லம் , லம் , லம் சொற்கள் எட்டு ; கண்டுபிடியுங்கள் (Post.12,443)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,443

Date uploaded in London – –  19 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1.கண்ணபிரானின் ஆயர்பாடி  , 2.நப்பாசை, சஞ்சலம் , 3.குயில் , 4.பூமி , 5.கவலை ,6.ஒரு கோத்திரம்  , 7.பாதிரிப் பூ , 8.தனிமையாக; தமிழில் மட்டமாக என்று பொருள்

விடைகள்

1.கோகுலம், 2.சாபலம், 3.கோகிலம், 4.பூதலம், 5.வ்யாகூலம்,6.வாதூலம் , 7.பாடலம், 8.கேவலம்

8  1  2
 கே கோ சா 
  கு  
7பாலம்கிகோ3
  தூகூ  
 வா யா பூ 
6  வ்  4
   5   

 —subham—-

tags- lam, lam, tamil cw

கோவிலில் பெரிய பீமன் முரசு!! கர்நாடக மாநிலத்தில் 108……. Part 24 (Post No.12,442)

Chandravalli Cave

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,442

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 24 

110.ஸ்ரீ காமாட்சி சாரதா ஸ்ரீ சக்ர கோவில் Sri Kamakshi Sharada Sri Chakra Temple, Hebbur

துமகூரிலிருந்து 23 கி.மீ.

ஹெப்பூரில் ஆதி பராசக்தியின் ஸ்ரீ சக்ர கோவில் இருக்கிறது. ஸ்ரீ கோதாண்டாஸ்ரம  மடம் இதை நிர்வகித்து வருகிறது பஞ்ச லோகத்தாலான ஸ்ரீ சக்ரம் 300 ஆண்டுப் பழமை உடைத்து. காமாக்ஷி சாரதா 4 கரங்களில் பாச, அங்குச, புஸ்தக, அக்ஷமாலா சகிதம் காட்சி தருகிறாள் . ஸ்ரீ சக்ர பீடத்தின் மேல் அவள் நிற்கிறாள் .

111.கைத்தல சென்னகேசவ கோவில் Sri Kaidala Chennakeshava Swamy Temple

தும்கூரிலிருந்து 6 கி.மீ

புகழ் பெற்ற  சிற்பி ஜனக ஆசாரியும், அவரது மகன் தங்கன ஆசாரியும் கட்டிய கோவில். இந்த ஊரில் பிறந்த ஜனக ஆசாரி பிழைக்க வழியில்லாமல் தவித்த போது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமாநுஜரைத் தரிசித்ததாகவும் அவரது வேண்டுகோளின்பேரில் கோவில்களைக் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது பிட்டிதேவன் என்ற பெயர்கொண்ட மன்னன் , ராமாநுஜரைத் தரிசித்து தனது மகளின் நோயை அவர்  தீர்த்துவைக்கவே பரம பாகவதனாக மாறி விஷ்ணு வர்த்தனன் என்று பெயர் ஏற்றான் . ராமானுஜர் வேண்டுகோளின்படி அவன் ஜனகாச்சாரியைக் கொண்டு கோவில் களைச் சமைத்தான். இங்குள்ள சென்ன கேசவர் , அந்த  ஆசாரியின் கடைசி சிற்பம் என்றும் அது அற்புதமாக வந்துள்ளது என்றும் பக்தர்கள் கூறுவார்கள் அந்த ஆசாரி ஒரு கையை இழந்து, இறை அருளால் கை பெற்ற .கதைகளும் புழக்கத்தில் வலம் வருகின்றன.

எடியூர் ஸ்ரீ சித்த லிங்கேஸ்வர கோவில் EDIYUR SIDDHALINGESVARA SAMADHI

வீர சைவ துறவி சித்தலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு இருக்கிறது .அவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆகையால் வீரசைவர்களுக்கு இது ஒரு புனிதத் தலம்

Gali mantapa

112. சித்ர துர்கா குகைக் கோவில்கள் CHITRADURGA CAVES AND TEMPLES

சித்ர துர்கா அருகிலுள்ள சந்திர வல்லி குகைகள் பல்லாயிரம் ஆண்டு வரலாறு  (PRE-HISTORIC AND KADAMBA DYNASTY) படைத்த இடம். அங்கு பழங்கற்கால, உலோக கால சின்னங்கள், நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குந்தல தேசத்தை ஆண்ட மன்னர்களின் வரலாற்றுச் சின்னங்களும், கடம்ப வம்ச மயூர சர்மனின் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன  ஒரு குகையில் சிவலிங்கம், மற்றும் தியான அறை உளது .

ஒபவா என்ற வீராங்கனை, ஹைதர் அலியை எதிர்த்து போரிட்ட இடம் இது.

Hidimbeshwar Temple ஹிடம்பேஸ்வர கோவில்

நாயக்கர் ஆட்சி செய்த இடம் இது. இந்த இடம் மஹாபாரத ஹிடம்பன், ஹிடும்பி, கடோத்கசன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது. கோட்டை கொத்தளங்கள் நிறைந்த இடம். கோட்டையில் உள்ள 18 கோவில்களில் இதுவும் ஒன்று.

அடுமல்லேஸ்வர் கோவில் அருகில் உள்ளது.

சித்ர துர்க கோட்டைக்குள் உள்ள பல கோவில்களில் சித்தேஸ்வரர் கோவிலும் ஒன்று கோட்டையின் மேல்தளத்தில் 18 கோவில்களை நாயக்க மன்னர்கள் கட்டினார்கள்.நாயக்கர்களின் குல தெய்வம் ஏக நாதேஸ்வரி ..கோட்டையின் நுழை வாயிலில் பராசக்தியின் பாத சுவடுகள் பொறிக்கப்பட்டுள்ளன .பல்குணேஸ்வர , கோபால கிருஷ்ண சந்நிதிகளும் இருக்கின்றன.

கோவிலில்பெரிய பீமன் முரசு

மலை மீது ஏறிச் சென்றால் நல்ல சிற்பங்களைக் காணலாம். பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் பெரிய முரசு இருக்கிறது

ஹிட ம்பேஸ்வர கோவிலில் உள்ள முரசு குறிப்பிடத்தக்கது பத்து அடி சுற்றளவும், ஆறு அடி உயரமும் உள்ள ஒரு உருளை பீமனின் முரசு என்று சொல்லப்படுகிறது இது இரும்புத் தகடுகளால் செய்யப்பட்டது கோவிலின் வாயிலில் ஒற்றைக்கல் தூண் நிற்கிறது.

மலை அடிவாரத்தில் சித்தேஸ்வர கோவில் இருக்கிறது கோபால கிருஷ்ணர் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தியவை.

கோட்டையின் கீழ்தளத்தில் உத்சவம்பா கோவிலும் இருக்கிறது. இப்படி ஒரே கோட்டையில் நிறைய கோவில்கள் இருப்பது சிறப்பு அம்சம் .

லிங்காயத்துக்களின் முக்கிய மடமான முருகாராஜேந்திர மட ம் அருகில் இருக்கிறது

கோட்டையில் விழும் மழை  நீரை சேமித்து மீண்டும் பயன்படுத்த சில அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கோட்டைக்குள் தண்ணீர் தட்டுப்பாடே இராது .

அங்கி மட வட்டாரத்தில் பஞ்சலிங்கேஸ்வர கோவில் இருக்கிறது. அங்கு 5 லிங்கங்கள் உள்ளன.

கோட்டையில் துப்பாக்கி மருந்து உற்பத்தி செய்யும் ஆலைகளும் இருந்த தடயங்களைக் காணலாம்

113.ஹரிஹர் கோவில் HARIHAR HARIHARESWARA TEMPLE

வீர நரசிம்ம மன்னாரின் தளபதி 1228-ல் கட்டிய ஹரிஹரேஸ்வர கோவில் ஹரிஹர்  என்னுமிடத்தில் இருக்கிறது. சிவனின் வலதுபுறமும் விஷ்ணுவின் இடது புறமும் ஒரே சிலையில் அமைந்த சங்கர நாராயணனே ஹரியும் ஹரனும்.ஆவர் . இந்தக்கோவில் ஹொய்சாளரின் உன்னத சிற்பக்கலைக்கு எடுத்துகாட்டாக அமைந்து இருக்கிறது.

இந்த ஊர் தாவண்கரே மாவட்டத்தில் இருக்கிறது.

TO BE CONTINUED………………………………………

TAGS சித்ர துர்கா , குகை, கோவில்கள், ஹரிஹர் , பீமன் முரசு ,

கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்-2 (Post No.12,441)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,441

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார்- Part 2

 வள்ளுவரின் குறட்பாக்களை நூற்றுக்கணக்கான பெரியோர்களின் பொன் மொழிகளுடன் ஒப்பிடமுடிகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அத்தனை பெரியோர்கள் சொன்னதையும் அவர் நமக்கு ஜுஸ் Juice பிழிந்து கொடுத்து இருக்கிறார் ; வள்ளுவர் (Tiru Valluvar)  சீன மொழியைப் படித்ததில்லை ; ஆயினும் கன்பூசியஸ் எதிரொலியைக் குறளில் கேட்க முடிகிறது. வள்ளுவர் பாலி (Pali) மொழி படித்தாரோ இல்லையோ; ஆயினும் தம்ம பத (Dhammapada) எதிரொலியைக் கேட்க முடிகிறது ; வள்ளுவன் மாபெரும் சம்ஸ்க்ருத மொழி அறிஞன் என்பதில் சந்தேகமே இல்லை; இதனால் சம்ஸ்க்ருத இலக்கியத்தின் தாக்கத்தை  முதல் குறளிலிருந்து கடைசி குறள் வரை காண முடிகிறது . வால்மீகி முதல் வள்ளுவர் வரை என்ற என்னுடைய தமிழ் புஸ்தகத்தில் இதைக்  காட்டியுள்ளேன். நான் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தில் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் எண்ணங்களும் அப்படியே இருப்பதைக் காட்டி இருக்கிறேன்; வள்ளுவர் யாரையும் காப்பி Copy அடிக்கவில்லை. அவர் பிறவியிலேயே மஹா மேதாவி ; ஒரு அவதாரம் என்று சொன்னாலும் மிகையல்ல. உலகில் எங்கும் காண முடியாத புதுமையைச் செய்தார். உலக மஹா அறிஞ ர்களின் அத்தனை பொன்மொழிகளையும் சுருக்கி வரைந்தார் .

கன்பூசியஸ் (Confucius) என்ற சீன தத்துவப் பேரறிஞர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். அவரை இன்று உலகம் முழுதும் போற்றுகிறது . தேசீய சீனா என்னும் தைவான் (Taiwan) நாட்டில் (பார்மோசா தீவு) அவர் பிறந்த தினம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதோ மேலும் சில ஒப்பீடுகள் :-

நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.- என்று கன்பூசியஸ் (Confucius)  சொன்னார்

வள்ளுவர் சொல்கிறார் : “அட கொஞ்சமாவது யூ ட்யூபில் You Tube அல்லது கோவில் உபன்யாசங்களில் அல்லது ரேடியோவில் நல்லதைக் கேளுங்கள்; உங்களுக்கு இமயமலை அளவுக்கு புகழ் ஓங்கிவிடும் என்கிறார்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.– குறள் 416

[பொருட்பால்அரசியல்கேள்வி]

:எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.– என்பது இதன் பொருள்  வள்ளுவர் பயன்படுத்திய சொற்களைக் கவனியுங்கள்

ஆன்ற பெருமை ; அதன் பொருள் ஆன்ற : adj. ஆல்-. சால்-. Excellent, grand, splendid; மாட்சிமைப்பட்ட. ஆன்றதவச் செந்நெறி (பெரியபு.ராணம் )

Xxxxx

ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.– என்று கன்பூசியஸ் (Confucius) சொன்னார்.

வள்ளுவரும் அதையேதான் சொல்கிறார்!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக– திருக்குறள் 391

[பொருட்பால், அரசியல், கல்வி]

மணக்குடவர் உரை

கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.

Xxxx

துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.– கன்பூசியஸ் (Confucius)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு– குறள் 467

[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

ஸம்ஸ்க்ருதச் சொல் – கருமம்

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

இதில் வள்ளுவர் பயன்படுத்திய ஒரு புது வினைச் சொல்லை கவனிக்கவேண்டும் துணிக = துணிச்சலுடன் இறங்கு!

இன்னும் ஒரு குறளில் வெற்றி நிச்சயம் என்கிறார் :-

எண்ணிய எண்ணியாங்கு எய்துப  எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்–குறள் 666

உறுதியாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

Xxxxx

ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!– கன்பூசியஸ் (Confucius)

சொன்னது

வள்ளுவரோ இன்னும் ஸ்ட்ராங்STRONG காகவே பாடுகிறார்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு-– குறள் 204

[அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம்]

காரணமே இல்லாமல் ஒருவனுக்கு தீங்கு நினைத்தால் தர்மம் உனக்குக் கல்லறை தோண்டிவிடும் !

இதையும் விட ஸ்ட்ராங் STRONG ஆக இன்னும் ஒன்றும் சொல்கிறார்; நாம் செய்யும் தீவினைகளோ நல்ல வினைகளோ நம்மை நிழல் போல தொடர்ந்து வருமாம்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடி உறைந் தற்று– குறள் 208

[அறத்துப்பால்இல்லறவியல்தீவினையச்சம்]

ஸம்ஸ்க்ருத  புராணங்களில் இதை சித்திர குப்தன் என்பர். அதன் தமிழ் அர்த்தம் = மறைவான DRAWING ட்ராயிங் = ரகசிய சித்திரம். SECRET PICTURE= GUPTA CHITRA அதாவது யமனிடம் உள்ள கம்பியூட்டர் அமெரிக்காவில் நாஸா NASA ‘S SUPER FAST COMPUTER நிறுவனத்தில் உள்ளதை வீட சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டர் ; நமது தீய எண்ணங்களைக் கூட நினைவில் வைத்துக்கொண்டு, நாம் இறக்கும் நாளில் எமனுக்கு முன்னதாக PRESENTS ப்ரசன்ட் செய்யுமாம்; அந்த சித்ர குப்தன்  அக்கவுண்ட் புக் ACCOUNT BOOK  படி எமதர்ம ராஜன் நமக்கு தீர்ப்பு வழங்குவான். கணக்குத் தப்பாமல் தீர்ப்பு சொல்லுவதால் அவனுக்கு தர்மராஜன் JUSTICE KING  என்றும் பெயர் . வள்ளுவர் சித்ர குப்தனை நிழல் SHADOW  என்று மொழிபெயர்க்கிறார் !

— TO BE CONTINUED……………………….

Tags- சித்திர குப்தன், நாஸா, சூப்பர் கம்ப்யூட்டர், கன்பூசியஸ் , வள்ளுவர்,

கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது? ஜப்பானிய நாடோடிக் கதை (Post No.12,440)



 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,440

Date uploaded in London –  19 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜப்பானிய நாடோடிக் கதை!

கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறதுஜப்பானிய நாடோடிக் கதை தரும் காரணம்!

ச.நாகராஜன்

ஜப்பானிய நாடோடிக் கதைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இவை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைச் சுட்டிக் காட்டுபவை.

கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது?

காரணத்தைச் சொல்கிறது ஒரு ஜப்பானிய குட்டி நாடோடிக் கதை.

ஹிரோயும் அவோயும் சகோதரர்கள்.

ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள்.

ஹிரோய் தவறான வழியில் நிறைய பொருள் சம்பாதித்து வந்தான்.

ஆனால் அவோய் நியாயமான வழியில் குறைவாகச் சம்பாதித்தான்.

ஒரு சிறிய குடிசையில் அவன் வசித்து வந்தான்.

அன்றாட வாழ்க்கைக்கே அவன் அல்லல்பட்டுக் கொண்டிருந்தான்.

புத்தாண்டு தினம் வந்தது.

அவோய் இறைவனுக்கு நிவேதனமாக ஏதாவது தர வேண்டும் என்று எண்ணினான். அதை அளித்த பின்னரே அவன் உணவு உண்ண வேண்டும்.

கையில் ஒன்றும் இல்லை.

நேராக ஹிரொய் மாளிகைக்குச் சென்று ஒரு கேக் தருமாறு கேட்டான். ஆனால் ஹிரொய் இல்லை என்று கை விரித்தான்.

மனம் சோர்ந்து அவோய் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வயதானவர் ஒருவர் ஒரு ரொட்டித் துண்டுடன் வழியில் நின்று கொண்டிருந்தார்.  அதை அவோயிடம் கொடுத்த அவர், ‘இதைச் சாப்பிடு’ என்றார்.

”இறைவனுக்கு படைப்பதற்கு முன்னர் நான் எதையும் சாப்பிட மாட்டேன். பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர இதை நான் சாப்பிட மாட்டேன்” என்றான் அவோய்.

“சரி” என்ற பெரியவர் தொடர்ந்து சொன்னார் :”நேராகக் கோவிலுக்குப் போ. அங்கு முதலில் பார்ப்பவரிடம் இதை கொடுத்து அரைக்கும் கல்லைக் கேள். அவர் தருவார். அதை வாங்கிக் கொள்“ என்றார்.

அவோய் ரொட்டித் துண்டுடன் கோவிலுக்குச் சென்றான்.

அங்கு கோவில் வாயிலில் ஒரு தேவதை நின்று கொண்டிருந்தது.

“அந்த ரொட்டித் துண்டை எனக்குத் தா” என்று கேட்டது.

அவோய் அதை உடனே கொடுத்தான். ‘எனக்கு அரைக்கும் கல்லைத் தா” என்றான்.

கோவிலின் உள்ளே சென்ற தேவதை ஒரு அரைக்கும் கல்லைக் கொண்டு வந்து தந்தது. “இதோ பார், இதன் கைப்பிடியைச் சுற்றி அரைத்தவாறே நீ என்ன நினைத்தாலும் அது நடக்கும்” என்று கூறி விட்டு மறைந்தது.

அரைக்கும் கல்லை எடுத்துக் கொண்டு தன் வீடு வந்த அவோய், அதை அரைத்தவாறே, ‘இது ஒரு மாளிகையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று தனக்குத் தானே கூறினான்.

என்ன ஆச்சரியம். அவனது குடிசை மாளிகையாக மாறியது.

கல்லை அரைத்தவாறே தனக்கு வேண்டியதை எல்லாம் பெற்றுக் கொண்டான் அவோய்.

இந்த அதிசயச் செய்தி ஹிரோயை எட்டியது.

அவோயிடமிருந்து அரைக்கும் கல்லைத் திருட எண்ணினான் ஹிரோய்.

ஒரு நாள் அவோய் வீடு சென்று அவன் இல்லாத சமயம் அந்தக் கல்லைத் திருடினான் ஹிரோய்.

யாருக்கும் தெரியக் கூடாது என்று எண்ணிய அவன் தனது படகில் ஏறி வெகு தூரத்திலிருந்த ஒரு தீவை நோக்கி கடலில் செல்லத் தொடங்கினான்.

போகும்போது வழியில் அதை அரைத்தவாறே, “எனக்கு கேக் வேண்டும்” என்றான். கேக் வர ஆரம்பித்தது.

அதில் உப்பு கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஹிரோய்க்கு,

“உப்பு வேண்டுமே” என்றான்.

உப்பு கொட்ட ஆரம்பித்தது. நிற்கவே இல்லை.

அவன் படகு முழுவது உப்பு நிரம்பவே படகு நீரில் மூழ்கியது. ஹிரோயும் அதனுடன் மூழ்கினான்.

உப்பு கொட்டிக் கொண்டே இருக்கவே கடல் நீர் முழுவதும் உப்பு கரிக்க ஆரம்பித்தது.

இன்றும் அது நிற்கவில்லை. அதனால் தான் கடல் நீர் உப்புக் கரிக்கிறது!

ஜப்பானிய நாடோடிக் கதையில் உள்ள நீதியை நாம் உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்!

888

QUIZ சங்கீத முத்திரை பத்து QUIZ (Post.12,439)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,439

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சங்கீத முத்திரை பத்து

QUIZ SERIES N0.68

1.பாடலில் முத்திரை வைத்துப் பாடும் வழக்கத்தை யார் துவக்கியது?

xxxxx

2.கர்நாடக இசையில் முத்திரைSIGNATURE வைத்துப் பாடிய முதல்வர் யார் ? அவருடைய முத்திரை என்ன?

xxxxx

3.சங்கீத மும்மூர்த்திகளின் முத்திரைகள் என்ன ?

Xxxxx

4.முத்திரைக்கு வேதத்தில் ஆதாரம் இருக்கிறதா?

xxxx

5.ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் முத்திரைகள் இருக்கின்றனவா?

Xxxx

6.ஜெயதேவரின் முத்திரை என்ன ?

xxxx

)

7.பாபநாசம் சிவனின் முத்திரை என்ன ?

xxx

xxxx

8.வாசுதேவ என்ற முத்திரையுடன் முடியும் பாடல்கள் யாருடையவை ?

Xxxx

9.துகாராம் மராத்தி மொழியில் பாடிய அபங்கங்களை எப்படி கண்டுபிடிக்கலாம் ?

xxxx

10.அபங்கம் பாடிய யார் ஏக ஜநார்த்தனி  என்ற முத்திரை வைத்துப் பாடல்களை இயற்றினார் ஏன் ?

xxx

விடைகள்

1.நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் தேவாரத்தைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தமிழ் பரப்பினார். அவருடைய  விக்ரகங்கள் அனைத்தும் டான்ஸ் ஆடும் போஸில்தான் இருக்கும். அவர் தனது பாடலில் முத்திரை வைத்து– அதாவது தனது  பெயரை — பல வகைகளில் சொல்லி, பாடி முடிப்பார் ; நமக்குத்  தெரிந்து இந்தியாவில் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வழக்கத்தைத் துவக்கியவர் சம்பந்தர்தான்

xxxxx

2.சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடத்தில் கிருதிகள் இயற்றிய புரந்தரதாசர்தான் கர்நாடக இசையின் பிதாமஹர் . அவருடைய முத்திரை புரந்தர விட்டல; இந்த வரியுடன் பாடல் முடியும்

xxxxx

3.சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். தியாகராஜர், ஞான சம்பந்தர், புரந்தரதாசர் போல,  தனது பெயரையே பயன்படுத்தினார்

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ரஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

xxxx

4.வேதத்தில்தான் முத்திரை வைத்துப் பாடும் வழக்கம் தோன்றியது ; பல ரிஷிகள் ஒரு குறிப்பிட்ட வகையில் துதிகளை முடிக்கின்றனர்; இன்னும் பலர் தனது பெயரையே சொல்லிப்படுகின்றனர். ஞான சம்பந்தர் ரிக்வேதத்தை அதிகமாகப் புகழ்வதால், முத்திரை வைத்துப் பாடுவதை ரிக்வேதத்தில் கற்றார் என்றால் அது மிகையாகாது 

xxxxx

5.உண்டு ;மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்

கபீர் கஹதா – கபீர் பாடல்கள்

xxx

6.ஜெயதேவர் பாடிய நூல் கீத கோவிந்தம் . இதில் 24 அஷ்டபதிகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஜெயதேவரின் பெயருடன் முடியும் .

எடுத்துக் காட்டாக , முதல் அஷ்டபதி முடியும் வரிகள்

ஸ்ரீ ஜயதேவ கவே: இத முதிதம் உதாரம்

ஸ்ருணு ஸுகதம் ஸுபதம் பவஸாரம்

கேசவ த்ருத தஸவித ரூப (ஜயஜக தீஸஹரே

xxxx

7.பாபநாசம் சிவன் தனது முத்திரையாக “ராமதாஸ” என்பதை வைத்து கிருதி, வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார்.

xxxx

8.கோவை மாவட்டத்தில் பிறந்த மைசூர் வாசுதேவாவாச்சாரியார் (1865- 1961) முத்திரை வாசுதேவ ;சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார் பல சமஸ்தானங்கள், மடங்களில் பெரிய விருதுகளை பெற்றார்.

xxxx

9.அவை துகா மனே என்ற முத்திரையுடன் முடியும்

xxxx

10.ஏக்நாத்

ஏகநாத் என்பது பாடிய மகானின் பெயர்; அவருடைய குரு ஜனார்த்தன சுவாமி. இரண்டையும் இணைத்து இப்படி ஏக ஜநார்த்தனி  முத்திரை வைத்தார் .

XXXXX

 TAGS- முத்திரை, பாடகர், இந்துஸ்தானி, கர்நாடக இசை, பாடல் இயற்றியோர் , கிருதிகள், கீர்த்தனைகள் , சங்கீத மும்மூர்த்திகள், SIGNATURE

K for Kumbakonam –Know Your India Puzzle (Post No.12,438)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,438

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

FINDOUT 8 FAMOUS PLACES IN INDIA BEGINNING WITH LETTER “K”

1.Highest Shiva temple in the world is in this Uttarakhand town; Mandakini river is flowing near by in this part of the Himalayas

2.This city is in Uttar Pradesh; famous for leather industry, IIT and Temples.

3. Famous Mahalakshmi temple is in this Maharashtrian town.

4.Gold Mine town in Karnataka

5.Like Prayag has Kumbhamela every 12 year this Tamil Nadu town has Mahaamaham every 12 years.

6.Kerala’s port town with backwaters exporting coir, cashew nuts etc

7.West Bengal Capita and it was capital of India until 1911

8.Capital of Nagaland

 ANSWERS

1.Kedarnath, 2. Kanpur , 3.Kolhapur, 4.Kolar 5.Kumbakonam, 6.Kollam,,7.Kolkata, 8.Kohima,

–subham–

கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- Part 1 (Post No.12,437)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,437

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- Part 1 (Post No.12,437)

கன்பூசியஸ் Confucius) , ஒரு சீன தத்துவ வித்தகர்; ஏறத்தாழ புத்தர் காலத்தைச் சேர்ந்தவர்; அவருக்குப் பல  நூற்றாண்டுகளுக்குப்  பின் வந்தவர் திருவள்ளுவர் (Tiru Valluvar). ஆயினும் பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் GREAT MEN THINK ALIKE என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணங்க  இரு  பெரியாரிடையே பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது .

XXXX

Appearance தோற்றம்

தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.– கன்பூசியஸ்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப்பழமொழி. ஆனால் வஞ்சகர்கள் பசுத்தோல் போர்த்திய புலி ஆக இருப்பார்கள் ; அது கூடாது என்பது இரு ஞானிகளின் கருத்து

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.    – 273

கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

இன்னொரு குறளில்

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது என்கிறார் வள்ளுவர்

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.    – 274

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு– குறள் 79

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

உள்ளத்தில் அன்பில்லாமல் வெளியே அழகாக இருந்து என்ன பயன்?

Xxxxx

Do what you want others to do to you !

உங்களுக்கு எதை மற்றவர் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.– கன்பூசியஸ்

எல்லோரையும் நேசியுங்கள்; கொஞ்சம் பேரை நம்புங்கள்; எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள் – என்பது ஷேக்ஸ்பியர் வாக்கு -All’s Well that Ends Well

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்–குறள் 318

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு-குறள் 190

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

xxxxxx

Anger சினம்/கோபம்

                “When anger rises, think of the consequences.” என்கிறார் கன்பூசியஸ் .

கோபம் வருகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று (முதலில்) சிந்தியுங்கள் — கன்பூசியஸ்

வள்ளுவனும் இதையே சொல்கிறான்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.- 305

ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்–குறள் 306

சம்ஸ்க்ருதத்தில் கோபத்துக்கு சேர்ந்தாரைக்கொல்லி என்று பெயர். ஏனெனில் அரணிக்கட்டையில் பிறக்கும் தீயைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அந்தக் கட்டையை எரித்த்துவிடும் ; காடுகளில் இரண்டு மரங்கள் ஒன்றை ஒன்று கொஞ்சி, குலவி, உரசி மகிழ்கையில், தீப்பொறி உண்டாகும். அது காட்டையே அழித்துவிடும். இதனால் ஆஸ்ரயாஸஹ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வர் .

சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும் (காட்டையே அழிக்கும் காட்டு தீ போல)

Xxxx

நடையை மாத்து

“When it is obvious that the goals cannot be reached, don’t adjust the goals; adjust the action steps.”

லட்சியத்தை அடைய முடியாதென்பதற்காக லட்சியங்களை / குறிக்கோளை மாற்றாதே ; உன்னுடைய செயல் திட்டங்களை (குறிக்கோளை நோக்கி) மாற்றிக்கொள் – கன்பூசியஸ்

இதை வினை செயல்வகை, வினைத்திடப்பம் என்ற திகாரங்களில் வள்ளுவரும் காட்டுகிறார்

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.-675

பொருள்

இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும்

இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.–குறள் 675

பொருள்

ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Xxxxx

“It does not matter how slowly you go so long as you do not stop.”

எவ்வளவு மெதுவாக குறிக்கோளை நோக்கிச் செல்கிறாய் என்பது பற்றிக் கவலை வேண்டாம் . நில்லாமல் செல் – என்கிறார் கன்பூசியஸ்

இதையே சுவாமி விவேகானந்தரும்

உத்திஷ்டஜாக்ரத ப்ராப்யவரான் நிபோதத

எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நிற்காதே என்று கூறுவார் (Arise, Awake, Stop not till the goal is reached)

To be continued…………………………….

Tags- கன்பூசியஸ் , வள்ளுவர், குறள் , சினம், தோற்றம்

Important Ayurveda Dictums (Post No.12,436)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,436

Date uploaded in London – –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Important Ayurveda Dictums (Post No.12,436)

There are some important Ayurveda (Hindu Medical System) sayings in Sanskrit slokas that everyone should know.

On immunity

Immunity in the body functions in two ways;

Vyaadhik samatvam or vyaadhyapadapratibandhakatvam

Cakrapaanidatta in his commentary on Caraka Samhita  says Vyaadhik samatvam vyaadhibala virodhitvam

Vyaadhyutpada prati bandhakatvam Ca.Sa.26-27

Meaning

Gives immunity by providing forthwith the resistance to a disease  it may be produced

Or

It may provide the type of resistance by minimising its power so that the disease may not be harmful even if it has started.

Xxxx

Simile in Caraka Samhita 

Just as seed remains dormant in the soil and grows after sometime  , so also the provoked dosa (eliological factors like bacteria) remains dormant in the body tissues and when it becomes powerful it produces disease.

Adhisite yathaa bhuumimdijam kala ca rohati

Adhisite tathaa dhaatum dosah kole ca kupyati

3-68

Meaning

It explains that the bacteria, however harmful they may be, cannot do any harm until they get proper soil and nutrition in due time.

Xxxx

On diet/ pathya control

There is one couplet in Saarakaumudi 2-1

Disease sometimes, without any specific drug can be checked through proper diets only, but they can never be cured by the application of hundreds of medicines if there is no proper diet.

rogopi bhesajair vinaa pathyaad eva nivartate

na tu pattyaahbihiinasya bhasajanansatair api

— Saarakaumudi 2-1

—subham—

Tags- Ayurveda, Sayings, Caraka Samhita, Pathya, Diet, Immunity

சகுனியின் மகனைக் கொல்லாத அர்ஜுனனின் கருணை! (Post No.12,435)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,435

Date uploaded in London –  18 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மஹாபாரதம் 

சகுனியின் மகனைக் கொல்லாத அர்ஜுனனின் கருணை! 

ச.நாகராஜன் 

வியாசரின் கட்டளையின் பேரில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அஸ்வமேத யாகத்தைச் செய்ய உறுதி கொண்டார் தர்மர்.

அதையொட்டி யாகத்திற்கான குதிரையைக் காக்க வேண்டிய பொறுப்பை அர்ஜுனனிடம் ஒப்புவித்தார் தர்மர்.

யாக குதிரை அதிவேகமாக எல்லா திசைகளையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

அதை எதிர்த்த அரசர்களை எதிர்கொண்டு அர்ஜுனன் அவர்களை வென்றான்.

யாக குதிரை காந்தாரியின் காந்தார தேசத்தை நோக்கிப் பறந்தது.

அதை எதிர் கொண்டான் சகுனியின் புத்திரன்.

அர்ஜுனன் அவனை நோக்கி, “வீணாக எதிர்க்க வேண்டாம். அரசர்களைக் கொல்ல வேண்டாம் என்பது தர்மரின் உத்தரவு. ஆகவே அடி பணிந்து போ” என்று கூறினான்.

ஆனால் சகுனியின் மகன் அதைக் கேட்கவில்லை.

தனது படையுடன் வந்த சகுனி புத்திரன் குதிரையைச் சூழ்ந்து கொண்டான்.

இதனால் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது காண்டீவத்தால் அந்த வீரர்களின் சிரங்களை அறுத்தான்.

உடனே சகுனி புத்திரன் அர்ஜுனனை நோக்கிப் பாணங்களை இறைத்தான்.

அர்ஜுனன் உடனே அர்த்த சந்திர பாணத்தை சகுனி புத்திரன் மேல் ஏவ அது அவனது தலைப்பாகையை அறுத்தது.

அனைவரும் அந்த அதிசயத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததோடு பயந்து ஓட ஆரம்பித்தனர்.

சகுனி புத்திரனும் ஓடினான். அர்ஜுனன் அவர்கள் அனைவரது முடியையும் கவர்ந்தான்.

சிலர் கைகளை உயரத் தூக்கிவாறு ஓடினர். அவர்கள் கைகள் மட்டும் பாணத்தால் அறுக்கப்பட்டன. அது கூடத் தெரியாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.

நிலைமை விபரீதமாவதைக் கண்ட காந்தார ராஜனின் தாய் மந்திரிகளையும் வயது முதிர்ந்தோரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.

சிறந்த பூஜா திரவியங்களை எடுத்துக் கொண்டு வந்தாள். அர்ஜுனனை வரவேற்றாள்.

தனது மகனைத் தடுத்தாள்.

அர்ஜுனனும் கோபம் தணிந்தான். அவளை வணங்கிப் பூஜித்தான்.

பிறகு சகுனி மகனைத் தேற்றி, அஸ்வமேத யாகத்திற்கு வருமாறு அழைத்தான்.

“எனக்கு நீ சகோதரனே. காந்தாரியை நினைத்தும் திருதராஷ்டிரனை நினைத்தும் உன்னை நான் கொல்லவில்லை. நீ உயிரோடு இருக்கிறாய். உனது படை வீரர்கள் கொல்லப்பட்டனர். விரோதத்தை விடு. சித்ரா பௌர்ணமி அன்று நடக்க இருக்கு அஸ்வமேத யாகத்திற்கு வா.” என்றான்.

பிறகு இஷ்டப்படி சஞ்சரிக்கும் யாக குதிரையைப் பின் தொடர்ந்து செல்லலானான்.

ஆச்வமேதிக பர்வத்தில் எண்பத்தைந்தாவது அத்தியாயமாக அமைகிறது இந்த அர்ஜுனனின் சகுனி மகனுடனான யுத்தம்.

பகைவருக்கும் அருள் புரியும் மனம் கொண்டவன் அர்ஜுனன் என்பதை இது விளக்குகிறது.

தங்களை சூதாட்டத்தினால் நயவஞ்சகமாக வென்று நாட்டை விட்டு வெளியேற்றி பல தீய யோசனைகளை துரியோதனனுக்குச் சொல்லித் தந்த சகுனியின் மகனைக் கூட அவன் மன்னித்தான். அப்படிப்பட்ட நல்ல உள்ளத்தைக் கொண்டவன் அர்ஜுனன் என்பதை இந்தப் போர் சுட்டிக் காட்டுகிறது.

யாகக் குதிரை அஸ்தினாபுரம் நோக்கித் திரும்ப தர்மர் யாக குதிரை வெற்றியுடன் வருவதை அறிந்து மனக் களிப்புற்றார். பீமனை நோக்கி யாகசாலையை அமைக்கச் சொன்னார்.

யாகம் ஆரம்பிப்பதற்கான வேலைகள் துவங்கின!

****

ராகம் வ’ராகம்’, தாளம் வே’தாளம்’ க்ருதி ப்ர’க்ருதி’!!! குறுக்கெழுத்துப் போட்டி (Post.12434)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,434

Date uploaded in London – –  17 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 கீழேயுள்ள கட்டத்தில் 19  ராகங்கள் இருக்கின்றன ; கண்டு பிடித்தால் உங்களுக்கு சங்கீத சாம்ராட் பட்டம் தருகிறேன்.

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

ம்சாளி
ல்ம்ந்திள்ரா
யாத்னி
ணியாபைவி
காரிகாமுதுனா
ம்ப்நாந்ன்
போட்பூசிபு
திடைபாபிநீ
பிருலா
மோம்ந்ம்
மாஹிபிப்தா
ண்ந்காரி
டுதோடிங்ங்
ம்ராசா

விடைகள்

கல்யாணி, மோகனம், ஹம்சத்வனி, பைரவி, நாட்டை, மாண்டு, காம்போதி, ஹிந்தோளம், சிந்துபைரவி, பிருந்தாவனசாரங்கா, ஹம்சானந்தி, புன்னாக  வராளி , தோடி , கரகரப்ரியா , ஆரபி, முகாரி, நீலாம்பரி, பூபாளம், காப்பி, ராகங்கள். 

—-subham—-