
picture of Anekare temple
Post No. 12,392
Date uploaded in London – – 9 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19
85.சென்ன கேசவ பெருமாள் கோவில், ஆனகரே Shri Chennakeshava Temple, Anekere
இந்த வட்டாரத்தில் மட்டுமே 500-க்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன .சென்னராய பட்டணத்திலிருந்து 5 கி.மீ.தொலைவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலும் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய ஹொய்சளர் கோவில்தான் அழகான தூண்கள் இருக்கின்றன. கல்வெட்டும் இருக்கிறது கிராம தேவதை ஆனக்கரம்மா , பஞ்சசலிங்கேஸ்வரர் கோவில்களும் இருக்கின்றன. ஒரே குறை, கோவில்களைச் சுற்றி வீடுகள் வந்துவிட்டதால் அதற்கிடையே இந்தக் கோவில் மறைந்து கிடக்கிறது கோவிலில் அண்ணாந்து கபார்த்துக்கொண்டே செல்லவேண்டும் .. ஏனெனில் கூரையில் உள்ள ஒவ்வொரு வட்டவடிவ டிசைனும் வெவ்வேறு மாதிரி இருக்கும். கலைடாஸ்க்கோப்பில் பலவடிவங்களைக் காண்பது போல பல வடிவங்கள் !
முக்கிய கன்னட மொழிக் கல்வெட்டு The Halmidi inscription is the oldest known Kannada-language inscription i
பேலூர் வட்டாரத்துக்கு வந்தவர்கள் ஹல்மிதியில் உள்ள கன்னட சாசனத்தைப் பார்க்காமல் போக மாட்டார்கள். ஏனெனில் கன்னட மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் இதுதான் மிகப்பழைய கல்வெட்டு..450 CE – 500 CE. . இது 1500 ஆண்டுப் பழமை உடைத்து. இதன் ஒரிஜினல் மைசூரில் மியூசியத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே இருப்பது வெறும் அச்சுதான் .கடம்ப லிபியில் கன்னட மொழியில் கல்வெட்டு அமைந்துள்ளது.
சமண சமய கோவில்கள் நிறைந்த இடம் இது.
86.கொரவங்கலா பூச்சேஸ்வரர் கோவில் Bucesvara Temple, Koravangala

ஹாசன் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்த ஹொய்சாளர் கோவில் இது.
வல்லாள மன்னர் ஆண்ட காலத்தில் பூச்சி என்பவர் கட்டிய கோவில். மன்னரின் பட்டாபிஷேகத்தை ஒட்டி கட்டப்பட்ட கோவில் என்று கல்வெட்டு சொல்கிறது. 800 ஆண்டு வரலாறு கொண்டது இக்கோவில். சிவன் சந்நிதி , பெருமாள், சூரியன் சந்நிதிகளைக் கண்டு தரிசிக்கலாம்.கோவிந்த்தேஸ்வர, நாகேஸ்வர கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. ராமாயண, மஹாபாரத, பாகவத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
ஹாசன் வட்டாரத்தில் கோவில் இல்லாத ஊரே இல்லை எண்ணுமளவுக்கு ஏராளமான கோவில்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு சில புகழ்பெற்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டதால் ஒரே மாதிரி தோன்றும். ஆயினும் அவை சில இடங்களில் நன்கு பாதுகாக்கப்பட்டதால் அதிக பயணிகளை ஈர்க்கின்றன
87.ராமநாதபுர சுப்ரமண்ய சுவாமி கோவில் Ramanathapura Sri Subramanya , Rameshwara, Pattabhirama and Agasthyeshwara temples
ஹாசன் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்தைக் கோவில் நகரம் என்றும் தட்சிணா காசி என்றும் அழைப்பதுண்டு; காவிரி நதிக்கரையில் அமைந்த பல கோவில்களும் தரிசிக்க வேண்டியவைதான்.
மார்கழி மாதத்தில் நடக்கும் சுப்ரமண்ய சுவாமி கோவில் ரத உற்சவத்துக்கு பல மாநில மக்கள் வருகின்றனர்.அக்ஸ்த்யேச்வர சுவாமி கோவிலில் பெரிய லிங்கம் இருக்கிறது கணபதி, பரசுராமர், லட்சுமி, சாமுண்டீஸ்வரி திரு உருவங்களும் இருக்கின்றன
சோழர் கால , ஹொய் சாளர் கலை அம்சங்கள் நிறைந்த பல கோவில்கள் இருக்கும் இடம். ராமேஸ்வர, பட்டாபிராம கோவில்கள் இருக்கின்றன.
88.சாந்திகிராம சென்ன கேசவர் கோவில் Shantigrama
ஹாசன் நாரிலிருந்து 13 கி.மீ. தொலைவு; 4 கோவில்கள் உள்ள ஊர். பெரிய கோவில் ஸெளம்ய கேசவர் கோவில்.
கர்நாடக மன்னர்களில் விஷ்ணுவர்தனரும் அவர் மனைவி சாந்தாலா தேவியும் புகழ் பெற்றவர்கள். மஹாராணி சாந்தலா ஆடலிலும் பாடலிலு ம் வல்லவள் . அவள் இந்தக் கோவிலில் திருப்பணிகளை செய்திருக்கிறாள். பெரிய கலை வேலைப்பாடுகள் எதுவும் இல்லை.

ஒன்பது நரசிம்மர் சிலைகள்!
யோக நரசிம்மர் Shantigrama Sri Varada Yoga Bhoga Narasimha Swamy.
இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் அதிகம் வருவது ஸ்ரீ வரத யோக போக நரசிம்ம சுவாமி கோவிலுக்குத்தான் 12ம் ஆம் நூற்றாண்டில் அசல பிரகாச முனி கட்டியது தியான நிலையில் உள்ள நரசிம்மர்.
சோழர் கால கலையின் தாக்கத்தைக் காணலாம் இங்கு கூரையில் செதுக்கப்பட்ட நவ நரசிம்மர் வேறு எங்கும் காணப்படாத அற்புத சிற்பங்கள். உக்ர , க்ரோத,வீர, விளம்ப, கோப, யோக, அகோர, சுதர்சன, லெட்சுமி நரசிம்மர் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன Ugra, Krodha, Veera, Vilamba, Kopa, Yoga, Aghora, Sudharshana and Lakshmi Narasimha).
மஹாராணி சாந்தலாதேவியின் தந்தை 1123ம் ஆண்டு கட்டிய , அருகிலுள்ள , தர்மேஸ்வர கோவில் , பல திருப்பணிகளால் உருமாறிக்கிடக்கிறது
மன்னர் விஷ்ணுவர்தனரும் அவருக்கு முந்திய அரசர்களும் சமணர்கள் ஆகையால் சாந்திநாத பஸதியையும் கட்டியுள்ளார்
பெங்களூரு- ஹாசன் தேசீய நெடுஞ்சாலை 75ல் இடம்பெறும் இக்கோவில் வளாகம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
89.கூடலி கோவில்கள் Koodali Rushyashrama, Brahmeshwara, Narasimha and Rameshwara temples.
சிவமொக்காவிலிருந்து 16 கி.மீ தொலைவு; தென்பகுதி வாரணாசி என்று இதை அழைப்பர். துங்க நதியும் பத்ரா நதியும் கூடும் இடம்.
ருஷ்யாஸ்ரம, பிரம்மேஸ்வர, நரசிம்ம, ராமேஸ்வர கோவில்கள் இருக்கும் இடம்.
சங்கராசார்யார் ஸ்தாபித்த ஒரு மடமும் இருக்கிறது ; கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்றுச் சிறப்பும் உண்டு.
சங்கராசார்யார் , சாரதாம்பா ஆகியோரை தரிசிக்கலாம். மடத்துக்கு வெளியே பிரம்மேஸ்வர, நரசிம்ம, ராமேஸ்வர கோவில்கள் அமைந்துள்ளன Brahmeshwara, Narasimha and Rameshwara temples. இஸ்லாமியப் படையெடுப்புகளில் நாசமாக்கப்பட்ட ஊர் இது.
இங்குள்ள கோவில்களில் பழமையானது எட்டாம் நூற்றாண்டு சங்கமேஸ்வரர் கோவில் ஆகும் .

picture of shantigrama temple
To be continued…………………………………
Tags- கர்நாடகம், பகுதி 19, 108 கோவில்கள், நவ நரசிம்மர், 9 நரசிம்மர் சிலைகள்






















_(14484817881).jpg)



