அதிசய கர்மயோகி (RSS) ஸ்ரீ சிவராம்ஜி!

Written by S NAGARAJAN

Date: 3 August 2018

 

Time uploaded in London – 5-25 AM   (British Summer Time)

 

Post No. 5282

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

அதிசய கர்மயோகி ஸ்ரீ சிவராம்ஜி!

 

ச.நாகராஜன்

 

இப்படி ஒரு அதிசய கர்மயோகி இந்தக் காலத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்று நம்ப மறுக்கும் அளவு ஒரு அதிசய கர்மயோகியாக வாழ்ந்தவர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) பிரசாரகர் ஸ்ரீ சிவராம்ஜி!

 

இவரைப் பற்றி அறிய ஆவல் கொண்டிருக்கும் பலருக்கும் தன்னைப் பற்றி எந்த வித விஷயத்தையும் தெரிவிக்காமல் மிக மிக அடக்கமாக எளிமையாக வாழ்ந்த மஹா புருஷர் அவர். என்றாலும் கூட நமது அதிர்ஷ்டவசமாக சங்க பிரசாரகர் பா.உத்தம்ராஜ் அவரைப் பற்றிய அரிய தகவல்களை

‘கர்மயோகி சிவராம்ஜி’ என்ற நூலில் தொகுத்துத் தந்து சிறந்த பணியை ஆற்றியிருக்கிறார்.

 

1968ஆம் ஆண்டையொட்டி சிவராம்ஜியுடன் சிறிது காலம் மதுரையில் அவருடன் பழகும் பாக்கியம் எனது குடும்பத்தினருக்குக் கிடைத்தது.

 

வழக்கம் போல எந்தக் குடும்பத்தினருடன் அவர் பழகினாலும் அதில் ஒரு உறுப்பினராகவே ஆகி விடுவது போல அவர் எங்கள் குடும்பத்தில் இணைந்தவர் ஆகி விட்டார்.

 

எளிமையான சட்டை – ஆனால் அழுக்கு இல்லாமல் தூய்மையாக இருக்கும். அதிகம் பேசவே மாட்டார் – ஆனால் பேசியவை மிக ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாக இருக்கும். பிற விஷயங்களைப் பற்றிப் பேசுவார் – ஆனால் அதன் உள்ளார்ந்த ஓட்டம் சங்க வளர்ச்சியை ஒட்டியே இருக்கும்.

அதிகாலை முதல் இரவு முடிய தினமும் சங்கப் பணி ஒன்றே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர்.

 

இன்று இந்து முன்னணித் தலைவராக இருக்கும் ஸ்ரீ இராம கோபாலனைக் ‘கண்டெடுத்தவர்’ அவர் தான்!

பிரசாரகராக இருந்து பிராந்த பிரசாரகராக உயர்ந்து இந்து முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருக்கும் இராம கோபாலன் சிவராம்ஜியைப் பற்றிக் கூறுகையில்,”நாங்கள் எல்லோரும் பிரச்சாரகர்கள். ஆனால் சிவராம்ஜி நூற்றுக்கு நூறு பிரச்சாரகர். பிசிறில்லாத ஸ்வயம்சேவகர்” என்று கூறினார்.

பரமபூஜனீய ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் மூன்று ரிஷிகள்  இருப்பதாக ஒரு முறை குறிப்பிட்டார். அந்த மூவர் 1) தீனதயாள் உபாத்யாய 2) தத்தோபந்த் தெங்கடி 3) சிவராம்ஜி

 

எந்த ஒரு நபரையும் செதுக்கி அவரிடம் உள்ள நல்லனவற்றை வெளிக்கொணர்ந்து அவரை எவ்வளவு தூரம் சிறப்பானவராக ஆக்க முடியுமோ அவ்வளவு தூரம் ஆக்கி விடும் ‘சிறந்த மனிதரை உருவாக்கும் சிற்பியாக’ – ‘படைத்த பின் சிறக்க வைக்கும் சிறப்பு பிரம்மாவாக’ -அவர் வாழ்ந்தார்.

சைக்கிளில் தான் செல்வார். அதற்கு ஒரு ஷெட்யூல்ட் ரூட் இருக்கும்.

 

ஸ்ரீமதி நிர்மலா அவஸ்தி (விவேகானந்த கேந்திர முழு நேர ஊழியர்) அவரது செயல்முறையைப் பற்றி இப்படி வர்ணித்தார் ஒருமுறை : “சிவராம்ஜி காலையும் மாலையும் மயில் மீது சுற்றும் முருகன். காரியங்கள் முடிந்த பிறகு மத்தியான நேரம் ஆலயத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டே இருக்கும் விநாயகர் அவர்”

 

நல்லோர் வட்டம் என்று நல்லோர்கள் பலரைப் படைத்து அவர்களுக்கு திட்டங்களைத் தீட்டிக் கொடுத்து அவற்றை ஒழுங்குபட செயல்பட வைத்த அதிசய மனிதர் அவர்.

அவரது திட்டங்கள் பல என்றாலும்  சுமார் 347 திட்டங்களை மட்டும் உத்தம்ராஜ் பட்டியலிட்டிருக்கிறார். பட்டியலில் வராதவை எத்தனையோ!

 

ஒரு சில நல்லோர் வட்ட திட்டங்களை பார்ப்போம்:

சங்க வளர்ச்சிப் பணி தான் மூச்சு. அதன் அடிப்படையிலேயே அவர் திட்டங்களைக் காண வேண்டும்.

பத்து சங்கப் பாடல்களை மனப்பாடம் செய்தல்

ஒரு மஹானுடைய வாழ்க்கைச் சரித்திரம் படித்து அதைச் சொல்லத் தயாராக இருத்தல்

பத்திரிகைகளுக்கு ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் 3 கடிதங்கள் எழுதுதல்

கல்லூரிப் பேராசிரியர் 10 பேரைச் சந்தித்தல்

ஒரு ரத்ததான முகாம் நடத்துதல்

5 கலைஞர்களைச் சந்தித்தல்

ஒரு அனாதை விடுதியைப் பற்றிய முழு விவரம் சேகரித்தல்

வேலை இல்லாத 3 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்தல்

கஷ்டமான நிலையில் உள்ள 5 நோயாளிகளைச் சந்தித்தல்

நல்ல ஜோக்ஸ் 50 சேர்த்தல்

நல்ல செய்தியைக் குறைந்தது 10 பேரிடம்

படிக்காத 10 பெண்களுக்கு படிப்புச் சொல்லித் தருதல்

ஒரு பள்ளிக்கூடம் துவங்குதல்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

 

புனேயில் 1917இல் பிறந்தார். சென்னைக்கு 1942ஆம் ஆண்டு வந்தார். பிரச்சாரகராகத் தன் பணியைத் துவக்கிய அவர் சென்னை மாநிலம் முழுவதும் தன் காலடியைப் பதித்தார். ஏராளமானோரை சங்கத்தில் இணைத்தார். அவர்களில் பலரும் மிக உயர்ந்த பொறுப்புகளில் – பல்வேறு துறைகளிலும் – இன்று பணி புரிகின்றனர்.

 

 

1999ஆம் ஆண்டு அவர் மறைந்தார். தன் இறுதி நெருங்கி விட்டதை டாக்டர் மூலம் உறுதிப் படுத்திக் கொண்ட அவர் தன் உடலை உடல் தானம் செய்து அதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

 

 

அவரது இறுதி மூச்சும் சங்க காரியாலத்தில் தான். அவரது உடலை ஏந்திச் செல்ல ராமச்சந்திரா மருத்துவ மனையிலிருந்து வேன் வந்த போது வருந்தாதவரே இல்லை.

சங்க மார்க்கம் என்பது கண்டகாகீர்ண மார்க்கம். முட்கள் நிறைந்த பாதை. அதை ஸ்வயம் ஸ்வீக்ருதம் செய்பவரே ஸ்வயம் சேவகர். அதாவது தாமாக முன்வந்து அந்த முள்பாதையில் நடக்க ஆரம்பித்து லட்சியமான ஹிந்து ராஷ்ட்ரத்தை அடைவதே இலட்சியம். அந்த மார்க்கத்தைச் சுட்டிக் காட்டி அதை ஸ்வயம் ஸ்வீக்ருதம் செய்ய ஆயிரக் கணக்கானோரை அழைத்து அதில் அவர்களை இணைத்தவர் அவர்.

 

உலகம் முழுவதும் சுகமாக இருக்கட்டும் (லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து) என்பது ஹிந்துத்வம்.

அதை வாழ்ந்து காட்டி அதற்கான வழி சங்கம் ஒன்றே தான் என்பதை நிரூபித்தவர் சிவராம்ஜி.

 

 

அவரை எப்பொழுது நினைத்தாலும் ஒரு நல்ல காரியம் செய்ய நம்மை நமது மனம் தூண்டும்.

இப்படிப்பட்டவரை மஹரிஷி என்று சொல்வதே மிகவும் பொருத்தமானது!

***

அழகு சிரிக்கின்றது! ஆசை துடிக்கின்றது!! (Post No.5274)

Written by LONDON SWAMINATHAN

Date: 31 JULY 2018

 

Time uploaded in London – 7-37 AM   (British Summer Time)

 

Post No. 5274

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அழகு சிரிக்கின்றது

ஆசை துடிக்கின்றது

பழக நினைக்கின்றது

பக்கம் வருகின்றது

 

என்று பாடிக்கொண்டே வந்தாள் பேரழகி!

யாரிடம்?

புத்தரின் முக்கிய சீடரான உபகுப்தாவிடம்!

அவரோ ஏகாந்த தியானத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்.

உடனே இந்தப் பெண்

 

வாழ்க்கை வாழ்வதற்கே என்று பாடத் தொடங்கினாள்; அது மட்டுமல்ல;

சுவாமிஜி, என் தொழிலே வேறு! என்னிடம் புத்தர் சொன்ன நிர்வாணம் பற்றிப் பேசாதீர்கள்; எனக்கு வேறு நிர்வாணம் எல்லாம் நன்கு தெரியும் ; உமக்கும் கற்பிப்பேன் என்றாள்.

 

உப குப்தருக்கோ போதும் போதும் என்று ஆகிவிட்டது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடினார்.

 

அவளோ விடவில்லை; “சுவாமி? எப்போது வருவீர்கள் என்னிடம்?”  என்று கேட்டுக்கொண்டே பின்னே வந்தாள்

நங்காய்! பொறுத்திரு! ஒரு நாள் நான் வந்து உன்னைத் திருப்திப் படுத்துவேன் என்றார்.

அதைக்கேட்டவுடன் அவள் புளகாங்கிதம் அடைந்தாள்; ஏதோ உபகுப்தருடன் படுத்துப் புரண்டதாகக் கனவு கண்டாள்.

 

அட! பெரிய சந்யாசியையும் பிடித்துவிட்டேனே!!  என்று தன் உடலையே தான் புகழ்ந்து கொண்டாள்!

 

ஆண்டுகள் உருண்டோடின.

வசந்த கலாலங்கள் போய் குளிர் காலமே மிஞ்சியது அந்தப் பெண்ணுக்கு! காமக் கடலில் உழல்வோருக்கு வரும் அத்தனை வியாதிகளும் அவளைப் பீடித்தன. இப்பொழுது அவள் கையைப் பிடிக்கக்கூட ஆள் இல்லை. நா வறன்டது; தோலும் சுருண்டது; முடிகள் விழுந்தன; பிடிகள் தளர்ந்தன. உடல் முழுதும் துர் நாற்றம்.

போதாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்றபடி அரசுக்கு எதிராகப் பெரும் துரோகம் செய்தாள். அவள் கை, கால்களை வெட்டும் படி அரசன் கட்டளையிட்டான். அதுவும் போயிற்று.

 

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று வாடி வதங்கினாள். திடீரென்று முன்னொரு காலத்தில் உபகுபதர் சொன்னது நினைவுக்கு வந்தது சந்யாஸிகள் பொய் சொல்ல மாட்டார்களே என்று நினைத்த தருணத்தில் யாரோ தலையை வருடினார்.

 

உப குப்தர் அங்கே நின்றார்!!

கனவா நனவா என்று வியந்தாள்.

சுவாமி! தொடாதீர்கள், தொடாதீர்கள்.

உடல் முழுதும் வியாதி. துர் நாற்றம்.

அன்றோரு நாள் ஆடை அலங்காரங்களுடன். அணிகலன்களோடு உம்மை வருந்தி வருந்தி அழைத்தேனே! அப்போதெல்லாம் வராதபடி இப்போது வந்தீர்களே! என்ன பயன் உங்களுக்கு? என்றாள்.

 

உபகுப்தரின் கருணைப் பார்வை அவள் மீது விழுந்தது.

அவளது காம வெப்பம் அடங்கி கருணை வெள்ளம் பாய்ந்தது.

 

உபகுப்தர் சொன்னார்:

நீ எது கவர்ச்சி என்று இப்போது வரை நினைத்தயோ அது கவர்ச்சி  அல்ல. உன் கண்களில் ஒளிவிடுகிறதே!—அதுதான் அந்தக் கருணைதான் கவர்ச்சி; வெளிக் கவர்ச்சியெல்லாம் கவர்ச்சி ஆகாது– என்றார்.

 

சுவாமி: இன்று முதல் நான் உங்கள் சிஷ்யை! என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினாள்.

அதற்குத்தானே நான் முன்னர் வாக்குறுதி அளித்தபடி திரும்பி வந்தேன்”– என்றார்.

 

இனி பேசுவதற்கு ஒன்றுமிலையே!

சும்மா இரு! சொல் அற!

 

சுபம்–

கண்ணதாசனின் ‘போனால் போகட்டும் போடா’! (Post No.5273)

Written by S NAGARAJAN

Date: 31 JULY 2018

 

Time uploaded in London – 5-48 AM   (British Summer Time)

 

Post No. 5273

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

கண்ணதாசனின்போனால் போகட்டும் போடா! (Post No.5273)

 

.நாகராஜன்

 

உலக வாழ்க்கை நிலையில்லை என்பதை வள்ளுவர் முதல் பட்டினத்தார் வரை பிரமாதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.   (12-9-2015இல் வெளியான எனது கட்டுரை எண்  2149 –‘டொண்டொண்டொடென்னும் பறை என்ற கட்டுரையில் இவர்கள் கூறியவை பற்றி நிறைய விவரங்கள் உள்ளன)

 

முக்கியமாக பட்டினத்தார், எவ்வளவு செல்வம் படைத்தவனாக இருந்தாலும் கூடகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று சொல்லி இருக்கிறார்.

 

 

முழுப்பாடல் :

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்   தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?      காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

இத்தோடு நிற்கவில்லை அவர்.

 

செத்த பிணத்தைச் சுற்றி அழுது புலம்புபவர்கள் யார் தெரியுமா? இனி சாகப்போகும் பிணங்கள் என்கிறார்.

 

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி         முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு             செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்     கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

 

செத்தவரைச் சுற்றிச் சுற்றமும் நட்பும் அழுது புலம்புவது இயற்கை. ஆனால் அதை தத்துவ நோக்கில் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்பவர் எத்தனை பேர்?

*

 

 

இந்த வகையில் தான் கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா பாடல் மாறு படுகிறது.

இந்தப் பாடல் பிறந்த கதை பற்றி வேறுபட்ட கருத்துக்களைப் பார்க்க முடிகிறது.

*

 

மெல்லிசை மன்னர் விசுவநாதன் கண்ணதாசனின் அத்யந்த நண்பர். அவருடன் நெடுங்காலம் பழகியவர்.

அவர் கூறுவது இது:

 

ஒரு சமயம் ஒரு படத்திற்காகப் பாடல்ரிகார்டிங் செய்து கொண்டிருந்த போது, ஒரு துக்கமான செய்தி வந்தது. என் இசைக் குழுவிலிருந்த ஒருவரை நாய் கடித்திருந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாய் விஷம் ஏறி  நாய் போலவே ஊளையிட்டு அன்றைய தினம் இறந்து விட்டார் என்பதே அந்த சோகச் செய்தி. அந்தப் பாடல் தான்பாலும் பழமும் படத்தில் வரும்போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!என்பது. அதிலிருந்து அடிக்கடி கவிஞரிடம் சொல்வது,அவச்சொல் வருகிற மாதிரிப் பாட்டே வேணாம்ணே! உங்க வாயிலிருந்து அந்த மாதிரி வார்த்தைகளே வரவேண்டாம்ணே!

*

 

 

கண்ணதாசனின் உடனிருந்த இராம.முத்தையா கூறும் செய்தியோ வேறு விதமானது. அவர் கூறுவது:-

ஒரு சமயம் கவிஞர்ஆஸ்டின்கார் ஒன்றை, 8000 ரூபாய்க்கு விலை பேசி, 1500 ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தார். அதை எடுத்து அன்றைய தினமே வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர்ப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றார். போகும் வழியில் டிரைவர் ஓட்டிய வழியில் கார் செல்லாமல், ஏதோ ஒரு பக்கம் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது. உடனே கவிஞர் பயந்து போய், டிரைவரை நிறுத்தச் சொல்லி விட்டு, இறங்கி விபரம் கேட்டார்.சேஸிஸ் பெண்டாகி இருக்கிறது என்றார் டிரைவர்.

 

காரை லாரியில் கட்டி இழுத்துக் கொண்டு, சென்னைக்குப் போ என்று டிரைவரிடம் சொல்லி விட்டு, அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏறிக் கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தார். மறுநாளே காரை வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுஎன்றார் என்னிடம்.

 

நாம் கொடுத்த முன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்களே! என்றேன் நான்.

போனால் போகட்டும் போடா! நான் பிழைத்து வந்ததே பெரிய காரியம்! என்றார்.

 

அன்றைய தினம் எழுதிய பாடல் தான், பாலும் பழமும் என்ற படத்தில் வருகிற போனால் போகட்டும் போடா!

அன்று மாலை என்னிடம் காரில் போன பணத்தை (1500 ரூபாய்) பாட்டு எழுதிச் சம்பாதித்து விட்டேன் என்று சொன்னார்.

 

இப்படி ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்ச்சியும், சூழ்நிலையும் கவிஞருக்குப் பாடலுக்குக் கருத்தாக வந்தமையும்.

 

*

இனி கவிஞரின் பாடலை முழுதுமாகப் பார்ப்போம்:

 

போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹோஹோஓஹோஹோ


வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!

ஓஹோஹோ ஓஹோஹோ

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்

இதற்கொரு மருத்துவம் கண்டேனா?

இருந்தால் அவளைத் தன்னந் தனியே

எரியும் நெருப்பில் விடுவேனா?

நமக்கும் மேலே ஒருவனடாஅவன்

நாலும் தெரிந்த தலைவனடா! –தினம்

நாடகமாடும் கலைஞனடா!

போனால் போகட்டும் போடா!

 

மிக அருமையான வரிகள்! பட்டினத்தார் இனி சாம் பிணங்கள் அழுவது போல என்று சொன்னாரே அது போல, கண்ணதாசன் அழவில்லை.

 

போனால் போகட்டும் போடா என்கிறார்இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா?கூக்குரலாலே கிடைக்காது; இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்தகோட்டையில் நுழைந்தால் திரும்பாது!


போனால் போகட்டும் போடா! என்கிறார். ஜனன மரணக் கணக்கை ஒரே பாராவில் தந்து விடுகிறார். வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும் ஜனனம் என்பது வரவாகும்; அதில் மரணம் என்பது செலவாகும்அவ்வளவு தான்! போனால் போகட்டும் போடா!!

பாட்டில் வரும் தலைவன் டாக்டர். அவனால் உயிரை போகாமல் இருப்பதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா, தினம் நாடகமாடும் கலைஞனடா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறான். இறை தத்துவம் இப்படி விளக்கப்படுகிறது!

 

அருமையான வரிகளில் பெரும் தத்துவத்தை அனாயாசமாக அள்ளித் தந்து விட்டார் கவிஞர்.

 

அந்த வகையில்  இந்தப் பாடல் புகழ் பெற்றதோடு அடிக்கடி அனைவரும் உபயோகப்படுத்தும் போனால் போகட்டும் போடா சொற்றொடரையும் கொண்டிருக்கிறது.

 

டி.எம்.சௌந்தரராஜன் குரலில் சிவாஜிகணேசனின் நடிப்பில் விசுவநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பீம்சிங் இயக்கத்தில் 1961ஆம் ஆண்டு வெளி வந்த பாடல்!

 

கண்ணதாசனின் வைர வரிகளால் அழியாது நிற்கிறது.

***

 

பேராண்மை என்பது தறுகண்- வள்ளுவர் குறள்! (Post No.5269)

Compiled by London swaminathan

Date: 29 JULY 2018

 

Time uploaded in London – 17-13  (British Summer Time)

 

Post No. 5269

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஆகஸ்ட் மாத 2018 நற் சிந்தனை காலண்டர்

விளம்பி ஆண்டு ஆடி- ஆவணி, 2018

இந்த மாத நற் சிந்தனை காலண்டரில் வீர, தீர, சூரர் பற்றிய 31 பொன் மொழிகள் இடம் பெறுகின்றன

 

 

பண்டிகை நாட்கள்ஆகஸ்ட் 3- ஆடிப் பெருக்கு, 5- ஆடிக் கிருத்திகை, 11- ஆடி அமாவாசை, 13- ஆடிப்பூரம், 14- நாக சதுர்த்தி, நாக பஞ்சமி, சுதந்திர தினம், 21- ஆவணி மூலம், 24- வரலஷ்மி விரதம், 25- ஓணம், ரிக் உபாகர்மா, 26- ரக்ஷா பந்தன், யஜூர் உபாகர்மா, 27- காயத்ரீ ஜபம்

 

சுப முகூர்த்த நாட்கள்– 23, 29, 30.

அமாவாஸை-11; பௌர்ணமி-26; ஏகாதஸி விரதம்– 7, 22

 

 

ஆகஸ்ட் 1  புதன் கிழமை

வீரர்களும் சூரர்களும் பாதியில் எதையும் கைவிட மாட்டார்கள்- கதா சரித் சாகரம்

ஆகஸ்ட் 2  வியாழக் கிழமை

சிங்கம் மேக கர்ஜனையைக் கேட்டு எதிரொலிக்கும்; நரிகள் ஊளையிடுவதைக் கேட்டு ஒலிக்காது- சிசுபாலவதம்.

சிங்கம் பசித்தால் தேரையைக் கொல்லுமா?–தமிழ்ப் பழமொழி

 

ஆகஸ்ட் 3  வெள்ளிக் கிழமை

தைரியசாலிகளுக்கோ, முயற்சியுடையவர்க்கோ அடைய முடியாதது ஏதுமில்லை- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 4  சனிக்கிழமை

சில்லறைகளைப் புறக்கணிப்பது பெரியோரின் பெருமையை அதிகரிக்கும் – கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 5  ஞாயிற்றுக் கிழமை

நெருக்கடியிலும் நிம்மதியாக இருப்போர்க்கு செல்வம் தானாக வரும்- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 6  திங்கட்கிழமை

அபாயகாலத்திலும் பிரகாசிக்கும் புத்தியுடையோரே தீரர்கள்– கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 7  செவ்வாய்க் கிழமை

எந்த வீரனாவது பாதியில் ஒரு பணியைக் கைவிடுவானா?- கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 8  புதன் கிழமை

வீரர்களுக்கு சுலபமில்லாதது ஏதேனும் உண்டோ? – கிராதார்ஜுனீயம்

 

ஆகஸ்ட் 9  வியாழக் கிழமை

தீரர்களே அபாயத்தைக் கடப்பர்; பலவீனம் உள்ளோர் கடப்பதில்லை-

தீராஸ்தரந்தி விபதம் ந து தீன சித்தாஹா

ஆகஸ்ட் 10  வெள்ளிக் கிழமை

வளமை என்பது வீரத்தைப் பொறுத்தது; துக்கம் உடையோரிடம் இருந்து அது பறந்தோடிப் போகும்- பாரத மஞ்சரி

துக்கிப்யோ ஹி பலாத்யந்தே தைர்யாயத்தா விபூதயஹ

 

ஆகஸ்ட் 11  சனிக்கிழமை

நிலையான புத்தியுடையோருக்கு எதையும் துறப்பது கடினமில்லை- பாகவத புராணம்

துஸ்த்யஜம் கிம் தீராத்மனாம்

 

ஆகஸ்ட் 12  ஞாயிற்றுக் கிழமை

என்னைமுன் நில்லன் மின் தெவ்வீர்- பகைவர்களே! என் தலவன் முன் போர் என்று வந்து நிற்காதீர்கள்- குறள் 771

 

ஆகஸ்ட் 13  திங்கட்கிழமை

தீரர்களே ஆபத்துகளைக் கடப்பார்கள்- காதம்பரி

தீரா ஹி தரந்த்யாபதம்

 

ஆகஸ்ட் 14  செவ்வாய்க் கிழமை

தைரிட்யசாலிகளும் கற்றோரும் கூட தவறு செய்வர் (ஆனைக்கும் கூட அடி சறுக்கும்)

தீரோபி வித்வானபி விமுஹ்யதி- ப்ருஹத் கதா மஞ்சரி

 

ஆகஸ்ட் 15  புதன் கிழமை

அபாயம் என்னும் கடலைக் கடக்க உதவும் பாலம் திட உறுதி- ப்ருஹத் கதா மஞ்சரி

தைர்யம் விபஸ்த்ஸ்பாரஜஜலதேஹே சேதுஹு

 

ஆகஸ்ட் 16  வியாழக் கிழமை

வீரத்தால் விளையாதது என்ன?

தைர்யேன சாத்யதே ஸர்வம் –கதா சரித் சாகரம்

 

ஆகஸ்ட் 17  வெள்ளிக் கிழமை

சாதனைகளுக்கு உதவுவது தீரம்

தைர்யம் ஸர்வத்ர ஸாதனம்

 

ஆகஸ்ட் 18  சனிக்கிழமை

உயார்ந்தோரின் செல்வம் தைர்யம்-

தைர்யதனா ஹி சாதவஹ—காதம்பரி

 

ஆகஸ்ட் 19  ஞாயிற்றுக் கிழமை

துணிவின்றி பயத்திலிருந்து விடுதலை பெற முடியாது — யோக வாசிஷ்டம்

ந ஸ்வதையாத்ருதே கஸ்சிதப்யுதரதி ஸங்கடாத்

 

ஆகஸ்ட் 20  திங்கட்கிழமை

பேராண்மை என்பது தறுகண்- அஞ்சா நெஞ்சத்தை ஆண்மை என்று சொல்வர்- குறள் 773

 

ஆகஸ்ட் 21  செவ்வாய்க் கிழமை

கொந்தளிப்பிலும் அமைதியாக இருப்போரே வீரதீரர்கள்- குமார சம்பவம்

விகாரஹேதௌ ஸதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்ஸி த ஏவ தீராஹா

 

ஆகஸ்ட் 22  புதன் கிழமை

வீரர்கள் முன் வைத்த கால்களைப் பின்வைப்பதில்லை- நீதி சதகம்  ‘ந நிஸ்சிதார்த்தாத்விரமந்தி தீராஹா’

 

ஆகஸ்ட் 23  வியாழக் கிழமை

பெரியோர்கள், நேர்மையான பாதையிலிருந்து ஒரு  அடி கூட விலகமாட்டார்கள் – நீதி சதகம்

ந்யாயாத்பதஹ ப்ரவிசலந்தி பதம் ந தீராஹா

 

ஆகஸ்ட் 24  வெள்ளிக் கிழமை

உறுதியானவர்களுடைய மனதை முதிய வயதும் கலக்காது- ப்ருஹத் கதா மஞ்சரி

வ்ருத்த பாதோ ந சோகேன தீரானாம் ஸ்ப்ருஸதே மனஹ

 

ஆகஸ்ட் 25  சனிக்கிழமை

அச்சமுடையார்க்கு அரண் இல்லை- குறள் 534

பயமுள்ளவனுக்கு பாதுகாப்பு அரணால் பயனில்லை

 

ஆகஸ்ட் 26  ஞாயிற்றுக் கிழமை

வீர சூரனானாலும் முன்படை வேண்டும்- தமிழ்ப் பழமொழி

ஆகஸ்ட் 27  திங்கட்கிழமை

வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டும் களம் கண்டு முதுகிடலாமா?–தமிழ்ப் பழமொழி

 

ஆகஸ்ட் 28 செவ்வாய்க் கிழமை

ஒலித்தக்கால் என்னாவாம் உவரி எலிப்பகை- கடல் போல எலிகள் என்னும் பகைவர் ஒலித்தால் என்ன பயம்? -763

 

ஆகஸ்ட் 29   புதன் கிழமை

தானை தலை மக்கள் இல்வழி இல்- படைத் தலைவர் இல்லாவிடில் படைக்குப் பெருமை இல்லை- குறள் 770

 

ஆகஸ்ட் 30 வியாழக் கிழமை

உறின் உயிர் அஞ்சா மறவர்- போர் வந்தால் அஞ்சாது போர் புரிபவர் மறவர்- குறள் 778

 

ஆகஸ்ட் 31  வெள்ளிக் கிழமை

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்  — தன் கையில் இருந்த வேலை யானை மீது எறிந்து கொன்று வருபவன்  — குறள் 774

 

–Subham–

 

 

 

நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்! (Post No.5267)

Written by S NAGARAJAN

 

Date: 29 JULY 2018

 

Time uploaded in London –   6-18 am (British Summer Time)

 

Post No. 5267

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம்

நவீன யுகத்தின் பொல்லாத அசுரன்கள்!

 

ச.நாகராஜன்

 

த்வாபர யுகத்தில் கம்ஸன், மற்ற யுகங்களில் வெவ்வேறு அசுரன்கள் இருந்ததைப் பற்றி புராணங்கள் வாயிலாகக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

 

நவீன விஞ்ஞான யுகத்தில் மனித குலத்தைக் கெடுக்கும் பொல்லாத அசுரன்கள் உண்டா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதற்கான பதிலையும் ஒருவாறு கண்டுபிடித்து விடலாம்.

 

சில அசுரன்களை இங்கு கோடி காட்டி விட்டால் பாக்கி அசுரன்களை நீங்களே பட்டியிலிட மாட்டீர்களா என்ன?

 

மொபைலாசுரன் : அடடா, இவன் இல்லாத இடமே இல்லை. அந்தஸ்து, மதம், பால், நாடு, மொழி என்று பார்க்காமல் எல்லோரிடமும் புகுந்தவன் இவன். பிச்சைக்காரி கையிலும் இருப்பான், பெரிய மந்திரி கையிலும் இருப்பான். ஒரு வேடிக்கை என்னவென்றால் ரோடில் போகும் போது சிரித்துக் கொண்டே போகும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா? இவர்கள் பைத்தியமா என்று எண்ணினால் எண்ணியவர்கள் தான் பைத்தியங்கள். மார்புக்குள் சொருகி வைத்திருக்கும் மைக் மூலமாக யாருடனாவது பேசிக் கொண்டே போவார்கள். காதில் மறைத்து வைத்திருக்கும் சிறிய பட்டன் மூலம் கேட்க வேண்டியதைக் கேட்பார்கள். இதில் என்ன சங்கடம் உனக்கு என்று கேள்வி கேட்போர்கள் தயவு செய்து சாலையைச் சிறிது நேரம் கண்காணிக்க வேண்டும். கார், ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு போவோர்கள் முன்னால் அலட்சியமாக நடப்பார்கள் இவர்கள்.

சற்று அஜாக்கிரதையாக இருந்தால் பெரும் விபத்து தான் ஏற்படும். மேடு பள்ளங்களைக் கவனிக்காமல் பேசிக் கொண்டே விழுபவர்கள் ஏராளம். காரில் டிரைவ் செய்து கொண்டு போனில் பேசிக் கொண்டே காரை மெதுவாக ஓட்டுவோரால் பின்னால் வருபவர்கள் படும் பாடு பெரும் பாடு! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆக இந்த மொபைலாசுரன் மனித குலத்தின் நண்பன் போல வந்து கெடுதலைச் செய்யும் அசுரன்.

 

 

இண்டர்நெட்டாசுரன் : இவன் இன்று புகாத நகர் இல்லை. ஆரம்பத்தில் யுகத்தில் புரட்சி செய்ய வந்தவன் போல அவதாரம் எடுத்தான். இன்றோ தகாத காரியங்கள் செய்வோருக்கும் உதவும் மோசமான அசுரன் ஆகி விட்டான்.

 

மெயிலாசுரன் : காலையிலிருந்து இரவு வரை வரும் ஸ்பாம்கள், தேவையற்ற ஊடுருவல் விளம்பரங்கள், இன்ன பிற வேண்டாத செய்திகளால் விரயமாகும் மனித மணிகள் எத்தனை கோடியோ, யாருக்குத் தெரியும்.

ப்ளாக்காசுரன்: இந்த நவீன யுகத்தில் எல்லோரும் டாக்டர்கள். எல்லோரும் விஞ்ஞானிகள்.எல்லோரும் ஜோதிடர்கள். எல்லோரும் எழுத்தாளர்கள். அவரவர் தனக்குத் தெரிந்தவற்றை அல்லது மற்றவர் மீது திணிக்க விரும்புவனவற்றை ப்ளாக்குகள் மூலம் வெளியிடும் காலம் இது. இதற்குத் துணை ப்ளாக்காசுரன். (எழுத்து அல்லது கருத்து )திருட்டை வளர்க்கும் ப்ளாக்குகள் ஏராளம்! சற்று அசந்தால் இந்த அசுரனிடம் அகப்பட்டு பல தொல்லைகளுக்கு உள்ளாவோர் ஏராளம்.

 

 

வாட்ஸாப்பாசுரன் : நல்லதை உடனடியாகப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்த வாட்ஸ் ஆப்பை அசுரனாக மாற்றியவர்களைப் பற்றி என்னத்தைச் சொல்ல?! இன்று பல வம்புமடங்களின் தொகுதியாக அமைவது இது தான்! பல குடும்பங்களில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கும் இந்த அசுரனே காரணம்.

 

லெகோசுரன் : சிறுவர்களுக்கான விளையாட்டு லெகோ. அதில் இருக்கும் சின்ன சின்ன பீஸ்களால் ஏராளமான துன்பங்கள். சிறுவர்களுக்கு கிரியேடிவிடி வேண்டும் தான்! ஆனால் இவ்வளவு சிறிய பாகங்களாலும் அதை மென்மேலும் வாங்க வேண்டிய தேவையை உண்டு பண்ணுவதாலும் பல குடும்பங்கள் படும் அவஸ்தை தனியாக எழுதப்படவேண்டிய ஒன்று.

பொகேமானாசுரன் : போகேமான் வியாதி தனி. இவனிடம் மாட்டிக் கொண்ட சிறுவர்களின் கதி அதோகதி தான்.

சிறுவர்களுக்காக டெவலப் செய்யப்பட்ட ஒரு ஆப்  தண்டவாளத்திலெல்லாம் சிறுவர்களைத் தேட வைக்கச் செய்தது; மாடியிலிருந்து குதிக்க வைத்தது. அதன் பெயரைச் சொல்வது கூட பாவம் என்பதால் அதன் பெயரை இங்கு சுட்டிக் காட்டவில்லை.

 

 

மொபைல் போனில் வீடியோக்களை பார்த்துக் கொண்டே போவது தான் இன்றைய போக்கு. கண்டக்டரைப் பார்த்து ஏன் எனது ஸ்டாப் வந்ததைச் சொல்லவில்லை என்று ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்ப்பவர் கேட்க, அதை அப்போதே கத்தினேனே, காதில் கேட்காமல் வீடியோவைப் பார்த்துக் கொண்டே இருந்தீர்களே என்றார் கண்டக்டர். அசடு வழிய அவர் இறங்கிப் போனார். நல்ல வேளை இரண்டு ஸ்டாப் கடந்து வந்த தூரத்திற்கான எக்ஸ்ட்ரா டிக்கட் சார்ஜை கேட்காமல் விட்டாரே என்று நினைத்துக் கொண்டேன். 35 பேர் செல்லும் ஏசி பஸ்ஸில் மூன்று பேர் மட்டும் வீடியோ காட்சிகளை மொபைலில் பார்க்கவில்லை. டிரைவர்,கண்டக்டர்,அடியேன்!

நல்ல சாதனங்களை உடனடியாக தேவையற்ற வழிகளில் பயன்படுத்தி அவற்றை அசுரனாக்குவது நாம் தான்!

அமைதியாக உட்கார்ந்து எண்ணிப் பார்த்தால் இவை வரமா சாபமா என்பது புரியும்!

இது போன்ற எண்ணற்ற அசுரன்கள் இல்லாத வாழ்க்கை இன்று இல்லை.

 

தேவையான அளவு தேவையான விஷயத்திற்கு நவீன கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்தினால் அவற்றிற்கு நாம் எஜமானர். இல்லையேல் அவை நமக்கு எஜமானர்கள்.

 

*** SUBHAM *****

பூந்துறை குப்பிச்சி! (Post No.5264)

Written by S NAGARAJAN

 

Date: 28 JULY 2018

 

Time uploaded in London –   6-11 am (British Summer Time)

 

Post No. 5264

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பூந்துறை குப்பிச்சி!

 

ச.நாகராஜன்

 

விஜய நகரத்து அரண்மனையில் புகுந்த குப்பிச்சியின் வீர வரலாறு பலரும் அறியாத ஒன்று. அதை கொங்கு  மண்டல சதகம் 56வது பாடலில் விளக்குகிறது.

 

மேல்கரைப் பூந்துறையில் கொங்கு வேளாளரில் காடை குலத்தில் மாட்டையா குப்பிச்சி என்ற வீரன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் விஜயநகரம் சென்றான். அங்கு வாயில் காவலனாக இருந்த ஒரு மல்லன்  தனது இடது காலில் சங்கிலி ஒன்றின் தலைப்பைக் கட்டி மற்றொரு தலைப்பை வாசல்படியின் எதிர்ப்புறமாகப் மேலே மாட்டித் தோரணம் போலத் தொங்க விட்டிருந்தான். யாரேனும் வல்லவனாக இருந்தால் தன்னை ஜெயித்து விட்டு உள்ளே போகலாம்; இல்லையேல் தன் காலில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் சங்கிலிக்குக் கீழே நுழைந்து உள்ளே செல்லலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மல்லனை யுத்தத்திற்கு குப்பிச்சி அழைத்தான். யுத்தத்தில் அவனைக் குப்புற வீழ்த்தி ஜெயித்தான். நேராக அத்தாணி மண்டபத்தினுள் புகுந்து மன்னனைக் கண்டான்.

 

 

மன்னன், “என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதன் மேல் ஏறி சவாரி செய்வாயேல் நீ ஒரு பெரும் வீரன் என்பதை ஒப்புக் கொள்வேன்” என்றான். அந்த சவாலை எதிர் கொண்டான் குப்பிச்சி.

 

அந்தக் குதிரை மிகவும் பொல்லாத குதிரை. ஏறிய எவரையும் அந்நகரத்தில் இருந்த நீர் நிலை ஒன்றினுள் கொண்டு சென்று தள்ளி, மிதித்து மீண்டு வரும் தகுதி பெற்ற குதிரை என்பதை குப்பிச்சி தெரிந்து கொண்டான்.

சுண்ணாம்புக்கற்களை வாங்கி அதை ஒரு மூட்டையில் கட்டினான் குப்பிச்சி.

 

அந்த மூட்டையை குதிரையின் அடி வயிறில் நன்கு கட்டி விட்டு குதிரை மீது அவன் ஏறினான்.

 

உடனே குதிரை அதிவேகமாக வீதிகள் வழியே சென்று பெரும் நீர் நிலை ஒன்றில் வழக்கம் போல பெரிதாகக் கனைத்துக் கொண்டு இறங்கியது.

 

வயிறளவு நீரினுள் குதிரை இறங்கியவுடன் சுண்ணாம்புக்கற்கள் நீரில் படவே கொதிப்புற்றது. அந்த எரிச்சலைப் பொறுக்க மாட்டாமல் குதிரை நீர்நிலையிலிருந்து வெளியேறியது. அதி வேகமாகச் சென்ற அந்த குதிரை மீது அமர்ந்திருந்த குப்பிச்சி வீதி வலம் வந்து கடைசியில் அரசன் முன் வந்து வணங்கி நின்றான்.

 

அவனது யுக்தியையும் வீரத்தையும் மெச்சிய அரசன் அவனை பூந்துறை நாட்டிற்கான அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பினான்.

 

இந்த மாதிரியான வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது என்பதை எட்டயபுர சமஸ்தானத்து வம்சமணி தீபிகை என்ற நூல், மூன்றாவது பிரகரணத்தில் தெரிவிக்கிறது.

 

12வது பட்டம் நல்லம நாயக்கரவர்கள் விஜயநகரம் சென்றிருந்த காலத்தில் தெற்கு வாசலில் சோமன் என்ற மல்ல வீரன் இவ்விதம் இடது காலில் தங்கச் சங்கிலி கட்டிக் கொண்டிருந்ததாகவும், அவனைக் கொன்று உள்ளே நுழைந்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

 

சுண்ணாம்புக் கல்லைக் கட்ட யோசனை தெரிவித்த உப்பிலிய நல்லயன் என்பவனுக்கு இந்த அதிகாரி ஒரு மரியாதையைக் கொடுத்தான்.

 

அது இது: பூந்துறையில் செதுக்கிய கல்லால் ஆன மேடை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ஜாதி ஞாயம் உப்பிலியர் அந்த மேடையிலிருந்து பேசுவார். அப்பொழுது மேலோர் அங்கு வந்தால் கூட உட்கார்ந்தே பேசலாம் என்ற வழக்கம் இருந்தது. அந்த மேடையின் இரு புறமும் குதிரையைப் பிடித்தல், சுண்ணாம்புக் கல்லைக் கட்டுதல், சவாரி செய்தல் ஆகிய சித்திரக் குறிகள் வெட்டப்பட்டிருக்கின்றன.

 

பூந்துறை புட்பவன நாதர் ஆலயத்தினுள் பாகம் பிரியா நாயகியார் கர்ப்பகிரக இடப்புறச் சுவரில்,அக்கோவிலில் திருப்பணி செய்துள்ள ‘குப்பன் அழைப்பித்தான்’ என்ற குறிப்பு காணப்படுகிறது.

 

அதில் உள்ள குப்பன் (குப்பிச்சி) மேலே கண்ட வரலாறில் உள்ள குப்பிச்சியே.

விஜயநகர சதாசிவராயர், ராமராஜா ஆகியோரின் சாஸனங்கள் இங்கு காணப்படுகின்றன.

 

இவர்களுடைய காலம் கி.பி. 1541 முதல் 1565 வரை எனலாம்.

 

இனி, கொங்கு மண்டல சதகம் கூறும் பாடலைப் பார்ப்பொம்:

 

தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்                     வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்

டேசற் படுமச மாவினை யாட்டி யெவருமெச்ச

மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே.

 

பாடலின் பொருள் :- விஜய நகரத்து அரண்மனை வாயிற்காவலனைக் குப்புற அடித்து வீழ்த்தி, அரண்மனைக்குள் புகுந்து அரசனைக் கண்டு அங்கிருந்த மசக்குதிரை ஏறி ஆட்டி, பூந்துறை நாட்டின் அதிகாரத்தைப் பெற்ற குப்பிச்சியும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாகும்.

***

 

ராமனின் அதிசயப் பயணம்-3 (Post No.5262)

Written by London swaminathan

Date: 27 JULY 2018

 

Time uploaded in London – 8-31 am  (British Summer Time)

 

Post No. 5262

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ராமன் 5113 நாட்களில் செய்த பயணத்தில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன.

 

உலகிலேயே முதல் வெளிநாட்டு அரசை வேறு ஒரு நாட்டில் அமைத்தது ராமபிரான். இந்திய மண்ணிலேயே இலங்கை அரசை ஏற்படுத்தி, விபீஷணனை இலங்கை மன்னனாக அறிவித்து, முடி சூட்டி விடுகிறான்.

 

அதே போல பிடித்த நாடுகளை அவரவர் கையிலேயே (சுக்ரீவன், விபீஷணன்) கொடுத்து விடுகிறான். நாடு பிடிக்கும் ஆசையோ, ஆட்சியைக் கலைக்கும் ஆசையோ இல்லாதவன்

 

பொது மக்கள் அபிப்ராயத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அவன்தான். யாரோ ஒரு வண்ணான் சொன்னதற்காக தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான்.

 

 

  1. சுதீக்ஷண ஆஸ்ரமம்

ராமன் கைகளை உயர்த்தி சபதம் செய்கிறான் அசுர சக்திகளை அழிப்பேன் என்று.

 

42.அக்னிஜிஹ்வ ஆஸ்ரமம்

அகஸ்த்ய முனிவரின் சஹோதரர் ஆஸ்ரமம் இது; இங்கே ராமன் எழுந்தருளினார்.

43.அகஸ்த்ய ஆஸ்ரமம் (சாலேஹ)

சித்த பாபா ஆஸ்ரமம் இருக்கிறது

 

44.ராம் கோவில் (மைஹர் சாதனா)

இங்குள்ள கோவிலில் ராமர், சிவனை வழிபட்டார்

 

சகுஜா மாவட்டத்தில் நுழைகிறார்

 

45.சந்தன் மித்தி

ராமரும் லக்ஷ்மணனும் சந்தனக் குழம்பால்

தங்கள்  தலை முடியைக் கழுவினர்

 

ராஜ்கர் மாவட்டத்தில்

 

46.சிவ மந்திர் (பகீச்சா)

வனவாசிகளை குளிர்க் காய்ச்சலில் இருந்து காப்பாற்ற சீதா தேவி இங்கு துளசி செடிகளை நட்டார்.

 

குமலா மாவட்டம்

  1. ராம ரேகா தாம்

அடர்ந்த காட்டில் ராமர் தனது அம்பால் எல்லைகளை வரைந்தார்/குறித்தார்

 

48.ராம மந்திர் (ஜஸ்பூர்)

மூங்கில் குச்சிகளில் இருந்து கூடை முடைவது எப்படி என்பதை வன வாசிகளுக்கு ஸீதை கற்பித்த இடம்

 

49.ராம ஜாரன (சிங்பூர்)

இங்குள்ள ஊற்றில் எப்போதும் நீர் மட்டம் ஒரே மாதிரி இருக்கும்; அங்கு அனைவரும் குளித்தனர்.

 

பிலாஸ்பூர் மாவட்டம

Rama and Sita on Stamps

50.ராம தேக்ரி மந்திர் (ரதன்பூர்)

மலை உச்சியில் ராமர் சிறிது காலம் தங்கி இருந்தார்

 

51.ஷிப்ரி நாராயண் மந்திர் ((ஷிப்ரி)

 

சாது சந்யாசிகளை ராமன் தரிசித்தார்

ராய்பூர் வட்டம்

 

52.விஷ்ரம் வட் (ஷிப்ரி நாராயண்)

மஹாநதிக் கரையில் வட வ்ருக்ஷத்தின் கீழ் (ஆலமரம்) ராம, லக்ஷ்மணர் ஓய்வு எடுத்தனர்

பிலாஸ்பூர் மாவட்டம்

53.லக்ஷ்மணேஸ்வர் மந்திர்

சிவ பிரானுக்காக லஷ்மணன் கட்டிய சிவன் கோவில்

ராய்பூர் மாவட்டம

54.வால்மீகி ஆஸ்ரமம்

பல வால்மீகி ஆஸ்ரமங்கள் உள்ளன. அதில்

இதுவும் ஒன்று.

 

55.ராம திவாலா (சிர்பூர்)

ராமர் ஓய்வு எடுத்த இடம்

56.பாகேஸ்வர் மந்திர்

மஹாநதிக் கரையில் ராமர்  அமைத்த சிவன் கோவில்

 

  1. ஷிவ் மந்திர்

ராமர் தாபித்த மற்றொரு சிவன் கோவில்.

 

58.குலேஸ்வர்நாத் ராஜிவ் லோசன்

ஸீதாதேவி- குலேஸ்வர் நாத் கோவிலை நிர்மாணித்தார்.

 

59.ஷ்ரங்கி ஆஸ்ரமம்

ஷ்ரங்கி ரிஷியைக் காண ராமர் வந்தார்.

60.விஷ்ணு மந்திர்

ராமாபூர் ஜுன்வனி பகுதியில் நிறைய ரிஷிகள் ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. ராம லக்ஷ்மணர் கோவில் இங்கு உள்ளது. உள்ளே நான்கு கைகளுடன் கூடிய அழகான விஷ்ணு சிலை உள்ளது

 

61, 62, 64, 65, 67- சிவன் கோவில்கள்

ஜோகி குகையில் ராமர் கனக ரிஷியைச் சந்தித்த பின்னர் அமைத்த சிவன் கோவில் காங்கேரில் உள்ளது.

ராமர் ஓய்வு எடுத்த சிவன் கோவில், கேஷ்கர் கட்டியில் இருக்கிறது.

டோடமாவில், இஞ்சராம கொண்டா முதலிய இடங்களில்

ராமர் கட்டிய சிவன் கோவிலைக் காணலாம்.

சித்ரகூடத்தில் ராமரும் சீதையும் கட்டிய சிவன் கோவிலை தரிசிக்கலாம்.

சபரி ஆற்றின் கரையில் ராமன் வழிபட்ட சிவன் இருக்கிறார்.

 

இவை அனைத்தும் இரண்டு விஷயங்களைக் காட்டுகின்றன.

1.ராமர் காலத்தில் சிவன் வழிபாடு பெருகி இருந்தது

2.சைவ- வைஷ்ணவ பேதம் வட நாட்டில் இல்லை

 

இது தவிர நாம் இன்னொரு விஷயத்தை ஊகிக்கலாம். மக்களின் பெருத்த ஆதரவு பெற்ற ஒரு மாமன்னன் 5113 நாட்களும் சும்மா இருந்திருக்க முடியாது. போகும் இடம் எல்லாம் தாம் வழிபட்ட தெய்வங்களை கோவில் கட்டுமாறு மக்களை ஊக்குவித்திருக்கலாம்.

 

தொட்டதெல்லாம் பொன்னாகும் வரம் வாய்ந்த கைகள் ராம பிரான் கரங்கள்!! அவர் நடந்த இடமெல்லாம் புனிதமாக்கப்பட்டதால் இன்றும் மக்கள் எல்லா இடங்களையும் அவர் பெயரால் அழைக்கின்றனர். இது மஹத்தான உண்மை!!!

 

63.ரக்ஷா டோங்ரி

நாராயண்பூரில் ஒரு குகை இருக்கிறது.  அரக்கர்களுடன் ராமர் போர் புரிந்த காலையில் இந்த குகைக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு ராமர் ஸீதையைத் தங்க வைத்தாராம்.

 

66.ராம்ராம் சித்மித்தன் (சுகாமா) அன்னை பூமியை (தாத்ரி மா) ராமர் வழிபட்ட இடம் ( பூமி ஸூக்தம் எனப்படும் அதர்வண வேத மந்திரத்திலும் பூமி வழிபாடு உள்ளது. உலகிலேயே முதல் முதலில் பூமியையும் புறச் சூழலையும் வழிபட்டவர்கள் இந்துக்கள்; இதை நம்மிடமிருந்து பெற்ற கிரேக்கர்கள் கையா (Gaia) என்ர பெயரில் அதை உலகெங்கும் பரப்பினர். ஜய (Jaya= Gaia) என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லை ஆங்கிலேயர்கள் கையா என்று உச்சரித்தனர்.

 

காம்ரான் மாவட்டத்துக்குள் பிரவேஸம்

 

 

  1. பர்ணகுடி (பத்ராசலம்)

 

ஆந்திரத்தில் பத்ராசலம் ; இங்கு கோதாவரிக் கரையில் ராமர் தங்கினார்

 

69.ராம்டெக்

அசுரர்களைக் கொல்ல ராமன் மீண்டும் உறுதி மொழி எடுத்த இடம்

 

70.சரபங்க ஆஸ்ரமம் (உங்கேஸ்வர்)

இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உளது; இது ராமரின் வில்லினால் உண்டாக்கப்பட்டது என்பது நம்பிக்கை; ரிஷியின் குஷ்ட நோயை இது போக்கியது.

நான்டெல் ஜில்லா

  1. ஜமதக்னி ஆஸ்ரமம்

ஜமதக்னி ஆஸ்ரமத்தில் ராமர் ஓய்வெடுத்தார்

 

பல்தானா ஜில்லா

72.பஞ்சபாசர (லௌனார்)

ஒரு குளத்திலிருந்து வரும் இசையை ராமர் ரஸித்தார்

 

  1. ராமேஷ்வர் (சிந்துகேர் ராஜா) சிவன் கோவில் கட்டிய இடம்
  2. ராமதீர்த் (ஜாலன குண்டலினி) மக்களுக்கு நிலத்தை உழுவதை ராமர் கற்பித்தார்.

 

(அரசர்கள் ஆண்டுதோறும் நிலத்தை உழும் சடங்குகளைத் துவக்கி வைப்பர்; இது தவிர யாக பூமியை உழுது பூமி பூஜை போடுவர்; இவை எல்லாம் வேத காலம் தொடக்கம் நடை பெற்று வருகிறது.)

 

ராமர் பயணத்தில் உள்ள 126+2 ஸ்டாப்புகளில் (126+2 STOPS) 74 மண்டகப்படிகளைக் கடந்து விட்டோம்.

 

தொடரும்……………

பெண்களை மடக்க ஆங்கில அரசன் செய்த தந்திரம் (Post No.5254)

Written by London swaminathan

Date: 24 JULY 2018

 

Time uploaded in London – 18-46  (British Summer Time)

 

Post No. 5254

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்கில நாட்டை ஆண்ட அரசர்கள் பலர்; ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பது போல மன்னர்களும் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

நாலாவது ஹென்றி (1367- 1413) ஒரு உத்தரவு போட்டார். ‘’இது என்ன கோரம்! பெண்கள் கன்னா பின்னா என்று நகை அணிந்து வருகிறார்கள்; பொது நிகழ்ச்சிகளில் இப்படி அவர்கள் அணிவது நன்றாக இல்லையே’’ என்று  போட்டார் ஒரு சட்டம்.

 

‘’இனிமேல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் பெண்கள் ஆடம்பரமாக நகை அணிந்து வரக்கூடாது’’ என்று போட்டார் ஒரு சட்டம்.

 

பெண்களோடு உடன் பிறந்தது நகைகள் அதைப் பிரிக்க முடியுமா? அவர்கள் மன்னன் உத்தரவை மதிக்கவில்லை; நன்றாக மிதித்தார்கள்.

 

மன்னனுக்கோ அதிக கோபம்; நான் போட்ட உத்தரவை மதிக்காத குடி மக்களை மடக்குவேன்; புது சட்டம் போட்டு அடக்குவேன் என்றார்.

 

போட்டார் ஒரு சட்ட திருத்தம்!

நான் போட்ட சட்டத்துக்கு முக்கிய திருத்தம்– விபசாரிகளும் பிக்பாக்கெட்டுகளும் , நகை அணியக்கூடாது என்ற சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவார்கள்.

 

(அதாவது வேசி மகள்களும் பிக்பாக்கெட்டுகளும் தாராளமாக நகை அணியலாம்)

 

அவ்வளவுதான் எல்லா பெண்களும் நகைப் பெட்டிக்குள் பகட்டான அணிகளை முடக்கி வைத்தார்கள்!

 

அட்டஹாசமான மன்னன் நாலாம் ஹென்றி!

 

XXXX

என்னப்பனே! பொன்னப்பனே!

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு தான்தோன்றித் தத்துவராயர். உலகே தன்னைச் சுற்றி நடக்கிறது என்பவர். அவரது மகனே, அப்பனை நன்கு அளந்து வைத்திருந்தான். அழகாகச் சொன்னான்:-

 

“என் தந்தை கல்யாணத்துக்குப் போனால் அவர்தான் மணமகன் என்று நினைத்து அத்தனை கௌரவங்களையும் எதிர் பார்ப்பார். அது மட்டுமல்ல. அவர் மரண ஊர்வலக் கூட்டங்களுக்குச் சென்றால், சவப் பெட்டீக்குள் இருக்கும் சவமாகத் தன்னை கருதி அத்தனை மரியாதைகளையும் எதிர்பார்ப்பார்!”

 

XXX

 

டிஸ்ரேலி ஐடியா!

 

டிஸ்ரேலி, பிரிட்டிஷ் பிரதமர்; அவரிடம் ஒருவர் வந்து அனத்தினார்; “ஐயா எனக்கும் ஒரு பட்டம் கொடுங்கள்; டிஸ்ரேலிக்குத் தெரியும் அந்த ஆள் அவர் எதிர் பார்க்கும் பட்டத்துக்கு அருகதை அற்றவர்” என்று.

 

 

“இந்தோ பாருங்கள்; எவ்வளவுதான் கெஞ்சினாலும் உங்களுக்கு நான் பட்டம் கொடுக்க முடியாது. ஒரு ஐடியா (idea) சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் பிரதமர் என்னைக் கூப்பிட்டு உங்களுக்குப் பட்டம் தரப்போகிறேன் என்று சொன்னார். உங்கள் பட்டம் எதையும் ஏற்க மாட்டேன் என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்; என்று தம்பட்டம் அடியுங்கள்.

 

நானும் ‘கம்’மென்று  இருந்து விடுகிறேன். நான் கொடுக்கும் பட்டத்தைவிட அது இன்னும் புகழ் கூட்டும்- என்றார்.

வந்தவருக்கு பரம திருப்தி: வெறும் சர்க்கரை கேட்கப் போன இடத்தில் கோதுமை அல்வா கிடைத்த திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினார்.

 

xxx

சாவதற்கு முன் மரண அறிவித்தல்!

பி.டி பர்னம் (P T Barnum) என்பவர் புகழ்பெற்ற அரசியல்வாதி; அமெரிக்க வர்த்தகர்; ஒரு சர்கஸ் கம்பெனி துவங்கியவர். எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார். தற்பெருமை அதிகம். அவர் சாகக் கிடந்தார். இவரது தற்பெருமை பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் பி டி பர்னமின் காரியதரிசியை அணுகி, “ஐயா, உங்கள் தலைவரைப் புகழந்து நாலு பத்தி எழுதியுள்ளோம் அவர் இறந்தவுடன் காலமானார் (மரண அறிவித்தல்) பத்தியில் போட எழுதியுள்ளோம். அவர் உயிருடன் இருக்கும்போதே அதை வெளியிட்டால் அவரும் அதைப் படித்துவிட்டுச் சாகலாமே” என்றனர்.

 

காரியதரிசி சொன்னார்; தயவு செய்து மரண அறிவித்தலை அவர் சாவதற்கு முன் வெளியிடுங்கள்; அவர் அதைப் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவார் என்றார்.

 

பத்திரிக்கையாளர்களும் அதை அவர்  இறப்பதற்கு முன்னர் நாலு பத்தி வெளியிட்டனர். பி டி. பர்னமுக்கு ஒரே சந்தோஷம்; அடடா. என்ன அருமை; நான் எவ்வளவு பெரியவன் என்று மகிழ்ச்சியுடன் செத்தார்.

 

–subham–

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் எங்கே போனார்?- Part 1 (Post No.5250)

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 13-52  (British Summer Time)

 

Post No. 5250

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ராமனின் அதிசயப் பயணம்! 5113 நாட்கள் என்ன செய்தார்? எங்கே போனார்?-1 (Post No.5250)

 

ஒரு அருமையான ராமாயண ஆராய்ச்சிப் புத்தகம், லண்டன் பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்தது. ராமன் 14 ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். அதாவது 365 நாட்கள் X 14 ஆண்டுகள் + 3 லீப் வருட நாட்கள் = 5113 நாட்கள்.

 

இந்த 5113 நாட்களில் அவர் எங்கெங்கு போனார்? யார் யாரைப் பார்த்தார்? என்னென்ன செய்தார்? நாம் அனைவரும் யோசிக்காத வகையில் யோசித்து வால்மீகி ராமாயணப்படி தொகுத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் ராமாவதார் சர்மா .

 

ராமன் 14 ஆண்டுகளுக்குள் வராவிடில் தீக்குளித்து விடுவேன் என்று அருமைத் தம்பி பரதன் செப்பியதும், அதன்படி சரியாக 14 ஆண்டுகள் முடியும் தருவாயில் ராமன் வந்ததும், பரதன் சொன்ன சொல் மீறாதவன் அவசரப்பட்டு ஏதேனும் செய்து விடப்போகிறான் என்று ஹனுமாரை ‘எமர்ஜென்ஸி’ பயணத்தில் ராமன் அனுப்பியதும் நாம் அறிந்ததே.

 

மற்ற விஷயங்களை நாம் நுணுகிப் பார்க்கவில்லை. டாக்டர் ராமாவதார் சர்மா செய்த ஆராய்ச்சியை டாக்டர் ராஜேந்திர சிங் குஷ்வாஹா – ‘’பாரதீய வரலாறு- ஒரு கண்ணோட்டம்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் பட்டியலிட்டுள்ளார். இதோ சில சுவையான தகவல்கள்:–

 

கைகேயி உத்தரவு போட்டபின்னர் என்ன நடந்தது?

 

1.அயோத்தி- பிறந்த ஊரில்– ராம ஜன்ம பூமியில் — எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுப் புறப்பட்டார்- ஸீதா தேவியோடு கடும் வாக்குவாதம்; காடு என்பது கல், முள் நிறைந்தது என்பது ராமர் வாதம்- ஸீதையோ பிடிவாதம்- கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை- ராமன் ஸாமியே அப்பப்பா! என்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என்றாள். ராமனும் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்- போகும் இடம் வெகு தூரம்!- புறப்படு என்றான்.

 

2.முதல் ஸ்டாப் (முதல் மண்டகப்படி)- தமஸா நதி

 

முதல் நாள் இரவு தமஸா நதிக் கரையில் தங்கினார்; ஏன்? அயோத்தி நகரமே திரண்டு எழுந்து பின்னால் வந்து விட்டது; அவர்களுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்க வேண்டுமே! ராமனோ- சாந்த குண ஸ்வரூபன் – கோபமோ தாபமோ இல்லாத ஜீவன் முக்தன்.

 

3.அடுத்த மண்டகப்படி- பூர்வ சகியா–

அயோத்தி மக்களுக்கு பெரிய கும்பிடு போட்டார்; காம்ரேட்ஸ் (Comrades)! உங்கள் ஆதரவுக்கு நன்றி; தயவு செய்து திரும்பிப் போங்கள். என்னப்பன் தஸரதனும் , என் தம்பி பரதனும் உங்களைக் காத்து ரக்ஷிப்பர் என்றார். ராமன் சொல்லைத் தட்ட எவரால் முடியும்? தயக்கத்தோடு, மனக் கலக்கத்தோடு திரும்பினர்.

 

4.சூர்ய குண்டம்

ராமன், லக்ஷ்மணன், சீதா ஆகிய மூவரும் சூர்ய குண்டத்தில் குளித்தனர். சூர்ய பகவானை வணங்கினர்.

 

இப்பொழுது பைஸாபத் (அயோத்தி) மாவட்டத்திலிருந்து உத்தர பிரதேஸத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் நுழைந்தனர்.

 

 

  1. 5-வது மண்டகப்படி- வேதஸ்ருதி நதி

தற்போதைய அஷோக் நகர் அருகில் நதி யைக் கடந்தனர்.

  1. கோமதி நதி

அடுத்ததாக வழியில் தடை போட்ட நதி கோமதி. அதைத் தற்போதைய வால்மீகி ஆஸ்ரமம் அருகே கடந்து எதிர்க் கரை அடைந்தனர்.

 

ஆசையே அலை போலே, நாமெலாம் அதன் மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே!

(ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்?

என்ற திரைப் படப் பாடல் என் காதில் ஒலிக்கிறது ( இதை எழுதும் போது)

 

 

7.பிரதாப்கார் மாவட்டத்தில் நுழைகின்றனர்

ஸ்யந்திகா (சாய் ஆறு) — ஸாய் நதியும் பராரியா ஆறும் கலக்கும் இடத்தில் நின்று இயற்கையை ரஸிக்கின்றனர்.

 

8.அடுத்ததாக வேத்ரவதி நதியை அடைகின்றனர் – தற்போது இந்த நதிக்கு சாகர்னி என்று பெயர்.

 

9.பாலுக்னி நதி –

நிறைய மணலும் கூழாங்கற்களும் நிறைந்ததால் இந்த நதியை பாலுக்னி என்று அழைப்பராம்.

 

இதைத் தாண்டியவுடன் ராமன் உத்தரப் பிரதேஸத்தின் பிரயாகை மாவட்டத்துக்குள் (இப்போதைய பெயர் அலஹாபாத்) பிரவேஸிக்கிறான்.

 

10.சிருங்கிபேர புரம்

‘குகனுடன் ஐவரானோம்’ என்ற கம்பன் பாடல் மூலம் பிரஸித்தி பெற்ற குகன் என்னும் வேடனைக் காண்கிறான் ராமன். ஸஹோதரனைப் போல அவன்  பாஸமும் பரிவும் நேஸமும் நட்பும் பாராட்டுகிறான். அவன் நிஷாத குல மன்னன். கங்கையைக் கடக்க நூற்றுக் கணக்கான படகுகளை அணிவகுக்கிறான்.

11.ஸீதா குண்டம்

கங்கையைக் கடந்தவுடன், அமைச்சன் ஸுமந்திரனைத் திருப்பி அனுப்புகிறான் ராமன்.

 

12.சிவன் கோவில்

ஸீதா தேவி, ஒரு குளத்திலிருந்து மண் எடுத்து சிவ லிங்கம் செய்து வழிபடுகிறாள்.

 

( இதை எழுதியவர் வால்மீகீ ராமாயணத்தோடு ஆங்காங்கே உள்ள ஸ்தல புராணக் கதைகளையும் இணைத்துப் படைத்துள்ளார் என்பதை நினைவிற் கொள்க.)

 

13.ராம ஜோய்தா

சரவா கிராமம் அருகில் ராமர் குளித்தார்.

 

14.பரத்வாஜ மஹரிஷியுடன் சந்திப்பு

 

ராமன் முதலில் சந்தித்த பெரிய ரிஷி பரத்வாஜர். அவரது ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு பெரிய வரவேற்பு. அது கங்கை நதிக் கரையில் அமைந்தது.

 

15.ஆலமர வழிபாடு (யமுனை நதிக்கரை)

 

ஸீதா தேவி அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தை வழிபடுகிறாள்

 

16.. பதினாறாவது மண்டகப்படி – சங்கம்

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகின் மிகப் பெரிய கும்பமேளா திருவிழா நடக்கும் த்ரிவேணி சங்கமத்தில் கங்கை– யமுனை- ஸரஸ்வதி — நதி கலக்குமிடத்தில் புண்ய ஸ்நானம்.

17.ஸீதா ரஸோய் (ஜஸ்ரா பஜார்)

இங்கு மிகப் பழைய குகை ஒன்று இருக்கிறது. அங்கு ராமனுக்கும், லக்ஷ்மணனுக்கும் ஸீதா சமைத்து அறுசுவை உண்டி படைத்தாள்

 

பாண்டா மாவட்டத்தில் நுழைகின்றனர்

  1. சிவ் மந்திர்/ சிவன் கோவில் (ரிஷ்யான் ஜங்கல்)

கானகம் வாழ் ரிஷிகளின் கூட்டத்துடன் ராமன் சந்திப்பு

  1. ஸீதா ரஸோய் (ஜன் வன்)

ஸீதா தேவி இங்கு அரிசிச் சோறு உண்டாக்கினாள்.

 

TO BE CONTINUED……………………………….

ALL PROSTITUTES CAN WEAR JEWELS- ENGLISH KING’S ORDER (Post No.5249)

 

Written by London swaminathan

Date: 23 JULY 2018

 

Time uploaded in London – 9-35 am  (British Summer Time)

 

Post No. 5249

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

VANITY ANECDOTES continued

 

MY DAD WANTS TO BE A BRIDEGROOM IN EVERY WEDDING!

It was one of his own sons who so aptly characterised Theodore Roosevelt, saying,
“Father always had to be the centre of attention. When he went to a wedding, he wanted to be the bride groom; and when he went to a funeral, he wanted to be the corpse”.

Xxxx

DISRAELI’S TRICK

There is a good story told of the way Disraeli got rid of an unfortunate applicant for a baronetcy (the rank of a baronet) upon whom, for many reasons, it was impossible to confer the honour.
“You know I cannot give you a baronetcy, said Disraeli, but you can tell your friends I offered you a baronetcy and that you refused it. That is far better.”

Xxxx

GENERAL WOULD HAVE DIED YEARS AGO!– LINCOLN

In an interview between President Lincoln and Petroleum V. Nasby, the name came up of a recently deceased politician of Illinois whose merit was blemished by great vanity. His funeral was very largely attended.
“If General……….
Had known how big a funeral he would have had, said Mr Lincoln, he would have died years ago”.

Xxx

YOU ARE WONDERFUL!

Oscar Levant was known for his self-esteem. Occasionally he would tell this story on himself. “Once I was saying to an old friend how remarkable was our congeniality since we had practically nothing in common.
Oh, but we have, replied the friend, I think you are wonderful and you agree with me.”

Xxx

HENRY IV EXEMPTED PROS.
Henry IV enacted some sumptuary laws, prohibiting the use of gold and jewels in dress; but they were for some time ineffectual. He passed a supplement to them which completely answered his purpose. In this last he exempted from the prohibitions of the former after one month, all prostitutes and pickpockets. Next day there was not a jewel nor golden ornament to be seen.

Xxx

I AM D’ANNUNZIO! DON’T YOU KNOW?

In London, D Annunzio, the Italian poet asked a policeman to direct him to his destination and remarked,
“I am D Annunzio! The bobby did not understand. Where upon the genius burst forth into oaths and commanded his secretary to present that ignorant lout with copies of all his works”.
Xxx SUBHAM XXX