Indian Treasures in Switzerland Modi ji Please Bring them Back! (Post No.12,724)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,724

Date uploaded in London – –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Valuable Indian statues and paintings are in Zurich Museum in Switzerland; like Modi ji, Prime Minister of India, brought back Indian art treasures from America and Australia, he must get them back from London and other European cities.

Here are some treasures in Zurich: Ganesh, Siva, Uma, Chandra, Ambika, erotic sculptures and paintings  (Pictures attached)

Ambika

Divine couple 

The catalgue of museum gives ful ldetails of statues.

—subham–

Tages- Indian , art treasures in Zurich museum, Swiss museum , get them back, Rietberg museum

அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்–ஐந்து சுவையான கதைகள் – Part 5 (Post No.12,723)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,723

Date uploaded in London – –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 5

கோவில் எண் 4 –  அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்

அம்பலப்புழா கிருஷ்ணன்கோவில் பற்றி சுவையான கதைகள் இருக்கின்றன.

கோவில் எங்கே இருக்கிறது?

கேரள மாநிலத்தின் ஆலப்புழை அருகில் இருக்கிறது. ஆலப்புழை யிலிருந்து 14 கி.மீ தொலைவு..

எதனால் புகழ் ?

வேறு எங்கும் இல்லாத பார்த்தசாரதி கிருஷ்ணனின் அழகிய திரு உருவம், பால் பாயசம் பிரசாதம் ஆகியவற்றால் புகழ்.

யார் கட்டினார்கள்?

400 ஆண்டுகளுக்கு முன்னர் சிற்றரசர் பூராடம் திருநாள் தம்புரான் கட்டினார் . இறைவனுக்கே கோவிலைக் கொடுத்துவிட்டு தன்னுடைய பெயரை தேவ நாராயணன் என்று மாற்றிக்கொண்டார். அவருடைய  குரு  வில்வ மங்கள சாமியார்.

xxxx

இனி சில சுவையான கதைகளைக் காண்போம்

முதல் கதை

வில்வ மங்கள சாமியாருடன் சம்பகசேரியை ஆண்டுவந்த பிராமண மன்னர் பூராடம் திருநாள் தம்புரான், நதியில் போய்க்கொண்டு இருந்தார். எங்கிருந்தோ இனிய புல்லாங் குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. இருவரும் ஆராயப் புகுந்தனர். ஒரு அரச மரத்த்திலிருந்து வந்தது. உடனே இருவரும் அதை வலம் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர் ஏனெனில் அங்கு கிருஷ்ண பகவான் இருப்பதை  உணர்ந்தனர்;  உடனே ஒரு கோவில் கட்ட மன்னர் முடிவு செய்தார்; அழகிய கண்ணன் வடிவத்தை கருங்கல்லில் சமைத்தார் . நல்ல நாளும் நிச்சயிக்கப்பட்டது.

கிருஷ்ணன் சிலைப்  பிரதிஷ்டையைக் காண மக்களும் ஊர்ப் பிரமுகர்களும் கூடினர். அங்கு வந்த தலைமை நம்பூதிரி STOP, STOP ஸ்டாப் ஸ்டாப் என்று சொல்லி கிரியைகளை நிறுத்தினார். இது குற்றமுள்ள சிலை என்றார் .

என்ன குற்றம் கண்டீர்? அழகில் குற்றமா? வடிவத்தில் குற்றமா? என்று ஒருவர் வினவினார்.

அங்கத்தில் குற்றம் என்றார் நம்பூதிரி ; இது பின்னமான சிலை என்றார் .

எங்கே நிரூபித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார் ஒரு அறிஞர்.

ஒரு கல்லினை வைத்து சிலையின் ஒரு குறிப்பிரட்ட இடத்தில் தட்டவே அது உடைந்து ஒரு தேரை (தவளை வகை) தாவிக்  குதித்தது ; கொஞ்சம் அழுக்குத் தண்ணீரும் வந்தது; சிலைத் திறப்பு விழா CANCEL கான்சல் (ரத்து) ஆனது. எல்லோரும் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்கள்.

இரண்டாம் கதை

இனி புதிய சிலை செய்வதை விட  அருகில் குறிச்சி என்னும் இடத்திலுள்ள சிலையைக் கொண்டுவந்து விடலாம் என்று மன்னர் முடிவு செய்தார். ஆனால் குறிச்சி பகுதியை ஆளும் மன்னரும் இவரும் எலியும் பூனையும் போலப்  பகைவர்கள்;  கோவிலில் திருடுவது குற்றம்; ஆகையால் இரவு நேரத்தில் மன்னர் படை சென்று சிலையை எடுத்துக்கொண்டு, நாங்கள் சிலையை எடுத்துச் செல்கிறோம்; துணிவி ருந்தால்  எங்களைத் தடுங்கள் என்று படை வீரர்கள் சவால் விட்டனர்; எவரும் தடுக்கவில்லை. அந்தச் சிலை பார்த்தசாரதி வடிவில் சாட்டையுடன் காணப்படும் (பகவத் கீதை பார்த்த சாரதி) சிலை.

கோவிலில் சிலையும் பிரதிஷ்டை ஆனது. அவர்கள் படகில் சென்று சிலை மீட்ட நாள் இன்றும் படகுப்போட்டியாக நினைவு கூறப்படுகிறது .

மூன்றாவது கதை

புதிய பார்த்த சாரதி சிலையை நிறுவும்  நாளும் வந்தது . சிலை கொஞ்சம்  சாய்ந்து நின்றது; மன்னருக்குக் கவலை மேலிட்டது; அங்கு அற்புதங்களை நிகழ்த்த வல்ல வில்வ மங்கள சாமியாரும் இருந்தார்; ஒரு வெற்றிலையை எடுத்து மந்திரம் சொல்லி சிலையின் அடியில் வைத்தார்; சிலை நேராக நின்றது. வெற்றிலை என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் தாம்பூலம் என்று அர்த்தம்; ஆகையால் இந்தக் கோவில் தாம்பூலப் புழா என்றும் பெயர் பெற்றது .

நாலாவது கதை

கிருஷ்ண பரமாத்மாவை தனக்கு நேரில் காட்டும்படி வில்வ மங்கள சாமியாரிடம் மன்னர் இறைஞ்சினார். அவர் பக்தியை மெச்சிய சாமியாரும் அவருக்காக காட்சி கொடுக்கச் செய்ய தயார் ஆனார். ஆமாம் இறைவன் காட்சி கொடுத்தால் என்ன தருவாய் ? என்று வினவினார் சாமியார். இந்த நாட்டையே தந்து விடுவேன் என்கிறார். கிருஷ்ணனும்  சிலையிலிருந்து கை நீட்டி மன்னரை ஆசீர்வதித்தார் . அன்று முதல் தன்னுடைய பெயரை தேவ நாராயணன் என்று மாற்றிக்கொண்டார்  பின்னொரு காலத்தில் மார்த்தாண்ட வர்மா படையெடுத்துவந்து, தேவ நாராயணனைத் தோற்கடித்து கைது செய்த்தார். அப்போதும் கூட நாட்டின் கஜானா சாவியை பார்த்த சாரதியின் பாத கமலங்களில் வைத்துவிட்டுச் சரண் அடைந்தார்.

Xxxx

ஐந்தாவது கதை 

பால் பாயஸக் கதை

கோவிலை நிர்வகிப்பதாற்காக மன்னர் பக்கத்து ஊர் பிராமணனிடம் நெல் கடன் வாங்கியிருந்தார்; அதை மன்னர் நீண்ட காலத்துக்குத் திருப்பித் தரவில்லை; கோவிலுக்கு வந்த மன்னரை இறைவன் முன்னிலையில் நிறுத்தி எங்கே என் நெல்? என்கிறார் பிராமணர். பக்கத்தில் மந்திரி நின்று கொண்டிருந்தார். இந்தப் பிராமணனுக்கு இன்றே படி அளக்கவும் என்று கட்டளையிட்டுவிட்டு மன்னர் போய்விட்டார். மந்திரியும் வீடு வீடாகச் சென்று நெல்லினைப் பெற்று கோவிலில் உள்ள ஆனைக் கொட்டிலில் மலை போல குவித்ததார் ; மந்திரி என்றால் தந்திரம் மிக்கவர் அல்லவா? மதியம் ஆகிவிட்டது கோவில் நடை சாத்தப்பட்டுவிட்டது; மாலையில் சந்நிதி திறப்பதற்குள் இவற்றை  அகற்றாவிடில் எல்லாம் கோவிலுக்கே சொந்தமாகிவிடும் என்று எச்சரித்த்தார் ; நெல்லினைச் சுமந்து செல்ல கூலி ஆட்கள் கிடைக்காமல் பிராமணர் திகைத்தார்; மாலையும் வந்தது; நடையும் திறந்தது. இந்த நெல் அனைத்தும் கோவிலுக்கே போகட்டும். ஆனால் தினமும் உச்சி வேளையில் பால் பாயசம் செய்து பக்கதர்களுக்கு விநியோகிக்க வேட்மண்டும் என்று கேட்டுக்கொண்டார்; எல்லோரும் YES YES யெஸ் யெஸ் என்று சொன்னார்கள்; இன்றும் சுவையான பால் பாயசம், பிராமணன் தயவில் கிடைக்கிறது. ஆயினும் ஒரு காலத்தில் பல நூறு படி அரி சியில் பாயஸம் ஆக்கப்பட்டது . இப்போதைய ஆட்சியாளர்கள் சாமிக்கே ரேஷன் கார்டு கொடுத்துவிட்டனர். ஒரு பெயருக்கு NAMESAKE பாயசம் ஆக்கி விநியோகிக்கின்றனர் .

பார்த்த சாரதியே தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கலி யுகம் இது!!

xxxxx

திப்பு சுல்தான் (1750-1799) என்ற இந்து விரோதி  கர்நாடகத்திலிருந்து கேரளத்தைத் தாக்கினான் . அப்போது புகழ் பெற்ற குருவாயூரப்பன் கோவிலுக்கு ஆபத்து ஏற்படும் என்று அர்ச்சகர்கள் பயந்தார்கள். உடனே கிருஷ்ணன் சிலையை அங்கிருந்து அம்பலப் புழா கிருஷ்ணன் கோவிலுக்கு எடுத்து வந்து ஒளித்து வைத்தனர்; அந்த இடம் இன்றும் குருவாயூர் அம்பலம் என்ற பெயருடன் இருக்கிறது. அப்போது அவருக்கும் கோவிலின் பால் பாயசம் நைவேத்தியம் செய்யப்பட்டது (படைக்கப்பட்டது ). பின்னர் குருவாயூரப்பன் அவருடைய ஒரிஜினல் வீட்டுக்குச் சென்றார் . ஆயினும் இன்றும் பால் பாயசம் சாப்பிட குருவாயூரப்பன்  வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

xxxx

திருவிழாக்கள்

அம்பலப் புழா கிருஷ்ணன் கோவில் இறைவன் பார்த்த சாரதியின் ஒரு கையில் சாட்டையும் இன்னுமொரு கையில் சங்கும் இருக்கின்றன.

கேரளத்தில் மூன்று கிருஷ்ணன் கோவில்கள் பிரசித்த மானவை — குருவாயூர்திருப்புனிதத்துறா அம்பலப்புழா .

பெரிய விழா ஆண்டு தோறும் மீனம் மாதத்தில் 10 நாட்களுக்கு நடக்கும் ;  ஆராட்டு உற்சவம் பத்தாம் நாள் நடக்கும். ஆயினும் மேளம் முதலிய வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்கள் சாப்பிடும்  ஒன்பதாம் நாளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாடகசாலா சாத்ய / விருந்து என்று அதற்குப் பெயர். ஒருமுறை கர்ப்பக் கிரகத்தில் இறைவனைக் காணாது திகைத்த வில்வ மங்கள சாமியார் இறைவனே இசைக்கலைஞர்களுக்கு உணவு படைப்பதைக் கண்டு அசந்து போனாராம்; அவர் முகத்தில் தோன்றிய கேள்விக்கு றிக்கு பார்த்தசாரதியே பதில் தந்தார் ; இந்த வாத்ய கோஷ்டியினர் இல்லாவிட்டால் விழாக்கள் நடக்குமா, சிறக்குமா ? அதனால் நானே பரிமாறுகிறேன் என்றார் பார்த்த சாரதி.

இது தவிர சிலை எடுத்து வந்த நாள் திருவிழா முதலியனவும் நடைபெறுகிறது . ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

சுபம் —

Tags- கதைகள் , பார்த்தசாரதி, தேரை , பால் பாயசம், கோவில் எண் 4 –  அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்

ஆயுர்வேதம் : வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அறிவு (Post No.12,722)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,722

Date uploaded in London –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் நவம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆயுர்வேதம் : வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அறிவு!

ச.நாகராஜன்

ஆயுர்வேதம் – அடிப்படை உண்மைகள்

ஆயுர்வேதம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒரு அறிவு.

ஏன்?

இந்த கேள்விக்கான பதிலை சரக சம்ஹிதை தெளிவாகச் சொல்கிறது.

மனம், ஆத்மா, உடல் – இந்த மூன்றும் ஒரு முக்காலி போல.  உலகமே இந்த மூன்றின் சேர்க்கையால் தான் இருக்கிறது. இதுவே அனைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.

மனம் உடல் ஆத்மா – இந்த மூன்றின் சேர்க்கையே புருஷா. இதுவே சித். ஆயுர்வேதத்தின் அடிப்படையே இது தான். இதற்காகவே தான் இந்த ஆயுர்வேதம் மஹரிஷிகளால் உலகிற்குத் தரப்படுகிறது.

இதுவே சரக சம்ஹிதை தரும் பதில்!

ஆயுர்வேதம் மனம், ஆத்மா, உடல் ஆகியவற்றுடன் குணங்களையும் இணைக்கிறது.

உலக வாழ்க்கை முழுவதும் இதைப் பொறுத்தே அமைகிறது.

இவை பொருள்கள், புத்தி, அகங்காரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது, புத்தி மற்றும் அகங்காரம் ஆத்மாவுக்குள் அடங்குகிறது. பொருள்கள் உடலில் அடங்குகிறது.

இப்படி நுட்பமான பல விஷயங்களை ஆயுர்வேதம் கொண்டுள்ளது.

ஆனால் ஏனைய மருத்துவ சிகிச்சைகளோ இவற்றைக் கொண்டிருக்கவில்லை.

அவை உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்கிறது.

ஆயுர்வேதம் பாரத நாட்டில் 5000 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்து வந்த மனிதர்கள் திருப்தியுடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த ஆயுளுடன் வாழக் காரணமே இந்த ஆயுர்வேதம் தான்!

ஆயுர்வேதம் வாயு, பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களை இனம் கண்டு வகுக்கிறது.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த மூன்று தோஷங்களின் கலவையாகவே பிறந்துள்ளனர். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்றில் ஒன்றே சற்று அதிகமாக இருக்கும்.

ஆயுர்வேத வைத்தியர்களுக்குப் பல அடிப்படை குணாதிசயங்கள் தேவை.

வியாதிகளைப் பற்றிய அடிப்படை அறிவு ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை முறையும், உடல் அமைப்புமே வியாதி வருவதற்கான அடிப்படைக் காரணம். ஆகவே அவற்றை ஆராய்கிறது ஆயுர்வேதம் முதலில்.

ஒரே வியாதிக்கு ஒரே மருந்து என்பது ஆயுர்வேதத்தில் இல்லை. ஒவ்வொரு தனி மனிதனை – ஆணோ, பெண்ணோ – அலசி ஆராய்ந்த பின்னரே ஆயுர்வேத சிகிச்சை மருந்தைப் பரிந்துரைக்கிறது.

மருத்துவரும் நோயாளியும்

இதில் மருத்துவருக்கும் நோயாளிக்குமான தொடர்பு மிக மிக முக்கியமானது.

தனது வியாதியைத் தீர்த்துக் கொள்வதில் அதிக பங்கு நோயாளிக்கென்றால் எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பது மருத்துவரின் கையிலேயே உள்ளது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழும் போது நோயைப் பற்றியோ மருத்துவரைப் பற்றியோ சாதாரணமாக நினைப்பதில்லை.

நோய் வந்த போது மட்டுமே சிகிச்சை பற்றியும் மருத்துவரைப் பற்றியும் நினைக்கிறான். ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் நோயைப் பற்றியும் டாக்டர்களைப் பற்றியும் எப்போதும் ஒரு எதிர்மறை – நெகடிவ் எண்ணமே இருக்கிறது.

ஆயுர்வேதம் நோய் வந்த போது மட்டும் நாடவேண்டிய ஒரு வேதம் இல்லை.

அது சாதாரணமாக நடைமுறையில் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் வியாதி வராத வாழ்க்கை அமையும் என்பதைச் சொல்கிறது.

ஆகவே வருமுன் காப்போம் என்ற உத்தியின் அடிப்படையில் ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்தால் தான் அதன் வழிமுறைகளைக் கற்று நோயற்ற வாழ்வை வாழ முடியும்.

ஆயுர்வேதம் இறைநம்பிக்கையின் அடிப்படையில் சில பரிந்துரைகளையும் வழங்குகிறது.

இந்த மந்திரத்தைச் சொன்னால் இந்த வியாதி போகும் என்பது வேறு எந்த வைத்திய சிகிச்சை முறையிலும் இல்லாத ஒன்று.

அத்துடன் அது ப்ராரப்த கர்மாவையும், ஜன்ம பாவ புண்ணியத்தையும் நம்புகிறது.

ஆக இந்தக் காரணங்களினால் ஆயுர்வேதத்தின் மீது ஒரு எதிர்மறை எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை.

மேலைநாடுகள் மதிக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தின் பக்கம் மேலைநாட்டு வைத்தியர்களின் பார்வை கடந்த பல வருடங்களாகத் திரும்பி இருப்பது வரவேற்கத்தக்க  ஒரு மகிழ்ச்சியான விஷயம்.

ஆயுர்வேத அறிவானது 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு விலை மதிப்புள்ளது என்று மதிக்கப்படுகிறது. ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி, ஆக நூறு நூறு கோடி அளவு நமது ஆயுர்வேத அறிவு மதிக்கப்படுகிறது.

36000 ஸ்லோகங்களை இந்திய அரசு ஆயுர்வேத இணையதளத்தில் Traditional Knowledge Digital Libraryஇல் வெளியிட்டுள்ளது.

550 மருந்துகளின் தயாரிப்பு முறைகள் ஜப்பானிய, ஆங்கிலம் ஸ்பானிய, பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளில் விளக்கப்பட்டுள்ளன.

220 நாடுகள் ஆயுர்வேத சிகிச்சை முறைகளைக் கையாண்டு ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துகின்றன என்பது அதிசயமான செய்தி தானே!

நம்பமறுத்தாலும் இது தான் உண்மை!

ஆயுர்வேத மருந்துகள் பக்க விளைவை ஏற்படுத்தாதவை. என்றாலும் ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகளின் படி எடுக்க வேண்டிய மருந்துகளின் அளவு, நேரம் உள்ளிட்ட முறைகளை அறிந்து கொண்டு உட்கொள்ள வேண்டியது அவசியம்.

 அறுவை சிகிச்சை உட்பட்ட அல்லோபதி வைத்திய முறைகளைக் கையாளும் நமது டாக்டர்கள் ஆயுர்வேத முறைகளையும் தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் வியாதி அற்ற ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான திருப்தியுள்ள இந்தியர்களைக் கொண்ட பாரதத்தை வெகு விரைவில் உருவாக்கலாம்!

செய்வார்கள் என்று நம்புவோம்!!

***

Time Travel and Tripunithura Temple: NASA must learn from Hindu Scriptures (Post No.12,721)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,721

Date uploaded in London – –  –  15 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Tripunithura temple in Kochi is based on a Hindu Time Travel story. Hindu scriptures have many Time Travel stories from Mahabharata times.

Following Time Travel stories beat H G Well’s Time Travel novel and Einstein’s theory on the speed of light.

Oldest Time Travel story is in Mahabharata. Arjuna was taken to Indra Loka , another universe, by the pilot Matali in a space shuttle and brought him back to earth. This is in Vana Parva of Mahabharata. On their way, they saw lights moving in space. When Arjuna wondered what they were, Matali explained that those are good souls from earth. Here we know one more fact. Holy souls can take “Light form” and live for ever.

Second Time Travel incident also happened when Arjuna was alive. A Brahmin lost his ten children and complained to Arjnua. People believed that if something unusual happened, the ruling king is responsible for it. Then Arjuna sought the help of Lord Krishna and he took him and the Brahmin in a space shuttle to heaven and brought back ten children alive. This is in Puranas and Nammalvar’s Divya Prabandham poem. That gives amazing details about Time Travel.

One more Time Travel story is available in Puranas. Revathi was so tall and so his father Raivat cant fid a suitable match on earth; so he went to heaven. There we come across Time Dilation theory. People in the heaven said that the time on earth and space were different and several centuries have elapsed during his travel and he was advised people on earth now are shorter than previous eras.

Tamil Time Travel Anecdotes

We have two Time Travel incidents in Tamil Tevaaram poems. Boy Saint Thiru Jnana Sambandar lived during the day of Pallava Emperor Mahendra Varman (600 CE). When Sambandar went to Madras, a devotee complained that he lost his daughter Poom Paavai in spite of his great devotion Lord Shiva. Then Sambandar asked the gentleman to bring the ash of that little girl. Immediately he prayed to lord Shiva and the girl came alive as a teenage girl.  That showed that she was growing according to her age in another universe.

Later Tamil saint Sundarar was crossing a street where one Brahmin family was celebrating Sacred Thread ceremony for a boy and the opposite house was mourning and crying. When Sundarar wondered what happened, his devotees told him that both boys went together to the river many years ago and one boy was devoured by a crocodile. Saint Sundarar was moved an prayed to Lord Shiva and the boy came alive.

All these stories are older than 1000 years. Arjuna story is 5000 years old, but yet we have very clear accounts of Time Travel.

EINSTEIN WAS WRONG

According o the great physicist Albert Einstein and NASA speed of light is


How “Fast” is the Speed of Light?

Light travels at a constant, finite speed of 186,000 mi/sec. A traveler, moving at the speed of light, would circum-navigate the equator approximately 7.5 times in one second. By comparison, a traveler in a jet aircraft, moving at a ground speed of 500 mph, would cross the continental U.S. once in 4 hours.

If a person travels at the speed of light he will be  MARKANDEYA for ever i.e. Ever Sixteen years of age. At the  same time Markandeya’s father on earth would have born several times during several times.  But Einstein said that no one can travel at the speed of light. And there is Grandfather Paradox as well. Suppose I travel at the speed of light and kills my grandfather I couldnot have born. But Hindus showed Einstein wrong on two counts. Hindus , though travelled in time never obstructed its path; they never killed anyone in tha five or six Time Travel stories.

WHAT NASA SCIENTISTS CAN LEARN FROM HINDUS IS

We can travel in Time.

People who died on earth are living in another universe.

Hindus talk about Mano Vegam= Mind Speed= Thought speed. We can travel to another universe in Thought speed.

In Arjuna and Tamil saints’ anecdotes we see physical bodies came alive from heaven and they were grown according to their age on earth.

In Nammalvar’s (Vaishnavite saint of 8th Century CE)  poem, we have amazing details. It clearly showed Einstein was wrong.

3107 திவ்வியப் பிரபந்தம் TIME TRAVEL STORY IN DIVYA PRABANDHA

இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் Same Day within 48 Minutes எல்லா

      உலகும் (travelled through many earths/ planets கழிய

படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் (Arjun and Brahin) உடன் ஏற

      திண் தேர் Space Chariot கடவி

சுடர் ஒளியாய் ( in Light form, not fleshy body) நின்ற தன்னுடைச் சோதியில்

      வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் (Children came back in bodily form)கொண்டு கொடுத்தவனைப் பற்றி

      ஒன்றும் துயர் இலனே (5)

Krishna took the Brahmin and Arjuna in his space shuttle and brought back ten dead children alive within a day. Commentators interpreted it as happened in ONE MUHURTHA TIME. Within 48 minutes Krishna’s shuttle went to heaven and came back to earth with3+10 people.

So Hindus knew a short cut, probably a Time Hole or Worm Hole (as we read in Science Fiction Novels)

What NASA scientists must know is

Time Travel is possible . Hindus used Mano Vegam= Speed of Thought

Faster than light travel is possible.

People can travel Bodily but in Light form. Nammalvar poem talks about Light form.

People never die. They live in another universe. But it may be right in case of children who had shorter life. Because all the above stories are about children who lost their lives prematurely.

Pozthu in Tamil= Muhurtha in Sanskrit= 48 Minutes

1 minute = 60 seconds. However, according to the Indian system, a day is divided into 60 ghatis or ghatikas or nadis. Two ghatis make a muhurta. Equivalently, a muhurta is 1/30th of a day or 48 minutes.

Tripunithura Temple

Tripunithura temple of Vishnu is in Kochi. The Sanctum sanctorum (Garbha Griha) is in Chariot shape to remind the above episode. More over annual festival of this Inter Galactic Travel is celebrated.

We already know the movements of Inter Galactic Taveller Narada. The deity in this temple is Santhana Krishna, Child form of Lord Vishnu. Anyone who longs for a child can go and get the blessings of the Lord.

—subham—

Tags- Space Travel, Time Travel, episodes in Hinduism, Einstein wrong, Parallel universe, worm hole

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 20 (Post No.12,720)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,720

Date uploaded in London – –  –  15 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 20

SLOKAS  65, 66, 67

Sloka 65 

करे श्लाघ्यस्त्यागः शिरसि गुरुपादप्रणयिता

        मुखे सत्या वाणी विजयिभुजयोर्वीर्यमतुलम् ।

हृदि स्वच्छा वृत्तिः श्रुतमधिगतं च श्रवणयो-

        र्विनाप्यैश्वर्येण प्रकृतिमहतां मण्डनमिदम् ॥ 65॥

கரே ஶ்லாக்யஸ்த்யாகஹ  ஶிரஸி குருபாதப்ரணயிதா

முகே ஸத்யா வாணீ விஜயி புஜயோர்வீர்யம் அதுலம் |

ஹ்ருதி ஸ்வச்சா வ்ருத்தஹி  ஶ்ருதிம் அதிகதம் ச ஶ்ரவணயோர்

வினாப்யைஶ்வர்யேண ப்ரக்ருதிமஹதாம் மண்டனம் இதம் || 1.65 ||

65. Even without wealth, these become the adornment of naturally high-minded people: praiseworthy charity to the hand, obeisance at the feet of elders to the head, true words to the mouth, matchless victorious bravery, to the shoulders, frankness to the heart and mastery over learning to the ears.

செல்வம் இல்லாதபோதும் சான்றோர்களின் அணிகலம் — கைகளில் பலர் புகழும் கொடைத் தன்மை; ; தலையோ பெரியோரை வணக்க்குதலைச் செய்யும் ;வாயோ உண்மையே பேசும்;; தோள்களோ இணையற்ற வீரத்தைக் காட்டும்; ;இதயமோ நேர்மையைக் கடைப்பிடிக்கும் காதுகளோ அறிவு வேட்கையை நாடும்—65

பாரில் மகான்கள் பணமில்லாக் காரணத்தால்

ஆறும் நகையில்லாரானாலும் – நேரும்

செயற்கை அலங்காரமிது செல்வமென வெண்ணார்

இயற்கை யலங்கார மலர்க்கெய்தும் உயர்ச்சி கேள்

செங்கைக்குத் தானம் சிறந்த அலங்காரம்

பொங்கு தலைக்காசான் புனை மலர்த்தாள் – பங்கமின்றிச்

சேவித்தலன்னார் செயிர் தீர் முகத்தினுக்கு

நாவிற் பயிலுண்மை நற்றோட்கு – தாவில்

பராக்கிரமந்  தாங்குதல் அப் பண்புடையார்  தங்கள்

நிராசை மாயமாய் நிறைந்து  விராவுகின்ற

நெஞ்சம் தனக்கென்று நிஷ் களங்க மாயிருத்தல்

அஞ்செவிக்குக் கேள்வி அணி  –65

*****

Sloka 66

सम्पत्सु महतां चित्तं भवत्युत्पलकोमलम् ।

आपत्सु च महाशैलशिलासङ्घातकर्कशम् ॥ 66॥

ஸம்பத்ஸு மஹதாம் சித்தம்

பவத்யுத்பலகோஅ ம்‌அலம் |ஆபத்ஸு ச மஹாஶைலஶிலா

ஸங்காதகர்கஶம் || 1.66 ||

66. During prosperity, the minds of great men are tender as a lotus. In adversity, it is hard as the solid rock in a great mountain.

நல்ல வளமான வாழ்க்கை வாழ்கையில் சான்றோர் மனம் தாமரை மலர் போல மென்மையாக இருக்கும். கஷ்டமான வாழ்க்கை வந்தால் மலையிலுள்ள பாறை போல உறுதியாகிவிடும் –66

******

Sloka 67

सन्तप्तायसि संस्थितस्य पयसो नामापि न ज्ञायते

        मुक्ताकारतया तदेव नलिनीपत्रस्थितं राजते ।

स्वात्यां सागरशुक्तिमध्यपतितं तन्मौक्तिकं जायते

        प्रायेणाधममध्यमोत्तमगुणः संसर्गतो जायते ॥ 67॥

ஸன்தப்தாயஸி ஸம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ன ஜ்ஞாயதே

முக்தாகாரதயா ததேவ நளினீபத்ரஸ்திதம் ராஜதே |

ஸ்வாத்யாம் ஸாகரஶுக்திமத்யபதிதம் தன்மௌக்திகம் ஜாயதே

ப்ராயேணாதமமத்யமோத்தமகுஹ  ஸம்ஸர்கதோ ஜாயதே || 1.67 ||

காய்ந்த இரும்பின் மீது நீர்த்துளி விழுந்தால் ஆவியாகி விடும்தாமரை இலையில் விழுந்தால் முத்து போல் நிற்கும்சுவாதி நட்சத்திரத்தன்று முத்துச் சிப்பியின் வாயில் விழுந்தால் முத்தாகி விடும் .இதுவே கீழ்மக்கள்மத்திய தர மனிதன்உயர்ந்த மனிதனின் குணம்–  67

67. No sign of the water is seen when it falls on heated iron. It shines on a lotus-leaf, resembling a pearl. When it falls into an oyster in the ocean, on the day of Svati constellation, it becomes a real pearl. Generally low, mediocre and superior qualities emerge by association.

காய்ந்த விரும்புண்ட நீர்  காணாமற் போவதுமே

ஏய்ந்த கமலவிலைமீதே — தோய்ந்ததெனின்

முத்து நிலையடையும் முந்நீரில் வாழ் கின்ற 

முத்துப்பிக்கொள்ள துவே மூடி நி — லைத்திருந்தால்

முத்து மணியாகும் மூது லகிற்  சேர்கின்ற

தத்தமிடத்தினது  தன்மைக்கொத்த

சேர்ந்துத் தமர்  மத்திமரதமர் என் னும்பேர்

ஆர்த்தியிருப்பார் மாந்தரெல்லாம்  -67

xxxx

I have skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. I will cover them later.

— subham—

Tags – Bhartruhari,  Nitisataka,  in Tamil, in Hindi, in English ,in  Sanskrit ,  slokas 65,66, 67

அதிசய திருப்புனித்துரா- TIME TRAVEL கோவில்- கேரளத்தின் புகழ்பெற்ற – part 4 (Post No.12,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,719

Date uploaded in London – –  –  15 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 4

கோவில் எண் 3  திருப்புனித்துரா  பூர்ணத்ரயீசா கோவில்

இது கொச்சி நகர கோவில் ; கொச்சி ராஜ வம்சத்தினரின் எட்டு கோவில்களில் ஒன்று.

எங்கே இருக்கிறது?

எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து  பத்து கி.மீ . தூரத்தில் உள்ள பெரிய கோவில் இது.; சுமார் 1000 ஆண்டுகள் பழமை உடைத்து; . எல்லா வற்றுக்கும் மேலாக  உலகப் புகழ்பெற்ற EINSTEIN ஐன்ஸ்டைன் கூறிய சித்தாந்தத்தை உடைக்கும், H G WELLS எச். ஜி.வெல்ஸை  ஆதரிக்கும் நம்மாழ்வார் பாடலை ருசுப்பிக்கும்கோவில் இது

ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் ? ஒளி LIGHT ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்  வேகத்தில் பயணம் செய்கிறது. இதை மிஞ்சவும் முடியாது. அந்த வேகத்தில் போகவும் முடியாது  அப்படி  ஒருவர் சென்றால் அவர் என்றும் மார்கண்டேயனாக, அதாவது அதே  வயதில் இருப்பார் என்றார் ; அப்போது பூமியில் உள்ள மார்கண்டேயனின் அப்பாவுக்கு பல நூறு  ஆண்டுகள் வயதாகி இருக்கும்!!

எச். ஜி.வெல்ஸ் என்ன சொன்னார் காலப் பயணம் செய்வதாக கற்பனைக் கதை எழுதினார் 1895ல் அவர் எழுதிய டைம் டிராவல்  புஸ்தகம் விஞ்ஞா ன புனைக்கதை The Time Machine, first novel by H. G. Wells, published in book form in 1895.

திரிபுனித்துரா  கோவில் இந்த TIME TRAVEL INCIDENT டைம் டிராவல் எனப்படும் கதையைச் சொல்கிறது

காலப்பயணம் செய்ய முடியாது என்பது மேலை நாட்டு விஞ்ஞானிகளின் கூற்று. அப்படிப் போனால், காலத்தில் பின்னே பயணம் செய்து , ராஜ ராஜ சோழனை ஒருவர் கொலை செய்துவிட்டால்  ராஜேந்திர சோழனே பிறக்க முடியாதே ; வரலாறே பொய்யாகுமே!  நான் காலப்பயணம் போய் , என் தாத்தைவைக் கொன்றுவிட்டால் நானே பிறந்திருக்க முடியாதே (GRANDFATHER PARADOX) என்பது அறிஞர்களின் கேள்வி ; இந்துக்கள் சொல்கிறார்கள் :

காலப்பயணம் செய்ய முடியும்; ஆனால் அனாவசியமாக வெள்ளைக்காரன் போல யாரையும் கொல்ல  மாட்டார்கள். ஏற்கனவே கொல்லப்பட்டவர்களும் சாகவில்லை. அவர்கள் மற்றும் ஒரு பிரபஞ்சத்தில் (PARALLEL UNIVERSE) வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள். மிகப்பெரிய மகான்கள் அந்த உயிர்களை  காலப்பயணம் செய்து மீண்டும் கொன்ற முடியும் என்று . 

காலப்பயணம் TIME TRAVEL பற்றி திருஞான சம்பந்தரின் பூம்பாவை சம்பவம், சுந்தரரின் முதலை கொன்ற சிறுவனின் உயிர் மீட்ட சம்பவம் , நம்மாழ்வார் பாடிய இறந்த குழந்தைகளை கிருஷ்ணன் மீட்ட சம்பவம், ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்க சுவர்க்கம் சென்ற சம்பவம், மஹாபாரத வனபர்வத்தில் மாதலி என்ற விண்வெளி PILOT பைலட் அர்ஜுனனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று SPACE SHUTTLE ஸ்பேஸ் ஷாட்டிலில் திரும்பி வந்த சம்பவம் முதலியன எல்லாம் காலப்பயணத்தை TIME TRAVEL IS POSSIBLE ருசுப்பிக்கிறது . இந்த எல்லா சம்பவங்களிலும் இறந்த பையன்களும் பெண்களும் வேறு ஒரு பிரபஞ்சத்தில் (PARALLEL UNIVERSE) வளர்ந்து பூமிக்கு நிகரான வயதில் திரும்பி வந்ததையும் காட்டுகிறது. அப்படியானால் அவர்கள் ஒளியை விட அதி பயங்கர வேகத்தில் சென்றனரா அல்லது குறுக்குப்பாதை (WORM HOLES) ஏதேனும் உள்ளதா என்பதை புராணங்கள் விளக்கவில்லை.

காலப் பயணம் பற்றி நம்மாழ்வார்

3107 திவ்வியப் பிரபந்தம் TIME TRAVEL STORY IN DIVYA PRABANDHA

இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

      உலகும் கழிய

படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற

      திண் தேர் கடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

      வைதிகன் பிள்ளைகளை

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி

      ஒன்றும் துயர் இலனே (5)

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. (EINSTEIN BEATING  SPEED OF SPACE SHUTTLE)  ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

அந்தக் கதையை அடிப்படையாக வைத்து எழுந்ததே திருப்புனித்துறை கோவில்  இந்தக்கோவிலை பூரணி என்ற பெயரில் பல நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஸ்ரீ பூர்ணத்ரயீஸ்வரர் :என்பதற்கு மும்மூர்த்தி என்று பொருள் ; இங்கு ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தை வடிவில், சந்தான கிருஷ்ணன் வடிவில் அருள் புரிவதால் குழந்தை பாக்கியம் வேண்டியும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள்

ஒரு பிராமணனின் இறந்த  பத்து குழந்தைகளுக்கு மறுபிறவி கொடுக்க  அர்ஜுனன் இறைவனின் உதவியை நாடியபோது , விஷ்ணு பகவான் அர்ஜுனனுக்கு பூர்ணதீஸ்வரர் சிலையை அளித்ததாக புராணம் கூறுகிறது .பத்து குழந்தையும் ,புனிதமான அந்த சிலையையும் அர்ஜுனன் தன் தேரில் ஏற்றிச்சென்றான் , குழந்தைகளை பிராமணனிடம் ஒப்படைத்தார் , இந்த நிகழ்வின் நினைவாகவே இக்கோவிலானது தேர் வடிவ கருவறை யுடன்  கட்டப்பட்டது. இது TIME TRAVEL டைம் ட்ராவல் என்பதும் காலப்பயணத்தை நினைவு கூற சிற்பிகள் வடிவமைத்த கோவில்

கம்பீரமான ராஜ கோபுரம் , துவஜஸ்தம்பம், தீப ஸ்தம்பம் முதலியன உள்பட  பெரிய பரப்பில் அமைந்துள்ள அழகான கோவில்  கோவிலின் மேற்கேயுள்ள அரண்மனையில் விஷ்ணு சிலை முன்னர் இருந்தது. கணபதியும் இங்கே சந்நிதி கொண்டுள்ளார்  கர்ப்பக்கிரகம் பித்தளை, செம்பு, தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது

திருவிழாக்கள் :

விருச்சிக உற்சவம் : நாற்பதுக்கும் மேலான யானைகள் பவனி வரும் விழா விருச்சிக மாதத்தில் (நவம்பர்- டிசம்பர்) நடைபெறுகிறது. இது மிகப்பெரிய உற்சவம் .அம்பலம் கதி என்னும் விழா துலா மாதத்தில் நடக்கும். அப்போது கோவிலைச் சுற்றி பக்கதர்கள் சூடத்தை ஏற்றுவார்கள் .இவை தவிர ஆண்டுதோறும் விளக்கு உற்சவமும்  கொண்டாடப்படுகிறது

WHERE TO FIND US :The Devaswom Officer, Thrippunithura Devaswom, Thrippunithura . Pin: 682301.

EMAIL US AT sreepoornathrayeesatemple@gmail.com

CALL US AT  Phone – 0484 2774007

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு:நம்மாழ்வாரும் …

Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com ›

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன . 1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ஓளியின் வேகத்தை மிஞ்சி …

ஐன்ஸ்டைன் சொன்னது பாதி சரி, டார்வின் …

Tamil and Vedas

https://tamilandvedas.com › ஐன்…

17 Sept 2021 — ஆகவே ஐன்ஸ்டைன் 50 சதம் வெற்றி; டார்வின் 100 சதம் வெற்றி என்று நான் சொல்லுவேன்.

—-SUBHAM—TAGS- திருப்புனித்துரா, TIME  TRAVEL,   கோவில், பூர்ணத்ரயீசா கோவில், சந்தான கிருஷ்ணன் , நம்மாழ்வார், 

பாவசுத்தி: பராத் பரம்! (Post No.12,718)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,718

Date uploaded in London –  –  15 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 சுபாஷித செல்வம்

பாவசுத்தி: பராத் பரம்! 

ச.நாகராஜன் 

ப்ரஹ்மத்யானம் பரம் தீர்த்தம் தீர்தமிந்திரியனிக்ரஹ: |

தமஸ்தீர்த்தம் து பரம் பாவசுத்தி: பராத் பரம் ||

ப்ரம்மனை தியானம் செய்வது ஒரு பெரிய தீர்த்த யாத்திரை. இந்திரியங்களை அடக்குவதும் ஒரு தீர்த்த யாத்திரை தான். தன்னை வெல்லுதல் இன்னும் பெரிய தீர்த்த யாத்திரை. என்றபோதிலும் ஒருவனின் எண்ணங்களும் உணர்ச்சிகளும் தூய்மையாக இருக்குமானால் அதுவே தீர்த்தயாத்திரைகளில் மிகவும் பெரிய யாத்திரையாகும். 

சம்சாரவிஷவிருக்ஷஸ்ய த்வே பலே அம்ருதோபமே |

சுபாஷிதரஸாஸ்வாத: சங்கம: சுஜனை: சஹ || 

உலக அறியாமை என்னும் விஷ விருக்ஷத்தில் அம்ருதத்திற்கு ஒப்பான இரு நல்ல பழங்கள் உள்ளன. ஒன்று சுபாஷிதமாக ஒலிக்கும் பாடல்கள், மற்றொன்று நல்லவர்களுடைய சேர்க்கை. 

சரஸ்வதி மஹாபாகே வித்யே கமலலோசனே |

வித்யாரூபே விசாலாக்ஷி வித்யாம் தேஹி நமோஸ்து தே ||

ஓ! சரஸ்வதி!! கமல நயனங்களை உடைய அறிவுத் தெய்வமே!! வித்தையின் வடிவமே! உன்னை வணங்குகிறேன். சிறந்த அறிவை எனக்கு வழங்கு.

–    சரஸ்வதி ஸ்தோத்ரம்

காசீஷம் கலிகல்மஷௌகசமனம் கல்யாணகல்பத்ருமம் |

நௌமீட்யம் கிரிஜாபதிம் குணாசிதீம் கந்தர்பஹம் சங்கரம் ||

காசியில் உறையும் சங்கரருக்கு, பார்வதியின் ஈசருக்கு, நற்குணங்களின் உறைவிடத்திற்கு, காமத்தை அழிப்பவருக்கு, கலியுகத்தின் பாவங்களைப் போக்குபவருக்கு கல்யாண தருவிற்கு எனது நமஸ்காரம். அவரை வணங்குகிறேன்.

–    மானஸ VI 2

ஆஞ்சனேயமதிபாடலானனம் காஞ்சனாத்ரிகமனீய விக்ரஹம் |

பாரிஜாததருமூலவாஸினம் பாவயாமி பாவமானநந்தனம் ||

அஞ்சனா-வாயுவின் குமாரருக்கு நமஸ்காரம். தாமரை போன்ற சிவந்த முகமும், தங்க மலை போன்ற ஒளி விடும் உடலும் கொண்ட பாரிஜாத மரத்தில் வாசம் புரிபவரை வணங்குகிறேன்.

அநுகந்தும் ஸதாம் வர்த்ம க்ருதஸ்னம் யதி ந ஷக்யதே |

ஸ்வல்பமப்யநுகந்தவ்யம் மார்கஸ்தௌ நாவஸீததி || 

மகான்கள் காட்டிய புண்ணிய வழியில்  முழுவதுமாகப் போக முடியாவிட்டாலும் கூட, அந்த வழியில் முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவன் துக்கத்தை ஒருபோதும் அடையமாட்டான்.

மித்ர த்ரோஹி க்ருதக்னச்ச யஷ்ச விஸ்வாஸதாதக: |

த்ரயஸ்தே நரகம் யாந்தி யாவஸ்சந்த்ரதிவாகரௌ ||

நண்பன் ஒருவனுக்கு த்ரோஹம் செய்யும் மித்ர த்ரோஹி – நண்பனுக்கு எதிரியாக மாறுதல், அவனுக்கு நன்றியில்லாமல் இருத்தல் அவனது நம்பிக்கைக்கு துரோகம் செய்தல் ஆகிய இந்த மூன்றும் – அவனை சந்திர சூரியர் உள்ளவரை நரகத்தில் இருக்கச் செய்யும்.

க்ராசாதர்தமபி க்ராசமதிர்ப்ய: கிம் ந யச்சஸி |

இச்சானுரூபோ விபவ: கதா கஸ்ய பவிஷ்யதி ||

–    தான ப்ரஸம்ஸ 6

உன்னிடம் ஒரு கவளம் தான் உணவு இருந்தது என்றாலும் கூட அதில் பாதியை ஏன் நீ கொடுக்கக் கூடாது? எவன் தனது விருப்பத்திற்குத் தக்கபடி செல்வத்தை அடைகிறான்?

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 19 (Post No.12,718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,717

Date uploaded in London – –  –  14 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. I will cover them later.

SLOKAS 62,63,64

SLOKA 62

वाञ्छा सज्जनसङ्गमे परगुणे प्रीतिर्गुरौ नम्रता

        विद्यायां व्यसनं स्वयोषिति रतिर्लोकापवादाद्भयम् ।

भक्तिः शूलिनि शक्तिरात्मदमने संसर्गमुक्तिः खले

        येष्वेते निवसन्ति निर्मलगुणास्तेभ्यो नरेभ्यो नमः ॥ 62॥

வாஞ்சா ஸஜ்ஜனஸங்கமே பரகுணே ப்ரீதிர்குரௌ னம்ரதா

வித்யாயாம் வ்யஸனம் ஸ்வயோஷிதி ரதிர்லோகாபவாதாத்பயம் |

பக்திஹி  ஶூலினி ஶக்திராத்மதமனே ஸம்ஸர்கமுக்திஹி  கலே

யேஷ்வேதே நி வஸந் தி நி ர்மலகுணாஸ்தேப்யோ னரேப்யோனஹ.62

62. Salutations to those men in whom these impeccable virtues reside : desire for association with good people, pleasure in others’ merits, humility towards elders, striving for learning, delight only in one’s wife, fear of censure, devotion into Shiva, power to restrain oneself, and freedom from the association of the wicked.

நன்நட்பில் ஆசையும் நாட்டம் பிறர் குணத்தில்

துன்னலும் கல்வி நசை தோய்தலும் — உன்னுங்

குருவுக்கடக்கமும்  கோதிலாக் கற்பு

மருவுமனை யாளிடத்தில்  வாழ்வும் — வெருவும்

பழிக்கஞ்சு மாண்பும் பரமற் கன்பு

கொழிக்கும் திறனும் கொடிய – வழிச்செல்லும்

தீயார் தம் கேண்மையினிற்றீ ர்தலும் ஆய குண

மேயார்க்கு வந்தனம் செய்வோம்.—62

xxxxx

SLOKA 63

विपदि धैर्यमथाभ्युदये क्षमा सदसि वाक्पटुता युधि विक्रमः ।

यशसि चाभिरुचिर्व्यसनं श्रुतौ प्रकृतिसिद्धमिदं हि महात्मनाम् ॥ 63॥

விபதி தைர்யம் அதாப்யுதயே க்ஷமா

ஸதஸி வாக்யபடுதா யுதி விக்ரமஹ  |

யஶஸி சாபிருசிர்வ்யஸனம் ஶ்ருதௌ

ப்ரக்ருதிஸித்தம் இதம் ஹி மஹாத்மனாம் -63

63. Courage in adversity, forbearance in prosperity, eloquence in a gathering, heroism in battle, delight in fame, efforts in (study of) the Vedas – these are natural in great souls.

ஆபத்தில் தைரியமும் ஆன பெருஞ் செல்வத்தில்

கோபமிலாப் பெருமை கொள்ளலுமே -கோபித்

தவையில் விளங்கி அலங்கார வார்த்தை

சுவையாகப் பேசுதலும் தூய – நவை தீர்

கீர்த்திப் பிரியமும் கேடில்  பெரும்போரில்

ஆர்த்தியுடன் வீரங் காட்டாண்மையும் – சீர்த்தி மிகு

வேத கலா விளக்கமேவுதலும் இவ்வுலகில்

கோதில் மகான்கள் குணம்.-63

xxxx

SLOKA 64

प्रदानं प्रच्छन्नं गृहमुपगते सम्भ्रमविधिः

        प्रियं कृत्वा मौनं सदसि कथनं चाप्युपकृते ।

अनुत्सेको लक्ष्म्यामनभिभवगन्धाः परकथाः

        सतां केनोद्दिष्टं विषममसिधाराव्रतमिदम् ॥ 64॥

ப்ரதானம் ப்ரச்சன்னம் க்ரு ஹம் உபகதே ஸம்ப்ரமவிதஹி

ப்ரியம் க்ருத்வா மௌனம் ஸதஸி கதனம் சாப்யுபக்றுதஹே  |

அனுத்ஸேகோ லக்ஷ்ம்யாம் அனபிபவகன்தாஹா  பரகதாஹா

ஸதாம் கேனோத்திஷ்டம் விஷமம் அஸிதாராவ்ரதம் இதம் -64

64. Who showed this difficult path of walking on the razor’s edge, to the good people – charity in private, eager reception to one who has come home, silence after a good turn, not announcing acts of kindness in public, modesty in wealth and speaking of others without disrespect.

பிறர் அறியாத் தானம் பிரியமாய்ச் செய்தல்

பிறர் செய்யு தவிப் பெருமை- பிறர்  அறியப்

பேசுதல் தான் செய் பெருநன்றி  பேசாமை

மாசு திகழப் பிறரை வாய் மதத்தால் — ஏசாமை

செல்வம் வருங்கால் செருக்கின்மை எல்லாமும்

நல்லோர் இயற்கை என நாட்டு.

–subham—

Tags- Bhartruhari, Nitisataka slokas 62, 63, 64, part 19

New Tamil Lesson 14 (Exercise) Adverbs- Post 12,716

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,716

Date uploaded in London – –  –  14 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 மான் ஒரு காட்டு விலங்கு .

Maan our kaattu vilangku/ mirugam

Deer a forest animal

Deer is a wild animal

(Note: Tamil does not need verb — IS

xxxxxx

இதற்கு அழகிய கொம்புகள் உண்டு

Itharku alakiya kombukal undu

To this or to it, beautiful, horns, are

UNDU is an impersonal verb. It can be used with all PGN (Person, Number Gender.

It has got beautiful horns.

இதற்கு= to this

இது + க்கு = இதுக்கு (spoken, colloquial) Ithukku

இது + ற்கு = இதற்கு Itharku= grammatical 

 இதற்கு + ஆக = இதற்காக= Itharkaaka= for this

அழகிய, அழகான = beautiful / Adjective

xxxxxxx

இது மிகவும் வேகமாக ஓடும்

Ithu mikavum, vegamaaka, odum

This very fast/quickly will run (actually  runs)

It runs quickly

ODUM – will run; but Tamils use future for anything habitual or universal

xxxxx

இது தாவரங்களை மட்டுமே உண்ணும்

Ithu Thaavarangalai mattum Unnnum

This or It plants, only, will eat (actually eats)

This eats plants only.

Mattume – emphatic EE is added

மட்டும் +ஏ = மட்டுமே

xxxx

மான்களில் புள்ளி மான , கலை மான்  என்று பலவகை உண்டு

Maankalail , Pulli Man, Kalai maan endru , Pala vakai , Undu

In the deer (among the deer) Spotted deer, Antlers , that, many kinds, are

There are many types such as (ENDRU) spotted deer, antlers among the deer.

In Tamil we have used plural= MAANKAL; but in English Fish , Deer have no plurals

UNDU உண்டு  is a very useful Impersonal verb

Xxxx

சிங்கம் காட்டு விலங்கா? வீட்டு  விலங்கா ?

Singam, Kaattu Vilangaa? Veetu Vilangaa?

Sanskrit SIMHA becomes SINGAM in Tamil= Lion

Is lion a forest animal or house animal?

Is lion a wild animal or a domestic animal?

Note we have not used OR in tamil.

In English you need OR

விலங்கு + ஆ = விலங்கா = animal ?

விலங்கு = மிருகம் (This Sanskrit word MRUGA is also used by Tamils)

குதிரை வேகமாக ஓடுமா ? மெதுவாக ஓடுமா ?

Guthirai vegamaaka odumaa? Methuvaaka odumaa?

Horse quickly/ speedily runs? OR slowly runs?

ஆக AAGA makes  a verb as an ADVERB= equivalent to English LY= slowly, quickly= speedily

Tamil Adverbs

Quickly = Vegamaaga

Slowly = Methuvaaga மெதுவாக

Alakaaga = beautifully அழகாக

Nandraaga = well (goodily) நன்றாக

xxx

EXERCISE

Translate the following

இல்லாமல்= negative converbial= without

ஆமையும் (Tortoise) நத்தையும் (snail) மெதுவாக நகரும் Move/ செல்லும்/ go

விதைகள் Seeds இல்லாமல் ILLAAMAL/without செடிகள் முளைக்காது

சக்கரம் Wheels/Chakkaram இல்லாமல் வண்டி Cart/Vandi ஓடாது

கண்கள் Eyes) இல்லாமல் பார்க்க (to see) முடியாது cant

இறக்கை (Wing/feather) இல்லாமல் பறவைகள் BIRDS பறக்க முடியாது cant

Tags– New Tamil Lesson 14 (Exercise), negative converbial

–subham—

New lesson 14, Tamil, Adverbs

சோட்டானிக்கரை: கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 3 (Post No.12,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,715

Date uploaded in London – –  –  14 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 3

கோவில் எண் 2 சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்

சோட்டானிக்கரை அம்மே  என்ற பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எல்லோருக்கும் பகவதி அம்மனின், ஜதாம்பிகையின்  உருவம் மனக்கண் முன் தோன்றி விடும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவில் எங்கே இருக்கிறது ?

கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி நகரின் தென் பகுதியில் சோட்டானிக்கரை அம்மன் கோவில் இருக்கிறது. இங்குள்ள வினோதம் என்னெவென்றால் இந்த தேவி சரஸ்வதியாகவும், மஹா லக்ஷ்மியாகவும் , பத்ர காளியாகவும் பகவாதியாகவும் வணங்கப்படுவதாகும்வைஷ்ணவர்கள் 108 அபிமான க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று; இங்கு மஹாவிஷ்ணு சன்னதியும்  உண்டு.

ஆதி சங்கரர்

இங்கு வந்தால் இந்துமதத்தில் வரும் அத்தனை தேவியாரையும் வழிபட்ட புண்ணியம் கிடைத்துவிடும். கோவிலைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. முக்கியமான கதை ஆதிசங்கரர் கதையாகும்; காஷ்மீரிலிருந்து  ஸரஸ்வதியை கேரளத்துக்கு அழைத்து வர ஆசைப்பட்டார் ஆதி சங்கரர். அம்மா, ஒரு கண்டிஷன் CONDITION போட்டாள் ; நான் உன் பின்னால் நடந்து வருவேன்; ஆனால் திரும்பிப் பார்க்கக்கூடாது; உடனே சங்கரர் ஒரு கண்டிஷன் போட்டார்; தாயே! உன் கருணைக்கும் அளவு உண்டோ? நான் திரும்பிப் பார்க்கவில்லை; ஆனால் உன் சலங்கை, கொலுசு ஓசை எனக் கு    கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று.

அம்மாவும் யெஸ் YES; GRANTED என்று சொன்னாள் .

இறைவியின் திருவிளையாடலுக்குத்தான் அளவும் உண்டா?

பாதி வழி சென்ற பொழுது அம்மாவின் கொலுசு ஓசை ஆதி சங்கரருக்கு கேட்கவில்லை; திகைத்தார்; திரும்பிப் பார்த்தார்  அவ்வளவுதான்  அம்மாவும்  சிரித்துக் கொண்டே நின்றுவிட்டாள் . அந்த இடம் கர்நாடகத்தின் மலைப்பகுதியில் மூகாம்பிகை என்னும் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் ஆகியது. எம் ஜி ராமச்சந் திரன் வைர வாள் கொடுக்க, ஜெயலலிதா தங்கத்தை அள்ளித்தர, தமிழ் நாட்டிலிருந்து விசேஷ பஸ் சர்வீஸைத் துவங்க மூகாம்பிகை புகழ் திக்கெட்டும் பரவியது..

எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்பது சங்கரரின் கொள்கை; தாயே எல்லையற்ற கருணை உடைய சரஸ்வதி தேவியே!! மலையாள மக்களுக்கு உன் அருள் கிடைத்தே ஆக வேண்டும்!! என்று மன்றாடினார்.

மன்றாடியாரை விட்டுத் தருவாளா சரஸ்வதி; நான் வருகிறேன். ஆனால் இந்தக் கோவிலில்  கதவு திறக்கும் போது இருக்க வேண்டுமே என்ன செய்ய??, சொல், என்றாள் . அன்னையே சோட்டானிக்கரைக்கு வா; அங்கு அதிகாலை 4 மணிக்கு, பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீ காட்சி கொடு; பின்னர் மூகாம்பிகை கோவில் திறக்கட்டும் என்றார் . சரஸ்வதியும் சொன்னாள் ; நல்ல ஐடியா! GOOD IDEA சங்கரா; அதிகாலையில் கோவில் திறக்கட்டும் என்றாள் ; இன்றுவரை சோட்டா னிக்கரை கோவில் திறந்த பின்னரே மூகாம்பிகை கோவில் திறக்கும்.

ஆதி சங்கரர் என்றாலே தேச ஒற்றுமை என்று பொருள்; இந்திய முட்டாள்கள் , வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறிக்கொட்டி நான் ஒரு முட்டாளுங்கநல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்று பாடுவார்கள். ஆதி சங்கரரோ வெள்ளைக்காரன் கோமணம் இல்லாமல் ஐரோப்பாவில் உலவிக்கொண்டிருந்த காலத்தில் மொபய்ல் போன் MOBILE PHONE  இல்லாமல், கூகுள் மேப் GOOGLE MAP இல்லாமல், நதிகளைக் கடக்க பாலங்கள் இல்லாமல்,  காஷ்மீருக்குச் சென்று ஸ்ரீ நகர்= தேவி பட்டணம் என்ற நகரை உண்டாக்கி சாரதாம்பிகையை ஸ்தாபித்தார். நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்; கர்நாடக மூகாம்பிகையையும் கேரளா சோட்டானிக்கரையையும் இணைத்தார் நாட்டின் நான்கு திசைகளுக்கும் பல  லட்சம் பேரை யாத்திரை செய்ய வைத்தார்.

இவ்வாறு இந்தக் கோவில் ராஜ ராஜேஸ்வரி,  மஹாலக்ஷ்மி, துர்கா, பகவதி,  மஹா ஸரஸ்வதி , ஆதி பராசக்தி, என்று பல பெயர்களை பெற்று காலையில் சரஸ்வதியாகவும் மதியத்தில் மஹா லட்சுமியாகவும், மாலையில் பத்ர காளியாகவும் தோன்றி அருள் மழை பொழிந்து கொண்டே இருக்கிறாள்

கோவிலில் சிவன், பிள்ளையார், தர்ம சாஸ்தா, நாகர் சந்நிதிகளும் இருக்கின்றன .

மன நோய் தீர்க்கும் மஹா தேவி

கோவிலில் பல பைத்தியங்களையும் பார்க்கலாம். ஏனெனில் மன நோயாளிகள் இங்கு வந்து ஒரு சடங்கினைச் செய்தால் நோய் போய்விடும் என்பது நம்பிக்கை. மேலை நாட்டில் மன நோய் என்று சைக்கிட்ரியாஸ்ட் PSHYCHITRIAST இடம் சென்றால் லித்தியம் மாத்திரைகளைக் LITHIUM TABLETS கொடுத்து உண்மையிலேயே மன  நோயாளி ஆக்கி விடுவார்கள் ; இந்துக்களோவெனில் மருந்து மாத்திரை இல்லாமல் ஆறு மாதம் கோவிலைச் சுற்றச் செய்வார்கள்; உடனே தெளிவு பிறக்கும்.

மன நோயாளிகளுக்கும் அவர்களைப் பாதுகாப்போருக்கும் நம்பிக்கை ஏற்பட  சில சடங்குகள் தேவை. ஆகையால் வரும் நோயாளிகளின் தலை முடியில் ஒன்றை எடுத்து ஒரு மரத்தில் ஆணியால் அடிப்பார்கள்; பின்னர் வேப்பிலை, எலுமிச்சம் பழம் , மிளகாய்  முதலியவற்றை பிரசாதமமாக கொடுத்து அனுப்புவார்கள் .

காலம் செல்லச் செல்ல நோயும் தணிகிறது

xxxxx

எனது அனுபவம் – கொஞ்சம்  சுய சரிதை

லண்டனில் உள்ள நியூஹாம் யூனிவர்சிட்டி ஹாஸ்பிடல், பார்க் ராயல் சென்ட்ரல் மிடில் செக்ஸ் ஹாஸ்பிடல் (மருத்துவ மனைகள் ) ஆகியவற்றில் 20 ஆண்டுகளுக்கு அவ்வப்போது மன நோயாளிகளுக்கு மொழிபெயர்க்கச் செல்வேன் . அப்போது தனிப்பட்ட முறையில் டாக்டருடன் நட்பு முறையில் friendly chat அளவளாவுவேன் .

சிரித்துக்கொண்டே சொல்வேன்; இப்படி லித்தியம் மாத்திரைகளைக் கொடுத்து ஆட்களை நிஜமாகவே நோயாளி ஆக்குகிறீர்களே; எங்கள் இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் சுற்ற வைத்து ஆறே மாதங்களில் குணப்படுத்தி விடுவார்கள் என்பேன் . லித்தியம் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் கூட வராது; ஆளை நடைப்பிணம் ஆக்கி விடுவார்கள்

ஒரு எகிப்திய டாக்டர் பதில் சொன்னார் – எங்கள் நாட்டிலும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு; நாங்கள் பெரும்பாலும்  சைக்கிட்ரியாஸ்ட் psychiatrist களிடம் அழைத்துச் செல்வதில்லை என்று.

மற்ற டாக்டர்கள் சொன்னார்கள்; இதோ பாருங்கள் நான் கேட்கும் 3 கேள்விகளுக்கு அவர்கள் YES எஸ் என்று. சொன்னால் அதற்குத் தக்க மாத்திரைகளைக் நான் கொடுத்தாக வேண்டும் அல்லது என் வேலை போய்விடும் என்று.

(மூன்று கேள்விகள் : 1.தற்கொலை எண்ணம் வருகிறதா? 2.எல்லோரும் உங்களுக்கு எதிராக ஏதோ சதி செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா ? யாரோ உங்களிடம் பேசி, இதைச் செய் என்று சொல்கிறார்களா ? (வாய்ஸ் கேட்கிறதா/)

MY ADVICE TO MENTAL PATIENTS

என்னுடைய கொள்கை — சில மன நோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் அத்தகையோருக்கு மட்டுமே சமனப்படுத்தும் மாத்திரைகள் தேவை; மற்றவர்களை கோவில், இயற்கைக் காட்சிகள், இன்னிசை, கேளிக்கைகள் முதலியவற்றால் ஆறே மாதத்தில் குணப்படுத்திவிடலாம்; இதை என் நண்பர்கள் சிலர் விஷயத்தில் நானே பார்த்துள்ளேன்).

XXX

நிற்க. மீண்டும் கோவிலுக்குச் செல்வோம்.

இந்தக் கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பார்கள்; அதாவது ஆண்கள் எப்படி ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை சாஸ்தாவை தரிசிக்கிறார்க்ளோ, அதே அளவு மலையாள பெண்மணிகள் இந்த பகவதிக்கு முக்கியம் தருகிறார்கள்.

கோவிலில் ஒரே பீடத்தில் அம்மனுடன் மஹா விஷ்ணுவும் இருப்பதால் அம்மன் நாரயண என்ற பெயரும் கடவுளுக்கு உண்டு; அதே பீடத்தில் பிரம்மா , சிவன் ஆகோயோரும் உளர் ; தனி சந்நிதிகளும் இருக்கின்றன

இந்தக் கோவிலில் பெரிய விழா மகம் தொழல் ; கும்ப மாதத்தில் மக நட்சத்திரத்தில் நடைபெறுகிறது அன்றுதான் தேவியானவள், விஸ்வ மங்கள சாமியாருக்கு  தரிசனம் தந்தாள் . ஆண்டுதோறும் அதே நாளன்று தேவி அங்கே வருகிறாள் என்ற நம்பிக்கையால் தனி விசேஷம்.

தனியாக உள்ள கீழக் காவு பகவதி கோவிலில் மன நோயாளிகளுக்கான சடங்குகள் நடக்கும்

கோவிலில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நைவேத்தியம் படைக்கப்படுகிறது

Ellu Nivideyam – Morning, Night எள்ளு நைவேத்தியம் , காலை, இரவு

Vella Nivideyam & Paal Payasam – Afternoon, வெல்ல , பால் பாயஸ நைவேத்தியம் , மதியம் , இரவு

Pizhinju Payasam – Afternoon, Night பிழிஞ்சு பாயஸம் நைவேத்தியம் , மதியம் , இரவு

Kootu/Katti Payasam – Morning, Night கொழுக்கட்டை பாயசம் நைவேத்தியம் , காலை  , இரவு

Ney Payasam – Morning, Afternoon,நெய் பாயசம் , காலை, மதியம் இரவு

Night

Appam, Ada, Ottayappam – Night அப்பம், அடை , ஓட்டையப்பம் நைவேத்தியம் ,  இரவு 

வலிய குருதி பூஜை

மாலையில் பகவதி கோவிலுக்கு பெரிய குருக்கள் வந்து  சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் வலிய குருதி  சடங்கினைச் செய்வார். மன நோயுள்ளவர்கள் அங்கே வருவார்கள்; 12 அண்டாக்களில் வலிய குருதி ஆக்கப்படும்  குருதி என்றால் ரத்தம். அங்கு படைக்கப்படுவது ரத்தம் அல்ல. ரத்த நிறத்தில் உள்ள வெஜிட்டேரியன் கலவை  மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த செந்நிற திரவம்; இதை உட்கொண்டுவிட்டு, வீட்டுக்கு எடுத்துச் சென்று நான்கு  மூலைகளில் புதைத்தால் பேய், பிசாசுகள் அணுகாது.(கந்த சஷ்டிக் கவசமும் எல்லா வகைப் பேய், பிசாசுகள்  பெயர்களையும் பட்டியலிட்டு அவைகளை அந்தக் கவசம் விரட்டுவதாக நாம் சொல்கிறோம்).

XXXX

Chottanikkara Bhagavathy Temple

Chottanikkara Bhagavathy

https://chottanikkarabhagavathy.org

It is the most important Temple among the 393 shrines spread over 3 Districts of Kerala and coming under the administration of Cochin Devaswom Board. The Divine …

Temple timing: 4 AM to 12 PM, 4 PM to 8:45 PM

Prasad’s timing: 1 PM to 3 PM

Guruthi Pooja at Temple: 8:45 PM to 9:30 PM

Dress code: Men (Dhoti), Women (Saree)

Time taken for darshan: 2 hours

Entry fee: Free, no special darshan available

குருதி  பூஜை செய்ய விரும்புவோர் அண்டாக்களின் அடைப்படையில், கட்டணம் செலுத்துவார்கள்  அண்டா என்பது பெரிய பாத்திரம் Big Vessel

Below is the list of puja names with the ticket or Guruthi Pooja Cost as per the devotee’s requirement given by the temple authorities.

Valiya Guruthy (12 Vessel) – Rs. 25000 (12 அண்டா )

Valiya Guruthy (7 Vessel) – Rs. 18500

Valiya Guruthy (5 Vessel) – Rs. 16000

Valiya Guruthy (3 Vessel) – Rs. 11000 (3 அண்டா)

குருதி பூஜை ஏற்பாடுகள் மிகவும் விரிவானவை.. மாலையில் துவங்கி இரவில் முடிவடையும் .

—subham—

TAGS – சோட்டானிக்கரை , கேரள ,  புகழ்பெற்ற 108 கோவில்கள் , Part 3, குருதி பூஜை, மகம் தொழல் ,