Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Lord Krishna’s name creates some problems for the Tamils. We may even call them puzzles instead of problems.
What are the puzzles?
1.River Yamuna is called Thozunai in Tamil; we don’t know why.
2.Half baked foreigners, and their Indian sycophants have dated Bhagavata Purana, Hari Vamsam and Vishnu Puranam 4th century CE or later. We find references to Gopis but not Radha. Tamil Akananuru (verse 59), an anthology of 400 verses dealing with Sex, Love and Family life, is referring to Krishna Leela with Gopis; they are begging to Lord Krishna to drop their clothes from the top of the tree where Krishna was hiding them. We know for sure the age of Akanauru is first century CE. That means all the Sanskrit books mentioned above are later works. But I dont believe the half baked “scholars” on this dating issue. If they are right then the puzzle is how come Tamils sang about Krishna Leela before Sanskrit speakers?
3.The third puzzle is a linguistic puzzle. So called scholars said Dravidian languages are different from so called Aryan languages. By putting forth this classification, they proved themselves idiots. The reason being we find thousands of Tamil words or their cognates in English. We also find scores of Tamil words in Greek . Here is the third puzzle; Maal in Tamil means Vishnu; the reason for calling Him Maal or Thiru Maal (Thiru in Sanskrit is Sri) is his colour is Black. Maal in Greek also Black and they named Melanesia after seeing black skinned people in those Pacific islands. Tol kappiam, considered to be the oldest book in Tamil which also described Vishnu as Black (Maayon) . All the black gods of Hinduism Krishna/Vishnu, Kali, Vyasa, Draupadi are utter black; This explodes the Aryan Dravidian divide of the Western gangs. So the puzzle is how come Greek and Tamil have Maal meaning the same.
And the fourth puzzle is how come Krishna became Kannan in Tamil and Kannaiah in the North. Bharati, the greatest of the modern Tamil poets sang about Krishna in more than twenty songs calling him Kannan. He also created a new woman character ‘Kannamma’. So, Kannan became more popular than Krishna. The reason for the change is Sanskrit use pure pronunciation, where as Prakrit used corrupted pronunciation. In this way we got Kannan rom Krishna; Prakrit became Paakatham and Sanskrit became Sangatham in Tamil.
Another surprising thing is we find four or five Sangam poets with Kannan’s name as suffixes. Rudra Kannan= Kannan,s on of Rudra; Kari Kannan= Kannan , son of Kari; Kumattur Kannan= Kannan of Kumattur, Maruthan Kannan= Kannan, son of Maruthan.
And two of the poets sing about Balaraman and Krishnan together in Puranauru (verses 56, 58). And Tamil poets describe even their Vahanas and Flags. That means Tamils were not only religious but also thorough with Hindu literature. And these 18 Sangam Tamil books are secular books. Only in Tirumurukatrup padai we see poms on Lord Skanda. Paripatal (Verses 2, 15) and Kalittokai have innumerable references to Krishna and his bull fighting etc. Last but not the least Tamil poets have names such as Damodaran, Govardhanan, Kesavan , which shows that they appreciated and venerated Krishna’s name.
At first a few scholars argued Kann +an means one who has beautiful eyes But this argument will fall fat when we see Kumattur Kannan etc. No one would say his eyes are as beautiful as Kumattur.
A few scholars derived the name Kanna, Kanniah on the basis of information available at Jataka Tales. Two Jataka stories Ghata and Mahavegga talk about Kanhayana gotram as the gotra of Vasudeva. But this Gotram is not found in Tamil Gotra books. So we have to solve the puzzle by accepting Sanskrit Krishna became Prakrit Kanna and Kanniah in the South and North. Tamils now use both Krishna and Kannan in their songs as well as naming of new children.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)
கிருஷ்ண என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ள பெயர். இது எப்படி, எப்போது கண்ணன் ஆக மாறியது என்பது மொழியியல் வல்லுனர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த சங்கத் தமிழ் பாடல்களில் இந்து தெய்வங்களைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. மஹாவீரர், புத்தர் போன்ற பெரிய மஹான்கள் பெயர்கள் கூட இல்லை. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலையில்தான் சமண, புத்த மத பெரியோர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஏறத்தாழ அதே காலத்தில் எழுந்த தமிழ் வேதமான திருக்குறளில் வாமனாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றை வெளிப்படையாகவே விளம்பி இருக்கிறார். இவ்வளவுக்கும் சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தும் சமய சார்பற்ற இக லோக வாழ்வினைப் பற்றியவை; அதாவது குடும்ப வாழ்வு, காதல், வீரம் ஆகியவற்றைப் புலவர்கள் பாடினார்கள். ஆறாம் நூற்றாண்டு முதல் பக்தி இலக்கியங்கள் எழுந்த பின்னர் இகலோக வாழ்வு மறைந்து, பரலோக வாழ்வு பற்றிய கருத்துக்களே பெரும்பாலும் கிடைக்கின்றன.
வெள்ளைக்கார மண்டூகங்களும் அவர்களை அடியொற்றிச் செல்லும் இந்து சமய அரை வேக்காடுகளும் கிருஷ்ண என்பவரின் புகழ் பாடும் பாகவத புராணம், ஹரி வம்சம், விஷ்ணு புராணம் எல்லா வற்றையும் நாலாவது நூற்றாண்டுக்குப் பின்னர் வைக்கின்றன; அதாவது அதில் கடைசியில் ஏதேனும் சேர்ர்க்கப்பட்டிருந்தால் அதுதான் அதன் காலம் என்று வாதாடும் கும்பல் அது.
அதை ஏற்றுக்கொண்டால் தமிழர்தான் கிருஷ்ணரைப் பற்றிய எல்லாவற்றையும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடினார்கள் என்று ஆகிவிடும். ஏனெனில் கிருஷ்ணரின் கோபி ஸ்த்ரீ விளையாட்டு அகநானூறு (59) பாடலிலே உள்ளது இவ்வளவுக்கும் அகநானூறு சமய நூல் அல்ல. போகிறபோக்கில் ராமாவதார நிகழ்ச்சிகளையும் மஹாபாரத நிகழ்ச்சிகளையுள் பாடிவிட்டுச் சென்றனர் சங்கப் புலவர்கள்.
சங்க நூல்கள் பதினெட்டில் பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் அதிக சமயச் செய்திகளைக் காண்கிறோம். கோபி- கிருஷ்ண லீலைகளை சொல்லும் அகநானூறு (59) பாடலில் யமுனை நதியைத் தொழுனை நதி என்று காண்கிறோம் ; பிற்கால நூல்களும் அவ்வாறே குறிப்பிடுகின்றன. கங்கை நதியைக் குறிப்பிடும் சங்க நூல்கள் கங்கை என்றே பாடுகின்றன. யமுனை மட்டும் தொழுனை ஆனது எப்படி என்பது முதல் மர்மம்; முதல் புதிர்.
கண்ணனிடம் கோபியர் பெண்களை எங்களது ஆடைகளைக் கொடுத்து விடப்ப என்று கெஞ்சிக்கூத்தாடி தொழுததால் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம் அல்லது கண்ணனைத் தொழுத, பிருந்தாவனம் அமைந்த இடம் என்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். தமிழில் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே எல்லா இந்தக் கடவுளரையும் காண்கிறோம் .புறநானூற்றில் நக்கீரரே எல்லோருடைய வாகனங்கள் கொடிகளையும் குறிப்பிட்டுப் பாடுகிறார். ஆக இந்து மதம் கொடிகட்டிப் பறந்ததும்— இந்து மதம் மட்டுமே பின்பற்றப்பட்டதும் —சங்க இலக்கியத்தில் உறுதியாகிறது.
இப்போது கண்ணன் மர்மத்துக்கு வருவோம்;
தமிழில் திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக நிற்பவர் பாரதி. இருபதுக்கும் மேலான பாடல்களில் அவர் கண்ணன் பற்றிப் பாடியதோடு வேறு ஒரு புதுமையையும் செய்தார் ; கண்ணம்மா என்ற பெண் கதாபாத்திரத்தையும் உருவாக்கினார்.
கிருஷ்ணனை யார் இப்படி கண்ணன் ஆக்கினார்கள்? ஏன்?
தொல்காப்பியத்தில் வரும் மாயோன் என்பதற்கும் கிருஷ்ணன் என்பதற்கும் பொருள் ஒன்றே ; கருப்பன்; கறுப்புத் தெய்வம்
ஆரியர்கள் வெள்ளைத் தோலினர் திராவிடர்கள் கறுப்புத் தோலினர் என்ற வெள்ளைக்கார கும்பல் வாதங்களை வியாசர், கிருஷ்ணர், விஷ்ணு , திரவுபதி ஆகியோர் தவிடு பொடியாக்குகிறார்கள் ஏனெனில் இவர்கள் அனைவரும் காக்கா கருப்பு!!
பாகவத காலத்தை வெள்ளைக்கார நோக்கில் பார்த்தால் தமிழில் தான் கிருஷ்ணர் – கோபியர் பற்றிய முதல் குறிப்பு கிடைக்கிறது சம்ஸ்க்ருதத்தில் கோபியர்- ராதா பற்றிய குறிப்புகள் பின்னரே கிடைக்கின்றன. மேலும் மிகப்பிரிய அறிஞரான ராகவ அய்யங்கார் தொல்காப்பியம் சொல்லும் மாயோன் கிருஷ்ணன்தான் என்கிறார். எல்லாம் கருப்பு என்றே பொருள்.பின்னர் மாயவன் என்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. இது மாயம் செய்யும் அவதாரம் என்ற பொருள்தரும்; கிருஷ்ணன் செய்த மாயங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல.
இங்கு ஒரு மொழியியல் அதிசயமும் கிடைக்கிறது. மால, மேல, மல MELA (MELANESIA= LAND OF BLACK PEOPLE) என்றால் கருப்பு என்று கிரேக்க மொழியில் பொருள் ; கிரேக்கச் சொல் தொல்காப்பியத்தில் புகுந்தது எப்படி?
உண்மையில் சொல்லப்போனால் வெள்ளைக்காரன் மொழியியல் LINGUISTICS எல்லாம் மோசடி வேலை. ஆரிய மொழி, திராவிட மொழி என்று சொல்லிப் பொய்யுரை பரப்பின. கிரேக்க மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்களும் ஆங்கில மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களும் இருப்பதை எழுபது கட்டுரைகள் மூலம் காட்டியுயுள்ளேன்.
ஆக மால், மாலன், மாயோன், என்பதெல்லாம் கருப்பு வண்ண கண்ணனை அல்லது விஷ்ணுவைக் குறிப்பதே.
****
சங்க இலக்கியத்தில் கண்ணன் !
பரிபாடலில் தாமரைக் கண்ணன் என்ற பெயர் வருகிறது. அப்போது தாமரை வடிவிலுள்ள கண் உடையவன் என்று பொருள் கொண்டார்கள் ஆனால் சங்க புலவர் பட்டியலில் பல புலவர்கள் கண்ணன் என்ற பெயருடன் உள்ளனர். உருத்திரன் கண்ணனார் அதிகமான வரிகளை பாடிய புலவர். அவரை ருத்ர கிருஷ்ணன் என்று மொழிபெயர்த்தால் கோபக் கண்ணன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நான் அதை மறுக்கிறேன் ; உண்மையில் ருத்ரன் மகனான கண்ணன் /கிருஷ்ணன் என்பதே பொருள்.
இதற்கு என்ன ஆதாரம்? என்று வினவலாம்.
ஒரு புலவரின் பெயர் குமட்டூர் கண்ணனானர். வெள்ளைக்காரன் போல பொருள் கொண்டால் அவரது கண்கள் குமட்டூர் போன்றது என்று அபத்தமாகப் பொருள் கொள்ள வேண்டிவரும். உண்மையில் அவர் பெயர் கண்ணன் அவர் குமட்டூரைச் சேர்ந்தவர் என்பதே பொருள்.
மருதன் கண்ணனார் , காரிக்கண்ணனார் என்ற புலவர் பெயர்களும் உள்ளன. காரிக்கண்ணன் பெயரையாவது கறுப்புக் கண்ணன் என்று சொல்லிவிடலாம்; மருதன் கண்ணனாரை மருத நிலம் போன்ற கண் உடையவர் என்று பொருள் சொல்ல முடியாதே! ஆகவே எல்லா கண்ணன்களையும் “கண்” பற்றி எழுந்த சொற்கள் அல்ல கிருஷ்ணன் பெயரால் வந்த சொற்களே என்று அறிகிறோம்; இதற்கு மேலும் பல சான்றுகள் சங்க இலக்கியத்திலே கிடைக்கின்றன. கோவர்த்தனார், தாமோதரனார், கேசவனார் போன்ற புலவர்களும் சங்கத் தமிழ் பட்டியலில் இடம்பெறுகின்றன இவை அனைத்தும் கிருஷ்ண பரமாத்மாவின் லீலி,,,,,,களால் உண்டான பெயர்கள்; ஆக சங்க இலக்கியத்தில் வரும் கன்னங்கள் கண் அழகினால் பெயர் பெறவில்லை கிருஷ்ண பரமாத்மாவின் பெயரையே தாய் தந்தையர் சூட்டியதால் மருதன் மகன் கண்ணன் , உருத்ரன் மகன் கண்ணன் என்று உறுதியாகச் சொல்லலாம்.
அகம் 59, பரிபாடல் 2, 15;
கிருஷ்ணன், பலராமன் – புறநாநூறு 56;
மதுரைக் காஞ்சியில் பகவத் கீதை நடந்தது/ உபதிசித்தது பற்றிய மறைமுகக் குறிப்பும் உளது
மால் என்ற பெயரை பரிபாடலில் காண்கிறோம்
புறம் 58-ல் ‘காரி’க் கண்ணனார் நீல் நிற நேமியோன் என்ற கண்ணனைக் குறிப்பிடுவதால் அவர் பெயரும் கூட கிருஷ்ண/ கண்ணன் என்பது உறுதியாகிறது.
அது சரி வடக்கில் கிருஷ்ணன் எப்படி கண்ணா ஆகியது ? அதற்கும் பதில் உண்டு. சம்ஸ்க்ருதத்திலுள்ள தூய உச்சரிப்புகளை கிராமத்து மக்களும் வீட்டிலுள்ள பெண்களும் கொச்சையாகப் பேசுவர்; அதை பிராகிருதம் என்பர். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இலக்கியத் தமிழையும் விற கு வெட்டியானபோது கொச்சை தமிழையும் பேசுவதைக் காண்கிறோம்; இது சம்ஸ்க்ருதம்- பிராகிருதம் போன்றது.
“க்ரு” ஒலி தமிழில் கிடையாது; ஆகையால் சங்கதம் , பாகதம் என்ற சொற்களைத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தினர். இதே முறையில் “க்ரு” “க” ஆக மாறியது. பின்னர் “கண்ண” என்று மாறியது; இதனால் வடக்கிலும் கன்னையா லால் , கன்னா என்ற பெயர்களைக் காண்கிறோம். இன்றும் வடக்கில் கன்னையா பெயர்கள் உள்ளன. ஆண்களாக இருந்தால் தமிழ் பெயர்கள் பெரும்பாலும் ‘ன்’ அல்லது ‘ம்’ என்பதில் முடியும். சுவாமிநாத: என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதும் என் பெயர் தமிழில் சுவாமிநாத+ன் ஆகிவிடும்; ஸ்கந்த: என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் கந்த+ன் ஆகிவிடும் இதே முறையில் கண்ண +ன் சேர்ந்து கண்ணன் ஆகியது .
பழங்காலத்தில் கொச்சைத் தமிழ் இலக்கியம் கிடையாது. எல்லா மொழிகளிலும் கொச்சைத் தமிழில் இலக்கியம் படைப்பது பிற்காலத்தில்தான். இதை முதலில் காண்பது பிராகிருத மொழி இலக்கியத்தில்; சம்ஸ்க்ருத இலக்கியம் எழுந்த பின்னரே பிராகிருத இலக்கியம் எழுந்தது. தமிழிலும் பல்லாயிரக்கணக்கான கொச்சைத் தமிழ் இலக்கியங்கள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகவே வருகின்றன. அவற்றை நாம் பத்திரிகைகளில் வரும் கதை, நாவல்களில் காண்கிறோம். இலக்கிய மொழியும் , கொச்சை மொழியும் சம காலத்தில் புழங்கி இருந்தாலும் அதை எழுத்தில் வடிக்கும் துணிவு மிகவும் பிற்காலத்திலேயே எழுந்தது
இதனால் கிருஷ்ண என்பதற்குப் பதிலாக கண்ண/ கன்னா என்பதை பிற்காலத்திலே காண்கிறோம்.
இதற்கு இன்னும் ஒரு விளக்கத்தையும் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்; ஆனால் அது புத்த மத ஜாதகக் கதைகளில் வருவதால் சரியானதா என்று சொல்ல முடியாது ; கட ஜாதகக் கதையிலும் மஹா வக்க ஜாதகக் கதையிலும் கா ன்ஹாயன என்ற கோத்ரம் இருந்ததாகவும் வாசுதேவன் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் கதை போகிறது. ஆயினும் அப்படிப்பட்ட கோத்ரம் கோத்ரப் பட்டியலில் இன்று இல்லை.
ஆக மொழியியல் கொள்கைகள் அபத்தம் என்பதையும், திராவிட மொழி என்று தனி பிரிவு கிடையாது என்பதையும் கிருஷ்ண= கண்ணா காட்டுகிறது; மால் = மேலனேஷியா தீவுகள் காட்டுகிறது.
–subham—
Tags-கண்ணன் கிருஷ்ணன், பாகதம் சங்கதம் மால் திருமால் மாயோன் , கருப்பு, கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையாகப் புகழ் பெற்றதோடு அனைத்துப் பெண்களுக்கும் விண்வெளி ஆர்வத்தை ஊட்டி, பல்வேறு மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அளித்தவர் விண்வெளிப் பெண்மணியான சாலி க்ரிஸ்டென் ரைட் ஆவார்.
பிறப்பும் இளமையும்
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் சாலி ரைட். தாயார் கரோல் நார்வேஜிய வமிசாவளியினர். பெண்களின் சீர்திருத்தத்தில் அவர் ஈடுபட்டவர். தந்தை டேல் பர்டெல் ரைட் அமெரிக்க ராணுவத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பணியாற்றியவர். போர் முடிந்த பிறகு அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் சாண்டா மோனிகா கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.
நல்ல சூழ்நிலையில் வளர்ந்த சாலி ரைட் ஒன்பது வயதாகும் போது ஸ்பெயினுக்குக் குடும்பத்துடன் பயணப்பட்டார். அங்கு அவர் டென்னிஸ் விளையாட்டில் வெகுவாக ஈர்க்கப்பட்டார். 12 வயதாகும் போது தென் கலிபோர்னியாவில் டென்னிஸ் விளையாட்டில் தர வரிசையில் 20 என்ற இடத்திற்கு முன்னணியில் வந்தார்.
வான் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாலி இயற்பியலில் தேர்ச்சி பெற்றார்.
‘‘கலிபோர்னியா கேர்ல்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர் டென்னிஸ் விளையாடுவதில் சிறந்து விளங்கியதோடு. அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி என்றால் போதும் அடங்காத ஆர்வத்துடன் அனைத்துச் செய்திகளையும் கவனிப்பார்
நாஸாவின் அழைப்பு
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா 1977ல் விண்வெளி செல்ல விரும்புவோருக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பைப் பார்த்த சாலி இதில் பெண்களுக்கு இடம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். ஏனெனில் அது வரை பெண்களுக்கு விண்வெளித் திட்டத்தில் இடம் தரப்படவில்லை.
நாஸா பெண்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன், சாலி ரைட் விண்வெளி செல்ல ஒரு வீராங்கனைக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று பார்த்தார். “ஆஹா, இது என்னால் முடியும்” என்ற முடிவுக்கு உடனே வந்த அவர் நாஸாவிற்கு விண்ணப்பத்தை அனுப்பி விட்டார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பிஹெச்டி படிப்பை அவர் முடித்த தருணம் அது. பல்கலைக் கழகத்திலேயே அனைவரும் அவர் தான் முதல் விண்வெளி வீராங்கனை என்று முடிவு கட்டி விட்டார்கள் என்றால் எப்படிப்பட்ட துணிச்சலும் விண்வெளி ஆர்வமும் அவருக்கு இருந்திருக்க வேண்டும்!
1977, ஜூன் மாத இறுதியில் நாஸா 8079 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 208 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடுமையான மருத்துவ பரிசோதனைகள், நேர்முகத் தேர்வுகள். எதையும் சமாளிக்கும் திறன் இருக்கிறதா, குழுவாக இணைந்து செயல் ஆற்றும் திறன் உள்ளதா என்பதற்கான சோதனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அவர் தேர்வு பெற்றார். இறுதித் தேர்வில் 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விண்வெளிக்கான பயிற்சிகள் தொடங்கின. 1979, ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக நாஸா அறிவித்தது.
முதலில் அவர் தரை நிலையத்தில் தகவல் தொடர்புக்கான வேலையைத் திறம்படச் செய்தார்.
விண்கலத்தின் ரொபாட்டின் கரத்தை இயக்குவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். இதற்கான காரணம் அவரது டென்னிஸ் விளையாட்டு தான். கண்ணுக்கும் கைகளுக்கும் இடையே உள்ள இசைவு டென்னிஸ் விளையாட்டில் மிக அதிகம் தேவைப்படும். அதுவே ரொபாட்டை இயக்க அவருக்குப் பெரிதும் உதவியாக ஆனது,
நாஸா எப்போதுமே தனிப்பட்ட நபருக்குள்ள திறனை அதிகமாகப் பாராட்டாது. குழு மனப்பான்மை கொண்டு குழுவாக இசைந்து செயல்படுபவரின் செயல் திறத்தையே நாஸா எப்போதும் பாராட்டும். சாலி இதிலும் நல்ல பெயரைப் பெற்றார்.
விண்வெளிக்குச் செல்லும் தகுதியான பெண்மணி என்று அவரைத் தேர்ந்தெடுத்த நாஸா அதை அறிவித்தது.
அவ்வளவு தான், உடனடியாக 500 பேர்கள் அவரைப் பேட்டி காண வந்து விட்டனர். அவர் அதற்கு இணங்கவில்லை. நாஸாவே ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
சங்கடமான கேள்விகள் உட்பட கேள்விக் கணைகள் பறந்து வந்தன சாலி ரைடை நோக்கி.
“பயணத்தில் ஏதேனும் தவறாகப் போய்விட்டால் நீங்கள் அழுவீர்களா? உங்கள் ஜனன உறுப்பு விண்வெளிப் பயணத்தினால் பாதிக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளுக்கு, தான் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக மட்டுமே பார்ப்பதாக அவர் பதில் அளித்தார்.. ஒரு பெண்மணிக்கு விண்வெளியில் மேக்-அப் செட் வேண்டாமா,அதை வடிவமைக்க உதவி செய்யுங்களேன் என்று நாஸா பொறியாளர்கள் வேறு அவரைக் கேட்க ஆரம்பித்தனர்.
விண்வெளிப் பயணம்
1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சாலஞ்சர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போது அதில் பயணப்பட்ட சாலி ரைட் உலகில் விண்ணில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார். அவரே விண்ணில் பறந்த மிகக் குறைந்த வயதினர் என்ற பெருமையையும் பெற்றார்.
அவர் விண்ணில் பறந்த தினத்தன்று ஏராளமானோர் குதூகலத்துடன் “ரைட் சாலி ரைட்” (Ride Sally Ride) என்ற ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய ‘டி’ ஷர்ட்டுகளை அணிந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறு நாட்கள், இரண்டு மணி 23 நிமிடங்கள் 59 விநாடிகள் இந்தப் பயணம் நீடித்தது.
உலகமே கொண்டாடும் சிறந்த விண்வெளி வீராங்கனை ஆகி விட்டார் சாலி ரைட்!
மீண்டும் 1984-ல் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவர் சேலஞ்சர் விண்கலத்தில் எட்டு நாட்கள் பறந்தார். 197.5 மணி நேரத்தில் சேலஞ்சர் 132 முறை பூமியை ஓடுபாதையில் சுற்றி வலம் வந்தது.
இந்த இரு பயணங்களிலும் சுமார் 343 மணி நேரங்கள் அவர் விண்வெளியில் பறந்திருந்தார்.
28-1-1986ல் விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இதில் ஏழு விண்வெளிவீரர்கள் இறந்தனர். இந்த விபத்து ஏற்பட்டதையொட்டி அவரது மூன்றாவது பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நாஸாவிலிருந்து ஓய்வு பெற்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரப்போவதாக அவர் அறிவித்தார். 1989ல் அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஆனார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 24- ஆம் தேதி, 2024-ம் ஆண்டு
****
COLLECTED AND EDITED FROM VARIOUS NEWSPAPERS.
பிரேசிலில் ராமாயணம் — மோடி கண்டுகளிப்பு
உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்றது
அப்போது பிரேசில் நாட்டி ல் பல கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதில் ஒன்று ராமாயண நாடகம்.
அங்கு சம்ஸ்க்ருத மொழியில் ராமாயணத்தை நடித்துக்காட்டினர்; அதை பார்த்த இந்திய பிரதமர் ந ரேந்திர மோடி நடிகர்களை பாராட்டினார்..
வேதாந்தத்தையும் ஸம்ஸ்க்ருதத்தையும் போதிக்கும் விஷ்வ வித்யா குருகுலத்தின் மாணவர்கள் இந்த ராமாயணத்தை நடித்துக் காட்டினார்கள்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோனாஸ் மாசெட்டி நிறுவிய கல்வி நிறுவனம் இது
அவர் சம்ஸ்க்ருத மந்திரம் ஓதி மோடியை வரவேற்றார். பிரதமர் மோடி மாணர்களைப் பாராட்டினார்.
இதே போல மற்றும் ஒரு தென் அமெரிக்க நாடான கயானாவில் ஆர்ய சமாஜ இயக்கத்தினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். ஆர்ய சமாஜத்தை ஸ்தாபித்த தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இரு நூறாவது ஆண்டுவிழா நடக்கும் ஆண்டில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது தனக்கு மன நிறைவை அளிப்பதாக மோடி தெரிவித்தார்
****
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கூடாது! ஹைகோர்ட் அதிரடி தடை
2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி கர்நாடக இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது
மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், கடந்த 2004 ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம் எஸ் சுப்புலட்சுமி விருது என்ற பெயரில் 1 லட்சம் ரூபாய் ரொக்க விருதை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மியூசிக் அகாடமியின் இசை கச்சேரி சீசனில் ஒவ்வொரு ஆண்டும் ‘சங்கீத கலாநிதி விருது’ வழங்கப்படுவதாகவும், வரும் டிசம்பரில் 98 வது ஆண்டு விழாவில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,. தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பாடகர்.டி.எம்.கிருஷ்ணா கூறிவரும் நிலையில் , மியூசிக் அகாடமியின் அறிவிப்பு சுப்புலட்சுமியின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
பாடகர்.டி.எம்.கிருஷ்ணா பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் தனது பாட்டி சுப்புலட்சுமிக்கு எதிராக கருத்துகளை மலிவான விளம்பரத்துக்காக கூறி வந்தார். கர்நாடக இசை உலகில் தன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிய ஒருவரை மியூசிக் அகாடமி எப்படிக் கெளரவிக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும்,எம்.எஸ். சுப்புலட்சுமியின் உயிலின்படி, எந்த விதமான விருதும் வழங்க கூடாது என்றும் பேரன் சீனிவாசன் வழக்கில் முறையிட்டிருந்தார் .
எம் எஸ் சுப்புலட்சுமி உலகப் புகழ்பெற்ற பாடகி; ஐ நா சபையில் பாடியவர்; பாரத ரத்நா பட்டம் பெற்றவர் அவரை இழிவுபடுத்திய பாடகருக்கு விருது மறுக்கப்பட்டது மியூசிக் அகாடமி மேல் விழுந்த பலத்த அடி என்று இசை ரசிகர்கள் கூறி, ஹைகோர்ட் தீர்ப்பினை வரவேற்றனர்
*****
திருப்பதி கோவிலில் மாற்று மதத்தினரை நீக்க முடிவு
திருப்பதி, திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் ஹிந்துக்களைத் தவிர, மாற்று மதத்தினரை விருப்ப ஓய்வு பெற அல்லது வேறு துறைகளுக்கு இடமாற்றம் கோரும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. திருமலையில் இனி ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில் இந்த மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். பி.ஆர்.நாயுடு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதுகுறித்து பி.ஆர். நாயுடு கூறியுள்ளதாவது:
ஹிந்து கோவிலில் ஹிந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. ஹிந்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேவஸ்தானம் கோவில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர்.
ஒன்று அவர்களாகவே, வி.ஆர்.எஸ்., எனப்படும் விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம் அல்லது வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் கோரலாம்.திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த ஹோட்டல் சட்டவிதிகளை மீறியது.
அதனால் அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, திருப்பதியில் ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு பி.ஆர். நாயுடு கூறினார்.
******
மருதமலை கோவிலில் மாற்று மதத்தினரை பணியிலிருந்து நீக்காவிட்டால் போராட்டம்’: ஹிந்து முன்னணி அறிவிப்பு
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நவம்பர் 18 ஆம் தேதி அளித்த பேட்டி:
கடந்தாண்டு, ‘சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம்’ என சிலர் கூறியிருந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போது, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.
அதேபோல இந்த ஆண்டும், திருப்பூர், கொங்கணங்கிரியில் வேல் வழிபாடு துவங்கி, திருப்பூர், அழகு மலையில் நிறைவடையும். டிசம்பர் 25ம் தேதி, திருப்பூரில் நடக்கும் வேல் வழிபாட்டில், ஹிந்துக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இதன் முன்னோட்டமாக, மருதமலையில் வேல் வழிபாடு நடந்தது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாற்று மதத்தினரை பணியில் அமர்த்தியுள்ளனர். அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
அர்ஜுன் சம்பத், அவருடைய மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் நடிகை கஸ்துாரி ஆகியோரை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்துள்ளனர்; அது கண்டிக்கத்தக்கது. ஈஷா இயக்கம் பல்வேறு நல்ல காரியங்கள் செய்து வருகிறது. அங்கு யாரேனும் அத்துமீறி நுழைந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., அரசு, தி.க., மற்றும் நக்சலைட் சார்ந்த அரசாக உள்ளது.
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஹிந்துக்கள் இணைந்து போராட வேண்டும். வரும் 2026 சட்டசபை தேர்தலில், அரசின் நடவடிக்கைகளுக்காக மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
இவ்வாறு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
*****
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99–வது பிறந்த நாள் விழா
புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா நேற்று நவம்பர் 23–ஆம் தேதி கொண்டாடப்பட்டது. காலை 8:00 மணிக்கு வேதங்கள் ஓதப்பட்டன. 8:20 மணிக்கு பிரசாந்தி பஜனை குழுவினரின் குரு வந்தனம் நடந்தது.
*****
‘
அடுத்ததாக சபரிமலை செய்திகள்
சபரிமலையில் படி பூஜை: 2039 வரை முன்பதிவு
சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகள் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலசம், களபாபிேஷகம், புஷ்பாபிஷேகம்.இதில் களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் பக்தர்கள் உடனடியாக பதிவு செய்து நடத்தும் வசதி இருந்தது. இந்த ஆண்டு முதல் களபாபிஷேகமும் முன்பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பாபிஷேகம் மட்டுமே பக்தர்களால் உடனடியாக செய்யும் வழிபாடாக எஞ்சியுள்ளது.
படி பூஜைக்கான கட்டணம், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய்; 2039 மார்ச் வரை முன்பதிவு முடிந்துள்ளது
****
பிள்ளளையார் பட்டி கோவில்
ஐயப்ப பக்தர்கள் இந்த சீசனில் பிள்ளையார்பட்டி கணபதியைத் தரிசிக்கவும் அதிக அளவில் வருகிறார்கள். இதனால் கோவிலை நாள் முத்தும் திறந்து வைப்பதாக அறிவித்துள்ளனர் .
****
தமிழ்நாட்டு கோவில்கள் சார்பில் அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைப்பு
தமிழ்நாட்டு திருக்கோவில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை அய்யப்ப பக்தர்களுக்காக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நவம்பர் 23–ஆம் தேதி சென்னை, பாடி, அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோவில் வளாகத்தில் தமிழ்நாட்டு பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 2,000 பிளாஸ்க்குகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
****
கடைசியாக, லண்டன் நிகழ்ச்சி பற்றிய செய்தி
சம்பிரதாய பஜனை உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் அவர்களின் குழுவினர் இந்த ஆண்டும் லண்டனுக்கு வருகை தந்தார்கள் . நவம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் 24 ஞாயிற்றுக்கிழமை வரை வெம்பிளி பார்க் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகிலுள்ள சத்தாவீஸ் பதித்தார் ஹாலில் காலை முதல் மாலை வரை பக்தி இசை விருந்து அளித்தார்கள். இது அந்தக் குழுவின் நாலாவது ஆண்டு விஜயம்.
லண்டன் மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்; மூன்று நாள் விழா இன்று நிறைவு அடைந்தது .
XXXXXX
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .
அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் முதல் தேதி, லண்டன் நேரம் ஒருமணிக்கும், இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்நடைபெறும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mitraseva organisation has arranged the Radha Madhav Kalyan Event (Divine Wedding) for the fourth consecutive this year in Sattavis Patidar Hall in London. Dr Udaiyalur Kalyanaraman , the top most Sampradaya Bhajan singer in Tamil Nadu, came with his team of musicians. As before, over thousand people attended the event on 22, 23, and 24th November 2024.
As part of this great Bhajan event a lot of local singers and artistes were also invited to give their dance and music performances. We saw tremendous young talents during these days. Teenage singer Sreyas Vishunudas, Violinist Miss Aparna Raghuraman were among the performers. Dance students of Mrs Meena Rajagopalan also staged dance events. Miss Kirti Rajagopalan coordinated the first day events. A big group of volunteers made this FREE event a grand success.
Dr Udaiyalur Kalyanaraman , Brga fame Balasubramaniam and Mrdangist Babu made all the 1000++ singers to recite the divine names. Free meals were served on all the three days.
Bhajan Balasubramaniam of London started the Unjuvarthi two months ago visiting different towns—from Dublin in Ireland to Scotland in UK. Lot of women came in their traditional style sarees with their children.
Mitraseva was started 8 years ago to serve the old age people in London; but now it has widened its activities to cover all the age groups. Mr Ram Kaza and Mr M Rajagopalan explained its weekly activities in London and requested everyone to take part in them.
Radha Madhav Kalyan committee has a dedicated group of volunteers including Mr Rajagopalan and Mrs Uma Rajagopalan, Mr Rajagopalan and Mrs Meena Rajagopalan, Mahesh, Krishnan, Mr Ram Kaza, Mrs Mythili Kaza, Mr Balasubramnyam of Ilford and Mrs Padma Balasubramanyam, Mr Subramanyam and Mrs Gayathri Subramanyam, Mr Natarajan Ganesan. Over fifty volunteers were honoured with a memento from the hands of Dr Udaiyalur Kalyanaraman.
Some of the pictures are attached here in batches. Here is the first batch of pictures:-
–subham—
Tags- Dr Udaiyalur Kalyanaraman, Mitraseva, London event 2024, Radha Madhav Kalyan,Three Day, London Radha Kalyan Event ,
சுமார் 1800- ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. புத்தமதம் எங்கும் பரவியது. தக்லாமகன் என்பது ஒரு பெரிய பாலைவனம். இடையிடையே நீர் ஊற்றுக்கள் உள்ள ஒயஸிஸ் Oasis என்னும் வளமான ஊர்களும் உண்டு. அந்தப் பாலைவனத்தில் மஹாபாரத பழஞ் சுவடிகள் அண்மையில் கிடைத்தன. மஹாபாரதம் தொடர்பான மிகப் பழைய சுவடி இதுதான்!
புத்த மத துறவிகள் மலைப் பாறைகளைக் குடைந்து அஜந்தா குகைப் பாணியில் ஏற்படுத்திய குடைவரை Caves, Rock cut monasteries
வசிப்பிடங்களும் மத்திய ஆசியா முழுதும் காண ப்படுகின்றன. அதே காலத்தில்தான் Oasis பாலைவன சோலை நகர்களில் புத்த மத துறவிகள் கூட்டம் பெருகியது; கிஸில் , குசா Kizil, Kucha என்னும் இரண்டு இடங்களில் மட்டும் 10,000 துறவிகளும் 236 குடைவரை பாறை வசிப்பிடங்களும் Rock cut monasteries இருந்தன. மீரான் Miran என்னும் ஊரில் ஜாதகக் கதைகளை சிற்பங்களாக செதுக்கினர். காந்தாரத்திலிருந்து வந்த ஓவியர்கள் குகைகளில் ஓவியம் தீட்டினர். சிங்கியாங் மாகாண மீரான் நகரில் 350-400 CE ஆண்டில் பெரிய பெளத்த மடாலயம் எழுந்தது. ஓவியத்தை வரைந்தவர் தன்னுடைய பெயரை டைட்டா என்று கையெழுத்திட்டு இருக்கிறார். ஒருவேளை ரோமாபுரியிலிருந்து வந்த Titus டைட்டஸ் என்ற பெயராக இருக்கலாம் என்றும் வரலாற்று அறிஞர்கள் செப்புகிறார்கள்.
இரண்டு பாலைவன –ஒயஸிஸ் — சோலை நகர ஓவியங்களில் பல விசித்திரங்களை காணமுடிகிறது ; புத்த மத துறவிகள் அந்தரத்தில் மிதக்கிறார்கள்; சித்தர்கள், யோகிகள் செய்யும் இந்த மிதத்தலை ஆங்கிலத்தில் லெவிடேஷன் levitation என்பார்கள் பேய், பிசாஸு பூதங்களின் உருவங்களும் காணப்படுகின்றன
குமாரவிஜயKumaravijaya யார் ?
குமாரவிஜய Kumaravijaya 344-413 CE என்பவர் ஒரு பிராமணர். அவருடைய தந்தை இந்தியாவில் ஒரு அமைச்சர். அவரது குடும்பத்தினர் சீனாவில் குசா நகரில் இருந்த சிற்றரசரின் அவையில் பணியாற்றினார்கள் .
அவர் பெரிய சம்ஸ்க்ருத அறிஞர். சம்ஸ்க்ருதத்தில் பல நூல்களை எழுதியதோடு நிற்காமல் மஹாயான புத்தமதப் பிரிவின் நூல்களை சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார்.
அவர் மொழிபெயர்த்த முக்கிய நூல் தாமரை சூத்திரம் என்று ஆங்கிலத்தில் பிரபலமாகியது அதன் உண்மையான பெயர் சத் தர்ம புண்டரீக சூத்ரம் empathaakum
The Lotus Sūtra (Sanskrit: Saddharma Puṇḍarīka Sūtram, Sūtra on the White Lotus of the True Dharma, Chinese: 妙法蓮華經. புண்டரீகம் என்றால் தாமரை மலர். வியட்நாம் வரையுள்ள எல்லா புத்த மத நாடுகளிலும் இது அந்தந்த மொழியில் கிடைக்கிறது . அந்த நூலின் தெளிவினையும் ஆக்கத்தையும் காண்பவர்கள் இவரது புலமையை வியக்கிறார்கள்.
குசானர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்த பின்னர், சிறிய அரசுகள் எழுந்தன. குசாவில் இருந்த மன்னரை குமாரவிஜயவின் தாயார் மணந்தார். அவளது பெருமையை குமார விஜயவின் நண்பர் ஹூயகியாவோ 1600 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளார் அவள் அபார அறிவும் கேட்டதையும் படித்ததையும் அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளும் அபூர்வ சக்தியையும் பெற்றவளாம். அவளுக்கு இருபது வயதானபோது திருமணம் நடந்தது. அவளுக்கு கற்காமலேயே ஸம்ஸ்க்ருதப் புலமை ஏற்பட்டது என்றும் நண்பர் எழுதியிருக்கிறார் குமாரவிஜய பிறந்தவுடன் அவள் புத்தமதத்த துறவி ஆகிவிட்டாள்.
அப்போது குமார விஜயவுக்கு ஏழு வயது . பிட்சுணியான தாயாருடன் அவர் காஸ்மீருக்கு வந்து பந்து தத்தன் என்ற அறிஞரின் கீழ் சமய நூல்களைக் கற்றார். தாயார் இறந்தவுடன் குமார விஜய மத்திய ஆசியாவிலுள்ள பல நகரங்களுக்குச் சென்று மஹாயான புத்தமதப் பிரிவு நூல்களை பயின்றார். பின்னர் குசா நகருக்குத் திரும்பினார். தனது ஆசிரியரையும் மஹாயான பிரிவுக்கு இழுத்தார்; அப்போது வாக்குவாதம் நடந்தது.
சுவையான உரையாடல்
பந்து மித்ரா ஒரு கதையைச் சொல்லி மஹாயான புத்தமதக் கொள்கைகள் அது போன்றதே என்றார்; அந்தக்கதை இதோ,
ஒரு பைத்தியக்காரன் ஒரு நெசவு நெய்யும் தொழிலாளியிடம் வ ந்து மிக மெல்லிய சன்னமான நூல் வேண்டும் என்றும் அதில் ஆடை வேண்டும் என்றும் சொன்னான். நெசவாளியும் உயிரைக்கொடுத்து மெல்லிய ஆடை நெய்தான். பைத்தியக்காரன் இது முரட்டுத் துணி என்று சொல்லிவிட்டு அதை விட மெல்லிய நூலால் ஆடை நெய் என்று ஆர்டர் கொடுத்து விட்டுப் போனான்; இரண்டாவது முறை செய்த மெல்லிய ஆடையையும் பைத்தியக்காரன் ஏற்கவில்லை. நெசவாளிக்குக் கோபம் வ ந்தது ; அடுத்த முறை வா; நல்ல ஆடை செய்கிறேன் என்றான். மூன்றாவது முறை பைத்தியக்காரன் வந்த போது இந்த ஆடை எப்படி இருக்கிறது? என்றான். கண்ணுக்கு ஆடையே தெரிய வில்லையே என்றான் ; நெசவாளி சொன்னான் , உண்மைதான் இது கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு சன்னமான ஆடை என்றான் . பைத்தியக்காரனும் காசு கொடுத்து அதை வாங்கிச் சென்றான். இது போலத்தான் உன் கொள்கையும் என்றார் குருநாதர்
ஆனால் பிற்காலத்தில் அவரையும் மஹாயானத்தை ஏற்கவைத்தார் குமார விஜய.
அவரது வாழ்வில் இரண்டு முறை குசா நாட்டின்மீது மீது படையெடுத்த எதிரிகளிடம் சிக்கினார்; ஒரு முறை இவரைக் கடத்திச் சென்ற எதிரி அவருக்கு போதை மருந்தைப் பானத்தில் கலந்து கொடுத்து ஒரு வேசியையும் அவருடன் படுக்க அனுப்பினான். அதில் பயங்கிய குமார விஜய மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பின்னர் தப்பிச் சென்று நாட்டுக்குத் திரும்பியபோது இரண்டாவது முறை கைதானார். ஆனாலவரது அறிவை மெச்சி விடுதலை செ தனர். அவர் தலைமையில் மொழிபெயர்ப்புத் துறையை உண்டாக்கிய மன்னன் ஏராளமான அறிஞர்களை அழைத்து எண்ணற்ற சம்ஸ்க்ருத நூல்களை மொழிபெயர்த்தார். இதனால் சீனாவில் இந்தியாவில் இல்லாத புத்த மத நூல்கள் இப்போதும் சீன மொழியில் கிடைக்கின்றன. இது குமார விஜய செய்த மிகப்பெரிய சாதனை. சம்ஸ்க்ருத நூல்களையும், புத்தமத நூல்களையும் சீன மொழியில் பரப்பியதும் அவர் செய்த பணிகள் ஆகும்
பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; வாழ்கின்ற நாட்களில் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இதற்கான வழிகளைப் பழம் பெரும் வேதமான ஆயுர்வேதம் கூறுகிறது.
இந்து புராணங்களின் படி மருத்துவத்தின் கடவுளாகப் போற்றப்படுபவர் தன்வந்தரி பகவான். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கும் மருத்துவராகக் கருதப்படுகிறார்.
மஹாவிஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றியவர் தன்வந்தரி.
ஆயுர்வேதத்தை அருளியவர் தன்வந்தரி. ஆகவே இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்று குறிப்பிடுகிறோம்.
தன்வந்தரியின் தோற்றம்
புராண வரலாற்றின் படி மரணம் அற்ற அம்ருத நிலையை அடைய தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஐப்பசி மாத தேய்பிறையின் 13வது நாளில் பாற்கடலிலிருந்து தோன்றியவரே தன்வந்தரி. இந்த தினமே தந்தேராஸ் என்று வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளான தன்வந்தரி ஜெயந்தி தினத்தை ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடுகிறோம்.
பாகவதத்தில் கூறப்படும் 22 அவதாரங்களில் 12வது அவதாரமாகக் கூறப்படுவது தன்வந்தரியின் அவதாரமாகும்.
வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் தன்வந்தரியின் தோற்றம் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது.
நான்கு கரங்களுடன் தோன்றும் தன்வந்தரி,வலது கை ஒன்றில் சங்கையும் மற்றொரு கையில் அமிர்த கலசத்தையும் இடது கை ஒன்றில் சக்கரமும் மற்றொன்றில் அட்டைப்புழுவும் கொண்டிருப்பதாக நூல்கள் விவரிக்கின்றன. சில நூல்கள் அவர் ஒரு கரத்தில் ஓலைச்சுவடியைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன.
பாற்கடலிலிருந்து தோன்றியதால் நீரிலிருந்து பிறந்தவர் என்று பொருள்படும் அப்ஜு என்ற சொல்லால் அவர் அழைக்கப்பட்டார்.
காசியை ஆண்ட காசி மன்னனுக்கு திவோதாஸர் என்பவர் பிறந்தார். இவர் தன்வந்தரியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
தன்வந்தரி அஷ்டோத்திரம்
தன்வந்தரியைக் குறித்த அஷ்டோத்தரத்தை தினமும் ஓதித் துதிப்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு மரபாகும்.
108 திருநாமங்களில் தன்வந்தரியைப் பற்றிய அரிய விசேஷ குணங்கள் தரப்படுகிறது.
சல்யதந்திர விசாரதன்
தன்வந்தரி அஷ்டோத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நாமம் ஓம் சல்யதந்த்ர விசாரதாய நமஹ என்பதாகும்.
சல்ய தந்திரத்தில் வல்லோன் என்று இதற்குப் பொருள்.
சல்ய தந்திரம் என்பது அறுவை சிகிச்சையாகும். பண்டைய காலத்தில் அறுவை சிகிச்சை பாரதத்தில் இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. சுஸ்ருதரின் சம்ஹிதையில் இது பற்றிய விவரங்களைக் காண்கிறோம். மூலிகைகளாலும் மருந்துகளாகும் குணப்படுத்த முடியாதபடி வியாதி இருக்கும் போது சல்ய தந்திரமே அதாவது அறுவை சிகிச்சையே சரியான வழி என்கிறார் சுஸ்ருதர்.
சரகரும் இது பற்றி விரிவாகக் கூறுகிறார்.
ஆயுர் வேத நூல்கள்
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சரஸ்வதி பண்டார் என, முன்பு பெயர் வழங்கப்பட்டது. கடந்த 1918ல் மன்னர் சரபோஜி பெயரில் ஆய்வு மையமாக இது செயல்பட துவங்கியது. இங்கு, 49,000 சுவடிகளும், 45,000 நூல்களும் உள்ளன.
நோயில்லா நெறி என்பது உள்ளிட்ட பல மருத்துவ நூல்களை சரஸ்வதி மகால் வெளியிட்டுள்ளது.
இது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள நான்கு கோடி சம்ஸ்கிருத சுவடிகளிலும் மருத்துவ நூல்கள் உள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காசியப சம்ஹிதை என்ற நூலின் சுவடிகளை நேபாளத்தின் ராஜகுருவான பண்டிட் ஹேமராஜ சர்மா என்பவர் அரண்மனை நூலகத்தில் கண்டுபிடிக்க, அதை யாதவ்ஜி த்ரிகம்ஜி என்பவர் பம்பாய் நிர்ணய ஸாகர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.
ஆயுர்வேதக் கல்லூரிகள்
ஆயுர்வேதத்தின் சிறப்பை உணர்ந்த ஆர்வலர்கள் இதை நன்கு பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டனர். இதன் விளைவாக இன்று நாடெங்கும் ஆயுர்வேதக் கல்வி நிலையங்கள் உள்ளன. மங்களூரில் உள்ள சாரதா ஆயுர்வேதக் கல்லூரி 2019-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. பாரம்பரிய இந்திய முறையிலான மருத்துவப் படிப்பை இது வழங்குகிறது. 1100 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையும் இங்கு உள்ளது.
இங்குள்ள மூலிகை வனத்தில் 212 வகை விசேஷ தாவரங்களும் 1108 மருத்துவ மூலிகைகளும் உள்ளன. 30 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள டெமான்ஸ்ட்ரேஷன் அறையும் உள்ளது.
இதே போல ஜபல்பூர், ,காசி, புனே, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரிகளில் ஆயுர்வேத மருத்துவம் கற்பிக்கப்படுகிறது.
இது வரவேற்கத் தக்க ஒரு முன்னேற்றமாகும்.
தன்வந்தரி ஆலயங்களும் சிற்பங்களும்
பாரதமெங்கும் தன்வந்தரிக்கு ஆலயங்கள் உள்ளன; ஏராளமான இடங்களில் வெவ்வேறு சிற்பங்களும் உள்ளன.
வைத்திஸ்வரன் கோவில் ஜீவ சமாதி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
பிரதான பிரகாரத்தில் தன்வந்தரி பகவானின் விக்ரஹம் அமைந்துள்ளது.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தன்வந்தரி பகவானின் சந்நிதி அமைந்துள்ளது. பெரும் ஆயுர்வேத வைத்தியரான கருட வாஹன பட்டர் இங்கு தன்வந்தரியின் சிலா விக்ரஹத்தை ஸ்தாபித்ததாக வரலாறு கூறுகிறது.
கேரளத்தில் தோட்டுவா
கேரளத்தில் தோட்டுவா என்னும் இடத்தில் தன்வந்தரி கோவில் அமைந்துள்ளது.
வேலூர் வாலாஜாபேட்டை
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் டாக்டர் ஶ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தை ஸ்தாபித்துள்ளார்.
கோவை அருகில் ராமநாதபுரத்தில் உள்ள தன்வந்தரி ஆலயம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
பல ஆலயங்கள்
இன்னும் திரிசூர் அருகில் நெல்லுவாய்,தெவலக்காடு ஶ்ரீ தன்வந்தரி ஆலயம். திரிசூர் அருகில் ஆனக்கல் தன்வந்தரி ஆலயம், கீரங்குளங்கரா ஆலயம், , கேரளாவில் சேர்த்தலா அருகில் மருத்தோர் வட்டம் ஆலயம், எலந்தூர் ஆலயம், பூத்தகுளம் ஆலயம் மற்றும் மாவேலிகராவில் உள்ள ப்ரயிகரா ஆலயம், உள்ளிட்ட பல கோவில்கள் தன்வந்தரிக்காக அமைக்கப்பட்டுள்ளவையாகும்.
சிற்பங்கள்
திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் தன்வந்தரியின் உலோகச் சிலை உள்ளது.
சிவகங்கை கோவிலில் தன்வந்தரியின் சிற்பம் இருக்கிறது.
இப்படி ஆயுர்வேதத்தின் அடிப்படையிலான ஆரோக்கிய வாழ்வைக் கொண்டதோடு தன்வந்தரியை வழிபட்டு ஆன்மீகச் சிறப்பையும் நம் முன்னோர்கள் பெற்றதை நமது அறநூல்கள் உணர்த்துகின்றன.
தன்வந்தரியை வழிபடுவோம்; ஆயுர்வேதத்தைப் போற்றி அதை வாழ்வியல் மருத்துவத்தில் கொள்வோம்.