவோபாதாசனம்
  24. யோகாசனம்
  25. கபாலாசனம்
  26. டிட்டிபாசனம்
  27. பூர்வதானாசனம்
  28. அர்ப்பககாசனம்
  29. காமதகனாசனம்
  30. கேசரியாசனம்
  31. சோபகிரியாசனம்
  32. பரியங்காசனம்
  33. பத்தாசனம்
  34. லௌல்யாசனம்
  35. பத்தயோனியாசனம்
  36. பேகனாசனம்
  37. மகாபேகனாசனம்
  38. பிராணாசனம்
  39. அபானாசனம்
  40. சமானாசனம்
  41. பைரவாசனம்
  42. மண்டூகாசனம்
  43. மர்க்கடாசனம்
  44. ஏகபாதவாசனம்
  45. பணீ ந்திராசனம்
  46. யோகநித்திராசனம்
  47. சுகாசனம்
  48. தண்டாசனம்
  49. சக்கிராசனம்
  50. வர்த்துலாசனம்
  51. அர்த்தாசனம்
  52. பர்வதாசனம்
  53. யோனீமுத்திராசனம்
  54. திருடாசனம்
  55. பவனமுக்தாசனம்
  56. வாமபாத பவனமுக்தாசனம்
  57. தட்சிணபாத முக்தாசனம்
  58. தீராசனம்
  59. சுவாசகமனாசனம்
  60. வாதாயனாயனாசனம்
  61. அர்த்தபாதாசனம்
  62. ஊர்த்துவபத்மாசனம்
  63. பூர்ணாபாதாசனம்
  64. தட்சிணாசனம்
  65. அத்துவாசனம்
  66. வாமதட்சிண பாதாசனம்
  67. திவிபாதசிராசனம்
  68. விருட்சாசனம்
  69. வாமபாதசிரசாசனம்
  70. தட்சிணபாதசிரசாசனம்
  71. தாடாசனம்
  72. ஊர்த்துவதனுராசனம்
  73. வாமசித்தாசனம்
  74. விவேகாசனம்
  75. தர்க்காசனம்
  76. நிசுவாசாசனம்
  77. அர்த்தகூர்மாசனம்
  78. கருடாசனம்
  79. திரிகோணாசனம்
  80. பிரார்த்தனாசனம்
  81. பாதத்திரிகோணாசனம்
  82. புஜாசனம்
  83. அஸ்தபயங்கராசனம்
  84. அங்குஷ்டாசனம்
  85. உத்தகடாசனம்
  86. அர்த்தபாதாசனம்
  87. அஸ்தபுஜாசனம்
  88. வாமவக்கிராசனம்
  89. ஜாந்வாசனம்
  90. சாகாசனம்
  91. திரிஸ்தம்பாசனம்
  92. பாத அபான கமனாசனம்
  93. அசதசதுஷ்கோணாசனம்
  94. கூர்மாசனம்
  95. கர்ப்பாசனம்
  96. ஏகபாதவிருட்சாசனம்
  97. முத்த அஸ்த விருட்சாசனம்
  98. துவிபாதபாரிசுவாசனம்
  99. கந்தபீடாசனம்
  100. பிரௌடபாதாசனம்
  101. உபாதானாசனம்
  102. ஊர்த்துவ சம்யுக்த பாதாசனம்
  103. அர்த்தசவாசனம்
  104. வேறு அபானாசனம்
  105. யோனியாசனம்
  106. வேறு பர்வதாசனம்
  107. பர்வதாசனம்
  108. சலபாசனம்
  109. கோகிலாசனம்
  110. லோலாசனம்
  111. உத்தமாங்காசனம்
  112. உட்டிராசனம்
  113. அம்சாசனம்
  114. வேறு பிராணாசனம்
  115. கார்முகாசனம்
  116. ஆனந்தமந்திராசனம்
  117. கம்புநாசனம்
  118. கிரந்திபேதனாசனம்
  119. சமாசனம்
  120. புஜங்காசனம்
  121. பவனாசனம்
  122. மச்சாசனம்
  123. மகராசனம்
  124. விருஷாசனம்
  125. சங்கடாசனம்
  126. சர்வாங்காசனம்  

ஆசனங்களின் பெயர்களை மட்டும் இங்கு பார்த்தோம். இவை பற்றிய விளக்கங்களை யோக நூலில் காணலாம்.

ஒவ்வொரு ஆசனமும் உள்ளத்தையும் உடலையும் பல்வேறு விதத்தில் பண்படுத்துபவை.

அனைத்து வியாதிகளையும் இந்த ஆசனங்களின் மூலமாகத் தீர்க்க முடியும்.

பண்டைய காலத்தில் இந்த ஆசனங்களைக் கற்றுத் தரும் குருமார்கள் ஆங்காங்கே இருந்தனர்.

அவர்கள் சிஷ்யர்களை வழி நடத்தி ஆசனங்களை உரிய முறையில் செய்கிறார்களா என்று சோதனை செய்து உயர்த்துவர்.

இன்றோ இப்படி ஆசனங்கள் பல உள்ளன என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டதோடு அவரவர் புதுப்புது யோகாவை ‘சிருஷ்டித்து பணம் சம்பாதிக்கும் அவல நிலையும் ஏற்பட்டுவிட்டது.

யோக சாஸ்திரத்தில் வல்லார் இந்த நிலையை மாற்றி பாரதத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்!

நன்றி : திருமந்திரம் புகழ் பரப்பும் திருவாவடுதுறை ஆதீனத்தைப் பாராட்டி நன்றி கூறாமல் இருக்க முடியாது. தமிழகம் செய்த தவப்பயனாக திருவாவடுதுறை ஆதீனம் தொடர்ந்து திருமந்திர மாநாடுகளை அவ்வப்பொழுது நடத்துவது வழக்கம்.

இதில் என் தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் அவர்களும் கலந்து உரையாற்றுவதுண்டு.

அவர் கூடவே செல்லும் பாக்கியம் எனக்கு ஏற்பட்டதால் மாநாட்டு நடவடிக்கைகளையும் பேரறிஞர்கள் ஆற்றும் உரைகளையும் வியப்புடன் கவனிப்பேன்.

திருவாவடுதுறை ஆதீனம் திருமந்திரம் சம்பந்தமாக ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளது; மூன்றாம் தந்திரம் விளக்கத்தை பஞ்சாக்ஷரதீபம் என்னும் உரையுடன் 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள 126 ஆசனங்களின் பட்டியலே மேலே தரப்படுள்ளது.

திருமந்திரம் வளர்க்கும், திருமந்திர ரகசியம் விளக்கும், திருவாவடுதுறை ஆதீனத்தைப் போற்றி வணங்கி எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

Tags யோகம் , ஆசனம், திருமூலர், திருவாவடுதுறை ஆதீனம்,

ஆசனங்கள் , பட்டியல்

***

விபூதியின் மஹிமை! – 2 (Post No.7553)

paramam pavithram Baba Vibhuutim

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7553

Date uploaded in London – – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதியின் மஹிமை! – 2

ச.நாகராஜன்

தேவி பாகவதம் விபூதி எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், அவற்றின் வகைகள், பெயர்கள், பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறுகிறது.

சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்: –

(உத்தூளனம் என்றால் நெற்றி முழுவதும் விபூதியைப் பூசுவது என்று பொருள்; திரிபுண்டரதாரணம் என்றால் நெற்றியில் மூன்று கோடுகளை கிடைமட்டமாக விபூதியினால் தரிப்பது என்று பொருள். இதை மனதில் கொண்டு கட்டுரைகளை மேலே படிக்கலாம்.) tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஸ்மம் இல்லாத நெற்றியைச் சுடு,

சிவாலயம் இல்லாத கிராமத்தைச் சுடு,

சிவார்ச்சனம் இல்லாத ஜன்மத்தைச்  சுடு,

சிவாஸ்ரயம் இல்லாத வித்தையைச் சுடு, என்று இவ்வாறு வேதம் கூறுகிறது.

பிரம்மா சிருஷ்டியினாலும் திரிபுண்டரதாரணத்தைக் காண்பித்திருக்கிறார்!

எப்படியெனில்,  அவர் நெற்றியைக் குறுக்காயும், ஊர்த்துவமாயும் படைத்திருக்கிறார், இல்லையா?!

விருத்தமாகச் சிருஷ்டிக்கவில்லை அல்லவா!

மானிடருக்கேயல்லாமல் சகல பிராணிகளுக்கும் நெற்றியில் திரியக் ரேகைகள் காணப்படுகிறதில்லையா!

அப்படிக் காணப்பட்டும் கூட மூட மனிதர்கள் திரிபுண்டரதாரணம் செய்கிறதில்லை!

எவன் ஒருவன் பஸ்மம் மற்றும் ருத்திராக்ஷம் தரிக்கின்றானோ, அவனது ரோகம், வியாதி, துர்பிக்ஷம், திருடு முதலியவை நாசகரமாகும். அவன் பிரம்மத்தை அடைகிறான்.

திருமூர்த்திகளாலும், இரண்யகர்ப்பனாலும் வருணன் முதலியவர்களாலும் உமை, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவராலும் ஏனைய தேவதா ஸ்திரீகளாலும் யட்ச, ராட்ஸச, கந்தர்வ, சித்த ,வித்தியாதர்களாலும், முனிவர்களாலும் பஸ்மோத்தூளனமும் திரிபுண்டரமும் தரிக்கப்பட்டிருக்கின்றன.

முக்தி என்கிற ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாகும்.

ஐஸ்வர்யமாகிய விபூதி சாதனத்தை ஒருவன் கபடத்தினாலாவது அணிவான் என்றாலும் கூட அவன் அடையும் கதியை நூறு யாகம் செய்தவன் கூட அடைய முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஒரு அரசன் தனது அடையாளம் தரிக்கப்பட்ட ஒருவனை எப்படித் தன்னவனாக எண்ணுகிறானோ அதே போல மஹாதேவனும் தனது அடையாளமாகிய பஸ்ம திரிபுண்டரங்களை அணிபவனைத் தன்னவனாகவே எண்ணுகிறான்.

சுருதிகளும் ஸ்மிருதிகளும் எல்லாப் புராணங்களும் விபூதி மகிமையையே கூறுகின்றன.

பஸ்ம ஸ்நானத்தை விட வேறு சுத்தமான ஸ்நானம் பிறிதில்லை.

ஜல ஸ்நானத்தை பிரகிருதி என்றும் பந்தம் என்றும் சொல்கின்றனர். பிரகிருதியாகிய பந்தத்தைத் தொலைப்பதற்கே இந்த பஸ்ம ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்நானத்தால் ஜுரம், பிரம்ம ராட்ஸச பிசாசம், பூத சேஷ்டைகள், குஷ்டம், குன்மம், பகந்தரம் முதலிய அறுபத்திநான்கு  வாத ரோகங்களும், சிலேஷ்ம ரோகங்களும், வியாக்ரம் முதலிய துஷ்ட பயங்கர மிருகங்களும், திருடு போன்ற பயங்களும் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல நசித்துப் போகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

விதியுக்தமாகிய வன்னி வீரியத்தினால் உண்டாகிய பஸ்மத்தைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இது நிச்சயம்.

இது போல் கழுத்தில் தரிப்பதால் கண்டத்தில் உண்டாகும் பாபமும், மார்பில் தரிப்பதால் மனதால் செய்த பாவமும்,

நாபியில் தரிப்பதால் ஆண்குறியினால் செய்த பாவமும்,

பிருஷ்ட பாகத்தில் தரிப்பதால் அதனால் செய்த பாவமும்,

பக்கங்களில் தரிப்பதால் பர ஸ்திரீகளைத் தழுவிய பாவமும் நசித்துப் போகும்.

பஸ்மத்தைத் தரித்தே காயத்திரியை ஜபிக்க வேண்டும்.

ஒருமுறை துர்வாச முனிவர் பிதுர் லோகம் சென்றார்.அவரை அனைவரும் மரியாதையுடன் எதிர்கொண்டழைத்தனர்.

அப்போது அங்கிருந்த கும்பீபாகம் என்னும் நரகத்திலிருந்து ஐயோ ஐயோ, கொளுத்தப்பட்டோம், அறுக்கப்பட்டோம், பிளக்கப்பட்டோம் என்று பலரும் அலறும் குரல்கள் கேட்கப்பட்டன. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதனால் துர்வாசர் துக்கமுற்று இது யாருடைய குரல்கள் எனக் கேட்க பாவிகளின் குரல்கள் இவை, கும்பீபாகம் என்ற நரகத்திலிருந்து எழும் குரல்களே இவை என பதில் வந்தது.

துர்வாசர் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

அந்தக் கணமே கும்பீபாகத்தில் இருந்த அனைவருக்கும் சொர்க்கத்திலிருக்கும் சுகத்திற்கும் மேலான சுகம் கிடைத்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த யமதூதர்கள் விஷயத்தை எமனிடம் சொல்ல எமன் ஆச்சரியப்பட்டு விரைந்தோடி வந்தான். காரணம் புரியவில்லை அவனுக்கு. இந்திரனும் பிற தேவர்களும் வந்தனர்; பின்னர் விஷ்ணுவும் அங்கு வந்தார். அவர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை!

காரணம் புரியாததால் மஹாதேவரை அனைவரும் அணுகினர்.

விஷயத்தைக் கேட்ட சிவபிரான் புன்னகை பூத்தார்.

“வேறொன்றுமில்லை, துர்வாசர் கும்பீபாக நரகத்தைக் குனிந்து பார்த்தார் இல்லையா, அவரது நெற்றியிலிருந்து சில விபூதி துளிகள் அந்த நரகத்தில் விழுந்தன. ஆகவே அந்த நரகம் சொர்க்கம் போல ஆயிற்று. இனி அதை பிதுர் தீர்த்தம் என அழையுங்கள்’ என அருளுரை புகன்றார்.

அனைவரும் விபூதி தாரண மகிமையையும் துர்வாசரின் விபூதி துளிகளின் மகிமையையும் அறிந்தனர்.

இப்படி தேவி பாகவதம் விரிவாக விபூதி மகிமையை எடுத்துரைக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

    அடுத்து சைவ சமயக் குரவர் மந்திரமாவது நீறு என்று கூறி ஆற்றிய அற்புதத்தையும் அவர் கூறும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து,  திருநீற்று மகிமைத் தொடரை முடிப்போம்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்

அகத்தியனோ, வான்மீகியோ ,ஆதி சேடனோ! – வான் கலந்த வள்ளலார்! (7549)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7549

Date uploaded in London – – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிப்ரவரி 8, 2020 – தைப்பூச நன்னாள். வள்ளலாரின் அடி தொழுது ஜோதி தரிசனம் பெறுவோம்!

அகத்தியனோ, வான்மீகியோ ,ஆதி சேடனோ! – வான் கலந்த வள்ளலார்!

ச.நாகராஜன்

வடலூர் வள்ளலாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவர் ஆற்றிய அற்புதங்கள் பிரமிக்க வைப்பவை. (வள்ளலார் தோற்றம் :  5, அக்டோபர் 1823, ஒளியுருவாய் மறைந்தது 30,ஜனவரி 1874).

ஆனால் இந்த அற்புதங்களுக்கெல்லாம அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அருகிலிருந்தோர் பார்த்து பிரமித்தனர்; வியப்படைந்தனர்.

சுமார் 43 அற்புதங்களை நேரில் பார்த்தும் அன்பர்கள் சொல்லக் கேட்டும் அதிகாரபூர்வமாக வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் தொழுவூர் வேலாயுத முதலியார் ‘வள்ளலாரின் சரித்திரச் சுருக்கம் என்ற நூலில் எழுதியுள்ளார்.

பிரம்மாண்டமான வேத, இதிஹாச, புராணங்களின் உட்பொருளை உணர்வது, அனாயாசமாக அற்புதமான தமிழில் ஆழ்ந்த பொருளடங்கிய தமிழ்ப் பாக்களை உடனுக்குடன் யாப்பது, வீண் வாதுக்கு வந்தோரை சில நிமிடங்களில் வெல்வது, சமரச சன்மார்க்கத்தை உலகிற்கு உணர்த்துவது என்று இப்படி ஏராளமான விஷயங்களை வள்ளலாரின் வாழ்க்கையில் காணலாம்.

   ஒரு முறை திருவொற்றியூர் வடிவாம்பிகை அம்மன் சந்நிதி முன் வள்ளலார் நின்று தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்த போது ஒரு அன்பர் சதுர்வேத சார சங்கிரகம் என்று நூலின் ஏட்டுச் சுவடியைக் கொடுத்து விட்டு மறைந்தார்.

   தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட வள்ளலார் பலரது சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

ஒரு முறை சங்கராச்சாரியார் சென்னைக்கு வந்த போது சம்ஸ்கிருத நூல் ஒன்றில் ஒரு பகுதியில் அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நூலில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்க வல்ல புலவர்கள் இங்கு உண்டோ என்று அவர் ஒரு பிராமணரை வினவ, அவர் வள்ளல் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உடனே சங்கராசாரியார் அவரிடம் நூலைத் தந்து தனக்கு சந்தேகம் ஏற்பட்ட இடத்தைக் காண்பிக்கவே அதை ஒரு முறை பார்த்தார் வள்ளலார். பின்னர் தன் முதல் மாணவராகிய தொழுவூர் வேலாயுத முதலியாரிடம் சந்தேக நிவர்த்தி செய்து வைக்குமாறு பணிக்கவே அவரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.

   இது மட்டுமல்ல, பல வருடங்களாக குஷ்ட நோயினால் வருந்திய ஒருவர் அடிகளைக் கண்டு வணங்கித் தன் நோயைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினார். அவருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வலத்தால் திருநீறு கொடுத்து அதை நொடிப்பொழுதில் போக்கினார் வள்ளலார்.

    இன்னொரு சமயம் வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாகத் தன்னை வருத்தும் வாத நோயைத் தீர்த்தருளுமாறு வள்ளலாரை வேண்டினார். உடனே கருணையுள்ளம் கொண்ட அடிகளார் அவரது நோயைத் தீர்த்தருளினார்.

இதனால் மிக்க மகிழ்ச்சி கொண்ட சுப்பராய முதலியார்,

அகத்தியனோ வான்மீகியோ ஆதிசேடன் றானோ

மகத்துவமாஞ் சம்பந்த மாலோ – சகத்திலகுஞ்

சச்சிதா னந்தத்தின் தண்ணாளியோ என்னென்பேன்

மெச்சுமதி ராமலிங்க வேள்

என்று ஒரு புகழ்மாலையை அவருக்குச் சூட்டித் தன் நன்றியைத் தெரிவித்தார்.

அற்புதங்கள் ஒரு புறமிருக்க சமுதாயச் சீர்திருத்தத்தை அவர் பெரிதும் வலியுறுத்தினார்; பக்தி, ஞானம், கர்ம யோகம் உள்ளிட்ட அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் தெள்ளத் தெளிவாக எளிய தமிழில் அவர் தனது உபதேச உரைகளை அருளினார்.

தமிழ் மொழியின் வல்லமையை அனைவரும் உணருமாறு செய்தார்.

‘தைப்பூசம் தவறாதீர்கள் என்ற அவரது அருளுரை பொருள் பொதிந்த ஒன்றாக அமைந்தது.

தைப்பூசத்தன்று ஆண்டு தோறும் சன்மார்க்கச் சங்கத் திருக்கூட்டம் வடலூரில் நடைபெற்று வருகிறது.

அன்று ஏழு திரைகள் விலக ஜோதி தரிசனம் காணலாம்.

அவர் ஏற்றி வைத்த தீபம் இன்று வரை தொடர்ந்து எரிகிறது.

பசித்தோர்க்கு அன்னமிட வேண்டும் என்ற அவரது எண்ணப்படி இன்றளவும் அவர் மூட்டி வைத்த அடுப்பு அணையாமல்  தொடர்ந்து எரிந்து அன்னம் வழங்கப்பட்டு வருவது உலக அதிசயங்களுள் ஒன்று.

வள்ளலாரின் வாழ்க்கையை ஊன்றிப் பார்ப்பதோடு, அவரது பாடல்களை – அருட்பாவை – படித்து ஓர்ந்து உணர்ந்தால் ஜோதி தரிசனம் கிட்டும் என்பதில் ஐயமில்லை!

tags- ஜோதி தரிசனம், வடலூர், வள்ளலார்

****

கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால யவனன் ! (Post No.7546)

கிருஷ்ணனை 800 மைல் விரட்டிய கால  யவனன் ! (Post No.7546)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN  

Post No.7546

Date uploaded in London – – 7 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்ச புராணம், பாகவதம் முதலியவற்றில் கிருஷ்ணனைப் பற்றிய ஒரு உண்மைக்கதை- வரலாற்றுச்  சிறப்புமிக்க கதை உள்ளது. யாதவர்களை ஓடஓட விரட்டிய நிகழ்ச்சி  இது. உத்தர பிரதேச மாநிலமான மதுராவில் இருந்த ஒரு சமூகத்தை 802 மைல்  — 1291 கிலோமீட்டர் தொலைவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவராகா புரிக்கு  விரட்டிய வரலாற்று நிகழ்வு இது – அதைவிட வியப்பான விஷயம், கிருஷ்ணனையும் யாதவர்களையும் விரட்டிய மன்னன் பெயர் ‘கால யவனன்’ . யமன் போன்ற யவனன் அல்லது கருப்பு யவநன் என்று பொருள் சொல்லலாம். அந்த யவனன் கிரேக்கனா, அராபியான , ரோமானியனா என்றும் தெரியவில்லை . இதை எல்லாவற்றையும் விட சுவையான விஷயம் கிருஷ்ணன் அனுப்பிய கறுப்புப் பாம்புக்குப் பதிலாக அவன் அனுப்பிய எறும்பு டப்பா கதை! tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ முழு விவரம்-

இந்த வரலாற்று நிகழ்வினைச்  சொன்னால் மக்களிடையே கிருஷ்ணன் மதிப்பு குறைந்துவிடும் என்று பவுராணிகர்கள், இதை அதிகம் பிரஸ்தாபிக்கவில்லை போலும் !

கால யவனன் கதையில் மூன்று பகுதிகள் காணப்படுகின்றன. முதல் பகுதி கார்க்யர் என்ற ரிஷி பற்றிய கதை; அவர் வ்ருஷ்ணி குல, அந்தக குல (யாதவ) மக்களுக்கு குரு . அவரை ஒரு சமயம் யாதவர்கள்  அவமானப்படுத்தவே அவர் 12 ஆண்டு தவம் செய்து சிவபெருமான் அருளால் ஒரு அப்சரஸ் மூலம்குழந்தை பெறுகிறார். அந்தக் குழந்தை யாதவ குலத்தைப் பழி வாங்கும் என்றும் சிவன் சொல்கிறார். இதை அறிந்த பக்கத்து தேச யவன மன்னன் அவரையும் அவரது குழந்தையையும் தனது அரண்மனையில் வளர்த்தான். காரணம்? அவனுக்குக் குழந்தை கிடையாது. அவன் இறந்தபின்னர் கார்க்யரின் மக ன் பட்டம் சூட்டப்பட்டான் . tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவனுக்கு கால யவனன் என்ற பெயர் ஏற்பட்டது..

நாரத முனிவர் இதுபற்றி மதுராபுரி மன்னனான கிருஷ்ணனை எச்சரிக்கிறார் . அவரோ சிறிதும் பொருட்படுத்தவில்லை.

இது ஒரு புறமிருக்க, கம்சனின் மாமனாரும் மகா சக்திவாய்ந்த மகத சாம்ராஜ்யத்தின் மன்னனும் ஆன  ஜராசந்தன், கம்சனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனைக் காலி  செய்ய தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது காலயவனனுடன்  இமயமலைப் பகுதியில் உள்ள குட்டி நாடுகளை ஆளும் எல்லா மன்னர்களும் சேர்ந்து கொ ண்டனர். அவன், ஜராசந்தன் ஆதரவோடு மதுராபுரி மீது படையெடுத்தான். அவனுடைய படைகளுடன் வந்த குதிரைகளும் ஓட்டக்கங்களும் போட்ட லத்திகளும் மூத்திரமும் ஆறு போல பெருக்கெடுத்தது ; அந்த ஆற்று க்கு அஸ்வகிருத் என்ற பெயரும் ஏற்பட்டது.

மாபெரும் படை மதுராபுரியை நோக்கி வருவதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா யாதவ மக்களின் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி சொற்பொழிவைத் துவக்கினார்-

எனது அருமை மக்களே, நான் சொல்லுவதைக் கேளீர் . மாபெரும் படை மதுராபுரியை சுற்றி வளைத்து இருக்கிறது. இது வெல்ல முடியாத படை. கால யவனன் , சிவ பெருமானிடம் வரம் பெற்றவன் . நானும் சமாதானத்துக்கு எவ்வளவோ முயன்று பார்த்தேன். இதுவரை பலன் கிட்டவில்லை. காரணம்? ஜராசந்தனின் கோபம் தணியவில்லை. அவன் காழ்ப்பு உணர்வு கொண்டுள்ளான். கால யவனனோ , ‘நானே ஆளப் பிறந்தவன்’ என்று மமதையுடன் கொக்கரிக்கிறான். இந்த செய்தியை நாரதர் என்னிடம் இயம்பினார்” tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

ஹரி வம்சத்தில் உள்ள சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் மேலும் சொல்லப்படுவதாவது —

கிருஷ்ணர் ஒரு டப் பியை எடுத்து அதற்குள்   அதி பயங்கரமான கரு நாகப் பாம்பை உள்ளே போட்டு ஒரு தூதனிடம் கொடுத்தார் இதை காலா யவன னிடம் காட்டி நான் சொல்லுவதைச்  சொல்லிவிட்டு வா என்று தூது அனுப்பினார் கண்ணன். தூதன் , கால யவனனி டம் சென்று டப்பாவைத் திறந்து காட்டியது குல நந்தன னான கிருஷ்ணன் சீறும்  கரும் பாம்பு போன்றவன் என்றான். கால  யவன னுக்குப் புரிந்துவிட்டது. அதி பயங்கரமான கூரிய பற்களுடைய எறும்புகளை பிடித்துவரச்  சொல்லி அதை டப்பா  முழுதும் போட்டு நிரப்பினான் . அந்தப் பாம்பை அவை கடித்துக் குதறி சாப்பிட்டு விட்டன.. இதைப்போய் உங்கள் கிருஷ்ணனிடம் கொடு என்றான் கால யவனன் .

எறும்புடன் வந்த டப்பாவில் அதி பயங்கர கரும்பாம்பு பிணமானதைக் கண்டு கிருஷ்ணன் பயந்தான்; யாதவகுலத்தை அழைத்துக் கோடு 800  மைல் பயணம் செய்து கடலோரப்  பட்டினமான துவாரகா நகருக்கு சென்றான் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

யாதவ குல மக்கள் அனைவரும் வீ ட்டு வாசலுடன் வாழத் துவங்கிய ஒரு நாள், கிருஷ்ணன் மட்டும் தனியாக, நிராயுதபாணியாக  மதுரா புரிக்கு நடந்தே  சென்றான் . கா லயவனனை ஒற்றைக்கு ஒற்றை சண்டைக்கு வா என்றான் . அவன் இத்தகைய தருணத்தை நழுவ விடக்கூடாது .கிருஷ்ணன் கதையை இன்றுடன் முடிப்போம் என்று புறப்பட்டான். கிருஷ்ணர் ஓட்டம் பிடித்தார் எல்லாம் ஒரு திட்டத்தோடு தான் .

ஹரிவம்சத்தில் உள்ள மூன்றாவது கதை.

மாந்தாதா என்ற மாமன்னனின் மகன் முசுகுந்த சக்ரவர்த்தி.  அவன் தேவாசுரப்  போரில் தேவர்களுக்கு வெற்றி வாகை பெற்றுத் தந்தவன் . இனி போரே வேண்டாம் . நான் நிம்மதியாகத் தூங்க அருள்புரியுங்கள்  என்று தேவர்களிடம் வேண்ட, இந்திரன் மூலமாக ஒரு வரம் பெற்றான். என து தூக்கத்தை எவனாவது கெடுப்பானாகில், நான் விழித்தவுடன் பார்க்கும் மனிதன் எரிந்து போ க வேண்டும் என்றான். இந்திரனும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்றான். அவர் ஒரு குகையில் சென்று உறங்கி விட்டார் . இந்த விஷயம் முழுவதையும் நாரத முனிவர் ஆதியோடு அந்தமாக கிருஷ்ணனிடம் இயம்பி இருந்தார் . இது எல்லாம் கிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவே முசுகுந்த மன்னன் தூங்கும்  குகைக்குள் மெதுவாக சப்தமின்றி நுழைந்து முசுகுந்தனின் தலை மாட்டில் அமர்ந்தார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

கால யவனனும் அந்தக் குகைக்குள் நுழைந்தான். கால  யவனனுக்கு விநாச காலே விபரீத புத்தி; ஒரு உறங்கும் ஆசாமி அருகில்தலை மாட்டில், கிருஷ்ணன் அமர்ந்து இருப்பதைப்  பார்த்து, உறங்கும் ஆசாமியை  கால்களால் எத்தி உதைத்தான். கோபத்தோடு எழுந்த முசுகுந்தன் கோபப் பார்வையை அவன் மீது வீசவே கால யவனன் எரிந்து சாம்பலானான் . . கிருஷ்ணனுக்கு  புத்திமான் பலவான் ஆவான்என்ற பழமொழி பொருந்தும்.

இதற்குப் பின்னர், முசுகுந்த மன்னனிடம், அவன் தூங்கிய காலத்தில் உலகில் என்ன என்ன நடந்தன என்ற தலைப்புச்  செய்திகளை ‘புல்லட் பாயிண்டு’ (Bullet Points) களில் கிருஷ்ணன் மொழிந்தார். முசுகுந்தனும் மகிழ்ந்து, இனி சுவர்க்கம் புகும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லி பூவுலகில் இருந்து புறப்பட்டார்.

xxx

என் கருத்து

பைபிளில்  (Bible) இரண்டாவது அத்தியாயத்தில் எக்ஸோடஸ் (Exodus)  என்ற தலைப்பில் மோசஸ் என்ற தலைவன் யூத மக்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்து இஸ்ரேலுக்கு அழைத்துச்  சென்றான் என்ற செய்தி வருகிறது . மூன்று மதங்கள் போற்றும் மோசஸ் உண்மையில் இருந்ததற்கு இதுவரை வரலாற்றுச் சான்றுகளோ தொல்பொருட் துறை சான்றுகளோ கிடைத்தில ; ஆயினும் எக்ஸோடஸ் என்னும் மாபெரும் வெளியேற்றம் பற்றி பல சினிமாக்களும் புஸ்தகங்களும்  வெளியாகியுள்ளன. அது போன்ற நிகழ்ச்சி யாதவர் வெளியேற்றமும் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

மோசஸ் இஸ்ரேலை நோக்கி சென்ற காலையில் அவருக்கு செங்கடல் வழி திறந்துவிட்டது என்று பைபிள் இயம்பும். இது எல்லாம் ஹரிவம்சத்தைக் காப்பி அடித்து எழுதியது என்பர் ஆன்றோர். கிருஷ்ணர் பற்றி சொல்லும் விஷயங்கள் அத்தனையையும் பைபிளும் காப்பி அடித்து இருக்கிறது .

1.பிறக்கும் முதல் குழந்தை குலத்துக்கு ஆபத்து என்றவுடன் ரோம மன்னர் குழந்தைகளைக் கொன்றதை கம்சன் செய்த கொடுஞ் செயல்களுடன் ஒப்பிடலாம்.

2.மோசஸ் யாதவ/ யூதர்களை குடியேற்றியதை கிருஷ்ணனின் துவாரகா குடியேற்றத்துடன் ஒப்பிடலாம்.

3.கூடையில் மோசஸை நைல் நதியில் மிதக்கவிட்டதை கர்ணன் கதையுடன் ஒப்பிடலாம் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

4..செங்கடல் திறந்து மோசஸ் முதலியோருக்கு வழிவிட்டதை யமுனை நதி திறந்து வசுதேவனுக்கு வழிவிட்டதை ஒப்பிடலாம்.

5.ஆதம் (Adam) ஏவாள்(Eve) கதை என்பது உபநிஷத்தில் உள்ள இரண்டு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஏற்கனவே ஒப்பிட்டுள்ளார் . ஆதம் (Adam=Adma) என்பது ஆத்மா என்பதன் திரிபு. ஏவாள் என்பது ஜீவ (Eve-Jeev)  என்பதன் மருவு. அதாவது உபநிஷத்தில் வரும் இரண்டு பறவைக் கதை– ஒரு பறவை பழம் சாப்பிட்டது– என்பதை பைபிள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கூறும் . இது பரமாத்மா , ஜீவாத்மா கதை

6.ஆதம் தனது இடது எலும்பை ஒடித்து பெண் இனத்தை உருவாக்கினான் என்பது அர்த்த நாரி கதை. சிவ பெருமானின் இடப்புறம் சக்தி/ பெண் இனம்.

7. ஏசு சொல்லும் குட்டிக்கதைகள் உபநிஷத் கதைகள் போன்றவை tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

8.இதுதவிர பைபிளில் ஏராளமான சம்ஸ்கிருத் சொற்கள் இருக்கின்றன.

பைபிள் என்பது இந்துமத நுல்களைக் காப்பி அடித்து எழுதியது என்பதற்கு இவைகள் சான்றுகள். மோசஸ் எக்ஸோடஸ் அத்தியாயம் எழுதப்பட்டது கி.மு ஆறாம்   நூற்றாண்டு . கிருஷ்ணர் கதைகளோ கி.மு 3100க்கு முந்தையது.

xxx

Krishna appears in Yaga Fire

இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரிஜினல் கதைக்குத் திரும்புவோம்

கால யவன் கருப்பு கிரேக்கனா (Black Greek?), கருப்பு அராபியனா (Black Arabian)? என்ற ஆராய்சசியும் நீடிக்கிறது. யவன என்ற சொல்லை சங்க இலக்கியம் ரோமானியர் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. அலெக்சாண்டர் படை எடுப்புக்குப் பின்னர் கிரேக்கர் என்ற பொருளில் வருகிறது. குதிரை விற்பனைக் கதைகளில் அராபியர் என்ற பொருளில் வருகிறது . யவன என்ற சொல் வரும் பல்லாயிரம் இடங்களைத் தொகுத்து ஹெல்சிங்கி (பின்லாந்து) நகர புஸ்தக வெளியீடு 2015ல் வெளியாகி யிருக்கிறது. அதில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. கால யவனனுடன் சேர்ந்த மன்னர்கள், இனங்கள் பெயர்கள் நிறைய உள்ளன . அத்தனையையும் ஆராய்ந்தால் புதிய இந்திய வரலாறு tamilandvedas.com, swamiindology.blogspot.com

எழுதலாம்.

இதைவிட மிக மிக சுவையான விஷயம் ஹெலிகாப்டர் பற்றியது. ஹரி வம்சத்தில் ஓரிடத்தில் கால யவனனுக்கு  வானில் பறக்கும் (aerial car) வாகனத்தில் தூது விடுவோம் என்ற ஸ்லோகம் வருகிறது. போகிற போக்கில் இதைச்  சொல்லுவதால் அக்கால மக்களுக்கு விமானம், ஹெலிகாப்டர் என்பன அத்துப்படி என்பதும் ஆனால் மன்னர்கள் மட்டுமே அரிதாகப் பயன்படுத்தினர் என்றும் தெரிகிறது.

இதை எல்லாம்விட மிக மிக அதிசயமான விஷயம் போக்குவரத்து வசதிகள். கிருஷ்ணர், துவாரகைக்கும் ஹஸ்தினாபுரத்துக்கும், துவரகை க்கும் மதுராபுரிக்கும் இடையே சென்று வந்த செய்திகள் நிறைய உள்ளன. துவாரகா- மதுரா தொலைவு 1291 கிலோ மீட்டர். அதாவது 802 மை லகள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வதற்கு புல்லட் ரயில் (Bullet Trains)  இல்லை ; அப்படியும் எப்படி கிருஷ்ணன் அடிக்கடி பயணம் செய்தார்? அதுவும் யாதவ குல மக்கள் கால் நடையாக எப்படி வந்தனர்? பின்னர் கிருஷ்ணர் மட்டும் எப்படி கால்நடையாக தனியே சென்றார்.? tamilandvedas.com, swamiindology.blogspot.com

 புற நானுற்றுக்கு உரை எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன், உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர், விளம்புவது போல யாதவ குலத்தினர் தமிழ் நாட்டில் எப்படி குடியேறினர்? இரண்டாயிரம் மைல்கள் நடந்து வந்தனரா ? மதுரை அரசி மீனாடசியின் அம்மா காஞ்சன மாலை , அவளோ உக்ரசேனனின் குமாரத்தி ஆயிற்றே . அவர்கள் எப்படி  தமிழ் நாட்டு மதுரைக்கு குடியேறினர் ? ஆதி சங்கரர் எப்படி இரு முறை இமயம் முதல் குமரி வரை வலம் வந்தார்? பாஹியானும் யுவாங் சுவானும் சீனாவில் இருந்து எப்படி காஞ்சிபுரம் வரை வந்தனர்? இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டு புது வரலாறு எழுதுவோமாக . புரியாத பல புதிர்களை விடுவிப்போமாக .

Tags  –  துவாரகா , மதுரா , கிருஷ்ணன் , குடியேற்றம்,யாதவர், கால யவனன் , கார்க்யர் , ஜராசந்தன், கிருஷ்ணர்

சுபம் —

விபூதியின் மஹிமை! – 1 (Post No.7541)

Vibhuti Valluvar

Written  by S Nagarajan             

Post No.7541

Date uploaded in London – – 6 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

விபூதி எனப்படும் திருநீறு சைவர்கள் தரிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

“ஒரு நாளாவது ஒருவன் பஸ்மத்தைத் தரிப்பானாயின் அவனுக்குண்டாகும் புண்ணியபலத்தைச் சொல்கிறேன், கேட்பாயாக : என்னவெனில் அவ்ன் மகாபாதகங்களைச் செய்திருப்பின் அவைகளும் வேறு பாதகங்களும் நசித்துப் போய்விடும். இது சத்தியம்! சத்தியம்!! சந்தேகமில்லை”

என்று இப்படி நாராயணர், நாரதரிடம் கூறிய் ஆச்சரியகரமான உரை தேவி பாகவதத்தில் இடம் பெறுகிறது.

தேவி பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தத்தில் 11ஆம் அத்தியாயம் மூவகை பஸ்மம் பற்றி விளக்குகிறது.

12,13,14 ஆகிய அத்தியாயங்கள் பஸ்ம மகிமையை மிக விரிவாக விளக்குகின்றன.

15ஆம் அத்தியாயம் பஸ்மம் தரிக்கும் முறைகள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது.

ஸ்கந்தபுராணமோ சூத சம்ஹிதையில் யக்ஞ வைபவ காண்டத்தில் (29ஆம் அத்தியாயம்) திருநீற்றின் மகிமை பற்றிக் கூறுகிறது.

அதை இங்கு சுருக்கமாகக் காண்போம்:

மஹாபஸ்மம், பஸ்மம் என்று விபூதி இரு வகைப் படுகிறது.

பாவங்களை எல்லாம் நாசம் பண்ணுவதால் அதற்குப் பஸ்மம் என்று பெயர்.

ஞானத்தைக் கொடுத்து மஹாபாவங்களை எல்லாம் நாசப்படுத்துவதால் சிவபெருமானே மஹாபஸ்மம் எனப்படுவார்.

அந்த மஹாபஸ்ம சொருபத்தை அடைந்தவர்களுக்கு தவம் முதலியவற்றினால் யாதொரு பயனும் இல்லை.

மஹாபஸ்ம சொரூபம் விளங்கப் பெற்றவன் சிவனே ஆவான்.

மஹா பஸ்ம ஞானம் அடைவதையே பெரும் பயன் என்று வேதம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

சிரௌதம், ஸ்மார்த்தம், லௌகிகம் என்று  பஸ்மம் மூன்று வகைப்படும்.

இதில் சிரௌதம், ஸ்மார்த்தம் ஆகிய இரண்டும் அந்தணர்களுக்கே உரியன.

லௌகிகம் மற்ற எல்லோருக்கும் ஆகும்.

ஜாபாலோபநிஷத் மந்திரங்களினால் உத்தூளனம் செய்து கொண்டு, பஞ்சபிரம மந்திரங்களால் நீர் விட்டுக் குழைத்துத் திரிபுண்டரம் தரித்துக் கொள்ள வேண்டும்.

மேதாவி முதலிய மந்திரங்களால் பிரம்மச்சாரி அணிய வேண்டும்.

சந்யாசி பிரணவ மந்திரத்தால் (ஓம்) அணிவது தகுதி.

மந்திரங்களுக்கு அதிகாரமில்லாதவன் மந்திரம் இல்லாமலேயே தரித்தல் வேண்டும்.

விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரித்தல் ஞானாங்கமாகும் என்று வேதங்கள் சொல்லும்.

பாசுபத விரதத்தை அனுஷ்டிப்பவன் மெய்ஞானத்தை அடைந்தவனாவான் என கைவல்ய உபநிடதம் கூறுகிறது.

முக்தியை விரும்புவபவர்கள் விபூதியை எப்போதும் தரிக்க வேண்டும்.

உயிரைக் காப்பாற்றல், சுபம், ஸ்நானம், தானம், தவம், யாகம் எல்லாம் திருநீறு என்று வேதங்கள் கூறுகின்றன.

திருமால், பிரமன்,இந்திரன், தேவர்கள்,இலட்சுமி, சரஸ்வதி, இந்திராணி, அரம்பையர்கள், யட்சர், கந்தர்வர், ராக்ஷஸர், அசுரர், முனிவர்கள் ஆகிய இவர்களில் விபூதியை உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் தரியாதவர் யார்?

திருநீறு அணியாதவர்க்கு ஞானமில்லை.

அவர்கள் கோடி ஜன்மம் எடுத்தாலும் சம்ஸார பந்தம் ஒழியார்; பாவிகள் ஆவார்! நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

வர்ணாசிரம தர்மம் தரும் பலனையும் அவர்கள் அடைய மாட்டார்கள். அவர்கள் செய்யும் புண்ணியமும் பாவமாகும்.

பல ஜன்மங்களிலும் பாவம் செய்தவர்களுக்கு விபூதியில் வெறுப்பு உண்டாகும்.

paramam pavitram Bhaba Vibhutim

விபூதியை விரும்பாதவர்கள் அனைவரும் மஹாபாவிகள் என்று

தெரிந்து கொள்ள வேண்டும்.

திருநீற்றின் மகிமையை ஒருவராலும் சொல்ல முடியாது.

இப்படி ஸ்காந்த புராணம் அழுத்தமான வார்த்தைகளால் விபூதி அணிவதன் அவசியத்தையும் அதன் மகிமையையும் விளக்குகிறது.

அடுத்து தேவி பாகவம் கூறும் மகிமைகளைச் சற்றுப் பார்ப்போம்.

  • தொடரும்

****

சடலங்களை உண்ண கழுகுகள் தேவை !! (Post No.7539)

Written  by London Swaminathan               

Post No.7539

Date uploaded in London – – 5 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நான் தினமணிக் கதிரில் 1992ம் ஆண்டு டிசம்பரில் பார்சி மத மக்கள், இறந்த பின்னர் சடலங்களை  கழுகுகளுக்கு இரை யாகப் போடுவது பற்றி எழுதிய கட்டுரை இது. மொத்தத்தில் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதால் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கவில்லை.

Tags  -சடலங்கள், கழுகுகள், பார்சி, பம்பாய்

வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!(Post No.7537)

Written  by S Nagarajan

Post No.7537

Date uploaded in London – – 5 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

கொங்குமண்டல சதகம் பாடல் 69

வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!

ச.நாகராஜன்

கொங்குமண்டலத்தில் உள்ள கஞ்சமலையில் ஏராளமான வியத்தகும் மூலிகைகள் உள்ளன. இவற்றில் நரை திரை போக்கி வயோதிகரை வாலிபராக்கும் மூலிகையும் ஒன்று.

தான் குமரனாக விரும்பிய வயோதிகரான மூலன் என்ற ஒரு அந்தணர் இதை அடைய விரும்பினார்.

கஞ்சமலையின் உள்ள கருங்காட்டினுள் சென்று மூலிகையை தேடலாம்  என்று நினைத்த அவர் தன் மாணாக்கனிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.

அவர் வெளியே சென்ற சமயம் அவரது மாணாக்கன் உலையில் இருந்த சோறை ஒரு கருநெல்லிக் கோலால் கிளறினான். குச்சி கறுப்பாக இருந்ததால் உலையில் இருந்த சோறு அனைத்தும் கறுப்பாயிற்று. சமைத்த சாதம் இப்படிக் கறுப்பாகி விட்டதே, குரு வந்தால் கோபிப்பாரே என்று சீடன் பயந்தான்.

நிறம் மாறிய அன்னத்தைத் தானே சாப்பிட்டு விட்டு வேறு புதிதாக அன்னத்தைச் சமைத்து வைத்தான்.

அந்த கறுப்பு அன்னத்தைப் புசித்ததால் சீடன் நரை திரை நீங்கி இளமை எய்தினான்.

தனது குருவுக்குப் பயந்து அவன் ஒளிந்து கொண்டான்.

மலை மீதிலிருந்து இறங்கி வந்த மூலன் தன் சீடன் எங்கே என்று தேடி, உரக்கக் கூவினான். நீ எங்கே இருக்கிறாய் என்ற குருவின் குரலைக் கேட்ட சீடன் அவர் முன்னே வந்து நின்றான். அவன் யார் என்று தெரியாத குரு அவனை யார் என்று கேட்க அவனோ நான் தான் உங்கள் சீடன் என்று சொல்ல அவர் வியந்து போனார்.

எப்படி இப்படி ஆனாய் என்று அவர் கேட்க சமைத்த சாதம் கறுப்பான சம்பவத்தைக் கூறினான்.

அந்தக் குச்சி எங்கே என்று கேட்டார் குரு.

அதை முறித்து அடுப்பில் வைத்து எரித்து விட்டேன் என்றான் சீடன்.

ஒரு கணம் திகைத்துப் போனார் குரு.

பின்னர் ஒரு யோசனை செய்தார். அவன் வாயில் விரலை விட்டு அவன் உண்ட சாதத்தைக் கக்க வைத்தார். அதைத் தான் எடுத்து உண்டார்.

அவரும் வாலிபர் ஆனார்.

இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.

பாடல் இதோ:

உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்

தலையின் மயிருங் கருக்கக் கண் டேயவன் சற்குருவும்

நிலையுடன் கக்குவித் துண்டடைந்த் தானன் னெறியிற் கஞ்சமலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே

இப்பாடலின் பொருள் :

உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.

இந்த வரலாறைக் கரபுரநாதர் புராணம் கஞ்சமலைச் சருக்கத்தில் இப்படி விவரிக்கிறது:

கரபுரநாதர் புராணம்

அந்தமா ணாக்கன் றன்னை யடுகைநீ செய்யென் றோதி

புந்தியின் மருந்து தேடிப் போயின னயலிற் சீட

னுய்ந்திடக் கருநெல் லிக்கொம் பொன்றினா வனந் துழாவ

வெந்தனங் கரிபோ லாக வெருவியன் னத்தை யுண்டான்

நரைதிரை மாறி மேனி நடந்தவீ  ரெட்டாண் டேபோற்

புரையிலா வழகு பெற்றுப் புடமிடு பொன்போ லானான்.

துழாவிய கொம்பெங் கென்றான் சுல்லியிற் போட்டே னென்ன

வழாதுநீ யுண்ட சோற்றை வாயினிற் கக்கென் றோத

விழாத சோ றதனைக் கக்க மிச்சிலைக் குருவு முண்டான்

றொழாரெவ ரிவர்க டம்ப்பைச் சுந்தரப் பால ரானார்

  • கஞ்சமலைச் சருக்கம்

இப்படிப்பட்ட அரிய மூலிகைகள் இருப்பது பற்றி வியத்தகும் நல்ல பாடல்கள் மூலமாக அல்லவோ அறிய முடிகிற!

***

ஆதி சங்கரரின் அற்புத ஸ்துதிகள், நூல்கள்! (Post No.7531)

Written by S Nagarajan               

Post No.7531

Date uploaded in London – – 4 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே பாரதத்தில் உலவிய பெரும் அவதார புருஷரான ஆதி சங்கரர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை.

அவற்றில் உள்ள உபதேச அருளுரைகளும், உண்மைகளும் இரகசிய விளக்கங்களும் எண்ணற்றவை.

அவரது நூல் பட்டியல் இதோ:

  Bhashya Granthas:   1. Brahma Sutras 2. Isavasya Upanishad 3. Kena Upanishad 4. Katha Upanishad 5. Prasna Upanishad 6. Mundaka Upanishad 7. Mandukya Upanishad 8. Mandukya Karida 9. Aitareya Upanishad 10. Taittireeya Upanishad 11. Chhandogya Upanishad 12. Brihad Aranyaka Upanishad 13. Sree Nrisimha Taapaneeya Upanishad 14. Sreemad Bhagawad Geeta 15. Sree Vishnu Sahasranama 16. Sanat Sujateeyam 17. Lalita Tri-satee 18. Hastaamalakeeyam Compiled by S Nagarajan, tamilandvedas.com, swamiindology.blogspot.com     Prakarana Granthas: 19. Viveka Chudamani 20. Aparokshanubhooti 21. Upadesa Sahasri 22. Vaakya Vritti 23. Swaatma Niroopanam 24. Atma-bodha 25. Sarva Vedanta Sara Samgraha 26. Prabodha Sudhakaram 27. Swaatma Prakasika 28. Advaita anubhooti 29. Brahma anuchintanam 30. Prashnouttara Ratnamaalika 31. Sadachara anusandhanam 32. Yaga Taravali 33. Anatmasree Vigarhanam 34. Swaroopa anusandhanam 35. Pancheekaranam 36. Tattwa bodha 37. Prouda anubhooti 38. Brahma Jnanavali 39. Laghu Vakyavritti 40. Bhaja Govindam 41. Prapancha Saaram   Hymns and Meditation Verses: 42. Sri Ganesa Pancharatnam 43. Ganesa Bhujangam 44. Subrahmanya Bhujangam 45. Siva Bhujangam 46. Devi Bhujangam 47. Bhavani Bhujangam 48. Sree Rama Bhujangam 49. Vishnu Bhujangam 50. Sarada Bhujangam 51. Sivananda Lahari 52. Soundarya Lahari 53. Ananda Lahari 54. Sivapaadaadi kesaanta varnana 55. Siva kesaadi padaanta varnana 56. Sree Vishnu-paadaadi-kesanta 57. Uma maheswara Stotram 58. Tripurasundari Vedapada Stotram 59. Tripurasundari Manasapooja 60. Tripurasundari Ashtakam 61. Devi shashti upachara-pooja 62. Mantra matruka Pushpamaala 63. Kanakadhara Stotram 64. Annapoorna Stotram 65. Ardhanareshwara Stotram 66. Bhramanaamba Ashtakam 67. Meenakshi Stotram 68. Meenakshi Pancharatnam 69. Gouri Dasakam 70. Navaratna Malika 71. Kalyana Vrishtistavam 72. Lalitha Pancharatnam 73. Maaya Panchakam 74. Suvarna Mala Stuti 75. Dasa Sloki 76. Veda Sara Siva Stotram 77. Siva Panchaakshara Stotram 78. Sivaaparadha Kshamapana 79. Dakshinamoorthy Ashtakam 80. Dakshinamoorthy Varnamala 81. Mrutyunjaya Manasa Pooja Stotram 82. Siva Namavali Ashtakam 83. Kaala Bhairava Ashtakam 84. Shatpadee Stotram 85. Siva Panchakshara Nakshatra Mala 86. Dwadasa Ling Stotram 87. Kasi Panchakam 88. Hanumat Pancharatnam 89. Lakshmi-Nrisimha Pancharatnam 90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram 91. Panduranga Ashtakam 92. Achyuta Ashtakam 93. Sree Krishna Ashtakam 94. Hari Stuti 95. Govinda Ashtakam 96. Bhagavat Manasa Pooja 97. Praata Smarana Stotram 98. Jagannatha Ashtakam 99. Guruvashtakam 100. Narmada Ashtakam 101. Yamuna Ashtakam 102. Ganga Ashtakam 103. Manikarnika Ashtakam 104. Nirguna Manasa Pooja 105. Eka Sloki 106. Yati Panchakam 107. Jeevan Mukta Ananda Lahari 108. Dhanya Ashtakam 109. Upadesa (Sadhna) Panchakam 110. Sata Sloki 111. Maneesha Panchakam 112. Advaita Pancharatnam 113. Nirvana Shatakam 114. Devyaparadhakshamapana Stotram  




ஸ்வாமி சின்மயாநந்தா ஆதி சங்கரர் நூல்கள் பற்றி பவன்ஸ் ஜர்னல் இதழில் மே 1988-1989 இல் எழுதிய கட்டுரையில் 139 நூல்களின் பட்டியலைத் தருகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com   ஆதி சங்கரர் இயற்றிய நூல்களின் விளக்கத்தை ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகான்கள் மட்டுமே தர முடியும். இந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.   ஸ்வாமி விவேகானந்தர் தனது அருளுரைகளில் சங்கரர் பற்றிய ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளார்.   சமீப காலத்தில் காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் ஏராளமான உபதேச அருளுரைகளிலும் கட்டுரைகளிலும் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து அருளியுள்ளார். கல்கி இதழில் வாரா வாரம் வெளியாகிய ஜகத்குருவின் அருளுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அடுத்து ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பல்வேறு துறவிகள் பல நூல்களில் விளக்கங்களை அளித்துள்ளனர்.   சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்து வெளியீடான சௌந்தர்ய லஹரி குறிப்பிடத்தகுந்த ஒன்று. அண்ணா எழுதிய இந்த விளக்க உரையில் பதத்திற்குப் பதம் தமிழில் அர்த்தம், இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.   அடுத்து ஸ்வாமி சின்மயாநந்தரின் நூல்கள் மிகத் தெளிவான விளக்க உரைகளை தந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பற்றிப் பலரும் எழுதிய விளக்க நூல்களை எடுத்துக் கொண்டால் பல நூறு பக்கங்களில் அதிசய விளக்கங்களைக் கண்டு பிரமித்துப் போகிறோம்.   இன்னும் சிலர் ஆதி சங்கரரின் ஸ்தோத்திரங்களை மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com   தெய்வீக ஸ்தோத்திரங்களை சங்கரர் அருள்வாக்கில் இயற்றியதை அப்படியே கூற வேண்டும் என்றாலும் அர்த்தம் புரிந்து கொள்ள இந்தத் தமிழ்/ ஆங்கில மொழி பெயர்ப்புகள் உதவும் என்பதில் ஐயமில்லை. அடுத்து வரும் சில கட்டுரைகளில் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய சிறு குறிப்புரைகளைக் கண்டு மகிழலாம்.  


Tags – ஆதி சங்கரர், இயற்றிய நூல்கள், ஸ்துதிகள்,   Adi Shankara Hymns