சிறுவனின் தர்மம் (Post No.12,714)


 picture of singer Sonu Nigam

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,714

Date uploaded in London –  –  14 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 10 

ச.நாகராஜன் 

சிறுவனின் தர்மம்

பிரபல பாலிவுட் பாடகரான சோனு நிகம் (Sonu Nigam) வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.

ஒரு சமயம் அவர் தனது ரசிகர்களைச் சோதிப்பதற்காக மும்பையில் தெரு ஒன்றில் அமர்ந்து பிச்சைக்காரர் ஒருவர் பாடுவது போல பாட ஆரம்பித்தார்.

உடனே கூட்டம் கூட ஆரம்பித்தது.

கூட்டத்தில் அனைவரும் பாடலை வெகுவாக ரசித்தனர்; பாராட்டினார்; ஆனால் யாரும் ஒரு ரூபாய் கூட தர்மமாகத் தரவில்லை.

ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் அவரிடம் சென்று தன்னிடமிருந்த 12 ரூபாய்களைத் தந்தான்.

“நீங்கள் பசியோடு இருப்பீர்கள். இதோ இதை வைத்து சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான்.

அந்தப் பையனின் அன்பை நினைத்து சோனு நிகம் நெகிழ்ந்தார். கூட்டம் கலைந்த போது அந்தப் பையனைக் காணோம். அவன் வீட்டை நோக்கி ஓடி விட்டான்.

சோனு நிகம் கூறினார்:” இந்தச் சிறுவனின் தர்மமானது எனக்கு ஒரு பெரிய ட்ராபி கிடைத்தது போல என்று எண்ணுகிறேன். இதை எனது வாழ்க்கை முழுவதும் அப்படியே வைத்திருப்பேன்” என்றார்.

ஆதாரம் : ஹிந்துஸ்தான் ஹிந்தி நாளிதழில் 19-5-2016 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி

***

வால்டேரின் குறுக்கீடு

வால்டேரைப் பற்றிய ஏராளமான சம்பங்களில் அவரது பொறுமையின்மையைச் சுட்டிக்காட்டும் சம்பவம் இது.

பதினைந்தாம் லூயி பாரிஸிலிருந்து அவரை வெளியேற்றி இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து விட்டன. 1754ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரிஸிலிருந்து வெளியேறிய அவர் 1778ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பாரிஸுக்கு வந்தார்.

அவருக்கு வயது 83. மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து பாரிஸுக்கு வந்த அவரைப் பார்க்க ஏராளமானோர் உற்சாகமாகக் கூடினர்.

அவரை வரவேற்கக் கூடிய கூட்டத்தில் ஒரு இளைஞன் உற்சாகமாக அவரைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தான்

“மகத்தானவரே! இன்று நான் ஹோமரைப் போற்றிப் புகழ வந்துள்ளேன். நாளை சொபோக்ளிஸைப் போற்றுவேன். நாளை மறுநாள் ….”அந்த இளைஞனை இடைமறித்த வால்டேர், “அப்பா! எனக்கு மிகவும் வயதாகி விட்டது. உனது எல்லா போற்றுதலையும் இன்றே முடித்துக் கொண்டால் நல்லது!” என்றார்.

அனைவரும் ஆரவாரித்தனர்.

** 

விசித்திரமான மேதை ரிச்சர்ட் பக்மினிஸ்டர் ஃபுல்லர் 

சிறந்த கட்டிடக் கலைஞரும் விஞ்ஞானியுமான அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பக்மினிஸ்டர் ஃபுல்லர் (Richard Buckminster Fuller)  கவிகை மாடம் (Geodesic Dome) வடிவமைப்பதில் வல்லவர்.  (பிறப்பு : 12-7-1895 மறைவு 1-7-1983) எதிர்கால நகரங்களை அவர் மனக்கண்ணில் கண்டு வடிவமைப்பார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் டைமாக்ஸியன் (Dymaxion) என்ற ஒரு காரையும் அவர் வடிவமைத்தார். ஆனால் அவர் கொஞ்சம் விசித்திரமான மேதை. அடிக்கடி உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டே இருப்பது அவர் வழக்கம். ஆகவே அவர் பல்வேறு இடங்களில் என்ன நேரம் என்பதைக் காட்டும் மூன்று கடிகாரங்களைக் கையில் அணிந்து கொண்டிருப்பார். பல வருடங்கள் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் தூங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த தூக்கத்திற்கு டைமாக்ஸியன் தூக்கம் (Dymaxion sleep) என்று அவர் பெயர் கொடுத்தார். ஆனால் அவரது சகாவால் இப்படித் தூங்காமல் இருப்பது முடியவில்லை. ஆகவே அவர் பின்னாளில் இந்தப் பழக்கத்தை விட்டு விட்டார். தனது வாழ்நாளில் என்னென்ன நடக்கிறது என்பதை அவர் குறிப்பெடுத்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் என்ன நடக்கிறது என்பதை அவர் 1915ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எழுதி வந்து கொண்டிருந்தார். அதற்கு டைமாக்ஸியன் க்ரானோஃபைல்ஸ் (Dymaxion chronofiles) என்று பெயர். அது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பைல்களின் உயரம் 272 அடி.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 18 (Post No.12,713)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,713

Date uploaded in London – –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I have skipped 50,51,52,53,54, 55 so that my translation coincides with at least one book. I will cover them later.

SLOKAS 59,60, 61

SLOKA 59

उद्भासिताखिलखलस्य विश्रुङ्खलस्य

        प्राग्जातविस्तृतनिजाधमकर्मवृत्तेः ।

दैवादवाप्तविभवस्य गुणद्विषोऽस्य

        नीचस्य गोचरगतैः सुखमाप्यते कैः ॥ 59

59.  Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?

கீழ் மக்களுடன் யார்தான் அமைதியாக வாழ முடியும்? அவர்கள் கட்டுக்கடங்காத த்யூரைத் தூண்டி விடுகின்றனர் ; பழைய தீய செயல்களை மறந்து விடுகின்றனர் ; நல்லவற்றை இகழும் அவர்களுக்கு விதி வசத்தால் புகழ் கிடைத்து விடுகிறது-59

உத்பாஸிதாகிலகலஸ்ய விஶ்ருங்கலஸ்ய

ப்ராக்ஜாதவிஸ்த்ருதனிஜாதமகர்மவ்ருத்தஹே  |

தைவாதவாப்தவிபவஸ்ய குணத்விஷோ‌அ ஸ்ய

நீ சஸ்ய கோசரகதைஹி  ஸுகம் ஆப்யதே கை  ஹி || 1.59 ||

துஷ்டரைச் சேர்ந்து சுவேச்சையாய் வாழ்ந்து குணச்

சிஷ்டரை நீக்கிச் சிறப்பாக்கி கஷ்டமுடன்

இத்தனை நாள் தானுகர்ந்த இல்லாமையை மறந்த

மத்தரையார் சேர்வார் மதித்து

xxxx

SLOKA 60

आरम्भगुर्वी क्षयिणी क्रमेण

        लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।

दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना

        छायेव मैत्री खलसज्जनानाम् ॥ 60

60. The friendships of evil and good people are like the shadows of the forenoon and afternoon respectively. The former starts big and tapers slowly while the latter starts small and grows later.

காலை நிழல் போலக் கயவர்செயு  நட்புச்

சால மிக நீண்டழியும்  சான்றோர் தம் – சீலமுள

நட்புக் சிறிதெனினும் நன் மாலை  நீழல் போல்

திட்பமுடன் வளரும் சேர்ந்து

தீயோர், நல்லோர் நட்பினை நிழலுக்கு ஒப்பிடலாம்.தீயோர் நட்பு காலை நிழல் போல பெரியத்திலிருந்து சிறிதாகி மறைந்துவிடும். நல்லோர் நட்போ, மாலை நிழல் போல  சிறிதாகத்துவங்கி பின்னர் வளர்ந்து கொண்டே போகும்.

ஆரம்பகுர்வீ க்ஷயிணீ க்ரமேண

லக்வீ புரா வ்ருத்திமதீ ச பஶ்சாத் |

தினஸ்ய பூர்வார்தபரார்தபின்னா

சாயேவ மைத்ரீ கலஸஜ்ஜனானாம் || 1.60 ||

xxxx

SLOKA  61

मृगमीनसज्जनानां तृणजलसन्तोषविहितवृत्तिनाम् ।

लुब्धकधीवरपिशुना निष्कारणवैरिणो जगति ॥ 61

61. In this world, deer, fish and good people, subsisting on grass, water and contentment respectively, have the hunter, fisherman and evil men as enemies for no reason.

ம்ருகமீனஸஜ்ஜனானாம் த்ருணஜலஸன்தோஷவிஹிதவ்ரு த்தீனாம் |

லுப்தகதீவரபிஶுனா னிஷ்காரணவைரிணோ ஜகதி || 1.61 ||

இந்த உலகில் மான் புல்லைத்தான் தின்கிறது; மீனோ தண்ணீரைத்தான் குடிக்கிறது ; நல்லாருக்கு போதும் என்ற மனமே பொ ன் செய்யும் மருந்து ஆயினும் பாருங்கள் ! இவர்களுக்கும் காரணமே இல்லாமல் எதிரிகள் இருக்கிறார்கள் ; மானுக்கு வேடன் எதிரி; மீ னுக்கு செம்படவன் எதிரி; நல்ல மனிதனுக்கோ கெட்டவன் எதிரி .

புல்லுண் மானுக்கும் புனலுண்  மீனுக்கும்  நன்செய்

நெல்லுண் ணு நல்ல நிறை குணற்கும் -பல்லுண்

புவியுஞ்  சிரற்  புள்ளும் பூரியரும் கொன்னே

வலிய பகையாகுவார்

—–subham—-

Tags—Slokas 59,60, 61, Bhartruhari, Nitisataka

QUIZ அதிசய முதலைப் பத்து QUIZ (Post No.17,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,712

Date uploaded in London – –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Serial No.81

1.முதலை  விழுங்கிய சிறுவனைக் காப்பாற்றிய தேவார பாடகர் யார்?

xxxx

2.இந்தியா முழுதும் பத்திரிகைகளில் அடிபட்ட சைவ முதலையின் பெயர் என்ன?

xxxx

3.சைவ முதலை வசித்த குளத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் அதிசயம் என்ன ?

xxxx

4. எந்த கடவுளுக்கு முதலை வாகனம் ?

xxxx

5. பஞ்ச தந்திரக் கதைகளில் முதலை எங்கே வருகிறது ?

xxxx

6.அர்ஜுனன்- முதலை கதை என்ன ?

xxxx

7.கங்கை நதியில் வசிக்கும் முதலைகள் எத்தகையவை?

xxxx

8.முதலையால்  சன்யாசம் பெற்று உலகை வியக்க வைத்த தத்துவ அறிஞர் யார்?

xxxx

9. முதலைக்கு சங்க இலக்கியத்தில் என்ன சொல் பயிலப்படுகிறது?

xxxx

10.இந்து மதத்தில் வரும் யானை – முதலை கதை குப்த காலம் முதல் சிலைகளில் காணப்படுகிறது அது என்ன கதை ?

 xxxxx

விடைகள்

1.தேவாரம் பாடிய  சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  புராணம் சொல்கிறது.

xxxx

2.கேரளத்தில் காசர்கோடு அருகில் கும்பலா என்ற ஊருக்கு அருகிலுள்ள  அனந்த பத்மநாப சுவாமி  கோவில் குளத்தில்  பபியா Babia என்ற பெயருள்ள முதலை 70 ஆண்டுகள் வசித்தது . அது 2022ம் ஆண்டு அக்டோபரில் இறந்தது ; அது வாழ்ந்த காலம் முழுதும் கோவில் பிரசாதத்தை மட்டுமே உண்டு, வெஜிட்டேரியனாகவே இருந்தது.

Xxxx

3.அந்தக் குளத்தில் மீண்டும் ஒரு முதலை தோன்றி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது . பபியா Babia முதலை இறந்து சரியாக ஓராண்டுக்குப் பின்னர் இது வந்துள்ளது  .இந்தக்கோவில் குளத்தில் ஒரு முதலை இறந்தவுடன் அடுத்த முதலை  வருவது அதிசயமாக இருக்கிறது. இப்படி வரும் நாலாவது முதலை இது; இவ்வளவுக்கும் பக்கத்தில் முதலை வசிக்கும் ஆறோ , குளமோ இல்லை.

xxxx 

4.கங்காதேவியின் வாகனம் —மகரம்/முதலை Ganga Devi= Crocodile

xxxxx

5.செய்நன்றி கொன்ற முதலை பற்றி வரும் குரங்கு – நவாப்பழம் —முதலை கதை எல்லாச் சிறுவர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது, தினமும் நாவல் பழத்தைக் கொடுத்து உதவிய குரங்கின் குடலைத் தின்ன விரும்பிய முதலை, குரங்கை, ஆற்றின் மறு கரைக்கு அழைத்துச் சென்றவுடன் தனது திட்டத்தை வெளிப்படுத்தியது. உடனே குரங்கும் தந்திரமாக என் குடலினை காயப் போட்டிருக்கிறேன்.  ; திரும்பிச் சென்றால் குடலினைத் தருகிறேன் என்றது . முட்டாள் முதலையும் திரும்பிச் சென்றது. குரங்கு, மரத்தின் மீது ஏறிய பின்னர் நன்றிகெட்ட முதலையை அடித்து விரட்டியது. 

Xxxx 

6.மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா  ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார்.  பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.

ஒரு பெரிய  வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.

அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அங்கு வந்தான் அவன் மீது முதலைகள் பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான்.  . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .

xxxx  

7.முதலைகளில் 23 வகை உண்டு. இதில் இரண்டு  வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. நீண்ட மூக்குள்ள காரியால் Gharial  எனப்படும் முதலைகள் கங்கை நதியில் வசிக்கின்றன.

xxxx 

8.ஆதி சங்கரர்; அவர் காலடி என்னும் இடத்தில் பிறந்தார் ; ஆற்றில் குளிக்கச் சென்றபோது, ஒரு முதலை காலைப் பிடித்துக் கொண்டது; காப்பாற்ற முடியாமல் தவித்த தாயார் கதறினாள். அம்மா இந்த ஜன்ம ஆயுள் எனக்கு முடிந்துவிட்டது. ஆகையால் நான் சந்நியாசி ஆகிறேன்.அது அடுத்த ஜன்மத்துக்குச்  சமம். அப்போது முதலையும் என்னைக் கொல்லாது என்றார். அம்மாவும் நீ உயிரோடு இருந்தாலே போதும் என்றாள் . ஆதி சங்கரர் சந்நியாசி ஆனவுடன் முதலையும் அவரை விட்டுச் சென்றது. அந்த முதலையால் நமக்கு  உலகம் புகழும் அத்வைத குரு  கிடைத்தார் .

xxxx

9. கராம்  = முதலை

xxxx

10.கஜேந்திர மோட்சம் கதை நாடு முழுதும் சிற்பமாக உள்ளது. குப்தர்காலம் முதல் சிற்பங்கள் கிடைக்கின்றன. யானைகளின் தலைவன் ஆன கஜங்களின் இந்திரனை முதலை பிடித்த போது ஆதிமூலமே என்று அது கதறியது . உடனே விஷ்ணு வந்து, முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காப்பாற்றினார் .

–SUBHAM—

Tags– கராம் முதலை, Quiz

லண்டன் ஆஸ்பத்திரியில் தீபாவளி ; Diwali in London Hospital (Post No.12,711)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,711

Date uploaded in London – –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pictures taken by London Swaminathaan

Northwick Park Hospital staff and patients in Kenton , Harrow celebrated Diwali on 8th November 2023. Volunteers from outside also joined them. Hare Krishna temple devotees organised a 45 minute Bhajan and Govardhana Puja. All the participants, irrespective of their faith, showed Aarti to the Gods on the dais. About 120 people participated and received the Prasad.

Hindu staff and patients meet every Wednesday at the Christian Chapel Hall and do Hindu prayers which include Gayatri Mantra, Hanuman Chalisa, Dhanvantri Mantra and Trayambaka Mantra. A brief discussion on Bhagavad Gita will also take place.

Every year Hindu staff assemble to celebrate Pongal, Diwali and other important events. This has been going on for years. I also participated as usual and took pictures.

London swaminathan showing arti

லண்டனில் ஹாரோ Harrow பகுதியில் நார்த்விக் பார்க் Northwick Park Hospital ஆஸ்பத்திரி உள்ளது; வா ரம் தோறும் அங்குள்ள கிறிஸ்தவ வழிப்பாட்டுக் கூடத்தில்,  இந்துக்களுக்கு புதன் கிழமை  ஒதுக்கப்பட்டுள்ளது; அரை மணி நேரத்துக்கு ஹனுமான் சாலீஸா, பகவத் கீதை, திரயம்பக மந்திரம், தன்வந்திரி மந்திரம், காயத்ரீ  மந்திரம் சொல்லுவோம். ஆண்டுதோறும் பொங்கல்,  தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.

 8-11-2023 புதன் கிழமை தீபாவளியை இனிப்புகள் விநியோகித்துக் கொண்டாடினோம் ; வழக்கம்போல ஹனுமான் சாலீசாவுடன் பிரார்த்தனை நிறைவு பெற்றது.அதற்கு முன்னதாக ஹரே கிருஷ்ணா கோவில் பக்தர்கள் மேள, தாள ஹார்மோனிய இசையுடன் முக்கால் மணிநேரத்துக்கு ஹரே ராம, ஹரே கிருஷ்ண பஜனை செய்தனர். இறுதியில் அனைவரையும் ஆடவும் வைத்தனர். கிறிஸ்தவ பக்தர்களும் வந்து ஆரத்தி கட்டினார்கள். வழக்கமாக கோவர்த்தன பூஜை என்ற பெயரில் எல்லோரும் ஆரத்தி காட்டுவது சம்பிரதாயம். சுமார் 120 பக்தர்கள் வரிசையில் நின்று ஆரத்தி காட்டிவிட்டு பிரசாதம் பெற்றுச்  சென்றனர். நானும் வழிபாட்டுடன், புகைப்படங்களையும் எடுத்தேன் . மருத்துவ மனை ஊழியர்கள், தொண்டர்கள், நோயாளிகள், டாக்டர்கள், நர்ஸுகள்  என்று பலரும் கலந்து கொண்டனர்.

 organisers

—subham—-

Tags-  ஆஸ்பத்திரி, லண்டன், தீபாவளி  , London, Hospital, Diwali, Northwick Park Hospital

கொட்டாரக்கரை கணபதி– கேரள மாநில புகழ்பெற்ற கோவில்கள் – 2 (Post.12,710)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,710

Date uploaded in London – –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 2

கோவில் எண் 1- கொட்டாரக்கரை கணபதி

வினைகள் ஒழிக்கும் கொட்டாரக்கரை கணபதி பகவானே ……… என்ற பாடலை K J  ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்ட பின்னர் எல்லோருக்கும் கொட்டாரக்கரை கோவிலுக்குப் போக வேண்டும் என்ற ஆசை எழுவது இயல்பே.

இது ஒரு சிவன் கோவில்; ஆனால் கணபதியால் பிரசித்தம் அடைந்துவிட்டது.

கோவில் இருப்பிடம்

கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் துறைமுகத்துக்கு அருகில் கொட்டாரக்கரை  இருக்கிறது  கொல்லம் நகரிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் இருக்கிறது  கதகளி என்னும் புகழ்பெற்ற நடனம் இங்குதான் ராமன் ஆட்டம் என்ற பெயரில் துவங்கியது .

கோவிலின் சிறப்பு

கோவிலின் சரியான பெயர் Kizhakkekara Siva Kshethram. கிழக்கேக்கர சிவ க்ஷேத்ரம் . இங்கு சிவபெருமான்தான் மூலஸ்தானத்தில் உள்ளார் ; பரசுராமர் ஸ்தாபித்த லிங்கம். கேரள மாநிலமே பரசுராமரால் கடலிலிருந்து மீட்கப்பட்ட பூமி என்பது ஐதீகம் (வாய் மொழி வரலாறு)

கருவறைக்குப் பின்பக்கம் படிஞ்ஞாறு பகவதி சந்நிதி உள்ளது

பலா மரத்தில் செய்யப்பட கணபதி கையில் மோதகத்துக்குப் பதிலாக அப்பம் இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் அருணகிரிநாதர் பாடிய

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

(கனி, அப்பம், அவல் , பொரி)

     கப்பிய கரிமுகனடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

     கற்பக மெனவினை கடிதேகும்……

என்ற திருப்புகழைப் பாடத் துவங்கி விடுவோம்

பலா மரத்தில் கணபதி உண்டானது எப்படி? என்பது பற்றி இரண்டு வரலாறுகள் உண்டு; பெருந்தச்சன் என்ற சிற்பி பலா மரத்தைக் கண்டவுடன் அதில் கணபதி செய்து கோவில் நிர்வாகத்தின் அனு மதியுடன் கணபதியைப் பிரதிஷ்டை செய்தார் என்பது முதல் வரலாறு. அப்படி  அவர் ஏன் செய்தார்?  என்பதற்குப் பின்னணியில் வேறு ஒரு வரலாறும் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிராமணர்  தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்  திடீரென்று ஒரு அசரீரி கேட்டது.

அசரீரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு சரீரம் இல்லாத என்று பொருள்; ஆளே இல்லாமல் வானிலிருந்து ஒலிக்கும் குரல் இது .

என்னையும் வணங்கிவிட்டுச் செல் என்ற குரலைக் கேட்ட அந்தப் பிராமணன் உற்று நோக்கும்போது பலா மரத்தின் அடிப்பகுதி  கணபதி உருவத்தில் இருந்தது; அதை பிள்ளையாராக நினைத்து வழிபடத் துவங்கினார். பின்னர் கணபத்திக்கு புதிய சந்நிதி கிடைத்தது.

இதைப்படிக்கும்போது நாமே நடந் ததை ஊகிக்க முடிகிறது. மரத்துக்கு அடியில் இயற்கையாக அமைந்த யானை உருவத்தை, சிற்பி கண்டு, முறையான வடிவில் செதுக்கி அருளினார் என்பதே வரலாறு.

நான் எழுதிய இலங்கைத் தீவின்  108 புகப்பெற்ற  ஆலயங்கள் என்ற புஸ்தகத்தைப் படித்தோருக்கு அங்கும் இப்படி நடந்தது நினைவுக்கு வரும். மரத்தின் அடிப்பகுதி கணபதி உருவத்தில் இருந்தவுடன் போகும் வரும் பயணிகள் அதை வணங்கவே அங்கு முறையான கோவில் கட்டப்பட்டது .

. அது சரி, சிவனை விட்டுவிட்டு, கணபதியை எல்லோரும் மெச்சுவது ஏன்?  என்ற கேள்வி எழுகிறதல்லவா!  அதற்கும் பதில் உண்டு; இந்த இடத்திலுள்ள கணபதிக்கு நெய்யப்பம் நைவேத்தியம் செய்வதாக வேண்டிக்கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேறுகிறது அதனால்தான் ஜேசுதாசும் வினைகள் ஒழிக்கும் கணபதி பகவானே………………. என்று நீட்டி முழக்குகிறார் போலும். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் அது; அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் இது.

கோவில் வெப்சைட்டில் கோவில் நேரம், வழிபாடு, விழாக்கள் முதலியன எல்லாம் விவரமாகக் கிடைக்கிறது. சதுர்த்தி தினங்களும் விநாயகர் சதுர்த்தியும் பொதுவாக எல்லா இந்துப் பண்ணாடிகை  தினங்களும் கூட்டம் அதிகம் கூடும் கோவில் இது.

இந்த ஊரில் பல கோவில்கள் இருக்கின்றன. மஹாதேவ கோவில், மணிகண்டேஸ்வர கோவில்,  குலசேகர நல்லூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், திருக்கண்ண மங்கல மஹாவிஷ்ணு கோவில், நெடுவத்தூர் பகவதி கோவில் ஆகிய பெயர்களிலும் கோவில்களை தரிசிக்கலாம்; பல கோவில்கள் ராமாயணத்துடன் தொடர்புடையவை.

XXXX

கோவில் வெப்சைட்

Kottarakara Sree Maha Ganapathi Temple | Kottarakara …

kottarakaramahaganapathi.org

https://kottarakaramahaganapathi.org

Kottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage center in Kerala, lord Ganapathy is only a minor deity here. But the temple today is famous as a …

VazhipadukalKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage …
Temple TimingsKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage …
About TempleThere are many legends about Kottarakara Ganapathy. Actually …
Temple Event CalendarKottarakara Sree Mahaganapathi Temple -Important pilgrimage …

கொட்டாரக்கரை கதகளி ராமன் ஆட்டம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரைகளில் கதகளி நடனம் பற்றிய சுவையான விஷயங்களை படித்தறிக

Kathakali Facts!- Part 1 (Post No.11812)

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2023/03/16 › kathakali-fa…

16 Mar 2023 — 1. Kathakali is a dance drama form peculiar to Kerala. · 2. Kathakali is an improvement on Krishnattam, kind of dance drama based on Jayadeva’s …

Kathakali Facts- Part 2 (Role of Colours; Play of Colours)

Tamil and Vedas

https://tamilandvedas.com › 2023/03/17 › kathakali-fa…

17 Mar 2023 — Bali, Sugriva and Kalakeya wear have red beards, while Kali, Kattalan/ hunter have black beards. Hanuman is depicted wearing white beard. All …

—SUBHAM—

TAGS —  கொட்டாரக்கரை கணபதி , ஜேசுதாஸ் பாடல், கேரளம்   புகழ்பெற்ற 108 கோவில்கள்,  Part 2

ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 1 (Post.12,709)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,709

Date uploaded in London –  –  13 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 1 

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த லை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1. இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணுதல்

2. இராமன் கோசலை சந்திப்பு

3. மந்தரையின் சூழ்ச்சி

4. கைகேயியின் சூழ்ச்சி

5. இராமன் அயோத்தி நீங்குதல் குஹனைச் சந்தித்தல்

6. பரத்வாஜ முனிவருடன் சந்திப்பு

பிற்சேர்க்கை

1. அயோத்யா காண்டம் வால்மீகி ராமாயணம் ஸர்க்கங்கள்

2. உதவிய இராமாயண நூல்களின் பட்டியல்

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் ஐந்தாவது நூலாக அமைகிறது.

நூலுக்கு முன்னுரை அளித்துள்ள திரு ஆர். சேஷாத்ரிநாதன், தான் வால்மீகி ராமாயணம், கம்பனின் கவிதைகள், துளஸிதாஸரின் தோஹாக்களில் பொதிந்துள்ள ஒராயிரம் விஷயங்களை எப்படி உபந்யாசகர்கள், உரையாசிரியர்கள் போன்றோரின் கட்டுரைகள் மற்றும் காணொளிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது என்பதையும் அதைத் தொகுப்பு நூலாக தந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ராம நாமம் மிருதசஞ்சீவினி நாமம். மரிக்கப் போன சீதா பிராட்டியாருக்கு தஞ்சமாகவும், கடலைத் தாண்டும் ஆஞ்சநேயருக்கு பாஹு பலமாகவும், விபீஷணன் போன்ற சரணாகதர்களுக்கு ஆத்ம பலமாகவும், சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்து புதிய ஜீவனைத் தந்த சஞ்சீவினியாகவும் விளங்கியது ஷடாக்ஷரியான மஹா மந்திரம் ஶ்ரீ ராம மந்திரம்.

வால்மீகி ராமாயணத்தில் உள்ள 24000 ஸ்லோகங்களில் உள்ள ஒரு அக்ஷரத்தைச் சொன்னால் கூட மஹாபாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த நூலை முழுவதும் படிப்போர் அடையும் நன்மையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளுக்கும் நாம் நாட வேண்டிய நூல் இராமாயணமே.

இந்த நூலில் பால காண்டத்தைத் தொடர்ந்து அயோத்யா காண்டத்தில் வரும் சம்பவங்களை சுவாரஸ்யமாகப் பல நூல்களின் உதவியோடு அற்புதமாகத் தொகுத்துத் தருகிறார் நூலாசிரியர்.

இராமனின் கல்யாண குணங்கள் 24.

இராமன் மிகுந்த அழகு நிறைந்தவன், பராக்கிரமம் உடையவன், பொறாமை இல்லாதவன், கடுமையான வார்த்தைகளைப் பேசாதவன் என்பது உள்ளிட்ட 24 குணங்களையும் அறிகிறோம்.

இராமனை அழைத்த தசரதர் இராமனுக்கு மகுடம் சூட்டுவதற்கான காரணங்களை வரிசையாகக் கூறுகிறார்.

1.இக்ஷ்வாகு வம்சத்திற்குத் தகுதியானவன்.

2. சிறந்த குணங்களை உடையவன்

3. தசரதனின் முதல் மனைவியின் புதல்வன்

4. இராமனது நல்ல குணங்களால் மக்கள் அவனை விரும்புகின்றனர்.

5. பெரியோர்களிடத்தில் பணிவுள்ளவன்.

6. எல்லா விதத்திலும் தசரதனை விடச் சிறப்புடையவன்

பல சுவையான கேள்விகள்  எழுப்பப்பட்டு அதற்குரிய பதிலும் தரப்பட்டிருப்பதை நூலில் காணலாம்.

தேவர்களின் வேண்டுகோளின்படி இராவணனை சம்ஹாரம் செய்வதற்காக மகாவிஷ்ணு மனிதனாக பூமியில் அவதாரம் எடுத்தார்.

ஆனால் அவர் தசரத சக்ரவர்த்திக்கு மகனாக ஏன் பிறக்க வேண்டும்?

இக்ஷ்வாகு மன்னன் மகாவிஷ்ணு மூர்த்தியை அயோத்திக்கு எடுத்து வந்து சரயு நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து பூஜிக்க ஆரம்பித்தான்.

இந்த பூஜை 35 தலைமுறைகளாகத் தொடர நாளடைவில் பூஜையில் சற்று சிரத்தை குறைந்தது. இதை நிவர்த்தி செய்ய மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து தானே மகாவிஷ்ணுவுக்கு பூஜை செய்ய வந்தார். தேவர்கள் இராவணனை சம்ஹாரம் செய்ய விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அதையும் நிறைவேற்ற ராமனாக அவதரித்தார்.

இப்படி பல சுவையான விவரங்களை நூலில் காணலாம்.

ஆங்காங்கே மூல ஸ்லோகங்கள் சம்ஸ்கிருதத்திலேயே தரப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது..அயோத்யா காண்டத்தில் உள்ள 119 ஸர்க்கங்களும் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளது.

பல நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் தந்திருப்பது நூலின் சுவையைக் கூட்டுகிறது.

–subham—

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 17 (Post No.12,708)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,708

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx

I am skipping 50,51,52,53,54, 55 to coincide with at least one book. I will cover them later.

शशी दिवसधूसरो गलितयौवना कामिनी

        सरो विगतवारिजं मुखमनक्षरं स्वाकृतेः ।

प्रभुर्धनपरायणः सततदुर्गतः सज्जनो

        नृपाङ्गणगतः खलो मनसि सप्त शल्यानि मे ॥ 56॥

ஶஶீ திவஸதூஸரோ கலிதயௌவனா காமினீ

ஸரோ விகதவாரிஜம் முகம் அனக்ஷரம் ஸ்வாக்ருதேஹே  |

ப்ரபுர்தனபராயணஹ ஸதததுர்கதஹ  ஸஜ்ஜனோ

ந்ருபாங்கணகதஹ  கலோ மனஸி ஸப்த ஶல்யானி மே || 1.56 ||

56. The moon pale by day, a lovely woman past her youth, a lake bereft of lotuses, the unlettered mouth (speech) of a handsome man, a powerful man devoted to wealth, a good man ever in misfortune, a wicked man in a king’s court – these are seven barbs in my heart.–56

பகலில் காணப்படும் ஒளியிழந்த சந்திரனும், இளமையைத் தாண்டிய பெண்ணும், தாமரையில்லா குளமும் , பேசத்தெரியாத அழகனும், செல்வச்  செருக்குடைய பலவானும் , கஷ்டப்படும் நல்லவனும் , அரசவையிலுள்ள  தீயோனும் என் இதயத்தைத் துளைக்கும் ஏழு முள்கள் ஆகும் .

xxxxxx

न कश्चिच्चण्डकोपानामात्मीयो नाम भूभुजाम् ।

होतारमपि जुह्वानं स्पृष्टो दहति पावकः ॥ 57॥

ந கஶ்சிச்சண்டகோபானாம்

ஆத்மீயோ நாம பூபுஜாம் |

ஹோதாரம் அபி ஜுஹ்வானம்

ஸ்ப்ரு ஷ்டோ வஹதி பாவகஹ  || 1.57 ||

57. There is no one dear as one’s own, to a king with a fierce temper. The fire, burns even the sacrificer offering oblations, if touched (by him).

கடுங் கோபமுடைய அரசனுக்கு எவனும் நெருங்கிய நண்பன் இல்லை; யாகத் தீயானது வேள்வி வேட்பவன் தொட்டாலும் சுட்டுப் பொசுக்கத்தான் செய்யும்.

 அதிகோபங்கொள்ளும் அரசரிடத்தில்

மதியோன் எவனும் மருவான் — விதிசேர்

மகஞ்செய்வோன் தன்னையங்கி வாட்டத் தொடங்கின்

முகங் கால் தெரியாது முன்பு –57

Xxxxx

मौनान्मूकः प्रवचनपटुर्वातुलो जल्पको वा

        धृष्टः पार्श्वे वसति च सदा दूरतश्चाप्रगल्भः ।

क्षान्त्या भीरुर्यदि न सहते प्रायशो नाभिजातः

        सेवाधर्मः परमगहनो योगिनामप्यगम्यः ॥ 58॥

Xxxx

The norms of serving are complex, incomprehensible even to sages. If silent the servant is labelled dumb, if quick to reply, flippant and loquacious. If he stays close he is called audacious, and if not, diffident. If patient (with rebukes etc.) then he is timid, if not tolerating them, he is discourteous.

Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?–58

வேலையாளின் நிலைமை கஷ்டம்தான்.முனிவர்களுக்கும் புரியாது. வேலைக்காரன் பேசாதிருந்தால் ஊமை என்று இகழ்வார்கள் உடனே பேசினால் வாயாடி பட்டம் சூட்டுவார்கள் ; பக்கத்தில் நின்றால் மரியாதை தெரியாதவன்;  தள்ளி நின்றால் தன்னம்பிக்கை இல்லாதவன்; பொறுமையாக இருந்தால் பயந்தவன்; பொறுமை இல்லாவிட்டால் அவமதிப்பவன்  என்பார்கள்- 58

மௌனோன் மூகஹ  ப்ரவசனபடுர்வாதுலோ ஜல்பகோ வா

த்ரு ஷ்ஹ  பார்ஶ்வே வஸதி ச ஸதா தூரதஶ்சாப்ரகல்ஹ  |

க்ஷான்த்யா பீருர்யதி ந  ஸஹதே ப்ராயஶோ நாபிஜாத ஹ

ஸேவாதர்மஹ  பரமகஹனோ யோகினாம் அப்யகம்யஹ  || 1.58 ||

பேசாதிருந்தால் பெருமூமையென்று நன்றாய்ப்

பேசினால்  வாயாடிப்  பேதை  என்றும் — ஆசையுடன்

ஒட்டியிருந்தாலச்சம் உட்பயமில்லானென்றும்

எட்டியிருந்தால் எதற்கும் இல்லாத – மட்டியென்றும்

நெஞ்சம் பொறுத்தால் நிலைத்த முரடனென்றும்

கொஞ்சம் பொறானேல்  — குலவீனன் வஞ்சநென்றும்

பேரார் துறைகளென்றும் பேசுவர் தஞ்ச சேவகனை

ஆராயுங்காலவர்பால் யாராலும் –சீராகச்

சேவித்தலாகா  சிறந்ததவ மாதவ ர்க்கும்

பாவிக்கலாகாதாம் பண்பு     –58

—subham—

Tags- Nitisataka part 17, Bhartruhari 17, Slokas 56,57,58

கோவிலில் மீண்டும் முதலை அதிசயம்! (Post No.12,707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,707

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

கேரளத்தில் காசர்கோடு அருகிலுள்ள அனந்த பத்மநாப சுவா மி  கோவில் குளத்தில் மீண்டும் ஒரு முதலை தோன்றி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது  அங்கு வசித்த வெஜிட்டேரியன் முதலை , சரியாக ஓராண்டுக்கு முன் இறந்த செய்தி உலகம் முழுதும் பத்திரிகைகளில் வெளியானது. பபியா என்னும் அந்த முதலை  கோவில்  பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு 70 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சென்ற ஆண்டு அக் டோ பர் 9-ம் தேதி இறந்தது.

இந்தக்கோவில் குளத்தில் ஒரு முதலை இறந்தவுடன் அடுத்த முதலை  வருவது அதிசயமாக இருக்கிறது. இப்படி வரும் நாலாவது முதலை இது; இவ்வளவுக்கும் பக்கத்தில் முதலை வசிக்கும் ஆறோ , குளமோ இல்லை. இப்பொழுது  கோவில் அர்ச்சகர்கள் இந்த முதலை பற்றி ஒரு முடிவு எடுப்பார்கள்.

The Mahavishnu temple is located at Ananthapura near Kumbla in the northern Kerala district of Kasaragod. The temple is known as the ‘moolasthanam’, the original source, of the Sri Ananthapadmanabha Swamy temple of Thiruvananthapuram, according to its website.

MY OLD ARTICLE

கேரள வெஜிட்டேரியன் முதலையும் மஹாபாரத முதலையும் (Post No.11,348)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,348

Date uploaded in London – 12 OCTOBER 2022           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

கேரளத்திலுள்ள  ஒரு கோவில்குளத்தில் வசித்த சைவ (வெஜிட்டேரியன்) முதலை பபியா (Babia) இறந்த செய்தி நாட்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த இந்த முதலை  பற்றிய செய்தி எல்லா முக்கிய பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

தவறு செய்யும் மனிதர்கள் மிருகங்களாகப் பிறப்பார்கள் என்று மநு நீதி நூல் (Manu Smrti)  கூறுகிறது. என்ன என்ன தவறுக்கு என்ன என்ன பிறப்பு என்ற ஒரு பெரிய பட்டியலையும் (Manu 12-54 to 12-70) தருகிறது. மஹாபாரத முதலைக் கதைகளும் இது உண்மைதான் என்று விளம்புகிறது. முதலில் மஹாபாரத முதலைக் கதையைப் பார்ப்போம்.பின்னர் மனு ஸ்மிருதி ஸ்லோகங்களைக் காண்போம் .

மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. பிராமணர்களுக்கு யாரும் தீங்கு செய்யக்கூடாது என்று  புறநானுற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரும் (பாடல் 34- பார்ப்பார் தப்பிய கொடுமையோர் )எச்சரிக்கிறார். இது தெரியாமல் ஐந்து தேவ லோக அழகிகள்,  ஒரு பார்ப்பனனைக் கிண்டல் செய்து முதலைகள் ஆன கதை மிகவும் சுவையானது.

அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா  ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்  என்பது தமிழ்ப் பழமொழி. ஆகையால்  சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; குப், குப் என்று அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார். குணம் என்னும் குன்றேறி நினறவர்க்கு வெகுளி கணமேயும் காத்தல் அறிதன்றோ ?( வள்ளுவன் குறள் ) ஆகையால் பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.

இந்துமதத்தில் ஒரு பிரம்மாண்டமான உண்மை உள்ளது; அதாவது சத்தியம்தான் கடவுள் (God is Truth; Truth is God) ; அதை கடவுள்களாலும் மீற முடியாது. இதை எல்லாக்  கதைகளிலும் காணலாம். சொன்னது சொன்னதுதான். அதை வாபஸ் பெற முடியாது; ‘ஜகா’ வாங்க முடியாது. ஆனால் கொஞ்சம் தளர்த்தாலாம் .

சரி போ; ஒரு பெரிய  வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.

பெண்கள் அழுதுகொண்டே நின்றபோது நாரதர் அந்தப் பக்கம் வந்தார். அவர்தான் திரிகால ஞானி ஆயிற்றே ; அவர் சொன்னார்; அஞ்ச வேண்டாம் அழகிகளே ; அர்ஜுனன் என்னும் மாவீரன் 13 ஆண்டுக் கால வனவாசம் அனுபவிக்கின்றான். அவன் இந்தக் குளத்திற்கு வந்து உங்களை விடுவிப்பான் என்று ஆறுதல் பகன்றார்.

அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அவர்கள் வசித்த குளத்திற்கு அருகில் வந்தான்.; யாரையும் காணவில்லை ; அற்புதமான அழகுமிக்க இந்தக் குளத்திற்கு யாரும் குளிக்க வரவில்லையே; நான் மட்டும் போகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த காலையில் ஒருவர் வந்து சொன்னார். இந்தக் குளத்தில் மனிதர்களைத் தின்னும் அதிபயங்கர முதலைகள் (Man eating Crocodiles)  வசிக்கின்றன. ஆகையால் பிராமணர்கள் அனைவரும் ஓடிப் போய்விட்டார்கள் என்று. அதைக் கேட்டவுடன் அர்ஜுனன் குளத்தில் பாய்ந்தான்; பிராமணர்களை விரட்டிய முதலைகளை நான்  ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்லி குளத்தில் இறங்கினான்.

உடனே ஐந்து முதலைகளும் அவன் மீது பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான். அபோது வர்கா என்னும் பேரழகி,  முதலை உருவத்தைவிட்டு,  மீண்டும் அழகியாக அர்ஜுனன் முன்னிலையில் நின்றாள்; வியப்புடன் வினவினான் அர்ஜுனன் : ‘மடக்கொடியே, யார் நீ’  ? உடனே அவள் பிராமண சாபம், பார்ப்பார் தப்பிய கொடுமை எல்லாவற்றையும்  விரித்துரைத்தாள் . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .

பின்னொரு காலத்தில் அர்ஜுனன், மாதலி என்பவன் ஒட்டிய ஸ்பேஸ் ஷட்டிலில் Space Shuttle – (விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ராக்கெட்) — இந்திர லோகம் சென்றான். அவன் செய்த விண்வெளி பயணம் பற்றிய கதை மகா பாரத வன பர்வத்தில் உள்ளது . அப்படிச் சென்ற போது ஐந்து தேவ லோக அழகிகளும் அர்ஜுனனை அடையாளம்   கண்டு கொண்டனர் ; உடனே செய் நன்றி மறவாமல் அர்ஜுனனுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஷோ Special Dance showஏற்பாடு செய்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர்.

–subham—

tags–முதலை, கோவில் குளத்தில், மீண்டும், காசர்கோடு 

Temple Crocodile Wonder Again ! (Post No.12,706)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,706

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Kasargod, Nov 11, 2023: Thirteen months after the death of crocodile Babiya, another crocodile has been spotted at at Ananthapura Lake Temple here. This is a cause of surprise among the devotees.

Babiya had a history in the temple and worshiped for 75 years. However, it died on October 9, 2022.

Devotees believed that Babiya used to guard Lord Anantapadmanabha. It used to live in the pond throughout the year. The food that is offered to the Lord is its daily meal. It used to crawl on the same path on which the devotees used to walk from one pond to another pond.

The temple got international popularity because of Babiya, which never harmed anyone. A crocodile was there in the temple pond even before India got independence. However, the British, who set up their military camp in the area shot and killed it. Later, a baby crocodile appeared in the pond and the temple priests named it Babiya.

The development assumes significance, as according to a temple official, there was always a lone crocodile in the lake and the latest one would be the fourth.

“When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the temple has said on its website.

Year After ‘Vegetarian’ Crocodile’s Death, Another One Appears At Kerala Temple

According to temple officials, Babia was a vegetarian and subsisted on the ‘prasadam’ made there.

The Mahavishnu temple is located at Ananthapura near Kumbla in the northern Kerala district of Kasaragod. The temple is known as the ‘moolasthanam’, the original source, of the Sri Ananthapadmanabha Swamy temple of Thiruvananthapuram, according to its website.

“By tradition, the lake is inhabited by a single crocodile and in the memory of the very aged men the present crocodile happens to be the third one they have seen. When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the website stated.

“There is no river or pond nearby where crocodiles exist. The crocodile is friendly and harmless to human beings. Its presence in the lake around the Mahavishnu temple reminds one of the well-known Gajendra Moksha stories in the Bhagavatha Puranam,” according to the temple’s website.

“When one crocodile dies another one inevitably appears in the lake and this continues to be an unexplained phenomenon,” the temple has said on its website.

The new crocodile was spotted in a cave along the lake on November 8 by some devotees, the temple official said.

After the devotees informed the temple about the presence of the crocodile, the temple officials on Saturday verified its presence.

“It is a young crocodile. We have informed the tantri (head priest) of the temple and he will decide what needs to be done next,” the temple official said.

The earlier crocodile, fondly called Babia, was found dead on October 9, 2022.She was the third crocodile in the lake and was believed to be over 70 years old.

—-subham—-

Tags- crocodile, babia, temple, Kasargod

QUIZ  தீபாவளி பத்து  QUIZ (Post No.12,705)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,705

Date uploaded in London – –  –  12 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Quiz Serial No.80

1.தீபாவளிக்கும் எந்த அசுரனுக்கும் தொடர்பு படுத்தும் கதை உள்ளதுஅவன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்  அவனைக் கொன்றது யார்?

XXX

2.தீபாவளியை சமண மதத் த்தினர்  ஏன் கொண்டாடுகிறார்கள்?

XXX

3.தீபாவளி அன்று கங்கா ஸ்னானம் ஆச்சா என்று கேட்பது ஏன் ?

XXX

4. தீபாவளியை சீக்கியர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் ?

xxxx

5.தீபாவளி என்பதைப் பேச்சு வழக்கில் DIWALI திவாளி என்பர். இந்தச் சொல்லின் பொருள் என்ன ?

xxx

6.தீபாவளி அன்று காசியில் என்ன விசேஷம்?

xxx

7.தீபாவளி மருந்து என்றால் என்ன ?

xxxx

8.அன்ன கூட விழா என்றால் என்ன ?

XXX

9.அயோத்திக்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?

XXXX

10.குஜராத்தில் எத்தனை நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது?

XXX

ANSWERS

1.தீபாவளிக்கும் நரகாசுரன் என்ற அசுரனுக்கும் தொடர்புள்ள கதை தென்னாட்டில் வழங்கி வருகிறது. அவனை ,கிருஷ்ண பரமாத்மா கொன்றார். காம ரூபத்திலுள்ள  ப்ரகஜோதிஷ நகரிலிருந்து அவன் ஆண்டான். இப்போது அதை அருணாசல பிரதேசம் அஸ்ஸாம் என்று பிரித்துள்ளோம்.

XXX

2.சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர்; அவர் முக்தி அடைந்தது தீபாவளி தினத்தில்தான். மேலும் சமணர்களின் ஆண்டு நிறைவடைவதும் அன்றுதான்.

xxxx

3.நரகாசுரனின் தாயின் வேண்டுகோளின்படி அன்று எந்த நீரில் குளித்தாலும் அதில் கங்கை பிரவேசிக்கிறாள்; ஆகையால் கங்கை யில்  குளித்து விட்டீ ர்களா என்று கேட்பது சம்பிரதாயம்

XXXX

4.சீக்கிய மதத்தின் ஆறாவது குரு ஹரி கோவிந்த சிங்; அவரை ஜஹாங்கீர் சிறை வைத்தியிருந்தான்.தீ பாவளி தினத்தன்று அவரையும் 52 சீக்கியர்களையும் அவன் விடுதலை செய்தான். அவர் திரும்பி வந்ததைக் கொண்டாட அன்றைய தினம் சீக்கியர்களும் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்தனர். இன்றும் அவ்வாறே கொண்டாடுகின்றனர்.

.xxx

5.தீப +ஆவலி / ஆவளி என்றால் விளக்கு வரிசை என்று பொருள்; அன்றைய தினம் வட இந்தியாவில் , கார்த்திகை அன்று தமிழர்கள் விளக்கு ஏற்றுவது போல விளக்கு ஏற்றுவார்கள் .

xxxx

6.அன்று அன்னபூரணியின் தங்க விக்ரகம் தரிசனத்துக்கு வைக்கப்படும். மற்ற நாட்களில் அது, ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. .xxx

7.தீபாவளி அன்று பலவகை பலகாரங்களையும் இனிப்புகளையும் சாப்பிடுவதால் வயிற்றுக்கு கோளாறு, அஜீரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஜீரண சக்தியை அதிகரிக்க, தீபாவளி மருந்து என்னும் ஸ்பெஷல் லேகியத்தை அன்று உண்ணுவது வழக்கம்; அது அரிசித் திப்பிலி, கண்ட ந் திப்பிலி , சுக்கு, ஜீரகம்,  வெல்லம், மிளகு, கிராம்பு, ஓமம், தேன் , வெண்ணெய்  ஆகியவற்றால் ஆகிய லேகியம் ஆகும்;. அதை ஒரு  நெல்லிக்காய் அளவு சாப்பிடுவார்கள் . அது சாப்பிட ருசியாக இருக்கும்.

XXXX

8.தீபாவளியின் நாலாவது நாளன்று கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க ஏராளமான இனிப்புகளையும் பல காரங்களையும் கோவிலில் வந்து மலைபோலக் குவிப்பார்கள்.அன்றுதான்  பெரிய மழையிலிருந்து இடைச் சிறுவர்களை கிருஷ்ணன்,காப்பாற்றினான். கோவர்த்தன மலையைக் குட்டையாகப் பிடித்து தோழர்களைக் காப்பாற்றியதால் அந்த நாளுக்கு கோவர்த்தன பூஜை என்று பெயர்.

XXXX

9.ராம பிரான், இலங்கையில் ராவணனனைக் கொன்றுவிட்டு அன்று அயோத்திக்குத் திரும்பியதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆகையால் அன்று அயோத்தியில் உலகம் வியக்கும் எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழி படுவர்.

XXXX

10. குஜராத்தில் ஐந்து நாட்களுக்குத்  தீபாவளியைக்  கொண்டாடுகிறார்கள் .தீபாவளிக்கு முன்னரே இந்தப் பண்டிகை  துவங்கிவிடுகிறது.  உணவு வகைக்களை தயாரிப்பார்கள்.  பசுக்களை வழிபடுவார்கள்;பழைய கணக்குகளை முடித்து புதுக்கணக்கு துவங்குவர். லெட்சுமி பூஜை செய்வார்கள் . காளி பூஜை, அனுமான் வழிபாடு நடக்கும் ; அன்ன  கூட விழா ஆகியனவும் நடைபெறும். கேரளத்தில் ஓணம்  பண்டிகையின்போது மகாபலியை வரவேற்பது போல வரவேற்பார்கள் ; மலையாளிகள் போலவே கிராமப்புறங்களில் புலி வேஷம் போட்டு ஆடுவார்கள் பட்டாசு வெடித்தல், விளக்கு ஏற்றுதல், அந்தக் கரியில் கண்ணுக்கு மை தயாரித்தல், இனிப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் , புத்தாடை அணிதல் எல்லாம் நடக்கும்; புத்தாண்டு வாழ்த்தும் தெரிவிப்பார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஓணம் , பொங்கல், புத்தாண்டு தினம், அன்னாபிஷேகம், தீபாவளி ஆகிய அனைத்தையும்  5 அல்லது 6 நாட்களில் கொண்டாடிவிடுவார்கள்.

—SUBHAM—-

TAGS-  தீபாவளி, QUIZ,  கேள்வி பதில், பத்து