ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்! (Post No.3249)

 

time-health

Written by S. NAGARAJAN


Date: 14 October 2016

Time uploaded in London: 6-16 AM

Post No.3249

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் அக்டோபர்,2016  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்!

BY ச.நாகராஜன்

healthy-living-1

 

அமெரிக்காவில் மட்டுமல்ல, பொதுவாக உலகில் எல்லா நாடுகளிலுமே இப்போது நீடித்த ஆயுளைக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

என்றாலும் கூட வயதான போது நீடித்த வியாதிகளினால் பலரும் அவஸ்தைப் படுகின்றனர்.

 

இதைப் போக்க முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.

ஆரோக்கியமாக, நீடித்த நாட்கள் வாழ எட்டு எளிய வழிகள் உள்ளன.

 

 

அவையாவன:

  • அறுபது வயது ஆயிற்றே, எழுபது வயது ஆயிற்றே என்று நினைக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்க இன்றைய நாளும் நல்ல நாள் தான் என்று நினைக்க வேண்டும். தாமதப்படுத்த வேண்டாம். உடனே ஆரம்பிக்கலாம் நல்ல வாழ்க்கை முறையை! வயதாகும் போது உடல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அவை வியாதியைத் தருபவை என்று அர்த்தமுமில்லை, உடல் இயக்கத்தைத் தடுப்பவை என்றும் அர்த்தமில்லை. ஆக வாழ்க்கை முறை மாற்றத்தை இன்றிலிருந்தே தொடங்கலாம்.

 

  • உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டுமெனில் உலகெங்குமுள்ள அனைத்து நிபுணர்களும் ஒரே குரலில் ஓங்கிச் சொல்வது உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதைத் தான்! ஹூஸ்டனில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக மெடிகல் ஸ்கூலில் பணியாற்றும் கார்மல் பி.டையர்,” எனக்குத் தெரிந்து எழுபது வயதானவர்களில் ஏராளமானோர் உடற்பயிற்சியை மேற்கொண்டு அற்புதமான ஆரோக்கியத்தை அனுபவித்து வருகின்றனர்” என்கிறார். மஸில் மாஸ் (Muscle Mass ) கூடும் போது மருந்துகள் ஒரு இளவயதுக்காரரின் உடலில் என்ன வேலை செய்கிறதோ அதைச் செய்கிறது. அதாவது மருந்துகள் உரிய முறையில் உடலிலிருந்து எளிதாக அகற்றப்படுகின்றன. அத்துடன மட்டுமின்றி உடல் இயக்கம் மறதி நோயை வராமல் தடுக்கிறது. நடைப்பயிற்சி, தோட்ட வேலை செய்தல், அல்லது உடல் இயக்கத்தைத் தூண்டும் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

 

  • .தினமும் ஸ்ட்ரெட்சிங் எனப்படும் நீட்சி (Stretching) தேவை என்கிறார் டையர். செயலற்ற நிலையில் உங்கள் தசைகள் சுருங்குவதோடு விரைத்தும் போகின்றன. யோகா போன்றவற்றை மேற்கொண்டால் அது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றது.

“ஐந்து நிமிடம் தானே, என்ன செய்யப் போகிறது என்று நினைக்காமல் செய்தால், அது வயதான காலத்தில் நம்ப முடியாத அளவு நன்மையைத் தருகிறது” என்கிறார் டையர்.

மூட்டுவலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு நிவாரணம் யோகா தான்! தியானம், சுவாச முறை, சமச்சீரையும் வலிமையையும் தரும் ஆசனங்கள் என யோகா தரும் அனைத்துமே உடலுக்கு ந்ன்மை பயப்பவையே

healthy-living-3

 

  • உடலின் எடையைச் சீராகப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று.உடல் பயிற்சி, சரியான திட்டமிட்ட உணவு முறையை மேற்கொள்வது, ஆகியவை பல்வேறு நன்மைகளைத் தருவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

“உங்கள் எடையைக் குறைவாகவே வைத்துக் கொண்டால் டயாபடீஸ் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மூட்டுவலியும் வராது. ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை அளவு பழச்சாறு அல்லது கறிகாய்கள் சாப்பிடும் ஒருவருக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இதய நோய்கள் வருவதில்லை. கான்ஸர் அபாயம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. நோய் எதிர்க்கும் சக்தியை உடல் அதிகமாகக் கொள்கிறது” என்கிறார் வாஷிங்டனில் உள்ள உணவுத் திட்ட நிபுணரான டெய்ல்மெட்ஜ்

 

 

  • நோய் வராமல் இருக்கச் செய்யும் தடுப்பு முறைகள் பல உண்டு. ஆண்டொன்றுக்கு ஒரு முறை மார்பகத்தை சோதனை செய்து கொள்வது பெண்களுக்கு நல்லது. ஃப்ளூ தடுப்ப்பூசி போன்றவற்றைப் போட்டுக் கொள்ளலாம். கான்ஸர், இதய நோய் வராமல் இருக்கிறதா என்பதற்கான டெஸ்டுகளையும் செய்து கொள்ளலாம். நோய்களின் அறிகுறிகளான அதிக இரத்த அழுத்தம், டயாபடீஸின் ஆரம்ப நிலைகள் ஆகியவற்றின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். உடல் இயக்கம் சீராக இருந்தால் மூட்டுவலி போன்றவை வராது என்பதை உணர்ந்து இயக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்

 

 

  • மத உணர்வு நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆலயத்திற்குச் செல்வது நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் தருவதை ஒரு ஆய்வு உறுதி செய்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது முக்கியம். மதச் சடங்குகள், விழாக்கள் வாழ்வை தைரியத்துடன் எதிர்நோக்க உதவி செய்கிறது.

2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஆராய்ந்தது. அதில் தைரியத்துடன் வாழ்வை எதிர்நோக்கியோர் 55 சதவிகிதம் இறப்பைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு 23 சதவிகிதம் இதய நோய்த் தாக்குதல் குறைவாக அவர்களுக்கு இருப்பதும் தெரிய வந்தது!

 

%e0%ae%a4%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

  • மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை பற்றி மிச்சிகன் பல்கலைக் கழகம் 10317 பேர்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வை நடத்தியது.1957லிருந்து 2004ஆம் ஆண்டு முடிய தன்னார்வத் தொண்டு செய்து வருபவர்கள் இவர்கள்.

அவர்களில் பலர் சேவை செய்யும் போது சொந்தத் துன்பங்கள் மறைந்து போகின்றன என்பதைத் தெரிவித்தனர். பலனை எதிர்பார்க்காமல் உதவும் தன்னார்வத் தொண்டர்களின் வாழ்வு நீடிப்பதையும் ஆய்வு உறுதி செய்தது.

 

 

  • நடுத்தர வயது உள்ள பெண்மணிகள் ஆல்கஹால் அருந்துவதைப் பற்றி ஆராய்ந்ததில் எப்போதேனும் ஒரு முறை ஆல்கஹாலை உட்கொள்பவர்கள் சீரான உடல்நிலை கொண்டிருப்பதை நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி ஒன்று தெரிவிக்கிறது. தேவையற்ற தீய பழக்கங்களை மன உறுதியுடன் வெட்டி விடுங்கள்!

ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வு என்பது தான் என்ன? நீடித்த வியாதிகள் எதுவும் இருக்கக் கூடாது. முக்கியமாக இதய நோய்கள், டயாபடீஸ், கான்ஸர் போன்றவை வரக் கூடாது. மனத்தளவில் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். இவையே வெற்றிகரமாக முதுமை அடைவதைக் குறிக்கிறது.

%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

************ நன்றி: ஹெல்த் ஸயின்ஸ்

 

‘மணி’யான உபந்யாசம் (Post No.3229)

templ1

Written by S. NAGARAJAN

Date: 8 October 2016

Time uploaded in London: 5-37 AM

Post No.3229

Pictures are taken from various sources; thanks

 

 

 

நடைச்சித்திரம்

‘மணியான உபந்யாசம்

ச.நாகராஜன்

 

 money

ஹனுமார் கோவில்.

 

கூட்டம் பரவாயில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். பொதுஜன அபிப்ராயம் எப்படி உருவாகப் போகிறதோ என்று உபந்யாசத்தை ஏற்பாடு செய்த ஹரிஹரனுக்குக் கவலை. சாஸ்திரிகளுக்கும் தான்! சாஸ்திரிகள் யார் என்கிறீர்களா?

சுப்புணி சாஸ்திரிகள் ராமாயண உபந்யாசம் செய்கிறார். அவருக்குத் தான் ரொம்பக் கவலை. இந்த உப்ந்யாசத்திலாவது ஏதேனும் “கொஞ்சம்” வந்தால் மாதச் செலவை ஈடு கட்டி விடலாம்.

 

இராமனே துணை!

 

இன்று முக்கியமான கட்டம். திரிஜடைக்கு சுப ஸ்வப்னம். அதனால் சீதா பிராட்டிக்கும் சுப சகுனம்!

கதையை ஆரம்பிக்கலானார்.

 

“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின்  மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”

 

திடீரென்று ஒரு சலசலப்பு கூட்டத்தில். தள்ளுங்கோ தள்ளுங்கோ என்று கட்டைக் குரலில் ஹரிஹரன் கத்திக் கொண்டே முன்னே வர பின்னால் ஒருவர் – அவரைப் பார்த்தால் பெரிய மனுஷராய்த்தான் இருக்க வேண்டும். சாஸ்திரிகளுக்கு ஒருவரின் தோரணையைப் பார்த்தால் தெரியாதா என்ன?

சற்று நிறுத்தினார்.

ஹரிஹரன் வந்தவரை முன்னால் சௌகரியமாக் அமர வைத்தார்.

 

சாஸ்திரிகளிடம் வந்தார். “இவர் தான் ஊர் பெரிய மனுஷர். இந்த கோவிலையே கட்டியவர். பேர் மணி. மணியானவர்.” மீண்டும் ஹரிஹரன் அழுத்திச் சொன்னார். “MONEY ஆனவர். இவர் வந்தாலே எனக்கு சம்பாவனையைப் பற்றிய கவலை தீர்ந்தது”

சாஸ்திரிகளுக்கு விஷயம் புரிந்து விட்டது.

 

MONEY ஆனவரா?

 

வாங்கோ வாங்கோ என்று இரு கரம் கூப்பி அவரை வரவேற்றார்.

மணியானவருக்கு இந்த உபசாரத்தால் உச்சி குளிர்ந்தது. அனைவரின் பார்வையும் அவர் பக்கம்.

எல்லோரும் எப்படி மதிக்கிறார்கள்!

சாஸ்திரிகள் மீண்டும் ஆரம்பித்தார்.

 

“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின்  மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”

ஊர்ப் பெரியவர் ஹரிஹரனை ஏதோ சைகை காட்டி அழைத்தார்.

அவரும் அவர் அருகே ஓடி வந்தார். தன் இடுப்புத் துண்டை வாயினால் பொத்தி அதன் மீது கையை வைத்துக் கொண்டு உன்னிப்பாகக் கேட்டார்.

என்ன நடக்கிறது.?

 

சாஸ்திரிகள் ஒரு நிமிடம் நிறுத்தினார்.

அடுத்த கணம் ஹரிஹரன் மேடை முன்னால் வந்து சாஸ்திரிகளிடம் ஒரே ஒரு நிமிஷம் என்றார்.

பின்னர் பேச ஆரம்பித்தார்.

indian_rupees-498x295

“பெரியோர்களே, தாய்மார்களே. இராமபிரான் அருளால் நமக்கு நல்லது நடக்கும் என்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. இதோ எந்தக் கூட்டத்திலும் பேச அழைத்தாலும் பேசாத அடக்க புருஷர் இப்போது சாஸ்திரிகளைப் பற்றி  ஓரிரு வார்த்தைகள் சொல்ல இசைந்திருக்கிறார். நம் பாக்கியம்!”

 

பெரியவர் வந்தார். கன குஷியாக ஆரம்பித்தார். இராமாயணம் எப்படி உலகின் மகத்தான் காவியம் என்பதில் ஆரம்பித்த அவர் நேராக சுப்புணி சாஸ்திரிகளுக்கே வ்ந்து விட்டார்.

அடடா, சாஸ்திரிகளின் உபந்யாசத்தில் தான் என்ன ஒரு நயம்! பதினெட்டு புராணங்களையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டி இனிய சாரீரத்துடன் அவ்வப்பொழுது கானம் செய்து சுலோகங்களை முறைப்படி சொல்லும் அவர் பாணியே தனி!

சாஸ்திரிகள் ஒரு கணம் மலைத்தார்.

 

தான் தான் அப்படிச் சொல்கிறோமா? கந்தர்வ கானம் இசைக்கிறோமா?

இன்று என்ன நடக்கிறது.!!

 

கூட்டத்தினர் ஆரவார கரகோஷம் செய்தனர்.

அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய ‘மணி’ ஆனவர் முக்கிய விஷயத்திற்கு வந்தார்.

 

“இந்த நல்ல நாளிலே இந்தக் கூட்டத்தில் வந்திருக்கும் பாக்கியவான்கள் அனைவருக்கும் இப்போதே என் கையெழுத்திட்ட கூப்பன்களை விநியோகிக்கப் போகிறேன். ஆண், பெண், குழந்தை என்ற பேதமில்லாமல் நாளைக்கே நம் கடைத் தெருவில் இருக்கும் என் ஜவுளிக்கடைகளில் உங்களுக்குத் தேவையான ரவிக்கைத் துணி, வேஷ்டி, குழந்தை சட்டை என ஆளுக்கு ஒன்றை தேர்ந்தெடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். நாளைக்கு வர முடியாதவர்கள் இந்த உபந்யாசம் முடியும் நாள் வரை இந்த சலுகையை அனுபவிக்க்லாம். ஆனால் உப்ந்யாசத்திற்கு நீங்கள் கட்டாயம் வர வேண்டுமென்பதால் மாலை ஏழு மணி முதல் இந்த சலுகையைப் பெற முடியாது. காலை முதல் மாலை வரை கடைக்கு வாருங்கள்” கூட்டத்தினரின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

ஹரிஹரன் ராமா ராமா என்று கூவினார்.

 

 

சாஸ்திரிகளுக்கு ஒரே மகிழ்ச்சி. கூட்டத்தினர் ஒரு  க்யூவாக நின்றனர். கையில் இருந்த பேப்பர் ஸ்லிப்பில் கையெழுத்திட்டு ஒவ்வொருவருக்கும் கூப்பனை அயராமல் கொடுத்துக் கொண்டிருந்த பெரியவர் கோவில் பட்டரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார். அவர் பெரிதாகத் தலையாட்டி விட்டு ஓடினார்.

நாற்பத்தைந்து நிமிடத்தில் அனைவரின் முகத்திலும் மலர்ச்சி காணப்பட்டது. அனைவருக்கும் கூப்பன் வந்து விட்டது போலும்!

சாஸ்திரிகள் சற்று சாந்தமடைந்தார்.

மீண்டும் ஆரம்பித்தார்.

 

“ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே இராமயணத்திலே இன்று ஒரு சுபமான இடம். சீதா பிராட்டியின்  மனக் கவலை தீர திரிஜடை அன்னையிடம் வந்து என்ன சொல்றாள்னா….”

மக்கள் அவரைக் கவனிக்கத் தொடங்கிய அதே வேளையில் ‘நகரு நகரு’ என்று ஒரு பெரிய கோஷம் கேட்டது.

அண்டா அண்டாவாக வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கள், புளியோதரை  . அத்தோடு பெரிய பெரிய தொன்னைகள் வேறு.

சாஸ்திரிகள் முழித்தார். அவருக்கு உதவ ஹரிஹரன் ஓடோடி வந்தார்.

 

 

“அண்ணா, வேறொண்ணுமில்லை. பெரியவர் இன்று பிரசாதம் தன் உபயம்னு சொல்லி தடபுடலாக எற்பாடு பண்ணிட்டார். கூப்பன் கொடுக்கற்துக்குள்ளே ஸ்பெஷல் அடுப்புகள் மூட்டி எல்லாம் ரெடி!. டைம் ஆறது. பஸ்ஸிலே போறவாளுக்கு பஸ் கிடைக்கணும். முதல்லே நைவேத்யம் பண்ணிடுங்கோ” கூட்டத்தில்  முன் வரிசையில் இதைக் கேட்டவர்கள் தலையை ஆட்டி அதை ஆமோதித்தனர். விவரம் காதோடு கிசு கிசுவென்று பரவ கூட்டம் மொத்தமும் கலகலப்பாகக் கை தட்டியது.

நைவேத்யம் நடந்தது.

 

இவர்களுக்கு விநியோகம் நடக்க ஒரு முக்கால் மணி நேரமாவது ஆகும்!

அனைவரும் வரிசையாக நின்றனர்.

கூட்டத்தில் நிற்பவர்கள் சும்மாவா நிற்பார்கள்! ஒருவருக்கொருவர் – சாஸ்திரிகள் காது படவே தான் – பேசிக் கொண்டனர்.

 

“இந்த மாதிரி உபந்யாசம் இது வரை கேட்டதே இல்லை. எவ்வளவு படித்தவா! எத்தனை பெரியவர்! சுப சகுனம் என்று ஆரம்பித்தார் பாரு, வேஷ்டி, ரவிக்கை, சட்டைன்னு ஒவ்வொருவருக்கும் கூரையிலேர்ந்து கொட்டறது. இவர் சொன்னா எதுவும் நடக்கிற மஹிமை இவர்ட்ட இருக்கு!”

“அட அதை விடு! இங்க பாரு! பெரிய தொன்னைலே வயிற்றுக்கு நிறைய வெண் பொங்கல், மூட நெய் முழங்கை வழி வார நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை….”

 

 

தாய்க்குலம் சாஸ்திரிகளை நமஸ்கரித்து மகிழ்ந்தது. அன்று வீட்டில் சமைக்க வேண்டாம் என்பதாலோ!

கடைசி வரைக்கும் திரிஜடை சீதையிடம் சொன்னது என்ன என்று சாஸ்திரிகளால் சொல்ல முடியவில்லை.

ஆனால் மணியான பிரசங்கம் என்று பெயர் கிடைத்து விட்டதே! இதற்கு மேல் என்ன ஸார் வேணும்!

 

MONEY ஆன பிரசங்கம் சார் அது! ஒப்புக் கொள்கிறீர்களா!

**********

 

 

 

 

 

பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்! (Post No.3226)

caldwell-four

Written by London Swaminathan

 

Date: 7 October 2016

 

Time uploaded in London: 11-12 AM

 

Post No.3226

 

Pictures are taken from various sources; thanks.

 

caldwell

கால்டுவெல் பாதிரியார் (BISHOP CALDWELL) அதிபயங்கர உளறல் பேர்வழி. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அவருடைய நூலுக்கு எவ்வளவு பாராட்டுதல்கள் கிடைத்ததோ அவ்வளவுக்கு மறுப்புரைகளும் எழுந்தன. ஆனால் இரண்டையும் படித்தறியாத அசடுகள் இன்று வரை அவரைப் புகழ்ந்துகொண்டு நிற்கும்.

 

கால்டுவெல்லின் மிகப்பெரிய உளறல் சம்ஸ்கிருதம் பற்றியதாகும். அவரது நூலை வெளியிட்ட எல்லோரும் அடிக்குறிப்பில் மன்னிப்புக் கேட்கும் தொனியில் “இது கால்டுவெல்,அறியாமையின் காரணமாக எழுதியது” என்று எழுதிச் சேர்த்துள்ளனர். சம்ஸ்கிருதத்தில் இலக்கியம் எதுவும் இல்லை என்று அந்த அசடு உளறி வைத்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பிஷப் கால்டுவெல்லின் அறியாமைக்கு வேறு உதாரணங்களும் தருவேன். சாணார் ஜாதியினர் பேயை வணங்கு கின்றனர் என்றும் தமிழர்கள் அனைவரும் பேயை வனங்குவோர் என்றும் ஆரியர்   னைவரும் தெய்வங்களை வணங்குவோர் என்றும் அது எழுதிவைத்துள்ளது.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள எல்லா கடவுள் பெயர்களும் தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் என்றும்  தமிழில் உள்ள எல்லா தெய்வப் பெய ர்களும் “பேய்” அடிப்படையில் அமைந்தவை என்றும்  இதை திருநெல்வேலி சாணார் வழிபாட்டின் மூலம் கண்டுபிடித்ததாகவும் கால்டுவெல் பாதிரியார் ‘திருவாய் மலர்ந்து அருளி’ இருக்கிறார். இதை அவர் எழுதிய சில வருடங்களுக்குள்ளேயே ஈ. கோவர் (E Gower) என்ற வெள்ளைக்காரர் அவருக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டார். தென்னிந்திய நாட்டுப்புற பாடல்களை எல்லாம் தொகுத்து 1871 ஆம் ஆண்டில் கோவர் வெளியிட்ட நூலின் முன்னுரையில் செமை அடி — சொல்லடிதான் — கல்லடி அல்ல — கொடுத்து இருக்கிறார்.

 

பேய் என்பது “பே, பிணம்” என்பதுடன் தொடர்புடைய சொல் என்றும் ஆனால் ஆரியர்களின் “தெய்வ என்பது தேவ” என்ற சொல்லுடன் தொடர்புடையதென்றும் கால்டுவெல் பிதற்றினார்.

 

கோவர் மறுப்புரையில் பேய் என்பது “பை—சாச” என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து பிறந்தது என்றும் பெண், பெண்ணு என்பது ஒளியைக் குறிக்கும் என்றும் எழுதினார். கோண்ட் இனப் பழங்குடியினர் “பூரா பெண்ணு, பெல்லா பெண்ணு, தாரி பெண்ணூ” என்றெல்லாம் கடவுள் பெயர்கள் வைத்துள்ளனர். அதில் பெண்னு என்பது ஒளி என்பதாகும் பெல்லா பெண்ணு என்பது சூரியனைக் குறிக்கும் என்றும் கோவர் எழுதினார்.

 

அத்தோடு நில்லாமல் கால்டுவெல் தூய தமிழ்ச் சொல் என்று கொடுத்துள்ள பட்டீயல் முழுதும் வடமொழிப் பெயர்கள் என்பதை வேறு ஒரு வெள்ளைக்காரர் மறுத்து எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேவன் DEVA (கடவுள்)  என்பதும் டீமன் DEMON (பேய்) என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சொல்லே. ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாம் (INTER CHANGEABLE); இரண்டும் ஒளி எனப் பொருள்படும் என்பதும் அவரது துணிபு.

“பா” என்ற சம்ஸ்கிருதச் சொல் ஒளியைக் குறிக்கும்.

 caldwell-book

எனது கருத்து

நான் கோண்டு இன ஆராய்ச்சியில் இறங்கியிருக்கும் தருணத்தில் எனக்கு கோவரின் 1871ஆம் ஆண்டு புத்தகம் கிடைத்தது வியப்பை உண்டாக்கியது. ஏனெனில் எனது கருத்தை வலுப்படுத்துல் சில வாக்கியங்களை அதில் கண்டேன். அவர் சம்ஸ்கிருதத்திலிருந்து இவை தமிழுக்கு வந்ததா? அல்லது தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதா என்று தெரியாது என்று எழுதியுள்ளார்.

 

நான் சிவனின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் மற்றொரு புறத்திலிருந்து தமிழும் வந்ததாகவும் அதனால்தான் வட இமய வெள்ளிப் பனித் தலையனான அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் எழுத சிவன் அனுப்பினான் என்றும் எழுதினேன். அது மட்டுமல்ல; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூல மொழி ஒன்று உண்டென்றும் உ லகிலுள்ள பழைய மொழிச் சொற்கள் அனைத்தும் இந்தியர்கள் கற்பித்ததே என்றும் எனது ஆராய்ச்சி முடிபை எழுதினேன். இதனால்தான் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கிறது என்றும் எழுதினேன். அது எல்லாம் இப்பொழுது வலுப்பட்டு வருகிறது.

 

இதை எல்லாம் ஆராயும் போது இன்னொரு பேருண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எகிபது நாட்டின்ன பிரமிடுகளில்  திருமூலர் கருத்துகள் இருப்பதை ஒரு கட்டுரையில் தந்தேன். வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு இருப்பதி ந்னும் சில கட்டுரைகளில் ஹந்தேன். எகிப்திய பிரமிடு கட்டினோர் சூத்ர (நூல் பிடித்தல்) முறை கொண்டு கோணததை அலந்தௌ வடமொழியில் இருப்பதை எல்லாம் ஆதாரம் காட்டினேன். கோவர் கட்டுரையை படித்துவிட்டு கடவுள் பெயர் கலைக் களஞ்சியத்தைத் திரந்து பார்த்தால் அங்கேயும் பெண்ணு என்ற கடவுள் ஒளிக்கடவுள்– சூரியனைக் குறிப்பது- என்று என்சைக்ளோபீடியா சொல்கிறது.

 

பேனு

எகிப்தியரின் சூரிய கடவுள்.— கி.மு. 2500 வாக்கில் எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் பெயர். — பறவை வடிவத்தில் குறிக்கப்படுகிறது.— ஹீலியோபாலிஸில் (Heliopolis) ஆதம் ATUM என்ற சூரியக்கடவுளுடன் தொடர்பு படுத்தபடும் சொல்.  ஆதிகா ல கடலில் இருந்து படைக்கப்பட்டது. மறுபிறப்பையும் பரலோக வாழ்வவையும் குறிப்பது. ஒருவேளை தீயிலிருந்து மீண்டும் உயிர்த்தெ ழும் பீனிக்ஸ்  PHOENIX என்ற பறவைக் கதை இதிலிருந்துதான் உருவானது போலும். ஏனெனில்  முதலில் வாலாட்டிக் குருவிப் பறவையாகவும், பின்னர் நாரையாகவும் காட்டப்படுகிறது. UPPER EGYPT  “மேல் எகிப்து” மன்னர் கிரீடத்தில் இரண்டு இறக்கைகளாகக் காட்டப்படுகிறது.

caldwell-book-2

பூரா பெண்ணு

இது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கோண்ட் இன மக்களின் ஒளிக்கடவுள். பூமிக்கடவுளான தாரிப்  (தரை = தரணி == தாரி=Terra = Terrain) பெண்ணையும் பல கடவுளரையும் உண்டாக்கியது. மரியா என்னும் சடங்கில் நரபலி கொடுக்கப்பட்ட தெய்வம் இது.

 

இவை இரண்டும் கடவுள் பெயர் என்சைக்ளோபீடியாவிலிருந்து (Encyclopaedia)  எடுக்கப்பட்டவை. எல்லா விஷயங்களும் வேதத்திலும் தமி ழிலிலும் உள்ள சொற்கள்.

வேதத்தில் ‘சுபர்ண’ SUPARNA என்ற பொன்னிறப் பறவையை சூரியனுடன் ஒப்பிடுவர். அதுவே பிற்காலத்தில் விஷ்ணுவின் வாஹனம் ஆகியது.

 

பெண் என்பவளை “மனைக்கு விளக்கு” என்று புறநானூறு  ம் மனு தர்ம சாத்திரமும் போற்றுகின்றன. பெண் என்பதை விளக்கு, ஒளி என்று இந்துமதமும் பாராட் டுகிறது. “பெண்”ணு என்பது பேணுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் கருதலாம்.

 

எது எப்படியாகிலும் பெண்ணு என்பது ஒளி என்பது கோண்ட் இனத்திலும் எகிப்திலும் இருக்கி ற து. மரியா என்ற சொல் ம்ருத்=மரணம் MORTAL என்பதுடன் தொடர்புடையதால் நரபலிக்கு கோண்ட் இன மக்கள் ‘மரியா’ சடங்கு என்பர். அவர்களை திராவிட இனம் என்று வெள்ளைக்கார எழுதுவர். சிந்து சமவெளி, எகிப்து நரபலி முதலியன குறித்து நான் எழுதிய விஷ்யங்களையும் படித்து ஒப்பிடுக.

 

கால்டுவெல் எழுதிய தூய தமிழ் சொற்கள் எப்படி வடமொழிச் சொறள் என்று நிரூபிக்கப்பட்டதோ அதே போல பைபிளிலுள்ள  கபி, துகி என்பன தமிழ்ச் சொற்கள் என்று கென்னடி கூறியது தவறு என்று நானும் நிரூபித்து கட்டுரை எழுதினேன். நீர் என்ற ரிக்வேதச் சொல் கிரேக்கத்திலும் இருப்பதால் அது தமிழ் சொல் என்று சுநீத் குமார் சாட்டர்ஜி எழுதியது தவறு என்றும் ஒரு கட்டுரையில் காட்டினேன்.

 

இப்பொழுது எல்லாவற் றை யும் மறந்துவிட்டு உலக மொழிகள் அனைத்தும், தமிழ்–சம்ஸ்கிருத மூல மொழியில் இருந்து வந்தன என்று பார்த்தால் அதுவே சரி என்று தோன்றுகிறது. கி.மு 2500ஆம் ஆண்டிலேயே எகிப்திய பிரமிடுகளில் “பெண்ணு” இருப்பதால் என் கருத்து மேலும் வலுப்படுகிறது.

 

–subham—

 

 

மஹாத்மா காந்தி வாழி! (Post No.3211)

ganghi-india

Written by S. NAGARAJAN


Date: 2 October 2016

Time uploaded in London:11-08 AM

Post No.3211

Pictures are taken from various sources; thanks

 

By .நாகராஜன்

 

 

காந்திஜி நினைவைப் போற்றுவோம்

 

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி!

ச.நாகராஜன்

 

 

அஹிம்ஸையை நாட்டில் நாட்டி

     ஆங்கிலேயரையே விரட்டி

மஹிமையை வாழ்வில் காட்டி

    மனதிலே பாரதம் ஏற்றி

துகிலிலே கதரைக் காட்டி

    தூயவன் வாழ்ந்த வாழ்க்கை

பகிர்தலுக்கு ஓர் நாள் இதுவே

    மஹாத்மா காந்தி வாழி!

**********

 

31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)

tolkappian-katturai

Written by London swaminathan

Date: 27 September 2016

Time uploaded in London:8-17 AM

Post No.3194

Pictures are taken from various sources; thanks.

 

 

அக்டோபர் (துர்முகி வருஷம், புரட்டாசி/ஐப்பசி) 2016 காலண்டர்

திருவிழா நாட்கள்:-அக்1.-நவராத்திரி ஆரம்பம்;அக்.2-காந்தி ஜயந்தி

அக்.10-சரஸ்வதி பூஜை; அக்.11- விஜயதசமி, தசரா; அக்.29/30- தீபாவளி

அக்.31- கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.

 

அமாவாசை- 30, பௌர்ணமி-15, ஏகாதசி-12,26, முகூர்த்த நாட்கள்-28

 

tolkappaima

அக்டோபர் 1 சனிக்கிழமை

Tamil alphabet

அகரம் முதல் ன கரம் இறுவாய்

முப்பஃது என்ப;

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே (1)

 

அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை

Special letter :three dots

அவைதாம்

குற்று இயல் இகரம் , குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன (2)

 

அக்டோபர் 3 திங்கட்கிழமை

Vaisya: Business community

வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை -1578

 

அக்டோபர் 4 செவ்வாய்க்கிழமை

Brahmins and Kshatriyas

அந்தணாளர்க்குரியவும் அரசர்க்கு

ஒன்றிய வ ரூஉம் பொருளுமார் உளவே -1572

 

அக்டோபர் 5 புதன்கிழமை

What is mantra?

நிறைமொழி மாந்தர்  ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப – 1434

IMG_3212.JPG

 

அக்டோபர் 6 வியாழக்கிழமை

Brahmins can’t become kings

அந்தணர்க்கு அரசு வரைவு இன்றே -1574

 

அக்டோபர் 7  வெள்ளிக்கிழமை

Women’s Virtues

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய -1098

 

 

அக்டோபர் 8 சனிக்கிழமை

God

வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ -1367

 

அக்டோபர்  9 ஞாயிற்றுக்கிழமை

Botanical Classification

புறக் காழனவே புல் என மொழிப

அகக் காழனவே மரம் என மொழிப -1585

 

அக்டோபர் 10 திங்கட்கிழமை

Devaloka

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மையான -1194

 

dance-in-shade

அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை

8 feelings; not Navarasa!

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப –1197

 

அக்டோபர்  12 புதன்கிழமை

Bhagavad Gita:Paritranaya sadhunam vnasaya ca duskrtam

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் -1099

 

அக்டோபர் 13 வியாழக்கிழமை

Dharma, Artha, Kama: Hindu Concept

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே-1038

 

 

அக்டோபர் 14  வெள்ளிக்கிழமை

Sati : wife mounting funeral pyre of husband

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும் -1025

 

அக்டோபர் 15 சனிக்கிழமை

Look at Brahmin’s Vedas

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழு வளி இசை அரில்தப நாடி

அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே

(102)

 

img_3224

அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை

Brahmins of Six tasks

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

…………….. 1021

அக்டோபர்  17 திங்கட்கிழமை

Literary and World approach

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர் – 999

 

அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை

Dhana/donation

கொடுப் போ ர் ஏத்திக் கொடா அர்ப்ப ழி த்தலும் -1036

 

அக்டோபர் 19 புதன்கிழமை

What is a Sutra/formula?

அவற்றுள்

சூத்திரந்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே-1425

 

அக்டோபர் 20 வியாழக்கிழமை

Women should not go abroad

முந்நீர் வழக்கம் மகடூஉ இல்லை -980

 

img_4925

அக்டோபர் 21  வெள்ளிக்கிழமை

Six Levels of living beings (Theory of Evolution)

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே-1527

அக்டோபர் 22 சனிக்கிழமை

Borrow from Sanskrit

வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே -884

 

அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை

சிதைந்தன வரினும்  இயைந்தன வரையார் – 885

 

அக்டோபர் 24 திங்கட்கிழமை

Upama from Sanskrit

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாதாகும் திணை  உணர் வகையே -992

 

அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை

Indra and Varuna: Tamil Gods!

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’- 951

 

kuthu-vilakku

அக்டோபர் 26 புதன்கிழமை

12 places adjacent to Chaste Tamil Land

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி -883

 

 

அக்டோபர் 27 வியாழக்கிழமை

Thousand from Sanskrit Sahsram

அத்தொடு சிவணும்  ஆயிரத்து இறுதி

ஒத்த எண்ணு முன்வரு காலை -317

 

அக்டோபர் 28  வெள்ளிக்கிழமை

Matra , winking, snapping

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே  (7)

 

அக்டோபர் 29 சனிக்கிழமை

Mysterious Kandazi!

கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- 1034

 

அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை

Deiva: God

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.-964 (பொருள் 1-18)

 

அக்டோபர் 31 திங்கட்கிழமை

Mantra again!

பெயர்நிலைக்கிளவியின் ஆஅகுநவும்

திசைநிலைக்கிளவியின் ஆஅகுநவும்

தொல்நெறி மொழிவயின் ஆஅகுநவும்

மெய்ந்நிலை மயக்கின்  ஆஅகுநவும்

மந்திரப் பொருள்வயின்  ஆஅகுநவும்

அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே -932

IMG_4930.JPG

–Subham—

 

இரண்டு கூழாங்கற்கள்! (Post No.3187)

pebbles

WRITTEN BY S.NAGARAJAN

Date: 25 September 2016

Time uploaded in London: 5-35 AM

Post No.3187

Pictures are taken from various sources; thanks.

 

 

உத்வேகமூட்டும் கதைத் தொடரில் இன்னும் ஒரு கதை!

 

இரண்டு கூழாங்கற்கள்!

ச.நாகராஜன்

 

 

பல ஆண்டுகளுக்கு முன்னால் இத்தாலியில் ஒரு சிறிய நகரில் நடந்த சம்பவம் இது.

 

ஒரு வியாபாரி லேவாதேவிக்காரர் ஒருவரிடம் பெரிய தொகை ஒன்றைத் தன் வணிகத்திற்காகக் கடன் வாங்கி இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது வியாபாரம் பெரும் நஷ்டமடைந்து வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் போனது. அவருக்கு அழகிய மகள் ஒருத்தி உண்டு. அவள் புத்திசாலியும் கூட.

 

 

கடன் கொடுத்த லேவாதேவிக்காரருக்கு வியாபாரியின் அழகிய மகளின் மீது ஒரு கண். எப்படியாவது அவளை  மனைவியாக அடைய அவர் திட்டம் தீட்டினார்.

வியாபாரியிடம் வந்தார்.

 

“இனியும் கடன் தொகையைப் பெறாமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். ஒன்று கடன் தொகையைத் திருப்பித் தாருங்கள்.அல்லது உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுங்கள். அப்படித் திருமணம் செய்து  கொடுத்து விட்டால் கடன் தொகையைக் கேட்கவே  மாட்டேன். என்ன சொல்கிறீர்கள்?”

லேவாதேவிக்காரரின் இந்தப் பேச்சைக் கேட்டவுடன் வியாபாரியும் அவரது மகளும் திடுக்கிட்டனர்.

லேவாதேவிக்காரர் அவரது மகளின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ள ஒரு வழியைச் சொன்னார்.

 

 

ஒரு பையில் கறுப்பு நிறக் கூழாங்கல் ஒன்றும் வெள்ளை நிறக் கூழாங்கல் ஒன்றும் போடப்படும்.அதில் கையை விட்டு ஏதேனும் ஒன்றை அவரது மகள் எடுக்க வேண்டும். கறுப்பு நிறக் கூழாங்கல் கையில் வந்தது என்றால் லேவாதேவிக்காரரின் மனைவியாக் அவள் ஆகி விடுவாள். கடன் தொகையும் தள்ளுபடியாகி விடும். வெள்ளை நிறக் கூழாங்கல்லை அவள் எடுத்தாலோ அவள் அவரை மணந்து  கொள்ள வேண்டாம். ஆனாலும் அப்போதும் வியாபாரியின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். ஆனால் அவள் எந்த ஒரு கல்லையும் எடுக்க மறுத்து விட்டால் அவளது தந்தையார் போலீஸ் வசம் ஒப்புவிக்கப் படுவார்.

 

 

அவர்கள் ஒரு கூழாங்கற்கள் நிறைந்த ஒரு நடைபாதை வழியே சென்று கொண்டிருந்தனர். திடீரென்று குனிந்த லேவாதேவிக்காரர் இரு கற்களை எடுத்தார்.

pebbles-2_aw_c

வியாபாரியின் மகளின் கூரிய கண்கள் அவர் கைகளைக் கவனித்தன. அவர் எடுத்தது இரண்டுமே கறுப்பு நிறக் கூழாங்கற்கள்.

 

அவரது சதித்திட்டத்தை மகள் நன்கு புரிந்து கொண்டாள்.

இப்போது என்ன செய்வது?

 

லேவாதேவிக்காரர் மகளை நோக்கிக் கூறினார்: “பைக்குள் இருக்கும் கற்களில் ஏதேனும் ஒன்றை எடு!”

மகள் பையில் கையை விட்டு ஒரு கல்லை எடுத்தாள்.

அதைத் திறந்து காண்பிக்கும் முன்னர் தானாக அது விழுவது போல நழுவ விட்டாள்.

 

அந்தக் கல் கூழாங்கற்களின் குவியலில் விழுந்தது.

“அடடா” என்று அலறிய அந்தப் பெண், “அதனால் என்ன, பரவாயில்லை. பைக்குள் இருக்கும் கல் எது என்று பார்த்து விட்டால் நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்து விடுமே” என்றாள்.

 

உள்ளே இருந்தது கறுப்பு நிறக் கல். அப்படியானால் அவள் எடுத்தது வெள்ளை நிறக் கல்லாகத் தானே இருக்க வேண்டும்.

 

லேவாதேவிக்காரர் தலை குனிந்தவாறே அங்கிருந்து அகன்றார்.

 

சில சமயம் மாற்றி யோசிக்க வேண்டும். அதுவும் ஒரு கணத்தில் யோசித்து சரியாக முடிவை எடுக்க வேண்டும்.

உலகில் சாமர்த்தியமாக வாழும் வழி இது தான்!

 

********

தமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்! (Post No.3174)

tamil-1

Written by London swaminathan

Date: 21 September 2016

Time uploaded in London: 8-02 AM

Post No.3174

Pictures are taken from various sources; thanks.

 

தமிழ் மொழி பழைய மொழி, சிவன் உருவாக்கிய மொழி, அகத்தியரால் இலக்கணம் படைக்கப்பட்ட மொழி, சிவ பெருமானும் முருகனும் பேசிய மொழி —  என்ற கருத்துக்களை 2000 ஆண்டுகளாக மக்கள் நம்புகின்றனர்.

 

 

இந்த உண்மைகள் பற்றி அவ்வப்போது மனதில் சில சந்தேகங்கள் எழும். ஆகவே தடைகலை எழுப்பி விடை காண்போம்:-

 

ரொம்ப நாளாக எனக்கு ஒரு டவுட்டு (Doubt)

 

ஆசிரியரிடம் மாணவன் கேள்வி

siva-with-jewels

அகத்தியனோ பார்ப்பனன்; இமய மலையில் வாழ்ந்த ரிஷி; அவரை ஏன் சிவன் அனுப்பினார்?

 

அகத்தியன் வெறும் ரிஷி மட்டு மல்ல. பூகோளமும் ( Geography நிலவியல்), சரித்திரமும் (History வரலாறு), அரசியல் தந்திரமும் (Politics), பொறியியலும் (Enginering எஞ்சினீயரிங்), தெரிந்தவர். ஆகையால் தமிழ் மொழிப் பணி மட்டும் அன்றி காவிரியை திருப்பிவிட்ம் பொறியயல் பணி, தென் கிழக்கு ஆசியா (South East Asia)  முழுதும் இந்திய கலாசாரத்தைப் பரப்பும் பணி, வாதாபி, இல்வலன் போன்ற மனிதர்களை உண்ணும் அரக்கர்களை (Cannibals) தந்திரத்தால் வெல்லும் பணி ஆகிய வற்றை மனதிற்கொண்டு சிவன், அவரைத் தெரிவு செய்தார். பகீரதன் பெரிய (Engineers) எஞ்சினீயர்களுடன் கலந்தாலோ சித்து எப்படி கங்கையைத் திருப்பிவிட்டானோ அது போல காவிரியையும் திருப்பிவிடும் செயல்திட்டத்துடன் அனுப்பி வைத்தார்.

 

அது சரி, சிவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

 

ஆஹா! அப்பொழுது அகத்தியருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்ததை ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?

 

ஆமாம் , இதில் என்ன சந்தேகம். பாரதி கூட

 

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

 

மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

-என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ.

 

அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படை த்தார்  என்று சொல்லுகிறார்.

tamil-2

சரி, அகத்தியரோ வேத மந்திரங்ங்களைக் கண்டுபிடித்த அகத்திய கோத்திரத்தில் வந்த ஒரு ரிஷி. அவரது பெருமை ரிக்வேதம் மற்றும் இதிஹாச, புராணங்களில் உள்ளது. அவருக்குத் தமிழ் தெரியுமா?

 

அவருக்குத் தமிழ் தெரியாது ஆனால் முதலில் சிவ பெருமானும், பின்னர் முருகனும் சொல்லிக் கொடுத்தனர்.

 

அட, இது என்ன புதுக்கதை? முருகனுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

 

சிவ பெருமான் மகனாகப் பிறந்தாலும் அவர் பிறவியிலேயே பெரிய ஜீனியஸ் Genius – எல்லாம் அறிந்தவர் — ஓம் என்னும் ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது– அந்தப் பிரணவ மந்திரத்தின் பொருளை யே அவர் சிவனுக்குச் சொல்லிக் கொடுத்ததால் அவனுக்கு சாமி நாதன் என்று பெயர். அவருக்குத் தமிழ்மீது அலாதிப் பிரியம்; அதனால் தமிழில் திட்டினால்கூட , அட இனிமையாக இருக்கிறதே என்று அவருக்கு வரம் கொடுப்பான் என்று அருணகிரி நாதரே சொல்லிவிட்டார் – தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்கிறார். தமிழ் மொழி அவ்வளவு இனிமையான மொழி. இதை வைத்துதான்

பாரதியும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – என்றார்.

 

சரி, தமிழ் மொழி பழைய மொழி என்பதை ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்; ஆரியத்துக்கு (சம்ஸ்கிருதத்துக்கு) நிகரானது என்றும் ஒப்புக் கொண்டீர்கள்; அகத்தியருக்கு முன்னர் அதற்கு இலக்கணம் இல்லையா?

 

அகத்தியர்தான் முதலில் இலக்கணம் படைத்தார் என்பதே ஆன்றோர் வாக்கு. இதற்குப் பின்னர் வந்ததே ஐந்திரம், தொல்காப்பியம் என்னும் இலக்கணங்கள்

 

shiva-ganesh

நான் இப்பொழுது ஒரு பாயிண்டில் (One Point) உங்களைத் திணறடிக்கப் போகிறேன்/ ஆரியம் என்று சம்ஸ்கிருதத்துக்கு பாரதியாரே பெயர் சூட்டி விட்டார். மேலும் பாணினி இலக்கணம் தான் சம்ஸ்கிருததின் புகழ்மிகு இலக்கணம் என்று சொல்லுகிறீர்கள். அகத்தியரின் காலமோ கி.மு800 முதல் கி.மு1000 என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறுகின்றன; பாணினியின் காலத்தை கி.மு 700 என்றே சொல்லுவர். அப்படியானால் ஆரியர்கள் பேசியது சம்ஸ்கிருதம் என்பதையும் பாணினி இலக்கண த்துக்கு முன்னரே சம்ஸ்கிருத இலக்கணம் இருப்பதையும் ஒப்புக்கொண்டுவிட்டீர்களே!!

அருமையான கேள்வி; முதலில் ஆரிய என்ற சொல்லுகு சரியான பொருள் தெரிந்துகொள்ளுங்கள் ‘திராவிட’ என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். இதே போல ‘ஆரிய’ என்ற சொல்லும் சம்ஸ்கிருத சொல். பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்லை நூறுக்கக் ணகான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். புற நானூற்றுப் புலவர்களும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆரிய என்றால் பண்பாடுடையோர், வடக்கில் வாழும் ரிஷி முனிவர்கள் என்றே பொருள்.

 

மதத்தைப் பரப்ப வந்த , நாடு பிடிக்க வந்த அயோக்கியர்கள் 300 ஆண்டுகளாக திராவிட (தென் பகுதி) ஆரிய (மாண்புமிகு, முனிவர்) என்ற சொற்களில் இன விஷத்தைப் புகுத்திவிட்டனர். இதைக் கேட்ட ஹிட்லரும் நான் தான் ஆரியன்;  ஜெர்மானிய வெள்ளையர்தான் ஆரியன் என்று சொல்லி லட்சக்கணக் கானோரைக் கொன்றுவீட்டான்.

 

பாணினி இலக்கண த்துக்கு முன்னர் இலக்கணம் இருந்திருக்கலாம் அது இன்று நம்மிய்டையே இல்லை என்பது பெரிய குறையே! ஆனால் பாணினி சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண கர்த்தா அல்ல. அவனுக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர்களின் நீண்ட பட்டியலை அவனும் பலரும் தந்திருக்கின்றனர். அவைகளும் அகத்தியம் போல ம  ந்துவிட்டன. நாம் எப்படித் தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பவனந்தி முனிவரின் நன்னூலைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல சம்ஸ்கிருத மக்களும் பாணினியைப் பயன்படுத்துகின்றனர். பாணினிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேத கால சம்ஸ்கிருத இலக்கணமே வேறு –

 

ரிக் வேதத்திலேயே 400-க்கும் மேலான புலவர்கள் பெயர்கள் உண்டு; விந்தையிலும் விந்தை அவர்களில் இருபது பேர் பெண் புலவர்கள்! இது உலக அதிசயம். எந்த மொழிக்கும் இல்லாத சிற ப்பு; சம்ஸ்கிருதத்துக்கு 2000 அல்லது 3000 ஆண்டுக்கு பின் எழுந்த சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இப்படிப் பெண் புலவர்களை ப் பார்க்கலாம். உலகிலேயே முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள், நாகரீகம் படைத்தவர்கள் இந்துக்களே  என்பதற்கு இந்த இரண்டும் சான்றுகள்.

 

tamil-4

சரி இன்னும் ஒரே ஒரு சந்தேகம்; பார்ப்பன அகத்தியன் தமிழுக்கு இலக்கணம் படைத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்ரனர். ஆனால் பார்ப்பனர்கள், சம்ஸ்கிருதம் பேசுபவர்கள்;  தமிழ் நாட்டின் பூர்வகுடிகள் இல்லை என்று திராவிடங்களும் அதுகளும் இதுகளும் அவ்வப்போது வெட்டி முழங்குகின்றனவே!

 

உண்மைதான் ‘வோட்டு’களுக்காக அரசியல் நடத்துவோர், நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். நீங்களே அதுகளும் இதுகளும் என்று அஃறிணை யில் பேசிவிட்டீர்கள் அதுவே போதும்.

 

உண்மை யில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் மூன்றில் ஒரு பகுதி பார்ப்பனர் இயற்றிய பாடல்கள்தான்; கபிலன் என்னும் “புல ன் அழுக்கற்ற  அந்தணாளந்தான்” அதிக பாடல்களை  இயற்றிய ர்; “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞான சம்பந்தனும் பார்ப்பனனே! மூழ்கிப் போகும் நிலையில் இருந்த  தமிழ் மொழியை கரையேற்றிய பாரதியும் உ.வே.சா.வும் பார்ப்பனர்கள்; அதிகமாக உரைகள் எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன்”  ஒரு பார்ப்பனன்.

 

அவரோ தொல்காப்பியனும் ஒரு பார்ப்பனன்; அவன் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் சொல்லுகிறார். அதை ஒப்புக்கொள்ளாத வர்களும் தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் CERTIFICATE கொடுத்தது அதங்கோட்டு ஆச்சார்யன் என்பதை மறுக்கவில்லை. ஆக ஒரு பார்ப்பனன் சர்ட்டிபிகேட் கொடுத்த பின்னரே அதை தமிழ் கூறு நல்லுலகம், நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்கு வெளியே உலா வர அனுமதித்தது. தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்களை யும் தமிழில் வேள்வி போன்ற மூலச் சொற்கள் இருப் பதும் தமிழ் பண்பாடுதான் இந்தியா முழுவ தும் நிலவிய பண்பாடு என்று ஐயம் திரிபறச் சொல்லும்.

 

வாழ்க தமிழ்

 

மாமிசத்துக்குப் பெயர் வந்தது எப்படி? யோகிகளை பரமஹம்ச என்று அழைப்பது ஏன்? (Post No.3171)

meat

WRITTEN BY London swaminathan

Date: 20 September 2016

Time uploaded in London:8-52 AM

Post No.3171

Pictures are taken from various sources; thanks.

 

தமிழில் சொற் சிலம்பம் ஆடும் காளமேகப் புலவரை நாம் அறிவோம். மனு ஸ்ம்ருதியில் கூட ஒன்றிரண்டு சொற்சிலம்பம் உண்டு.

 

மாம்சம் என்று ஏன் பெயர் வந்தது? என்று விளக்குகிறார் மனு:-

 

மாம்= என்னை

ச: = அவன்

 

இந்த ஜன்மத்தில் நான் அவனை (அதை) சாப்பிட்டால் அடுத்த ஜன்மத்தில் என்னை (மாம்) அவன் (ச;) சாப்பிடுவான் இதனால் அதை மாம்ச (இறைச்சி) என்று சொல்கிறோம்

மனு 5-55

 

இது ஆங்கிலத்திலும் பொருத்தமாக இருக்கிறது ஆங்கிலத்தில் மீட் MEAT என்றால் மாமிசம்;  மீ (என்னை) ஈட் (சாப்பிடுவான்) Me Eats (He eats me in my next birth if I eat him now). அதாவது நான் இப்பொழுது அவனைச் சாப்பிட்டால் அவன் என்னை சாப்பிடுவான்.

 

 

Xxx

narayana

நாராயணன் என்றால் என்ன?

 

ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபௌ வை நர சூனவ:

தா யதஸ்யாயனம் பூர்வம்  தேன நாராயண: ஸ்ம்ருத:

மனு 1-10

 

நான் என்ற பரமாத்மாவினால் படைக்கப்பட்டதால் நீருக்கு நாரம் எனப்பெயர். அதில் இவன் வசிப்பதால் (அயன) அவனுக்கு நாராயண  என்று பெயர்.

Xxx

swan

பரம ஹம்ச

 

ஹம்சம் என்பதற்கும் இது போல வேதாந்திகள் விளக்கம் தருவர்.

ஹம்சம் என்றால் அன்னப் பறவை (swan) என்று பொருள்.

 

இதை

அஹம் = நான் = ஜீவாத்மன்

ச: = அவனே + பரமாத்மன்

அஹம்+ச; = அம்ச (ஹம்ச)

 

இது அத்வைதத்தின் உயர்நிலை; அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்பதற்குச் சமம்.

 

இந்த உண்மையை உயர்ந்தவர்  பரமஹம்சர் . ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகாநந்தர் ஆகிய பெரிய மஹான்களின் பெயர்களை நாம் கேட்டிருக்கிறோம்.

 

ஹம்சப் பறவை இமயமலைக்கும் மேலே (கணவாய் வழியாகப்) பறப்பதையும், அது தூய வெண்மையாக இருப்பதையும் ஒட்டி வேறு சில விளக்கங்களும் உண்டு.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க ஞானம்!

 

–சுபம்–

மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! -1 (Post No.3164)

mother-teresa-indian-stamp

Written by S NAGARAJAN

Date: 18 September 2016

Time uploaded in London: 6-10 AM

Post No.3164

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்தக் கட்டுரையில் அடுத்து வரும் முதல் பாராவை கட்டுரை ஆரம்பத்திலும் முடிவிலும் படிக்க வேண்டும்! இது ஒரு அன்பு வேண்டுகோள்!

 

மதர் தெரஸாவைக் குறை சொல்வது நமது நோக்கமல்ல. ஏழைகளுக்கு உதவி செய்யும் ஒவ்வொருவரும் இறைவனின் சந்நிதானத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பவரே. ஹிந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒருவருக்கும் இதில் சிறிதளவும் ஐயமில்லை. இதை எழுதும் ஹிந்துவான எமக்கும் இதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

மீடியாக்கள் அடிக்கும் கூத்தைச் சற்று உற்று நோக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கட்டுரை!

ஆஹா, மதர் தெரஸா – நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா – கடைசி கடைசியாக புனிதர் ஆகி விட்டார்.

 

 

வாடிகனில் உள்ள போப் ‘மனமுவந்து” இதை அங்கீகாரம் செய்து அவரை ;லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் “புனிதராக” அறிவித்து விட்டார்!

மகிழ்ச்சி!

 

 

ஏழைகளுக்கு உதவி சிறிதளவே செய்தாலும் ஒருவர் போற்றப்பட வேண்டியவரே! அந்த வகையில் மகிழ்ச்ச்சி!!

ஆனால் உலகில் “ப்ரொஜெக்ட்” செய்யப்படும் விதத்தில் அவர் அந்த ப்ரொஜெக்ஷனுக்கு ஏற்புடையவரா?

இல்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

இந்த ஆய்வு இன்று எடுக்கப்பட்டதில்லை. 2013ஆம் ஆண்டு  மார்ச் மாதம் கனடிய பத்திரிக்கையான “Relegieuses”  என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒன்று.

பிரசுரமான போதே கடும் விமரிசனத்திற்கு உள்ளாகிய கட்டுரை இது.

 

theresa-1

அவரைப் பற்றி மூவர் ஆய்வை நடத்தினர். Sergi Larivee மற்றும் Genevieve Chenard றஆகிய  இருவர் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். சைக்கோஎஜுகேஷன் (Psychoeducation) பிரிவில் பணியாற்றுபவர்கள் இவர்கள். மூன்றாமவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் கல்விப் பிரிவில் வேலை பார்ப்பவர். பெயர் Carole Snechal.

 

சுருக்கமாக ஒரே வரியில் ஆய்வின் முடிவைச் சொல்ல வேண்டுமெனில் அன்னை தெரஸா “anything but a saint” – ‘புனிதரைத் த்விர வேறு என்ன வேண்டுமானாலும்” என்று சொல்லலாம்.

ஊடகங்களின் திட்டமிட்ட டியூனும் தீவிரமான பிரச்சாரமும் அவரை புனிதர் ஆக்கி விட்டன!(a creatuib if orchestrated and effective media campaign)

 

வாடிகன் அவரது மனிதப் பண்பு என்ற பக்கத்தை உன்னிப்பாகப் பார்க்கத் தவறி விட்டது என்கிறது ஆய்வு,

 

எல்லையிலாத் துன்பத்திற்கு ஆட்பட்டு அவரிடம் வந்த நோயாளிகளின் துன்பத்தை அவர் புகழ்வதிலேயே (gloryfying the suffering) குறியாக் இருந்தாரே தவிர அந்த நோயைப் போக்க அவர் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்கிறது ஆய்வு.

இந்த ஆய்வில் மூன்று ஆய்வாளர்களும் அன்னை தெரஸாவைப் பற்றி வெளிவந்த அனைத்து பிரசுரங்களையும் ஆவணங்களையும் முறையாக் ஆராய்ந்தனர் பின்னரே அவரது உள்ளீடற்ற சித்திரத்தை (Hallowed image) றஆய்வு மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தெரஸா மறைந்த போது 517 இல்லங்களை – ஆதரவற்று இறப்போருக்கான இல்லங்களைக் – (missions or homes for dying) கொண்டிருந்தார்!

 

 

இந்த மிஷன்களுக்கு வந்த பணத்திற்கோ குறைச்சல் இல்லை. கோடிக் கணக்கில் டாலர்கள் – உல்கெங்கிலுமிருந்து பணம், பணம், பணம்!

இந்த மிஷன்களுக்கு ஏராளமான டாக்டர்கள் வருகை புரிந்து வந்தனர்.

 

 

இவற்றில் பல கல்க்த்தாவில் அமைந்திருந்தன. இந்த இல்லங்கள் ஏழைகளையும் ஆதரவற்று இறக்க இருப்போரையும் “அன்புடன்” அறைகூவி வரவேற்றன!

– அடுத்த கட்டுரையுடன் முடியும். கட்டுரையின் முடிவில் முதல் பாராவைத் திருப்பிப் படிக்க வேண்டும்.

 

–subham–

ஒரு புதிய பென்சில்! (Post No 3157)

pencil-first

Written by S NAGARAJAN

Date: 16 September 2016

Time uploaded in London: 5-48 AM

Post No.3157

Pictures are taken from various sources; thanks.

 

 

ஒரு  புதிய பென்சில்!

ச.நாகராஜன்

 pencil-024

உத்வேகமூட்டும் சிறு கதைகளுக்கு வாழ்க்கையில் தனி இடம் ஒன்று உண்டு. இரண்டு கதைகளைப் பார்ப்போம்:

 

புதிய பென்சில்!

 

பென்சில் வியாபாரி ஒருவன் புதிய பென்சில் ஒன்றை பென்சில்களுக்கான பெட்டியில் வைக்கப் போனான். அந்த பென்சிலை ஒரு அன்புக்குரியவனாகப் பாவித்து அவன் பென்சிலுக்கு சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

“இதோ பார், வெளி உலகிற்குச் செல்ல இருக்கிறாய். நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐந்து உண்டு. அவற்றைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்டுக் கொள். இதை நினைவில் வைத்து நடந்து கொண்டாயானால் நீ தான் மிகச் சிறந்த பென்சிலாக இருப்பாய்.

 

முதலாவது விஷயம், நீ மிகப் பெரும் காரியங்களைச் சாதிக்க முடியும், ஆனால் நீ இன்னொருவர் கையில் இருந்தால் தான் அது சாத்தியம், அதை  மறக்காதே!

 

 

அடிக்கடி உன்னைக் கூர்மைப் படுத்தும் போது உனக்கு வலிக்கும். ஆனால் அதை நீ பொருட்படுத்தாதே. அது தான் உன்னைச் சிறந்த வேலையைச் செய்ய வைத்து சிறந்த பென்சிலாக உன்னை ஆக்கும்!

 

 

நீ உன்னால் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும் முடியும் என்பதை மறந்து விடாதே.

இன்னொன்று, உனக்கு உள்ளே இருப்பது தான் முக்கியம் அதை நினைவில் இருத்திக் கொள்.

 

நீ போகும் மேற்பரப்பின் மீது உனது அடையாளத்தை நன்கு விட்டுச் செல். உன்னைப் பயன்படுத்தும் எந்த பரப்பையும் உன் செயலினால் அழகு படுத்து. என்ன ஆனாலும் சரி, தொடர்ந்து எழுது!

 

 

இந்த ஐந்து விஷயங்களையும் புதிய பென்சில் கவனமாகக் கேட்டது. இதன் படியே நடப்பேன் என்று பென்சில் வியாபாரியிடம் உறுதி கூறியது. அதன் முழு மனதையும் இந்த விதிகளில் ஊற வைத்து அது நடந்தது. சிறந்த பென்சிலாக ஆனது!

 

 world-7-wonders-1

 

உலகின் ஏழு அதிசயங்கள்!

 

வகுப்பறையில் ஆசிரியர் குழந்தைகளை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். உலகின் சிறந்த அதிசயங்கள் ஏழு எவை? நீங்கள் உங்களுக்குள் விவாதித்தும் ஒரு  முடிவுக்கு வரலாம். தனியாகவும் பதிலைச் சொல்லலாம்.

 

 

சில குழந்தைகள் விவாதித்தன. ஒரு  முடிவுக்கு வந்தன. தங்கள் பட்டியலை அளித்தன இப்படி:

 

 

  • எகிப்தில் உள்ள பிரமிடுகள்
  • தாஜ்மஹல்

3) க்ராண்ட் கேன்யான்

4) பனாமா கால்வாய்

5) எம்பயர் ஸ்டேட் பில்டிங்

6) சீன நெடுஞ்சுவர்

7) பைசா கோபுரம்

 

 

இந்தப் பட்டியலால் மகிழ்ந்த ஆசிரியர் வகுப்பறையை நோக்கிய போது ஒரே ஒரு சிறுமி மட்டும் தனியாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

 

“என்ன, உனக்கென தனி லிஸ்ட் ஒன்று வைத்திருக்கிறாயா” என்று கேட்டார் ஆசிரியர்.

 

அந்தச் சிறுமி மௌனமாக வந்து தனது பட்டியலைத் தந்தாள்.

 

 

1) பார்க்க முடிவது

2) கேட்க முடிவது

3) தொட  முடிவது

4) சுவைக்க முடிவது

5) உணர்ச்சிபூர்வமாக உணர முடிவது

6) சிரிக்க முடிவது

7) அன்பு செலுத்த முடிவது

 

 

இவை நமக்குக் கிடைத்திருக்கிறதே! இவற்றையே உலகின் ஏழு சிறந்த அதிசயங்களாக நான் கருதுகிறேன் என்றாள் அந்தச் சிறுமி.

 

வகுப்பே அமைதியானது.

மேலோட்டமாக மனிதனால் அமைக்கப்பட்டவற்றை சிறந்த அதிசயமாகக் கருதுதல் சரியில்லை.

 

 

இயற்கையாக அமைந்துள்ள இவையல்லவோ சிறந்த அதிசயங்கள்!

 

 

அனைவரும் அந்தச் சிறுமியைப் பாராட்டி அந்தப் பட்டியலையே ஏக மனதாக ஆதரித்தனர்!

**********