ஜப்பானில் ஸம்ஸ்க்ருதம்! (Post No.5116)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 16 JUNE 2018

 

Time uploaded in London –  7-33 am  (British Summer Time)

 

Post No. 5116

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் இல்லாத நாடுகளே உலகில் இல்லை; போர்னியோ (இந்தோநேஷியா) காட்டுக்குள் சம்ஸ்கிருத கல்வெட்டுகள்; மத்திய ஆஸிய பாலைவனத்தில் சம்ஸ்கிருதச் சுவடிகள்; சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஸம்ஸ்க்ருத நூல்களின் மொழிபெயர்ப்பு; துருக்கியில் வேதகால தெய்வங்களைக் கூறும் கி.மு1400 ஆண்டுக் கல்வெட்டு. எகிப்தில் தசரதன் (கி.மு1300) கடிதங்கள்; துருக்கியில் தசரதன் (துஷ்ரட்ட) பிரதர்தனன் ஆட்சி; தென் கிழக்காசிய நாடுகளில் 1500 ஆண்டுகளில், 1000 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள். ஜப்பான் கொரியா முழுதும் போதிசேனர் மூலம் ஸம்ஸ்க்ருத்ச் சுவடிகள்; மேலை நாடுகள் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இதாலியன்,ஸ்பானிஷ், லத்தீன், கிரேக்கம்– தமிழிலோ ஸம்ஸ்க்ருதக் கலப்பில்லாமல் ஒருவர் கூட, ஐந்து நிமிடம் கூடப் பேச முடியாத நிலை. எந்தப் பத்திரிக்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஸம்ஸ்க்ருத சொற்கள்!!!

 

ஸம்ஸ்க்ருதம் இல்லாத கட்டுரை, பிளாக், உரை, சொற்பொழிவு, நாளிதழ், டிவி, அன்றாடப் பேச்சு — எதுவும் இல்லை! நிற்க.

 

இப்பொழுது லோகேஷ் சந்திரா என்பவர் எழுதிய நூலில் ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி அரிய விஷயங்களைத் தொகுத்துத் தருகிறார். இதோ லோகேஷ் சந்திரா செப்பும் அற்புதச் செய்திகள்:-

 

 

ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருத மொழியை பொங்கோ (BONGO) என்று அழைப்பர்

பொன் =பிராஹ்மன்

கோ = மொழி

 

இளவரசர் ஷோடோகு ஜப்பானின் முதல் அரசியல் சட்டத்தை ஸம்ஸ்க்ருத துதியுடன் — உஷ்னீசவிஜயா – தாரணீ என்று– எழுதி புனிதப் படுத்தினார். இது ஓலைச் சுவடியில் குப்தர் கால லிபியில் (எழுத்தில்) பொறிக்கப்பட்டுள்ளது.

 

கி.பி.706-ல் போதிசேனர் என்ற இந்திய யோகியை புத்தமத ‘க்யோகி’ (GYOGI) ஜப்பானிய- ஸம்ஸ்க்ருதம் கலந்த மொழியில் வரவேற்றார்.

 

டாய்ஞ்சி கோவிலில் போதிசேனரும், புத்தஸ்திராவும் ஜப்பானியர்களுக்கு ஸம்ஸ்க்ருதம்  கற்றுக்கொடுத்தார். 1300 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருதம் கற்பித்த அறையை குரு ஒனோ (ABBOT ONO) எனக்குக் காண்பித்தார்.

 

ஜப்பானிய புஸ்தகங்களை உள்ளபடி அறிய வேண்டுமானால் ஸம்ஸ்க்ருத அறிவு அத்யாவஸியம் என்பதை கோபோ டைச்சி (கி.பி806) அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஷிங்கோன் (SHINGON) கோவில்களில் தினசரிப் பிரார்த்தனைகள் ஸம்ஸ்க்ருத  மந்திரங்களுடன் ஹோமத்துடன் நடை பெறுகின்றன.

 

மெய்ஜி புனர்நிர்மாணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானிய அறிஞர்கள் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் சென்று ஸம்ஸ்க்ருதம்  பயின்றனர்.

 

தி யங் ஈஸ்ட் (THE YOUNG EAST) என்ற பத்திரிக்கையில், இந்திய- ஜப்பானிய உறவு பற்றி  பேராசிரியர் ஜுஞ்சிரோ டகாகுசு (PROF.JUNJIRO TAKAKUSU) ஏழு கட்டுரைகள் எழுதினார். அவற்றில் இந்தியாவிலிருந்து ஜப்பான் பெற்றது என்ன? என்று விளக்கினார்:

 

1, 2- யோகிகள் பற்றிய கட்டுரை

3 இந்து மத தெய்வங்கள்

4 சங்கீதமும் நாட்டியமும்

5 சதுரங்க விளையாட்டும் பருத்தித் துணியும்

6 பெயர்களும் சொற்களும்

7 மேலும் பல பெயர்களும் சொற்களும்

 

அவர் கொடுத்த நீண்ட பட்டியலில் அன்றாட வழக்கிலுள்ள ஜப்பானிய  சொற்களின் ஸம்ஸ்க்ருத  மூலம் கட்டப்பட்டுள்ளது:

 

ஜப்பானிய மொழி — ஸம்ஸ்க்ருத மொழி

 

ஹதா = பதாகா (கொடி, சின்னங்கள்)

சரவ= சரவா (தட்டு)

கஹர ஓடு= கபால

அபட = அற்புத

சொர = ஸ்வர் (வானம்)

மோஷ= மூர்ச்சா (MODULATION ஏற்றி இறக்கும் குரல்)

டஸ்ஷின்= தக்ஷிணை

 

அகா= அர்க்ய (தீர்த்தம்/தண்ணீர் AQUA)

(எனது கருத்து– இன்றும் பிராஹ்மணர் குடும்பங்களில் குழந்தைகளுக்கு அமுது ஊட்டும்போது மம்மம் சாப்பிடு ‘அக்கம்’ குடி என்று சொல்லுவர்- இவை இரண்டும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து பிறந்த லத்தீன் மொழிச் சொற்கள்- ஆக்வா AQUA= தண்ணீர்)

 

நமோ = நம (ஸ்தே; ஸ்காரம்’ நம’ சிவாய)

வனன் = வந்தனம்

பன்டய்= வந்தே (மாதரம்)

 

தேர= மூத்தோர் (பாலி, ஸம்ஸ்க்ருத சொல்)

அரண்ய (கோவில்)= அரன்

கரன் = சங்காராம

தோ= தூப, பகோடா

 

 

ஷுமி-தன்= சுமேரு (நடுப்பகுதி)

ஷரி= சரீர

அகட (விஷ முறிவு)= அகத

ரூரி= வைடூர்ய

ஹரி = ஸ்படிக

(எனது கருத்து- ஹரி என்பது மஞ்சள் பச்சை ஆகிய நிறக் கற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தில் பயன்படுத்தப்படுகிறது)

 

கேச = காஷாய உடை

கண்ட (நிறம்) = கந்த

செந்தன் = சந்தன

க்யார= அகரு/ அகில்

கரிரோகு= ஹரீதக (கடுக்காய்)

ஆமலக = ஆமலக/நெல்லிக்காய்

 

உடோங்கே= உடும்பரா

குன்ரோகு= குன்டுருக

யென்பு= ஜம்பூ (நாவல் மரம்)

ஷர = சால

தொரயோ/ பைதர= தால பத்ர

முட (வீண்)= முதா

செட்சுன= க்ஷண ( நொடியில்)

யஜுன் = யோஜனை (தூரம்)

கிசா = கஜ/யானை

முஷிர= மற்கட (குரங்கு)

கர்யோபிங்க ( வான் குருவி)= கலவிங்க

பிடா (அறிவு)= வேத

யுக , யுய் = யோகி, யோக

ஷமோன், பிகு= ஸ்ரமண, பிக்ஷு

டலி, ஜபி= தகனம் (ஜபிட-பாலி மொழி)

ட்சுசுமி/ துடுமி- துந்துபி ( வாத்யம்)

 

இன்னும் பல சொற்களை அவர் பட்டியலிட்டுள்ளார். நல்ல ஸம்ஸ்க்ருத  அறிவுடையோரே அவற்றை புரிந்து கொள்ள முடியும்.

 

-சுபம்-

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  11-14 am  (British Summer Time)

 

Post No. 5105

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மன்னர்களின் விநோதப் பெயர்கள்_ யானை, கழுதை, குதிரை! (Post No.5105)

 

காரவேலன் என்ற கலிங்க மன்னன் மிகவும் புகழ்பெற்றவன். அவன் கலிங்க நாட்டை ஆண்டவன்; இப்பொழுதும் அவனுடைய ஹத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டைக் காணலாம். இது ஒரிஸ்ஸாவில் உதயகிரி- கண்டகிரி மலையில் உளது. புவனேஸ்வரத்துக்கு அருகில் பிராக்ருத மொழியில், பிராஹ்மி லிபியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டு 2200 ஆண்டுப் பழமை உடைத்து. தமிழர்களின் கூட்டணியை உடைத்ததாகவும் பாண்டிய மன்னரிடமிருந்து ரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றதாகவும் இவன் பெருமை பேசுவதால், தமிழ் வரலாற்றுக்கும் இவன் கல்வெட்டு துணைபோகிறது. இவனிடம் தோற்றுப்போன தமிழ் மன்னர்கள் யார் என்று தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க இவனுடைய பெயர் கழுதையா என்ற ஒரு ஆராய்ச்சியும் 1940ஆம் ஆண்டு வூல்நர் நினைவு மலரில் (Woolner Commemoration Volume, year 1940) வந்துள்ளது. அதை ஆராய்ந்து எனது கருத்தையும் முன்வைப்பேன்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜே.பிரஸிலுஸ்கி (J.Prezyluski) எழுதிய  கட்டுரையில் சொல்லும் விஷயம் பின்வருமாறு:

 

கார+ வேல= கருப்பு வேல் என்று இருக்கலாம் (தமிழ்ப் பெயர் என்று கொண்டால்)

காரவேல = கர+வெல்லக= பாகற்காய் (ஸம்ஸ்க்ருத பெயர் என்று கொண்டால்)

 

அக்காலத்தில் முண்டா மொழிகள் அப்பகுதியில் இருந்ததால் அதன் செல்வாக்கும் இருக்கக்கூடும்.

 

இம்மன்னன் பற்றிய தகவல்கள் வேறு எங்கும் இல்லாததால் பெரும் இடர்ப்பாடு நிலவுகிறது. ஆயினும் இவன் சொல்லும் சதகர்ணி, மற்றும் இந்திய-யவன (Indo-Greek)  அரசன் ஆகியோர் உண்மையில் இருந்தவர்கள். ஆகையால் இந்த மன்னன் ஆண்டதில் கேள்விக்கு இடமில்லை. பெயர்தான் பிரச்சனை தருகிறது.

 

‘கர’ என்றால் கழுதை என்ற பொருள் உண்டு (கர்த்தப). ஸம்ஸ்க்ருதத்தில் மிருகங்களின் பெயர்கள் ‘ப’ அல்லது ‘வ’ என்னும் எழுத்தில் முடிவடைவதால் கழுதை (கரவ) என்று கொள்ளலாம்.

 

விஷ்ணு புராணத்தில் ‘கர்த்தபில்லா’ வம்சம் பற்றிய செய்தி உளது. இவர்கள் ஆந்திரர்களை அடுத்து ஆட்சிக்கு வந்ததாக புராணம் விளம்பும்.

 

சமணர்களின் நூலான ‘கால்க கதா’வில் கர்த்தபில்லா பற்றிய கதை வருகிறது அவன் காலகாசார்யா என்னும் சமண முனிவரை அவமானப் படுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு போய் சக வம்ச மன்னர்களத் தூண்டிவிட்டு, உஜ்ஜையினி நகர கர்த்தபில்லா ஆட்சியை விழுத்தாட்டியதாக விஷ்ணு புராணம் விளம்பும். இவனுடைய பெயரும் கழுதையின் (கர்த்தப) பெயரே.

 

காரவேலனும் ஒரு சமண மன்னன். கர்த்தபில்லா பெயரின் பொருள்= கழுதைக்குப் பிறந்தவன். அது போல காரவேல என்பதும் கழுதைப் பயல்- கழுதை மகன் என்று இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு தெய்வீக கழுதைக்கும் சாதாரண ராஜாவுக்கும் பிறந்தவனாக இருக்கலாம் — என்று சொல்லி பிரெஞ்சு கட்டுரையாளர் கட்டுரையை முடிக்கிறார் (வூல்நர் கம்மமொரேஷன் வால்யூம், 1940)..

 

Hathigumpa Caves

எனது கருத்து:

 

கழுதை போல உதடு இருப்பதால் இப்படிப் பட்ட பெயர் வந்து பின்னர் நிலைத்து இருக்கலாம்; கரோஷ்டி என்ற வடமேற்கு இந்திய லிபிக்கும் ‘கழுதை உதடு’ என்றே பொருள்- அதன் எழுத்துக்கள் அப்படித் தோன்றுவதால் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.

 

காரவேலன் பெயரைத் தமிழ் பெயர் என்று கொண்டால் ‘கூர் வேல்’ என்று திருப்பாவையில் வரும் சொல்லையும் பொருத்தலாம். ‘கூர்வேல்  நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’–

திருப்பாவை 1

 

காரவேலன், தான் வென்ற பகைவர் நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. இதனாலும் ‘கழுதை பூட்டி ஏருழுதவன்’ என்பது காரவேலன் என்று மருவி இருக்கலாம். இது ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுக்கும் பொருந்தும் வியாக்கியானம்!

 

எனது முந்தைய கட்டுரையில் உள்ள பகுதி இதோ:–

 

 

சங்க இலக்கியத்தில் கழுதை

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

பாழ் செய்தனை, அவர் நனந்தலை நல் எயில்;

(புறம் பாடல் 15, நெட்டிமையார்)

முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:

அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ!  (புறம் 392, அவ்வையார் )

 

இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!

இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும்  வெள்ளை வரகும், கொள்ளும் பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.

எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை

xxx

Hathigumpa Caves

மத்திய இந்தியாவிலும் பீஹாரிலும் ஆட்சி செய்த காளசூரி மன்னர்களும், காஸி நகர் காஹத்தவாலாவும், வங்காளத்தை ஆண்ட பால மன்னர்களும் பண்டல்கண்ட் பகுதியை ஆண்ட சண்டேளா மன்னர்களும் அஸ்வபதி,கஜபதி, நரபதி- என்று பட்டம் வைத்துக் கொண்டனர். குதிரைப் படைத்தலவர், யானைப்படைத் தலைவர், காலட்படைத் தலைவர் என்று பட்டம் வைத்துக்கொண்டனர்.

 

தமிழிலும் கூட கரிகாலன் (கருகிய கால் உடையவன்) போன்ற விநோதமான காரணப் பெயர்கள் உண்டு.

 

–சுபம்–

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

Picture of Mulavarman Inscription in Jakarata Museum

 

Written by London swaminathan

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  18-59  (British Summer Time)

 

Post No. 5096

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

இந்தோநேஷியா என்பது உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ (BORNEO) தீவு உலகில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. அதில் அடர்ந்த மழை வனக்காடுகள் (RAIN FORESTS) உள்ளன. அந்த காட்டுக்குள் இது வரை மனிதர்கள் காலடியே பட்டதில்லை—இது கன்னி கழியாத காடுகள் (VIRGIN FORESTS) என்று உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சில சம்ஸ்ருதக் கல்வெட்டுகள்!

இதெல்லாம் நடந்து நூறு ஆண்டுகள் ஆயிருக்கும்; ஆயினும் இக் கல்வெட்டுகளின் பெருமையை இப்பொழுதுதான் உலகம் உணரத்  துவங்கியுள்ளது.

 

1950-ஆம் ஆண்டுகளில் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் நடத்திய சொற்பொழிவுகளில் இது பற்றிய அபூர்வ விஷயங்களைத் தொட்டுக் காட்டினார். ஆயினும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நடத்தியது வரலாற்றுச் சொற்பொழிவு அல்ல. அது சமயச் சொற்பொழிவு.

 

அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது  ஏழு யூப ஸ்தம்பங்களாகும். மன்னர்கள் யாக யக்ஞங்கள் செய்கையில் பிராஹ்மணர்கள் இப்படி யூப ஸ்தம்பங்களை நட்டு அதில் மன்னன் பெருமை, அவர் அளித்த தான தருமங்களைச் சொல்லுவது மரபு.

 

யூப நெடுந்தூண், வேள்வித்தூண் எனபன சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் அஸ்வமேதம் முதலிய யாகங்களைச் செய்தான்; கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டங்கள் செய்து யாகம் செய்தான். சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜ சூய யாகம் செய்தான். சேர மன்னன் ஒருவன் பார்ப்பனீயப் புலவரின் வேண்டுகோளுக்கிணங்க பத்து வேள்விகள் இயற்றி பத்தாவது முறையில் பார்ப்பனப் புலவரையும் பார்ப்பனியையும் அப்படியே உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பி மாயமாய் மறைய வைத்தான் . இவை எல்லாம் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் உள. திருவள்ளுவரும் திருக்குறளில் யாக யக்ஞங்களைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆக தமிழர்கள் மிகப்  பழைய புறநானூற்றுப் பாடலில் யூபம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துவதால் தமிழர்களுக்கு இதெல்லாம் அத்துபடி.

Dasatatha’s Letter to Egyptian King Amenotep (Sramana Deva) in Cuneiform script

அது மட்டுமல்ல காளிதாசனும் பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்தும் போது அவன் யாகம் செய்து குளித்த ஆடையுடன் எப்போதும் இருப்பவன் என்று பெருமையாகக் கூறுகிறான். அத்தோடு அகஸ்தியர் பெயரையும் சொல்கிறான். ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் செய்த யாகங்கள் உலகப் பிரசித்தம்.

 

இந்தோநேஷியாவின் காட்டுக்குள் கிடைத்த மன்னன் 1700 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தை ஒட்டி- வாழ்ந்தவன். பாண்டவர் போலவே ‘வர்மன்’ பட்டத்தை உடையவன் ஒருவே ளை தமிழனாக இருக்கலாம் என்பதற்காகத்தான் மேற்சொன்ன பீடிகை போட்டேன்.

 

 

மூலவர்மன் கல்வெட்டு அழகான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவைதான் இந்தோநேஷியாவில் கிடைத்த பழைய கல்வெட்டுகள். முதல் இரண்டு கல்வெட்டுகளில் மூலவர்மன், அவனது தந்தை அஸ்வவர்மன், அவனது தந்தை குண்டுங்கா (குண துங்கன் என்பது மருவியது போலும்!) ஆகியோர் சிறப்பு பட்டங்களோடு குறிப்பிடப்படுகின்றனர். பின்னர் யாகத்தில் பிராஹ்மணர்களுக்கு அவன் அளித்த தான தருமங்கள் சொல்லப்படுகின்றன; யாகத்தின் போது பிரதான யஜமானன் (யாக புருஷன்) இந்தத் தூணை நிறுவியதாகவும் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் எல்லோரும், மூலவர்மனின்  தான தருமங்களைக் கேளுங்கள்– அவன்  நிலங்கள், பசுமாடுகள், அற்புத மரம் (கற்பக வ்ருக்ஷம் அல்லது சோம லதை) பிராஹ்மணர்களுக்குத் தானம் செய்தான். இவ்வாறு பலவகை அறச் செயல்களைப் புரிந்ததற்காக இந்த யூபத் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

அருகிலுள்ள ஜாவா தீவில் இதே போல 1700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு பிராஹ்மணர்களுக்கு 1000 பசுக்கள் தானம் அளித்ததாக எழுதப்பட்டுள்ளது.

 

 

இதை வேறு இரண்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்; கன்யாகுமரியில் உள்ள வீர ராஜேந்திரன் என்ற சோழர் கல்வெட்டு அவனது முன்னோன் ஒருவன் 40,000 பிராஹ்மணர்களை அழைத்து வந்து காவிரிக் கரையில் குடி அமர்த்தினான் என்கிறது. காவிரிக் கரையில் பிராஹ்மணர்கள் இல்லாத குறையைப் போக்க ஆர்யாவர்த்தத்தில் இருந்து 40,000 பிராஹ்மணர்களை அழை த்து வந்தான் என்று கோபிநாத ராவ் புத்தகத்தில் (1926) விளம்புகிறார்.

 

வியட்நாமில் கிடைத்த பழைய கல்வெட்டு ஸ்ரீ மாறன் என்பதாகும். இது 1800 ஆண்டுகளுக்கு முந்தையது. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி எழுதினேன். திருமாறன் என்ற பாண்டியன் பெயரை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில் ஸ்ரீமாறன் ஆகும்.

 

 

ஆக வியட்நாம் முதல் இந்தோநேஷியாவரை ஆயிரம் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் உள்ளன. ஒரு வரிக் கல்வெட்டிலிருந்து மிக மிக நீண்ட பாடல்கள் வரையுள்ள கல்வெட்டுகள் இவை.

 

இது தவிர சிலப்பதிகாரத்திலும் நமக்குச் சான்று உளது. எல்லோர் முன்னிலையிலும் இமயம் வென்ற செங்குட்டுவனை மாடல மறையோன் என்ற பிராஹ்மணன் குறை சொல்லுகிறான். “மன்னனே! போதும் போதும் நீ பெற்ற போர் வெற்றிகள்; போகும் வழிக்குப் புண்ணியம் தேடு; யாக யக்ஞங்களைச் செய்” என்கிறான். இப்படிக் கடிந்து கொண்ட பிராஹ்மணனை தண்டிக்காமல் எடைக்கு எடை தங்கம் கொடுத்து உடனே யாக யக்ஞங்கள் செய்ய உத்தவிட்டதாக இளங்கோ இயம்புவார்.

 

துருக்கி நாடு முதல் இந்தோநேஷியாவரை இப்படி ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் இருப்பதும் கோவலன் ஒரு பார்ப்பனப் பெண்ணின் ஸம்ஸ்க்ருத ஓலையைப் படித்ததாக சிலப்பதிகாரம் செப்புவதும் ஸம்ஸ்க்ருதத்தின் உலக வீச்சைக் காட்டுகிறது. அலெக்ஸாண்டர் போல மக்களைக் கொன்று குவித்து கிரேக்க மொழிக் கல்வெட்டுகளை நிறுவ வைத்ததைவிட அமைதியான கலாச்சார, வணிக வீச்சின் மூலம் உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைப் பரவச் செய்தது மற்றொரு உலக அதிசயம் ஆகும். அது மட்டுமல்லாமல் கிரேக்க  மொழியில் ஹோமர்,  முதல் கிரேக்க நூலை எழுதுவதற்கு முன்னரே — அதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே– துருக்கியில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் குதிரை நூலும் இருப்பது உலக மஹா அதிசயம் ஆகும்.

 

–சுபம்–

 

Mulavarman Sanskrit Inscription of Indonesia (Post No.5093)

Written by London swaminathan

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  16-54  (British Summer Time)

 

Post No. 5093

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

I read the following piece of interesting information today about the oldest inscriptions in Indonesia, the largest Muslim country in the world.

 

“The oldest known inscriptions in Indonesia – we read in The Economic and Administrative History of Early Indonesia (van Naessesn and de Longh 1977)  – are those of East Borneo. Here there are seven stone sacrificial posts, called ‘yuupaas’ by archaeologists, that date from around 400 CE. What is written on them is described in the following terms:-

In clear, well written Sanskrit verses Mulavarman ‘the lord of king’, his father Asvavarman, ‘the founder of the noble race’ – and his grandfather, the great Kundunga, ‘the lord of men’ are mentioned on the occasion of a sacrifice. For that sacrifice, we read on one of the stone poles (yuupaa), this sacrificial post  has been prepared by the  chief amongst the twice born (dvija=Brahmins).

 

Apparently these priests who had come hither ( as written on the second pole) were rewarded by the King Mulavarman for their religious services.

Thus the third inscription sounds, “Let the foremost among the priests and whatsoever other pious men hear of the meritorious deed of  Muavarman, the king of illustrious and resplendent fame (let him hear ) of his great gift, his gift of cattle, of a wonder tree, his gift of land. For this multitude of pious deeds this sacrificial post has been set up by the priests.

(wonder tree= Krapaka Vriksha in gold or Soma plant?)

A Sanskrit inscription in West Java dating from around 450 CE deals with an occasion on which the Brahmins were presented with 1000 cows.

 

40,000 Brahmins!

(An inscription in the southern most village of India, Kanyakumari,  claims that the founder of the Cola dynasty, finding no Brahmins on the bank of Kaveri, brought a large number of them from Aryavarta and settled them there. His remote descendant Vira Rajendra created several brahmadeya (donation to Brahmins) villages and furnished forty thousand Brahmins with gifts of land (see Gopinath Rao, 1926)

 

Kanchi Parmacharya (1894-1994), Sri Shankaracharya Chandra Sekhara Indra Sarasvati of Kanchi Kamakoti Peetam mentioned about this inscription in 1950s. Now the world is shedding more light on it. When they discovered it, Borneo island was full of thick forests. They thought that thy were virgin forests and were surprised to find the Yupa posts inside the deep forest. Once upon a time it was a place where people lived happily.

 

Yupa post is mentioned in 2000 year old Tamil Sangam literature with the same Sanskrit word. Great Pandya King Mud Kudumi Peru Vazuthi did so many fire sacrifices (Yagas) and Kalidasa mentioned  that the Pandya king was always wearing the Yaga clothes. So Yupas were very familiar with the Tamil Pandyas and Cholzas. When Cheran Chenguttuvan was boasting about his historic march to the Himalayas, a Brahmin openly challenged him amidst a big crowd that he must stop the wars and do Yagas and Yajnas. This episode of Madala Maraiyon is in the most famous Tamil epic Silappadikaram. Instead of chopping the head of Madala Maraiyon for this open criticism, Cheran Senguttuvan the great Chera king immediately ordered for the fire sacrifices. He rewarded the Brahmin with gold equal to the weight of huge Chenguttuvan.

Source books- From Turfan to Ajanta, Edited by Eli Franco and Monika Zin, Lumbini International Research Institute, Nepal; Silappadikaram; Kanchi Paramacharyal Discourses, Kalaimakal Karyalayam.

 

–Subham–

 

மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082)

Written by London Swaminathan 

 

 

Date: 7 JUNE 2018

 

 

Time uploaded in London – 7-22 AM

 

Post No. 5082

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மஹாபாரதத்தில் வாணிபம்- வியாபாரம் (Post No.5082)

வேத காலம் முதல் வணிகச் செய்திகள் கிடைக்கின்றன. ‘பாணி’ என்ற வணிகர்கள் பற்றிய செய்திகளும் அவர்களின் அடாவடிச் செயல்களை இந்துக்கள் கண்டித்ததையும் வேதத்தில் காண்கிறோம்; பிற்காலத்தில் ‘பனியா’ என்ற சொல் வணிகர்களைக் குறித்தது. வியாபாரிகளைக் குறிக்கும் இச் சொல்.( ‘பாணி’  ) பீனீஷியர்களைக் குறித்ததாகவும் சிலர் கொள்வர். மாபாரதத்தில் இல்லாதது உலகில் எதுவும் இல்லை என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் பிரசித்தமானது “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்” என்பர்- அதாவது வ்யாஸ பகவானின் எச்சில்தான் உலகம் முழுதும்  உளது என்பது  தாத்பர்யம் (கருத்து)- இதன் பொருள் யாது என்றால் இவ்வுகில் வியாஸர் என்ற முனிவரின் வாயில் வராத சொல் எதுவும் இல்லை என்பதாம்.

 

உலக மஹா இதிஹாசமான– உலகிலேயே நீண்ட கவிதை நூலான– மஹாபாரதத்தில்– எதிர்பாராத ஒரு வர்த்தகச் செய்தி வருகிறது- நள தமயந்தி கதையில் அச் செய்தி உளது!

ஆரண்யக பர்வம் தரும் தகவல் இதோ:-

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். வேத்ரவதியின் தற்காலப் பெயர் பேட்வா நதி. நடுக்காட்டின் வழியே சென்ற போது சார்த்தவாஹ தலைவர் மணிபத்ரா கடவுளை நோக்கிப் பிராத்தனை செய்தார்.

 

(மணிமேகலை என்பது தமிழ் வணிகர் தெய்வம்; மணிபத்ரா என்பது வடக்கத்திய வியாபாரிகளின் தெய்வம்– எனது முந்தைய கட்டுரையில் மேல் விவரம் காண்க).

 

அந்தக்கூட்டத்தில் யானைகள், குதிரைகள், ரதங்கள் எல்லாம் அணிவகுத்துச் சென்றன. அதிலுள்ள கழுதைகள்,  காளை மாடுகள், ஒட்டகங்கள், மக்கள் எல்லாம் கடல் போலக் காட்சி அளித்தன. வியாபாரிகள் மட்டுமின்றி வேதம் ஓதும் பிராஹ்மணர்களும் அதில் காணப்பட்டனர்.

(முன் காலத்தில் காடுகளைக் கடந்து வேற்றூருக்குச் செல்ல விரும்புவோர் இத்தகைய மாசாத்தனுடன் (சிலப்பதிகாரம்- மாசாத்தான்) செல்வர். அவ்வகையிலேயே தனி ஒரு பெண்ணான இளவரசி தமயந்தியும் சேர்ந்துகொண்டாள். குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் அதில் சென்றனர் என்பதை மாபாரதம் தெளிவு படுத்துகிறது.)

 

இந்தியர் வாழ்வின் இணையற்ற என்சைக்ளோபீடியா (கலைக் களஞ்சியம்)  மஹாபாரதம்- ராக்கெட் விஞ்ஞானம் முதல் வேதாந்தம் வரை அத்தனை விஷயங்களையும் உடைத்து.

 

(கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், காலப் பயணம், மேலுக மக்களை அர்ஜுனன் கண்டது முதலிய விஞ்ஞான விஷயங்களை எனது முந்தைய கட்டுரைகளில் கண்டு மகிழ்க)

 

இத்தகைய கூட்டத்தில் இளமைத் துடிப்புள்ள சில காமப் பிசாசுகளும் இருந்தன. அவர்கள், பேரழகியான தமயந்தியைக் கண்டவுடன் நக்கல் அடிக்கத் தொடங்கினர்; சிலர் ஜொள்ளு விட்டனர். உடனே அங்கிருந்த பெரியோர் அத்தகைய காமாந்தகர்களை விலக்கி, தமயந்தியின் சோகக் கதையை அன்புடன் வினவினர். மஹாபாரதம் இன்னும் ஒரு விஷயத்தையும் செப்பத் தவறவில்லை.

 

தமிழ் பேரர்சர்கள் படையெடுக்கும் முன் ஒரு படை (தூஸிப் படை) முன் சென்று வழி செய்தது போல, இந்த வணிகர் குழுவிலும் ஒரு தொழிலாளர் படை முன்னே சென்று காடு வெட்டி, புதர் அகற்றி வழி செய்தனவாம்; இத்தகைய சிறு விஷயங்களையும் செப்பும் இதிஹாசம் மஹாபாரதம்.

‘சார்த்தவாஹ’ வெறும் வணிகர் தலைவனாக மட்டுமின்றி அதன் எஜமானனாகவும் விளங்கினன் என்கிறது இந்நூல்.

 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். ஆனால் அந்த முட்டாள் வணிகர் தலைவனுக்கு அது யானைப் பாதை என்பது தெரியாது. வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி.

 

இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

 

மஹாபாரதத்தில் வியாஸர் எத்தனை வகைச் செய்திகளைத் தொகுத்துட அளிக்கிறார் என்பது வியப்புறும் செய்தி;  2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த ஒரு கிரேக்கன் இந்த நாட்டில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடைய ஒரு கிரந்தம் (நூல்) இருக்கிறதாம் என்று வியப்புடன் எழுதியுள்ளான்.

வாழ்க மஹாபாரதம் – வளர்க இந்திய வணிகம்

 

– சுபம், சுபம்–

அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும் (Post 5061)

Written by London Swaminathan 

 

Date: 30 May 2018

 

Time uploaded in London – 22-18

 

Post No. 5061

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கடந்த சில கட்டுரைகளில் ரிக் வேத, பாகவத, புத்தமத, சமண மத நூல்களில் உள்ள ‘தண்ணீர் மேல் நடக்கும்’ அதிசயங்களைப் பார்த்தோம். இதே போல பார்ஸி மதத்திலும் ஒரு கதை உண்டு. அதைவிட அதிசயம் என்ன வென்றால் மாமன்னன் அலெக்ஸாண்டரையும் அதிசய புருஷர் ஆக்கிவிட்டனர் கிரேக்க எழுத்தாளர்கள். அலெக்ஸாண்டரும் இப்படிச் சில அதிசயங்கள் செய்ததாக கதை எழுதி (கட்டி) விட்டனர்.

முதலில் பாரஸீக நாட்டில் தோன்றிய பார்ஸி மதத் தலைவர் ஜொராஸ்டர் (ஜராதுஷ்ட்ரா) பற்றிக் காண்போம்.

ஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம்  நூற்றாண்டில்தான எழுதப்பட்டது.

 

இதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.

அர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று  வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.

 

ப்ளூடார்ச் என்பாரும் இந்த  வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்

 

சீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.

 

அலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.

 

காலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும்  கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும்  நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள  வேண்டும்.

ரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ்,  அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்

 

இறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.

அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர்  தப்பித்தோம் பிழைத்தோம்  என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.

அலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.

 

-சுபம்–

 

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

Written by London Swaminathan 

 

Date: 28 May 2018

 

Time uploaded in London – 7-43 am

 

Post No. 5054

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

தாய்லாந்து நாட்டில் குனோய் KUNOI என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கல்வெட்டுகள், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தகவலகளை பொறித்துள்ளன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள கல்வெட்டு. குனோய் KUNOI என்னும் இடத்தில் தோண்டும் வேலைகள் நடந்தபோது இந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. இதில் பெரிய, நடுத்தரமான, சிறிய கல்வெட்டுகள் உள. நடுத்தர அளவு கல்வெட்டுகளில் இந்தச் செய்திகள் உள. இவை ஏழாவது ஜயவர்மன் காலத்தியவை. அவன் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தை ஆண்டனன். மருத்துவமனை பற்றிய கல்வெட்டு அடிப்பகுதி உடைந்து காணாமற்போய்விட்டது

 

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேயா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மத ராஜாக்கள் ஆட்சி நடந்தது. அந்த நாடுகள் அனைத்திலும் முக்கியமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகளில் இருந்து மிக முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் பாங்காக், காங்கேயன் முதலிய நகரங்களில் மியூஸியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் அதிகம்.

 

வட தாய்லாந்து வழியாக KHMER க்மேர் (குமரிக் கண்ட?) நாகரீகம் தாய்லாந்தில் நுழைந்தது. வியட்நாமில்தான் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டு உளது. இது ஸ்ரீஇமாறன் (திருமாறன்) என்ற பாண்டிய மன்னனுடையது. அதன்பிறகு கம்போடியாவில் நிறைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. சம்பா என்று அழைக்கப்பட்ட வியட்நாம் ஆட்சியில் மட்டுமே 800 ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகள் உள.

 

வட தாய்லாந்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. இதுதான் தாய்லாந்தின் பழைய கல்வெட்டு. இதில் மஹேந்திரவர்மன் என்ற மன்னன், சிவனின் வாஹனமான நந்தியை நிர்மாணம் செய்தி உளது.

இதில் விநோதம் என்னவென்றால் அதேகாலத்தில் காஞ்சீபுரத்தில் மாபெரும் பல்லவ மன்னனான மஹேந்திர பல்லவன் நந்தி சின்னத்தோடு ஆட்சி புரிந்துள்ளான். இருவருக்குமிடையேயான தொடர்பு ஆராயப்படவேண்டியது. கம்போடிய, தாய்லாந்து மன்னர்களும் பல்லவர்களைப் போல  ‘வர்மன்’ பட்டத்துடன் ஆண்டனர் என்பதும் குறிப்பிடற்பாலது.

 

மஹேந்திரவர்மன் கல்வெட்டு சூரின் (SURIN PROVINCE) மாகாணத்தில் கிடைத்   தது; அவன் எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டதற்காக சிவ பிரானுக்கு ‘நந்தி’ அமைத்ததாகக் கல்வெட்டு செப்புகிறது

 

இந்தியாவை போலவே அங்கும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்தது, கோவில் கட்டியது முதலிய செய்திகள் உள. இவை இல்லாவிடில் அந்த நாட்டின் வரலாறே அழிந்து போயிருக்கும். தமிழ் நாட்டிலும் இப்படி பிரம்மதேய (பிராமணருக்கு தானம்), தேவதான (கோவிலுக்கு தானம்) கல்வெட்டுகள் இல்லாவிடில் வரலாறே தெரியாமல் போயிருக்கும். இலக்கியங்களில் தேதி தெரியாது; கல்வெட்டுகளில் ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கும்.

 

பாங்காக் நகர மியூஸியத்தில் இரண்டாவது உதயாதித்ய  வர்மணின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டு பல சுவையான செய்திகளைத் தருகிறது பிராமண அர்ச்சகர் பரம்பரை பற்றிய செய்தி இது. தமிழ்நாட்டில் வேள்விக்குடி சாசனம் எப்படி பிராமணர்களுக்கு பாண்டிய மன்னர்கள் பழங்காலம் முதல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறதோ அதே போல இந்த தாய்லாந்து கல்வெட்டு கைவல்ய சிவாச்சார்யார்கள் பற்றி சுமார் 400 ஆண்டுக் கதைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது

 

இது பிரசாத் கோக் சுதோத் தாம் என்னும் இடத்தில் கிடைத்தது. இப்பொழுது பாங்காக் தேஸீய மியூஸியத்தில் இருக்கிறது

 

க்மேர் வன்ம்சத்தை ஸ்தாபித்த ஜயவர்மன் காலத்தில் இருந்து அந்த பிராமணக் குடும்பம் மன்னர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறும் இக் கல்வெட்டு 1052 ஆம் ஆண்டினது ஆகும்; ஜயவர்மன் 802-ல் வம்சத்தை நிறுவினான். அவன் ஜாவவிலிருந்து (இந்தோநேஷியா) வந்து இந்திரபுரத்தில் அரசு நிறுவிய கதை; பின்னர் அதை ஹரிஹராலயத்துக்கு மாற்றிய கதை ஆகிய அனைத்தையும் இக் கல்வெட்டு விளம்புவதால் தாய்லாந்து வரலாற்றுக்கும் க்மேர் வரலாற்றுக்கும் இன்றியமையாதது இது என வரலாற்றுப் பேரறிஞர்கள் உரைப்பர்.

 

 

அத்தோடு க்மேர் அரசாட்சி முறை, அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுக்குக் குருவாக விளங்கிய பிராமணர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மொழிகிறது.

11 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

பிரஸாத் பனம் ரங் (PRASAT PHNOM RUNG) என்னும் இடம் மிகப் பிரஸித்தமானது. அங்குதான் நிறைய இந்துக் கடவுளரின் சிலைகள், சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அங்கு 11 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. இதிலிருந்து வட தாய்லாந்தின் 400 ஆண்டு வரலாற்றை அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நரேந்திர ஆதித்யன், அவன் மகன் ஹிரண்யன் ஆகியோரின் வீரப் பிரதாபங்களை இவை நுவலும்.

 

27க்கு 53 (27×53) செண்டிமீட்டர் உடைய (ஒன்றரை அடிக்கும் மேல் உயரம்) உள்ள ஒரு ஸம்ஸ்க்ருத கல்வெட்டு சிவ பெருமானின் துதியோடு துவங்குகிறது. சிவ பெருமானை மஹா யோகி என்று புகழ்கிறது. அதில் ஹிரண்யன் தனது தந்தைக்குத் தங்கத்தினால் சிலை செய்து வைத்ததாகப் புகல்வான். சைவ மடங்களுக்குப் புதுக் கட்டிடங்கள் கட்டியதைக் கொண்டாடும் முகத்தான் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத கல்வெட்டு நாலே வரிகளில் உளது.

 

மடங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், சிவன், விஷ்ணு, லிங்கம் ஆகிய மூர்த்திகளை நிறுவியது ஆகியான பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள. அனைத்தும் அரிய பெரிய செய்திகளைத் தருகின்றன.

 

தமிழர் ஒருவர் சென்று ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிடுவது பல முக்கிய செய்திகளைத் தரக்கூடும். ஸம்ஸ்க்ருத மொழி அறிவின்றி பழந் தமிழர்களின் கடலாதிக்கத்தை அறிவது அரிதிலும் அரிது.

 

ஆங்கிலேயர்கள் எழுதிய 1992 ஆம் ஆண்டு நூலில் உள்ள தகவல்களை நான் வடித்துத் தந்தேன். அவர்களுக்கு ஆழமான அறிவும் பற்றும் இல்லை என்பதால் நாம் ஆராய வேண்டியது அவஸியமாகும். ஆயிரம்   ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளை ஆராயும் கடமை நமக்குளது.

ஸம்ஸ்க்ருதம் படிக்க! தமிழ்  வாழ்க!!

 

-சுபம்,சுபம்-

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள் (Post No.5053)

Written by S NAGARAJAN

 

Date: 28 MAY 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5053

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சத்திய சோதனை

காந்திஜி, நேருஜி – தவறிய வார்த்தைகள்! – தேசப் பிரிவினையின் சோகமான அம்சம்!

 

ச.நாகராஜன்

 

1

பாரத தேசத்தின் சரித்திரத்தின் 1947இல் நடந்த பிரிவினை சோகமான ஒன்று. தேவையற்ற ஒன்று.

இது பற்றி நமது தேசத்தின் பெரும் தலைவர்களான காந்திஜி, நேருஜி முதலில் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தார்கள்.

1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி பாரதம் சுதந்திரத்தை அடைந்தது.

பிரிவினையுடன்.

 

 

இதற்கு முன்னர் ஏப்ரல் 1947இல் பண்டிட் ஜவஹர்லால் நேரு

ஒரு பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசினார்:

 

“All talk of a partition of India as fantastic nonsense. We shall never agree to it.”

  • Pandit Jawaharlal Nehru, addressing a public meeting in April 1947, two months before he accepted it.

 

இப்படி வீர முழக்கம் செய்த இரண்டே மாதங்களில் அவர் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார்!

 

ஹிந்துக்கள் காந்திஜியையும் நேருஜியையும் மலை போல நம்பினார்கள்.

 

ஆனால் நேருஜி வார்த்தை தவறி விட்டார்.

அவர் ஏன் இப்படி தனது வார்த்தையைத் தவற விட்டார்?

அதற்கான காரணத்தை அவரே தெரிவித்துள்ளார்!

Leonard Mosley  என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர். அவர்  ‘The Twilight of the British Raj’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

நேரு தனக்கு அளித்த பேட்டியை அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

அதன் ஒரு பகுதி இது:

 

“I was getting old”, said the fart in effect, and I did not want to engage myself in another struggle and lose my post as Prime minister of India. Partition of the country began to look like a solution to my problems.”

ஆறு வாரங்களில் ஆறு லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர் – பிரிவினையால்.

 

தனது பிரதம மந்திரி பதவி போய் விடக்கூடாது, இன்னொரு போராட்டத்திற்குத் தான் தயாராக இல்லை, வயதாகிக் கொண்டே போகிறது என்பது நேருவின் வாயிலிருந்தே வந்த வார்த்தைகள்!

 

 

2

ஜின்னா என்ன நினைத்தார்?

இதை மைக்கேல் எட்வர்டின் புத்தகம் தெரிவிக்கிறது.

Michael Edwardes  எழுதியுள்ள  ‘The Last years of British India’ என்ற புத்தகத்தில் ஜின்னா கூறிய வார்த்தைகள் அப்படியே தரப்பட்டுள்ளது.

“I never thought it would happen. I never expected to see Pakistan in my lifetime.”

ஜின்னாவே எதிர்பார்க்காத பிரிவினை ஏற்பட்டது!

 

3

மகாத்மா காந்திஜி பாகிஸ்தான் உருவாவதைப் பற்றி என்ன சொன்னார்?

“Even if the whole of India burns, we shall not concede Pakistan, even if the Moslem League demanded it at the point of a word.”

மகாத்மா காந்திஜி 1947 மே மாதம் 31ஆம் தேதி இப்படிக் கூறினார்.

 

இதை Michael Edwardes மேற்கோளாகக் காட்டியுள்ளார்.

ஆனால் மேயில் கூறிய வார்த்தைகளை உடனேயே அவர் தவற விட்டார். ஆகஸ்ட் பிரிவினை ஏற்பட்டது.

என் உடலின் மீது தான் பிரிவினை ஏற்பட்டால் ஏற்படும் என்ற மகாத்மாவின் கூற்றையும் நாம் அனைவரும் அறிவோம்.

அவர் ஏன் மனம் மாறினார்!

 

 

முப்பது கோடி மக்களின் நம்பிக்கை தெய்வமாக இருந்த அவர் ஏன் தன் வார்த்தையைத் தவற விட்டார்.

ஜவஹர்லால் நேரு தனது பதவி மோகமே தன்னை பிரிவினைக்கு ஒப்புக் கொள்ள வைத்தது என்று கூறி விட்டதாக அறிகிறோம்.

 

ஆனால் மகாத்மா?

அவர் ஏன் வார்த்தையைத் தவறவிட்டார்?

தெரியவில்லை.

 

அவரது சொற்களைத் தான் ஆராய வேண்டும்?

பிரிவினையால் எத்தனை லட்சம் மக்கள் இறந்தனர்.

புதிய எளிதில் தீர்வு காண முடியாத தொடர் பிரச்சினையாக மைனாரிட்டிகளுக்கு (அதிக!) உரிமை என்ற அபத்தமான வாதம் இந்தியத் திருநாட்டை இன்று எந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.

 

வியக்கிறோம்!

சத்தியத்திற்கே சோதனையா?

***

 

குறிப்பு : மிக அருமையான நூலான, Hindu Destiny by Nostradamus  என்ற நூலை ஜி.எஸ். ஹிரண்யப்பா என்பவர் எழுதியுள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது. இவரது நூலைப் பற்றியும் இவரைப் பற்றியும் நான் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையை அன்பர்கள் படிக்கலாம்.

 

xxxx

 

 

 

 

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)
WRITTEN by London Swaminathan 

Date: 22 May 2018

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

Post No. 5035

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பழங்காலத்தில் கீழை நாடுகளில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருவர் சத்தியத்தின் பெயரில் சூளுரைத்து கடலை விரட்டலாம். தண்ணீர் மீது நடக்கலாம்; நதிகளை ஓடாமல் செய்யலாம் என்று நம்பினர். இந்தக் கதைகள் சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம், புத்த, ஜைனமத நூல்களில் உள்ளன. மோஸஸ் கடலைக் கடந்த கதை, ஜீஸஸ் சிஷ்யன் கடலைக் கடந்த கதை எல்லாவற்றுக்கும் மூலம் ரிக்வேதம் என்று முதல் கட்டுரையில் நேற்று காட்டினேன்.

 

 

தமிழர்களைப் போலவே சீனாவிலும் மன்னன் செய்த செயலைப் பார்க்கையில் இரு ஒரு பழங்காலச் சடங்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

திருவிளையால் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது; அதன் தலைப்பு “கடல் சுவற வேல்விட்ட படலம்”. 96 அஸ்வமேத யாகம் செய்த உக்கிரகுமார பாண்டியன் மீது இந்திரன் பொறாமை அடைந்தான். ஏனெனில் எவரேனும் 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி பறிபோய்விடும் இதனால் இந்திரன் மதுரை நகர் மீது கடல் தண்ணீர் பாயும்படி ஏவிவிட்டனன். இது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாக இருக்கலாம்.  பாண்டிய மன்னன் சிவ பக்தன் என்பதால் சிவபெருமானே அவன் கனவில் தோன்றி கடலைக் கட்டுக்குள் வைக்க அனுப்பினான் என்பது கதை. உடனே அவன் இரவோடு இரவாக கடல் மீது வேல் ஒன்றை எறிய  அது பின்வாங்கியது.

உண்மை பேசுவோர், நியாயமான ஆட்சி நடத்துவோருக்கு இப்படிப் பட்ட அபூர்வ சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர். நல்லாட்சி நடக்கும் நாட்டில் பயிர்கள் தாமாகவே செழித்து வளரும் என்று வள்ளுவனும் செப்புவான்.

சீனாவில் நடந்த அதிசயம்

மிலிந்த பன்னா என்னும் நூலில் ஒரு கதை வருகிறது:–

“மன்னாதி மன்னா! சீனாவில் ஒரு மன்னன் நாலு மாதங்களுக்கு ஒரு முறை, கடலுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக சபதம் செய்கிறான். அவன் தேரில் ஏறி கடலுக்குள் ஒரு லீக் ( மூன்றரை மைல்) தொலைவு செல்வான் அவன் உள்ளே நுழைந்தவுடன் கடல் பின் வாங்கி விடும். அவன் தேர் வெளியே வந்தவுடன் கடல் அந்த இடத்தில் பாய்ந்து முழுகடித்துவிடும்”.

இது புத்தமத நூலில் உள்ள கதை. ஆக பரசுராமன் கோடரியை எறிந்து கேரள பூமியை மீட்ட கதை, மஹாவம்சம் எனும் இலங்கை நூலில் உள்ள கதை ஆகியன எல்லாம் ஸத்தியத்தின் மூலம் சபதம் செய்து தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும் என்று காட்டுகின்றன; நிலம் தரு திருவில் பாண்டியன், கடல் சுவற வேல் விட்ட உக்கிரப் பெருவழுதி அல்லது உக்கிர குமாரன் அகியோர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் உண்டு.

 

From my earlier post:–

மஹாவம்சக் கடல் கதை

சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடிதத்தைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான்.

 

இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

 

xxx

சம்பந்தர் செய்த அற்புதம்

தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற பாடலகளைப் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றுமுள்ள ஏனைய சிவனடியார்கள் வாழ்விலும் நதி நீர் , கடல் நீர் முதலியவற்றை அடக்கி ஆண்ட செய்திகள் உள. திருஞான சம்பந்தர் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய   போது   படகோட்டிகளும் பயந்து தயங்கி நின்றதாகவும் அவர் அடியார்களுடன் படகில் ஏறி தேவாரம் பாட, படகு அமைதியாக தவழ்ந்து மறு கரை சேர்ந்ததாகவும் ஸ்தல புராணங்கள் நுவலும். கொள்ளம்புதூரில் வெட்டாறு வெள்ளப் பெருக்கெடுத்தபோது சம்பந்தர் நதி கடந்த அதிசயம் சைவ வரலாற்றில் உள்ளது

 

கொள்ளம்புதூரில் ஆண்டுதோறும் ஓட (படகு) விழா நடப்பதோடு அந்த ஆற்றுக்கே ஓடம்போக்கி ஆறு என்றும் பெயர் வைத்துவிட்டனர்.

to be continued…………….

–subham–