வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது! (Post No.4400)

Written by S.NAGARAJAN

 

 

Date: 16 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-27 am

 

 

Post No. 4400

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

 

தமிழ் இன்பம்

25-10-2017 அன்று வெளியான கட்டுரை எண் 4333 – ‘பயறு மிளகான கதை’- கொங்கு மண்டலப் பெருமையைக் கூறும் ஒன்று.

 

வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

 

ச.நாகராஜன்

 

கொங்கு மண்டலம் பல விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட தங்க மண்டலம்.

அந்த வியத்தகு சம்பவங்களில் வெண்மைப் பெண்மணி சம்பவமும் ஒன்று.

அதைப் போற்றி கொங்கு மண்டலப் பெருமைகளில் ஒன்றாக அதையும் தன் கொங்குமண்டல சதகத்தில் சேர்த்துப் பாடியுள்ளார் கார்மேகக் கவிஞர்.

அந்தப் பாடல் வருமாறு:

 

காடையிற் சேடக் குலத்தான் மகள்மெய்க் கழுவறைந்து

மேடையிற் சங்கப் பலகையுண் டாக்கிநல் வேப்பமலர்த்

தோடையும் பாடகக் காங்கேயன் றன்னைச் சுமந்துபெற்று

மாடையு நேர்தெய்வப் பேறுபெற் றாள்கொங்கு மண்டலமே

(கொங்கு மண்டல சதகம் – பாடல் எண் 75)

 

பாடலின் பொருள் :- சேடர் குலத் தலைவனின் மகள், நட்ட கழுவிற் சத்தயம் செய்து, சங்கப் பலகை உண்டாக்கி, வேப்ப மாலை பெற்ற பாடகம் அணிந்த, இளமையனான காங்கேயனைப் பெற்று பெரும் புகழ் பெற்றாள். அவள் இருந்ததும் கொங்கு மண்டலத்திலேயே என்பதாம்.

 

இந்தப் பாடல் சுட்டிக் காட்டும் வரலாறு சுவையான ஒன்று.

காங்கேய நாட்டுக் காடையூரில் கொங்கு வேளாளரில் சேட குலத் தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தப் பெண் குழந்தை பிறவியிலேயே வெண்மையாக இருந்தது. அவள் வளர்ந்து பெரியவள் ஆனாள்.

கீழ்கரைப் பூந்துறை நாட்டுக் கருமாபுரத்திலிருந்து வந்திருந்த பொருளந்தை குலத்து வாலிபன் ஒருவனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள்.

விவாக கால ஒப்பந்தப்படி  காடையூரில் காணி முதலிய உரிமைகளை அந்த வெண்மைப் பெண்ணின் சகோதரர்கள் கொடுக்க மறுத்து விட்டனர்.

 

சபை கூடியது. அந்தச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப் படி, நட்ட கழுவில் அந்த வெண்மைப் பெண்மனி  கையறைந்து சத்தியம் செய்தாள். தன் உரிமைகளை அடைந்தாள்.

அந்தப் பெண்மணியின் குழந்தைக்குக் கல்லி கற்பிப்பதற்காக, சில தேர்ந்த தமிழ்ப் புலவர்களைக் கூட்டி அந்தப் பெண்மணி ஒரு தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினாள்.

 

அந்தப் புலவர்களிடம் தமிழ் கற்ற சிறுவன் பாண்டிய வீரனின் படையில் சேர்ந்தான்.

போருக்குச் சென்ற அவன், பாண்டியன் படைக்கு வெற்றி பெற்றுத் தந்தான்.

 

அதனால் மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவனுக்குக் காங்கேய்ன் என்ற பட்டத்தைத் தந்ததோடு அரச சின்னங்களான மாலை, கொடி ஆகியவற்றைக் கொடுத்துக் கௌரவித்தான்.

இதுமட்டுமல்லாமல் பின்பு இம்முடிக்காங்கேயன் – மன்றாடி என்ற பட்டத்தை இவன் சந்ததியினர் பெற்றனர்.

இப்படிப்பட்ட வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது கொங்கு மண்டலத்தில் தான் என்று வியந்து பாடுகிறார் கவிஞர்.

தமிழரின் வீரத்திற்கும் தமிழ்ப் பற்றிற்கும் கொங்கு மண்டலம் இது போன்ற ஏராளமான சம்பவங்களைச் சான்றாகத் தருகிறது.

***

 

 

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7 (Post No.4385)

Written by S.NAGARAJAN

 

 

Date: 11 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-32 am

 

 

Post No. 4385

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 7

 

ச.நாகராஜன்

10

பாரிஸிலிருந்த தனது தாயாருக்கு அவர் 1845ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள அம்மா, உங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கு பதிலாக கொஞ்சம் மகிழ்ச்சியை நான் கொடுத்திருக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் – எனது எதிர்காலத்தை நான் முற்றிலுமாக தியாகம் செய்தாலொழிய…. லெடர்ஹோஸிடமிருந்து இன்னும் 200 ஃபிராங்குகளை நான் வாங்க வேண்டியிருந்தது. நீங்கள் இப்போது அனுப்பியுள்ள பணத்தை வைத்து ஜனவரி அல்லது பிப்ரவரி வரை ஓட்ட முடியும்” என்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைக் காண்போம்.

TO HIS MOTHER. PARIS, December 23, 1845.

“…instead of taking money from you, my dearest mother, I could have given you some little pleasure. But it was impossible, unless I sacrificed my whole future… I have again had to get 200 francs from Lederhose, and with the money you have just sent shall manage till January or February.”

1847ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று அவர் தன் தாயாருக்கு எழுதுகையில்,எனது லண்டன் அறைகள் பிரமாதமாக இருக்கின்றன.கீழ்த்திசை ஆராய்ச்சியாளரான டாக்டர் ட்ரிஹென்னும் அதே வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அவரை  எனக்கு பாரிஸிலேயே தெரியும். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர் வெளியுறவு இலாகாவில் பணிபுரிந்து வந்தார். இன்னும் பல கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் எனக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர். உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் கொண்டு ஒரு ஓரியண்டல் காலனியையே இங்கு உருவாக்கியுள்ளோம். நல்ல வேடிக்கை பொழுதுபோக்குகளை எங்கள் காஸ்மாபாலிடன் தேநீர் அருந்தும் மாலை நேரங்களில் கொண்டுள்ளோம் என்று எழுதுகிறார்.

கடிதத்தின் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:

TO HIS MOTHER. September 1, 1847.

“My rooms in London are delightful. In the same house lives Dr. Trithen, an orientalist, whom I knew in Paris, and who was once employed in the Office for Foreign Affairs in St. Petersburg. Then there are a great many other orientalists in London, who are mostly living near me, and we form an oriental colony from all parts of the world… We have a good deal of fun at our cosmopolitan tea-evenings.”

அதாவது மாக்ஸ்முல்லர் லண்டனில் ஒருவாறாகசெட்டில் ஆகி விட்டார்.

ஆக கடுமையான பணத்தட்டுப்பாட்டில் இருந்த மாக்ஸ்முல்லருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பெனி மூலம் ஒரு வழி பிறந்தது. மளமளவென்றுஎதையாவது செய்து அவர்களைத் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்.

மனம் போனபடி அவர் வேதங்களின் மொழி பெயர்ப்பைத்தயார்  செய்யலானார்.

தனது மொழி பெயர்ப்பைப் பற்றி அவரே தனது Vedic Hymns”  என்ற புத்தகத்தில், “எனது வேத மொழியாக்கம் ஊகத்திற்கிடமானது (“My translation of the Vedas is conjectural”) என்று கூறியுள்ளார்.

வேதத்திற்கு  பல பொருள்கள் உண்டு. அதை உள்ளுணர்வு பெற்றவர்களே சரியாக அறிய முடியும். வெறும் கற்றுக் குட்டிகளை வைத்து வார்த்தைகளைத் தனக்குத் தோன்றிய பொருளில் அவர்  மொழியாக்கம் செய்தது தவறு.

பல கொள்கைகளை அவர் உருவாக்கினார். ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், வேதத்தின் காலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற கருத்துக்களை அவர் வித்திட்டார்.

இப்படிச் சொன்னதால் அவர்அறிஞராக்கப்பட்டார்.

மிஷனரிகளுக்குத் தேவையான அனைத்து விதைகளும் அவர் தந்து விட்டதால்செடிகளை வளர்ப்பது அவர்களுக்குச் சுலபமானது.

ஆனால் பின்னால் இதே மாக்ஸ்முல்லர் தன் கருத்துக்களைத் திருத்திக் கொள்ள முற்பட்டபோது அதே கிறிஸ்தவ மிஷனரிகளால் கடுமையாக விமரிசிக்கப்பட்டு தாக்கப்பட்டார்.

அதையும் பார்ப்போம்.

                                –தொடரும்

****

உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்! (Post No.4374)

Written by London Swaminathan 

 

Date: 7 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-49 am

 

 

Post No. 4374

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தற்புகழ்ச்சி என்பது ஒரு நோயாகும்; நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த நோய் உண்டு; யாராவது ஒருவர் பேசா மடந்தையாக இருந்தாலோ, அல்லது உங்களைப் பாராமல் இருக்கும் பாராமுகமாக இருந்தாலோ, அவரிடம் போய், ‘அட இந்த சட்டை நன்றாக இருக்கிறதே, இந்தப் புடவை நன்றாக இருக்கிறதே! எங்கே வாங்கினீர்கள்?’ என்று கேளுங்கள்; அவர்கள் முகத்தில் ஆயிரம் செந்தாமரைகள் பூக்கும்; அவர்கள் பேச்சில் மதுரை மல்லிகை மணம் வீசும்; சுவிட்சைத் (switch) தட்டிவிட்டீர்கள்; இனி ஆஃF  (off) செய்ய மெடியாது. ‘அட! முன்னைவிட நீங்கள் இளஞர் ஆகி விட்டீர்களே; பத்து வயது குறைந்தது போல இருக்கிறீர்கள்’ என்று சொல்லுங்கள்; உங்களுக்கு திருநெல்வேலி லாலா கடை அல்வா வாங்கிக் கொடுப்பார். புகழ்ச்சிக்கு மயங்காதோர் உண்டோ?

 

 

இதெல்லாம் கூடத் தடவறில்லை; ஆனால் ஒருவர் தானாக முன்வந்து, தனது சாதனைகளைச் சொல்லுவது அறிவுடைமை அன்று; அது பேதைமையின் முற்றிய தோற்றம் ஆகும்.

 

இதனால்தான் அவ்வையாரும்

 

உடையது விளம்பேல் ( உனக்குள்ள சிறப்பினை நீயே புகழ்ந்து கூறாதே)

வல்லமை பேசேல் (உனது திறமையை நீயே புகழ்ந்து பேசாதே) என்று ஆத்திச் சூடியில் அழகுபடப் பகர்ந்தார்.

வள்ளுவனும் சொன்னான்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை (குறள் 439)

 

பொருள்: தன்னையே புகழாதே; பயனில்லாத செயலைச் செய்யாதே என்பது வள்ளுவன் வாக்கு.

மனு நீதி நவில்வது

 

மனு, தனது மானவ தர்ம சாஸ்திரத்தில், இதைவிட அழகாகாக, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே செப்பிவிட்டார்:-

 

“யாராவது உன்னைப் புகழ்ந்தால் அதை விஷம் போல ஒதுக்கு; யாராவது உன்னைக் குறைகூறினால் அதை அமிர்தம் போலக் கருது (மனு நீதி 2-162)

 

யாராவது குறைகூறி அதை நீ கேட்டால் சந்தோஷமாக உறங்கலாம்; சந்தோஷமாக விழித் தெழலாம்; சந்தோஷமாக நடமாடலாம்; குறை சொன்னவனுக்குத்தான் அழிவு (உனக்கல்ல)- மனு நீதி நூல் 2-16

 

 

கூரம் பாயினும் வீரியம் பேசேல்

–கொன்றை வேந்தன்

(கூர் அம்பாயினும் வீரியம் பேசக் கூடாது; அதாவது உன் கைகளில் கூரிய அம்பு இருந்து, எதிரி கைகளில் ஆயுதம் ஒன்றில்லாவிடினும் செருக்கு கொண்டு அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று புகழ்ந்து கொள்ளாதே)

 

குமரகுருபரரும் நீதி நெறி விளக்கத்தில் உரைப்பார்:

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் – தன்னை

வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்

நயவாமை யன்றே நலம்

 

பொருள்:

தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்று தன்னைத் தானே புகழ்ந்து பேசுதல் தண்ணீரை ஊற்றி விளக்கு எரிப்பதற்குச் சமம் ஆகும்;  இன்பத்தை விரும்பாமல் இருபப்பதல்லவோ இன்பம்;  அது போல தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பதன்றோ நன்மதிப்பு!

அவ்வையார் கதை

அவ்வையாரிடம் ஒரு சிறுவன் சென்றான்; ஒரு கையில் மண்ணை எடுத்துக் கொண்டான்;  பாட்டி என் கையில் எவ்வளவு மண் இருக்கிறது? என்று சொல் பார்ப்போம் என்றான்; அவ்வையார் பதில் சொல்ல முடியாமல், மனதில் மணல் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தார்;  விடை தெரியவில்லை. அட பாட்டி, இது கூடத் தெரியவில்லையா? என் கையில் இருப்பது ‘பிடி மண்’ என்றான். முருகப் பெருமானோ சுட்ட பழம் வேன்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வைப் பாட்டியை திணறடித்தான்; கீழே விழுந்த நாவற் பழங்களை மணல் போக ஊதிக் கொடுத்தால் அது சுட்ட  பழம் என்று அறிவுறுத்தினான்.

 

இதனால்தான் அறநெறிச்சாரத்தில் முனைப்பாடியார் என்பாரும் சொன்னார்:–

 

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்

பொருள்:

அலர்கதிர் ஞாயிற்றை — பரந்த கிரணங்களை உடைய சூரியனையும்

கைக்குடையும் காக்கும்— கையிலுள்ள சிறிய குடையும் மறைத்துவிடும்.

பலகற்றோம் யாமென்று- ஆதாலால் யாம் பல விஷயங்களைக் கற்றுவிட்டோம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக் கூடாது.

 

பலகற்றார்க்

கச்சாணி யன்னதோர் சொல்–  பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்க்கும்  அச்சாணி போன்ற ஒரு சொல்

சில கற்றார் கண்ணும் உளவாம்-  சில நூல்களை மட்டுமே பயின்றோரிடத்தும் உண்டு.

TAGS:–அவ்வையார், மனுநீதி, தற்புகழ்ச்சி, உடையது, வியவற்க

சுபம், சுபம்—

இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று! (Post No.4358)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-58 am

 

 

Post No. 4358

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூ

இது தான் இந்தியா – ஜெஃப்ரி ஃபர்னாலின் அனுபவக் கூற்று!

 

ச.நாகராஜன்

 

 
Jeffery Farnol

 

 

பிரபல ஆங்கில காதல் கதை மன்னரான ஜெஃப்ரி ஃபர்னால் சுவையான காதல் அட்வென்சர் கதைகளை எழுதி உலகைக் கவரந்தவர்.

 

இங்கிலாந்தில் 1878ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி பிறந்த ஃபர்னால் இயல்பாகவே கலை உள்ளம் படைத்தவர். அவருக்குச் சிறு வயது முதலே எழுதும் கலை இயல்பாக வந்தது.

 

 

சார்லஸ் டிக்கன்ஸ், ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் ஆகியோரின் நாவல்களால் அவர் பெரிதும் கவரப்பட்டார்.

பல கவிதைகளையும் கதைகளையும் எழுத ஆரம்பித்தார். அவரது  தி ப்ராட் ஹைவே (The Broad Highway – 1910) என்ற நாவலை அமெரிக்காவில் பதிப்பகங்களுக்கு அனுப்பினார்.ஆனால் அவை அந்த நாவலை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பின.

 

உடனடியாக தனது மாமியாருக்கு அதை அனுப்பினார். அவர் இங்கிலாந்தில் இருந்தார்.இங்கிலாந்தில் அது வெளியிடப்பட்டது. மறு ஆண்டு அமெரிக்கப் பதிப்பாளர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

 

தொடர்ந்து பத்து வருட காலம் முதலிடத்தைப் பிடித்து அந்த நாவல் சாதனை படைத்தது.

 

 

தொடர்ந்து தி அமெச்சூர் ஜெண்டில்மேன் உள்ளிட்ட ஏராளமான ரொமான்ஸ் நாவல்களை அவர் எழுதினார்.

அவர் 1936ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். மர்மமான இந்த தேசத்தைப் பார்த்து வியந்தார். மறுபிறப்பில் அவருக்கு நம்பிக்கை உண்டு.

8-4-1936இல் தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அவர் பேட்டி கொடுத்தார்.

 

அதில் அவர் கூறியது:

 

“India has mystified me. It is more beautiful than I could imagine or dream of. I am charmed by the life of the country, specially the villages, I believe in the Law of Karma, but I do not believe that men can ever be born as animals. It is impertinent for any one visiting India for a few weeks, or even months, to write a book on the life or people of India. This mighty land goes far beyond the understanding of any mere sojourner.”

 

 

“இந்தியா என்னைத் திகைக்க வைத்தது. நான் கற்பனை செய்ததை விட, கனவு கண்டதை விட, அது மிக அழகானது. இந்த நாட்டில் உள்ள வாழ்க்கை முறையால் நான் கவரப்பட்டேன். குறிப்பாக கிராமங்களில் உள்ளோரின் வாழ்க்கை முறையால். எனக்கு கர்ம பலன் கொள்கையில் நம்பிக்கை உண்டு. ஆனால் மனிதன் ஒரு போதும் மிருகமாகப் பிறக்கமுடியாது என்று நம்புகிறேன். சில வாரங்களோ அல்லது, ஏன், சில மாதங்களோ கூட இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகை புரியும் ஒருவர் இங்குள்ள வாழ்க்கை முறை பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ எழுதுவது என்பது பொருத்தமற்றது. தற்காலிகமாக ஊர் சுற்றிப் பார்க்க வரும் ஒருவரது புரிதலுக்கு மிக மிக அப்பாற்பட்டது இந்த பிரம்மாண்டமான தேசம்.”

 

 

‘புரிந்து கொள்ள முடியாத மர்ம தேசமாக இருப்பது இந்தியா’ என்பதை மிக அழகாகப் புரிந்து கொண்ட ஃபர்னால் மன மகிழ்ச்சியுடன் இந்தியாவைச் சுற்றிப் பார்த்தார். மக்களைப் புரிந்து கொண்டார். மறுபிறப்பில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இது போல ஏராளமான அயல் நாட்டவர் வியக்கும் வாழ்க்கை முறை இந்திய வாழ்க்கை  முறை என்பது குறிப்பிடத்தகுந்தது.

***

 

இரண்டு முறை மட்டும் உண்க! வேதம் கட்டளை!! (Post No.4356)

Written by London Swaminathan

 

Date: 1 NOVEMBER 2017

 

Time uploaded in London- 7-17 AM

 

 

Post No. 4356

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத சம்ஹிதைகளை அடுத்து எழுந்த பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்களில் நிறைய தத்துவக் கதைகள் உள்ளன. சில நேரடியாகவும், சில மறைமுகமாகவும் நமக்குப் பல நீதிகளை உணர்த்துவன. தமிழ், கிரேக்கம், லத்தீன் முதலிய பல மொழிகளில் நூல்கள் தோன்றுவதற்கு மிக, மிக, மிக முன்னதாக சம்ஸ்கிருதத்தில் தோன்றிய உரைநடை நூல்கள் இவை.

ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்.

 

தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்துபோன முன்னோர்கள்), அசுரர்கள் ஆகிய அனைவரும் பிரஜாபதியிடம் (பிரம்மா) சென்றனர். “ஐயன்மீர்! நாங்கள் எப்படி வாழ்வேண்டும் என்று அறிவுறுத்தவும்” என்றனர். ஒருவர் பின்னர் ஒருவராக வரிசையாகச் சென்று வினவினர். அவரும் செப்பினார்  :

 

ஆடை அணிந்து வளைந்து நெளிந்து கூனிக் குறுகிய மனிதனே! நீ காலையிலும், மாலையிலும் உண்க.

 

தேவர்களே! யாகத்தில் கிடைக்கும் உணவை மட்டும் உண்க

 

பித்ருக்களே! மாதம் தோறும் ஒரு முறை நிலவு ஒளியில் உண்க

 

மிருகங்களோவெனில் நினனைத்தபோது, கண்டவை எல்லாவற்றையும் உண்ணலாம்.

 

அசுரர்களுக்கு இருட்டையும் மாயையையும் பிரம்மா கொடுத்தார்.

( கண்ட கண்ட நேரங்களில் கண்ட கண்ட வற்றை உண்பவன் மிருகம் என்பது சொல்லாமலே விளங்கும்; மாயையிலும் இருட்டிலும் மூழ்கிக் கிடப்பவர், இனம் புரியாத வஸ்துக்களை உண்பர்; தற்கால குடிகாரர்கள்; போதை மருந்துக்கு அடிமையானோரை ஒப்பிடலாம்;அல்லது பல்லி,தேள், பாம்பு போன்றவற்றை உண்ணும் வர்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து).

மனிதராயினும், தேவராயினும், மிருகமாயினும் — எவரும் இக்கட்டளைகளை மீறக்கூடாது. சில மனிதர்கள் இதை மீறி உண்கிறார்கள்; அவர்கள் அதர்ம வழிகளில் கொழுத்துப் போகிறார்கள். கொழுப்பு என்பது தவற்றினால் வருகிறது. ஆகையால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சாப்பிட வேண்டும்; எவர் ஒருவர் இந்த உண்மையை அறிகிறாரோ, அறிந்தபடி பின்பற்றுகிறாரோ, அவர் முழு வாழ் நாளும் வாழ்வார். அவர் பேசுவதெல்லாம் உண்மையாகிவிடும்;  ஏனெனில் இது தெய்வீக உண்மை– சதபத பிராமணம் 2-4-2-6

 

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

 

 

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

இன்னும் ஒரு குட்டிக்கதை

 

மாதங்கள் ஏன் தெரியுமா ஒன்றை அடுத்து ஒன்றாக , வரிசையாக வருகின்றன? ஏனெனில் பிராமண/ புரோகிதர்கள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வருகின்றனர். அவர்கள் ஒழுங்காக வருகின்றனர்; ஒழுங்காக உள்ளே நுழைகின்றன்ர்; இதனால் மாதங்களும் இப்படி வரும்; ஆகவே ஒருவர் பின்னால் ஒருவர் செல்க; காலடிச் சுவட்டைப் பின்பற்றுக- 3-1-7-11

 

இந்த மந்திரம் ஒழுங்கையும், வரிசைக் கிரமத்தையும் கற்பிக்கும் மந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் அற்புதமான பொன்மொழிகள்!.

 

My Old Articles:-

ஒரு வேளை உண்பான் யோகி | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/ஒரு-வேளை-உண்பா…

15 Nov 2012 – ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே! இருபோது … (ஒருவேளை உண்பான் யோகி, இருவேளைஉண்பான் போகி மூவேளை …

உண்டி சுருக்குதல் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/உண்டி-சுருக்குதல்…

17 Jun 2014 – ((காண்க:– எனது பழைய கட்டுரை; ”ஒருவேளைஉண்பான் யோகி”……கட்டுரை … ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே இருபோது …

 

xxxxx SUBHAM, SUBHAM xxxxxx

 

2 யானை மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி: ஸ்ரீ முத்தையா பாகவதர்! (Post No.4352)

Written by S.NAGARAJAN

 

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 5-19 am

 

 

Post No. 4352

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

இசை இன்பம்

இரண்டு யானைகளின் மீது அமைக்கப்பட்ட மேடையில் கச்சேரி செய்த ஸ்ரீ முத்தையா பாகவதர்!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக்கட்டுரையின் ஆக்கத்திற்கு உதவியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள். அவருக்கு எனது நன்றி. அவரது தந்தையார் திரு ராமசுப்ரமணியன் அவர்களின் பாட்டியும் (அப்பாவின் அம்மா), முத்தையா பாகவதரின் தாயாரும் ஸ்ரீ எஸ். ஜி. கிட்டப்பாவின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள். ஆகவே திரு ராமசுப்பிரமணியனின் சித்தப்பா தான் ஸ்ரீ முத்தையா பாகவதர்.

 

 

Picture of Sri Ramasubramaniam

21-10-2017 அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் அவர் தனது பழைய நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு வயது 97. தெளிவாக நுணுக்கமான விவரங்களை அவர் இடம், தேதி, பெயருடன் தெரிவித்தது ஒரு அபூர்வமான விஷயம். திரு சேஷாத்திரிநாதன் மிகவும் பத்திரமாக வைத்திருந்த ஆவணங்களைப் பார்த்ததோடு அவற்றை உடனடியாக போட்டோ எடுக்க விழைந்தேன். அந்த போட்டோக்களை திரு கார்த்திக் (சேஷாத்திரிநாதனின் புதல்வர்) நேர்த்தியாக எடுத்துத் தந்தார். அவருக்கும் நமது நன்றி.

 

 

2

 

ஸ்ரீ முத்தையா பாகவதர் (பிறப்பு : 15-11-1877 மறைவு : 30-6-1945)

20 ராகங்களை உருவாக்கியவர்.

 

1930ஆம் ஆண்டிலேயே மியூசிக் அகாடமியால் சங்கீத கலாவிதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். ஹரிகதா நிகழ்த்துவதில் வல்லவர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் ஹரிகதை செய்வதைக் கேட்பதற்காக மக்கள் திரள் திரளாகக் கூடுவது வழக்கம். பல வெளிநாடுகளுக்கும் அவர் கப்பலில் செல்வது வழக்கம். சிலோன், பினாங்கு, ரங்கூன் உள்ளிட்ட பல இடங்களில் அவரது நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

 

 

3

மைசூர் மஹாராஜா ஒரு நாள் ஒரு நாதஸ்வர வித்வான் மைசூரில் முத்தையா பாகவதர் இயற்றிய வள்ளி நாயகனே என்ற பாடலை வாசிக்கக் கேட்டார். அப்போது அந்த நாதஸ்வர வித்வான் பாகவதரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் மன்னரிடம் கூற உடனே பாகவதருக்கு மைசூர் வருமாறு மன்னர் அழைப்பு விடுத்தார் மைசூருக்குச் சென்ற பாகவதர் மன்னரின் அன்புக்குப் பாத்திரராய் விளங்கினார்.

அங்கேயே வசித்து வந்தார் அவர். அவர் மறைந்ததும் மைசூரில் தான்.

 

 

அவருக்கு உரிய மரியாதை தருவதற்காக உப்பரிகையில் வீற்று கதை கேட்கும் மன்னர் தனக்குச் சமமான உயரத்தில் அவர் ஆசனம் இருக்க வேண்டும் என்பதற்காக உயரமான பெரிய இரு யானைகளை நிறுத்தி அவற்றிற்கு இடையே மேடையை அமைத்து அதில் முத்தையா பாகவதர் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வது வழக்கம்.

அந்த அளவுக்கு அவர் மைசூர் ராஜாவின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

 

 

அவரது நிகழ்ச்சியால் பெரிதும் கவரப்பட்ட மஹாராஜா அவருக்கு யானைக்குட்டி ஒன்றைப் பரிசாக அளித்தார். அதைத் தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்ற முத்தையா பாகவதரால் அது அடிக்கும் ‘லூட்டியைச் சமாளிக்க முடியவில்லை.

கூடக் கூட்டிச் செல்லும் போது தெரு வீதிகளில் அது ஓடுமாம். மக்கள் மகிழ்ச்சியோடு அந்தக் ‘கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்வராம்.

 

வீட்டிலோ தம்புரா உட்பட்ட அனைத்துமே யானையால் உடைபட்டது.

 

பொறுக்க முடியாத முத்தையா பாகவதர் மன்னரிடம் சென்று அந்த அன்புப் பரிசு அன்புத் தொல்லையாக இருப்பதைத் தெரிவித்து யானைக் குட்டியைத் திருப்பிக் கொடுத்தாராம்.

மைசூர் மன்னர் சாமுண்டீஸ்வரி கோவிலில் அவரே பூஜை செய்வது வழக்கம். சாமுண்டீஸ்வரி அம்மன் மீது பல கீர்த்தனைகளை முத்தையா பாகவதர் இயற்றியுள்ளார். மன்னர் பூஜை செய்யும் போது முத்தையா பாகவதர் அந்தப் பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்களையும் பாடுவது வழக்கம்.

 

திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வழக்கமாக வரும்.

முத்தையா பாகவதர் சங்கீத உலகிற்கும் ஹரிகதா ப்ரவசன கலைக்கும் ஆற்றிய தொண்டு போற்றுதற்குரியது. அவரைப் பற்றிய பல நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று.

 

 

4

முத்தையா பாகவதர் மதுரையில் ஒரு சங்கீத பாடசாலையை ஆரம்பித்தார். மதுரை மணி ஐயர் உள்ளிட்ட பிற்கால பிரபலங்கள் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே.மதுரை பள்ளிக்கு சங்கர சேர்வை என்பவர் முதல்வராக இருந்தார். அவரது தம்பி முருக பூபதி பிரபலமான மிருதங்க வித்வான். அந்தப் பள்ளியில் தான் திரு டி.என்.சேஷகோபாலன் பயின்றார்.

முத்தையா பாகவதரின் தம்பி ஹரிஹர பாகவதர் அவருடைய ஹரிகதா காலக்ஷேபத்திற்குப் பின்பாட்டுப் பாடுவார். அவர் இறந்தவுடன் அவரது குமாரர் வைத்தியலிங்கம் (மூக்காண்டி என்பது அவரின் செல்லப் பெயர்) அவர்களை முத்தையா பாகவதர் தத்து எடுத்து வளர்த்தார். பாகவதர் இறந்தவுடன் அவரது அந்திமக் கிரியைகளை இவரே செய்தார். சித்தூர் இசைக் கல்லூரியை வைத்தியலிங்கம் நிர்வகித்து வந்தார்.

 

(எனது சம்பந்த்தியின் தந்தையார்) திரு ராமசுப்பிரமணியனின் தமக்கையாரின் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தி டோலக் வாத்தியத்தை வாசிப்பதில் பெரும் நிபுணர். டோலக் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தாய் மாமன் முத்தையா பாகவதர்.

 

அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நிகழ்ச்சிகளுக்கு காசி ஐயர் ஹார்மோனியம் வாசிப்பார். டோலக்கை திரு கிருஷ்ணமூர்த்தி வாசிப்பார். அவரது இசை நிகழ்ச்சிகள் பற்றிய அனைத்து நோட்டீஸ்களும் கூட போட்டோ எடுக்கப்பட்டது. (இணைப்பு காண்க)

 

 

 

5

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே பெரிய அளவில் இசை நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன.

 

விசேஷ துண்டு பிரசுரங்கள் கச்சேரிகளுக்கென வெளியிடப்பட்டன.(இணைப்பில் காண்க)

சங்கீதமும் ஹரிகதை உபந்யாசமும் தேசபக்தி எழுச்சிக்கும் விடுதலைக்கும் எப்படி வித்திட்டன என்பதை தனியே ஆராய வேண்டும். அவ்வளவு விஷயங்கள் அதில் உள்ளன.

 

 

ஹரிகதா சக்கரவர்த்தி ஸ்ரீ முத்தையா பாகவதர் பற்றிய விஷயங்களை அறிந்த  மகிழ்ச்சியுடன் பெரியவர் திரு ராமசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

***

நான் மறை என்றால் என்ன பொருள்? (Post No.4343)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 7-32 AM

 

 

Post No. 4343

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

1.நான் மறை என்றால் நான்கு வேதங்கள்: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

2.நான் மறை என்றால்  – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்

 

3.நான் மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் நால் வேத மந்திரங்கள்.

 

4.நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று ஜாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர்– ஆகிய மூன்று ஜாதியினர் மட்டுமே அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிராமணர்கள், வெள்ளைக்கார பறங்கித் தலையர்க்கு வேதம் கற்றுததர மறுத்தனர். பின்னர் பேரசைக்காரப் பார்ப்பனர்கள் சிலர் அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் வேதமும் கற்பித்தனர்.

5.நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

யான்= அஹம்+காரம் (அஹம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் நான்)

 

எனது= மம+காரம் ( மம என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “என்”னுடையது என்று பொருள்.

 

நான் மறைகளும் புரிந்துவிட்டதா?

 

–சுபம்-

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! –1 (Post No.4336)

Written by S.NAGARAJAN

 

 

Date: 26 October 2017

 

Time uploaded in London- 7-42 am

 

 

Post No. 4336

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூமி

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 1

 

ச.நாகராஜன்

ஜிம் கார்பெட்டை அறியாத இயற்கை ஆர்வலர் இருக்க முடியாது.

வனங்களைக் காக்க வேண்டும் என்பதில் அயராது உழைத்தவர். அதே சமயம் மக்களுக்குத் துன்பம் விளைவித்த ஆட்கொல்லிகளைச் (Man eating Tigers) சுட்டு வீழ்த்தியவர்.

 

அவர் இந்தியாவை நேசித்தார். இந்திய மக்களும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்தனர்.

 

அவரது ‘மை இந்தியா’ (Jim Carpett’s My India) மிகவும் அருமையான நூல். அதிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கு தருகிறோம்.

மொழியாக்கம் சொல்லுக்குச் சொல்; வரிக்கு வரி அப்படியே ஆக்கப்படவில்லை. சரளமான சுருக்கமாக இதைக் கொள்ளலாம்.

இதோ அவரது சொற்களிலேயே அவரது அனுபவம்:

*

பயணிகளை ஏற்றி வந்த நீராவிப் படகு சமாரியா காட்டிற்குச் (Samaria Ghat) சற்று தாமதமாகத் தான் வந்தது. பயணிகள் வேகவேகமாக இறங்கி மரத்தாலான பாலத்தைக் கடந்து ப்ராட்கேஜ் ட்ரெயினைப் பிடிக்க விரைந்ததை படகுத்துறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்களுக்காக ட்ரெயினைச் சற்று தாமதமாகப் புறப்படுமாறு ஏற்பாடு செய்திருந்தேன்.

 

கடைசியாக படகிலிருந்து இறங்கியவர் ஒரு ஒல்லியான மனிதர். கண்கள் இடுங்கி இருந்தன. அவரது ஒட்டுப் போட்டிருந்த பேண்ட் ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும். கையில் ஒரு வண்ண கர்சீப்பில் முடிச்சிடப்பட்ட மூட்டை முடிச்சு ஒன்று இருந்தது.

கையைப் பிடிக்க ஏதுவாக இருந்த கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு மிக மெதுவாக  நதியிலிருந்து இறங்கினார். மிகவும் மோசமான உடல்நிலை அவருடையது என்பது தெரிந்தது.

கங்கை நீரை முகத்தில் தெளித்து முகத்தை அலம்பிக் கொண்ட அவர், மூட்டையிலிருந்து ஒரு துண்டைக் கீழே போட்டு பரப்பி படுத்துக் கொண்டார் – கால்கள் கங்கை நீரில் இருக்கும்படி!

எஞ்சின் விஸில் சத்தம் ஊதியது. வண்டி கிளம்பும் மணி அடித்தது. ஆனால் அவர் நகரவே இல்லை. ட்ரெயினைப் பிடிக்கும் உத்தேசம் அவருக்கு நிச்சயம் இல்லை என்பது இதிலிருந்து தெரிந்தது.

 

அவரிடம் சென்று நான் அவர் ட்ரெயினைத் தவற விட்டு விட்டார் என்று கூறிய போது, அவர், “எனக்கு ட்ரெயினே தேவை இல்லை, சாஹிப், நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

 

அது மாம்பழ சீஸன் காலம். உக்கிரமான கோடை காலம்.

காலரா தனது உச்ச கட்ட தாண்டவத்தை நடத்திக் கொண்டிருந்தது. அந்த மனிதர் நடைபாதையில் மெதுவாக் நடந்து வருகையில் அவர் ஒரு வேளை காலராவினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டேன். அவரது நோய்வாய்ப்பட்ட தோற்றத்தைக் கண்டபோது என் சந்தேகம் உறுதியானது.

 

நான் கேட்டதற்கு பதிலாக அவர் தான் தன்னந்தனியாகவே பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் மொகமே காட்டில் (Mokameh Ghat) அவருக்கு ஒரு நண்பரும் இல்லையென்றும் சொன்னார்.

 

ஆகவே அவரை கையைப் பிடித்து இருநூறு கஜ தூரம் வழி நடத்திச் சென்றேன். எனது பங்களாவையும் கங்கை நதியையும் பிரிக்கும் எல்லை அது.

 

அவரை எனது பங்கா கூலிகள் தங்கும் விடுதியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினேன். அந்த விடுதியில் அப்போது யாரும் இல்லை. காலியாகத் தான் அது இருந்தது. எனது வேலைக்காரர்கள் தங்கும் விடுதியிலிருந்தும் அது தனிப்பட்டுத் தான் இருந்தது.

 

 

மொகமேகாட்டில் தான் நான் கடந்த பத்து வருட காலமாக வாசம் செய்து கொண்டிருக்கிறேன். அங்கு பெரிய ஒரு வேலைக்காரர் பட்டாளத்திற்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் நான் அவர்களுக்கென கட்டியிருக்கும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். அதன் மேற்பார்வையையும் நான் தான் செய்து வந்தேன். மற்றவர்கள் சுற்றுப்புறத்தில் இருந்த கிராமங்களில் வசித்து வந்தனர்.

எனது ஆட்களிடமும் சுற்றுப்புற கிராம மக்களிடமும் காலரா செய்த கொடுமையை நான் கண்ணாரக் கண்டு விட்டேன். அந்த கெட்ட வியாதி ஒருவேளை என்னைப் பிடிக்குமானால் ஒரு நல்ல மனிதர் என் மீது இரக்கம் கொண்டு என் நெற்றியில் ஒரு புல்லட்டை சுடட்டும் அல்லது நினைவை இழக்கும் வண்ணம் கஞ்சாவைத் தரட்டும் என்று நான் வேண்டியவாறு இருந்தேன்.

 

காலராவினால் ஒவ்வொரு வருடமும் இறந்ததாகச் சொல்லப்படும் பல்லாயிரக் கணக்கானோரில் அனைவருமே காலராவினால் இறக்கவில்லை அதில் குறைந்தபட்சம் பாதிப் பேராவது பயத்தினாலேயே செத்து விட்டனர் என்று நான் கூறியதை நீங்கள் உட்பட பலரும் ஆமோதிப்பீர்கள்.

 

வெளிநாட்டிலிருந்து கொஞ்ச காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ பயணமாக வரும் பயணிகளுக்கு மாறாக இந்தியாவிலேயே வாழும் நாம் அனைவரும் விதியை நம்புபவர்கள் – அதனால் ஒருவனுக்கு ‘வேளை வரும் வரையில்’ அவன் இறக்க மாட்டான் என்று நம்புபவர்கள்.

 

இதனால் நாம் எல்லோரும் கொடூரமான தொத்து வியாதிகளை அலட்சியம் செய்பவர்கள் என்று அர்த்தமில்லை. காலரா நாடெங்கும் படை எடுத்துப் பரவி இருந்தது. அது தொத்து வியாதியாகப் பரவும் சமயத்தில் பலர் பயத்தினாலேயே இறந்தனர் – வியாதி பீடிக்கப்படாமலேயே!

 

என பங்கா கூலிகள் விடுதியில் தங்கி இருந்த அந்த மனிதர் காலராவினால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஒரு வேளை அவர் தப்பிப் பிழைக்க வேண்டுமென்றால் அவரது நம்பிக்கையும் என் கத்துக்குட்டி சிகிச்சையும் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்.

ஏனெனில் மருத்துவ சிகிச்சை என்பது பல மைல்கள் தள்ளி அப்பால் இருந்தது. அங்கு தான் ஒரு முரட்டு டாக்டர் இருந்தார். அவரது கடுமை அவரது திறமையற்ற தன்மைக்குச் சமமாகவே இருந்தது.

 

 

என்னால் வழக்கமாக ட்ரெயினில் அனுப்பப்படும் பயிற்சிகால க்ளர்க் (Probational Clerk) ஒருவர் என்றோ ஒரு நாள்அவரது கர்ண கடூரமாகப் பேசும் தொண்டையை அறுத்து அவரை இலேசான இந்தக் கொடுமை மூலம் ‘விடுவித்து’ விடுவார் என்றே நான் நம்பிக் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு அவர் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர்!

 

எனது க்ளர்க், டாக்டர் மற்றும அவரது மனைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஆகி இருந்தார். அவர்கள் இருவரும் நடத்தை கெட்டவர்கள். எகிப்திய சுக போகங்களையும் இந்தியாவில் மொகமேகாட்டிற்கு வருவதற்கு முன்னர் தாங்கள் அனுபவித்த இன்ப சுகங்களையும் இப்போது இழந்து விட்டோம் என்றும் க்ளர்க்கிடம் அவர்கள் கூறி இருந்தனர். இந்த தகவல் க்ளர்க்கைச் சிந்திக்க வைத்தது.

 

சில நாட்கள் கழிந்தன. நீராவிப் படகு மொகமேகாட்டிலிருந்து கடைசியாகப் புறப்படுவதற்குச் சற்று முன்னர் டாக்டருக்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது.

 

அதைப் படித்த டாக்டர் தன் மனைவியிடம் சமாரியா காட்டிற்கு அவசரமாக ஒரு கேஸைப் பார்ப்பதற்குச் செல்ல வேண்டும் என்றும் இரவு முழுவதும் அங்கு இருக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

வீட்டை விட்டு வெளியே மரங்கள் அடர்ந்த இடத்தில் அவரை க்ளர்க் சந்தித்தார். மிக மிக இரகசியமாக அவர் ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதில் இருந்த காலியான அறைக்கு அவர் கூட்டி வரப்பட்டார். அந்தக்  கட்டிடத்தில் தான் எனது வேலையாட்களில் ஒருவன் சில நாட்களுக்கு முன்னால் நிலக்கரி வாயுவினால் ஏற்பட்ட விஷத்தால் செத்திருந்தான்.

 

அந்த அறையில் டாக்டர் சற்று நேரம் காத்திருந்தார். அந்த அறையில் ஒரு கனமான கதவு இருந்தது. ஒரே ஒரு ஜன்னலும் இருந்தது.

 

சிறிது நேரம் கழித்து அறைக் கதவு திறந்தது. முகத்திரை இட்ட ஒரு ஆள் அறையில் நுழைந்தான், பிறகு கதவு வெளியில் பூட்டப்படும் சப்தம் கேட்டது.

 

அன்று குட்ஸ் ஷெட் வழியாக இரவு சற்று தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது க்ளர்க்கும் அவரது டியூடியை அடுத்து ஏற்க வரும் சகாவும் மிகவும் கிளர்ச்சியூட்டப்பட்ட விதத்தில் பேசுவதைக் கேட்டேன்.

 

மறு நாள் காலை நான் வேலைக்கு வரும் வழியில் அந்த அறையின் முன் பெருங்கூட்டம் ஒன்று கூடி இருப்பதைக் கண்டேன்.

 

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு அப்பாவி மனிதர் அங்கு யாரோ ஒருவர் அடைக்கப்பட்டிருப்பதாகவும் வெளியில் பூட்டு போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

 

உடனே எனது ஆட்களில் ஒருவரை அழைத்து ஒரு சுத்தியலைக் கொண்டு அந்தப் பூட்டை உடைக்குமாறு கூறி விட்டு என் வ்ழியில் விரைந்தேன். ஏனெனில் அது உடைக்கப்படும் போது அதில் இருப்பவர் படும் பாட்டைக் காண நான்

ஆசைப்படவில்லை. சட்டபூர்வமான எனது வேலைக்குச் சென்று விட்டேன்.

அன்றைய எனது டயரியில் மூன்று குறிப்புகள் என்னால் எழுதப்பட்டன.

 

 

  • டாக்டரும் அவரது மனைவியும் அவசரமான சொந்த விஷயம் காரணமாக வெளியூர் சென்று விட்ட்னர்.
  • பயிற்சி காலத்தில் வேலை பார்த்து வந்த க்ளர்க் ஷிவ் தேவ் டேலி க்ளர்க்காக (Tally Clerk) (நிரந்தர வேலை) மாதம் இருபது ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்.
  • கதவில் இருந்த பூட்டு, பாட் லாக் எஞ்சின் ஏறி சேதம் அடைந்ததால் புதிய பூட்டு, புதிய பாட் லாக் அறைக்குப் போடப்பட்டன,

மொகமேகாட் பகுதி கடைசி கடைசியாக அந்த டாக்டரையும் அவர் மனைவியையும் பார்த்தது அப்போது தான். மருத்துவப் பதவிக்கு களங்கம் விளைவிக்கும் அந்த மனிதரை அதற்குப் பின்னர் அந்தப் பகுதியிலேயே யாரும் பார்க்கவில்லை!

 

 

என்னிடம் ஏற்கனவே காலரா நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று நோயாளிகள் இருந்ததால் புதிதாக வந்த மனிதருக்கு சிகிச்சை அளிக்க எனக்குப் போதுமான நேரம் இல்லை. என் வேலையாட்களிடமிருந்தோ நான் எந்த ஒரு விதமான உதவியையும் எதிர்பார்க்க முடியாது,. ஏனெனில் அவர்கள் ஜாதி வேறு, வந்தவரின் ஜாதி வேறு. அத்துடன் அவர்களை உதவி செய்ய அழைத்தால அவர்களுக்கு இந்த தொத்து வியாதி வந்தால், அதுவும் சரியாக இருக்காது.

என்ன செய்வது?

*** (தொடரும்)

 

கர்ப்பூரமாமோ கடலுப்பு? (Post No.4321)

Written by London Swaminathan

 

Date: 21 October 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4321

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கர்ப்பூரமும் வெள்ளை நிறம்; கடலுப்பும் வெள்ளை நிறம்.

இயற்கையில் கிடைக்கும்போது இரண்டும் ஒரே தோற்றம்.

ஆயினும் கர்ப்பூரமும் கடலுப்பும் ஒன்றாகுமா?

 

நான் மதுரையில் இருந்தபோது ஒரு பெரிய மில்லின் (நெசவாலை) ஒரு பெரிய அதிகாரியை எனது நண்பர் ஒருவர் கிண்டல் செய்வார். “அவன் யார் தெரியுமா? என் கூடப் படித்த காலத்தில் நசுங்கிய பித்தளைப் பாத்திரத்தில் தினமும் தயிர் சோறு கொண்டு வருவான்; பரம ஏழை; இன்று பார்! அவன் காரில் போகிறான்; நான் இங்கே உன்னுடன் உடகார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருகிறேன்” என்பார்.

 

அவரே இன்னொரு விஷயமும் சொல்லுவார்– ” பார் என் பாட்டியும் விக்டோரியா மஹாராணியாரும் ஒரே நேரத்தில் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்; இதோ பார்! ஜாதகம்! என்று காட்டுவார். பாராண்ட விக்டோரியா மஹாராணி எங்கே? பார்வை இழந்த மதுரைக் கிழவி எங்கே?

 

ஆக, நம்மில் பலரும் அறியாமையின் காரணமாகவோ, பொறாமையின் காரணமாகவோ உயர்ந்த பதவியில், உயர்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொள்வோம். அவர்களுடைய முயற்சி, உழைப்பு முதலியவற்றை மறைத்துவிட்டு நம்மை அவர்களுக்குச் சரி சமமாக காட்ட முயல்வோம். இது தவறு என்பதை விளக்க சில அழகான தமிழ்ப் பாடல்கள் உள.

 

கர்ப்பூரம் போலக் கடலுப் பிருந்தாலுங்

கர்ப்புர மாமோ கடலுப்புப் — பொற்பூரும்

புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்

புண்ணியரா வாரோ புகல்

–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:

கடல் நீரில் உண்டாகும் உப்பு,   கர்ப்பூரத்தைப் போலவே இருந்தாலும், அந்த உப்பு, கர்ப்பூரம் ஆகி விடுமா?

ஒருக்காலும் ஆகாது, அது போல,

 

தீச்செயல் புரிவோர், தோற்றத்தில், அழகு மிக்க நல்வினையாளர் போலத் தோன்றினாலும்,  அவர்கள் புண்ணியர் ஆகிவிடுவரோ? நீயே சொல்.

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

 

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித்  தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி – வாக்குண்டாம்

 

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

 

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்

 

தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்=  மயில்தோகை

நாம் வான் கோழியைப் பின்பற்றமல் இருப்போமாக!

 

TAGS:–கற்பூரம், கர்ப்பூரம் உப்பு, மயில், வான்கோழி

சுபம்–

பிறர் மனதில் உள்ளதை அறிபவன் கடவுள்–வள்ளுவர் வாக்கு (Post No.4319)

Written by London Swaminathan

 

Date: 20 October 2017

 

Time uploaded in London- 11-00 am

 

 

Post No. 4319

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் மொழியில் ‘குறிப்பறிதல்’ Divining or Sensing from Appearances)  என்பது ஒரு சிறப்பு அம்சம். ஏனைய நாடுகளில் இதை ஒரு நல்ல விரும்பத்தக்க குணமாகப் போற்றவில்லை. ‘மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்’ என்பது தமிழில் உள்ளதை அறிவோம். அவர் எப்படி வரும் பொருள் — நிகழப் போவனவற்றை — உரைப்பார்? அவருக்கு பிறர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனால்தானோ என்னவோ வள்ளுவப் பெருமான் ‘குறிப்பறிதல்’ என்று அமைச்சியலில் ஒரு அதிகாரத்தை உருவாக்கி பத்துக் குறள்களில் கருத்து மழை பொழிந்துள்ளார். அது மட்டும் அல்ல; அத்தகைய ஆற்றல் உடையோரை கடவுள் நிலைக்கு உயர்த்திவிட்டார்! நாலடியார் என்னும் நூலிலும் இப்படி ஒரு கருத்து பாடப் படுகிறது.

 

முதலில் திருவள்ளுவர் அளித்த, தமிழ் வேதம் ஆகிய, திருக்குறளில் உள்ள கருத்துகளைக் காண்போம்:–

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

 

பொருள்:–

 

சந்தேகத்திற்கு இடங் கொடுக்காமல், பிறர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர வல்லவனைத் தெய்வத்துக்கு சமமாக வைக்க வேண்டும்.

 

இது கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட தாகவே என்று தோன்றும். “வையத்துள் வாழ்வாங்கு  வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” — என்று வள்ளுவன் சொன்னபோது அதை ராமன், கிருஷ்ணன், சம்பந்தர்  ஆகியோரை மனதில் வைத்து நாம் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அடுத்தவர் எதற்காக வந்திருக்கிறார்? அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிபவரை தெய்வ நிலைக்கு உயர்த்தியது வியப்பைத் தரும்.

 

அத்தோடு நிற்காமல், அத்தகைய ஒருவரை எப்படியாகிலும், எவ்விலை கொடுத்தும் மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்:-

 

குறிப்பிற் குறிப்புணர்  வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல் (703) என்று பகர்வார்.

 

நம்மிடம் ஒருவர் திடீரென்று வந்து நம்மை இந்திரனே சந்திரனே, பாரியே, வா னில் இருந்து பொழியும் மாரியே என்று புகழ்ந்தால் நாம் சிரித்து மகிழ்வோம்; ஆனால் உள் மனது, எதற்காக இந்த ஆள் இப்படி, என்றும் இல்லாத் திருநாளாக இன்று மட்டும் புகழ்கிறான் என்று யோசிப்போம்; சோழியன் குடுமி சும்மா ஆடாது; ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்தோடு போக மாட்டார்; இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று புரிந்து கொள்வோம்.

 

ஆயினும் அவர் எதற்காக இப்படிப் புகழ்ந்தார் என்பதை அவர் வாயில் இருந்து வரும் வரை அறிய முடியாது. ஆனால் பிறர் மனதில் உள்ளதை முகக்குறிப்பின் மூலமும், நடை உடை பாவனை மூலமும் அறிபவர் மனிதரில் அரிதிலும் அரிது; ஆகையால் அத்தகையவர் கிடைத்தால் இரண்டு கைகளாலும் ‘சலாம்’ போட்டு அவரை அமைச்சர் ஆக்கி விடு என்று அரசர்களுக்கு அறிவுரை பகர்கிறார் வள்ளுவர்.

 

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (706) – என்பதும் நமக்குத் தெரியும்.

 

ஒருவர் முகம் ‘கடுகடு, சிடு சிடு’ என்று இருந்தால் அவருக்கு நம் மீது ஏதோ கடுப்பு என்பதும், அன்றலர்ந்த செந்தாமரை போலச் சிரித்தால் மகிழ்ச்சி என்றும் அறிவோம். ஆனால் அப்படி முகக் குறிப்பால் உணர்த்தாவிடினும் அறிபவன் அறிஞன்.

 

‘’கண்களே மனதில் உள்ளதைச் சொல்லிவிடும்’’– என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி உண்டு. சிசரோ என்ற அறிஞர் ‘’ஆத்மாவின் சித்திரமே ஒருவரின் முகம்’’ என்று சொல்லுவார். பரத நாட்டியத்திலும் முக பாவம் மூலம், குறிப்பாக கண் அசைவு மூலம், உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுவதையும் அறிவோம். ஆயினும் இப்படி வெளிப்படையாக இல்லாமல் ஆள் வந்தவுடனே, இவன் எதற்காக வந்திருக்கிறான், என்ன செய்யப் போகிறான், என்ன எதிர் பார்க்கிறான் என்று அறிபவன் சிறப்பிடம் பெருவான்.

 

 

இதை எதிரொலிக்கும் பாடல் நாலடியாரிலும் உள்ளது:–

 

ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி

ஊக்கம் உரையார் உணர்வுடையார் — ஊக்கம்

உறுப்பினால் ஆராயும் ஒண்மையுடையார்

குறிப்பின் கீழ்ப்பட்ட துலகு — நாலடியார்

 

பொருள்:-

தாம் மேற்கொண்ட செயலை, அது முடியும் வரை, மனத்தில் வைத்துக் கொண்டு, வெளிப்படையாக சொல்லாதவன் அறிஞன்; பிறர் முயற்சியினை அவர்தம் அ ங்கங்களின் குறிப்பினால் ஆராய்ந்து அறிவர் அறிஞர்; அத்தகையோரின் கீழ் உலகமே அடங்கிக் கிடக்கும்.

 

–சுபம்–