இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும்

yaz devi
Yaz Devi Train

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1348; தேதி அக்டோபர் 15, 2014.

தமிழ் மொழி ஒரு விந்தையான மொழி. ஆயினும் பெரும்பாலும் இது சம்ஸ்கிருதம் போன்றது. இந்திய மொழிகள் அனைத்தும் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதிலும், வேற்றுமை உருபுகள் (எட்டு வேற்றுமைகள்), சந்தி இலக்கணத்திலும் பல ஒற்றுமைகளை உடையன. இவைகளில் வினைச் சொல் கடைசியாக வரும்— நான் வீட்டுக்குப் போனேன்— என்பதில் போனேன் என்பது கடைசியாக இருப்பது போல எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கும். கவிதைகளில் மட்டும் இது மாறும். ஆனால் உலகில் இந்த வரிசையைப் பின் பற்றாத நிறைய மொழிகள் உண்டு. இந்திய மொழிகளை எஸ். ஓ. வி சப்ஜெக்ட் – ஆப்ஜெக்ட் – வெர்ப் என்ற வகையில் சேர்ப்பர்.

சிறப்பு எழுத்துகள் (Special Letters)

தமிழில் மூன்று புள்ளி உடைய – ஃ — மற்றும் – ழ — ஆகிய இரண்டும் சிறப்பானவை. ஆய்த எழுத்து எனப்படும் ‘ ஃ ’ அக்கன்னா பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யலாம். இப்போதும், எப்போதும் அதிகம் பயன்படுத்தாத இந்த எழுத்து ஏன் வந்தது? இதன் பயன் என்ன? எப்போது வந்தது? என்பது தனி ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய விஷயம். ஆய்த எழுத்தா, ஆயுத எழுத்தா,ஆயத்த எழுத்தா?

தமிழில் ங, ஞ, ஔ ஆகியன அதிகம் பயன்படுவதில்லை. இது பற்றி தனி கட்டுரை எழுதிவிட்டேன். அரிச் சுவடியில் இரண்டு மூன்று வரிகளை வெட்டி விடலாம்!!!

நாம் மிகவும் கஷ்டப்பட்டு இந்திய இலங்கை பிரயோகங்களைச் சேகரித்து வந்தேன் ( கதைத்தல், மணக்குது, இருங்கள்/உட்காருங்கள் நிற்கிறேன்/ இருக்கிறேன், கதிரை, குசினி அறை முதலியன ) பிறகு சென்னையி லிருந்து வெளியாகும் ‘’கிரியா’’ தமிழ் அகராதியில் அவைகளை இலங்கை வழக்கு என்று ஆங்காங்கே கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் என் முயற்சியை விட்டுவிட்டேன். ஆனால் கிரியா அகராதியில் இல்லாத தமிழ் சொற்களை அவ்வப்போது குறித்து வைக்கிறேன்.
tamil boys

கிரியா (creA)அகராதியில் 1700 இலங்கைத் தமிழ் சொற்கள் உள்ளன(மொத்தச் சொற்கள் 21,000, இலங்கை வழக்கு மட்டும் 1700 சொற்கள்)

இலங்கையர்கள் கிரிக்கெட் என்பதை கிரிக்கெற் என்றும் லண்டனில் உள்ள பிரெண்ட் கவுன்சில் பெயரை பிரென்ற் என்றும் எழுதுவர். ‘ட்’ என்னும் ஒலியை ‘ற்’ என்று எழுதினாலும் உச்சரிப்பது சரியாகத்தான் இருக்கும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

வேத மந்திரத்தில் தவறு

இது பற்றி லண்டன் வாழ் தமிழ் சம்ஸ்கிருத/அறிஞர் திருச்சி கல்யாண சுந்தர குருக்களுடன் விவாதிப்பேன். அவர்களுக்கு இருதரப்பு அன்பர்களும் நண்பர்கள். அவர் இதைவிட பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். வேத ஒலிகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மாறவில்லை என்பது அவற்றின் தனிச் சிறப்பு. ஆனால் பஞ்சாபிலிருந்து வரும் பிராமணர்கள் வேதத்தில் ‘’ஷ’’ என்று வரும் இடங்களை அவர்கள் ‘’க’’ என்று மாற்றி உச்சரிக்கிறார்கள்! சஹஸ்ர சீர்ஷா ‘’புருஷ:’’ என்ற புருஷ சூக்த மந்திரத்தை அவர்கள் சஹஸ்ர சீர்ஷா ‘’புருக:’’ என்பர். இதை அவர் கூறியவுடன் எனக்கு வியப்பு மேலிட்டது. இந்து பஞ்சாபியருக்கு இது தவறு என்றும் புரிகிறது. ஆனால் ‘’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’’ என்பதால் மாற்ற முடியாது.
800px-Tamil_girls_group

இலண்டனில் நான் தலைமை தாங்கிய சில கூட்டங்களில் தமிழைக் கொலை செய்பவர்கள் இந்தியத் தமிழர்களா? இலங்கைத் தமிழர்களா? என்ற சர்ச்சை எழுந்தது உண்டு. இது இன்றைய கூட்டத் தலைப்புக்குப் பொருந்தா விஷயம், தனியாகப் பட்டிமன்றம் நடத்தினால் நானே வந்து ஒரு கட்சியைப் பேசவோ தலைமை தாங்கவோ தயார் என்பேன். உடனே அமைதி திரும்பும்.

எனது மனைவி கூட இலங்கைத் தமிழர்களின் தமிழ் — மிகவும் அழகாக இருக்கிறது — என்பாள். வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அவ்வப்போது செய்தி வாசிப்பவர்களைக் கண்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்று எனக்குத் தெரியும். உடனே அவர்கள் பயன்படுத்தும் கதைத்தல், பாரதூரமான, மனுஷி, கதிரை, குசினி என்ற சம்ஸ்கிருத, போர்ச்சுகீசியச் சொற்களைக் காட்டி இவை தமிழ் அல்லவே என்பேன்.

தமிழில் ‘’ழ’’ ஒரு சிறப்பு எழுத்து. வேறு மொழியில் இல்லை என்று சொன்னாலும் பிரெஞ்சு மொழியில் உள்ள ‘’ரோலிங் ஆர்’’ (Rolling R sound) ஒலியையும் சீன மொழியில் உள்ள ஒரு எழுத்தையும் இதனுடன் ஒப்பிடுவர். இவ்விரு மொழிகள் பற்றியும் அதிகம் தெரியாததால் ஆய்வு செய்யவில்லை. காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் மாபெரும் மொழியியல் அறிஞர். உண்மையில் அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. ரிக் வேதத்தில் இந்த ஒலி இருப்பதைக் காட்டி இருக்கிறார் ( சாந்தோகா, பௌழியா).

Indus_allahdino_weights
Indus Valley Weights

என்னுடைய கருத்து தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலகிற்கே மூல மொழிகள். நாம் இரு கண்கள் போலப் போற்றும் இவ்விரு மொழிகளைக் கொண்டு உலகையே அளந்து விடலாம். இந்த மொழிகள் இரண்டையும் தெரியாமல் யாராவது இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கினால் கால்டுவெல் பாதிரியார் உளறியது போல உளறி அகப்பட்டுக் கொள்வர் (கால்டுவெல் செய்த தவறுகள் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க)

60, 70, 80, தொன்பது
தமிழில் எழுபது, எண்பதுக்குப் பிறகு ஏன் தொன்பது வரவில்லை,
எழுநூறு, எண்ணூறுக்குப் பின் ஏன் தொன்னூறு வராமல் தொள்ளாயிரம் வருகிறது என்று பலர் ஏற்கனவே ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் ஆயிரம் வரிசை சொல்லும் போது மட்டும் ஏழாயிரம் எட்டாயிரத்துக்குப் பின் ஒன்பதாயிரம் என்று ஒழுங்காக வந்து விடும்.
இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது இவைகள் குறித்து எல்லாம், மாணவர்களை எச்சரிப்பேன்- தவறு செய்யாமல் இருப்பதற்காக!!

இதை சம்ஸ்கிருதத்திலும் காணலாம் ‘’ஊன’’ மாசிகம் முதலிய சொற்களால் மாதத்தைவிடக் ‘’குறைந்தது’’ (ஊன) போன்ற விஷயங்களை விளக்குவர். இந்த ஊனம்தான் ஒன் –பது (ஊன பத்து= 10—1=9) என்பர் சிலர்.

இன்னொரு சாரார் இந்தியாவில் எட்டு வரைதான் எண்கள் இருந்தன இதனால்தான் ‘’எண்’’ என்றால் = எட்டு என்பர். சம்ஸ்கிருதத்திலும் ‘’நவ’’ (9) என்றால் புதியது!!! ரிக் வேதத்தில் பிரமாண்டமான டெசிமல் சிஸ்ட (தசாம்ச முறை) எண்கள் இருந்தாலும் ஆதிகாலத்தில் எட்டின் மடங்கையே எடை விஷயத்திலும் எண்ணிக்கை விஷயத்திலும் இந்தியர்கள் பயன்படுத்தினர். இதற்கு சிந்து சமவெளி எடைக்கற்களும் (120, 240, 320) இந்தியாவின் பழைய நாணய முறைகளும் சான்று பகரும்.
i_scales

நான் சின்னப் பையனாக இருந்த போது காலணா காசுக்காக அம்மாவிடம் கெஞ்சுவேன். காலணாவுக்கு ஆறு மிட்டய் கிடைக்கும்!! நாலு காலணா= ஒரு அணா; 16 அணா = ஒரு ரூபாய். நாணயங்களும் நாலணா, எட்டு அணா என்றே வெளியிடப்படும். எல்லாம் நான்கின் எட்டின் மடங்கு!!! (மூன்று தம்பிடி=காலணா, ஒரு ரூபாய்= 64 கால் அணா நாணயங்கள் அல்லது 192 தம்பிடிகள்!!)

மதுரை வடக்குமாசிவீதி யாதவர் பள்ளிக் கூடத்தில் ஒண்ணாப்பு (ஒன்றாம் வகுப்பு படித்தேன்). பெரிய வகுப்பான ஐந்தாம் வகுப்பில் ஒரு மணி இருக்கும். பள்ளிக் கூடம் நாலரை மணிக்கு முடியும். அதற்கு முன்பு ராகம் போட்டு வாய்ப்பாடு சொல்வோம். அங்கும் கூட 16 ஆம் வாய்ப்பாடுதான் கடைசி வாய்ப்பாடு. ராகத்தோடு — (பூர்ணாஹுதி மந்திரம் போல) — உரத்த குரலில் 16 – 16 =256 என்று சொல்லி முடித்தவுடன் முடித்தவுடன் ஒரு பெரிய பையன் (லீடர்) பள்ளிக்கூட மணியை எடுத்துக்கொண்டு போய் அடிப்பான். எல்லோரும் ‘’ஓய்’’ என்று கத்திக் கொண்டு வெளியே ஓடுவொம். அங்கும் 16 (எட்டின் மடங்கு) தான் கடைசி.

மணக்குது, நாற்றம் அடிக்கிறது
மணக்குது:— இதை நாற்றம் அடிக்கிறது என்ற பொருளில் இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் மணக்குது என்றால் சுகந்த மணம் வீசுகிறது என்று பொருள் —(நெய் மணக்குது, நெய் மணக்குது—சபரி மலையிலே என்ற பாட்டு பிரசித்தமானது)— . அந்தக் காலத்தில் நாற்றம் என்றால் துர் நாற்றம் என்பது அல்ல. ஆனால் இன்று நாம் துர்வாசனை என்ற பொருளில் பயன் படுத்துகிறோம். எல்லா மொழிகளிலும் காலப்போக்கில் இப்படி பொருள் மாறும். இது பெரிய விஷயமல்ல.

இலங்கைத் தமிழர்களும் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். வீரகேசரி முதலிய பத்திரிக்கைகளில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தை கிழித்து எடுத்துக்கொண்டு ‘’ஹைலைட்டர்’’(Highlighter Pen) பேனா வைத்து ஆராய்ச்சி செய்வேன். தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் போலத்தான் அவையும். இதே போலத்தான் பேச்சுத் தமிழும் இருக்கிறது. இதே போக்கை பழங்காலத் தமிழ் கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

Sri Lanka Train to Jaffna

ஆக ஒட்டு மொத்தத்தில் எனது கருத்து சரியே. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, இனி வரும் எந்தக் காலத்திலும் சரி — சம்ஸ்கிருதக் கலப்பில்லாமல் யாரும் பேச முடியாது. இது இழுக்கு அல்ல. ஒரு மொழி வளர ஓரளவுக்கு மற்ற மொழிச் சொற்கள் தேவை. ஆனால் அந்த மொழித் தூய்மை கெடாத அளவுக்கு இதைச் செய்ய வேண்டும். இன்று எப்படி ஆங்கிலக் கலப்பிலாமல் நாம் பேச முடியாதோ அதைப் போலத்தான் சம்ஸ்கிருதமும்.

தமிழனின் ஆதங்கம்
தமிழர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) உண்டு. சம்ஸ்கிருதத்துக்குப் பின்னர் தான் தமிழ் மொழி வந்தது, இலக்கியம் வந்தது என்று சொன்னால் அது தாழ்வு என்று நினைக்கின்றனர். எப்படியாவது தமது மொழியையும் கலாசாரத்தையும் உலகிலேயே பழையது Oldest, greatest) என்று காட்ட வேண்டும் என்பது அவர்கள் துடிப்பு. ஒரு மொழியின், மதத்தின், கலாசாரத்தின் பெருமைக்கு பழமை மட்டும் காரணமாகது. நேற்று வந்த ஆங்கில மொழியும் இஸ்லாம் மதமும் உலகெங்கும் பரவி நல்ல செல்வாக்கான நிலையில் இருப்பதைப் பார்த்தால் இது புரியும்.

அல்லூறு: மலேசியத் தமிழர்கள் சாக்கடை, ஜலதாரை என்பதற்கு அல்லூறு என்பர். இலண்டன் தமிழ் சங்கத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த (காலங்சென்ற) திரு கணபதி அவர்கள் இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்வார். இது பழந்தமிழ் சொல் என்றும் மலேசியர்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்றும் சொல்லுவார். நான் படித்தவரை இது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் பிற்காலத் தமிழ் நூல்களில் இருக்கிறதா என்றும் தெரியாது. கிரியா அகராதியில் (2008 பதிப்பு) இல்லை. ஒருவேளை பழந்தமிழ் சொல்தான் என்று நிரூபிக்கப்பட்டாலும் ஒரு தமிழ் சொல்லை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. மலையாள த்தில் இன்றும் கூட வழக்கொழிந்த நிறைய பழந்தமிழ் சொற்களைப் பயன்படுத்து கின்றனர்.

தமிழ் வாழ்க! சம்ஸ்கிருதமும் வாழ்க!!

“அன்புள்ள மாணவர்களே!”- விவேகாநந்தர் வேண்டுகோள்

vivek stamp

Compiled by London Swaminathan
Post No.1346; Dated 14th October 2014.

சுவாமி விவேகாநந்தர் 1891 ஆம் ஆண்டில் ரஜபுதனத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி:

“அன்புள்ள மானவர்களே!

“சம்ஸ்கிருத மொழியைப் படியுங்கள். அத்தோடு மேலை நாட்டு விஞ்ஞான பாடங்களையும் படியுங்கள். எதையும் துல்லியமாகக் கணக்கிடக் கற்றுக் கொள்ளுங்கள். நன்றாகப் படித்துப் பாடுபடுங்கள். அப்போதுதான் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வ அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும் காலம் வரும். இப்போது இந்திய வரலாறு உருச் சிதைந்து போய் கிடக்கிறது.

“ஆங்கிலேயர்கள் எழுதிய இந்திய வரலாறுகள் நம் மனதில் பலவீனத்தை உண்டாக்கும், ஏனெனில் நாம் அடைந்த தோல்விகளைப் பற்றி மட்டுமே அவர்கள் எழுதுகிறார்கள்.
“வெளிநாட்டுக்காரர்கள் எப்படி நம் வரலாற்றை எழுதமுடியும்? அவர்களுக்கு நம்முடைய பழக்க வழக்கங்களோ சமய தத்துவ விஷயங்களோ தெரியாதபோது பாரபட்சமற்ற, நியாயமான வரலாற்றை எழுதமுடியுமா?

malaysian-postal-stamp-on-swami-vivekananda

“நாமே நமக்கு சுதந்திரமான ஒரு வழியை வகுத்துக்கொண்டு வரலாற்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். புராண, இதிஹாசங்களைப் படித்து அவற்றின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான, துல்லியமான வரலாற்றை எழுத வேண்டும். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு சாதனமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவது இந்தியாவின் மீது பாசமும் பரிவும் உள்ளதாகவும் ஆன்மநேயத்தைத் தட்டி எழுப்புவதாகவும் இருக்கட்டும்.

“இந்தியர்கள்தான் இந்திய வரலாற்றை எழுத வேண்டும்.

“மறைந்து கிடக்கும் அரிய பெரிய பொக்கிஷங்களை அழிவிலிருந்து மீட்டுத் தருவது உங்களின் தலையாய பணியாகட்டும். ஒரு குழந்தை காணாமல் போய்விட்டால் அதைக் கண்டுபிடிக்கும் வரை (ஒரு தாய்) அமைதியாக இருப்பார்களா? அதேபோல மக்களின் உள்ளத்தில் இந்தியாவின் மகத்தான பழம்பெருமையை நிலைநாட்டும் வரை உங்கள் பணியை நிறுத்த முடியுமா? அதுதான் நீங்கள் கற்கும் உண்மையான தேசிய கல்வி — அதை அடையும்போது தேசிய உணர்ச்சி விழித்தெழுவதைக் காண்பீர்கள்.

இந்தியாவின் உண்மை வரலாற்றைக் கண்டெடுக்கும் நாளில் இந்தியா உலகிற்கு ஆன்மீக விஷயத்தில் மட்டும் அல்ல, அறிவியலிலும் நுண்கலைகளிலும் இந்த உலகிற்கே குரு என்று பறைசாற்றப்படும்.

vivekananda stamps

ஆதார நூல்கள்:
From Life of Swami Vivekananda (Mayavati Edition, 1961;pages 213,214 Instructions given to a group of University students of Rajaputana in 1891)
Also Complete Works of Swami Vivekananda –Vol.5, page 534(Mayavati Edition, 1961).

5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் கட்டிய விமானம்!

Vaimanika_Shastra_title_page

By ச.நாகராஜன்
Post No1344; Dated 13th October 2014

‘புஷ்பக விமானம் குளுகுளு சாதன வசதியைக் கொண்டது. மனோவேகத்தில் பறக்க வல்லது. பயணிகளுக்குத் தக்கபடி அதன் அளவைக் கூட்ட வல்லது. இதை விஸ்வகர்மா பிரம்மாவிற்காக உருவாக்கினார். பிரம்மா இதைக் குபேரனுக்குத் தர குபேரனிடமிருந்து ராவணன் கவர்ந்து கொண்டான்”
– வால்மீகி ராமாயணம்

இன்னும் 20 வருடங்களில் ஒரு அயல்கிரகவாசியைப் பார்த்து விடுவோம் என்ற நாஸா விஞ்ஞானியின் அறிவிப்பு 2014 ஜூலையில் வெளி வந்து பிரமிக்க வைத்ததைப் பார்த்தோம். இதைத் தொடர்ந்து இதே ஜூலை மாதம் (18-7-2014 ஆங்கில நாளிதழ்களில் வெளியான செய்தியின் படி) சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜே.ஆர்,பகத் என்ற தொல்லியல் ஆராய்ச்சி வல்லுநர் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால குகையில் சில ஓவியங்களைக் கண்டு பிடித்துள்ளார். இவை அயல்கிரகவாசிகள் வந்த பறக்கும் தட்டுகளைப் போல உள்ளது என்ற அவரது கூற்றால் சட்டீஸ்கர் மாநில அரசு மேற்கொண்டு இதை ஆராய நாஸாவையும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவையும் அணுகலாம் என தீர்மானித்துள்ளது.

இப்படிப்பட்ட செய்திகள் அவ்வப்பொழுது உலகெங்கிலுமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன. அயல்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வருவதை விட ஒரு அதிசயமான செய்தி இந்தியர்களாகிய நாம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் அமைத்துப் பறந்தோம் என்பது தான்!

2012 இல் வெளியான இந்தச் செய்தி 2013ஆம் ஆண்டில் மிக்க பரபரப்பான ஒன்றாக ஆனது. ரஷிய உளவுத்துறை முகமையான ரஷியன் ஃபாரின் இன்டெலிஜென்ஸ் சர்வீஸ் எனப்படும் SVR இந்தச் செய்தியை வெளியிட்டதால் அதிகாரபூர்வமான ஒன்றாக இது உலகெங்கும் கருதப்பட்டது.

இந்தச் செய்தியின் படி 5000 ஆண்டுகள் பழமையான ஒரு இந்திய விமானம் ஆப்கானிஸ்தானத்தில் ஒரு காலக் கிணற்றில் (TIME WELL) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குகை போன்ற இதிலிருந்து விமானத்தை மீட்க முயன்ற எட்டு அமெரிக்கர்கள் காணாமல் போயினர். இது தான் பரபரப்புக்குக் காரணமாகியுள்ளது. மேலை உலகத்தின் பல பிரபலமான தலைவர்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ளது இந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

vim01

ஆப்கனிஸ்தானத்தில் உள்ள பாலைவனத்தில் உளவுப்பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த போது இந்த அமெரிக்கர்கள் இந்த விமானத்தைப் பார்த்தனர். ஆனால் அதை எடுக்க அவர்களால் முடியவில்லை. எடுக்க விடாமல் அங்கு “ஏதோ ஒரு ஆற்றல்” அதைப் பாதுகாக்கிறது என்பதை அறிந்து கொண்டனர்.

மகாபாரதத்தில் உள்ள 50 அத்தியாயங்களை நன்கு ஆராய்ந்த சர் டெஸ்மாண்ட் லெஸ்லி, ” அதில் குறிப்பிடப்படும் விமானங்கள் உண்மையில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து வேகத்துடன் பறப்பவை” என்று கூறுகிறார்.

சில வருடங்களுக்கு முன்னால் சீனாவைச் சேர்ந்த சிலர் திபத்தில் உள்ள லாஸாவில் சம்ஸ்கிருத சுவடிகள் சிலவற்றைக் கண்டதாகவும் சண்டிகரில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு அதை மொழிபெயர்த்துத் தர அனுப்பியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்மணி டாக்டர் ருத் ரெய்னா (Dr Ruth Reyna) அந்த சுவடிகள் கிரகம் விட்டு கிரகம் செல்லும் விண்கலங்களைப் பற்றி விவரிக்கின்றன என்றார்.

அதில் இருக்கும் புரபல்லர்கள் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செல்லும் அமைப்பைக் கொண்டவை என்றும் இதையே நமது பழைய இதிஹாஸங்கள் மற்றும் யோக நூல்கள் லகிமா என்று குறிப்பிடுகின்றன என்று குறிப்பிடுகிறார். இந்தச் சுவடிகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை என்று குறிப்பிடும் அவர், அதில் அனிமா (யார் கண்களுக்கும் தெரியாமல் மறையும் தன்மை) கரிமா (ஈய மலை போல மிகவும் கனமாக ஆகும் தன்மை).ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார்.

vimana types

மகாபாரதம் குறிப்பிடும் இந்த பறக்கும் விமானங்கள் நான்கு சக்கரங்களையும் 12 அலகுகள் என்ற அளவையும் கொண்டுள்ளதாம்! தீ ஜுவாலையுடன் எழும்பும் இந்த விமானங்களோடு ரெப்ளக்டர் எனப்படும் சூரிய ஒளியை கற்றையாக பிரதிபலிக்கும் அபூர்வ ஆயுதங்களைப் பற்றியும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. எதன் மீது அந்த ஒளிக்கற்றை செலுத்தப்பட்டாலும் அந்த பொருள் அதே கணம் பஸ்மமாக ஆகி விடும்!

இந்த விவரங்களை எல்லாம் அறிந்து கொண்ட மேலை உலகம் விசித்திரமான இந்த ஆயுதம் தங்களின் எதிர்காலப் போர்களுக்கு உதவும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆகவே அமெரிக்க அரசும் ஐரோப்பிய நாடுகளும் இதன் மீது கவனம் செலுத்தின. இரகசியமாக தங்கள் நாட்டு நிபுணர்களை அனுப்பி அமெரிக்கர்கள் காணாமல் போன மர்மத்தை ஆராயுமாறு அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளன.

பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராயும் அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் ஃப்ராங்க்ளின் ரூஹெல் தான் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகள் மூலமாக இந்திய இதிஹாஸங்களான ராமாயணமும் மஹாபாரதமும் அணு ஆயுதங்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் விரிவாக விளக்குகின்றன என்கிறார். பல அறிவியல் தொலைக்காட்சி தொடர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஆலோசகராகப் பணியாற்றிய இவரது புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கும் பரபரப்புடன் விற்பனையாகியுள்ளன.
“இந்திரனுடைய விமானங்களைப் பற்றி 32 விளக்கங்கள் உள்ளன. விமானம் இயக்கும் விதம், அதன் வடிவமைப்பு, ஒளி விளக்குகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சூரியனுடைய ஆற்றலால் இயங்கும் விமானங்கள் இவை. லேசர் ஒளி ஆயுதங்கள், ராடார் திரைகள் ஆகியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது” என்று அவர் வியந்து கூறுகிறார்.

டாக்டர் ரூஹெல்லைப் போன்றே பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த கர்னல் ஆல்காட், பிரிட்டனைச் சேர்ந்த டபிள்யூ..ரேமாண்ட் ட்ரேக், பரத்வாஜ ரிஷியின் விமான சாஸ்திரத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் வெளியிட்ட மைசூரைச் சேர்ந்த ஜி,ஆர், ஜோஸ்யர், சமிபத்தில் இது பற்றி ஆராய்ந்த கிருஷ்ண குமார், உள்ளிட்ட ஏராளமானோர் பழங்கால இந்திய விமானங் களைப் பற்றிக் குறிப்பிட்டு விரிவாக விளக்கியுள்ளனர்.

talpade-shastry2-Copyright-300x182

இதன் கடைசி அத்தியாயமாக ஆப்கானிஸ்தானத்தில் இந்திய விமானத்தை எடுத்து வரச் சென்ற அமெரிக்கர்கள் மாயமான மர்மம் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

விடோல்ட் ஹ்யூர்விஸ் (Witold Hurewicz) என்பவர் பிரபலமான போலந்தைச் சேர்ந்த கணித மேதை. (தோற்றம்: 29-6-1904 மறைவு 6-9-1956) டோபாலஜி என்ற கணிதப் பிரிவில் பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஆனால் பெரிய மறதிப் பேராசிரியர்.

பென்ஸில்வேனியாவில் ஒரு முறை சொற்பொழிவு நிகழ்த்த அவர் சென்றிருந்தார். போஸ்டனில் அவருடன் படித்திருந்த அவரது சகாக்கள் பலரும் அதைக் கேட்க ஆவல் கொண்டிருந்தனர். ஆகவே அனைவரும் ஒரு புகைவண்டியில் ஏறி பயணப்பட்டனர். சொற்பொழிவைக் கேட்டு ஆனந்தித்து, பின்னர் டின்னரையும் முடித்துக் கொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் புகைவண்டியில் ஏறி ஊருக்குத் திரும்பினர். ஸ்டேஷனுக்கு அவர்களை வழியனுப்ப வந்திருந்த ஹ்யூர்விஸ் தனது காரைக் காணாமல் திகைத்தார். ஆகவே போலீஸாரிடம் தன் காரை யாரோ திருடி விட்டதாகப் புகாரும் கொடுத்தார்.

சில நாட்கள் சென்ற பின் போலீசார் அவரிடம் வந்து அவரை கார் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறினர். கார் அவரது கார் ஷெட்டிலேயே பிலடெல்பியாவில் இருந்தது!

1956ஆம் ஆண்டு இண்டர்நேஷனல் சிம்போஸியம் ஆன் அல்ஜிப்ரெய்க் டோபாலஜி என்ற கருத்தரங்கம் மெக்ஸிகோவில் உக்ஸ்மல் என்ற இடத்தில் நடை பெற்றது அதில் கலந்து கொள்ளச் சென்றார் ஹ்யூர்விஸ். ஒரு நாள் பழைய கால நாகரிகமான மாயா நாகரித்தினர் அமைத்த பிரமிட் ஒன்றின் உச்சியில் ஏறினார். தான் எங்கிருக்கிறோம் என்பது அவருக்கு மறந்து விட்டது. கால் தவறி காலை எங்கோ வைக்க அவர் மேலிருந்து விழுந்து இறந்து போனார். அவரது மறதியே அவர் உயிரைப் பலி வாங்கி விட்ட்து என்கின்றனர் விஞ்ஞானிகள்!

My brother S Nagarajan wrote this article for Tamil Magazine “Bhagya”:swami

Pictures are taken from other websites;not related to this article; thanks.

சிரியா, துருக்கியில் இந்துக்கள் ஆட்சி!

mitanni

Research paper written by London Swaminathan
Research article No.1342; Dated 12th October 2014.

சிரியாவும் துருக்கியும் இப்போது முஸ்லீம் நாடுகள். ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன் இவையும் இராக்கும் ஈரானும் இந்துக்கள் ஆண்ட இடங்கள்! நான் சொல்லும் விஷயம் புதிதல்ல. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே நடந்த அகழ்வாராய்ச்சிட்யில் கண்ட விஷயங்களை வேண்டுமென்றே வெளிநாட்டு அறிஞர்கள் மறைத்துவிட்டு ஆரிய—திராவிட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டனர். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1932 ஆம் ஆண்டில் சென்னையில் நடத்திய உபந்யாசத்தில் கூட இதை எல்லாம் பற்றிப் பேசியுள்ளார். அதே போல அவர் சுட்டிக்காட்டிய இன்னும் ஒரு விஷயம் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டில் 1600 ஆண்டுக்கு முந்தைய மூலவர்மன் கல்வெட்டாகும். அதாவது தென்கிழக்காசிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோநேசியா அனைததையும் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆண்டனர்.

வெளிநாட்டு “அறிஞர்கள்”, திராவிட “அறிஞர்கள்”, மார்கசீய “அறிஞர்கள்” ஆகியோரின் கூட்டுச் சதித் திட்டத்தில் நமது வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. இன்று வரை நம் குழந்தைகள் மௌர்ய சாம்ராஜ்யம் அதற்கு முன் சிந்து சமவெளி நாகரீகம் என்று படித்துக் கொண்டிருக்கின்றனர். அதவது 1500 ஆண்டு இடைவெளி! இந்த 1500 ஆண்டுகளில் ஆண்ட மன்னர் பட்டியல் புராணங்களில் உள்ளது. மெகஸ்தனீஸ் இந்தியா வந்தபோது மகத சாம்ராஜ்யத்தின் 154ஆவது மன்னர் ஆள்வதாகவும் அதற்கு 6000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஆட்சி துவங்கியதாகவும் எழுதி இருக்கிறார். இனியாவது நம் பிள்ளைகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உண்மைத் தகவல்களையாவது கற்க வழி செய்யவேண்டும்.

வரலாற்றில் ஆர்வம் உடையோர் தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்:
1.அமர்னா கடிதங்கள் ( தசரதன் எழுதிய 13 கடிதங்கள் )
2.பொகஸ்கோய் கல்வெட்டு
3.மிட்டன்னிய நாகரீகம்
4.கிக்குலி எழுதிய குதிரைப் பயிற்சி நூல்

(அமர்னா என்பது எகிப்து நாட்டிலும், பொகஸ்கோய் என்பது துருக்கி நாட்டிலும், மிட்டனியர் ஆண்ட பிரதேசம் சிரியா நாட்டிலும் உள்ளன)

hittite3

இவை எல்லாம் விக்கிபீடியா போன்ற எல்லா கலைக் களஞ்சியங்களிலும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. இவை தவிர காசைட்டுகள், ஹிட்டைட்டுகள், ஹிக்சோஸ் (யக்ஷர்கள்) மூவர் பற்றியும் படிக்கவேண்டும். இவற்றில் தமிழர் வரலாறும் உள்ளது. கே.கே. பிள்ளை என்பார் கி.மு.1800-வாக்கில் எகிப்தைத் தாக்கியோர் இலங்கையை சேர்ந்த யக்ஷர்கள் என்கிறார். நிற்க.

முதலில் சிரியா, துருக்கியை ஆண்ட மிட்டன்னிய நாகரீக வரலாற்றை சுருங்கக் காண்போம். இவர்கள் யார் என்பதும், எப்படி வந்தார்கள் என்பதும் இதுவரை மர்மமாக உள்ளது. இவர்கள் இந்துக்கள் என்பதால் யாரும் ஆராய்ச்சியும் செய்யாமல் ஒதுங்கிவிட்டனர். இவர்களை ஆர தீர ஆய்ந்தால் திராவிட, ஆரிய வாதம் தவிடுபொடியாகி விடும் என்பது அறிஞர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல. இந்தியர்கள் உலகெங்கும் குடியேறி நாகரீகத்தைப் பரப்பியதும் தெரிந்துவிடும். இதனால் வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிய பல நூறு புத்தகங்கள் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும் என்பதும் தெரியும்.ஆகையால்தான் மௌனம்!!!

மிட்டன்னிய நாகரீகம் பற்றி முதலில் கி.மு.1500 வாக்கில் எகிப்தில் ஒரு கல்லறையில் குறிப்பு இருக்கிறது. பிறகு 400 ஆண்டுகளுக்கு இவர்கள் பற்றி ஆங்காங்கே பேச்சு அடிபடுகிறது. இவர்கள் பெயர்கள் எல்லாம் ராமாயணம், புராணம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றில் வரும் தூய சம்ஸ்கிருத பெயர்களாக இருக்கின்றன. மிகவும் அதிகம் அடிபடக்கூடிய மிட்டன்னிய மன்னன் தசரதன் என்பவன் ஆவான். அவன் தனது மகள் ததுஹிபாவை (தத்த சிவா) எகிப்திய மன்னன் அமனோபிசுக்கு மணம் செய்துகொடுத்தான். அவன் இறக்கவே, அடுத்த மன்னன் அவளை மனைவியாக வரித்துக் கொண்டான்.
எகிப்திய- மிட்டனிய தொடர்புக்குப் பின்னர் எகிப்தில் ஏராளமான சம்ஸ்கிருத பெயர்கள் கிடைக்கின்றன. ராம்செஸ் என்ற பெயரில் மட்டுமே 11 மன்னர்கள் இருக்கின்றனர். இந்த ராம்செஸ் பற்றியும் காஞ்சி பரமாசர்ய ஸ்வாமிகள் 80 ஆண்டுகளுக்கு முன் பேசி இருக்கிறார். யாரும் கண்டுகொள்ள வில்லை!!!!
அந்தக் காலத்தில் ஒவ்வொரு மன்னனும் பல்வேறு நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வது மரபு. யாரேனும் படை எடுத்தால் உடனே பெண் கொடுத்த நாடுகளும் படை அனுப்பும். இந்த முறையில்தான் தசரதனும் எகிப்துக்குப் பெண் (தனது மகள்) கொடுத்தான். எகிப்திய மன்னனோ மலை முழுங்கி மஹாதேவன். தசரதன் எவ்வளவோ கடிதங்கள் எழுதியும் பதிலே சொலவில்லை.

Cuneiform_letter_to_Amenhotep_III
Dasaratha Letters in cuneiform script

அன்புச் சகோதரனே,
நான் ஐந்து ரதங்களையும் அவற்றுக்கான குதிரைகளையும் அனுப்பினேனே. தங்க மோதிரம், காதுக்கான தோடுகள் அனுப்பினேனே. வந்து சேர்ந்ததா? ஏன் பதிலே எழுதவில்லை? நான் உனக்கு உடம்பில் நோய் தீர இரண்டு முறை இஷ்டார் (துர்கையின் தங்கச் சிலை) விக்ரஹம் அனுப்பினேனே. ஏன் பதிலே இல்லை? இப்படிப் புலம்பித் தள்ளி இருக்கிறான கடிதங்களில். இவை எல்லாம் கி.மு 1340க்கு முன்!! அப்புறம் தசரதனை அவனது மகனே கொலை செய்ததாகவும் வரலாறு போகிறது.

தசரதன் செய்த ஒரு உடன்படிக்கையில் வேத மந்திரங்களில் வரும் மித்ரன், வருணன், இந்திரன், நாசத்யர் (அஸ்வினி குமாரர்கள்) அக்கிய நான்கு தெய்வங்களின் பெயரில் சத்தியப் பிரமாணம் செய்து உடன் படிக்கை செய்துகொண்டனர். இது பொகஸ்கோய் கல்வெட்டில் இருக்கிறது. மித்ரனை இவர்கள் முதல் தெய்வமாக வணங்கியதால் இவர்கள் தங்களை மித்ரன்னியர் (மிட்டனி) என்று அழைத்துக் கொண்டனர். நகர நாகாரீகம் நடத்திய நகரீகம் மிக்கவர் என்பதால் மற்றவர்கள் இவர்களை நகரிக, நாகரீக என்றும் அழைத்தனர். இவர்களை வேறு பல சொற்கள் கொண்டும் குறிப்பிடுகின்றனர். அவற்றின் பொருள் தெரியவில்லை.

மிட்டன்னியரில் தசரதனைப் போல பிரதர்தன என்று ஒருவன் பெயர். இந்த மன்னன் பெயர் நமது புராண மன்னர் பட்டியல் சஹஸ்ரநாமம் ஆகியவற்றில் வரும் பெயர். மற்றொன்று புத்தரின் தந்தை சுத்தோதனன் போல உள்ளது. இவர்கள் அனுப்பிய கிக்குலி என்பான் எழுதிய குதிரைப் பயிற்சி நூலில் சம்ஸ்கிருத எண்கள் இருப்பதையும் பல கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

800px-Mitannian_-_Cylinder_Seal_with_a_Row_of_Human_Figures_above_Animals_-_Walters_42685

Mitannian seal

தசரதன் எழுதிய கடிதங்கள் அமர்னா என்னும் இடத்தில் கிடைத்ததால் அவைகளை அமர்னா கடிதங்கள் என்பர். இதில் ஒன்று பிரான்சில் காட்சியகத்தில் இருக்கிறது. இறுதியாக தசரதன் மன்னன் சத்திவாச(சத்ய வாசன்) ஹிட்டைட் மன்னர்களுக்குக் கப்பம் கட்டும் மன்னன் ஆகி உடன்படிக்கை செய்து கொண்ட தகவலும் கிடைத்திருக்கிறது. மிட்டன்னிய வம்சம் ஆண்ட தலை நகர் வசுகன்னி எங்கே இருக்கிரது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆராய்ச்சியாளர்கள் ஊகத்தின் பேரில் கட்டுரை எழுதி இருக்கிறார்கள். ஹுர்ரியன் என்ற பெயரும் உண்டு. இது சூரியன் என்பதன் மரூஉ ஆகும். சூரியன்=மித்ரன்=மிட்ரன்ய=மிட்டன்னி.

சில மொழிகளில் வேற்று மொழிச் சொற்களை எழுதும்போதும் சில எழுத்துக்களில் (லிபி) வேற்று மொழிச் சொற்களை எழுதும்போதும் அதே சபதத்தைக் கொண்டுவர முடியாதென்பது உலகறிந்த உண்மை.

ஜெயலலிதா, ஷேக்ஸ்பியர் முதலிய சொற்களை 500 ஆண்டுகளுக்கு முன் சேக்சுபியர், செயலலிதா என்றே எழுதியிருப்பர். பின்னர்தான் ஜ, ஹ,ஷ, க்ஷ எனபன (கிரந்த எழுத்துக்கள்) சேர்க்கப்பட்டன. இது போல பல சம்ஸ்கிருத பெயர்கள் கியூனிபார்ம் எழுத்துகளில் எழுதப்பட்டபோது சிறிது உருமாறி யிருக்கலாம். இன்றும் கூட தமிழிலோ சம்ஸ்கிருத்திலோ HARRY POTTER ஹாரி பாட்டெர் என்ற ஒலியை ஆங்கிலத்தில் உச்சரிப்பது போல எழுதவே முடியாது. இது தெரியாமல் பல “அறிஞர்கள்” மொழியியல் என்ற பெயரில் உளறி வருகிறார்கள். இன்றும் கூட தமிழில் இருதயம், முகம் போன்ற வடமொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல்லே இல்லை. இதை வைத்துக் கொண்டு தமிழனுக்கு இதயமே இல்லை என்று சொன்னால் பரிகசிக்கமாட்டர்களா?

மிட்டன்னிய மன்னர் பட்டியல்

கீர்த = கிரீட, அல்லது கீர்த்தி எனப் பொருள் கொள்ள முடியும்
சுத்தர்ன = புத்தரின் தந்தை சுத்தோதன போன்றது
பரதர்ன = பிரதர்தன
சௌஸ்ததர = சௌசதர (சௌசம் = சுத்தம்)
அர்த தாம = புகழ் பெற்ற ருத்ர தாமன் என்ற அரசன் பெயர் போன்றது
சுத்தர்ன 2
அர்தகுமார = குமார
அர்த தாம 2
சுத்தர்ன 3
சத்திவாச/ கீர்த்திவாச = சத்ய வாச அல்லது வாக்ய; க்ருத்திவாச எனபது சிவபெருமானின் ஒரு பெயர்
சத்துவர = சத்வ அல்லது சத்யவரன்
வசசத்த = வசு சத்ய
சத்துவர 2

mitanni

மேற்கண்ட சப்தங்கள் சம்ஸ்கிருதம் என்பது உறுதியானபோதும் எழுதப்பட்ட லிபியின் காரணமாகவும், எழுதப்பட்ட பிராந்தியம் காரணமாகவும் உருமாற்றம் அடைந்தன. தமிழ் ஊர்ப் பெயர்களை வெள்ளைக்காரர்களும் கிரேக்கர்களும் உருத்தெரியாமல் சிதைத்ததை நாம் அறிவோம். ஆரல்வாய் மொழி என்பதை ஆராம்பொலி, தஞ்சாவூர் என்பதை டேஞ்சூர் என்று ஆயிரக்கணக்கான இடப்பெயர்களைச் சிதைத்தனர். இதற்காக டேஞ்சூர் தமிழ் ஊர் இல்லை நாம் சொல்வதில்லை.

மேலும் மேற்கூறிய பெயர்கள் தந்தை பெயரை பேரனுக்குச் சூட்டும் இந்து முறையில் மாறி மாறி வருவதையும் காணலாம். அது மட்டுமல்ல பாண்டிய மன்னர்கள் சடையன், மாறன் ஆகிய பெயர்களை மாறி மாறி வைத்துக் கொண்ட முறையையும் காண்கிறோம் (ஜடா வர்மன், மாறவர்மன்)
அமெனோபிஸ், ஆகநாடன் ஆகிய இருவருக்கும் பின் வந்த துதகாமுன் என்ற ரசனின் மனைவி பெயர் அங்கனா. இதை அஞ்சனா அல்லது அங்கனா (தேவலோக மகளிர்=சுரா+அங்கனா) என்றும் படிக்கலாம்.

பஞ்ச ஜனா:
வேதத்தில் பஞ்ச ஜனா: என்று ஐந்து வகை மக்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் த்ருஹ்யூ என்னும் குடியினர் மேற்காசிய நாடுகள் அனைத்துக்கும் சென்று இந்து கலாசாரத்தைப் பரப்பினர். இது கி.மு 2000 ல் அல்லது அதற்கு முன் நடந்தது என்பதை சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்? என்ற கட்டுரையில் சில தினங்களுக்கு முன் கொடுத்து இருக்கிறேன்.

mitanni_map

அகத்திய, கௌண்டின்ய கோத்த்ர ரிஷிக்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று கிழக்கு திசையில் கலாசாரத்தைப் பரப்பியது போல இதுவும் கலாசார பரப்புதலாகத் துவங்கி அரசியலில் முடிந்தது.
—-சுபம் —

ரிஷிகள் யார்? ரிஷிகள் எத்தனை வகை?

rishi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1340; தேதி அக்டோபர் 11, 2014.

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.

நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.

ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.

இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது. ஆதி சங்கரர் ஒரு துதியைப் (கனக தாரா ஸ்தோத்திரம்) பாடும்போது தங்க நெல்லிக்காய் மழை பெய்தது. முத்து சுவாமி தீட்சிதர் ஒரு ராகத்தைப் (அமிர்தவர்ஷனி) பாடும்போது மழை கொட்டியது. நாம் அதையே துதிக்கும் பொழுதும், பாடும்பொழுதும் ஏன் அப்படி நடப்பதில்லை?

rishi shishya

1.அவர்களைப் போல சொல், செயல், சிந்தனை மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும்.
2.அவர்களைப் போல தீவிரம் (Intensity ஈடுபாடு) மற்றும் நேரம், காலம், சூழ்நிலை அணுசரனையாக இருக்க வேண்டும். நேரம், காலம், சூழ்நிலை பற்றி அவர்கள் ஞானக் கண்ணால் அறிய முடியும்.
“ரிஷிர் தர்சனாத் ஸ்டோமன் ததர்ச இதி ஔவமன்யவ:” — என்பதை யாஸ்கர் மேற்கோள் காட்டுவார்.

அவர்கள் “சூத்ர த்ருஷ்டா” என்றும் “சூத்ர கர்தா” இல்லை என்றும் சொல்லுவர்.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.

தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.

தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிக்களும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.
இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.

shankarasiva

இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

agastya in nepal,bharatkalyan97.blogspot

பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:

மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்

ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்

சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்

உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
– சுபம் —

சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்?

interpreter

Indus Valley Interpreter in Akkadian Cylinder Seal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1338; தேதி அக்டோபர் 10, 2014.

உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதில் எட்டாவது மண்டலத்தில் பல புரியாத, புதிர்கள், மர்மமான விஷயங்கள் இருந்தன. இப்போது மேற்காசியாவில் உள்ள சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் பற்றி மேலும் மேலும் தகவல் கிடைக்கவே ஒவ்வொரு புதிராக விடுவிக்கப்படுகின்றது. எட்டாவது மண்டலத்தில் நிறைய வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அவைகள் —அசுரர்கள் பற்றியவை. அசுரர்கள் என்போர் — வேத காலத்தில் பிரிந்து சென்ற இந்துக்கள் தான்.

ரிக்வேதத்தில் மிகவும் விரிவாகப் பேசப்படும் யுத்தம்—தச ராக்ஞ யுத்தம்—அதாவது பத்து ராஜா போர் — இந்தப் போருக்குப் பின்னர் பல இந்துக்கள் மேற்கே ஈரானிலும் இராக்கிலும் குடியேறினர். வேதங்களைப் படித்த ஜொராஸ்தர் என்பார் தனியாக ஒரு கோஷ்டியைக் கூட்டிக்கொண்டு ஈரானுக்குப் போய் பார்ஸி மதத்தை ஸ்தாபித்தார். அவர் நிறுவிய மதம் வேத கால யாக யக்ஞங்களைப் பின்பற்றினாலும் வேதம் யாரை தேவர் என்று சொல்கிறதோ அதை அவர்கள் அசுரர் என்பர் — அதாவது கோஷ்டிப் பூசல் — ( திராவிட கழகம் உடைந்து நமது காலத்திலேயே பல ‘’மு.க.’’ க்கள் உண்டானது போல)

இது ஒரு புறமிருக்க — சில மன்னர்களின் பெயர்கள் ரிக் வேதத்திலும் பார்ஸி மதப் புத்தகமான சென் ட் அவஸ்தாவிலும் ஒன்றாக இருப்பதை பலரும் கவனித்தனர். சுமேரியாவில் பயன்படுத்தப்படும் ‘’மாண’’ என்ற எடை ரிக் வேதக் கவிதையிலும் உள்ளது. இதைக் கண்ட மாக்ஸ்முல்லர் கூட, இந்த ஒப்பீடு சரி என்றால், வேதத்தின் இந்தப் பகுதி மிகப் பழமையானதாகத் தான் இருக்கும் என்றார். இப்போது அந்தப் பகுதி எல்லாம் கி.மு.2000 ஐ ஒட்டியது என்பது ‘’நிரூபணம் ஆகிவிட்டது.’’

talageri good

Vedic Hindus Migratory Route from Talagei’s book The Rig Veda- A Historical Analysis.

உலகம் முழுதும் சுமேரிய, எகிப்திய, சீன, எபிரேய (ஹீப்ரு) வரலாற்று நூல்களில் வரும் மன்னர்களுக்கு எல்லா என்சைக்ளோ பீடியாக்களிலும் (கலைக் களஞ்சியம்) தேதி — ஆண்டு குறித்து விட்டனர். இந்தியாவில் மட்டும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைய வரலாற்றை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!!!!!

புதிய வரலாற்றின்படி பார்த்தால் எது கி.மு.2000 என்று வருகிறதோ அதுதான் ரிக்வேதத்தின் கடைசி பகுதி. இதை வைத்து ஸ்ரீஈகாந்த் தலகரி போன்றோர் இதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது ரிக் வேதத்தின் பழைய பகுதி என்று காட்டுகின்றனர். சுருங்கச் சொன்னால் வேதத்தின் பல பகுதிகள் கி.மு 4000–ஐ ஒட்டி எழுந்தது எனலாம். இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன்னர்!!!

பாரசீக மொழி ஆய்வாளர்களும் ரிக்வேதத்தின் எட்டாவது மண்டல காலமும் சென் ட் அவஸ்தாவின் காலமும் நெருங்கியவை என்று காட்டுகின்றனர். இரானிய சம்பிரதாயமும் ‘’ட்ராய்’’ நகர யுத்தத்துக்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஜொராஸ்தர் (கி.மு1800) வாழ்ந்தார் என்பர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கங்களில் சௌராஷ்டிர (குஜராத்) பகுதியில் இருந்து சென்றவரே ஜொராஸ்தர் என்கிறார் — சௌராஷ்டிர = ஜொராஸ்ட்ர.

துவாரகாபுரியில் கடலடியில் கிடைத்த பொருட்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் என்பதால் க்ருஷ்ணரின் ஆட்சிக்குப் பின்னர் துவாரகை மூழ்கியது என்ற புராணச் செய்தியும் உண்மையாகி விட்டது. ‘’இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள்’’ — என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ணர், காலதேயர் (சால்டியர்), நீவாட கவசர்கள் (கடற் கொள்ளை யர்கள்) மீது கடற்படைத் தாகுதல் நடத்தி வெற்றி கொண்டதையும் காட்டியுள்ளேன். இதே போல முருகப் பெருமான், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் தென் பகுதியில் கடற்படைத் தாக்குதல் நடத்தி கடம்பறுத்த தையும், கடல் நடுவில் இருந்த மாமரம் அழித்ததையும் (சூரபன்மன்), யவனர்களை மொட்டை அடித்து தலையில் எண்ணை பூசியதையும் காட்டியுள்ளேன் — (மாமரம் ,கடம்பமரம் என்பன அவர்களது சின்னங்கள்=காவல் மரங்கள்)

talageri rivers

இவை எல்லாம் காட்டுவது யாதெனில் இந்தியாவின் மகத்தான கடற்படை எகிப்துவரை சென்று ஆட்சி அமைத்ததாகும். மேற்காசியாவில் உள்ள மிட்டன்னிய (சிரியா) ஆட்சியாளர் அனைவரின் பெயரும் தூய சம்ஸ்கிருதத்தில் இருப்பதை உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு விட்டனர். காசைட்டுகள், ஹிட்டைட்டுகள் ஆகியோர் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உலகம் ஒப்புக்கொண்டுவிட்டது. எகிப்தைத் தாக்கிய ஹிக்சோஸ் என்பவர் யக்ஷர்கள் என்றும் பலர் கருதுவர். ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை கிடைத்த சான்றுகள் அனைத்தும் கி.மு 2000 முதல் கி.மு 1800 வரை பெரிய குடியேற்றம், படை எடுப்பு இருந்ததைக் காட்டுகின்றன. சுமேரியாவில் பல மொழிகள் பேசப்பட்டதையும் உலகம் அறியும். மெலுஹா (சிந்து சமவெளி) என்னும் இடத்தில் இருந்து வந்த மொழிபெயர்ப்பாளரின் உருவம் அக்கடிய மன்னன் படத்துடன் உள்ள சிலிண்டர் முத்திரை கிடைத்து இருக்கிறது. அது கி.மு 2500-ஐச் சேர்ந்த்து —( நரம் சின்= நரச் சந்திர என்ற மன்னன் உடையது — சின் என்பது சந்திர என்ற சொல் ஆகும் — நாம் ராமச் சந்திர, ஹரிச் சந்திர என்பது போல)

சுமேர் பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் காட்டிவிட்டேன். ஏன் இவ்வளவு கடவுள் பெயர்கள்? ஏன் இவ்வளவு மொழிகள், ஏன் இவ்வளவு மொழி பெயர்ப்பாளர்கள்? ஏன் இவ்வளவு மொழி பெயர்ப்புகள்? அதுவும் கி. மு.3000-த்தில்? ஏன் என்றால் அது உலக மக்களின் படை எடுப்புத்தளமாக விளங்கியது. சம்ஸ்கிருத நூல்களில் எகிப்துக்கும் ‘’மிஸ்ர தேசம்’’ என்று பெயர்—அதாவது கலப்பட பூமி—ஆக தூய இரத்தம் உடைய ஒரே இடம் பாரத பூமி – மற்ற எல்லா இடங்களும் ‘’கலப்படங்கள்’’ என்பது 4000 வருஷத்துக்கு முன்னிருந்த நிலை! அதாவது கி.மு. 2000.

ரகசிய எட்டாம் மண்டலம் தரும் விசித்திர தகவல்கள்
RV. 8-5-37
புரோகிதருக்கு காசு என்ற மன்னன் (இரானியர்) 100 ஒட்டகங்களையும், 10,000 பசுக்களையும் தானம் கொடுத்தான்.
((ஆர். வி. என்ற ஆங்கில எழுத்து ரிக் வேதம் என்பதன் சுருக்கம்))
RV 8-64-6
பரசு, திரிந்திர (ஈரானிய பாரசீக=பரச=பெர்சிய) ஆகியோர் ஒரு லட்சம் பரிசு தந்தனர்.
RV 8-12-9
சூரிய கிரணங்கள் எரிப்பது போல இந்திரன் அர்சசானாவை (ஈரானிய எர்ஷான்) அழித்தான்
RV 8-32-2
அர்சசானா (ஈரானிய எர்ஷான்), ஸ்ரீபிந்து, அஹி சுஷ்வ ஆகியோரைக் கொன்றான்.
RV 8-46-32
பலபூதனும், தார்க்ஷனும் புரோகிதருக்கு 100 ஒட்டகங்கள் தானம் கொடுத்தார்கள்.

இதில் ஒட்டகம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய மொழிகள் அனைத்திலும் சம்ஸ்கிருதப் பெயர்தான் (உஷ்ட்ர=ஒட்டை=ஒட்டகம்) பயன்படுத்தப்படுகிறது. இது ராஜஸ்தானுக்கு அப்பால் பாலைவனங்களில் வசிப்பது. ஈரானியர்களும் பிராமணர்களை மதித்து தானம் கொடுத்தது அவர்களும் நம்மவரே என்பதற்குச் சான்று பகரும். சங்கத் தமில் இலக்கியத்தில் ஒட்டகம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடப்படுகிறது!
earliestcivilsation map

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் – தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கு—ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து — அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி—பெண்களின் முடியைக் கத்தரித்து—கயிறு திரித்து வெற்றி பெற்ற மன்னரின் தேரை இழுத்து வந்ததையும்—இரத்த ஆறு ஓடியதையும்—சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். ஆனால் அவர்கள் தூய தமிழர்கள். அது போலவே இந்திரனால் தாக்கப்பட்ட ஆட்களும் நம்மவரே! நமது காலத்திலேயே இலங்கைத் தமிழர் குழுக்கள் ஒருவரை ஒருவர் குண்டு வைத்து தகத்து அழித்ததையும் கண்டோம்.- ஆனால் எல்லோரும் தமிழர்களே!!

மேலும் இந்திரன் என்பது ராஜா=மன்னன் என்று பொருள்படுமேயன்றி ஒரு தனி நபரைக் குறிப்பது அல்ல.

சுமேரியா மீது தாக்குதல்

தெற்கு மெசபொடோமியாவில் லார்சா என்னும் நகரம் இருக்கிறது. இங்கிருந்து ஆண்ட மன்னர்களில் ஒருவர் எமிசம் (கி.மு2004). இவருடைய பெயர் ரிக் வேத எட்டாம் மண்டலத்தில் எமுசா என்று உள்ளது. இது சம்ஸ்கிருத சப்தமில்லாத ஒரு விநோதப் பெயர். அவரை இந்திரன் கொன்றான் (8-76 முதல் 78 வரை). இதைப் பாடிய ரிஷி குருசுதி தனக்கு ‘’மாண’’ அளவு தங்கம் வேண்டும் என்று பாடுகிறார். ‘’மாண’’ என்பது அரை பவுண்டு (சுமார் முப்பது சவரன்) – என்று நூல்கள் சொல்லும்.

தைத்ரீய சம்ஹிதையில் வரும் ஒரு குறிப்பும் இதை உறுதிப்படுத்துகிறது:
‘’நீ போக முடியாத இடங்களில் எல்லாம் போய் வெல்லுவேன் என்று சொன்னாய். அசுரன் வனமோசா, ஏழு மலைகளுக்கு அப்பால் அசுரர்களுக்குக் காவலாக நிற்கிறான். அவனை அழித்து தேவர் விரும்பும் செல்வத்தைக் கொண்டுவா. அந்தப் பன்றியைக் கொல்’’.

இந்தப் பிரார்த்தனையைத் தொடர்ந்து ‘’இந்திரன் ஒரு தர்ப்பைக் கட்டின் முடிச்சைப் பிடித்து மலைகளைப் பிளந்து அவனைக் கொன்றான்’’.

ஆக எமுஷா என்பவனிடம் நிறைய செல்வம் இருந்தது தெரிகிறது. அவன் அசுர மன்னன் என்பதும் தெரிகிறது. அசீரியாவை (அசுர பூமி) ஆண்ட பல மன்னர்களின் பெயரில் அசுர என்ற சொல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். விஷ்ணுவின் வராக அவதார கதையும் இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

((சிறு வயதில் அம்புலி மாமாவிலும் வேறு பல இடங்களிலும் ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில்……………………. என்று கதைகள் படித்தோம். அவை எல்லாம் வேத கால வசனங்கள் என்பதைக் குறிப்பிடலும் பொருத்தம்))
peryplus_first_century_AD_1000px

எட்டாவது மண்டலத்தில் வரும் பல பெயர்கள் வேதத்தில் இருப்பதைப் போல அவஸ்தா நூலிலும் உள்ளன:

சுஷ்ரவ = ஹுஷ்ரவ
இஷ்டஸ்வ (1-122) = விஸ்டஸ்ப
இந்த்ரோத (8-68) = பாபிலோனிய மன்னன் இந்தாது
ஹுஷ்ரஸ்வவுடன் வேத கால மன்னன் திவோதச அதிதிக்வ உடன்பாடு செய்து கொண்டதையும் வேதம் பகரும் (1-53-9)

((சுதாச, திவோதாச என்னும் வேத கால மன்னர்களின் பெயரில் தாச என்ற பின்னொட்டு இருப்பதைக் கவனித்தல் நலம் — தாச, தஸ்யூ என்பவர்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரன் கட்டிவிட்ட பொய் மூட்டைகள் எல்லாம் இதன் மூலம் அவிழ்ந்து உதிர்ந்து விழுந்து அழியும். அவர்களுக்கு உதவியவர்கள் விஸ்வாமித்ரர், வசிஷ்டர் என்ற இரண்டு மிகப்பெரிய ரிஷிக்கள் ஆவர். புரானங்களிலும் கூட அசுர குரு சுக்ராசார்யார் என்றும் அவர் ஒரு பிராமணர் என்றும் படிக்கிறோம் சங்கத் தமிழ் இலக்கியமும் கூட குரு, சுக்ரன் ஆகிய இருவரையும் இரண்டு அந்தணர்கள் என்று புகலுவதையும் மனதிற் கொள்க. புகல்=பகர்=சொல்))

மெகஸ்தனீஸ் சொல்லும் அதிசயச் செய்தி!!!
2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதர் ஒரு முக்கிய செய்தியைச் சொல்கிறரார்:-

உலகநாடுகளில் ஒரு ஒப்பற்ற இடத்தை வகிப்பவர்கள் இந்தியர்கள். அவர்கள் பதி எழு அறியாப் பழங்குடியினர். தந்தை பாக்கஸ் முதல் மஹா அலெக்சாண்டர் வரை அவர்கள் இதுவரை 154 மன்னர்களைக் கண்டுவிட்டனர். அவர்கள் ஆண்ட காலம் 6451 ஆண்டுகள் 3 மாதங்கள்.
(மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா நமக்குக் கிடைக்காத போதிலும் பிளினி, அர்ரியன் மேற்கோள்கள் மூலம் இவற்றை நாம் அறிகிறோம். இதை அப்படியே நாம் எடுத்துக் கொண்டால் மகத சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் 2300+6451= 8751 ஆண்டுகளுக்கு முன் இருந்திருப்பான். அதாவது சுமேரிய, எகிப்திய நாகரீகங்கள் நமக்கு கொசுப் போல. நாம் இயமலை!!! — ஆயினும் அறிஞர் பெரு மக்கள் ஒரு மன்னருக்கு 20 ஆட்சி ஆண்டு சராசரி என்று நிர்ணயித்து இருப்பதால் மெகஸ்தனீசுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதே பொருத்தம். அதாவது இற்றைக்கு 5300 (2300+3000 = 5300) ஆண்டுகளுக்கு முன்— கலியுக துவக்கம் போதுதான் புதிய ஆட்சி மலர்ந்தது என்பது மகத சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் (மெகஸ்தனீஸ் நமக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்))

கிரேக்க ஆசிரியர்கள் பாக்கஸ், ஹெர்குலீஸ் என்றெலாம் நம்மவருக்கு பெயர் சூட்டுவதிலும் ஒரு தாத்பர்யம்—சூட்சுமம்—இருக்கிறது. அவர்களும் நம்மையே அவர்களுடைஅய மூதாதையர்களாகக் கருதுகின்றனர்!!!!!

silkroads2000BCE

இறுதியாக ஒரு எச்சரிக்கை:
வெள்ளைகாரர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து விடக்கூடாது. இந்திரன் என்ற சொல்லைக் கண்டவுடன் அவனுக்கு காலம் நிர்ணயித்து விடக்கூடாது. இது மன்னன், ராஜ என்ற பொதுப் பெயர்.

இரண்டாவது எச்சரிக்கை:
தசரதன், எமுஷா என்று பெயரைப் பார்த்தவுடன இவன் அவனேதான்— என்று முடிவு செய்துவிடக்குடாது. ராமாயண தசரதன், சிரியாவை ஆண்ட தசரதன் (கி.மு1400), அசோகனுடைய பேரன் தசரதன், எனது நண்பர் விருதுநகர் தசரத நாடார் ஆகிய பல தசரதன்கள் உண்டு. ராமசெஸ் என்ற பெயரில் மட்டும் எகிப்தில் 11 மன்னர்கள் உண்டு. அலெக்சாண்டர் என்ற பெயரில் நமது தாத்தா காலம் வரை பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆக ரிக் வேதத்தின் எட்டாம் மண்டலத்தின் காலம் கி.மு. 2000 ஐ ஒட்டி என்று முடிவு கட்டிவிட வேண்டாம். ஒரே பெயரில் பல மன்னர்கள் இருப்பது தெரியவந்தால் இதுவும் மாறலாம்!!!

சுபம்.

என்ன பரிசு கொடுக்கலாம்?

aa-gold-coins-12-3-09

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1332; தேதி அக்டோபர் 7, 2014.

மகா வம்சம் பற்றிய எனது கட்டுரை வரிசையில் இது 14—ஆவது கட்டுரை.

யாராவது நமக்கு கல்யாண பத்திரிக்கையோ, கிரஹப் பிரவேச பத்திரிக்கையோ அல்லது பிறந்த நாள், சஷ்டியப்தபூர்த்தி, திருமண அன்னிவெர்சரி என பத்திரிக்கைகளையோ கொடுத்தால் முதலில் வாங்கி வைத்து விடுகிறோம். நாளைக்கு நிகழ்ச்சி என்றால் இன்று அதை எடுத்து “அட, ஆண்டவா! அவர்களுக்குக் கொடுப்பதற்கு பரிசு (பிரசென் ட்) எதுவும் வாங்கவில்லையே” — என்று கவலைப் படுகிறோம். பின்னர் மணிக் கணக்கில் உடகார்ந்து சிந்தித்து மனைவி அல்லது கணவரைக் கலந்தாலோசித்து சில பொருட்களை தேர்ந்து எடுக்கிறோம். அப்போதும் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏன்? இந்தப் பொருள் அவர்களுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? வேறு ஒருவரும் இதையே வாங்கினால் நமக்கு மதிப்பு இருக்காதே! அவரிடம் இந்தப் பொருள் ஏற்கனவே இருந்தால் இதை என்ன செய்வார்? இப்படி சிந்தனை ஓட்டம் தடை இன்றிப் பாயும்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர், தேவானாம் ப்ரிய திஸ்ஸன் (கடவுளின் நண்பன்), என்ற இலங்கை மன்னன் — தான் முன் பின் பார்த்திராத மாமன்னன் அசோகனுக்கு என்ன பரிசு அனுப்பினான் என்பதையும் உடனே அசோகன் பல அமைச்சர்களைக் கலந்தாலோசித்து என்ன என்ன அனுப்பினான் என்பதையும் கொடுத்தேன். அதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் கள்ளமில்லா உள்ளம் படைத்த கானக மக்கள், மன்னன் சேரன் செங்குட்டுவன் வந்ததை அறிந்து கொண்டு குவித்த பரிசுப் பொருள்களின் பட்டியலையும் கொடுத்தேன்.

13,000 crore

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம் என்னும் பாலி பொழி நூலிலும் பல பரிசுப்பொருட் குறிப்புகள், லஞ்சம் கொடுத்த தொகை பற்றிய குறிப்புகள் உண்டு. கி.மு. 1000 வாக்கில் யாகம் செய்த பிராமணர்களுக்கு என்ன கிடைத்தன என்ற குறிப்பு பிராமணங்கள் என்ற நூல்களில் வருகின்றன.

ஆயிரம் என்பது நமக்கு இன்றும் பெரிதாக இருக்கிறது. ஆனால் அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்கள். (சஹஸ்ரம் என்பதன் தமிழ் வடிவம்= ஆயிரம்).

தருமி என்ற ஏழைப் பார்ப்பனப் புலவன் ஆயிரம் பொற்காசுகளுக்காக சிவ பெருமான் எழுதிக் கொடுத்த கவிதையை தனது என்று சொல்லி நக்கீரனிடம் மாட்டிய கதை நமக்குத் தெரிந்த திருவிளையாடல் புராணக் கதையே!

இப்படி எதற்கெடுத்தாலும் ஆயிரம் தங்கக் காசுகள் கொடுப்பதை யார் துவக்கிவைத்தார்? ஜனகர் என்னும் விதேக நாட்டு மன்னன் இந்த வழக்கத்தைத் துவங்கியதை பிரகதாரண்ய உபநிஷத்தில் இருந்து அறிகிறோம். (விதேக நாட்டுப் பெண் என்பதால் சீதைக்கு வைதேகி என்றும் ஒரு பெயர் )
File photo of Swiss Francs five cent coins heaped in a pile in the old vault  of the former Schweizerische Volksbank in Basel

ஜனகர் கூட்டிய அகில இந்திய ஆன்மீக மகாநாட்டுக்கு ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், சிந்து (பாகிஸ்தான்), காந்தாரம் (ஆப்கனிஸ்தான்) முதலிய பல இடங்களில் இருந்து அறிஞர் பெருமக்கள் படைபடையாக வந்தனர். இங்கேயுள்ள மிகவும் ஞானமுள்ள வேத பண்டிதர் ஒருவருக்கு ஆயிரம் பசுக்களும் அவற்றின் கொம்பில் சுற்றப்பட்ட தங்கமும் பரிசு என்று அறிவித்தார். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்தது. யாக்ஞவல்கிய மஹரிஷி ஆயிரம் பொற்காசுகளுடன் பசுக்கலை ஓட்டிச் சென்றுவிட்டார். மாமேதையான கார்க்கி என்ற பெண்மணியும் அந்த அசெம்பிளியில் உட்கார்ந்திருந்தாள். அவள் அதிகம் கேள்விகள் கேட்டாள். பிரம்மத்தைப் பற்றி அதிகம் பேசக்கூடாது என்று அவளது வாயை மூடிவிட்டார்.

ராஜசூய யாகம் செய்யும் புரோகிதர்களுக்கு என்ன பரிசுகள், தட்சிணை கொடுக்க வேண்டும் என்று விதி முறைகள் உள்ளன. ஹோத்ர் (ரிக் வேதி) நிலையில் இருக்கும் வேதியர்களுக்கு வட்ட வடிவமான தங்க ஆபரணம் தரப்படும். அத்வர்யு (யஜுர் வேதி) நிலையில் இருக்கும் வேதியர்களுக்கு இரண்டு ஆபரணங்கள் கிடைக்கும். உத்காத்ர் (சாம வேதி)ஆக செயல்படு வோருக்கு மலர் மாலையும், குதிரையும் தட்சிணையும் கிடைக்கும். இவர்கள் மூவருக்கும் ஒரு ‘சூபர்வைசர்’ உண்டு. அவரை பெரியவர் அல்லது பிராமணர் என்பர்.

cash at home2

பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னன் வேட்ட ராஜசூய வேள்விக்கு சேரனும் பாண்டியனும் வந்து ஒரே மேடையில் அமர்ந்ததைக் கண்ட அவ்வையார் அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து தமிழர் ஒற்றுமை இன்று போல் என்றும் வாழ்க என்று பாடினார். அப்போதும் இப்படி தட்சிணை கொடுத்திருப்பார்கள். சோமயாகம் செய்வோருக்கு ராஜா போல ஒரு வெண் குடையும் கிடைக்கும்.

பராசரன் என்ற வலவைப் (யாத்ரீகர்) பார்ப்பான் தான் யாகம் செய்து வெண்குடையுடன் வந்ததை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையில் விரிவாக எடுத்துரைக்கிறார். யாகம் செய்து கொண்டுவந்த தங்க நகைகளைக் கொஞ்சமும் சுயநலம் இல்லாமல் ரோட்டில் விளையாடும் பிராமணச் சிறுவனிடம் கொடுத்துவிட்டுப் போகிறார். காரணம்; ஒரு சிறு பையன் அவருக்கு இணையாக கிடுகிடு என்று வேதத்தை ஒப்புவித்தான.

இவ்வளவு நகைகள் அந்ந்தப் பையனிடம் எப்படி வரமுடியும் என்றும் அது அவன் அப்பன் அரண்மனையில் திருடியதாக இருக்கும் என்றும் பொறாமை கொண்ட பார்ப்பனர்கள் கதை கட்டவே அவரைக் கைது செய்து சிறையில் போட்டனர். பிறகு அவரது மனைவி கார்த்திகாவுக்கு கடவுளே வந்து உதவினார் என்று இயம்பும் சிலம்பு — (காண்க: கட்டுரைக் காதை — சிலம்பு). இதில் நாம் கவனிக்க வேண்டியது யாகம் செய்த பார்ப்பனருக்கு கிடைத்த அதிக அளவு ஆபரணமாகும்.

pile of gold

மஹாவம்சத்தில் ஆயிரம் பொற்காசு

மகா வம்ச ஆறாவது அத்தியாயத்தில் ஒரு சுவையான செய்தி இருக்கிறது. சிங்கத்தைப் பிடிப்பவருக்கு ஆயிரம் நாணயங்கள் என்று மன்னன் அறிவித்து அந்த 1000 பணத்தை ஒரு யானையின் மீது வைத்து ஊர்வலம் விட்டான். இது இந்தியாவின் வங்க மாநிலத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இப்போது கூட பயங்கரவாதிகளைப் பிடித்து தருவோருக்கு இவ்வளவு மில்லியன் டாலர் என்று அமெரிக்கா முதலிய நாடுகள் அறிவிக்கின்றன.

மகா வம்ச ஏழாவது அத்தியாயத்தில் இதைவிட சுவையான செய்தி உள்ளது. பாண்டிய நாட்டு தமிழ்ப் பெண் கப்பலில் வந்து இறங்கியவுடன் முதல் மனைவியான யக்ஷிணி வம்ச பெண்ணிடம் மன்னன் விஜயன் கெஞ்சுகிறான். தாயே! இங்கிருந்து போய் விடு! உனக்கு ஆயிரம் பணம் செலவழித்து பூஜை போடுகிறேன் என்று. இதுவும் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது!

மகா வம்ச ஒன்பதாவது அத்தியாயத்தில், உன்மத்த சித்திரா என்ற பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது. இது அரசுரிமைக்குப் போட்டி போடும் என்பதால் அரசன் எல்லா ஆண் குழந்தைகளையும் — கம்சன் போல — கொல்லும் படி உத்தரவிட்டான். இந்த பாகவத புராணத்தை “பைத்தியக்காரி (உன்மத்த) சித்திரா” படித்திருக்கிறாள். ஆகவே தனக்கு ஆண் குழந்தை பிறந்ததும் அதை — தேவகி கிருஷ்ண பரமாத்மாவைச் செய்தது போல — வேறு ஒரு பெண்ணிடம் அனுப்பி அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை தன்னிடம் வைத்துக் கொண்டாள். எந்தப் பெண் இப்படி உதவினாளோ அவளுக்கு ஆயிரம் பணம் பரிசு! அந்தக் குழந்தை — கிருஷ்ணன் போலவே மீண்டு வந்து — பாண்டுகாபயன் என்ற பெயரில் அரசாண்டான்.

valmiki numbers

மகா வம்ச பத்தாவது அத்தியாயத்தில், வேறு தாய் தந்தையிடம் வளரும் பாண்டுகாபயன் பற்றித் தகவல் கிடைத்தவுடன் அவன் மாமன்மார்கள் அவனைக் கொல்லத் திட்டம் போட்டனர். இதை அறிந்த தாய் வளர்ப்புத் தந்தைக்கு மேலும் ஆயிரம் பணம் அனுப்பி வேறிடத்துக்குப் போய்விடச் செய்தாள்.

மகா வம்ச 23-ஆவது அத்தியாயத்தில், ஒரு இளவரசன், சோம்பேறித் தடியன் ஒருவனுக்கு ஒரு கடினமான வேலை கொடுத்து தொலை தூரத்தில் வசிக்கும் பிராமணனைச் சந்திக்க அனுப்புகிறான். அதில் அந்த தடியன் வெற்றி பெறவே அவனுக்கு ஆயிரம் பணம் பரிசளியுங்கள் என்று உத்தரவிடுகிறான்.

மகா வம்ச 25-ஆவது அத்தியாயத்தில், பாலுகன் என்ற தமிழனைக் கொல்ல உதவிய பூச தேவனின் அம்பை தரையில் நட்டு அதை நாணயங்களால் அபிஷேகம் செய்தான் துட்ட காமனி என்னும் மன்னன். —அம்பு மறையும் வரை பண மழை பொழிந்து அத்தனையையும் பூசதேவனுக்குப் பரிசாகக் கொடுத்தான் துட்ட காமனி.

மகா வம்ச 35-ஆவது அத்தியாயத்தில், ஜோதிடருக்கு ஆயிரம் பணம் லஞ்சம் கொடுத்த செய்தி வருகிறது. வசபன் என்னும் மன்னன், ஒரு ஜோதிடரிடம் போய் — நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன்? — என்று கேட்டான். அவன் –நீ இன்னும் 12 ஆண்டுக்காலம் உயிரோடு இருப்பாய் —என்று சொன்னவுடன் இதை யாரிடமும் சொல்லிவிடாதே என்று ஆயிரம் பணம் கையூட்டு தருகிறான்.

power of skt, fb

இந்தியாவில் ரிஷி முனிவர்களுக்கு ஆயிரம் பணம் கொடுத்தான் ஜனகன்.— செண்பக பாண்டியனோ பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் உண்டா என்ற ஆராய்ச்சிக் கவிதைக்கு ஆயிரம் பொற்காசுகள் அறிவித்தான.—- மஹாவம்ச காலத்தில் சிங்கத்தைப் பிடிக்கக்கூட ஆயிரம் காசுகள் கொடுத்தான் வங்க மன்னன்!!!

இந்துக்கள்தான் உலகில் பெரிய எண்களையும், இப்போது நாம் எழுதும் 1, 2, 3 போன்ற எண்களையும் கண்டுபிடித்தனர். பூஜ்யம் என்னும் எழுத்தையும் தசாம்ச (டெசிமல் சிஸ்டம்) முறையையும் அவர்கள் கண்டுபிடித்ததால் இன்று நாம் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடிகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் மற்ற நாகரீகங்களில் 40, 120 முதலிய எண்களைப் பெரிய எண்களாகக் கருதினர். இந்துக்களோவெனில் ஆயிரம், லட்சம், கோடி, சத கோடி, சஹஸ்ர கோடி (ஆயிரம் கோடி) என்பனவற்றை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தினர். பெரிய எண்கள அனைத்தும் சம்ஸ்கிருத மொழியில் இருக்கும். வள்ளுவரும் கூட கோடி ஆயிரம் என்ற சம்ஸ்கிருத எண்களை அடிக்கடி பயன் படுத்துவார்.

வளர்க கணிதம்! வாழ்க சஹஸ்ர கோடி யுகதாரி (விஷ்ணு) !!

cash at home

மல்யுத்தம் தோன்றியது எங்கே?

krishna-and-balarama-wrestling1

Krishna and Chanura fighting.

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:– 1329; தேதி:– 5 அக்டோபர் 2014.

மல்யுத்தம், மற்போர், குஸ்தி (WRESTLING) என்று அழைக்கப்படும் இந்த வீர விளையாட்டு குறைந்தது 4000 ஆண்டுகளாக விளையாடப்படுகிறது. இதற்கான பழைய சான்றுகள் எகிப்தில் பேனி ஹாசன் என்னும் இடத்தில் சுவரில் எழுதப்பட்ட பழைய சான்றுகளில் உள்ளது. அதற்குப் பின்னர் கிரேக்கர்கள் வெளியிட்ட நாணயங்கள், செய்த பானைகள், சிலைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2500 ஆண்டு பழமை உடையவை. அப்படியானால் மல்யுத்தம் தோன்றியது எகிப்தில் என்று சொல்லி விடலாமா? முடியாது .இந்தியா என்றே நான் சொல்லுவேன்.

இப்படிச் சொன்னால் உடனே அதாரம் கேட்பார்கள். தொல்பொருத் துறை சான்றுகள் இல்லாவிடினும் இலக்கியச் சான்றுகள் ரிக் வேதம், அதர்வ வேதம், சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களில் உள்ளன. இதிலும் இரண்டு வகை உண்டு. ஆதி மனிதன் பிறந்த நாள் முதலே, குகைகளில் சண்டை போட்டிருப்பான். அது எல்லாம் மல்யுத்தம் ஆகிவிடாது. பின்னர் எது மல்யுத்தம்?

முறையாக அறிவித்து, பின்னர் சமநிலையில் இருக்கும் இருவரை விதிகளின்படி சண்டை போட வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே மல்யுத்தம். இந்திய இலக்கியத்தில் இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால் ஏன் தொல்பொருத் துறைச் சான்றுகள் கிடைத்தில?
kamsa wretlers
Krishna and Balarama are wrestling with Kamsa’s men

இதற்கு 5 காரணங்கள் உண்டு:

1.இந்தியர்கள் எதையுமே மறுபடியும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடயோர். இப்போதுதான் மேலை நாடுகள் இந்த RECYCLING ‘’ரீ சைக்ளிங்’’ பற்றிப் பேசுகின்றன. நம் வீட்டுப் பெண்மணிகளோவெனில் ஆண்டுதோறும் பழைய நகைகளை அழித்துப் புதுபுது ‘’டிசைன்’’ (Design) செய்து பழகியவர்கள்; ஆகையால் கிடைத்த அத்தனை தங்கம், வெள்ளி கலைப் (antiques) பொருட்களையும், நாணயங்களையும் உருக்கி அழித்துவிட்டனர்.

2.மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள் — என்று கீதையில் (3-21) கிருஷ்ணனும், புறநானூற்றில் (187) ஒரு புலவரும் செப்புவர். ஆக அவர்கள்தான் முதல் முதலில் மாற்றான் அரண்மனையில் கிடைத்த கிரீடங்களையும், மணி மகுடங்களையும், கங்கணங்களையும், சிம்மாசனங்களையும், வீர வாட்களையும் உருக்கி தன் காலடியில் பாதம் வைக்கும் பீடங்களாகப் (foot stool) பயன்படுத்தினர். இது காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் பாடல்களிலும் பல இடங்களில் உள்ளது. மேலை நாட்டிலோ அதைப் பாதுகாத்து வைத்தனர்.

3. இந்தியர்கள் எழுதியது அனைத்தும் (Bark) மரவுரி, பனை ஓலை (Palm leaves) போன்று அழியும் பொருட்கள்! கல் மேல் பொறிப்பது என்பது அசோகன் காலத்தில் தோன்றியது. நல்லவேளையாக சிந்து சமவெளிமக்கள் அந்த முத்திரைகளை கற்களில், சுடுமண்ணில் செய்ததால நமக்குக் கொஞ்சம் பழைய தடயங்கள் கிடைத்தன.

4. இந்தியப் (Monsoon) பருவநிலை – வரலாற்றின் மாபெரும் எதிரி. எகிப்து போன்று மணல் பாலைவனமும் (desert) இல்லை. ஐரோப்பா போல பனிப் பாலைவனமும் அல்ல. எப்போது பார்த்தாலு திசை மாறிச் செல்லும் கங்கை, சிந்து போன்ற மாபெரும் நதிகள். கடும் – சுடும் – வெய்யிலும், கனமழையும் மாறி மாறி வந்து அத்தனையையும் அழித்துவிட்டன.

5. மேல்நாட்டோர் போல குறுகிய கால எல்லை பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்துக்கள். அவர்கள் எல்லாம் மாபெரும் யுகக் கணக்கில்தான் (eras and eons) எதையும் பார்ப்பார்கள். சின்னக் குழந்தைகூட சூர்ய கோடி சமப்ரபா என்றும் சஹஸ்ர கோடி யுக தாரிணே நம: என்றும் தினசரி வழிபடுவர். ஆக இவர்கள் சொல்லும் கி.மு. கி.பி. எல்லாம் இந்துக்களுக்கு கொசு அல்லது — கொசுறு!!

இன்னபல காரணங்களால் நம்மிடையே புறச் சான்றுகள் குறைவெனினும் இலக்கியச் சான்றுகளுக்குக் குறைவில. ஆயினும் இதைக் கண்ட வெள்ளைக்காரன் பயந்து போய், இவை அனைத்தையும் கட்டுக்கதை, பொய்யுரை என்று பரப்பி, ஆரிய-திராவிட வாதத்தைப் புகுத்தி, நமக்கு வரலாறே இல்லை அததனையும் கடன் வாங்கியவை என்று ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிவிட்டான். உடனே நம்மூர் அரை வேக்காடுகள் அதைப் பரப்பத் துவங்கிவிட்டன.

Beni_Hassan3
Beni Hasan Murals in Egypt; at least 400 year old!

தமிழ் மற்போர் சான்றுகள்

சங்கத் தமில் நூலகளில் நிறைய மற்போர் சான்று ள் உள. புற நானூற்றின் பாடல் 80-ல் ஆமூர் மல்லனுக்கும் கிள்ளிக்கும் நடந்த மற்போரை சாத்தந்தையார் வருணிக்கிறார். பரணர் என்னும் பெரும்புலவர் மிக மிக விரிவாக நமக்கு மற்போர் செய்திகளைப் பல பாடல்கள் வழியே தருகிறார்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டை மட்டும் காண்போம். அகநானூறு 386-ல் பாணனுக்கும் ஆரியப் பொருநனுக்கும் நடந்த சண்டை பற்றிப் பாடுகிறார். பாணன், கட்டி என்ற இரண்டு வடக்கத்திய மல்லர்கள் கணையனின் நண்பனான மற்றொரு வடக்கத்திய மல்லன் ஆரியப் பொருநனுடன் பொருதுகின்றான். ஆரியப் பொருநன் உடல் இரண்டு துண்டாகி விழுகிறது! இவர்கள் அனைவரும் வடநாட்டு மல்லர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களை வேலைக்கு வைத்தது தமிழ் மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் எனதும் குறிப்பிடற்பாலது.

பாணனும், கட்டியும் தமிழ் நாடு முழுதும் சென்று யார் யார் சண்டைக்கு வரத் துணிவர் என்று சவால் விட்டனர். தித்தன் வெளியன் வாழும் உறையூருக்கும் சென்றனர். ஊருக்கு வெளியே வானத்தைப் பிளக்கும் முரசொலி கேட்டு, என்ன நடக்கிறது ? என்று வினவினர். அதுவா? தித்தன் வெளியனின் வெற்றிகளை ஊரே கொண்டாடுகிறது என்று மக்கள் சொல்லவே இரண்டு மல்லர்களும் பயந்து ஓடிவிட்டனர்!!

ஒரு புலவர் அழகாக வருணிக்கிறார்: யானையானது மூங்கில் கழிகளைப் பிடுங்கி காலில் வைத்து முறிப்பது போல மல்லனின் கால்களை கிள்ளி ஒடித்தான் என்கிறார்.

பரிபாடல் 12-72, சிலப்பதிகாரம் (16-198, 16-73), பெருங்கதை (52—3115) ஆகிய இடங்களில் முறையான — பறை அறிவித்து நிகழ்த்தப்பட்ட — மல்யுத்தப் போட்டிகளை விரிவாகக் காணலாம். இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு மல்யுத்தச் சான்றுகள்.

Silver_stater_obverse_Aspendos_374 BCE
Greek Silver coin; at least 2300 year old!

கண்ணன், பலராமன் செய்த மற்போர்

கலியுகம் துவங்கும் முன் (கிமு.3100) வாழ்ந்த கண்ணனும், அவன் அண்ணன் பலராமனும் பல மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்ததை புராண இதிஹாசங்களில் படிக்கிறோம் கம்ச சானூர மர்த்தனம் என்று கம்சனையும் சானூரனையும் அவர்கள் கொன்றதை இன்று வரை மேடைகளில் கர்நாடக சங்கீத பாகவதர்களும் பஜனைப் பாடகர்களும், சின்னக் குழந்தைகள் சொல்லும் ஸ்லோகங்களிலும் கேட்கிறோம்; பாடுகிறோம். ஆயினும் இவைகள் எல்லாம் வரலாறு அல்ல, வெறும் புனைக்கதைகள் என்ற விஷ விதையை வெள்ளைக்காரர்கள் பரப்பிவிட்டனர். யாதவ குல வீரர்கள் இருவரும் பல மல்லர்களை வென்றனர்; கொன்றனர்.

வாலி-சுக்ரீவன்
கண்ணனுக்கு முன் வாழ்ந்த ராமபிரான் காலத்தில் குரங்குப் படைகளும் கூட “த்வந்த்வ யுத்தம்: (ஒருவனுக்கு ஒருவன்) செய்ததை அறிவோம். வாலி- சுக்ரீவன் சண்டைகளை அறிவோம். அவைகளையும் வரலாறு அல்ல, கட்டுக்கதை என்று பரப்பிவிட்டனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வெளியான கோ கருநந்தடக்கன் கல்வெட்டு கூட, கலியுகத்தை வியப்புறும் விதத்தில் நாட்கணக்கில் சொல்கிறது அதாவது தமிழனுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்த நம்பிக்கையை, பஞ்சாங்கங்களை வெளிநாட்டு :அறிஞர்கள்” பேச்சை கேட்டு ஒதுக்கிவிட்டோம்!!!

kushti2
Kazakastan Rock paintings before 1000 BCE.

வேதத்தில் மற்போர்

ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும் முஷ்டி ஹன், முஷ்டி ஹத்ய (RV 5-58-4, 6-26-2 and AV5-22-4) என்ற சொற்கள் ஒருவருக்கு ஒருவர் கைகலப்புகள் பற்றிப் பேசும். ஆனால் இவை மல்யுத்தப் போட்டி என்ற பொருளில் வராமல் மல்யுத்தப் போர் என்ற முறையில் கையாளப்படுகின்றன.

மஹாபாரத மல்யுத்தங்கள்
மஹாபாரதத்தில் பீமனுக்கும் கீசகனுக்கும் நடந்த மற்போர் மிகத் தெளிவான சித்திரத்தைத் தருகிறது. சைரந்திரி என்ற பெயரில் வேலை பார்த்த திரவுபதியை கீசகன் பின்பற்றவே அவனை பீமன் கொன்றான். பீமன் மேலும் பலருடன் போட்ட மல்யுத்தங்களையும் மஹாபாரதம் விரிவாகவே தரும்.

ஆக வேத, ராமாயண, மஹாபாரத, பாகவத புராண, சங்க இலக்கிய மல்யுத்தக் குறிப்புகள் பற்றிப் படிப்போருக்கு — கலியுகம் என்பது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது என்ற நம்பிக்கை இருக்குமானால் —- எகிப்தியர்கள், கிரேக்கர்களுக்கு முன்னால் மல்யுத்தத்தைப் பயின்றவர்கள் நாம்தான் என்பது விளங்கும்!!
???????????????

இந்தியர்கள் இதை மெய்ப்பிக்கும் விதத்தில் மல்யுத்தப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று வருகின்றனர். நாடு முழுதும் எல்லா மொழிகளிலும் ‘’மல்ல, குஸ்தி, பைல்வான்’’ — என்ற சொற்கள் பயிலப்படுகின்றன. பீமன் பெயரில் நாடு முழுதும் மற்போர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

வளர்க மல்யுத்தக் கலை! வாழ்க மல்லர்கள்!!

என் அம்மாவிடம் கற்றது!

Santanam Rajalakshmi 2

Sri V Santanam and Srimati Rajalakshmi Santanam

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
அனுபவக் கட்டுரை எண்:1327; தேதி:– 4 அக்டோபர் 2014.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு! இதையே திருப்பியும் போடலாம். காக்கா போல இருந்தாலும் அம்மா, அம்மதான் என்று. எல்லோருக்கும் அவரவர் தாயார் கற்றுத் தந்த விஷயங்கள் பல இருக்கும். ஆயினும் நான் சொல்ல வருவது மிகவும் பொதுவான விஷயம். எல்லா பெண்களுக்கும் பலன் தரும் விஷயம்.

என் அம்மாவும் செட்டியாரும் ஒன்று! “இல்லை” என்று சொல்லக்கூடாது என்ற ‘’பாலிசி’’யை Policy (இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவர்கள். செட்டியார் கடையில் போய் ஒரு பொருள் இருக்கிறதா என்று கேட்டால் ‘அங்கே இல்லாவிட்டாலும் ’இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.

அரை கிலோ சர்க்கரை கொடுங்கள் என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் அன்று சர்க்கரை ‘’ஸ்டாக்’’ இல்லாவிடில் ‘’வெல்லம் இருக்கிறது அரைக் கிலோ போடட்டுமா?’’ என்பார். சிறுவயதில் இருந்து அவருடைய அப்பா கற்றுக் கொடுத்தது என்றும் எதிர்மறை எண்ணம் (Negative Thinking) கூடாது. இது தான் என் அம்மாவின் பாலிசியும்!!

அம்மா, கொஞ்சம் ரசம் போடு என்றால், இன்னும் ஒரு முறை சாம்பார் போடுகிறேனே மிக நன்றாக இருக்கும் என்பாள். அதாவது ரசம் இல்லை என்று பொருள். எங்களுக்கோ பயங்கர கோபம் வரும். இல்லை என்று சொல்லித் தொலையேன் என்போம். கொஞ்சமும் கோபிக்காமல் இதோ சாம்பார் என்று கொண்டு வருவாள். இப்போது பெரிய சொற்பொழிவு களுக்கும் பயிற்சிகளுக்கும் பணம் கட்டி ஒரு நாள் முழுதும் உடகார்ந்த பின்னரும் அந்த சொற்பொழிவாளர் கற்றுத் தருவது இது தான்: No Negative Thinking நோ நெகட்டிவ் திங்கிங்.

ஆண், பெண் ஜாதகம் வரும்போது யாராவது நெகட்டிவாக (Negative remarks) ஏதேனும் சொல்லிவிட்டால் பலர் ஜாதகத்தை விலக்கி வைத்து விடுவார்கள். ஏனெனில் அசரீரி கேட்டுவிட்டது என்பதால்!!

இன்னும் கொஞ்சம் போடட்டுமா?

சாப்பாடு பரிமாறும்போது, வந்த விருந்தாளிகளிடம் போதுமா? போதுமா? என்று கேட்டுக்கொண்டே பரிமாறக் கூடாது. இன்னும் கொஞ்சம் போடட்டுமா? என்று கேட்டுக் கொண்டே பரிமாற வேண்டும். அப்போதுதான் சாப்பிடுவர்களுக்கு இன்னும் சமையல் அறையில்—பாத்திரத்தில்– நிறைய இருக்கிறது என்ற நம்பிக்கை வரும்.

கல்யாணம் ஆன கொஞ்ச நாளில் என் மனைவி போதுமா, போதுமா? என்று கேட்டுக் கொண்டே எனக்குப் பரிமாறியதை பார்த்துக் கொண்டிருந்த அம்மா, வெடுக்கென்று சொல்லிவிட்டார், “இதோ பார், இப்படி பரிமாறக் கூடாது. இன்னும் கொஞ்சம் போடுகிறேன் என்று சொல்” – என்றார்.

சாப்பாடு பரிமாறும் பெண்கள் சமைத்த பெரிய சோற்றுப் பானையை பரிமாறும் இடத்துக்குக் கொண்டுவர முடியாது. ஒரு சின்னத் தட்டில்தான் கொண்டு வரமுடியும். சாப்பிடும் விருந்தாளிகளுக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் எல்லா பெண்களும் இதைக் கடைப்பிடிக்கலாம். இன்னும் கொஞ்ச போடுகிறேனே என்று சொல்லிப் பரிமாறுங்கள்!!

காட்டில் தவம் செய்து ஆப்பிள் பழம் போன்ற சிவந்த கன்னங்கள் — நிலத்தில் பல அடி தூரத்துக்குப் புரளும் ஜடா முடி — நீண்ட நெடிய உருவம் — ஆகியவற்றுடன் வெளியே வந்த சாந்தானந்த சுவாமிகளை புதுக்கோட்டையில் இருந்து சிலர் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

என் தந்தை தினமணி பொறுப்பாசியராக ( V Santanam, News Editor, Dinamani, Madurai) இருந்ததால், அவர் செய்யவிருக்கும் யாக யக்ஞங்கள், புவனேஸ்வரி கோவில் திட்டங்களுக்குப் பத்திரிக்கையின் ஆதரவு நாடி அவரைச் சிலரழைத்து வந்தனர். வெளுத்தது எல்லாம் பால் (All that is white is Milk, All that glitters is God) என்று கருதும் என் தந்தை காவித்துணி போர்த்திய எல்லோருக்கும் உடனே ஆதரவு கொடுத்து பெரிய செய்திகள் போட்டுவிடுவார். இதில் பல மோசடி (Frauds) மாதாஜி, ஆனந்தாக்களும் அடக்கம். ஆனால் சாந்தானந்த சுவாமிகள் உலகமே அறியாத ஒரு உத்தமர் என்பது அவர் பேச்சிலிருந்தே தெரிந்தது. அடிக்கடி ‘’நான் சொல்வது எல்லாம் ஸத்யமான வார்த்தைகள்’’- என்பார்.

‘’இன்று அவருக்கு பிட்சை (Biksha) உங்கள் ஆத்தில்தான்’’ (பிராமணர்கள் பேசும் தூய தமிழ் — அகத்தில் ) என்று பக்தர்கள் சொல்லவே என் அம்மாவும் தடபுடலாக பாயசம் வடை, அப்பளம், கறி, கூட்டு என்று சமைத்து விட்டார். சுவாமிகளோ சமையல் அறைக்குள் நுழைந்தவுடன் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மூன்றே கவளங்கள் கையில் போடுங்கள் என்று வாங்கிச் சாப்பிட்டார். என் அம்மாவுக்குக் கண்களில் இருந்து பொலபொல என்று கண்ணீர் வந்து விட்டது. இவ்வளவு சுவையான சமையலை ருசி பார்க்காமல் சாப்பிடுகிறாரே என்று!! அவர் முற்றும் துறந்த முனிவர்!

அதனால் என்ன? அத்தனை வகைகளையும் நாங்களும் சாமியாருடன் வந்த பக்தர்களும் ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்டுவிட்டோம்! தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயாதா?

முந்தைய அனுபவக் கட்டுரைகள்:
1.என் அப்பாவிடம் கற்றது (posted on 8-9-14)
2.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் (posted on 9-9-14)

அசோகன் மனைவி செய்த அக்கிரமம்! மகாவம்சம் தரும் தகவல்

Bodhi-Tree
புத்த கயாவில் இருக்கும் போதி மரம் (அரச மரம், அஸ்வத்தம்)

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:1326; தேதி:– 4 அக்டோபர் 2014.

மகா வம்சம் பற்றிய எனது கட்டுரை வரிசையில் இது 13—ஆவது கட்டுரை.

மஹாவம்சத்தில் மரங்கள் பற்றி பல சுவையான தகவல்கள் இருக்கின்றன. சில திடுக்கிடும் தகவல்களும் இருக்கின்றன. மௌரியப் பேரரசின் மாமன்னன் அசோகனுடைய முதல் மனைவி அசந்திமித்ரா இறந்தவுடன் தீசரட்சையை ராணியாக்கினான். தன் அழகில் கர்வம் கொண்ட அப்பெண், என்னை விட்டுவிட்டு இந்த அரசன் போதி மரத்திடம் அன்பு செலுத்து கிறானே என்று பொறாமைப் பட்டு மந்து என்னும் விஷ முள்ளைக் குத்தி மஹா போதி மரம் பட்டுப் போகும்படி செய்தாள். இது நடந்த நாலாவது வருடத்தில் அசோகனும் மரணமடைந்தான். மரமும் பட்டது அசோகனும் பட்டான் (ஆதாரம்—அத்தியாயம் 20).

mahabodhi

இதே போல இன்னொரு விஷ மர சம்பவமும் வருகிறது. சங்கமித்திரன் என்ற அரசன், ஜாலியாக அரண்மனைப் பெண்களோடு பாசீனதீபகத்துக்குப் (கிழக்குத் தீவு) போய் நாவல் கனி உண்பது வழக்கம். இது அந்த தீவுவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாவல் மரத்துக்கு விஷமூட்டினர். அடுத்த முறை மன்னன் வந்து நாவல் பழம் சாப்பிட்டவுடன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். (ஆதாரம்: அத்தியயம்—36)

ஜாதகக் கதை ஒன்றிலும் ஒரு மாமரம் முளைக்காமல் இருக்க மந்து முள் பயன்படுத்தப்பட்ட விஷயம் வருகிறது.

மகாவம்சத்தின் 18, 19 ஆவது அத்தியாயம் முழுதும் போதிமரப் புகழ்ச்சி (அரச மரம், அஸ்வத்த மரம்) இருக்கிறது. அசோகன், போதி மரத்தை கடவுள் போல வழிபட்டதையும் மூன்று முறை தனது அரசுரிமையையே போதி மரத்துக்கு அளித்து பட்டம் சூட்டியதையும் மகாவம்சம் எடுத்து இயம்புகிறது.

போதி மரம் என்பதன் புகழ் உபநிஷதம், கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் சிந்து சமவெளி நாகரீகம் ஆகிய எல்லாவற்றிலும் காணப்படுகிறது.

இந்த மரத்துக்கு அரச மரம் என்று தமிழன் பெயர் சூட்டியதில் இருந்து அவனுக்கும் இதன் மகிமை தெரிந்திருக்கிறது என்று அறீயலாம். கண்ணன், ‘’மரங்களில் நான் அரச மரம்” என்று கீதையில் கூறியதைப் படிப்பவர் களுக்கு மேலும் நன்றாகப் பொருள் விளங்கும் (நான் எழுதிய ‘’சிந்து சமவெளியில் அரச மரம்’’ — என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க).

Banyan_tree-2
ஆல மரம்

ஆலமர தேவதை
இன்னொரு இடத்தில் ஆலமரம் பற்றிய சுவையான கதை உண்டு. அசோகன் தனது அண்ணன் சுமணனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான. அப்போது சுமணன் மனிவி நிறைமாத கர்ப்பிணி. பயந்து காட்டுக்குள் ஓடிவிட்டாள். ஆல மரத்தின் தேவதை அவளை அழைத்து, ஒரு குடிசை போட்டுக் கொடுத்தது. குழந்தை பிறந்தவுடன் அவளும் நன்றி செலுத்த தன் மகனுக்கு ஆலமரம் ( ந்யக்ரோத ) என்று பெயர் வைத்தாள். இப்படி மரத்தின் பெயர் சூட்டும் வழக்கம், புத்தருக்கு முந்திய உபநிடத காலத்திலேயே உண்டு. பிப்பலாடன் (திரு. அரசமரம்) என்ற பெயர் இருக்கிறது.

Mango_tree_in_Kolar

மா மரம்

மந்திர மாங்கனி பற்றிய அற்புதத்தை ஏற்கனவே மகாவம்சத்தில் உள்ள அதிசயச் செய்திகள் என்ற கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். தோட்டக்காரன் கொடுத்த பெரிய மாம்பழத்தை அரசன் புத்த குருவிடம் (தேரர்) கொடுக்க அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுக் கொட்டையை மன்னனிடம் கொடுத்து நடச்சொன்னார். கொட்டையை மன்னன் நட்ட இடத்தில் தேரர் கையைக் கழுவினார். அதௌ உடனே பெரிய மரமாக வளர்ந்து கனிகளை ஈன்றது. மந்திரத்தில் மாங்கனி!! (ஆதாரம் அத்தியாயம் 15)

வம்சங்களும் மரங்களும்
ஒரு நாட்டு மக்கள், மரங்களுக்கு எந்த அளவுக்கு மதிப்பு தருகிறார்கள், எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதெல்லாம் நாகரீக முதிர்ச்சியைக் காட்டும். சங்கத்தமிழ் இலக்கியத்திலும் காளிதாசன் காவியங்களிலும் மரங்களை அண்ணன் தம்பிகளாகவும், அக்காள் தங்கைகளாகவும் சித்தரிக்கின்றனர். இந்தியாவில் கடம்ப வம்சம், இக்ஷ்வாகு வம்சம், சுங்க வம்சம், பல்லவ வம்சம் முதலிய பல வம்சங்கள் தாவரங்களின் பெயர் கொண்ட வம்சங்களாகும் இந்தியாவின் பெயரே நாவலந்தீவு. நாவல் மரத்தின் பெயர் இது. பூமியையே ஜம்பூ, இலா, சால்மலி முதலிய மரங்களின் பெயரில் பிரித்தனர் இந்துக்கள் —- இதைப் பார்த்து தமிழ் இந்துக்கள் குறிஞ்சி, முல்லை, மருதம் என தாவரங்களின் பெயரிலேயே நிலப் பாகுபாடு செய்தனர்.

இந்தியாவின் புகழ்மிகு பட்டணம் பாடலிபுத்ரமும் மரத்தின் பெயரில் அமைந்த நகரமே.

jambu-fruit-250x250
நாவல் மரம் (நாவலந்தீவு = பாரத தேசம் = இந்தியா)

பறங்கிப் பழ மன்னன்
அத்தியாயம் 35: மகாவம்சத்தில் வேறொரு சுவையான செய்தியும் உண்டு. ஒரு மன்னன் புத்த பிட்சுக்கள் எல்லோருக்கும் கும்பந்தக பழம் கொடுத்தான். பறங்கிப்பழம் போன்ற இப்பழத்தின் மற்றொரு பெயர் ஆமந்த என்பதால் மன்னனின் பெயரே ஆமந்தகாமன் என்று மாறிவிட்டது!! அவன் எல்லா இடங்களிலும் திராட்சைக் கொடிகளையும் பயிரிட்டான்.

மாமரம் பற்றியும் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. மாமரத்தை வைத்து ஒரு தேரர், மன்னனுக்கு உபதேசமும் செய்கிறார்.

Kadamba ful-11
கடம்ப மரம், மதுரை மாநகரின் ஸ்தல விருட்சம்

கடம்ப மரம், முசில மரம், இம்பார மரம், பாரிஜாதம், பாக்குமரம், சப்தவர்ண மரம், கபித்த எனப்படும் விளாம்பழ மரம், கந்தம்ப மரம், பாக்குமரம், சால மரம், நாகக் கொடி என்று பல மரங்களின் குறிப்புகளும் படித்துச் சுவைக்க வேண்டிய விஷயம் ஆகும். பாரிஜாதம், மல்லிகை, தாமரை சண்பகம், முதலிய பூக்களும் வருகின்றன.

ஒரு முறை மன்னன் புத்த விஹாரங்களுக்கு அளித்த தானத்தை ‘கேடக பத்திர’த்திலேயே (தாழை வகைத் தாவரம்) எழுதி அளித்தான். சங்கத் தமிழ், மகாவம்சம் ஆகிய இரண்டிலும் காணப்படும் பனைமரத்தில் இருக்கும் பூத வழிபாட்டைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.

சில மரங்களின் தாவரவியல் பெயர்கள் உரைகளில் காணப்படவில்லை. ஆக தாவரவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

மகாபோதிமரத்தை அசோகனின் இரண்டாம் மனைவி “கொன்றுவிட்டதால்” இப்போது புத்த கயாவிலுள்ள மஹாபோதி மரம் பழைய மரம் அல்ல—அதன் கிளையே என்றும் கருத இடம் உண்டு. இலங்கைக்கும் சில கிளைகளை அனுப்பி இருந்ததால் பிற்காலத்தில் ஒட்டு மரங்கள் உருவாகி இருக்கலாம்.

screw pine
தாழை வகைச் செடி

சுமார் முப்பது மரம், செடி, கொடிகளின் பெயர்களை மஹாவம்சம் கூறுவதால் இது உண்மையான விஷயங்களை அதன்போகில் எடுத்துரைக்கிறது என்று நம்ப இடமுண்டு. எல்லா மதப் புத்தகங்களிலும் காணப்படும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை விலக்கிவிட்டுப் பார்க்கும் கண்களும் பரி பக்குவமும் நமக்கு வேண்டும்.

வாழ்க மகா வம்சம் !! வளர்க மரங்கள் !!!