Date uploaded in Sydney, Australia – 15 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை–3
மூஷிக வாகனம் ஏன்?
எலி என்பது மனிதனின் ஆசைகளையும் புலன் இன்ப வேட்கையையும் குறிக்கும். அதைக் கட்டுப்படுத்த வல்லவர் விநாயகர் ; வீடுகளில் எலியைக் கண்டோருக்கு அதன் ஆசையும் இனப்பெருக்க வேகமும் நன்றாகவே விளங்கும். கணபதியை வணங்குவோருக்கு அந்தக் கட்டுப்பாடு வரும். ஏனெனில் கணபதி ஆஞ்சனேயரைப் போலவே பிரம்மச்சாரி. தெற்கிலும், வடக்கிலும் பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் மனைவியராகக் காட்டுவது அவர்களின் சக்தி ரூபம்; உண்மையில் மனைவியர் இல்லை ஆகவே பிரம்மசாரி கடவுளை வணங்குவோருக்கு ஆசை மீது கடிவாளம் போட முடியும் என்பதைக் காட்டவே அவர் எலி வாகனதாரியாக நம்மிடையே காட்சி தருகிறார். எலி என்பது நம்முடைய அஹம்காரத்தைக் குறிக்கும் என்று ஒரு விளக்கமும் உண்டு
அஹங்காரம் , மம காரம் இரண்டையும் கட்டுப்படுத்துவோர் சொர்கத்துக்குப் போகமுடியும் என்று வான்புகழ் வள்ளுவனும் தேன் இனிய தமிழில் செப்புகிறான்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்– (அதிகாரம்: துறவு குறள் எண்:346)
யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை நீக்கியவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்வான்.
இன்னும் ஒரு விளக்கம் – எலியைப் போல அவர் எங்கும் செல்வார் ; அவர் இல்லாத இடம் OMNIPRESENT இல்லை; இது எல்லாக் கடவுளருக்கும் பொருந்தும் .
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
மூஷிக = எலி , மூஞ்சூறு
முப்பழம் = மா, பலா, வாழை ; இது தமிழருக்கே உரித்தான வசனம். ஏனெனில் இவை தமிழ்நாடு போன்ற வெப்ப மண்டலத்தில் வளரும் மரங்கள்; பழங்கள். முத்தமிழ் போன்று இனிமையானவை ; இவை விநாயகரின் கை நிறைய இருப்பதை திருப்புகழில் பாடுகிறோம்; அருணகிரிநாதரும் கைத்தல நிறை கனி என்று பாடி பிள்ளையார் துதியைத் துவக்குகிறார்.
****
சொற்பதம் கடந்த – இது உபநிஷத வாக்கியம் ; வேத்தின் ஞான காண்டம் உபநிஷத் என்னும் பகுதி; அவைகளில் வெறும் சடங்குகளினாலோ துதிகளாலோ மட்டும் இறைவனை அடைய முடியாது; அவைகள் படிக்கட்டுகள்தான்; ஏணிதான் ; அதை பயன்படுத்தி மேல் நிலைக்குச் சென்றால் சொற்கள் அடங்கிவிடும்; பேசா அனுபூதி பிறந்து விடும்; ஏனெனில் அவனைக் கண்டவர் விண்டிலர்;அப்ரமேயம் என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லும்; பகவத் கீதையில் விஷ்வ ரூப தரிசனம் இதை உணர்த்தும் ஆகையால் இறைவனை சொற்களால் வருணிக்க இயலாது ; இதை அவ்வையார் அழகாக சொற்பதம் கடந்த என்று சொல்லிவிட்டார் வக்ர துண்டம்/ வளைந்த துதிக்கை மூலம் நமக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை கணேசன் நினைவு படுத்துவதால் துரியமெய்ஞ் ஞான அற்புதம் என்கிறார் அவ்வை.
நூலறிவால் இறைவனை அடைய முடியாது; நுண்ணறிவினாலேயே அவனை அடையமுடியும் ; இதை அருணகிரிநாதரும் புகல்கிறார்.
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!— திருவாசகத்தின் சிவ புராண வரிகள்.
சைவத் திருமுறைகள் அனைத்தும் நம சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மகிமையைப் போற்றுகின்றன ; வேதங்களில் யஜுவ்ர் வேதத்தின் ருத் ரம் சமகம் பகுதியில் முதல் தடவையாக நமச்சிவாய என்பதைக் கேட்கிறோம். பின்னர் இதை சைவ அடியார்களின் தேவார, திருவாசக, திரு மந்திர நூல்களில் படிக்கிறோம்
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும். 15 – நல்வழி
என்று அவ்வையார் நல்வழி நூலிலும் பகர்ந்தார்
திருமூலரின் திருமந்திரமும் சிவ என்ற இரண்டெழுத்தே போதும் என்கிறது :
சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
துவனச் சடைமுடித் தாமரையானே. (கடவுள் வாழ்த்து. 4)
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716)
TO BE CONTINUED……………………………………
TAGS- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-3, மூஷிக வாகனம் ஏன்?, மாயப் பிறப்பு, சொற்பதம் கடந்த
காலம் காலமாக தூங்கும் போது எப்படிப் படுத்து உறங்க வேண்டும் என்பதை நமது அறநூல்கள் மற்றும் வைத்திய நூல்கள் பலவற்றிலும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்காதே என்பது அவர்களின் அறிவுரை.
அவர்கள் கூறிய நூல்களில் எடுத்துக்காட்டிற்காக ஒன்றை போஜன குதூகலம் நூலில் இப்படி காணலாம்.
“சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தே இருந்தால் தொந்தி அதிகரிக்கும். படுத்தால் உடல் பருக்கும். நடப்பவனுக்கு ஆயுள் வளரும், ஓடுபவனைக் கண்டு மரணம் ஓடும்.
மல்லாந்து படுப்பவன் எட்டு பங்கு மூச்சையும் வலது புறம் ஒருக்களித்துப் படுப்பவன் அதன் இரண்டு பாகங்களை பதினாறு மடங்கு) மூச்சை இழக்கிறான். ஆகையால் இரட்டைப் பங்கு மூச்சை செலவாக்கும் வகையில் சுகமாகப் படுக்க வேண்டும்,. எல்லாப் பிராணிகளுக்கும் தொப்புளுக்கு மேல் இடப்புறத்தில் செரிமானத்திற்குரிய உஷ்ணமுள்ளது. ஆகையால் செரிமானத்தை அதிகரிக்க இடது பக்கத்தில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்”.
மூச்சுக்கலையை முன்னிறுத்தி போஜன குதூகலம் ஆயுள் அதிகரிக்கவும் ஜீரணத்தை அதிகரிக்கவும் ஒரு எளிய வழியை இப்படிக் கூறுகிறது.
இதை அப்படியே இப்போது அறிவியல் ஆராய்ந்து தனது ஆய்வின் முடிவாகக் கூறுகிறது.
வலது பக்கத்தில் ஒருக்களித்துப் படுப்பதானது உங்கள் இதயம், நுரையீரல் ஆகியவற்றில் அழுத்தத்தை அதிகரித்து உங்கள் உடலின் இயக்கத்தை வெகுவாகப் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, வயிற்றுப்பகுதியில் மார்புப் பகுதியிலும் அதிக எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
அதே சமயம் இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதானது உங்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி உங்கள் ஜீரணத்தை சரியாகச் செய்கிறது.
ஒரு சின்ன உத்தி; ஆனால் பலனோ சொல்ல முடியாத அளவு பெரியது!
2. அத்துடன் மட்டுமின்றி முதுகெலும்பிற்கும் முதுகுப் பகுதிக்கும் இப்படிப் படுப்பது நல்லதல்ல. இது தொடர்ந்த முதுகுவலியைத் தரும். இரவு முழுவதும் முதுகெலும்பிற்குத் தரும் அழுத்தமானது உங்களுக்குப் பல சமயம் மரத்துப் போன உணர்வைத் தரும். காரணம் என்னவென்று தெரியாமல் நீங்கள் முழிப்பீர்கள்.
தலைக்கு ஒரு தலையணையையும் ஒருக்களித்துப் படுக்கும் போது வயிற்றுப்பகுதிக்குப் பக்கத்தில் ஒரு தலையணையையும் வைத்துப் படுப்பது நல்லது.
3. வலது பக்கம் படுப்பது தொடர்ந்து கழுத்து வலியை ஏற்படுத்தும்.
சீராக சுவாசிப்பது என்பது முடியாத ஒன்றாக ஆகிவிடும். கழுத்தும் முதுகெலும்பும் சீராக இணைந்து லயத்துடன் இருப்பதை இது போக்கி விடுகிறது. தூக்கம் சரியாக இல்லை எனில் அந்தப் பகுதியில் இருக்கும் gelatinous பகுதிகள் சேதமடையும். தொடர் கழுத்து வலி ஏற்படும்.
4. நீங்கள் ஒரு கர்ப்பமான பெண்மணியாக இருந்தால் எப்படிப் படுத்து உறங்குகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். அதிகமான அழுத்தம் ஏற்பட அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு அதற்குத் தேவையான இடத்தைத் தராது. ஆகவே தான் டாக்டர்கள் இடது பக்கம்.
ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர்.
5. வலதுபக்கம் படுப்பது முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
6. இது தேவையற்ற அழுத்தத்தை மார்பகங்களில் தந்து ஏராளமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. பெண்மணிகளுக்கு மார்பகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகம். ஆகவே மார்பகங்கள் சீக்கிரம் தளர்ந்து தொங்கி விடாமல் இருக்க வலது பக்கம் ஒருக்களித்துப் படுக்கவே கூடாது.
7. பின்பக்கம் படுத்து உறங்கலாம். இதுவும் மார்பகங்களைச் சீராக வைத்திருக்க உதவும்.
8. இதயம் சரியாக இயங்க இரத்த ஓட்டம் சீராக இருக்க இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதே சிறந்தது.
இப்படி நமது முன்னோர்கள் கூறியதை இப்போது நவீன அறிவியல் தனது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்துவது பிரமிப்பை ஊட்டுகிறது அல்லவா?
மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளிக்கிறார்
GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS
Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe
London Time 12 Noon
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
பிப்ரவரி 16-ம் தேதி
16-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி
ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES
***
Prayer by Mrs Jayanthi Sundar Team
World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London
***
Bengaluru Nagarajan speaks on Tamil Poet Kambar
***
Mrs. Brahannayaki Sathyanarayan speaks on Bhavani Sangameswarar Temple
***
INTERVIEW WITH FAMOUS DANCER & TEACHER FROM MALAYSIA Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai .
LONDON SWAMINATHAN INTERVIEWS Mrs Usha Durai, founder and principal of Laasya Arts Academy .
GURUVAYUR USHA DURAI INTRODUCING NATYA ICON
Guru Srimati Mathura Natya Mamani Guruvayur Usha Dorai
Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai, is no stranger to the world of music as she was born into a family of acclaimed Carnatic singers and musicians from Kerala, India. It is to her father, Mridangam Maestro Guruvayur Dorai and her aunt, Tamilisai Maestro Guruvayur Ponnamal that she owes her artistic and creative visions.
The founder and principal of Laasya Arts Academy, Guruvayur Usha is a Bachelor Degree holder from Madras University, graduated in Sociology with music as an elective subject. She has made her dance debut under the tutelage of Smt.Indra Rajan and Shri Pandanallur Srinivasa Pillai with her “Arangetram” in 1983. As a testament of her dedication to her profession, the title of ‘MADURA NATYA MAMANI’ was conferred to her in 1986. She later pursued a diploma in Bharatanatyam. Her combination of talents as a dance/music teacher, choreography,composer and instrumentalist mastering not only the Nattuvangam but also mridangam, tabla and veena have made her an exceptionally rare breed of teacher.
Laasya Arts is her dream school which serves not only as a dance academy, but also as creativity hub where a lot of ideas are created and applied in musical, dance and theater arrangements. To date, Guruvayur Usha Dorai conducted 49 arangretrams, including 3 vocal arangetrams which each one is uniquely presented and far different from each other. Apart from that, she also has produced and backboned a lot of in-house and collaboration productions. Some of her significant productions are MURUGA CHARANAM, GOVINDA, MAA..!-A TRIBUTE TO MOTHERS, NRITHYA YOGA, SAMARPANAM, and MANTHRA TANTHRA.
Recently, she toured her production KAAPIYAM, all over India and received many good critics and credits to her effort in spreading the Tamil Literature works. Besides that, Guruvayur Usha serves her passion involving herself in choreography and orchestration. LAHARI, a production by Damaru Creations, crystallizes the teachings of Aadi Sankara into a well-received dance and musical production in Malaysia and Singapore which intensified credits to her talent in choreography. In addition, AMRAPALI HARMONY FUSION PROGRAMME by a Singapore based production company, GR Vision also utilizes her expertise in music dance and theater orchestration and it has been successfully touring the world. Not stopping there, she has indulged in some literary work where she has written 4 padha varnham lyrics, 3 shabdams and 7 padhams which is definitely helping her to soar higher in this artistic world.
All her efforts through these years had been fulfilled when she was conferred the title ‘Nrithya Aacharya’ and ‘Kalai Thaai’. It is also worth to note down that she aptly received the award ‘Queen of Nattuvangam’ in 2016 & Kappiya nattiya nayaki, Nattuva perarasi and along with Nattuvanga ratnakara award in the same year. Adding more to the list are Aryabhatta award, KARTANATAKA ( INDIAN AWARD) and KALA SAMMAN award by Bharatiya Samskrithi Club Kolkata in Kuala Lumpur. Other highlights in her life include life time achievement award by AIDA International and Natya Icon award by Veharra Arts Kuala Lumpur in 2020.
Life time achievement award by Sugam organisation in 2021.
Honorary Doctorate in 2022 from Kolkata university
Invitation by ICC to perform in Ayodhya in2022
2022 musical ensemble
Eesha Sarvesha
2023
Staged in three places in Tamilnadu
Eesha Sarvesha
Comprising 50 students
2024
Meenakshi a warrior princess ( music dance artistic director) Singapore Sarva fine arts
***
Kalyanji anchoring from India.
***
If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.
It is on Every Sunday for one hour.
****
இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்
உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்
***
ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்
. ***
பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – கவிச் சக்ரவர்த்தி கம்பர்
***
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளிக்கிறார் ;பேட்டி காண்பவர் – லண்டன் சுவாமிநாதன்
***
Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.
எல்லோருடைய கஷ்டங்களையும் இடையூறுகளையும் களைபவர் கணபதி என்று சொல்லிவிட்டார் சம்பந்தர் .
வடமொழியில் ஷோடச கணபதி என்று பதினாறு நாமங்களை நாம் தினமும் சொல்கிறோம். புரோகிதர்கள் மஞ்சள் பொடியில் பிள்ளையாரைச் செய்து பூக்களால் இந்த 16 நாமங்களைச் சொல்லி எல்லா பூஜைகளையும் தொடங்குவார்கள்.
ஓம் சுமுகாய நமஹ என்று சொல்லி பூஜைகளைத் துவங்குகிறோம்
மங்களம் வாய்ந்த ஸுமுகன்
ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்
கபில நிறம் வாய்ந்த கபிலன்
யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்
பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்
குள்ளத் தோற்றமுள்ள விகடர்
சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்
தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்
நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது
பூத கணங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்
நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய fala பாலசந்திரன்
யானை முகத்தையுடைய கஜானனன்
வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்
முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்
தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்
குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .
vaathaapi
raagam: hamsadwani
taaLam: aadi
Composer: Muttuswaamee Dikshitar
Language: Sanskrit
pallavi
vaataapi gaNapatim bajEham |
vaaraNaasyam varapradam shree ||
anupallavi
bootaadi sam sEvita caraNam |
boota bowdika prapanca baraNam ||
veetaraagiNam vinata yOginam (shree) |
vishva kaaraNam vigna vaaraNam ||
(vaathapi)
caraNam
puraa kumba sambhava munivara prapoojitam |
trikONa madya gatam |
muraari pramukaat yupaasitam |
moolaadhaara kshEtraa stitam |
paraadi sattvaari vaakaatmagam |
praNava svaroopa vakratunDam |
nirandaram niDala candra kaNDam |
nija vaamakara vidrutEkshutanDam |
karaambuja paaSa beejaapooram |
kaloosha vidhooram bootaahaaram |
haraadi guruguha tOshita bimbam |
hamsadhwani booshita hErambam ||
(vaathapi)
இப்போது அவ்வையார் சொன்னதை மட்டும் எடுத்துக்கொள்வோம் .
விநாயகரின் அரைஞாண் தங்கத்தினால் ஆனது ; இந்துக்கள் ஆண்களாகப் பிறந்தால் அணிவது அரை ஞாண்; இப்போது அது மறைந்து ஜட்டி, அண்டர்வேர் வந்துவிட்டது.
அவர் இடுப்பில் இருப்பது வெண் பட்டு ஆடை;
பெரிய வயிறு, ஒற்றைத் தந்தம் உடையவர் (இன்னுமொரு தந்தத்தை முறித்து அதை பயன்படுத்தி மஹாபாரதத்தை எழுதினார்)
யானை முகம் உடையவர் ; இது ஓம்காரமான பிரணவ மந்திரத்தை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் ; இதை வாதாபி கணபதிம் பாடலில் காணலாம்;
ஒளி வீசும் பொட்டு, துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகளை உடையவர்; ஒரு கையில் ஐம்புலன்களை அடக்கும் பாசத்தை உடையவர்; நீலத் திருமேனி / கரிய உருவம் கொண்டவர் .
மூன்று கண்கள் சிவனுக்கும், தேவிக்கும், கணபதிக்கும் உண்டு ; மூன்றாவது கண் ஞானக் கண் .
மதம் வழிந்ததால் உண்டான தடங்களும் இரண்டு செவிகளும் இருக்கின்றன . விநாயகரின்ற முறம் போன்ற செவிகளை எல்லோரும் பாடுவதைக் கவனிக்க வேண்டும் ; சூர்ப்பகர்ணன் அவர் .
தங்க மகுடமும், மூன்று புரிகளை உடைய பூணூலும் அவரை அலங்கரிக்கின்றன.
தொடரும்…..
Tags- விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 , மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்……..……..வாதாபி கணபதிம் பஜே, 16 நாமங்கள், vaataapi gaNapatim bajEham |
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-2-25 கல்கி ஆன் லைனில் வெளியான கட்டுரை!
பரபரப்பான ஒரு விஷயம் பற்றிய அலசல் ஆராய்ச்சி!
நாகமணியைக் கண்டதுண்டா?
ச. நாகராஜன்
நாகமணியைக் கண்டீர்களா என்றால் உடனே அதோ இருக்கிறாரே என்று நாகமணி என்ற பெயரைக் கொண்டவரைச் சுட்டிக் காட்டி விடுவர். நாகரத்தினம், நாக மணி, நாக மாணிக்கம், நாக ஜோதி, நாகமுத்து என்றெல்லாம் பெயர்களைக் கொண்டவர்கள் ஏராளம் உண்டு.
நமது கேள்வி நிஜமான நாகமணியைக் கண்டிருக்கிறீர்களா என்பது தான்.
தமிழ்நாடு முழுவதும் “நிஜமான” நாகமணியை பல லட்சம் ரூபாய்க்கு விற்க அலைபவர்களைப் பற்றிய ‘ஏமாற்றுத்’ தகவல்கள் பல உண்டு. போலீஸாரிடம் சொன்னால் உடனே அவர்கள் இதற்குத் தானே காத்திருந்தோம் என்று அவர்களைப் பிடிக்கப் ப டையுடன் கிளம்பி விடுவர்.’
சுயமாக ஒளியை உமிழும் நாகரத்தினக் கல், குழாய் போன்ற வடிவில் இருக்கும். ஒரு நாகமானது நூறாண்டுகளுக்குப் பிறது தனது ஜீவ சக்தியை இப்படி ஒளி உமிழும் மாணிக்கமாக மாற்றுவதை நமது புராணங்கள் நன்கு விவரிக்கின்றன.
தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்காந்தத்தில் பதினெட்டாவது அத்தியாயத்தில் நாராயணர் நாரதருக்கு ஒவ்வொரு மண்டலமாக விவரிக்கிறார். அதில் பூமியின் கீழ் உள்ள அதலம், விதலும், சுதலம், தராதலம், மகாதலம், ரஸாதலம், பாதாளம் என்னும் ஏழு லோகங்களைப் பற்றி விவரிக்கையில், “அங்கு இராப்பகல் எப்போதும் கிடையாது. ஏனெனில் அங்குள்ள பாம்புகளின் தலைகளிலிருந்து வரும் ரத்ன காந்தியால் இருள் நீங்கி விடுகிறது” என்கிறார்.
அப்படிப்பட்ட ஒளி நாகரத்தினக் கல்லின் ஒளி என்பதை அறிகிறோம்.
அடுத்து கம்பன் சுந்தர காண்டத்தில் ஊர்தேடு படலத்தில் இலங்கையில் பெண்மணிகள் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது, “பாம்புகளின் தலைவனான ஆதிசேஷனின் சிவந்த நிறம் மிக்க படத்து மணியினை வலிமையால் கவர்ந்து எனக்கு ராவணன் அளித்தான்” என்று ஒரு பெண்மணி கூறுவதாகப் பாடியுள்ளான். (பன்னக அரசர் செங்கேழ்ப் பணா மணி வலிதின் பற்றி இன் உயிர்க் கணவன் ஈந்தான் – பாடல் 183)
அவனே உருக்காட்டு படலத்தில் (பாடல் 65) சீதை கணையாழியைப் பார்த்தவுடன் அவள், “தவற விட்ட மாணிக்கத்தை தன் எதிரில் கண்ட புற்றில் உள்ள பாம்பு போல இருந்தாள் – “இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்”) என்றும் பாடுகிறான்.
ஆக இப்படி இலக்கியம் கொண்டாடும் நாக மணி எங்கே?
பாம்புகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த ம.வீ.இராசேந்திரன் உலகில் 2000 பாம்பு வகைகள் உண்டு என்றும் இந்தியாவில் மட்டும் 390 வகைகள் உண்டு என்றும் கூறி பற்பல வியக்க வைக்கும் தகவல்களை ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்ற தனது நூலில் விவரிக்கிறார்.
பாம்பின் நஞ்சே முத்தாக மாற வேண்டுமானால் அது பல ஆண்டுகளாக விளைந்து கொண்டே இருக்க வேண்டும். பாம்பின் நச்சுப்பை நமக்கு இருப்பது போல ஓர் உமிழ் நீர்ப்பை தான்.” என்கிறார் அவர்.
ஆக அறிவியல் ரீதியாக நாகமணி இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் கற்பனை ரீதியாக? 1986ல் எடுத்து ஶ்ரீ தேவி நடித்த நாகின் படத்தின் முழுக்கருத்தே நாகமணியை அடிப்படையாகக் கொண்டது தான். படம் சக்கை போடு போட்டது!
2008ல் வெளியான நீல் கைமன் எழுதிய ‘தி க்ரேவ்யார்ட் புக்’ என்ற நாவல் நாகமணி அரிதாகவே கிடைக்கும் ஒரு ரத்தினம் என்றது. புத்தகம் பிரபலமானது.
2017ல் வங்காள நாவலான ‘சர்ப மானவ்: நாகமணி ரஹஸியம்’, நாகமணியை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்ட நாவல்.
நாகமணியை விஷம் முறிவுக்காகத் தரும் நாட்டு வைத்தியர்கள் ஏராளம் பேர் உண்டு. இவர்கள் நாகமணியைக் கொண்டிருக்கவில்லை.
மிருக எலும்புகளையோ அல்லது நாகத்தின் பாகங்களையோ வைத்து இப்படி நாகமணிக் கல்லை உருவாக்குகிறார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஆக நாகமணி இலக்கியத்தில் பொக்கிஷம்; நிஜமான வாழ்க்கையிலோ ஏமாற்றுபவரின் பொக்கிஷம்.
நாம் ஜாக்கிரதையாக இலக்கியத்தை நம்புவோம்; ஏமாற்றுவோரை ஒதுக்குவோம்!
Date uploaded in Sydney, Australia – 13 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
2
3
4
5
6 ←
7
8
9
10 ←
11 ←
Across
1.Number five in many Indian languages
5. hot, burning in Sanskrit
6.Sapless, insipid, vain, unprofitable ←
7. There is a nāḍī (tube) called XXXXXX, passing upward from the heart, and often referred to in the yoga-śāstras. When it reaches this last place, the nāḍī passes up breaking open the two regions of the head. That is the path to attain to one’s own true nature.
9. 1. A mountain, a rock. 2. A cloud, (in the language of the Vedas:)
Date uploaded in Sydney, Australia – 13 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே
***
விநாயகர் அகவல் துதியில் எத்தனை வரிகள் உள்ளன ?
72 வரிகள் உள்ளன .
****
இந்தத் துதியைப் பாடியவர் யார் ?
அவ்வையார் .
****
எந்தக் காலத்தில் பாடினார் ?
ஆறு அவ்வையார்களில் கடைசியாக வந்த ஆறாவது அவ்வையார் பாடினார்; தமிழ் நடையிலிருந்தும், ஸம்ஸ்க்ருதச் சொற் பிரயோகத்திலிருந்தும், யோக ரகசிய விளக்கத்திலிருந்தும் இவர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று துணியலாம்.
****
இது பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894- 1994) என்ன சொன்னார் ?
இதைப் படிக்கப் படிக்க உங்களுக்கே பொருள் விளங்கும் என்று சொன்னார்
அதாவது இதற்கு எத்தனை விளக்க உரைகள் இருந்தாலும் தினமும் அதிகாலையில் படித்துக் கொண்டே வந்தால் இதன் உண்மைப்பொருள் விளங்கும் .
****
இந்தத் துதியை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கலாம் ?
1.பிள்ளையாரின் — கணபதியின்– விநாயகரின் — தோற்றம் – முதல் 15 வரிகள் .
2.எனக்கு வேண்டியது என்ன —அடுத்த 15 வரிகள்
3.குண்டலினி முதலிய யோக விஷயங்கள் – வரி 55 வரை
4.பலன் என்ன — கடைசி 17 வரிகள்.
****
முதல் இரண்டு வரிகளில் பாதச் சிலம்பு பற்றி ஏன் பாடினார் ?
இந்துக்களுக்கு ஒரு விதி உண்டு ; இதை ஸம்ஸ்க்ருத , தமிழ்ப் புலவர்கள் பாடல்களில் காணலாம் ; பெண்களைப் பாடுகையில் முடி முதல் அடி வரை பாட வேண்டும் ; இறைவனைப் பாடுகையில் அடி முதல் முடி வரை பாட வேண்டும் ; அதாவது பெண்களின் கூந்தல் அழகினை வருணித்து விட்டு கால்களில் அணிந்த ஆபரணங்கள், அவளது அன்ன நடை பற்றிச் சொல்லலாம்.
இறைவனைப் பாடுகையில் முதலில் பாதங்களையே பாட வேண்டும் அவரது கண்களின் பார்வையை நாம் தாங்க முடியாது ; அதன் வீரியத்தைக் குறைத்து கடைக் கண்களால் மட்டுமே அவர் நம்மைக் காண வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோளாக இருக்க வேண்டும்.
ஒருவரை இந்துவா அல்லது பிற மதத்தினரா என்பதைக் கண்டுபிடிக்க இது உதவும்.
தமிழ்ப் புலவன் திருவள்ளுவன் ‘பக்கா’ இந்து ; அதனால் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடினான்; புத்தர்களும், சமணர்களும் கடவுள் பற்றிப் பேசவில்லை ; முதல் பத்து குறள்களில் ஏழு குறள்களில் பாதம் பற்றிப் பாடினான் வள்ளுவன் ; இதனால் அவனைத் தீவிர இந்து என்று அறிகிறோம்; அவனைப் பின்பற்றி அவ்வையும் பாதச் சிலம்பு பற்றிப் பாடினார். இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத மதக் கடவுளருக்கு உருவம் கிடையாது.
****
மேலும் இறைவனின் கால் பட்டால் முக்தி கிடைக்கும் ; அது விதியை வெல்ல உதவும் என்று அருணகிரி நாதரும் பகர்ந்தார்
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே.–கந்தரலங்காரம்-40
(சேல் என்னும் மீன்கள் துள்ளித் திரிந்ததால், செந்தூர் வயல் பொழில்கள் அழிந்தன; தேன் கடம்ப மரத்தின் மலர்கள் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனங்கள்; மா மயில் வாகனனின் வேலாயுதம் பட்டு அழிந்தது வேல் என்னும் கடலும் சூரனும் வெற்பு என்னும் மலையும்; அவனின் கால் என்னும் திருவடிகள் என் தலைமீது பட்டு அழிந்தது, அயன் என்னும் பிரம்மன் எனக்கு எழுதிய என் தலையெழுத்து).
குட்டி யானைக்கும் வாசனை மிகுந்த குளிர்ச்சி தரும் கலவைக்கும் களபம் என்று பொருள் ; அதனால் அவ்வையார், சீத/ குளிர்ச்சிமிக்க களபம் என்று அகவலைத் தொடங்குகிறார்
சீத+ உஷ்ணம் = சீதோஷ்ணம் ஸம்ஸ்க்ருதச் சொல் .
அவ்வையார் ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் அகவலைத் துவங்கியதைக் கவனிக்கவேண்டும் ஆனால் வள்ளுவனும் திருக்குறளை ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் துவங்கி ஸம்ஸ்க்ருதச் சொற்களுடன் நூலை முடிப்பதையும் நாம் காண்கிறோம். இது ஒரு குற்றமில்லை. நூலின் சிறப்பினை உயர்த்த வள்ளுவனும் அவ்வையும் கண்ட உத்தி!
*****
திருப்புகழில் களபம்
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி …… யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது …… நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத …… மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு …… மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட …… மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித …… மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு …… மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.
****
களபம் ஒழுகிய புளகித முலையினர்
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகையாடிப்…….
இது போல நிறைய பாடல்களில் காணலாம்………..
முதல் இரண்டு வரிகளைக் கண்டோம் ; மேலும் காண்போம் .
தொடரும்…………………
Tags- விநாயகர் அகவல், ஆராய்ச்சிக் கட்டுரை-1, சீதக் களபச் செந்தாமரைப்பூம்