Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 12 (Post No.12,684)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,684

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 12

பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 34, 35, 36

Sloka 34

सिंहः शिशुरपि निपतति

मदमलिनकपोलभित्तिषु गजेषु ।

प्रकृतिरियं सत्त्ववतां

न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥

ஸ்லோகம் 34

சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.-34

ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு

ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு-34

34. A lion, though young, attacks elephants whose wall-like cheeks are stained with rut. This is the nature of the brave. Age, indeed, is not the cause of valour.

சிங்கஞ் சிறிதேனும் சிந்தூரம் மேற் பாய்வதற்கு

பங்கமுறா தோ டுகின்ற பான்மை போல் —  இங்குப்

பலமுளார் அஞ்சார் பராக்கிரமத்திற்குக்

குலவு வயதில்லையென்று கூறு–34

“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?”

என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை

xxxxx

Sloka 35

जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां

शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।

शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थो‌உस्तु नः केवलं

येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥

நம்முடைய பரம்பரை எக்கேடு கெட்டுப் போகட்டும்; நம்முடைய குணங்கள் அதல, பாதாளத்துக்குப் போகட்டும்; நம்முடைய அடக்கம் மலை உச்சியிலிருந்து விழட்டும்; நம்முடைய பெருந்தனமை தீயில் கருகட்டும்; நம்முடைய துணிவை வஜ்ராயுதம் துண்டிக்கட்டும்; இப்படியெல்லாம் நடந்தாலும் பணமும் வசதியும் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்;  பணமும் வசதியும் இல்லாவிடில் மற்ற குணங்கள் அனைத்தும் புல்லுக்குச் சமானம்!–35

ஜாதிர்யாது ரஸாதலம் குணகணஸ்தத்ராப்யதோ கச்சதாம்

சீலம் சைலதடாப்தத்வபிஜனஹ ஸந்தஹ்யதாம் வஹ்னினா

சௌர்யம் வைரிணி வஜ்ரமாசு நிபதத்வர்த்தோ அஸ்து நஹ கேவலம்

யேனைகேன வினா குணாஸ்த்ருண லவப்ராயாஹா ஸமஸ்தா இமே – 35

35. Let caste go underground, and all good qualities go further down. Let conduct tumble down a mountain, and noble birth be consumed by fire. May thunder strike instantly at bravery towards foes. Let wealth alone be ours, without with, all these virtues are but like blades of grass.

சாதியிழி ந்தென்ன சற்குணம் தாழ்ந்தென்ன

ஓதுமொ ழுக்கம்  ஒழிந்தென்ன — தீதில்

குடி மடிந்தாலென்ன கொண்ட தொரு வீரம்

முடிந்தழி ந்தாலென்ன மூவா-  நெடுஞ் செல்வம்

பெற்றிருந்தாற் போதும் – பெறாவிட்டால்  மேற்சொன்ன

சற்குணமெலாமி ருந்தும் தாழ்வுண்டாம் –புற்குமவை

ஒவ்வாப் புகழான் உலக வழக்கென்றென்றும்

இவ்வாறு இருக்கும் இயல்பு –35

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள் 

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

 மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர்  தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது

பர்த்ருஹரி சொல்கிறார்,

பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.

பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-

xxxxx

Sloka 36

यस्यास्ति वित्तं स नरः कुलीनः

स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।

स एव वक्ता स च दर्शनीयः

सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥

யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ

ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ

ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ

ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36

பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.

36. A man who has wealth is high-born and a scholar. He is learned and discerning. He alone is eloquent and handsome. All virtues depend on gold (wealth).

உலகிற் பணமுள்ளான் ஓங்கு குலமுள்ளான்

அலகில் புலமையுள்ளான்  ஆன கலை ஞான

நிலவியுள் ளான்  நீத்தி நெறியுள்ளான் சங்கப்

புலமையுள்ளான் பேரழகு பூண்டுள்ளான் என்று

பலரால் புகழப்படுவான் பணத்தான்

 பல கு ணத்தான் என்பதனைப் பார்–36

இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.

சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120

பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்

பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்:

ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்

செத்த பிணத்திற் கடை- பாடல் 281

திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)

பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே

இசை: கே.வி .மஹாதேவன்

பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்

பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

*******

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே

இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே (பணம்)

ஒன்றும் தெரியாத  ஆளானாலும் பணமிருந்தாலே

அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)

உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்

பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)

இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு

அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள்  கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)

நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)

Xxxx  subham  xxxxxx

Tags– பர்த்ருஹரி நீதி சதகம், Slokas 34,35, 36

Bhartruhari,  Nitisatakafour languages , Part 12

Nagarathar /Chettiyar Community’s  Contribution to Hindu Culture in Sri Lanka – Part 2 (Post No.12,683)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,683

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part two of my speech:

Pasupathy Chettiyar in Tirukketiswaram

C S Navaratnam in his book A short history of Hinduism in Ceylon (1964) writes,

December 13, 1893 is a Red Letter Day in the history of the Ceylon Hindus for on that day the jungle land to the extent of 40 acres, the old site of the temple of Tirukketiswaram ,was bought in public auction by the Nagarathar of Jaffna in spite of the opposition of Catholics. The Saiva Paripalana Sabhai through their treasurer S M Pasupathy Chettiyar spent large sums of money in 1894 to trace the old site of the temple and its premises. In 1903 a temple was built and the images were installed. From thence the temple was managed by the Nagarathar of Matota and from 1919 by the Nagarathar of Jaffna. Subsequently the temple came under the management of old and new Kathiresan temples of Colombo. Thus, the Chettiyars saved the most important Siva shrine of Hindus. (Tiukketheeswaram Shiva Temple was praised in Thevaram by Tiru Jnana Sambandar 1400 years ago. Later the Portuguese invaders destroyed over 1000 Hindu temples in Sri Lanka)

xxx

Nallainatha Chettiyar

Nallainatha Chettiyar’s name is associated with Chitra Velayutha Swami Kovil at Verugal near Trincomalee.

The story of how Nallainatha Chettiyar came to build this temple later is faithfully recorded in local tradition. The Chettiar , a merchant  from Tirunelveli in Tamil Nadu, was making his pilgrimage to Kadirgamam, through Trincomalee, when he stopped for a night at Verugal, as all pilgrims do, even now.

During the night Murugan appeared before him and told  Chettiyar to build him a proper temple. The Chettiyar was overjoyed at this divine manifestation; he soon became aware, where a hidden treasure could be discovered by him, with the proceeds of which a temple of Muruga Vel was erected in Verugal. On hearing about this through the Chettiar, the King of Kandy made endowments to the temple. And enriched Chettiyar also. Then the temple grew very fast.

xxxx

Tirunelveli Chettiyars & Colombo Muthumari Amman Temple

The origin of Colombo Muthumari Amman Shrine commences in the year 1856, when some members of the Thiruvilanga Nagarathar Chetty community brought some token soil from their village at Irukkankudi in Kovilpatti area in Tamil Nadu, India and commenced the  temple work. After vast improvements Kumbabishekam ceremony was done in 1954.

xxxx

A priest from the temple shooting arrows at the tree

Request to Chettiyars

London Swaminathan, before concluding his speech requested the chettiyar community to record their forefathers’ achievements abroad. A Facebook page lists over 50 towns in Burma and said that Hindu temples were built by Nagarathars in those towns. Except Yangoon (Rangoon) neither the town nor any Hindu temple is traceable oday. So it is very important that  everything must be documented. If the elderly in a family can’t write anything,  at least oral history must be recorded and posted in Nagarathar website or You Tube. This will perpetuate their memories and would help future researchers. Now there is more negative propaganda about chettiars and the interest rate they charged 100 or 200 years ago. At least the Brahmins repeat names of the family’s three generations  in wedding ceremony and monthly ancestor ceremony. Tracing Family History is a big business in Western countries. I see lot of people coming to British library to trace their English parents. So, every family must draw a family tree, write down their community service or at least record Oral History by video or audio devices.

Earlier Mr Manikandan of London Nagarathar Sangam (L N S) introduced London swaminathan and welcomed him. At the end Mr Nachiappan thanked him. And swaminathan was adorned with a shawl.

The event was attended by about 150 people including children and women. Makara Nonbu was celebrated in the temple on behalf of L N S. Chief Priest Sri Naganatha Sivam performed Puja and began shooting the first arrow at the Banana tree in the hall. The tree was used instead of the traditional Vanni Tree. All the children and elders tried their hands with the arrows. The  event began with a sumptuous lunch and Puja to goddess.

–subham—

Tags- Nagarathar, contribution, Hindu religion, in Sri Lanka, swaminathan talk

லட்சுமணன் கோவில்:இலங்கைத் தீவின்108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- 51 (Final Part)Post.12,682

RAVANA PRAYING TO SHIVA IN TRINCOMALEE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,682

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- 51(Final Part)

126. யுத்த கணவ ராம – ராவண போர்க்களம்

ராமனும் ராவவணனும் சண்டையிட்ட இடத்தை யுத்த கணவ Yudhaganawa என்று சிங்களத்தில் சொல்கிறார்கள் . இது வஸ்கமுவ , Wasgamuwa என்னும் ஊரில் இருக்கிறது . இங்குதான் ராவணன் மகன் மேகநாதன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்ததால் லெட்சுமணன் நினைவிழந்து கீழே விழுந்தான்; உடனே ஜாம்பவானின்  ஆலோசனையின் பேரில் அனுமன் இமய மலைக்குச் சென்று ஸஞ்சீவினி பர்வதத்தைக் கொண்டுவந்தான். இதை மெய்ப்பிக்கும் வகையில் இமயமலை ஆல்பைன் வகைத் Alpine flowers தாவரங்கள் இங்கு வளர்கின்றன. இவை ஐஸ்கட்டி snowy regions உண்டாகும் மலை உயரத்தில் மட்டும் வளரக்கூடியவை 

தமிழர்களின் மிகப்பெரிய முருகன் தலமான கதிர்காமத்தையும் கூட ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவர். ராமனின் படைகளுக்கு உதவுமாறு கதிர்காம முருகனை இறைவன் பணித்தாராம்.

127.ராமன் போட்ட அணுகுண்டு Dunuvila lake தனு விலா ஏரி

மஹாபாரதத்தில் கர்ணன், ராமாயணத்தில் மேக நாதன், இறுதியில் ராமபிரான் போட்ட பிரம்மாஸ்திரங்கள், அணு ஆயத்தங்கள் NUCLEAR WEAPONS என்று 15 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதினேன்.  இவை வெவ்வேறு சக்தி உடைய அணுகுண்டுகள். ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா 2 அணுகுண்டுகளை வீசி பல லட்சம் அப்பாவி  மக்களை  படுகொலை செய்ததை உலகம் அறியும். அந்த குண்டுகள் கொசுவுக்கு சமானம். இப்போது அமெரிக்கா , ரஷ்யாவிடமுள்ள அணு குண்டுகள் இமய மலைக்குச் சமம். இது போல எதிரிக்குத் தக்க அணு ஆயுதங்களையே ராமன், கர்ணன், மேகநாதன் முதலியோர் பிரயோகித்தனர் . ராமபிரான் போட்ட அணுகுண்டு தனுவிலா ஏரி  பகுதியிலிருந்து போடப்பட்டது  “Dhunu” means “arrow” and “Vila” means “Lake,”. தனு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் வில்லினைக் குறிக்கும். எல்லா என்பது நீர்நிலை/ ஏரி ; அப்போது ராவணன் போரினை லக்கலா ( Laggala is derived from the Sinhala term “Elakke Gala“, which means Target Rock) என்ற இடத்திலிருந்து வழி நட த்தினான் . சிங்களம் என்பதில் பாதி சம்ஸ்க்ருதம் பாதி தமிழ் இருப்பதை மொழி அறிந்தோர் அறிவர். இங்கு இலக்கு என்பதே லக்கல. உண்மையில் அதுவும் லட்சியம் என்ற ஸம்ஸ்க்ருதச்  சொல்லில் இருந்து பிறந்ததே. ராவணன் அங்கிருந்தே ராமன் படைகளைக் குறிவைத்தானாம்.

பிரம்மாஸ்திரத்தினால் இறந்த ராவணனின்  சடலம் யஹங்கல (Yahangala) என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. (meaning “Bed Rock” in Sinhala. This is situated along the Mahiyanganaya – Wasgamuwa road. King Ravana’s body was kept upon this rock so his countrymen could pay their last respects to their dear departed king). இந்தப் பாறையை தொலை தூரத்திலிருந்தும் காண முடியும் .

128.ராமன் பூஜித்த லிங்கங்கள்

ராவணன் 50% பிராமணன்; ஆகையால் அவனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி பாவம் ராமனைப் பற்றிக்கொண்டது அதைப் போக்குவதற்கு அவன் 4 இடங்களில் சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூஜித்தான். அவைகளில் ஒன்று உலகப் பிரசித்திபெற்ற ராமேஸ்வரம்  . ஏனைய மூன்றும் இலங்கையில் உள்ளன. அவை சிலாவம் அருகிலுள்ள மானா வாரிதிருக்கே தீஸ்வரம், திருகோணமலை . இவைகளை முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்துவிட்டோம். மானாவாரி ராமலிங்கம் கோவில் முன்னேஸ்வரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.. அத்தோடு ராமபிரான், முன்னேஸ்வரம் கோவிலிலும் வழிபட்டதாக ஐதீகம். .Chilaw, Manavari Temple is the first place where Lord Rama installed and prayed the Shivalinga. It is called as Ramalingam .

129.ராவணன் சிலை, திருகோணமலை

ராவணன் வெட்டு

திருகோணமலை கோவிலுக்கு வலது புறத்தில் ஒரு பெரிய பாறை வெட்டப்பட்டது போல, இரண்டு பகுதிகளாக நிற்கின்றன. இதை ராவணன் வெட்டு என்று அழைக்கிறார்கள் ; ராவணன் தன் வாளால் வெட்டியதால் பாறை பிளந்ததாக கதை. அருகில்  ராவணன் சிலையும் உள்ளது ; இந்தப் பகுதி சுமார் 300 அடி ஆழம்  உடையது; கடல் நீர் சுழற்சி காரணமாக அருகில் சென்றால் படகுகளையும் இழுப்பதாக  மீனவர் கூறுவர்  .

XXXXXX

அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலை 5 இடங்களில் விழுந்ததைக் கண்டோம். இதில் ஒரு இடத்தின் பெயர் தள்ளாடி. மலை யின் பாரம் தாங்காமல் அங்கு அனுமன் தள்ளாடியதால் இந்தப் பெயர் என்று சி.எஸ். நவரட்னம் 1964-ம் ஆண்டில் எழுதிய  புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON கூறுகிறார். அந்த இடம் மன்னார் அருகில் உள்ளது.

HANUMAN- NIKUMBHA FIGHT FROM WIKIPEDIA

130.லெட்சுமணன் கோவில்

சபரகமுவவில்  லட்சுமணன் வழிபாடு  நடப்பதாக சி.எஸ் நவரட்னம் தன்னுடைய ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இது பற்றிய விவரங்கள் இல்லை ஆனால் சிங்கள பெளத்தர்களும் லட்சுமணன் பெயரை வைத்துக் கொள்கின்றனர். மேலும் பல கோவில்கள் புத்தமதமாக்கப்பட்டுவிட்டன. இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை மன்னர்கள் கட்டியதை மஹாவம்சம் என்ற நூலே பெருமையாக எழுதியுள்ளது.

ராவணனின் சகோதரன் கும்பகர்ணன். அவனுடைய மகன் நிகும்பன். கொழும்பு அருகிலுள்ள ஊரின் இன்றைய பெயர் நீர்க்கொழும்பு. இதுவே நிகும்பன் என்ற பெயரின் மரூஉ என்று CONVERTED CHRISTIAN சைமன் காசி செட்டி SIMON CASIE CHETTY (1807-1860) எழுதியுள்ளார் .

COBRA HOODED CAVE

131. பாம்பின் படத்துடன் உள்ள குகை Cobra Hooded Cave

சிகிரியா என்னும் மலை, குகை ஓவியங்கள் முதலியன இந்தியாவின் அஜந்தா குகை ஓவியம் போல பிரசித்தமானவை . அங்கு பாம்பு படம்  விரித்தாடுவது போலத் தோன்றும் மலை முகடு Cobra Hooded Cave

இருக்கிறது . அங்குள்ள குகையிலும்  சீதாதேவி சிறை வைக்கப்பட்டதாக கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன. Parumaka naguliya lene’.  பருமக நகுலீய லேனே என்று எழுதி வைத்துள்ளனர். இதில் நகுலிய the word ‘naguliya’ refers to Sita என்பது சீதா தேவியைக் குறிக்கும் சொல் ஆகும்.

இவை தவிர மேலும் பல மலைக்  குகைகளையும் ராமபிரான், ராவணன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். இவைகளை ஆராய்வதைவிட இவை பற்றி பாமர மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை  நாம் போற்ற வேண்டும்; அது பக்தியையும் சுற்றுலாவையும் வளர்ப்பதோடு ராமாயணம் போதிக்கும் நற்குணங்களையும் தக்க வைக்கிறது . சொல்லாலும்  கல்லாலும்  வில்லாலும் புகழ் பெற்ற ராமாயணத்தை எல்லாரும் போற்றுவதில் வியப்பும் உண்டோ !!

இலங்கையில் புகழ்பெற்ற 108 இந்து ஆலயங்கள் கட்டுரைத் தொடர் இத்தோடு முடிவடைகிறது 4000 கோவில்களில்  ஒரு சிறு பகுதியையே கண்டோம். இதை எழுதி முடிக்கும் தருவாயிலே மேலும் பல கோவில்கள் உருவாகாகக்கூடும் .

பக்தி பெருகட்டும்; முக்தி கிடைக்கட்டும்

–சுபம்—

Tags- லட்சுமணன் கோவில், ராவணன் சிலை, ராவண போர்க்களம் , 108 Sri Lankan Temples, Final part, கட்டுரைத் தொகுப்பு நிறைவு, இலங்கைத் தீவின், 108 புகழ்பெற்ற, இந்து ஆலயங்கள்- 51,

மாற்றப்பட்ட 4 வார்த்தைகள்! நடந்தவைதான் நம்புங்கள் (Post No.12,681)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,681

Date uploaded in London –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 9 

ச.நாகராஜன்

மாற்றப்பட்ட நான்கு வார்த்தைகள்! 

ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர்.

அவர் தனது கீதாஞ்சலி மூலம் உலகப் புகழ் பெற்றார்.

வங்க மொழியில் இருந்த கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய விரும்பினார். அப்படிச் செய்தால் அது உலக மக்களை அடையும் என்பது அவரது எண்ணம்.

இந்த மொழியாக்கத்தை வேறு யாரிடமும் செய்யச் சொல்லாமல் தானே அவர் செய்தார்.

தனது மொழியாக்கம் சரியானது தானா என்ற சின்னச் சந்தேகம் அவர் உள்ளத்தில் எழுந்தது.

ஆகவே அவர் தனது நண்பரான சி.எப். ஆண்ட்ரூஸை (C.F.Andrews) அணுகி தான் செய்த மொழியாக்கம் சரிதானா என்று சரபார்க்கச் சொன்னார்.

சி.எப். ஆண்ட்ரூஸை சிறந்த கல்வியாளர். ஆங்கில மொழி இலக்கணத்தை நன்கு அறிந்தவர். அவர் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுவதுமாகப் படித்துப் பார்த்தார்.

பின்னர் தாகூரிடம், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது, நான்கு இடங்களில் மட்டும் மாற்ற வேண்டும்” என்று சொல்லி நான்கு இடங்களைச் சுட்டிக் காட்டினார்.

உடனே தாகூரும் அந்த நான்கு இடங்களில் உள்ள வார்த்தைகளை மாற்றினார்.

இப்போது கீதாஞ்சலியின் ஆங்கில வடிவம் தயார்!

பிறகு அவர் லண்டனுக்கு முதன்முறையாகச் சென்றார்.

அங்கு கூடியிருந்த கவிஞர்கள் சம்மேளனத்தில் தனது கீதாஞ்சலியை வாசித்தார்.

அந்தக் கவிஞர்கள் கூட்டத்தை பிரபல ஆங்கிலக் கவிஞரான ஈட்ஸ் (Yeats) தான் ஏற்பாடு செய்திருந்தார்.

அனைவரும் கீதாஞ்சலியைக் கேட்டனர்.

பின்னர் தாகூர், “ஏதாவது மாற்ற வேண்டுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா? ஆங்கிலம் எனது தாய்மொழி இல்லை” என்றார்.

உடனே ஈட்ஸ், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் நான்கு இடங்களில் மட்டும் வார்த்தைகளை மாற்ற வேண்டும்” என்றார்.

பின்னர் அந்த நான்கு இடங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

என்ன ஆச்சரியம்! எது தப்பு என்று  சி.எப். ஆண்ட்ரூஸ் மாற்றச் சொன்னாரோ அதே நான்கு மாற்றப்பட்ட வார்த்தைகளைத் தான் ஈட்ஸ் சுட்டிக் காட்டினார்.

தாகூர் உடனே தனது முந்தைய வார்த்தைகளை அங்கு போட, அதுவே சரி என்று அனைவரும் கூறினர்.

எப்படி இப்படி குறிப்பாக அந்த நான்கு வார்த்தைகளை மட்டும் ஈட்ஸ் கூறினார்?!

ஈட்ஸ் ஒரு கவிஞர். கவிஞர் உள்ளத்தை ஒரு கவிஞரே நன்கு அறிய முடியும். சி.எப். ஆண்ட்ரூஸ் கவிஞர் இல்லை. கல்வியாளர், இலக்கணவாதி. அவருக்குக் கவிதை ஓட்டம் புரியாது.

ஈட்ஸ் கூறினார் : ”அந்த நான்கு இடங்களில் மட்டும் கவிதை ஓட்டம் தடைப்படுகிறது. அங்கு ஃப்ளோ – FLOW – இல்லை என்றார்.

ஆக கவிஞன் ஒருவனே இன்னொரு கவிஞனின் உள்ளத்தை நன்கு அறிய முடியும் என்பது நிதர்சனமானது.

கீதாஞ்சலி தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega நூல்.

என்னை விடுவி! என்னை விடுவி!!

சூபி யோகியான ஷேக் ஃபரீதை (Sheikh Farid) ஒரு சூதாடி அணுகினான்.

அவன் அவரிடம்,“சூதாட்டத்தை என்னால் விட முடியவில்லை. எப்படி அதிலிருந்து விடுபடுவது. அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! ஒரு வழி சொல்லுங்களேன்” என்று வேண்டினான்.

உடனே ஷேக் ஃபரீத் அருகிலிருந்த ஒரு கம்பத்தைக் கெட்டியாக தன் கைகளினால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டார். பின்னர் கத்தினார் : “ஓ! என்னை விடுவி! என்னை விடுவி!” என்று அலறினார்.

இதைப் பார்த்த சூதாடி திடுக்கிட்டு ஆச்சரியப்பட்டான். அவன் அவரிடம், “ஐயா! கம்பம் உங்களைப் பிடிக்கவில்லை. நீங்கள் தான் சுற்றி வளைத்துக் கைகளினால் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் அரை நொடியில் கம்பத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்” என்றான்.

கம்பத்திலிருந்து தன் கைகளை எடுத்தவாறே ஷேக் ஃபரீது கூறினார் அவனை நோக்கி, “அப்பனே! இதே போலத் தான், சூதாட்டம் உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. நீதான் அதை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீ நினைத்தால் அரை நொடியில் அதை விட்டு விடலாம்” .

சூதாடி என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டான்.

**

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 11 (Post No.12,680)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,680

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 11

பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 31,32,33 ஆகியவற்றில் வரும் அறிவியல் செய்திகளை முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி விட்டேன்

SLOKA 31

வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்

கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே

தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்

தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31

वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां

कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।

तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्

अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥

பெருந்தன்மை கொண்டபெரியோர்கள்கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31


XXX

SLOKA 32

வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ

ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி

துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே

ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32

वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्

उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।

तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे

न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥

‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32

32. It would have been better for the son of Himavan (Mainaka) to have his wings cut by the terrible strokes of the Vajra thrown by the proud Indra, spitting rising thick flames. It was not appropriate to plunge into the waters of the ocean, when his father was powerless due to pain.

இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.

XXX

SLOKA 33

சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.

யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ

தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33

यदचेतनोऽपि पादैः स्पृष्टः प्रज्वलति सवितुरिनकान्तः ।

तत्तेजस्वी पुरुषः परकृतनिकृतिं कथं सहते ॥ 33

இதோ பாட்டின் பொருள்

சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33

33. When even the insentient sun-jewel blazes when touched by the feet (rays) of the sun, how can a powerful man tolerate an insult done by others?

—-subham—–

Tags- Bhartruhari part11, பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 31,32,33

Nagarathar Chettiyar Community’s  Contribution to Hindu Culture in Sri Lanka – Part 1 (Post.12,679)

London Swaminathan speaking

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,679

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I was invited by the London Nagarathar Sangham to give a talk on Nagarathar’s role in reviving Hinduism in Sri Lanka . Their contribution to Hindu culture is documented  already in South East Asian countries, but not in Sri Lanka. I wanted to document it in respect of Sri Lanka as well. Occasional references only are available here and there but not a full report is tried so far.

Here is what I told the meeting of over 100 people on 28th October, 2023 held at London Murugan Temple Hall in East London.

Several temples in Colombo and other towns are run by the Nagarathar community. They run Tamil schools and religious classes in temple premises ; this is a country where we see Chettikulam, Chettiar Street, Chettiar  temple etc.

Portuguese invaders and Dutch invaders destroyed hundreds of Hindu temples throughout the country and used the temple stones to build churches.  The government has listed nearly 4000 temples today. Four hundred years ago almost all the 500 temples in Jaffna area were completely demolished. Portuguese were the worst and Dutch allowed some Hindu activities after getting money. When British rule began Hindu revival also began. Saivite Scholar Arumuga Navalar inspired Hindus and made them rebuild the temples. But everything needs money, and this came from Nagarathar community

About 350 years ago, Chettiars (Nagarathar) came to Ceylon to do business. They have migrated to South East Asian countries earlier .

Vira Narayana Chettiyar

The manual of the Vanni, by J P Lewis (1895) has the following–  The  Division of  Cheddikulam is said to have been colonised in the  Kaliyuga 3348, about 247 CE ,by a chetti from Madurai, who with some Parava  pearl fishers had been ship wrecked on the coast of Ceylon (now called Sri Lanka). this is the account given of it:

“Vira Narayana Chetti came to Adankapattu , settled in   Cheddikulam, built or dug the keni called  Vavalai and erected a temple to Santhirasekaran. He buried a treasure in the well nearby and left a devil Chadamuni  to watch over it. Sixty elephants were used to carry the treasure. And local tradition has that this treasure will be revealed by the Muni to anyone who rebuilds the temple that was destroyed  by the Portuguese “.

xxxx

Thiruvilanga Nagarathar in Colombo

During the days of Dutch regime there was a little islet in this island and a man known as Captain received all the spices and loaded them on the outgoing vessels. He had quite a large gathering of an Indian Chetti community called Thiruvilanga Nagarathar, who were associated with him in this mercantile undertaking. When the Dutch rule finished, the business dwindled off.

However, during the heyday of the life of Nagarathars, they had established a Ganesh shrine. In 1817, Sivan Poothaparar, a devotee donated 5 and half acres of land for the Vinyakar/Ganesh Temple

During those years a Chettiyar couple had no issue. They made a vow to build a temple for Siva if they were blessed with a child. When they were blessed with a child , they built Kailasa Nathan Sivan Kovil. Thus, two temples came up in the Captain Gardens area of Colombo.  

Xxx

Chettiar Sivan Kovil in Jaffna

Vaitheeswara Sivan Kovil at Vannarpannai in Jaffna is also called Chettiar Sivan Kovil/temple.

Vaithilinga chettiar, son of Gopala chettiyar built this temple, obtaining special permission granted by the Dutch rulers of Ceylon in 1791. This is one of the few instances where Dutch Government eased their tolerance to other religions.

A .Mootootamby pillay, in his  Jaffna History,  had written that  Vaithilinga chettiyar, a leading merchant and one who enjoyed great influence with the government, obtained the release of  Nalla Mappana Vanniyan, Chief of Panakamam . Vannian was held by the government for treason. Chettiyar obtained his release and paid the necessary ransom money of 1200 rix dollars.

Later Vannian showed his gratitude by donating 20,000 palmyra trees to build the temple. He also donated a village with paddy fields and a tank to the temple. Following this. Chettiar built a proper temtemple. 

Mahara Nonbu Meeting beegan with Chief Priest Sri Naganatha Sivam shooting an arrow at the target

to be continued………………………..

Tags – chettiyar, nagarathar, in Sri Lanka, Vira Narayana, Vaithilinga,

ராவணன் விமான நிலையம்: இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- Part 50 (Post.12,678)

Ramayana Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,678

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 50

119.ராவணன் விமான நிலையம்

ராவணன் 6 விமான தளங்களை வைத்திருந்தான்.அவைகளில் ஒன்று வேரகந்தோட Weragantota ; சிங்கள மொழியில் விமானம் இறங்கும் இடம் என்று பொருள். ராவணனுடைய விமானம் மயில் உருவத்தில் இருந்ததாக வால்மீகி எழுதியுள்ளார். சிங்கள மொழியிலும் ராவணன் விமானத்தை பறக்கும் மயில் Dhandu Monara”  என்றுதான் அழைக்கிறார்கள்  5000  ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயணம் நடந்திருந்தாலும் இன்று கூடச் செவி வழிச் செய்திகளும் கதைகளும் மாறாமல் உள்ளன. சங்க இலக்கியத்தில் உள்ள 2 ராமாயாணச் செய்திகளும் வால்மீகியிலோ , கம்பனிலோ இல்லை என்பதைப் பார்க்கையில் இலங்கையில் நமக்குக் கிடைக்கும்  செய்திகளையும் சேர்த்து பெரிய ராமாயணம் இயற்றலாம்.

ராவணனின் விமான தளங்கள் / நிலையங்கள்

பெயர்களைப் பார்த்தாலே  அவைகள் விமானம் தொடர்புடையவை என்பது சொல்லாமலே விளங்கும்

Thotupolakanda (“Mountain Port” in Sinhala) at Horton plains மலை வழி / துறை

Weragantota (“Place of Aircraft” landing in Sinhala) in Mahiyangana விமான நிலையம்

Ussangoda (“Area of Lift” in Sinhala) in the Southern coast மேலே புறப்படும் இடம்

Wariapola (“Aircraft Port” in Sinhala) in Matale and Kurunagala. விமான இருப்பிடம்

Dolukanda, part of Sanjeevini hill fell here.

120.நாகத் தீவுக்கு பெயர் காரணம்

இலங்கையை நாகர் நாடு  Nagadipa என்று மணிமேகலை, மஹாவம்சம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன . அனுமான்  இலங்கைக்குப் பறந்து வருகையில் 3 தடைகளை சந்தித்தான். அவர்களில் ஒருவரான சுரஸா தேவி, நாகர் இன பெண் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். இதனால்தான் மணிமேகலை முதலிய தமிழ்க் காப்பியங்கள் இலங்கையை நாகர் தீவு என்று அழைத்தது. பிற்கால சீன யாத்ரீகன் கூட நாகர் இனப் பெண்களின் கொடூரச் செயல்களை குறிப்பிடுகிறான் .

121.கொண்ட கலை Kondagala, ; சீதையின் முடி

Ussangoda உசன கொட எனும் இடத்தில் கரிய மணல் காணப்படுவதற்கு அனுமன் இலங்கையை எரித்தபோது ஏற்பட்ட கரி என்றும் மக்கள் பகர்வர். 5000 ஆண்டுகள் கழிந்தாலும் சில இடங்களாவது ராமாயணத் தடயங்களைக் காப்பாற்றி வருகிறது. அதைவிட மக்களின் வாய்மொழி வரலாறு நமக்குச் சான்றாகத் திகழ்கிறது .

இதே வட்டாரத்தில்  Kondagala கொண்ட கல என்று ஒரு ஊர் இருக்கிறது. விமான வேகத்தில் சீதா தேவியின் தலைமுடி கலைந்து பறந்ததை  மக்கள் பார்த்துச் சொன்ன இடம் இது. கொண்டை கலைந்தது என்பதன் மரூஉ கொண்டகல ஆகும் .

122.சீதா கோலி – அரிசி உருண்டை

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கல்லையும் மண்ணையும் பெளத்த மதத்தைச் சேர்ந்த சிங்கள மக்களே ராமாயணத்துடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். காலத்தினால் அழியாத காவியம் அன்றோ ராமாயணம். இந்த வட்டாரத்தில் அரிசிச் சோறு சிதறினால் போல் காணப்படுகிறது. இதை சீதா கோலி என்று கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள். இராவணன் கொடுத்த  அரிசிச் சோற்றை சீதை தூக்கி எறிந்ததன் மிச்சம் மீதி என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்த அரிசி மணியை பெட்டிக்குள் வைத்திருந்தால் நல்ல அறுவடை கிடைக்கும்  என்று விவசாயிகளும், குழந்தைகளின் வயிற்று நோயைத் தீர்க்க இதைக் கொடுக்கவேண்டும் என்று தாய்மார்களும்  நம்புகின்றனர் .

123.சீதையின் அக்கினி பரீட்சை , ராவணன் கோட்டை

சீதையின் அக்கினி பரீட்சை  பற்றி முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். அந்த இடத்தின் பெயரே சீதை செய்த சத்தியப் பிரமாணதின் பேரில் உள்ளது திவு ரும்போல என்ற இடத்தின் பெயருக்கு

Divurumpola is the place where it happened and the name itself means “the Place of Oath”. சபதம்/ சத்தியம் செய்த இடம் என்று பொருள்.

அருகில் ராவண கொட Ravanagoda என்ற இடம் இருக்கிறது , இங்கு குகைகளும் சுரங்கங்களும்  அதிகம் அருகில் ஸ்த்ரீ புரம் Istripura இருக்கிறது Istripura means “Area of Women” in Sinhala. ராவணன் சீதையையும் மற்ற பெண்களையும் வைத்திருந்த இடம் இது. இவை அனைத்தும் காலகால மாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்கள். இன்று நேற்று இட்டுக்கட்டப்பட்ட கதைகள் அல்ல.

124.கொண்ட கட்டு கல Konda Kattu Gala

கொண்ட கட்டு கல என்பது பின்னல் போல பல குகைகள் இருக்கும் இடம் ராவணனின்  ஆட்சிக்குட்பட்ட அத்தனை இடங்களையும் இணைக்கும்

வழித் தடங்கள் இவை. ஏனெனில் இவை யற்கையாக அமைந்த குகைகள் அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள எல்லோரா, அஜந்தா, எலிபெண்டா குகைகளைப் பார்க்கையில் இதில் வியப்பு ஒன்றும் இல்லை. கலுதர  Kalutara was once where King Ravana’s palace and a tunnel existed என்னும் இடத்தில் இப்போது புத்தர் கோவில் இருக்கிறது அங்குதான் குகை வாயில், ராவணன் கோட்டை/ அரண்மனை இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சி யாளரின் முடிவு.

125.பாதாள லோகம் வரை ராவணன் சுரங்கம்

மனிதர்களால் உண்டாக்கப்பட்ட குகை வாசல்கள் இருக்கும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

வெலிமட  Welimada,,பண்டாரவெல Bandarawela, சேனபிடிய Senapitiya (Halagal), ராம்போட  Ramboda, லபுக்கெல்லா Labookelle, வரியப்போல Wariyapola/Matale, சீதா கொடுவா (Sitakotuwa/Hasalaka).

மயில் ராவணன் கோட்டை  கதை தமிழில் மிகவும் பிரசித்தம் அஹிராவண் என்பவன் ராவணவனுடை ய  சகோதரன் . அவனைத் தமிழில் கொச்சை மொழியில் மயில்ராவணன் என்பார்கள் . அவன் கோட்டைக்குள் புகுந்தவர்கள் வெளியே வரமுடியாது. ஏனெனில் எல்லாம் சிக்கலான குகை (MAZE) வழிகள் . அவனைப் பார்க்க ராவணன் அந்தக்கோட்டடைக்குள் செல்லும் வாசலும் உளது . மஹா பலி பாதாள லோகத்துக்கு அனுப்பப்பட்டார் என்று வாமனாவதாரத்தில் படிக்கும்போது அவர் தொலை தூர தீவுகளுக்கு அனுப்பப்பட்டார் என்றே பொருள். ஆகையால் மயில்ராவணன் லோகமும் பிற தீவுகளுக்குச் செல்லும் ரகசிய பாதைகள் ஆகும். ஏனெனில் சில சுரங்க வாசல்கள் கடலுக்கு அருகிலுள்ள மலைகளில் இருக்கினறன. இதனால்தான் ராவணன் முதலிய அரக்கர்களை தந்திரம் மிக்கவர்கள், மாயா ஜாலக்காரர்கள் என்று வருணிக்கின்றனர் . அதாவது ஒளிவு மறைவுகளும் நெளிவு சுழிவுகளும் நிறைந்த நேர்மையற்ற பாதை அரக்கர் பாதை .

To be continued……………………………………..

*****************************

Tags– Ramayana Lanka, Tourist places,  Part 49, இலங்கை, 108 புகழ்பெற்ற , இந்து ஆலயங்கள், ராவணன் விமான நிலையம்

S Nagarajan October 2023 Article Index (Post No.12,677)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,677

Date uploaded in London –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

SNR Article Index : OCTOBER  2023

OCTOBER  2023

1-10-23 12540  மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா தந்த அற்புத

                            விளக்கங்கள்!                                                                                                       2-10-23 12545 SNR Article Index : SEPTEMBER  2023.                                                                3-10-23 12549 மா ஆனந்தமயி! – 1                                                                                     4-10-23 12551 மா ஆனந்தமயி! – 2                                                                                      5-10-23 12554  தெய்வீக மாயக் கண்ணாடி!                                                                   6-10-23 12557 ஶ்ரீ கௌடபாதர் – 1.                                                                                                 7-10-23 12561 ஶ்ரீ கௌடபாதர் – 2.                                                                                              8-10-23. 12564 முட்டாள்களின் உளறல்!                                                                                  9-10-23 12566 கந்தர் அலங்காரம் (அருணகிரிநாதர் அருளியது) கவின்    

                              மிகு சொற்றொடர்கள்          

10-10-23 12569 நள வெண்பா – கவின் மிகு சொற்றொடர்கள்                        11-10-23 12574 நாலடியார் – கவின் மிகு சொற்றொடர்கள் – (சமண

            முனிவர்கள் பலர் இயற்றியது)                                                           12-10-23  12578 மாறி வரும் சிகிச்சை முறைகள்!                                                           13-10-23 12582 மூதுரை – ஔவையார் இயற்றியது – கவின் மிகு

                                சொற்றொடர்கள்                                                                                                                             14-10-23 12585 இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை!                       15-10-23 12588 ஶ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – (திருவரங்கத்தமுதனார்

                              அருளியது) – கவின் மிகு சொற்றொடர்கள்                                 16-10-23 12592 வியாஸர் யார்?                                                                                    17-10-23 12596 ஐந்திணை ஐம்பது – கவின் மிகு சொற்றொடர்கள்               18-10-23 12601 அயல் தேச சொத்து!                                  19-10-23 12605 திருமூலர் கண்ட தச நாதங்கள்!  20-10-23 12610 பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும்

             தேவி! – சுபாஷிதம்                                    21-10-23 12615 காஷ்மீர் ஃபைல்ஸ்!                                                                                       22-10-23 12619 நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்ரொடர்கள்!                                                                                       23-10-23 12624 அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்றொடர்கள்!             24-10-23 12628 பசுவைப் போற்றி வணங்கிய துகாராம்! (மகான்கள் வாழ்வில்)

25-10-23 12632 திருவெம்பாவை – கவின் மிகு சொற்கள்!                                  26-10-23 12636  துர்காதாஸின் விஸ்வாசம்! – ராஜஸ்தான் ஃபைல்ஸ்!          27-10-23 12640  அறநெறிச்சாரம் – கவின் மிகு சொற்கள்!            28-10-23 12643 நீதிநெறி விளக்கம் – (குமரகுருபர சுவாமிகள் இயற்றியது)  –      

                               கவின் மிகு சொற்றொடர்கள்                                                                29-10-23 12647  மாரதான் நம்பிக்கை – நடந்தவை தான் நம்புங்கள் பாகம்2

            அத்தியாயம் 8                                                                                              30-10-23 12652 வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!   முதல் பகுதி – மாலைமலர் 27-10-23 இதழில் வெளியான கட்டுரை        31-10-23 12656 வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!
           இரண்டாம் பகுதி – மாலைமலர் 27-10-23 இதழில் வெளியான.         கட்டுரை

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 10 ( Post No.12,676)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,676

Date uploaded in London – –  –  5 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKAS 28

பர்த்ருஹரியின் நீதி சதகம் ஸ்லோகங்கள் 28,29,30

நீதி சதகத்தில் நூறு பாடல்கள் இருப்பதை அறிவோம். இதுவரை 27 பாடல்களை குறள் கீதை முதலிய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நமது அறிவு வேட்டையைத் தொடர்வோம்.

பாடல் 28

பரிவர்தினி ஸம்ஸாரம் ம்ருதஹ கோ வா ந ஜாயதே

ஸ ஜாதோ யேன ஜாதேன யாதி வம்சஹ ஸமுன்னதிம் –28

परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.28 ॥

நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.

28. In the ever-changing world, who does not attain birth or death? (Every one does.) He is (truly) said to be born, by whose birth his family attains eminence.

பிறப்பிறப்புப் சேர் குடும்பப் பேராழி  தன்னிற்

பிறந்தும் இறைவாப் பெரிய- திறைமுடையோன்

யாவெனெனிற் கீர்த்தி எவனாற்  குலமெல் லாம்

மேவு வவனாற் றென்று விளம்பு –28

பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.

இவை மேற்கூறிய பர்த்ருஹரியின் கருத்தை எதிரொலிக்கும்.

xxx

 SLOKAS 29

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயீ வ்ருத்திர் மனஸ்வினஹ

மூர்த்னிவா ஸர்வலோகஸ்ய சீர்யதே வன ஏவ வா –29

कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.29 ॥

பூங்கொத்து இருக்கிறது; அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம் இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.

29. A high-minded person has (only) two kinds of existence, like that of a bunch of flowers. Either they adorn the crest of all the world, or wither away  in wilderness.

பூவைப்போல் வல்ல புருஷன் தனக்கெவரும்

ஆவலாய்ச் சென்னியணி லாக்கலொன்று தாவிலா

மாவனத்திலேஇருந்து மட்கலொன்று வேறுவித

மாவதில்லை ஆவதில்லையாம் —29

பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்; அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு. ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.

வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:

வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:


xxxx

SLOKAS 30

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்?

செயற்கரிய  செயல் செய்தால்தான் பெருமை; இதை பர்த்ருஹரி அழகாக விளக்குகிறார்

ஸந்த்யன்யேஅபி ப்ருஹஸ்பதி ப்ரப்ருதயஹ ஸம்பாவிதாஹா பஞ்சஷா

ஸ்தான்ப்ரத்யேஷ விஷேஷ விக்ரமருசீ ராஹுர்ந வைராயதே

த்வாவேவ க்ரஸதே திவாகர நிசா ப்ராணேஸ்வரௌ பாஷ்யவரௌ

ப்ராதஹ பர்வணி பஸ்ய தானவபதிஹி சீர்ஷாவசேஷா க்ருதிஹி-30

வானத்தில் குரு போன்ற கிரஹங்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் ராஹு அவைக   ளை விழுங்குவதில்லை. கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லவா ராஹு விழுங்குகிறான். இவ்வளவுக்கும் அவன் தலை மட்டும்தான் இருந்தது!

सन्त्यन्ये‌உपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्
तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.30 ॥

30. O Brother! There are five or six other respected planets, such as Brhaspati, but Rahu, keen on (facing) superior valour, does not oppose them. He, the chief of Asuras, with only his head left in his body, eclipses only two of them, the Sun and the Moon (the Lords of day and night respectively), on the new moon and full moon days.

குரு முதலாம் ஐந்தாறு கோள்களிருந்தும்

கிருகணத்தில்  ராகு பெருங் கீர்த்தி மருவுதற்குச்

சூரியனையேதான் தொடர்ந்து பிடிக்கின்ற

காரியத்தைத் தேருங்கள் கண்டு – 30

இந்துக்களுக்கு ராஹு கேது ஆகிய இரண்டும் சாயா (shadows) கிரஹங்கள் (நிழல்கள்) என்பது தெரிந்தும், பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், கிரஹண காலத்தில் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் சூரியனையோ, சந்திரனையோ ராஹு அல்லது கேது விழுங்குவதாகச் சொல்லுவர். உண்மையில் கிரஹண காலத்தில் , சூரியனோ சந்திரனோ பாம்பின் வாயில் போய்விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போலவே தோன்றும். மேலும் அமிர்தத்தைத் திருட முயன்ற ராஹு என்னும் பாம்பை விஷ்ணு வெட்டியதால் தலை மட்டுமே எஞ்சியதாகப் புராணக் கதைகள் புகலும். இதில் பர்த்ருஹரி உவமையாகக் காட்டி சொல்ல விழைவது என்ன வென்றால்,

பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.

செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.

இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-

நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு –குறள் 234

ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில்  அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.

–subham–

Tags-  Bhartruhari part10, Nitisataka part 10, Slokas , பர்த்ருஹரி, நீதி சதகம் ,ஸ்லோகங்கள் 28,29,30

ராவணன் குகை: இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்-49 (Post 12,675)


RAVANA CAVES  AT ELLA IN SRI LANKA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,675

Date uploaded in London – –  –  5 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 49 

இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் ராவணன் தொடர்பான இடங்களைக்  காண்போம் .

நுவர எலியா காயத்ரி பீடம்

நுவரெலியா நகரில் சீதைஅம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக தரிசிக்க வேண்டிய இரண்டு இடங்கள், காயத்ரி தேவி மந்திரும் ஸ்ரீலங்காதீஸ்வரர் சிவன் கோவிலும் ஆகும். முருகேசு சித்தர் என்பவரின் சமாதியும் இங்கு உளது. அவர் ஜெர்மனி நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நர்மதை நதிக்கரை பாணலிங்கங்களைக் கொண்டுவந்து இங்கே ஸ்தாபித்தார் . அவர் 2007-ம் ஆண்டில் சமாதி அடைந்தார். இந்தக் கோவில்கள் 1970 முதல் இருக்கின்றன. ராவணன் மகன் மேகநாதன், சிவனை வழிபட்ட இடம் இந்தப் பகுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை.

MANDODARI PALACE AND SITA BATHING GHAT STEPS

115.சீதா தேவி சிறை இருந்த அசோக வனம்

நுவரெலியாவில் சீதை அம்மன் கோவிலை முன்னொரு கட்டுரையில் தரிசித்தோம். அதன் அருகிலேயே தாவரவியல் பூங்கா இருக்கிறது ; இதுதான் ராமாயண காலத்தில் அசோக வனம் Ashoka Vatika Converted as a Botanic Gardens) இதன் பெயர் Hakgala Botanical Garden ஹக்கல தாவரவியல் பூங்கா; இங்கு 10,000 வகைத் தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆர்க்கிட் மலர்களும் ORCHID FLOWERS ரோஜா மலர் வகைகளும் ஆகும் .

xxx

116.சீதா கொடுவா என்றால் சீதையின் கோட்டை. என்று பொருள்; இங்கு மண்டோதரி அரண்மனை இருந்ததாகவும் சீதையும் இங்கு சில காலம் சிறை வைக்கப்பட்டதாகவும் செவி வழிச் ‘செய்திகள் கூறுகின்றன. இது அடர்ந்த காட்டுக்குள் குருளுபோதா கிராமத்தில் இருக்கிறது. (Sita Kotuwa’ is situated in ‘Gurulupotha’ village in thick forest of ‘Uwa’ region of Sri Lanka. ‘Kotuwa’ means fort.) அடர்ந்த காட்டுக்குள் ஒன்றரை கி.மீ நடந்தால் இந்த இடத்தை அடையலாம் . அங்கே பெரிய, உயரமான கருங்கல் படிகளைக் காணலாம். சீதா தேவி தினமும் குளிப்பதற்கு இந்தப் படிகள் வழியாகத்தான் போவாளாம் . அடர்ந்த காட்டுக்குள் இப்படிப் படிகள் இருப்பதைப் பார்த்தால் இங்கே ஒரு பெரிய கட்டிடம்  இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

அரண்மனையின் உடைந்த தூண்களும், கற்களும் இருக்கின்றன .Gurulupotha’, there was a big palace of Ravana’s queen Maharani Mandodari.

ராவணன் வைத்திருந்த 18 விமானங்கள்

பரத்வாஜ முனிவர் எழுதிய வைமானிக சாஸ்திரம் இப்பொழுதும் ஸம்ஸ்க்ருதத்தில் கிடைக்கிறது . இதன் அடிப்படையில் ராவணன், 18 வகை விமானங்களை வைத்திருந்தான். அவைகளில் குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் ஒன்று. அவனுடைய விமானங்கள் இறங்குவதற்காக ஆறு இடங்களில் விமான தளங்களை அமைத்திருந்தான் ; அவையாவன Veragantota வரகந்தோட , Thodupol Kanda தொடுபோல கண்ட , Ussangoda உஸ்ஸன்கோட்டை , Variyapola வரியபோல , Vatariyapolaவாதாரியபோல  and Gurulupotha குருளுமபோத  என்ற ஆறு விமான நிலையங்கள் ஆகும்.

xxx

SITA DEVI FIRE WALKING PLACE, BIG KEY TO SITA TEMPLE AT ELLA

117.சீதா தேவி அக்கினி பரீட்சை

சீதா தேவி தனது தூய்மையை நிரூபிக்க அக்னி பரீட்சை நடந்த இடம் ஒன்றும் இலங்கையில் உள்ளது . அங்கு இப்பொழுது புத்த விஹாரம் இருக்கிறது ( Buddhist temple built at the place where Sitamata went through Agni-pariksha, is named as ‘Divirumpola Rajmahaviharay’). அந்த விஹாரையின் பெயர்  திவிரும்போல ராஜ மஹா விஹாரை. அங்கு நிறைய புத்தர் சிலைகளும் சுவரில் ராமாயண ஓவியங்களும் உள்ளன. அவைகளைப் பார்க்க கட்டணம் உண்டு. அங்குள்ள புத்த பிட்சு ராமாயணக் கதைகளையும் ஆங்கிலத்தில் சொல்கிறார்

சின்மயா மிஷன் இலங்கையில் ராமாயணம் என்ற புஸ்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன ( book published by Chinmaya Mission titled ‘Ramayana in Lanka’). இலங்கையிலுள்ள பெளத்தர்கள் Extremists தீவிரவாதிகள்; ஆதலால் ராமாயணத்தின் சுவடுகளை மறைத்துவிட்டனர் . இந்துக் கோவில்களுக்கு அருகில் புத்த விஹாரங்களைக் கட்டி, பழைய கோவில்களை இடம் தெரியாமல் செய்துவிட்டனர் .

அருகில் அஸ்வத்தத மரமும் சிறிய அறையும் உளது. அந்த இடத்தில் உள்ள சீதா தேவி சிலைகளையும் ஓவியங்களையும் சத்குரு அஞ்சலி காட்கில் பார்த்து வந்து பல தகவல்களைத் தெரிவித்தார் .சீதா தேவி அக்கினிக்குள் நுழையும் பெரிய உருவம் அங்கே இருக்கிறது.

சீதா தேவி அக்கினி பரீட்சை நடந்த சிறிய கோவில் அறைக்கு மிகப்பெரிய பூட்டும், மிகப்பெரிய சாவியும் உள்ளன

சீதா தேவி தீயில் புகுந்ததை நினைவு கூறும் வகையில் இன்று இந்தியா முழுவதும்இலங்கை முழுவதும், பூக்குழி இறங்கல்தீ மிதி விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தீ மிதி வைபவத்தைத் துவக்கிவைத்தவள் சீதா தேவி. 5000 ஆண்டுகளாக இன்றும் தமிழர்கள் இதைச் செய்து வருகின்றனர்.

118. ராவணன் குகை, ராவணன் எல்லா / நீர்வீழ்ச்சி

எல்லா (Ella) என்னும் சிற்றூர்  நுவர எலியாவிலிருந்து ( ‘Nuwara Eliya’) 51 கி.மீ. தொலைவில் மலைப் பிராந்தியத்தில் இருக்கிறது. இந்த  ஊரை ராவணன் எல்லா என்றும் கூறுவார்கள். ஊரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் நீர்வீழ்ச்சி (எல்லா ) இருக்கிறது. அருகிலேயே ராவணன் குகையம் உளது

ராவணன் குகையின் நுழை வாயிலிலேயே பாறை வடிவமே கோர ராட்சத உருவத்தில் இருக்கிறது. குகைக்குள் சென்றாலும் அதே போல இராக்கத முகம் கொண்ட வடிவில் பாறைகள் இருக்கின்றன. குகைக்குள் சுரங்கப் பாதைகளும் உள்ளன. அவை வண்டிகள் செல்லும் அளவுக்குப் பெரிய சுரங்கப்பாதைகள். தமிழில் மயில்ராவணன் கோட்டை என்ற சொல் வழக்கு உண்டு. அதில் சென்றவர்கள் வழி தெரியாமல் திணறி அகப்பட்டுக் கொள்வார்களாம் . இதே போல கிரேக்க நாட்டிலும் இருந்தன அவைகளை மேஸ் MAZE என்பர்

ராவவன் கோட்டைக்குள் 200 மீட்டர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. அரசாங்கமே பெரிய ராட்சத உருவத்தைக் காட்டி பெரிய பாறையையும்  வழியை அடைக்கும்படி வைத்ததுள்ளது . ஊர்மக்கள் சொல்லும் காரணம் உள்ளே விஷ ஜந்துக்களும் வௌவால்களும் வசிக்கின்றன என்பதாகும். சாதாரண மனிதர்கள் சென்றாலே மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்படும் ஒரு சூழ்நிலை.

ராவணன் பல உரு எடுக்க வல்லவன், மாயா ரூபம் உண்டாக்கி ஜாலங்கள் செய்பவன் என்று வால்மீகி எழுதியது  உண்மையே என்று இந்த குகைங்கள் நிரூபிக்கின்றன.

RAVANA ELLA (PICTURES ARE FROM JANA JAGRUTI WEBSITE; THANKS)

மேலும் காண்போம் .

TO BE CONTINUED……………………………..

TAGS- RAVANA CAVES, RAVANA ELLA, SITA ASOKA VANA, PART 49, SRI LANKAN TEMPLES, FIRE WALKING BY SITA, AGNI PAREEKSHA, ராவணன் குகை, ராவணன் எல்லா, நீர்வீழ்ச்சி