G for Gokarna –Know India Puzzle (Post.12,417)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,417

Date uploaded in London – –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.   The city is famous for the ancient temple of Kamakhya Devi and its mystic experiences.

2.   Located on the east coast of the Bay of Bengal, the beach is a luxurious beach located in Odisha. It is popular for being one of the few sites in India where Olive Ridley Turtles nest.

3.   it is a city in the Indian state of Punjab, between the rivers Beas and Ravi;  city was named after Mahant Guriya das ji.

4.   The  train burning occurred on the morning of 27 February 2002 in this city ;59 Hindu pilgrims and karsevaks returning from Ayodhya were killed in the arson attack.

5.   Om beach in this Karnataka city is named so because it is shaped like the auspicious ॐ Om symbol. The Mahabaleshwar Temple is visited byHindus.

6.   This Andhra city is famous for chilli, tobacco and cotton export.

7.   The town has own international reputation for its cottage industries and handicrafts.it is a coastal town in Odisha, famous temples and hot water spring are nearby..

8.   This Kashmiri city is famous for highest cable car, Himalayan scenery, skiing etc.

ANSWERS:-1.Guwahati, 2.Gopalpur, 3.Gurdaspur, 4.Godhra, 5.Gokarna , 6.Guntur, 7.Ganjam, 8.Gulmarg

 —subham—

கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,416

Date uploaded in London – –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 கிருஷ்ணர் கையும், கிறிஸ்துவின் கையும் குணப்படுத்தியது எப்படி? -1 (Post No.12,416)

ஆயுர்வேதசிகிச்சை முறைகள் பற்றி தென் அமெரிக்க நிபுணர் !

தென் அமெரிக்காவில் மிக நீண்ட கடற்கரை உடைய நாடு PERU பெரு . சுமார் 2000 மைல் நீளத்துக்கு பசிபிக் மஹாசமுத்திரத்தைக் காணலாம். அ ந்த நாட்டின் மாற்று மருத்துவ முறைகளின் நிபுணர் ரூபன் தேவோட்டோ பேரால்டா RUBEN DEVOTO PERALTA இரண்டு முறை இந்தியாவில் நடந்த மாற்றுச் சிகிச்சை முறைகள் மகாநாட்டில் INTERNATIONAL CONGRESS OF ALTERNATIVE MEDICINE  கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்துள்ளார்  அவர் நிறைய சுவையான விஷ்யங்களைச் சொல்கிறார் ; ஒன்றிரண்டு அதிசய சம்பவங்களை முதலில் காண்போம்.

((ஒரு முறை ஆர் எஸ் எஸ் R S S பிராந்திய பிரசாரக் இராம கோபாலனுடன் (GOPALJI) பேசிக்கொண்டிருந்தோம். மாநிலத் தலைமை பிரசாரக்காக நீண்ட காலம் தமிழ் நாட்டில் பணியாற்றிய இவர் பிற்காலத்தில் இந்து முன்னணி யைத் துவக்கியவர் அவரிடம் ஸ்ரீபுரம் நாராயணி அம்மா என்பவரைப் பற்றிக் கேள்வி கேட்டோம். அவர் உண்மையான சாமியார்  ஒரு கான்ஸர் நோயாளி போனார்; அவர் புற்று நோயுள்ள இடத்தில் கையை  வைத்து கான்ஸர் கேன்சல்ட் CANCER CANCELLED என்று சொன்னார்; பின்னர் எக்ஸ்ரே எடுத்ததில் அந்த நோய் அறவே இல்லை என்று தெரிந்தது என்று சொன்னார். இது போல பலர் சத்ய சாய் பாபா முதலியோர் செய்த மருத்துவ அதிசயங்களையும் படித்துள்ளேன் . இது கை மருத்துவம் . இது போல கிருஷ்ணரும் கிறிஸ்துவும் செய்த இரண்டு நிகழ்ச்சிகளை பெரு நாட்டின் நிபுணர் சுட்டிக்காட்டுகிறார். (HEALING HANDS)

((அவரவர் கரும வினையில் சிலவற்றை அழிக்க முடியும். சில வகை பிராரப்த கர்மாக்களை அனுபவித்துதான் அழிக்க முடியும்; இது ரமணர்ராம கிருஷ்ண பரம ஹம்சர் போன்ற மஹான்களுக்குத் தெரியும். அவ்விரு மகான்களும், சன்யாசி போன்ற தூய வாழ்க்கை நடத்திய மாதவ சதாசிவ கோல்வால்கரும் (குருஜி) புற்று நோயால் மரணம் அடைந்ததை நாம் அறிவோம். அவர்கள் அதுபற்றி அணு அளவுக்கும் கவலைப்பட்டதில்லை அழுக்குச் சட்டையை நாம் எப்படிக் கவலைப் படாமல் தூக்கி எறிந்தோமோ அப்படி அவர்கள் உடலையும் விட்டனர்.

நாம் ஒரு சக்தியுள்ள மஹானை அணுகும்போது நம்மைச் சுற்றியுள்ள ஒளி வட்டமே AURA நம்முடைய பாவ புண்ணியங்களைக் காட்டிவிடும். நமக்கு புண்ணியம் அதிகம் இருந்தால் அவர்களே நம் நோயை, அவர்களுடைய சக்தியைப் பயன்படுத்தி அழித்துவிடுவார்கள் .

உண்மையில் நாமும் இதுபோல செய்கிறோம். ஒருவர் நம்மிடம் கடன் கேட்டு வந்தால், ஒரு நிமிடம் யோசிக்கிறோம். நம்மிடம் அப்போது அதிக பணம் இருந்தால் (தவ வலிமைக்கு சமம்), போனால் போகட்டும் என்று அவருக்குப் பணம் கொடுக்கிறோம். அந்த ஏழை திருப்பித் தர மாட்டான் என்று தெரிந்தே “அருள் மழை” பொழிகிறோம். சிலர் விஷயத்தில் வரும் ஆளின் பின்னணி  (பாவ சக்திக்கு சமம்) தெரிவதால் அவனை நிராகரித்து விடுகிறோம் .))

கிருஷ்ணர் செய்த அதிசயம்

கிருஷ்ணரின் கதை சொல்லும் பாகவத புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா செய்த ஏராளமான அற்புதங்களைப் படிக்கிறோம் அதில் ஒன்று அவர் குள்ளமான , கூன் முதுகுப் பெண்ணை நின்ற சீர் நெடுமாறியாக மாற் றினார் என்று அறிகிறோம்.. கிருஷ்ணருக்கு வாசனைப் பொருட்கள், சென்ட், பெர்ப்Fயும் PERFUME முதலியவற்றைக் கொண்டுவரும் குள்ளி (குள்ளனின் பெண்பால்) அவள். கிருஷ்ணரின் அருட்பார்வை அவள் மீது விழுகிறது  அவள் காலை ஒரு  அமுக்கு அமுக்கிக் கைகளால் மேலே இழுக்கிறார். அவளு டைய கூன்முதுகு மறைந்து பேரழகி ஆகிவிடுகிறாள் .இது அவர் கைகள் மூலம் அந்தப் பெண்ணின் உடலில் பாய்ந்த சக்தி ஆகும்.

( நின்ற சீர் நெடுமாறன் கதையில் திருஞான சம்பந்தரும் இப்படிச் செய்ததை பெரிய புராணத்தில் படிக்கிறோம். கூன் பாண்டியன் மீது விபூதியைத் தடவி தேவாரம் பாடுகிறார். அவன் நின்ற சீர் நெடுமாறன் ஆனதோடு, அவன் வயிற்றில் எரிந்த வெப்பு  நோயும் குணமாகிறது; இது அவரது கை மஹிமை ; ராமன் கால் பட்டவுடன்  சித்தப் பிரமை பிடித்த அஹல்யாவும் கல் நிலையிலிருந்து சாதாரண உடல் நிலைக்குத் திரும்பினாள் என்கிறது ராமாயணம்  )

கிறிஸ்து செய்த அதிசயம்

நோயாலும் வறுமையினாலும் அல்லலுற்ற ஒரு பெண்மணி, கிறிஸ்துவின் ஆடைகளைத் தொட்டவுடன் அவள் குணமடைந்த கதை பைபிளில் வருகிறது. அவள் கிறிஸ்துவைத் துதி பாடிய போது உன் நம்பிக்கைதான் உன்னைக் குணப்படுத்தியது YOUR FAITH HAS HEALED YOU என்கிறார்

இதில் ஒரு முக்கிய உண்மையை நாம் அறிகிறோம். டாக்டர்கள் எவ்வளவு மருந்து கொடுத்தாலும் அதில் நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்

(நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு என்று பாரதியார் சொல்வதில் நம்பிக்கையின் சக்தியையும் சதுர் வேத மந்திரங்களின் சக்தியையும் நாம் அறிகிறோம்).

தென் அமெரிக்க அதிசயம் HUACO

பெரு நாட்டில் சடலங்களைப் புதைத்த இடங்களில் வினோத உருவம் கொண்ட குவாகோ HUACO என்ற பீங்கான் அல்லது மண் பொம்மைகள் கிடைக்கின்றன. இவைகளில் சில மூக்குடைய கெட்டில் அல்லது பானைகள் . இவைகளில் தண்ணீர் நிரப்பி அசைத்தால் விசில் WHISTLE  அடிக்கும். இவைகளை ஆராய்ந்தவர்கள்  இது ஊதல் பானைகள் WHITLING POTS . அல்ல. இவற்றை  அவர்கள் நன்மை தரும் மந்திர சக்தியுள்ள பொருட்களாகக் கருதியே புதை குழிகளில் வைத்தனர் இவை நோய்களைக் குணப்படுத்தும் என்று கண்டுபிடித்துள்ளனர் இவைகள் 800 ஆண்டுகளாக செய்யப்பட்டு 1200 வரை நீடித்தது . ஸ்பானிய கொள்ளைக்காரர்கள் தென் அமெரிக்காவில் நுழைந்து எல்லாவற்றையும் அழிக்கும் வரை இந்தக் கலை இருந்தது   இவைகளைப் பற்றியும் இதன் சக்தியைப் பற்றியும் தென் அமெரிக்க நிபுணர் குறிப்பிடுகிறார் .

இவற்றின் உண்மையான உச்சரிப்பு வாரி , வாகோ WARI, WACO ; ஸ்பானியர்கள் இதை குவாகோ ,ஹுவாகோ GUACO, HUACO என்று திரித்துவிட்டனர்.

Huaco or Guaco is the generic name given in Peru mostly to earthen vessels and other finely made pottery artworks by the Indigenous peoples of the Americas found in pre-Columbian sites such as burial locations, sanctuaries, temples and other ancient ruins. Huacos are not mere earthenware but notable pottery specimens linked to ceremonial, religious, artistic or aesthetic uses in central Andean, pre-Columbian civilizations. The Incas, who absorbed all the cultures in the time of its expansion, also produced huacos.

Regardless of what a person hears from the whistling pots , the resulting experiences are always transformative, moving people deeply into or toward something that they seek. And, by entering into the process with a clear intention, people usually find themselves progressing quickly in the areas of healing, transformation and manifestation.

தொடரும்

TO BE CONTINUED…………………………

Tags- பெரு, ஹுவாகோ பானைகள், கை மஹிமை, கிறிஸ்து, கிருஷ்ணா, குள்ள பெண், கூன் முதுகு, நின்ற சீர் நெடுமாறன், கால் மஹிமை, அகல்யை , கோபால்ஜி, Huaco, Guaco, Wari

இதிஹாஸப் பெண்மணிகள்!  (மூன்றாம் பகுதி)- Post No.12,415


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,415

Date uploaded in London –  14 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

 குமுதம் பக்தி ஸ்பெஷல் 17-8-2023 SUPPLEMENTஆக

வெளியாகியுள்ள கட்டுரை

மூன்று பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

இதிஹாஸப் பெண்மணிகள்!  (மூன்றாம் பகுதி)

ச.நாகராஜன் 

காந்தாரி

காந்தாரத்தை ஆளும் சுபலன் என்பவனின் மகள் காந்தாரி. அவள் பரமேஸ்வரனை வழிபட்டு நூறு பிள்ளைகள் பெறும் வரம் பெற்றவள் என்று கேள்விப்பட்ட பீஷ்மர் கண்பார்வையற்ற திருதாஷ்டிரனுக்கு அவள் ஏற்றவள் என்று கருதி காந்தார தேச மன்னனுக்குத் தூது அனுப்பினார். காந்தார மன்னன், கண்பார்வையற்றவன் திருதராஷ்டிரன் என்பதால் அவனை மருமகனாக ஏற்கத் தயங்க, காந்தாரி தன் பெற்றோரிடம் சம்மதம் தெரிவித்தாள்.

கணவன் கண்பார்வையற்று இருப்பதால் அவனை ஒருநாளும் இகழக் கூடாது என்று விரதம் பூண்டு ஒரு துணியால் தன் கண்களை மூடிக் கொண்டாள்.

துரியோதனன் மகாபாரதப் போருக்குப் போகும் முன்னர் தன் தாயான காந்தாரியிடம் ஆசி வாங்க வந்த போது, ஆசி தந்த அவள், “எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்” என்றும் கூறினாள்.

யுத்தம் முடிந்தது. துரியோதனாதியர் கொல்லப்பட அவர்களின் பிணங்களின் அருகே மனைவிமார்கள் அழ வியாஸர் மூலமாக ஞானக் கண்ணைப் பெற்ற காந்தாரி அந்த அவலக் காட்சிகளைக் காண்கிறாள். அழுகைக் குரல் வானைப் பிளக்கிறது. கிருஷ்ணனை அடைந்த அவள், தனது குடும்பம் நாசமாவதற்குக் காரணமான அவனது குலம் 36 ஆண்டுகளில் அழியும் என சாபமும் இட்டாள்.

அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டான் மகாபாரத இயக்குநரான கிருஷ்ணன். கதை வசனம் எழுதும் போது தன் முடிவையும் தனக்குத் தானே அவனே தானே எழுதினான்! அப்படித் தான் நடக்கும் என்று காந்தாரியிடமும் அவன் கூறுகிறான்!

 தர்மத்தை விடாமல், குடும்ப பாசத்தையும் விடாமல் ஒரு உயர்ந்த தாயாக, அரசியாக, சிறந்த மனைவியாக, தர்மம் காப்பவளாக முழு சமச்சீர்தன்மையுடன் – பாலன்ஸுடன் – வாழ்ந்தவள் அதிசயப் பெண்மணி – Wonder Woman – காந்தாரி.

தமயந்தி

வேதத்திலேயே கூறப்படும் சரித்திரம் நள-தமயந்தி சரித்திரம். எல்லையற்ற நுண்ணறிவு கொண்டவள் தமயந்தி. (Super IQ) கணவனுடன் இணைந்து எதிர்ப்பட்ட இன்னைலை எல்லாம் எதிர்கொண்டு வென்றவள். பேரழகி.

அவளது நுண்ணறிவுக்கு ஒரு உதாரணம் – அவள் மேல் காதல் கொண்ட தேவர்கள் நால்வர் ஸ்வயம்வரத்தில் நளன் உருவத்தில் வந்து இருக்க ,அதிர்ந்து போன தமயந்தி தனது காதலன் நளனைக் கண்டுபிடித்தது நுண்ணறிவால் தான்.

“கண் இமைத்தலால், அடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர் மாலை வாடுதலால்” – அவள் நளனைக் கண்டு பிடித்தாள்.

                (நள வெண்பா சுயம்வர காண்டம் பாடல் 135)

(தேவர்களுக்கு கண் இமைக்காது, மனிதனான நளனுக்கு கண் இமைக்கிறது; தேவர்களின் பாதங்கள் பூமியைத் தொடாது; ,மனிதனான நளனின் கால்களோ பூமியில் பதிந்துள்ளது; தேவர்களின் மாலை வாடவே வாடாது; மனிதனான நளனின் மாலையோ சற்று வாடி இருக்கிறது) ஆக இந்த லேடரல் திங்கிங்கால் (Lateral Thinking – மாற்று யோசிக்கும் நுண்ணறிவால் தனது நளனைக் கண்டாள் தமயந்தி. அவனுக்கே மாலையிட்டாள்.

Love Birds என்ற வார்த்தைக்கு நள தமயந்தி பொருத்தம் தானே!

மகாபாரதத்தில் வனபர்வத்தில் 49 முதல் 76 அத்தியாயம் முடிய நள-தமயந்தி சரித்திரத்தை விரிவாகப் படிக்கலாம்.

சாவித்திரி

உலகில் எந்த நூலிலும் காண முடியாத ஒரு அற்புதமான பெண்மணியாக மஹாபாரதத்தில் நம் முன் சித்தரிக்கப்படுபவள் சாவித்திரி; குணக்கடல் என்பதால் இவளைப் பார்க்க யமனே நேரில் வருகிறான்.

மத்ர நாட்டு மன்னனின் புதல்வியான சாவித்திரி சத்தியவானைப் பார்த்துக் காதல் கொள்கிறாள். அவன் தன் தாய் தந்தையரை அழகுறப் பாதுகாத்த விதம் அவளைக் கவர்ந்தது. அவனையே மணந்து கொள்கிறாள். ஆனால் நாரத முனிவர் அவனது ஆயுள் இன்னும் ஒரு வருடமே உள்ளது என்கிறார். குறித்த நாளில் சத்தியவான் உயிரை எமன் கவர்ந்து கொள்ள, தன் கற்பின் சக்தியால் யமனைப் பின் தொடர்கிறாள் சாவித்திரி. கணவன் உயிரைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள் என்று எமதர்மன் கூற சாவித்திரி தனக்கு நூறு புத்திரர்கள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். யமனும் அருள்கிறான். ஆனால் பதிவிரதையான அவளுக்குக் கணவன் இல்லாமல் எப்படி நூறு மகன்கள் பிறக்க முடியும்? எமன் சத்தியவானின் உயிரைத் திருப்பித் தருகிறான்.

இந்த சாவித்திரி பாத்திரம் பாரத தேசப் பெண்மணிகளின் நம்பிக்கை நட்சத்திரம். காரடையான் நோன்பு, வடபூர்ணிமா விரதம் என்பன போன்ற விரதங்களை அனுஷ்டித்து, பெண்மணிகள் ‘சாவித்திரி போல ஆவாயாக’ என்று வாழ்த்துவது இன்றும் உள்ள மரபாகும்.

மகாபாரதத்தில் வன பர்வத்தில் மார்க்கண்டேயர் இதை மிக விவரமாக தர்மபுத்திரருக்குச் சித்தரிக்கிறார் (பதிவிரதா மாஹாத்ம்ய பர்வத்தில்)

போன உயிர் மீளாது என்பது நிரந்தர உண்மை.

ஆனால் அதையும் பொய்யாக்கி அதீத புலனாற்றல் சக்தி என்பதையும் மீறி இறப்பையே பொய்யாக்கிய பெண்மணி சாவித்திரி என்பதை நினைத்துப் பெருமை கொள்ளலாம்.

பெண்ணின் பெருமையே பெருமை

பெண்மையின் சிகரம் சீதை என்று பெருமையுடன் கூறினார் ஸ்வாமி விவேகானந்தர்.

சாதுர்யம் பூஷணம் நார்யா – சாதுர்யமே பெண்களுக்கு பூஷணம் என்று கூறினார் ஒரு கவிஞர்.

இப்படி பெண்ணின் பெருமையைக் கூறும் ஆயிரக்கணக்கான செய்யுள்கள் ராமாயண, மஹாபாரத, புராணங்களிலும் மற்றும் காவியங்களிலும் உள்ளன.

ஒரு பெண் ஐந்து குணங்களைப் பெற்றிருந்தாள் என்றால் அவளை மனைவியாகக் கொள்பவன் அதிர்ஷ்டசாலியே என்று ஒரு கவிஞர் பட்டியலிடுகிறார் :

1) அநுகூலம் – காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கை கொடுப்பவள்

2) விமலாங்கி – குற்றம் இல்லாதவள்

3) குலஜா – நல்ல குடியில் பிறந்தவள்

4) குஷலா – திறமை வாய்ந்தவள்

5) சுசீலா – நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

இப்படிப்பட்டவள் பெய் என்றால் மழையும் பெய்யும் அல்லவா?

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இணையே தான்!

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் விண்வெளி கலத்தில் செல்லும் வீராங்கனை, விமானம் ஓட்டும் பைலட், ராணுவ பெண் அதிகாரி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என எங்கும் பெண்களை நாம் இன்று பார்க்க முடிகிறது.

சமுதாயத்தின் நடைமுறைப் போக்கில் ஆண் ஆதிக்கத்தை விட்டு விட்டு ஆண் பெண் இருவரும் சமம் என்பதை இன்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

இதை அன்றே ஏராளமான இதிஹாஸப் பெண்மணிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள், இல்லையா?!

***

யம் , யம் , யம்மி யம்மி குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,414)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,414

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

யம் ,என்று முடியும் 8 எழுத்துக்களைக் கண்டுபிடியுங்கள்

1.பொதுவாக நோயாளிகள் உண்ணவேண்டிய அல்லது உண்ணக்கூடாத உணவுகளை குறிப்பிடப்படுவதாகும்.

2.நடு நிலையில் நின்று தீர்ப்பு சொல்லுவதுபிணக்குகளைத் தீர்ப்பது.

3.நன்றாக வாசிக்கலாம்

4.செய்யுள் நடை பத்ய ரூபம்உரைநடை …….

5.உண்மை என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல்

6.இது நார்ச்சத்தையும்சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது.

7.காசு இருந்தால் குதிரை மீது கட்டலாம். சண்டையிடும் சேவல் மீதுகிடா மீது கட்டலாம்.

8.குணத்திலும் இது தேவைபர்ஸிலும் இது தேவை.

விடைகள்

1.பத்தியம் 2.மத்தியம் 3.வாத்தியம் 4.கத்தியம் 5.சத்தியம் 6.வெந்தயம், 7.பந்தயம் 8.நாணயம்

–subham—-

F for Faridkot –Know India Puzzle (Post No.12,413)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,413

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

You have solved A to E Know India Puzzles; here comes the difficult F for Faridkot puzzle. Many of the F towns are in Punjab and Rajasthan; try it please!

1..Situated in Punjab, this city is known to house some beautiful, pious gurudwaras and temples. A few notable ones worth visiting are the Saragarhi Memorial Gurudwara and the Jain Swetambar Temple, which is over 1,200 years old.

2.This Punjab town is also known as Bangla,  known for a style of jhumar dance promulgated by Baba Pokhar Singh (1916–2002).

3. Located on the banks of the sacred rivers Ganges and Yamuna, this Uttar Pradesh town is mentioned in the puranic literature. The ghats of Bhitaura and Asani were described as sacred in the puranas.

4. This town is a beautiful tourist destination of West Bengal. It is famous for NTPC, a Barrage Dam, Milan Mandir, Gandi ghat and many more.

5.The town in Punjab was founded during the 13th century as Mokalhar by Raja Mokalsi, ; main tourist attractions range from magnificent forts to wonderful gurudwaras,

6. This town in Haryana is famous for henna production from the agricultural sector, while tractors, motorcycles, switch gears, refrigerators, shoes, tyres and garments constitute its primary industrial products.

7. The Gurudwara here is dedicated to the great martyrdom of younger sons of Guru Gobind Singh ; ancient Chakreswari temple is believed to be 1000 years old and largest banyan tree is in this area.

8.This well constructed fort town in Haryana bears connection to the Harappan era .The district was a part of Nanda empire, according to Puranas. This district also was a part of Mauryan empire, which was discovered from the Ashokan pillars here.

ANSWERS

D8       1        
 A      R      2 
  B     U     A  
   A    P    K   
    H   S   L    
     E  O  I     
      T R Z      
       AEA       
H7RAGHETAFATEHPUR3
       AAA       
      R R R      
     I  I  A     
    D   D   K    
   A    K    K   
  B     O     A  
 A      T      4 
D6       5        

—SUBHAM—

லண்டன் முருகன் தேர் திருவிழா;London Skanda Temple Rath Yatra 2023 (Post.12,412)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,412

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 லண்டன் முருகன் தேர் திருவிழா;London Skanda Temple Rath Yatra 2023 (Post.12,412)

London Murugan Temple in Eastham, London celebrated its annual Ratha Yatra along the main streets near the temple. This Skanda/ Kartikeya temple (Murugan in Tamil) attracts thousands of devotees every year. Today (13-8-2023) thousands of devotes stood on both sides of the roads and did traditional worship with Coconut, Bananas, Flowers , Purana Kumbha, Lamps etc.

Shops and restaurants gave free prasad such as Sundal (Boiled pulses and spiced), Sweet Pongal, Tamarind bath, Laddu with water bottles, rose milk,  and Tea.

Saravana Bhavan is famous in distribution of free Prasad and a big crowd gathered in front of it to get tea and Sundal and Sweet Pongal

Shirdi Baba temple in East ham gave Laddu, rose milk and Tea. Volunteers pulled the Ratha (Ther in Tamil) for three hours.

Ratha and Tamil Ther are cognate words. The mirror image of Ratha is Ther. If you repeat Rathe, Rathe quickly you will get Ther. Linguists call this Mirror image. This is another proof to show that Tamil and Sanskrit came from Lord Shiva like Panini and Bharati said.

The temple feeds thousands of devotees today.

இன்று 13-8-2023 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் லண்டன் முருகன் கோவில் தேர்த் திருவிழா நடந்தேறியது. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் நைவேத்யம் செய்து முருகப்பெருமானை வணங்கினர்.

முருகன் தேரை இழுத்துச் செல்ல போட்டா போட்டி . நீண்ட வரிசையில் நின்று தொண்டர்கள் தேரை இழுத்துச் சென்றனர் . பெண்கள் சுமக்க முடியாத அளவுக்கு தங்க நகைகளையும் , மல்லிகைப் பூவையும் அணிந்து வந்தனர்

வழி  நெடுகிலும் தண்ணீர் பாட்டில், காப்பி, டீ , ரோஸ்மில்க் , புளியோதரை, லட்டு, சுண்டல் விநியோகிக்கப்பட்டது. சரவண பவன் வாசலில் பெரிய கூட்டம் ; சுண்டல், சர்க்கரை பொங்கல் கிடைத்தது. ஷீரடி பாபா கோவிலில் லட்டு, டீ , ரோஸ் மில்க்  விநியோகம்.

ஈஸ்ட் ஹாம் பகுதியில் உள்ள லண்டன் முருகன் கோவில் இந்தியர்களால் நடத்தப்படுகிறது . அங்கு இன்று ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது .

சென்ற ஆண்டு மலையாளிகளின் பாண்ட் இருந்தது. இன்று ஒரு பெண் நாயனம் உள்பட மேள தாளம் முழங்கியது.

தேரின் பின்னால் பெண்கள் கோஷ்டி பஜனை செய்து கொண்டு வந்தனர்.

—SUBHAM—-

TAGS-லண்டன் முருகன் தேர்,  திருவிழா 2023, London Skanda Temple Rath Yatra 2023 ,

ஆயுர்வேத  சிகிச்சையும்  அல்லோபதி சிகிச்சையும் -2 (Post No.12,411)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,411

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

First Part was posted yesterday

மேலை நாட்டு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டால் எதிரிடை அல்லது பக்க விளைவுகள் (Side Effects)  அதிகம்; அவை உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு சக்தியை   (damaging (Immune System) ஒழித்துக் கட்டிவிடும் . மன நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் அவர்களுடைய பாலியல் இயல்புகளை ஒடுக்கி செக்ஸ்SEX என்பதையே நினைக்க முடியாமற் செய்து விடும். அதுமட்டுமல்ல, வாழ் நாள் முழுதும் மருந்துக்கடை வாடிக்கையாளர் ஆக்கி விடும் (Life time dependence on medicines) . அவர்கள் நாம் மாதம் தோறும் அரிசி, புளி , பருப்பு வாங்குவது போல வாரம் தோறும் மருந்துகளையும் பில் Bill லையும்  அனுப்பி விடுவார்கள் !!

சரகர் எழுதிய மருத்துவ நூலுக்கு பாஷ்யம்/ விரிவுரை எழுதியவர்  ஆயுர்வேதத்தினால் ஏற்படும் நன்மைகளை அழகாக விளக்குகிறார் அவருடைய பெயர் சக்ரபாணி பண்டிதர் ,

முதலாவது நோயே வராமல் தடுக்கும்; இரண்டாவதாக, நோய் ஏற்பட்ட பின்னர் சாப்பிட்டாலும் நோயின் வீரியத்தை ஒடுக்கும் என்கிறார் :

வியாதிக சமத்துவம் வ்யாதி பல விரோதித்வம் வ்யாதியுத் பதபிரதிபந்தகத்வம்

சரக சம்ஹிதை 26-27

தினமும் நல்ல மூலிகை, கீரைகளை சமையலில் சேர்ப்பதால் நோய்த் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கும் .

என் அம்மா செய்த வைத்தியம் !

நான் 60, 65 ஆண்டுகளுக்கு முன்னர் என் அம்மா செய்த வைத்தியம் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது; வாரம் தோறும் எங்களை அழ , அழ வைத்து எண்ணெய் குளியல்/ ஸ்னானம் செய்ய வைப்பார்கள் . அன்றைய தினம் கண்டத்திப்பிலி ரசம் வைப்பார்கள். ஆறு மாதத்துக்கு முன்னர் இந்தியா போனபோது நான் சென்னையில் கண்டத்திப்பிலியும் சித்திரத்தையும் வாங்கி வந்தேன். இருமல் வந்தால் சித்திரத்தையை சிறிது வாயில் மெல்லுகிறோம் கஷாயம்  வைக்கும் பொறுமை இல்லை.

யாரேனும் வயிற்றுக் கோளாறு என்று கம்ப்ளைன்ட் Complaint பண்ணினால் அனறைய தினம் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிளகு ரசம் அல்லது ஜீரா ரசம்தான். ஏனைய நாட்களில் தக்காளியுடன் பருப்பு ரசம்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அன்றிரவு எங்களுக்கு ஜீரகப்பொடி சாதம் ; அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுக்கோளாறுகளை இது சரிக்கட்டி விடும்

இது தவிர வருடத்தில் ஓரிரு முறை கட்டாயப்படுத்தி விளக்கெண்ணெய் குடிக்க வைத்த கதைகளும் உண்டு.

உங்களில் பலருக்கும் இந்த அனுபவங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிள்ளைகளின் உடலை வலுப்படுத்த– கான்க்ரீட் அஸ்திவாரம்  போட்டு கட்டிடங்களை வலுப்படுத்துவது போல —  எவ்வளவோ முயற்சிகளை தாய்மார்கள் மேற்கொள்வது இயற்கைதான்.

பாட்டியும் சும்மா இருக்க மாட்டார்கள் உமிக்கரி பற்பொடி , கல்நார் பற்பொடி என்று பலவகை பற்பொடிகளைச் செய்து ஏதோ ஏதோ கலப்பார்கள் ; அது என்ன என்று கேட்டதில்லை. உமிக்கரி கருகுவதை மட்டும் வேடிக்கை பார்ப்போம்.

அதனால்தானோ என்னவோ 75 வயது ஆகியும் ஒரே ஒருமுறை மட்டும்தான் பல் டாக்டரிடம் போய் ‘இளித்’தேன்! அதாவது பல்லைக் காட்டினேன் ;ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் 40, 45 வயதுள்ள  என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பல் வலி வந்தால் என்ன செய்வதென்று கூட அறியாதவன் நான் என்று சொல்லி 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு முறை பல் டாக்டரிடம் போனேன் என்று சொல்லி சம்பாஷணையைத் தொடர்ந்தேன் ; அவர் இதை மறித்து

What, What வாட்வாட் ?? என்று கேட்டு அவர் என்னை நிறுத்திவிட்டு

நான் இதற்குள் நாலைந்து முறை பல் டாக்டரிடம் போய்விட்டேன் என்றார் ; இவ்வளவுக்கும் அவர் வெற்றிலைப் போடுபவரும் அல்ல ; சாக்லேட் சாப்பிடுவபருமல்ல !

கிழவிகள் மர்மம் !

எனக்கு ரொம்ப நாளாகா ஒரு Doubt டவுட்டு; என்னைவிட வயதான கிழவிகளுக்கு, மன்னிக்கவும் பெண்மணிகளுக்கு, எப்படி அழகான  , முத்துப்போல பற்கள் இருக்கின்றன ? என்று வியப்பேன் . ஒரு டாக்டர் பெண்மணி, எங்களுக்கு நல்ல நண்பர் ; எப்போது போனாலும் அந்த வயதான தம்பதிகளுக்கு பிஸ்கட் அல்லது காரசேசேவை போன்றவற்றை வாங்கிச் செல்வேன். ஒருமுறை கொஞ்சமும் கூசாமல் இரு, இரு, பல் செட்டை ‘க்ளீன் clean  செய்ய ஊரப்போட்டு வைத்திருக்கிறேன் ; போய் மாட்டிக்கொண்டு வருகிறேன் என்று உள்ளே விரைந்தார் எனக்கு சிரிப்பதா பிரமிப்பதா என்று புரியவில்லை. அப்போதுதான் கிழவிகளின்  முத்துப்பல் மர்மம் துலங்கியது அதுவரை அந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்க்காதது என் அறியாமையே!

—Subham—

Tags- அம்மா வைத்தியம், விளக்கெண்ணெய், கண்டத்திப்பிலி, எண்ணைக் குளியல், ஆயுர்வேதம் ,அல்லோபதி , பகுதி 2

கப்பல் வடிவில் அதிசய கோவில்! கர்நாடக மாநிலத்தில்…… – Part 21 (Post.12,410)

Picture of Karwar Durga Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,410

Date uploaded in London – –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 21

PAART 21

98.கேலடி ராமேஸ்வரவீர பத்ரேஸ்வர கோவில்கள்

99.இக்கேரி அகோரேஸ்வர் கோவில்

100.கார்வார் துர்கா கோவில்

101.ஸெஜ்வாட் ஸெஜ்ஜேஸ்வர் கோவில்

102.அவர்சா காத்யாயனி கோவில்

XXXX

கேலடி ராமேஸ்வரவீர பத்ரேஸ்வர கோவில்கள் KELADI RAMESHVARA AND VEERA BHADRESHVARA TEMPLES

500 ஆண்டுகளுக்கு முந்திய நாயக்கர் ஆட்சியின் கலைகளைப் பிரதிஅளிக்கும் கோவில்கள் கேளடி இக்கேரி கோவில்கள் ஆகும்

சாகர் என்னும் நகர் அருகிலுள்ள ராமேஸ்வரர் கோவிலில் 24 அடி உயர தூணில் பிள்ளையாரை பெண்கள் வணங்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது . அது மஹாராணி சென்னம்மாவின் உருவம் என்று கருதப்படுகிறது. இருதலைப் பறவை என்னும் கண்டபேரண்ட பட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நாணயங்களிலும், கொடிகளிலும், சங்க கால அகநானூறு நூலிலும் இருதலைப் பறவை உள்ளது ராமேஸ்வரர் கோவிலிலும் வீரபத்ரேஸ்வர் கோவிலிலும் சிவா பெருமானைத் தரிசிக்கலாம்.

வீரபத்ரேஸ்வர் கோவிலில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம், புலி, யானை, குதிரை, பறவைகள் ஆகியன கான் வேண்டிய சிற்பங்கள்

கேலடி , ஷிமோகா நகரிலிருந்து 80 கி.மீ.

ஷிமோகா என்றவுடன் எல்லோருக்கும் அதி உயரத்திலிருந்து விழும் ஜோக் பால்ஸ் JOG FALLS என்னும் நீர்வீழ்ச்சசிதான் நினைவுக்கு வரும். அங்குள்ள கோவில்கள் பற்றிப் பலருக்கும் தெரியாது .

விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் ஆட்சி செய்த செளடப்ப நாயக்கர் இந்த இரட்டைக் கோவில்களைக் காட்டினார். கோவிலில் உள்ள லிங்கம், ஒரு நிலத்துக்கு அடியில் கிடைத்தது பற் றிப் பல சுவையான கதைகளை சொல்ல்லுவார்கள் கிராம மக்கள்.

ஏனைய தெய்வங்களின் உருவங்களும் இங்கே சேத்துப்பட்டுள்ளன. இங்குள்ள பார்வதி சந்நிதியில் மார்ச் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை; பெரிய மரத்தினாலான  தேரும் நிற்கிறது  ; கோவிலுக்கு எதிரியுள்ள மியூயமும்  காணவேண்டிய இட ம் .

ராமேஸ்வரம் கோவிலைப் பார்க்கச் செல்லுவோர் மறக்காமல் போக வேண்டிய இடங்கள் :

Sagara சாகர

Jog falls ஷராவதி நதியில் உள்ள ஜோக் அருவி

Shivamogga சிவமொக்கா /ஷிமோகா

Sringeri Mutt சிருங்கேரி மடம்

Mattur: The Sanskrit Village சம்ஸ்க்ருதம் பேசும் மக்கள் உள்ள மாத்தூர்

Coffee Museum in Dasarahalli தசரஹல்லி காப்பி மியூஸியம்

Aghoreshwara Temple of Ikkeri இக்கேரி அகோரேஸ்வர கோவில்

Murudeshwar Temple and Bhukailasa Cave Museum in Murdeshwarமருதேஸ்வர் கோவில், குகை மியூஸியம்

Kamalapura Archaeological Museum in Kamalapura on Daroji-Kamlapura Road கமலா புர தொல் பொருட் துறை மியூஸியம்.

99.இக்கேரி அகோரேஸ்வர் கோவில் IKKERI AGHORESVARA TEMPLE

சாகர் என்னும் ஊரிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள இன்னும் ஒரு நாயக்கர் கோவில் அகோரேஸ்வரர் என்னும் சிவன் கோவில் ஆகும்

இக்கேரி என்னும் ஊரின் பெயருக்கு இரண்டு தெருக்கள்/ வீதிகள் என்று பொருள் . இந்தக் கோவில், அளவில் மிகப்பெரியது

கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் அமர, பள  பள கருங்கல் நந்தி எதிரே நிற்கிறது. கர்ப்பகிரகத்தைச் சுற்றி 32 பெண்கள் அமர்ந்திருப்பது  குறிப்பிடத்தக்கது ; விக்ரமாதித்தன்- வேதாளம் கதையில் வரும் 32 தங்கபதுமைகளை நினை வு படுத்தும் அவை.

தமிழ் நாட்டிலுள்ள நாயக்கர் காலா கோவில்களில் காணப்படும் யானை, யாளி ஆகியவற்றை இங்கும் காணலாம். ஒருகாலத்தில் இந்த ஊர் கேலடி நாயக்க வம்சத்தினரின் தலைநகரமாக இருந்து .

100.கார்வார் துர்கா கோவில் KARWAR DURGA TEMPLE

சதாசிவகாட் அருகி ல் குன்றின் மேல் குடிகொண் டுள்ளாள் அழகிய துர்கா பவானி. கோவில் பக்கத்தில் ஒரு பீரங்கியும் நிற்கிறது. தொலைவில் கடலின் பேரலைகளையும் காணலாம். துர்காதேவியின் அழகில் மயங்குவோர் கண்களை வேறு பக்கம் திருப்ப மாட்டர்களாம் .

மலையின் உச்சி வரை கார்கள் போகின்றன. சிவாஜி மகாராஜனும் வந்து வனகிகிய துர்க்கை இவள் என்ப து  பக்தர்களின் கதை.

கார்வார் பஸ் நிலையத்த்திலிருந்து 6 கி.மீ

காளி நதியின் வட கரையில் அமைந்த இந்த குன்றிலுள்ளதுர்கை சிங்கத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறாள்

சாந்த துர்கா என்ற பெயரும் உண்டு Shanthadurga Temple. இது 1665ம் (CE ) ஆண்டில் கட்டப்பட்டது

101.ஸெஜ்வாட் ஸெஜ்ஜேஸ்வர் கோவில் SHEJJESWAR TEMPLE, , SHEJWAD

தேவ்பாக் கடற்கரை அருகில் அமைந்த ஆத்மலிங்க கோவில் இது; இறைவனின் நாமம்- ஷெஜ் ஜேஸ்வர லிங்கம்.கோகர்ண சிவ லிங்கத்தை ராவணன் பிடுங்க முயன்றபோது விழுந்த ஒரு கல் இந்த லிங்கம் என்பது பக்தர்கள் சொல்லும் கதை. 3 ஆத்மலிங்கங்கள் இருப்பதாகவும் அனைத்தையும் ஒரே மூச்சி ல் / ஒரே சுற்றில் தரிசிப்பது விசேஷம் என்றும் தீவிர சிவா பக்தர்கள் நம்பு கிறார்கள் ; அந்த ஐந்து ஆத்ம லிங்கங்கள் பின்வருமாறு :

1. Shejjeswararlingam  ஷெஜ் ஜேஸ்வர லிங்கம்.

2. Mahabaleswarar, Gokarna கோகர்ண, மஹா பலேஸ்வர்

3.Daranatheswar,Dhareswar தரநாதேஸ்வர தாரேஷ்வர்

4.Gunavatheswar, Gunawandhe குணவதேஷ்வர்

5.Mmurdeswarar, Murdeswarar.முருதேஸ்வர்  என்ற 5 ஆத்ம லிங்கங்கள்.

102.அவர்சா காத்யாயனி கோவில் Shri Katyayani Baneshwar Temple, Aversa

கப்பல் வடிவில் கோவில்

உத்தர கன்னட மாவட்டத்தில் அங்கோலா அருகில் இருக்கிறது இந்த காத்யாயனி பாணேஸ்வரர் கோவில். கோவா நகரிலிருந்து 100 கிமீ .

பல பிராமண குடும்பங்களின் குல தெய்வம் காத்யாயனி. தலை சிறிது தாழ்த்திய நிலையில் காத்யாயனி அருள் மழை பொழிகிறாள் . மதுரை மீனாட்சி போல, இங்கும் காத்யாயனிக்குதான் முதல் பூஜை. பின்னர் சிவ பெருமானாகிய  பாணே ச்வரருக்கும் கணபதிக்கும் பூஜை. இந்தக் கோவில் கப்பல் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது

 கோவாவிலுள்ள இந்தக் கோவில்களை பொற்சசுக்கீசிய கிறிஸ்தவர்கள் அழித்தது போக எஞ் சிய ஒரே தெய்வம் காத்யாயனிதான் .கோவிலைப் பற்றி நீண்ட கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு கப்பல் வியாபாரிக்கு ஏற்ப்பட்ட கஷ்டங்களிலிருந்து இந்த ஸ்ரீ தேவி மீட்டதால் கப்பல் வடிவில் கோவில் கட்ட அவர் உறுதி மொழி எடுத்தார். அன்னையும் அவருக்கு அருள்புரியவே 400 ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் வடிவில் எழுந்தது இக்கோவில் .

To be continued………………………………..

Tags கப்பல் வடிவ கோவில், காத்யாயனி, ஆத்ம லிங்க, கோவில்கள்,

கேலடி நாயக்கர்கள் , பகுதி 21, கர்நாடக,

இதிஹாஸப் பெண்மணிகள்!—2 (Post No.12,409)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,409

Date uploaded in London –  13 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

குமுதம் பக்தி ஸ்பெஷல் 17-8-2023 SUPPLEMENTஆக

வெளியாகியுள்ள கட்டுரை

மூன்று பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

இதிஹாஸப் பெண்மணிகள்!  (இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

கலாதிரிஜடை

ராமனைப் பிரிந்த மன உளைச்சலில் சீதை மனம் வருந்தி சோகத்துடன் உயிரையே விடக் கருதிய வேளையில் உளவியல் ரீதியாக ஆறுதல் சிகிச்சையை அளிப்பவர்கள் விபீடணனின் புதல்வியான கலாவும், திரிசடையும்.

இன்றைய நாட்களில் சைக்கலாஜிகல் ஹீலர்  (Psychological Healder) செய்யும் பணியை அவர்கள் செய்து சீதையை உற்சாகம் அடையச் செய்கின்றனர்.

 வெயிலில் வைத்த தீபம் போல வாடி இருக்கும் சீதையிடம் திரிசடை இராவணன் அழியப் போவதை தான் காணும் பல துர்நிமித்தங்களையும், தான் கண்ட கனவில் வரும் காட்சிகளையும் வைத்து விரிவாகக் கூறுகிறாள்.

‘பாதிக் கனவில் நீ எழுப்பவே நான் எழுந்தேன்’ என்று திரிசடை கூறிய போது, அவளைக் கை கூப்பித் தொழுத சீதை, ‘அன்னையே, அதன் குறை காண்க’ (மீதிக் கனவையும் காண்பாயாக) என்று வேண்டுகிறாள்.

ஸ்வயம்பிரபை

அரிய தவத்தைச் செய்யும் மூதாட்டியான ஸ்வயம்பிரபை ஹேமா என்பவளின் மாளிகையைக் காவல் காப்பவள். அந்த மாளிகை உள்ளிட்ட அற்புதமான சிருஷ்டியை மயன் என்ற அசுரன் தன் மாயையினால் விந்திய மலையில் ஒரு குகையில் செய்திருந்தான்.

அதற்குள் அநுமனும் மற்ற வீரர்களும் நுழைந்தனர். அதிசயமான பல அற்புதக் காட்சிகளை அங்கே கண்டனர். அவர்கள் ஸ்வயம்பிரபையைக் கண்டு தாங்கள் அனைவரும் சீதையைத் தேடி வந்ததைச் சொல்ல ஸ்வயம்பிரபை மனம் இரங்கினாள்.

இந்தக் குகையில் உள்ளே நுழைந்தவர்கள் வெளியே செல்லவே முடியாதே என்று அவள் சொல்ல அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அவர்களின் பணியை உணர்ந்த ஸ்வயம்பிரபை, “அனைவரும் கண்களை மூடுங்கள்” என்று சொல்லி தன் தவ வலிமையால் ஒரு நொடியில் அனைவரையும் குகைக்கு வெளியே கொண்டு விடுகிறாள். ஸ்வயம்பிரபை அறிவுநிலை கடந்த உளவியல் ஆற்றல் சக்தியைக் – mystic power – கொண்டிருப்பதை இங்குக் காண்கிறோம்.

இந்த வரலாற்றைக் கிஷ்கிந்தா காண்டத்தில் காணலாம்.

சீதை

இதிஹாஸத் தலைவியான சீதை பொன்னின் ஜோதி. போதின் இன் நாற்றம் (பூவின் நறுமணம்) செஞ்சொல் கவி இன்பம் போலத் திகழ்பவள். கற்பின் கனலி என இப்படியெல்லாம் கம்பனால் வர்ணிக்கப்படுகிறாள்.

சீதை அரண்மனையை விட்டு வெளியே செல்லாதவள். என்றாலும் ராமனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று கடும் வனவாசத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்.

‘இராவணனை மட்டுமல்ல கணக்கில்லாத உலகங்களை எனது சொல்லினால் சுட்டுப் பொசுக்குவேன்; ஆனால் அது ராமபிரானின் வில்லின் ஆற்றலுக்குக் குறையை உண்டாக்கும்; ஆகவே அப்படிச் செய்யவில்லை’ என்பது அவள் வாக்கு. (எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்)- சூளாமணிப் படலம் பாடல் 18)

Perfect Partner – என்றெல்லாம் இப்போது புகழ்கிறோமே பலரை – சீதையை என்ன சொல்லிப் புகழலாம்?!

இனி மஹாபாரதத்திற்குள் நுழைவோம்.

திரௌபதி

பாஞ்சால நாட்டின் தவப்பயன். ஓவியம் நிகர்த்தவள். அருள் ஒளி. நிலத் திரு. எங்கும் தேடினும் கிடைப்பரும் திரவியம். தெய்விக மலர்க் கொடி. கடி கமழ் மின்னுரு. கமனியக் கனவு – இப்படி மகாகவி பாரதியார் வர்ணிக்கும் பேரழகி திரௌபதியின் குணநலன்களை எடுத்துக் கொண்டால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

தர்மபுத்திரர் முடி சூடி அரசனாகத் திகழ நாட்டின் நிர்வாகத்தை நிர்வாகம் செய்யும் பெரும் நிர்வாகியாக – Great State Administrator ஆகத் திகழ்ந்தாள் திரௌபதி.

அவளுக்கு இருந்த நினைவாற்றல் அபாரமானது. பல்லாயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு படைப்பது திரௌபதியின் முக்கியச் செயல். திரௌபதியிடம் வேலை பார்த்தோர் பல்லாயிரக்கணக்கான பெண்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய பெயரும் திரௌபதிக்குத் தெரியும். அவர்களுக்குரிய அன்றாட வேலையையும் அவளே கொடுப்பது வழக்கம்.

தர்மர் அரசாட்சி செய்தாலும் முக்கியமான அரசு விதிகளை திரௌபதியே உருவாக்கியது குறிப்பிடத்தகுந்தது. கஜானாவில் உள்ள நிதிச் செல்வம் திரௌபதிக்கு அத்துபடி. ஏராளமான ஏழைகளுக்கு உதவும் திட்டத்தினால் அது குறையும் போது உடனடியாக அர்ஜுனன் மற்றும் பீமனை அழைத்து தேவையான நிதி பற்றிக் கூறி உடனே கஜானாவை நிரப்ப ஏற்பாடு செய்யுமாறு கூறுவது திரௌபதியின் பழக்கம்.

இப்படி ஒரு நினைவாற்றல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுவது இயல்பு. ஆனால் இதெல்லாம் கட்டுக் கதை என்று ஒதுக்கி விட முடியாது. நெப்போலியனுக்கு அவனது படையில் இருந்த அனைத்து வீரர்களின் பெயரும் தெரியும். அவனைப் பற்றிய சரித்திரம் எழுதிய பல ஆசிரியர்களும் அவனது நினைவாற்றலை, ‘மாபெரும் விந்தை’, ‘போட்டோகிராபிக் மெமரி’, ‘ஒப்பற்றது’ என்றெல்லாம் வர்ணிக்கின்றனர்.

சைரஸ் மன்னனும் தனது படையில் இருந்த ஒரு லட்சம் வீரர்களைப் பெயர் சொல்லி அழைப்பதே வழக்கம். தெமிஸ்டாக்ளிஸ் ஏதேன்ஸ் நகரில் இருந்த முப்பதினாயிரம் குடிமக்களைப் பெயர் சொல்லியே அழைப்பாராம். இந்த விவரங்களையும் இன்னும் பல அதிசயச் செய்திகளையும் டோனி புஜன் எழுதிய மாஸ்டர் யுவர் மெமரி நூலில் காணலாம். (Master Your Memory by Tony Buzan)

ஆக திரௌபதியை நினைவாற்றல் ராணி – மெமரி க்வீன் (Memory Queen) என்று சொல்வதில் தவறே இல்லை!

சத்யபாமா

பூமி தேவியின் அவதாரமான சத்யபாமா நரகாசுரனை வதம் செய்ய அவதரித்த வீராங்கனை.

கிருஷ்ணரின் மனைவி.

பூமித்தாயின் புதல்வனான நரகாசுரன் தன் அன்னையினால் மட்டுமே தன் மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன்.

நரகாசுரன் கிருஷ்ணர் ஏவிய அனைத்து அஸ்திரங்களையும் முறியடித்து அவரைத் தனது அஸ்திரங்களால் திணற அடிக்க, கிருஷ்ணர் கீழே விழுகிறார்.

இதைக் கண்ட சத்யபாமா பெரும் கோபம் கொண்டு நரகாசுரனின் மீது தானே அஸ்திரத்தை ஏவி அவனது நெஞ்சில் அடிக்க அவன் மாண்டு போகிறான். அற்புதமாகத் தேரோட்டுவதில் வல்ல சத்யபாமா அஸ்திரங்களைக் கையாளுவதிலும் வல்லவள்.

நேருக்கு நேர் நின்று போர் புரியும் சாகஸப் பெண்மணியை தற்காலத்தில் கூறப்படும் COMBAT EXPERT என்று சொல்லி வியக்கலாம்.

திரௌபதியின் நெருங்கிய தோழி சத்யபாமா. இருவரும் அந்தரங்கமாகப் பேசுகையில் தாம்பத்ய ரகசியங்களைப் பேசிக் கொள்ளும் போது திரௌபதி அவற்றை நுட்பமாக விளக்குகிறாள். (வனபர்வம்  235வது அத்தியாயம்).

கணவனுடன் ஒரு மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு திரௌபதி சத்யபாமைக்குக் கூறும் ரகசியங்களை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுவர்..

                           ***                   தொடரும்

சாப்பாட்டு ராமன் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,408)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,408

Date uploaded in London – –  12 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 13  சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

வெஜிடபிள் பிரியாணி சாப்பிட லாம் ; வாருங்கள்! முதலில் தேவையான  மசாலா சாமான்கள் , முதலியன இருக்கிறதா என்பதை இந்தக் கட்டத்தில் பாருங்கள்

ட்டைவெ
புநெங்
முவுய்கா
ந்கி
திராம்
ரிப்
சோம்பு
றுரைதாஜீ

Answers விடை

சோம்பு, ஏலம் , கிராம்பு, புலவு, சோறு நெய் , முந்திரி, ஜீரகம், வெங்காயம், தயிர், ரைதா, பட்டை, உப்பு.

—subham—

Tags– சாப்பாட்டு ராமன், மசாலா சாமான்கள், வெஜிடபிள் பிரியாணி