Date: 30 JANUARY 2019 GMT Time uploaded in London –15-58 Post No. 6007 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. Kumbhamela 2019 pictures are posted here.
GMT Time uploaded in London – 21-43 Post No. 5953 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 10 JANUARY 2019 GMT Time uploaded in London – 7-44 am Post No. 5911 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial
Date: 7 JANUARY 2019 GMT Time uploaded in London 9-54 am Post No. 5897 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 1 JANUARY 2019 GMT Time uploaded in London –7-20 AM Post No. 5867 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 31 December 2018 GMT Time uploaded in London –7-24 am Post No. 5862
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
அலெக்ஸிஸ் பிரொன் (Piron) என்பவர் புகழ் பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியர். ஒரு சமயம் அவர் ஒரு போலி எழுத்தாளரிடம் மாட்டிக்கொண்டார். எதிர்பாராத நேரத்தில் அந்த ஆசாமி வந்து, ‘ஐயா பெரியவரே, என் கவிதைகளை நீங்கள் கேட்டு, கருத்து சொல்ல வேண்டும்’ என்றார்.
தயவு தாட்சிண்யம் காரணமாக பிரோனும் சரி என்று ஒப்புக்கொண்டார்.
ஆனால் கவிதை எழுதியதாகச் சொல்லிக்கொண்டு வந்த படைப்பாளி, பயங்கரக் ‘கள்ளக் காப்பி’ அடிப்பவர். பிரபல கவிஞர்களின் எழுத்துக்களை அப்படியே எடுத்துக்கொண்டு முன்னும் பின்னும் ஓரிரு சொற்களைச் சேர்த்து தான் எழுதியதாக பாவனை செய்தார்.
பிரோனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. போலிக் கவிஞர் கவிதை வாசிக்கும்போது, எங்கெங்கு எல்லாம் மற்றவர் படைப்புகளைத் திருடி இருந்தாரோ அந்த இடமெல்லாம் தன் தொப்பியை கையில் எடுத்துக்கொண்டு பவ்யமாக சலாம் போட்டார்.
போலிக் கவிஞர் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒரே வியப்பு. திடீரென்று கவிதைகள் வாசிப்பதை நிறுத்திவிட்டு.
‘அன்பரே! அவ்வப்பொழுது தொப்பியைக் கழற்றிவிட்டு தலை குனிந்து சலாம் போடுகிறீர்களே! இதன் தாத்பர்யம் என்னவோ?’
உடனே பிரோன் சொன்னார்:
‘ஓ! அதுவா? வேறு ஒன்றுமில்லை; நான் பழைய நண்பர்களைச் சந்திக்கும்போது போடும் சலாம் அது! பழக்க தோஷம்; அவ்வளவுதான்- என்றார்.
(காப்பி அடிக்கப்பட்ட பழைய கவிஞர்களின் வரிகள் வந்த போதெல்லாம் அவர் சலாம் போட்டது, போலிக் கவிஞருக்குப் புரிந்ததோ இல்லையோ!)
Xxx
பாழாய்ப் போன பார்ஸல் மீண்டும் வந்தது!
ஸ்கட்லாந்தைச்சேர்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸர் வால்டர் ஸ்காட் (Sir Walter Scott) . அவர் நாவல் ஆசிரியர், கவிஞர், வரலாற்று ஆசிரியர். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:–
“வசந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பெரிய பார்ஸல் நியூயார்க்கிலிருந்து வந்தது. அவசரம் அவசரமாகப் பிரித்தேன். ஒரு பெண்மணி ஒரு பெரிய கதை எழுதி, அன்பான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.
‘அன்பரே! பெருந்தகையோனே!
என் கதைக்கு ஒரு அழகான முன்னுரை பின்னுரை எழுதுக.
எங்கெங்கெல்லாம் திருத்த வேண்டுமோ அங்கெங்கெல்லாம் ‘நகாசு’ வேலை செய்து திருத்துக. இதை வெளியிடவும் ஏற்பாடு செய்துவிடுங்கள்; காப்பி ரைட் கேட்டு பலரும் வாசலில் ‘க்யூ’வில் நிற்க வேண்டும்; அப்படி என் கதையை ஜொலிக்கச் செய்துவிடுங்கள்’.
இதைப் படித்துவிட்டு பார்சலின் அட்டையைப் பார்த்தேன். எனக்கு ஐந்து பவுன் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து நொந்து போனேன்.அந்தப் பெண்மணி சரியாக தபால் கட்டணம் செலுத்தவில்லை!
காலம் உருண்டோடியது; காலைத் தபால்களை ஆவலுடன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு பெரிய பார்ஸல்! அவசரப்பட்டு பிரித்துவிட்டேன்! என் பாழாய்ப்போன ஞாபக மறதி! அதே பெண்மணியின் பார்ஸல்!! கத்தை கத்தையாக எழுத்துப் பிரதிகள். அத்துடன் பவ்யமான ஒரு கடிதம்
“மீண்டும் அதே கதையை அனுப்புவதற்கு மன்னிக்கவும்; போன தடவை பார்ஸல் அனுப்பிய பின்னர்தான் ஒரு செய்தி படித்தேன். கடலில் பெருங் காற்றாம்; ஒரே புயல் மழையாம். ஒருவேளை நான் அனுப்பிய பார்ஸல் உங்களிடம் வந்து சேரவில்லையோ என்று ஒரு ஸம்சயம்; அவ்வளவுதான்”.
ஸர் வால்டர் ஸ்காட் தலை மயிரைப் பிய்த்துக்கொள்ளாத குறைதான்; வெந்து,நொந்து, நைந்தே போனார்.
xxx
என் தரத்துக்கு ‘காப்பி’ அடிக்கவில்லையே!
சாமுவேல் கோல்ட்வின் (Samuel Goldwyn) என்பவர் போலந்து நாட்டில் பிறந்த அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர்.
ஒரு பொய்யன், அவர் எழுதுவதாக,அவர் பெயரில் போலி விமர்சனங்களைப் பத்திரிக்கையில் எழுதி வந்தான். இது சாமுவேலுக்கும் தெரியும். ஒரு முறை அந்த ‘போலி சாமுவேல் கோல்ட்வின்’, உடல் நலம் குன்றி எழுதவில்லை. உடனே மற்றொரு பொய்யன் கோல்ட்வின் பெயரில் அந்த வாரப் பத்திரிக்கையில் எழுதி இருந்தான். அதைப் அடித்த உண்மைச் சாமுவேலுக்குக் கொஞ்சம் வருத்தம்.
“அடடா! முந்தைய போலி போல, இவருக்கு நன்றாக எழுதத் தெரியவில்லையே!”-
என்று அங்கலாய்த்தார்!
சுய விமர்சனத்திலும் ஒரு பெருந்தன்மை!
xxxx
பென் ஜான்ஸனா! பிச்சைக்காரனா?
பென் ஜான்ஸன்(Ben Johnson) என்பவர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர், நாடக ஆசிரியர், இலக்கிய விமர்சகர்.
அந்தக் காலத்தில் கிராவன் பிரபு (Lord Craven) என்பவர் , பென் ஜான்ஸனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். நண்பர்களிடம் பேசுகையில், ‘அட, எவ்வளவு சிறந்த எழுத்தாளர் அவரை என்றாவது ஒரு நாள் பார்க்க வேண்டும்’ என்று செப்பியிருந்தார்.
இது பென் ஜான்ஸனின் காதுகளையும் எட்டியது. உடனே ஒரு நாள், குசேலர் (சுதாமா) கிருஷ்ண பரமாத் வைப் பார்க்கப் போனது போல, கந்தலும் பிசுக்கும் உடைய ஆடைகளுடன் கிராவன் பிரபுவின் அரண்மனைக்குப் போனார்.
காவற்காரன் கேட்டான்:
யாரடா நீ?
‘நானா? பென் ஜான்ஸன் என் பெயர். ஐயாவைப் பார்க்க வந்தேன்’.
சீ’ போ! பிச்சைக்காரப் காரப்பயலே! ஐயாவைப் பார்க்க வந்தவனின் மூஞ்சியையும், மொகரையையும் பாரு’– என்று திட்டி விரட்டினான்.
பென் ஜான்ஸனும் விடவில்லை
டேய் போடா; நீதாண்டா பிச்சைக்காரன். நான் பென் ஜான்ஸண்டா; கொப்பன் மவனே! என்று பதிலுக்கு வசை பாடினார்.
ஏதோ அரண்மனை வாசலில்
‘’கச முசா’’ நடக்கிறது என்பதை அறிந்த கிராவன் பிரபு வாசலுக்கு வந்தார்.
‘ஐயா என்ன வாக்குவாதம்? உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
‘நானா? நான் பென் ஜான்ஸன்! ஐயாவைப் பார்க்க வந்தேன். அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்’.
அட! நீங்கள் பென் ஜான்ஸனா?
ஒரு வாத்து வந்தால் கூட ‘சூ’ என்று விரட்டப் பயப்படும் ஆள் போல அல்லாவா இருக்கிறீர்கள்! தி ஸைலண்ட் உமன் புஸ்தம் எழுதிய பென் ஜான்ஸனா? என்றார் கிராவன்.
பென் ஜான்ஸனா விடுவார்! படைப்பாளி ஆயிற்றே!
‘’சூ, சூ’’ என்று உரத்த குரலில் விரட்டிக் காட்டினார்.
கிராவன் பிரபுவுக்கு ஒரே குஷி! குசேலரை, கண்ணபிரான், அரண்மனைக்குள் அழைத்துச் சென்று உபசரித்தது போல ஸர்வ உபசாரங்களையும் செய்தார்.
tags–போலி எழுத்தாளர்கள், பிரோன்;சர் வால்டர் ஸ்காட், பென் ஜான்சன்
புலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்
‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று
ஜனவரி 28 திங்கட் கிழமை
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68
அறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள் பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே!
ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்
புலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்
ஜனவரி 30 புதன் கிழமை
கவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)
‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).
ஜனவரி 31 வியாழக்கிழமை
‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235
Tags- ஜனவரி 2019 காலண்டர், கவிஞர், கவிகள், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்
எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079
பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.
ஈசாப் கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில் பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.
பிறன் மனை நோக்காத பேராண்மை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146
பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–
பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.
இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 19 December 2018 GMT Time uploaded in London – 7-29 am Post No. 5801
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
உலகின் முதல் சட்டப் புத்தகம் மநு நீதி நூல்- 12 அத்தியாயங்களைக் கொண்டது. ஹமுராபி எழுதிய சட்டப் புத்தகத்தைவிட முந்தியது. ஆனால் அவ்வப்பொழுது UUDATE ‘அப்டேட்’ செய்யப்பட்ட ஸரஸ்வதி நதி தீர நாகரீக நூல். 2600 ஸ்லோகங்களுக்கு மேல் கொண்டது. ஒன்பது முழு நீள வியாக்கியானங்கள் (உரைகள்) இப்பொழுது கிடைக்கின்றன. நாம் இது வரை வெற்றிகரமாக ஆறு அத்தியாயங்களைக் கண்டு களித்தோம்.
இன்று ஏழாவது அத்தியாயத்தில் அடி எடுத்து வைப்போம். இதில் அரசனுக்குரிய நீதிகள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவைகளை இன்று உலகை ஆளுவோருடன் ஒப்பிட்டாலும் பொருந்தும்.
முதலில் சுவையான விஷயங்களை புல்லட் பாயிண்டு BULLET POINTS களில் தருகிறேன்.
1.அரசனைக் கடவுள் என்று இந்துமத நூல்கள் போற்றும். இது சங்க இலக்கியத்திலும், தமிழ் வேதமான திருக்குறளிலும் உள்ளது தமிழில் ‘கோ’,’இறை’ என்பன கடவுளையும் மன்னர்களையும் குறிக்கும் சொற்கள்.
ஸ்லோகம் 1 முதல் 8 வரை காண்க
2.அரசனை இந்திரன் முதலான எட்டு தேவதைகளின் சக்தியுடன் ஒப்பிடுதல்— இதுவும் சங்க இலக்கியப் பாடல்களில் உள. அவன் அக்னி போன்றவன் ,யமன் போன்றவன்,இந்திரன் போன்றவன்; பகைவர்களுக்கு யமன், சூரியன் நெருப்பு; வேகத்தில் காற்று என்றெல்லாம் புற நானூற்றுப் புலவர்கள் வருணிப்பது மநுவின் ஸ்லோக அடிப்படையிலேயே. ஸ்லோகம் 1 முதல் 8 வரை.
3. திருக்குறளில் அதிகாரம் 55, 56 செங்கோன்மை, கொடுங்கோன்மை,அதிகாரம் 39 இறைமாட்சி, அதிகாரம் 70 மன்னரை சேர்ந்தொழுகல் ஆகியன மநுவின் ஏழாவது அத்தியாயத்தின் எதிரொலி.
மன்னன் கடவுள்- குறள் 388= மநு 7-5
மன்னன் நெருப்பு- குறள் 691
இப்படி தொடர்ந்து ஒப்பிட்டுக்கொண்டே போகலாம் நிற்க.
4.கெட்ட மன்னர்களும் நல்ல மன்னர்களும்
ஸ்லோகம் 41,42-ல் மக்களால் தூக்கி எறியப்பட்ட, போற்றப்பட்ட மன்னர்களின் பட்டியல் உளது. இதில் சுமுகன் என்னும் மன்னர் பெயர் சுமேரியாவில் மட்டும் உளது. இந்திய அறிஞர்களைத் திணற வைக்கும் பெயர். இது பற்றி ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன். மநு நூல் ரிக் வேத கால நூல் என்பதற்கு நான் தரும் பல சான்றுகளில் ‘சுமுகன்’ பிரச்சனையும் ஒன்று
5.தண்டனைகள்
மநு, தண்டனை பற்றிக் கூறும் ஸ்லோககங்கள் மிக முக்கியமானவை. தமிழர்களின் கல்வெட்டுகள் மன்னர்களை மநு நீதி வழுவாது ஆண்டவன் என்று போற்றுகின்றன. மநு நீதிச் சோழன் கதையை முன்னரே கொடுத்துவிட்டேன் ஸ்லோகங்கள் 9-31
6. உவமைகள்- மீன், நாய் காகம், நீரில் சிந்திய எண்ணைத் துளி, நீரில் விழுந்த நெய் முதலியன ஸ்லோகங்கள் 20, 21, 33, 34
7. 18 கெட்ட செயல்கள்
அரசர்கள் தவிர்க்க வேண்டிய 18 தீய செயல்கள், குணங்கள்
ஸ்லோகங்கள்-45 -53
8. எண்பேராயம், ஐம்பெருங்குழு
தமிழர்கள் அக்காலத்தில் பஞ்சாயத்து (5), எட்டு அமைச்சர் குழு முதலியன வைத்திருந்தது சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் காணப்படுகிறது மநுவும் 7 அல்லது 8 அமைச்சர் குழு பற்றிப் பேசுகிறான். வீர சிவாஜி, கிருஷ்ண தேவ ராயர் முதலியோர் எட்டு அமைச்சர் அமைப்பைப் பின்பற்றினர். காண்க ஸ்லோகம் 54
9. பிராமணர்களுக்கு சலுகை
உலகில் இன்று வரை ஒழுக்கம் மிக்கவர்களும் அறிஞர்களும், ஒரு சிறு தவறு செய்தால் மன்னிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிராமணர்களுக்கு தண்டனை விஷயத்தில் மென்மை காட்டும் படி மநுவும் அறிவுரை தருகிறான். அண்மையில் பிரிட்டனில் ஒரு டாக்டருக்கு வழங்கிய தீர்ப்பு, சோவியத் ரஷ்யாவில் அரசை எதிர்த்த அணு விஞ்ஞானி ஷகாரோவுக்குக் கிடைத்த சலுகைகள் முதலியவற்றைப் பல கட்டுரைகளில் பகர்ந்துவிட்டேன். ஸ்லோகம் 38, 82 முதல்
10. தூதர்கள்
உலகில் தூதர்கள், கொடி , சின்னங்கள் ஆகியவற்றை முதலில் கையாண்டது பாரதமே என்பதை சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து விட்டேன். தூதர் நியமனம் பற்றி ஸ்லோகம் 63 முதல் மநு கதைக்கிறார். வள்ளுவனும் தூது (அதிகாரம் 69) என்னும் பொருள் பற்றிப் பத்துகு றள்களில் கதைக்கிறார்.
11. மலை மேல் கோட்டை கட்டுவதில் உள்ள சாதகங்களை மநு எடுத்துரைக்கிறான். இவ்வாறு செய்ததால் ராஜஸ்தானியர்களும், வீர சிவாஜியும் துலுக்கப் படைகளை துவம்ஸம் செய்தனர். வள்ளுவனும் அரண் என்னும் அதிகாரத்தில் இதை ஆராய்கிறார். ஸ்லோகம் 71-75 .
12. தர்ம யுத்தம்
ஸ்லோகம் 90- 98 தர்மயுத்தம் பற்றியவை. அந்தக் காலத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், ஊருக்கு வெளியே, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே சண்டை போடுவர். பிராமணர்கள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகளை அந்தப் பக்கம் வரக்கூடாது என்று முன் எச்சரிக்கை செய்துவிடுவர். மநுவும் போர் பற்றிப் பேசிவிட்டு போரில் வென்ற பொருள்கள் யாருக்குச் சொந்தம் என்றும் சொல்கிறான். மநு சொல்லாத விஷயங்களே இல்லை எனலாம். அரச நீதி முறை பற்றிய ஏழாவது அத்தியாயத்துக்கு ஒன்பது பாஷ்யக் காரர்களும் வழங்கிய வியாக்கியானங்களைப் படிப்போருக்கும் மநு உலக மஹா ஜீனியஸ், (Great genius) மேதாவி என்பது விளங்கும். இதனால்தான் உலகம் முழுதும் இன்று வரை மநுவைப் புகழ்கிறது. 40 Anti-Shudra சூத்திர எதிர்ப்பு ஸ்லோககங்களை மட்டும் வைத்துக்கொண்டு கூத்தடிக்கும் மார்கஸீயங்களுக்கும் திராவிடங்களுக்கும் கரி பூசும் பகுதி இது.
மநு, ஒவ்வொரு அதிகாரத்திலும், மன்னரானாலும், பிராஹ்மணன் ஆனாலும் ஒழுக்கத்தையும், புலன் அடக்கத்தையும் வலியுறுத்துகிறான். காம, க்ரோத, லோபம் கூடாது என்கிறான். அப்படிப்பட்ட ஆட்சி இருந்தால் எவருக்கும் குறைவில.
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 18 December 2018 GMT Time uploaded in London – 6-25 am Post No. 5796
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஆயிரம்
முறை தோல்வியுற்ற எடிசன்!
கண்டுபிடிப்புகளின்
மன்னன் தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் எத்தனை முறை தோல்வி
அடைந்தார் என்பதை அறிந்தால் நாம், வாழ்க்கையில்
ஏற்படும் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டோம்.
ஒவ்வொரு
தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது. நாம் எப்படிச் செய்யக் கூடாது என்பதை மனதில்
ஆழப்பதிக்கிறது.
இதோ
எடிசன் வாழ்வில்,
எடிஸன்
ஒரு முறை ஸ்டோரேஜ் பாட்டரி கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றார். அவருடைய உதவியாளருக்கு ஒரே வியப்பு.
அட, இந்த ஆசாமி கூட ஒன்றைக் கடைசியில்
கண்டு பிடித்து விட்டானே ! என்று.
அவர்
உதைவியாளர் முகத்தில் ஆச்சரியக் குறி
பளிச்சிடுவதைக்
கண்ட எடிசன் சொன்னார்:
ஏய் ,என்ன வியக்கிறாய்? இது நான் கண்டுபிடித்தவற்றில் முதலாவது
இல்லை. 50,000 முறைகள் எப்படி செய்யக்கூடாது என்றும்
கண்டுபிடித்து இருக்கிறேன்;
தெரிஞ்சுக்கோ!– என்றார்.
ஆங்கில
இலக்கிய உலகத்தில் புலவர் ஷெல்லியை அறியாதோர் எவருமிலர். நமது பாரதியாருக்கு
மிகவும் பிடித்த ஆங்கிலக் கவிஞர். பாரதியார், தன்னை
‘ஷெல்லிதாசன்’ என்ற புனைப் பெயருடனும் அழைத்ததுண்டு.
அப்படிப் புகழ்பெற்ற ஷெல்லிக்கு, ரசாயன பாடம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.அதற்குக் காரணம் அவரது துவக்கப்
பள்ளி ஆசிரியரே. அவர் ஷெல்லியின் அடிமனதில் வேதியியல் காதலை விதைத்து விட்டுப் போய் விட்டார். ஆனால்
ஷெல்லிக்கோ புகழ்மிகு ஈடன் (Eton) பள்ளியில் ரசாயன பாடம் (Chemistry) படிக்க அனுமதி கிடைக்கவில்லை.
ஆகவே
ஹாஸ்டல் அறையிலேயே சோதனைகளைச் செய்யத் துவங்கினார்.
ஒரு நாள் அந்தப்புறமாக
சோதனை ரவுண்டுக்கு வந்த ஆசிரியருக்கு றையில் விநோதமான சப்தங்களைக் கேட்டு உள்ளே எட்டிப்பர்த்தார்.
அறை
முழுதும் புகை மண்டலம்!
ஷெல்லியோ
நீல நிறப்புகையில் ‘மங்கியதோர் நிலவு’ போலக் காட்சி தந்தார்.
ஏ
சனியனே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று
சப்தம் போட்டார்.
‘ஸார், நான் பேயை எழுப்பிக் கொண்டு
இருக்கிறேன்’–
என்றார் ஷெல்லி.
ஆசிரியருக்கு
மஹா கோபம். ஏதோ ஒரு கருவியில் கையை வைத்தார். அடித்ததே ஒரு ஷாக் (shock)!
அம்மாடியோவ்! என்று அலறினார். அந்த ட்யூட்டர் பெயர்
(Tutor Bethel) பெதல்.
Xxxx
முயற்சிதிருவினை ஆக்கும்
முயன்றால்
வெற்றி பெறலாம்; அதுவும்
தொடர்ந்து முயன்றால் வெற்றி பெறலாம். இதோ எடிசன் வாழ்வில் நடந்த சம்பவம்.
ரப்பரைக்
கரைக்கும் ஒரு பொருள் உண்டா என்று கண்டுபிடிக்க
நிறைய விஞ்ஞானிகள்,
‘பகீரதப் பிரயத்தனம்
செய்து கொண்டிருந்தனர்.
தாமஸ்
ஆல்வா எடிசனோ கண்டு பிடிப்பு மன்னன். ஆனால் அவர் விஞ்ஞானக் கொள்கைகளைக்
கடைப்பிடிப்பதை விட அனுபவத்திலேயே பல கருவிகளைக்
கண்டு பிடித்தார்.
ஒருநாள்
தனது சோதனைச் சாலைக்குள் நுழைந்தார். ரப்பர் துண்டுகளை எடுத்தார். வெவ்வேறு
சோதனைக் குழாய்களில் வெவ்வேறு ரசாயனப் பொருளை நிறைத்தார். ஒவ்வொன்றிலும் ஒரு ரப்பரை நுழைத்தார். அதில் ஒரு திரவம் ரப்பரைக் கரைப்பதைக் கண்டு ஆனந்தம்
கொண்டார்
பின்னர்
என்ன அவர் பாடியிருப்பார் என்பதை நாமே
ஊகிக்கல்லாம்
“நந்தவனத்தில் ஒரு ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதில் செய்த சோதனையை அன்று
வெளி உலகத்துக்கு உரைத்தானடி, பாடி,
ஆடி
ஆடி ஆனந்தம் கொண்டானடி தோழி!
ஆடிப் பாடி கூத்து அடித்தானடி தோழி”.
tags– ரசாயன மோகம், ஷெல்லி, எடிசன், நந்தவனத்தில் ஒரு ஆண்டி