லண்டன் முருகன் தேர் திருவிழா;London Skanda Temple Rath Yatra 2023 (Post.12,412)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,412

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 லண்டன் முருகன் தேர் திருவிழா;London Skanda Temple Rath Yatra 2023 (Post.12,412)

London Murugan Temple in Eastham, London celebrated its annual Ratha Yatra along the main streets near the temple. This Skanda/ Kartikeya temple (Murugan in Tamil) attracts thousands of devotees every year. Today (13-8-2023) thousands of devotes stood on both sides of the roads and did traditional worship with Coconut, Bananas, Flowers , Purana Kumbha, Lamps etc.

Shops and restaurants gave free prasad such as Sundal (Boiled pulses and spiced), Sweet Pongal, Tamarind bath, Laddu with water bottles, rose milk,  and Tea.

Saravana Bhavan is famous in distribution of free Prasad and a big crowd gathered in front of it to get tea and Sundal and Sweet Pongal

Shirdi Baba temple in East ham gave Laddu, rose milk and Tea. Volunteers pulled the Ratha (Ther in Tamil) for three hours.

Ratha and Tamil Ther are cognate words. The mirror image of Ratha is Ther. If you repeat Rathe, Rathe quickly you will get Ther. Linguists call this Mirror image. This is another proof to show that Tamil and Sanskrit came from Lord Shiva like Panini and Bharati said.

The temple feeds thousands of devotees today.

இன்று 13-8-2023 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் லண்டன் முருகன் கோவில் தேர்த் திருவிழா நடந்தேறியது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் நைவேத்யம் செய்து முருகப்பெருமானை வணங்கினர்.

முருகன் தேரை இழுத்துச் செல்ல போட்டா போட்டி . நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் தேரை இழுத்துச் சென்றனர் . பெண்கள் சுமக்க முடியாத அளவுக்கு தங்க நகைகளையும் , மல்லிகைப் பூவையும் அணிந்து வந்தனர்

வழி  நெடுகிலும் தண்ணீர் பாட்டில், காப்பி, டீ , ரோஸ்மில்க் , புளியோதரை, லட்டு, சுண்டல் விநியோகிக்கப்பட்டது. சரவண பவன் வாசலில் பெரிய கூட்டம் ; சுண்டல், சர்க்கரை பொங்கல் கிடைத்தது. ஷீரடி பாபா கோவிலில் லட்டு, டீ , ரோஸ் மில்க்  விநியோகம்.

ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ள லண்டன் முருகன் கோவில் இந்தியர்களால் நடத்தப்படுகிறது . அங்கு இன்று ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது .

சென்ற ஆண்டு மலையாளிகளின் பாண்ட் இருந்தது. இன்று ஒரு பெண் நாயனம் உள்பட மேள தாளம் முழங்கியது.

தேரின் பின்னால் பெண்கள் கோஷ்டி பஜனை செய்து கொண்டு வந்தனர்.

—SUBHAM—-

TAGS-லண்டன் முருகன் தேர்,  திருவிழா 2023, London Skanda Temple Rath Yatra 2023 ,

ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் -2 (Post No.12,411)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,411

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

First Part was posted yesterday

மேலை நாட்டு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டால் எதிரிடை அல்லது பக்க விளைவுகள் (Side Effects)  அதிகம்; அவை உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு சக்தியை   (damaging (Immune System) ஒழித்துக் கட்டிவிடும் . மன நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் அவர்களுடைய பாலியல் இயல்புகளை ஒடுக்கி செக்ஸ்SEX என்பதையே நினைக்க முடியாமற் செய்து விடும். அதுமட்டுமல்ல, வாழ் நாள் முழுதும் மருந்துக்கடை வாடிக்கையாளர் ஆக்கி விடும் (Life time dependence on medicines) . அவர்கள் நாம் மாதம் தோறும் அரிசி, புளி , பருப்பு வாங்குவது போல வாரம் தோறும் மருந்துகளையும் பில் Bill லையும்  அனுப்பி விடுவார்கள் !!

சரகர் எழுதிய மருத்துவ நூலுக்கு பாஷ்யம்/ விரிவுரை எழுதியவர்  ஆயுர்வேதத்தினால் ஏற்படும் நன்மைகளை அழகாக விளக்குகிறார் அவருடைய பெயர் சக்ரபாணி பண்டிதர் ,

முதலாவது நோயே வராமல் தடுக்கும்; இரண்டாவதாக, நோய் ஏற்பட்ட பின்னர் சாப்பிட்டாலும் நோயின் வீரியத்தை ஒடுக்கும் என்கிறார் :

வியாதிக சமத்துவம் வ்யாதி பல விரோதித்வம் வ்யாதியுத் பதபிரதிபந்தகத்வம்

சரக சம்ஹிதை 26-27

தினமும் நல்ல மூலிகை, கீரைகளை சமையலில் சேர்ப்பதால் நோய்த் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கும் .

என் அம்மா செய்த வைத்தியம் !

நான் 60, 65 ஆண்டுகளுக்கு முன்னர் என் அம்மா செய்த வைத்தியம் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது; வாரம் தோறும் எங்களை அழ , அழ வைத்து எண்ணெய் குளியல்/ ஸ்னானம் செய்ய வைப்பார்கள் . அன்றைய தினம் கண்டத்திப்பிலி ரசம் வைப்பார்கள். ஆறு மாதத்துக்கு முன்னர் இந்தியா போனபோது நான் சென்னையில் கண்டத்திப்பிலியும் சித்திரத்தையும் வாங்கி வந்தேன். இருமல் வந்தால் சித்திரத்தையை சிறிது வாயில் மெல்லுகிறோம் கஷாயம்  வைக்கும் பொறுமை இல்லை.

யாரேனும் வயிற்றுக் கோளாறு என்று கம்ப்ளைன்ட் Complaint பண்ணினால் அனறைய தினம் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிளகு ரசம் அல்லது ஜீரா ரசம்தான். ஏனைய நாட்களில் தக்காளியுடன் பருப்பு ரசம்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அன்றிரவு எங்களுக்கு ஜீரகப்பொடி சாதம் ; அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுக்கோளாறுகளை இது சரிக்கட்டி விடும்

இது தவிர வருடத்தில் ஓரிரு முறை கட்டாயப்படுத்தி விளக்கெண்ணெய் குடிக்க வைத்த கதைகளும் உண்டு.

உங்களில் பலருக்கும் இந்த அனுபவங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிள்ளைகளின் உடலை வலுப்படுத்த– கான்க்ரீட் அஸ்திவாரம்  போட்டு கட்டிடங்களை வலுப்படுத்துவது போல —  எவ்வளவோ முயற்சிகளை தாய்மார்கள் மேற்கொள்வது இயற்கைதான்.

பாட்டியும் சும்மா இருக்க மாட்டார்கள் உமிக்கரி பற்பொடி , கல்நார் பற்பொடி என்று பலவகை பற்பொடிகளைச் செய்து ஏதோ ஏதோ கலப்பார்கள் ; அது என்ன என்று கேட்டதில்லை. உமிக்கரி கருகுவதை மட்டும் வேடிக்கை பார்ப்போம்.

அதனால்தானோ என்னவோ 75 வயது ஆகியும் ஒரே ஒருமுறை மட்டும்தான் பல் டாக்டரிடம் போய் ‘இளித்’தேன்! அதாவது பல்லைக் காட்டினேன் ;ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் 40, 45 வயதுள்ள  என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பல் வலி வந்தால் என்ன செய்வதென்று கூட அறியாதவன் நான் என்று சொல்லி 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு முறை பல் டாக்டரிடம் போனேன் என்று சொல்லி சம்பாஷணையைத் தொடர்ந்தேன் ; அவர் இதை மறித்து

What, What வாட்வாட் ?? என்று கேட்டு அவர் என்னை நிறுத்திவிட்டு

நான் இதற்குள் நாலைந்து முறை பல் டாக்டரிடம் போய்விட்டேன் என்றார் ; இவ்வளவுக்கும் அவர் வெற்றிலைப் போடுபவரும் அல்ல ; சாக்லேட் சாப்பிடுவபருமல்ல !

கிழவிகள் மர்மம் !

எனக்கு ரொம்ப நாளாகா ஒரு Doubt டவுட்டு; என்னைவிட வயதான கிழவிகளுக்கு, மன்னிக்கவும் பெண்மணிகளுக்கு, எப்படி அழகான  , முத்துப்போல பற்கள் இருக்கின்றன ? என்று வியப்பேன் . ஒரு டாக்டர் பெண்மணி, எங்களுக்கு நல்ல நண்பர் ; எப்போது போனாலும் அந்த வயதான தம்பதிகளுக்கு பிஸ்கட் அல்லது காரசேசேவை போன்றவற்றை வாங்கிச் செல்வேன். ஒருமுறை கொஞ்சமும் கூசாமல் இரு, இரு, பல் செட்டை ‘க்ளீன் clean  செய்ய ஊரப்போட்டு வைத்திருக்கிறேன் ; போய் மாட்டிக்கொண்டு வருகிறேன் என்று உள்ளே விரைந்தார் எனக்கு சிரிப்பதா பிரமிப்பதா என்று புரியவில்லை. அப்போதுதான் கிழவிகளின்  முத்துப்பல் மர்மம் துலங்கியது அதுவரை அந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்க்காதது என் அறியாமையே!

—Subham—

Tags- அம்மா வைத்தியம், விளக்கெண்ணெய், கண்டத்திப்பிலி, எண்ணைக் குளியல், ஆயுர்வேதம் ,அல்லோபதி , பகுதி 2

கப்பல் வடிவில் அதிசய கோவில்! கர்நாடக மாநிலத்தில்…… – Part 21 (Post.12,410)

Picture of Karwar Durga Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,410

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 21

PAART 21

98.கேலடி ராமேஸ்வரவீர பத்ரேஸ்வர கோவில்கள்

99.இக்கேரி அகோரேஸ்வர் கோவில்

100.கார்வார் துர்கா கோவில்

101.ஸெஜ்வாட் ஸெஜ்ஜேஸ்வர் கோவில்

102.அவர்சா காத்யாயனி கோவில்

XXXX

கேலடி ராமேஸ்வரவீர பத்ரேஸ்வர கோவில்கள் KELADI RAMESHVARA AND VEERA BHADRESHVARA TEMPLES

500 ஆண்டுகளுக்கு முந்திய நாயக்கர் ஆட்சியின் கலைகளைப் பிரதிஅளிக்கும் கோவில்கள் கேளடி இக்கேரி கோவில்கள் ஆகும்

சாகர் என்னும் நகர் அருகிலுள்ள ராமேஸ்வரர் கோவிலில் 24 அடி உயர தூணில் பிள்ளையாரை பெண்கள் வணங்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது . அது மஹாராணி சென்னம்மாவின் உருவம் என்று கருதப்படுகிறது. இருதலைப் பறவை என்னும் கண்டபேரண்ட பட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நாணயங்களிலும், கொடிகளிலும், சங்க கால அகநானூறு நூலிலும் இருதலைப் பறவை உள்ளது ராமேஸ்வரர் கோவிலிலும் வீரபத்ரேஸ்வர் கோவிலிலும் சிவா பெருமானைத் தரிசிக்கலாம்.

வீரபத்ரேஸ்வர் கோவிலில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம், புலி, யானை, குதிரை, பறவைகள் ஆகியன கான் வேண்டிய சிற்பங்கள்

கேலடி , ஷிமோகா நகரிலிருந்து 80 கி.மீ.

ஷிமோகா என்றவுடன் எல்லோருக்கும் அதி உயரத்திலிருந்து விழும் ஜோக் பால்ஸ் JOG FALLS என்னும் நீர்வீழ்ச்சசிதான் நினைவுக்கு வரும். அங்குள்ள கோவில்கள் பற்றிப் பலருக்கும் தெரியாது .

விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சி செய்த செளடப்ப நாயக்கர் இந்த இரட்டைக் கோவில்களைக் காட்டினார். கோவிலில் உள்ள லிங்கம், ஒரு நிலத்துக்கு அடியில் கிடைத்தது பற் றிப் பல சுவையான கதைகளை சொல்ல்லுவார்கள் கிராம மக்கள்.

ஏனைய தெய்வங்களின் உருவங்களும் இங்கே சேத்துப்பட்டுள்ளன. இங்குள்ள பார்வதி சந்நிதியில் மார்ச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை; பெரிய மரத்தினாலான  தேரும் நிற்கிறது  ; கோவிலுக்கு எதிரியுள்ள மியூயமும்  காணவேண்டிய இட ம் .

ராமேஸ்வரம் கோவிலைப் பார்க்கச் செல்லுவோர் மறக்காமல் போக வேண்டிய இடங்கள் :

Sagara சாகர

Jog falls ஷராவதி நதியில் உள்ள ஜோக் அருவி

Shivamogga சிவமொக்கா /ஷிமோகா

Sringeri Mutt சிருங்கேரி மடம்

Mattur: The Sanskrit Village சம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் உள்ள மாத்தூர்

Coffee Museum in Dasarahalli தசரஹல்லி காப்பி மியூஸியம்

Aghoreshwara Temple of Ikkeri இக்கேரி அகோரேஸ்வர கோவில்

Murudeshwar Temple and Bhukailasa Cave Museum in Murdeshwarமருதேஸ்வர் கோவில், குகை மியூஸியம்

Kamalapura Archaeological Museum in Kamalapura on Daroji-Kamlapura Road கமலா புர தொல் பொருட் துறை மியூஸியம்.

99.இக்கேரி அகோரேஸ்வர் கோவில் IKKERI AGHORESVARA TEMPLE

சாகர் என்னும் ஊரிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இன்னும் ஒரு நாயக்கர் கோவில் அகோரேஸ்வரர் என்னும் சிவன் கோவில் ஆகும்

இக்கேரி என்னும் ஊரின் பெயருக்கு இரண்டு தெருக்கள்/ வீதிகள் என்று பொருள் . இந்தக் கோவில், அளவில் மிகப்பெரியது

கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் அமர, பள  பள கருங்கல் நந்தி எதிரே நிற்கிறது. கர்ப்பகிரகத்தைச் சுற்றி 32 பெண்கள் அமர்ந்திருப்பது  குறிப்பிடத்தக்கது ; விக்ரமாதித்தன்- வேதாளம் கதையில் வரும் 32 தங்கபதுமைகளை நினை வு படுத்தும் அவை.

தமிழ் நாட்டிலுள்ள நாயக்கர் காலா கோவில்களில் காணப்படும் யானை, யாளி ஆகியவற்றை இங்கும் காணலாம். ஒருகாலத்தில் இந்த ஊர் கேலடி நாயக்க வம்சத்தினரின் தலைநகரமாக இருந்து .

100.கார்வார் துர்கா கோவில் KARWAR DURGA TEMPLE

சதாசிவகாட் அருகி ல் குன்றின் மேல் குடிகொண் டுள்ளாள் அழகிய துர்கா பவானி. கோவில் பக்கத்தில் ஒரு பீரங்கியும் நிற்கிறது. தொலைவில் கடலின் பேரலைகளையும் காணலாம். துர்காதேவியின் அழகில் மயங்குவோர் கண்களை வேறு பக்கம் திருப்ப மாட்டர்களாம் .

மலையின் உச்சி வரை கார்கள் போகின்றன. சிவாஜி மகாராஜனும் வந்து வனகிகிய துர்க்கை இவள் என்ப து  பக்தர்களின் கதை.

கார்வார் பஸ் நிலையத்த்திலிருந்து 6 கி.மீ

காளி நதியின் வட கரையில் அமைந்த இந்த குன்றிலுள்ளதுர்கை சிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள்

சாந்த துர்கா என்ற பெயரும் உண்டு Shanthadurga Temple. இது 1665ம் (CE ) ஆண்டில் கட்டப்பட்டது

101.ஸெஜ்வாட் ஸெஜ்ஜேஸ்வர் கோவில் SHEJJESWAR TEMPLE, , SHEJWAD

தேவ்பாக் கடற்கரை அருகில் அமைந்த ஆத்மலிங்க கோவில் இது; இறைவனின் நாமம்- ஷெஜ் ஜேஸ்வர லிங்கம்.கோகர்ண சிவ லிங்கத்தை ராவணன் பிடுங்க முயன்றபோது விழுந்த ஒரு கல் இந்த லிங்கம் என்பது பக்தர்கள் சொல்லும் கதை. 3 ஆத்மலிங்கங்கள் இருப்பதாகவும் அனைத்தையும் ஒரே மூச்சி ல் / ஒரே சுற்றில் தரிசிப்பது விசேஷம் என்றும் தீவிர சிவா பக்தர்கள் நம்பு கிறார்கள் ; அந்த ஐந்து ஆத்ம லிங்கங்கள் பின்வருமாறு :

1. Shejjeswararlingam  ஷெஜ் ஜேஸ்வர லிங்கம்.

2. Mahabaleswarar, Gokarna கோகர்ண, மஹா பலேஸ்வர்

3.Daranatheswar,Dhareswar தரநாதேஸ்வர தாரேஷ்வர்

4.Gunavatheswar, Gunawandhe குணவதேஷ்வர்

5.Mmurdeswarar, Murdeswarar.முருதேஸ்வர்  என்ற 5 ஆத்ம லிங்கங்கள்.

102.அவர்சா காத்யாயனி கோவில் Shri Katyayani Baneshwar Temple, Aversa

கப்பல் வடிவில் கோவில்

உத்தர கன்னட மாவட்டத்தில் அங்கோலா அருகில் இருக்கிறது இந்த காத்யாயனி பாணேஸ்வரர் கோவில். கோவா நகரிலிருந்து 100 கிமீ .

பல பிராமண குடும்பங்களின் குல தெய்வம் காத்யாயனி. தலை சிறிது தாழ்த்திய நிலையில் காத்யாயனி அருள் மழை பொழிகிறாள் . மதுரை மீனாட்சி போல, இங்கும் காத்யாயனிக்குதான் முதல் பூஜை. பின்னர் சிவ பெருமானாகிய  பாணே ச்வரருக்கும் கணபதிக்கும் பூஜை. இந்தக் கோவில் கப்பல் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது

 கோவாவிலுள்ள இந்தக் கோவில்களை பொற்சசுக்கீசிய கிறிஸ்தவர்கள் அழித்தது போக எஞ் சிய ஒரே தெய்வம் காத்யாயனிதான் .கோவிலைப் பற்றி நீண்ட கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு கப்பல் வியாபாரிக்கு ஏற்ப்பட்ட கஷ்டங்களிலிருந்து இந்த ஸ்ரீ தேவி மீட்டதால் கப்பல் வடிவில் கோவில் கட்ட அவர் உறுதி மொழி எடுத்தார். அன்னையும் அவருக்கு அருள்புரியவே 400 ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் வடிவில் எழுந்தது இக்கோவில் .

To be continued………………………………..

Tags கப்பல் வடிவ கோவில், காத்யாயனி, ஆத்ம லிங்க, கோவில்கள்,

கேலடி நாயக்கர்கள் , பகுதி 21, கர்நாடக,

இதிஹாஸப் பெண்மணிகள்!—2 (Post No.12,409)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,409

Date uploaded in London –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

குமுதம் பக்தி ஸ்பெஷல் 17-8-2023 SUPPLEMENTஆக

வெளியாகியுள்ள கட்டுரை

மூன்று பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

இதிஹாஸப் பெண்மணிகள்!  (இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

கலாதிரிஜடை

ராமனைப் பிரிந்த மன உளைச்சலில் சீதை மனம் வருந்தி சோகத்துடன் உயிரையே விடக் கருதிய வேளையில் உளவியல் ரீதியாக ஆறுதல் சிகிச்சையை அளிப்பவர்கள் விபீடணனின் புதல்வியான கலாவும், திரிசடையும்.

இன்றைய நாட்களில் சைக்கலாஜிகல் ஹீலர்  (Psychological Healder) செய்யும் பணியை அவர்கள் செய்து சீதையை உற்சாகம் அடையச் செய்கின்றனர்.

 வெயிலில் வைத்த தீபம் போல வாடி இருக்கும் சீதையிடம் திரிசடை இராவணன் அழியப் போவதை தான் காணும் பல துர்நிமித்தங்களையும், தான் கண்ட கனவில் வரும் காட்சிகளையும் வைத்து விரிவாகக் கூறுகிறாள்.

‘பாதிக் கனவில் நீ எழுப்பவே நான் எழுந்தேன்’ என்று திரிசடை கூறிய போது, அவளைக் கை கூப்பித் தொழுத சீதை, ‘அன்னையே, அதன் குறை காண்க’ (மீதிக் கனவையும் காண்பாயாக) என்று வேண்டுகிறாள்.

ஸ்வயம்பிரபை

அரிய தவத்தைச் செய்யும் மூதாட்டியான ஸ்வயம்பிரபை ஹேமா என்பவளின் மாளிகையைக் காவல் காப்பவள். அந்த மாளிகை உள்ளிட்ட அற்புதமான சிருஷ்டியை மயன் என்ற அசுரன் தன் மாயையினால் விந்திய மலையில் ஒரு குகையில் செய்திருந்தான்.

அதற்குள் அநுமனும் மற்ற வீரர்களும் நுழைந்தனர். அதிசயமான பல அற்புதக் காட்சிகளை அங்கே கண்டனர். அவர்கள் ஸ்வயம்பிரபையைக் கண்டு தாங்கள் அனைவரும் சீதையைத் தேடி வந்ததைச் சொல்ல ஸ்வயம்பிரபை மனம் இரங்கினாள்.

இந்தக் குகையில் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே செல்லவே முடியாதே என்று அவள் சொல்ல அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அவர்களின் பணியை உணர்ந்த ஸ்வயம்பிரபை, “அனைவரும் கண்களை மூடுங்கள்” என்று சொல்லி தன் தவ வலிமையால் ஒரு நொடியில் அனைவரையும் குகைக்கு வெளியே கொண்டு விடுகிறாள். ஸ்வயம்பிரபை அறிவுநிலை கடந்த உளவியல் ஆற்றல் சக்தியைக் – mystic power – கொண்டிருப்பதை இங்குக் காண்கிறோம்.

இந்த வரலாற்றைக் கிஷ்கிந்தா காண்டத்தில் காணலாம்.

சீதை

இதிஹாஸத் தலைவியான சீதை பொன்னின் ஜோதி. போதின் இன் நாற்றம் (பூவின் நறுமணம்) செஞ்சொல் கவி இன்பம் போலத் திகழ்பவள். கற்பின் கனலி என இப்படியெல்லாம் கம்பனால் வர்ணிக்கப்படுகிறாள்.

சீதை அரண்மனையை விட்டு வெளியே செல்லாதவள். என்றாலும் ராமனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று கடும் வனவாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

‘இராவணனை மட்டுமல்ல கணக்கில்லாத உலகங்களை எனது சொல்லினால் சுட்டுப் பொசுக்குவேன்; ஆனால் அது ராமபிரானின் வில்லின் ஆற்றலுக்குக் குறையை உண்டாக்கும்; ஆகவே அப்படிச் செய்யவில்லை’ என்பது அவள் வாக்கு. (எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்)- சூளாமணிப் படலம் பாடல் 18)

Perfect Partner – என்றெல்லாம் இப்போது புகழ்கிறோமே பலரை – சீதையை என்ன சொல்லிப் புகழலாம்?!

இனி மஹாபாரதத்திற்குள் நுழைவோம்.

திரௌபதி

பாஞ்சால நாட்டின் தவப்பயன். ஓவியம் நிகர்த்தவள். அருள் ஒளி. நிலத் திரு. எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியம். தெய்விக மலர்க் கொடி. கடி கமழ் மின்னுரு. கமனியக் கனவு – இப்படி மகாகவி பாரதியார் வர்ணிக்கும் பேரழகி திரௌபதியின் குணநலன்களை எடுத்துக் கொண்டால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

தர்மபுத்திரர் முடி சூடி அரசனாகத் திகழ நாட்டின் நிர்வாகத்தை நிர்வாகம் செய்யும் பெரும் நிர்வாகியாக – Great State Administrator ஆகத் திகழ்ந்தாள் திரௌபதி.

அவளுக்கு இருந்த நினைவாற்றல் அபாரமானது. பல்லாயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு படைப்பது திரௌபதியின் முக்கியச் செயல். திரௌபதியிடம் வேலை பார்த்தோர் பல்லாயிரக்கணக்கான பெண்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய பெயரும் திரௌபதிக்குத் தெரியும். அவர்களுக்குரிய அன்றாட வேலையையும் அவளே கொடுப்பது வழக்கம்.

தர்மர் அரசாட்சி செய்தாலும் முக்கியமான அரசு விதிகளை திரௌபதியே உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. கஜானாவில் உள்ள நிதிச் செல்வம் திரௌபதிக்கு அத்துபடி. ஏராளமான ஏழைகளுக்கு உதவும் திட்டத்தினால் அது குறையும் போது உடனடியாக அர்ஜுனன் மற்றும் பீமனை அழைத்து தேவையான நிதி பற்றிக் கூறி உடனே கஜானாவை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு கூறுவது திரௌபதியின் பழக்கம்.

இப்படி ஒரு நினைவாற்றல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுவது இயல்பு. ஆனால் இதெல்லாம் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. நெப்போலியனுக்கு அவனது படையில் இருந்த அனைத்து வீரர்களின் பெயரும் தெரியும். அவனைப் பற்றிய சரித்திரம் எழுதிய பல ஆசிரியர்களும் அவனது நினைவாற்றலை, ‘மாபெரும் விந்தை’, ‘போட்டோகிராபிக் மெமரி’, ‘ஒப்பற்றது’ என்றெல்லாம் வர்ணிக்கின்றனர்.

சைரஸ் மன்னனும் தனது படையில் இருந்த ஒரு லட்சம் வீரர்களைப் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம். தெமிஸ்டாக்ளிஸ் ஏதேன்ஸ் நகரில் இருந்த முப்பதினாயிரம் குடிமக்களைப் பெயர் சொல்லியே அழைப்பாராம். இந்த விவரங்களையும் இன்னும் பல அதிசயச் செய்திகளையும் டோனி புஜன் எழுதிய மாஸ்டர் யுவர் மெமரி நூலில் காணலாம். (Master Your Memory by Tony Buzan)

ஆக திரௌபதியை நினைவாற்றல் ராணி – மெமரி க்வீன் (Memory Queen) என்று சொல்வதில் தவறே இல்லை!

சத்யபாமா

பூமி தேவியின் அவதாரமான சத்யபாமா நரகாசுரனை வதம் செய்ய அவதரித்த வீராங்கனை.

கிருஷ்ணரின் மனைவி.

பூமித்தாயின் புதல்வனான நரகாசுரன் தன் அன்னையினால் மட்டுமே தன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன்.

நரகாசுரன் கிருஷ்ணர் ஏவிய அனைத்து அஸ்திரங்களையும் முறியடித்து அவரைத் தனது அஸ்திரங்களால் திணற அடிக்க, கிருஷ்ணர் கீழே விழுகிறார்.

இதைக் கண்ட சத்யபாமா பெரும் கோபம் கொண்டு நரகாசுரனின் மீது தானே அஸ்திரத்தை ஏவி அவனது நெஞ்சில் அடிக்க அவன் மாண்டு போகிறான். அற்புதமாகத் தேரோட்டுவதில் வல்ல சத்யபாமா அஸ்திரங்களைக் கையாளுவதிலும் வல்லவள்.

நேருக்கு நேர் நின்று போர் புரியும் சாகஸப் பெண்மணியை தற்காலத்தில் கூறப்படும் COMBAT EXPERT என்று சொல்லி வியக்கலாம்.

திரௌபதியின் நெருங்கிய தோழி சத்யபாமா. இருவரும் அந்தரங்கமாகப் பேசுகையில் தாம்பத்ய ரகசியங்களைப் பேசிக் கொள்ளும் போது திரௌபதி அவற்றை நுட்பமாக விளக்குகிறாள். (வனபர்வம்  235வது அத்தியாயம்).

கணவனுடன் ஒரு மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு திரௌபதி சத்யபாமைக்குக் கூறும் ரகசியங்களை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுவர்..

                           ***                   தொடரும்

சாப்பாட்டு ராமன் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,408

Date uploaded in London – –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 13  சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

வெஜிடபிள் பிரியாணி சாப்பிட லாம் ; வாருங்கள்! முதலில் தேவையான  மசாலா சாமான்கள் , முதலியன இருக்கிறதா என்பதை இந்தக் கட்டத்தில் பாருங்கள்

ட்டைவெ
புநெங்
முவுய்கா
ந்கி
திராம்
ரிப்
சோம்பு
றுரைதாஜீ

Answers விடை

சோம்பு, ஏலம் , கிராம்பு, புலவு, சோறு நெய் , முந்திரி, ஜீரகம், வெங்காயம், தயிர், ரைதா, பட்டை, உப்பு.

—subham—

Tags– சாப்பாட்டு ராமன், மசாலா சாமான்கள், வெஜிடபிள் பிரியாணி

E for Ernakulam Know India Puzzle (Post No.12,407)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,407

Date uploaded in London – –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

You have already solved A to D Puzzles. Today we will solve E for Ernakulam Puzzle where the description of eight places in India are given. Try it.

1.Cave temples in an island off Mumbai; famous statues are there.

2.World  famous caves and rock cut architecture in Maharashtra with sculptures and unfinished temples of three different faiths, i.e. Buddhism, Brahmanism, and Jainism.

3. A town in Salem district of Tamil Nadu  where from the previous chief minister came. News papers used only the town name instead of Mr Palaniswami; now he is leader of opposition.

4.This Uttar Pradesh city was an important center for the Revolt of 1857 (Allan Octavian Hume, the founder of Indian National Congress was district collector then). Also is the place of sangam or confluence between Yamuna and Chambal. It is also the site of the remains of the Great Hedge of India.

5. famous for its ancient ChurchesHindu templessynagogues and mosques. The district includes the largest metropolitan region of the state: Greater Cochin; commercial centre of Kerala.

6. This town is famous for several markets. It is the country’s largest turmeric market.  Turmeric Prices for the whole of India are fixed at four markets here; also famous for carpets and textiles.

7.Chennai neighbourhood town with thermal power station, fishing port, river drainage system and famous lakes and lagoons

8. Once this town was the capital of the Vishnukundina rulers, It was formerly known as Helapuri. A part of the West Godavari district in Andhra Pradesh, it is fast emerging as a prominent trade hub, owing to its carpet and incense stick industries.

ANSWERS:

1.ELEPHANTA; 2.ELLORA; 3.EDAPPADI; 4.ETAWAH; 5.ERNAKULAM; 6.ERODE; 7.ENNORE; 8.ELURU

–subham—

QUIZ தமிழ் இலக்கண பத்து QUIZ (Post No.12,406)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,406

Date uploaded in London – –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ SERIES No.65

தமிழ் இலக்கண பத்து

1.தமிழில் உள்ள முக்கிய இலக்கண நூல்கள் எவை ?

XXX

2.தமிழர்களுக்கு ஏன் சுவாமிநாத தேசிகரைப் பிடிப்பதில்லை ?

XXX

3.இப்போதுள்ள இலக்கண நூல்களில் பழைய நூல் தொல்காப்பியம்அதற்கு முன்னர் என்ன நூல்கள் இருந்தன?

XXX

4.வீர சோழியம் என்னும் இலக்கண நூலாய் எழுதியவர் யார் ?

XXX

5.தொல்காப்பியயத்துக்கு அடுத்த பெரிய மைல் கல் MILE STONE நன்னூல் அதை எழுதியவர் யார்அதற்கு கரணம் என்ன ?

XXX

6.பவணந்தி முனிவர் யார் ?

XXX

7.தமிழ் சொல்லுக்கெல்லாம் தாய் ஸம்ஸ்க்ருதம்தான் என்று சொன்னவர் யார் ?

XXX

8.பிரயோக விவேகம் என்னும் தமிழ் இலக்கண நூல் விளம்புவது என்ன ?

XXX

9.ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்று சொன்னவர் யார் ?

XXX

10.சிவஞான முனிவர் யார்இலக்கணம் பற்றிய அவர் கருத்து என்ன?

XXX

விடைகள்

1.முக்கிய தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம்

நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம்

இலக்கணக் கொத்து, தொன்னூல் விளக்கம்

முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகிய நூல்கள்

XXXX

2.இவர் இலக்கணக் கொத்து என்னும் நூலின் ஆசிரியர்; தனித்த தமிழில் நூலே இல்லை. பின்னர் எப்படி தமிழை ஒரு மொழி என்று சொல்ல முடியு? வெட்கக்கேடு என்று எழுதிவிட்டார் . தமிழ், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் இலக்கணம் ஒன்றுதான் என்பது அவர்தம் வாதம்

“தமிழ்நூற் களவிலை அவற்றுள்

ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ

அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்

றறையவே நாணுவர் அறிவுடையோரே

ஆகையால் யானும் அதுவே அறிக

வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்

இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக.

XXXX

3.அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூல் இருந்தது; அது கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால  உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள்களில் இருந்து பல செய்யுள் விதிகள் கிடைத்தன.

XXX

4.புத்தமித்திரர் என்பவர் 11 ஆம் நூற்றாண்டில் வீர சோழன் ஆட்சிக் காலத்தில் எழுதியது இந்த நூல்.  தொல்காப்பியம் சொல்லும் விதிகளுடன்  சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும்.

XXX

5.நன்னூல் பொ.து ஆண்டு . 13-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்டது மொழிகள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை எல்லா உலக மொழிகளும் காட்டுகின்றன ; தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் தோன்றியது. அதற்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னர்  நன்னூல் தோன்றியது. இடைக்கால மொழி மாற்றங்களை கருத்திற்கொண்டு புதிய இலக்கண விதிகளை இயற்றினார்  பவணந்தி முனிவர். மயிலைநாதர் என்பவர் உரை எழுதினார்

XXX

6.பவணந்தி முனிவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். இவருக்குத் தூண்டுதலாக இருந்தவன் சீயகங்கன் என்னும் சிற்றரசன் என்பது பாயிரத்திலிருந்து தெரிகிறது பொன்மதிற் சனகை என்பதில் இருந்து இவர் சனகாபுரி/ சீனாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்டாலும், கொங்கு நாட்டுச் சனகாபுரியா, தொண்டை நாட்டுச் சனகாபுரியா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.சாமிநாதய்யர், பவணந்தியாரை மைசூருக்கு அருகிலுள்ள நரசிங்கபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். தொண்டை நாட்டிலும், சனகாபுரம் என்று ஊர் இருக்கிறது. தொண்டை மண்டல சதகத்திலும் நன்னூல் எழுதிய பவணந்தியார் வாழ்ந்த சனகாபுரத்தைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது; ஆகையால் தொண்டை மண்டலம் என்பதே சரி

XXX

7.வீரசோழியம் என்ற நூலின்  ஆசிரியர் புத்தமித்திரர். அவருடைய மாணாக்கர் ; பெருந்தேவனார். இருவரும் பௌத்தர்கள்.

தமிழ் சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் – வீரசோழிய உரை ஆசிரியர் பெருந்தேவனார். இவரது காலம் 12-ஆம் நூற்றாண்டு.

XXX

8.பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆழ்வார் திருநகரி என்னும் ஊரைச் சேர்ந்தவருமான சுப்பிரமணிய தீட்சிதர் என்பார் இந்நூலை இயற்றினார். இந்நூலுக்கான உரையையும் இவரே எழுதியுள்ளார்.

தமிழும் வடமொழியும் வேறல்ல என்றும் வடமொழியிலிருந்தே தமிழ் மொழி உருவானது என்றும் வடமொழி கற்றோரிடையே அக்காலத்தில் நிலவிய கருத்தையே இந்நூலும் வலியுறுத்துகின்றது.

XXXX

9.சேனாவரையர். அவர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

ஒரு சொல்லாய வழித் தமிழ் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் – சேனாவரையர்

XXX

10.சிவஞான முனிவர் (1753 – 1785) தமிழ் மொழியிலும், சம்ஸ்க்ருத  மொழியிலும் புலமை  பெற்றவர்.சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்; இளமையிலேயே துறவியானவர். வடமொழியும் தமிழ்மொழியும் நிகரானவை என்ற எண்ணம் கொண்டவர் ;சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்.

தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்கள் உரை உரையாகா எனவும் வடநூல் உணர்ந்தாற்கன்றித் தமிழியல்பு விளங்கா எனவும்  உரைத்தார் சிவஞான முனிவர்.

XXX

—SUBHAM—

TAGS- இலக்கண நூல்கள், பவணந்தி , நன்னூல், மயிலைநாதர், சம்ஸ்கிருதம் தாய் மொழி, அகத்தியம்

ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் -1 (Post No.12,405)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,405

Date uploaded in London – –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் 

அல்லோபதி ALLOPATHY என்பது நாம் இன்று டாக்டர்களிடம் பெரும் ஆங்கில சிகிச்சை முறை.

ஆயுர்வேத சிகிச்சை AYURVEDIC TREATMENT என்பதன் தோற்றம் / ஆரம்பம் ரிக்வேதம், அதர்வண வேதத்திலேயே இருக்கிறது. இதனால் உலகின் பழைய மருத்துவ முறைகள் என்று சொல்ல முடியும்.

சரகர், சுஸ்ருதர் ஆகிய இருவரும் எழுதிய சம்ஸ்க்ருத மருத்துவ நூல்கள்  உலகிலேயே பழைய மருத்துவ நூல்கள் ஆகும். இப்போதைய மருத்துவ மாணவர்கள் எடுக்கும் ஹிப்போக்ரடீஸ் உறுதி மொழிக்கும் Hippocratic Oath  முன்னதாகவே மருத்துவர்கள் எடுக்கவேண்டிய உறுதி மொழிகள் நமது நூல்களில் உள்ளன. இந்துக்களைப் பொறுத்தமட்டில் தன்வந்திரிதான் மருத்துவத்தின் தந்தை ; கடவுளை டாக்டர் என்று அழைக்கும் ஓர் மதம் இந்துமதம்தான். பேஷஜம் . பிஷக் என்று மருந்ததையும் மருத்துவத்தையும் குறிக்கும் சொற்கள் சிவ பெருமானின் பெயர்களாக யஜுர் வேதத்தில் வருகின்றன .

சமய நூல்களில் குறிப்பிடும் பிணி, நோய் என்பது பவ ரோகம், அதாவது பிறவிப்பிணி (பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் நோய்) என்று எண்ணிவிடக்கூடாது அந்த நோயையும் உடலில் வரும் நோயையும் நமது துதிகள் குறிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்திரி சந்நிதி இருப்பதைக் காணலாம். அவர்தான் மருத்துவத்தின் தந்தை; மேலும் அந்தக் கோவிலில் மருந்தாக மண் உருண்டை, உப்பு, மிளகு கொடுப்பதெல்லாம் பிறவிப்பிணி சம்பந்தப்பட்டதல்ல. உடல் பிணி தொடர்புடையன ! 

Bheshajam – That which removes the fear is known as bheshajam. The one which is known by the bhishak(physician), which is helpful in his treatment is known as bheshajam.

நம் நாட்டு மருத்துவ முறைக்கும் வெளிநாட்டு ஆங்கில மருத்துவ முறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மூன்று  ; அவை

1. ஆங்கில மருத்துவம் , நோய் வந்த பின்னர் சிகிச்சை தருவது. ஆயுர்வேதம் என்பது நோய் வராமலேயே செய்து ஆயுளை வளர்ப்பது ; இதையே இன்னும் ஒரு முறையிலும் சொல்லலாம்; வந்த பின்னர் வருந்துவதை விட வருமுன் காப்பதே மேல்

2.ஆங்கில மருத்துவ முறை நோயை மட்டும் தாக்கும் , நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகளைத் தருவார்கள் ; ஆனால் ஆயுர்வேத, சித்த மருத்துவம் முழுமையான அணுகுமுறை உடையவை; இதை ஆங்கிலத்தில் ஹோலிஸ்டிக் HOLISTIC என்பர்

3.பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள்ANTI BIOTICS  நம் உடலில் உள்ள ‘நன்மை செய்யும் பாக்டீரியா’க்களையும் கொன்றுவிடும். இந்திய டாக்டர்களாவது அதைச் சொல்லி வைடமின் மாத்திரைகளும் சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்கள்; லண்டன் போன்ற இடங்களில் அதையும் சொல்லுவதில்லை. இங்கு டாக்டர் சீட்டு இருந்தால்தான் அந்த வகை மாத்திரைகள் கிடைக்கும். பாக்டீரியாக்கள் அந்தவகை மாத்திரைகளையும் உண்டு, கொழுத்து, ஏப்பம் விட்டு விடுவதால் மேலை நாடுகளில், இந்தியா போல மருந்துக்கு கடைகளில் ANTI BIOTIC CAPSULES ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகளை வாங்க முடியாது.

2300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த மத நூல்களும் பிரபல மருத்துவர்கள் பற்றிப் பேசுகின்றன . .வேத காலத்தில் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டை மருத்துவர்கள் ஒரு பெண் கவிஞருக்கு செயற்கைக் கால் பொருத்திய அறுவைச் சிகிசிச்சையை ரிக் வேதம் பாடுகிறது ; சங்க காலத் தமிழர்கள் பொற்கைப் பாண்டியனுக்கு தங்கத்தினால் ஆன செயற்கைக் கை பொருத்திய விஷயத்தைப் பேசுகிறது

xxxx

ஹோலிஸ்டிக் HOLISTIC என்றால் என்ன?

நோயாளியை ஒரு முழு மனிதன் என்று கொண்டு, அவனது  உணவு, உடல் வாகு, உறைவிடம், மன நிலை, வாழும் சூழ்நிலை ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டு சிகிச்சை தருவது இந்திய நாட்டு வைத்தியமாகும்

characterized by the treatment of the whole person, taking into account mental and social factors, rather than just the symptoms of an illness.

இதை இன்னும் ஒரு விஷயத்தால் அறியலாம். லண்டன் முதலிய இடங்களில் நான் டாக்டரிடம் போனால் அவர் , மருந்துச்  சீட்டை எழுதிக்கொடுப்பார். ஆனால் உணவு பத்திய முறைகள் பற்றி எதுவுமே சொல்ல மாட்டார். சர்க்கரை வியாதி உடையவர்ளுக்கு மட்டும் இனிப்பு சாப்பிடாதீர்கள் என்பார்; கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்புச் சத்து மிக அதிகமானால் எண்ணெய்வெண்ணெய் பதார்ர்த்தங்களை  சாப்பிடாதீர்கள் என்பார். நம்முடைய முறையில் எல்லா நோய் சிகிச்சைகளிலும் பத்தியம் உண்டு

சரகர் சொல்லும் அற்புத உவமை

சரகர் தனது சம்ஹிதையில் ஒரு அற்புத உவமையைச் சொல்கிறார்; அவருக்கு நோய்கள் பற்றி எவ்வளவு ஆழமான அறிவு இருந்தது என்பதை இது காட்டும்.

விதைகளை வெளியே வைத்திருந்தால் அவை முளைப்பதில்லை. அவைகளை மண்ணில் புதைத்து வைத்தால் அவை வளரும். இதே போலத்தான் நோய்க் கிருமிகளும் . அவை விதைக்குள் உள்ள கருப் போல  செயலற்றுக் கிடக்கும் உடலில் வைத்தால் அவை நோயாகக் கிளம்பும் . நல்ல மண், நல்ல உரம் இருந்தால் விதைகள் வளருகின்றன. அதே போல நோய்க்கிருமிகளுக்கு நாம் உரம்போட்டால் அவைகளும் வளரும். அப்படி வளராமல் தடுக்க  மூலிகை, கஷாயம், பத்தியம்  போன்றவை மூலம் ஆயுர்வேதம் உதவுகிறது ..

ஆங்கில மருத்துவ முறையில் இல்லாத நமது நாட்டுப் புற வைத்தியத்திலுள்ள பத்தியம் பற்றி நல்ல சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று இருக்கிறது

ரோகோபி பேஷஜைர் வினா பத்யாத் ஏவ நிவர்த்ததே

ந து பத்யாபிஹீ நஸ்ய பேஷஜனன்சதைர்  அபி — சார கெளமுதி 2-1

பொருள்

நோய்களை, மருந்துகளே இல்லாமல், உணவுப் பத்தியத்தின் மூலமே  குணப்படுத்தவும் இயலும்; ஆனால் சரியான பத்தியம் / உணவுக் கட்டுப்பாடு இல்லாவிடில் நூறு மருந்துகளைக் கொடுத்தாலும் நோய்களைக் குணப்படுத்த முடியாது

இது போன்ற பத்திய விஷயங்கள் மேலை நாட்டு வைத்ததியத்தில் கொஞ்சமும் இல்லை. சர்க்கரை வியாதி இருந்தால் மட்டும் உணவு பற்றி வெட்டி முழக்குவர்.

To be continued…………………………………

tags- tags- சரகர் , உவமை, பத்தியம், ஆயுர்வேத  சிகிச்சை,  அல்லோபதி சிகிச்சை

இதிஹாஸப் பெண்மணிகள்!  ( முதல் பகுதி )- Post No.12,404

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,404

Date uploaded in London –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இதிஹாஸப் பெண்மணிகள்!  (முதல் பகுதி)

ச.நாகராஜன்

இதிஹாஸப் பெண்மணிகள்!

ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய இடமே இல்லை என்ற குரல் தற்காலத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கான காரணம் மெக்காலே கல்வி முறையும் தொடர்ந்து இந்தியாவின் மேல் தொடுக்கப்பட்ட அன்னியப் படையெடுப்புகளும் அதைத் தொடர்ந்த முகலாயர் மற்றும் ஆங்கிலேய ஆட்சியுமே தான்!

சுதந்திர இந்தியாவில் மீண்டும் புகழோங்கிய காலம் மெல்ல மேல்ல ஏற்பட்டு வருகிறது.

‘பெண்ணின் பெருந்தக்க யா உள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்?’ (குறள் எண் 54) என்ற திருவள்ளுவர் கூற்றை மெய்ப்பிக்கும் பாத்திரங்கள் ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களில் உள்ளன.

அது மட்டுமல்ல, ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களை ஒரு பார்வை பார்த்தால் பழைய கால இதிஹாஸப் பெண்மணிகள் வியப்பூட்டும் பல்கலை நிபுணத்தன்மையைக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்திக் கூறும் நேர்த்தியான துணைவி – PERFECT PARTNER, உளவியல் சிகிச்சை நிபுணர் -PSYCHOLOGICAL HEALER,   பாதுகாப்பு அதிகாரி SECURITY OFFICER,  திறம்பட வாகனம் ஓட்டுநர் CHARIOTEER, அதீத தெய்வ ஆற்றல் கொண்டவர் MTSTIC,  அதீத நினைவாற்றல் கொண்டவர் MEMORY EXPERT, நேருக்கு நேர் சண்டையிடும் திறன் படைத்தவர் COMBAT EXPERT, மரணத்தையும் வெல்லுபவர் PSYCHIC POWER, மாற்று யோசனைத் திறன் கொண்டவர் LATERAL THINKER போன்ற பல்வேறு அதிசயிக்கத்தக்க ஆற்றல்களைக் கொண்ட இதிஹாஸப் பெண்மணிகள் ஏராளம்.

இதோ சில வியப்பூட்டும் பெண்மணிகள்:

லங்கிணி

இலங்கையை ஆண்ட இராவணனின் வலிமை ஒப்பற்றது.

முக்கோடி வாழ்நாள் பெற்றவன். ‘எக்கோடியாராலும் வெலப்படாய்’ என்ற வரத்தைப் பெற்றவன். வாரணம் பொருத மார்பு. (கைலாய மலையினை) வரையினை எடுத்த தோள்! நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா அவனுடையது. தாரணி மௌலி பத்து. சங்கரன் கொடுத்த வாள் – இப்படியெல்லாம் ராவணனின் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

அவனது இலங்கை பொன்னால் இழைக்கப்பட்ட மாளிகைகளைக் கொண்டது. இலங்கையைக் காக்கும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி – Chief Security Officer – லங்கிணி என்ற ஒரு பெண்மணியே. பிரம்மாவால் அனுப்பப்பட்ட அவளது காவல் மிக வலுவானது. இத்தனைக்கும் இராவணனை நினைத்தாலே உலகத்தோரும் தேவர்களும் பயப்படும் போது இலங்கைக்குள் யார் தான் புக முடியும்?

இந்திரஜித்தின் மாளிகையைக் காவல் காத்த வீரர்களுக்கு போர் அடித்துப் போயிற்றாம். சலிப்பு எதற்காக? யாரேனும் உள்ளே நுழைய முயன்றால் தானே அவர்களது காவலுக்கு ஒரு சிறிதாவது அர்த்தம் இருக்கும்! யாரும் லங்கிணியைத் தாண்டி இலங்கைக்குள்ளேயே நுழைய முடியாதே!

ஆகவே அவர்கள் மாளிகை வாயிலில் புதிர்களைச் சொல்லும் போட்டியில் – Quiz competition- இல் தான் எப்போதும் இருப்பார்களாம்!

இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகையை அங்கிருந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை சொல்லும் போது நகைச்சுவையையும் தவழ விடுகிறான் தன் பாடலில்!

வாள் முதலிய ஆயுதங்களை ஏந்தி புன்சிரிப்புடன் இருக்கும் வீரர்கள் பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பர் – டைம் பாஸ் செய்ய – (Time passing)

 ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க                                                      மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்                                      ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர்                                                           காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்

                           சுந்தர காண்டம், ஊர்தேடு படலம் பாடல் எண் 139  

அநுமன்  தனது பெரிய உடம்பைச் சுருக்கிக் கொண்டு (தன் தகை அனைய மேனி சுருக்கி) இருளில் பிரதான வாசல் வழியே செல்லாமல் மதிலைக் கடக்க முயற்சி செய்வதைப் பார்த்த லங்கா தேவி சூரியனை ராகு,கேது கவ்வுவது போலத் தடுத்தாள்.

எட்டுத் தோள் கொண்டவள் அவள். நான்கு முகம் அவளுக்கு உண்டு. வட்டமிடும் கண்ணால் அனைத்தையும் பார்ப்பவள், அநுமனை நில் நில் என்கிறாள். அப்படி ஒரு காவல் அவளுடையது.

பெரும் போர் நிகழ அனுமன் அவளைப் பிடித்து உதைக்கிறான். பிரமனால் காவல் காக்க அனுப்பப்பட்ட லங்கா தேவி, பிரமன், ‘எப்போது ஒரு குரங்கு உன்னை அடிக்கிறதோ அப்போதே உனது பணி முடிந்தது, நீ திரும்பலாம்’ என்பதை நினைவு கூர்ந்து தன் பணியை முடித்து ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று அனுமனிடம் சொல்லி பிரம்ம லோகம் மீள்கிறாள்.

அற்புதமான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான லங்கிணியின் பாத்திரப் படைப்பு விரிவாக ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

 கைகேயி

கேகய நாட்டு மன்னனின் புதல்வியான கைகேயி பேரழகி. மதி நுட்பம் வாய்ந்தவள். ஏழு சகோதரர்களுடன் ஒரே பெண்ணாக உடன் பிறந்ததால் அவர்கள் கற்ற கலை அனைத்தையும் அவளும் கற்றாள்.

சம்பராசுரன் என்னும் அசுரன் இந்திரனுக்குத் தீங்கு விளைவிக்க அவன் தசரதனின் உதவியை நாடினான். சம்பராசுரன் மீது போர் தொடுக்க தசரதன் சென்ற போது அவனது ரதத்தைச் செலுத்தியவள் கைகேயி. அதாவது charioteer. கடுமையான யுத்தத்தில் தசரதனின் உயிரைக் காப்பாற்றியதோடு ரதத்தின் அச்சாணி முறிந்தபோது அச்சாணி இருக்கும் இடத்தில் தன் கைவிரலை வைத்து ரதத்தைத் திறம்படச் செலுத்தினாள் அவள்.

‘கொடுமனக் கூனி’ ஒரு பாத்திரமாக ராமாயணத்தில் தோன்றுவதற்கு முன்னர் கம்பன் கைகேயியை வர்ணிக்கும் போது பாற்கடலில் அமைந்த பவளக்கொடி போல அவள் பேரணை மேல் படுத்துக் கொண்டிருந்தாள் என்று சிறப்பிப்பதோடு அவளை தெய்வக் கற்பினாள் என்றும் சிறப்பித்துக் கூறுகிறான்.

மான் போன்ற விழிகளுடைய கேகய மான் இரக்கத்தை உதறித் தள்ளினாள் என்கிறான் கம்பன். அதனால் தான் ராமாயணக் கதையே நகர்கிறது. தேவர்கள் மகிழ ராவணன் வதம் செய்யப்படுகிறான்.

                                                தொடரும்

D for Delhi– Know India Puzzle (Post No.12,403)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,403

Date uploaded in London – –  11 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

We have already seen towns beginning with letters A B and C. today let us explore 8 towns beginning with letter  ‘D’ ; here are the clues for you.

1.   The headquarters of many National Institutes and Organizations like ONGC, Survey of India, Forest Research Institute, Indian Institute of Petroleum etc are located in the city.

2.   This city is known as the Oil City of Assam where the first oil well in Asia was drilled. The first refinery was started here as early as 1901. Iti has the oldest oil well in operation.

3.   This is the place where the holy rivers Bhagirathi and Alaknanda meet, merge into one and take the name Ganga, making it a unique pilgrimage centre. Lord Rama and his father King Dasharath performed penance here.

4.   This city in Gujarat is one of the most ancient and the loveliest of cities in India. Located on the banks of the river Gomati, this city has several tales of Lord Krishna .

5.    It  is one of the important districts of North Bihar , an ancient city of Mithila, City name  was derived from Dwar-Banga or Dar-e-Bang meaning “The Gateway to Bengal”.

6.   Apart from tea, the other thing that the city is famous for is its historic toy train.

7.   This city in West Bengal has been nicknamed the ‘Ruhr of India‘. Like Ruhr in Germany, it has got lot of coal. It is on the banks of river Damodar.

8.   This city in Karnataka is famous for its milk based sweet-Pedha; ILkal saris; Hindustani classical music and Kannada literature. 

 8      1        
              2  
                 
                 
                 
                 
                 
7       D       3
                 
                 
                 
                 
                 
                 
               4 
6       5        

ANSWERS

1.DENRADUN; 2.DIGBOI; 3.DEOPRAYAG; 4.DWARAKA; 5.DARBHANGA; 6.DARJILING; 7.DURGAPUR ; 8.DHARWAD

 8      N1        
  D     U     2  
   A    D    I   
    W   A   O    
     R  R  B     
      A H G      
       HEI       
7RUPAGRUDEOPRAYA3G
       AAW       
      R R A      
     J  B  R     
    I   H   A    
   L    A    K   
  I     N     A  
 N      G      4 
6G       A5        

 —subham—–