Hinduism Crossword 2072023 (Post No.12,302)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,302

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 11 words following the clues and colour coding.

Across

1.author of Ram Charit Manas

3a.English word OWL is derived from this Sanskrit word

4.goddess Parvati’s other name. Her name is used in one Vrat Mangala……..

5.War, Battle in Sanskrit; also used in Kshatria names

6.His Doha songs are used in all Bhajans

Xxx

Down

1.author of Nobel Prize winning Gitanjali

2.Blind poet and a great devotee of Krishna

3.Goddess worshipped in Bengal during Dasara

7.Vedic Fire god (go up)

8. A priest who at sacrifice recites the hymns of the Rigveda.  (go up); English word Host is derived from it

9.Sun’s another name. In Surya Namaskar, second name (go up)

10.means gold; if you add DAS with this he is a great poet (go up) 

1  2 3  
    3a  k 
4       
        
5       
        
 67 8 910

Across

1.Tulsidas;3a.Uluka;4.Gauri ;5.Rana;6.Kabhir

Xxx

Down

1.Tagore;2.Surdhas ;3.Durga ;7.Agni (go up);8.Hotri (go up)

9.Ravi (go up); 10.Kanaka (go up)

T1ULS2ID3AS
A  U 3alUkA
G4AURIR K
O IDRGIA
R5ANATAVN
E GSO AA
 K6A7BH8IR9K10

—- subham—-

Tags- CW 2072023

QUIZ மும்பை பத்து QUIZ (Post No.12,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,301

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

QUIZ No.46

1.பம்பாய் எப்படி மும்பை ஆனது ?

Xxxxx

2.மும்பையில் நடிகர் நடிகையரும் வரக்கூடிய இந்துக்கோவில்கள் எவை ?

xxxxxx

3.கேட் வே ஆப் இண்டியா Gate way of India , இண்டியா கேட் India Gate – இவற்றில் மும்பையில் உள்ளது எது?

xxxxx

4.நியூயார்க்கில் வணிக விஷயங்களை கவனிக்கும் நிறுவனங்கள், ஸ்டாக் மார்க்கெட் உள்ள தெருவை Wal Street வால் ஸ்ட்ரீட் என்பர். இது போல மும்பையில் வணிகர் தெரு எது?

xxxxxxx

5.மும்பை வட்டாரத்தில் பல Beach பீச் – கடற்கரைகள் உள்ளன. ஜூஹூ பீச் என்னும் கடற்கரைக்கு ஏன் மதிப்பு அதிகம்.?

xxxxxxx

6.மும்பாயிலிருந்து கடலில் படகில் சென்றால் காணக்கூடிய பெரிய திரிமூர்த்தி சிலை எங்கேயுள்ளது ?

xxxxx

7.புத்தர் சிலைகள் உள்ள இரண்டு  குகைகளும் மும்பையில் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?

zzzzz

8.மும்பை யிலிருந்து நீண்ட காலமாக வெளிவரும் ஆங்கில நாளேடு  எது ?

xxxxxx

9. இந்திய ரயில்வே வரலாற்றில் மும்பைக்கு உள்ள தனிச் சிறப்பு என்ன ?:

xxxxxx

10.உலகிலேயே பெரிய சேரிப்  பகுதி எது?

Xxxxxxx

ANSWERS

1.இந்த நகரின் பூர்வீக பெயர் மும்பைதான். மும்பா தேவி இந்த நகரின் தெய்வம். இப்போது அவள் கோவிலுக்கு ஏராளமான பேர் போகின்றனர்.

ப= ம என்பது மொழியியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே;.பர்மா என்பதை இப்போது மியன்மார் என்று சொல்லுவதும் இதனால்தான் ; பண்டார் என்பது மண்டி என்றாகிறது; மேனுவல் என்பது தமிழில் பனுவல் /நூல் ஆகிறது .

xxxxx

2.சித்தி விநாயகர் கோவிலும் , மகா லெட்சுமி கோவிலும் ஆகும்.

Xxxxx

3.இண்டியா கேட், டில்லியில் இருக்கிறது; கேட் வே ஆப் இண்டியா, மும்பையில் இருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும் அவரது மனைவியையும் வரவேற்க மும்பையில் கட்டினர்

Xxxxx

4.மும்பையிலுள்ள தலால் ஸ்ட்ரீட்; தலால் என்றால் ப்ரோக்கர்.

Xxxxx

5.கடற்கரை அழகான கடற்கரை என்பது மட்டுமல்ல; நடிகர், நடிகையர் வீடுகள் அருகில் இருக்கின்றன. அவர்களும் வாக்கிங் Walking வருவார்கள்

Xxxxx

6.எலிபெண்டா தீவில் உள்ளது

Xxxxx

7.கனேரி குகைகள், மகா காளி குகைகள்

xxxx

8.டைம்ஸ் ஆப் இந்தியா.Times  of  India ; 1838ல் துவங்கியது.  1861 முதல் இந்தப் பெயரில் வெளிவருகிறது.

xxxxx

9.இந்தியாவின் முதல் ரயில் பாதை 1853ல் பம்பாய்க்கும் தானே நகருக்கும் இடையேதான் போடப்பட்டது . அதன் நீளம் 32 கிலோமீட்டர்தான் .

xxxx

10.மும்பையிலுள்ள தாராவி சேரி உலகில் பெரிய சேரி ஆகும்

Xxxx subham xxxxxx

Tags-  ஆங்கில நாளேடு, டைம்ஸ் ஆப் இந்தியா,. மும்பை 

முதல் ரயில் பாதை,  ஜூஹூ பீச், மும்பை கோவில், Quiz

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 9 (Post No.12,300)

NAMBI NARAYANA TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,300

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part  9

48.நம்பி நாராயணன் கோவில்  (பஞ்ச நாராயண க்ஷேத்ரம்) Sri Nambinarayana Temple, Thondanur , Mandya

விசிஷ்டாத்வைத ஸ்தாபகர் ராமாநுஜாசார்யார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகத்தில் தங்கியிருந்த காலத்தில் 5 கோவில்களை பிரபலப்படுத்தினார். அவை பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள் என்று  அழைக்க ப்படுகின்றன . அதில்  ஒன்று தொண்டனூரில் உள்ள நம்பி நாராயணன் கோவில்  ஆகும்..

ராமானுஜர் கால பஞ்ச நாராயண க்ஷேத்ரங்கள்:

1.Nambi Narayana at Kere Thondanur நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர்

2. Cheluva Narayana at Melukote செலுவ நாராயணன் கோவில் , மேல்கோட்டை

3. Vijaya Narayana at Belur விஜய நாராயணன் கோவில் , பேலூர்

4. Keerti Narayana at Talakadu கீர்த்தி நாராயணன் கோவில் , தலக்காடு

5. Veera Narayana at Gadag வீர நாராயணன் கோவில் , கடக்

( Vijaya Narayana at Belur is popular by name Beluru Chennakeshava) பேலூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலை சென்ன கேசவர் கோவில் என்றும் சொல்லுவார்கள் ).

நம்பி நாராயணன் கோவில் , தொண்டனுர் , ஏனைய பல கோவில்களிலிருந்து வேறு பட்டது. நாலரை ஏக்கர் பரப்பில் நந்த வனம் , புல்வெளிக்கு  இடையில் உள்ளடங்கி இருக்கும் அமைதியான கோவில். பெரிய கோவில்; ஒரே பட்டர். அவரை அழைத்துதான் பூஜை செய்ய முடியும். .பெருமாள் நின்ற திருக்கோலம்.

ராமானுஜர் அமர்ந்த ஆசனம் இன்னும் காட்சிக்கு உள்ளது அவர் இங்கு 1000 தொண்டர்களுடன் தங்கி உபன்யாசம் செய்த இடம்

மேல்கோட்டையிலிருந்து ஆறு கி.மீ. ஹொய்சாளர் கட்டிடக்கலை அம்சங்களைக் காணலாம். அருகில் திருமலசாகர ஏரியும் உளது.

xxxxxx

சமணர் கோவில்கள்

மாண்ட்யா வட்டாரத்தில் கம்பட தள்ளியில் உள்ள சமணர் பஸதிக்கள் மிகவும் புகழ்பெற்றவை Kambadahalli is a  near Nagamangala in Mandya district

இங்கு பிரம்மதேவ யக்ஷ ஸ்தம்பம் ( Manastambha  )உள்ளது.இதன் உயரம் 50 அடி. அதன் உச்சியில் கட்டப்பட்டுள்ள மணி அடிப்பதை சகுனமாக கருதுகின்றனர். மேலை கங்க வம்ச ஆட்சிக்கால , 900 ஆண்டுப் பழமையான பல கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்று ஆராய்ச்சிக்கு அவை துணை செய்கின்றன.

பிரம்மதேவ ஸ்தம்பத்துக்கு முன்னால் பஞ்ச கூட கோவில் உள்ளது. 5 தீர்த்தங்கரர்களின் சந்நிதிகள் பொது மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன Panchakuta Basadi. அங்கு நிறைய  கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.

Xxxxxx

49. Adhichunchanagiri Temple, Adichunchanagiri அதி சுஞ்சன கிரி கால பைரவர் கோவில்

சுமார் 3330 அடி உயரமுள்ள குன்று

இது வொக்காலிக சமூகத்தினரின் புனித ஸ்தலம்; மஹா சமஸ்தான மட ம் இருக்கிறது. மயில்கள் சரணாலயத்தில் ஏராளமான மயில்களையும் பார்க்கலாம்

இங்குள்ள பைரவர் கோவிலும் கங்காதரேச்வரர் Gangadeshwara Temple தரிசிக்க வேண்டிய இடங்கள்; மாண்ட்யா மாவட்டத்தின் நாக மங்கல தாலுகாவில் இருக்கிறது

கங்காதரேஸ்வரர் கோவிலில் ஐந்து லிங்கங்கள் (Panchalingas — Lord Gangadhareshwara, Chandramouleshwara, Malleshwara, Siddeshwara, and Someshwara.)

ஐந்து லிங்கங்கள் – கங்காதரேஸ்வர , சந்திர மூலேஸ்வர , மல்லேஸ்வர, சித்தேஸ்வர, சோமேஸ்வர லிங்கங்கள் இருப்பதால் பஞ்ச லிங்கேஸ்வர கோவில் என்றும் கூறப்படும்.. மலையின் உச்சி ஆகாச பைரவர் என்று அழைக்கப்படுகிறது .

காலபைரவர் கோவிலில் அவருடைய 64 அவதார உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சமீப காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம்;  பாலா கங்காதரநாத  சுவாமிஜி Sri Balagangadharanatha Swamiji.முயற்சியில் உருவான கோவில்

சுஞ்ச, கஞ்ச என்ற இரண்டு அரக்கர்களை சிவபெருமான் அழித்த இடம். .

Xxxxx

50.மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில் The Chamundeshwari Temple

மைசூரு நகரிலிருந்து 13 கி.மீ.தொலைவில் , அரச குடும்பத்தினரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின்  கோவில் இருக்கிறது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோவிலின் நந்தி தஞ்சாவூர் பெரிய கோவில் நந்தி போலவே உருவில் பெரியது 16 அடி உயரம், 25 அடி நீளம்!

குன்றின் மீது அமைந்த கோவில் இது. உயரம் 3300 அடி. இங்குதான் துர்கா தேவி மஹிஷ அசுரனை வதம் செய்தாள் என்பது ஐதீகம் மஹிஷாசுர என்பது  ஆங்கிலேயர்களால் மைசூர் என திரிக்கப்பட்டது . இங்கு மிகப்பெரிய மஹிஷாசுரன் சிலையும் உள்ளது

12ஆ ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டது என்றாலும் சிவனும் நந்தியும் மிகவும் பழையன

நவராத்திரி காலத்தில் தேவிக்கு 9 வித அலங்காரங்களை செய்வார்கள். ஆஷாட வெள்ளிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள் .

To be continued………………………………………………

Tags—ராமானுஜர் ஆசனம், மைசூரு , சாமுண்டீஸ்வரி, பெரிய நந்தி ,  பஞ்சலிங்கம், காலபைரவர்

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!-1 (Post No.12,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,299

Date uploaded in London –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ஆடி மாதத்தையொட்டி மாலைமலர் அம்மன் தலங்களைப் பற்றி தினமும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. அதில் கன்யாகுமாரி பற்றிய கட்டுரை 18-7-2023 இதழில் வெளியாகியுள்ளது. இரு பகுதிகளாக இந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!

(முதல் பகுதி)

ச.நாகராஜன்

நம்பினோர் கெடுவதில்லை

    நான்கு மறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால்

    அதிக வரம் பெறலாம் – பாரதியார்

மூன்று கடல் சங்கமத்தில் ஒரு தலம்

நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவி பாரதியாரால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு தேவி அருள் பாலிக்கும் திருத்தலமே கன்யாகுமாரி..

பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சக்திபீடங்களில் முக்கியமானது

இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது.

பிரஜாபதி தட்சனுக்கு மகளாக அவதரித்த தாட்சாயிணி எனப்படும் சதி தேவி தனது தந்தை புரியும் யாகத்திற்குத் தன் கணவனான சிவபிரானை அழைக்காதது குறித்து பெரிதும் வருத்தமும் கோபமும் கொள்கிறாள்.

தான் மட்டும் யாகத்திற்குச் செல்கிறாள். ஆனால், தட்சன் செய்த அவமரியாதை காரணமாக யாக குண்டத்தில் விழுந்து தன் உயிரை விடுகிறாள். இதை அறிந்த சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டு சதியின் உடலை ஏந்தியவாறே தாண்டவம் ஆடி அலைகிறார்.

இதைக் கண்ணுற்ற மஹாவிஷ்ணு சதியின் உடலை தனது சக்கரத்தால் 51 துண்டுகளாக ஆக்க, அவை பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் விழுகின்றன. பெரும் வரங்களை நல்கும் சக்தி பீடங்களாக அந்த இடங்கள் மாறி அந்த இடங்களிலெல்லாம் அன்னை ஆட்சி புரிந்து பக்தர்களுக்கு இன்றளவும் அருள் பாலித்து வருகிறாள்.

தேவியின் முக்கிய அங்கமான முதுகுப் பகுதி விழுந்த இடமே சக்தி பீடமான கன்யாகுமாரி!

கன்யாகுமாரி தல வரலாறு

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா.

மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.

சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர்.

அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.

ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.

மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.

சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.

இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.

தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.

–    தொடரும்

Quiz ராகப் பத்து Quiz (Post No.112,298)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,298

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz No. 45

1.காலைமதியம்மாலை இரவுக்கு என்று பொதுவாக ஒதுக்கப்பட்ட ராகங்கள் எவை ?

Xxxxx

2.பாம்பு படம் பிடித்து ஆடப் பாடும் ராகம் என்ன ?

xxxx

3.சங்கீதம் கற்கத்துவங்கும் எல்லோருக்கும் முதலில் சொல்லித் தரப்படும் வாதாபி கணபதிம் எந்த ராகத்தில் அமைந்தது ?

xxxxx

4.எட்டயபுரத்தில் வறட்சியைப் போக்குவதற்காக மழை வேண்டி முத்துசாமி தீட்சிதர் பாடிய ராகம் எது ?

xxxx

5.கீழ்க்கண்ட தமிழ் ராகங்களுக்கு நிகரானவை என்று இசைமேதைகள் கூறும் ராகங்கள் எவை?

5.செவ்வழி 

வியாழக் குறிஞ்சி –

செந்துருத்தி –

மேகராகக் குறிஞ்சி –

திருத்தாண்டகம் –

Xxxx

6.தான்சேன் பாடிய எந்த ராகம் தீயை உண்டாக்கி அவரை எரித்தது ?

xxxxx

7.தோடி ராகத்தைப் பாடமாட்டேன் என்று அடகு வைத்து கடன் வாங்கிய பாடகர் யார் ?

xxxx

8.அக்பருடன் மோதல் ஏற்பட்டுதீக்குளித்த குஜராத்தி பிராமணப் பெண்கள் இருவர் பெயரில் தான்சேன் பாடிய ராகம் என்ன?

xxxx

9.தியாகராஜ ஆராதனையில் பாடப்படும் பஞ்ச ரத்ன கிருதிகள் ராகங்கள் என்னென்ன ?

Xxxx

10.பாரதியார் பாடல்களுக்கு அவரே ராகமும் போட்டு கவிதைகளை வெளியிட்டார். உங்களுக்கு ஏதேனும் சில பாடல்களின் ராகங்கள் தெரியுமா ?

10.வந்தேமாதரம் –

வந்தேமாதரம் என்போம் –

எந்தையும் தாயும் –

தொன்று  நிகழ்ந்ததனைத்தும் —

பேயவள் காண் எங்கள் அன்னை —

ஞானத்திலே பர மோனத்திலே –

கனவென்ன கனவே

Xxxxxxxx

விடைகள்

1.காலை — பூபாளம், மதியம் – சாவேரி , தன்யாசி; மாலை – பூர்வ கல்யாணி, இரவு – நீலாம்பரி , காம்போஜி

xxxxx

2.புன்னாக வராளி (Nagin)

xxxxx

3.ஹம்சத்வனி

Xxxxx

4.அமிர்தவர்ஷினி

xxxxx

5.செவ்வழி – யதுகுல காம்போதி

வியாழக் குறிஞ்சி – செளராஷ்டிரம்

செந்துருத்தி – மத்யமாவதி

மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி

திருத்தாண்டகம் – ஹரி காம்போதி

xxxxx

6.தீபக் ராகம்

xxxxx

7.தோடி சீதாராமையா என்ற பிரபல பாடகர் இப்படிச் செய்தார் . தஞ்சை மன்னர் அதை அறிந்தவுடன் கடனை அடைத்து அவருக்கு தோடி ராகம் பாடும் உரிமையை மீட்டுக்கொடுத்தார் .

xxxxx

8.தானா, ரீரி என்ற இரண்டு பிராமணப் பெண் பாடகிகள் இருவரையும் தனது அரசவைக்கு அக்பர் அழைத்தார் குஜராத்தி வட்நாகர் பிராமணர்கள் அதை எதிர்க்க பெரிய யுத்தம் மூண்டு ஏராளமானோர் இறந்தனர். தானா ரீரி என்ற இரண்டு பெண்களும் தீக்குளித்து மாண்டனர் அவர்கள் பெயரில் உலகப் புகழ்பெற்ற இசை மேதை தான்சேன்,  தானரிரி என்ற  ராகத்தை உருவாக்கிப் பாடினார். இரு பெண்களுக்கும் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் இன்றும்  உள்ளது.

xxxx

9.ஜகதாநந்த — நாட்டை ராகம்

துடுகு கள  – கெளல ராகம்

சாதிஞ்சன — ஆரபி ராகம்

கன கன ருசிரா – வராளி  ராகம்

எந்தரோ மஹானு பாவ – ஸ்ரீ ராகம்

xxxxx

10.வந்தேமாதரம் -ஹிந்துஸ்தானி பியாக்

வந்தேமாதரம் என்போம் – நாதனாமக் கிரியை

எந்தையும் தாயும் – காம்போதி

தொன்று  நிகழ் ந்ததனைத்தும் — காவடிச் சிந்து மெட்டு

பேயவள் காண் எங்கள் அன்னை — ஆபோஹி

ஞானத்திலே பர மனத்திலே – ஹிந்துஸ்தானி தோடி

கனவென்ன கனவே – ஸ்ரீ ராகம்

—- subham —-

Tags – ராகம், க்விஸ், தீட்சிதர், மழை ராகம் , நெருப்பு ராகம், தான்சேன், பிராமணப் பெண்கள் , பஞ்ச ரத்னக் கிருதிகள், பாரதியார், தமிழ் இசை

ஞான சம்பந்தர் பற்றி அரிய தகவல்கள்: சொ சொ மீ. உரை (Post No.12,297)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,297

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனுக்கு வருகை தந்து 16 நாட்களுக்கு லண்டன் ஈலிங் பேட்டையில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் தொடர் சொற்பொழிவாற்றிய பொற்கிழிக் கவிஞர், தமிழ் அறிஞர் சொ சொ மீ . சுந்தரம் அவர்களுக்கு நேற்று கோவில் கமிட்டியார் தக்க மரியாதைகளை செய்து கெளரவித்தனர் .பேராசிரியரும் அருணகிரிநாதர் என்ற தலைப்பில் உரையாற்றி, தனது தொடர் சொற்பொழிவினை நிறைவு செய்தார் .

காசியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்திருக்கும் அகில உலக கோவில் மகாநாட்டில் சொற்பொழிவாற்ற லண்டனிலிருந்து சொ சொ மீ சுந்தரம் புறப்பட்டுச் சென்றார் .

14-7-2023 அன்று தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ சொ மீ . சுந்தரம்  திரு ஞான சம்பந்தர் என்ற தலைப்பில் உரை ஆற்றினார் . சம்பந்தருக்கும் மதுரையில் அரசியலில் ஈடுபட்ட சமணர்களுக்கும் நடந்த மோதல்கள், அனல் வாதம் புனல் வாதம் கதைகளை பலரும் அறிவர். ஆயினும் சமணர்களுக்கும் சைவர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன என்பதைப் பலரும் அறியார் . மூன்று முக்கிய விஷயங்களை சொ சொ மீ சுந்தரம் அழகாக விளக்கினார் :

1.ஒருவர் செய்த வினைகளின் பலன் அந்த மனிதரைத் தானாகப் பற்றிக்கொள்ளும்

ஆனால் சைவமோ சிவபெருமான் என்ற ஒரு கடவுளே நமக்கு வினைப்பயனைத் தருபவன் என்பதை ஒப்புக்கொள்கிறது . சமணர்களுக்கு கடவுள் இல்லை .

2.பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அவர்கள் அடுத்த பிறவியில் ஆண்களாகப் பிறந்துதான் மோட்சத்தை அடைய  முடியும். இதற்காகப் பெண்கள் இப்பிறவியில் தவம் செய்யவேண்டும் என்பது சமணர் கூற்று

ஆனால் இந்துக்களோ பெண்களும் மோட்சம் அடைந்த பல கதைகளைக் கூறுகின்றனர் . சிவன் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவன் இல்லை . இங்குள்ள கனக துர்க்கை உள்பட நாம் வணங்குவது எல்லாம் பெண் கடவுளர்கள்தான்

3. வழிபாட்டுத் தலங்களில் ஆடலும் பாடலும் கூடாது என்பது சமணர்தம் கொள்கை.;

ஆனால் நாமோ அவைகளை வழிபாட்டின் ஒரு அம்சமாகப் பார்க்கிறோம் ; இந்துக் கடவுளர் அனைவரும் நடனப் பிரியர்கள்

நடராஜன் ஆடிக்கொண்டே இருக்கிறார் ; கணபதியும் ஆடுகிறார்.அவரை நர்த்தன கணபதியாகப்  பார்க்கிறோம் .

கண்ணனும் ஆடுகிறான்.

பாம்புத் தலை மேலே நடஞ்செய்யும் பாதத்தினைப் புகழ்வோம் என்று கிருஷ்ணன்  ஆட்டத்தை பாரதி பாடுகிறார் .

காளியும் ஆடுகிறாள் . பாரதியாரே

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்

வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்

அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்

தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!

அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை

நாடச் செய்தாய் என்னை……. என்று காளியின் நடனத்தைப் பாடுகிறார்..

முருகன் ஆட்டத்தினை அருணகிரிநாதரும் திருப்புகழில் பாடுகிறார்

அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட …… அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

     அருகு பூத வேதாள …… மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

     மருவு வானு ளோராட …… மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட

     மயிலு மாடி நீயாடி …… வரவேணும்

xxx

அது மட்டுமல்ல சமணர்கள் விபூதிக்கும் சிவன் நாமத்துக்கும் எதிரிகள்

நமசிவாய என்று யாரவது சொல்லிவிட்டால் கேட்டுமுட்டு (கேட்ட தீட்டு) என்று  சொல்லி சாப்பிட மாட்டார்கள்

விபூதி பூசியவனைப் பார்த்தால் கண்டு முட்டு ( கண்டதே தீட்டு) என்று  சொல்லி சாப்பிட மாட்டார்கள்.; அவர்களைச் சேர்ந்த கூன் பாண்டியனும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தான் . பாண்டியன் மனைவியான மங்கையர் கரசியார் , மந்திரி குல சிறையார் இருவரும் சம்பந்தரை வரவழைத்து சைவத்தைக் காப்பாற்றினார்கள்.

Xxx

ஆயிரம் பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்..

Xxxxx

மதுரை ஜோக் Joke  – பையக் கொடு !!

ஞான சம்பந்தர்  மதுரைக்கு வந்து பாண்டிய மன்னனை சந்திக்கவிருப்பதை அறிந்த சமணர்கள், சிறுவன் தங்கிய மடத்துக்கு இரவோடு இரவாக தீ வைத்தனர். சம்பந்தரைத்  தீர்த்துக் கட்ட வேண்டும் என்பது  சமணர் திட்டம். ஆனால் சிவனின் பரிபூரண அருள்பெற்ற  சம்பந்தரை தீ ஒன்றும் செய்யவில்லை. அந்த தீயையே அவர் பாண்டிய மன்னனுக்கு நோய் தரும் நெருப்பாகத் திருப்பி அனுப்பினார்.

பையவே சென்று பாண்டியர்க்காகவே என்பது  சம்பந்தரின் வாக்கு.

பைய என்பது மெதுவாக என்று பொருள் தரும் சொல். மதுரைத் தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்.

இது பற்றி சொ சொ மீ ஒரு ஜோக் JOKE சொன்னார்

தமிழ்நாட்டில் பஸ் கண்டக்டர்கள் டிக்கெட் கொடுக்கும்போது காசுகளை வாங்கிப் பையில் (SHOULDER BAG)  போடுவார்கள் . பொதுவாக பெரிய நோட்டைக் (Currency Note) கொடுத்தால், மீதி சில்லறையை அப்புறம் வாங்கிக் கொள் என்பார்கள் .

இப்படி மதுரை வாசியிடம் ஒரு வெளியூர் கண்டக்டர் சொன்னார்.

பஸ் பயணியும் அதற்கென்ன பையக் கொடுங்கள் என்றார் (பைய= மெதுவாக).

கொஞ்ச நேரம் ஆயிற்று. மீதிப்  பணத்தை பயணி கேட்டார்.

இன்னும் சில்லறை சேரவில்லையப்பா என்கிறார் பஸ் கண்டக்டர்.

பயணி சொன்னார் – அதற்கென்ன பையக் கொடுங்கள் .

கண்டக்டருக்கு கோபம் வந்து விட்டது

ஏனப்பா , உன் மிச்சக் காசுக்காக என் பையையே கொடு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய் என்று திட்டினார்.

பின்னர் எல்லா பயணிகளும் பைய= என்றால் மதுரையில் மெதுவாக என்று பொருள் என்று விளக்கினர் .

சம்பந்தர் இந்தச் சொல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தினார்

xxx

ஆணை நமதே நாயனார்

திரு ஞான சம்பந்தரை அழைக்க பாண்டிய நாட்டு ராணியே வந்தார். அப்போது அப்பரும் அங்கே இருந்தார். அப்பருக்கு சமணர்கள் இழைத்த தீமைகள் ஏராளம். அவர் சம்பந்தரை எச்சரித்தார். ஐயோ நீங்கள் சின்னப் பையன். அவர்களோ பொல்லாதவர்கள் கொல்லாமை என்னும் போர்வையில் மறைந்து உறையும் பொல்லாதவர்கள் போகாதீர்கள் என்றார். மேலும் நாளும் கோளும் சரியில்லை என்கிறார் .

சம்பந்தரோ சுப்பிரமணியரின் மறு அவதாரம். நாளும் கோளும் சிவன் அடியார்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லி வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு பதிகப் பாடலைப் / பதிகத்தைப் பாடி இதைப் பாடும் எவரையும் நவக்கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் ஒன்றும் செய்யாது; தீமை என்பதே இராது என்று சொல்லி ஆணை நமதே என்கிறார். இது போலப் பல பாடல்களில் ஆணை என்று கட்டளை இடுகிறார் ; இதனால் இவர்க்கு ஆணை நமதே நாயனார் என்ற பெயரும் உண்டு .(IT IS MY COMMAND/ ORDER)

xxx

இவ்வாறு பல அரிய செய்திகளை சொற்பொழிவில்  வழங்கிய சொ சொ மீ , சிவனுடைய 5 தொழில்களான ஆக்கல் அழித்தல் அருளுதல்  காத்தல்,  மறைத்தல் என்ற 5 தலைப்புகளில் சம்பந்தர் வரலாற்றை அமைத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்

சுபம் —-

Tags- கோளறு பதிகம், ஆணை நமதே நாயனார், சமணர் கொள்கைகள்,  பைய, மெதுவாக, பையக் கொடு ஜோக்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1972023 (Post No.12,296)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,296

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 15 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.மந்த்ராலய மஹான் ; பிறந்தது தமிழ்நாட்டில் ,

4.இவர்கள வம்சம் மேலை, கீழை என்று இரண்டு பிரிவுகளை  உடையது

,5. அடுத்தாற் போல என்ன செய்வது என்பதை இந்த சொல்லால் சொல்லுவர்

 6.உணர்ச்சி இல்லாத உடல்;, ⇠ 

7.மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் இடம் ,

 8.தென்னை, வாழை முதலி யன கொத்தாக இருக்கும் நிலை

(right to left )

9. ⇠ நோபல் பரிசு பெற்ற வங்காளக் கவிஞர் (right to left

11. ⇠ சிவாஜிக்கு குரு இன்னொருவர் பத்ராசலம் வாசி; இருவருக்கும் இப்பெயர்  (right to left)

11.பூபாளம், காம்போதி, முதலியவற்றைக் குறிப்பிடும் பொதுப் பெயர்

xxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.ராஜ ராஜ சோழனின் மகன்

2.தமிழ் நாட்டின் வட எல்லை , 

3.ராமர் மீது அதிகம் பாடிய கர்நாடக இசை மேதை  ,

9 ⇡  .அன்னை பூமியை இப்படியும் சொல்லலாம் ,

9.தண்ணீருக்குத் தவிக்கும் நிலை ,

10. ⇡  களிமண் பானை

1 2 3   
       
  4    
5       
    6  
7  8    9
        
     1011  

விடைகள்

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

1.ராகவேந்திரர், 4.கங்கர்,5. திட்டம், 6.ஜடம், ⇠  7.சோலை, 8.குலை(right to left 9. ⇠ தாகூர்(right to left 11. ⇠ ராமதாசன் (right to left) 11.ராகம்

xxxxx

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.ராஜேந்திர சோழன் ,2.வேங்கடம்,  3.தியாகராஜர் , 9  .தாயகம், 9.தாகம், 10.  மண்குடம்

ரா1வே2ந்தி3ர்
ஜே ங் யா  
ந் க4ங்ர்ம்
தி5ட்ம்ரா 
 ம்ஜ 6 
சோ7லைலைகு8ர்கூ  9தா
  ண்  
ன்தா  10ரா11ம்

—SUBHAM–

 tags– Tamil CW, 1972023, 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 8 (Post No.12,295)

DIAMOND CROWN – VAIRA MUDI FESTIVAL 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,295

Date uploaded in London – –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART EIGHT

44.. Mukthanatheshwara Swami Temple, Nelamangala நீலமங்கல முக்தனாதேஸ்வர கோவில்

பெங்களூரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோழர் கால கோ வில்.. ராஜேந்திர சோழனின் சிலை உள்ளது மிகவும் பாழடைந்த நிலையில் இருந்த இந்தக் கோவிலை தொல்பொருட் துறை செப்பனிட்டுள்ளது .

கோவிலுக்கு முன்னால் தமிழில் எழுதப்பட்ட பலகை இருக்கிறது கோவிலுக்குள் சிவலிங்கமும், வெளிச் சுவர்களில் பார்வதி-பரமேஸ்வரன் , நடராஜர் சிற்பங்களும், கூரையில் அஷ்ட திக் பாலகர்களும் பார்க்க வேண்டியவை.

Sri Lakshmi Venkateshwara Swamy Temple, Nelamangala, லெட்சுமி வெங்கடேஸ்வரர் கோவில், பசவேஸ்வரர் கோவில், ஆஞ்சனேயர் கோவில்களும் இந்த வட்டாரத்தில் உள்ளன

XXXX

45.பசராலு மல்லிகார்ஜுனர் கோவில் Mallikarjuna temple, Basaralu

இதை ஒரு கலைக்கூடம் என்று சொல்லலாம். சோம்நாத்பூர், ஹலபேடு , பேலூர் போல சுவர் முழுதும் சிற்பங்கள். பார்த்தவுடனேயே ஹொய்சாளர் பாணி கோவில் என்று சொல்லிவிடலாம். சிவ பெருமான் உறையும் கோவில் இந்த மல்லிகார்ஜுனர் கோவில் ஹரிஹர தன நாயக்க என்பவர் 1234 ஆம் ஆண்டு கட்டிய கோவில் . தொல்பொருட் துறையின் பாதுகாப்பில் இருக்கிறது  மூன்று சன்னதிகள் இருக்கும் திரிகூட அமைப்பு ள்ளது. ஜகதி என்று அழைக்கப்படும் மேடை மீதுள்ள கோவில். ஹொய்சாளர் பாணியில் ஆமலக சிகரமும் காணப்படும். ஜகதிஆமலக என்பனவெல்லாம் ஹொய்சாளரின் கட்டிடக்கலை முத்திரைகள் .

நுழை வாயிலில் கல் யானைகள் நிற்கின்றன. சுவர் முழுதும் புராண இதிஹாஸக் கதைகளை விளக்கும் சிற்பங்கள். நூற்றுக் கணக்கில் என்பதைவிட ஆயிரக்கணக்கான சிற்பங்கள் என்றே சொல்ல வேண்டும் ( யூ ட்யூப்பில் YOU TUBE காணலாம் )அந்தகாசுரன்  தலையில் ஆடும் 16 கைகள் கொண்ட  சிவ பெருமான் , ராவணன் தூக்க முயற்சிக்கும் கயிலை மலை, ,கஜாசுர சம்ஹாரம், அர்ஜுனன் தன வில்லால் சுழலும் மீன் உருவத்தை அடிக்க, மாலை போட திரவுபதி விரைந்து வரும் காட்சிகள் பார்த்து ரசிக்க வேண்டியவை. பசராலு மாண்ட்யா மாவட்டத்தில் இருக்கிறது

xxxx

46.மேலுகோட்டை  செலுவ நாராயணர் கோவில்

Melukote  Cheluva Narayana Temple

மாண்டயாவிலிருந்து 30 கி.மீ . தொலைவிலுள்ள செலுவ நாராயணர் கோவிலில்  நடக்கும் வைரமுடி உற்சவம் மிகவும் புகழ் படைத்தது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமானுஜர் 12 ஆண்டுகள் வசித்த ஊர் இது..

Sri Cheluvanarayana Swamy Temple, Pandavapura, Taluk, Melukote, Karnataka 571431     

மைசூரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஊருக்கு திருநாராயணபுரம் என்ற பெயரும் உண்டு .

உற்சவ மூர்த்தி விக்ரகம் செல்வப்பிள்ளை. இதற்கு ராமப்ரியா என்ற பெயரும் உண்டு . ராமரால் கிருஷ்ணராலும் வணங்கப்பட்ட விக்ரகம் என்பது ஐதீகம் .

காவிரி நதியையும் யதுகிரியையும் நோக்கி அமைந்த கோவில்.

டில்லியிலுள்ள முஸ்லீம் மன்னர் முகமது ஷாவிடம் பறிபோன விக்ரகத்தை ராமானுஜர் மீட்டு வந்தார். விக்கிரகத்தின் மீது அன்பு பூண்ட அவரது மகள் கோவிலுக்கு வந்தபோது இறந்ததாகவும் ஆகையால் அவரும் இங்கு வணங்கப்படுவதாகவும் சொல்லுவர். பீபி நாச்சியார் என்ற அந்த முஸ்லீம் பெண்ணின் உருவமும் கோவிலில் உளது.

கோவிலின் கோபுரம் மிகவும் அழகானது. ஆழ்வார்கள், ராமானுஜர் யதுகிரியம்மா சந்நிதிகள், சிலைகளும் இருக்கின்றன. தங்க கருட வாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா வரும் நாள் மிகவும் பக்தர் கூட்டத்தைக் கொண்டுவருகிற்து .மாலையில் துவங்கும் விழா இரவு முழுதும் நீடிக்கும்

வைர முடி விழா  

வீதி உலா வருகையில் பெருமாள் அணிவது வைர முடி. ஏனைய காலங்களில் அவர் அணிவது ராஜ முடி. அதிலும் ரத்தினைக் கற்கள் இருக்கும்.

வைரமுடி பற்றி சுவையான கதைகளும் பு ழ க்கத்தில் உள்ளன. பெருமாள் உறங்கும்போது அது திருடு போனதாகவும் கருடன் அதை மீட்டு வருகையில் அதன் தலையிலுள்ள நீலக் கல் தமிழ்நாட்டில் நாச்சியார் கோவிலில் விழுந்ததாகவும் பின்னர்  அது மணிமுத்தாறு மூலம் மீண்டும் மேலுகோட்டைக்கு வந்ததாகவும் கதை சொல்லுவார்கள் (நெல்லை ஜில்லா மணிமுத்தாறு வேறு).

Xxxx

பேய்களை விரட்டும் தடி !

47.Yoga Narasimha Temple, Melkote யோக நரசிம்ம சுவாமி கோவில்

Yoga Narasimha Temple, Melkote Main Road, District Mandya, Melukote, Karnataka 571431 

மைசூரிலிருந்தது 50 கிமீ தொலைவு.

1777 மீட்டர் உயர குன்றின் மீது மேலுகோட்டை யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது . யோக பட்டையுடன் நரசிம்மர் அமர்ந்த நிலை யில் இருக்கிறார் 365 படிகள் ஏறி  சென்றால் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.

இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் நரசிம்மரின் வலப்புறத்தில் ஒரு தடி / தண் டம்  வைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பேய் பிடித்தவர்களின் தலையில் அடித்தால் பேய்கள் ஒடி விடும்.

மேலுகோட்டையில் ராமானுஜர் தங்கியிருந்த காலத்தில் அவருக்கும் சமணர்களும் மோதல் ஏற்பட்டது . பிட்டிதேவன் என்னும் சமண சார்பு மன்னன் மகளை பிரம்மராக்ஷஸி பேய் பிடித்த பொழுது 1000 சமணர்களால் பேயை விரட்ட முடியவில்லை. இறுதியில் ராமானுஜர் அந்தப் பேயை விரட்டினார். மந்திரம் சொல்லி ஒரு குச்சியால் பெண்ணின் தலையில் தட்ட பேய் பறந்தோடிப்போனது ; பொறாமை கொண்ட சமணர்கள் மதுரையில் ஞான சம்பநதரை அனல்வாதம், புனல்வாதம் போட்டிகளுக்கு  அழைத்தது போலவே ராமாநுஜரையும் போட்டிக்கு அழைத்தனர். ஆயிரம் பேரும் 1000 கேள்விகள் கேட்போம். நீர் ஒரே பதிலில் திருப்திகரமான பதில் சொல்ல வேண்டும் என்று ராமானுஜருக்கு நிபந்தனை விதித்தனர். அவர் ஒரு திரை மறைவில் சென்று ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உருக்கொண்டு ஒரே பதிலில் விடை சொன்னார் ; சமணர்கள் திரையை விலக்கியபோது ஆயிரம் தலை கொண்ட ஆதி சேஷனைக் கண்டு மூர்ச்சித்து  விழுந்தனராம் .

To be continued………………………………..

TAGS- வைர முடி, மேலுகோட்டை, பேய் விரட்டும் , தடி , குச்சி, சமணர் மோதல், ஆதிசேஷன், மல்லிகார்ஜுனர் , ராமானுஜர்

நள சம்பு (Post No.12,294)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,294

Date uploaded in London –  19 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நள சம்பு

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 2 

ச.நாகராஜன்

நள சம்பூ சம்ஸ்கிருதத்தில் அமைந்த அற்புதமான நூல்.

இதை திரிவிக்கிரம பட்டர் என்பவர் இயற்றியுள்ளார்.

சம்பு காவ்யம் என்றால் உரைநடையும் கவிதையும் இணைந்த ஒன்று.

நூலை உரைநடையாக அமைத்து அதில் முக்கியமான சாரத்தைக் கவிதையாகத் தந்தது பஞ்ச தந்திரக் கதை.

ஆனால் சம்பு இலக்கியமோ நூலைக் கவிதை வடிவில் தந்து சாரத்தை உரைநடையாகத் தந்து புது பாணியை வகுத்தது.

சம்பு என்ற இந்த ஒரு புதிய பாணியை சம்ஸ்க்ருத கவிதா இலக்கியத்தில் திரிவிக்கிரம பட்டர் ஆரம்பித்து வைத்தார்.

இவரது கவிதா சாமர்த்தியம் அபாரமானது. அழகிய ஒரு தனி நடையை இவர் கொண்டிருந்தார்.

 கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் அரசவையில் பிரதான கவியாக இவர் அங்கம் வகித்தார்.

கி.பி. 915ஆம் ஆண்டு ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரன் (Nausari Inscription of Rastrakuta Kind Indra III of 915 A.D.) காலத்திய நௌசாரி கல்வெட்டில் உள்ளதை எழுதியவர் இவரே.

பத்தாம் நூற்றாண்டில் பிரபலமான காவியமாக நள சம்பு திகழ்ந்தது.

இவரது காவியத்திலிருந்து அறிஞர்கள் அனைவரும் மேற்கோள் கவிதைகளைக் காட்டுவது வழக்கம்.

போஜன் தான் இயற்றிய சரஸ்வதி கண்டாபரணம் நூலில் இவரது கவிதையைக் காட்டியுள்ளான்.

திரிவிக்கிரம பட்டர் தனது நூலில் பாணரின் கவிதையை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.

ஆகவே இவர் போஜன் மற்றும் பாணரின் காலத்தையொட்டி வாழ்ந்திருக்கக் கூடும்.

நள தமயந்தி சரித்திரம் அனைவரும் அறிந்த ஒன்று தான். என்றாலும் இவர் அதில் மோஹா, விவேகா, காமதேவன், தர்மா என்று பல புதிய கதாபாத்திரங்களைப் புகுத்தி கதையைச் சுவையுள்ளதாக ஆக்கி இருக்கிறார்.

மஹாபாரதத்தின் மூலத்தை இவர் சற்று விரிவுபடுத்தி அழகுற அமைத்துள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவரது காவியம் பாதியில் நின்று விட்டது.

ஏழு அத்தியாயங்களுடன் இது நிற்கக் காரணம் என்ன?

அதற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது:

தேவாதித்யா என்ற பிராமணர் ஒருவர் அனைத்து சாஸ்திரங்களிலும் வல்லவர்.

அவர் ராஷ்டிரகூட மன்னரின் அவையில் இருந்தார். ஒரு சமயம் அவர் தனது நகரிலிருந்து வெளியே சென்றிருந்த சமயம் இன்னொரு அறிஞர் மன்னரின் அவைக்கு வந்து தன்னோடு போட்டி போட வல்லவர் யாரேனும் இருக்கிறார்களா என்று வினவினார்.

அப்படி இல்லையெனில் தனக்கு ஜயபத்ரம் எழுதித் தருமாறு கேட்டார்.

ஜெயபத்ரம் வெற்றி பெற்றதற்கான அத்தாட்சிப் பத்திரம்.

மன்னர் திகைத்தார். தேவாதித்யரை அழைக்க ஆளை அனுப்பினார். அவரோ ஊரில் இல்லை.

தேவாதித்யரின் மகனே திரிவிக்கிரம பட்டர். அவர் சோகத்தில் ஆழ்ந்தார். தன் தந்தையைப் போலத் தனக்கு அறிவில்லையே என்று வருந்தினார்.

சரஸ்வதியின் முன் அமர்ந்து தனக்கு அருள் புரிய வேண்டுமென்று உளமார வேண்டினார். அவர் முன் பிரத்யட்சமான சரஸ்வதி தேவி அவருக்கு அருள் புரிவதாகவும் ஆனால் அவர் தந்தை திரும்பி வரும் அளவே அவருக்குத் தனது அருள் இருக்கும் என்று கூறினாள்.

உடனே அவர் நள சம்பு காவியத்தை ஆரம்பித்தார்.

‘புண்ய ஸ்லோகோ நளோ ராஜ’ என்று ஆரம்பித்த அவர் மளமளவென்று கவிதையாகவும் உரைநடையாகவும் நூலை வழங்க ஆரம்பித்தார். மன்னரும் மகிழ்ந்து அவருக்கு நல்ல வெகுமதிகளை வழங்கினார்.

ஏழாவது அத்தியாயத்தை அவர் முடித்த போது அவர் தந்தை ஊருக்குத் திரும்பினார்.

அத்தோடு சரஸ்வதி கூறிய படி அவரது கவிதை புனையும் ஆற்றல் நிற்க நூலும் ஏழு அத்தியாயங்களுடன் நின்று விட்டது.

என்றாலும் இந்த ஏழு அத்தியாயங்களில் உள்ள பல பாடல்களைப் பின்னால் வந்தவர்கள் பல இடங்களில் எடுத்துக்காட்டாகக் காட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட அரிய நூல் என்பது விளங்குகிறது.

நள தமயந்தி சரித்திரத்திற்கு அணி சேர்க்கும் அழகிய நூல் நள சம்பு!

***

Sanskrit in Burma /Myanmar -Part 2 (Post No.12,293)

Nanpaya Temple in Burma

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,293

Date uploaded in London – –  18 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 1 was posted yesterday

A Sanskrit inscription from Hamawaa indicates the practice of Hinduism long before the fifth century CE.

A Pagan inscription dated 1442 CE mentions the gift of 255 books to the

Sangha . some of these bear Sanskrit titles.

About 1600 CE, Pundits well versed in Vedas and other branches were living in the country. Experts in Atharvan Veda were in Burmese court.

The Mon Inscriptions contain many Sanskrit words.

An inscription found at Myinpagan opens with a Sanskrit verse taken from Mukundamala of saint king Kulasekhara Alvar

xxx

City names in Sanskrit

Arimaddanapura for ancient Pagan ;

Bissunumyo  for Vishnumaya ;

Hmawza was Srikshetra /Sisit

The Burmese chronicle Mahayazavin contains the tradition that the city was founded by Vishnu with the help of Chandi, Garuda and Parameswara.

Apart from Sanskrit inscriptions, one can see hindu influence in the law books of Myanmar . some legal treatises written in pali betray their indebtedness to the Dharmasastras of Manu and Narada.

The Burmese versions of the Chanakya Niti sastra is very popular in Burma .

Hindu deities Brahma , Vishnu, Siva, Ganesa and Durga are found in Burmese temples

xxxx

Buddhist Pagoda in Yangon

Hindu temples in Burma

Nanpaya Temple (Burmese: နန်းဘုရားကျောင်း [náɰ̃ pʰəjá tɕáʊɰ̃]; lit. “palace temple”) is a Hindu temple located in Myinkaba (a village south of Bagan) in Burma. The temple is adjacent to the Manuha Temple and was built by captive Thaton Kingdom King Makuta.

It was built using mud mortar, stone, and brick, and was used as the residence of Manuha. The temple contains intricate carvings of Brahma, and also contains depictions of other Hindu gods. Also, because Manuha was a Mon, there are many figures and symbols of the Mon within the temple, including Hinthas.

Burma is the British colonial officials’ phonetic equivalent for the first half of Brahma Desha, the ancient name of the region. Brahma is part of Hindu trinity, a deity with four heads. The name Myanmar is the regional language transliteration of Brahma, where b and m are interchangeable.

Arakan (Rakhine) Yoma is a significant natural mountainous barrier between Burma and India, and the migration of Hinduism and Buddhism into Burma occurred slowly through Manipur and by South Asian seaborne traders. Hinduism greatly influenced the royal court of Burmese kings in pre-colonial times, as seen in the architecture of cities such as Bagan. Likewise, the Burmese language adopted many words from Sanskrit and Pali, many of which relate to religion.

During 19th and 20th century , over a million Hindu workers were brought in by British colonial government to serve in plantations and mines. The British also felt that surrounding the European residential centre with Indian immigrants provided a buffer and a degree of security from tribal theft and raids. According to 1931 census, 55% of Rangoon’s (Yangon) population were Indian migrants, mostly Hindus.

The Nathlaung Kyaung Temple (Sanskrit: नाथ्लौंग क्यौंग, Burmese: နတ်လှောင်ကျောင်း [naʔl̥àʊɰ̃ tɕáʊɰ̃]; literally “shrine confining the spirits”) is a Hindu temple dedicated to Vishnu. The temple is located inside the city walls of old Bagan.

Nathlaung Kyaung Temple is to the west of the Thatbyinnyu Temple, and it is the only remaining Hindu temple in Bagan. Nat-Hlaung Kyaung temple is one of the oldest temples in Bagan, and was built in the 11th century, during the reign of King Anawratha. Some historians believe the temple was built in the 10th century, during the reign of King Nyaung-u Sawrahan (also known as Taungthugyi). The temple was originally built for Hindu Burmese Indians of the 11th century, including merchants and Brahmins in the service of the king. Many structures of the original temple have disappeared, although the main hall remains. Originally, the temple contained statues of the incarnations of Vishnu; however, today, only seven remain. The brick temple was isolated and unrepaired for many years, damaged by earthquakes.

The temple is set on a square template with steep-rising upper terraces. It may have been built by Indian artisans brought into Bagan (Pagan), during the 10th century CE, to work on it and other temples.
xxxxx

Ananda Temple in Bagan (Pagan)

It is Buddhist temple built in 1105 CE.

The name Ananda of the temple is derived from the Venerable Ananda, Buddha’s first cousin, personal secretary, one of his many principal disciples and a devout attendant. It was once known as Ananta Temple, coming from the phrase ‘ananta pinya’ in Sanskrit, which translates as “endless wisdom”. However, the word ‘Ānanda’ in Pali, Sanskrit as well as other Indian languages mean “bliss”. It is a popular Buddhist and Hindu name.

All most all the Buddhist Pagodas have something in Sanskrit. Kings’ names are also in Sanskrit, some beyond recognition. Like Brahma became Myanmar, many names have changed.

–subham—

Tags- Burma, Brahmadesh, Myanmar, Hindu Temples, Sanskrit inscriptions