நல்ல பதில்கள்! (Post No.2698)

disraeli book

Written by S NAGARAJAN
Date: 6 April 2016

 

Post No. 2698

 

Time uploaded in London :–  6-00  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சமயோஜிதம்

 

நல்ல பதில்கள்!

 

ச.நாகராஜன்

 

சிக்கலான தருணங்களில் தக்க பதில்களை உடனடியாகத் தருவது ஒரு கலை.

 

மேதைகளிடம் இதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

பிரிட்டனில் எதிரும் புதிருமாக இருந்த பெஞ்சமின் டிஸ்ரேலியும் வில்லியம் க்ளாட்ஸ்டோனும் ஒருவருக்கொருவர் சூடான பதிலைக் கொடுப்பது வழக்கம்.

 

ஒரு முறை டிஸ்ரேலியிடம் ஒருவர் misfortune க்கும்  calamity க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்.

சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா டிஸ்ரேலி!

 

“தேம்ஸ் நதியில் டிஸ்ரேலி விழுந்து விட்டால் அது துரதிர்ஷ்டம். (Misfortune) அவரை யாராவது காப்பாற்றி மீட்டு விட்டால் அது பெரும் அபாயம்(calamity)” என்று பதில் சொன்னார் அவர்.

 

ஆப்ரஹாம்  லிங்கனைச் சந்தித்த ஒரு குழுவினர் உடனடியாக அடிமைகளை மீட்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கான காலம் கனியவில்லை என்று நினைத்தார் லிங்கன்.

 

வந்தவர்களோ பிடிவாதமாக இருந்தனர்.

 

லிங்கன் அவர்களைப் பார்த்துக் கேட்டார்” “ ஒரு ஆட்டின் வாலையும் கால் என்று நீங்கள் வைத்துக் கொண்டால் அதற்கு மொத்தம் எத்தனை கால்கள்?”

 

உடனே அவர்கள், “ஐந்து” என்று பதில் சொன்னார்கள்.

உடனே லிங்கன், “அது தான் இல்லை. வாலைக் கால் என்று சொன்னால் அது கால் ஆகி விடாது. அது வால் தான்!” என்றார்.

ஒரு கொள்கையை எப்படி மாற்றிச் சொன்னாலும் உள்ளது உள்ளபடி தான் இருக்கும்.

 

இங்கிலாந்தின் பிர்பல பாடலாசிரியரான தாமஸ் டிப்டின் தன்னைச் சந்தித்த இளைஞர் ஜெரால்டிடம் கேட்டார் இப்படி:”

அன்புள்ள இளைஞனே!   என் மீது உனக்குத் தான் அளப்பரிய நம்பிக்கை இருக்கிறதே! எனக்கு ஒரு கினி ( லண்டனில் புழக்கத்தில் இருந்த நாணயம்) கடன் தருவாயா?” என்றார்.

இளைஞனோ விவரமானவன்.

 

“ ஆஹா! அபாரமான நம்பிக்கை உங்கள் மீது இருக்கிறது. ஆனால் கினியா தான் என்னிடம் இல்லை!” என்றான் அவன்.

மனம் புண்படாமல் சமயோஜிதமாகப் பேசுவது ஒரு கலை!

பழகினால் வருவது அது!

 

**************

அய்யங்கார் செய்த அற்புதம்! (Post No 2687)

sriranaga

Compiled  by london swaminathan

Date: 2 April, 2016

 

Post No. 2687

 

Time uploaded in London :–  9-02 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் என்பவர் செய்த அற்புதம் பற்றி 1908 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்ப் பெயரகராதியில் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் தந்துள்ள விவரத்தின் சுருக்கம் இதோ:-

பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், வேதியர் குலத்தில் உதித்து, வேத வேதாங்கங்களில் புலமை பெற்று வருணாசிரம தருமங்களை வழுவாது அனுசரித்து வருங்காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் அரசாட்சி செய்து வந்தார். அவரது ராஜாங்க சேவையில் ஈடுபட்ட அய்யங்கார் ஒரு நாள் அனைவர் முன்னிலையிலும் தனது (உத்தரீயத்தின்) மேல்துண்டின் முனைகளை சரசரவென்று தேய்த்தார்.

அனைவரும் இது கண்டு நகைத்து, ‘ஐயன்மீர் ஏன் இப்படித் தேய்த்தீர்?’ என்று வினவ அவர் ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவில், தீவட்டி ஏந்தி வந்தவர்களின் தீச்சுவாலைபட்டு, தேர்த் திரைச் சீலை தீப்பற்றியதாகவும் அதை அணைக்கவே அவ்வாறு செய்ததாகவும் பதில் தந்தார்.

srirangam row of towers

இதைக் கேட்ட பலரும் அய்யங்காருக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது என்று நாயக்க மன்னரிடம் தெரிவித்தனர்.

மன்னரோ, அய்யங்கார் மீதுள்ள மதிப்பு காரணமாக, திருவரங்கத்திற்கு ஒரு ஆளை அனுப்பி, தீரவிசாரித்து வருமாறு உத்தரவிட்டார். அவர் திருவரங்கம் அர்ச்சகர்களைக் கண்டு தேரின் திரைகள் தீப்பிடித்ததா என்று கேட்டனர். அவர்கள், ஆம் தேர்த்துணிகள் தீபிடித்தவுடன், அருகிலிருந்த அய்யங்கார் அவைகளை அவித்தார் என்றும் சொன்னார்கள்.

இதைக் கேட்ட நாயக்கர் ஆனந்தப் பரவசப்பட்டு அய்யங்காரை வரவழைத்து, திருவரங்கத்தான் தேர்த் தீபிடித்தபோது நீவீர், இங்கேயல்லவா இருந்தீர், அங்கே போனதாகப் பலரும் சொல்வதெப்படியென வினவ, அவர் தன் மனதளவில் அங்கே என்று எம்பெருமானை சேவித்தேன் என்றார். அருகிலுள்ளவர்களும் ஆமாம், இவர் கிருஷ்ண, கிருஷ்ண என்று சொல்லி உத்தரீயத்தைத் தேய்த்தார் என்றும் அப்போது காரணம் கேட்டதற்கு இதையே சொன்னதாகவும் உறுதி செய்தனர். உடனே நாயக்க மன்னர் அவரை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூஜித்து அனுப்பிவைத்தார்.

 

அன்றிரவு நாயக்க மன்னர் ஒரு கனவு கண்டார். அதில் தான் , காவிரி நதியில் ஸ்நானம் செய்துவிட்டுப் பிள்ளைப் பெருமாள் அய்யங்காருடன் சென்று, திருவரங்கப் பெருமானைச் சேவித்ததாகவும், திரும்பி வருகையில் திடீரென்று அய்யங்கார் காணாமற் போனதாகவும் கனவு கண்டார்.

 

நாயக்க மன்னர் மிகவும் விசனப்பட்டு மறு நாள் காலையில் அய்யங்காரை வரவழைத்துச் சேவித்து, ‘தேவரீர்! உங்களைப் போன்ற பெரியோரை நான் லௌகீகத் தொழிலில் இதுவரை ஈடுபடுத்தியது தவறு. நீங்கள் என்னைச் க்ஷமித்து (மன்னித்து) இனி வைதீக காரியங்களில் ஈடுபட்டு காலட்சேபம் செய்ய அடியேன் யாது செய்யவேண்டு’ மென்று இறைஞ்சினார்.

tirumalai nayak1

அய்யங்காரும் தான், திருவரங்கப் பெருமானுக்கு அருகிலிருக்க விரும்புவதாகச் சொல்லவே, கோவிலுக்கு வடமேற்கில் ஒரு திருமாளிகை புதுக்கி, அதில் அவரை எழுந்தருளச் செய்து தானும் அடிக்கடி திருவரங்கம் சென்று அவரை உபசரித்து மகிழ்ந்தனன்.

 

அங்கெழுந்தருளிய அய்யங்கார் நூற்றெட்டு திருப்பதி அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கட அந்தாதி, அழகர் அந்தாதி, திருவரங்கத்துக் கலம்பகம், திருவரங்க மாலை, அந்தாதி, அஷ்டப் பிரபந்தம், பரப்ரம்ம விவேகம் என்னும் பல நூல்கள் செய்து பகவத் கைங்கரியத்தில் காலம் தள்ளினார். ஒருநாள் கோவிலில் தரிசனம் செய்துகொண்டிருக்கையில் ஒரு நொண்டிப் பசு இடறி அவர் காலில் விழுந்தது. அதுவே தனது இறுதிக்காலம் என்று ஒரு பாடலில் சொல்லிவிட்டு கொஞ்சம் காலம் கழித்து பரமபதம் சேர்ந்தார்.

எனது முந்தைய கட்டுரைகள்
1.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி (20 ஜனவரி 2012)

2.வங்கக் கடல் கடைந்த ஆண்டாள் தரும் அற்புதத் தகவல்- 9 ஜனவரி 2014

3. ‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்! – 28 நவம்பர் 2014

4. Sri Ramanuja’s Favourite Tamil Hymn! (Article No.1443; Dated 28th November 2014.)

 

5. Amazing Andal: Where did she see the Lion? ( 30 -1-2013)

6. Ramanuja and Non Brahmins ( 13-5-2013)

7.காலா! என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர்!! (கட்டுரை எண்: 925 தேதி: 23 March 2014.)

 

8. Andal by C.Subrahmanya Bharati (Post No.924 Date: 22nd March 2014.)

9. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், உப்பைப் போல இருப்பான் பக்தன் (Post No. 900 Dated 11th March 2014)

10. Vaishnavite Saint NAMMALWAR (Post no 915 date 18th March 2014)

 

11.ஆழ்வார் முக்கியப் பாடல்கள் (மே சிந்தனைச் சிற்பிகள் காலண்டர்) (Post No.1011; Date:30 ஏப்ரல் 2014

 

And more articles about Alvars and other Vaishnavite saints

-subham-

மகனைத் தியாகம் செய்து இளவரசனைக் காப்பாற்றிய வீரத்தாய்! (Post No 2680)

 

panna2 (2)

Written by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2680

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

akbar7 (2)

ராஜஸ்தானில், மேவாரில் சங்க ராஜா என்ற ஒரு ரஜபுத்ர வீரன் ஆண்டுவந்தான். அவனுக்கு உதயசிம்மனென்ற சிறு குழந்தை இருந்தது. சங்கராஜா திடீரென்று இறந்துபோகவே, அரசவைப் பெரியோர்கள் கூடி, பான்பீர் என்னும் ஒரு இளவரசனை அழைத்து, உதய சிம்மன் பெரியவானாகும் வரை நீ நாட்டை ஆண்டு வா என்று உத்தரவிட்டனர்.

 

பான்பீர் முதலில் நன்றாகவே அரசாட்சி செய்து வந்தான். சில காலத்துக்குப் பின்னர் தானே மேவாருக்கு அரசனாக வேண்டும் என்ற பேராசை உண்டாயிற்று. உடனே பல வகைகளிலும் அரசாட்சியை நீட்டிக்கத் திட்டமிட்டான்.

 

 

பன்னா என்னும் தாதிதான் உதய சிம்மனைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். அவளுக்கும் அதே வயதில் ஒரு குழந்தை இருந்ததால் இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ரஜபுத்ரப் பெண்கள், அந்நாட்டு ஆண்களைப் போலவே வீரமிக்கவர்கள். அவளுக்கு பான்பீரின் துர்புத்தி நன்றாகத் தெரியும். உதய சிம்மனை சிறு வயதிலேயேக் கொல்ல, பான்பீர் திட்டமிட்டதும் அவளுக்குத் தெரியவந்தது. உடனே பாரி என்ற பெயருள்ள நாவிதனை வீட்டுக்குக் காவலாகப் போட்டாள்.

 

ஒருநாள் பான்பீர், வாளும் கையுமாக, பன்னாவின் வீட்டு வாயிலில் வந்து இறங்கினான். உடனே நாவிதன் பாரி, ஓடிப்போய் அவளிடம் தகவல் சொல்லவே, அவள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்து, தன் கையிலிருந்த பழக்கூடையில் ராஜகுமாரன் உதயசிம்மனை வைத்து பழக்கூடையை நாவிதனிடம் கொடுத்து ஊர்க்கடைசியிலுள்ள மரத்தடியில் காத்திருக்கச் சொன்னாள்.

 

வீட்டிற்குள் மீண்டும் வந்து, ராஜ குமாரனின் உடைகள், அணிகலன்களைத் தன் மகனுக்கு அணிவித்தாள்; பின்னர் கதவைத் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் நுழைந்த பான்பீர், தொட்டிலில் அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்திருக்கும் சிறுவன் தான் உதயசிம்மன் என்று எண்ணி ஒரே குத்தில் கொன்றுவிட்டான். உடனே பன்னா வீறிட்டழுதாள். அக்கம்பககத்திலுள்ள பெண்கள் ஓடிவந்து அரசன் பான்பீர் நிற்பதைப் பார்த்துவிட்டு, பயந்து பிரமையுடன் நின்றனர். அவன் கொக்கரித்துவிட்டு வெளி ஏறினான்.

தந்நாட்டு அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காக தன் மகனையே தியாகம் செய்த பன்னா, சிறிதும் தாமதியாமல் மரத்தடிக்கு ஓடிச் சென்று நாவிதனின் கையிலிருந்த கூடையை வாங்கினாள். அதிலுள்ள ராஜகுமாரனை அருகாமை நாட்டிலுள்ள சிற்றரசனிடம் ,நடந்த கதை அனைத்தும் கூறி, உதய சிம்மன் பெரியவனாகும் வரை பாதுக்காக்க வேண்டினாள்.

 

உதயசிம்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நல்ல வாலிபப் பருவம் எய்திய பின்னர் முழுக் கதைகளையும் கேட்டறிந்து படை திரட்டிச் சென்று பான்பீரைக் கொன்றான். மேவாரின் ஆட்சியை மீண்டும் ஏற்றான்.

 

ஒரு தாதி, ரஜபுத்ர அரசனுக்கு விசுவாசமாக இருந்து தன் மகனையே தியாகம் செய்த கதையை ரஜபுத்ர கிராம மக்கள் இன்றும் கிராமம்தோறும் பாடிப்பரவி வருகின்றார்கள்.

அவள் ஒரு வீரத்தாய்!

வேதத்திலும், புறநானூற்றிலும் வரும் வீரத் தாய்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வரிசையில் காலத்தால் வெல்ல முடியாத பகழ் படைதுவிட்டாள் பன்னா என்னும் சாதாரணப் பணிப்பெண்!!!

–subam–

ஏப்ரல் 2016 காலண்டர் (மன்மத/துர்முகி ஆண்டு பங்குனி/சித்திரை) Post No.2674

 

hanuman raman

Compiled by london swaminathan

Date: 29 March,2016

 

Post No. 2674

 

Time uploaded in London :–  8-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தாவரங்கள் பற்றிய 30 பழமொழிகள், இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

 

முக்கிய நாட்கள்:-  8-யுகாதி/தெலுங்கு புத்தாண்டு,

14-தமிழ் புத்தாண்டு, 15-ஸ்ரீஇராமநவமி, 21-சித்திரா பவுர்ணமி.

ஏப்ரல் 20- மதுரை சித்திரைத் தேர், 22- கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குதல்.

முகூர்த்த நாட்கள்:-4, 25, 29, அமாவாசை:- 6/7, பௌர்ணமி:- 21

ஏகாதசி:- 3, 17/18 இம்மாத காலண்டரில் தாவரம் பற்றிய 30 பழமொழிகள் இடம்பெறுகின்றன.

 

raman full page

ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை

அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.

ஏப்ரல் 2 சனிக்கிழமை

அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?

ஏப்ரல் 3 ஞாயிற்றுக் கிழமை

அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.

ஏப்ரல் 4 திங்கட்கிழமை

அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.

ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை

அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.

 

arasamaram

 

ஏப்ரல் 6 புதன்கிழமை

ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.

ஏப்ரல் 7 வியாழக்கிழமை

ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து

ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை

ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு

ஏப்ரல் 9 சனிக்கிழமை

ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.

ஏப்ரல் 10 ஞாயிற்றுக் கிழமை

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

 

ஆலமரம்

ஏப்ரல் 11 திங்கட்கிழமை

ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்

ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை

ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்

ஏப்ரல் 13 புதன்கிழமை

இலை சாய்கிற பக்கம் குலை சாயும்

ஏப்ரல் 14 வியாழக்கிழமை

எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை

ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை

எட்டி மரமானாலும் பச்சை மரத்தை வெட்டாதே.

 

2மர விநோதம்

 

ஏப்ரல் 16 சனிக்கிழமை

எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.

ஏப்ரல் 17 ஞாயிற்றுக் கிழமை

எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்

ஏப்ரல் 18 திங்கட்கிழமை

ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.

ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை

ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது

ஏப்ரல் 20 புதன்கிழமை

கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?

brinjal white

 

ஏப்ரல் 21 வியாழக்கிழமை

கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை

யானை வாயில் போன கரும்பைப் போல

ஏப்ரல் 23 சனிக்கிழமை

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்

ஏப்ரல் 25 திங்கட்கிழமை

கனியிருக்க காயைத் தின்பரோ?

BANANA HILL

ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை

காய்த்த மரம்தான் கல்லடி படும்

ஏப்ரல் 27 புதன்கிழமை

கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்

ஏப்ரல் 28 வியாழக்கிழமை

கொடிக்குக் காய் பாரமா?

ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை

சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?

ஏப்ரல் 30 சனிக்கிழமை

சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.

மே 1 ஞாயிற்றுக் கிழமை

–சுபம்–

 

 

 

பெண்களை எங்கே, எங்கே பார்த்தால் குற்றமாகாது? (Post No 2671)

996_Brides_Kashmir

Compiled and Translated by london swaminathan

 

Date: 28 March 2016

 

Post No. 2671

 

Time uploaded in London :– 7-20 AM

 

(Pictures are taken from various sources. Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றி 150 சம்ஸ்க்ருத பழமொழிகள் –பகுதி 2

bengali bride

22.நார்யோ ஹரந்தி ஹ்ருதயம் ப்ரசபம்

நராணாம் – ரத்ன சமுச்ச

ஆண்களின் இருதயத்தை எளிதில் கவர்கிறார்கள் பெண்கள்.

Xxx

23.நிர்தர்பா நாசதீ பவேத் – கதா சரித் சாகரம்

துடுக்கற்ற பணிப்பெண்களே நல்லவர்கள்.

Xxx

  1. நிர்தோஷ த்ருஸ்யா ஹி பவந்தி நார்யோ யக்ஞே விவாஹே வ்யசனே வனே ச – ப்ரதிமாநாடக 1-29

யாகத்திலே, விவாஹத்திலே,துக்கத்திலே, ஆரண்யத்திலே –பெண்கள் பார்க்கப்பட்டால் தவறில்லை. (வேள்வி, திருமணம், காடு, துக்கம் நிகழ்ந்த இடத்தில் பெண்களைப் பார்க்கலாம்; பேசலாம்)

Xxx

25.நிசர்க நிபுணா: ஸ்த்ரிய: – மாளவிகாக்னிமித்ரம்

இயற்கையிலேயே, பெண்கள் நிபுணர்கள்(திறமைசாலிகள்)

Xxx

26.நீதி மாத்ரம் அஹம் மன்யே ஸ்த்ரீணாம் ரக்ஷானியந்த்ரணம் – கதா சரித் சாகரம்

பெண்களைப் பாதுகாப்பதற்கானக் கட்டுப்பாடுகள் நியாயமானவை என்றே நான் நினைக்கிறேன்.

Xxx

27.பரஸ்த்ரியம் ந அபிகாங்க்ஷேத – சதோபதேச ப்ரபந்த

பிறர் மனைவியை விரும்பாதே.

Xxx

 

IMG_4358

28.ப்ரத்யய: ஸ்த்ரீஷு முஷ்ணாதி விமர்சம் விதுஷாமபி – கதா சரித் சாகரம்

கற்றவர்களும் கூட பெண்களை நம்பி முட்டாள் ஆகிவிடுவர்.

Xxx

29.ப்ரத்யுத் உத்பன்னம் மதி ஸ்ரேணம்-சாகுந்தலம்

பெண்கள் புத்திசாலிகள்

 

Xxx

30.ப்ரிய: கோ நாம யோஷிதாம் –சாந்திசதக

யார்தான் இப்பெண்ணுக்கு விருப்பமானவர்?

Xxx

31.பத்த மூலஸ்ய மூலம் ஹி மஹத்வைரதரோ: ஸ்த்ரிய: – சிசுபாலவதம்

பகைமை என்னும் மரத்தின் ஆணிவேர் ( மூல காரணம்) பெண்கள்தான்.

Xxx

32.பீஜம் யுத்தஸ்ய யோஷித: – ப்ருஹத் கதா கோச 69-16

போர்களின் வித்து/விதை பெண்களே

Xxx

33.பவதி விக்லவதா குணோ அங்கனானாம் – சிசுபாலவதம்

பெண்களுடைய குணம் பயப்படுவதே.

Xxx

34.மத்தா நதீ ச நாரீ ச நியந்தும் கேன பார்யதே – கதா சரித் சாகரம்

வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியையும், பெண்களையும் யார் கட்டுப்படுத்த முடியும்?

Xxx

35.மானனீயா ஹி யோஷித: – பாரத மஞ்சரி

பெண்களை மதிக்க வேண்டும்

Xxx

36.முக்த: கலு  அபலாஜன: –

விரைவில் பெண்கள் மிரண்டு/ மருண்டுவிடுவர்

Xxx

IMG_4527

37.முக்தமானசம் ரமந்தே நஹி யோஷித:

முட்டாளுடன் பழகுவதை பெண்கள் விரும்புவதில்லை.

தொடரும்…………………………………….

(ஏற்கனவே நான் எழுதிய 25-க்கும் மேலான பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள், பழமொழித் தொகுப்புகள், இந்த பிளாக்கிலுள்ளன.)

 

 

இவர் யார்? (Post No 2664)

question-mark-706906_960_720

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 26 March 2016

 

Post No. 2664

 

Time uploaded in London :–  6-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

தெரிந்து கொள்ள வேண்டியவர்கள்

இவர் யார்?

 

.நாகராஜன்

 

பெரிய வேதாந்தி. கணிதப் பேராசிரியர்.

அமெரிக்காவிற்குச் சென்று வேதாந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி அமெரிக்கர்களைப் பெரிதும் கவர்ந்தவர்.

பஞ்சாபி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவர்.

உலக வாழ்வைத் துறந்தவர்.

33 ஆண்டுகளே வாழ்ந்தார்.

கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தியவர்.

 

 

ஜல சமாதிக்கு முன்னர் அவர் எழுதிய துண்டுச் சீட்டில், “மரணமே, வா! உன்னை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் எங்கும் இருப்பவன்” என்று எழுதி வைத்தவர்.

 

பாரதத்தை தன்னிலே கண்டு தன்னனயே பாரதமாக உருவகப் படுத்தி இவர் எழுதிய கட்டுரை ஒவ்வொரு பாரதீயனும் படிக்க வேண்டிய ஒன்று!

 

இவரது அருமையான சொற்பொழிவுகள் 8 பகுதிகளாக வெளி யிடப்பட்டுள்ளது.

கணிதத்தில் கடவுளைக் கண்ட இவரின் உருவகங்கள் பிரமாதமானவை.

 

குர் ஆனில் ஓம் உள்ளது என்ற இவரது சொற்பொழிவு முஸ்லீம்கள் வியந்து போற்றிய ஒன்று.

உருதுவில் பெரும் புலமை பெற்ற இவர் ஒரு பெரும் கவிஞரும் கூட.

 

 

ஸ்வாமி விவேகானந்தரை லாகூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளித்தவர். கூடவே குட்வின் உள்ளிட்டவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்,

தனது வீட்டில் இருந்த நூலகத்தை ஸ்வாமிஜிக்குக் காண்பிக்கவே, அவர் வால்ட் விட்மன் எழுதிய “லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ புத்தகத்தை அங்கு படித்தார்.

 

இவர் ஸ்வாமி விவேகானந்தருக்கு ஒரு கடிகாரத்தை பரிசாக அளிக்கவே, அதை அவர் சட்டைப் பையிலேயே மாட்டிய ஸ்வாமிஜி, “இதை, நான் இங்கேயே அணிகிறேன்” என்று கூறி பரந்த வேதாந்த கருத்தைச் சொன்ன சம்பவம் உலகப் புகழ் பெற்ற ஒன்று.

 

இந்த மகான் யார்?

*********

 

MySt Rama Tirth fdc

விடை: சுவாமி ராமதீர்த்தர்

–Subham–

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்! (Post No. 2662)

indra in thailand

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2662

 

 

Time uploaded in London :–  12-10

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

 

எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணல் வேண்டும் – மஹா கவி பாரதி

 

வேத மந்திரங்கள், பாரதி பாடல்கள் முதலியவற்றில், ஆக்கபூர்வமான சிந்தனைகள் இருப்பதால் அவைகளைக் கேட்பதாலும், படிப்பதாலும் பலனுண்டு. ‘’பாஸிட்டிவ் திங்கிங்’’- ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்று சிந்திப்பதும், மகிழ்ச்சியுடன் இருப்பதும் வெற்றியை ஈட்டித் தரும். இதோ ஒரு குட்டிக்கதை!

தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்

indra

இந்திரன், தேவ லோகத்திலிருந்து, பூமிக்கு வந்தான்; கொஞ்சம் வேடிக்கை பார்க்கத்தான்!

 

ஒரு காட்டின் வழியே செல்லுகையில், தனது தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்யும் ஒருவன் ஒரு மரத்தின் அடிப்பகுதியாக மாறிவிட்ட காட்சியைக் கண்டான். அவன் இன்னும் தவம் செய்துகொண்டிருந்தான். இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று சோகமாகக் கேட்டான். உடனே இந்திரன், இன்னும் பத்து ஆண்டுகள் ஆகுமென்றான். அவன், இன்னும் பத்து ஆண்டுகளா? என்று கேட்டான். கேட்ட மாத்திரத்தில் அவன் நரகத்துக்குப் பறந்து போய்விட்டான்.

 

இந்திரன், அதே காட்டில், தொடர்ந்து பயணம் செய்கையில் இன்னுமொரு காட்சியைக் கண்டான். தனது தவறுகளுக்காக வருந்தும் வேறு ஒருவன், ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஆன்மீக தாகம் இருந்தது. இந்திரனைக் கண்டவுடன், நான் முக்தி (விடுதலை) பெற இன்னும் எவ்வளவு காலம் தவம் செய்ய வேண்டும்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.

 

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தால் விடுதலை கிடைக்கும் என்று இந்திரன் சொன்னான்.

பூ! வெறும் ஆயிரம் ஆண்டுகள்தானா! என்று சொல்லிக்கொண்டே தாவிக்குதித்து மரத்தைச் சுற்றினான். அடுத்த நொடியில் அவன் ராக்கெட் வேகத்தில் சுவர்க்கத்துக்குப் போய்விட்டான்.

 

கண்ணன் கூறுவான்:–

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவசாதயேத்

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன (பகவத் கீதை 6-5)

தன்னைத்தானே ஒருவன் உயர்த்திக்கொள்ள வேண்டும்; தன்னையே தாழ்த்திக்கொள்ளக் கூடாது; நிச்சயமாக தானே ஒருவனுக்கு உறவினன்; தானே ஒருவனுக்குப் பகைவன் (பகவத் கீதை 6-5).

–சுபம்-

கடலில் பெய்த மழையும் புத்தகத்திலுள்ள அறிவும் வீண்! வீண்! (Post No.2661)

old groom

Compiled by london swaminathan

 

Date: 25 March 2016

 

Post No. 2661

 

 

Time uploaded in London :–  11-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Already published in English; Tamil Translation: London swaminathan

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. கற்றறிந்த அறிஞர்களும், சான்றோர்களும் பேசிக்கொண்டிருக்கையில், அவைகள் தானானாகப் பொங்கி வரும். இதையே விவேக சிந்தாமணி என்ற, ஆசிரியர் பெயர் தெரியாத, நூலிலும் காண முடியும். இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதிய ‘பயன் இல்லாத ஏழும், உதவாத எட்டும்’ என்ற கட்டுரையில் காண்க (நவம்பர் 18, 2013). அதில் விவேக சிந்தமணி பாடல் ‘ஆபத்துக்குதவா பிள்ளை’— முதலிய பாடல்களைக் கொடுத்துள்ளேன்.

 

இனி சில சம்ஸ்கிருத பாக்கள்:

நாலு விஷங்கள்:–

அனப்யாச வித்யா- பயன்படுத்தப்பாடாத படிப்பு

அஜீர்ண போஜனம் – செமிக்காத உணவு

தரித்ர சபா- ஏழைகள் சபை

விருத்த தருணீ – வயதான மாப்பிள்ளைக்கு இளம் மணமகள்

அனப்யாஸோ விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்

விஷம் சபா த்ரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

–ஹிதோபதேசம்

Xxx

 

rain sea

வீண்போகும் 4 விஷயங்கள்:—

 

சமுத்ரேஷு வ்ருஷ்டி: – கடலில் பெய்யும் மழை

த்ருப்தஸ்ய போஜனம்- சாப்பிட்டவனுக்குப் போடும் சாப்பாடு

சமர்தஸ்ய தானம் – திறமையுள்ளவனுக்கு கொடுக்கப்படும் தானம்

திவா தீபா – பகலில் ஏற்றப்படும் விளக்கு

வ்ருதா வுருஷ்டி: சமுத்ரேஷு வ்ருதா த்ருப்தஸ்ய போஜனம்

வ்ருதா தானம் சமர்தஸ்ய வ்ருதா தீபோ திவாபி ச

-சுபாஷித ரத்ன பாண்டாகரம் 153-26

Xxx

 

கெட்டதைத் தட்டிக் கேட்காத முதியோர்

வ்ருத்தரஹித சபா- முதியோரில்லா சபை

தர்மாப்ரதிபாதகா வ்ருத்தா – நல்ல குணங்களை எடுத்துரைக்கா முதியோர்

சத்யரஹித தர்ம- உண்மையில்லாத வழிமுறைகள்

சலாப்யுபேதம் சத்யம் – உண்மையை தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்துவோர்

ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா ந தே வ்ருத்தா யே ந வதந்தி தர்மம்

நாசௌ தர்மோ யத்ர ந சத்யமஸ்தி ந தத்சத்யம் யச்சலேனாப்யுபேதம்

–விதுரநீதி 3-58

Xxx

 

libraries

பயனற்ற நான்கு விஷயங்கள்:–

பராதீன ஜன்ம – மற்றவர்களை அண்டி வாழும் வாழ்க்கை

ப்ரஸ்த்ரீ சுக- மற்ற பெண்களிடத்தில் துய்க்கும் இன்பம்

பரகேஹே லக்ஷ்மீ –பிறர் வீட்டிலுள்ள செல்வம்

புஸ்தக வித்யா – நூல்களிலுள்ள அறிவு: ஏட்டுச் சுரைக்காய்

பராதீனாம் வ்ருதா ஜன்ம பரஸ்தீஷு வ்ருதா சுகம்

பரகேஹே வ்ருதா லக்ஷ்மீ: வித்யா யா புஸ்தகே வ்ருதா

 

Xxx

பயனிலா முடிவுடைய நான்கு:—

husbad wife

அஜயுத்தம்ருஷிராத்தம் ப்ரபாதே மேகடம்பரம்

தம்பத்யோ கலஹஸ்சைவ பரிணாமே ந கிஞ்சன

அஜயுத்தம் –ஆட்டுச் சண்டை

ரிஷி ஸ்ராத்தம் – ரிஷி முனிவர்களுக்குச் செய்யப்படும் ஸ்ராத்தம்

ப்ரபாதே மேகடம்பரம் – காலையில் இடியுடன் கூடிய மேகம்

தம்பதி கலஹம் – கணவன் –மனைவி சண்டை

 

–சுபம்–

 

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது? (Post No 2641)

 

dieases

பாக்யா 18-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
வியாதிகளுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?
ச.நாகராஜன்

 

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 March 2016

 

Post No. 2641

 

Time uploaded in London :–  5-44 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

gee-naming-diseases-690

“நாம் ஒருவரை ஒருவர் ஏன் நேசிக்கிறோம் என்றால் நமக்கு வரும் வியாதிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது.” – ஜோனாதன் ஸ்விப்ட்

 

புதிய புதிய வைரஸ்கள்! புதிய புதிய வியாதிகள்!  ஜிகா வைரஸ் இப்போது பயமுறுத்துகிறது. அது எப்படி ஜிகா வைரஸ் என்று பெயர் வந்தது? உகாண்டாவில் உள்ள ஜிகா காடுகளில் முதன் முதலாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதன் பெயர் ஜிகா வைரஸ்.

பார்கின்ஸன் நோய். அல்ஸைமர் நோய், இப்படி பல வியாதிகளுக்கும் ஏன் அப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது?

 

 

பி.பி.சியின் மருத்துவ எழுத்தாளர் லிஸ்ஸி க்ரவுச் களத்தில் இறங்கினார். அதன் விளைவாக வியாதிகளின் பெயர் சூட்டல் பற்றி ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன.

 

 

ஒரு புது வியாதி நோயாளிகளைப் பீடிக்கும் போது அதற்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வியாதிகளுக்கு பெயர் சூட்ட பேபிகளுக்குப் பெயர் சூட்டும் புத்தகம் போல எதுவுமே இல்லை! சரி, பின்னர் எப்படி பல விசித்திரப் பெயர்கள் சூட்டப்படுகின்றன?

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் டாக்டர் க்ரஹாம் ஹ்யூஸ் என்பவர் ரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் ஒரு விதமான  பிசுபிசுப்பான ரத்தத்தை சில நோயாளிகளிடம் கண்டார். அவரது சகாக்கள் அவரை கௌரவிக்கும் விதமாக அந்த நிலைக்கு ஹ்யூஸ் சிண்ட் ரோம் என்று அவரின் பெயரைச் சூட்டினர்.

 

 

பழைய காலத்தில் நோயையோ அல்லது அதற்கு காரணமான வைரஸையோ முதலில் கண்டுபிடித்தவரின் பெயரை அந்த நோய்க்குச் சூட்டுவது வழக்கம். இப்போது அப்படியில்லை. காலம் மாறி விட்டது!

 

disease-names

டாக்டர் அலாய்ஸ் அல்ஸைமர் கண்டுபிடித்த நோய்க்கு பாராலிஸிஸ் அஜிடன்ஸ் என்று  பெயர் வைக்கலாம் என்று அவர் சொன்னார். ஆனால் அனைவருமே அவர் சுட்டிக் காட்டிய வியாதிக்கு அல்ஸைமர் நோய் எனப் அவரின் பெயரையே இட்டனர். வயது மூப்பின் காரணமாக வரும் மறதி நோய் இன்று அல்ஸைமர் என்று அவரை கௌரவித்து அழைக்கப்படுகிறது.

டாக்டர் ஜேம்ஸ் பார்கின்ஸன் முதுமை காரணமாக வரும் நடுக்குவாத நோயைக் கண்டுபிடித்தார். அந்த நோய்க்கு அவர் பெயரைச் சூட்டினர். இன்று பார்கின்ஸன் நோய் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.

 

 

சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் லின்ஃபா வேங் தனது குழுவினருடன் இணைந்து ஒரு புதிய வைரஸைக் கண்டு பிடித்தனர். ஆஸ்திரேலியாவில் ஹெண்ட் ரா என்ற இடத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டதால் அதற்கு ஹெண்ட் ரா வைரஸ் என்ற பெயரைத் தந்தனர்.

 

 

வந்தது கோபம் ஹெண்ட் ரா நகர மக்களுக்கு! விஞ்ஞானிகள் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டாலும் அந்த நகரத்து மக்கள் தங்களை அந்தப் பெயர் அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு தொலைபேசி அழைப்புகளால் வேங்கை வறுத்து எடுத்து விட்டனர். பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூடத் தொலைபேசி அழைப்பு வந்த போதெல்லாம் அவர் நடுநடுங்கினார்!

 

 

அமெரிக்காவில் கனெக்டிகட் அருகில் உள்ள ஓல்ட் லைம் என்ற இடத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் குழந்தைகளுக்கு உண்ணியினால் வரும் நோய் ஒன்றைக் கண்டு பிடித்து  அதறகு லைம் நோய் என்று பெயரிட்டனர்.

 

 

அந்த நகர  மக்களுக்குக் கோபம் வந்ததா? இல்லை. அதை அவர்கள் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்! அதை வணிகத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு அந்த உண்ணியை டி-ஷர்ட்டுகளில் போட்டு அமோக விற்பனையக் கண்டனர்.!

 

 

உலக சுகாதார நிறுவனமான WHO  பொதுவான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. புதிதாகக் கிளம்பும் வைரஸுக்கோ அல்லது நோய்க்கோ இடத்தின் பெயரைச் சூட்டாதீர்கள் என்ற அதன் அறிவுரை வம்பை விலைக்கு வாங்காதீர்கள் என்பதற்கான நாகரீகமான அன்புரை!

 

nov08-GB Churchill stamp unissued

ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை மெதுவாக்கும் ஒரு வகை வீக்கத்திற்கு  (Granulomatasois) வெஜினர் (Frederich Wegener ) என்ற விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்த போது அவர் நாஜிக் கட்சியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சித்திரவதை முகாம்களில் இருந்த போது அங்குள்ளவர்களை அவர் சோதனைக்குத் தவறாகப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினால் அந்த வியாதிக்கு அவர் பெயரைக் கூற தடை விதித்து விட்டனர்.

 

 

இதற்கிடையில் மே 2015இல் உலக சுகாதார நிறுவனம் அனைவரும் ஒப்புக் கொள்ளும் பெயரையே வியாதிகளுக்குச் சூட்ட வேண்டும் என்று வழிகாட்டுதலைத் தந்துள்ளது.

 

 

டாக்டர் ஹ்யூஸ், “ ஒரு வியாதிக்குப் பெயரிடுவது அவ்வளவு சுலபமில்லை. சில வியாதிகளை விவரிக்கவே பத்து சொற்கள் தேவையாக உள்ளன” என்கிறார். இந்த பத்து சொற்களும் மருத்துவ நிலையை விளக்கும் சொற்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம், அந்த வியாதியின் பெயரைச் சொன்னாலே வியாதியினால் வரும் சங்கடமே தேவலை என்று ஆகி விடும்!

 

ஆகவே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும், யாரையும் புண்படுத்தாத ஒரு பெயரைத் தேட வேண்டிய அவசியம் புதிய வியாதிக்குப் பெயர் சூட்டுவதில் வருகிறது.

 

சரி, டெங்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? யாருக்குமே இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊகமாக ஒரு ஆய்வு செய்து சொல்ல முடியும். ஆப்பிரிக்காவில் வழங்கி வரும் ஸ்வாஹிலி மொழியில் “கா டிங்கா பெப்போ” என்ற வார்த்தைக்கும் கெட்ட ஆவியினால் ஏற்பட்ட நடுக்கத்துடன் கூடிய வலிப்பு என்று அர்த்தம். இதைச் சுருக்கமாக டிங்கா என்பார்கள். இந்த டிங்கா ஸ்பானிய மொழியில் டெங்கு என்று சொல்லப்பட்டு உலகின் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது!

 

 

நல்ல வேளையாக ஜிகா காடுகளை வைத்து சூட்டப்பட்டுள்ள ஜிகா வைரஸுக்கு இதுவரை எந்த கண்டனமும் வரவில்லை; ஆர்ப்பாட்டக் கூட்டங்களும் இல்லை! உகாண்டா காடு தானே என்று விட்டு விட்டார்களோ!

 

british-winston-churchill-postage-stamp-7530095

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரிட்டனின் போர்க்கால பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அணு ஆயுதம் என்றால் அடங்காத ஆசை. எப்படியாவது அணு ஆயுதத் தயாரிப்பில் பிரிட்டன் தலை தூக்கி நிற்க வேண்டும் என்று அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் அணு ஆயுதம் அபாயம் விளைவிக்கும் ஒன்று என்பது பிரபல விஞ்ஞானி நீல்ஸ் போரின் எண்ணம்.

 

 

இதன் அபாயத்தை நேரில் சென்று சர்ச்சிலிடம் விளக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவரை 1944ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று சந்தித்தார். சர்ச்சிலின் மிக நெருங்கிய ஆலோசகரான லார்ட் செர்வெல்லும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் நீல்ஸ் போரின் அபாய அறிவிப்பை சர்ச்சில் ஏற்கவில்லை.

 

சந்திப்பு முடிந்தவுடன் வருத்தத்துட நீல்ஸ் போர் கூறினார்: “எங்கள் இருவரையும் இரண்டு பள்ளிச் சிறுவர்களைத் திட்டுவது போல அவர் திட்டினார்”

 

பின்னர் அமெரிக்கா சென்ற போரை ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சந்திக்க விரும்பினார். 1946, ஆகஸ்ட் 26ஆம் தேதி அவர் ரூஸ்வெல்ட்டைச் சந்தித்தார். ஆனால் சர்ச்சிலைப் போல ரூஸ்வெல்ட் திட்டவில்லை. அவரை ஆதரித்து நான் சர்ச்சிலிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னார்.ஆனால் வரலாறு வேறு விதமாக ஆனது!

 

 

அணுகுண்டு தயாரிக்கப்பட்டு ஹிரோஷிமா நாகசாகி மீது போடப்பட்ட போது தான் அது எவ்வளவு அபாயகரமான ஆயுதம் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

 

இருந்தாலும் சர்ச்சிலின் அணு ஆயுத ஆர்வம் அவரை விடவே இல்லை. வயது முதிர்ந்த நிலையில் கூட பிரிட்டனின் அணு ஆயுத ஆய்வகம் ஒன்றிற்குச் சென்ற அவர் அங்கு நியூட் ரான்கள் சிதற அடிக்கப்படும் சோதனையைக் கண்டு மகிழ்ந்தார்.

விஞ்ஞானிக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வேறுபாடு நமக்குப் புரிந்த ஒன்று தான்!

*******