கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை- 1 (Post No.12,382)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,382

Date uploaded in London –  7 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை

(பகுதி 1)

ச. நாகராஜன்

.

சங்கர மடம் அமைந்துள்ள தலம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிருங்கேரி மகத்தான புண்ணிய தலமாகும்.

துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் சிருங்கேரி நுண்ணறிவையும் ஆன்மீக ஞானத்தையும் தந்து இகவாழ்வை சிறப்புறச் செய்து முக்தியையும் நல்கும் சிறப்பைப் பெற்றதாகும்.

தொன்றுதொட்டு இருந்து வரும் ஹிந்து தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்க அவதரித்த ஆதி சங்கரர் சிருங்கேரியின் பெருமையை நன்கு உணர்ந்ததோடு உலகிற்கும் உணர்த்தினார். அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.

சங்கர மடம் அமைந்த வரலாறு

இதற்கான வரலாறு சுவையானது

பூர்வ மீமாம்ஸகர்களின் கொள்கையை வலியுறுத்திய குமாரில பட்டரின் சீடரான மண்டனமிஸ்ரரை, அவர் வாதத்திற்கு அழைத்தார். வாதப் போரைத் தொடங்கிய போது அந்த வாதப் போருக்கு நீதிபதியாக இருந்தவர் மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி. இருவர் கழுத்திலும் மாலையை அணிவித்துக் கொள்ளச் சொன்ன உபயபாரதி,  வாதத்தில் யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர், என்று அறிவித்தார். பதினேழு நாட்கள் நடந்த வாதத்தில், மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடியது. சங்கரர் வெற்றி பெற்றார்.

பின்னர் உபயபாரதியுடனும் வாதம் செய்து, அவரையும் வென்றார் சங்கரர்.

போட்டி விதியின் படி மண்டனமிஸ்ரர் துறவு மேற்கொண்டார். அவருக்கு சுரேஸ்வரர் என்ற சந்யாச நாமம் அளிக்கப்பட்டது.

தனது சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்த சங்கரர் சிருங்க கிரியை வந்தடைந்தார்.

சிருங்க கிரி, மஹரிஷி ரிஷ்ய சிருங்கர் தவம் புரிந்த புண்ய தலமாகும். பவித்ரமான துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்க கிரியின் அற்புதமான இயற்கை வனப்பில் மூழ்கினார் சங்கரர். 

அவர் அங்கு ஓரிடத்தில் ஒரு அரிய காட்சியைக் கண்டு பிரமித்தார்.      

கர்ப்பமுற்ற தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் தவிக்க, நல்ல பாம்பு ஒன்று இரக்கம் கொண்டு அதன் மீது படம் எடுத்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவே தவம் செய்ய சிறந்த இடம் என நிர்ணயித்த சங்கரர்  அங்கே ஸ்ரீ சக்ரத்தை ஸ்தாபித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிறுவினார்.

அந்த பீடத்திற்கு சுரேஸ்வரரை முதல் ஆசாரியராகச் செய்து வேத பிரசாரம் செய்யுமாறு ஆணையிட்டார். அதிலிருந்து அந்த ஆசாரிய பரம்பரை, தொடர் சங்கிலியாக இருந்து வருகிறது. இப்போது 36வது பீடாதிபதியாக பல்மொழி வல்லுநரான ஸ்ரீ பாரதி தீர்த்தர் சிருங்கேரி மடாதிபதியாக அருளாட்சி புரிந்து வருகிறார்.

சிருங்கேரி : பெயர்க் காரணம்

சிருங்கேரி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

விபாண்டகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு ஊர்வசி என்ற அப்ஸரஸின் மூலாமாக அபூர்வமான  ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தலையில் மான் கொம்பு ஒன்று பிறக்கும்போதே முளைத்திருந்தது. ஆகவே அந்தக் குழந்தைக்கு ரிஷ்ய சிருங்கர் என்று பெயர் சூட்டப்பட்டது. காட்டுக்குள்ளேயே வளர்ந்த குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்தது. என்றாலும் தந்தையைத் தவிர வேறு யாரையும் ரிஷ்யசிருங்கருக்குத் தெரியவில்லை. அத்தோடு ஆண்-பெண் வேறுபாடு கூட அவருக்குத் தெரியவில்லை.

அந்தச் சமயத்தில் அங்க தேசம் என்ற பிரதேசத்தில் மழையின்றி மக்கள் வாடத் தொடங்கினர். அதை ஆண்டு வந்த ராஜாவான ரோமபாதர் தனது மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது ரிஷ்யசிருங்கரைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்த மந்திரிமார் அவரது காலடி இங்கு பட்டால் உடனே மழை பெய்யும் என்று கூறினர்.

அவரை அழைத்து வருவது எப்படி என்று யோசித்த பின்னர், காட்டிற்குள் உள்ள அவரைக் கண்டுபிடித்து அழைத்து வர பேரழகி ஒருத்தியை அனுப்பினார் ரோமபாதர்.

ரிஷ்யசிருங்கரின் தந்தை தம்மைப் பார்த்தால் கோபப்படுவார் என்பதை உணர்ந்த அழகி அவர் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுத்து ரிஷ்யசிருங்கரின் குடிலை அணுகினாள்.

ஆண்- பெண் வேறுபாடு தெரியாத குழந்தைத் தன்மையை உடைய ரிஷ்யசிருங்கர் அந்த அழகியைப் பார்த்தவுடன் விநோதமான ஒரு ஈர்ப்பு உணர்வை அடைந்தார். அந்தச் சமயத்தில் அவரது தந்தை குடிலுக்குத் திரும்பி வர அழகியும் அவசரம் அவசரமாக தான் பக்கத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றாள்.

அவள் சென்ற பின்னர் அவள் பால் உள்ள ஈர்ப்பு அதிகமாக அவளைத் தேடிப் புறப்பட்டார் ரிஷ்ய சிருங்கர். அவரது பாதங்கள் ரோமபாதரின் அங்க தேசத்தில் பட்டவுடன் மழை பொழியத் தொடங்கியது.

அவரை வரவேற்ற மகாராஜா மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; தனது பெண்ணான சாந்தையை அவருக்கே மணமுடித்தும் கொடுத்தார். சாந்தையுடன் அங்கு வாழ்ந்து தன் தவத்தைத் தொடர்ந்தார் அவர்.

சில காலம் கழித்துத் தன் உடலை விட அவர் எண்ணினார். அப்போது அவருடைய உடலிலிருந்து ஒரு மின்னல் தெறித்தது. அது ஒரு லிங்கத்தின் மீது பட்டு மறைந்தது. அந்த லிங்கம் சிருங்கேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிக்கா என்னும் இடத்தில் உள்ளது. லிங்கத்தின் உச்சியில் கொம்பின் வடு இன்றும் இருக்கிறது.

அதைக் காணலாம்.

ரிஷ்யசிருங்கரின் காலடி பட்டு செழிப்புற்ற பிரதேசமாக ஆனதோடு அவர் தவம் புரிந்த தலமாதலால் இந்தப் பகுதி ரிஷ்ய சிருங்க கிரி என்ற பெயரைப் பெற்றது.

நாளடைவில் இந்தப் பெயர் மருவி சிருங்கேரி ஆயிற்று.

–    தொடரும்

QUIZ வள்ளல்கள் பத்து QUIZ (Post No.12,381)

Tamil Philanthropist  Athiyaman with Avvai

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,381

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ வள்ளல்கள் பத்து QUIZ

QUIZ SERIES No.61

1.கடையெழு வள்ளல்களின் பெயர்கள் என்ன ?

XXXXX

2.முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்தவன் பாரிமயிலுக்குப் போர்வை கொடுத்த்தவன் யார்?

3.பேகன் ஆண்ட இடம் எங்கே இருக்கிறதுபாரி ஆண்ட பறம்பு மலை எங்கே உள்ளது ?

XXXXX

4.பாரி செய்ததை நாம் அறிவோம்காரியும் ஓரியும் என்ன கொடுத்து வள்ளல் பட்டியலில் சேர்ந்தனர் ?

XXXXX

5.அதியமான் செய்த கொடை யாது?

xxxx

6.இவர்களை கடை எழு வள்ளல் என்று சொல்கிறோம் அவர்கள் வாழ்ந்த காலம் எது?

XXXXX

7.முதல் எழு வள்ளல்கள் உண்டா அவர்கள் யார்?

XXXX

8.சிவ பெருமானுக்கு நீல நாகன் கொடுத்த ஆடையை அளித்து வள்ளல் பெயர் பெற்றவன் யார் ?

XXXX

9.இடை எழு வள்ளல்கள்  யார் ?

XXXXX

10.நள்ளி என்ற வள்ளலின் சிறப்பு என்ன ?

xxxxx

Tamil Philanthropist  Bekan with peacock

Answers

1.பாரி,  காரி,ஓரி,

ஆய், அதியமான்,

பேகன், நள்ளி

xxxx

2.மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்.

XXXXX

3.பறம்புமலை என்கிற பிரான்மலை தற்போது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ளது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை நகரங்களுக்கு நடுவில் உள்ளது.

பேகன், பொதினி மலையின் சிற்றரசன் . இந்த இடம் பழனி மழைப் பகுதி ஆகும்

xxxx

4. ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன். புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று சிறுபாணாற்றுப்படை அவனைப் புகழ்கிறது.

காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். அருள்மொழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ட வேலினை உடையவன். தடக்கையையும் (பெரிய கை), காரி என்ற குதிரையையும் உடையவன். இம்மன்னனின் கொடைத்திறத்தை சிறுபாணாற்றுப்படை (91-95 அடிகள்) குறிப்பிடுகிறது.

உலகமே வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன் குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான்.

xxxxx

5.அதியமான் – நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி). இது அரிய நெல்லிக்கனி; சாவை ஒத்திப்போடும் மருத்துவ குணங்கள் உள்ள கனி . அதிகன், ஒருமுறை வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அங்கு உள்ள மலைச்சாரலில் மருத்துவத் தன்மை உடைய நெல்லி மரத்தில் ஒரே ஒரு பழம் பழுத்துத் தொங்கியது. அதை அதிகன் பறித்து வந்தான். அக்கனியை உண்போர் நீண்ட நாள் உயிர் வாழ்வர் என்பதை இவன் அறிந்து கொண்டான். அத்தகு சீரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்கு வழங்கினான் (ஒளவையார் சங்க காலத்து மிகச் சிறந்த பெண் புலவர்). இச்செய்தியை,

அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த…………….. …………………. …………….. ………..

அரவக் கடல்தானை அதிகனும்…

(சிறுபாணாற்றுப்படை 101-103) சுட்டுகிறது.

XXXXX

6.சிறுபாணாற்றுப் படை என்னும் சங்க கால நூல் இவர்கள் அனைவரையும் ஒரு அணி ஆக்கி கடை எழு வள்ளல் என்பதால் இவர்கள் சங்க காலத்தின் துவக்கத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் . எங்கங்கோ வாழ்ந்த 7 பேரின் சிறப்பும் பெருமளவில் பேசப்பட்ட பின்னரே இப்படி ஒரு தொகுப்பு உருவாகும்.

Xxxxx

Tamil Philanthropist  Nalli

7..முதல் எழு வள்ளல்கள்

1.       குமணன்

2.       சகரன்

3.       சகாரன்

4.       செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி)

5.       துந்துமாரி

6.       நளன்

7.       நிருதி

இதிலுள்ள குமணன் சங்க காலத்துக்கு முந்தைய வேறு ஒரு குமணன் என்றே கருத வேண்டியுள்ளது

xxxxx

8.ஆய் – நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)

xxxxx

9.இடைக்கால ஏழு வள்ளல்கள்

அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன் (கர்ணன்),சிசுபாலன், சந்திமான், தந்திவக்கிரன்

அக்குரன் ; இவர் ஒருவேளை மகாபாரதம் சொல்லும் அக்குரன் ஆக இருக்கலாம் என்பது உ,வே.சா .கருத்து

Xxxxxx

10. நள்ளி தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை . மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் ;, காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்று வன்பரணர் என்னும் புலவர் இவன் புகழைப் பாடுகிறார்.

Tamil Philanthropist  Pari

—-subham—

Tags– 21 வள்ளல்கள், கடை எழு , இடை எழு , தலை எழு , சிறுபாணாற்றுப் படை

HINDUSIM CROSSWORD PUZZLE 6 8 2023( Post No.12,380)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,380

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Find out 21 words; Words across are in yellow colour.

1 2345 6 7
          
8         
     9    
 9a10 10a  111212a
 13        
          
 14    15   
          
16         
17         

Across

1.Madhuparka  – A dish of curds, ghee and honey, to be offered to a respectable guest on his arrival.

8.Laksha- one hundred thousand in Indian languages

9.Vyala- also called sardula, popular motif in Indian art, consisting of a composite leonine creature with the head of a tiger, elephant, bird, or other animal

10.Halayudha- A name of Balarama. Because he is carrying  plough, to spread agriculture all over India

13.Yaman– also called Kalyan (meaning “blessed” in Sanskrit), belongs to the Kalyan scale because it uses the sharp variant of the fourth note (M). This ancient raga is very important in both Carnatic (South Indian) and Hindustani music

14.Kavyam- is a form of literature that uses aesthetic and often rhythmic qualities of language − such as phonaesthetics, sound symbolism;  refers to the Sanskrit literary style used by Indian court poets flourishing between c.200 BCE and 1200 CE.

16.Alankaram- Ornament, decoration; used both in religion and music; When Gods are decorated in various forms,  this word is sued

17.Madhuram – sweet in Sanskrit and other languages

 Down

1.Mallinatha was an eminent critic, known for his commentaries on five mahakavyas (great compositions) of Sanskrit. During his times, His commentary on Kalidasa’s works is the best.

2.Dakshayaga In Hindu mythology,  it is an important event, which is narrated in various Hindu scriptures. It refers to a sacrifice organized by one, where his daughter Sati immolated herself. The wrath of god Shiva, Sati’s husband, thereafter destroyed the sacrifice.

3.Hasyam- laughter, comedy

4.Usha- morning, dawn

5.Plavangama- an ape, monkey in Valmiki Ramayana; not Vanara

6.Reva- another name for Narmada River

7.Alpa- small, little

9a.Vyakula- Agitated, perplexed, bewildered, distracted ;troubled; frightened

10a.Lasya- is a female dance form that originated in India. In Hindu mythology, Lasya refers to the dance innovated and performed by the goddess Parvati, described to be gentle and graceful.

11.Usnisa- is a three-dimensional oval at the top of the head of the Buddha. In Pali scriptures, it is the crown of Lord Buddha, the symbol of his Enlightenment and Enthronement.

12.Dhal-  Lentil, Lentil soup

12a.Angara – Mars, Red, Fire in charcoal

15.Mara- the Evil One; the tempter; death personified; killing, destroying in Sanskrit

M1AD2H3U4P5AR6KA7
A AASL E L
L8AKSHA V P
L SYAV9YALA
IV9aH10AL10aAYU11D12A12a
NY13AMAN SHN
AAY SG NAG
TK14AVYAM15ILA
HUG AMAS R
A16LANKARAMA
M17ADHURAM  

Answers

Across

1.Madhuparka  8.Laksha, 9.Vyala- ,10.Halayudha, 13.Yaman, 14.Kavyam, 16.Alankaram, 17.Madhuram

Down

1.Mallinatha , 2.Dakshayaga , 3.Hasyam, 4.Usha-,5.Plavangama, 6.Reva-, 7.Alpa-,9a.Vyakula, 10a.Lasya, 11.Usnisa-, 12a.Angara, 12.Dhal-  , 15.Mara

–subham—

சனி பகவான் பற்றிய இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ! (Post No.12,379)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,379

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ராமேஸ்
போப்ம்
னாட்
லுனினு
ம்ட்க்
த்தில்கு
விடாதுனின்
னிஸ்

Answers

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி —–subham—-

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்  வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378)

Mongol Invader

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,378

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்  வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378)

பர்மா நாட்டின் தற்போதைய பெயர் மியன்மார்.;லட்சக் கணக்கான தமிழர்கள் வசித்த, வசிக்கும் நாடு.தமிழர்களின் பழைய கல்வெட்டும் வணிகர் தொடர்பைக் காட்டுகிறது. அங்கிருந்து கொண்டு வந்த தேக்கு மரம் இன்று செட்டி நாட்டில் வீடுகளை அலங்கரிக்கிறது. பர்மாவிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் காலனிகள் அமைத்த இடங்களில் அங்கிருந்து கொண்டுவந்த கைப்பிடி மண்ணை வைத்து எழுப்பிய  தமிழ்நாட்டுக் கோவில்களில் இன்றும் பர்மாவில் கொண்டாடியது போலவே விழாக்களை மக்கள் நடத்துகின்றனர். மணிப்பூரில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மோரே என்னும் இடத்திலும் கோயில் கட்டி இன்றும் வழிபடுகின்றனர்..

பர்மாவில் ஆங்கிலக்  கதைகளிலும் கூட தமிழ்ச் சொற்களான பந்தல் ,கோயில், செட்டியார் என்பன அப்படியே மொழி பெயர்க்காமல் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பர்மா என்பதே பிரம்ம தேசத்தின் திரிபுச் சொல் என்பதும் இந்து மத தாக்கத்தைக் காட்டி நிற்கிறது . பாமர் என்ற இன மக்களால் அந்தப் பெயர் உண்டாகியது என்று வாதிடும் மக்களுக்கும் அந்தச் சொல்லின் தோற்றம் தெரியவில்லை. பர்மாவைப் பற்றிய ஆங்கிலப் புஸ்தகங்கள் இந்துமதத்தை பிராஹ்மிணிகல் Brahmanical Religion மதம் என்றே குறிப்பிடுகின்றன. இதற்கு மூ ன்றே பொருள் தான் உண்டு. பிரம்மன் என்பவரை வழிபடும் மதம் ; பிரம்மன் என்பது உபநிஷத்துகளில் கடவுள் என்று பொருள்படும் ; இரண்டாவது பொருள், மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா என்னும் கடவுளை வழிபடுவோர் நிறைந்த இடம்; மூன்றாவது அர்த்தம், பிராமண குருக்கள், பட்டர்கள் வந்து பூஜைகளைத் துவக்கிய நாடு. இந்த மூன்றுக்கும் அங்கே சான்றுகள் உள

பிரம்மாவுக்கு பல வண்ணங்களில் தபால் தலைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்ட லாவோஸ் Laos என்னும் நாடும் இதை ஒட்டி இருக்கிறது. அதன் பெயரே லவன் என்ற ராம பிரானின் மகன் பெயர். பர்மா கல்வெட்டுகள் தங்கம் , வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி மன்னருக்கு பிராமணர்கள் பட்டாபிஷேகம் செய்த செய்தி ஒரு கல்வெட்டிலும், அந்த மன்னர்கள் ராமனின் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்று பெருமை பேசும் கல்வெட்டுகளும் பர்மாவில் கிடைத்துள்ளன. எல்லா வற்றிற்கும் மேலாக பக்கத்து நாடான தாய்லாந்தின் பழைய தலைநகர் பெயரே அயோத்யா தான். அதை அயுத்தியா என்று எழுதுவார்கள் .

பர்மாவில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வேலுவதி மற்றும் பல தமிழ் மன்னர்கள் பெயர்கள் உள்ளன வர்மன் என்று முடியும் பல்லவர் போன்ற மூன்று மன்னர்கள் உள்ளனர். இவர்கள் யார் என்பது பர்மியர்களுக்கே தெரியாது  பொது ஆண்டு (கி.பி. 439 முதல் 200 ஆண்டுகளுக்கு அங்கு மொக்கன், திட்டம்/தித்தன் முதலிய 5 தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அசோகர் காலத்தில் சோனா, உத்தரா என்ற இருவர் புத்த மதத்தைப் பரப்ப பர்மா சென்றதை இலங்கை வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம். சம்ஸ்க்ருத நூல்களில் பர்மாவை சொர்ண பூமி / தங்க நாடு என்றே அழைக்கின்றனர் ;அவைகளை தனி வரலாற்றுக் கட்டுரைகளில் காண்போம். இப்போது வெற்றிலை துப்பிய எச்சில், பன்றிக் காலின் கரி  முதலிய சுவையான வரலாறுகளை மட்டும் காண்போம் .

xxxx

தூ— என்று துப்பியதால் மன்னர் பதவி போச்சு !

கியாசுவா 1234-1250 King Kyaswaa

கியாஸ்வா ஒரு திறமையான அரசர். 1249ல் அவர் வெளியிட்ட கல்வெட்டு நீண்ட வாசகமுள்ள கல்வெட்டு. அதில் என்னன்ன குற்றங்களுக்கு என்னன்ன தண்டனைகள் என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தர்மராஜா என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.அவர் புத்த மத நூல்களான த்ரி பிடகா (மூன்று பெட்டி) வை ஒன்பது முறை படித்தவர். 57ஆவது வயதில் கத்திச் சண்டை போட்டு விளையாடுகையில் காயம் ஏற்பட்டு செத்துப் போனார் .

xxxx

உசனா 1250-1256 Uzanaa

இவர் கியாஸ் வா வின் மகன் ; வேட்டை ஆடுவதிலும் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதிலும் பொழுதைச் செலவிட்டார் ; 38 வயதில் யானையால் மிதிபட்டு உயிரைவிட்டார்.

Xxxxx

நராதிபதி 1256- 1287 Narathihapati

உசனாவுக்கு இரண்டு மகன்கள் ; முறையான மஹாராணி மூலம் பிறந்தவர் திங்கத்து ; காமக்கிழத்தி மூலம் பிறந்தவர் நராதிபதி .அப்போது முதன் மந்திரியாக இருந்தவர் யஜாதிங்கியான் Yazaathinkyaan. ஒரு முறை அவர் நடந்து செல்லுகையில் பின்னால் திங்கத்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு மந்திரி முறையான மரியாதை செலுத்தவில்லை என்று கோபம் பொங்கியது. பர்மா மக்கள், நம்மூர் தஞ்சாவூர்க்காரர்கள் போல வெற்றிலை போடும் பழக்கம் உடையவர்கள் வாயில் இருந்த வெற்றிலை எச்சிலை தூ என்று முதமந்திரி மீது துப்பினார். மன்னர் மகன் ஆயிற்றே ; ஆகையால் முதல் மந்திரி வாய் திறக்காமல் வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் போட்டுக்கொண்ட துணி மணிகளை துவைத்து அலசாமல் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாத்தார் . யானையைப் போல நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கக் காத்திருந்தார் . மன்னர் உசனா இறந்த செய்தி வந்தது இதுதான் தருணம் என்று கருதிய முதலமைச்சர் பெரியோர்கள், ஊர்  மக்களின் பிரதிநிதிகள், புத்த பிட்சுக்கள் கூட்டத்தைக் கூட்டி, பெட்டிக்குள் வைத்திருந்த எச்சில் கறை பட்ட சட்டையைக் காட்டி அதைச் செய்த திங்கத்து மன்னர் பதவிக்கு அருகதையற்றவர் என்று அறிவித்தார். அனவைவரும் அதை ஆமோதித்தனர் .காமக்கிழத்தியின் மகனான நராதிபதி மன்னன் பதவியில் அமர்த்தப்பட்டார் . அவரோ சரியான சாப்பாட்டு ராமன்; பெருந்தீனி;தினமும் 300 வகை கறிகளை சாப்பிடுகிறேன்எனக்கு 3000 அந்தப்புர அழகிகள் இருக்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார் . அவருக்கு மக்கள் வைத்த பெயர் வேறு ; அவர்கள் சூட்டிய பெயர் தரூப் யி. அதாவது துருக்கர்களைக் கண்டு பயந்தோடியவன் . அவர்கள் துருக்கர் என்பது சீனாவிலிருந்து படை எடுத்த மங்கோலியர்கள் ஆவர் .

அந்தக் கதையைத் தனியாகக் காண்போம் .

—–to be continued

Tags- பர்மா வரலாறு , மியன்மார் சுவையான சம்பவங்கள்,  வெற்றிலை எச்சில், ராஜா பதவி , போச்சு

ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ (Post No.12,377)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,377

Date uploaded in London –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 7 

ச.நாகராஜன் 

ஶ்ரீமத் ஆதி சங்கர பகவத்பாதர் அருளிய நூல் ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ 

இதில் 100 ஸ்லோகங்கள் உள்ளன.

இந்த நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 41 ஸ்லோகம் முடிய ஆனந்த லஹரீ என்று கூறப்படுகிறது.

அடுத்து 42 முதல் 100 ஸ்லோகம் முடிய சௌந்தர்ய லஹரீ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நூலில் ஏராளமான சிறப்புகள் உண்டு,

முதலில் இது ஒரு மந்திர சாஸ்திர நூலாகும்.

மந்திரம், தந்திரம், யந்திரம் அடங்கியுள்ள இந்த நூல் ஶ்ரீ வித்யா உபாசகர்களால் பெரிதும் மதிக்கப்படும் நூலாகும்.

ஏராளமான பிரயோக முறைகள் இதில் இருப்பதால் இதை குரு மூலமாகக் கற்பதே சிறந்தது.

தேவியின் பல நாமங்களை சங்கரர் அழகுற இதில் அமைத்துள்ளார்.

ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு சக்தி உண்டு என்பதால் நூல் முழுவதையும் பாராயணம் செய்வோர் தேவியின் அருளுக்குப் பாத்திரமாகி அபாரமான சக்தியைப் பெறுவர்.

அது மட்டுமல்ல ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறலாம். எந்த ஸ்லோகத்தை என்ன பலனுக்காகப் பெற, எப்படி நியமத்துடனும் நிவேதனத்துடனும் செய்ய வேண்டும் என்பதற்கான நியதிகள் உண்டு.

சிவ சக்த்யோ என்று முதல் ஸ்லோகத்தில் ஆரம்பித்து தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் என்று நூல் முடிகிறது.

இகலோகத்தில் சகல சுகமும் பெற 22ஆம் ஸ்லோகத்தைத் துதிக்கலாம்.

பவானி என்று ஆரம்பிக்கும் இந்த ஸ்லோகம் பவானி என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அம்பாள் பக்தனுக்கு ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுவதாக உறுதி கூறுகிறது.

ஸ்லோகம் இதோ:

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவானி த்வமிதி ய: |
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்

முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் ||

இதன் பொருள்:

“ஹே, பவானி! உன் அடிமையான் என்னை நீ கருணையுடன் கூடிய உனது கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று துதி செய்ய விரும்பி ஒருவன், “பவானி, நீ” என்று சொல்லத் தொடங்கிய உடனேயே அவனுக்கு விஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்களாரத்தி செய்யப்பட்ட திருவடிகளுடன் கூடியதாக உன் ஸாயுஜ்ய பதவியையே நீ அளித்து விடுகிறாய்”.

பத்தாம் ஸ்லோகமான ஸுதாதாராஸாரை என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைத் துதித்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகளின் அருள் வாக்கு,

செல்வம் செழிக்கக் கூற வேண்டிய ஸ்லோகம் ஸ்மரம் யோநிம் என்று ஆரம்பிக்கும் 33வது ஸ்லோகமாகும்.

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரியமித மாதௌ தவ மநோ:

நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா: |

பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்ஹ்தாக்ஷ வலயா:

சிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி ஸதை: ||

இதன் பொருள்:

“ஓ, பராசக்தியே! புண்ணியவான்களான சில யோகிகள் தமது கையில் தாமரை மணிமாலையைத் தரித்து முறையே காம, யோநி, லக்ஷ்மீ பீஜாக்ஷரங்களான க்லீம், ஹ்ரீம், ஶ்ரீம் என்னு பீஜாக்ஷரங்களையும் சேர்த்து ‘ஸௌபாக்ய பஞ்சதசீ’ என்னும் இந்த மந்திரத்தை திரிகோணாகாரமாகிய சிதக்நியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னைத் திருப்தி செய்விக்கிறார்கள்.”

ஸௌபாக்ய பஞ்சதசீ என்னும் அபூர்வமான மந்திரம் இந்த ஸ்லோகத்தில் சங்கேதமாகக் குறிப்பிடப்படுகிறது.

சௌபாக்யம் அருளும் இந்த ஸ்லோகம் அபூர்வமான ஸ்லோகங்களுள் ஒன்று.

இதைக் கையில் பணத்தை வைத்துக் கொண்டு சொன்னால் அது போல பத்து மடங்காக நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

குறிப்பிட்ட ஸ்லோகத்திற்கு என்ன பலன் என்பதை லிப்கோ (தி லிட்டில் ஃப்ளவர் கம்பெனி) வெளியீட்டில் காணலாம்.

ஶ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடாக அண்ணா அவர்களின் சௌந்தர்ய லஹரீ விரிவுரை மிக நிச்சயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.

அம்பாளின் அருளுக்கு உடனே பாத்திரமாக விரும்புவோர் அணுக வேண்டிய நூல் ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரீ.

இதன் பெருமையை யாராலும் முற்றிலுமாக உரைக்க முடியாது!

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 582023 (Post No.12,376)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,376

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 11 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

 2 3  
     4 5
   6    
      
  9   

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

Brwon and Blue colours

1. பாரசீகத்திலிருந்து வந்த மலரைக்கொண்டு ஜாம் செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. அதன் பெயர் என்ன?

4. விருது ; மின்னல், இடி

6. அஸ்வினிக்கு அடுத்த நட்சத்திரம்; கார்த்திகையுடன் சேர்த்துப் பேசுவர் (Go left)

6. சூரியனுக்குள்ள தமிழ்ச் சொற்களில் ஒன்று

7. புலவர்களில் அரசன் என்று பொருள்; வீரை —பண்டிதர், சந்திரசேகர —— பண்டிதர் என்ற பெயர்களில் இந்தச் சொல்லக் காணலாம்.

8. சேரர்களின் தலை நகர்; தற்போதைய பெயர் வஞ்சி

9. சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய ஊர்கள் இந்தப் பெயரில் வரும்

xxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

Green Colour

1. தமிழர்கள் கல்யாணம் செய்த நட்சத்திரம் என்று அகநாநூறு கூறும் ; சந்திர பகவானுக்கு வேண்டிய பெண்.

(2.) 12 ராசிகளில் குடத்தின் படத்துடன் தோன்றும்

3. சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடிய பிராமணன்; சங்கப்புலவர்களால் அதிகமாகப் பாடப்பெற்ற அந்தணன்

5. சிறிய மலை; குமரன் குடி இருக்கும் குட்டி மலை; மதுரைக்கு அருகிலுள்ள அறுபடை வீட்டில் கூட இந்தச் சொல் உண்டு.

picture by Silpiதிருமாலிருங்குன்றமும் திருப்பரங்குன்றமும் 

ரோ1ஜாகு2ல்க3ந்து
கி ம் பி4டுகு5
ணிப6ன்
க7விரான் 
வ8ஞ்சிந9ம்

Answers

1.ரோஜா குல்கந்து

4.பிடுகு

6.பரணி (Go left)

6.பகலவன்

7.கவி ராஜன்

8.வஞ்சி

9.நக ரம்

xxxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

Green Colour

1.ரோகிணி

2.கும்பராசி

3.கபிலன்

5.குன்றம்

Xxxx subham xxxx

Hinduism Crossword Puzzle 5 8 2023 (Post No.12,375)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,375

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ACROSS (Violet and Green colour words)

1.Only when Krishna showed this form, Arjuna was convinced and obeyed his commands.

5.I bow to you, I worship You in Sanskrit; one comes across this word in Hymns.

7.This attribute to Lord comes in Vishnu Sahasranama meaning ‘Immeasurable, unbounded, boundless’

8.Grammatical term in Sanskrit; There are 4 types: 1) āvyayi bhavaṉ, 2) tatpuruṣa, 3) dvandaṉ, and 4) bahuvr̥hi.

9.King of the Bears in Ramayana who helped Rama in search of Sita.

Xxxxx

DOWN (Yellow colour words)

1.Name of Lord Ganesh; meaning one who is the leader; one who has no superior to him.

 2.Arch enemy of Indra in Rig Veda; also Asura name in Ramayana who was killed by Dasaratha.

3.Rishi or Hindu saints’ shelter/house in Forest

4.common word for Musical instrument

6.Pisces sign in Zodiac

123 
    4 
56 
    
    
7
    
 8
9

ANSWERS

V1IS2VARUPA3 
I A   V4 S
N5AMAM6IA H
A B E D R
Y A E H A
A7PRANEYAM
K A A A A
A S8AMASAM
J9AMBHAVAN

ACROSS

1.VISVARUPA

5.NAMAMI

7.APRAMEYA

8.SAMASAM

9.JAMBHAVAN

Xxxxx

DOWN

1.VINAYAKA

 2.SAMBARA

3.ASHRAMAM

4.VADHYA

6.MEENAM

 —subham—

ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்! கர்நாடக மாநில புகழ்பெற்ற கோவில்கள் – 17 (Post.12,374)

Picture of Veeranarayana Temple, Belavadi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,374

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Temple Pictures are Taken from Wikipedia

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 17

79.வீரநாராயண கோவில், பெலவாடி The Veera Narayana temple, / Viranarayana temple of Belavadi

சிக்மகளூர் நகரிலிருந்து 25 கி.மீ.

ஹொய்சாளர் தலைநகரான ஹளபீடுவிலிருந்து 10 கி.மீ.

இங்குள்ள வீரநாராயணர்  கோவில், ஹொய்சாளர் கட்டிடக் கலையை அப்படியே பாதுகாத்துவைத்துருக்கிறது. மூன்று கர்ப்பக்கிரகங்களை மிகப்பெரிய ரங்க மண்டபம் இணைக்கிறது . வேறு எங்கும் இவ்வளவு பெரிய மண்டபம் கிடையாது .வீரநாராயண பெருமாள் எனப்படும் விஷ்ணு, யோக நரசிம்மர், கோபாலன் ஆகிய மூவர் சந்நிதிகள் முக்கியமானவை  800 ஆண்டு வரலாறு உடைய இந்தக் கோவிலில் கூரை மீது செதுக்கப்பட்டுள்ள கிருஷ்ண லீலைகளும் வேறு எங்கும் காண இயலாத ஒப்பற்ற வடிவங்களாக உள்ளன, பகாசுரனை பீமன் வதைத்த இடம் இதுதான் என்பது மக்களின் நம்பிக்கை .

Xxxxx

80. அங்காடி கோவில்  Durga or Vasantha Parameshwari Temple /Vasanthika Temple, Angadi

முடிகரே என்னும் இடத்திலிருந்து 18 கிமீ. ஹொய்சாளர்களின் மூன்று பாழடைந்த கேசவ, வீரபத்ர, மல்லிகார்ஜுன கோவில்கள் இருக்கின்றன. அங்காடி என்னும் ஊர்ப்பெயர் சந்தை, மார்க்கெட் என்று பொருள்படும். சங்க இலக்கியத்தில் மாத்திரை நகர நாள் அங்காடி, அல்லங்காடி பற்றிப் படிக்கலாம் . சாலை என்பவன் புலியைக் கொன்ற இடமும் இதுதான் (ஓய் +சால ). சசகபுரம் என்றும் பெயர்.. இங்குள்ள வஸந்திக ஹொய்சாள கோவிலில் இன்றும் துர்க்கையை தரிசிக்கலாம்.இங்குள்ள கருங்கல் தூண்கள் மிகவும் அழகானவை.

Xxxxx

ஒரே வாரம் திறக்கும் அதிசயக் கோவில்!

81.ஹாஸனாம்பா  கோவில் Hasanamba temple , Hassan,

ஹாசனாம்பா என்ற பெயரில் சக்தி தேவி வணங்கப்படுகிறாள் . தீபாவளி காலத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் கோவிலுக்குள் புற்று வடிவத்தில் இறைவன் உளார் .800 ஆம்தட்டுகளுக்கும் மேல் பழமை உடையது .ஒரே வாரம் மட்டும் கோவில் திறந்து இருப்பதால் அப்போ து பல்லாயிரக் கணக்கனமாக்கல் விஜயம் செய்கிறார்கள். கோவில் பூட்டப்பட்டிருக்கும் நாட்களில் நந்தா தீபம் மாட்டும் எரிந்து கொண்டிருக்கும் .

இங்கு ஒரு வினோதம் என்னவென்றால், ஒன்பது தலையுள்ள ராவணன் வீணை வசிப்பதாகும் ; மற்ற இடங்களில் நாம் பத்து தலை ராவணனைக் காண்கிறோம் . சித்தேஸ்வர சுவாமியும் சிவன் ரூபத்தில் காட்சி தருகிறார்.

மும்பை , கோல்கத்தா  முதலிய ஊர்களுக்கு அந்தந்த ஊர் சக்தி தேவியே பெயர் கொடுத்தது போல இந்த ஹாஸன் நகருக்கும் தேவி ஹானாம்பாவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது ..

Xxxxx

82.ஹளபீடு 35,000 சிற்பங்கள் 

ஹளபீடு கோவிலில், கடுகு இடம் கூட வீணடிக்காமல் சிற்பங்களை அள்ளி வீசி விட்டார்கள் ஹோய்சாள வம்ச சிற்பிகள். சுமார் 1200 ஆண்டுப் பழமையான இந்தக் கோவிலில் வழிபாடு இல்லைதான். போய் தரிசிக்க கட்டணமும் இல்லை. ஒவ்வொரு சிற்பத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுத்தால் ஒவ்வொன்றும் போட்டோ போட்டியில் பரிசு பெறும்!

ஹளபீடு சிற்பங்களில் யானை, குதிரை, மன்னர்கள், கடவுளர் அத்தனை பேருக்கும் நகைகள். ஒரு மனிதன் கற்பனையில் சில விஷயங்களை எழுத வேண்டுமானாலும், அது அந்தக் காலத்தில் இருந்தால்தான் எழுத முடியும், வரைய முடியும், செதுக்க முடியும்.ஆகா உலகியேயே பணக்கார நறு இந்தியாதான் என்பதற்கு நம் சிலைகளில் உள்ள நகைகளைப் பார்த்தால் போதும்.

1.ஹோய்சாள மன்னர்களின் தலைநகர் இது. பழைய பெயர் துவாரசமுத்திரம். 1200 ஆண்டுப் பழமை உடைத்து.

2.விஷ்ணுவர்த்தனின் மகனான இரண்டாம் வீர வல்லாளன் காலத்தில் புகழ் கொடிகட்டிப் பறந்தது. காவிரி நதி முதல் கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் எல்லாம் அவன் வசப்பட்டது.

3.ஆயினும் 1311ல் டில்லித் துருக்கர் வசமானது. நல்லவேளை. முஸ்லிம்களின் அழிவுப்படை இந்தச் சிறபங்களில் கை வைக்கவில்லை. நாம் செய்த புண்ணியமே!

4..துருக்கப் படைத் தளபதி, டன் கணக்கில் தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் மட்டும் எடுத்துச் சென்றான்.

5.ஹளபீடு என்றால் பழைய வீடு /தலை நகர் என்று பொருள்; காரணம்- இதற்குப் பின்னர் புதிய தலைநகர் உருவானது

150 அற்புதக் கோவில்கள்

. 6.ஹோய்சாலர்கள் கர்நாடகம் மாநிலம் முழுதும் 150 கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றும் சிற்பக் கலையின் அற்புதம்

7.      இந்த ஊர்பெங்களூரில் இருந்து 214 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

8.       .முக்கியக் கோவில் ஹோய்சாளேஸ்வரர் சிவன் கோவில். ஜேம்ஸ் பெர்குசன் இதை ஏதென்ஸின் பார்த்தினானுடன் ஒப்பிட்டுள்ளார். ஆனால் நான் பார்த்தினானைப் பார்த்து வந்ததால், ஹளபீடுக் க்கு 100 மார்க்கும் இன்றுள்ள பார்த்தினான் கோவிலுக்கு 35 மார்க்கும் கொடுப்பேன் (எல்லா சிலைகளையும் கிறிஸ்தவ, முஸ்லீம் படை எடுப்பாளர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள் ஏதென்ஸில்)

 9.இரண்டு கோவில்கள் அருகருகே உள்ளன. ஒன்றில் பெரிய நந்தி. இது விஷ்ணுவர்த்தனின் அன்பு மனைவி சாந்தலாதேவியின் பெயர் சூட்டப்பட்ட கோவில்.

என்ன என்ன சிற்பங்களைக் காணலாம்?

எல்லா வகை மிருகங்களோடு மகரம் , ஹம்சம் போன்ற கற்பனை உருவங்கள்;

எல்லா வகை தெய்வங்கள்

பால கிருஷ்ணனின் லீலைகள்

கர்ண– அர்ஜுனன் யுத்தம்

கோவர்தன மலையைத் தூக்கும் கிருஷ்ணன்

கஜேந்திர மோட்சம்

சிவ தாண்டவம்

சிவனின் ரிஷப வாஹன கோலம்

ராவணன் தூக்கும் கயிலை மலை

ராமாயணக் காட்சிகள்

சிவலிங்கம், நந்தி, மந்தாகினி என்னும் அழகிகள், ஏழு குதிரைகளுடன் சூரியனின் ரதம், வித விதமான தூண்கள், விஷ்ணுவின் அவதாரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 35,000 சிற்பங்கள்

மீனாட்சி கோவிலில் 14 கோபுரங்கள் 14 ஏக்கர் கோவில் பரப்பில் 30000 சுதைகளைக் காணலாம்; ஹலபீடிலோ அரை மணி நாரப் பார்வையில் கண் வீச்சில் 35000 சிற்பங்களைக் காணலாம்! அதனால்தான் பிரம்மாண்ட மீனாட்சி கோவிலைவிட இது சிறந்த வேலைப்பாடு உடைத்து என்கிறேன்.

 ‘கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்’ என்று தி ருக்குறளை எப்படி பாராட்டினரோ அப்படி, குறுகி இடத்தில் 35000 சிற்பங்களை உருவாக்கிய காட்சி உலகில் வேறு எங்கும் இல்லை! இல்லவே இல்லை!!! 

11.  காளிதாசி என்ற சிற்பி இதை உருவாக்கியதாகக் கல்வெட்டு சொல்கிறது

 To be continued……………………………………

Tags- ஒரே வாரம், ஹளபீடு, அங்காடி, பெலவாடி, ஹொய்சாளர், ஹாசனாம்பா,

QUIZ காவிரி நதி பத்து QUIZ (Post No.12,373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,373

Date uploaded in London – –  5 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz குவிஸ் வரிசை எண் –  60

QUIZ காவிரி நதி பத்து QUIZ

1.காவிரி நதியில் உள்ள பழைய அணை எது அதை யார் கட்டியது ?

XXXXXX

2.காவிரி நதியின் நீளம் என்ன அதன் மறு பெயர் என்ன ?

XXXX

3.காவிரி நாதியின் பெயருக்கு கரணங்கள் என்ன?

XXXX

4.காவேரி நதியை உருவாக்கிய ரிஷியும் அதற்குக் காரணமான பறவையும் எவர் எது?

XXXX

5.காவேரி திருவையாற்றில் ஐந்து நதிகளாகப் பிரிவதால் அந்த  ஊருக்கு  திருவையாறு என்று பெயர்அந்த 5 கிளை நதிகளின் பெயர்கள் என்ன?

XXXX

6.துலா காவேரி ஸ்னானம் என்பது என்னகாவேரியின் பெருமையைக் கூறும் சம்ஸ்க்ருத நூலின் பெயர் என்னகாவிரி தோன்றும் இடத்திலிருந்து கடலில் சங்கமம் ஆகும் இடம் வரை விவரிக்கும் தமிழ் புஸ்தத்தின் பெயர் என்ன?

XXXX

7.இந்த நதி உற்பத்தி ஆகும் இடத்தின் பெயர் என்னஅங்குள்ள தலங்கள் யாவைகாவேரி நதி எந்தக் கடலில் கலக்கிறது ?

XXXX

8.காவிரி நதிமலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் யாவை?

XXXX

9.காவிரி நதியின் புகழ் பாடும் நூல்கள் எவை?

XXXX

10.தமிழ் நாட்டில் மேட்டூர் அணை உள்ளது. கர்நாடகத்தில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் மீதுள்ள அணைகள் யாவை ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture shows Dams across River Kaveri

ANSWERS

1.திருச்சிக்கு அருகில் உள்ள கல்லணை ; இதை கரிகால் சோழன் கட்டினான். உலகிலேயே பழைய அணை இதுதான் OLDEST DAM IN THE WORLD . ஆங்கிலத்தில் கிராண்ட் அணைக்கட் GRAND ANICUT என்று சொல்லுவார்கள்

XXXXX

2. காவிரி நதியின் நீளம் 800 கி.மீ ; மைல் கணக்கில் சுமார் 500 மைல் ; மறு பெயர் பொன்னி .

XXXXX

3.காவிரி நதியின் பெயருக்கு காரணங்கள்:

ஆறு பாயும் இடம் எல்லாம் பூங்காக்களை உண்டாக்கி செல்லுவது முதல் காரணம்.

காகம் விரித்த நதி என்பதால் – காக + விரி என்பது இரண்டாவது காரணம்;

பொன் போல் விளையும் நெற்பயிருக்கு காரணமாவதால் பொன்னி;

இந்தியாவின் ஒரே தங்கச் சுரங்கமான கோலார் தங்கச் சுரங்கம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆவதால் பொன்னி .

XXXX

4.அகஸ்திய மகரிஷி ; அவருடைய கமண்டலத்தைத் தட்டிவிட்டு நதியைத் திருப்பிவிடும் பாதையைக் காட்டிய பறவை காகம். அகஸ்தியர் மாபெரும் சிவில் மற்றும் மரைன் என்ஜினீயர் CIVIL AND MARINE ENGINEER. ராமன் ,அர்ஜுனன் போன்றோர் பெரிய நதிகளைக் கடக்க முடியாமல் கடலோரமாகவும் படகுகளில் பயணம் செய் தும்  தென்னாட்டிற்கு வந்தனர். அகஸ்தியர்CIVIL ENGINEER சிவில் என்ஜினீயர் என்பதால் விந்திய மலையை உடைத்து, காடுகளை அழித்து தமிழ் நாட்டிற்கு சாலைப்பாதை LAND ROUTE/ ROAD ROUTE அமைத்தார். பகீரதன் என்ற என்ஜினீயர் CIVIL ENGINEER  கங்கையைத் திரும்பிவிட்டது போல காவிரியையும் தமிழ் நாட்டிற்குப் TO DIVERT THE RIVER FROM KERALA  SIDE பயன்படும் வகையை எண்ணி தவம் இயற்றுககையில்  காகம் வந்து கமண்டல ததைத் தட்டவே அதிலுள்ள நீர் வழிந்தோடிய பாதையில் காவிரியைத்திருப்பிவிட்டார். இதை கல்லணையில் சிலைகளாகக் காணலாம்STATUES DEPICTING THIS ANECDOTE ARE IN GRAND ANICUT NEAR TRICHY.

XXXX

5. திருவையாறு :–காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு , வடவாறு ; இங்குதான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதி இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் அங்கு ஆராதனை நடைபெறும்

XXXXX

6.ஐப்பசி மாத முதல் நாளில் மாயவரத்தில்  காவிரி துலா ஸ்நானம் துவங்கி ,மாதம் முழுதும் மக்கள் புண்ணிய நீராடுவர் . இதோ காஞ்சி பரமாசார்ய  (1894-1994)சுவாமிகளின் அருளுரை

காவேரி முழுவதிலும் இப்படி துலா மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், இப்படிச் சொல்வதும் ஜெனரலாக இருப்பதால், இதிலும் ஸ்பெஷலாக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கல்பகாம்பாள் மயிலாகிப் பரமேச்வரனைப் பூஜித்தவளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பேர் ஏற்பட்டது.

அங்கே காவேரிப் படித்துறை ஒன்றை ‘லாகடம்’ என்பார்கள். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை உதிர்த்து லாகடமாகியிருக்கிறது! ஜனங்களில் பல பேர் சில வார்த்தைகளின் முதல் எழுத்தையோ, உள்ளே வருகிற எழுத்தையோ ‘சாப்பிட்டு’ விடுவார்கள்! ‘தொள்ளாயிரம்’ என்பதை ‘த்ளாயிரம்’ என்பார்கள். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’ என்றுதான் சொல்வார்கள். ‘வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்கள். தொள்ளாயிரம் த்ளாயிரம் ஆகிற மாதிரி, ‘துலா’ கட்டம் ‘த்லா’ கட்டமாகி, லாகட்டமாகி, ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட’மாகியிருக்கிறது!

XXXXX

7.கர்நாடக மாநிலத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில்  குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரியில் தோன்றுகிறது.; குடகு என்பதை ஆங்கிலத்தில் கூர்க் COORG என்பர்.

பூம்புகார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.

தலைக் காவேரி , அதன் கீழுள்ள தர்மஸ்தலா ஆகியன முக்கிய தலங்கள்.

XXXXX

8.காவிரி நதி, மலையிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள் :–கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஹொகனேகல் /ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு நீர்வீழ்ச்சிகள் ஆகும்

XXXX

9.முன் காலத்தில் சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் முதலிய நூல்களில் நிறைய குறிப்புகள் இருக்கின்றன. ஆயினும் முழுக்க, முழுக்க காவிரி நதியைப் போற்றும் நூல்கள் :–

சம்ஸ்க்ருத மொழியில் துலா காவேரி மஹாத்மியம் , தமிழ் மொழியில் நடந்தாய் வாழி காவேரி;   ‘சிட்டி’ (பெ.கோ. சுந்தரராஜன்)யும் தி. ஜானகி ராமனும் இணைந்து எழுதிய பயண நூல்.

XXXXXX

10. கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர்,

Krishna Raja Sagara Dam. கிருஷ்ணராஜ சாகர்

Hemavathy Dam. ஹேமாவதி அணை

Harangi Dam.ஹாரங்கி அணை

Kabini Dam.கபினி அணை

Banasura Sagar Dam.பாணாசுர சாகர் அணை

தமிழ்நாட்டில்

Kallanai.கல்லணை

Mettur Dam (Ellis Park, Stanley)மேட்டூர் அணை

Amaravati Dam.அமராவதி அணை

இவை முக்கிய அணைகள். இவை தவிர குட்டி அணைகளும் உண்டு.

—SUBHAM—

Tags- துலா காவேரி மஹாத்மியம் , நடந்தாய் வாழி காவேரி, சிவசமுத்திரம் ,ஹொகனேகல், கல்லணை, காவிரி, குடகு , பூம்புகார், திருவையாறு