GNANAMAYAM 28 December 2025 BROADCAST PROGRAMME

Ganesh

Nagarajan

prayer and News

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team-

***

NEWS BULLETIN

LATHA YOGESH from London presents World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Mrs Chitra Nagarajan from Bangalore

Topic- Thiruneermalai Temple

***

Talk by S Nagarajan from Bangalore

Topic: Sri Paramahamsa Yogananda

****

SPECIAL EVENT-

RSS CENTENARY CELEBRATIONS

VIDEO PRESENTATION BY BANGALORE GANESH

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 28th December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

திருமதி சித்ரா  நாகராஜன் – பெங்களுர்

தலைப்பு — திருநீர்மலை கோவில்

****

சொற்பொழிவு : திரு எஸ் நாகராஜன் , பெங்களூர்

தலைப்பு : பரமஹம்ச யோகானந்தா

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

நூற்றாண்டு விழாக்கண்ட ஆர். எஸ். எஸ்.

வீடியோ காட்சி தொகுத்து வழங்குபவர் – பெங்களூர் கணேஷ்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 28-12- 2025, programme,

 R GANESH  Youtube channel link is:  https://www.youtube.com/@ArivomInaivom 
Below are the videos I have published till date for your reference.

S. NoVideo LinkVideo tittle
1https://youtu.be/wx3JWZSl6wkஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு இல்லையா?!
2https://youtu.be/Avw5kiOpTd8அதிசய பிறவி ஆதிசங்கரர்! Miraculous mahan, Adi Sankara!
3https://youtu.be/gOh_WtQqwTcரிக் வேதம் யார்? ஏன்? – Rig Veda Who? Why?
4https://youtu.be/uhYFcddWwmcபதஞ்சலி முதல் கிரிஷ்ணமாச்சாரி வரை… யோகா 2/8?! ; From Patanjali to Krishnamachari Yoga: 2/8?!
5https://youtu.be/hQcGuzso3hQAction Hero’ திலகர் ; ‘Action Hero’ Tilak
6https://youtu.be/2inqKakzH2gஆவணி அவிட்டமும் அந்நியனும்! Avani Avittamum Anniyanum!
7https://youtu.be/qUXAZP3e8Qgகீழடியும் செம்மறி ஆடுகளும் | Keeladi and the Sheep!
8https://youtu.be/_JsIcFY_sDYRSS 100* – தேவையா? ; RSS 100* – Needed?!

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 28  12  2025 (Post No.15,320)

Written by London Swaminathan

Post No. 15,320

Date uploaded in London –  29 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துலதா யோகேஷ்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 28- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

***

முதலில் வங்கதேசம் பற்றிய செய்திகள்

London Hindus Demo.

ஹிந்துக்கள் மீது தாக்குதல்வங்கதேச வன்முறை குறித்து ஐநா கவலை

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. வன்முறை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர், அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தினர். கடந்த  சில  தினங்களுக்கு முன்னர் இரண்டாவது இந்து ஒருவரை முஸ்லீம் கும்பல் அடித்துக்கொன்றது. இந்த தாக்குதல்களைக் கண்டித்து இந்திய அறிக்கை வெளியிட்டுள்ளது

டில்லியில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

வங்க தேச இந்துக்கள் மீது முஸ்லீம்கள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து டில்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது

டில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

 விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், இதற்குகாரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த போராட்டம் நடந்தது

திபு சந்திர தாஸ் புகைப்படத்தையும், வங்கதேச அரசை விமர்சித்து பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர். போராட்டக்காரர்களை போலீசார், தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.

***

திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 50 கிலோ தங்கம் மாயம்

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முக்​கிய கோயில்​களில் திருப்​பதி கோவிந்​த​ராஜர் கோயிலும் ஒன்​றாகும்.
முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​போது இந்த கோயி​லின் விமான கோபுரத்​துக்கு 100 கிலோ தங்க தகடு​கள் பதிக்​கப்​பட்​டன. தற்​போது கோயி​லில் மராமத்து பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் விமான கோபுரத்​தில் 50 கிலோ தங்​கம் மாய​மாகி இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.


கடந்த 2022-23-ம் ஆண்​டில் கோவிந்​த​ராஜர் கோயில் விமான கோபுரத்​தில் தங்க தகடு​கள் பதிக்​கும் பணி நடை​பெற்​றது. இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் 100 கிலோ தங்​கத்தை வழங்​கியது. 9 அடுக்கு தங்க தகடு​களை பதிக்க ஒப்​பந்​தம் கொடுக்​கப்​பட்​டது. ஆனால், தற்​போதைய பரிசோதனை​யில் 2 அடுக்கு தங்க தகடு​கள் மட்​டுமே பொருத்​தப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது.


மேலும் தங்க தகடு​களை பொருத்​தி​ய​போது விமான கோபுரத்​தில் இருந்த சுமார் 30 சிலைகள் உடைக்​கப்​பட்டு உள்​ளன. அப்​போதைய அறங்​காவலர் குழுத் தலை​வரும் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் சித்​தப்பாவு​மான ஒய்​.வி சுப்பா ரெட்​டி, நிர்​வாக அதி​காரி தர்மா ரெட்டி ஆகியோர் இந்த விவ​காரத்தை வெளியே வரவி​டா​மல் தடுத்​து​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.


தற்​போது தங்​கம் மாய​மான விவ​காரம் குறித்து திருப்​பதி தேவஸ்​தான விஜிலென்ஸ் துறை தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. தங்க தகடு​கள் பொருத்​திய தொழிலா​ளர்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​களிடம் முழு​மை​யாக விசா​ரணை நடத்​தப்பட உள்​ளது.


ஏற்கனவே ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் கலந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பரகாமணியில் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

****

கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்

உலகளவில் உணர்வுகளை புண்படுத்துகிறது என கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு ஹிந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். இந்த கோவிலில் உள்ள ஹிந்து சிலை நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறது.

இதுபோன்ற அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன எனவும்   கூறியுள்ளார்.

  எல்லைப் பகுதியில் இருந்த விஷ்ணு சிலை அகற்றப்பட்டது, பாதுகாப்புக்காக தான் எனவும், மத நம்பிக்கைக்கு எதிராக இல்லை,” எனவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது.

****
அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.30 கோடி தங்க சிலை காணிக்கை

கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான ராமர் சிலையை, காணிக்கையாக அனுப்பியுள்ளார்.


இது குறித்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறியதாவது:

 கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு அழகான ராமர் சிலையை, ‘பார்சல்’ வாயிலாக அனுப்பியுள்ளார்.


தங்கத்தால் தயாரிக்கப்பட்ட சிலையில், வைரங்கள், ரத்தினங்கள் உட்பட, அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 10 அடி உயரம், 8 அடி அகலத்தில் ராமர் சிலை உள்ளது. இதை காணிக்கையாக செலுத்திய பக்தரை பற்றிய தகவல் தெரியவில்லை. இதன் மதிப்பு 30 கோடி ரூபாய் வரை இருக்கலாம். வரும் நாட்களில் சிலை தொடர்பான, முழுமையான தகவல்களை தெரிவிப்போம்.


தமிழகத்தின் தஞ்சாவூரின் சிலை தொழில்நுட்ப நிபுணர்கள், ராமர் சிலை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். நுணுக்கமான கலை வடிவத்தை கொடுத்துள்ளனர். இந்த சிலையில் என்னென்ன உலோகங்கள் உள்ளன என்பதை, வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர்.


வரும், டிச., 29 முதல், அடுத்தாண்டு ஜன., 2ம் தேதி வரை அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா நடக்கவுள்ளது. இந்த நாளில், காணிக்கையாக வந்துள்ள தங்க ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய, ஏற்பாடு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

***

திருப்பரரங்குன்றம் தீபத்தூண் போராட்டம் –

இந்து முன்னணி எச்சரிக்கை

‘திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணில் தீபம் ஏற்ற மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது புரட்சியாக வெடிக்கும்’ என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் எச்சரித்தார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றக்கோரி, மதுரையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ணசந்திரன் வீட்டிற்கு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்n சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  முஸ்லீம்களின் கந்துாரி விழாவுக்கு அரசு அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல. இரண்டுமதத்தினருக்கும், மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் அனுமதி மறுக்க வேண்டும்.அதனைவிட்டு விட்டு, ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்குவது சரியானதல்ல என்றார் காடேஸ்வரா சுப்ரமணியம் .

***

சட்டப் போராட்டம் தொடரும்

”திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் வரை சட்டப்போராட்டம் தொடரும்,” என, திருப்பரங்குன்றத்தில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.  திருப்பரங்குன்றம் முருகன் வீடு. குடைவரைக் கோயிலாக உள்ளது. ஒட்டுமொத்த மலையும் சிவனின் அம்சம். மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. அங்கு 15 தீர்த்தங்கள் உள்ளன. தற்போது ஒரு தீர்த்தத்தை ஆக்கிரமித்து, பிறை போட்டு வேலி அமைத்துள்ளனர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தல விருட்சம் கல்லத்தி மரம். இது கோயிலுக்குள்ளும், மலை மீதும் உள்ளது. அந்த தலவிருட்சத்தில் முஸ்லிம்கள் சந்தனக்கூடு கொடி ஏற்றி இருக்கின்றனர். இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.

சந்தனக்கூடு விழா நடத்தும் பேச்சு வார்த்தையில் ஹிந்து அமைப்பினர், பொதுமக்களை அழைக்கவில்லை. இது சட்ட விரோதம். திருப்பரங்குன்றம் மலையில் முஸ்லிம்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். மலையில் உள்ள சமணர் படுகையில் பச்சை பெயின்ட் அடித்தனர். புகார் கொடுத்ததும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். ஆனால் மேற்கொண்டு நடவடிக்கை இல்லை. சமணர் குகைகள், சுனைகள், தலவிருட்ச மரம் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதற்கு தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் துணை போகின்றன. இது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்என்று அர்ஜுன் சம்பத் கூறினார்

****

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு; திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகரிடம் விசாரணை

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக திண்டுக்கல் ரியல் எஸ்டேட் பிரமுகர் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் விசாரணை நடத்தினர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கநகை கவசங்கள் செப்பனிடப்பட்டபோது 4.54 கிலோ தங்கம் மாயமானது.

இந்த நகைகள் முறைகேடு தொடர்பாக 9 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேவசம் போர்டு நிர்வாக முன்னாள் அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டார். 400 கிராம் தங்கத்தை திருடி கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்ட தங்கநகை வியாபாரி கோவர்தனிடம் கொடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

சிறப்பு புலனாய்வு போலீசார் தங்க வியாபாரி கோவர்தன், ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை தொடர்ச்சியாக பணப்பரிவர்த்தனை நடந்ததில் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ராம்நகர் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் நடத்தும் எம்.எஸ்.மணி என்ற சுப்பிரமணியனுக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது.

எஸ்.ஐ.டி., டி.எஸ்.பி., சுரேஷ் பாபு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் ராம்நகரில் சுப்பிரமணியன் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தனர். பணபரிவர்த்தனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் சுப்பிரமணியன் அளித்த விளக்கத்தில் , தனக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தொடர்பில்லை என்றும் அவர்கள் விசாரணைக்கு வரும்படி சம்மன் தரவில்லை என்றும் கூறியுள்ளார்

****

டிசம்பர் 30 –ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி ஜனவரி 3 –ஆம் தேதி ஆருத்ரா தரிசனம்

பெருமாள் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் இரண்டு பெரிய விழாக்கள் நடக்கவிருப்பதால் உற்சவம் துவங்கியுள்ளது.

டிசம்பர்  30 -ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியும் ஜனவரி 3 -ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றன . இதனால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் பக்கதர்களின் சொர்க்க வாசல் தரிசனத்துக்குப் பெரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன 

அதே போல சிதம்பரம், மதுரை, தஞ்சசை, திருவாரூர் தலங்களில் உள்ள சிவன் கோவில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு ஆலய அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருச்சி மாவட்டத்துக்கு டிச.30 ல் உள்ளூர் விடுமுறையை  மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்தார் . உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.24ம் தேதியை பணி நாளாகவும்  அறிவித்தார்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

***

நேயர்களுக்கு  புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Broadcast, News, 28 12 2025,

பரமஹம்ஸ யோகானந்தா (Post No.15,319)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,319

Date uploaded in London –   29 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

25-12-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே

நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

உலகெங்கும் க்ரியா யோகா என்ற புதிய எளிய யோகப் பயிற்சியை பரவச் செய்து லட்சக்கணக்கானோரை யோகத்தின் பால் ஈரத்த பெரிய மகான் பரமஹம்ஸ யோகானந்தா ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முதல் சூப்பர் ஸ்டார் குரு என்று இவர் போற்றப்பட்டார்.

முகுந்த லால் கோஷ் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1893ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி உத்தரபிரதேசத்தில் கோரக்பூரில் காயஸ்த குடும்பம் ஒன்றில் பிறந்தார். ஞான்பிரபாதேவி அம்மையாருக்கும் பாகபதி சரண் கோஷுக்கும் எட்டுக் குழந்தைகளில் நான்காவதாக இவர் பிறந்தார். இவரது தந்தையார் சரண் கோஷ் ரயில்வேயில்  வேலை பார்த்ததால் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து புதிய இடங்களில் குடியேற வேண்டியிருந்தது. அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் இலவச பாஸை மகனுக்குத் தந்தார். முகுந்தலால் கோஷ் வெவ்வேறு இடங்களுக்குச் என்று பல மகான்களைச் சந்தித்தார். யாத்திரை தலங்களுக்குச் சென்று இறைவனின் மகிமையை உணர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வாரணாசிக்குச் சென்ற இவருக்கு ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. 17வது வயதில் இவர் தனது குரு ஶ்ரீ யுக்தேஸ்வர் கிரி என்ற மகானைச் சந்தித்தார். 1915ம் ஆண்டு யுக்தேஸ்வரின் ஆசியுடன் இவர் தனது பெயரை யோகானந்தா என்று மாற்றிக் கொண்டார்.

1920ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் போஸ்டன் நகருக்கு வந்த இவர் படிப்படியாக அமெரிக்க  மக்களை தன் பால் ஈர்த்தார். ஆயிரக்கணக்கானோர் இவரது உரைகளைக் கேட்க ஆவலுடன் வந்தனர். அதே ஆண்டின் இறுதியில் SRF – SELF REALISATION FELLLOWSHIP  என்ற நிறுவனத்தைத் தொடங்கிய இவர் 1952 முடிய 32 ஆண்டுகள் அமெரிக்காவிலேயே தங்கி இருந்து யோகாவைக் கற்பித்தார்.  இடையில் 1935, 1936 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றினார்.

1927ல் அமெரிக்க ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் இவரை வெள்ளை மாளிகைக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தார்.

இவர் பல பிரபலங்களுக்கு க்ரியா யோகாவை உபதேசித்துள்ளார். மகாத்மா காந்திஜி, ஆனந்தமயி மா, கிரி பாலா, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி,ராமன் உள்ளிட்ட பலருக்கு இவர் க்ரியாயோகத்தைக் கற்பித்துள்ளார்.  மேலை நாடுகளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு இவர் க்ரியா யோகத்தைக் கற்பித்துள்ளார். 175 ஆண்டுகளில் இவரது சீடர்கள் உள்ளனர்.

க்ரியா யோகத்தில் பிராணாயாமத்தின் பலன்கள் உணரச் செய்யப்படுகிறது. மனிதனின் ஆற்றல்களை அதிகரிக்கவும் வலிமைப்படுத்தவும் பயிற்சிகள் தரப்படுகின்றன. இறைவன் அன்பு மயம் என்பது போதிக்கப்படுகிறது.

தனது வாழ்வில் ஏராளமான அற்புதங்களைப் பார்த்திருப்பதாக யோகானந்தா குறிப்பிடுகிறார். யோகிகள் அந்தரத்தில் மிதப்பது, அவர்கள் தங்கள் இதயத் துடிப்பை நிறுத்துவது உள்ளிட்ட பல அற்புதங்களை அவர் தனது சுயசரிதையில் விளக்குகிறார்.

தனது பணியை முடித்து விட்ட நிலையில் அவர் பூவுலகை நீக்கத் திருவுள்ளம் கொண்டார். அதை தனது சீடர்களிடம் கூடத் தெரிவித்து விட்டார். தயா மாதா என்ற தனது சிஷ்யையிடம், “இந்த பூவுலகை நான் விட்டுப் போக இன்னும் சில மணி நேரம் தான் இருக்கிறது என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் 1952ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி அப்போது அங்கு இந்திய தூதராக வந்த பினய் ரஞ்சன் தாஸுக்கும் அவரது மனைவிக்கும் பில்ட்மோர் ஹோட்டலில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பரமஹம்ஸர் இந்தியாவின் பெருமையைப் பேசி மை இந்தியா என்ற தனது கவிதையையும் வாசித்தார். உரை முடியும் போது அவர் உடல் கீழே விழுந்தது. அவர் உயிரைத் துறந்தார்.

மாரடைப்பால் அவர் உயிர் துறந்ததாக மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் பக்தர்களோ அவர் மஹா சமாதி நிலையைத் தானே அடைந்ததாகக் கூறினர்.

அவரது உடலின் அங்கங்கள் சிறிதும் சிதைவு படவில்லை என்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மார்ச் 7ம் தேதியன்று எப்படி இருந்ததோ அதே போலவே அவரது உடல் அங்கங்கள் சிதைவுபடாமல் மார்ச் 27ம் தேதி  வெங்கலப் பேழையின் மூடி மூடும் போதும் அப்படியே இருந்தது என்று ஹாரி டி. ரோ தனது அறிக்கையில் தெரிவித்தார். இது டைம் பத்திரிகையில் 1952 ஆகஸ்ட் 4ம் தேதி வெளி வந்தது. ரோ என்பவர் கலிபோர்னியாவில் க்ளண்டேலில் ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் டைரக்டர் ஆவார். க்ரியா யோகத்தின் பயனாக இது அமைந்தது எனலாம்.

இவரது சுயசரிதையை இவர் Audobiography of a Yogi  என்ற நூலில் அழகுற விவரித்துள்ளார். 531 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் 49 அத்தியாயங்களைக் கொண்டது. பல வியப்பூட்டும் சுவையான விஷயங்களை இதில் படிக்கலாம். 45 மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  பிலில் ஜலெக்ஸி மற்று ஹார்பர் காலின்ஸ் பதிப்பகத்தால் இது இருபதாம் நூற்றாண்டில் வெளியான நூறு முக்கிய புத்தகங்களில் ஒன்று என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் இவர் பால் ஈர்க்கப்பட்டதோடு ஆட்டோ பயாகிராபி ஆஃப் தி யோகி புத்தகத்தைன் 500 பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கி முக்கியமானவர்களுக்கு வழங்கினார்.

எல்விஸ் ப்ரீஸ்லியும் இந்த புத்தகத்தால் ஈர்க்கப்பட்டார். சுமார் நாற்பது லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்கப்பட்ட இந்த நூல் இன்றும் தொடர்ந்து அதிக அளவில் விற்பனை ஆகிக் கொண்டே இருக்கிறது.

1977ம் ஆண்டு இவர் மறைந்த 25ம் ஆண்டின் நினைவாக இந்திய அரசு இவரை கௌரவிக்கும் வகையில் ஒரு தபால்தலையை வெளியிட்டது. மீண்டும் 2017ம் ஆண்டில் யோகாதா சத் சங்கத்தின் நூறாவது ஆண்டு விழாவையொட்டி இன்னொரு தபால்தலையை வெளியிட்டது,

பரமஹம்ஸ யோகானந்தரின் அருமையான பொன்மொழிகள் கூட மிக எளிமையானவையே. அதில் ஆழ்ந்த ரகசியங்களை அவர் குறிப்பிடுகிறார்.

அவற்றில் சில இதோ:

எவ்வளவு எளிமையாக இருக்கமுடியுமோ அவ்வளவு எளிமையாக இருங்கள்; எப்படிப்பட்ட சிக்கலற்ற சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு அமைகிறது என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ஒவ்வொரு’ நாளைப் பொழுதும்’ இன்றைய தினத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

தீயனவற்றில் உங்கள் எண்ணங்களை இருக்க நீங்கள் அனுமதித்தால் நீங்கள் மிகவும் மோசமானவராக ஆவீர்கள். நல்லனவற்றில் உங்கள் எண்ணங்களை இருக்க அனுமதித்தால் நீங்கள் அழகின் தரத்தை உங்கள் வசமாக்கிக் கொள்வீர்கள்.

உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பதற்கான ரகசியம் இது தான் – கடந்த காலத்தைப் பற்றி வருந்திப் புலம்பாதே. எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாதே. தொந்தரவுகளைப் பற்றியும் கவலைப்படாதே! நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணத்திலும் புத்திசாலித்தனமாகவும் உண்மையுடனும் வாழ்வாயாக.

பரமஹம்ஸ யோகானந்தரைப் போற்றி வணங்குவோமாக!

நன்றி. வணக்கம்!

–Subham—

tags- Paramahamsa Yogananda

ஆலயம் அறிவோம்! திருநீர்மலை ஆலயம் (Post No.15,318)

WRITTEN BY Chitra Nagarajan

Post No. 15,318

Date uploaded in London – –  29 December 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-12-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை! 

ஆலயம் அறிவோம்

வழங்குவது  சித்ரா நாகராஜன்

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

அன்றாயர் குலக்கொடியோடு

   அணிமா மலர் மங்கையொடு அன்பளவி

அவுணர்க்கு என்தானும் இரக்கம் இலாதவனுக்கு

   உறையும் இடமாவது

இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை

     தடந்திகழ் கோவல் நகர்

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்

     மாமலையாவது நீர்மலையே

–    திருமங்கையாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது சென்னை நகரில் பல்லாவரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருநீர்மலை திவ்ய தலமாகும். இது 108 வைணவ திவ்ய தலங்களுள் ஒன்றாகும்.

மூலவர் : நீர் வண்ணன்,   நீல முகில்வண்ணன் – கிழக்கு நோக்கி நின்று அருள் பாலிக்கும் திருக்கோலம்

தாயார் : அணிமாமலர் மங்கை,    தனிக்கோவில் நாச்சியார்

மலைமேல் உள்ள கோவில்கள்

மூலவர் : சாந்த நரசிம்மன். அமர்ந்த திருக்கோலத்தில் பிராட்டியை இதயத்தில் ஏற்றுள்ளார்.

ரங்கநாதம் சயன திருக்கோலம்

திரிவிக்ரமன் – நடந்த மற்றும் நின்ற திருக்கோலம்

தீர்த்தம்: மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி

தல விருட்சம் : வெப்பால மரம்

விமானம் : தோயகிரி விமானம்

இங்கு அலங்கார நுழைவாயில் உள்ளது. நல்ல அகலமான சீரான 200 படிகள் உள்ளன. மலை மீது ஏறிச் செல்கையில், பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் சிறிய ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்றும் உள்ளது.

இங்கு கோவில் முகப்பில் மூன்று நிலை கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது.

கர்பக்ருஹத்தில் ரங்கநாதர் தெற்கு நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார்;

ஸ்வயம்பு மூர்த்தி என்பதால் இங்கு மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மட்டும் தைலக்காப்பு உண்டு.

இத்தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

வாணாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு சிவபக்தன். அவனுக்கு ஆயிரம் கைகள் உண்டு. தன் மகள் பொருட்டு அவன் அநிருத்தனைச் சிறை வைத்திருந்தான். அநிருத்தனை மீட்பதற்காக வந்த கண்ணனோடு வாணாசுரன் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். அவனுக்கு உதவ வந்த அரக்கர்கள் அனைவரையும் வீழ்த்திய கண்ணபிரான் இறுதியில் தனது சக்ராயுதத்தால் அவனது கரங்களை அறுத்து வீழ்த்தினார். இந்த நிலையில் தனது பக்தனான வாணாசுரனுக்காக சிவபிரான் இரங்கி கண்ணனிடம் உயிர்ப்பிச்சை அளிக்குமாறு கூறினார். அதனால் கண்ணன் வாணாசுரனின் நான்கு கரங்களை வெட்டாமல் விட்டார். வெட்கமடைந்த அசுரன் கண்ணனிடம்  அவனது நீர்மைத் தன்மையே பெரிது என்று கூறி நீர்மலை எம்பெருமானைச் சுட்டிக் காட்டி தொழுதான். நான்கு வேதங்களும் எம்பிரானைத் தொழுவது போல தனது நான்கு கரங்களாலும் திருநீர்மலையினைத் தொழுது நின்றான். நீரினை அரணாகக் கொண்ட நீர்மலையானே தனக்கு அரணாக நின்று காப்பவன் என்று கூறி வழிபட்டான்.

இந்த வரலாற்றைப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தனது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில்

“இரங்குமுயிர் அனைத்தும் இன்னருளால் காப்பான்

  அரங்கன் ஒருவனுமேயாதல் – கரங்களால்

போர்மலை வான் வந்த புகழ் வாணன் காட்டினான்

   நீர்மலை வாழெந்தை எதிர் நின்று” என்று குறிப்பிடுகிறார்.

இத்தலத்தில் நின்று, இருந்த, கிடந்த, நடந்த என்று நான்கு திருக்கோலங்களிலும் பெருமான் காட்சி தருகிறார்.

தானாகத் தோன்றிய தலமான இதை காண்டவனம் என்றும் இது அமைந்துள்ள மலையினை தோயாத்ரி என்றும் புராணம் கூறுகிறது.

இங்கு வால்மீகி முனிவர் வந்து பெருமானை வழிபட்டிருக்கிறார்.

ராமனின் பேரழகைக் காட்ட வேண்டுமென்று வால்மீகி வேண்டியதால் தாமரை மலர் பீடத்தில் ஹஸ்த முத்திரை பொருந்திய அபயகரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க, நீர்வண்ண ரூபத்தில் பெருமான் இங்கு காட்சி அளிக்கிறார்.

திருமங்கை ஆழ்வாரைப் பற்றிய வரலாறு ஒன்றும் உண்டு. இங்கு தரிசனத்திற்காக அவர் வந்த போது அடாது மழை பெய்ய ஆரம்பித்தது. மலையைச் சுற்றி நீர் அரண் போலச் சூழ்ந்து கொண்டது. ஆகவே அவர் பெருமாளைத் தரிசிக்க முடியாமல் காத்திருந்தார். ஆறு மாத காலம் அருகில் இருந்த மந்திர கிரி என்ற ஊரில் காத்திருந்த அவர் நீர் வற்றியவுடன் மலை மீதுள்ள பெருமாளைத் தரிசித்தார்.

திருமங்கை ஆழ்வார் வந்த போது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் இந்தத் தலம் திருநீர்மலை என்ற பெயரைப் பெற்றது. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள் என்றும் காண்டபவன நாதன் என்றும் பெருமாள் அழைக்கப்பட்டார்.

இந்தத் தலம் ஸ்வயம் வ்யக்த தலம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தானாகவே தோன்றிய தலம் என்று பொருள். முக்தி அளிக்கும் தலங்கள் எட்டில் இதுவும் ஒன்று. ஶ்ரீரங்கம், ஶ்ரீ முஷ்ணம், திருப்பதி, சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகியவை ஏனைய ஏழு தலங்களாகும்

இத்தலத்தில் ஒரு நாள் செய்யும் புண்யகாரியம் மற்ற தலங்களில் நூறு ஆண்டுகள் செய்வதற்கு சமம் என்றும் தோயாத்ரி மலையை தரிசித்த மாத்திரத்திலேயே பாவங்கள் போய்விடும் என்றும் பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. ஆயுள் விருத்தியை அருளும் தலமாகவும் திருமணப் ப்ராப்தி தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலமானது திருமங்கை ஆழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். திருமங்கையாழ்வார், ‘மாமலை’ என்று திருநீர்மலையைக் கூறிப் புகழ்கிறார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நீலமுகில் வண்ணனும் அணிமாமலர் மங்கையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-28; இந்துமத கலைச்சொல் அகராதி-28 (Post No.15,317)

Written by London Swaminathan

Post No. 15,317

Date uploaded in London –  28 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

DU , DW words

துஷ்யந்தன்

இந்தியாவுக்குப் பாரதம், பரதக்கண்டம் என்று பெயர் சூட்டிய பரதனின் தந்தை துஷ்யந்தன்.

சகுந்தலையைக் காதல் மணம் புரிந்த மன்னன் ; இவனது கதையை உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தல நாடகத்தில் படித்தறியலாம். கண்வர் ஆஸ்ரமத்தில் கண்ட சகுந்தலாவை மணந்து பரதன் என்ற பிள்ளைக்குத் தந்தை ஆனான். அவர்களை விட்டு தலைநகருக்குச் சென்றவன் அவர்களை மறக்கவே கண்வ மகரிஷி தூதருடன் துஷ்யந்தன் அரண்மனைக்கு அனுப்பினார்; அப்போது அவர்களை  யார் என்றே தெரியாது என்று சொன்னபோது ஒரு அசரீரி அவர்களை மனைவி, மகன் என்பதை நினைவுபடுத்தியவுடன் அவர்களை ஏற்றான்.

Duṣyanta

A reputed King of the Lunar dynasty. Kālidāsa immortalised him thorough his world famous Sanskrit play Sakuntalā; while out for hunting he came to Kaṇva’s hermitage, saw the beautiful Śakuntalā, married her and left for his capital the next day. A son Bharata was born to Śakuntalā and he was brought up by Kaṇva. Śakuntalā came to his palace with the boy but Duṣyanta had forgotten her. A voice from the air asked him to accept them, his wife and son, which he did. The happy pair lived to a good old age and committing the realm to the care of Bharata, retired to the woods. India was named after his son as Bharat. All the stamps and currencies of India carry his name.

***

த்வாபர

க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்  என்ற சதுர்யுகக் கணக்கில் மூன்றாவது யுகம். இதில் மஹாபாரதப் போர் நடந்தது பின்னர் கலியுகம் துவங்கி இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ண  பரமாத்மா வாழ்ந்த யுகம் இது. மாபாரதப் போர் முடிந்தவுடன் அடுத்த கலியுகம் துவங்கியது .

Dwapara Yuga is identified as the third Yuga in Hindu Puranas. Dwapara Yuga, marks an era characterized by a decline in virtue and an increase in human conflict and complexity. It is the era when Sri Krishna lived and the Mahabharata war was fought.

****

துவாரகா

குஜராத்தில் கடலோரமாக உள்ள நகரம் ; கால யவனர் படையெடுப்பினால், கிருஷ்ணர், யாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு 800  மைல்கள் நடந்து துவாரகையில் குடியேறினார் ;  பின்னர் அதன் பகுதியையும் கடல் கொண்டது அந்த துவாரகைத் துறைமுகத்தை கடல் தொல் பொருட் துறையினர் கண்டுபிடித்துவிட்டார்கள்.

Dvārakā is a small city located on the western tip of the Gujarat peninsula on the Arabian Sea. Capital of Krishna, built for him by Revata in the midst of sea  for fear from Kālayavana; Krishna carried the spoils of war with the Yavanas to that place; he performed the aśvamedha there. Nārada lived there for a time to worship Krishna; the city was swallowed up by the sea excepting Krishna’s mansion; recently marine archaeologists have discovered the drowned city.

***

த்வஜம் ; ஆரோகணம் , அவரோகணம்

த்வஜம் என்றால் கொடி; இந்துக்கள் கண்டுபிடித்து உலகிற்குக் கொடுத்த சின்னம் ; ராமாயண, மஹாபாரதக் காலம் முதல்  எல்லா மன்னர்களின் கொடிகளையும் புலவர்கள் பாடிவைத்துள்ளனர். தமிழ் மன்னர்களும் கொடிகள் வைத்திருந்ததை சங்க கால நூல்களில் காண்கிறோம்.

கோவில்களில் திருவிழாவுக்கு முன்னால் அந்தக் கடவுளரின் சின்னத்துடன் கொடிகளை ஏற்றுவார்கள் ; இதை த்வஜாரோஹணம் என்பர் ; திருவிழா முடிந்தவுடன் கொடியை இறங்குவார்கள்; இது த்வஜ அவரோகணம் என்று அழைக்கப்படும்; பொதுவாகக் கோவில் உள்ள ஊரில் கொடி ஏற் றிவிட்டால் அவர்கள் அந்த 10 அல்லது 13 நாட்களுக்கு வெளியூருக்குச் செல்ல மாட்டார்கள்.

Dhvaja ध्वज Dwaja

A flag, banner, standard, ensign; all Hindu Gods have one flag. We findthem even in 2000 year old Sangam Tamil literature. This Hindu invention spread to different parts of the world. Ramayana and Mahabharata mentioned the flags of different personalities. Even today the respective flags are carried in Hindu procession of Gods and Goddesses. On top of the temple towers, one can see them fluttering in the wind.  Annual festivals in Temples begin with hoisting of the flag and it is called Dwaja Aarohana. After tefestial they bring it down (Dwaja Avarohona).  When there is a festival, normally the residents wont leave the town if the flag is hoisted

***

தூதர்

தூதர் என்பதைக் கண்டுபிடித்து உலகிற்குக் கொடுத்தவர்களும் இந்துக்களே. இந்த ஸம்ஸ்க்ருதச் சொல் திருக்குறள் முதலிய இலக்கியங்களில் உள்ளது. ரிக்வேதம், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றில் தூது முக்கியப் பங்கு வகிக்கிறது . தூதர்களுக்கான விதி முறைகள் சலுகைகள் , உரிமைகள் இலக்கணம் பற்றித் தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் விரிவாகப்  பேசுகின்றன. உலகில் இதை வேறு எங்கும் காண முடியாது. 

***

Dūta (दूतrefers to “ambassador”, to be carefully appointed by the king.

We see it from Rig Veda to later Chanakya Niti Books. Ramayana and Mahabharata give much importance to it. Krishna and Hanuman acted as ambassadors.

Tamil book Tirukkural and other didactic Tamil works deal with it in detail. The ambassadors should be intelligent, pure-hearted man of noble family, efficient, well-versed in all the Śāstras, and capable of interpreting other men’s feelings from their means and demeanours. It is used throughout Dharmaśāstra literature such as the Manusmṛti and the Baudhāyana-dharmasūtra.

Like Flag, Chess, Decimal system, this concept also spread to different parts of the world from Hindu scriptures.

***

Zeus in Greece

தியெளஸ்பிதா

வேதத்தில் வரும்  கடவுள்களில் ஒருவர்; வானத்தையும் பூமியையும் குறிக்கையில் வானமே கடவுள் வானத்திலுள்ள கடவுள் என்ற பொருளில் வருகிறது ; கிரேக்க புராணங்கள் இவரை ZEUS ஸுஸ் என்று பகரும். இந்தக் கடவுள் இந்துக்களின் வழிபாட்டில் இல்லை. கோவில்களிலும் சிலைகள் இல்லை, ஏனைய வேத காலக் கடவுளரான அக்கினி, மித்ரன், இந்திரன், வருணன், ஆதித்யன், காயத்ரீ முதலியோரை பிராமணர்களும் ஏனையோரும் தினசரி வழிபடுகின்றனர்; கோவில்களில் சிலைகளும் உள்ளன.

Dyaus Pita (द्यौष् पिता)

It is one of the insignificant deities in the Vedic pantheon, representing the personification of the Sky Father. As a primordial god mentioned in the Rigveda, he embodies the vast celestial expanse and the paternal authority over both gods and mortals. The term “Dyaus” is cognate with the Greek Zeus  and the Latin Jupiter which indicate the spread of Hinduism to Europe. In Europe we see this deity one thousand years after the Rig Veda.

This is insignificant in Hindu worship. We don’t see it anywhere in Hindu worship unlike Agni, Indra, Mitra, Varuna, Aditya, Gayatri which are worshipped even today thrice a day by Brahmins and others. We have no statues or idols for this deity.

***

துவார பாலகர்கள்

Sabarimalai Dvarapalakas

கோவில்களில் கர்ப்பகிரகத்துக்கு முன்னுள்ள மண்டபத்தில் இரு புறமும் துவார பாலகர்கள் சிலைகள் இருக்கும்; இவர்கள் கடவுளரின் வாயிற்காப்போர்; இவர்களுடைய அனுமதி பெற்றே நாம் இறைவனைத் தரிசிக்கிறோம் என்பது ஐதீகம் . ஜய, விஜய என்பது  இவர்களின் பெயர்கள்.

வைகுண்டத்தில் எட்டு துவாரபாலகர்கள் , அதாவது நான்கு திசைகளில் நான்கு ஜோடிகள் இருப்பதாக வைணவ நூல்கள் பகருகின்றன

Dwarapalaka /Dvārapālaka (द्वारपालक)

Dwara is door; a door-keeper, porter, warder. In the front of main shrine in all the temples we see them on either side of the entrance or gate. Their names are Jaya and Vijaya. Dvārapālakas are the door-keepers of the temples, and sculptures representing them are noticed invariably in all the temples. The sculptures of these Dvārapālaka are found carved both in relief as well as in the round. They are always carved in pairs.

The eight door-keepers of Vaikuntha (dvāra-pālaka) are known as

Dhāta & Vidhāta (East), Bhadra & Subhadra (South); Nanda, Sunanda (North);

Jaya & Vijaya (West). Sometimes Nanda and Sunanda are replaced by Caṇḍa and Pracaṇḍa.

***

தூபம்தீபம்

இந்துக்களின் பூஜை முடியும் தருணத்தில் 16  வகை உபசாரங்களை இறைவனுக்கு அளிக்கிறார்கள்; அவைகளில் முக்கியமானது தூப, தீபம் ஆகும்.

தூபம் என்பது சாம்பிராணி அல்லது சந்தனம் போன்ற வாசனைப் பொருளின் புகையை கடவுளுக்கு காட்டுவதாகும். தீபம் என்பது நெய் விளக்கினை சுவாமிக்கு காட்டுவதாகும் . முன்னர் பயன்படுத்திய சூடத்தை  இப்போது பயன்படுத்துவதில்லை. நெய் தீபம் காட்டுவதிலும் பல வகை வடிவமுள்ள விளக்குகளை பயன்படுத்தி தீபாராதனை செய்வார்கள்.

Dhupa Deepa

Dhūpa (धूप)

At the end of all Pujas, Dhupa and Deepa are offered to Hindu Gods. They are the main ones out of the sixteen honours done towards the end of Hindu rituals.

Dhup is Incense, frankincense, perfume, any fragrant substance.  The vapour issuing from any fragrant substance (like gum, resin &c.), aromatic vapour or smoke

Deepa is Lamp. Normally Ghee lamp is shown to God. The camphor used previously is banned in many temples now. In South Indian Temples different shaped lamps are used for Deepaaradhana (Deepa Aarti)

—subham—

Tags- Dhupa Deepa, Dyaus Pita, Dvara Palaka, Dushyanta, Dwaja, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-28; இந்துமத கலைச்சொல் அகராதி-28

திருப்புகழில் பத்திரிகை பெயர்கள்: தினமணி,தினகரன்,குமுதம், தந்தி,மலர்! (Post No.15,316)

Written by London Swaminathan

Post No. 15,316

Date uploaded in London –  28 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நாம் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் திருப்புகழ் முதலிய பக்திப் பாடல்களைப் படிக்கையில், பக்தியில் மூழ்கி விடுவதால் அவர்கள் சொல்லும் பல அதிசய விஷயங்களைத் தவற விட்டு விடுகிறோம்; முன்னர்  எழுதிய கட்டுரைகளில் விண்வெளிப் பயணம், மனு நீதி நூல் பற்றிய தகவல் , தேவியர்கள் பெயர்கள், நரகத்துக்குப் போகும் குண்டர்கள் பட்டியல், நாயாகப் பிறக்கும் துஷ்டர்கள் பெயர்கள் ஆகியவற்றை எழுதினேன்.

தமிழ்ப் பத்திரிக்கைகளின் பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதை நாம் அறிவோம் ;  குறிப்பாக தினம் என்ற சொல் நாளேடுகளில் உள்ளது.  இந்த நோக்கில் பாடல்களை பயில்கையில் நினைவு வைத்துக்கொள்வது எளிதாக இருக்கும். அருணகிரிநாதர் நமக்கு வழங்கிய சந்தம் மிகு திருப்புகழ் பாடல்களில் வரும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.

***

தினமணி = சூரியன்

தினகரன் = சூரியன்

தினமணி  சார்ங்க  பாணி  யெனமதிள்  நீண்டு  சால

தினகர  னேய்ந்த  மாளி  ……  கையிலாரஞ்

செழுமணி  சேர்ந்த  பீடி  கையிலிசை  வாய்ந்த  பாடல்

வயிரியர்  சேர்ந்து  பாட  ……  இருபாலும்

இனவளை  பூண்கை  யார்க  வரியிட  வேய்ந்து  மாலை

புழுககில்  சாந்து  பூசி  ……  யரசாகி

இனிதிறு  மாந்து  வாழு  மிருவினை  நீண்ட  காய

மொருபிடி  சாம்ப  லாகி  ……  விடலாமோ

வனசர  ரேங்க  வான  முகடுற  வோங்கி  ஆசை

மயிலொடு  பாங்கி  மார்க  ……  ளருகாக

மயிலொடு  மான்கள்  சூழ  வளவரி  வேங்கை  யாகி

மலைமிசை  தோன்று  மாய  ……  வடிவோனே

கனசமண்  மூங்கர்  கோடி  கழுமிசை  தூங்க  நீறு

கருணைகொள்  பாண்டி  நாடு  ……  பெறவேதக்

கவிதரு  காந்த  பால  கழுமல  பூந்த  ராய

கவுணியர்  வேந்த  தேவர்  ……  பெருமாளே.

****

பொருள்

தினமணி சார்ங்க பாணி யென

சூரியன், சாரங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்திய திருமால் என்று சொல்லும்படியான பெருமையுடன்,

மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில்

மதில் நீளமுடையதாக, மிகுந்த சூரிய ஒளியைப் பெற்றிருக்கும் மாளிகையில்…………………….

*****

குமுதம்-  அல்லி மலர்

அமுதினை மெத்தச் சொரிந்து மாவின

     தினியப ழத்தைப் பிழிந்து பானற

          வதனொடு தித்தித் தகண்ட ளாவிய …… விதழாராய்

அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்

     வருபசி யர்க்குற் றவன்பி னாலுண

          வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் …… மயல்தீரக்

குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய

     நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய

          குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண …… தனபாரக்

குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு

     மவர்மய லிற்புக் கழிந்த பாவியை

          குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற …… அருள்வாயே

பொருள்

குமுதம்- தமிழில் அல்லி மலர் – நிலவு உதித்தவுடன் குளத்தில் மலரும்

குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய நிலவு எழு முத்தைப்

புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தன பாரக்

குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும் … (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற

அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை குரை கழல் பற்றிப்

புகழ்ந்து வாழ்வு உற அருள்வாயே … அந்த விலைமாதர்களின்

மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக.

*****

தந்தி= தந்தம் உடையவன்  (கணபதி/ ஏகதந்தன்)

நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் …… படியாதே

நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் …… பதமீவாய்

வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் …… படைமீதே

மாற்றந் தந்துப் பந்திச் சமருக் …… கெதிரானோர்

கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் …… பொருவோனே

கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் …… தொளிர்வேலா

வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் …… கிளையோனே

வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் …… பெருமாளே.

பொருள்

வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே …

அடியார்களின் விருப்பத்தை (நிறைவேற்றும் பெருமானும்), தொப்பையை உடையவனும் (ஆகிய) யானைமுகப் பெருமானுக்குத் தம்பியே,

***

தினத் தந்தி என்பது லண்டனில் உள்ள டெய்லி டெலிக்ராப்  என்ற பத்திரிகையைப் பர்த்து துவங்கப்பட்ட பத்திரிகை அதன் பொருள்  தந்தி = டெலிகிராப் என்பதாகும் .

அருணகிரிநாதர் மேலும் பல பாடல்களில் தினமணி, தினகரன், தந்தி போன்ற சொற்களை பயன்படுத்தியுள்ளார்

***

மலர்= தாமரை

மலர் என்றால் தாமரை என்றும் பொதுவாகப் பூ என்றும் பொருள் ; தின என்ற சொல் இல்லாமல் பல இடங்களில் திருப்புகழில் மலர் வருகிறது.

முதல் பாடலிலேயே மலர் வந்து விடுகிறது !

கைத்தல  நிறைகனி  அப்பமொ  டவல்பொரி

கப்பிய  கரிமுகன்  –  அடிபேணிக்

கற்றிடும்  அடியவர்  புத்தியில்  உறைபவ!

கற்பகம்  எனவினை  –  கடிதேகும்

மத்தமும்  மதியமும்  வைத்திடும்  அரன்மகன்

மற்பொரு  திரள்புய  –  மதயானை

மத்தள  வயிறனை  உத்தமி  புதல்வனை

மட்டவிழ்  மலர்கொடு  –  பணிவேனே

முத்தமிழ்  அடைவினை  முற்படு  கிரிதனில்

முற்பட  எழுதிய  –  முதல்வோனே

முப்புரம்  எரிசெய்த  அச்சிவன்  உறைரதம்

அச்சது  பொடிசெய்த  –  அதிதீரா

அத்துய  ரதுகொடு  சுப்பிர  மணிபடும்

அப்புனம்  அதனிடை  –  இபமாகி

அக்குற  மகளுடன்  அச்சிறு  முருகனை

அக்கண  மணமருள்  –  பெருமாளே.

பொருள்

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே

மத்தளம் போன்ற பெரிய வயிற்றை உடையவனே! உத்தமியான பார்வதி தேவியின் புதல்வனே! தேன் சொட்டும் நறுமணம் மிக்க (தாமரை) மலர்களால் உன்னை நான் பணிந்து வணங்குவேன்.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி

—subham—

Tags – திருப்புகழ் , பத்திரிகை பெயர்கள், தினமணி , தினகரன்,  குமுதம், தந்தி, மலர்

இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்! (Post.15,315)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,315

Date uploaded in London –   28 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

இதய வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்!           (PAMUKKALE SPRINGS)

ச.நாகராஜன் 

இதய வியாதிகளைப் போக்கும் வெந்நீர் ஊற்றுக்களைக் கொண்ட ஒரு அதிசய இடம் இருக்கிறது தெரியுமா?

ஏராளமானோர் அங்கு சென்று பயனடைந்து வருகிறார்கள்! 

தென்மேற்கு துருக்கியில் உள்ள பாமுக்கலே வெண்மையான மலைச் சிகரங்களும் வெந்நீர் ஊற்றுக்களும்  அருகில் இருக்கும் டெனிஸ்லீ (DENIZLI)  நகரின் அழகிய காட்சிகளும் உலக மக்களை ஈர்க்கிறது.

பாமுக்கலே என்ற துருக்கி வார்த்தைக்கு “பஞ்சுக் கோட்டை” என்று பொருள்!

 300 அடி உயரம் உள்ள மலையிலிருந்து ஆவியுடன் கூடி வரும் நீர் 2000 வருடங்களாக ஒரு வெந்நீர் ஊற்றாகப் பயன்படுவதோடு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதய வியாதி உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த சிகிச்சை தலமாகவும் ஆகி விட்டது. 

இந்த சிகிச்சைக்காக ஏராளமானோர் வர ஆரம்பித்ததால் ஹைராபோலிஸ் (Hierapolis)  என்ற ஒரு பெரும் நகரமே உருவாகி விட்டது.

கி.மு. 190ம் ஆண்டு இரண்டாம் யூமெனஸ் என்ற மன்னனால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் அபூர்வ சக்தியால் இது புனித நகரம் என்று அழைக்கப்படலாயிற்று. யூமெனஸ் கிரேக்க அரசை விரிவுபடுத்தி ஆசியாமைனர் முழுவதையும் ஆள ஆரம்பித்தான்.

 மூன்றாம் அட்டாலஸ் என்ற மன்னன் ஆளும் சமயத்தில் ரோமானியர்கள் இந்த பரந்த சாம்ராஜ்யத்தின் மீது பேராசையுடன் பார்வையைச் செலுத்தினர்.

பெரும் பேரழிவைத் தவிர்க்கவும் தனது சொந்த பொக்கிஷத்தைக் காக்கவும் அவன் விருப்பத்துடன் இந்த இடத்தை ரோமானியர்களுக்கு விட்டுக் கொடுத்தான். கி.மு 135ல் அவன் இறந்தான். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாம கி.பி. 17ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரும் பூகம்பத்தால் இந்த நகரம் முற்றிலுமாக அழிந்தது.

அடுத்த இருநூறு ஆண்டுகளில் ரோமானியர்கள் தங்கள் விருப்பப்படி இந்த இடத்தை புனர் நிர்மாணம் செய்ய ஆரம்பித்தனர்.

ஆங்காங்கே குளியலறைகள், அபல்லோவுக்கான ஒரு ஆலயம்,, தூண்களுடன் கூடிய ஒரு பெரிய சாலை உள்ளிட்டவற்றை அவர்கள் அமைத்தனர்.

அதுமட்டுமின்றி 15000 பேர் உட்கார்ந்து பார்க்கும் வண்ணம் வசதியாக உள்ள ஒரு அரங்கமும் கட்டப்பட்டது.

அழகிய தங்கு விடுதிகள் அனைவரையும் வா வா என்று அழைத்தன. மூன்று ரோமானிய மன்னர்கள் இங்கு வந்து தங்கினர்.

பாதாள லோகத்தின் ரோமானியக் கடவுளான ப்ளூடோவுக்கும் 10 அடி சதுரத்தில் ஒரு புனித இடம் அர்ப்பணிக்கப்பட்டது. 

அந்த பத்து அடி சதுரத்திற்குள் வெப்பமுடன் நீரூற்று பீச்சி அடித்து உள்ளே ஆவியுடன் வரும் போது துர்நாற்றம் ஏற்பட்டதால் இதை கெட்ட பிசாசுகளின் இடம் என்று அனைவரும் சொல்ல ஆரம்பித்தனர்.

ரோமின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர் ஸ்டீபோ (கி.மு 60 – கிபி..21) இங்கு வந்து ஆவி பறக்க வரும் துர்நாற்றம் அடிக்கும் நீரைப் பார்த்து அது விஷமுள்ளது என்று தீர்மானித்து சில சிட்டுக்குருவிப் பறவைகளை அங்கு தூக்கிப் போட்டார். அவை மறுகணமே இறந்தன.

ஆனால் இங்குள்ள குறி சொல்லும் குருமார்கள் மட்டும் இந்த விஷப்புகையால் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு அதிசயமாக இருந்தது.

பாமுக்கலே பஞ்சுக் கோட்டை அதன் பெயருக்குத் தக்கபடி பஞ்சினால் ஆக்கப்பட்ட பெரும் கோட்டையாகவே இன்றளவும் காட்சி அளிக்கிறது.

அடுத்து இங்கு உற்பத்தியாகும் பஞ்சாடைகளைச் சுத்தம் செய்ய இதன் நீர் பெரிதும் உதவுகிறது. பஞ்சு ஆடைகளில் பல வித வண்ணங்கள் பூசவும் இந்த நீர் பயன்படுகிறது.

பெயர் தெரியாத ஒரு கவிஞர் டைடான் என்னும் ராட்சஸ உருவம் உடையவர்கள் இங்கு பஞ்சுப் பொதிகளை போட்டு உலர்த்துவதாகக் கவிதை இயற்றியுள்ளார். 

இங்குள்ள நீரானது கால்சியம் கார்பனேட்., சல்பேட்,, சோடியம் குளோரைட், இரும்பு,, மக்னீஷியம் கார்பொனேட். மக்னீஷியா உள்ளிட்ட பல தாதுக்களால் வளம் பெறுகிறது என்பது நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கு வெந்நீர் ஊற்றில் குளித்த மறுகணமே தசைகள் ஓய்வாக தளர்ந்து இருப்பதை அனைவரும் உணர்கின்றனர்.

இந்த நீரை அருந்துவதால் குடல் சுத்தமாவதோடு, ஜீரண சக்தியும் அதிகமாகிறது.

காலம் காலமாக அனுபவ மொழிகளால் இதன் புகழ் பெருகப் பெருக

இங்கு வரும் பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கிறது. 

இயற்கை அளித்துள்ள வரபிரசாதம் வியாதிகளைப் போக்கும் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுக்கள்!!

** 

Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 (Post No.15,314)

Written by London Swaminathan

Post No. 15,314

Date uploaded in London –  27 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Item 288   War Mongers

Puranānūru 7, Poet Karunkulal Āthanār sang to Chozhan Karikāl Peruvalathān (Karikālan),( kari kaalan)

Karikal Choza was one of the greatest Cholza kings of Sangam Age. The worst thing about the Tamils is they fought among themselves continuously for over 1500 years in Tamil Nadu. Here the poet praised Karikal Choza for setting fire to his enemy towns without considering whether it is day or night. What we hear is the crying of the people. The king plundered the towns of the enemies. This is the message of the poem. Tamils were war mongers.

***

289

Karikalan was riding an elephant unlike other kings who rode on a horse. He is called Black Legged or Mr Black Foot. There was a family fighting to get the throne and there was an arson attack against him where he got these black feet. We have a similar named king in Puranas- Kalmasha pada.

***

290

Vishnu is praised as having Lakshmi on his chest. Here Karikalan is considered a king where Goddess of wealth and Kingdom resides on his chest refusing to go anywhere else. This is an ancient Hindu belief. Even the kingdom is called Rajya Lakshmi. Prosperity, Wealth, Asset are called Lakshmi in Hindu literature.

***

291

Name of the poet

The same poet composed another poem about Karikalan. Commentators guess that his hair was so black even when he was old and so the poet was called Karun Kuzal + Aathan. We see more names in Tamil based on one’s body parts. More poets have Eye in their names such as Big Eye, Red Eye etc.

***

Important lines from Puram verse

Your chest is so broad, and Thirumakal (Lakshmi) forsakes others for it. 

………………..

You do not consider whether it is day or night to plunder enemy towns, blazing them as their citizens cry loudly.

In Tamil

புறநானூறு 7பாடியவர்: கருங்குழல் ஆதனார்பாடப்பட்டோன்:  சோழன் கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்), 

மா மறுத்த மலர் மார்பின் Lakshmi in Chest,  5
……………….

எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை Arson attack and plundering

*** 

292 

King is greater than Sun 

புறநானூறு 8பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்

Puranānūru 8, Poet Kapilar sang for Cheraman Selva Kadunkō Vāzhiyāthan, 

Kapilar is the most famous poet of Sangam age. He had the highest praise from other poets for being a Brahmin of spotless character. Moreover, he was the one who has contributed highest number of poems in Sangam tamil Literature.

*** 

293

Here Kapilar praised Chera King by comparing him with the Sun. According to the poet Sun is defective in many ways. Sun hides behind the mountain (implying Chera King never hides). Sun shines only in the day time (Chera king is shining for ever)

*** 

294

My Comments

Commentators never mentioned Zodiac or Uttarayana (northward march of Sun) and Dakshinayana (southward march of sun). I think Kapilar meant only this when he said மாறி வருதி – you come from various directions. 

Another point that I would like to add is the Zodiac. Sun travels in circles mean he moves from one sign to another sign. He completes one circle every year by travelling through 12 zodiac signs.

***

295 Sanskrit Words 

Note the Sanskrit words Bogam and  Mandilam in the poem

 ***

Important  lines
He (Chera king)  is greatly generous. 

O sun which goes rapidly in circles!  How can you
compare yourself to Cheralathan with a murderous
army that fights battles?

 போகம் (Sanskrit word)  வேண்டி – desiring pleasure,

கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ – how are you equal to Cheralathan with murderous armies that attack .

வீங்கு செலல் மண்டிலம் (Sanskrit Word) – O sun who goes fast in circles,  மலை மறைந்து ஒளித்தி – you hide behind mountains,

***

296

Puranānūru 9, Poet Nettimaiyār sang for Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi.

Go Brahmanebhya Subhamastu Nityam Loka Samstha Sukino Bhavantu

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் – திருஞான சம்பந்தர்

புறநானூறு 9பாடியவர்: நெட்டிமையார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

This Pandya King was praised in Puram verse six as a great worshipper of Siva and Brahmins reciting Four Vedas. Here Nettimaiyar adds the ancient Hindu prayer that the whole world should live happily. They always mention From Brahmin to people of all castes, From cow to all living beings should live happily. All the Sanskrit dramas and all the Hindu rituals end with this prayer.

வாழ்க அந்தணர்வானவர்ஆன் இனம்!

வீழ்கதண்புனல்! வேந்தனும் ஓங்குக!

ஆழ்கதீயது எல்லாம்! அரன் நாமமே

சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

***

புறநானூறு 9பாடியவர்: நெட்டிமையார்

 “ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்” என  5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்,
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய, குடுமி, தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின் நெடியோன்  10
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

He announces in a righteous manner, “Cows,
Brahmins with the nature of cows, women, those
who are sick, and those living in the southern
land with no gold-like sons to perform precious
last rites, take refuge!   We are ready to shoot
volleys of arrows!”

***

297

Dharma Yuddha- Hindu Wars based on Rules

Kannaki also ordered the Fire God Agni not to burn the above category of people  in Silappadikaram.

In other verses of Purananuru ,we see those who have not got sons yet should not undertake any life threatening task or ritual. So, kings always announce before starting a war that all those vulnerable people should keep away from the war zone. We see this in Mahabharata as well. After sun set both the fighting parties even treated injured people.

***

298 Kumari Kanda

This poet lived in the age when ancient South Madurai existed. Later the sea devoured a big area in a Tsunami catastrophe including Then Madurai. Here we get important geographic details about Pahruli River that ran in ancient Kumari Region and the Nediyon Hills.

We also get some details about Indra Festival (Ocean Festival). Silappadikaram and Manimekalai, two Tamil epics, give us full details of Indra Festival.

***

our king Kudumi, live for long, more days
than the number of sands on the banks of Pakruli River with fine water,
where his ancestor Nediyōn celebrated ocean festivals,
and gave musicians fresh, reddish gold gifts!

***

299 Sand Simile

Hindu poets who composed poems in Tamil and Sanskrit wished long life to the kings. They always used infinity years by saying king should live more years than the sand particles on the banks or the number of stars in the sky.

Now we know that the universe has billion, billion stars. No one can even imagine the number of sand particles on any riverbank or sea shore. How clever our poets were!

***

300 முந்நீர் Three Waters= Sea

Tamils were great observers of nature. In Tamil only we have a strange name for sea or ocean Three Waters.

Two commentators give two different interpretations.

Sea is composed of River water, Rain water and Spring water and so it is Three Waters.

Another interpretation is that Sea does three tasks Creation, Protection and Destruction like Brahma, Vishnu and Siva.

Both are very scientific. We know how land came  from sea and how they would be destroyed in Tsunami at the end.

Spring water: Now only scientists have discovered deep sea hot springs. Probably our ancestors knew this as well.

Imporatnt Lines in Tamil

முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75

Meanings:  ஆவும் – and cows, ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – and Brahmins who have the nature of cows, பெண்டிரும் – and women, பிணி உடையீரும் – and those of you with diseases, பேணி – protecting, தென்புல வாழ்நர்க்கு – to those who live in the south, அருங்கடன் இறுக்கும் –  performing final rites, பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும் – and those of you who have not given birth to gold-like sons (பெறாஅதீரும் – அளபெடை), எம் அம்பு கடி விடுதும் – we are going to shoot our arrows நெடியோன் – your ancestor Nediyōn, நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே – many more days than the number of sands on the banks of Pahruli river with good water (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

To be continued…………….

Tags- Purananuru Wonders 5- Ancient Tamil Encyclopaedia Part 45 , Karikalan, Mudukudumi, Three Waters, war mongers, Arson attack, Kapilar

GNANAMAYAM 28 December 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Jayanthi Sundar Team-

***

NEWS BULLETIN

LATHA YOGESH from London presents World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Mrs Chitra Nagarajan from Bangalore

Topic- Thiruneermalai Temple

***

Talk by S Nagarajan from Bangalore

Topic: Sri Paramahamsa Yogananda

****

SPECIAL EVENT-

RSS CENTENARY CELEBRATIONS

VIDEO PRESENTATION BY BANGALORE GANESH

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 28th December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

திருமதி சித்ரா  நாகராஜன் – பெங்களுர்

தலைப்பு — திருநீர்மலை கோவில்

****

சொற்பொழிவு : திரு எஸ் நாகராஜன் , பெங்களூர்

தலைப்பு : பரமஹம்ச யோகானந்தா

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

நூற்றாண்டு விழாக்கண்ட ஆர். எஸ். எஸ்.

வீடியோ காட்சி தொகுத்து வழங்குபவர் – பெங்களூர் கணேஷ்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 28-12- 2025, programme

வள்ளுவரைத் தோற்கடித்தார் அருணகிரி!

தமிழிலேயே பெரிய எண் நூறு லக்ஷம்கோடி! (Post.15,313)

Written by London Swaminathan

Post No. 15,313

Date uploaded in London –  27 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கோடி என்ற சம்ஸ்க்ருத எண்ணை திருவள்ளுவர் குறைந்தது ஆறு இடங்களில் எண்ணிக்கை என்ற பொருளில் பயன்படுத்துகிறார் . இவை தவிர வேறு பொருளிலும் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார் ஆங்கிலத்தில் கோடி என்பதை பத்து மில்லியன் என்பார்கள் வள்ளுவர் ஓரிடத்தில் எழுபது கோடி என்று பாடுகிறார் – குறள் 639. இதை ஆங்கிலத்தில் 700  மில்லியன் என்பார்கள் ; நான் பார்த்தவரை திருக்குறளில் இதுதான் பெரிய எண் ; இவரைத் தோற்கடிக்கும் ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகிறார் . அதை நீங்கள் தாளில் / காகிதத்தில் எழுதமுடியாது . ஒரு கோடி என்பதை எழுதவே நமக்கு எட்டு இலக்கங்கள் தேவை? 10,000,000

ஆயிரம் கோடிக்கு 11 இலக்கங்கள் தேவை.

அருணகிரியோ நூறு லட்சம் கோடி என்கிறார் ;  எனக்குத் தலை சுற்றுகிறது; உங்களுக்கு தலை சக்கர் அடிக்காவிட்டால், முடிந்தால் எழுதிப்பாருங்கள். அதை உங்கள் காமெண்ட்டில் பதிவு செய்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

***

இதோ அந்தப் பாடல்

Thanks to Sri Gopalasundaram and kaumaram.com

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென

     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென

          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென …… வருமானார்

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு

     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு

          தேடியொக்க வாடி யையோ வையோ வென …… மடமாதர்

மார்படைத்த கோடு பளீர் பளீ ரென

     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென

          மாமசக்கி லாசை யுளோ முளோ மென …… நினைவோடி

வாடைபற்று வேளை யடா வடா வென

     நீமயக்க மேது சொலாய் சொலா யென

          வாரம்வைத்த பாத மிதோ இதோ என …… அருள்வாயே

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்

     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்

          பானிறக்க ணேசர் குவா குவா கனர் …… இளையோனே

பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை

     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு

          பாசமற்ற வேத குரூ குரூ பர …… குமரேசா

போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென

     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென

          போயறுத்த போது குபீர் குபீ ரென …… வெகுசோரி

பூமியுக்க வீசு குகா குகா திகழ்

     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்

          பூணியிச்சை யாறு புயா புயா றுள …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என … அழகு மிக்க உடல்

பசுமையான குளிர்ந்த நிறத்துடன் விளங்க,

நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என … கால் சிலம்பின் ஓசை கலீர்

கலீர் என்று ஒலிக்க,

சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார் …

இணைந்து செல்லும் பாதங்கள் செக்கச் செவேல் எனத் திகழ வருகின்ற விலைமாதர்கள் சிலரும்,

சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்) …

கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்து சில சில

பெண்களும்,

நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு … நூறு லக்ஷ கோடி

அளவில் மிகப் பலத்த மோகத்தோடு

தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர் … தேடி

வைத்துள்ள பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும்படி (இழக்கச் செய்கின்ற) இளம் மாதர்களின்

மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என … நெஞ்சம் எல்லாம்

பரந்துள்ள மலை போன்ற மார்பகம் பளீர் பளீர் என்று ஒளி வீச,

ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என … அதைக் கண்டு மனக்

கலக்கம் உற்று என் உயிர் பகீர் பகீர் எனப் பதைக்க,

மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி …

அம்மாதர்களின் பெரிய மயக்கத்தில் ஆசை உண்டு, உண்டு என்று

நினைவானது ஓடி,

வாடை பற்று வேளை அடா அடா என … (அந்தக் காமப் பித்தக்)

காற்று என்னைப் பிடிக்கின்ற சமயத்தில் அடா அடா என்று என்னைக் கூவி அழைத்து,

நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என … உனக்கு என்ன

மயக்கம் இது சொல்லுக, சொல்லுக என வற்புறுத்தி,

வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே …

நீ அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள்

புரிவாயாக.

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ் … பாரதத்தை மேரு

மலையின் வெளிப் புறத்தில் நன்கு விளங்கும்படி

கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர் … தமது

தந்தத்தையே ஒடித்து அந்த நாளில் மலையில் எழுதிய யானை

முகத்தவரும்,

பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே …

சூரியனைப் போன்ற நிறத்தை உடைய கணபதியும், சிறிய மூஞ்சூறு

வாகனத்தவரும் ஆகிய விநாயகருக்குத் தம்பியே,

பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை … பாக்கள் சிறப்புடனும்

அழகுடனும் உள்ள தமிழை, தமிழ்க் கடவுளாய் நின்று,

மா முநிக்கு காதில் உணார் உணார் விடு … சிறந்த அகத்திய

முனிவருக்கு, செவியில் நன்கு ஆராய்ந்து உபதேசம் செய்த,

பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா … இயல்பாகவே

பாசங்களினின்று நீங்கிய வேத குருபரனாகிய குமரேசனே,

போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என … போரில்

மிக்கவனாகிய சூரன் விட மாட்டேன் விடமாட்டேன் என்று,

நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது …

நேராக வந்து எதிர்த்தவுடன் வேலாயுதத்தை படீர் படீர் என்ற ஒலியுடன் (அந்த அசுரர்களைப்) போய் அறுத்த போது

குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா …

ரத்தம் குபீர் குபீர் என்று பூமியில் சிந்த ஆயுதத்தை வீசிய குகனே,

குகனே,

திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா … விளங்கும் சோலை

மலையில் வீற்றீருக்கும் தெய்வமே,

தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள

பெருமாளே. … தேவயானையின் தோளை அணைந்து அன்பு கொண்ட

(6+6=12) பன்னிரண்டு புயங்களைக் கொண்ட பெருமாளே.

***

பிள்ளையார் கதை

இந்தப்பாட்டில் எண் அழகு மட்டும் இல்லாமல், ஓசை அழகும் உளது! அத்தோடு கணபதியானவர் ஒரு தந்தத்தினை ஒடித்து மஹாபாரதம் எழுதிய கதையும் உளது

பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்

     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்

          பானிறக்க ணேசர் குவா குவா கனர் …… இளையோனே

இந்த ஓசை நயத்தில் அவர் கணபதிக்குப்  போடும் குவா குவா – சொல்நயத்தை ரசிக்காதவர் உண்டோ!

இவ்வாறு வெவ்வேறு கோணங்களில் அணுகினால் பாடலை நினைவில் வைத்துக்கொள்ளுவது எளிது; அந்தக் கால கணித இயலையும் அறிகிறோம். தசம முறை என்ற டெசிமல் சிஸ்டத்தைக் கண்டுபிடித்து உலகிற்கு அளித்தது இந்துக்கள்தான் ரிக் வேதம் முழுதும் இதுபோன்ற எண்களைக் காணலாம்.

–subham—

Tags- வள்ளுவர்  தோற்கடித்தார், அருணகிரி, தமிழில்,  பெரிய எண், நூறு லக்ஷம்கோடி