
Post No. 12,322
Date uploaded in London – – 25 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
லண்டனிலிருந்து வெளியாகும் EVENING STANDARD ஈவினிங் ஸ்டாண்டர்ட் என்ற மாலைப் பத்திரிகை வெள்ளிக்கிழமை தோறும் வெளியிடும் இலவச இணைப்பில் ஜோதிடம் பற்றி சில வியப்பான தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளன .
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஜோதிட மோகம் அதிகரித்து வருகிறது .
இரண்டாவதாக, முன்னால் எல்லோரும் ரகசியமாக ஜோதிடம், ஆரூடம் கேட்பார்கள். இப்போதெல்லாம் ஓப்பன் OPEN ஆக பகிரங்கமாக ஜோதிடர், குறிசொல்லுவோர், ஆரூடம் சொல்லுவோரிடம் போனதை V. I .P.s / பெரும்புள்ளிகள் பத்திரிகைகளில் எழுதுகின்றனர்.
இங்கிலாந்து மஹாராணி எலிசபெத் அம்மையார் இறந்தவுடன் பிரின்ஸ்/ இளவரசர் PRINCE HARRY ஹாரி பற்றி அதிகம் செய்திகள் வந்தன. அவர் வருவாரா, அவர் வந்தால் அவருக்கு எந்த இடம் ஒதுக்கப்படும், அவர் திருமணம் செய்துகொண்ட கறுப்பினப் பெண்மணி ( Meghan Markle )(யை ஒதுக்கி வைப்பார்களா என்று. இதற்கெல்லாம் காரணம் அவர் எழுதி வெளியிட்ட புஸ்தகமே.. தனது நினைவலைகளை ஸ்பேர் (memoir SPARE) என்ற தலைப்பில் வெளியிட்டு , அவர் அரச குடும்பப தகராறு அனைத்தையும் அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். அந்த புஸ்தகத்தில் அவர் குறி சொல்லும் ஒரு பெண்மணியைச்(Psychic) சந்தித்து, இறந்துபோன இளவரசி டயனவுனாவின் (Princess Diana) ஆவியுடன் பேசிய விஷயத்தையும் ஹாரி எழுதியுள்ளார். இதனால் குறிசொல்லுவோருக்கும் , இறந்துபோனோரின் ஆவிகளுடன் பேசுவோருக்கும் டிமாண்ட் / கிராக்கி அதிகரித்துவிட்டது.
Prince Harry claims he spoke to Diana through a psychic and a leopard in Botswana was ‘a signal sent by her’
- Prince Harry contacted a psychic in a bid to reach his late mother Diana
- His memoirs, Spare, reveal how he received a message from the late Princess
- The Duke also briefly believed that his mother may have faked her own death.
· என்ற தலைப்பில் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் செய்திகளை வெளியிட்டன. சொல்லப்போனால் உலகிலுள்ள புகழ்பெற்ற அத்தனை ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் இந்தச் செய்தி வெளியானது
இளவரசர் ஹாரி ஆரூடம் சொல்லும் ஒரு பெண்மணியைச் சந்த்தித்து, அவர் மூலமாக ஆவியுடன் பேசி, இறந்துபோன தனது அன்னை டயானா என்ன சொன்னார் என்று ஸ்பேர் நூலில் எழுதியுள்ளார்.
xxx

61 பில்லியன் ஹிட்ஸ் (Tarot has 6-1 billion views on Tik Tok)
டாரட் என்பது கார்ட் Card Reading ஜோதிடம்; அட்டை ஜோதிடம்; நம்ம ஊரில் கிளிகள் அட்டையைக் கொத்தி வரும். உடனே சாலை ஓர கிளி ஜோதிடர் அதைப் படித்து நமக்கு குறிசொல்லுவார். இது போல நாம் எடுக்கும் டாரட் என்னும் பட க்கார்டுகளைப் பார்த்து நமக்கு குறிசொல்லுவோர் இங்கு லண்டனிலும் பல நகரங்களிலும் உண்டு. இவைகளைப் பார்க்க Tik Tok டிக் டாக்கில் 61 பில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர் (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி )
xxx
மேலை நாடுகளில் ஹோட்டல்களில் ரிசப்ஷன் அருகில் ஒருவர் மேஜைபோட்டு (Concierge) அமர்ந்து இருப்பார் . அவரிடம் சொன்னால் நம க்கு அந்த ஊரிலும் அருகாமை ஊர்களிலும் சுற்றிப்பார்க்க டிக்கெட் கொடுப்பார் அல்லது டூரிஸ்ட் டாக்சி, கோச் ஏற்பாடு செய்து தருவார். இப்பொழுது அவரிடம் சொன்னால் ஜோதிடர் சர்வீசும் கிடைக்கும்
xxx
மதுரை அனுபவம் – தினமணி ரெங்கநாத ஜோதிடர்
இப்பொழுது எனக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. நான் வேலை பார்த்த தினமணிப் பத்திரிகையில் ஜோதிடப் பகுதி எழுதி பிரபலம் ஆனவர் ரெங்கநாத ஜோதிடர். அவர் மதுரையில் புகழ்பெற்ற காலேஜ் ஹவுஸ் COLLEGE HOUSE HOTEL,MADURAI ஹோட்டலில் ஒரு நிரந்தர அறை எடுத்து பெரிய போர்டும் போட்டிருப்பார். நாங்கள் காப்பி சாப்பிடப் போகும்போது அவர் அறையில் வாடிக்கையாளர் இல்லாவிடில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். எப்படி அதிக வாடகை உடைய ஹோட்டல் அறையில் இப்படி நிரந்தர அறை போட்டிருக்கிறீர்கள் என்று வியப்போம். அவர் பதில் சொல்லாமல் மழுப்பி சிரித்து விடுவார். ஆனால் போகும் வருமம் அரசியல்வாதிகளும் மலேசியா, சிங்கப்பூர் , இலங்கை ஆட்களும் அங்கே வாடிக்கை என்பது எங்களுக்குத் தெரியும். மதுரை ஹோட்டலில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் ‘கதி’ என்றால், இன்று லண்டன் முதலிய நகரங்களில் ஜோதிடர் இருப்பது வியப்பில்லை
Xxxx
கிறிஸ்டல்ஸ் – யானை விலை, குதிரை விலை
CRYSTALS IN NET-A-PORTER
ஸ்படிக மாலையின் அபூர்வ சக்திகளைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இதனால்தான் நமது சாது சந்யாசிகள் ஸ்படிக / கிறிஸ்டல் மாலைகளை அணிகிறார்கள். வெளிநாட்டில் இந்த மோகம் அதிகரித்ததிலிருந்து அவைகளை பிரபல நிறுவனங்களும் ஆன் லைனில் விற்கின்றன. நெட் எ போர்ட்டர் NET-A-PORTER சைட்டுக்குப் போய் கிரிஸ்டல்CRYSTALS என்று போட்டுப் பாருங்கள் விலையைப் பார்த்தால் மயக்கம் போட்டுவிடுவீர்கள்.
XXXX
பம்பிள் BUMBLE என்னும் கம்பெனி ஒரு நிரந்தர ஜோதிடரையே வேலைக்கு நியமித்து இருக்கிறது ; கொய்பேர்ட் KOIBIRD என்னும் பெண்கள் துணிக்கடை ஐந்தாவது ஆண்டு விழாவுக்கு வருவோருக்கு டாரட் TAROT CARD READING கார்ட் ஜோதிட சேவை, ஆரா போட்டோ / AURA PHOTOGRAPHY (ஒவ்வொருவரையும் சுற்றியுள்ள ஒளி வட்டத்தைப் புகைப்படம் எடுத்தல்) சேவை ஆகியவற்றை அளித்தது.
கூப்GOOP என்னும் கம்பெனி இது போன்ற சில சேவைகளை அளிக்கிறது. புதன் கிரகம் வக்ரகதி MERCURY RETROGRADE பற்றிப் பலரும் கவலைப்படுகிறார்கள்.
முன்னரெல்லாம் உளவியல் PSYCHOLOGIST நிபுணர் ஒருவரை சந்திப்பது மேலை நாட்டுக்காரர்களுக்கு வாடிக்கை. இப்பொழுது குறிசொல்லுவோரை PSYCHIC சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது!
—SUBHAM—-
TAGS- ஜோதிடர் , குறிசொல்லுவோர், ஆரூடம், டாரட் கார்ட், புதன் வக்ரகதி , ஜோதிடம் வளர்கிறது
.jpg)





















