வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4 (Post No.7424)

Written by S Nagarajan

Uploaded in London on  – 6 JANUARY 2020

Post No.7424

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

11) ஸ்ரீ காமாசிகாஷ்டகம்

9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ காமாசிகாஷ்டகம்.

காமாசிகா என்பதை காம + ஆசிகா என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தனது சொந்த விருப்பத்தின் பேரில் எழுந்தருளியிருப்பவன் என்ற பொருள் கொள்ள வைக்கும் இது.  

இறைவன் அழகிய சிங்கர் எழுந்தருளி இருக்கும் இடம் காஞ்சிக்குத் தெற்கே உள்ள திருவேளுக்கை என்ற ஸ்தலமாகும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

வேள் என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையுடன் இங்கு இருப்பதால் வேள் + இருக்கை = வேளிருக்கை என்ற பெயரை இந்த தலம் பெற்றது. காலப்போக்கில் இது வேளுக்கையாக மாறி விட்டது. பர்யங்க நிலையில் அதாவது கால்களை மடக்கி அமர்ந்து, யோக முத்திரையுடன் யோக நரசிம்மராகக் காட்சி அளிக்கும் இறைவனை வேதாந்த தேசிகர் ஒன்பது ஸ்லோகங்களால் துதிக்கிறார். ஒரு சிறப்பு அம்சம் இறைவன் மூன்று கண்களுடன் காட்சி தருகிறார் இங்கு.

இறுதி ஸ்லோகத்தில் இதைக் கூறுவோருக்கு இஷ்ட பலிதம் ஏற்படும் என அவர் அருள்கிறார்.

12) ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட துதி ஸ்ரீ பரமார்த்த ஸ்துதி.

காஞ்சிக்கு மேற்கே 7 மைல் தொலைவில் உள்ள தலம் திருப்புட்குழி. 108 வைணவத் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலமும் கூட. இராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைக்கு மோட்சமளித்து இறுதிச் சடங்குகளை ராமர் செய்த இடம் இது தான். ஆகவே திரு + புள் (பறவை) + குழி = திருப்புட்குழி என்ற பெயரைப் பெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயு சந்நிதி உள்ளது.

பரமார்த்தம் என்றால் மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்றாகும். அது ஸ்ரீ ராமரைக் குறிக்கிறது.

போரேறு என்று ஆழ்வார்கள் ராமரைக் குறிக்கையில் இந்த ஸ்துதியில் தேசிகர் ராமரை ரணபுங்கவன் என்றும் ஆஹவபுங்கவன் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது போரில் வெற்றி பெறும் மிகப் பெரும் வீரன் என்று பொருள் இதற்கு.

சரணாகதி அடைந்தவருக்கு அருள் புரிபவன் என ராமரை தேசிகர் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறார்.

13) ஸ்ரீ தேவநாயக பஞ்சாஷத்

53 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் கொண்ட இந்த ஸ்துதியில் தேவநாதனைப் போற்றுகிறார் தேசிகர். அடியார்க்கு மெய்யன் என்ற பெயர் கொண்ட இறைவன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறான். (திருவஹிந்திபுரம் என்றும் அழைக்கப்படும்) இந்த தலத்தில் வேதாந்த தேசிகர் பல காலம் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை இங்கு காணலாம். தேசிகர் வெட்டிய கிணறும் இங்கு உள்ளது.

சாதாரணமாக பாதம் முதல் கேசம் வரை பாதாதி கேசம் என்ற மரபை மாற்றி தேசிகர் இதில் இறைவனை கேசம் முதல் பாதம் வரை வர்ணிக்கிறார். மனிதர்களை மட்டுமே இப்படிப் பாடுவது மரபு என்பதால் இறைவனை தேசிகர் தனது நண்பராகக் கருதுவது புலப்படுகிறது. தேவநாதனை உபநிடதம் சத்யம் என்று குறிப்பிடுகிறது. அப்படிப்பட்டவனை தேசிகர் பாடியதால் அவர் சத்யவாதியாக ஒளிர்கிறார் என இறுதி ஸ்லோகம் குறிப்பிடுகிறது.

14) ஸ்ரீ அச்சுத சதகம்

101 சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீ அச்சுத சதகம் திருவயிந்திபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடும் நூலாகும். நாயிகா பாவத்தில் அமைக்கப்பட்டுள்ள நூல் இது. மதுர பக்தி பாவத்தை இதில் காணலாம்.

15) ஸ்ரீ மஹாவீர வைபவம்

உரைநடையிட்ட செய்யுள் நூலாக அமைந்திருக்கும் சம்ஸ்கிருத நூலான இதில் 96 உரைநடை வரிகள்  செய்யுளைக் காணலாம்.

பெரும் வீரனான ஸ்ரீ ராமரின் சரிதம் வால்மீகி ரிஷியால் ஏழு காண்டங்களில் ராமாயணமாகத் தரப்பட்டுள்ளது. அதைச் சுருக்கமாக கம்பீரமான வார்த்தைகளைத் தொடுத்து அழகுறத் தருகிறார் தேசிகர் இதில்.

இது ரகுவீர கத்யம் என்றும் அழைக்கப்படுகிறது.

தனது இந்த சுருக்கமான ராமாயணத்தை அவரே கடோர- சுகுமார  நடையில் – கடினமான மற்றும் எளிய நடையில் இயற்றியிருப்பதாக இறுதி ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.

***

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 2 (Post No.7421)

Acupressure in Rig Veda

Research article Written by London Swaminathan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7421

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

Vedic Seers knew Monsoons
Hydrotherapy in Rig Veda

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 3 (Post No.7420)

Written by S Nagarajan

Uploaded in London on  – 5 JANUARY 2020

Post No.7420

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

9) ஸ்ரீ வேகாசேது ஸ்தோத்ரம்

10 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள ஸ்தோத்ரம் இது. வேகா என்ற நதியின் மீது சேது (அணை) கட்டியவர் பற்றிய புகழ் மாலை இது.

நான்கு முகமுடைய பிரம்மா ஒரு யாகம் செய்ய விரும்பினார். அவர் மீது கோபம் கொண்ட பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த யாகத்திற்கு இடையூறு செய்ய விரும்பினாள். பாய்ந்தோடும் வேகா என்ற நதியாக அவள் மாறினாள். யாக பூமியில் பாய்ந்தோட விழைந்தாள். பிரம்மா விஷ்ணுவை நோக்கித் துதிக்க, விஷ்ணு ஒரு சேதுவாக (அணையாக) வேகா நதியின் இடையே தோன்றி பிரம்மாவின் யாகத்தைக் காப்பாற்றினார். சின்ன காஞ்சிபுரத்திற்கு மேற்கே  ஒரு மைல் தொலைவில் உள்ள இந்த இடம் திருவெஃகா என ஆழ்வார்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த ஸ்தலத்தின் ஸ்தல புராணம் தரும் விவரங்கள் இவை.

யதோக்தகாரி என்பது இங்குள்ள பெருமாள் பெயர், தமிழில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பெயர். பிரம்மாவின் வரலாறைச் சுட்டிக் காட்டுகிறது இது.

திருமழிசை ஆழ்வாரின் வாழ்வில் நடந்த ஒரு புகழ் பெற்ற சம்பவம் நடந்த இடமும் இது தான்.

பல்லவ மன்னன் திருமழிசை ஆழ்வாரின் சிஷ்யரான கனி கண்ணன் என்பவர் பெருமாளைத் துதித்துப் பாடுவதைக் கேட்டான். அவரது இனிய குரலால் கவரப்பட்ட அவன் தன்னைப் புகழ்ந்து பாடும்படி ஆணையிட்டான். அவரோ மறுத்து விட்டார்.கோபமடைந்த மன்னன் உடனே அவரை நகரை விட்டு நீங்குமாறு உத்தரவிட்டான். இதைக் கேட்ட ஆழ்வார் தானும் கனிகண்ணனுடன் நகரை விட்டுப் புறப்பட நிச்சயித்தார்.

தான் வணங்கும் பெருமாளும் அங்கிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

பெருமாளிடம் சென்றார்; ஒரு விண்ணப்பம் செய்தார் இப்படி:

கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய

செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்

பெருமாள் ஆழ்வாருடனும் அவர் சீடருடனும் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

நகரே இருளில் மூழ்கியது.

திடுக்கிட்ட மன்னவன் தன் தவறை உணர்ந்தான். ஆழ்வாரிடம் சென்று இறைஞ்சி மூவரும் மீண்டும் திரும்ப வேண்டும் என வேண்டினான்.

ஆழ்வாரும் மனம் கனிந்தார்.

பெருமாளை நோக்கித் துதித்தார் இப்படி :

கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய

செந்நாப் புலவனும் செலவொழிந்தேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக் கொள்

பெருமாள் இந்த வேண்டுகோளுக்கு மனமிரங்கி மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளி பைந்நாகப் பாயின் மீது படுத்து அருள் பாலிக்கலானார்.

அற்புதமான இந்த உண்மை வரலாறு பகவானின் சௌலப்ய குணத்தை – பக்தர்களுக்கு எளியவன் ஆகும் குணத்தைக் – காண்பிக்கிறது.

இந்த வரலாறால் கவரப்பட்ட வேதாந்த தேசிகர் 9ஆம் ஸ்லோகத்தில் பெருமாளை காஞ்சி பாக்யம் எனக் கூறுகிறார்.(காஞ்சி பாக்யம் கமல நிலயா – ஸ்லோகம் 9)

இந்த 9 ஸ்லோகங்களைச் சொன்னவர்களின் வார்த்தைகளின் படி பெருமாள் நடப்பார் என்று வேதாந்த தேசிகர் பத்தாவது ஸ்லோகத்தில் அருள்கிறார்.

10) ஸ்ரீ அஷ்டபுஜாஷ்டகம்

இந்த ஸ்தோத்திரம் 10 ஸ்லோகங்களைக் கொண்டது.

காஞ்சியில் பிரம்மா ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தார். அதைத் தடுக்க அசுரர்கள் முயன்றனர். உடனே ஆதி கேசவப் பெருமாள் எட்டு கரங்களைக் கொண்டு அவர்களை அழித்தார்.

ஆழ்வார்கள் இந்த ஸ்தலத்தை அட்டபுயக்கரம் எனக் குறிப்பிடுகின்றனர். இது 108 வைணவத் தலங்களுள் ஒன்று. காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் இது உள்ளது.

விஷ்ணு இங்கு தனது வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடபுறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.

மூலவருக்கு இப்படி எட்டு கரங்கள் இருக்க, உற்சவருக்கோ நான்கு கரங்கள் மட்டுமே உண்டு.

இறுதி ஸ்லோகத்தில் தேசிகர் இந்த ஸ்லோகங்களைப் படித்தவர்கள் தன்னை சரணம் அடைந்தவர்களுக்கு தன் கரங்களை இரட்டிப்பாக்கிய விஷ்ணு அருள்வார் என்று கூறியருள்கிறார்.

***

நோய் தீர்க்கும் 2 அற்புத வேத மந்திரங்கள் -Part 1 (Post No.7417)

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 2 (Post No.7416)

Written by S Nagarajan

Uploaded in London on  – 4 JANUARY 2020

Post No.7416

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ச.நாகராஜன்

வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது.

  • ஸ்ரீ தயா சதகம்

108 சம்ஸ்கிருத பாடல்கள் அடங்கியுள்ள நூல் ஸ்ரீ தயா சதகம். சதகம் என்பது 100 பாடல்கள் அடங்கியுள்ளதைக் குறிக்கும்.

வெங்கடேஸ்வரனின் தயை ஒரு தேவதையாக உருவகப்படுத்திப் பாடப்பட்ட பாடல்கள் இவை. இந்த சதகம் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சம்ஸ்கிருதத்தின் ஒவ்வொரு சந்த வகையைக் கொண்டு அமைந்துள்ளது.

82 முதல் 90 முடிய உள்ள பாடல்களில் பத்து அவதாரங்கள் சொல்லப்படுகிறது.

பாடல் 104இல் ‘வேதாந்த தேசிக பதே வினிவேஷ்ய பாலம்’ என்று வருவதால், ‘வெங்கேஸ்வரப் பெருமாளே சிறுவனான எனக்கு வேதாந்த தேசிகர் என்று கூறி அருளி என்னை இந்த தயா சதகம் பாடச் செய்திருக்கிறார்’ என்று கூறி இருப்பது தெரிய வருகிறது. வெங்கடேஸ்வரனும் ரங்கநாதனும் ஒருவரே என்பதால் ரங்கநாதர் தான் அவருக்கு வேதாந்த தேசிகர் என்ற பட்டத்தை அருளியுள்ளார் என்று பொதுவாக சொல்லப்படுவதும் சரி தான் என்று உணரலாம்.

ஏராளமான சுவையான தகவல்கள் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவர்களைப் பற்றி தயா சதகத்தில் படித்து மகிழலாம்.

  • ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்

இதில் 51 சம்ஸ்கிருத செய்யுள்கள் உள்ளன. காஞ்சியில் எழுந்தருளியுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாளை இதில் தேசிகர் போற்றித் துதிக்கிறார்.

 தூப்புலில் அவதரித்து காஞ்சியில் வாழ்ந்தவரே தேசிகர் என்பதால் இயல்பாகவே வரதராஜர் மீது வேதாந்ததேசிகர் அளப்பரிய பக்தி கொண்டிருந்ததை சுலபமாக உணரலாம்.

இதில் பல்வேறு வாகனங்களை தேசிகர் சுவையாகக் குறிப்பிடுகிறார். பிரம்மோத்ஸவத்தில் வரும் வாகனங்கள், தேர், பல்லக்கு ஆகியவற்றை குறிப்பிடும் இந்த பஞ்சாசத்தின் இறுதி ஸ்லோகத்தில் இதைப்  படிப்பவர்கள் அல்லது கேட்பவர்கள் அனைவருக்கும் கல்ப விருட்சம் தரும் அனைத்தும் கையில் வந்து சேரும் என்று உறுதிபடக் கூறி அருள்கிறார்.

  • வைராக்ய பஞ்சகம்

ஆறு சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியுள்ள வைராக்ய பஞ்சகத்தில் முதல் ஐந்து ஸ்லோகங்களால் உலகில் மதிக்கப்படும் செல்வத்தை மதிக்காமல் இறைவனின் அருள் ஒன்றையே செல்வம் என மதிக்கும் வேதாந்த தேசிகரின் அருள் உள்ளம் புலப்படுகிறது. ஆறாவதாக அமையும் இறுதி ஸ்லோகத்தில் எனது தந்தையால் சம்பாதித்த பொருள் எதுவும் எனக்கில்லை; நானும் சம்பாதிக்கவில்லை. ஆனால் எனக்கு என் தாத்தாவான பிரம்மாவால் தானமாகத் (பைதாமஹம் தானம்) தரப்பட்டுள்ள ஹஸ்தகிரியில் வீற்று அருளும் வரதராஜரின் அருள் உள்ளது என்று உருக்கமாகக் குறிப்பிடுகிறார்.

அத்வைத ஆசாரியரான வித்யாரண்யர் காலத்தில் வாழ்ந்தவர் வேதாந்த தேசிகர். இருவரும் சிறுவயதுத் தோழர்கள். காஞ்சியில் எளிமையாக வேதாந்த தேசிகர் வாழ்ந்து வருவதை அறிந்த வித்யாரண்யர் ஹரிஹரர், புக்கர் நிறுவிய விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு வருகை புரியுமாறு அரசாங்க அழைப்பை அனுப்பினார். ஹரிஹரரும் புக்கரும் விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவக் காரணகர்த்தரே வித்யாரண்யர் தான். ஆனால் தேசிகர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. உலகியல் செல்வங்களின் மீது அவர் பற்றுக் கொள்ளாததே இதன் காரணம்.

  • சரணாகதி தீபிகா

சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இதில் 59 செய்யுள்கள் உள்ளன. சரணாகதி ப்ரபத்தி என்பது வைஷ்ணவ தர்மத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். சரணாகதியே முக்திக்கான வழி.

மடப்பள்ளியாச்சான் என்பவர் ஸ்ரீ ராமானுஜருக்கு உணவு சமைக்கும் சமையல் வேலையப் பார்த்து வந்தவர். அவர் ராமானுஜரின் அருளால் வைஷ்ணவ சம்பிரதாயம் அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டார். இது சரணாகதியின் மூலம் கிடைக்கப்பெற்ற ஒன்று. இந்த சரணாகதி தத்துவத்தை இவரிடமிருந்து கிடாம்பி ராமானுஜாசாரியர் கற்றுக் கொள்ள அவரிடமிருந்து கிடாம்பி அப்புல்லர் கற்றுக் கொண்டார். அப்புல்லரின் தேசிகரின் சொந்த தாய்மாமன் ஆவார்.

விளக்கொளி எம்பெருமானை நோக்கி கூறப்படும் இந்த ஸ்லோகங்கள் சரணாகதி தத்துவம் முழுவதையும் விளக்குகிறது.

தேசிகரின் கடைசி ஸ்லோகம் அருமையாக முடிகிறது இப்படி:

இந்த சரணாகதி தீபிகா என்னும் விளக்கின் திரி தேசிகரின்(தாஸ) மனம். அளப்பரிய பக்தியே (ஸ்நேகம்) எண்ணெய். இதைக் கொள்பவர் எம்பெருமானே. அவரே விஷயம். அவர் உலகெங்கும் சூழ்ந்துள்ள அஞ்ஞானமென்னும் காரிருளைப் போக்குவார்.

‘அன்பே தகளியா’ என்று தொடங்கும் பாடல் உள்ளிட்ட ஆழ்வார்கள் ஏற்றியுள்ள விளக்குப் பாடல்களுடன் இதை ஒப்பிட்டு மகிழலாம்.

வேதாந்த தேசிகரின் பாடல்களில் பக்திச் சுவையுடன் கவி நயம்,பொருள் நயம், சொல் நயம் உள்ளிட்ட அனைத்தும் துள்ளிக் குதிக்கும் என்பதை அதைப் படிப்போர் உணர்வர்.

****

கொடு,பகிர், கொடு, பகிர்- அதர்வ வேதம் (Post No.7413)


Written by London Swaminathan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7413

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 1 (Post No.7412)

                                                             ச.நாகராஜன்                           


Written by S Nagarajan

Uploaded in London on  – 3 JANUARY 2020

Post No.7412

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

மஹரிஷி காத்யாயனர்! (Post No.7398)

Written  by S Nagarajan

Date – 30 December 2019

Post No.7398

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

வியட்நாமியரின் வியத்தகு சம்ஸ்க்ருத அறிவு – 1 (Post No.7374)

Written by London swaminathan

Post no. 7374

Date 23 December 2019

Uploaded from London

Pictures are taken from various sources; thanks

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

பூர்ணவர்மனின் 4 சுவையான கல்வெட்டுகள் (Post No.7362)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 20 December 2019

Time in London – 7-37AM

Post No. 7362

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலுள்ள பூர்ணவர்மனின் 4 கல்வெட்டுகள்

சுவையான தகவல்களைத் தருகின்றன. அவை   1500  ஆண்டுகளுக்கு முந்தையவை .

போர்னியோ தீவில் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மூலவர்மன் கல்வெட்டு போல, இவையும் கோ  தானம் பற்றிப் பேசுகின்றன.பூர்ணவர்மன் 1000 பசுக்களை பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை  ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தகவலை சீன யாத்ரிகர் பாஹியானும் உறுதி செய்கிறார். அவர் இந்தியாவிலிருந்து சீனாவுக்குத் திரும்பி  செல்லும் முன் ஜாவாவில் ஐந்து மாதங்களுக்குத் தங்கியிருந்தார் அவர் கி.பி.415ல் ஜாவாவில் உள்ள நிலவரத்தைப் பின் வருமாறு எழுதுகிறார் .

“இங்கு தவறான பல மதங்களும் இந்து மதமும் இருக்கின்றன. ஆனால் புத்த மதம் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவும் இல்லை . ஆயினும் இதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த ‘புத்த குருமார்களின் சரித்திரம்’ என்ற  சீன புஸ்தகம் கி.பி 519ல் இந்திய அரசனான குணவர்மன் என்ற அரசன் புத்த மதத்தைத் தழுவி இலங்கை சீனா ஜாவா வரை சென்று வந்ததாகக் கூறுகிறது. அவன் ஜாவாவில் ராஜாவின் தாயாரை புத்தமதத்துக்கு மாற்றியதாகவும் அவள் மகனையும் மதம் மாற்றியதாகவும் சீனப் புஸ்தகம் சொல்கிறது. அந்த நேரத்தில் ஜாவாவை எதிரிகள் தாக்கியதாகவும் எதிரிகளைக் கொல்லுவது புத்த தர்மத்துக்கு விரோதமானதா என்று குணவர்மனைக் கேட்டபோது அவர் கொள்ளையர்களை ஒழிப்பது தர்மமே என்று சொன்னவுடன் ஜாவா மன்னன் எதிரிகளை அழி த்ததாகவும் சீன புஸ்தகம் சொல்கிறது. பின்னர் ஜாவா தீவில் புத்தமதம் படிப்படியாக வளர்ந்தது.

               ஜாவாவில்  சம்ஸ்கிருதம்

ஜாவாவில் முஸ்லீம் மதம் பரவும் வரை இருந்த மொழியை பழைய ஜாவானிய மொழி என்று அழைப்பர்.

இது சம்ஸ்கிருதமும் சுதேசி மொழியும் கலந்த கலப்பட மொழி.இந்த  மொழியில் உள்ள கவிதைகள் சம்ஸ்கிருத யாப்பிலக்கணத்தைப் பின்பற்றுகின்றன . மேலும் சம்ஸ்கிருதக் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றன . அதிலுள்ள மிகப்பழைய நூல் அமரமாலா . இது உலகின் முதல் நிகண்டு நூலான அமரகோசத்தின் ஜாவானிய மொழிபெயர்ப்பு ஆகும் . இதே காலத்தில் எழுந்ததுதான்  ஜாவானிய

ராமாயணம்.கிட்டத்தட்ட வால்மீகி ராமாயணத்தைத் தழுவிய நூல். ஆனால் இராவணன் கொல்லப்பட்ட  பின்னர் ராமனும் சீதையும் ஒன்று சேர்ந்ததுடன் கதை முடிகிறது. அடுத்தபடியாக மகாபாரத உரைநடை நூல் கிடைத்துள்ளது . இது சுருக்கமான மகாபாரதம்.

                               இவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இதற்குப் பின்னர் அர்ஜுனன் விவாஹ, கிருஷ்ணாயண, சுமனசாந்தக ஆகிய நுல்களைக் காணலாம். கடைசி நூல், ஒரு மாலை(garland) காரணமாக இந்துமதி இறந்த விஷயத்தைத் தழுவியது. இது காளிதாசன் காவியத்தில் உள்ள கதை

மிகவும் குறிப்பிடத்தக்க நூல் ‘பாரத யுத்த’ என்பதாகும். இது கிரேக்க காவியங்களுக்கு இணையானது என்பது அறிஞர்களின் துணிபு . இதற்குப் பின்னர் பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம், நீதி சாஸ்திரம் என எல்லா சம்ஸ்கிருத நூல்களும் ஜாவானிய மொழியில் ஆக்கப்பட்டுள்ளன.

ஒரு பெரிய வித்தியாசத்தைக் குறிப்பிடுவது அவசியமாகும். கம்போடியா, வியட்னாம் ஆகிய இரண்டு நாடுகளில் நேரடியாக சம்ஸ்கிருத இலக்கியமும், கல்வெட்டுகளும் தோன்றின. ஆனால் சுதேசி மொழி இலக்கியம் கிடையாது. ஜாவாவில் சம்ஸ்கிருதத்தை வீட சுதேசி மொழி இலக்கியமே அதிகம்.

இது ஒரு புறமிருக்க இமயம் முதல் இந்தோனேஷியாவின் கடைக்கோடி வரை உலகிற்கு இந்துமதம் அளித்த மிகப்பெரிய கொடை  பிராமி எழுத்தாகும். தெகிழக்காசிய நாடுகள் அனைத்தும், இந்திய மொழிகள் அனைத்தும், பிராமியை பிடித்துக்கொண்டன. 2000 ஆண்டுகளில் அவை தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. இந்துமத அறிஞர்கள் கொடுத்த இந்தக் கொடையினால் அவர்கள் வெகு வேகமாக நாகரீகம் அடைந்தனர்.

Tags — பூர்ணவர்மன் , ஜாவானிய மொழி, பிராமி எழுத்து, சம்ஸ்கிருதம்

—-subham—

Yupa Inscription