ஏனடி கோபம் என் மேல்? சம்ஸ்கிருதச் செல்வம் (Post No.4242)

Written by S.NAGARAJAN

 

Date: 25 September 2017

 

Time uploaded in London- 5-18 am

 

Post No. 4242

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

ஏனடி கோபம் என் மேல்! கவர்ச்சிப் பாவையே!! – ஒரு காதலனின் புலம்பல்!!!

 

ச.நாகராஜன்

 

காதலன் ஒருவன் தவிக்கிறான். ஏனெனில் அவனது காதலி திடீரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்.

கோபம்.ஏனென்று தான் தெரியவில்லை.

அவனோ இன்னொரு பெண்ணை வார்த்தையால் கூடத் தொட்டதில்லை.

அவனது புலம்பல் கவிதையாக மலர்கிறது.

சார்தூலவிகிரிதிதா சந்தத்தில் அமைந்த அழகிய கவிதை இது:

 

 

உக்தம் துர்வசனம் மயா ந சுபகே ஹாஸ்யேபி துக்கப்ரதம்

த்யக்த்வா ஸ்வாமபி மாஷிதைரபி மயா நான்யாங்கனா லாலிதாI

ஸ்வாமேகாமனவத்யம் பூஷணபரை: சம்பாவயாமி த்வயா

ஹே! நிஷ்காரணகோபனே வ்த க்ருத: கிமர்த்தம் மயி II

 

 

கவிதையின் பொருள் இது தான்:

 

வலியைத் தரும் சுடுசொல் ஒன்றைக் கூட ஒருபொழுதும் நான் பேசியதில்லை;

ஓ! கவர்ச்சிப் பாவையே!

 

விளையாட்டாகக் கூடப் பேசியதில்லையே!

நீ இல்லாத போதும் கூட எந்த ஒரு பெண்ணையும் வார்த்தைகளினால் கூட நான் தொட்டதில்லை!

குற்றமற்ற குணங்களென்னும் செல்வத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன்னை நான் போற்றுகிறேன்.

 

ஓ!அன்பே!

எந்த விதக் காரணமும் இன்றி என் மீது கோபம் கொண்டிருக்கிறாயே,

என்னிடம் நீ ஏன் கோபம் கொண்டிருக்கிறாய் என்று சொல்லேன்.

 

அருமையான இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் தருகிறார் திரு ஏ.ஏ,ஆர் (A.A.R. – A.A.Ramanathan)

 

Never have I spoken a harsh word which may give pain,

Oh, Charming one, Even during jokes;

Even in your absence no other girl was carassed by me even in words;

I honour you alone adorned with a wealth of faultless merits;

Oh, Dear who get angry for no cause,

Tell me why you are angry with me.

 

**

இன்னொரு கவிதை

தன் விருப்பத்திற்குகந்த காதலியை எப்படி அணுக வேண்டும்.

யோசனை தருகிறார் ஒரு கவிஞர் இப்படி:

 

உக்தம் தே ருதிரேணாஹம் ஸ்ப்ருஷ்டம் தே மஸ்தகம் மயா I

இத்யேதாஞ் சபதான் க்ருத்வா சா வை கம்யா புன:புன: II

 

விதவிருத்தம் என்ற சந்தத்தில் அமைந்த கவிதை இது.

பொருள்:

 

 

“உனது ரத்தத்தால் நனைக்கப்பட்டவன் நான். உனது தலை என்னால் வருடப்பட்ட ஒன்று” என்று இப்படி உறுதி மொழிகள் சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் நெருக்கமாக அவளை அணுக வேண்டும்.

 

 

“I have been wetted by your blood, your head has been touched (fondled)by me” – swearing words such as these, she must be approached closedly again and again.

(Translation by A.A.Ramanathan)

 

சம்ஸ்கிருதத்தில் காதல் கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உள்ளன.

சம்ஸ்கிருதத்தை –

வேத மொழி என்பர் சிலர்;

தெய்வ மொழி என்பர் சிலர்.

வித்தக ஞான மொழி என்பர் சிலர்.

ராஜ நீதி மொழி என்பர் சிலர்

இசை மொழி என்பர் சிலர்.

புராண இதிஹாஸ தர்ம சாஸ்திர மொழி என்பர் சிலர்.

கம்ப்யூட்டருக்கான மொழி என்பர் சிலர்.

ஆனால் மேலே உள்ளது போன்ற கவிதைகளைப் படிப்போர்

சரஸ சல்லாப மொழி என்பர்.

 

எல்லாம் சரி தான்.

 

சம்ஸ்ருதம் அறிவோம்! சுகமாய் வாழ்வோம்!!

****

 

கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா? கோழி பற்றிய பழமொழிகள் (Post No.4240)

Compiled by London Swaminathan

 

Date: 24 September 2017

 

Time uploaded in London-  6-21 AM

 

Post No. 4240

 

Pictures are taken from various sources; thanks.

 

1.கோழி அடிக்கிறதுக்கு குறுந்தடியா?

2.கோழி களவு போக ஆடுவெட்டிப் பொங்கல் இடுகிறதா?

3.கோழி கறுப்பானால் அதன் முட்டையும் கறுப்பா?

4.கோழி கறுப்போ சிவப்போ அதன் முட்டை வெள்ளைதானே?

5.கோழி கூப்பிட்டு விடிகிறதா? நாய் குலைத்து விடிகிறதா?

6.கோழி கூவிப் பொழுது விடிந்தது

7.கோழி கொடுத்துக் குரலும் அழுகிறதா?

8.கோழிக்கறி என்றதும் கொண்டாடிக் கொண்டதும்,கீரைத் தண்டாணம் அடா சுப்பா கீரைத் தண்டாணம் அடா!

9.கோழிக் கறி கொடுத்து குயில் கறி வாங்கினாற் போல

10.கோழிக் காய்ச்சலும் குண்டன் காய்ச்சலும் விடாது

11.கோழிக் குஞ்சுக்குப் பால் கொடுத்தது போல

12.கோழி சிறகால் குஞ்சுகளைக் காப்பது போல

13.கோழி தட்டிக் கூவுமா?

14.கோழி திருடியும் கூடிக் குலாவுகிறாள்

15.கோழி தின்ற கள்ளனுடன் கூடி நின்று உலாவுகிறான்

 

16.கோழி போனதும் அல்லாமல் குரலும் போச்சுது

17.கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

18.கோழி முடத்துக்குக் கடா வெட்டி காவு கொடுக்கிறதா?

19.கோழி முடத்துக்கு கடா வெட்டிப் பலியிட்டது போல

20.கோழி முட்டைக்குத் தலையுமில்லை, கோயிலாண்டிக்கு முறையுமில்லை

 

21.கோழி முட்டைக்கு மயிர் பிடுங்குதல்

22.கோழியின் காலில் கச்சையைக் கட்டினாலும் குப்பையைச் சீக்கும்

23.கோழியைக் கேட்டோ ஆணம் காய்ச்சுகிறது?

24.குப்பையும் கோழியும் போலக் குருவும் சீடனும்

25.குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கினது போல

26.பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?

27.பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா?

28.ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம்

 

ஒவ்வொரு பழமொழியையும் ஆழ்ந்து படித்தால், தொட்டனைத்து ஊறும் மணற்கேணி போல, புதுப்புது பொருள்கள் புலப்படும்!

இது தவிர, உங்களுக்குத் தெரிந்த கோழி, சேவல் பற்றிய பழமொழிகளை, கருத்துப் பதிவு செய்யும் (Comments Column) இடத்தில் பதிவு செய்தால் தமிழ் கூறும் நல்லுலகம் உங்களுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கும்.

—Subham–

 

31 quotations of Friendship (Post No.4238)

OCTOBER 2017 GOOD THOUGHTS CALENDAR
Compiled by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  14-17

 

Post No. 4238

 

Pictures are taken from various sources; thanks.

 

Festival Days: Oct.1-MUHARAM, 2 GANDHI JAYANTHI, 5- VALMIKI JAYANTHI, 18/19- DEEPAVALI, 25- SKANDHA SASHTI.

EKADASI -1, 15, FULL MOON- 5, NEW MOON- 19

AUSPICIOUS DAYS- 27, 30

OCTOBER 1 SUNDAY

Friendship with those whose minds are not open-hearted sours to enmity – Kalidasa’s Sakuntala 5-24

 

OCTOBER 2 MONDAY

Imbibe only the merits of a companion and never the demerits- KR 186

 

OCTOBER 3 TUESDAY

Befriending a cruel serpent tantamount to extinction of the frog community– Panchatantra

 

OCTOBER 4 WEDNESDAY

Abusive language spells the death knell of friendship – Panchatantra 5-72

OCTOBER 5 THURSDAY

Live up to the words of a friend –Satopadupadesa prabandha

OCTOBER 6 FRIDAY

Do not disrespect a friend’s words – Sakunatalam ,first act

 

OCTOBER 7 SATURDAY

A friend indeed is a friend in need -Panchatantra 2-115

 

OCTOBER 8 SUNDAY

Better cordiality with a helpful foe than with a faithless friend – Hitopadesam 4-16

 

OCTOBER 9 MONDAY

Friendship begets help, and an enemy is known by disservice – Valmiki Ramayana 4-8-21

 

OCTOBER 10 TUESDAY

The pure hearted strike friendship at first sight –Yogavasistha 3-78-35

OCTOBER 11 WEDNESDAY

When sad or glad, a friend alone is a sanctuary – – Valmiki Ramayana

 

OCTOBER 12 THURSDAY

Ever avoid a foolish friend – Sushasitavali

 

OCTOBER 13 FRIDAY

The one with a companion achieves his objects-  Panchatantra 2-26

 

OCTOBER 14 SATURDAY

A traitor of a friend is the worst of men – Mahabharata

 

OCTOBER 15 SUNDAY

A friend who is angry without justification does create anxiety -– Valmiki Ramayana 15-32-6

OCTOBER 16 MONDAY

Elephants do not ever befriend foxes – Kiratarjuniya 14-2

 

OCTOBER 17 TUESDAY

Betraying friends never yields prosperity – Jataka mala

 

OCTOBER 18 WEDNESDAY

Friends alone do not make for joy nor enemies alone for sorrow- Mahabharata

 

OCTOBER 19 THURSDAY

 

The sin of betraying a friend is erased not even in a hundred births- BKM

 

OCTOBER 20 FRIDAY

It is declared that comradeship of the noble commences with seven steps walked together – Panchatantra 2-47, Rig Veda, Sangam Tamil Literature

OCTOBER 21 SATURDAY

Friends and foes originate only in transactions – Hitopadesam 1-72

 

OCTOBER 22 SUNDAY

Friendship- easy to build, difficult to sustain – Valmiki Ramayana 4-32-7

 

OCTOBER 23 MONDAY

Friendship blooms between those of the same loom and gloom – Panchatantra 1-285

 

OCTOBER 24 TUESDAY

Bond with those of the same melancholy – Satopadesaprabandha

 

OCTOBER 25 WEDNESDAY

Proximity, though it be to the inanimate, leads to companionship- Valmiki Ramayana 2-8-28

OCTOBER 26 THURSDAY

Enemies scorch when they meet and friends too when they depart -SRB 3-110

 

OCTOBER 27 FRIDAY

Attachment to friends makes prosperity, not so with women! Katha sarit Sagara

 

OCTOBER 28 SATURDAY

Comradeship occurs in communion – Valmiki Ramayana 4-127-47

 

OCTOBER 29 SUNDAY

In prosperity, all are one’s friends -Kahavatratnakar

 

OCTOBER 30 MONDAY

Share your grief with your buddies – Satopadesaprabhandha

OCTOBER 31 TUESDAY

He is friend who sees you through woe – Panchatantra 1-341

xxx

Source – Suktisudha, Chinmaya International Foundation, Ernakulam, Kerala, 2010

For original Sanskrit sentences, please see the book.

 

–SUBHAM–

 

பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220)

Written by London Swaminathan

 

Date: 17 September 2017

 

Time uploaded in London- 6-56 am

 

Post No. 4220

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பெண்களை தாயார் ஸ்தானத்தில் வைக்கும்போது அவர்களை இந்து மதம் புகழ்வது போல வேறு எந்த மதமும் புகழ்வதில்லை; தமிழ் சம்ஸ்கிருத நூல்களில் கண்டது போல வேறு எங்கும் கண்டதில்லை. மனு தர்ம சாஸ்திரமோ பெண்களை உச்சானிக்  கொம்பில் வைத்து போற்றுகிறது. அவர்கள் அழுதால் அந்தக் குடும்பம் அல்லது அதற்குக்  காரணமானவர் வேருடன் சாய்வர் என்று எச்சரிக்கிறார் மனு. பெண்களுக்கு நகை நட்டுகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்க வேண்டும் என்றும் உலகிற்கு புத்திமதி சொல்கிறார். சுத்த மான இடங்கள் எவை என்பதை பட்டியலிடுகையில் பெண்களின் வாய் எப்போதும் சுத்தமானது என்றும் சொல்லுகிறார் மனு (எனது பழைய கட்டுரைகளில் ஸ்லோக எண்களுடன்  மேல் விவரம் காண்க)

 

மேல் நாட்டு இலக்கியங்களில் பெண்களின் அழகை வருணிப்பர்; அவர்களைத் தூற்றுவர். ஆங்கில  மஹா கவி ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களிலும் இதைக் காணலாம்; கம்பனிலும் இதைக் காணலாம். நீதி வெண்பாவிலும் இதைக் காணலாம்; திருக்குறளிலும் இதைப் படிக்கலாம்.

 

ஆனால் தாய், சஹோதரி என்ற நிலையில் நாம் புகழ்வோம்; மேல்நாட்டு இலக்கியங்களில் அப்படி இல்லை!

 

அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:

 

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்

கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே

கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ

மானார் விழியார் மனம்.

 

பொருள்:

பித்தரே= பெண் மயக்கம் கொண்ட பித்தர்களே; பைத்தியக்காரர்களே!

 

அரு = பார்ப்பதற்கு அருமையான

அத்தி மலரும் = அத்திப் பூவும்

காக்கை வெண்ணிறமும் = காக்கையின் வெள்ளை நிறமும்

கத்து புனல் மீன் பதமும் = ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும்

கண்டாலும் = ஒருக்கால் பார்க்க இயன்றாலும்

(பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது)

(நாம் மட்டும் அல்ல)

கான் ஆர் தெரியல் கடவுளரும் = மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்

மான் ஆர் விழியார் மனம் = மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெ ண்களின் நெஞ்சத்தைக் காண்பரோ = காண்பார்களோ?

(அவர்களும் காண மாட்டார்)

 

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

 

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

 

ரிக் வேதத்தில் ஊர்வசிக்கும் (10-95) புரூருவசுக்கும் இடையே நடை பெறும் அற்புதமான உரையாடல் உளது; அதில் ஊர்வசி சொல்கிறாள்

 

வேண்டாம்; புரூருவஸ், இறந்து விடாதே, றைந்து விடாதே. கெட்ட ஓநாய்கள் உன்னை விழுங்கிவிடக் கூடாது.

 

பெண்களுடன் நிரந்தர நட்பு என்று எதுவுமே கிடையாது; பெண்களின் இதயம் புலியின் (கழுதைப் புலி) இதயம் போன்றது.

 

ஷேக்ஸ்பியர் சொன்ன அதே சொற்கள்!

Nay, do not die Puruvas, nor vanish;

let not the evil-omened wolves devour thee.

With women, there can be no lasting friendship; hearts of the hyenas are the hearts of women.

RV 10-95-15

கம்பன், வள்ளுவன், வேத கால ரிஷி, ஷேக்ஸ்பியர் ஆகியோர் எச்சரிக்கும் அழகே தனி! ஒப்பிட்டு மகிழ்க!

 

My Old Article:

  1. பெண்களின்எதிரி | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பெண்களின்…

Posts about பெண்களின் … பெண்களின் எதிரியா? … கம்பன், …

 

 

 

TAGS: பெண் மனம், புலியின் இதயம், ஷேக்ஸ்பியர், ரிக்வேதம், நீதி வெண்பா

 

–Subham–

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்! (Post No.4216)

Written  by S.NAGARAJAN

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 5-56 am

 

Post No. 4216

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகள் உள்ளன.

 

இவற்றை விடுவிப்பதில் அனைவருக்கும் ஒரு ஆனந்தம்.

இரு கவிதைகளை மட்டும் இங்குக் காண்போம்.

 

உரசி முரமித: கா காடமாலிங்கிதாஸ்தே

  சரஸிஜமகரந்தாமோதிதா நந்தனே கா I

கிரிசமலகுவர்ணைரனர்வாக்யாதிசங்க்யைர்

  குருமிரபி க்ருதா கா சந்தஸாம் வ்ருதிரஸ்தி II

 

 

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற சுபாஷிதத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கவிதை இது.

இதன் பொருள்:

கிருஷ்ணரின் மார்பில் அவரை ஆரத் தழுவி இருப்பது யார்?

மாலினி! (1)

 

நந்தனா தோட்டத்தில் தாமரைகளின் மது யாருக்கு வழங்கப்பட்டது?

மாலினி! (2)

 

பெரிய மலைகளின் எண்ணிக்கையால் குற்றோசை உடைய அசைகளாலும், கடல்களின் எண்ணிக்கையால் நெடிலோசை நிறைந்த அசைகளாலும் எந்த சந்தம் இருக்கிறது?

மாலினி! (3)

 

 

  1. மலர் மாலை
  2. ஆகாய கங்கை அல்லது ஒரு பூக்காரி
  3. மாலினி என்ற சந்தம்

ஆங்கிலத்தில் இந்தக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை A.A.R. இப்படி வழங்குகிறார்:

Who remains on the chest of Krishna embracing him tightly? (Malini 1)

Who is rendered fragrant by the honey of lotuses in the Nandana garden?

(Malini 2)

With short syllables of the number of the great mountains and with long ones of the number of seas, which metre is made up? (Malini 3)

  1. Flower – garland
  2. A female florist or heavenly Ganga
  3. Malini metre.

*

உபௌ ரம்பாஸ்தம்பாவுபரி விபரீதௌ கமலயோஸ்

    ததங்கர்வே ரத்னாஷ்மஸ்தலமய துரூஹம் கிமதி தத் I

தத: கும்போ பஸ்சாத் பிஸகிஸலயே கந்தலமயோ

    ததன்விந்தாவிந்தீவரமதுகரா: கிம் புனரிதம் II

 

 

பகதத்தரின் சுக்திமுக்தாவளியில் உள்ள கவிதை இது.

இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி

இதன் பொருள்:

இரண்டு தாமரை மலர்களின் மேல் (2) இரு வாழைத் தண்டுகள் (1) வெவ்வேறு விதமாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மேலே ரத்தினக் கல்லென்னும் அகலமான பிரதேச்ம் உள்ளது.(3)

 

 

பிறகு அதன் நுண்ணிய தன்மையால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒன்று இருக்கிறது. (4)

பின்னர் இரு கலசங்கள் உள்ளன. (5)

அதன் பிறகு அடுத்து இரு வாழைத்தண்டுகள் உள்ளன.(6)

பின்னர் மிருதுவான குருத்து (7)சந்திரனுடன் (8)வருகிறது.

அதன் மேல் இரு நீல அல்லி மலர்கள் உள்ளன. (9)

அத்துடம் தேனீக் கூட்டம் (10) வேறு உள்ளது.

இது என்ன? (11)

 

 

  1. தொடைகள்
  2. பாதங்கள்
  3. ப்ருஷ்ட பாகம்
  4. மெல்லிய இடை
  5. மார்பகம்
  6. கைகள்
  7. கழுத்து
  8. முகம்
  9. இரு கண்கள்
  10. கூந்தல்
  11. அழகிய பெண்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கீழே காணலாம்: (மொழியாக்கம் A.A.R)

Two banana –stems (1) placed differently  over two lotuses (2) , above these there is the broad region of a gem-slab  (3), and then something (4) which is difficult to guess (due to smallness), then are the two pots (5), and next come two stalks (6), then the tende sprout (7), with the moon (8) over which are two blue lilies (9) and a swarm of bees (10) – What can this be (11)  – Translation by A.A.R.

 

 

  1. Thighs
  2. Feet
  3. Hips
  4. Thin waist
  5. Bosom
  6. Hands
  7. Neck
  8. Face
  9. Eyes
  10. Tresses
  11. A (beautiful woman)

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான புதிர்க் கவிதைகளை ரசிப்பது ஒரு வாழ்நாள் இலக்கிய அனுபவமாகவே இருக்கும்.

இன்னும் சிலவற்றைப் பின்னர் காண்போம்.

***

 

புலவர்கள் பல விதம்! (Post No.4210)

Written  by S.NAGARAJAN

 

Date: 14 September 2017

 

Time uploaded in London-5-01 am

 

Post No. 4210

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தனிப்பாடல்களில் புலவர்கள்

புலவர்கள் பல விதம்!

 

ச.நாகராஜன்

 

புலவர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

 

பாண்டிய மன்னன் ஒருவன் புலவர்களைப் பற்றிப் பாடியதாகப் பழம் பெரும் பாடல் ஒன்று உள்ளது.

 

போற்றினும் போற்றுவர்  பொருள்கொ டாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே

 

எமனை விட மோசமானவர்கள் புலவர்கள் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லும் பாண்டிய மன்னன் அதற்கான காரணங்களையும் வரிசையாக அடுக்கி விட்டார்.

தூக்கி வைத்தால் ஒரேயடியாக இந்திரன் சந்திரன் என்று புகழ்வர்.

கையிலே காசு தரவில்லை எனில் கீழே போட்டு மிதித்துத் தாழ்த்தி விடுவர். சொன்ன சொற்களை நிலைமைக்குத் தகுந்த மாதிரி மாற்றினும் மாற்றுவர். இவர்களிட்ம் மாட்டிக் கொண்டால் ஒருவன் படும் பாடு – எமனே தேவலை!

 

இதைச் சோழ மன்னன் ஒருவன் பாடியதாகவும் பரம்ப்ரைக் கதை கூறும்.

 

இராமச் சந்திரக் கவிராயர் என்று ஒரு கவிஞர். அவரது அனுபவமோ இதற்கு நேர் எதிர்.

ஒரு கஞ்சனிடம் அவர் சென்று சேர்ந்தார். அவர் அனுபவத்தை ஒரு பாடலிலேயே கூறி விட்டார் இப்படி:-

 

கல்லாத ஒருவனை நான் கற்றா யென்றேன்

    காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

   போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்

மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை

     வழங்காத கையனை நான் வள்ள லேயென்றேன்

இல்லாது சொன்னேனுனக் கில்லை யென்றான்

      யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே!

 

 

 

நான் கல்வி அறிவில்லாத ஒருவனைக் கல்விமானே என்று புகழ்ந்தேன். காட்டை வெட்டுகின்ற மறவனை நாட்டை ஆள்பவனே என்று புகழ்ந்தேன். பொல்லாதவன் ஒருவனை நல்லவனே என்றேன். யுத்தத்திற்கே செல்லாத ஒருவனை புலியே என்றேன். சுருங்கித் திகைந்த தோள்களை உடையவனை மற்போர் செய்வதற்கு உரிய தோள் என்றேன்.யாருக்கும் ஒன்றும் கொடாத கைகளை உடையவனை வள்ளலே என்றென்.

 

இவ்வாறு இல்லாத குணங்களைச் சொன்ன உனக்கு இல்லை என்றான் அவன்.

நானும் நான் செய்த பிழையால் பேசாமல் செல்கின்றேன்.

சரி தானே!

 

தத்துவப் பிரகாசர் என்று ஒரு புலவர்.

தன்னைப் பற்றி விரிவாக அவர் குறிப்பிடுகிறார் மூன்று பாடல்களில்.

நினைவு கவி சொல்வோமெனச் சொலிப் பலகவிதை

      நினைவினைத் திருடி வையோம்

நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று

       நீள்வசைகள் பாட வறியோம்

பினையிளைய நாவல ருடன்பங்கு பேசிப்பிர

     பந்தங்கள் பாடிக் கொடோம்

பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய

      பேய்க்கிரந் தங்கள்  பேசோம்

 

இனிமைதரு பூருவத் துக்குருக் களைமறந்

        தெங்கணுந் தீட்சை யேற்கோம்

இட்டவொரு பேர்மாற்றி மாதமொரு பேரிட்

  டிடப்பெறோ மிறுமாந் திரோம்

தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்கணெஞ்

   சமுமுருகு கவிபா டுவோம்

சமணூல் களைப்பொரு ளெனக்கொளோந் திருஞான

    சம்பந்த ரடியர் நாமே

 

பாம்புகடி த்தாலதுவு நீக்க வல்லோம்

   பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்

வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்

    விற்ல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்

சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்

   தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை

தீம்பரைநல்ல் வராக்கிக் குணமுண் டாக்குந்

       திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே   

 

தத்துவப் பிரகாசர் மிகத் தெளிவாகத் தன் இயற்கை இயல்புகளைக் கூறி விட்டார்.

திருஞான சம்பந்தரின் அடியாராகிய் அவர் தேவாரம் தவிர வேறு

பேய்க் கிரந்தங்களை ஓத மாட்டார். சமணரின் நூல்களைப் படிக்க மாட்டார். மனிதர்களைப் பாட மாட்டார். பல கவிதைகளை உடனடியாகப் பாடுவதாகக் கூறி நினைவில் வைத்திருக்கும் கவிதைகளைத் திருட்டுக் கவிதைகளாகக் கூற மாட்டார். ஊருக்கு ஒரு பெயர் வைத்து ஏமாற்ற மாட்டார்.

அவரின் திறமைகளோ எல்லையற்ற ஒன்று. பாம்பு கடித்தால் அந்த விஷத்தை இறக்க வல்லவர். பிசாசு பிடித்தால் அதைப் போக்க வல்லவர். வேம்பு போலக் கசப்பாக இருந்தாலும அதை நீக்கிச் சுவையான் கறி படைக்க வல்லவர். மதம் பிடித்த யானையைக் கூட அடக்க வல்லவர். இறக்கும் போது கூடத் திடமாக பயப்படாமல் பேச வல்லவர். அவர் கற்காத கலைகள் ஒன்றுமே இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட அறிவாளிக்கும் முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

 

தீயவர்களை நல்லவராக்கி அவரை குணவான்களாக ஆக்கும் திறமை மட்டும் அவருக்கு இல்லை. அதனால் அவர் திகைக்கின்றார்.

 

புலவர்கள் பல விதம்.

எப்படியும் பாடும் புலவர்களைக் கண்டு பாண்டிய மன்னனுக்குப் பயம். எப்படிப் புகழ்ந்தாலும் மசியாத கஞ்சனைப் பாடி நொந்து போன கவிஞருக்கு அப்படிப்பட்டவர்களைக் கண்டால் பயம். எதையும் சாதிக்க வல்ல இன்னொரு கவிஞருக்கோ தீயவர்களைக் கண்டால் பயம். அவர்களை நல்லவராக்கும் திறம் மட்டும் அவருக்கு இல்லை!

 

 

அதாவது வல்லவன் யாராக இருந்தாலும் அவர்கள் தீமையே உருவாக இருப்பவரைத் திருத்தல் அரிது.

ஒவ்வொரு புலவரையும் பற்றி அறியும் போது சுவையான தகவல்கள் பல வருகின்றன.

அனைவரையும் படித்தால் நமக்குத் தான் ஆதாயம்!

 

 

ஆதாரம் : தனிச் செய்யுள் சிந்தாமணி மற்றும் தனிப்பாடல் திரட்டு ஆகிய நூல்கள்

 

(இவற்றில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளில் ஐந்தை மட்டும் மேலே பார்த்தோம்.)

***

 

கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்! (Post No.4207)

Written  by S.NAGARAJAN

 

Date: 13 September 2017

 

Time uploaded in London-5-14 am

 

Post No. 4207

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!

 

ச.நாகராஜன்

 

வள்ளுவரின் காமத்துப் பாலில் தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள் இது:

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம் இம்மூன்றும் உடைத்து      (குறள் 1085)

 

உயிரை எடுக்க வருவதால் யமனோ?

கூர்மையாகப் பார்ப்பதால் கண்ணோ?

மருண்டு பார்ப்பதால் மானோ?

இம்மூன்றின் தன்மையும் இப்பெண்ணின் கண்களில் உள்ளன.

 

பெண்களின் கண்களுக்குள்ள சக்தியை வள்ளுவர் அழகுற வர்ணித்து விட்டார் ஒரே குறளில்.

அழகிய பெண் ஒருத்தியைப் பார்க்கிறார் புலவர் ஒருவர்.

அவள் கண்ணழகில் அசந்து போகிறார்.

விளைவு ஒரு பாடல்.

பாடியவர் நமச்சிவாயப் புலவர்.

பாடல் இது தான்:

 

 

மஞ்சுமஞ் சுங்கைப் பரராஜ சேகர மன்னன்வெற்பில்

பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள்பகழி

அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட  லஞ்சுமஞ்சும்

நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே

              (தனிப்பாடல் திரட்டுப் பாடல்)

 

 

சொற்கள் கொஞ்சிக் கொஞ்சி விளையாடும் இப்பாடலின் பொருளைப் பார்ப்போமா:

 

மஞ்சும் – மேகமும்

அஞ்சும் – அஞ்சும்படியான

கை –  கொடைக் கையினை உடைய

பரராஜ சேகர மன்னன் வெற்பில் – பரராஜ சேகரன் என்னும் அரசனது மலையில் உள்ள

பஞ்சும் – செம்பஞ்சும்

அஞ்சும் – அஞ்சும்படியான

பதம் – பாதங்களை உடைய

பாவை நல்லாய் – பிரதிமை போன்ற பெண்ணே

படை – சேனையை உடை

வேள் – மன்மனது

 

பகழி அஞ்சும் அஞ்சும் – பாணங்களும் அஞ்சும் அஞ்சும்

கயல் அஞ்சும் அஞ்சும் – சேல் மீன்களும் அஞ்சும் அஞ்சும்

கடல் அஞ்சும் அஞ்சும் – கடலும் அஞ்சும் அஞ்சும்

நஞ்சும் அஞ்சும் – விஷமும் அஞ்சும்

உனது நயனங்கள் – உனது கண்கள்

வெற்றி வேலோ – வெற்றி வேல்களோ?!!

 

பாடலில் அஞ்சும் என்ற சொல் ஒன்பது இடங்களில் வருவதோடு மஞ்சு, பஞ்சு, நஞ்சு போன்ற சொற்கள் வேறு இணைந்து வ்ருவதால் சொல்லழகும் பொருளழகும் ஓசை நயமும் கூடி இன்பம் தருகின்றது.

பெண்ணின் கண்ணழகை வர்ணிக்க வந்த புலவரின் பாடலின் சொல்லழகில் சொக்கிப் போகிறோம் நாம்!

***

தாலி பற்றி கம்பன் (Post No.4185)

Written by London Swaminathan

 

Date: 5 September 2017

 

Time uploaded in London- 14-36

 

Post No. 4185

 

Pictures are taken from various sources; thanks.

 

தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:

 

மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற

எண்ணற்கு அரிய ஏனையரை இகலின்  பறித்த தமக்கு இயைந்த

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த

கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம்  இட்டுக் கட்டினார்

-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்

 

அனுமன் வாலில் பிரம்மாஸ்திரம் இருக்கும்போது தீ வைப்பது முறையன்று என்று எண்ணி, அனுமனை பிரம்மாஸ்திரத்தினில் இருந்து விடுவித்தான் இந்திரஜித். அப்போது வரும் பாடல் இது:–

 

பொருள்:

“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த  தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”

இதிலிருந்து தெரிவதென்ன?

 

இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு:

 

அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர்.

 

அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன; ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை.

 

தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும்.

 

தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.

இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது.

 

–சுபம்–

350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்! (Post No.4181)

Written by S.NAGARAJAN

 

Date: 3 September 2017

 

Time uploaded in London- 7-17 am

 

Post No. 4181

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no relationship to the article.

 

 

சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

விஜயதசமியன்று தனது நான்காவது சமாதி நிலையை எய்தியவர். சுமார் 350 ஆண்டுகள் வாழ்ந்தவர். தனது முந்தைய சமாதிகளைத் தனதே என்று கூறி அருளியவர். ஸ்ரீகுழந்தையானந்தரின் வியக்கத்தகும் சரித்திரம் இதோ!

 

350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்!

 

                      ச.நாகராஜன்     

 

குழந்தையானந்தரின் அவதார தோற்றம்

மீனாட்சியின் அருள் விளையாடல்கள் அன்றும் நிகழ்ந்தன, இன்றும் நிகழ்கின்றன, என்றும் நிகழும்.

அவற்றை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கும் பக்தர்கள் அம்பிகையின் செல்லக் குழந்தைகளே!

ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில்  மதுரையில் உலாவி வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.

 

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக் கூறினாள்.

 

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.

இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.

அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.

ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அருள் ஆணை பிறந்தது.

கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.

முதல் சமாதி

குருநாதரிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராமனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.

த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.

இரண்டாவது சமாதி

பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.

ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.

ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.

மூன்றாவது சமாதி    

நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.

பின்னர் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.

நான்காவது சமாதி

மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.

சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. இதனால் குழந்தையானந்தர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்

பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.

இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் நான்காவது சமாதியை அடைந்தார்.

1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். ம்காலிங்க்ம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.

சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.

அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?

அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.

 

மதுரையில் அரசரடி அதிஷ்டானம்

ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.

இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.

அவர் சமாதியின் உள்ளே இருக்கிறார, அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!

முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்

ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.

 

தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.

குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.

பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின் விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.

ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது மதுரை அரசரடி அதிஷ்டானத்தில் அவரை வணங்கி அருள் பெறலாம்!

                                                           ******

(இந்தக் கட்டுரை எங்கள் குடும்ப நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான திரு கே.எஸ்.வி. ரமணி அவர்களால் ஆராய்ந்து எழுதி ஜூன் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள் திவ்ய சரிதம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது – கட்டுரையாளர்)

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி (Post No.4178)

Written by London Swaminathan

 

Date: 1 September 2017

 

Time uploaded in London- 20-50

 

Post No. 4178

 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

எனது பழைய பள்ளிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2017ல் சென்றேன். இதற்கு மு மதுரை சென்றபோதெல்லாம் இருள் சூழ்ந்திருக்கும் அல்லது நான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருபேன்.இப்பொழுது சூரிய பகவான் ஒளிவீச, அதில் அப்பள்ளியில் பணியாற்றிய பாரதியின் சிலை புதுப் பொலிவுடன் மிளிர நல்ல புகைப் படங்கள் எடுத்தேன்.

வீர பாரதி! கம்பீர பாரதி!! எனது பள்ளியில் பாரதி!
இந்தப் படத்தைப் பயன்படுத்துவோர் படம் எடுத்தவர் லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரையும் சேர்த்தால் பாரதியின் பரிபூரண ஆசியைப் பெறுவர்

My brother Suryanarayanan adds

Santanam Suriyanarayanan 1966.sslc படித்த ஆண்டு.பாரதி பேச்சுபோட்டியில்first prize.இந்த சிலை திறப்புவிழா பசுமையாக நினைவில் உள்ளது.அந்த ஆண்டு ,பள்ளிவிழாவில் பாரதியின்,ரா.பி.சேதுப்பிள்ளை வசனம் பேசினேன்.பக்தவத்சலம் எங்களுக்கு பரிசளித்தாா்.thanks for reminding this

 

 

Santanam Suriyanarayanan சிலை திறப்பின்போது மிக அருகில் நின்றிருந்தேன்.thanks to teachers,especially திரு.வி.ஜி.சீனிவாசன்

 

 

ஏதோ ஒரு காரணத்தினால் நான் அன்று (1966) அப்பள்ளிக்குப் போகவில்லை. மதுரைக் கல்லூரியில் சேர்ந்த உற்சாகத்தில் பழைய பள்ளியை மறந்திருக்கலாம்

 

எப்படியாகிலும் எங்கள் தமிழ் குரு வி.ஜி.எஸ்,ஸை நினைவுகூற, இப்பொழுது, ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.

முறுக்கு மீசையும் மொபைல் போனும் : எச்சரிக்கை

 

நான் படித்த, பாரதியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குள் சென்றேன். சிருங்கேரி சங்கராசார்யாரின் அபூர்வ புகைப்படக் கண்காட்சியையும், எனது அருமை பாரதியார் சிலையையும் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர், ஒரு பெரிய போர்டு பளிச்செனத் தென்பட்டது. மொபைல் போன் பற்றி எச்சரிக்கை லண்டனிலுள்ள பள்ளிக் கூடங்களிலும் உள்ள து. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனின் முறுக்கு மீசைக்கும் தடை விதிக்கப்படதைப் பார்த்து ‘’சிரி சிரி’’ என்று சிரித்தேன். எங்கள் காலத்தில் யூனிfஆர்ம் (Uniform) கூடக் கிடையாது. இப்பொழுது எல்லோரும் சீருடையுடன் காணப்பட்டனர்.