பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்! (Post No.4381)

Written by London Swaminathan 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-25

 

 

Post No. 4381

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப்  படிப்போர் அறிவர்.

உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.

 

இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:

வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)

 

பொருள்

இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்

குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

கண்களில் தீ

இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.

 

அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?

 

அவன் சொன்னான்,

“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”

 

அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

xxxx

 

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.

ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று  — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

 

இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்

அவர் சொன்னார்,  “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.

 

அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே  சிலை போல நின்றுவிட்டாள்.

 

பெண்களின் அழகிற்கு ஆண்கள் அடிமை!

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

 

xxxx

 

ஒரு பெண் பேச்சில் கில்லாடி; அழகிலோ லம்பாடி!

அவளைப் பற்றி புகழ்பெற்ற ஒரு அறிஞர் சொன்னார்:

ஓ, அவளா! பேசிப் பேசியே அழகை உருப்பெறச் செய்துவிடுவாளே!

-என்று

xxxx

 

ஆப்ரஹாம் லிங்கனின் அழகு!!!

 

ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.

 

ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.

 

 

இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது  மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.

 

லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:

அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!

 

பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.

 

xxxx

 

டேய்! போண்டா மூக்கு!

ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.

 

அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.

“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!

நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.

பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!

 

TAGS:— மூக்கு, கண், அழகு, கண்களில் தீ, லிங்கன் அழகு, குப்பைக்காரன்

—சுபம், சுபம்–

 

ரிக் வேதத்தில் நகைச்சுவை நடிகன் (Post No.4366)

Written by London Swaminathan

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-48

 

 

Post No. 4366

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நாடகங்களில் விதூஷகன் என்று ஒரு கதாபாத்திரம் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன் நாடகங்கள் எழுதிய காளிதாசனின் படைப்புகளிலும் அதற்கு முன்னரும் பின்னரும் விதூஷகன் இல்லாத நாடகம் கிடையாது. இப்போது திரைப்படங்களில் வரும்  நகைச் சுவைக் காட்சிக்கு மூலமே சம்ஸ்கிருத நாடகங்கள்தான். எகிப்து, கிரேக்கம் போன்ற பழைய நாகரீகங்களிலும் கூத்து உண்டு. ந்தக் காலத்தில் நாடகம் என் றாலே சங்கீத அல்லது நாட்டிய நாடகம்தான். இதன் மூலம் வசனங்களை எளிதில் நினைவு வைத்துக் கொள்வதும் மக்களைக் கவர்ந்திழுப்பதும் எளிதாகும்.

ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் முதலியோர் ரிக் வேதத்துக்குக் கற்பித்த தேதிகளைக் கணக்கிற்கொண்டால் எகிப்திய நாடகங்களுக்கும் முன்னோடி நாம்தான்.

ரிக் வேதம் பாரத நாட்டின் கலைக்களஞ்சியம்; அதில் இல்லாத விஷயங்களே இல்லை. அண்மையில் பழைய மலர் ஒன்றைப் படித்தேன். அதில் ரிக் வேதத்தில் கோமாளி பற்றிய குறிப்பு கூட இருப்பதை ஒருவர் எழுதியுள்ளார். நான் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாடகத்தின் தோற்றம் பற்றிய கட்டுரையில் ரிக் வேதத்திலுள்ள உரையாடல்களில் நாடக மூலக்குறுகளைக் காணலாம்.

உலகின் மிகப் பழைய நூலான– கவிதைத் தொகுப்பான — ரிக் வேதத்தின்  உரையாடல்கள் பத்தாவது மண்டலத்தில் உள்ளன:–
RV 10-51: அக்னி- வருணன்
RV 10-10 யமன்  – யமி

RV 1-179 அகஸ்தியர்– லோபாமுத்ரை

RV 10-95 புரூருவஸ்- ஊர்வஸி

RV 10-86 இந்திரன் — வ்ருஷகபி

மேலும் பல உரையாடல்கள் RV 10-135; 10-124; 4-26; 10-108; 10-28 உள்ளன.

புருஷமேத யாகத்தில் 200 பேருக்கு மேலாக “நரபலி கொடுக்கும்” பட்டியலில் காரி என்பவர் சிரிப்புக் கடவுளான ஹாசனுக்கு பலியிடப்படுவதாக உள்ளது. உலகில் சிரிப்புக்கும் ஒரு கடவுள் வேத கலத்திலேயே இருந்திருக்கிறது; (வாஜசநேயி சம்ஹிதை, தைத்ரீய சம்ஹிதை;VS 30-6 and T S 3-41.)  நாடகத்தில் கோமாளி என்னும் கதாபத்திரம் இருந்தனர் என்றால் அவர்களுடைய கலை ரசனை, முன்னேற்றத்துக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

 

வண்டி இழுக்கும் குதிரை லேஸான பாரத்தை விரும்பும்; அது போல நகைச்சுவையுண்டாக்கும் கோமாளிகள் நல்ல சிரிப்பை உண்டாக்கும் லேஸான சொற்களை விரும்புவர்; காதலன் காதலியை நாடுவது போல; தவளைகள் உணவுக்காக ஏங்குவது போல –ரிக் வேதம் 9-112-4

 

சிலர் ரிக் வேதப் பாடல்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்:–

சமயப் பாடல்கள்

தத்துவப் பாடல்கள்

சமயத் தொடர்பற்ற பொதுப் பாடல்கள்

 

சமயம் தொடர்பான துதிப் பாடல்கள்தான் இதில் அதிகம்; நான் யார்? எங்கிருந்து வந்தேன்? பிரபஞ்சத்தின் காரணம் என்ன? என்ற சில தத்துவப் பாடல்களும் உள்ளன.

 

சமயத் தொடர்பற்ற பாடல்கள் பல சுவையான விஷயங்க ளைச் சொல்லும்; இதில் திருமணப் பாடல்களும் ஈமக் கிரியை தொடர்பான பாடல்களும் அடக்கம்.

 

சூரியன்-  சந்திரன் திருமணம் தொடர்பான ஒரு துதி (10-85) சுவையான துதியாகும். கணவன்  – மனைவி இருவர் இடையே உள்ள உறவு சூரியன், சந்திரன் போல இருக்க வேண்டுமாம்:

 

காலையில் ஒன்றும் இரவில் ஒன்றும் வெளிச்சம் தருவது போல வேலைக ளைப் பகிர வேண்டும்

இரண்டும் பூமியில் உயிரினங்கள் தழைக்க உதவுகின்றன (உயிருடன் உள்ளவரின் ஆரோக்கியத்துக்கு சூரியன் உதவும்; தாவரங்கள் வளருவது சந்திரனால் என்பது இந்துக்களின் நம்பிக்கை

 

 

நான் இன்று உன் கையைப் பிடிக்கிறேன் (பாணிக் கிரஹணம்) (மணமகன் தனது வலது கையால், மணமகளின் வலது கையைப் பிடித்துக்கொண்டு சொல்லும் மந்திரம்); உன்னுடைய கைகளைப் பற்றுவதால் நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும்; நாம் இருவரும் முதிய வயது வரை ஒன்றாக வாழ்வோம். என் வீட்டின் ராணியாக இருக்க உன்னை அர்யமன், பக, சவித்ரு, புரந்த்ரி ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

 

இந்த மந்திரத்தின் (10-85-36) கடைசி மந்திரம் முத்தாய்ப்பு வைத்ததாக இருக்கிறது:

 

என் வீட்டில் ஆட்சி செய்

கணவனின் பெற்றோர்கள்

சஹோதரன், சஹோதரி மீதும்தான்

எல்லோரும் உனக்குட் பட்டவர்களே10-85-46

திருமண துதிகளைப் படிக்கையில் பெண்களை எவ்வளவு உயர்த்தி வைத்து இருக்கிறார்கள், எவ்வளவு புகழ்கிறார்கள் என்று அறியலாம்.

 

சுபம், சுபம்–

பூமிக்கு பாரம் யார்? வேதப் பிரான்பட்டர் பதில் (Post No.4274)

Written by London Swaminathan

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 17-45

am

 

Post No. 4274

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பூமிக்குப் பாரம் யார்? இந்த பூமி சுமப்பதே வீண் என்று யாரைச் சொல்லலாம்?

 

5X 5 + 5 தெரியாதோர் இந்த உலகில் வாழ்வதே  பிரச்சினைதான்!

 

இது என்ன பிரமாதம்? விடை முப்பது 5X5+5=30!

 

வேதப் பிரான் பட்டர் சொல்லும் 30 அதுவல்ல.

வையம் புகழும் பாவைப் பாடல் முப்பதை அவர்  குறிப்பிடுகிறார்.

 

திருப்பாவை தெரியாதோரை இந்த பூமி சுமப்பதே வீண்.

 

இதைச் சொல்வதையும் அழகாகப் பாடல் வடிவில் பகர்வார்

 

பாதகங்கள் தீர்க்கும்

பரமன் அடிகாட்டும்

வேதமனைத்துக்கும்

வித்தாகும்- கோதைத் தமிழ்

ஐயைந்து மைந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதூஉம் வம்பு!

 

–வேதப் பிரான் பட்டர், ஆண்டாள் வாழித் திருநாமம்

வம்பு

ஆனந்த விகடன் அகராதி (1937-ம் ஆண்டு) தரும் பொருள்:-

கயிறு, அசப்பியம் ( சபைக்கு அடாத சொல்), சண்டை, தீச் செயல், தீச் சொல், நிலையின்மை, புதுமை, மிடா (பானை), முலைக் கச்சு, வாசனை, வீம்பு.

xxxx

கிரியா அகராதி தரும் அர்த்தம்:–

Unnecessary trouble; issue leading to quarrel; gossip

 

 

சுமப்பது என்ற வினைச் சொல்லை பொறுக்கி எடுத்திருப்பது ஆழந்த சிந்தனைக்குரியது. ‘கழுதை பொதி சுமக்கும்’ என்று சொல்லுவோம். அது போல பாரம்தான் திருப்பாவை தெரியாத, படியாத, கேளாத அறிவிலிகள்!

 

அடுத்த படியாக ‘வம்பு’ என்ற சொல். இதற்குப் பல பொருள் உண்டு.

நான் யார் தெரியுமா?

‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையை விட மாட்டேன்’ என்று வீராப்பு பேசுவோம்.

 

‘அவள் ஊர் வம்புக்குக் கிடந்து அலைகிறாள்’ என்று சிலர் மீது புகார் சொல்வோம்.

 

‘வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்காதே’ என்றும் கேட்டிருப்போம்.

வேதப் பிரான் சொல்லும் ‘வம்பு’ எதுவோ?

ஊர் வம்பு பேசும் வெட்டிக் கும்பலில் ஒருவர்; சபைக்கு ஏற்றதல்லாத சொற்களைப் பேசும் ஆட்களில் ஒருவர் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம்.

 

ஆக திருப்பாவை என்பதும் ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி என்பதும் (143 பாடல்கள் ) பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு TEENAGE GIRL –டீன்  ஏஜ் கேர்ல்– பெண்– இப்படி ஊர்ப் பெண்களை (gossip) வம்பு பேசவிடாமல்- திருமாலின் பெருமைதனைப் பேச அழைத்திருப்பது அதிசயம்தானே. இவருக்கும் முன்னால் காரைக்கால் அம்மையாரைக் காண்கிறோம், மங்கையற்கரசியைக் காண்கிறோம், சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபது பெண் புலவர்களைக் காண்கிறோம்; அவர்களில் மாமணியாக விளங்கும் அவ்வையாரையும் அறிவோம். ஆனால் ஆண்டாள் போல இளம் வயதும் இல்லை; கோழி கூவுவதற்கு முன்னால் ஊர்மக்களை, பெருமாளின் பெருமையைச் சொல்லி அழைத்த ஆண்டாளின் திருப்பாவை 5X 5 +5 = 30 அறியாதோர் பூமிக்கு வம்பு, பாரம், குப்பை!

 

நாமும் ஆண்டாள் பெருமையைப் பாடுவோம்:–

 

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!

வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

 

 

 

–SUBHAM—

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை! (Post No.4261)

Written by London Swaminathan

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 1-08 pm

 

Post No. 4261

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்:

 

யம தர்ம ராஜன் பூமிக்கு வந்தார். அழகான ஒரு பிராமணப் பெண்ணைக் கண்டார்; காதல் கொண்டார்; அவள் பெயர் விஜயா.

 

ஓ பேரழகியே, உன் மீது காதல் கொண்டேன்; என்னைத் திருமணம் செய்து கொள்;  யம லோகம் போகலாம். இனிதே வாழலாம் என்றான்– யமதர்ம ராஜன்.

அடச் சீ, தள்ளி நில்; உன் மூஞ்சியும் முகரையும் பார்க்கச் சகிக்கவில்லை; வாஹனமோ உன்னை விடக் கருத்த எருமை- என்றாள் விஜயா.

யமதர்ம ராஜனோ விடவில்லை.

பெண்ணே! என் வீரப் பிரதாபங்களைக் கேள்; யுதிஷ்டிரன் எனப்படும் தர்மனுக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால் அதற்கும் முன்னதாகவே , என் ஒருவனுக்குத்தான் தர்மராஜன் என்று பெயர்; அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிப்பது என் கடமை; ‘ஆளைக் கண்டு ஏமாறாதே ஊது காமாலை’ என்ற பழமொழியை அறியாயோ? பேதையே1 பெண் மானே1 இளங்கிளியே; கருங்குயிலே; என் குணத்தைப் பார் –என்றான் யமன்.

அவளும் குணத்தில் மயங்கினாள்; கல்யாணத்துக்கு இணங்கினாள்.

 

இருவரும் யமலோகத்துக்கு ‘ஹனிமூன்’ போனார்கள்; இல்லற வாழ்வு இனிதே விளங்கியது.

 

பெண்ணே; ஒரே ஒரு கண்டிஷன்/ நிபந்தனை; இந்த ராஜ்யத்தில் தெற்கு திசைப் பக்கம் போய்விடாதே; எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்லி வைத்தேன்– என்றான் யமதர்மன்.

 

சந்தேகப் பேர்வழிகள்!

பெண்புத்தி வேறு வகையில் செல்லும்; ஆண்கள் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் வேறு ஒரு கணக்குப் போடுவர்; சந்தேகப் பேர்வழிகள்; வீட்டிற்குத் தாமதமாக வந்தால் வேறு ஒரு பெண் பின்னனியில் இருக்கிறாளோ? என்பர். தும்மல் போட்டால் இப்போது உம்மை யார் நினைத்தாள்? யார் அந்தப் பழைய காதலி? (காண்க திருக்குறள்) என்பர். உன்னை நான் இப்போது மறப்பேனா? என்று அவன் சொன்னால் ஏன் ‘எப்போதும்’ என்று சொல்லவில்லை என்று ஊடல் கொள்ளுவர் (காண்க காமத்துப்பால்-திருக்குறள்)

 

 

சம்சயாத்மா விநஸ்யதி= சந்தேகப் பேர்வழி அழிவான்– என்று கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்னதையும் உதறிவிட்டு தென் திசைக்குப் பயணமானாள் இளஞ் சிட்டு விஜயா- யமனின் புது மனைவி!

 

கோரமான காட்சி; ஐயோ அம்மா

என்று சத்தம்; அடி உதை, எத்து, குத்து, வெட்டு, தட்டு என்று யமகிங்கரர் முழக்கம். பாபாத்மாக்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறல்; ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது விஜயாவுக்கு; சரி திரும்பிப் போகலாம் என்று நினைத்த போது “மகளே! பார்த்த ஞாபகம் இல்லையா? நாந்தான் ம(க்)களைப் பெற்ற மகராசி!” என்று கூச்சல் போட்டாள் விஜயாவின் அம்மா!.

 

அன்றிரவு விஜயாவின் கதவைத் தட்டினான்; எமன்; ஒரு ‘பிராமிஸ்’ (Promise)  கொடுத்தால்தான் இன்றிரவு உமக்கு அனுமதி என்றாள் விஜயா.

அன்பே, ஆருயிரே! உனக்கு இல்லை என்று சொல்வேனா? என்றான் யமன். கதவும் திறந்தது.

 

மெதுவாக அவிழ்த்துவிட்டாள்! அம்மாவின் கதையை!

என் அம்மாவை சித்திரவதை நடை பெறும் தென் திசையிலிருந்து விடுவித்தால் என்னைத் தொடலாம்; படலாம் என்றாள்.

 

அடக் கடவுளே; தென் திசை செல்லக்கூடாது என்று சொன்னேனே! இந்து மதத்தில் ஒரு விதி உள்ளது அதுதான் வேதத்தில் முதல் மந்திரம்; சத்யம் வத= உண்மையே பேசு; உபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது சத்யமேவ ஜயதே நான்ருதம்= ‘’வாய்மையே வெல்லும் – பொய் அல்ல’’ என்று.– அதுதானே இந்திய அரசின் , நீ வாழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் சின்னம்; நானே கூட உண்மையை மீற முடியாது; உன் அம்மா செய்த பாவங்களுக்கு அவள் நரகத்தில் அனுபவிக்கிறாள். அதற்கு நான் என்ன செய்வேன்? கடவுளேகூட சாபமோ, வரமோ கொடுத்துவிட்டால் அதை அனுச ரித்தே ஆக வேண்டும்– நான் ‘தீர்க சுமங்கலி பவ:’ என்று சொல்லி சாவித்ரியிடம் சிக்கிய கதைதான் உலகப் பிரசித்தமே என்றான் யமன்

அவளோ கெஞ்சினாள்; மன்றாடினாள்; சரி இந்து மதத்தில் எல்லாப் பாவங்களுக்கும் விமோசனம் உண்டு; எல்லா சாபங்களுக்கும் ஒரு குறுக்கு வழியும் உண்டு. அதன்படி கொஞ்சம் தப்பிக்கலாம். உங்கள் அம்மாவின் பாவம் போவதற்குச் சமமான புண்ணிய கருமங்களை – யாக யக்ஞங்களை பூலோகத்தில் ஒருவர் செய்து கணக்குக் காட்ட வேண்டும்– எனது அக்கவுண்டண்டு (Accountant) சித்திர குப்தன் லாப-நஷ்டக் கணக்கில் மன்னன். அவன் ஓகே சொன்னால் உன் அம்மா    பிழைப்பாள் என்றான் யமன்

 

அவளும் பூலோகத்தில் உள்ள எல்லாப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்தாள்; மாற்று “கிட்னி” (Kidney) கேட்டு அல்ல; புண்ய கருமங்களைச் செய்ய ஒரு பெண் தேவை என்று. மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் கிடைத்தாள்

யாக  யஞங்களை முறையே செய்து, சித்திரகுப்தன் கணக்குகளைச் சரி பார்த்து யம தர்மனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுக்கவே விஜயாவின் அம்மா விடுதலை ஆனாள்

விஜயாவுக்கும் சந்தோஷம்; இல்லறம் இனிதே நடந்தது!

 

கதையில் சுவை கூட்ட கொஞ்சம் சொற்களை மட்டும் கூட்டினேன்; ஆனால் கருத்துப் பிழை எதுவுமிலை.

 

இந்தக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன?

1.தென் திசை பற்றி  திருக்குறளும் சங்கத் தமிழ் (புறநானூறு) பாடல்களும் சொன்னது வேதத்தில் உள்ள இந்து மதக் கருத்தே; ஆகையால் தமிழ் பண்பாடு, வடக்கத்திய பண்பாடு என்று எதுவுமிலை.

 

2.ஆரியர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்தனர்- மத்திய ஆசியாவில் இருந்து,  ஸ்டெப்பி புல் வெளியிலிருந்து வந்தனர் என்று உளறிக்கொட்டி கிளறி மூடும் மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தக் கதை. ஏனெனில் தென் திசை யமன் திசை என்பது இந்து மதக் கருத்து- தமிழர் கருத்து- திருவள்ளுவர் கருத்து– இது உலகில் வேறு எங்கும் இல்லை. ஆக இந்துக்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

3.இன்னும் ஒரு கருத்து; கடவுளே ஆனாலும் உண்மை என்னும் விதி முறையை- நியாயம், நீதி, நேர்மை என்ற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் சொந்தக்காரர்கள், வேண்டியவர்களுக்குச் சலுகை இல்லை; ஆனால் பாப விமோசனம் பெற வழிகள் உண்டு.

 

 

4.வில்லியம் ஜோன்ஸும் மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லூம் காட்டிய ஓரிரு ஒற்றுமைகளைவிட நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேற்றுமைகளே அதிகம். நம்முடைய கலாசாரத்தில் கொஞ்சம் மிச்சம் மீதி அவர்களுக்கு நினைவிருக்கிறது ஏனெனில் உலகம் முழுதும் இந்து மத சம்பிரதாயங்கள் இருந்ததன் மிச்சம் சொச்சம்தான் இவை என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) உரைகளில் மொழிந்துள்ளார்.

எகிப்து முதலிய கலாசாரங்களில் மேற்கு திசைதான் மரணதேவன் திசை!

 

5.யமனும் கூட நல்லவன்; நீதி நெறிப்படி– சட்டப் புத்தகப் படி- தண்டிப்பவனே. ஆனால் நசிகேதன், மார்கண்டேயன், சாவித்திரி போன்றவர்களிடம் ‘ஜகா’ வாங்கினார். காரணம்? ஒரு சொல் சொல்லிவிட்டால் அதை மாற்ற முடியாது; இறை அருள் இருந்தால்

பாரதி போல  “காலா என் காலருகே வாடா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்/ என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” எனலாம்.

 

வாழ்க புராணக் கதைகள்! வளர்க

அவை உணர்த்தும் நீதி நெறிகள்!!

 

–SUBHAM—

 

TAGS:

யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம்

 

வளையல் ஓசையால் வரவேற்கவில்லையா? (Post No.4257)

Written by S.NAGARAJAN

 

 

Date: 30 September 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Post No. 4257

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வளையல் ஓசையால் உன்னை என் தலைவி வரவேற்கவில்லையா நளனே!

ச.நாகராஜன்

 

 

நள தமயந்தி கதை புராதனமான ஒன்று. வேதத்திலேயே நள- தமயந்தி கதை கூறப்படுகிறதென்றால் அதன் பழமை பற்றியும் பெருமை பற்றியும் அதிகம் பேசத் தேவையே இல்லை!

தேவர்களும் விரும்பிய ஒப்பற்ற அழகியின் அழகை எப்படித் தான் வர்ணிப்பது? முடியாத காரியம்.

 

அசோக வனத்தில் சீதை இருந்த போது நள தமயந்தியை நினைத்துப் பார்த்தது குறிப்பிடத் தகுந்தது.

அப்படி ஒரு ஆதர்ஸ தம்பதியாக நள- தமயந்தி திகழ்ந்தனர்.

 

நள-தமயந்தி சரிதத்தை பல்வேறு கவிஞர்கள் தங்கள் கவிதா சக்திக்குத் தக்கபடி அருமையாக தங்கள் தங்கள் மொழிகளில் பாடியுள்ளனர்.

நளவெண்பா தமிழில் அமைந்த அழகிய நூல்களுள் ஒன்று.வெண்பாப் பாடல்களால் அமையப பெற்ற இந்த நூலை இயற்றியவர் புகழேந்திப் புலவர்.

 

நள சம்பூ சம்ஸ்கிருதத்தில் அமைந்த அற்புதமான நூல்.

இதை திரிவிக்கிரம பட்டர் என்பவர் இயற்றியுள்ளார்.

சம்பு காவ்யம் என்றால் உரைநடையும் கவிதையும் இணைந்த ஒன்று.

 

 

நூலை உரைநடையாக அமைத்து அதில் முக்கியமான சாரத்தைக் கவிதையாகத் தந்தது பஞ்ச தந்திரக் கதை.

 

ஆனால் சம்பு இலக்கியமோ நூலைக் கவிதை வடிவில் தந்து சாரத்தை உரைநடையாகத் தந்து புது பாணியை வகுத்தது.

சம்பு என்ற இந்த ஒரு புதிய பாணியை சம்ஸ்க்ருத கவிதா இலக்கியத்தில் திரிவிக்கிரம பட்டர் ஆரம்பித்து வைத்தார்.

இவரது கவிதா சாமர்த்தியம் அபாரமானது. அழகிய ஒரு தனி நடையை இவர் கொண்டிருந்தார்.

 

 

கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் (Nausari Inscription of Rastrakuta Kind Indra III of 915 A.D.) காலத்திய நௌசாரி கல்வெட்டில் உள்ளதை எழுதியவர் இவரே.

பத்தாம் நூற்றாண்டில் பிரபலமான காவியமாக நள சம்பு திகழ்ந்தது.

 

அதில் ஒரு பாடல் இது:

 

கிஞ்சித்கம்பிதபாணிகங்கணரவை: ப்ருஷ்டம் நனு ஸ்வாகதம்

வ்ரீடானம்ரமுகாப்ஜயா சரணயோன்யர்ஸ்தே ச நேத்ரோத்பலே I

த்வாரஸ்தஸ்தனயுக்மமங்கலகடே தத்த: ப்ரவேஷோ ஹ்ருதி

ஸ்வாமின் கிம் ந தவாதிதே: சமுசித்தம் சக்யா நயானுஷ்டிதம் II

 

இந்த அருமையான பாடல் இது. சார்தூலவிக்ரிதா சந்தத்தில் அமைந்துள்ளது.

 

இதன் பொருளைப் பார்ப்போம்.

 

“எனது தலைவி தனது கையைச் சிறிதே அசைத்து தனது வளையோசையால் உன்னை வரவேற்கவில்லையா? வெட்கம் மீதூற தன் தலையைக் குனியச் செய்து அல்லி மலர் போன்ற தன் கண்களை உன் பாதங்களை நோக்கிச் செலுத்தவில்லையா? மார்பகம் என்ற இரண்டு புனிதமான கலசங்களைக் கொண்டு அலங்கரிக்கும்  தனது இதய வாயில் கதவை அவள் உனக்காகத் திறந்து வைக்கவில்லையா?

 

ஓ, அரசே! (நளனே)

 

மிகுந்த கௌரவம் பொருந்திய விருந்தாளியான உனக்கு எந்தப் பொருத்தமான ஒரு வரவேற்பு தான் அளிக்கப்படவில்லை, சொல் பார்ப்போம்!”

இதை அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ஏ.ஏ,ராமநாதன்.

 

Has not my mistress (Damayanti) bidden you welcome by the jingle of her armlets, even as her hand shook a little? Has she not directed her lily-like eyes at your feet when she bent down her face, overcome by shyness? Has she not given entrance to you in her heart  which has furnished at its gate two auspicious pot in the form of her breasts? O, Master (Nala), what befitting welcome has not been offered by my friend to you, an honoured guest?

 

(Translation by A.A.Ramanathan A.A.R)

 

இந்த ஒரு கவிதையைப்  படித்தவுடன் முழு காவியத்தையும் படிக்கத் தோன்றுகிறதல்லவா?

 

அது தான் திரிவிக்கிரம பட்டரின்- நள சம்பு காவியத்தின் -வெற்றியாகும்!

***

பெண்கள் நட்சத்திரங்கள்! யஜுர் வேதம் முழக்கம்!! (Post No.4249)

Research article written by London Swaminathan

 

Date: 27 September 2017

 

Time uploaded in London- 7-03 am

 

 

Post No. 4249

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

நட்சத்திரங்கள் (stars) என்பன யாவை? அவைகள் என்ன? விஞ்ஞானம் சொல்கிறது- “அவை எல்லாம் சூரியன்கள்; சில நட்சத்திரங்கள் சூரியனை விட கோடி மடங்கு பெரியவை. அவற்றின் ஒளி பூமியை அடையவே பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் நாம் கருகாமல் இருக்கிறோம்; சூரியன் என்பது மஞ்சள் ( a mediocre yellow star) வகை நட்சத்திரம்; அதாவது நடுத்தர நட்சத்திரம்”. இது விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்தி.

 

ஆனால் சமய நூல்கள் என்ன சொல்கின்றன? நட்சத்திரங்கள் புண்யாத்மாக்களின் ஆவி, ஆன்மா; இறந்து போன மன்னர்கள் நட்சத்திரங்கள் ஆவதாக எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நம்பினர். மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, அமேசான் காடு வாழ் பழங்குடி மக்களும் இதையே சொல்லுவர். ஆனால் அவர்கள் எல்லோரும் கெட்ட, நல்ல மனிதர்கள் எல்லோரும் இறந்த பின்னர் இப்படி ஆவார்கள் என்று சொல்லுவர். இந்து மதமோ புண்ய ஆத்மாக்கள் மட்டும் நட்சத்திரங்கள் ஆவர் என்கிறது.

 

 

மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் (Inter Galactic Space Travel by Arjuna)பற்றிய சுவையான விஞ்ஞான விஷயம் வருகிறது. இதையே சாகுந்தலத்தில் காளிதாசனும் பேசுகிறான். மாதலி என்னும் விண்வெளி பைலட்டிடம் (விமானியிடம்) அர்ஜுனன் ஒரு கேள்வி கேட்கிறான்; அடக் கடவுளே! இது என்ன விண்கலத்திற்கு வெளியே நான், பறக்கும் ஒளிப் பிழம்புகளைக் காண்கின்றேனே! இவை எல்லாமென்ன?

 

மாதலி சொல்கிறான்: அர்ஜுனா! இவைகளைத்தான் மக்கள் பூமியில் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர். இவைகள் எல்லாம் இறந்து போன புண்ய ஆத்மாக்கள்”.

 

இது மிகவும் அபூர்வமான வருணனை. பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருந்து மற்ற ஒரு நட்சத்திர மண்டலத்துக்குப் போகும் வித்தையை இந்துக்கள் அறிந்திருந்தனர். ஐன்ஸ்டைன் (Einstein) முதலியோர் ஒளிதான் மிகவும் (Light is the fastest thing) வேகமான பொருள்; அதை மிஞ்சும் எதுவும் இல்லை. யாரும் ஒளியின் வேகத்தை நெருங்கக்கூட முடியாது. அப்படி பயணம் செய்தால் அவர்கள் நித்திய மார்கண்டேயர்கள்; அவர்கள் முதுமையே எய்த மாட்டார்கள் (Ever young, never die) என்று சொன்னார்கள். ஆனால் இந்துக்கள் மனோ வேகத்தில் செல்லும்– விண்வெளி பயணம் செய்யும் வித்தையை அறிந்து இருந்தனர். நாரதர் போன்றோர் திரி லோக சஞ்சாரி. நினைத்த மாத்திரத்தில் விண்வெளியில் (capable of Inter Galactic Travel) எங்கும் செல்லலாம்.

 

விஞ்ஞானிகளும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள்; நாம் எல்லோரும் (We were all star dust once) நட்சத்திரத் துகள்களே; 1500 கோடி வருடங்களுக்கு முன்னால் பிரபஞ்சம் மாபெரும் வெடிப்பில் (Big Bang) சிக்கியது. அப்போது பறந்த துகள்களே சூரிய மண்டலம், கிரஹங்கள்; அதில் தோன்றிய நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் பகுதியே”.

 

ஆயினும் இந்துக்கள் சொல்லுவது போல இறந்த ஆன்மாக்கள் என்பதற்கு அறிவியல் விளக்கம் கிடைக்கவில்லை. உலகில் இவ்விஷயத்தில் இந்துக்களே முன்னோடி. ஏனெனில் வடக்கு வாநத்தில் ஒளிரும் புகழ்மிகு, எழில் மிகு, நட்சத்திரக் கூட்டத்துக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயரிட்டு ஏழு ரிஷிகளின் பெயரைச் சொன்னார்கள். இன்றும் பிராமணர்கள் த்ரிகால சந்தியாவந்தனத்தில் தினமும் மூன்று முறை அந்த ஏழு ரிகளை வணங்குகின்றனர். அது மட்டுமல்ல. அதில் வசிஷ்டர் அருகில் இருக்கும் அருந்ததி நட்சத்திரத்தை எல்லாப் பெண்களும் கற்புக்கரசியாக வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.

2200 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இயறிய புற நானூறும் அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் சப்தரிஷி மண்டலத்தையும் அருந்ததி நட்சத்திரத்தையும் விதந்து ஓதுகின்றன. ஆக, தமிழர்களுக்கும் இவ்விஷயம் தெரியும்

அது மட்டுமின்றி துருவ நட்சத்திரம், (Pole Star) தென் வானத்தில் உள்ள அகஸ்திய (Canopus) நட்சத்திரம், திரி சங்கு (Southern Cross) நட்சத்திரம், சந்திரனின் பாதையில் உள்ள 28 (27+ அபிஜித்= 28)  நட்சத்திரங்கள்

ஆகியவற்றுக்கும் புனித அந்தஸ்து வழங்கியது இந்து மதமே.

மற்ற எல்லா கலாசாரங்களும் சப்த ரிஷி மண்டலத்தை பெருங்கரடி (Ursa Major= Great Bear) என்றும் பறக்கும்  பட்டம் (kite) என்றும் மன்னரின் தேர் (Dipper, Chariot) என்றும் அழைத்தன. நாம் மட்டுமே புனித அந்தஸ்து கொடுத்தோம்.

இப்போது யஜூர் வேதம் சொல்லும் செய்தி இவை எல்லாவற்றையும் விடச் சுவையாக உள்ளது. யஜூர் வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு அதில் சுக்ல யஜூர் வேதத்தின் ஒரு பகுதியான சதபத பிராமணத்தில் இந்தச் செய்தி வருகிறது.

சதபத பிராமணம் ஒரு பெரிய என்சைக்ளோபீடியா; அது சொல்லாத  விஷயமே இல்லை. ஆனால் எல்லாம் வேடிக்கையாக இருக்கும்; வெள்ளைகாரர் களுக்கு அதைப் பார்த்து ஏக குஷி! இதுதாண்டா, உலகிலேயே மிகப்பெரிய உளறல் மூட்டை; இதை வைத்தே இந்துமதத்தை ஒழித்துவிடலாம் என்று 100 ஆண்டுகளுக்கு முன் கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் கொக்கரித்தனர். ஆனால் இந்துக்களுக்கோ இது மிகப் பெரிய புனித நூல்; இதில்தான் அஸ்வமேத, புருஷ மேத, ராஜ சூய யக்ஞங்கள் பற்றி உள்ளன. ரிக் வேதம் மூன்று நட்சத்திரம் பெயரையே சொல்லும்; ஆனால் யஜுர் வேதமோ 28 நட்சத்திரத்தின் பட்டியலைத் தரும். உலகில் வேறு எந்த நூலிலும் — எகிப்திய , பாபிலோனிய, மாயன், சீன — நூல்களில் விரிவான பட்டியல் இல்லை. சீனர்கள் நம்மிடம் இரவல் வாங்கியதாக வெள்ளைத்தோல் “அறிஞர்களும்” செப்புவர்.

 

பெண்கள் ஸ்டார்ஸ்!!!

 

“ஸ்த்ரீகள் நட்சத்திரங்கள். தேவலோகம் செல்லுபவர்களுக்கு நன்மை செய்வார்கள்; புருஷர்களுக்கு இவர்கள் நட்சத்திரங்கள் போலா வார்கள்”- 6-5-4-9

 

இது ஜம்புநாதன் அவர்களின் மொழி பெயர்ப்பு (யஜூர்வேதக் கதைகள், பக்கம் 78)

 

ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள விஷயத்தை நான் பகர்வேன்:-

 

“தெய்வீக கிழவிகள், வெட்டப்படாத இறக்கைகளுடன், கடவுளுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஆங்கிரஸ் போல, சட்டியில், பூமியின் மடியில், சுடுவார்கள்; இப்போது அவர்கள் உதவியுடன் புரோகிதர்கள் வறுக்கிறார்கள்;  ஆனால் இவைகள் எல்லாம் நிச்சயமாக நட்சத்திரங்கள்.- பெண்கள் உண்மையிலேயே நட்சத்திரங்கள். சொர்க லோகத்துக்குச் செல்லும் ஆண்களுக்கு இவர்களே ஒளிகாட்டும் விளக்குகள்; இந்த நட்சத்திரங்களைக் கொண்டே அவர்கள் சுடுகிறார்கள் (வறுத்து எடுப்பர்).

 

 

ஒருவர் இப்படி மேல் உலகங்களுக்குச் செல்லுகையில் –அதுதான் சிறந்த புகலிடம்; அதுதான் லட்சியம். அங்கே சுட்டெரிக்கும் சூரியனே, இறந்துபோன நல்லவர்கள். அங்குள்ள மிகப்பெரிய ஒளி பிரஜாபதி அல்லது சொர்கம். இப்படி மேல் உலகங்களுக்குப் போனால் அதுவே சிறந்த அடைக்கலம்; அவர்கள் லட்சியத்தை அடைந்துவிட்டனர்.

 

–சதபத பிராமணம் 1-9-3-10

தைத்ரீய பிராமணமும் (1-5-2-6) நட்சத்திரங்களை கடவுளரின் வீடுகள் என்று கூறும். யார் இதைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் அந்த வீட்டை அடைவார்கள்.

 

சதபத பிராமணத்தில் உள்ள விஷயங்களை அப்படியே அர்த்தம் செய்யக்கூடாது; அதன் மறைபொருளை பெரியோர் மூலம் அறியவேண்டும். வேத இலக்கியம் முழுதையும் கற்றோருக்கே அதன் பொருள் விளங்கும்; வெள்ளைகாரர்களுக்கு அர்த்தம் புரியாததால் இதை மொழி பெயர்த்து சிரி சிரி என்று சிரித்து விட்டனர். ஆனால் இதில்தான் எல்லா விஷயங்களும் இருப்பதால் அவர்களால் இதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. மொழி இயல், உளவியல், தாவரவியல், விலங்கியல், வானியல் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்லுகிறது சதபதம்; வெள்ளைக்கா ர்கள் கூட இதற்கு கி.மு 850 முத கி.மு 1000 வரை கால கணித்துள்ளனர். நாமோ  அனாதி காலம் தொட்டு வழங்கி வருவதாக நம்புகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சதபத பிராமணம் சொல்லிய வழியே சோழ மன்னன் பெருநற்கிள்ளியும், கரிகால் சோழனும் ராஜசூய யக்ஞமும், பருந்து வடிவ யாக குண்டமும் வைத்த செய்தி புற நானூற்றில் உள்ளது (எனது பழைய கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

 

ராஜ சூய யாகத்தைப் பார்த்த அவ்வையாருக்கு பேரானந்தம்; “அடப் பாவி மகன்களே! எப்போது பர்த்தாலும் சண்டை போட்டு ஒருவனை ஒருவன் வீரம்பேசி அழிந்தீர்களே; இன்று சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரே மேடையில் பார்க்கையில் எனக்கு வரும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை; இன்று போல நீங்கள் என்றும் ஒற்றுமையுடன் இருப்பீர்களாக” என்று அடி மன த்தின் ஆழத்திலிருந்து வாழ்த்திய செய்தியை புறநானூற்றில் காண்க.

 

வேதங்கள் புரிய வேண்டுமானால் புற நானூற்றையும், பதிற்றுபத்தையும், பரிபாடலையும் பயில வேண்டும்

சங்கத் தமிழ் நூல்களும், திருக்குறளும் உள்ளவரை இந்து மதம் வாழும்.

TAGS:– சதபத பிராமணம், பெண்கள் நட்சத்திரம், வனபர்வம், விண்வெளிப் பயணம்

–சுபம்–

 

 

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு! (Post No.4244)

Research article written by London Swaminathan

 

Date: 26 September 2017

 

Time uploaded in London-  7-18 am

 

 

Post No. 4244

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

 

(இது பற்றி சின்னாட்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதி, இங்கு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வேத மந்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டதால், இங்கு அவைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் சுருக்கி வரைகிறேன். முழு விவரம் வேண்டுவோர் எனது ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும்; படிக்கவும்.)

 

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம்; அண்மைக்கால சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சியானது இதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கும் முந்தையது என்று காட்டிவிட்டது; அதை நாஸா விண்கலப் புகைப்படமும் உறுதி செய்தது; இதற்கு முன்னரே துருக்கியில் வேதக் கடவுளர் பெயர் பொறித்த க்யூனிபார்ம் களிமண் கல்வெட்டு கிடைத்ததால், வேத மந்திரம் கி.மு.1380 ஆம் அண்டிலேயே துருக்கி-சிரியா சென்று விட்டதை தொல் பொருட் துறை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கார்த்திகை நட்சத்திர ஆராய்ச்சியானது, வேதங்கள் கி.மு 4500 க்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் நிரூபித்தனர்.

 

இவ்வளவு பழமை பொருந்திய ரிக் வேதத்தில், வியாச மஹரிஷியால் கி.மு 3100-க்கு முன் நான்காகப் பிரிக்கப்பட்ட வேதத்தில்,தங்க நகைகள், தங்கக் காசு பற்றி உள்ள விஷயங்கள் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு என்பதையும், வேத கால மக்கள் செல்வச் செழிப்பிலும் நாகரீ கத்திலும் வானத்தைத் தொட்டுவிட்டனர் என்பதையும் காட்டுகிறது.

 

இது மாக்ஸ்முல்லர் வகையறாக்களுக்கும் கால்டுவெல் தொகையறாக்களுக்கும் செமை அடி கொடுக்கும்; ஏனெனில் அவர்கள் “வேத கால மக்கள் நாடோடிகள், மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவுக்குள் புகுந்த நாடோடிகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், பெரும்பாலும் வேதத்தில் சிறுபிள்ளைத்தனமான (mostly childish)  பாடல்கலைளையே காண இயலும்” என்றெல்லாம் உளறிக்கொட்டி கிளறி மூடியிருந்தார்கள்; தாங்கள் வாங்கிய கூலிக் காசுக்கு ஏற்ப தாளம் போட்டார்கள். மாறடித்தார்கள்; ஆனால் வேத கால  இலக்கியத்தில் வரும் தங்கக் காசு, தங்கத்துக்கான சொற்கள், நிஷ்கா என்னும் உலகின் முதல் தங்க நாணயம் ஆகியவற்றைப் படிப்போர் வியந்து மகிழ்வார்கள்; அவர்கள் தட்சிணையா க வாங்கிய தங்க நாணயங்களைப் பார்ப்போருக்கு அடக் கடவுளே இவ்வளவு செழிப்புள்ள காலத்தில் நாமும் வாழ மாட்டோமா என்று சிந்திக்க வைக்கும்.

 

சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை போலப் பொழிந்த பாடல்கள் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் உள்ளன. செங்குட்டுவன் தனது உடல் எடையான 50 கிலோவுக்கு நிகரான தங்கத்தை துலாபாரம் மூலம் மாடல மறையோன் என்ற பிராமணனுக்கு வழங்கிய செய்தி ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகார காவியத்தில் வருகிறது. பராசரன் என்ற பார்ப்பனன், திருத்தங்கலில் வேதம் சொல்லிய ஒரு சிறு பிள்ளையிடம் தனது தங்க நகை மூட்டையைக் கொடுத்துவிட்டுப் போன செய்தியும் சிலம்பில் காணக்கிடக்கிறது. அப்போதாவது, ரோமானிய சாம்ராஜ்யம், கேரளத்துக்குள் தங்க மழை பொழிந்த செய்தி சங்க இலக்கிய நூல்களிலும் ரோமானிய எழுத்தர் நூல்களிலும் உள்ளன. ஆனால் வேத கால மக்களுக்கு எங்கிருந்து தங்கம் கிடைத்தது? அதுவும் வேத கால துதிகளில் இருக்கிறது. நதிப் படுகைகளில் இருந்து அவர்கள் தங்கத்தைச் சலித்து எடுத்து தூய்மைப் படுத்திய செய்தியும் வேதத்தில் உள்ளது.

பிற்காலத்தில் தர்மபுத்திரன், அர்ஜுனன் ஆகியோர் இமய மலையிலுள்ள உத்தரகுருவில் தங்கம் எடுத்தசெய்தி உள்ளது. மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் புகழ்கின்றனர். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரடோட்டஸோவெனில் இந்தியாவில் இராட்சத எறும்புகள் பூமிக்கடியில் இருந்து தங்கத்தைக் கொண்டுவந்த்த அதிசயச் செய்தியை எழுதி வைத்துள்ளார். இந்தியா= தங்கம்!!!

 

தங்கத்துக்கும், தங்க நகைகளுக்கும் வேதத்தில் உள்ள சொற்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும்:

ஜாத ரூபம், ஹரிதம், ஹிரண்யம், ஸ்வர்ணம், நிஷ்கா, சந்த்ர — இப்படி பல பெயர்கள்!

மேலும் அண்மைக்காலம் வரை நம்மவர்கள் பயன்படுத்திய குந்துமணி எடை (கிருஷ்ணல) வேத கால நூல்களில் உள்ளது. ஆகவே தங்கத்துக்கு எடை போடும் வழக்கமும் அப்போது இருந்ததால் நல்ல தங்கநகைக் கடைகள் இருந்திருக்க வேண்டும்

 

ரஜத என்ற வெள்ளி பற்றியும் வெள்ளிக் காசுகள் பற்றியும் வேதங்கள் பாடுகின்றன.

உலகிலேயே மிகப் பணக்கார நாடு இந்தியாதான்! இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து ஆறு கட்டுரைகளை இதே பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது வேதத்தில் இன்னும் ஒரு வியப்பான செய்தியைக் கண்டேன்.

 

நான் பழங்கால நாணயங்களை ஆராய்பவன். என்னிடமுள்ள ஆங்கில நூல்கள் அனைத்திலும் முதல் முதலில் உலகில் நாணயங்களை வெளியிட்டவர்கள் கிரேக்கர்கள் என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதலே இவை கிடைகின்றன என்றும் எழுதியுள்ளனர். அந்த நாணயங்களும் மியூசியங்களில் உள்ளன.

 

நிஷ்கா என்னும் தங்க நாணயம்!

 

ஆனால் உலகிலேயே முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் இந்துக்கள் என்ற செய்தி வேதத்தில் உள்ளது (ஆங்கிலக் கட்டுரையில் பாடல் எண்களைக் கொடுத்துள்ளேன்). அந்த நாணயத்தின் பெயர் நிஷ்கா. இதற்கு இரு பொருள் உண்டு: 1. நாணயம்/ காசு, 2. கழுத்தில் அணியும் ஆபரணம்.

 

இது உண்மையே; இதில் முரண்பாடு எதுவும் இல்லை; ஆதிகாலத்தில் காசு மலை செய்வது எளிதாக இருந்தது. மேலும் இது அழகானது. இன்றும் கோவில்களிலும் இந்து மாதர்களின் கழுத்திலும் காசு மாலை ஜ்வலிப்பதைக் காணாலாம். ஆக நிஷ்கா என்பது இரு பொருளிலும் வழங்கி இருக்கலாம்.

 

பிற்கால இலக்கியங்களில் நிஷ்கா என்பது தங்க காசு என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் ஒரு பொருளை கரன்ஸி (நாணயம்) என்று அறிய அதனுடன் எண் அளவு இருக்க வேண்டும். அப்படி அஷ்ட புத் என்ற எண்ணுடனும், சதமானம் (100) என்ற எண்ணுடனும் காசுகள் கையாளபட்டுள்ளன. இன்றும் கூட கல்யாணங்களில் பரிசுகளை ஓதிவிடும் போது பிரமாணர்கள் சதமானம் பவது என்ற மந்திரத்தைச் சொல்லி லட்சம் கட்டி வராஹன் என்று மிகைப்படுத்தி பரிசை அளிப்பர் ( மாமா கொடுத்தது, அத்தை கொடுத்தது என்பதால்)

 

ஆக உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை வெளியிட்டது வேத கால இந்துக்களே. ஆனால் பெரிய துரதிருஷ்டம்! சிந்து வெளியிலோ, வேத கால புதை பொருள்களிலோ இப்படி ஒரு நாணயம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு இந்துப் பெண்களின் குணமே காரணம். அடிக்கடி தங்கத்தையும் தங்க நகைகளையும் உருக்கி புதுப் புது டிசைன்களில் நகை செய்து கழுத்தில், காதில், காலில் பூட்டி பெருமை அடித்துக்கொள்வர். குப்தர் காலத்தில் லட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் அடித்ததால் இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் (லண்டன்) அவைகளைக் காண முடிகிறது. நம் ஊரில் கிடைத்தன வெல்லாம், பெண்களின் கழுத்தில் தொங்குகின்றன. ஒரு வேளை பத்மநாப சுவாமி கோவில் போன்ற இடங்களில் பழங்கால நாணயங்கள் இன்னும் இருக்கலாம்.

ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட பெருமை நம்மையே சாரும்!

 

 

தட்சிணையில் தங்க ரதம்!!!

 

இதைவிட மிக மிக வியப்பான விஷயம் பிராமணர்கள் பெற்ற தங்க தட்சிணையாகும்!

 

ஆறு வகையான தங்க தட்சிணைகளைப் பட்டியல் இடுகின்றனர்.

யாக யக்ஞங்களில் யாக குண்டங்களை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்கள் போல தங்க செங்கற்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்ட விஷயமும் உளது.

 

தங்க ஏர் (சீதா) கொண்டு மன்னர்கள் ஆண்டுதோறும் நடத்தும் சடங்கு பற்றியும் உள்ளது இப்படி ஜனகன் உழச்சென்றபோது கிடைத்தவள்தான் சீதாதேவி (ஏர்ப் பெண்)!

 

சேதி என்னும் மன்னனின் மகனான காசு அளித்த ஆயிரக்கணக்கான பசுமாடுகள் குதிரைகள் ஒட்டககங்கள் பற்றிய செய்தி ரிக் வேதத்தில் எட்டாம் மண்டலத்தில் இருக்கிறது.

 

கனிதன் என்பவனின் மகனான ப்ருதுஸ்ரவஸ் தங்க ரதமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகளும் கொடுத்ததாக வாச அசவ்ய என்ற ரிஷி பாடுகிறார்.

 

சங்கத்தமிழ் இலக்கியத்தில் பரிசு பெற்ற புலவர்கள் மற்றவர்களை ஆற்றுபடுத்தும்போது கூறும் விஷயங்கள் போல ஒவ்வொரு பிராமணரும் பெற்ற பரிசுகள் (தட்சிணையாக) தான துதிகள் என்ற துதிகளில் வருகிறது. இதில் நம்புவதற்கரிய மிகப் பெரிய எண்ணிக்கையில் பரிசுகள் உள்ளன. வேத கால மக்களின் செல்வச் செழிப்பு அளவிடற்கரியது.

 

 

 

பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பெயர்களும், தங்க நகைகளுடன் அவர்கள் பவனி வந்த செய்தியும் வேதங்களில் உள்ளன.!

 

தங்கமோ தங்கம்! அவ்வளவும் சொக்கத் தங்கம்!

 

TAGS:- முதல் தங்கக் காசு, வேதத்தில், தங்க நகை, தங்கத் தேர்

–சுபம்–

 

ஏனடி கோபம் என் மேல்? சம்ஸ்கிருதச் செல்வம் (Post No.4242)

Written by S.NAGARAJAN

 

Date: 25 September 2017

 

Time uploaded in London- 5-18 am

 

Post No. 4242

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

ஏனடி கோபம் என் மேல்! கவர்ச்சிப் பாவையே!! – ஒரு காதலனின் புலம்பல்!!!

 

ச.நாகராஜன்

 

காதலன் ஒருவன் தவிக்கிறான். ஏனெனில் அவனது காதலி திடீரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்.

கோபம்.ஏனென்று தான் தெரியவில்லை.

அவனோ இன்னொரு பெண்ணை வார்த்தையால் கூடத் தொட்டதில்லை.

அவனது புலம்பல் கவிதையாக மலர்கிறது.

சார்தூலவிகிரிதிதா சந்தத்தில் அமைந்த அழகிய கவிதை இது:

 

 

உக்தம் துர்வசனம் மயா ந சுபகே ஹாஸ்யேபி துக்கப்ரதம்

த்யக்த்வா ஸ்வாமபி மாஷிதைரபி மயா நான்யாங்கனா லாலிதாI

ஸ்வாமேகாமனவத்யம் பூஷணபரை: சம்பாவயாமி த்வயா

ஹே! நிஷ்காரணகோபனே வ்த க்ருத: கிமர்த்தம் மயி II

 

 

கவிதையின் பொருள் இது தான்:

 

வலியைத் தரும் சுடுசொல் ஒன்றைக் கூட ஒருபொழுதும் நான் பேசியதில்லை;

ஓ! கவர்ச்சிப் பாவையே!

 

விளையாட்டாகக் கூடப் பேசியதில்லையே!

நீ இல்லாத போதும் கூட எந்த ஒரு பெண்ணையும் வார்த்தைகளினால் கூட நான் தொட்டதில்லை!

குற்றமற்ற குணங்களென்னும் செல்வத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன்னை நான் போற்றுகிறேன்.

 

ஓ!அன்பே!

எந்த விதக் காரணமும் இன்றி என் மீது கோபம் கொண்டிருக்கிறாயே,

என்னிடம் நீ ஏன் கோபம் கொண்டிருக்கிறாய் என்று சொல்லேன்.

 

அருமையான இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் தருகிறார் திரு ஏ.ஏ,ஆர் (A.A.R. – A.A.Ramanathan)

 

Never have I spoken a harsh word which may give pain,

Oh, Charming one, Even during jokes;

Even in your absence no other girl was carassed by me even in words;

I honour you alone adorned with a wealth of faultless merits;

Oh, Dear who get angry for no cause,

Tell me why you are angry with me.

 

**

இன்னொரு கவிதை

தன் விருப்பத்திற்குகந்த காதலியை எப்படி அணுக வேண்டும்.

யோசனை தருகிறார் ஒரு கவிஞர் இப்படி:

 

உக்தம் தே ருதிரேணாஹம் ஸ்ப்ருஷ்டம் தே மஸ்தகம் மயா I

இத்யேதாஞ் சபதான் க்ருத்வா சா வை கம்யா புன:புன: II

 

விதவிருத்தம் என்ற சந்தத்தில் அமைந்த கவிதை இது.

பொருள்:

 

 

“உனது ரத்தத்தால் நனைக்கப்பட்டவன் நான். உனது தலை என்னால் வருடப்பட்ட ஒன்று” என்று இப்படி உறுதி மொழிகள் சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் நெருக்கமாக அவளை அணுக வேண்டும்.

 

 

“I have been wetted by your blood, your head has been touched (fondled)by me” – swearing words such as these, she must be approached closedly again and again.

(Translation by A.A.Ramanathan)

 

சம்ஸ்கிருதத்தில் காதல் கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உள்ளன.

சம்ஸ்கிருதத்தை –

வேத மொழி என்பர் சிலர்;

தெய்வ மொழி என்பர் சிலர்.

வித்தக ஞான மொழி என்பர் சிலர்.

ராஜ நீதி மொழி என்பர் சிலர்

இசை மொழி என்பர் சிலர்.

புராண இதிஹாஸ தர்ம சாஸ்திர மொழி என்பர் சிலர்.

கம்ப்யூட்டருக்கான மொழி என்பர் சிலர்.

ஆனால் மேலே உள்ளது போன்ற கவிதைகளைப் படிப்போர்

சரஸ சல்லாப மொழி என்பர்.

 

எல்லாம் சரி தான்.

 

சம்ஸ்ருதம் அறிவோம்! சுகமாய் வாழ்வோம்!!

****

 

பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220)

Written by London Swaminathan

 

Date: 17 September 2017

 

Time uploaded in London- 6-56 am

 

Post No. 4220

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பெண்களை தாயார் ஸ்தானத்தில் வைக்கும்போது அவர்களை இந்து மதம் புகழ்வது போல வேறு எந்த மதமும் புகழ்வதில்லை; தமிழ் சம்ஸ்கிருத நூல்களில் கண்டது போல வேறு எங்கும் கண்டதில்லை. மனு தர்ம சாஸ்திரமோ பெண்களை உச்சானிக்  கொம்பில் வைத்து போற்றுகிறது. அவர்கள் அழுதால் அந்தக் குடும்பம் அல்லது அதற்குக்  காரணமானவர் வேருடன் சாய்வர் என்று எச்சரிக்கிறார் மனு. பெண்களுக்கு நகை நட்டுகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைக்க வேண்டும் என்றும் உலகிற்கு புத்திமதி சொல்கிறார். சுத்த மான இடங்கள் எவை என்பதை பட்டியலிடுகையில் பெண்களின் வாய் எப்போதும் சுத்தமானது என்றும் சொல்லுகிறார் மனு (எனது பழைய கட்டுரைகளில் ஸ்லோக எண்களுடன்  மேல் விவரம் காண்க)

 

மேல் நாட்டு இலக்கியங்களில் பெண்களின் அழகை வருணிப்பர்; அவர்களைத் தூற்றுவர். ஆங்கில  மஹா கவி ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களிலும் இதைக் காணலாம்; கம்பனிலும் இதைக் காணலாம். நீதி வெண்பாவிலும் இதைக் காணலாம்; திருக்குறளிலும் இதைப் படிக்கலாம்.

 

ஆனால் தாய், சஹோதரி என்ற நிலையில் நாம் புகழ்வோம்; மேல்நாட்டு இலக்கியங்களில் அப்படி இல்லை!

 

அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்:

 

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்

கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே

கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ

மானார் விழியார் மனம்.

 

பொருள்:

பித்தரே= பெண் மயக்கம் கொண்ட பித்தர்களே; பைத்தியக்காரர்களே!

 

அரு = பார்ப்பதற்கு அருமையான

அத்தி மலரும் = அத்திப் பூவும்

காக்கை வெண்ணிறமும் = காக்கையின் வெள்ளை நிறமும்

கத்து புனல் மீன் பதமும் = ஒலிக்கின்ற கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும்

கண்டாலும் = ஒருக்கால் பார்க்க இயன்றாலும்

(பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது)

(நாம் மட்டும் அல்ல)

கான் ஆர் தெரியல் கடவுளரும் = மணம் பொருந்திய மாலைகளை உடைய தேவரும்

மான் ஆர் விழியார் மனம் = மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெ ண்களின் நெஞ்சத்தைக் காண்பரோ = காண்பார்களோ?

(அவர்களும் காண மாட்டார்)

 

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

 

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

 

ரிக் வேதத்தில் ஊர்வசிக்கும் (10-95) புரூருவசுக்கும் இடையே நடை பெறும் அற்புதமான உரையாடல் உளது; அதில் ஊர்வசி சொல்கிறாள்

 

வேண்டாம்; புரூருவஸ், இறந்து விடாதே, றைந்து விடாதே. கெட்ட ஓநாய்கள் உன்னை விழுங்கிவிடக் கூடாது.

 

பெண்களுடன் நிரந்தர நட்பு என்று எதுவுமே கிடையாது; பெண்களின் இதயம் புலியின் (கழுதைப் புலி) இதயம் போன்றது.

 

ஷேக்ஸ்பியர் சொன்ன அதே சொற்கள்!

Nay, do not die Puruvas, nor vanish;

let not the evil-omened wolves devour thee.

With women, there can be no lasting friendship; hearts of the hyenas are the hearts of women.

RV 10-95-15

கம்பன், வள்ளுவன், வேத கால ரிஷி, ஷேக்ஸ்பியர் ஆகியோர் எச்சரிக்கும் அழகே தனி! ஒப்பிட்டு மகிழ்க!

 

My Old Article:

  1. பெண்களின்எதிரி | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பெண்களின்…

Posts about பெண்களின் … பெண்களின் எதிரியா? … கம்பன், …

 

 

 

TAGS: பெண் மனம், புலியின் இதயம், ஷேக்ஸ்பியர், ரிக்வேதம், நீதி வெண்பா

 

–Subham–

வேத கால அரசர்கள் பற்றிய விநோதச் செய்திகள்! (Post No.4145)

Written by London Swaminathan

 

Date: 10 August 2017

 

Time uploaded in London- 11-08 am

 

Post No. 4145

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வெள்ளைக்காரன் எழுதிய இந்திய சரித்திரம் அசோகரின் தாத்தா காலத்தில் இருந்து துவங்குகிறது. அதாவது நமது சரித்திரம் எல்லாம் 2400 ஆண்டு மட்டுமே பழமையானவை! அதற்கு முன் நம்மை ஆண்ட மன்னர்கள் யார் என்று எம்.ஏ. சரித்திரப் புத்தகம் வரையிலும் கிடையாது!! (கட்டுரை ஆசிரியர் மதுரை பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பட்டதாரி). ஆனால் ரிக்வேதத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் பெயர்களும், ஈரானை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் மஹாபாரதத்தில் சிந்துசமவெளியை ஆண்ட மன்னர்கள் பற்றியும் உள்ளன. சிரியாவை ஆண்ட பிரதர்தனன், தசரதன் (1350 BCE) பற்றிய கல்வெட்டு பற்றி 1935 ஆம் ஆண்டிலேயே காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரையாற்றியது உலகம் முழுதும் மிட்டனி நாகரீகப் புத்தகத்தில் உள்ளது. ஆனால் இந்திய சரித்திரப் புத்தகத்தில் கிடையாது. என்ன விநோதம்? நாமின்றும் அடிமைகளாகவே வாழ்கிறோம்! சரித்திரப் புத்தகமா? தரித்திரப் புத்தகமா? உடனே மாற்றி எழுதுவது நமது தலையாய கடமை.

 

வேதங்களில் உள்ள மந்திரப் பகுதிகளை சம்ஹிதை என்பர். அவை முழுதும் துதிப் பாடல்கள். அதற்குபின் பாதி உரை நடையிலும் கொஞ்சம் பாடல்களாகவும் உள்ளது பிராமணங்கள். இதற்கு வெள்ளைக்காரன் போட்ட தேதி சுமார் கி.மு 1000 அல்லது 800. ஆனால் இந்துக்கள் போடும் தேதி கி.மு.4000. சங்கத் தமிழ் நூல்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும் செய்திகளும் நீண்ட நெடுங்கால வரலாறு ப ற்றிப் பேசும். புராணங்களில் சுமார் 150 அரசர்களின் பெயர்களை வரிசைக் கிரமமாக கொடுத்துள்ளனர். இது பற்றி நிறைய எழுதிவிட்டேன். இப்பொழுது பிராமண நூல்களில் படித்த சுவையான விஷயங்களைச் சொல்லுவேன்:-

 

இந்திய அரசியல் சாசனம் “இந்தியா என்னும் பாரத நாடு…………………….” என்று துவங்குகிறது ஏன்? தபால்தலைகளில் ஆங்கிலத்தில் ‘இண்டியா’ என்றும் ஹிந்தியில் ‘பாரத்’ என்றும் உள்ளது. ஏன்?

 

உலகமே வியக்கும் வண்ணம் ஆண்டான் பரதன் என்ற மன்னன், அவன் நூறு அலக்ஸாண்டர்களுக்குச் சமமானவன். ஆயிரம் நெப்போலியன்களுக்குச் சமமானவன். புலிக்குட்டிகளும் சிங்கக்குட்டிகளும் அவன் நண்பன். அஞ்சாத நெஞ்சன்; அதி சூரன்; மஹா வீரன்; மாபெரும் பேரரசன்.

 

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்

தட்டி விளையாடி – நன்று

உகந்ததோர் பிள்ளை பாரத ராணி

ஒளியுறப் பெற்ற பிள்ளை

என்று சொற்தேரின் சாரதியாம் பாரதியால் பாடப்பெற்றவன்; பாராட்டப் பெற்றவன்.

அதே பாட்டில்

தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்

செய்த தெவர் கவிதை? – அயன்

செய்த தனைத்தின் குறிப்புணர் பாரத

 

தேவி அருட்கவிதை என்றும் பாடுகிறார்.

அப்பேற்பட்ட சாகுந்தல நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற காளிதாசன் பரதனின் புகழைப் பாடுகிறான். இந்தப்பிள்ளை உலகம் முழுதும் ஆள்வான் என்கிறான். இதற்கு முன்னர் மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் பரதன் புகழ் இருக்கிறது.

 

இந்த பூமியில் பரதனுக்கு முன்னால் பிறந்த அனைவரும்

அவனுக்குப் பின்னால் பிறந்த அனைவரும்  அவனது பெயராலேயே அழைக்கப்படுவர்

–ம.பா. 1-69-49

இவனைப் பற்றி சதபத பிராமணம் ஐதரேய பிராமணம் என்ன செப்புகின்றன என்பதைக் காண்போம்:–

தீர்கதமஸ் என்ற ரிஷி துஷ்யந்தன் மகனான பரதனுக்கு முடி சூட்டியதாக ஐதரேய பிராமணம் பேசும் (8-39). அவன் இந்த பூமி முழுதையும் வசப்படுத்தி 133 அஸ்வமேத யாகங்களைச் செய்ததாகவும் கூறும். 78 குதிரைகளை யமுனை நதிக்கரையிலும் 55 குதிரைகளை கங்கை நதிக்கரையிலும் கட்டி வைத்து அஸ்வமேதம் செய்தான் பரதன்.

 

அஸ்வமேதம் செய்த ஒவ்வொருவரையும் பாராட்டும்  பாடல் உண்டு.  அதில் ஆயிரம் குதிரைகளுடன் அஸ்வமேதம்செய்தான் என்று போற்றுகிறது அதாவது அலங்கரிக்கப்பட்ட அவனது குதிரை எங்கெல்லாம் சுற்றித் திரிகிறதோ அந்த இடமெல்லாம் அவனது ஆட்சிக்குட்பட்ட பகுதி. ஒருவரும் அதைத் தடுக்கவோ பிடிக்கவோ முன்வரவில்லை. ஆகையால் இந்த பூமி முழுதும் அவன் வசமானது.

தங்க நகைகளுடன் 10000 பெண்கள் பரிசு

 

எந்த ரிஷி அஸ்வமேதம் செய்விக்கிறாரோ அவருக்கு தானம் அளிப்பது மன்னர் மரபு.

அங்க என்னும் அரசனை அத்ரியின் மகனான உதமன்ய பட் டாபிஷேகம் செய்வித்தார். அவருக்கு அங்க மன்னன்

10,000 யானைகள்

10,000 தங்க நகை அணிந்த பணிப்பெண்கள்

ஒரு கோடி பசு மாடுகள்

87,000 வெள்ளைக் குதிரைகள்

கொடுத்தான். ( கவிஞர்கள் மிகைபடக்கூறல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. ஆகையால் இவைகளை ஆயிரத்தால் வகுப்பது சரி என்று தோன்றுகிறது. மேலும் ஆயிரம் என்பதை “எண்ணற்ற” (innumerable, uncountable) என்ற பொருளிலும் வேத காலத்தில் பயன்படுத்தினர். ஆகவே நாம் ஒவ்வொரு எண்ணையும் ஆயிரத்தாலோ அல்லது நூறாலோ வகுக்க வேண்டும். இது நான் சொல்லுவதல்ல. மஹாபாஷ்யமெழுதிய பதஞ்சலி முனிவரே ராம ஆண்ட ஆயிரக் கணக்கான ஆண்டுகளை 365ஆல் வகுத்து இத்தனை ஆண்டுகள் ஆண்டான் என்று எழுதி இருக்கிறார்.

 

இன்றும் கூட பிராமண வீடுகளில் கல்யாணம், ஆயுஷ் ஹோமம், சீமந்தம்-வளைகாப்பு ஆகியவற்றில் நெருங்கிய உறவினர்கள் என்ன தொகை ஓதிவிட்டாலும் அதை உரத்த குரலில் மந்திரம் ஓதி அளிக்கும் புரோகிதர்கள் “லட்சம் கட்டி வராஹன்” என்றே சொல்லித் தருவர். ஆக இந்த நடைமுறை அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

இறையனார் களவியல் உரையில் மூன்று தமிழ்ச் சங்ககங்களுக்குக் கொடுத்த ஆண்டுகளை வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்கள் 37-ஆல் வகுத்தனர். நான் வேறு ஒரு கணக்குக் காட்டி இருக்கிறேன். (மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுகதையா என்ற எனது  பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

 

இனி வேத கால அரசர் பெயர்களும் அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் பெயரையும் காண்போம். யமுனை நதி முதல் சிந்து-சரஸ்வதி வரை பிரம்மாண்ட பூமியில் வேத கால அரசர்கள் வாழ்ந்தனர்; ஆண்டனர். அவர்கள் செல்வம், உலகம் வியக்கும் வண்ணம் இருந்தது. வேதம் முழுதும் தங்கம் பற்றி வரும் குறிப்புகளைப் பார்த்தால் கஜினி முகமதுவும் அலெக்ஸாண்டரும், கொலம்பசும் ஏன் இந்தியாவை நோக்கிப் பயணம் செய்தனர் என்பது விளங்கும்.

 

வேத காலத்தில் இந்தியாவில் தங்கம் ஆறாக ஓடியது என்பதை “ஹிரண்யம்” என்ற சொல் வரும் இடங்களை ஆராய்ந்தால் விளங்கும்.

துஸ்தரிது பௌம்சாயன என்ற மன்னன், தான் தொடர்ந்து வரும் ஆட்சியில் பத்தாவது மன்னன் என்று பெருமை அடித்துக் கொள்கிறான் (சதபத. 12-9-3-1) ஒரு மன்னக்கு 35 ஆண்டு சராசரி வைத்தாலும் இவனது வம்சம் 350 ஆண்டுகள் ஆண்டதை பிராமண நூல்கள் செப்புகின்றன.

 

பரீக்ஷித்தின் மகனான ஜனமேஜயனை துர காவசேய என்ற ரிஷி பாட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

இது கலியுக துவக்கத்தில் கி.மு 3100ல் நடந்திருக்க வேண்டும். அதாவது மாபாரத யுத்தத்துக்குப் பின்னர் வந்த அரசர்கள்.

 

மனு வம்சத்தில் வந்த சார்யாத என்ற மன்னனை சியாவன பார்கவ முனிவர் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

சதானீக சாத்ராஜித என்ற மன்னனை  வாஜ ரத்னனின் மகனான சோமசுமா பட்டாபிஷேகம் செய்வித்தார்.

 

அமவாஸ்த்ய மன்னனையும் யுதாம் ஸ்ரௌஸ்தி ஔக்ரசேன்ய மன்னனையும் பர்வத, நாரத முனிவர்கள் பட்டாபிஷேகம் செய்வித்தார்கள்.

 

விஸ்வகர்மா பௌவன மன்னனை காஸ்யப மஹரிஷி பட்டாபிஷேகம் செய்வித்தார்.

சுதாஸ பௌஜாவனனை வசிஷ்ட மஹரிஷி பட்டாபிஷேகம் செய்வித்தார்.

மருத்த ஆவிக்ஷித மன்னனை சம்வர்த ஆங்கிரஸ் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

இது போல அஸ்வமேதம் செய்த மன்னர்களின் நீண்ட பட்டியலும் உளது.

ரிக்வேத மன்னர்கள், பிராமண நூல் மன்னர்களை வரிசைப் படுத்தும் ஆராய்ச்சியைத் துவக்க வேண்டும். சிரியா-துருக்கி மிட்டனி (Mitannian Civilization)  சாம்ராஜ்யத்தில் தசரத பிரதர்தன மன்னர்களின் பெயர்கள் கி.மு 1350ல் கிடைப்பதாலும் ரிக்வேத மந்திரத்தில் உள்ள அதே ஆர்டரில் (in the same order as in Rig Veda) இந்திர-மித்ர- வருணன் பெயர்கள் கியூனிFஆர்ம் (Cuneiform inscription) கல்வெட்டில் கிடைப்பதாலும் வேத கால மன்னர்கள் அதற்கும் முற்பட்டவர்களே. பாஞ்சாலம் முதலிய தேசங்கள் குறிப்பிடப்படுவதாலும் மஹாபாரத யுத்தத்தில் சிந்துசமவெளி மன்னர்கள் கலந்து கொண்டது பற்றீய குறிப்பு உளதாலும் ராமாயணத்தில் ராமனின் சகோதர்கள் சிந்து சமவெளி பகுதியை வென்ற குறிப்பு உளதாலும் சரஸ்வதி-சிந்து சமவெளி நாகரீகமும் வேத காலத்துக்குட்பட்டது என்பது எனது துணிபு.

 

ஆனால் கால வரிசைக் கிராமத்தை அறிய மேலும் ஆராய்ச்சி தேவை. தற்போது வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புராண, இதிஹாச, வேத மன்னர் பட்டியலைத் தர வேண்டும். காலக் கணிப்பீட்டை எதிர்கால ஆராய்ச்சியாளருக்கு விட்டுவிடலாம்.

 

சுமேரிய, எகிப்திய, சீன,மாயன் நாகரீகங்களை கி.மு3000ல் துவங்கிவிட்டு அதற்கு முந்தைய பாரத நாகரீகத்தை கி.மு 300ல் துவக்குவது நியாயம் இல்லை. வரலாற்றை மாற்றி எழுதுக!

 

–Subham–