ஒளிவீசும் தமிழ்நாடு -ஓலா, ஊபர், Fast Track Call டாக்ஸி! (Post No.4855)

ஒளிவீசும் தமிழ்நாடு -ஓலா, ஊபர், Fast Track Call டாக்ஸி! (Post No.4855)

 


Written by London Swaminathan 

 

 

Date: 27 MARCH 2018

 

 

British Summer Time uploaded in London – 8-43 am

 

Post No. 4855

Pictures shown here are taken from various sources; thanks.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மார்ச் முதல் வாரத்தில் (2018) இந்தியாவில் இருந்தேன்; ஒவ்வொரு முறையும் கொஞ்சம் மாற்றம் காண்கிறேன். ஆகஸ்ட் 2017 இந்திய விஜயத்தில் பெங்களுர் சென்றேன். அங்கும் மாற்றம் கண்டேன். UBER ஊபரும், OLA ஓலாவும் கொடிகட்டிப் பறக்கின்றன. தமிழ்நாட்டில் ஆட்டோரிக்ஷா தலையில் பலத்த அடி! என்ன சொன்னாலும், எவ்வளவு சட்டம் வந்தாலும் நாங்கள் கேட்ட காசைக் கொடுக்க வேண்டும் என்று அடாவடித்தனம் செய்தோர் மீது இறைவன் கொடுத்த அடி ஊபர், ஓலா (Uber and Ola). ஆனால் இவைகளையும்கூட மார்கஸீய நாசகாரிகள் நாசம் செய்ய முடியும்; யூனியன் வைத்து ஸ்டிரைக் செய்து அட்டூழியம் செய்யமுடியும்; பதில்? மக்கள் கையில்தான்.

 

முதல் நாள் பழைய ஆட்டோக்கார், தெரிந்தவர் என்பதால் அதில் சென்றேன்; மறு நாள் ஒலா டாக்ஸியில் அதே இடத்துக்குச் சென்றேன்; 200  ரூபாய் மலிவு. ஆட்டாக்காரர்களின் அட்டூழியம் கொஞ்சம்  குறைந்துள்ளது. ஆயினும் எங்கள் லண்டன் போல, போஸ்ட்கோடு இல்லாத POST CODE இடங்களுக்கு எஸ்டிமேட் என்று சொல்லுகிறார்கள். அதாவது கொஞ்சம் கூடுதலாக வரும். பரவாயில்லை.

 

எப்படியாகிலும் ஆட்டோவைவிட மலிவுதான்; பல கொள்ளைக்கார ஆட்டோக்கார்களும் ஊபர், ஓலாவில் பெயரைப் பதிவு செய்துள்ளனர். ஏமாறும் வாடிக்கையாளர் இல்லாதபோது ஊபர் ஓலா சவாரிகளைப் பிடிப்பர்.

 

 

பேசிக் கொண்டே சென்றபோது சில சுவையான விஷயங்கள் கிடைத்தன–

ஒரு ஆட்டோ டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒருவர் அவரை எழுப்பி ஒரு விலாசம் ADDRESS கேட்டாராம். ஏனய்யா, தூங்கிய என்னை எழுப்பினாய்? என்று அவரை விரட்டி, மிரட்டி 50 ரூபாய் வசூலித்தாராம்.

இதைச் சொல்லிவிட்டு நியாம்தானே ஸார்?  நான் செய்த்தது!! என்று என்னையும் சிக்கலில் மாட்டிவைக்கப் பார்த்தார்.

நான் நைஸாக நழுவிவிட்டேன் – தூங்கிய உம்மை எழுப்பியது தவறுதான்………………………. வழா வழா, கொழ கொழா…………… நடிகர் ரஜினி காந்த் அறிக்கை போலப் பதில் கொடுத்தேன்

 

இன்னும் சில சுவையான செய்திகள்–

நீங்கள் எவ்வளவு வரும்படி உண்டாக்குகிறீர்களோ அவ்வளவுக்கு ஊக்கத் தொகை INCENTIVES  உண்டாம்; பல கட்டங்களில் டிரைவர்களைப் பிரிப்பராம்; மேலே செல்லச் செல்ல நல்ல ஊதியம்- சர்வ சாதாரணமாக மாதம் 35,000 ரூபாய் எடுப்பார்களாம். ஆனால் வாரம் ஏழு நாளும் உழைப்பார்களாம். அந்த 35000 ரூபாயில் 18,000 ரூபாய் கார்க் கடனுக்குப் (Repaying Car Loans) போய் விடுமாம்- அதாவது உங்கள் சொந்தக் காருக்கான கடனை அடைக்கிறீர்கள்

நான் சொன்னேன், “பரவாயில்லையே-  உங்களுக்கு என்று கார் இருந்துவிட்டால் நீங்கள் சுயமாகவும் ஸவாரி ஏற்றலாமே என்றேன்; ஊபரும் ஓலாவும் ஒரு வரம்பு வைத்திருப்பதால் அந்த அளவுக்கு கட்டாயம் பிஸினஸ் BUSINESS கொடுக்க வேண்டுமாம்.

 

லண்டனில் எல்லாம் கிரெடிட் கார்டு Credit Card மூலம் கொடுப்போம். ஆனால் இந்தியாவில் காசும் கையில் கொடுக்கலாம். ஆட்டோ டிரைவர்களின் அட்டூழியத்தை அடக்கி ஒடுக்கும் FAST TRACK CALL பாஸ்ட் ட்ரா க் டாக்ஸி, ஷேர் ஆடோ SHARE AUTO , ஊபர், ஓலா வாழ்க.

 

கம்யூனிஸ்டு நாசகாரக் கும்பல் புகுந்து, யூனியன் அமைத்து சீரழிக்காதவரை தமிழ்நாடு ஒளிவீசும்

 

இது போல பாங்கு ஊழியர்களின் மூஞ்சி முகரையைச் சிதைக்க, யூனியன்களை ஒழிக்க, பேட்டை தோறும், வெளிநாட்டு வங்கிக் கிளைகள் திறந்தாலும் நலமே. நான் ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்த போது ஒரு நாள் வங்கி ஊழியர் ஸ்டிரைக், ஒரு நாள் தேஸீய விடுமுறை; மற்ற     இரண்டு நாட்கள் வார விடுமுறை; அடுத்த சில நாட்களில் நான் காரில்  சுற்றுப் பயணம். நல்ல வேளை, அண்ணன் தம்பிகள் இருந்ததால் கைமாற்றுப் பெற்றுக் கொண்டேன்.

 

இதில் என்ன வேடிக்கை என்றால், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளத்தில் ஆட்டோ டிரைவர்கள் நியாயமான காசுதான் வாங்குகிறார்கள். இங்கே அவர்கள் ஆட்சி ஏற்படும்வரை அட்டூழியத்தைக் கட்டவிழ்த்து விடுவார்களாம்; அவர்கள் ஆட்சி வந்துவிட்டால் ஸ்டிரைக் இராது, அட்டூழியம் இராதாம்!

 

நிற்க; தமிழ்நாட்டில் முன்னைவிட பிச்சைக்கார ர்கள் குறைவு; பராசக்தி திரைப்படத்தில் (கருணாநிதி கதை வசனம்?) பிச்சைக்காரர்களும் நாய்களோடு போட்டி போட்டுக்கொண்டு எச்சில் இலையை வழிக்கும் காட்சியைப் பார்க்கவே கஷ்டப்படுவேன். இப்போது அது இல்லை.

ஆனால் அதைவிடக் கொடுமையான காட்சி– ஒவ்வொரு கல்யாணத்திலும் நடக்கும் கொடுமை– காலை, மதியம், மாலை, இரவு நான்கு வேளைகளில் ஒவ்வொரு மு றையும் ஐம்பது அய்யிட்டங்கள் (Items)- இதில் பாதி குப்பைத் தொட்டியில்!

 

என்ன அநியாயம்? அங்கு ஓஸிச் சாப்பாட்டிற்கு வரும் ஒரு சில கும்பல் மட்டும் ஐம்பது அயிட்டங்களையும் வாயில் போட்டு விழுங்கிவிட்டு மாயா பஜார் கடோத்கஜன் போலக் காத்திருப்பது எனக்கு வியப்பைத் தரும்

அவர்களுக்கு  கடவுள் கொடுத்தது வயிறா? வண்ணான் தாழியா?

 

கடவுளே- தமிழர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு- மூன்று வேளைக்கு மேல் சாப்பாடு தேவை இல்லை- பத்து வகைகளுக்கு மேல் தேவை இல்லை.

 

ஸ்விட் Sweet முதலியவற்றை கையில் பாக்கெட்டில் கொடுப்பது வீணாவதைத் தடுக்கும். அல்லது பிராஹ்மணர் அல்லாதோர் செய்வது போல அரை நாளில் கல்யாணத்தை முடித்து மற்ற சடங்குகளை வீட்டோடு வைத்தாலும் நலமே.

 

 

தெருவெங்கும் பூ மணக்கும்

 

நாங்கள் பயணம் செய்த சாலை நெடுகிலும் இளநீர், பலா, கொய்யா, வெள்ளரிக்காய், முந்திரிப் பருப்பு, பூ வியாபாரம் செய்த பெண்மணிகளை கண்டோம். சங்க இலக்கியத்தில் கூட பூக்காரி, உப்பு விற்கும் பெண்மணி ஆகியோரைக் காண்கிறோம்; 2000 ஆண்டுகளாகப் பெண்களும் சம்பாதிக்கும் நாடு இந்தியா; இன்றும் அவர்கள் சுய வியாபாரம் செய்வதால் உடல் மெலிந்து ஆரோக்கியமாக இருக்கின்றனர்; ஏதோ தானும் கொஞ்சம் சம்பாதிதோம் என்ற பெருமை இருக்கிறது. நமக்கும் போகும் வழியில் சாப்பிடக் கிடைக்கிறது. முன்னர் ரயில்வே லெவல் கிராஸிங்கில் மட்டும் நடந்த வியாபாரம் இப்போது டோல் கேட் TOLL GATE முழுதும் நடக்கிறது.

 

இந்த டோல் கேட்களை TOLL GATES ஒழித்தால் என்ன?

எங்கள் பிரிட்டனிலும் சில இடங்களில் இன்றும் டோல் கேட் உண்டு. இவற்றை ஒழித்து ஒரேயடியாக ஒரு தொகை வாங்கிக்கொண்டு கார்க ளை விட்டால் என்ன?

 

இன்னும் சில வண்டிகள் பாண்டிச்சேரி பக்கம் போனால் , டூரிஸ்ட் பெர்மிட் வாங்கனுமாம்; இவைகளைப் போன்ற கட்டு திட்டங்களை எளிமைப்படுத்துவது நல்லது.

மொத்தத்தில் கரும்பையும் தென்னையையும் பயிரிடாதவர்கள் கூட கரும்புச் சாற்றையும், இளநீரையும் விற்பது தொழில் முனைப்பைக் காட்டுகிறது.

உழைக்கும் கரங்கள் வாழ்க

 

 

கிறிஸ்தவர் ஊடுருவல்

 

பேஸ்புக்கில் பல இந்து வீரர்கள் கொட்டம் அடிப்பது எனக்கு சிரிப்பைத் தருகிறது. பல ராம ரதங்களும் முருக ரதங்களும் “வெற்றிகரமாக” ஓடுவது நகைப்பத் தருகிறது. ஏனெனில் எனது ஆகஸ்ட் 2017 இந்திய விஜயத்தில் தமிழ் நாட்டின்     தென் மாவட்டங்களில் சுற்றினேன். 2018 வருகையில் வட மாவட்டங்களில் சுற்றினேன். மவுனமாக, யாருக்கும் தெரியாமல், சத்தமில்லாமல் கிறித்தவர்கள் செய்யும் வேலையைக் கண்டேன்; கிராமம் தோறும் சின்ன பஸ்களையும் வேன்களையும் அனுப்பி பிள் ளைகளுக்கு  யூனிபார்ம் கொடுத்து, டை கட்டி விட்டு பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதைப்              பார்த்தேன்; பட்டிக்காட்டுப் பெற்றோர்களுக்கு ஏக சந்தோஷம்;   தன் மகன் தாட் பூட் என்று இங்கிலிபீஷில் சில சொற்களைச் சொன்னவுடன் ஒரே மகிழ்ச்சி; அவர்கள் கழுத்தில் மாட்டிவிடப்பட்ட சிலுவையைப் பார்க்கக்கூட பெற்றோர்களுக்கு நேரம் இல்லை!

 

இப்படி சத்தம் போடாமல் அவர்கள் வேலை செய்கையில் இங்கு RSS ஆர் எஸ் எஸ் காரர்களும் VHP வி.எச்.பி காரர்களும் இந்து முன்னணிக் கட்சிக்  காரர்களும் ரதம் ஓட்டுவது நகைப்பையும் திகைப்பையும் நல்கியது.

 

முதலில் அவர்கள் இதை எல்லாம் கணக்கெடுத்து சீர் செய்ய வேண்டும். நகர்ப் புறத்தில் ரதம் விடுவதற்குப் பதிலாக கிராமப் புறத்தில் ஸ்கூல் பஸ் விட வேண்டும் நிற்க

டாக்டர் பட்டம் மூனு லட்சம் ரூபாய்தானாம்

 

காரில் போகும்போது இன்னொரு செய்தியும் காதில் விழுந்தது என் தம்பி சொன்னான்—- இப்போதெல்லாம் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்தால் டாக்டர் பட்டம் கிடைத்து விடுகிறதாம்.

நான் சொன்னேன்

அடப்பாவீ- மிகவும் cheap ‘சீப்’ஆக இருக்கிறதே. லண்டனில் உள்ள இலங்கைத் தமிழருக்கு இது தெரிந்தால் க்யூவில் நின்று வாங்கிக் கொள்வார்களே! சும்மா இருக்கும்போதே தன் பெயருக்கு முன்னல் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்கிறார்கள்- நான் கலாசேத்ராவில் படித்தவள் என்கிறார்கள்- என்னை மியூஸிக் அகாடமியும் நாரத கானசபாவும் அழைத்திருக்கிறது- எனக்கு வேறு பல நிகழ்ச்சிகள் வந்து விட்டதால் மாட்டேன் என்று விட்டேன் என்கிறார்கள்– அவர்களுக்கு எல்லாம் மூன்று லட்சம் ரூபாய் கொசு என்றேன். இதற்கெல்லாம் சாட்சியாக— ஆட வரும், பாட வரும், பேச வரும் அத்தனை தமிழ் பிரபலங்களுடன் போட்டோ எடுத்து வீட்டில் வைத்திருப்பர்; பிரபலங்கள் யார் வந்தாலும் வீட்டுக்கு அழைத்து, சோறு போட்டு நன்கு கவனிக்கவும் செய்யவர்; ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடப் போவாரா? அல்லது சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வேறு வழிகள் தெரியும்; யாரை, எப்படிக் “கவனித்தால்” அது கிடைக்கும் என்று.

 

 

ஒரு பட்டமும் பதவியும் இல்லாத சசிகலாவின் காலில் துணைவேந்தர்களே விழும் அளவுக்குத் தமிழ் நாடு கேடுகெட்டுப் போய்விட்டது.

திராவிட ஆட்சியின் சாதனைகள்…………….. வேதனைகளில் இதுவும் ஒன்று

 

பகுத்தறிவுப் பகலவன்கள் வாழ்க, தென்னாட்டு பெர்னாட்ஷாக்கள், இங்கர் சால்கள் வெல்க!!

 

–subham—

 

 

ஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம் (Post No.4853)

Written by London Swaminathan 

 

 

Date: 26 MARCH 2018

 

 

British Summer Time uploaded in London – 8-04 am

 

Post No. 4853

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் இருந்தேன். ஐந்தே நாட்களில் ஐந்து புகழ்பெற்ற சிவன் கோவில்களுக்குச் சென்றேன்:

சிதம்பரம் நடராஜர் கோவில்

வைதீஸ்வரன் கோவில்

திருவக்கரை சிவன் கோவில்

திருமுதுகுன்றம் சிவன் கோவில்

சென்னை கபாலீஸ்வரர் கோவில்

 

முன்னர் பார்க்காது இருந்து, இப்பொழுது புதிதாகத் தரிசித்த, இரு கோவில்களின் முக்கிய விஷயங்களை மட்டும் மொழிவேன். ஏனைய கோவில்கள் பற்றி விளம்பியோர் பலர் இருக்க, கூறியது கூறல் குற்றம் என்பதால் விடுக்கிறேன்.

 

திருவக்கரை கோவில்!

சுவாமி பெயர்- சந்திரமௌலீஸ்வரர்

அம்மன் பெயர்- அமிர்தாம்பிகை/ வடிவாம்பிகை

ஸ்தல விருக்ஷம்- வில்வ மரம்

பழமை-2000 ஆண்டு

பாடியவர்- திரு ஞான சம்பந்தர்

 

சிறப்பு– காளி கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் சேர்ந்து அமைந்தமை

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!

 

இங்கு மூன்று முகம் கொண்ட சிவ பெருமான் வீற்றிருப்பது கோவிலின் தனித் தன்மைக்கு சான்று

 

வக்ர காளி அம்மன் என்ற காளி கோவிலும் வரத ராஜப் பெருமாள் என்ற விஷ்ணுவின் மூர்த்தமும் ஒருங்கே ஒரே இடத்தில் இருக்கின்றன. அக்காலத்தில் சிவ- விஷ்ணு பேதம் இன்றி மக்கள் வழிபட்டமைக்கு சிதம்பரம் கோவில், திருவக்கரை கோவில் முதலியன அத்தாட்சி.

 

 

ஒவ்வொரு கோவில், ஒவ்வொரு சந்நிதி, ஒவ்வொரு சிலை பற்றியும் பல கதைகள் உண்டு.

 

இருப்பிடம்- திண்டிவனம், விழுப்புரம் அருகில்

 

சிறப்பு- அருகிலேயே கல் மரப் பூங்காவில் பல கோடி ஆண்டுகளில் மரங்கள் கற்களாக மாறிய அதிசய இடம் ( இது பற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிறைய படங்களுடன்  தனிக் கட்டுரை வரைந்துளேன்; கண்டு மகிழ்க)

 

திருவக்கரையில் உள்ள மூன்று தலைகள் கொண்ட முகலிங்கம் பற்றிக் கூறப்படுவதாவது:-

 

தத்புருஷம், அகோரம், வாமதேவம் ஆகிய மூன்று முகங்களுக்கு மூன்று வேளைகளில் மூன்று வித அலங்காரம் செய்யப்படுகிறது.

குண்டலினி முனிவர் சமாதி

 

ஒவ்வொரு கோவிலும் ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம் உடைத்தாய் இருப்பதற்குக் அங்கு சமாதி அடைந்த முனிவர்களும் சாது சந்யாசிகளுமே காரணம். திருவக்கரையில் குண்டலினி முனிவர் சமாதி உளது. சைவப் பெரியார்கள் இறந்தால் அங்கே சிவலிங்கமும், வைணவப் பெரியார்கள் இறந்தால், அவர்களைப் புதைத்த இடத்தில் துளசி மாடமும் அமைப்பது மரபு. திருவக்கரையில்சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜீவன் முக்தர்களின் சமாதிகளில் என்றும் அந்த முனிவர்களின் அருள் இருப்பதால் இப்போது தரிசித்தாலும் முனிவரின் அருள் கிட்டும்.

இந்தக் கோவிலில், 100 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.

 

 

திருவக்கரை இறைவனைப் பாடிய ஞான சம்பந்தரின் மூன்றாம் திருமுறையில் (தேவாரம்) சில பாடல்கள் மட்டும் தந்துள்ளேன்

 

3438 கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும்பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன்வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழலுள்குதுமே
3.060.1

 

3439 பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர்பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்கடொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன்வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடிசெப்புதுமே
3.060.2

 

3440 சந்திர சேகரனே யரு ளாயென்றுதண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்கடொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழவோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம்வக்கரையே
3.060.3

 

 

 

விருத்தாசலம்/ திருமுதுகுன்றம் சிவன் கோவில்

 

சுவாமியின் பெயர்- பழமலை நாதர்

அம்மன் பெயர்-  விருத்தாம்பிகை, பாலாம்பிகை

ஸ்தல மரம் – வன்னி

 

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய (தேவாரம்) தலம்.

சிறப்பு–மிகவும் பழமையான கோவில் என்பது பழமலை, விருத்த+ அசலம் என்பதில் இருந்தே புலப்படும்

 

ஸ்வயம்பு லிங்கம் இங்குளது- அதாவது தானே தோன்றியது.

 

மலைகளுக்கும் கற்களுக்கும் வயது பல கோடி ஆண்டுகள். இஙே லிங்க வடிவில் கல் இருந்தவுடன் இதைப் புனிதமான இடம் என்று கருதி கோவில் எழுப்பி இருப்பர். ஆகையால் கோவிலின் வயது பல கோடி ஆண்டுகள் என்று சொன்னாலும் அறிவியல் முறைப்படி சரிதான்.

 

திருவண்ணாமலை போல இங்கும் பவுர்ணமியில் கிரிப் ப்ரதக்ஷிணம் ( மலை வலம்) நடைபெறுகிறது.

 

 

 

இங்கு பாதாள அறையில் கணபதி (விநாயகர்) சந்நிதி உளது.

இந்த வட்டாரக் கோவில்கள் சோழ, ஹோய்சாள, நாயக்க மன்னர்களின் திருப்பணிகளை மேற்கொண்டதால் ஒரே மாதிரியான சிலகள் கட்டிட மைப்புகளைக் காணலாம்.

 

16 கால் மண்டபத்தை அழகிய கலை வேலைப் பாடுகளுடன் காண்கிறோம்.

 

ஸ்ரீ முஷ்ணம் கோவில் வாசலில் உள்ள சிற்பங்கள் போலவே இங்கும் இருப்பதால், ஒரே சிற்பியின் கைவண்ணத்தைக் காணலாம்.

பிரம்மாண்டமான வாசல் அருகில் சுவர் முழுதும் கட்டம் கட்டமாக சிற்பங்கள். அதுபோல தோரண வாயில் நங்கைகள் முதலியன.

சுந்தரர்  பாடிய ஏழாம் திருமுறைப் பதிகத்தில் இருந்து சில பாடல்கள் மட்டும்

 

பொன்செய்த மேனியினீர் புலித் 

தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித் 

தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர

வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி

யேன்இட் டளங்கெடவே.

7.025.1

 

250 உம்பரும் வானவரும் முட

னேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திக

ழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பர

வையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடி

யேன்இட் டளங்கெடவே.

7.025.2

 

251 பத்தா பத்தர்களுக் கருள்

செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முது

குன்ற மமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பர

வையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடி

யேன்இட் டளங்கெடவே.

 

திருவக்கரை, திருமுதுகுன்றம் ஆகியவற்றை சம்பந்தர் பாடியிருப்பதால் இவைகள் அவருடைய காலத்துக்கு முன்னமே சிறப்பு பெற்றிருக்க வேண்டும்; ஆகவே 2000 ஆண்டுப் பழமை உடையவை என்று செப்பினாலும் அது மிகையாகாது.

 

இரண்டு தலங்களிலும் கோவில் திருவிழாக் காலங்களில் மக்கள் லட்சக் கணக்கில் கூடுகிறார்கள்.

 

 

 

 

—-சுபம்—

 

பின்னு செஞ்சடையாள், பேரழகி சிலை உடைய திருமுட்டம் (Post No.4846)

Written by London Swaminathan 

 

 

Date: 24 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-15 am

 

Post No. 4846

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருமுட்டம் என்றும், ஸ்ரீமுஷ்ணம் என்றும் அழைக்கப்படும் தலம் வைணவக் கோவிலும் சிவன் கோவிலும் இடம்பெற்ற தலம் ஆகும். இங்குள்ள வராஹ அவதாரக் கோலம் கொண்ட பூவராக- அம்புஜவல்லி தாயார் கோவில் மிகவும் பிரபமானது. இதே கோவிலில் குழந்தை அம்மன் சந்நிதி என்று ஒன்றும் இருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை ஆகும்.

 

மார்ச் மாத (2018) முதல் வாரத்தில் இக்கோவிலுக்குச் சென்றேன். சில முக்கிய விஷயங்களை மட்டும் காண்போம்:-

கண்டவர் வியக்கும் அற்புதமான அழகிகளின் சிலைகள் உடைய கோவில் இது. ஒரு பெண்ணின் ‘பின்னல்’ தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போலச் சிலை ஒன்றைக் கண்டதில்லை.

இன்னும் ஒரு புதுமை– அரச மரம், நித்ய புஷ்கரணி என்னும் குளம், பூவராஹ சுவாமி ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதாகும்.

வராஹ அவதாரம், விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்களில் ஒன்று. இங்கே இரண்டு கைகளையுமிடுப்பில் வைத்துக் காட்சி தருகிறார்.

 

திரு என்ற அடைமொழி இருந்தும் ஆழ்வார்களால் பாடப்பெறாத தலம் இது.

 

 

பெரிய சாது சந்யாசிகளுடன் தொடர்புடையது இத்தலம். காஞ்சி காமகோடி பீடத்தின் 25-ஆவது சங்கராசார்யார் இந்த ஊரில் அவதரித்தார்; அஹோபில மடத்தின் மூன்றாவது பட்டத்து அழகிய சிங்கர் இவ்வூரில் சமாதி அடைந்தார்

 

மத்வாசார்யார் தண்ட தீர்த்தத்தை இவ்வூரில் தோற்றுவித்தார். இங்கு நடக்கும் விழாவுக்கு கர்நாடகத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

 

திருமுட்டத்திலும் விருத்தாசலம் சிவன் கோவிலிலும்  வாசல் அருகில் உள்ள சிறிய நாட்டிய சிலைகள் சிதம்பரம் 108 நடன கரணங்களை நினைவு படுத்துவதோடு இரண்டும் ஒரே சிற்பி கட்டியவை என்பதையும் காட்டி நிற்கிறது.

 

நாயக்கர், ஹோய்சாள (புலிகடிமால்) மன்னர்களின் பேராதரவு பெற்ற இக்கோயில் அவர்களுடைய கால கட்டிடக் கலையை காட்டுகின்றன.

 

எல்லா நாயக்கர் கோவில்களிலும் உள்ளதைப் போலவே ஆயிரம் கால் மண்டபம் 16 கால் மண்டபம் ஆகியனவும் உண்டு.

 

வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் சப்த மாதர் சந்நிதியும், அரச மரமும் குழந்தைப் பேறு இல்லாதோருக்கு வரமளிக்கும் இடமாகக் காட்சி தருகிறது.

 

வானளாவிய கோபுரத்தின் ஏழு நிலை மாடங்களும் ஒன்பது கலசங்களும் வண்ணச் சிலைகளும் வருவோரை ‘வா வா’ என்று அழைப்பது போல உள்ளது.

 

புருஷசூக்த மண்டபம் எனப்படும் 16 கால் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் யாளியும் மெருகூட்டுகின்றன.

 

இங்கு செல்லுவோர் ஆற அமர இருந்து சிலைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்க்க வேண்டும். வாசலில் சதுரம் சதுரமான கட்டங்களில் உள்ள நடன மாதர் கோலங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க வேண்டும்.

 

இங்குள்ள மூலவரின் சிறப்பு– அது சாளக்கிராமத்தினால் ஆன ஸ்வயம்பு என்பதாகும்

ஸ்வயம்பூ என்றால் – மனிதனால் செதுக்கப்படாத- ‘தான் தோன்றி’ என்று பொருள்.

சாளக்கிராமம் என்பது கடல் வாழ் உயிரினங்களின் வடிவம் பதிந்த கல் படிமங்கள் (fossils) ஆகும். இவை பல கோடி ஆண்டுகள் பழமை உடைத்து என்பதும் இதனால் பூமியின் வரலாறு துலங்கும் என்பதும் விஞ்ஞானம் படித்தோருக்கு விளங்கும்

கடல் வாழ் உயிரினங்களான சங்கு நத்தை முதலியவற்றின் சின்னங்களைத் திருமாலின் சங்கு சக்கரத்துடன் பக்தர்கள் ஒப்பிடுவர். இயற்கையிலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இறைமையைக் காண்பது இந்து மதத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற மஹத்தான தத்துவம்.

 

கோரைக் கிழங்கால் செய்யப்பட்ட லட்டு இந்தக் கோவிலின் சிறப்புப் பிரசாதம்- ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விநோதமான, சிறப்பான பிரசாதம்-  இருப்பது இந்து மதக் கோவில்களின் சிறப்பு அம்சம்.

 

விருத்தாசலம் அருகில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் விழாக் காலத்தில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆண்டு தோறும் திருவிழாக் காலத்தில் சுவாமி எழுந்தருளி ஒரு மசூதியின் முன் நிற்கும்போது அவர்களும் மரியாதை செய்யும் சிறப்புடைத்து; இது ஆற்காட்டு நவாப் காலத்தில் துவங்கியது.

ஆண்டாள் சந்நிதி, உடையவர் சந்நிதி ஆகியன வைஷ்ணவர்கள் கொண்டாடும் சிறப்பு பெற்றவை.

இந்த ஊரில் ராமர், சிவன் கோவில்களும் உஅள.

 

திருமுட்டம் / ஸ்ரீமுஷ்ணம் என்றால் என்ன?

 

கேரளத்தில் ஒரு திருமுட்டம் கோவில் உளது; சபரிமலையில் திருமுட்டம் என்ற சொல் உளது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் முஷ்ணம் இல்லை; ஆகவே முற்றம்= முட்டம்= என்பதே முஷ்ணம் ஆயிற்றோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

 

சபரி மலையில் புனித முற்றம் (open, sacred court yard) உள்ள பகுதியை திரு முட்டம் என்பர்.

 

முற்றம்:– ஒரு கட்டிடம் அல்லது வீட்டுக்குள் இருக்கும் திறந்த வெளிப்பகுதி முற்றம் எனப்படும்.

 

 

–Subham–

வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்! (Post No.4834)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 16-24

 

Post No. 4834

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்!

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார கலெக்டருக்கும் முஸ்லீம் ஆட்சியாளருக்கும் மேலும் இருவருக்கும் இராம பிரான் காட்சி கொடுத்தது பற்றி இதே பிளாக்-கில் எழுதினேன்; அவற்றில் ஏரி காத்த இராமபிரான் கதையை மட்டும் மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.

 

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதும் காலம் இது. கொட்டாம்பட்டி சுப்பையா நியூயார்க் செல்லாமலேயே மற்றவர் எழுதியதை தனது பெயரில் போட்டு எழுதலாம்; மலையனூர் மாடசாமி ஜப்பானின் ப்யூஜியாமா எரிமலை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவருக்கு ஜப்பான் எங்கு இருக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கலாம். அப்படித்தான் நானும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் மதுராந்தக சோழன் எழுப்பிய ஏரியின் கரை மீதுள்ள கோதண்ட ராமன் பற்றி, புத்தகத்தில் படித்ததை எழுதினேன்; அது முதற்கொண்டு அங்கு நேரில் சென்று தரிசிக்க ஆவல் கொண்டேன். அந்த ஆசை மார்ச் 7, 2018-ல் நிறைவேறியது.

 

அர்ச்சகர் ஆராவமுதன் எங்களுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்கத்திலுள்ள பிளேஸ் துரை கல்வெட்டையும் பார்த்துச் செல்லுங்கள் என்றார். அப்படியே செய்தோம். பிளேஸ் துரை புதுப்பித்த சீதையின் (ஜனகவல்லி) சந்நிதியையும் தரிசித்தோம். அத்தோடு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலையும் அங்கு வரையப்பட்ட தற்கால ஓவியங்களையும் படம் எடுத்தோம். கோவிலில் இருந்த முரசையும் கண்டோம்.

சென்னையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள இந்த ஊர் அனைவரும் காண வேண்டிய ஊர். ராமர் கோவிலாலும், மாபெரும் ஏரியாலும் புகழ் அடைந்த ஊர்.

 

இந்த ஸ்தலத்துக்கு இன்னும் ஒரு பெருமையும் உண்டு; ராமானுஜர் இங்கே பஞ்ச சம்ஸ்காரம் எனும் வைணவச் சடங்கைச் செய்து இராமானுஜராக ஆனது இங்குதான்.

கீழேயுள்ளது  மூன்றாண்டுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

கட்டுரை எண்:-    1951

Written by London swaminathan

Date: 24 June 2015

Uploaded in London at 9-32 காலை

தென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:

கதை 1

செங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் (Colonel Lionel Place Durai) என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.

அர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அ டிக்கடி ஏரிக்கரை உடைகிறது? என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

ஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தார். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.

இதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.

((மற்ற மூன்று கதைகளை எனது பிளாக்-கில் காண்க))

 

 

 

Anjaneya pictures are from the Hanuman Temple opposite the main shrine.

–subham–

 

நெற்றிக் கண் ! சூடான தோசை ! சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில்! (Post No.4830)

Written by London Swaminathan 

 

 

Date: 19 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-21 am

 

Post No. 4830

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கோவில் என்றவுடன் கடவுளின்  பெயர், சந்நிதிகள், சிலைகள் என்று வருணிக்கத் துவங்கி விடுவர். எனது அணுகு முறை வேறு: முதலில் ‘புல்லட் பாயிண்ட்ஸ்’- பின்னர் விரிவான விளக்கம்; நானும் என் தம்பியும் மார்ச்  முதல்வாரத்தில் சிங்கப் பெருமாள் கோவில் பெருமாளைச் சேவித்தோம். இதோ முதலில் அதிசய மற்றும் சுவையான செய்திகள்:

This is not the main shrine; outside the temple.

1.நெற்றிக் கண் பார்க்கலாம்!

2.அதிசய அழிஞ்சில் மரம் காணலாம் (முந்தைய கட்டுரையில் காண்க)

  1. சூடான தோசைப் பிரஸாதம் சாப்பிடலாம்

4.பாரீஸ் நகர லவ்வர்ஸ் லாக் LOVERS LOCKS போல இங்கே பிராப்ளம் லாக்

PROBLEM LOCK சுவாமிக்கு சார்த்தலாம்

5.நரசிம்மர் சிலையின் மேல் சூரிய ஒளி விழுவதை சில மாதங்களில் காணலாம்

 

தலைப்புச் செய்திகளைக் கொடுத்துவிட்டேன் இனிமேல் விரிவான செய்திகள்:

 

சிங்கப் பெருமாள் கோவில் காஞ்சீபுர மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நரசிம்மர், பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். பாடலாத்ரி என்றால் சிவப்பு மலை. ஜாபாலி முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்..

 

இங்கு ஒவ்வொரு முறை தீபாரதனை காட்டும் போதும், பட்டர் அவர்கள், நரசிம்மரின் நெற்றிக் கண்ணைக் காட்டுகிறார்.சிவ பெருமானுக்கே உள்ள இந்த அம்சத்தை இங்கே காணலாம் ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்றவுடன் கோபத்துடன் வந்த கோலம் இது. நரசிம்மாவதாரம், பத்து அவதாரங்களில் ஒன்று.

 

பேயாழ்வாரால் பாடப்பட்ட தலம்; 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று; இது சுமார் 1500 ஆண்டுப் பழமை வாய்ந்த பல்லவ குடைவரைக் கோவில்; ஒரு சிறிய குன்றின்மீது கோவில் அமைந்துள்ளது.

 

நரசிம்மப் பெருமாளைத் தரிசித்துவிட்டு கோவிலை வலம் வரும்போது, சூடான தோசைப் பிரசாதம் கிடைக்கும். விலை பத்து ரூபாய்; புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் விற்கிறார்கள். எங்கள் மதுரை அழகர் கோவில் அடை அளவுக்கு ருசி இல்லாவிடினும், பசிக்கு உதவும் அருமருந்து இது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அழிஞ்சில் மரத்தைக் காணலாம். இது பற்றிய அற்புதச் செய்திகளை ஆதி சங்கரரின் சிவானந்தலஹரி மூலமும் ஆண்டாளின் நாச்சியார் மொழி மூலமும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

 

கோவிலுக்கு வெளியே வந்தால் ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது; அங்கே பூட்டுகளாகத் தொங்கு கின்றன. பாரீஸிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் ஆற்றுப் பாலங்கள் தோறும் பூட்டப்பட்ட பூட்டுகளும் அதன் மேல் காதலன்–காதலி பெயர்களும் இருக்கும்; இதன் தாத்பர்யம் என்னவென்றால் அந்த ஜோடி பூட்டு போல இணைந்திருக்குமாம் ( பூட்டைப் பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்குள், ஜோடிப்புறாவில் ஒன்று பறந்துபோனாலும் அதிசயமில்லை!!!)

நரசிம்மப் பெருமாள் கோவிலில் ஏன் இப்படிப் பூட்டு போடுகிறார்கள் என்று வினவியபோது கிடைத்த விடையில், பிரச்சினைகள் உள்ளோர் அது தீரும் வரை இப்படிப் பூட்டுப் போட்டு வைத்திருப்பராம்; பிரச்சனை தீர்ந்த பின்னர் அதை எடுத்துவிடுவராம்.

ஆண்டுதோறும் சில மாதங்களுக்கு நரசிம்ம மூர்த்தி மீது சூரிய ஒளி படுவதும் கோவிலின் சிறப்பு.

 

சாது சந்யாசிகள்

இந்தக் கோவிலுடன் இணைத்துப் பேசப்படும் முனிவர் ஜாபாலி என்பவர் ஆகும். ராமாயணத்தில் ஒரு ஜாபாலி உண்டு. ஆயினும் அவர்தான் இவர் என்று சொல்வதற்கில்லை. சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் கூட வால்மீகி உண்டு; அவர் ராமாயணம் எழுதிய வால்மீகி இல்லை. ஏனெனில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்துக்கு பல ஆயிரம் ஆண்டு முன்னர் நடந்தது ராமாயணம். அவர் ராமனின் சமகால முனிவர்.

 

எந்த ஆண்மகனின் வெற்றிக்கும் பின்னால்  ஒரு பெண் உண்டு- There is a woman behind every man’s success என்று சொல்லுவர்.

அது உண்மையோ இல்லையோ எந்தக் கோவிலின் மஹிமைக்கும் பின்னால் ஒரு முனிவர் அல்லது சித்தர் அல்லது ரிஷி உண்டு There is a Rishi or Saint behind every Hindu Temple என்பது உண்மையே; இந்தக் கோவிலில் ஜாபாலி முனிவர் தொடர்பு இருப்பது போல சித்தர்கள் சமாதி உள்ள கோவில்களும் முனிவர் தொடர்புள்ள கோவில்களும் தன ஆகர்ஷணமும்  (பணம்) ஜன ஆகர்ஷணமும் (மக்கள் கூட்டம்) உடைத்தாய் இருக்கின்றன.

((யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு))

Lovers’ Locks in Seine River Bridge, Paris, France

 

–சுபம், சுபம்–

 

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

Picture from Guruji Gopalavallidasar post.

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 am

 

Post No. 4827

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

உலக சைவ சித்தாந்த மஹாநாட்டில் கலந்துகொண்டு பேச வந்த அழைப்பினை ஏற்று மார்ச் 2018 முதல் வாரம் சென்னை சென்றேன். இடையிடையே எனது தம்பியுடன் க்ஷேத்ராடனம் செய்தேன்; பார்க்காத கோவில்களைப் பார்க்க ஆவல் கொண்டேன். சென்னைக்கு அருகில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். பல அதிசயங்களைக் கண்டேன். ஒரு அதிசயம் பற்றி இக்கட்டுரையில் கதைக்கிறேன்.

 

அழிஞ்சில் மரம் என்பது ஒரு அதிசய மரமாகக் கருதப்படுகிறது. இது பற்றி ஆதி சங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் இது காணப்படுகிறது. இந்த அதிசய மரத்தை சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மரை வலம் வரும் இடத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

 

மந்திரத்தால் மாமரம் வளருமா? என்பார்கள்; பெரியவாச்சான் பிள்ளை எழுதிய பேருரையில் இது பற்றி வியப்பான தகவலைத் தருகிறார்.

 

நாச்சியார் திருமொழி– நாலாம் திருமொழி– நாலாம் பாட்டு ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட’– என்று துவங்கும்.

இதன் உரையில் காணும் விஷயத்தின் சுருக்கம் இதோ:-

கடம்ப மரம், காளியன் எனும் பாம்பு கக்கிய விஷத்தில் எரிந்து கருகியது. கண்ணன் காலடி பட்டவுடன் பூத்துக் குலுங்கியது. இது எப்படி சாத்தியம்? அட, விஷ்ணுவின் பாதம் எப்போதும் அமிர்தம் சுரப்பதால் இது நடக்கvமுடியாதா? ராமன் கால் பட்டவுடன் கல்லாகக் இருந்த அஹல்யா, அழகிய பெண்மணியாக எழுந்திருக்கவில்லையா?

“அங்கோலத் தைலம் தடவப்பட்ட மாம்பழக் கொட்டையைத் தரையில் நட்டால், அப்போதே முளைத்துப் பெரிய மரமாய் சாய்த்துப் பழுக்கும் என்று சொல்லும்போது, விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அமுதம் வெள்ளமிடுகிறது — என்று வேதத்தால் சொல்லப்பட்ட பெருமானுடைய  திருவடி பட்டு பட்ட மரம் தளிர்க்கச் சொல்ல வேண்டுமோ?

 

 

அங்கோல மரம்= அழிஞ்சில் மரம்

 

அழிஞ்சில் மரத்தின் பழங்கள் அம்மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும்; வானில் மின்னல் மின்னினால், அக்கணத்திலேயே அப்பழம் மரத்திலே பழையபடி ஓட்டிக் கொள்ளும்; அக்கணத்தில் அப்பழத்தை எடுத்து வந்து தைலமாக்கி (எண்ணை ஆக்கி)  ஒரு மாங்கொட்டையில் தடவி தரையில் நட , அப்போதே முளைத்துப் பெரிய  செடியாகி காய்த்துப் பழுக்கும் என்பர்……………………”

 

இவ்வாறு உரைகாரர்கள் சொல்லுகின்றனர்.

 

ஆண்டாளுக்கும் முன்னர் அவதரித்த உலக மஹா தத்துவ ஞானி ஆதிசங்கரர் பக்த்திக்குச் சொல்லும் ஐந்து இலக்கணங்களில் அங்கோல மர விதைகளும் ஒன்று ஆகும்.

 

(ஆதி சங்கரர் கி.மு.வில் இருந்தவர் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்னதற்கு நான் தமிழ் இலக்கிய சான்றுகளை அளித்து ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளேன்; இதே பிளாக்கில் படித்து இன்புறுக)

சிவானந்த லஹரியின் 61-ஆவது ஸ்லோகம்

‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி’ —- என்று துவங்கும். இதன் பொருளாவது:

உண்மையான பக்த்தி என்பதற்கு ஐந்து உதாரணங்கள் உள்ளன; ஈஸ்வரனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு- அங்கோல மரமும் அதன் விதைகளும், காந்தமும் இரும்பு ஊசியும், கற்புக்கரசியும் அவளது கணவனும், மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும், ஆறுகளும் கடலும் போலும் இணைந்து இருக்கும்.

 

இதற்கு பாஷ்யம் எழுதியோர் அங்கோல/ அழிஞ்சில் மரத்தின் அற்புத குணத்தை விளக்கியுள்ளனர். அங்கோல மர விதைகள் கீழே விழுந்தவுடன், மரத்தின் மீது  ஏறிச் சென்று ஒட்டிக்கொள்ளும் என்று.

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த நம்பிக்கையை விஞ்ஞான முறையில் ஆராய்வது நலம் பயக்கும்..

சிங்கப் பெருமாள் கோவில் பிரஹாரத்தில் மரத்தை ஒட்டி சுவரில் எழுதப்பட்ட அறிவிப்பு– இந்த மரத்தின் மீது ஆடையிலிருந்து ஒரு நூலைப் போடுவோருக்கு அறிவு வளரும்; மணம் முடிக்காதவர்கள் விரைவில் கல்யாணம் செய்வர்; குழந்தை இல்லாதவர் விரைவில் குழந்தை பெறுவர் என்று செப்புகிறது.

 

மருத்துவ நூல்களோவெனில் இதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை முதலிய மருத்துவ குணங்களை வருணிக்கிறது.

எப்படியாகிலும் இது ஒரு அதிசய மரமே.

அடுத்த முறை சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நரசிம்மருடன் மரத்தையும் கண்டு களிக்க.

 

சிங்கப் பெருமாள் கோவிலின் நெற்றிக் கண் நரசிம்மர், சூடான மிளகு தோசை, நரசிம்மர் பூட்டு, சில் மாதங்களில் பெருமாள் மீது விழும் சூரிய ஒளி ஆகியன பற்றி அடுத்த கட்டுரையில் நுவல்கிறேன்.

இதுவரை இயம்பி யவற்றை நினைவிற் போற்றுக.

 

சுபம் சுபம்

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்! (Post No.4826)

Date: MARCH 18, 2018

 

 

Time uploaded in London- 5-27 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4826

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

BY ச.நாகராஜன்

சுமார் 25 ஆண்டுகள் இருக்கலாம், பெல்ஜியத்திற்கு அலுவலக விஷயமாகச் செல்ல நேர்ந்தது.

ரோஸலேர் என்று ஒரு அழகிய சிற்றூர். அங்கு சென்றேன்.

எங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்த படி நண்பர் ஒருவர் தங்குமிடம் உள்ளிட்டவற்றை அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

அவருக்கு ஒரு ஆசை – என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று.

அழைத்தார். எதற்கு அவருக்கு சிரமம் என்று மறுத்தேன்.

வற்புறுத்தினார். சம்மதித்தேன்.

எனது சக நண்பர்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றோம்.

இரவு சுமார் ஏழரை மணி.

வீட்டில் மணியை அடித்தார். கதவைத் திறந்தது அவர் மனைவி.

எங்களை நண்பர் அறிமுகப்படுத்த அவர் புன்னகையுடன் வரவேற்றார்.

 

ஒரு நிமிடம் தான், அவசரம் அவசரமாக உள்ளே ஓடினார்.

பிறகு சுமார் 30 நிமிடங்கள் ஓடின.

நண்பருக்கும் எம்பராஸ்மெண்ட்.

ஏதேதோ பேசினோம்.

30 நிமிடங்களுக்குப் பின்னர் அவசரம் அவசரமாக உள்ளேயிருந்து வந்தவர் மன்னிப்புக் கேட்டார்.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு டி.வி. சீரியல்.

 

 

சில மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தது அன்று முடிவுக்கு வந்தது.

 

அதைப் பார்க்க உள்ளே போனேன்.மன்னிக்கவும் என்றார்.

“மன்னிப்பே கேட்க வேண்டாம்.எங்கள் வீட்டுப் பெண்மணிகளும் கூட இப்படித்தான்.போன் வந்தால் கட் பண்ணி விடுவார்கள்.

அரை மணி நேரம் கழித்துக் கூப்பிட்டு ஒரு மணி நேரம் பேசுவார்கள். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அம்மா, பெண்ணும் கூட இப்படித்தான்.“ என்றேன்.

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

பிறகு நல்ல உணவைப் பரிமாறினார்.

விடை பெற்றோம்.

நல்ல அனுபவம் இது!

 

உலகெங்கும் டி.வி.சீரியல்களின் தாக்கம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் போலும்!

 

தமிழ் டி.வி. சீரியல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். விருப்பமில்லாவிட்டால் கூட அதன் சில சீன்கள் என் பார்வையில் திணிக்கப்படும்.

 

எப்படி ஒருவரை கொலை செய்வது? கேஸைத் திறந்து விட்டு.. தலைகாணியை வைத்து அமுக்கி. பல்வேறு விஷங்களைப் பல்வேறு விதமாக ஜூஸில் கலந்து…

எப்படி ஒருவரை உபத்திரவப் படுத்துவது?

பல்வேறு உபாயங்களைக் கையாண்டு கை கால்களை உடைப்பது, கடத்துவது, காட்டு பங்களாவில் அல்லது பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்து அடிப்பது, மிரட்டுவது…

போலீஸ் கேஸ்களில் தவறாக மாட்டி விடுவது.. இத்யாதி, இத்யாதி.

 

கேவலமான சீன்கள் முடிவில்லாமல் தொடர்கதையாக நீளும்.

இப்படி ஒரு சீரியல் மட்டும் இல்லை, ஏராளமான சீரியல்கள்!

காலை முதல் இரவு 10.30 வரை இப்படி சீரியல்களின் தொடர்ச்சிகள். எல்லாம் இப்படித் தான்!

இதைப் பார்க்கும் நம் வீட்டுப் பெண்மணிகள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்?

 

 

நெகடிவ் எண்ணங்களினால் மூழ்கடிக்கப்பட்டு “நாசமாய்ப் போவதற்கு”த் தயாராகத் தானே வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் மரணக்காட்சிகள், நல்ல நாட்களில் கோரமான கொலைகள் . – இப்படிப் பார்த்தால் வாழ்க்கை எப்படி நன்கு அமையும்?

 

 

சீரியல் எபிசோட்களை அமைப்பவர்கள் எப்படி நல்ல வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியும்?

கர்ம பலன் விடாது. லட்சக் கணக்கானோருக்கு தீய காட்சிகளை இடைவிடாது காண்பிக்கக் காரணமான இவர்கள் எப்படி நலமுடன் வாழ முடியும்?

 

பெரிய பெரிய நிறுவனங்கள் – தொலைக்காட்சித் தொடர்களை அளிப்பவர்கள் – அதன் பொறுப்பாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

 

தேவன் எழுதாத நாவல்களா?

கல்கியின் கதாநாயக, நாயகியர் அனுபவிக்காத அவஸ்தைகளா?

சமூகப் பொறுப்புடன் எழுதிய நல்ல எழுத்தாளர்கள் அல்லவா இவர்கள்?

ராஜாஜி சமூகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு போகும் படி எழுத வேண்டுமென்று எழுத்தாளர்களுக்கு அறிவுரை பகன்றார்.

காஞ்சி பரமாசார்யாள் எழுத்தாளர்களுக்கு மாபெரும் பொறுப்பு உண்டென்றும், அவர்களின் பேனா முனையிலிருந்து வருபவை நல்லதையே எழுத வேண்டுமென்றும் அறிவுரை அருளினார்.

இன்றைய தமிழ் டி.வி. சீரியல்கள் மெல்லக் கொல்லும் விஷங்கள்!

 

 

இவற்றிலிருந்து விடுபட்டவர்கள் பாக்கியசாலிகளே!

வேலைக்குப் போகும் பெண்மணிகள் சற்று பிழைத்தவர்க்ளே என்று சொல்லலாம்!

 

 

மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்லல், நல்ல பாடல்களை, கீர்த்தனைகளை இசைத்தல், அர்த்தமுள்ள அரட்டை அடித்தால் – இவையெல்லாம் எங்கு போயின?

 

 

நமது பெண்மணிகள் சற்று யோசிக்க வேண்டும்.

மெல்லக் கொல்லும் விஷங்கள் உங்களைக் கொல்ல்த் தயார்

உஷார், உஷார், தப்பித்துக் கொள்ளுங்கள்!

***

உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (Post No.4821)

Written by London Swaminathan 

 

Date: 16 MARCH 2018

 

Time uploaded in London – 5-50 am

 

Post No. 4821

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழ்ப் பழமொழிகளும் சாணக்கிய நீதியும்

 

இருபதாயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. இந்தப் பழமொழிகளில் பல, பாரதம் முழுதும் உள. அவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இமயம் முதல் குமரி வரை நம்பிக்கைகள் ஒன்றே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

 

இதோ! 2300 ஆண்டுப் பழமையான சாணக்கிய நீதியின் ஸ்லோகங்களும் இணையான பழமொழிகளும்

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே என்பது தமிழ்ப் பழமொழி.

முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே- என்று அப்பர் பெருமான் தேவாரம் நாலாம் திருமுறையில் பாடுகிறார். புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேல் A bird in hand is better than two in the bush என்பது ஆங்கிலப் பழமொழி. ‘உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா’ என்றும் ‘கையில் வெண்ணை இருக்க நெய்யிற்கு அலைவானேன்’ என்றும், ‘உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு புறங்கையை நக்கினாற் போல’ என்றும் தமிழில் செப்புவர்.

 

 

யோ த்ருவாணி பரித்யஜ்ய ஹ்யத்ருவம் பரிஷேவதே

த்ருவாணி தஸ்ய நஸ்யதி ஹ்யத்ருவம் நஷ்டமேவ ஹி

 

-சாணக்கிய நீதி 1-13

பொருள்:

உறுதியான ஒன்றை விட்டு விட்டு உறுதியற்ற- நிச்சயமற்ற- பொருளை நாடுபவன், இருக்கும் ஒன்றையும் இழந்து விடுவான்; இல்லாத பொருள் கிடைக்காது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்.

xxx

சிறு துளி பெரு வெள்ளம்

ஜல பிந்து நிபாதேன க்ரமசஹ பூர்யதே கடஹ

ஸ ஹேதுஹு ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச

12-21

பொருள்:

“சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்தாலும் ஒரு பானை நிரம்பி விடும்.  இதுதான் மிகப் பெரிய ரஹஸியம் — செல்வம் சேர்வதும் இப்படித்தான், தர்மம் வளருவதும் இப்படித்தான்”.

 

எதிலுமே சிறுகச் சிறுக சேர்வது பின்னர் பெரும் கடல் போலப் பெருகிவிடும். பல ஓடைகளின் நீர் சேர்ந்து, நதிகளாகப் பெருகி சமுத்திரத்தை உண்டாக்குகின்றன. இயற்கையும் கூட நமக்கு கற்பிப்பது இந்த ரஹஸியமே!

xxx

 

மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled)  என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. பகவத் கீதையில் கண்ண பிரானும் ‘பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ பொது மக்களும் அதையே செய்வர் (3-21) என்று சொல்லுவார்.

 

சாணக்கியன் நுவல்வதும் அஃதே!

ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா  பாபே பாபாஹா ஸமே ஸமாஹா

ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7

 

பொருள்

அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7

 

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்

 

xxx

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு – என்று பாடினான் சொற்தேரின் சாரதியாம் பாரதி.

 

ஒற்றுமையே உயர்வு என்பதற்குப் பல கதைகளை பஞ்ச தந்திரம் ‘மித்ர பேதம்’ என்னும் பிரிவில் எடுத்துரைக்கும்

 

சாணக்கியன் மொழிவதும் அஃதே!

பஹூனாம் சைவ ஸத்வானாம் ஸமவாயோ ரிபுஞ்ஜயஹ

வர்ஷதாஅதரோ மேகஸ்த்ருணரபி நிதார்யதே

14-4

 

பல கைகள் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை வென்று விடலாம்; வைக்கோலைச் சேர்த்துக் கட்டிய பாயும் பெரு மழையைத் தடுக்கவில்லையா!

 

xxx

 

குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு

குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் மனைவியையும் அடிக்கும் குடிகாரனை எல்லோரும் கண்டித்தவுடன் நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியம் என்பான்; ஆனால் மறு நாளே குடிக்கச் செல்லுவான். குடி போதையில் இருக்கும் போது மனைவியைப் பார்த்து உனக்கு தங்கச் சங்கிலி, வைர நெக்லஸ் வாங்கித் தருவேன் என்பான். காலையில் எழுந்தவுடன் — குடி போதை தெளிந்தவுடன் கதையே மாறிவிடும்.

 

இதே போலத்தான் ஸ்மசான வைராக்யம்– சுடுகாட்டு சபதம்-

 

யாராவது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தவுடன், அடடா! வாழ்க்கையே அநித்யமானது- உடனே நல்லது செய்துவிட வேண்டும்- கெட்ட வழியில் செல்லக்கூடாது- செல்ல மாட்டேன் என்று மனைதுக்குள் சபதம் செய்வர். பத்து நாள் சென்ற பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்து விடுவர். இதை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் – உள்ளிப்பூண்டு வைத்த பாத்திரத்துடன் ஒப்பிடுவார். அந்த வாடை என்றுமே போகாது

 

இதோ சாணக்கியன் சொல்

 

தர்மாக்யானே ஸ்மசானே ச ரோகிணாம் யா மதிர்பவேத்

ஸ ஸர்வதைவ திஷ்டேச்சேத் கோ ந முச்யேத் பந்தனாத்

14-6

 

பொருள்

ஒரு சமயச் சொற்பொழிவினைக் கேட்கும் நோயாளி மனதில் ஓடும் எண்ணங்களும், சுடுகாட்டில் இரங்கல் தெரிவிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களும் நிலையாக மனதில் தங்கிவிட்டால் எல்லோரும் பற்றற்றான் பற்றினைப் பற்றிவிடுவரே! பந்தங்கள் அறுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்துக்குச் சென்று விடுவது எளிதாகி விடுமே!

 

xxx

 

விநாச காலே விபரீத புத்தி

விதி கெட்டுப் போனால்

மதி கெட்டுப் போகும்

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

 

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் என்னும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

–Subham—

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

 

 

Part 2 க்ராஸ் டாக்கில் உதயமானது அர்த்தமுள்ள இந்துமதம் (Post No.4820)

Date: MARCH 16,  2018

 

 

Time uploaded in London- 3-45 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4820

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

க்ராஸ் டாக்கில் உதயமானது கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்; ராஜாஜியின் தூண்டுதலால் உதித்தது கடைசிப் பக்கம்! -2

 

Part-1 was posted on 14th March, 2018

 

ச.நாகராஜன்

 

கல்கியின் உதவி ஆசிரியர் ரா.வீழிநாதன் மிகுந்த தயக்கத்துடன் கவிஞரின் இல்லம் சென்றார். அங்கு அவரது உதவியாளர் இராம.கண்ணப்பனைச் சந்தித்தார்.

 

“கல்கியின் சார்பாகக் கவிஞரைச் சந்திக்க வேண்டும். அவர் கல்கியில் எழுதுவதற்குச் சம்மதிப்பாரா?” என்றும் கேட்டார்.

“கவிஞரோ குழந்தை உள்ளம் கொண்டவர். நீங்கள் தாராளமாக அவரைச் சந்திக்கலாம்” என்றார் கண்ணப்பன்.

சந்திப்பு நிகழ்ந்தது.

 

மறுநாள் மாலையில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் அவர்களை கவிதா ஹோட்டல் மண்டப்பத்திற்குக் கூட்டி வந்தார்.

கடைசிப் பக்கம் என்ற தலைப்பில் வாரந்தோறும் எழுத கவிஞர் ஒப்புக் கொண்டார்.

 

கடைசிப் பக்கம் கல்கியில் வாசிக்கப்படும் முதல் பக்கமாக ஆனது.

 

அர்த்தமுள்ள இந்துமதம் எதையெல்லாம் தெரிவித்ததோ அதை கடைசிப் பக்கமும் தெரிவித்தது.

 

இதில் அவ்வப்பொழுது அருமையான கவிதைகள் வேறு.

பின்னர் கடைசிப் பக்கம் முதல் பக்கம் ஆனது.

பின்னர் கல்கியில் ஏதோ ஒரு பக்கத்தில் கவிஞரின் எழுத்துக்கள் இடம் பெற்றன. வாசகர்கள் அமோகமாக கவிஞரின் எழுத்துக்களை வரவேற்றுப் படித்தனர்.

 

அன்பார்ந்த நேயர்களுக்கு என்ற தனது பகுதியில் கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் 1976ஆம் ஆண்டு ஒரு கல்கி இதழில் இப்படி எழுதினார்:

 

“கண்ணதாசனைப் பொறுத்தவரை அவர் தமது பேனாவைச் செங்கோலோச்சித் தமிழை இலக்கிய உலகில் அரியாசனத்தில் அமர்த்தி விடும் ஆற்றல் வாய்ந்தவர் என்பது பற்றி யாருக்கும் ஐயமிராது. தமிழை அவர் ஆள்கிறாரா தமிழ் அவரை ஆள்கிறதா என்று புரியாத அளவுக்கு இன்றைய தமிழகத்தின் மிகச் சிறந்த சிந்தனையாளருள் ஒருவரான கண்ணதாசன் எழுத்தில் எழில் கொஞ்சுகிறது; நடையில் நயம் மிகுந்திருக்கிறது. ஆத்ம திருப்தி இல்லாமல் வருவாயைக் கருதி மட்டுமே அவர் சிலவற்றை எழுதியிருக்கலாம். அவரே அதை ஒப்புக் கொள்வார். ஆனால் தமிழுக்கு அவர் அளித்திருக்கும் சிறப்புக்கள் இதனை நாம் மறந்து விடச் செய்கின்றன.”

 

பின்னர் “சேரமான் காதலி” தொடரை அவர் எழுத ஒப்புக் கொண்டமையை அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

இப்படியாக ராஜாஜியின் தூண்டுதலால் கல்கியின் நல்ல தொடர்பு கவிஞருக்குக் கிடைத்தது.

 

அதை ஒட்டு மொத்த தமிழர்களும் வரவேற்றனர்.

க்ராஸ் டாக்கும் நன்மை பயக்கும்; ராஜாஜி போன்ற பெரியோரின் நுட்பமான கவனமும் தமிழுக்கு நலம் தரும் என்பதை அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் கடைசிப் பக்கம் ஆகியவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்.

 

–Subham–

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! (Post No.4819)

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 16-22

 

Post No. 4819

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

 

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

 

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

 

என்று தமிழ்ப் பெரும் சித்தர் சிவவாக்கியர் பாடினார். இது 2300 ஆண்டுகளாகப் பாரதத்தின் தென் குமரி முதல் வட இமயம் வரை நிலவிய கருத்து என்பது சாணக்கிய நீதியைப் படித்தோருக்கு விளங்கும்.

சாணக்கியன் சொல்கிறான்,

படந்தி சதுரோ வேதான் தர்மசாஸ்த்ராண்யனேகசஹ

ஆத்மானம் நைவ ஜானதி தர்வீ பாகரஸம் யதா

 

மக்கள் நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் படித்தும் தன்னை அறியும் அறிவில்லாவிடில் என்ன பயன்? சுவையான உணவைப் பரிமாறும் கரண்டிக்கு அந்த உணவின் சுவை தெரியுமா?

–சாணக்கிய நீதி 16-12

 

 

சாணக்கியன் சொல்லும் மரபியல் விஞ்ஞானம்

சாணக்கியன் உலக மஹா அறிவாளி; அலெக்ஸாண்டர் காலத்தில் வாழ்ந்தவன்; 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் மரபியல் பற்றிப் பேசுகிறான்; கருவிலேயே திரு உற்றதாக நாயன்மார்கள் பாடினர்; மாணிக்க வாசகரோவெனில் திருவாசகத்தில் ஒரு கருவின் பத்து மாத வளர்ச்சியைப் பாடினார்.

 

சாணக்கியன் பகர்வதாவது,

 

கருவில் இருக்கும்போதே கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரணம்.

என்ன அதிசயம்!

இதைப் பார்க்கையில் ஜோதிடம் உண்மையே என்பது விளங்கும்.

 

இந்துக்கள் குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னர் குடும்ப ஜோதிடர் மூலம் ஜாதகத்தை எழுதி வாங்குவர்; அதில் அவர் அக்குழந்தையின் படிப்பு, ஆயுள், வேலை, செல்வ வளம் முதலியன குறித்து எழுதி விடுகிறார். இது 2300 ஆண்டுகளாக இருப்பது சாணக்கிய நீதி மூலம் தெரிகிறது:–

ஆயுஹு கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச

பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யதே கர்பஸ்தஸ்யைவ தேஹினஹ

4-1

 

ஒரு தாயின் கரு பத்து மாத வளர்ச்சியில் நோக்கும் ஆபத்துகளை போற்றித் திரு அகவல் என்னும் திருவாசகப்   பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார். அவர் தேவாரம் அருளிய மூவர்க்கும் முதல்வர்.

 

 

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

  1. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
  2. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
  3. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

–சுபம்–