உப்பு நீரில் ஓடும் கார் (Post No.2987)

salt powereeed

Article Written S NAGARAJAN

Date: 20 July 2016

Post No. 2987

Time uploaded in London :– 5-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

22-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
உப்பு நீரால் ஓடும் கார்!
ச.நாகராஜன்

“படிம எரிபொருள் சீக்கிரமே அரிதாகி விடும் என்பதால் மாற்று எரிபொருள் இன்றியமையாதது.”
– காதத் பகத்

 

salt water car

Toy Salt Car Kit: You can do it

பெட்ரோல் மற்றும் டீஸல் ஆகியவற்றின் விலையை நினைத்தாலேயே நடுத்தர மக்களுக்கு பகீர் என்கிறது. படிம எரிபொருளை விட்டு விட்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் கார், எலக்ட்ரிக் கார், ஆர்கானிக் எதனால் கார், சூரிய சக்தியால் இயங்கும் சோலார் கார் என பல்வேறு விதமாக மாற்று எரிபொருள் முயற்சிகளை உலகிலுள்ள பல நிறுவனங்களும் மேற்கொண்டு மாதிரி கார்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மாற்று எரிபொருள் கார்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கென உருவாகவில்லை.
இந்த நிலையில் உப்பு நீரை வைத்து காரை ஓட்டலாம் என்ற செய்தி எவ்வளவு இனிப்பான செய்தி!
மரீனா கடற்கரையில் வரிசையில் நின்று ஆளுக்கு தினமும் ஒரு வாளி அல்லது பீப்பாய் கடல் நீரை இலவசமாக எடுத்துச் சென்று அதைக் காரில் போட்டுக் கொண்டு ஓட்டினால்?!!
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது இல்லையா!

ஜெர்மனியைச் சேர்ந்த நேனோ ஃப்ளோசெல் (Nano Flowcell) என்ற நிறுவனம் ஒரு மந்திரக் காரைக் கண்டுபிடித்துள்ளது. அது உப்பு நீரினால் ஓடுகிறது! இந்த உப்பு நீர் காரானது பெட்ரோல் டீஸல் கார்களை விட மூன்று மடங்கு அதிக தூரம் ஓடுகிறது!
ஹைட்ரஜனால் ஓடுகின்ற கார்களைப் போன்றே இந்த உப்பு நீர் காரும் ஓடுகிறது.
உப்பு நீரிலிருந்து மின்சக்தி உருவாக்கப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன் காரில் உள்ளது போல சிக்கலான உயர் அழுத்த அமைப்புகள் (high pressure system) இதில் தேவையில்லை!
கொஞ்சம் ‘டெக்னிகலாக’ இதன் செயல்பாட்டை விளக்கவும் முடியும். இந்தக் காரில் இரண்டு எரிபொருள் டாங்குகள் இருக்கும். அது கரைக்கப்பட்ட உலோக உப்புகளினால் (dissolved metallic salts) நிரப்பப் பட்டிருக்கும். இந்த உப்பு எதிர்மறை அயோனிக் மின்னூட்டத்தைக் கொண்டிருக்கும் அது ஒரு மென்படலத்தின் மூலம் பம்ப் செய்யப்படும். இரசாய்ன வினை மூலம் சக்தி உருவாகி நான்கு மின் மோட்டார்கள் இயக்கப்படும். இவை சூப்பர் கபாசிடர்களினால் காரின் சக்கரங்களை இயங்க வைக்கும்.
நேனோ ஃப்ளோசெல் இதுவரை மூன்று உப்பு நீர் கார்களை உருவாக்கி உள்ளது. ஒன்று ஸ்போர்ட்ஸ் கார். இன்னொன்று சாதாரணப் பயன்பாட்டிற்காக உள்ளது. அடுத்தது முதலாக அமைக்கப்பட்ட ப்ரோடோ கார்!
இந்தக் கார்கள் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான காரின் பெயர் க்வாண்டினோ (Quantino).
இதன் ஹார்ஸ்பவர் 108. ஐந்து வினாடிகளில் இது 100 கிலோமீட்டர் வேகத்தை எடுத்து விடும்! ரேஸ் கார்களோ 200 ஹார்ஸ் பவர் கொண்டது.
சரி, இதன் மைலேஜ் என்ன? எவ்வளவு மைல்கள் இது ஓடும்?
ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கிலோமீட்டர் இது ஓடும்!

இதைத் தொடர்ந்து ஓட்டிய டிரைவர் 14 மணி மூன்று நிமிடங்களில் களைத்துப் போய் நிறுத்தினார். ஆனால் கார் தொட்ர்ந்து ஓடும் நிலையில் நல்ல கண்டிஷனில் இருந்தது.ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 300 மைல் வேகத்தில் ஓடும், 1090 ஹார்ஸ் பவரைக் கொண்டது

இது போன்ற கார்களை உருவாக்கிய கம்பெனிகள் சில உண்டு என்றாலும் அவை சந்தைக்கு உரிய வண்டிகளை இதுவரை தயாரிக்கவில்லை. ஜப்பானிய நிறுவனமான ஜெனிபகஸ் என்ற நிறுவனம் ஒரு ஹைட்ரஜன் காரைத் தயாரித்தது. ஆனால் நிறுவனமே திவாலாகி விட்டது.!
ஸ்டான்லி ஆலன் மேயர் என்பவர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஓடக் கூடிய காரைக் கண்டுபிடித்துத் தயாரித்தார். அது உற்பத்திக்கான நிலை வரும் போது அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. முதலீட்டாளர்களிடம் கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே விஷத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அத்தோடு அந்தக் கார் பற்றிய திட்டமும் நின்றது.
இப்போது உப்பு நீர் காரினால் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை ஓரம் வாழ்பவர்கள் இனி புதிதாக ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாற்று எரிபொருளான உப்பு நீரை வேண்டி நிற்கும் வாகனச் சொந்தக்காரர்கள் இனி கடலை நோக்கித் தானே திரண்டு வருவார்கள்! அல்லது அங்கு அமைந்திருக்கும் உப்பு தொழிற்சாலைகளை நோக்கி வரலாம்!
பெட்ரோலும் டீஸலும் போய் உப்பு நீர் எரி பொருளானால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை நினைத்தாலே மனம் இனிக்கிறது.

 

lauterber 2
அறிவியல் செய்யும் ஜாலங்களுக்கு ஒரு முடிவே இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான பால் சி.லாடர்பெர் (Paul C Lauterber : தோற்றம் 6-5-1929 மறைவு : 27-3-2007) 2003ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோப்ல பரிசைப் பெற்ற மேதை. எம் ஆர் ஐ எனப்படும் மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோய் அறிகுறிக்கான சோதனையில் இன்று உலகெங்கும் வருடந்தோறும் 6 கோடி பேர்களால் எம் ஆர் ஐ சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பக்கவிளைவு இல்லாத பாதுகாப்பான நோய் அறிகுறிக்கான சோதனை இது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
முதலில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி நேச்சர் பத்திரிகைக்கு இவர் எழுதி அனுப்பினார். ஆனால் பத்திரிகை இவரது கண்டுபிடிப்பை நிராகரித்து விட்டது.
மனம் நொந்து போன அவர்,” கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானத்தாலோ அல்லதுநேச்சரினாலோ நிராகரிக்கப்பட்டதை வைத்து விஞ்ஞானத்தின் முழுச் சரித்திரத்தையே எழுதலாம்” என்று நேச்சர் பத்திரிகைக்கு எழுதினார். பின்னர் இவரது கண்டுபிடிப்பின் அருமையையும் பயன்பாட்டையும் கண்ட உலகம் வியந்தது. இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
சுமார் 60க்கும் மேற்பட்ட பிரபல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முதலில் எள்ளி நகையாடப்பட்டன.

 

lauterber
அவர்களின் விடாமுயற்சியால் பின்னர் அறிவியல் உலகம அவர்களை அங்கீகரித்தது.. அவர்களுள் பலரும் நோப்ல பரிசை வென்றிருக்கின்றனர்..
எந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பையும் உலகம் பொதுவாக திறந்த மனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஆன் லைன் மூலமாக இன்று அன்றாடம் நடைபெறும் ஷாப்பிங்கை 1966ஆம் வருடம டைம் பத்திரிகை, “இதெல்லாம சரிப்பட்டு வராது. பெண்கள் கடைக்குச் சென்று ஷாப்பிங் செய்வதையே விரும்புவர்” என்று விமர்சித்தது.
1904ஆம் வருடம் பிரான்ஸை சேர்ந்த உத்திகளை வகுக்கும் பேராசிரியர் ஈகோல் டீ கர், “விமானங்கள் என்பது சுவையான பொம்மைகள் தான். அவை இராணுவ உபயோகத்திற்குச் சரிப்பட்டு வராது” என்றார். இரண்டாம் உலகப் போரில் விமானப் படைகளின் சேவை பற்றி அனைவரும் அறிவர்.
தாமஸ் எடிஸனே, “ஆல்டர்னேடிங் கரண்ட்” என்பதைப் பற்றிச் சிந்திப்பதே வேஸ்ட் ஆஃப் டைம்” என்றார். ஆனால் ஏசி- யே உலகை இன்று ஆள்கிறது.
இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
அறிவுடன் விடாமுயற்சியும் இணைந்தாலேயே உலகம் அங்கீகரிக்கிறது என்பது உண்மை!
*********

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–

 

சந்தியா வந்தனம் – 2 பாகங்கள்- 24 பகுதிகள் (Post No.2984)

IMG_4222

Article Written S NAGARAJAN

Date: 19 July 2016

Post No. 2984

Time uploaded in London :– 5-34 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 ஒரு சிறிய அணுவில் பெரும் விளைவை ஏற்படுத்தும் சக்தி இருப்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. பெரும் அழிவை ஏற்படுத்துவதற்கான சக்தி ஒரு அணுகுண்டில் உள்ளடங்கி இருக்கிறது. முறைப்படி அதை வெடிக்க வைத்தால் அதன் அழிவு சக்தி வெளிப்படுகிறது. இதை நாகசாகி, ஹிரோஷிமாவில் பார்த்தோம்.

அதே பிரம்மாண்டமான ஆக்க சக்தியை- தெய்வீக சக்தியை – இறை சக்தியை ஒரு சிறிய அனுஷ்டானத்தில் முன்னோர் அடக்கி வைத்துள்ளனர்.
அது தான் சந்தியாவந்தனம்.
காலை, நடுப்ப்கல், மாலை ஆகிய வேளைகளில் செய்யப்பட வேண்டிய அனுஷ்டானம் இது. முறைப்படி செய்தால் செய்பவருக்கு பெரும் சக்தி உண்டாவதோடு உலகமும் நன்மையை அடைகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!
இதில் இரு பாகங்கள் உள்ளன. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம்.
பூர்வபாகத்தில் 11 பகுதிகளும் உத்தரபாகத்தில் 13 பகுதிகளும் உள்ளன. அனைத்துமே முக்கியம் தான் என்றாலும் முக்கியத்தில் முக்கியம் அர்க்கியப்ரதானம், பிராணாயாமம் மற்றும் காயத்ரீ ஜபம் ஆகிய மூன்றாகும்.
இனி பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகத்தில் உள்ளனவற்றைப் பார்ப்போம்.
பூர்வ பாகம்
1) ஆசமனம்
2) கணபதி தியானம்
3) பிராணாயாமம்
4) ஸங்கல்பம்
5) மார்ஜனம்
6) ப்ராசனம்
7) புனர்மார்ஜனம்
8) அர்க்கியப்ரதானம்
9) பிராயசித்தார்க்கியம்
10) ஐக்கியானுஸந்தானம்
11) தேவ தர்ப்பணம்
உத்தர பாகம்
12) ஜப ஸங்கல்பம்
13) ப்ரணவ ஜப: ப்ராணாயாமம்
14) காயத்ரீ ஆவாஹனம் மற்றும் காயத்ரீ ந்யாஸம்
15) காயத்ரீ ஜபம்
16) காயத்ரீ உபஸ்தானம்
17) ஸூர்ய உபஸ்தானம்
18) ஸமஷ்டி அபிவாதனம்
19) திக்தேவதா வந்தனம்
20) யம வந்தனம்
21) ஹரிஹர வந்தனம்
22) ஸூர்யநாராயண வந்தனம்
23) ஸமர்ப்பணம்
24) இரக்ஷை
இந்த பகுதிகளில் உள்ள மந்திரங்களின் அர்த்தம் மகத்தானது. சிறிய செயல்கள் மூலம அரிய சக்தியைப் பெற வழி வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இதைச் செய்வதால் ஏற்படும் மகத்தான பலன்களை ரிஷிகளும், மகான்களும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஹிந்து தர்மத்தில் உள்ள அநேக சாஸ்திரங்கள் மற்றும் நூல்கள் இந்த ஸந்தியா வந்தனத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கின்றன.
அவற்றைப் படித்தாலேயே இதன் அருமையை உணர்ந்து நாம் கடைப்பிடிக்க ஆரம்பிப்போம்.

 

Previous Articles:

“Brahmins deserve an entry in to Guinness Book of Records”  (Posted in Tamilbrahmins.com and swamiindology.blogspot.com until 3rd December 2011 in 9 parts over nine days); written by London swaminathan
***

கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை (Post No.2983)

sarojini

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2983

Time uploaded in London :– 14-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sarojini book

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் இது:-

 

அவர் எப்படி கவிதை எழுதத் துவங்கினேன் என்று சொல்லுகிறார்:-

 

“எனக்கு அப்போது வயது 11. ஒரு அல்ஜீப்ரா கணக்கு போட வேண்டியிருந்தது. விடை தெரியவில்லை;  மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். அந்த போராட்டம் ஒரு கவிதையாக கொப்புளித்தது. உடனே அவசரம், அவசரமாக அதை எழுதி வைத்தேன். அப்போதிலிருந்து கவிதை என்பது சுலபமாக வர ஆரம்பித்தது”.

 

இலக்கியத்தி ல்பெண்கள் சிறப்படைந்தது  இது  முதல் தடவை அல்ல. குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி, கணவனின் படையெடுப்பின்போது, மதுரை மாநகர மீனாட்சி கோவில் வரை வந்து, மதுரா விஜயம் என்ற காவியத்தைப் படைத்தார்.

 

ரிக் வேதத்தில் , சங்கத் தமிழ் இலக்கியத்தில், பிராக்ருத நூலான காதா சப்த சதியில் நிறைய பெண்புலவர்களைக் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும், அவ்வையாரும் நிறைய கவிதைகளைப்ப்ழிந்தனர்.  பொழிந்தனர். அவுரரங்க சீப்பின் மகள் ஜெப் உன்னிசாவும்  ஒரு எழுத்தாளர்.

 

உலகின் பல நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் உண்டு. ஆயினும் பழங்கால நாகரீகங்களில் சுமார் நூறு இலக்கியகர்த்தாக்களை கிரேக்க நாட்டிலோ, எகிப்திலோ, சுமேரியாவிலோ, ரோமானிய சாம்ரஜ்யத்திலோ, காண முடியாது. எபிரேய மொழியிலோ சீன மொழியிலோ காணக்கிடைக்காது. அவை எல்லாம் ஆண் ஆதிக்கம் மிக்க சமூகங்கள்.

 

 

ரிக் வேத காலத்தில் 20 பெண்மணிகள் கவிதைகளை எழுதி உபநிஷத காலத்தில் பொதுச் சபை விவாதத்துக்கு — பட்டி மன்றத்துக்கு — வந்த கார்க்கி போன்ற பெண்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. இவர்களுக்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வ்வையார், நப்பசலை, நச்செள்ளை போன்ற பல சங்க இலக்கிய பெண்மணிகளைக் காண்கிறோம்.

 

sarojini 3

நான் காற்று வாங்கப் போனேன்

 

“நான் காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்  — என்று பாடினார் கண்ணதாசன்.

 

தமிழில் கவிதை புனையும் ஆற்றல், சரோஜினிக்கு இருந்திருந்தால்,

 

நான் கணக்குப்போடப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்;

 

அதைக் கேட்டு சொக்கிப் போனார்கள்

ஒரு கவிஞனாகி விட்டேன்.

 

என்று பாடியிருப்பார்.

 

–SUBHAM–

 

பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்….. ( Post No.2981)

akhand bharat

Article Written S NAGARAJAN

Date: 18 July 2016

Post No. 2981

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விப்போம்!
ச.நாகராஜன்

 

ilove my india

 

உலகத்தின் தலையாய பீடத்தில் பாரதம் இருந்தது என்பதைப் பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே அவற்றை மீண்டும் இங்கு கூற வேண்டிய அவசியமில்லை. ‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விக்க மஹாத்மாவை பாரதி போற்றினான்.

 
ஒளி இழந்த நாட்டிலே ஒளி கொடுக்க வா வா வா என்று அனைவரையும் அழைத்தான். வலிமையற்ற போகின்ற பாரதத்தைப் போ போ போ என்று அவன் துரத்தினான்.
அவனே கூறிய படி, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மஹிமை இல்லை!

 

 
இன்றைய பாரதத்தின் நிலை என்ன?
அறிக்கை வந்து விட்டது! பார்ப்போம்!!
உலகின் மிகச் சிறந்த நாடாக ஸ்வீடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்! ஸ்வீட் ஸ்வீடன்!! வாழ்த்துக்கள்!!!

 
மக்களின் நலனைக் காப்பதில் முதலிடம் பெற்றுள்ளது ஸ்வீடன்.
உலகில் உள்ள மனித குலத்தின் பொது நன்மையை உறுதி செய்து அதைக் காக்கப் பாடுபடுவதிலும் அது முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா???

 

 
163 நாடுகள் கணிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியா 70வது இடத்தைப் பெற்றுள்ளது.
நமக்குப் பின்னே 93 நாடுகள் உள்ளன என்று ‘பெருமை’ப்படுவதா (இன்றைய தரித்திர புத்தி அப்படித் தான் நினைக்க வைக்கும்!)

 
அல்லது நம்மை விட் 69 பேர் முந்தைய இடத்தில் இருக்கிறார்களே முய்னறு முன்னேற வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறதா! ஒளி படைத்த பாரதன் அப்படித் தான் நினைப்பான்!

 
‘தி குட் கண்ட்ரி இண்டெக்ஸ் – 2015’ (The Good Country Index – 2015) என்பது உலக நன்மைக்காக ஒரு நாடு எவ்வளவு தூரம் உழைத்து நல்லதைச் செய்கிறது, என்பதைக் காக்கும் குறியீட்டெண் ஆகும்.

 

 

விஞ்ஞானம், பண்பாடு, அமைதி, பாதுகாப்பு, காலநிலை மாறுபாடு, ஆரோக்கியம்., சமத்துவம் உள்ளிட்ட 35 குறியீடுகளைக் கொண்டு அளக்கப்பட்டு உல்கிற்கு ஒரு நாட்டின் பங்களிப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்த்து ஒரு நாட்டின் தர வரிசை இதில் நிர்ணயிக்கப்படுகிறது.

 
ஸ்வீடன் 163 நாடுகளில் முதல் இடத்தைல் பிடிக்க லிபியா கடைசியில் நிற்கிறது.
உலக அமைதிக்கான பங்களிப்பில் சீனாவிற்குக் (27) கீழே மூன்று இடங்கள் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சமத்துவம் கடைப்பிடிப்பதில் ஒரே அவலம். 124ஆம் இடத்திற்குத் தள்ளபபட்டுள்ளது.

 

akhand baharat 2
இந்தியாவின் இடம் : ஆரோக்கியத்தில் 37வது இடம், விஞ்ஞானத்தில் 62வது இடம், பண்பாட்டில் 119வது இடம், காலநிலை காப்பதில் 106வது இடம், உலக ஒழுங்கில் 100வது இடம்.
முற்பட்ட இடங்களில் இருப்பதை நினைத்துப் பெருமைப் படும் அதே வேளையில் இதர துறைகளில் மேம்பட வேண்டும் என ஒவ்வொரு பாரதீயனும் உறுதி எடுத்தால் முதல் இடத்தைப் பிடிக்க மாட்டோமா என்ன!
புகழோங்கிய பண்டைய நாளை அடைவோம்.
பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!
வாழ்க பாரதம்!
**********

யமன் பயன்படுத்தும் அளவுகோல்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No 2979)

padi

Compiled by London swaminathan

Date:17 July 2016

Post No. 2979

Time uploaded in London :– 9-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

reading-jug-large

நாலடியார் என்னும் நூலில் ஒரு அருமையான பாடல் வருகிறது. இது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

 

யமன், ஒரு அளவு கோல் வைத்திருக்கிறானாம். நாம் படி, அல்லது லிட்டர் என்ற அளவுகளை பயன்படுத்துவது போல அவன் தினமும் சூரியன் உதிப்பதை ‘நாழி’ என்னும் அளவாகப் பயன்படுத்தி தினமும் நம் வாழ்நாளை அளந்து கொண்டிருக்கிறானாம். இதைப் படித்தும் கூட நம் வாழ்நாள் தினமும் கழிந்துகொண்டிருப்பதை பலரும் உணருவதில்லை.

 

இதோ அந்தப் பாடல்:-

 

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற

அறஞ்செய் தருடையீஇர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

பொருள்:–

எமன் ஒளிமிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாளை நாள் தோறும் அளந்து, ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராக ஆகுங்கள்! அப்படி ஆகாதவர்கள் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே ஆவர்!

 

நாலடியாரில் இன்னொரு பாட்டில்,

 

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

 

பொருள்:-

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.

 

 

ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

 

 

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

(திருக்குறள் 336)

 

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

 

 

முந்தைய கட்டுரைகள்

 

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? (10 ணொவெம்பெர் 2013)

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969), Date:14 July 2016

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876), Date: 7 June 2016

 

–Subham–

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் (Post No.2974)

tribe 11

 

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 2  

Research Article written by London swaminathan

 

Date: 15 July 2016

 

Post No. 2974

 

Time uploaded in London :– 17-59

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Please read the first part published yesterday, where there is a detailed introduction

(( முதல் படம் “போர் அபோர்” இன மக்கள், பெண்ணின் படம். வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் இனம். தலைமுடியை, ஆண்கள் கிராப் வெட்டுவது போல வெட்டிக்கொள்வர். ஏராளமான பாசிமணி, விலை மதிப்பு குறைந்த நீலக்கற்கள், பச்சைக்கற்கள் உடைய நகைகளை அணிவர்.))

 

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் –

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 கட்டுரையைப் படித்துவிட்டு இந்த இரண்டாவது கட்டுரையைப் படிக்கவும்.

 

உலகம் முழுதும் பழங்குடி மக்கள் மரபு அல்லது ஜாதி அல்லது குலச் சின்னங்களை (TOTEM SYMBOLS) வைத்திருக்கின்றனர். இந்த சின்னங்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே இருக்கிறது. ஆனால் நாகரீக முன்னேற்றம் காரணமாக அவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதாவது அப்பொழுதே இந்திய சமுதாயம் அவ்வளவு முன்னேறிவிட்டது.

 

ஆனால் இன்று பழங்குடி மக்கள், நாகரீக சமுதாயத்துக்கு இடையே எப்படி வாழ்கின்றனரோ, அப்படி இதிஹாச காலத்திலும் பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். ராமாயண கலத்தில், கு ரங்கைச் சின்னமாகக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அவர்களின் மன்னரே வாலி, சுக்ரீவன். அதே காலத்தில் கரடிச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவனே ஜாம்பவான். அதே காலத்தில் கழுகுச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவரே ஜடாயு. இவை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததால், நமது புராண, இதிஹாச எழுத்தர்கள் அவர்களைக் குரங்கு, கரடி, கழுகு என்று சித்தரித்துவிட்டனர்.

 

இதற்குப் பின்னர், மஹாபாரத காலத்தில், கிருஷ்ணனும் அர்ஜுனனும், நாகர்கள் வாழ்ந்த காண்டவ வனத்தை எரித்தபோது,  நாகர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல தலைமுறைகளுக்கு நீடித்து, ஜனமேஜயன் காலத்தில் சர்ப்ப யாகம் நடந்து, பின்னர் ஆஸ்தீகர் என்பவர் மூலம் சமரச ஒப்பந்தம் நடந்தது. இதை இன்றும் பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லி நாகர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். இந்த நாகர் இன மக்களை, பாம்பு என்று நமது புராணிகர்கள் முத்திரை குத்திவிட்டனர். நாகர்கள் பின்னர் அமெரிக்கா சென்று மாயா, ஆஸ்டெக் நாகரீகத்தை நிறுவினர். இது பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். காண்டவ வனம் என்பதை, அர்த்தமே புரியாமல், வெளிநாட்டினர், கோண்ட்வானா (காண்டவ + வன) என்று சொல்லி வருகின்றனர்.

 

 

மஹாபாரதத்தில் அயு என்ற மன்னனுக்கும் தவளை இனத்துக்கும் நடந்த சண்டை பற்றி கதை உள்ளது. உண்மையில் அது தவளைகள் அல்ல; தவளையை மரபுச் சின்னமாகக் கொண்ட மக்களே!

 

எங்கெங்கெல்லாம் பறவைகள், மிருகங்கள் பற்றிய கதைகள் வருகின்றனவோ அங்கெங்கெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அந்த பிராணிகளின் சின்னங்களை, மரபுச் சின்னங்களாகக் கொண்டவர்களையே.

tribe 14

((இரண்டாவது படம் சுலிகாடா மிஷ்மி ஆண் படம்))

மிகப் பழைய காலத்தில் இவை நடந்ததால் நாம் அதை மிருகங்கள் என்று நம்பத் துவங்கிவிட்டோம். ஆனால் வால்மீகி ராமாயணம் போன்றவற்றில் , அனுமன், நவ வியாகரணத்தில் வல்லவன்,  சொல்லின் செல்வன் என்றெல்லாம் வருணிகப்படும் போதே அவன் குரங்கு அல்ல, குரங்கைச் சின்னமாக உடைய வானர இனத்தில் பிறந்தவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜடாயு என்ற கழுகு இன மன்னன், தசரதனைத் தன்னுடைய தந்தை போன்றவன் என்று வருணிப்பதிலிருந்தே  ஜடாயும் மனிதன் என்றும், கழுகைச் சின்னமாகக் கொண்டவன் என்றும் புரியும்.

வேதத்தில் சான்று!

மண்டூக மகரிஷி என்றால் தவளை முனிவர் என்று பொருள். ஒரு காலத்தில் அவரது முன்னோர்கள் தவளையை சின்னமாக கொண்ட மக்கள என்பது தெரிகிறது.

 

இதே போல, காச்யப மகரிஷி என்றால் ஆமை என்றும் ,கௌசிக மகரிஷி என்றால் ஆந்தை என்றும் அ ர்த்தம். உண்மையில் இவர்கள் எல்லாம் அந்தந்த சின்னம் உடைய பழங்குடிகளில் பிறந்தவ ர் கள். சாண்டில்ய -பறவை (வேத கால ரிஷி)

 

 

கருடன் சின்னத்தை உபயோ கித்தவர்கள், எப்பொழுதுமே நாகர்களுக்கு எதிராக இருந்தனர். உலகம் முழுதும் மெக்ஸிகோ நாட்டு கொடி முதல் பல சின்னங்களில் இதை இன்றும் காணலாம்.

 

மஹாபாரத, ராமா யண காலத்திலேயே தேர்களில் கொடிகளுடன் சென்ற இந்துக்கள்தான் உலகில் சின்னங்கள், கொடிகள்  முதலியவற்றைத்  தோற்றுவித்தவர்கள். இது பற்றியும் முன்னரே ஒரு ஆராய்ச்சி க் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

 

இப்போது பழங்குடி இனமக்களிடையே புழங்கும் ஜாதி/மரபுச் TOTEM SYMBOLS சின்னங்களைக் காண்போம்:–

 

ஒராவன் இன மக்கள்

டிர்கி- இளம் சுண்டெலி

எக்கா- ஆமை

கிஸ்போட்டா – பன்றி

லக்னா – கழுதைப் புலி

பாக் – புலி (மூலம் :- வ்யாக்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்)

குஜ்ரார்வ்யா- எண்ணை

ஜெடி-வாத்து

கொய்பா- காட்டு/ மரநாய்

மீஞ்சி – விலாங்கு மீன் ( மூலம் – மீனம்)

சிர்ரா- அணில்

 

ஒரு பழங்குடி இனத்திலேயே எத்தனை பிரிவுகள், எத்தனை சின்னங்கள் பாருங்கள்!

 

யாருக்கு எது சின்னமோ அதை அவர்கள் புனிதமாகக் கருதுவர்; அதை சாப்பிடவும் மாட்டார்கள்!

tribe 17

 

((இந்தப்படம் நாகா இன மக்க்ள் படம்; மணிப்புரி, குல்கி இன மக்கள் பேசும் மொழியுடன் தொடர்புடைய மொழி பேசுவர்.))

 

சாந்தல்  இன மக்கள்

எர்கோ – எலி

முர்மு – மான்

ஹம்ஸ்டா – குள்ள வாத்து (ஹம்சம் – அன்னம்_

மாவ்டி – புல்

பெஸ்ரா – கழுகு

ஹெம்ரோன் – வெற்றிலை

சாரென் – கார்த்திகை நட்சத்திரம் (மூலம்- சரவண)

சங்க – சங்கு ( சம்ஸ்கிருதம்)

குவா – பாக்கு

கரா – எருமை

 

இதில் பல சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதையும் பல சொற்கள் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து வந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

 

இந்தியாவில் ஒரே மொழிக்குடும்பம்தான், அதிலிருந்தே சம்ஸ்கிருதமும், பின்னர் தமிழும் வந்தன என்பதும், உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் இவ்விரு மொழிகளே தாய்-தந்தை என்பதையும் என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மெய்ப்பித்துள்ளேன்.

 

 

பூம்ஜி இன மக்கள்

 

சால்ரிசி- சால் வகை மீன்

ஹன்ஸ்டா – வாத்து (க்ஹம்ச)

லெங் – காளான்

சாண்டில்ய -ப்றவை (வேத கால ரிஷி)

ஹொம்ரோன் – வெற்றிலை

துமரங் – பூசனி

நாக் – பாம்பு (நாக)

 

மஹிலி இனம்

துங்ரி – அத்திப் பழம்

டுரு – டுரு புல்

காந்தி – பிராணியின் காது

ஹம்ஸ்டா – வாத்து

முர்மு – மான்

 

இந்த இனத்தின் பிராணிகளின், தாவரங்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத் தொடர்புடையவை.

 

கோரா இன மக்கள்

காஸ்யப் – ஆமை (காஸ்யப ரிஷியின் பெயர்)

சௌலா – சால் மீன்

கசிபக் – கொக்கு

ஹம்ஸ்டா – ஹம்ச

புட்கு – பன்றி

சாம்பு – காளை

 

கூர்மி இன மக்கள்

கேசரியா – கேசரி புல்

டரார் – எருமை

டுமுரியா- அத்தி

சஞ்ச்முகுரார் – சிலந்தி

ஹஸ்டோவர்- ஆமை

ஜல்பனுவார் – வலை

சங்கோவர் – சங்கு

கதியார்- பட்டுத்துணி

பாக்பௌவார்- புலி

 

இப்படி ஒவ்வொரு இனத்திலும் பல குழுக்கள்; அவர்களுக்கு பல பிராணிகள், தாவரங்கள் மரபுச் சின்னங்கள். அவர்களுடைய பெயர்களில் பல சம்ஸ்கிருத மூலச் சொற்களின் திரிபு!

 

ஏன் இவ்வளவு இனம்? ஏன் இவ்வளவு உட்பிரிவு? இதற்கெல்லாம் வெளிநாட்டுக் காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் பல சம்ஸ்க்ருதப் பெயர்கள்?  ஒருவேளை உள்நாட்டு மக்களுடன் தொடர்பு ஏற்பட்டு மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சப்பைக் கட்டு கட்டுவர் வெளிநாட்டார். அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை — என்ற கதைதான்.

 

இந்தப் படத்தில் காட்டிய ஒவ்வொரு பழங்குடி இன மக்களுக்கும் ஒரு சிறப்பியல்பு, பழக்க வழக்கம் இருக்கிறது. இந்த வேறுபாடுகள் எப்படி வந்தன? எல்லா வற்றிலும் ஆரிய- திராவிட இனவெறியைப் புகுத்தும் வெளிநாட்டினர், இந்த விஷயத்தில் பேந்தப் பேந்த முழிக்கின்றனர்.

 

–தொடரும்

 

 

அவன் யார் தெரியுமா?

q mark

Article Written S NAGARAJAN
Date: 15 July 2016
Post No. 2972
Time uploaded in London :– 5-48 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அவன் யார்? – 1
ச.நாகராஜன்
அவன் பெயர் சங்கரன்.  ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். தந்தையும் தாயும் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்கள். பயபக்தியுடன் நெறியுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுள் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது.
இள வயதில் ஒரு நாள் கனவு ஒன்று அவனுக்கு வந்தது. அதில் அருகிலிருந்த சிவன் கோவிலிலிருந்து பிரகாசமான ஒளி ஒன்று தோன்றி அவனை நோக்கி வந்து அவனைச் சுற்றி வளைத்தது போல காட்சி ஒன்றைக் கண்டான்.
அருகில் இருந்த ஒல்லூரில் உயர்நிலலப் பள்ளியில் அவன் படித்து வந்தான்.
அவனுக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் அவனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.
நல்ல மழை. ஆற்றின் மறு க்ரையில் வைத்திய்ர் இருந்தார். ந்தியில் படகைச் செலுத்திப் போக வேண்டும். யாராவது தன்னுடன் துணைக்கு வருவதாக இருந்தால் படகைச் செலுத்தத் த்யார் என்றார் வீட்டிலிருந்த சமையல்காரர்.
சங்கரன் உடனே முன் வந்தான். மாத்ரு பக்தி ஒரு பக்கம் என்றால் சாகஸ செயல்களைச் செய்ய வேண்டும் என்ற இயல்பான துடிப்பு இன்னொரு பக்கம்.
பின்னாளில் அவன் வாழ்க்கையில் சாதித்த எல்லா காரியங்களுக்கும் அடிப்படையாக் இந்த சாகஸ துணிச்சல் அமைந்தது.
திருச்சூர் நூலகத்தில் ஒரு நாள் நண்பன் ஒருவன் அவனிடம் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாயா என்று கேட்டான்.
அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி காஸ்பல் ஆஃப் ஸ்ரீ ராமகிருஷ்ணா’
ஆவலுடன் அதைக் கையில் எடுத்த சங்கரன் அதில் நூறு பக்கங்களைப் படித்து முடித்த பிறகே கீழே வைத்தான்.
அந்தப் புத்தகம் அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

q uestion mark 2
ராமகிருஷ்ணர் மீது அளவிலா பக்தி அவனுக்கு ஏற்பட்டது. ராமகிருஷ்ண க்தாம்ருதத்தை வழங்கிய மாஸ்டர் மஹாசய (எம் என்று அழைக்கப்படுபவர்) மீதும் அவனுக்கு பக்தி ஏற்பட்டது.

1924ஆம் வருடம். அவனுக்கு பதினைந்தரை வயது தான்.
ஆனால் உலக வாழ்க்கையைத் துறந்து ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டுமென்ற முடிவான தீர்மானத்துக்கு அவன் வ்ந்து விட்டான்.
1926இல் பள்ளியில் இறுதித் தேர்வு முடிந்தது. டைப்ரைட்டிங்கும் ஷார்ட் ஹாண்டும் படிக்க திருச்சூர் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றில் அவன் சேர்ந்தான்.
அங்கிருந்து மதராஸ் ராமகிருஷ்ண மடத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அங்கு சேர வேண்டும் என்ற தன் விருப்பத்தை எழுதினான். பதில் வந்தது. மதராஸ் மடத்தில் இடம் இல்லை என்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மைசூர் மடத்தை அணுகலாம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சங்கரன் மடத்தில் சேர்ந்தானா? அந்த சங்கரன் யார்?
அடுத்த பகுதி வ்ரும் வரை பொறுத்திருங்கள்!
-தொடரும் .

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969)

stony-beach-resized

Written by London swaminathan

Date:14 July 2016

Post No. 2969

Time uploaded in London :– 6-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழில் ஒரு அருமையான பழமொழி இருக்கிறது. கடல் ஓய்ந்த பின்னர் சமுத்திரக்குளியலா? என்று.

 

நம்மில் பலரும் “திரு நாளைப்ப் போவார்” போல வாழ்கிறோம். நல்ல செயல்களை எல்லாம் ஒத்திப் போடுகிறோம். நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறோம். நாளை நம்முடைய முறையோ நமனுடைய (யமனுடைய) முறையோ என்பதை நாம் அறியோம்.

 

நாலடியார் என்னும் புத்தகம் பதினெண் கீழ்க்கணக்கு (18) நூல்களில் ஒன்று. அதில் ஒரு பாடல் இதோ:–

 

பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்குடன்

ஓசை அவிந்த பின் ஆடுதும் என்றாற்றால்

இற்செய் குறைவினை நீக்கி அறவினை

மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு  – நாலடியார்

 

இல் செய் குறவினை நீக்கி – குடும்பத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் செய்துவிட்டு,

 

மற்று அறவினை அறிவாம் என்றிருப்பார் மாண்பு – பின்னர் தர்ம காரியங்களைச் செய்வோம் என்று இருப்போரின் தன்மை,

 

பெருங்கடல் ஆடிய சென்றார்- கடலில் குளிக்கப்போனவன்

ஓசை ஒருங்கு உடன்  அவிந்த பின் ஆடுதும்  என்று அற்று – இந்தக் கடல் அலை ஓசை எல்லாம் நின்றபின் ஆடுவோம் என்று காதிருப்பவனைப் போன்றது..

 

ஒன்றே செய்க, அதுவும் இன்றே செய்க! , அதுவும் நன்றே செய்க!

bengali-blow

முந்தைய கட்டுரை:–

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com

கர்ம பலன்கள்: சித்திர குப்தன் கரன்சி (Post No.2969)

ram sharma book

Article Written S NAGARAJAN

Date: 14 July 2016

Post No. 2969

Time uploaded in London :– 6-20 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

இந்தக் கட்டுரையப் படிப்பதற்கு முன்னர் இதற்கு முந்தைய கட்டுரையான ‘கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கணக்கு!’ என்பதைப் படிக்கவும்.

 
கர்ம பலன்கள் : சித்திரகுப்தன் கரன்ஸி!
ச,நாகராஜன்

 
சித்திரகுப்தன் கணக்கு சற்று வேறு விதமாக வேலை செய்யும் ஒன்று.
அங்கு ஒரு செயல் எந்த நோக்கத்தில் (Motive) செய்யப்படுகிறது, அதில் உணர்ச்சிபூர்வமான அளவு எப்படி இருக்கிறது (Degree of emotional involvement) என்பதை வைத்தே நீதி வழங்கப்படுகிறது.
இக உலகத்தில் ஒரு ஏழை நல்ல காரியம் ஒன்றிற்கு ஒரு ரூபாயை தான் கடினமாக உழைத்த பணத்திலிருந்து மனமுவந்து கொடுக்கிறார்.
இன்னொரு பெரும் பணக்காரரோ லட்சம் ரூபாய் கொடுத்து அப்படிக் கொடுத்ததை நன்கு விளம்பரம் செய்யச் சொல்கிறார், தானும் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
உலக நியதிப்படி அவர் பெரும் புகழை அடைகிறார். புண்ணியவான், தர்மஸ்தர் என்ற பெயர் அவருக்கு தரப்படுகிறது – பணத்தின் அளவை வைத்து! பணத்தின் மகிமையே மகிமை!
ஆனால் சித்திரகுப்தன் கணக்கில் ஏழையின் மனோபாவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அங்கு அவன் தந்த ஒரு ரூபாய் பொருட்படுத்தப்படுவதில்லை. பணக்காரனின் விளம்பர மனப்பான்மையே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவனது லட்ச ரூபாய் பணம் அல்ல!
நாகரிகம் அதிகம் இல்லாத மலைப் பிரதேசங்களில் மக்கள் ஒரு தானியத்தைக் கொடுத்து இன்னொரு தேவையான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். சற்று நாகரிகம் உள்ள நகரங்களில் பணத்தைக் கொடுத்துப் பெயரும் புகழும் பெறுகின்றனர். தேவையானதை வாங்குகின்றனர். விளம்பரத்துக்கு உதவும் நல்ல பட்டங்கள், மற்றும் விருதுகளைக் கூட அவர்கள் “வாங்குகின்றனர்”.
ஆனால் இந்த கரன்ஸியெல்லாம் சித்திரகுப்தன் கணக்கில் இல்லை. அங்கு இந்த கரன்ஸி செல்லுபடியாகாது.
ஒருவனின் அடிப்படை நோக்கம். அதில் அவனது ஈடுபாடு (தன்னலமற்றதா அல்லது உள்நோக்கம் ஒன்றுடன் செயல்படுத்தப் படுகிறதா) என்பதே அங்குள்ள கரன்ஸியாகும்.
கீதையைப் பற்றிய அடிப்படையான சந்தேகம் ஒன்று அனைவருக்கும் எழும்.
அர்ஜுனன் ஆயிரக்கணக்கான பேர்களை பாரத யுத்தத்தில் கொல்கிறான். அதற்கு அவனை கண்ணபிரான் ஊக்குவிக்கிறான்.
அதே போல துரியோதனனும் பல்லாயிரக்கணக்கான பேர்களை அழிக்கிறான். அவனுடன் பெரிய வீரர்கள் போர் புரிகின்றனர். அவனுக்கு உதவுகின்றனர்.
அர்ஜுனன் சொர்க்கத்திற்குச் செல்ல அவனை எதிர்த்தோர் நரகத்திற்குச் செல்கின்றனர்.
ஏன் இப்படி? செயல் ஒன்று தான் (கொலை செய்வது) என்றாலும் அடிப்படை நோக்கம் என்ன?
அர்ஜுனன தர்மத்தைக் காக்கப் போரிடுகிறான். துரியன் அதர்மத்துடன் செயல் படுகிறான்.
ஆகவே அழிந்து படுகிறான்.
சுலபமான கணக்கு. தர்மத்தைக் காக்க கண்ணன் அவதாரம் எடுக்கிறான். அதர்மத்தை அழிக்கிறான்.
ஆக சித்திரகுப்தனின் கணக்கும் அதில் அவன் எந்த கரன்ஸிக்கு மதிப்புக் கொடுக்கிறான் என்பதும் இதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
சித்திர குப்தனின் கணக்கு தெய்வீகக் கணக்கு!

sriram sharma stamp sanskrit
அதை ஸ்ரீ ராம் சர்மா ஆசார்யர் அற்புதமாக மேற்கண்ட விதமாக விளக்குகிறார்.
சூட்சுமமான தர்மத்தை நமது அற நூல்கள் நுட்பமாக விளக்குகின்றன.
அதைப் பயிலுவதும் போற்றுவதும், அதன் படி நடப்பதும் நமது கடமை!
***********