Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
A famous story of two pigeons Kapota and Kapoti is in the Shanti Parva of Mahabharata. Hindus are the only people who treat birds and animals as their own kith and kin. This is in all the stories of Panchatantra and before that, in Ramayana and Mahabharata. Aesop and Jataka stories copied Hindus and changed it slightly to hide their copying act.
India is full of temples associated with animals and birds. Those who study place names will come across such stories. In Tamil Nadu, temples are linked with Ant to Elephant. Other parts of India have stories connected with snakes. Hindus feed the ants and elephants without any discrimination.
What state of being does a person achieve in giving protection to the one who seeks it? was the question put to Bhishma and he answered the question:
A cruel hunter went to a dense forest for hunting. His job was to catch birds and sell them to the village folks. They were all flesh eaters. While he was hunting on a particular day a storm broke out. The forest was flooded. Sun was setting. All the animals and birds were running for shelter. Because it was cold all were shivering. And the hunter was also suffering from cold. at that time, he saw a female pigeon lying in the grass and caught it and put it in his cage. He also took shelter under a tree where many birds were living.
He heard a bird saying,
“Today there was a storm, and it rained heavily. My wife has not yet returned. that was the kapota, Sanskrit word for a female pigeon.
Where is she? Without her, my nest is desolate. Having a son, grandson, daughter in law, servants, a householder’s home is still desolate without his wife.
A house is not home. It is from the wife that the home derives its name. A household without wife is only wilderness.
With one’s wife it is home even under a tree; without the wife even, a palace is wilderness; there is no doubt about it.
For a man there is no wealth greater than his wife. Should he have no support in the whole world, his wife will be his support.
To a man ravaged by illness, and forever in deep trouble, there is no healing greater than the wife.
There exists no friend such as wife, no recourse such as the wife nor there exists a companion such as a wife who helps one in the ordering of one’s life”.
This is in chapter 144 of Shanti Parva and the story continues……………………..
Having heard her husband’s moan, Kapoti spoke from the cage,
“What I will now say to you is to your good, and please do think what you should. Offer protection to this bird catcher, who is feeling cold and hungry. Do your dharma as a householder. You should not worry about me. To live your earthly life you can aways find another wife”.
Immediately her husband pigeonKapota said to the bird catcher,
“Even if one’s enemy come’s to one’s home, one should receive one with hospitality. A tree does not deny its shade even to the person who has come to cut it.” (Shanti Parva-146-6) .
The hunter said that he was hungry. Husband bird gathered some bush near the tree and took a fire burning charcoal from an Ironsmith in the village and lighted the bush fire. He threw himself into the fire so that the hunter could eat its flesh.
Like Valmiki, the heartless hunter’s mind changed, and he threw away all the hunting tools and opened the cage and released Kapota’s wife Kapoti. As a transformed man he walked away. The released Kapoti felt that her husband sacrificed his life to protect the person who came to his house. Kapoti, the female pigeon, happily threw herself into the same fire and perished.
Kapota and Kapota might have perished in body. But their name and fame ill last as long as the Sun and Moon shine on this earth.
***
My comments
Sanskrit and Tamil have come from Lord Shiva according to three Tamil poets Paranjoti, Sivagnana Munivar and the greatest of the modern Tamil poets Subrahmanya Bharati. Both the languages have same concept of Home and Wife.
Home – Gruham- Il
Wife – Gruhini- Illaal
Both the languages have Pancha Yajnam (five tasks) that a man should do every day. Hospitality towards visitors is one of them and it is called Athithi Yajna. Sita Devi and Tamil Kannaki lamented that they were going to lose the duty of hospitality while they were away from home.
Since we do not see these virtues anywhere in the world except Hindus speaking Sanskrit and Tamil, we may conclude that they are one and the same. Those who have studied ancient Sanskrit and Tamil literature can give hundreds of quotations on this topic Hospitality.
(This blog has such quotations listed separately)
–subham—
Tags – Good wife, Part 7, Mahabharata, sacrifice , two pigeons, Kapota, Kapoti, Shanti Parva.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Where is it?
It is in Eran in Madhya Pradesh.
How old is it?
Over 1500 years old. It belongs to the Gupta Dynasty.
What is it?
It is a temple for Vishnu’s Varaha Avatara. The temple itself is shaped as Yajna Varaha (Boar Avatara of Maha Vishnu.)
Who built it ?
King Toramana.
Why did he build it?
To celebrate his victory over the earth (BHUMI) spreading towards ocean on four directions like Varaha Avatar who lifted the mighty earth from the bottom of the ocean which was hidden there by the demons/Asuras.
What is it called in science?
It is part of Geological Science. Hindus taught Geology through the fits three avataras. Mastya/Fish, Kurma/Tortoise and Varaha/boar.
What does it say?
Billions of years ago the earth was full of water. Then came the water borne creatures. Then came the amphibians; then the land animals appeared. Human beings with hard work reclaimed the land and started agriculture, Balarama and Parasurama Rama went with axe throughout earth and taught the people farming. Darwin copied the Dasavatara and wrote his theory. It is called Theory of Evolution.
What is written in Sanskrit here?
It is one of the oldest inscriptions in Sanskrit and the oldest Boar avatara statue. The king bosats that he won many countries like Lord Vishnu. He traces his ancestors: father Harivishnu, , great grandfather Indra Vishnu, a brahmana saint. He praised his brother Dhanya Vishnu. They were Bhagawats (all the Guta kings were Parama Bhagawats. That is great worshippers of Lord Vishnu.). They traced their origin to Vedic Gods Maitra Varuni (Mitra- Varuna)
When was it built?
On the Dasami thithi off Falguna month (in Tamilized Sanskrit it is Panguni).
What is the scorpion Puzzzle?
The boar statue has the inscription on its throat. It has got garlands going around it. It has got 28 circles. Of the 28the circle it has got scorpion figure. Other 27 have got man and woman in half sitting posture. Scholars’ think these are 27 stars and the scorpion is Vrischika Rasi. Probably the temple was erected during Vrichchika Rasi time.
What is the conclusion?
Some half baked scholars wrote that the Greeks taught us Zodiac signs when Hindus were using only 27 stars. This inscription and Sangam Tamil book Paripatal explodes that theory. Of the 18 Sangam Books , which are 2200 years old, Paripatal, Purananuru and other books mention Zodiac Signs. Paripatal verse 11 used two Sanskrit words Panguni and Mithuna Rasi. Other books translated the symbols into Tamil like Aries/mesha=goat etc. Tamil verses used Mithuna, Makara , Budhan, all Sanskrit words. All the 12 Tamil months are in Sanskrit. This shows that 2200 years ago from Kanya Kumari to Kashmir people knew astronomy very well. Tamils had mentioned the Agastya star (Canopus) as well.
Compared with the above Gupta Inscription, we can conclude that zodiac signs such as Mithuna, Makara, Mesha , Vrischika are very familiar to Hindus. Strangely both Paripatal Tamil verse 11 and above Yajna Varaha inscription at Erakina village used the month Panguni . Only hitch is Panguni would not correspond with Vrischika Rasi. May be the King’s birth was Vrischika rasi or the temple work commenced in Vrishika Rasi . Malayali Hindus use only Zodiac signs as month names until today .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாரதி போற்றி ஆயிரம்
முதல் பாகம்
ச. நாகராஜன்
(இந்த நூலைத் தொகுத்தவர்)
22 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 254 பாடல்கள் இந்த முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.
அடுத்த இரு பாகங்களில் 746 பாடல்கள் இடம் பெறுகின்றன.
**
முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ள முன்னுரையின் ஒரு பகுதி
முன்னுரை
என்னுடைய குடும்பமே பாரதி பற்றுடைய குடும்பம் என்றால் அது மிகையாகாது.
எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் பாரதியார் பாடல்களை ஜெயபாரதியில் வெளியிட்டு பாரதியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்.
அவர் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடும் போது பிரமித்துப் போய் மெய்மறந்து அதைக் கேட்போம். எனது சகோதரர்கள் அனைவரும் பாரதியார் பாடல்களைப் பரப்பும் பணியில் இடைவிடாது ஈடுபட்டவர்கள்.
அடுத்து சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு வி.ஜி. சீனிவாசன் சிறந்த பாரதி பக்தர். எங்கள் குடும்ப நண்பர். அவர் எங்களை பாரதியார் வழியில் நன்கு ஊக்குவித்தவர்.
ஆக இயல்பாகவே பாரதியாரைப் போற்றியவர்களை நாங்கள் போற்றி வந்தோம். இந்த வகையில் பாரதியாரைப் போற்றி வெளிவரும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்பொழுது படித்து இவற்றைத் தொகுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் அவ்வப்பொழுது என் மனதில் எழுவதுண்டு.
மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்திய எனது கட்டுரைகளின் தொகுப்பு இரு பாகங்களாக புஸ்தகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. (மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1 மற்றும் பாகம் 2)
அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றி அவ்வப்பொழுது எழுதிய எனது கட்டுரைகளின் தொகுப்பையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
(அதிசய மஹாகவி பாரதியார்)
பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஒராயிரம் கவிதைகளை சேகரித்து, தொகுத்து www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் 11-12-2017 முதல் வெளியிட ஆரம்பித்தேன். இந்தப் பணி 7.5.2018இல் முடிவு பெற்றது.
உலகின் அதிசயமான ராக்ஷஸ தரைப்பாலம் (IRELAND’S GIANT’S CAUSEWAY) அயர்லாந்தில் கடல் ஓரத்தில் அமைந்திருப்பதைப் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும்!
இதைப் பற்றிய கதை ஒன்று உண்டு. ராக்ஷஸனான ஃபின் மக் கூல் (GIANT FINN MAC COOL) என்பவன் ஸ்காட்லாந்தில் ஸ்டாஃபா தீவில் (Isle ofStaffa) வாழ்ந்து வந்த தனது எதிரியான ஃபின் காலை (FINN GALL) வீழ்த்த விரும்பி கடல் அலைகளின் மீது ஒரு பாலத்தைக் கற்களினால் அமைத்தான்.
பிரம்மாண்டமான கற்களை கடலின் ஆழத்தில் ஆழ அடித்து ஒவ்வொன்றாக நிறுவினான்.
நீளமான கடல் தரைப்பாலத்தில் அவன் பயன்படுத்தி நிறுத்திய கற்களின் எண்ணிக்கை நம்ப முடியாத 40000 கற்கள் என்ற எண்ணிக்கை!
தனது எதிரியைச் சந்திப்பதற்கு முன்னர் ஓய்வெடுக்கத் தனது இருப்பிடம் திரும்பினான் ஃபின் மக் கூல். எதிரி என்ன செய்திருக்கிறான் என்று பார்க்க விரும்பிய ஃபின் கால் நேராக அயர்லாந்து சென்றான். அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஃபின் மக்கூலைப் பார்த்து அவனை மக்கூலின் மகன் என்று நினைத்துத் திகைத்துப் போனான். திரும்பி ஓடும் போது மக்கூல் அமைத்த பாலத்தை அழித்தவாறே அவன் சென்றான். இது தாந் பாலம் எப்படி வந்தது என்பது பற்றிய பழைய கதை!
இதை ஒரு கட்டுக்கதை என்று சொல்லும் பெரும்பாலானோர் இது மனிதனால் அமைக்கப்பட்ட ஒன்றே தான் என்று கருதுகின்றனர்.
கடலுக்குள் 500 அடி வரை செல்லும் இந்தப் பாலத்தில் உள்ள கற்களின் உயரம் 20 அடியிலிருந்து 39 அடி வரை இருக்கிறது!
பாலத்தில் பெரும்பாலான கற்கள் ஒவ்வொன்றும் அருமையாக பாலிகன் எனப்படும் ஐங்கோண வடிவில் செதுக்கப்பட்டிருக்கிறது. சில கற்கள் சதுரமாகவும் சில கற்கள் அறுகோண வடிவிலும் சில பத்துப் பக்கங்களை உடையதாகவும் உள்ளன.
ஆகாயத்திலிருந்து பார்த்தால் வியப்பைத் தரும் இந்தக் கற்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று பிணைந்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இரு கற்களின் இடையில் ஒரு பிளேடைக் கூடச் செருக முடியாது!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் உலகில் உள்ள அனைவரின் கவனத்தையும் இது கவர்ந்தது. “இது இயற்கை அமைத்த கோவிலின் பலிபீடம்” என்று பெரும் நிபுணர்கள் வர்ணித்தனர்.
சிலர் இது பெரிய ஒரு எரிமலையின் வெடிப்பு காரணமாக அமைந்த ஒரு பாலம் என்றனர். இன்னும் சிலரோ கடல்நீரிலிருந்து அடித்து வரப்பட்ட தாதுக்களினால் இந்தக் கற்கள் உருவாகி இருக்கலாம் என்றனர்.
ஆனால் எரிமலை பற்றிய கொள்கையே வென்றது. ஐந்து கோடி வருடங்களுக்கு முன்னர் வெடித்த பெரிய எரிமலை வெடிப்பானது காலப்போக்கில் குளிர்ந்து இந்தப் பாறைகளை அமைத்தன என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டனர்.
இந்தப் பாலத்திலிருந்து வடக்கில் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள
ஸ்டாஃபா தீவிலும் அறுகோண வடிவிலான கற்கள் காணப்படுகின்றன.
இங்கு 200 அடி நீளமுள்ள ஒரு குகை இருக்கிறது. ராக்ஷஸனான ஃபின் காலின் நினைவாக இதை ஃபிங்கால் குகை (Fingal’s cave) என்று பெயரிட்டார் சர் ஜோஸப் பேங்க்ஸ் என்ற அறிஞர். கடல் மட்டத்திலிருந்து குகை அறுபது அடி உயரத்தில் இருக்கிறது.
புயல் அடிக்கும் போது அலைகள் அங்குமிங்கும் அலைந்து ஒரு அருமையான இசையை இங்கு உருவாக்குகிறது.
மயக்கும் இந்த இசையைக் கேட்ட ஃபெலிக்ஸ் மெண்டல்ஷோன் (1809-1847)என்ற ஜெர்மானிய இசைக் கலைஞர் இதைப் பற்றிய பாடல் ஒன்றை 1829ம் வருடம் இயற்றி இசை அமைத்துப் பாடினார்.
அயர்லாந்தின் பிரம்மாண்டமான இந்த கடல் மீதுள்ள தரைப்பாலத்தைப் பார்க்க ஏராளமான பயணிகள் வருகை புரிகின்றனர்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
YAJNA VARAHA/ BOAR SANSKRIT INSCRIPTION
ஏரான் வராஹ கல்வெட்டு(ERAN IN M. P.) மிகவும் அற்புதமான, புதுமையான கல்வெட்டு ஆகும். இது மத்திய பிரதேசத்தில் ஏரான் என்னுமிடத்தில் உள்ளது. சாதாரணமாக கல்வெட்டுகள் பாறைகளிலும் சிலைகளின் அடியிலும் இருக்கும். ஆனால் இந்த வராஹம் என்னும் காட்டுப்பன்றி கல்வெட்டு , அந்த வரஹத்தின் தொண்டைப் பகுதியில் காணப்படுகிறது. குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய உருவம் 1500 ஆண்டுகள் பழமை உடைத்து. இதில் ஒரு தேள் இருப்பது மிகவும் புதிராக உள்ளது. தோரமான என்னும் மன்னர் பற்றிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு இது.
இதன் விவரங்களைக் காண்போம் :
பரிபாடல் பதினோராம் எண் பாடல் போலவே இதில் நிறைய வான சாஸ்திரக் குறிப்புகள் உள்ளன .பரிபாடல் நூ லி லுள்ள பாடலில் மிதுன ராசி, பங்குனி போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பயிலப்பட்டுள்ளன . இந்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் பங்குனி முதலிய விவரங்களுடன் தேள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதால் இது விருச்சிக ராசியன்று நிறுவப்பட்டதாக ஊகிக்கப்படுகிறது
பாரத தேசத்திலுள்ள பழமையான முக்கியமான கல்வெட்டு இது.; ராசிச் சக்கரம் என்பதைக் கிரேக்கர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்தார் கள் என்று பிதற்றுவோருக்கு பரிபாடல் நூலும் இந்தக் கல்வெட்டும் மரண அடி கொடுக்கிறது.
எதற்காக வராஹ அவதாரம் ? Geological Science Story
அசுரர்கள் பூமாதேவியைக் கடலில் ஒளித்து வைக்கவே அதைக் கடலில் இருந்து தோண்டி எடுக்க விஷ்ணு பகவான் மிகப்பெரிய வராஹ அவதாரம் எடுத்தார் வலிமையான மூக்கின் மூலம் பூமியை தூக்கி நிலை நிறுத்தினார். அது போல மன்னன் தோரமானன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்று கல்வெட்டு செப்புகிறது .
மச்ச, கூர்ம, வராஹ அவதாரங்கள் Geological Science Story
பூகர்ப்ப விஞ்ஞான விஷயங்களை பாமர மக்களுக்குச் சொல்லும் கதைகள் ஆகும் பூமி முதலில் நீரால் சூழப்பட்டு இருந்தது பின்னர் நிலம் தோன்றியது அதை விளக்கும் விஞ்ஞானக்கதை இது .
கல்வெட்டு விவரம்
மன்னன் குடும்பம் விஷ்ணு பக்தர்கள்; இதனால் வராஹ அவதார வடிவத்தில் தோரமான ராஜா விஷ்ணு பகவானுக்கு கோவில் எடுப்பித்தார் . அவருடைய சகோதரன் தான்ய விஷ்ணு ; அண்ணனைப்போலவே குணங்கள் நிறைந்தவர்; இவர்களுடைய தாத்தா ஹரிவிஷ்ணு . அவருக்கும் முந்தியவர் இந்திரா விஷ்ணு என்னும் பிராமண முனிவர் ஆவார் . நாற்கடலும் புகழ் பரப்பி போமி முழுதையும் வென்ற தோரமானான் பங்குனி தசமி திதியில் இதை ராகின ஏடு என்னுமிடத்தில் நிறுவினான் .
பூமியை வராஹ வடிவில் தூக்கி நிறுத்திய பகவான் வெற்றி வீரர். அவர் தன்னுடைய பலம் வாய்ந்த முகத்தினால் மலையாள பந்தாடினார் திரிலோக மாளிகையை நிலை நாட்டினார்
கோப்ராஹ்மணர்கள் மக்கள் அனைவரும் நலத்துடன் வாழ்க.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்று வாழ்த்துவது மரபு .
வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்
லாம்அரன் நாமமே
சூழ்க வையக
முந்துயர் தீர்கவே. 1
என்பது சம்பந்தர் தேவாரம் . ஆனால் பார்ப்பனர் என்பது புறநானூற்று வாழ்த்து இதையே சம்ஸ்க்ருதத்தில் கோ / பசு, ப்ராஹ்மண என்று பகர்வர்.
தேள் உருவம் ஏன்?
குப்தர் கால சிற்பிகள் மகா மேதாவிகள் . அவர்கள் வராஹத்தின் மாலையை மிகவும் நீளமாகச் செய்து பன்றியின் உடல் முழுதும் சுற்ற வைத்துள்ளார்கள்; அதில் இருபத்தெட்டு வட்டங்கள் உள. அவற்றில் ஒன்றில் தேள் உருவமும் ஏனையவற்றில் ஆணும் பெண்ணும் அமர்ந்துள்ளனர் 28-ல் மட்டும் தேள் இருப்பதால் அது பங்குனி தசமியில் விருச்ஸிக ராசி அன்று யக்ஞ வராஹ சிலை கோவில் எடுப்பிக்கப்பட்தாக கருதலாம் ஏனையவை 27 நட்சத்திரங்கள்!.
அற்புதமான பன்றி வடிவ கோவில் கல்வெட்டு இந்துக்களின் மகத்தான வான சாத்திர அறிவைக் காட்டுகிறது.
–Subham –
Tags- வராஹ வடிவ, அற்புத, சம்ஸ்க்ருதக் கல்வெட்டு, தோரமான மன்னன் , குப்தர் காலம்
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer -Mrs. Jayanthi Sundar Team –
***
NEWS BULLETIN
Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil
****
Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on
ALWAR TIRUNAGARI Temple
****
Talk by S Nagarajan from Bengaluru
Topic: SURAIKKAY SIDDHAR
****
SPECIAL EVENT-
Talk on IMPORTANCE MAALAYA PAKSHAM by
Sri A V SWAMINATHA SIVACHRAIYAR , Chief of Mayuram Sivapuram Global Veda Sivagama Patasala.
Sivapuram Veda Sivagama Patasala was established in the year 1997 in Mayiladuthurai in Tamil Nadu. Sivasri. A.V.Swaminatha Sivachariar is the founder and principal of this Patasalai.
This Patasala is dedicated and persevering for the upkeeping, developing, and spreading the values of Hindu Religion, Culture, Sastras, Vedas and Agamas. It is also conducting various seminars and conferences frequently inviting various spiritual leaders, scholars and gurus.
This Patasala has a small Shiva temple inside and daily morning and evening ritual poojas and havan are performed. During this pooja, Veda parayam is chanted in a big way.
This Patasala is registered under section 12-A of the Income tax Act, 1961.
This Patasala has obtained the 80G exemption certificate from the Income tax Department.
This Patasala is registered as NGO and obtained the Darpan id from the Government of India.
This Veda Patasala is running for the past more than 25 years in the same complex. The area of this complex is admeasuring about 25,000 sq.ft. This land is given to Sri Swaminatha Sivachariar for the Patasala by the Thiruvaduthurai Aadheenam, on a no-time limit lease agreement, under the prevailing Mutts culture. The Mutt is charging yearly a nominal token amount as lease rent. The land once given to this type of educational/charitable trust, it will not be taken back by the Mutt. In this complex, total built-up area is approx. 7500 sq ft. consisting of 8 rooms, 2 big halls, kitchen, dining room, library, cow Shala, etc.
This Vada Patasala is also started partly functioning from one more premises, which is owned by its founder, for the past 3 years. The area of this place is about 6,000 sq.ft. and the built-up are is about 4,000 sq.ft. consisting of 2 big halls, 5 rooms, kitchen, dining room, garden, etc. In this place (a) Classes for the first 2 years students are taking place; (b) few teachers are staying there; and (c) daily poojas and vedas recitals are taking place.
Over 300 students have graduated from this Veda Patasala over the past 25 years and are working around the world in various professional fields and temples.
This Patasala is running without getting any financial assistance from any State / Central Government bodies.
This Patasala is running purely from (a) the aids / contributions / donations received from the well-wishers of the activities being undertaken here; (b) Old students well settled in India and abroad; and (c) personal income of the founders.
Sri Swaminatha Sivachariar (Founder and Principal)
He studied Vedas, Sastras and Agamas in Dharumapuram Veda Sivagama Patasalai (a Unit of Dharumapuram Aadheenam). After successful completion, he was awarded “Vedagama praveena” certificate. Later he started working in the same Patasala as a teacher and became its principal. After quitting his job, he started his own Patasala in the year 1996.
Sri Swaminatha Sivachariar is having more than 32 years of experience and is one of the very few experts in Vedas and Saivagama Shastras in Tamil Nadu. He has performed more than 1500 consecrations (“kumbhabhishekam”) of temples till now in various parts of India and abroad. He is also participating in seminars and conferences being conducted by various Hindu religious organizations. He has been Advisor to the HR&CE Ministry, Government of Tamil Nadu for a couple of terms.
******
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 14 September 2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்-
****
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்திசெய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —
சொற்பொழிவு– தலைப்பு-திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி ஆலயம்
****
பெங்களூருரிலிருந்து எஸ். நாகராஜன்
சொற்பொழிவு
தலைப்பு-ஶ்ரீ சுரைக்காய் சித்தர்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சொற்பொழிவு—ஸ்ரீ ஏ வி சுவாமிநாத சிவாச்சாரியார், மாயூரம், சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவுனர்.
தருமபுரம் சிலவாகம பாடசாலை ஆசிரியர்
மாயவரம் சிவபுரம் குளோபல் சிவாகம அகாடமியின் குரு முதல்வர் .
மாயவரம் கருவாழக்கரை ஶ்ரீ மஹாஸதாசிவபீட அதிபர் சைவசித்தாந்த சரபம்.500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகளாவிய அளவில்.
40 வருடங்களாக சிவாகமப்பணி. அகாடமியின் குரு முதல்வர் .
மாயவரம் கருவாழக்கரை ஶ்ரீ மஹாஸதாசிவபீட அதிபர் சைவசித்தாந்த சரபம்.500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகளாவிய அளவில்..
40 வருடங்களாக சிவாகமப்பணி.
தலைப்பு- மாளய பக்ஷத்தின்சிறப்புகள்
****
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Proverbs on Gold 4
4851. பூசப் பூசப் பொன் நிறம். The more you gild it, the more like gold will it appear.
4869. பூவிற்றவனைப்பொன்விற்கப்பண்ணுவேன். I will enable him who sold flowers to sell gold.
4871. பூவுள் மங்கையாம் பொற்கொடியாம் போன இடம் எல்லாம் செருப்படியாம். It is said that she is Lakshmi residing in flowers, and she is a golden creeper, yet whithersoever she goes she is beaten with shoes.
5005. பொற்கலம்ஒலிக்காதுவெண்கலம்ஒலிக்கும். A gold vessel does not sound, a brass one does.
5006. பொற் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்பதுபோல. Like one whose desire for a gold bracelet, hurried him into the claws of a tiger.
5007. பொற் பூவின் வாசனையும் முருக்கம் பூவின் வாசனையும் சரி. The smell of a flower of gold and that of the murukku flower are alike.
5008. பொற் பூ வாசிக்குமா? Does a golden flower diffuse fragrance?
5009. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது. The ornament of reputation is greater than ornaments of gold.
5010. பொன் இரவல் உண்டு, பூ இரவல் உண்டா? Gold may be lent, can flowers?.
5011. பொன் என்றால் பிணமும் வாய் திறக்கும். If the word gold be uttered, even a corpse will open its mouth.
5012. பொன் கத்தி என்று கழுத்து அறுத்துக்கொள்ளலாமா? May one cut his throat with a knife because it is made of gold?
5013. பொன் காத்த பூதம் போலே. Like the demon that guarded golden treasure.
5014. பொன்செருப்புஆனாலும்காலுக்குத்தான்போடவேண்டும் Though golden slippers, they must be put on the feet.
5015. பொன்மணி அற்றவளை அம்மணி என்பானேன்? Why should a woman who has no gold beads be called Ammani?
5016. பொன்முடி அல்லது சடை முடி வேண்டும். One should wear either a gold crown, or matted hair.
5017 பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடையாது ? If one has a golden house, what house can he not get ?
5018. பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு. The golden hall of-Chilambaram, and the town Puvanagiri, are always in trouble.
5021. பொன்னான மனதைப் புண்ணாக்குகிறான். He ulcerates the golden mind.
5022. பொன்னாலே கலம் உண்டானாலும் மண்ணாலே சுவர் வேண்டும். Though one may possess vessels of gold, the wall of his house must be of mud.
5023. பொன்னாலே மருமகளானாலும் மண்ணாலே ஒரு மாமி வேண்டும். Though the daughter-in-law is made of gold, she must have a mother-in-law made of earth.
5024. பொன்னின் கலப்பை வரகுக்கு உழப் போனதாம் வரகு சேருக்கு வரகு பட்டதாம். Golden ploughs were used for the cultivation of the millet, and the crop was less than the seed-corn.
5025. பொன்னின் குடத்திற்குப் பொட்டு இட்டுப் பார்க்க வேண்டுமா? Must a royal mark be inscribed on a golden pot, that it may appear the more beautiful?
5026. பொன்னின்குடம்உடைந்தால்பொன்ஆகும்என்னஆகும்மண்ணின்குடம்உடைந்தாக்கால்? Though broken to pieces a golden pot will still be gold, of what use is an earthen pot when broken?
5027. பொன்னை வைக்கிற கோயிலிலே பூவையாவது வைக்கவேன்டும். Flowers, at least, must be offered in a temple in which gold is offered.
5028. பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியலாமா? Although you may throw away gold, you may not throw away edible herbs?
5036. போதும்என்றமனமேபொன்செய்யும்மருந்து. A contented mind is a specific for making gold.
5042. போலைக்கு ஒரு பொன்மணி கிடைத்ததாம், அதைத் தூக்கக் கண்ணில் தொட்டுத் தொட்டுப் பார்த்ததாம். It is said that the hollow-headed woman obtained a gold bead, and that she examined it when she was sleepy.
5057. மகா மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறமாம். Even a crow if it arrive at Mahameru is said to assume a golden hue.
5067. மங்கமாரிவந்தார்தங்கமழைபெய்தது. Montgomery came, and it rained fine gold.
5222. மாப் பொன் இருக்க மக்களைச் சாவக் கொடுப்பேனா? Whilst I possess a particle of gold, will I allow my children to die?
5226. மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம். If broken by the mother-in-law it is an earthen vessel, if by the daughter-in-law, it is a golden vessel.
5274. மின்னுவதெல்லாம்பொன்அல்ல. All that glitters is not gold.
5468. யானைகறுத்தால்ஆயிரம்பொன்பெறும், பூனைகறுத்தால்என்னபெறும்? A black elephant is worth a thousand gold pieces, what will a black cat fetch?
5475. யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இருப்பு அங்குசத்திற்கு ஏமாந்து நிற்பான் ஏன்? Having bought an elephant for a hundred pieces of gold, why hesitate to buy its iron goad?
5482. வங்கம்தின்றால்தங்கம், வங்கம்கெட்டால்பங்கம். When lead is eaten it becomes gold; when it is spoiled it becomes useless.
5620. வாதி கண்ணுக்கு மட்டம் எட்டு மாற்று. To the eye of an alchemist, common gold appears as standard gold.
5917. வெள்ளி வட்டிலும் வேண்டும் விளிம்பிலே பொன்னும் வேணடும். I must have a silver platter with a rim of gold.
5922. வெறுங்கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான். A money-less goldsmith died by blowing iron.
6035. வேளைக்கு அரைக் காசு ஆயிரம் பொன் ஆகும். Half a cash at a time will, in the long run, amount to thousands of gold.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியத்திலுள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களின் பட்டியலைக் கொடுத்துள்ளார் ; ஒவ்வொரு சொல்லும் ஏராளமான இடங்களில் கையாளப்படுகின்றன. குறிப்பாக காமம் , உவமம் என்னும் சொற்களைக் கூறலாம் . மேலும் நிறைய சொற்கள் எந்த மொழி என்றே கண்டுபிடிக்க முடியவில்லை உதாரணத்துக்கு நிம்பிரி (பொறாமை) என்னும் ஒரு சொல்லைக் கூறலாம் இதிலுள்ள நிம்- சம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உள்ளது . யாரும் விளக்க முடியாத இந்த ஒலிக்கு நிம் = இல்லை ; பிரி = பிரியம் என்று நானாக யூகம் செய்கிறேன்.
இதே போல ஹார்ட்/HEART என்னும் ஆங்கிலச் சொல் ஹ்ருத் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து சென்று தமிழிலும் ஹ்ருதயம் என்று ஆனது ; இப்படிப்பட்ட முக்கியமான சொல் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்து நானாக குருத்து என்ற சொல்லைக் கண்டுபிடித்தேன். இருதயம் குருத்து வடிவத்தில் இருப்பதாலும் குருதி என்ற தமிழ்ச் சொல்லுக்கு ரத்தம் என்ற பொருள் இருப்பதாலும் ஊகித்தேன் . இவை எல்லாம் ஊகங்கள் மட்டுமே.
த்ருண தூமாக்கினி என்பது தொல்காப்பியரின் பெயர் என்றும் அவர் அகத்த்தியரின் மனைவியை தமிழ் நாட்டுக்கு அழைத்து வரும் விஷயத்தில், அவருடன் அகத்தியர் சண்டை போட்டார் என்றும் அப்பொழுது ஒருவர் மீது ஒருவர் சாபம் இட்டனர் என்றும் புகழ்பெற்ற உரைகாரர் நச்சினார்க்கினியர் உரையில் கூறுகிறார். சங்க காலத்தில் அகத்தியன் பெயர் இல்லை. பிற்காலத்தில் மணிமேகலையில் வருகிறது அதற்கு முன்னர் காளிதாசன், பாண்டிய மன்னரையும் அகத்திய முனிவரையும் தொடர்பு படுத்திப் பேசுகிறார். இமயமலை போல பொதியமலையிலும் வேள்வித் தீ இருப்பதாகப் புற நானூற்றுப் புலவர் பாடியதால் அங்கு அகத்தியர் வேள்வி செய்தார் என்பதை யூகித்தறியலாம் . மேலும் தொல்காப்பியருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தது நான்கு வேதங்களைப் படித்த திருவிதாங்கூர் ஆசான் என்று பனம்பாயிரானார் தொல்காப்பியப் பாயிரத்தில் சொல்வதால் தொல்காப்பியரின் பின்னணி ஓரளவுக்குத் தெரிகிறது; அதாவது எல்லாம் பொதிய மலையை ஒட்டியே நடந்தது.
****
தொல்காப்பியத்தில் 75 சம்ஸ்க்ருதச் சொற்கள்
அமரர்
அந்தம்
ஆணை
உவமம்
காலம் 5
காரம்
திசை
கபிலை
கரகம்
கருமம் 10
கரணம்
காமம்
காயம்
காரணம்
களம் 15
குணம்
சிந்தை
சின்னம்
சூதர்
தா 20
தாரம்
தூது
தெய்வம்
நாடகம்
நிமித்தம் 25
பதி
பருவம்
Pali / பலி
Puutham/ பூதம்
மங்கலம் 30
மண்டிலம்
மதி
மந்திரம் / MANTRA
மாயம்
மனம் 35
முகம்
முரசு
வருணன்
வள்ளி
வாணிகம் 40
கரகம்
குஞ்சரம்
நிச்சம்
வண்ணம்
தேசம் / தேயம் 45
சூத்திரம்
ஆசிரியர்,
இமை,
உரு,
உருவு 50
துணி
இலக்கணம்
சுண்ணம்
அத்தம்,
அம்போதரங்கம், 55
அமுதம்,
அவை,
ஆரம்,
உலகம்,
ஏது, 60
பழி,
அரசன்,
அரணம்,
ஏமம்,
ஐயர், –65
கவரி,
தாமதம்,
தூணி,
பண்ணத்தி,
பார்ப்பனன், –70
பையுள்,
மாராயம்,
பக்கம், 73
ஒட்டகம் 74
என் கருத்துக்கள்
எழுத்துடன் கரம் சேர்ப்பது சம்ஸ்க்ருத வழக்குக்கு
அ -கரம் — 75
உ- கரம்
சம்ஸ்க்ருதத்தில் எல்லா எழுத்துக்களுக்கும் காரம் என்று சேர்ப்பார்கள் அ -காரம்
FROM MY 2012 ARTICLE:
13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:
எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)
சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)
பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46)
கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம்,, பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செப்டம்பர் 11 பாரதியார் நினைவு தினத்தையொட்டி கல்கிஆன்லைன் இதழில் 11-9-25 அன்று வெளியான சிறப்புக் கட்டுரை!!
அசாதாரணமான கவிஞர் – மகாகவி பாரதியார்!
ச. நாகராஜன்
மகாகவியின் வாழ்க்கையில் சில துளிகள் இதோ:
அமுதன் – அசாதாரணமானவர் பாரதியார்!
மகாகவி பாரதியாரை ‘அசாதாரணமானவர்’ என்று குறிப்பிடுகிறார் அவருடன் புதுவையில் நெருங்கிப் பழகிய டி. ஆராவமுதன் என்னும் அமுதன். அரவிந்தரின் சீடராகி அரவிந்த ஆசிரம மானேஜராக விளங்கியவர். மகாகவி பாரதியார் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்களைத் தந்தவர் இவர்.
அவர் குறிப்பிடுவது இது:
“பாரதி அசாதாரணமானவர் – ஒரு விதத்தில் அல்ல. பல விதத்தில். வானுலகிலிருந்து கீழிறங்கி மண்ணுலகில் நம்முடன் நடமாடிய தேவன். ஆகவே அசாதாரணமானவன்.
வான் போல் கட்டுக்கடங்காத, பரந்த உள்ளம் படைத்திருந்தவர்; கனிந்த நெஞ்சம்; ஒளி வீசிய தெளிவாகிய அறிவு: உயிரில் எப்போதும் கொழுந்து விட்டெரிந்த தீ. அடிக்கடி பார்ப்பதற்கரியதாகிய அசாதாரணமான பெரியார்.
பாரதி தமிழின் உயிருக்கு உயிராகியவர். தமிழ் உயிர் திரண்டு உருண்டு உருவாகியபோது, பாரதி ஆயிற்று. ஆயினும், தமிழனின் இருள் கட்டுகளுக்கு விலகி நின்றவர் அவர். தமிழகத்தின் பழமையால் கட்டுப்படாது நின்று, தமிழின் பழமைக்கு மேன்மை தந்தவர் அவர். தமிழின் புதுமைக்கு சிசு.
தமிழ்நாட்டின் குரு – ராஜாஜி!
பாரதியாரை நன்கு அறிந்த ராஜாஜி கூறுவது இது:
தமிழ்நாட்டுக்குத் தனிக் கவியாகவும் குருவாகவும் அவதரித்த பாரதியார் நினைவு நாள். அனைவரும் ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் அவரை நினைத்துத் தொழுவோம்
தெய்வாதீனமாக நம்முடைய தமிழ்நாட்டில் நம்முடைய காலத்தில் ஓர் அமரகவி அவதரித்தார். அவர் தேசபக்தியும் தெய்வபக்தியும் இரண்டும் பெற்றவராக அமைந்தார். அவர் பாடிய பாடல்கள் தமிழருக்கு அழையாத செல்வமாயிற்று.
பாரதியார் பாடியுள்ள பராசக்தி நடத்திய நிகழ்ச்சி – கல்கி
பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் நடந்த பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.
பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சி கல்கி (திரு ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.
ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.
அதைப் பற்றி கல்கி இப்படி கூறுகிறார்:
“என்னுடைய சொந்த அனுபவத்தில், மனிதனுடைய புலன்களுக்கும் அறிவுக்கும் எட்டாத சக்தி ஒன்று இருப்பதாக நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சக்தியானது வெறும் குருட்டுத்தனமான சக்தியல்ல! ஏதோ ஒரு ஒழுங்கின்படி, ஒரு நியதியின் படி, இந்த உலகத்தையும் இதில் நடைபெறும் சகல காரியங்களையும் நடத்தி வருகிறது என்றும் நான் நம்புகிறேன்.
அந்த சக்தியானது தற்சமயம் தமிழ்நாட்டை ஒரு மகோந்நதமான நிலைக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தில் நடத்திக் கொண்டு வருகிறது என்று நான் பரிபூரணமாய் நம்புகிறேன். பாரதியார் பாடிப் பரவியுள்ள பராசக்தி அதுதான் போலும்.
அந்த மகாசக்தியின் காரணமாகத்தான் எட்டயபுரத்தில் நாம் கண்ட அற்புதம் நிகழ்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. மற்றப்படி மனிதப் பிரயத்தனத்தினால் மட்டும் அவ்வளவு மகத்தான ஒரு வைபவம் நடந்திருக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லை.
கவிதை ரஸாயனம் – கவிஞர் திருலோக சீதாராம்
பாரதியாரின் நூல்கள் தமிழ் மக்களின் பொது உடைமை ஆக வேண்டும் என்பதற்காகக் பெருமுயற்சி எடுத்தவர் கவிஞர் திருலோக சீதாராம். வாழ்நாள் முழுவதும் பாரதியைப் பரப்பும் பணியை அவர் செய்து வந்தார். அவர் பாரதியின் பாடல்களைப் பற்றிக் கூறுவது இது:
கள்ளையும் தீயையும் சேர்த்து
காற்றையும் வானவெளியையும் சேர்த்து
தீஞ்சுவைக் கவிதை இயற்றிய தமிழ் கவிஞர் மரபில் பாரதியின் ஸ்தானம் எவ்வளவு மாண்புடையது! அந்த மாண்பைப் போற்றி மகிழும் ரஸத்தேர்ச்சி நமக்கு இருந்தால் அதுவே போதும்!
காந்திஜியும் பாரதியாரும்
பிரபல எழுத்தாளரான வ.ரா. தமிழில் சாதித்தது அதிகம்.
அதில் பாரதியைப் பற்றி சிந்தனை செய்து அவர் செயலாற்றியதே
முக்கியமானதாக அமைந்தது.
1919ம் வருடம், பிப்ரவரி மாதம் சென்னை வந்த மகாத்மா காந்திஜி ராஜாஜி குடியிருந்த கதீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் வந்து தங்கினார்.
அங்கு யாரையும் உள்ளே விடக் கூடாது என்று வ,ரா.விடம் சொல்லப்பட்டது. அவர் வாயிலில் காவல் காத்தார்.
பிறகு நடந்ததை வ.ரா. இப்படி எழுதுகிறார்:
“நான் காவல் புரிந்த லட்சணத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்!” என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து
விட்டார். என் காவல் கட்டுக்குலைந்து போய் விட்டது.
உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை
வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து
கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:
பாரதியார்: மிஸ்டர் காந்தி!இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு
நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்
போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?
காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?
மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில்
இருக்க வேண்டும்.
காந்தி: அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய
கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?
பாரதியார்: முடியாது! நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள்
ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.
பாரதியார் போய் விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன்.
பாரதியார் வெளியே போனதும்,‘இவர் யார்?’ என்று காந்தி கேட்டார். தாம்
ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல
என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில்
சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல்
பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ
சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜி தான்,“அவர் எங்கள்
தமிழ்நாட்டுக் கவி” என்று சொன்னார்.
அதைக் கேட்டதும்,“இவரைப் பத்திரம்மாகப் பாதுகாக்க வேண்டும்.
இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.
எல்லோரும் மௌனமாக \இருந்து விட்டார்கள்.
அரவிந்தரும் பாரதியாரும்
அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். பாரதியார் அவரை வரவேற்றார்.
அன்றிலிருந்து ஒரு அற்புதமான நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி, அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, பாரதியார் அவரை தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிததது என்று ஏராளமான நற் பணிகள் நடைபெற ஆரம்பித்தன.
வருடங்கள் ஓடின. புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.
கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.
அந்த நாளைப் பற்றி சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:
“கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.
ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள்.நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்.”
பாரதியின் புதுவை வாசம் இப்படி உருக்கமுடன் கண்ணீருடன் முடிகிறது.
ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகா யோகி அரவிந்தரும்
பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்த தமிழ்க் கவிஞர் பாரதியாரும் பிரிந்த போது இருவர் கண்களிலும் பிரிவினால் அரும்பியது கண்ணீர் என்றால் அது புனித நீர் அல்லவா!
கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது!
பாரதியாரின் வாழ்க்கைச் சரித்திரம் அபூர்வமான ஒரு புனித வரலாறு.
சில துளிகளை மட்டுமே மேலே கண்டோம். அமிர்தக் கடலில் ஒரு சொட்டு என்றாலும் அது அமிர்தம் தானே! தைரியமாக அந்தக் கடலில் இறங்கி அனைத்தையும் குடிக்கலாம்! பயப்படவே வேண்டாம். ஏனெனில் அது இறவாமையைத் தரும் அமிர்தக் கடல் அல்லவா?!