Avestan- Sanskrit Relationship! Latest View (Post No.14,497)

Written by London Swaminathan

Post No. 14,497

Date uploaded in London –  10 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Avestan spoken in Iran/Persia long ago is dead. But Sanskrit is stil used from Kanyakumari to Kashmir. Parents names are in Sanskrit; Towns’ names are in Sanskrit. More Sanskrit words in Tamil dictionaries. 600 couplets of holy Tirukkural use Sanskrit words. No one in India can speak even for five minutes without a Sanskrit word.

Those who are interested must read two latest books on this subject:

1.Vedic and Indo -European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, Dehi 2015

2.Dictionary of Languages by Andrew Dalby, Bloomsbury, 1998.

I give below two matters from these books:

1

Eight words of closest human relations

Brother- bhratr in Sanskrit ; braataar in Avestan

Daughter -duhitr inS; dugdar in Av

Father – pitr in S; Pitar in Av

Husband – pati in S; patis in Av.

Mother – maatr in S; maataar in Av.

Sister – svasr in S; xanhar in Av.

So  – suunuin S; humus in Av.

(in Avestan no S; they use only H)

Wife/mistress – Patni in S; paothni in Av.

Page 157 of Nicholas’ book.

****

Only Sanskrit and Avestan have them all; Hittite has none.  So Hittite is not closer to Sanskrit . Greek and German have a few common words.

2

Avestan has literature from630 BCE; but Sanskrit haas literature from 2000 BCE according to Professor Wilson and others; Wilson translated the Rig Veda before others. Moreover Sanskrit words are in epigraphs from 1400 BCE (see Mitanni Civilization in all encyclopaedias)

Following is the Story of Avestan language.

Extinct language of Iran

He sacred language of the Zoroastrian religion is known only from a single body of texts, the Avesta, with  an adventurous history.

According to a late source Zarathustra  promulgated his religion 300 years before the invasion of alexander- thus around 630 BCE. It soon received royal status , for the Persian emperor Darius I(550-486 BCE) and his successors are Zoroastrians.

Legends claimed that a vast body of sacred texts was written down at this early period; two copies existed, one of which was burnt accidentally  while Alexander destroyed the other. Some centuries after this first disaster  a Parthian king , vologeses, ordered all that could e found of the old sacred books to be collected; later still, around the 5th century, the Sassanian monarchs  had a new edition made. The Islamic conquest of Persia ed to fresh destruction, after which, once again, surviving fragments had to be pieced together.

Independently of these historical snippets we know that the surviving manuscripts of the Avesta texts are late and obviously incomplete. And we know the origin of the unique alphabet in which the avesta is traditionally written; it is an enlargement of the kind of Aramaic  alphabet used in Sassanid times. Finally, we know that the language of the older texts is much older than that- much nearer to proto -Iranian, ancestor of all Iranian languages. As we have them, the texts are accompanied by a translation and commentary, the Zend in middle Persian of the Sassanian period. By that time the real meaning was half forgotten. Even if we cannot always understand the Avesta ourselves , we can tell those Sassanian translations are, all too often completely wrong!

Attempts to pin down the Avestan language geographically have not yet succeeded. It was not the language of the Persians of the empire, for that was old Persian. It seems to have features of several of the Iranian dialects. No doubt the original language will have been altered, repeatedly, in the cours Parsees of  oral transmission until, perhaps quite late in their history, the texts were fixed in writing.

There are modern Zoroastrian communities still surviving in the Iranian cities of Yazd and Kerman. A thriving Zoroastrian colony, the Parsees, has spread from its early centre of Bombay to other cities of the west coast of India to east Africa and to many parts of the world and to many parts of the world. To all these  the Avesta, in its mysterious original language, is still a holy book. Modern Parsees say their household prayers in Avestan, in words they understand through traditional Gujarati translations and commentaries.

The first ten numerals in Avestan are aivas, duvaa, rayas, catvaaras, panca, xsvas, hapta, asta, nava, dasa.

Source book – 2.Dictionary of Languages by Andrew Dalby, Bloomsbury, 1998.

(any Sanskrit student will understand it)

MY OLD ARTICLES ON THIS TOPIC


Avestan


Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › avestan

9 Feb 2022 — Avestan is considered one of the world’s oldest languages. Now we have only Zoroastrian scriptures in it. Later it influenced Pahlavi, Persian, Pashto, Darik …

Vedic-Zend Avesta


Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › vedic-zend-avesta

19 Apr 2017 — There is grammatic similarity in the language of the Vedas and the Avesta. 4.The corruption of Sanskrit words has followed a particular pattern.

Sanskrit


Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

Though Avestan is listed as an extinct language, modern research shows that there are more Sanskrit words, (see my Hindu Gods in Zend Avesta) in it.

Hindu Gods in Zend Avesta (Parsi Scripture)- Part 1


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2022/02/07 › hindu-gods-i…

7 Feb 2022 — Zend Avesta is the religious scripture of Zoroastrian or Parsi (Paresee) religion. It is in Avestan language, sister language of Sanskrit.

Avesta


Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › avesta

30 Jan 2022 — Bhagavata Purana gives a list of 22 Avatars of Vishnu and the last two are Buddha and Kalki. Great Sanskrit poet Jayadeva of tenth century in …

Hindu Gods in Zend Avesta-4 (Post No.10647)


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2022/02/10 › hindu-gods-i…

10 Feb 2022 — Avestan is an ancient language, used only in the Zend Avesta. The book has many Sanskrit words. xxx. Nabhanethista. Nabhanethista is the son of …

Tagged with Zend Avesta


Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › zend-avesta

“Let us look at the close connection between the Vedas and Zend Avesta. The most striking feature is the use of the names Asura and Deva. Asura is Ahura in the …

–subham—

Tags- Avestan, Sanskrit ,Relationship, Nicholas Kazanas, story of Avestan, Parsees, Persian, Iran, Zoroaster, Zend Avesta

Pictures of 2500 Indian Stamps!- Part 34 (Post No.14,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,498

Date uploaded in London – –10 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 34

Stamps posted today include 1988 STAMPS,MOHAMMAS 1QBAL, SAMARTH RAMDAS, SWATI TIRUNAL, BHAURAO PATIL, PAINTING, RANI LAKSHMIBAI, HIMALAYAN PEAKS, NANDA DEVI, KANCHAN JUNGA, K2, BRAOD PEAK, CARE FOR ELDERS, VICTORIA TERMINUS,  LAWRENCE SCHOOL, KHEJRI TREE,  RANI DURGAWATI, DR Y S PARMAR, DURGADAS RATHORE, TILAK’S HISTORIC PROCLAMATION, ACHARYA SHANTI DEV, GOPINATH KAVIRAJ, HINDI DAY, I O A LOGO, GLORY OF SPORT, OLYMPIC, JERDON’S COURSER, BIRD,  BOMBAY GPO, MAULANA ABUL KALAM AZAD,  NEHRU PORTRAIT, BIRSA MUNDA, ERALY D L O CANCELLATION, RMS CANCELLATION, K M MUNSHI,  B G KHER ETC.,

 –subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 34, year 1988 , Stamps posted today include 1988 STAMPS,MOHAMMAS 1QBAL, SAMARTH RAMDAS, SWATI TIRUNAL, BHAURAO PATIL, PAINTING, RANI LAKSHMIBAI, HIMALAYAN PEAKS, NANDA DEVI, KANCHAN JUNGA, K2, BRAOD PEAK, CARE FOR ELDERS, VICTORIA TERMINUS,  LAWRENCE SCHOOL, KHEJRI TREE,  RANI DURGAWATI, DR Y S PARMAR, DURGADAS RATHORE, TILAK’S HISTORIC PROCLAMATION, ACHARYA SHANTI DEV, GOPINATH KAVIRAJ, HINDI DAY, I O A LOGO, GLORY OF SPORT, OLYMPIC, JERDON’S COURSER, BIRD,  BOMBAY GPO, MAULANA ABUL KALAM AZAD,  NEHRU PORTRAIT, BIRSA MUNDA, ERALY D L O CANCELLATION, RMS CANCELLATION, K M MUNSHI,  B G KHER ETC., TIMES OF INDIA, BANGALRE GPO.

ஷேக்ஸ்பியர் மீது தாகூர் எழுதிய கவிதை! (Post No.14,495)

Written by London Swaminathan

Post No. 14,495

Date uploaded in London –  10 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ஷேக்ஸ்பியர்  மீது, நோபல் பரிசுபெற்ற  ரவீந்திர நாத் தாகூர் Rabindranath Tagore (7th May 1861 – 1941)  ஒரு கவிதை இயற்றியது நிறைய பேருக்குத் தெரிந்திராது ; அந்தக் கவிதை ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டராட்போர்டு அபான் ஆவன் நகரில் பொறிக்கப்பட்டிருப்பதும் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. (London to Stratford-upon-avon;150 kilometres ) ஷேக்ஸ்பியர் பிறந்த இடம் லண்டனிலிருந்து நூறு மைல்களுக்கு சற்று அதிகம். மூன்று மணி நேரத்திற்குள் போய்விடலாம். அங்கு அவர் பிறந்த வீடு மற்றும் மியூசியம் உள்ளது; நுழைவுக் கட்டணம் உண்டு.

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் அங்கே தாகூர் சிலையும் இருக்கிறது; அவருக்கு சிலை வைப்பதற்கு காரணம் அவர் ஷேக்ஸ்பியர் மீது எழுதிய கவிதைதான். அந்தச் சிலையைத் தவிர லண்டனிலும் தாகூருக்கு ஒரு சிலை உள்ளது. மஹாத்மா காந்திக்கும் பல சிலைகள் உள்ளன. தமிழர்களைப் பொறுத்த மட்டில் திருவள்ளுவருக்கு லண்டன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சிலை இருக்கிறது .

ஷேக்ஸ்பியர் வீட்டின் தோட்டத்தில் தாகூர் சிலை உள்ளது அதன் கீழ் Rabindranath Tagore – Poet, Painter, Playwright, Thinker, Teacher – The Voice of India” எழுதப்பட்டுள்ளது ;

பொருள்

ரவீந்திர நாத் தாகூர் – கவிஞர், ஓவியர், நாடக ஆசிரியர், சிந்தனைச் சிற்பி, ஆசிரியர் ;இந்தியாவின் குரல் –

இந்தச் சிலையின் பின்னல் ஒரு கதை உள்ளது . டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் ஷேக்ஸ்பியர் நூலகம் உள்ளது ஷேக்ஸ்பியரின் 400-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 1964-ம் ஆண்டு நடந்தது; அப்போது கல்கத்தா ஆர்ட் சொசைட்டி- கலைச்சங்கம்- ஷேக்ஸ்பியர் மீது தாகூர் எழுதிய கவிதையை தந்ததினாலான பலகையில் எழுதி அன்பளிப்பாகக் கொடுத்தது.

முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த நூலகத்துக்கு வந்த பிரிட்டனில் உள்ள இந்திய தூத்ர் டாக்டர் சிங்வி அதைப்பார்த்தார் பிரிட்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தில் இந்தக் கவிதை இருப்பது சாலப்பொருத்தம் என்று எண்ணி முயற்சிகளை எடுத்தார். அதன் விளைவாக மேற்குவங்க அரசு மார்பளவுள்ள ஒரு வெண்கலச் சிலையைச் செய்து (A bronze bust of a head and shoulders, created by Calcutta sculptor Debabrata Chakraborty) பிரிட்டனுக்கு அனுப்பியது. அதில் கவிதையும்  உளது  அதுதான் இபோது ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தை அலங்கரிக்கிறது  ஷேக்ஸ்பியர்,  தாகூர் ஆகிய இருவரும் உலகறிந்த புலவர்கள், நாடக ஆசிரியர்கள் ; இதை விட வேறு என்ன பொருத்தம் வேண்டும்?

தாகூர் தனது கவிதையை வங்காளி மொழியில் பிஸ்வ கோபி (விஸ்வ கவி) உலக மஹா கவியே என்று துவங்குகிறார்.

தாகூர் எழுதிய வங்காள மொழிக்  கவிதையை அவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்; இதோ அந்த ஆங்கிலக் கவிதை:

Tagore’s poem dedicated to Shakespeare in 1916

When by the far-away sea your fiery disk appeared from behind the unseen, O Poet, O Sun.

England’s horizon felt you near her breast, and took you to be her own.

She kissed your forehead, caught you in the arms of her forest branches.

Hid you behind her mist mantle and watched you in the green sward where fairies love to play among the meadow flowers.

A few early birds sang your hymn of praise, while the rest of the woodland choir were asleep.

Then at the silent beckoning of the Eternal you rose higher and higher till you reached the mid sky, making all quarters of heaven your own.

Therefore, at this moment, after the end of centuries, the palm groves by the Indian sea raise their tremulous branches to the sky murmuring your praise.’

On Monday 9 May, 2022 Dr Shashank Vikram, Consul General of India, Birmingham, paid homage to Tagore on his birth anniversary by laying a beautiful flower garland at his bust in the Birthplace garden. 

****

A bust of Rabindranath Tagore, a gift from India, was presented to the Shakespeare Birthplace Trust in Stratford-upon-Avon, UK, in 1995. It is now located in the Birthplace garden and is a testament to the connection between the two iconic figures. The bust was crafted by Debabrata Chakraborty and is displayed on a plinth designed by William Hawkes and engraved with Tagore’s poem to Shakespeare.

தாகூருக்கு ஷேக்ஸ்பியர் எழுதிய கவிதைகள் நாடகங்கள் மிகவும் பிடிக்கும். தாகூரோவெனில் கதை கட்டுரை, கவிதை , நாடகம் எழுதல் ஓவியம் வரைதல்,மொழிபெயர்த்தல்   முதலிய எல்லாம் அறிந்த சகல கலா வல்லுநர் ; அவர் இயற்றிய கீதாஞ்சலி நூலுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

தாகூர் எழுதிய ஒரு கவிதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்; ஏனெனில் பாட புஸ்தகங்களில் அது இருக்கிறது; அதே போல அவர் எழுதிய இந்திய தேசீய கீதமும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

“Where the mind is without fear” and “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে” Where The Mind Is Without Fear எல்லோரும் அறிந்ததே

Where the mind is without fear and the head is held high
Where knowledge is free
Where the world has not been broken up into fragments
By narrow domestic walls
Where words come out from the depth of truth
Where tireless striving stretches its arms towards perfection
Where the clear stream of reason has not lost its way
Into the dreary desert sand of dead habit
Where the mind is led forward by thee
Into ever-widening thought and action
Into that heaven of freedom, my Father, let my country awake.

பொருள்

சுருக்கமான பொருள் என்னவென்றால் அச்சமு, அடக்குமுறையும், அறியாமையும் இல்லாத ஒரு உலகம் உருவாக்க வேண்டும். மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். விவேகத்துடன் சிந்திக்க வேண்டும் அத்தகைய சுதந்திர , முற்போக்குடைய, ஒன்றுபட்ட இந்தியாவை இறைவன் நமக்கு அருள்வானாக எல்லோருக்கும் அறிவு கிடைத்து, சத்தியம் தழைத்து ஓங்கட்டும் . எல்லா செயல்களையும் நல்ல சிந்தனை வழிநடத்திச் செல்லட்டும் .

பேஸ்புக்கில் ஒரு மொழிபெயர்ப்பையும் கண்டேன் ; இதோ அந்த மொழிபெயர்ப்பு :-

அச்சம் துறந்த மனம், சிரம் நிமிர்ந்த பார்வை, எடுக்குமோ இப்பிறவி?விலையிலா  ஞானம், காணுமோ இவ்வுலகம்?

யாதும் ஊரே யாவரும் கேளிர், முழங்குமோ நம் உலகம்?உண்மையின் ஆழம், உரைக்குமோ நம் வாய்மை?

சோர்வில்லாத உழைப்பு, விளைந்திடுமோ  பெருவிளைச்சல்?பகுத்தறிவு எனும் தெழிந்த நீரோடை ஓடாதோ பயனற்ற பழைமை எனும்  பாலைமணல் வழி.?

இறை நல்வழி நடத்தி, மனம் செல்லுமோ நினைவும் ஆக்கமும் ஒடுங்கா உயரம் வான் விரியும் பறவையாய்.

என் இறையே தருவாய் எம் மக்கள்  கானா நல் விடியலை.

****

லண்டனில் தாகூர் சிலை


லண்டனில் பல்கலைக்கழகத்துக்கு மிக அருகில் உள்ள கார்ட்டன் ஸ்கொயரில் WC1, GORDON SQUARE, GARDEN இன்னும் ஒரு தாகூர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதை பிரின்ஸ் சார்லஸ் (இப்போது மன்னர் சார்லஸ்) – 2011 ஆம் ஆண்டு (Unveiled by HRH The Prince of Wales, 7 July 2011) .திறந்துவைத்தார் இதிலும் தாகூரின் கவிதை உள்ளது சிலையை வடிவமைத்தவர் (Sculpted by Shenda Amery. Installed by the Tagore Centre UK.) செண்டா அமெரி.

அதிலுள்ள தாகூரின் கவிதை:-
Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresher life.
This little flute of a reed thou hast carried over hills and dales and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands my little heart loses its limits in a great joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass and still thou pourist and still there is room to fill.
–Rabindranath Tagore


தாகூரின் பிறந்த நாள் மேற்கு வங்கத்தில் கொண்டாடப்படுவதை போலவே லண்டனிலும் ஆண்டுதோறும் ( 7 May ) கொண்டாடப்படுகிறது . இது போல பாரதியார். வள்ளுவர் நாட்களையும் கொண்டாடுவது தமிழர்தம் கடமை.

–subham—

Tags- ஷேக்ஸ்ப்பியர்  ,தாகூர் கவிதை, லண்டன், ஸ்டராட்போர்ட் அபான் ஏவன் , பிறந்த ஊர்

காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமா, சார்?!! (Post No.14,494)

Hugh Everett III

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,494

Date uploaded in London – –10 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

அறிவியல் அதிசயம்!

காலத்தை ஊடுருவி ஒரு பயணம் போகலாமாசார்?!! 

ச. நாகராஜன்

View of LHC Acclerator

 சுவையாகவும் இருக்க வேண்டும், மர்மமாகவும் இருக்க வேண்டும், அறிவியல் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா என்றால் முடியும் என்றே பதில் சொல்லலாம். 

விஷயம் காலப் பயணம்!

இறந்த காலத்திற்குப் பயணம் செய்வது பற்றிய விஷயம் சுவையானது. ஏராளமான விஞ்ஞானிகளை இது ஈர்த்து தங்கள் காலம் முழுவதையும் இதை ஆராய வைத்துள்ளது. ஆனால் இதன் மர்மம் இன்றும் தொடர்கிறது.

டைம் மெஷின் ஒன்றை உருவாக்கி அதில் ஏறி இறந்த காலத்திற்குச் செல்ல முடியும் என்று சொல்லும் விஞ்ஞானிகளைப் பார்த்து விஞ்ஞானிகளில் இன்னொரு பிரிவினர், நகைத்து, இறந்த காலப் பயணம் என்பது நடக்கவே நடக்க முடியாத ஒன்று என்பதற்கான காரணத்தை முன் வைக்கின்றனர்.

இதற்கு க்ராண்ட் மதர் பாரடக்ஸ் என்று பெயர். பாட்டி முரண்பாடு என்று சொல்லப்படும் இது முன் வைக்கும் வாதம் என்ன?

ஒரு வேளை நீங்கள் இறந்த காலத்திற்குப் பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்று உங்கள் பாட்டியைப் பார்த்து அவர் இளமையாக இருக்கும் போது அவரை ஒரு துப்பாக்கியால் சுட்டு விட்டால் அவருக்கு வாரிசு உருவாவது எப்படி? நீங்கள் பிறப்பது தான் எப்படி என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம்.

இன்னொரு வாதம் இது: ஒருவன் காலத்தில் பின்னோக்கிப் பயணித்து தன் பெற்றோரை அவன் சுட்டு விட்டான் என்றால் அவன் பிறப்பது தான் எப்படி?

இதற்கு பதிலை தர்க்கரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் காலப் பயணம் சாத்தியம் தான் என்று கூறும் விஞ்ஞானிகள் தந்துள்ளனர்.

அதாவது நாம்  இருக்கும் பிரபஞ்சம் என்பது ஒரே ஒரு பிரபஞ்சம் மட்டும் இல்லை; நாம் பல்வேறு பிரபஞ்சங்களில் வாழ்கிறோம் என்கின்றனர் அவர்கள்.

மல்டி யுனிவர்ஸ் என்று இதை ஆங்கிலத்தில் கூறுகிறோம்.

பாரலல் யுனிவர்ஸ் என்ற இணை உலகம் பற்றி, அமெரிக்க விஞ்ஞானியான    ஹ்யூ எவரெட் (Hugh Everett III) தன் கருத்தைக் கூறினார். (பிறப்பு 11-11-1930 மரணம் 19-7-1982)

அதாவது நாம் அனைவரும் இறக்கவில்லை; இன்னொரு பிரபஞ்சத்திலும் வாழ்கிறோம் என்றார் அவர்.

அவரது இந்தக் கருத்தை அனைவரும் எள்ளி நகையாடி அவரை ஒதுக்கவே மனம் நொந்த அவர் நாஸாவில் டிசைன் பிரிவில் டிசைன் எஞ்சினியராகப் பணியாற்றத் தொடங்கினார். இறந்தும் விட்டார். 

ஆனால் பின்னால் வந்த விஞ்ஞானிகள் இதைப் பற்றி நன்கு ஆராயவே அதற்குள் இருக்கும் உண்மையைக் கண்டு அவரது வீட்டிற்கு வந்து அவரது மகனைச் சந்தித்தனர்.

 எவரெட்டின் குறிப்புகள் இருந்த பழைய பெட்டியைத் திறந்து குறிப்புகளைப் படித்தனர்.

இது மிகப் பெரும் விஷயமாக ஆகி காலப் பயணம் செய்வது எப்படி, இன்னொரு இணை உலகம் எங்கே எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ரொனால்ட் எல். மாலெட் என்ற விஞ்ஞானி காலப் பயணம் சாத்தியமே என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.

யூரோபியன் ஆர்கனைசேஷன் ஃபார் ந்யூக்ளியர் ரிஸர்ச் என்ற நிறுவனத்தை சி இ ஆர் என் என அழைக்கின்றனர். ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவாவில் இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. பார்டிகிள் பிஸிக்ஸிற்கான உலகிலேயே பெரிய லாபரட்டரி – சோதனைச் சாலை இங்கு தான் உள்ளது.

இங்கு. காலப் பயணத்தை சாத்தியமாக்குவது குறித்த ஆராய்ச்சி நடைபெறு வருகிறது. இதற்காக ரகசிய டன்னல் அல்லது குகை ஒன்றை அமைத்துள்ளனர். 27 கிலோ மீட்டர் நீளமுள்ள இதன் பெயர் எல் ஹெச் சி டன்னல்! (L H C Tunnel)

இங்கு நடைபெறும் விசித்திர சோதனைகளில் ஒன்றில் ஒரு பார்ட்டிகிள் (அணுத்துகள்) ஒளியின் வேகத்தில் அனுப்பப்பட்டு வெற்றிகரமாகப் புறப்பட்ட இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது! அதாவது காலப்பயணம் என்ற பிரம்மாண்டமான முயற்சிக்கு ஆரம்ப சோதனை கடுகளவில் நடத்தப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.

வார்ப் டிரைவ் உள்ளிட்ட பல உத்திகள் இப்போது ஆய்வில் வெற்றியின் ஆரம்பச் சுவடுகளைக் காண்பிக்கின்றன!

இனி வரும் அறிவியல் யுகத்தில் காலப் பயணம் மற்றும் இணை உலகம் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்று பிரமிக்கப் போகிறோம்/

எதிர் கால வாரிசுகளே, தயாராகுங்கள், , காலப் பயணத்திற்கு!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 33 (Post No.14,493)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,430

Date uploaded in London – –9 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 33

Stamps posted today include 1988 STAMPS,

FREEDOM FIGHTERS, TIGER, CHANDRA SEKAR AZAD, DADHICHI, VEER SAVARKAR, RAMESHWARI NEHRU, RUKMINI DEVI, DANCE, INDO USSR FESTIVAL, MECHANISED INFANTRY,SNOW LEOPARD, FATHER KURIAKOSE, MA MUTHIAH CHETTIYAR, VEER NARAYAN SINGH, ANUGRAH NARAYANSINGH, G B PANT, KULADHOR CHALIHA, U TIROT SINGH, KUMAON REGIMENT, B N RAU, BAL GANDHARVA, RANI AVANTIBHAI, MALAYALA MANORAMA, G V GUNDAPPA, MOHINDRA COLLEGE IN PATIALA, DR HIRA LAL, MOHANLAL SUKADIA, ASIAN PACIFC DENTAL CONGRESS, SHIVPRASAD GUPTA, SARAT CHANDRAA BOSE, BABA KHARAK SINGH, DR S K SINHA, SHEIKH ABDULLA, SRI HARMANDIR SAHEB, INDIAN SCIENCE CONGRESS etc.,

–subham—

Tags– FREEDOM FIGHTERS, TIGER, CHANDRA SEKAR AZAD, DADHICHI, VEER SAVARKAR, RAMESHWARI NEHRU, RUKMINI DEVI, DANCE, INDO USSR FESTIVAL, MECHANISED INFANTRY,SNOW LEOPARD, FATHER KURIAKOSE, MA MUTHIAH CHETTIYAR, VEER NARAYAN SINGH, ANUGRAH NARAYANSINGH, G B PANT, KULADHOR CHALIHA, U TIROT SINGH, KUMAON REGIMENT, B N RAU, BAL GANDHARVA, RANI AVANTIBHAI, MALAYALA MANORAMA, D V GUNDAPPA, MOHINDRA COLLEGE IN PATIALA, DR HIRA LAL, MOHANLAL SUKHADIA, ASIAN PACIFC DENTAL CONGRESS, SHIVPRASAD GUPTA, SARAT CHANDRAA BOSE, BABA KHARAK SINGH, DR S K SINHA, SHEIKH ABDULLA, SRI HARMANDIR SAHEB, INDIAN SCIENCE CONGRESS etc.,Pictures of 2500 Indian Stamps, Part 33 , year 1988 stamps

முகம் விளக்குவது நகை;புத்தியை விளக்குவது நூல்- குமரேச சதகம்-8 ( Post.14,492)

Written by London Swaminathan

Post No. 14,492

Date uploaded in London –  9 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை — எட்டு

 குருபாததாசர் இயற்றிய குமரேசர் சதகத்திலிருந்து மேலும் இரண்டு பாடல்களை எடுத்துக் கொள்வோம். அத்தனையும் சத்தான, முத்தான பொன்மொழிகள் ; எளிய தமிழில் பெரிய கருத்துக்கள்!

ராமனைக் காட்டுக்குப் போ என்று கைகேயி உத்தரவிட்டபோதும் அவன் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போல் இருந்ததாம். இதனால்தான் உலகம் இன்றுவரை ராமனைப் போற்றுகிறது; ராமாயணம் அழியாத காவியமாகத் திகழ்கிறது 

இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? – யாரும்

செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;

ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட

அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா!

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்; அதைப் பின்பற்றியவன், இதிஹாஸப் புருஷர்களில் ராமன் ஒருவனே;

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில் — குறள் 621

பொருள்

துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

அவனுக்கு அடுத்த படியாகத்தான் கிருஷ்ணனை வைக்கவேண்டும் ஏனெனில் கிருஷ்ணனின் சிரிப்பு விஷமச் சிரிப்பு; ராம பிரானின் சிறப்பு குழந்தைகள் சிரிக்கும் கள்ளமில்லாச் சிரிப்பு.

குருபாததாசர் முகத்துக்கு அழகு புன்னகை என்கிறார்.

பாட்டின் முழுப் பொருளையும் பார்த்துவிட்டு மேலும் சில  விளக்கங்களைக் காண்போம் :               

14. இதனை விளக்குவது இது

பகல்விளக் குவதிரவி, நிசிவிளக் குவதுமதி,

     பார்விளக் குவதுமேகம்,

பதிவிளக் குவதுபெண், குடிவிளக் குவதரசு,

     பரிவிளக் குவதுவேகம்,

இகல்விளக் குவதுவலி, நிறைவிளக் குவதுநலம்,

     இசைவிளக் குவதுசுதி, ஊர்

இடம்விளக் குவதுகுடி, உடல்விளக் குவதுண்டி

     இனிய சொல் விளக்குவது அருள்,

புகழ்விளக் குவதுகொடை, தவம்விளக் குவதறிவு,

     பூவிளக் குவதுவாசம்,

பொருள்விளக் குவதுதிரு, முகம்விளக் குவதுநகை

     புத்தியை விளக்குவது நூல்,

மகம்விளக் குவதுமறை, சொல்விளக் குவதுநிசம்,

     வாவியை விளக்குவதுநீர்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

பகற் பொழுதை விளக்குவது ஞாயிறு – இரவை ஒளிசெய்வது திங்கள்; நிலத்தைச் செழிப்பாக்குவது முகில்/cloud  wife ;

கணவனை விளக்கமுறச் செய்பவள் wife /பெண்ணாவாள்;

குடிகளைத் தெளிவுறக் காப்பவன் அரசனாவான்;

குதிரைக்கு விளக்கந்தருவது அதனுடைய விரைவு;

பகைமைக்கு விளக்கந் தருவது வலிமை;

ஒழுக்கம் விளக்குவது அழகு;

இசைக்கு இனிமை தருவது சுருதியெனும் இசைக்கருவி;

ஊரை அழகுறச் செய்வது குடிவளம்;

உடம்பை அழகு படுத்துவது உணவு;

இனிய சொல்லால் ஒளிபெறுவது அருள்;

புகழைப் பரப்புவது கொடுத்தலென்னும் பண்பு;

தவத்தைச் சிறப்புறக் காண்பிப்பது அறிவு;

மலரை விளக்குவது மணம்; செல்வத்தை

எடுத்துக்காட்டுவது செல்வரின் அழகு; (செல்வத்தை விளக்கமுறச் செய்வது திருமகளின் அருள் என்றுங் கூறலாம்.)

முகத்தை அழகாக்குவது மகிழ்ச்சி

அறிவையுண்டாக்குவது நூலைக் கற்றல்; வேள்வியை

ஒளிபெறச்செய்வது மறையோதுதல்: சொல்லுக்கழகு

உண்மை; பொய்கைக்கழகு நீர்   .

****

இடுக்கண் வருங்கால் நகுக

சிரிப்பு, புன்சிரிப்பு — ஆகிய இரண்டும் நல்ல பொருளிலும் ‘நகைப்பு’ என்பது கெட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இடத்தைப் பொறுத்தே வேறு பாடு வருகிறது.

வள்ளுவன் சொல்லுவதைக் கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமே. கஷ்டம் வரும்போது சிரியுங்கள் என்கிறார் வள்ளுவர்.

யாருக்கு கஷ்டம் வரும்போது? — என்று கேட்கத் தோன்றுகிறது. எனக்கோ என் குடும்பத்தினருக்கோ கஷ்டம் வந்தால் நான் சிரிக்க முடியுமா?

எனது எதிரிக்கு கஷ்டம் வந்தால் வேண்டுமானால் சிரிக்கத்தோன்றும்.

வீட்டிலோ, வெளியிலோ யாராவது வாழைப்பழத் தோலியில் சறுக்கி விழுந்தால் சிரிப்பு வரும்.

பொது மேடையில் யாருக்கேனும் ஆடை நழுவி விழுந்தால் சிரிப்பு வரும். இதே கஷ்டம் நமக்கு வந்தாலும் சிரியுங்கள் என்று வள்ளுவர் செப்புவார். அது அவரைப் போன்ற ரிஷிபுங்கவர், முனி புங்கவருக்குதான் சாத்தியம்

சிரிப்பு பற்றி வள்ளுவன் கூறும் குறள்கள் நிறையவே உள்ளன:

நக -187, 685, 829, 1173, 999, 824, 621, 784, 774, , 1094, 1095, 817

நகப்படுவர் (இகழப்படுவர்) -927, 1140, 271, 1040

இவ்வாறு குறைந்தது 16 குறள்களில் சிரிப்பு, நகைப்பு பற்றிப் பாடி இருப்பதால் தமிழர் வாழ்வில் சிரிப்பு எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருந்தது என்பது தெரியும்.

சம்ஸ்கிருத நாடகங்கள் எல்லாவற்றிலும் (விதூஷகன்) நகைச் சுவை நடிகர் உண்டு. முதல் காட்சியே சூத்ரதாரர் மற்றும் நகைச் சுவை நடிகருடந்தான் தோன்றும்

நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் நிறைய நாடகங்கள் வெளியாயின. அவற்றிலும் கூட முதல் காட்சி விதூஷகனுடனேயே துவங்கும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகம் எழுதிய பாஷா, காளிதாசன், சூத்ரகன் ஆகியோர் எந்த அளவுக்கு நகைச் சுவைக்கு மதிப்பு கொடுத்தனர் என்பதைக் காணும் போது வள்ளுவன் ஏன் இப்படிப் பல குறள்களில் குரல் கொடுத்தான் என்பது தெள்ளிதின் விளங்கும்.

****

புஸ்தகம் ஹஸ்த லக்ஷணம்

சம்ஸ்கிருதத்தில் அழகான ஒரு பொன் மொழி—“கைக்கு அழகு புத்தகம்!”– ஒருவன் படிக்கும் புத்தகத்தைக் கொண்டு அவன் யார் என்பதைக் கணித்து விடலாம். யாரையாவது ஒருவரின் ‘பெர்சனாலிட்டி’ என்ன என்று தெரிய வேண்டுமா? நீங்கள் நேரடியாக அவரைக் கேட்டால் அது இங்கிதமாக இருக்காது. பேச்சு வாக்கில் நீங்கள் படித்த ஏதாவது சில புத்தகங்களின் பெயரைச் சொல்லிவிட்டு, “உங்களுக்கு இது பிடிக்குமா? நீங்கள் கடைசியாக என்ன படித்தீர்கள்?”– என்று கேளுங்கள். அவருடைய குணநலன்களைக் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வையார் சொல்கிறார்:

நீரளவே யாகுமாம் நீராம்பல் தன் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

புராதன உலகில் அதிகமான புத்தகங்கள் உடைய நாடு இந்தியா? காகிதத்தின் நடுவில் கி.மு 1000 என்று எழுதி ஒரு கோடு போடுங்கள்! அதற்கு மேலாக எழுத வேண்டுமானால் வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் மட்டுமே இருக்கும். இப்போது நாம் பயன்படுத்தும் எந்த மொழி நூலும் அங்கே காணமாட்டாது! பைபிளின் பழைய ஏற்பாடு, மோசஸின் பத்து கட்டளைகள் முதலியன எழுத்து வடிவு பெற்றது கி.மு 945! கிரேக்க மொழியில் ஹோமர் ‘ஆடிஸி’, ‘இலியட்’ காவியங்களை எழுதியது கி.மு 800 ல்!. தமிழ் என்னும் குழந்தை, லத்தீன் என்னும் குழந்தை அப்போது பிறக்கக்கூட இல்லை!

ஜில்காமேஷ் போன்ற சுமேரியப் பிதற்றல்கள்—இப்போது பயன்பாட்டில் இல்லை; அவை ‘புத்தகம்’ என்னும் இலக்கண வரையரைக்குள் வாரா!

****

உடம்பை அழகு படுத்துவது உணவு

You are What You Eat

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

 ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

மலரை விளக்குவது மணம்

வள்ளுவனும் மணம் வீசாத மலரை இகழ்கிறான்:

தாம் கற்ற நூற் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.— குறள் 650:

****

கணவனை விளக்கமுறச் செய்பவள் wife /பெண்ணாவாள்;

குடும்ப விளக்கு

காளிதாசனும், மனுவும், வியாசரும், சங்க இலக்கியப் புலவர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதை ஒப்பிட்டு மகிழ்வோம்:-

புறநானூற்றில் (314) புலவர் ஐயூர் முடவனார்,

மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்

முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை

பொருள்:- இல்லத்தில் ஒளிசெய்யும் விளக்கைப் போல் தன் மாண்பால் விளக்கத்தைச் செய்யும் ஒளியுடைய நெற்றியுடையவளுக்குக் கணவனும்

ஐங்குறுநூற்றில் புலவர் பேயனார்

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர்போல

மனைக்கு விளக்காயினள் மன்ற கனைப்பெயல்

பூப்பல அணிந்த வைப்பின்

புறவணி நாடன் புதல்வன் தாயே–

ஐங்குறுநூறு 405

பொருள்: விளக்கு தலைவன் மனைக்கும் அதன் கண் நின்று எரியும் செஞ்சுடர் தலைவிக்கும் உவமை ஆயின.

அகநானூற்றில் (184) புலவர் மதுரை மருதன் இளநாகனார

கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்

இனிது ஆகின்றால்; சிறக்க நின் ஆயுள்!

பொருள்:- தெய்வத்தனமை பொருந்திய கற்புடன் குடிக்கு விளக்கமான மகனைப் பெற்ற புகழ்மிக்க சிறப்பை உடைய தலைவிக்கே அன்றி எனக்கும் இனிமையைத் தருகின்றது.உன் ஆயுள் ஓங்குக (தீர்க்காயுஸ்மான் பவ:).

இதே கருத்துகளை சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனும், மனுவும், மஹாபாரத வியாசனும் செப்புவதைக் காண்போம்:-

மனுதர்ம ஸ்லோகம்

வீட்டிலுள்ள அதிர்ஷ்ட தேவதைகளுக்கும், குடும்பத்தின் விளக்குகளாக ஒளிரும் பெண்களுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. அவர்கள் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் புதல்வர்களைப் பெற்றுத் தருவதால் இறையருள் பெற்றவர்களாவர் — மனு 9-26

காளிதாசன் புகழுரை

ரகுவம்சத்தில் 8-38 பாடலில்  இந்தக் காலத் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியை  நினைவூட்டுகிறான் காளிதாசன்:

அஜன் என்ற மன்னனின் மனைவி இந்துமதி திடீரென்று மயங்கி விழுந்தாள். அவரது அருகில் இருந்த அஜனையும் அவள் விழ்த்தினாள். இந்துமதி உடனே இறந்தாள். இதை வருணிக்கும் காளிதாசன் கவிதையில், இந்துமதி விளக்கின் சுடருக்கும், அத்துடன் சொட்டிய எண்ணைத் துளி அஜனுக்கும் உவமிக்கப்பட்டன.

****

15. பிறப்பினால் மட்டும் நன்மையில்லை

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது

     தீஞ்சொல்புகல் குயிலாகுமோ?

திரையெறியும் வாவியிற் பூத்தாலு மேகொட்டி

     செங்கஞ்ச மலராகுமோ?

அங்கான கத்திற் பிறந்தாலும் முயலான

     தானையின் கன்றாகுமோ?

ஆண்மையா கியநல்ல குடியிற் பிறந்தாலும்

     அசடர்பெரி யோராவரோ?

சங்காடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான்

     சாலக்கி ராமமாமோ?

தடம்மேவு கடல்நீரி லேயுப்பு விளையினும்

     சாரசர்க் கரையாகுமோ?

மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு பதேசம்

     வைத்தமெய்ஞ் ஞானகுருவே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள் 

தூயதமிழை, அகத்திய முனிவருக்குக்

கற்பித்த உண்மையாசிரியனே!, மயிலேறி………..குமரேசனே! காகம் அழகிய மலர்ப் பொழிலிற் பிறந்தாலும் இனிமையாகக் கூவும் குயிலாய்விடுமோ?, கொட்டிமலர் அலைவீசும் பொய்கையிலே மலர்ந்தாலும் செந்தாமரை மலரைப்போற் சிறப்புறுமோ?, முயல் அழகிய காட்டிலே பிறந்தாலும் யானைக்கன்றைப்போல் மதிக்கப்படுமோ?,  பேதைகள், வீரம் பொருந்திய உயர்ந்த மரபிலே பிறந்தாலும் பெரியோராக நினைக்கப்படுவரோ?,  சங்குகள் உலாவும் பாற்கடலிலே தோன்றினாலும் நத்தையைச் சாலக்கிராமம்

என்பார்களோ  பரவிய கடலிலே உப்புத் தோன்றினாலும் இனிய சர்க்கரைபோல் இனிக்குமோ?

காகமும் குயிலும்

தமிழ்ப் புலவர் ஒருவரும் ஸம்ஸ்க்ருதப் புலவர் ஒருவரும் குயிலையும் காக்கையையும் வைத்து நமக்கு ஒரு நல்ல அறிவுரை வழங்குகிறார்கள் .

ஒருவருடைய தோற்றத்தை  அல்லது பிறந்த இடத்தை க் கண்டு அவரை எடை போடாதீர்கள்.

குயில்கள் ஒரு திருட்டுத் தனம் செய்கின்றன. முட்டைகளைக் காக்கையின் கூட்டில் விட்டுவிடும்; காக்கைகள் அவற்றைத் தன குஞ்சு போல அடைகாத்து குஞ்சு பொறிக்கும். இரண்டும் உருவத்தில்  ஒன்றாக இருக்கும்  வசந்த காலம் வருகையில் குயில்கள் கூவும்; காக்கைகள் கர்ணகடூரமாக கரையும்

 வாக்கு நயத்தாலன்றிக் கற்றவரை மற்றவரை

ஆக்கை நயத்தால் அறியலாகாதே – காக்கையொடு

நீலச் சிறுகுயிலை நீடிசையால் அன்றியே

கோலத் தறிவருமோ கூறு- –நீதி வெண்பா

பொருள்:-

காக்கையையும்   அதைப் போலவே கருநிறக் குயிலையும் இனிமை மிக்க இசைக்குரலால் அல்லாமல் உருவத்தினால் அவற்றின் பெருமையை அறியக்கூடுமோ, நீ சொல்! , அதைப் போலவே, படித்த பெரியவர்களையும், படிக்காத மற்றவர்களையும்,அவரவர்களின் பேச்சின் இனிமையினால் அல்லாமல், உடம்பு அழகினால் அறிய முடி இதைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் ஒரு பா உண்டு:-

காகஹ கிருஷ்ணஹ பிகஹ கிருஷ்ணஹ கோ பேதஹ பிககாகயோஹோ

வசந்த காலே சம்ப்ராப்தே காகஹ காகஹ பிகஹ பிகஹ

பொருள்:-

காகமும் கறுப்பு, குயிலும் கறுப்பு; பின்னர் குயிலுக்கும் காகத்துக்கும் வேறு என்னதான் வேறுபாடு?

வசந்த காலம் வந்துவிட்டால், காக்கை காக்கைதான், குயில் குயில்தான்! ( அதாவது அதன் வண்டவாளம் தெரிந்து விடும்.குயில் இனிமையாகப் பாடத் துவங்கும்; காகம் கர்ண கடூர சப்தம் உண்டாக்கும்)

****

உப்பும் வெள்ளை; சர்க்கரையும் வெள்ளை நிறம் ; ஆயினும் வெவ்வேறு இடத்தில்தான் அவைகளுக்கு மதிப்பு. இரண்டும் ஒன்றாகாது . சர்க்கரை இனிக்கும்; உப்பு கரிக்கும்.

***

நத்தைக்கூடும் அழகாகத்தான் உள்ளது ஆயினும் அதை சாளக்கிராமம்  போல பூஜையில் வைத்து இந்துக்கள்  வழிபடுவது  இல்லை .

****

அகத்தியருக்கு முருகக்கடவுள் செந்தமிழை அறிவித்ததாகப் புராணம் புகலும். தமிழுக்கு இலக்கணம் செய்த அகத்தியனைப் பாரதியார் வரைப் பலரும் பாடியதை அறிவோம்; அகத்தியறையும் குருபாததாசர் குமரேச சதகத்தில் முருகன் பாடலில் குறிப்பிட்டது பொருத்தமே.

–subham–

Tags- ஆராய்ச்சிக் கட்டுரை 8, முகம் , நகை, புத்தி, நூல்,  குமரேச சதகம் , புன்னகை, மனைவி , காகம் குயில் சங்கு நத்தை, பிறப்பு, உயர்வு

சூஃபி துறவி வசாலி! ராமரின் பக்தர்!! (Post No.14,491)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,491

Date uploaded in London – –9 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

சூஃபி துறவி வசாலி! ராமரின் பக்தர்!! 

ச. நாகராஜன் 

ஸாஹா ஜலாலுதீன் வசாலி மிகப் பெரிய சூஃபி துறவி. ஈரானின் வடகிழக்குப் பகுதியான குராஸானாவிலிருந்து அவர் இந்தியாவிற்கு வந்தார்.

ராமரின் கதையைக் கேட்டு மெய் சிலிர்த்த அவர் ராம பக்தரானார். அவருக்கு ராமரின் தரிசனம் கிடைத்தது.

அவர் (இப்போது பாகிஸ்தானில் இருக்கும்) முல்தான் நகருக்கு வந்த போது அவருக்கு பண்டிட் தேகாசந்த்ஜி என்ற புராண இதிஹாஸங்களை அற்புதமாகச் சொல்லும் பௌராணிகரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அற்புதமாக தேகாசந்த்ஜி ராமாயணத்தை நாள் தோறும் சொல்ல தவறாமல் தூரத்தில் இருந்து அதைக் கேட்கலானார் வசாலி.

வசாலியின் ராம பக்தியை உணர்ந்த தேகாசந்த்ஜி அவருக்கு ராமரின் தரிசனம் கிடைத்ததையும் உணர்ந்தார்.

அவரைச் சந்த்தித்து மூன்று வரங்களைக் கேட்டார் தேகாசந்த்ஜி.

முதல் வரம் : தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும்

இரண்டாவது வரம்: தனக்கு இறக்கும் நிலை வந்தால் வலி இல்லாமல் திடீரென்று இறக்க வேண்டும். மூன்றாவது ராமரின் தரிசனம் கிடைக்க வேண்டும்.

 முதல் இரண்டு வரங்களையும் தந்ததாகக் கூறிய வசாலி மூன்றாவது வரத்தை மட்டும் தன்னை அடுத்து பார்க்கும் போது தருவதாகச் சொன்னார்.

வசாலி கூறிய படியே தேகாசந்த்ஜிக்கு ஒரு மகன் பிறந்தான்.

 பின்னர் அயோத்யா சென்ற தேகாசந்த்ஜி அங்கு வழக்கம் போல ராமாயண பிரவசனத்தை ஆரம்பித்தார்

அங்கு வசாலி வந்து நின்றார்.

அவரைக் கண்ட தேகாசந்த்ஜி அவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு ராமரின் தரிசனத்தைத் தந்து அருள வேண்டும் என்று வேண்டினார்.

“சரி, பீர் மரத்திற்கு அருகில் வா” என்று கூறி விட்டு வசாலி அகன்றார்.

தேகாசந்த்ஜியும் பீர் மரத்திற்கு அருகில் சென்றார்.

 அங்கு வசாலியின் அருளினால் அவர் ராம தரிசனத்தைப் பெற்றார்.

அந்தக் கண முதல் அவர் பெயர் வாலிராமா என்று மாறியது.

 வசாலி தான் எந்த மரத்தின் அருகில் வசித்து வந்தாரோ அங்கே தனது உடலை உகுத்தார். அங்கேயே அவரது சமாதி இன்றளவும் இருக்கிறது.

இதே போல கிருஷ்ண பக்தராகத் திகழ்ந்தவர் இன்னொரு முஸ்லீம் துறவியான அப்ராஹிமா சாபாஜி என்பவர்.

அராபியாவிலிருந்து வந்த அவர் கிருஷ்ணரின் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார்.

அயோத்தி அருகில் உள்ள இடத்தில் அவர் கிருஷ்ணரின் புகழ் பாடி வந்தார்.

அறுபத்தி நான்கு நாட்கள் எதையும் உண்ணாமல் உபவாசம் இருந்தார் அவர்.

கடைசியில் அவருக்கு கிருஷ்ண தரிசனம் கிடைத்தது.

அயோத்தியில் வாழ்ந்த அவர் தனது 101ம் வயதில் உடலை உகுத்தார்.

 ஆதாரம் : ஆங்கில மாத இதழான கல்யாண் கல்பதரு (KALYAN KALPATARU – BHAKTHI SPECIAL. 2017). இப்போது இந்த பத்திரிகை நின்று விட்டது.

**

Pictures of 2500 Indian Stamps!- Part 32 (Post No.14,490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,490

Date uploaded in London – –8 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Pictures of 2500 Indian Stamps!- Part 32 (Post No.14,490)

PART 32

Stamps posted today include 1987 STAMPS,

BRAHMAPUTRA BRIDGE, MADRAS CHRISTIAN COLLEGE, KALIA BHOOMORA BRIDGE, MA ANANDA MAYEE, RABINDRANATH TAGORE, PORTRAIT, GARHWAL RIFLES, J KRISHNAMURTI, REGIMENTAL UNIFORM, IADIA-90 STAMP EXHIBITION, MINI SHEET, FORTY YEARS OF FREEDOM, GURU GHASIDAS, SANT HARCHAND SINGH LONGOWAL, THAKUR ANUKUL, UNIVERSITY OF ALLAHABAD, PANKHA OFFERING, CHHATRASAL ON HORSE, ROTARY CONFERENCE, PHOOL WALON KI SAIR,  YEAR OF SHELTER FOR HOMELESS, CENTENARY OF SERVICE TO THE BLIND, BLIND BOY WITH BRAILLE BOOKS,  EYE DONATION, IRON PLLAR IN DELHI, INDIA GATE IN DELHI, DEWANE KHAS, DELHI OLD FORT, TYAGMURTI GOSWAMI GANESH DUTT, MY HOME, CHILDREN S DAY, TREES OF IINDIA, CHINAR, PIPAL, BANYAN, SAL TREE,

–Subham—

Tags Part 32, 2500 Indian Stamps, YEAR 1987, BRAHMAPUTRA BRIDGE, MADRAS CHRISTIAN COLLEGE, KALIA BHOOMORA BRIDGE, MA ANANDA MAYEE, RABINDRANATH TAGORE, PORTRAIT, GARHWAL RIFLES, J KRISHNAMURTI, REGIMENTAL UNIFORM, IADIA-90 STAMP EXHIBITION, MINI SHEET, FORTY YEARS OF FREEDOM, GURU GHASIDAS, SANT HARCHAND SINGH LONGOWAL, THAKUR ANUKUL, UNIVERSITY OF ALLAHABAD, PANKHA OFFERING, CHHATRASAL ON HORSE, ROTARY CONFERENCE, PHOOL WALON KI SAIR,  YEAR OF SHELTER FOR HOMELESS, CENTENARY OF SERVICE TO THE BLIND, BLIND BOY WITH BRAILLE BOOKS,  EYE DONATION, IRON PLLAR IN DELHI, INDIA GATE IN DELHI, DEWANE KHAS, DELHI OLD FORT, TYAGMURTI GOSWAMI GANESH DUTT, MY HOME, CHILDREN S DAY, TREES OF IINDIA, CHINAR, PIPAL, BANYAN, SAL TREE,

Torture of Human beings in the Hell according to Buddha! (Post No.14,489)

Written by London Swaminathan

Post No. 14,489

Date uploaded in London –  8 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Buddhist scriptures mention four states of suffering  and they are Naraka/hell, Paraloka/ the world of spectres, Asuraloka/ the world of demons and Tirachchana/ the world of brute.

Sanskrit work on Buddha, Lalitavistara, also mentioned Niraiya/Naraka.

Tamil Sangam Literature

Tamils used Niraiya, a Sanskrit word, in 5 or 6 places in Sangam literature. They also used another Tamil word Alaru for hell.

Asvaghosa of first century CE wrote the biography of Buddha in Sanskrit . He agrees with other Pali scriptures  and say,

“Beings of sinful acts are born in the spheres of misery and these foul minded reap the fruit of their Karma and lamentation. They are born in dreadful Naraka . The sinners, by reason of their various actions arising from the activities of the mind are born among various animals. And those who are observed with stinginess are born in the dark world of Pretas and reap the reward of wretchedness.

Manu , Tamil saint Tirumular also told us in their works about animal births of evil people or sinners.

In these spheres all the hells are full of excessive torture. The animals eat each other and suffer from hunger. Pretas are thirsty and hungry while human beings suffer because of longing.  This stream of cycle of existence has no support and subject to death. Creatures thus beset on all sides find no resting place”.

Kinds of Hell

In Buddhist literature there are two kinds of hell, hot and cold. Each kind is of eight types; the hot hells are Avichi, Pratapan , Tapan,  Maharaurava, Raurava Sanghat Kalsutra and Sanjiva. The cold hells are Arbud, Nirarbud, Attata, Hahava, Huhuva, Utpala, Padama and Mahapadama.

In the Pali canon  we read of these and a few more hells- Atata, Abbuda, Aiabbuda, Ahaha, Ababa, Kumeda, Uppaloke, Sogandhika, Pundarika,  and Peduna.

In the northern Buddhism the number of hells is still greater.

Mahavastu mentions eight major hells and each having sixteen minor hells. Maudgalayam visited these hells and saw beings enduring different torments.  He advocated to strife after knowledge, win it and be enlightened. Do good and live the holy life. And in this world no sinful act must be committed.

Each of the major hell is attached to sixteen secondary hells. Each of the major hell has connection  with four doors and each door is connected with four hells I .e. Kukkla, Kunapa, Salmati vana  and the river Vaitarani. Thus all the 8 major hells and 16 minor hells are interconnected.

***

Asvaghosa ‘s description

Various kinds of hells are described by Asvaghosa in his book Buddhacarita.

Beings according to their Karma  are born animals such as  oxen or horses and are driven along their bodies, wounded with goads.  Or elephants who are driven despite their weaklings are hit with foot and heel and are tormented by Ankusa on the head.

Animal kingdom in the hells is placed above the hells. They live in our planet, the world of men. This is a minor hell.

Asvaghosa refers to culprits roasted or boiled on burning red hot coal or in iron cauldrons.

Some culprits are hung upside down and are boiled like meat in iron cauldron according to early Nirayasutra preserved in Asokavadana.

The Tapan and Pratapan hells are notable for heat where the condemned are roasted and baked while in Sanjiva hell the beings are hacked upside with knives and blades.

Some beings in hell are devoured by fierce dogs with iron teeth and by gloating iron beaks, as if by crows of iron.

In Kunapa hell they are devoured by black creatures with jaws of iron.

In some exhausted with burning, long for cool shade and enter like captives the dark sword leaved forest.

In Kumba hell sharp sword leaves strike against their bodies and they bleed. In Kukkula hell they are condemned to burn with hot ashes and sparks. In hell the arms are chopped up with axes like wood.

In Sanjiva hell they are destroyed with hatches and knives  in Kalsutra hell their limbs are lashed with black wire. They are beaten and maimed and cut piecemeal with hatches and saws.

Asvagosha’s description and references to various hells are in agreement with the description of hells in 2200 year old Maha Vastu.

Buddhist scriptures have copied everything from Manu smriti and Hindu Puranas. So, they must be earlier than Maha Vastu.

Source book :

Asvaghosa and His Times, Sarla Khosla, 1986 with my inputs

—Subham–

Tags- Torture of Human beings,  in the Hell , Buddhist literature, Niraya, Naraka, Torture, Sangam literature.

சங்க இலக்கியத்தில் நரகம்; புத்த மதத்தில் கொடிய நரகம் (Post.14,488)

Written by London Swaminathan

Post No. 14,488

Date uploaded in London –  8 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் நரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன நிரையம் என்றால் நரகம்; இந்தச் சம்ஸ்கிருதத் சொல்லை அவைகள் பயன்படுத்துகின்றன. தாயின் மனம் நரகம் போல சித்திரவதை செய்கிறது என்று காதல் வயப்பட்ட பெண்கள் புலம்புகின்றனர்.

சங்க இலக்கியத்தில் நிரையம்/ நரகம் வரும் இடங்கள் :

அகநானூறு -95-12;

நற்றிணை -236-5; 329-1;

குறுந்தொகை -258-6; 292-6;

பதிற்றுப்பத்து -15-4; 15-31

( புதிய விளக்க உரைகள் இதை கொடிய என்று எழுதி மழுப்பிவிடுகின்றன. பழைய உரைகளிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் நரகம்/ HELL  என்றே காணப்படுகிறது).

ஆனந்தவிகடன் தமிழ் அகராதிப்படி நிரையம் என்பதற்கு நரகம் என்ற ஒரே அர்த்தம்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அளறு என்பதற்கு சேறு , குழம்பு , நரகம் முதலிய பொருள்களும் உண்டு. வள்ளுவர் நரகம் என்ற பொருளில் மட்டும் பயன்படுத்தியுள்ளார்.

****

அளறு / நரகம் HELL என்பது திருக்குறளிலும் சங்கஇலக்கியத்திலும் வருகிறது

மதுரைக்காஞ்சி- 45

பரிபாடல் – 2-47; 6-18; 8-93; 10-73; 12-97

பதிற்றுப்பத்து- 27-13

 ****

நிரையம்

புத்தமத சம்ஸ்க்ருத நூல்களும் பாலி மொழி நூல்களும் இதை பயன்படுத்துகின்றன ; அவற்றின் பெயர்கள் –

1.மஹாவஸ்து – – சம்ஸ்க்ருதம் , பிராகிருதம், பாலி

2.அஸ்வகோஷர் எழுதிய புத்தசரிதம் – சம்ஸ்க்ருதம்

3.பலர் எழுதிய லலிதவிஸ்தாரம் – சம்ஸ்க்ருதம்

இவை அனைத்தும் சங்க இலக்கியத்தை விட அல்லது சமகாலத்திய நூல்கள். அதாவது 2000 ஆண்டுகள் பழமை உடைத்து.

மனு ஸ்ம்ருதி போன்ற நூல்கள் 21 நரகங்களின் பெயர்களை மட்டுமே சொல்லியது; அவற்றை விளக்கவில்லை. ஆனால் புத்த மத நூல்கள் அங்கே என்ன கொடிய தண்டனைகள் அளிக்கப்படுகின்றன என்று விளம்புகின்றன. இவை நமது புராணங்களில் உள்ள விஷயங்களே ; இவைகளைப் பார்க்கையில் வெள்ளைக்காரர்கள் புராணங்களுக்குக் கொடுத்த தேதி எல்லாம் தவறுஹிந்து புராணங்கள் இந்த புத்த மத நூல்களுக்கும் முந்தையவை என்பது விளங்கும். ஏனெனில் பெரும்பாலும் சம்ஸ்க்ருதப் பெயர்களையே இவை பயன்படுத்துகின்றன; அல்லது கொச்சையான சம்ஸ்க்ருதத்தில்– அதாவது பிராகிருதம் பாலி மொழிகளில் — இருக்கின்றன ; பிராகிருதம், பாலி  என்பன சம்ஸ்க்ருத மொழியின் பேச்சு வழக்கு; அதாவது கொச்சை மொழி ; புத்தர் ,அசோகர் போன்றவர்கள் இந்த பாலி மொழியையும் சமணர்கள் பிராகிருத மொழியையும் பயன்படுத்தினர் .

ஆகவே நரகத்தை வைத்து ஆராய்ச்சி செய்தால் புராணங்களின் பழமை விளங்கும்.

***

புத்த மதத்தில் நரகங்கள் எண்ணிக்கை அதிகம்!

எட்டு பெரிய நரகங்களும் அவை ஒவ்வொன்றுக்கும் பதினாறு துணை/ குட்டி நரகங்களும் இருப்பதாக அவை வருணிக்கின்றன.

நரகத்தில் சித்திரவதை

தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டுதல், தீயில் வாட்டுதல் ;

அக்கினி போல தகிக்கும் அனலில் வெந்து தாகத்துக்குத் தண்ணீரைத் தேடித்  தேடி, இருட்டில் நிழல் என்று நுழைத்தால் , அங்கு கத்தி போலுள்ள இலைகளால் வெட்டப்படுத்தல்

அங்கம் அங்கமாக வெட்டப்படுத்தல்; கத்தியால் குத்தப்படுத்தல்; 

புத்தமத நூல்கள் குளிர் நடுக்கும் நரகம்வெயில் தகிக்கும் நரகம் என்று இரண்டு வகைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் எட்டு நரகங்கள் இருப்பதாக இயம்புகின்றன.

எட்டு பெரிய நரகம் பதினாறு துணை நரகம் பற்றி மஹாவஸ்து நூல் எடுத்துரைக்கிறது.

***

அஸ்வகோஷர் புத்த சரித நூலில்  சொல்வதாவது ,

கர்மவினைக்கு ஏற்ப வண்டி மாடாகவோ, ரதத்தின் குதிரையாகவோ அல்லது யானையாகவோ பிறந்து குச்சியாலும் சாட்டையா லும் அ ங்குசத்தாலும் அடிபட்டு ரத்தக் காயங்களை அடைவர் ;

எரியும் நிலக்கரியில் வாட்டப்படுவர்; அல்லது இரும்புச் சட்டியில் வதக்கப்படுவார்கள்.

தபன், பிரதபன் நரகங்களில்  வதைக்கப்படுவர்; சுடப்படுவர்.  சஞ்சிவ நரகத்தில் தலை கீழாகத் தொங்கவிட்டு வெட்டப்படுவார்கள்.

சில தீயவர்களை, நாய்கள் கடித்து விழுங்கும். அந்த நாய்களுக்கு இரும்புப் பற்கள் கத்தி வடிவத்தில் இருக்கும் .

சிறிய நரகங்களில் சாம்பலாலும் தீப்பொறிகளாலும் தீயோர்கள் சுடப்படுவார்கள். கால சூத்ர நரகத்தில் கம்பியினாலான சாட்டைகளால் அடிக்கப்படுவார்கள்.

இவைகளையெல்லாம் அவர் 2200 ஆண்டுப் பழமையான மஹாவஸ்து நூலிலிருந்து எடுத்துரைக்கிறார்.

Source book :

Asvaghosa and His Times, Sarla Khosla, 1986 with my inputs.

—subham—

Tags- சங்க இலக்கியத்தில்,  நரகம்,  புத்த மதத்தில்,  கொடிய நரகம் , நிரையம், அளறு, அஸ்வகோஷர், லலிதவிஸ்தாரம், மஹாவஸ்து