இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி (Post.12,347)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,347

Date uploaded in London –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மாலைமலர் ஆடி மாத அம்மன் வரிசைத் தொடரில் 25-7-2023 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்

இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

சாமுண்டி பெயர் காரணம்

தேவி  சும்ப நிசும்பர்கள் என்ற அரக்கர்களையும் வதம் செய்தாள். அந்த அரக்கர்களின் சேனாதிபதிகளான சண்ட முண்டர்களையும் வதைத்ததால் சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள். தேவி பாகவதம் ஐந்தாம் ஸ்கந்தம் 26ஆம் அத்தியாயம் கோரமாக நடந்த சண்ட முண்டர்களுடனான தேவியின் கோர யுத்தத்தை வர்ணிக்கிறது.

சாமுண்டி தேவி 64 யோகினிகளில் ஒரு யோகினியாக அருள் சக்தியுடன் விளங்குகிறார். ஒரிஸாவில் புவனேஸ்வரில் 64 யோகினிகளுக்கான கோவில் உள்ளது. இங்கு சாமுண்டாவின் சிலை உள்ளது.

ப்ரஹ்மி, வைஷ்ணவி, மஹேஸ்வரி, குமாரி, வராஹி, ஐந்திரி, சாமுண்டா என்ற சப்த மாதர்களில் ஒருவர் சாமுண்டி  தேவி.

சாமுண்டி ஆன்மீக சக்தியை வெளிக் கொணரும் மஹா சக்தியாக வர்ணிக்கப்படுகிறாள்.

தேவியின் பிரதிநிதியாக ஆண்ட மைசூர் மன்னர்கள்

மைசூர் உடையார் மன்னர்களின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி.

மன்னனைக் காத்த அம்மனின் அருள் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மைசூரை நான்காம் சாம்ராஜ உடையார் ஆண்டு வந்தார். அவர் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து திரும்பும் போது மழை பெய்யவே, ஒரு மரத்தடியில் பல்லக்கு

நிறுத்தப்பட்டு அவர் கீழே இறங்கினார். மலை உச்சியை நோக்கி அவர் வேண்ட நினைத்த போது கோவில் சரியாகத் தெரியாததால் அங்கிருந்து நகர்ந்து தள்ளிச் சென்று கோவிலை தரிசனம் செய்தார். அதே சமயம் பல்லக்கு இருந்த மரத்தின் மீது மின்னலுடன் இடி விழ அது எரிந்து சாம்பலானது. தன் உயிரைக் காத்த அம்மனுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் வண்ணம் கோவிலைச் சிறப்புற விரிவாக்கினார்.

மன்னர் அம்மனுக்கு சமர்ப்பித்த காணிக்கையும் விசேஷமான ஒன்றாக அமைந்தது. தங்கக் காசுகளால் அமைந்த நக்ஷத்திர மாலிகா என்ற காசுமாலையை அவர் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார்.

அதில் சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள முப்பது ஸ்லோகங்கள் தேவியைப் போற்றுகின்றன.

கோவிலின் அமைப்பு

கோவில் அமைப்பு சிறப்புற அமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். ராஜ கோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. நவரங்க மண்டபம், அந்தராளம், பிரகாரம், கர்ப்பகிருஷம் என நாற்கர வடிவில் இது உள்ளது.

கோவிலின் கோபுர வாயிலில் கண்பதி அருள் பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறையின் முன்னே கொடிமரம், அம்மனின் பாதம் நந்தி ஆகியவை அமைந்துள்ளன. சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்க வாயிலில் நந்தினி மற்றும் கமலினி ஆகியோர் துவாரபாலகியராக உள்ளனர்.

எட்டுக் கரங்களுடன் சாமுண்டி அம்மன் அருள் பாலிக்கிறார்.

ஶ்ரீ சக்கரம்

இங்குள்ள ஶ்ரீ சக்கரம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

6” x 6” x 6” என்ற அளவில் பஞ்ச தாதுக்களால் அமைக்கப்பட்ட யந்திரம் இது. இன்னொரு பூப்ரஸ்தார சக்கரமும்  6” x 6” என்ற அளவில் 1964ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு நிறுவப்பட்டது. தங்கத்தினாலான இந்த சக்கரம் 60 தோலா எடையுள்ளது. சாமுண்டியின் பீடத்தில்  தேவியின் பாதங்களுக்கு அருகே இவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சகல தோஷங்களையும் போக்கி நலன்களை அருள்வது ஶ்ரீ சக்கரம் என்பது குறிப்பிடத் தகுந்தது.

மகிஷனின் சிலை

சாமுண்டி மலையில் உள்ள பிரம்மாண்டமான நந்தியைப் போலவே இங்குள்ள மகிஷாசுரனின் சிலையும் பிரம்மாண்டமான ஒன்று. இது மேற்கு நோக்கிச் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ளது. வலது கையில் தலைக்கும் மேலே தூக்கிப் பிடித்த பெரிய வாளையும் இடது கையில் படம் எடுக்கும் நாகப் பாம்பையும் ஏந்தியவாறு அச்சுறுத்தும் பார்வையுடன் மகிஷனின் சிலை அமைந்துள்ளது.

பிரச்சினைகளைப் போக்கும் தெய்வம்

இங்கு வந்து வழிபடுவோரின் பிரச்சினைகள் திர்ந்து விடும்.குறிப்பாக கணவன் – மனைவி உறவில் ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும் என்பது ஐதீகம்.

சாமுண்டீஸ்வரியை பக்தர்கள் அனைவரும் விமரிசையாக நவராத்திரி –  – தசரா -விழாவில் கொண்டாடி வருகின்றனர். ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரள, வண்ண மின் விளக்குகள் ஒளிர, அம்மன் யானை மீது சிம்மாசனத்தில் அமர்ந்து பவனி வருகிறாள்.

மிகச் சிறப்பாக நடக்கும் இந்தத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.

மன்னர் மற்றும் மக்கள் என அனைவருக்குமான தெய்வமாகத் தொன்று தொட்டு இருந்து வரும் சாமுண்டீஸ்வரி தனது அருளால் அனைவரையும் நல்வழிப்படுத்தி சகல நலங்களையும் தந்து வருவது கண்கூடு.

சாமுண்டீஸ்வரியை வணங்குவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்!

****

Hinduism Crossword 30 7 2023 (Post No.12,346)

CHAKRA VYUHA FORMATION IN MAHABHARATA WAR

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,346

Date uploaded in London – –  30 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Hinduism Crossword 30 7 2023 (Post No.12,346)

FIND OUT 15 WORDS WITH THE HELP OF COLOURS AND CLUES. YELLOW FOR ACROSS WORDS; GREEN FOR DOWN WORDS

12 3 4 5 6
          
7         
        8 
    9     
   10      
          
11   12     
          

 ACROSS

1.THIS ‘THREE IN ONE’ GOD HAD 24 GURUS FROM NATURE ACCORDING TO BHAGAVATHA PURANA-

7.HINDU MANTRAS AND SONGS HAVE ‘RAKSHA’, ‘PAAH’I TO SAY ‘SAVE ME, PROTECT ME.’ THIS IS ANOTHER SANSKRIT WORD WITH THE SAME MEANING

9.SHIVA’S FEROCIOUS FORM. THERE IS A FAMOUS HYMN IN THIS NAME

11.IRON IN SANSKRIT ; ENGLISH WORD IRON CAME FROM THIS WORD

12.ANY ANIMAL OR DEER , ANTELOPE

13. FIRST GRAHA IN HINDU ASTROLOGY

XXXXX

DOWN

1. She is a daughter of the Prajapati Daksha in Hinduism. She is a wife of the sage Kashyapa and the mother of the demonic race Daityas …

2.Mahabharata hero who learnt to enter a vyuha/army formation, but did not learn to come out of it.

3. n the Rigveda, he is stated to be a skillful craftsman who created many implements, including Indra’s bolt, the axe of Brihaspati, and a cup for divine food and drink. He is stated to be the creator of forms, and is often stated to be the crafter of living beings and womb

4.satva, rajo, tamasa gunas together called with this name

5.god in Sanskrit but always go with Shiva forms . In Tamil Nadu, all Saivite temples will have this for the male deity

6.name for Lotus in Sanskrit. Also the name of great Bengali saint of Pondicherry

8.’sentence’ in Sanskrit

10. usually depicting a Buddhist deity, scene, or mandala ; not framed but rolled and kept in Tibet; also Japanese poem in five lines and thirty-one syllables, giving a complete picture of an event or mood.

 11greatest of the Vedic goddesses; mother of all gods; word meaning is’ boundless’; another wife of Kashyapa and mother of all Devas (GO UP)

ANSWERS

D1A2TT3AT4RE5YA6
IB W R S R
T7HRAHI W A
II S G AV8V
TM HR9UDRAI
IA T10ANKAKN
DN A A  YD
A11YASM12RIGAH
SURYAGRAHA

—-subham—–

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-3 (Post No.12,345)

Burma’s old emblem 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,345

Date uploaded in London – –  30 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-3 (Post No.12,345)

Before Pre Pagan dynasty, there were four important kingdoms:

Pyu Kingdom – Sri Kshetra

Ramanna Desa – Mon Kingdom

Arakan Kingdom-

Kingdom of Mrammas

Mrammas lived in upper Burma at Pagaan

xxxx

Sri Lankan chronicles and Burmese inscriptions give important details.

Mon language inscriptions give us names as

Haripunjaya – Lamphun

Lavo – Lob puri

Dvaravati –  T o lo po t i

Ayuththaya – Ayodhya

Kshikittara – Sri Kshetra

Hamsavati – Pegu

Phanrang- Paanduranga

All Sanskrit names ; but they are spread over Cambodia, Thailand and Burma/Myanmar.

The Glass Palace Chronicle gives the name Jeya Simha as Zeyatheinkha.

Sanskrit names are corrupted beyond recognition.

Xxx

The name of many other Hindu settlements in lower Burma are known from inscriptions and literature. Thus we have Ramaavati, Asitanjana Nagara near Rangoon, Kusima Nagar or Mandala, RAAMPURA, Mullimanadala They are collectively known as RAMANNADESA.

The kingdom of Dvaaraavati in the valley of Menam was also a Mon Kingdom. Most important city was LAVA PURI (Lob Puri)

We have already seen Pegu was called Hamsavati and Pagan was called Ari Mardhana Pura.

Pure Sanskrit wrds were used for Kings, Queens and Cities.

Rama, Lava, Kusa remind us of RAMAYANA.

Xxxxx

VIKRAMA kings

At Prome in Burma/Myanmar, legends in Pyu language engraved on Royal funerary urns give us the name of three kings. The date is around 638 CE.

688- Death of Surya Vikrama – age 64

695- Death of Hari Vikrama – age 41

718- Death of Sihaa Vikrama – age 44

We know from elsewhere the names of Prabhu Varman, Jeyachandra Varman.

Another inscription says elder brother of Hari Vikraman was Jeyachandra Varman

Xxx

Kyanziththa died in1112 CE. His correct name was Jnana siddha. His son name was Raja Kumara. His other’s name Queen Tri Loka vatamsika (Burmese corrupted it as U Sauk Pan).

Sithu means the victorious hero = Siddha

Xxxx

The Glass Palace Chronicle claims that Narapatisiththu or Jeya Sura became king at Pagan in 1173 after the murder of his elder brother Naratheinka (Correct name Narasimha)

Jayasimha name is corrupted to Htilominlo in Chinese and Zeyyatheinkha in Burmese.

If one looks at all the names with their family names, one can easily get the correct name.

Narasimha is the only Avatar name clearly mentioned in Burma.

Xxxx

40 kings Missing

The Burmese Chronicles, which place the foundation of Pagaan at 108 CE, give a list of forty kings. But they are unknown to history.

Kalhana , author of Raja Tarangini of Kashmir, also gives a missing list like this regarding Kashmir.

Ram Khamhaeng (1279 to 1298 ;

Rama the Bold) ruled part of Burma from Thailand (Sukhodaya Kingdom)

Xxxxx

KING KILLED BY 8 INDIANS

One interesting episode is in Glass Palace Chronicle.

Indians were called Kala, corruption of Kula (English word clan is derived from this Sanskrit word.) The meaning is they belong to Higer clan/cultured.

Narathuu (1167-1171) CE

Narathu was known by two names:

King killed by eight Indians (kaalagya);

Imitaw Syaan (Lord of the Royal House)

Actually he was killed by Eight Sinhalese sent by Parakrama Bahu, King of Sri Lanka. He was angry because Burmese interfered in his commercial activities with Cambodia.

Earlier Minshinsaw attacked Narathu to revenge his father’s murder. But Narathu escaped by calling his brother to ascend the throne. Panthagu, the elder son of a dealer in almsbowls, was worshipped like lord by the people of Pagaan. Narathu sought his help . But Narathu later poisoned him to death.

Narathu was a cruel ruler according to the Glass Palace Chronicle. His ministers and his people stood in fear and awe before him. He also slew his close relatives. He killed his wife who was the daughter of Kala King (not Indian but Sri Lankan according to historians).

The names in the above episode are interesting. Though the Chronicle exaggerated many things, Sri Lankan names are in it. Further research may reveal that Tamils are also involved in it. Velu Vati is one example.

—- subham—–

Tags—Burma, Kings, Places, Sanskrit name, Velu Vati, Indians, Parakrama Bahu

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 14 (Post No.12,344)

Udupi Sri Krishna Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,344

Date uploaded in London – –  30 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 14

69.மஹாலிங்கேஸ்வர கோவில் The Mahalingeshwara Temple of Nandalike

சுமார் 700 ஆண்டு வரலாறுடையது நந்தலிகே மஹாலிங்கேஸ்வர கோவில். இது துளுவ நாட்டு பாணியில் அமைந்த கோவில் .சிவன், கணபதி சந்நிதிகளுடன் நிறைய தெய்வங்களுக்கு தனித்தனி கர்ப்பக்கிரகங்கள் இருக்கின்றன. அருகில் குடும்பத்தை நிர்வகிக்கும் ஹக்கடே முதலியோரின் அரண்மனை போன்ற வீடுகள் அப்படியே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் நடைபெறும் சிறி (Siri Jhatre) யாத்திரையில் (விழாவில்) கிறிஸ்தவர்களும் கலந்து கொள்ளுகின்றனர். கன்னடக் கவிஞர் முத்தண்ணாவின் நினைவுச் சின்னமும் இங்கு உளது . பாரதியாரைப் போல இளம் வயதில் இறந்தவர், வறுமையில் வாடியவர். யக்ஷகான கவிஞர்.

Nandalike Sri Mahalingeshwara Devasthana, Naalku Sthana – Nandalike, Karkala Taluk, Udupi District, Karnataka – 576126

Nandalike Lakshminaranappa, known by his pseudonym Muddana (; 24 January 1870 – 15 February 1901)

Xxxxx

70.உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் Udupi Sri Krishna Temple

உடுப்பி எங்கே உள்ளது?

அரபிக் கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.

த்வைத மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.

உடுப்பியில் ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர் கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும்.

இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார் அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.மாலுமி எவ்வளவோ விலை உயர்ந்த பொருட்களை கொடுக்க முன்வந்தான். ஆயினும் கப்பலில் உள்ள மஞ்ச ள் நிற பாறைகளை மட்டும் மத்வர் எடுத்தார். அதற்குள் பலராமன் ,கிருஷ்ணன் சிலைகள் இருந்தன. அவை இரண்டு இடங்களில் தனித்தடியே பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில்  ஏற்கின்றனர்.

மத்வர் பிறந்த பஜக(Pajaka)  அருகிலேயே உள்ளது . உடுப்பியிலிருந்து 12 கி.மீ.

Xxxxxx

உடுப்பியிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கல்யான் பூரில் கெஞ்சம்மா, வீரபத்ரர், மகாலிங்கேஸ்வரர், கணபதி, வேங்கடரமணா கோவில்கள் இருக்கின்றன

உடுப்பியிலிருந்து 13 கி.மீ தொலைவில் பிரம்மவரம்  என்னும் இடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்கள் மஹாலிங்க கோவில், கோபிநாத் கோவில், ஜனார்த்தன கோவில்கள் உள்ளன

இவற்றில் ஹொய்சாளர் பாணியில் அமைந்த கோபிநாதர் கோவில் சிறப்புடையது  பிராமணர்கள் ஊர் என்பதால் இப்பெயர். சீதா, சுனா ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையே ஊர் உளது.

சாலிக்ராம யோக நரசிம்மர் கோவில் Saligrama Narasimha Temple

இது சாலிக்ராம கல்லால் ஆனா நரசிம்மர். இங்கு மஹா கணபதி யந்திரத்தின் மீது நரசிம்மர் அமர்ந்துள்ளார்.

உடுப்பி நகரிலிருந்து 20 கிமீ தொலைவு. குரு நரசிம்மர் என்ற பெயரும் உண்டு

xxxx

71.ஆனகுட்ட விநாயகர் கோவில் Anegudde Vinayaka Temple

மங்களூரு நகரிலிருந்து சுமார் 100 கி.மீ.குந்தாப்பூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் மிகவும் பிரசித்திபெற்ற ஆன குட்டே (யானை மலை) பிள்ளையார் கோவில் இருக்கிறது

பரசுராம சிருஷ்டி என்று அழைக்கப்படும் ஏழு புனிதத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் கும்பாஷி என்றும் சொல்லப்படுகிறது அகஸ்தியர் தவம் செய்தபோது கும்பாசுரன் இடையூறு செய்ததாகவும் அப்போது அவரை த்வம்சம் செய்த இடம் என்பதாலும் இந்தப்பெயர் ஏற்பட்டது.

வியாக சதுர்த்தி காலத்தில் பெரிய உற்சவம் நடக்கும் ‘; முக்கி அக்கி கடுபு சேவை யில் வேகவைத்த அரிசிச் சோறு (உண்டைக் கட்டி ) படைக்கப்படுகிறது Mudi Akki Kadubu’ seva

Xxxx

To be continued………………………………….

Tags- சாலிக்ராம யோக நரசிம்மர் , உடுப்பி, கிருஷ்ணர், ஆனகுட்டே , விநாயகர் , கோவில்

இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – 1 (Post No.12,343)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,343

Date uploaded in London –  30 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மாலைமலர் ஆடி மாத அம்மன் வரிசைத் தொடரில் 25-7-2023 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம் 

இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி

(முதல் பகுதி)

ச.நாகராஜன் 

மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம் 

இன்றைய கர்நாடக மாநிலத்தில், மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் பிரபலமான 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாக இலங்குகிறது

மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் குடிகொண்டு அருள்பாலிக்கும் சாமுண்டி தேவி தனது பிரதிநிதியாக மைசூரை ஆண்டு வந்த மன்னர்களை நியமித்து அறநெறி வழியில் அவர்களை ஆட்சி செய்ய வழி காட்டி வந்த தெய்வம்.

சாமுண்டியை மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக அனைவரும் வழிபட்டு வந்தனர்; வருகின்றனர்.

 தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை இலங்குகிறாள் சாமுண்டி.

கிரௌஞ்ச பீடம்

சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் கிரௌஞ்ச பீடம் என்று அழைக்கப்படுகிறது.

மஹாநந்தி

இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல  ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 800வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில்  அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தி சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது.

பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிருஹதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி ஒரே கல்லினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நீளம் சுமார் 16 அடி. உயரம் சுமார் 13 அடி.

ஆக, நாட்டின் உள்ள நந்திகளில் பெரிய நந்தியைக் கொண்டுள்ளது சாமுண்டீஸ்வரி ஆலயம்.

12ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள வம்ச மன்னர்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டது.

பின்னர் இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17ஆம் நூற்றாண்டில் கட்டினார்.

மகாபல கிரி

மகாபல கிரி என்று அழைக்கப்பட்ட இந்த மலையில்  மகாபலேஷ்வர் என்ற பெயரில் சிவபெருமான் ஆலயம் ஒன்றும் உள்ளது. இது மிகப் புராதனமானது. இந்த ஆலயத்தில் உள்ள கணபதி மற்றும் ஆஞ்சநேயர் சுயம்பு மூர்த்திகள்.

முன்பொரு காலத்தில் மகாபலேஸ்வரர் ஆலயமும் சாமுண்டீஸ்வரி ஆலயமும் ஒரே மதில் சுவருக்குள் அமைந்திருந்தது. பின்னால் சாமுண்டீஸ்வரியின் தேர் பவனிக்காக ஆலயங்கள் பிரிக்கப்பட்டு தேர் செல்லும் பாதை தனியே அமைக்கப்பட்டது.

சுயம்பு லிங்கமாக உருவாகியுள்ள மகாபலேஸ்வரர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வலது புறம் உள்ள ஆலயத்தில் இருந்து அருள் பாலித்து வருகிறார்.

மகிஷாசுர வதம்

சாமுண்டி தேவியைப் பற்றி ஸ்கந்த புராணமும் மார்க்கண்டேய புராணமும், தேவி பாகவதமும் விவரிக்கின்றன.

முன்னொரு காலத்தில் மைசூர் பிரதேசத்தை மகிஷாசுரன் என்ற அசுரன் ஆண்டு வந்தான். அவன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் புரிந்து அவர் அருளைப் பெற்றான். தனக்கு சாகா வரம் வேண்டும் என்று அவன் கேட்க சிவபிரான் அவனிடம் அவனுக்கு ஆண்கள், விலங்குகள், நீர் ஆகியவற்றால் மரணம் ஏற்படாதிருக்க வரத்தை அருளினார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மகிஷாசுரன் தனக்கு மரணமே இல்லை என்ற மமதையில் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான்.

இதனால் தேவர்கள் மிகவும் தொல்லைக்குள்ளாகவே அவர்கள் சிவபிரானை அணுகி தங்களைக் காக்குமாறு வேண்டினர். சிவபிரானும் மனம் கனிந்து அவர்களிடம் இதற்காக தேவியை அணுகுமாறு கூறினார்.

பார்வதி தேவியை அணுகிய தேவர்கள் தங்கள் நிலையைத் தெரிவிக்க, தேவி அவர்களிடம் அஞ்ச வேண்டாம் என்று கூறி தாமே சாமுண்டியாக அவதரிப்பதாக உறுதி கூறினார்.

அதன்படியே ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை சாமுண்டியாக மைசூரில் அவதரித்தார்.

மகிஷனுடன் உக்கிரமாகப் போர் புரிந்த சாமுண்டி தேவி அவனை வதம் செய்தார்.

தேவியின் உக்கிரத்தைத் தாங்க முடியாத மகிஷாசுரன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கடைசியில் சப்தமி திதி, மூல நட்சத்திரத்துடன் கூடிய திங்கள்கிழமை அன்று சாமுண்டி மலைக்கு ஓடி வந்து அம்மனின் திருப்பாதங்களில் சரண் அடைய அவனது தலையைத் துண்டித்தாள் அம்மன். அவனைத் தனது பாதங்களில் ஐக்கியப்படுத்த அனைவரும் மகிஷனின் வதத்தால் மகிழ்ந்தனர்.

மகிஷன் வதம் செய்யப்பட்ட பின், தேவர்கள் தேவியின் உக்கிரத்தைத் தணித்து சாந்தப்படுத்தினர்.

மார்க்கண்டேய மஹரிஷி தேவிக்கு எட்டு கரங்களுடனான வடிவத்தை இங்கு அமைத்தார். அன்றிலிருந்து இன்று வரை அம்மன் அங்கிருந்து அருளாட்சி செய்து வருகிறார்.

மகிஷனின் நினைவாக மகிஷாவூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி மைசூர் என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

மார்க்கண்டேயரின் ஆசிரமும் இந்தப் பகுதியில் உள்ளது. மார்க்கண்டேயர் கடும் தவத்தை இங்கு மேற்கொண்டதை புராணங்கள் சித்தரிக்கின்றன. இங்குள்ள சிவலிங்கம் பக்தர்களால் விசேஷமாக வழிபடப்படுகிறது.

***

தொடரும்

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-2 (Post No.12,342)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,342

Date uploaded in London – –  29 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Second Part

Hindu literature called Burma, SWARNA BHUMI (Land of Gold) which is a pure Sanskrit word.

Vaisali is a town Rakhine region  (Also known as Arkan). It was the capital of Candra dynasty and whose origins dates back to fourth century CE.

Burmese got this name from Vaisali in Bihar in India. Vaisali of Bihar is closely connected with Buddha’s life because he took his FIRST training from his teacher RAMA PUTRA there.

Kala in Burma is used for Kula  in Sanskrit.

Xxxx

Tamil Connection

A number of inscriptions, about thirty, have been discovered in Burma. Following are important ones:

Inscription in four languages Pali, Pyu, Mon and Burmese

Tamil Inscription in Myin Pagaan

Pillar Inscription of Myzedi

Inscription from Kalyanisima, Pegu

Cham Inscriptions in Panduranga

Po nagar Inscription

Lom- ngo Inscription

Pyu Uru Inscription

Xxxx

Scholars say that all inscriptions in S E Asia have the script derived from Pallavas. Pallava surname VARMAN is found in Burma.

About some inscriptions in Prome, Prof. Wales says one Sanskrit inscription is in Gupta script.

An inscription engraved on the pedestal of a Buddha image composed in Sanskrit verses show the existence of a ruler named Jaichandra Varman. Dr R C Majumdhar, a great authority on S E Asian History, says the script and style of the image resemble those of eastern India of about 7th century CE.

We also find mention of Prabhu Varman , Prabhu Devi in a Pyu inscription on a stupa. According to Hall the name Varman indicates the possibility of Pallava influence from Kanchipuram.

xxxx

Tamil Name Queen Veluvati

After the murder of Narasimha( in Burmese Naratheinka) Narapati Siddha became king. He was anointed with his queen Veluvati. He introduced Cylonese Buddhism replacing the Burmese Buddhism.

This Sri Lankan connection shows Veluvati was a Sri Lankan Tamil. We have to do more research.

Two gold plates and three fragments of a stone Inscription, a small votive stupa and a gold leaf manuscript were discovered at Hmawza. All of these have Pali language matter in a script very closely allied to Canara- Telugu script of 6th or 7th centuries CE.

This shows Andhra-Kalinga/Orissa and Tamil Nadu connection with Burma .

xxxx

Tamil Kings

About the early kings of Burma we have no information other than their names

Following kings ruled Burma nearly 2000 years ago.

Thamodarrit- Founder of the dynasty- 152 CE

Yathe kyaung – 152-167 CE

Pyusawti – 167- 242 CE

Htiminyi – 242-299

Yinminpaik 299-324

Paitthili – 324-344

Thinlikyaung – 344-387

Kyaungdurit 387- 412

THIHTAN 412-439

MOKHAMAN and THUYE-412-439

These last two names sound like Tamils. In Sri Lanka also we see Tamils seizing power for some time

We have to do more research on this.

Xxxx

The Mons

The first people in Burma to leave definite traces of their settlement were Mons. They were close cousins of Khmers (of Cambodia) and they came down the Me Kong river. The correct name of Me Kong is Ma Ganga ( Ganga Maathaa). If you look at Sri Lankan rivers, you can see the Ganga suffix with important rivers. Wherever Hindus migrated or whoever is influenced by Hindu culture used all Hindu names like Ganga, Go(cow), Devi (goddess), Deva (god) Indra (leader) Rama and Krishna.

Mons occupied many areas of Thailand and Burma by 3rd century CE. Their country was called Ramanna Desa.

The Mons is not extinct but under the name of Talaing retains some distinction yet. In the first part we saw them as the people of Telengana.

Mons called themselves Rmen (Raman??). it is found in an inscription of Burmese King Kyaziththa1102 CE (correct name is Jnana Siddha). From its medieval form Rmen or Ramen comes Ramanna and the name Ramanna Desha given by Arab geographers.

Buddhism of Theravada variety was the prevailing religion in the Mon regions

Xxxx

The Pyus

The Pyus were completely absorbed and merged in the Burmese population. Their capital was SRI KSHETRA. It is described as a great walled city of 12 gates with a pagoda at each of the four corners. The word Sri Kshetra got corrupted in Burmese as Tharahkittara!!!

Hindu and Buddhist sculptures are seen in the area.

The Pyu script is like South Indian script. Thanks to the discovery of a “Rosetta Stone” in Burma with four languages, Pyu language was deciphered. The four languages are Pali, Pyu, Mon, Burmese. it was on a pillar of Myazedi, south of Pagan. Buddha.

Before Pre Pagan dynasty, there were four important kingdoms:

Pyu Kingdom – Sri Kshetra

Ramanna Desa – Mon Kingdom

Arakan Kingdom-

Kingdom of Mrammas

To be continued…………………………………………………

 tags- Burma, Myanmar, Tamil Kings, Veluvati, Inscriptions, Mons, Pyus, 

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 29 7 2023 (Post No.12,341)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,341

Date uploaded in London – –  29 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 8 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

1. இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்க சோழனின் படைத்தலைவனும் அமைச்சனுமாயிருந்த கருணாகரத் தொண்டைமான் கி.பி. 1112-ஆம் ஆண்டில் போரில் வென்ற செய்தியே நூற்பொருள். இது செயங்கொண்டார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.

2. அருணகிரிநாதரால் எழுதப்பட்டது.  காப்புச்செய்யுள் உட்பட 102 பாடல்கள் உள்ளன. அனைத்தும் யமகம் முறையில் அமைந்த முருகன் மீதான அந்தாதிப் பாடல்கள்.

3.பன்னிரண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் என்பவரால் முருகன் பற்றி எழுதப்பட்டது.

4.சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ;5 திணைகள் தலைப்பில் 5 புலவர்கள் பாடியது

5.தமிழில் உள்ள ராமகாதை

6. கல்லாடர் என்பவரால் இயற்றப்பட் ட  சைவ நூல் . ஒன்பதாம் திருமுறைகளில் ஒன்றான இந்த நூல் 11ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

7.இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.

8.இடைச் சங்க கால நூல்; அழிந்து போன நூல் என்பதால் பெயர் மட்டுமே கிடைத்தது. க என்னும் எழுத்தில் துவங்கி ரை என்னும் எழுத்தில் முடியும் பெயர்

      1      
             
8           2
 8           
             
             
             
             
7          3
             
             
             
             
 6         4 
             
      5      
      ணி1      
            
8          தி2
 ரை    து    தா 
  வி   த்   ந்  
   யா       
    ரி ங்     
     லிந்     
ம்7ராபுருந்புராம்3
     ல்ம்லி     
    லா  த்    
     ரா  தொ   
  ம்   மா   கை  
 6        4 
            
      ம்5      

விடைகள்

1.கலிங்கத்து பரணி ;2.கந்தரந்தாதி ;3.கந்தபுராணம் ;4.கலித்தொகை ;5.கம்பராமாயணம் ;6.கல்லாடம்; 7.கருடபுராணம்; 8.களரியா விரை

 —subham—-

தமிழ் அதிசயம்! ஒரே எழுத்துக்கு  45 அர்த்தம் !! (Post No.12,340)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,340

Date uploaded in London – –  29 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகில் தமிழ் மொழியும் சம்ஸ்க்ருத மொழியும்தான் அதிசய மொழிகள். ஒரே எழுத்துக்கு அதிகமான பொருள்கள் இருப்பதால் புலவர்கள் அவைகளைப் பயன்படுத்தி பெரிய இலக்கிய விந்தைகளைச்  செய்தார்கள் . ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் ஓரெழுத்து உண்டு . ஐ” I “என்றால் ‘நான்’ போனற ஒன்றிரண்டுதான். ஆனால் தமிழில் 54 ஓரெழுத்து சொற்கள் உள . அவற்றில் கோ என்ற எழுத்துக்குத்தான் அதிக பொருள்/ அர்த்தங்கள்.

சம்ஸ்க்ருத மொழியில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்கள் என்று தனித்தனி அகராதிகளே இருக்கின்றன. அது  மட்டுமல்லாமல் அவற்றுக்குள்ள மந்திர சக்திகளையும் வேத விற்பன்னர்கள் கண்டு பிடித்துள்ளனர். எடுத்துகாட்டாக ஸ்ரீ என்ற எழுத்தைச் சொல்லலாம். இதற்குள்ள பொருள், மந்திர சக்தி முதலியன பற்றி புஸ்தகமே எழுதலாம் ; காஷ்மீரில் ஸ்ரீ நகர் உண்டு. ஒரிஸ்ஸாவில் ஸ்ரீ நகர் ( புரி ) உண்டு பர்மாவில் ஸ்ரீ நகர் உண்டு; ஸ்ரீ விஜய என்ற விஷ்ணு சஹஸ்ர நாமச் சொல்லைக்கொண்டு தென் கிழக்கு ஆசியாவில் பிரம்மாண்டமான இந்து சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்கள்.

xxxx

இப்பொழுது தமிழ் மொழி அதிசயங்களைக் காண்போம்.

முதலில் ஓரெழுத்து பற்றி தொல்காப்பியத்தில் காண்கிறோம்

நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி

–தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,; சூத்திரம்  43

XXX

குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே

–தொல்காப்பியம் எழுத்ததிகாரம், ; சூத்திரம் 44

XXX

பொருள்

ஆ , ஈ , ஊ , ஏ, ஐ, ஓ ,ஒள ஆகிய நெட்டெழுத்து ஏழும் தனித்து நின்று பொருள் தரும்..

ஆனால் அ இ உ எ ஒ ஆகிய குற்றெழுத்து ஐந்தும் தனித்து நின்று பொருள் தராது.

இதற்கு எடுத்துக்காட்டாக உரைக்காரர்கள் காட்டும் சொற்கள் –

ஆ- பசு; ஈ – கொடு , ஈ ; ஊ -ஊன் ; ஏ -அம்பு; ஐ- அழகு; ஓ – மதகு நீர் தாங்கும் பலகை

தொல்காப்பியருக்குப்  பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தி முனிவர் தமிழில் தோன்றிய பல மாறுதல்களைக் கணக்கிற்கொண்டு புதிய இலக்கண விதிகளை இயற்றி நன்னூல் என்ற புஸ்தகத்தை நமக்கு அளித்தார் ; அவர் சொல்கிறார்,

உயிர்மலிலாறுந் தபநவி லைந்தும் 

கவச வினாலும் யவ்விலொன்றும்

ஆகு நெடில் நொது வாங் குறிலிரண்டோடு

ஓரெழுத்தியல்பத மாறேழ் சிறப்பின

–நன்னூல் , எழுத்ததிகாரம், 129

சிறப்பான 42  எழுத்துக்களை பவணந்தி முனிவர் சொன்னபோதிலும் , சிறப்பில்லாத 12 எழுத்துக்கள் என்ன என்பதையும் உரைகாரர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

42 சிறப்பான ஓரெழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றிற்கு பொருள் உண்டு.; உரைகார்கள் சிறப்பில்லாத 12 எழுத்துக்களையும் சேர்க்கவே நமக்கு 54 ஓரெழுத்து சொற்கள் கிடைக்கின்றன .

ஒரு எழுத்துக்கு ஒரு பொருள்தான் என்று எண்ணிவிடக்கூடாது.

ஒரே எழுத்துக்கு பல பொருட்களும் கிடைக்கும் .

கோ என்றால் அரசன்  மேலும்  44 அர்த்தங்கள் உள

xxxx

கோ என்றால் நிறைய அர்த்தங்கள் உள ; அவையாவன

பிற்கால உரையாசிரியர்கள் தமிழ் ஸம்ஸ்க்ருதம் என்று வேற்றுமை பாராட்டவில்லை. எந்தத்  தமிழ்  அகராதியை எடுத்தாலும் அதில் ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்திருக்குறளை எடுத்துக் கொண்டால் அதில் ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாத அதிகாரமே இராது. ஏனெனிலவர் இரண்டு மொழிகளையும் தன் இரு கண்கள் எனப் பாவித்தார்

கீழே கோஎன்பதற்கு தமிழ் அகராதி  பசு என்று சொல்லும். சம்ஸ்கிருதத்திலும் கோ – மாதா பசு’தான்

மேலும் உள்ள பொருள்கள் 1935 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதியைக் கொண்டு காண்போம்

அரசன் அம்பு, ஆகாயம் , ஆண்மகன், இடியேறு எருது, கண் , திசை நீர், பசு, கோ -வேனல், தெய்வ லோகம் , பூமி, மலை, வச்சிராயுதம் ., இலந்தை, உரோமம் , கிரணம், இரக்கக் குறிப்பு, சந்திரன், சூரியன், கோமேதக யாகம், பொறி, மலை, மாதா, மேன்மை, வாணி, வெளிச்சம்,பெருமையிற் சிறந்தோன், தகப்பன், தலைமை , குசவன், சொல், இரசம்/சாறு, வெந்நீர், கோவை செய், தொடு, ஒழுங்காக்கு, கதை கட்டு , தறி, தடு , எதிர், அழைப்புக்குறி , பொறி, உயிர் மெய் எழுத்து .

இவைகளில் சில ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆனாலும் தமிழ்ப் புலவர்கள் அவைகளை பாடல்களில் பயன்படுத்தியத்தைக் கருத்திற்கொண்டே அகராதி தொகுத்தோர் சொற்களை சேர்த்துள்ளனர்..

சிறப்பான 42 சொற்களுக்கு பல கலைக்களஞ்சியங்கள் குறைந்தது ஒரு சொல்லையாவது கொடுத்துள்ளன . சிறப்பில்லாத 12 சொற்களை அவை காட்டவில்லை. இதோ சிறப்பில்லாத , தொல்காப்பியர் சொல்லாத, பவணந்தி சொல்லாத ஓரெழுத்துக்கள்:–

அ – முதல் எழுத்து; அஃ றி ணைப்பன்மை ஈறு ; ஆறாவதன்  பன்மை உருபு , சாரியை, நினக்கு சுட்டு, அவன் . சம்ஸ்க்ருதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் .

இ – இவன் , இது, சுட்டு, இக்கொற்றன்

உ- சுட்டு, உவன் , உ க்கொற்றன்

எ – எ க்கொற்றன், வினா, எவன்

ஒ – மயில்

ஒள – அழைத்தல்,, வியப்பு, தடை, அனந்தம் , கடித்தல், பூமி

கீ – கிளியின் குரல்

கு – பூமி, கெடு , நான்காம் வேற்றுமை  உருபு

கெள – கொள்ளு , தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கவ் வென்னேவல் ,

கை – இகழ்ச்சி

பீ – அச்சம், மலம்

வீ – சாவு, நீக்கம், பறவை, பூ,  வீ வென்னேவல்

ஆக பவணந்தி சொன்ன 42 எழுத்துக்களுடன் இந்த 12-ஐ  யும் சேர்த்தால் தமிழில் 54 ஓரெழுத்துக்கள் உண்டு.

திருக்குறளில் அ -கரம் என்று துவங்கும் முதல் குறளுக்கும் , பகவத் கீதையில் நான் அகாரமாக இருக்கிறேன் என்ற சொல்லுக்கு பாஷ்யக்காரர்கள் செய்த உரைகளையும் படிப்போருக்கு அ – என்ற எழுத்தின் பெருமை மேலும் விளங்கும். அது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பதை அறிந்தே வள்ளுவனும் முதல் குறளில் பயன்படுத்தினான் போ லும் ! ஒள என்ற வியப்புக்குறியை நாமும் வவ், வாவ்  vaav, vav  என்று இன்றும் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்!

—subham—

Tags- ஓரெழுத்து , அதிசயம், தமிழ், கோ , பவணந்தி தொல்காப்பியம், 42, 54, அர்த்தம் , பொருள்

கிராதார்ஜுனீயம் (Post No.12,339)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,339

Date uploaded in London –  29 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

கிராதார்ஜுனீயம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 6

ச.நாகராஜன்

பாரதம் கண்ட மிகப்பெரும் கவிஞர்களுள் ஒருவர் பாரவி. அவர் இயற்றிய மகா காவியம் கிராதார்ஜுனீயம்.

இது 18 காண்டங்களைக் கொண்டது.

இதற்கு விரிவுரை எழுதிய மல்லிநாதர் இதை மகாகாவியம் என்று புகழ்கிறார்.

மஹாபாரதத்தில் வன பர்வத்தில் (அத்தியாயம் 37 முதல் 41 முடிய) வரும் வரலாறு இது.

த்வைதவனத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்யும் போது ஒரு பிரம்மசாரி வந்து அவர்களைச் சந்தித்து கௌரவர்கள் எப்படி வளத்துடன் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்கிறார். இதைக் கேட்டு திரௌபதியும் பீமனும் தர்மராஜரிடம் விதியை நம்பும் அவரை இகழ்கின்றனர். அப்போது வியாஸர் அவர்களிடம் வந்து இந்திர மந்திரத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். அர்ஜுனனிடம் தவம் புரியுமாறு சொல்ல அவனுடம் இந்திரகீல மலை சென்று தவம் செய்கிறான்.

இந்திரன் தேவகன்னிகளை அவனிடம் அனுப்பி அவன் தவத்தைக் கலைக்க முயல்கிறான். ஆனால் அர்ஜுனனோ தனது கடும் தவத்தை விடவில்லை.

ஆகவே இந்திரன் ஒரு வயதான அந்தணர் தோற்றத்தில் அர்ஜுனனிடம் வந்து முக்தியைப் பற்றி ஒரு பெரிய உரையை நிகழ்த்த அர்ஜுனனோ தாங்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே தான் தவம் செய்வதாகக் கூறுகிறான். உடனே இந்திரன் தனது உண்மை உருவத்தைக் காண்பித்து சிவனை நோக்கித் தவம் புரியுமாறு கூறுகிறான்.

அர்ஜுனனும் சிவனை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். அவன் தவம் கிளப்பிய அக்னியைத் தாள முடியாத முனிவர்கள் சிவனிடம் சென்று  முறையிட சிவன் அவர்களிடம் பயப்பட வேண்டாம் என்றும் அர்ஜுனன் நரன் என்றும் அசுர சக்திகளை அழிக்கவே பூமிக்கு வந்துள்ளான் என்றும் கூறி அருள்கிறார்.

பின்னர் கிராதன் (வேடன்) வேஷம் பூண்டு தனது கணங்களுடன் அர்ஜுனனிடம் வருகிறார்.

அப்போது அங்கு காட்டுப் பன்றி ஒன்று வர அர்ஜுனன் அதை வேட்டையாடத் துரத்துகிறான். சிவனும் அதைத் துரத்த இருவருக்கும் சண்டை மூள்கிறது.

அர்ஜுனன் தனது ஆயுதங்கள் அனைத்தையும் இழக்கவே கிராதனுக்கும் அவனுக்கும் மல்யுத்தம் ஏற்படுகிறது.

கிராதன் சண்டையின் போது வானில் எழும்ப அர்ஜுனன் கிராதனின் காலைப் பிடித்துக் கொள்கிறான். இதை எதிர்பார்க்காத கிராதன் பூமியில் குதித்து அர்ஜுனனைத் தழுவிக் கொள்கிறான்.

தான் யார் என்பதையும் தெரிவிக்கிறான். பின்னர் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரத்தைத் தந்து அருள்கிறான்.

உடனே இந்திரனும் இதர லோகபாலர்களும் தங்கள் பங்கிற்கு அர்ஜுனனுக்கு அஸ்திரங்களைத் தந்து அருள்கின்றனர்.

சிவன், “திரும்பிச் செல். உனது எதிரிகளை வெற்றி கொள்” என்று அருள,  அர்ஜுனன் மீண்டு தர்மரிடம் வந்து நடந்ததை விவரிக்கிறான்.

இது தான் கிராதார்ஜுனீயத்தின் கதை.

இந்தச் சம்பவத்தை பாரதத்தில் உள்ள ஏராளமான கவிஞர்கள் தங்கள் தங்கள் பாணியில் அழகுற கவிதை வடிவத்தில் சித்தரித்துள்ளனர்.

சிற்பிகளோ ஆங்காங்கே சிற்பங்களாக இந்த வரலாறைச் செதுக்கியுள்ளனர்.

தஞ்சை பகுதியில் திருவேட்டகுடி, கும்பகோணம் பகுதியில் விஜயமங்கை மற்றும் திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் அர்ஜுனன் சிவனை வழிபட்டு பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாற்றைக் காண முடிகிறது.

மகாகவி பாரவி

மகாகவி பாரவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. மேலைகங்க வமிசத்தைச் சேர்ந்த துர்வீநீத மன்னன் அரசாண்ட ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் இவர் காலத்தை நிர்ணயிக்கின்றனர். அதே சமயத்தில் பல்லவ நாட்டை ஆண்டவன் மன்னன் சிம்ம விஷ்ணு.

இந்தக் காவியத்தின் 15வது காண்டமான சித்ர காவியம் அழகிய ஒன்றாகும்.

பாரவி அர்த்த கௌரவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறார். அவ்வளவு அர்த்தம் பொருந்திய கவிதைகளைப் படைத்தவர் இவர்.

பாரவியால் உத்வேகம் பெற்றவர்களுள் ஒருவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் மாகர். இவர் சிசுபால வதத்தை இயற்றியவர்.

ஐந்து பெரும் மகாகவிஞர்களுல் ஒருவர் பாரவி என சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறி பாரவியைப் புகழ்கின்றனர்.

***

Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-1 (Post No.12,338)

37 Nats

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,338

Date uploaded in London – –  28 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

There is a big hidden history of Buma/Myanmar that many people do not know. No one has done a proper research about the Pre Buddhist Burma. Like Sri Lankan Buddhists obliterated Hindu History of Lanka, Burmese Buddhists also did it. Now Si Lanka government is encouraging and sponsoring Ramayana tourism by showing all the hidden gems. Thank God Buddhists could not change the Sanskrit names and Rama names found throughout Burma/Myanmar.

xxx

Five amazing things about South East Asia are

1.Names of kings with VARMAN suffix are in all the countries. Even inside the thick tropical forest of Borneo , fourth century CE Mula Varman Inscription with Yupa Pillar was discovered. Burmese also had Hindu kings with VARMAN suffix like Pallavas, in the Pre Buddhist period.

2.Hindu Gods are found in all the countries. Not only Brahma, Vishnu, Shiva, but also Durga and Rama and Krishna.

3.Sanskrit inscriptions are found in all the countries. Even other language inscriptions contain Sanskrit words. In Burma even Mon and Tamil inscriptions have Sanskrit sentences.

4.The script of all languages in S E Asia has evolved from Brahmi, like Tamil. But it has gone to S E Asia via Pallava Grantha.

5.Influence of Ramayana, Mahabharata, Manu Smriti and Brahmins is seen in all the countries.

Xxxx

Did the name MYANMAR  come from Bamar or Brahma?

Bamar’s etymology is not known. But Brahma is written as byamma and we know B=M change is universal; like Bombay becomes Mumbai, Byamma became Myanma.

But this is not the only proof. Let us look at Pre Buddhist Burma.

Hindus went into Burma in second century CE. That is also an amazing factor. At the same time Sri Maran (Pandyan) inscription is found in Vietnam (Champa); within 200 years Mulavarman inscription is found deep inside Borneo island of Indonesia. According to known history of Burma, Buddhism prevailed only from sixth century CE.

Pyu and Mon were old races that lived in the country. Pyu are completely absorbed into Burmese society, and we don’t find them separately. Mons are called Talaings. Great scholars like R C Majumdhar say they were from Telugu speaking Telengana of South India. Kanchi Paramacharaya (1894-1994) also lectured about Dhillon migration to North. Telengana, Dhillon, Talaing are all derived from Tri Linga Kshetra.

Authorities like R C Majumdar did not guess but shown reasons for his hypothesis. Architecture , script, Varman names are from South India. Another Hindu migration was known from Manipur area to Arkan area of Burma.

There was one dynasty called Vikrama Dynasty whose kings were Hindus. One of the earliest finds is gold plates with Pali inscriptions ( from Maungan near Hmawza) and the script is like Kadamba script of South India of fifth century CE.

Statues or idols of all Hindu Gods are discovered in all parts of Burma, particularly from ancient capitals of Burma.

Burmese city Sri Kshetra got its name from Puri of Orissa. Burmese city Pegu’s old name was Ussaa, derived from Odisah.

The old name for Mon Kingdom of Thaton is RAMANNAA DESA.

The script of the oldest inscription in Mon on a pillar found at Lava Puri (Lobburi in Thailand). It is similar to Pallava script. It shows Mon’s connection with Rama’s son name Lava.

The Burmese chroniclers declare that Taung was founded by one Hindu prince ABHIRAJA in the ninth century BCE. Such an ancient date is correct or not is debatable; but Burmese gave very old dates for Indian influence. The Date about Buddha’s birth and death is also very different from other countries. In Sri Lanka 483 BCE is the date of  Nirvana (death); but ib Burma it was 544 BCE. In Tibet it was 835 BCE and in China it was 1793or 1807 BCE.

Sri Lankan Dipa vamsa says that Asoka’s missionaries Sona and Uttara spread Buddhism in Burma; but no trace is found there. Burmese inscriptions and history show Buddhism was there from sixth century CE only. There is a big gap of 800 to 900 years.

xxx

Burmese law books Dharma sastras (Dhammathat in Burmese) shows the influence of Manu Smiti

Xxxx

Brahmins Role

Direct Hindu influence can be seen in another field also. The court astrologers and sooth sayers were Brahmins and they were called Ponna. They were mostly from Manipur of India.

A pagan inscription dated 1442 mentioned the gift of 295 books of which several have Sanskrit titles. Festival of Ploughing was performed by Ponna with Hindu rituals.

One inscription gives in great detail  the coronation ceremony of a king. It describes how Brahmins prepared holy water in Purna Kumbhas of gold and silver. It was an inscription from a later period; that means Brahmins were there from very ancient period till at least 15th century

Xxxx

Worship of Nats

Burmese believe in Nats called spirits of various kinds. It is similar to Brahmarakshas, apsaras , Pitrus of Hinduism . Sangam Tamil literature also has a long list of spirits. They were 1)nature spirits occupying trees, rivers , mountains; 2) spirits of dead ancestors and ghosts 3).Of the 37 Nats, Cakra (Indra) is one of them. Mara and Brahma ( Maan and Byamma) are also recognised among the 37 Nats.

Xxx

In the second part I will give details about Ramayana and Vikrama Dynasty

To be continued…………………..

 tags- Hindu , influence, Burma, Myanmar, Varman, Nats, Script, Pre Buddhist, History